துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் எண்ணத்தால் கவர வேண்டிய பயிற்சி

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் எண்ணத்தால் கவர வேண்டிய பயிற்சி

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் (ஞானகுரு) உபதேசத்தின் வாயிலாகப் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம். அருள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கியதன் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற தியானப் பயிற்சியையும் கொடுக்கின்றோம்..

துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகளை ஊட்டி உங்கள் நினைவனைத்தும் நட்சத்திரத்தின் பால் செலுத்தும்படி செய்கிறோம். உங்கள் எண்ணத்தால் அதை எடுக்க முடியும்.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று
1.உங்கள் கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் வைத்து
2.உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.
3.இப்பொழுது உங்களை நேரடியாக அந்தத் துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் செல்கின்றேன்
4.நீங்கள் உயிர் வழி ஏங்கிப் பெறும் பொழுது அதிலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் எளிதில் பெறலாம்.

துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகள் உயிர் வழி உங்கள் இரத்த நாளங்களில் கலக்கும். கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தப்படும் பொழுது அதனின்று வெளிப்படும் உணர்வை எளிதில் கவர்ந்து உங்கள் உடலுக்குள் பரப்பச் செய்ய முடியும்.

கண்களைத் திறந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்
1.குரு வழியில் அந்தப் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கி நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப ஏங்கித் தியானியுங்கள்.

அடுத்து… கண்களை மூடி நினைவனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று மீண்டும் எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

1.இப்பொழுது புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை (உயிரில் உள்ள காந்தம்) ஈர்க்கும்
2.அங்கே புருவ மத்தியிலே பேரொளி தெளிவாகத் தெரியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உடல் முழுவதும் பரப்புங்கள்.

“கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி” இரத்த நாளங்களில் அதைக் கலக்கச் செய்து… உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்.

இப்பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வு கலந்த ரத்தம் உங்கள் உடல் முழுவதும் பரவுவதனால்
1.உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் நல்ல அணுக்களாக மாறும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது
2.புது விதமான உணர்ச்சிகள் உங்கள் உடலுக்குள் தோன்றும்
3.அருள் உணர்வுகள் பெருகும்.. அருள் ஞானம் பெருவீர்கள்
4.துருவ நட்சத்திரத்தினுடைய உணர்ச்சிகள் உங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களையும் இயக்கும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்கள் இரத்தத்தில் அதிகமாகப் பரவுவதனால் ஒரு மிதப்பதை போன்று உணர்வுகள் உங்களுக்குள் தோன்றும்
1.அதாவது புவி ஈர்ப்பின் பிடிப்பு குறைந்து துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு உங்களுக்குள் பெருகும்.
2.உடல் எடை குறைந்து இப்பொழுது மிதப்பது போன்ற உணர்ச்சிகள் தோன்றும்
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பிலே மிதக்கும் தன்மை வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் குடும்பம் முழுவதும் படர்ந்து நாங்கள் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலே மகிழ்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் தெளிந்த மனமும் தெளிவான வாழ்க்கை வாழும் அருள் சக்தியும் எங்கள் குடும்பத்தார் அனைவரும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

Leave a Reply