மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று “ஆயிரம் முறை” சொல்லுங்கள்
நம்மை அறியாதபடி உள் புகுந்து நம்மை கவலைப்படச் செய்வதற்கும்… நம்மை அறியாத உள் புகுந்து வேதனையான சொல்களைச் சொல்லச் செய்வதற்கும்… சந்தர்ப்பத்தால் நாம் சுவாசிக்கும் உணர்வுகளே… (குணங்கள்) காரணமாகின்றது.
அத்தகைய வேதனைகள் வளர்ந்தால் உடலில் கடும் நோயாகின்றது.
ஆனால் நாம் அதைத் தடைப்படுத்தி… மெய் ஞானிகள் உணர்வுடன் ஒன்றி… என்றும் நிலை கொண்ட நிலைகளில் அதைப் பற்றுடன் பற்றி… அந்தப் பற்றின் நிலைகள் கொண்டு ஏழாவது நிலையான ஒளியின் சரீரம் பெற முடியும்.
மறவாதீர்கள்…!
1.எந்த நோய் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று “ஆயிரம் முறை சொல்லுங்கள்…”
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி ஏங்குங்கள்.
உங்கள் உடலுக்குள் இது பெருகப் பெருக நோயின் தன்மை குறையும். மகரிஷிகளின் அருள் சக்தியால் நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.
1.உங்களை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனான உயிரை நீங்கள் கேட்டுக் கொண்டால்
2.நாம் எதைக் கேட்டோமோ அந்த உணர்வின் அலையாக அவன் (உயிர்) நமக்குள் படரச் செய்வான்
3.நம்மை அறியாத உள் புகுந்த தீமைகளை அது நீக்கும்.
மறவாதீர்கள்… மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுங்கள். உங்கள் ஈசனான உயிரிடம் வேண்டுங்கள். தீமைகளை அகற்றிட எண்ணும் பொழுது தீமைகளை அகற்றிடும் செயலாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களிடம் விளைகின்றது.
மறவாதீர்கள்…! ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சக்தி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் பிறவிக் கடலைக் கடந்து சென்ற அந்த மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்து… அதைப் பற்றுடன் பற்றி இந்த உடலே ஒளியின் சரீரமாக மாற வேண்டும்.
சிவன் இராத்திரி உயிர் உடல் பெற்ற நாள்…! அந்த உடல் பெற்ற நாள் என்றால் அந்த உடலுக்குள்ளே “நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் மறைந்தே இருக்கின்றது…”
இருளுக்குள் மறைந்த அந்த உணர்வின் ஆற்றலை அறிந்துணர்ந்து செயல்படும் அடுத்த நிலை தான் நாம் மனிதனாக வளர்ந்த நிலை. மனிதனாக வளர்ந்த நிலையில் இந்த உடலை விட்டு அகன்ற பின் உத்தராயணம்…! அது முருகனுக்கு உகந்த நாள்.
ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நமக்குள் மாற்றி அமைக்கும் உத்தராயண நேரத்தில் “பங்குனி உத்திரம்…” என்று அங்கே காட்டுகின்றார்கள்.
அதாவது ஆறாவது அறிவின் துணை கொண்டு ஞானிகள் சென்ற வழியில் நம் நினைவாற்றல் அங்கே சென்று இந்த உடலை விட்டு அகன்ற பின் பிறவியில்லா நிலை அடைவது தான் உத்தராயணம்.
1.இந்த உடலின் தன்மை நமக்கு நமக்கு வேண்டாம்
2.உயிருடன் ஒன்றி ஒளி நிலைகள் பெறுவதே நமக்கு வேண்டும்.
பங்குனி உத்திரம் – ஆறாவது அறிவின் துணை கொண்டு வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி மெய் ஞானிகள் உணர்வுடன் ஒன்றி மெய் ஒளியுடன் ஒன்றி மெய் ஒளியின் சரீரம் பெறும் நன்னாள்தான் அது.
தாம்பத்ய சக்திக்குண்டான உண்மை நிலை என்ன…?
சப்தரிஷிகளாலும் சித்தர்களாலும் போற்றப்பட்டு வணங்கப்பட்ட உயர் சக்தியின் நிலைகள் எல்லாம் ஊன்றிப் பார்த்தால்
1.ஒவ்வொரு சப்தரிஷியும் தன் சக்தியால் வணங்கப்படும் தெய்வங்கள்
2.பெண்மை உருவங்களாகத் தான் இருக்கும்.
ஆகவே பராசக்தியையும் ஆதி சக்தியையும் பெண்மையின் சக்தியாக வணங்கும் நிலை என்ன…?
ஒவ்வொரு சப்தரிஷியின் உயர்ந்த சக்திக்கும் உண்மையை ஊன்றிப் பார்த்தால் அவர்களின் ஆரம்பகால தாம்பத்ய வாழ்க்கையின் உணர்வின் எண்ண மோதலின் ஒன்றுபட்ட உயர் சக்தியின் வழித் தொடர் பெண்மையின் சக்தி கொண்டு தான் ஆண் வலுப் பெற்று ரிஷியாக சப்தரிஷியாக உயர்ந்தான்.
1.ஜீவனற்ற… ஜீவனை வளர்க்கும் சக்தியற்ற நிலை…
2.அமில குண ஆண்மைக்கு வலுத் தந்த சக்தியே
3.இத்தாம்பத்ய எண்ண வலு பெண்மையின் ஜீவ வளர்ச்சி வாழ்க்கையின் கூட்டினால் தான்…!
இக்கலியிலும் ஆதாம் ஏவாள் என்று உணர்த்திய மனித இன வளர்ச்சியின் செயல் முறையும் இதன் உண்மை கொண்டு தான்.
அமிலமான சிவ உருவம் கொண்டு திருவள்ளுவருக்கு வாசுகி அம்மையாரின் உயர் ஞான ஈர்ப்புக் கரு அமில செயல் சக்தி கூடித் தான்
1.அவர் (வாசுகி) வளர்த்த ஞானக் கருவை இவர் உருவில் வெளிப்படுத்தி
2.இன்றளவும் வள்ளுவனையும் வாசுகியையும் போல் என்று
3.பெரியோர்களின் வாழ்த்தாக அமையப் பெற்ற வாழ்த்தின் சொல்லின் உண்மை இதுவே…!
பெண்மையின் கரு வளர்ச்சியினால் உயர் இன வளர்ச்சியின் வித்தை உருவாக்க முடிகின்றது. ஒரு சித்தர் தன் பாடலில் “பூவையரை அன்னையெனப் புகழ்ந்தாய் போற்றி…!” என்றும் உணர்த்தியுள்ளார்.
அதன் உட்பொருள் என்ன…? படைப்பின் படைப்பே
1.பூவையரை அன்னையாகக்கூடிய செயலுக்கு
2.இந்த மனிதக் கரு இன வளர்ச்சியைப் பெருக வைத்து
3.உயர் சக்தியை வளர்க்க செயலாக்க வழி தந்த படைப்பிற்கே
4.பூவையரை அன்னையாகும் வளர்ச்சியைத் தந்ததற்காகப் போற்றி வணங்கினார்.
அதே போல் மகாத்மா காந்திக்கு வலுத் தந்ததே அவரின் மனையாளான கஸ்தூரிபா காந்தியின் பக்தி மார்க்க வழி முறை தான்.
பூவையரின் சுவாச அலையே “கரு வளர்ச்சி” அலை. ஆண்களைக் காட்டிலும் பெண்களின் ஈர்ப்பலைக்கு வீரிய சக்தி உண்டு. ஆனால்
1.சிவனான அமிலமுடன் மோதுண்டு வெளிப்படும் சக்தியில் தான்
2.அச்சக்திக்கே சக்தி கிடைக்கின்றது.
மனித இன வாழ்க்கையின் எண்ணத்தின் உணர்வு நிலைக்கொப்ப ஒன்றுடன் ஒன்று இந்த எண்ணத்தின் செயல் இணையும் பொழுது தான் படைப்பு முழுமையாகின்றது.
பாவாகவும் ஊடையாகவும் நூற்பு நெய்யப்படும் துணியைப் போல் இரண்டு நிலைக்குள்ள எண்ணங்கள் ஒன்றாக இணைந்து மோதுண்டு இந்தத் தாம்பத்ய எண்ண உணர்வில் அமில பிம்ப சிவ ஊடைக்கு சக்தி ஈர்ப்புப் பாவாய் இந்தத் தாம்பத்ய நிலை அமைந்து
1.பெண்மையின் உயர் வழியைச் செயல் கொள்ளும் ஆண்மையின் நிலையில் தான்
2.இந்தப் பூமியின் உயர் ஞானங்களும் சித்து நிலைகளும் சப்தரிஷியின் நிலையும் உருவானதே…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இப்பொழுது வெளிநாடுகளிலோ மற்ற வளர்ச்சி அடைந்த சில இடங்களிலோ நாம் தங்கக்கூடிய லாட்ஜுகளில் ஒரு எலெக்ட்ரானிக் அட்டையைத் தான் (ELECTRONIC CARD) கொடுக்கின்றார்கள். சாவி எதுவும் கிடையாது.
அந்த அட்டையைக் கொண்டு போய் செருகினால் இந்த நம்பருக்குண்டான பவர் இவ்வளவு தான் என்கிற வகையில் கரண்டைக் (ELECTRONIC SIGNALS) கொடுத்து விடுகின்றது. அட்டையைச் செருகினால் தான் கதவு திறக்கின்றது.
அந்த அட்டை அதற்குள் நுழையும்படித்தான் வைத்திருக்கின்றார்கள். அட்டைக்குள்தான் எலெக்ட்ரானிக்கை வைத்துள்ளார்கள்.
இதே போல நீங்கள் உங்களுக்குள் பதிவான ரெக்கார்டுகளை (பல கோடி எண்ணங்களையும், உணர்வுகளையும்) என்ன செய்கின்றீர்கள்…?
1.திட்டியவனையும் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் அதைப் போன்ற எண்ணத்தைச் செலுத்தினால் அந்த அட்டையைச் செருகிவிடுகின்றீர்கள்.
2.(அட்டையைச் செருகவில்லை) ஏற்கனவே கண்களால் உங்களுக்குள் பதிவானதை மீண்டும் நினைவாக்குகின்றீர்கள்
3.உடனே உள்ளுக்குள் இருந்து கிளர்ந்து அதற்குண்டான சஞ்சலத்தையும் கவலையையும் உண்டாக்குகின்றது.
விஞ்ஞானி அங்கே ELECTRONIC CARD கண்டுபிடிக்கின்றான். அதைப் போல சங்கடம் உங்களுக்கு வருகின்றது.
ஆனால்… இந்த எலெக்ட்ரானிக் அட்டையை வைத்துத் திருடர்கள் என்ன செய்கின்றார்கள்…?
நீங்கள் என்னதான் போட்டிருந்தாலும் கூட அந்த அட்டைக்குத் தகுந்த மாதிரி எலெக்ட்ரானிக்கின் அதிர்வுகளை வலு அழுத்தமாகிக் கொண்டு வந்தபின் எல்லாக் கதவுகளையும் ஒரே அட்டையை வைத்துத் திறக்கின்றான்.
இங்கே விஞ்ஞானிகள் செய்து கொடுத்த நிலைகளை நாம் உபயோகிக்கப் பழகிக் கொள்கின்றோம்.
ஆனால்… திருடர்கள் ஒரே அட்டையை வைத்து எல்லாக் கதவையும் திறக்கின்றார்கள். அப்பொழுது அவனுடைய திறன் எப்படி இருக்கின்றது…?
இதே மாதிரி நமக்குள் வேதனை என்ற உணர்வுகள் வந்தால் என்ன செய்கின்றோம்…?
1.வேதனை வந்தபின் அதை வலுப்படுத்திக் கொள்கின்றோம். அப்பொழுது என்ன ஆகின்றது…?
2.நமக்குள் இருக்கக்கூடிய கெட்ட அணுக்கள் எல்லாவற்றையும் திறந்து விட்டுவிடுகின்றோம்.
அப்பொழுது நமக்குள் மனக் கலக்கமாகி சிந்தனையை இழந்து விடுகின்றோம். சிந்திக்கும் தன்மை இழந்தபின் என்ன ஆகின்றது…?
நம் உடலில் அந்த வேதனை என்ற உணர்வாகும்போது கடுமையான நோயாக மாறுகின்றது. இந்த நோயின் தன்மை ஆன பிற்பாடு உடலை விட்டுப் போகும் பொழுது யார் மேல் வெறுப்பு ஆனதோ அந்த உடலுக்குள் தான் போகும்.
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது இதை மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்…?
ஏனென்றால் இன்றைய உலகில் மிகவும் பயங்கரமான கடுமையான விஷத் தன்மைகள் பரவிக் கொண்டுள்ளது. அதிலிருந்து மாற்றி அமைக்கக்கூடிய சக்திகள் அனைத்தையும் இப்பொழுது உங்களுக்குள் ரெக்கார்டு செய்து கொண்டிருக்கின்றேன்.
உங்கள் வாழ்க்கையில் தீமைகள் வரும் போது
1.இப்பொழுது யாம் பதிவாக்கியதை நினைவுக்குக் கொண்டு வந்தாலே போதுமானது.
2.அதை வைத்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
3.திரும்பத் திரும்ப உடலுக்குள் அந்தச் சக்திகளைச் சேர்ப்பிக்க வேண்டும்.
4.தீமைகளை அகற்றிடும் அரும் பெரும் சக்தியாக அது உங்களுக்குள் விளையும்.
இதில் ஒன்றும் சிரமமில்லை.
தாய் கருவிலே பூர்வ புண்ணியம் பெற்றவர்கள் தான் “எம்முடைய உபதேசங்களைக் கூர்ந்து பதிவாக்குவார்கள்…”
1.மனிதனாக உருப்பெறக் காரணமாக இருந்த நம் தாய் தந்தையரை முதலில் கடவுளாக மதித்துப் பழகுதல் வேண்டும்.
2.ஏனென்றால் எத்தனையோ தொல்லைகள் பட்டுத்தான் அவர்கள் மனிதனாக ஆனார்கள்.
நாம் ஈயாக எறும்பாக பாம்பாக தேளாக இருந்திருப்போம். அதை அடித்திருப்பார்கள். நம் உயிர் அவர் உடலின் ஈர்ப்பிற்குள் சென்றிருக்கும். அவர் உடலில் சேர்த்த உணர்வைக் கவர்ந்தது நம் உயிர். நம் உயிர் அவர் உடலுக்குள் சென்று அவர் வளர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை கவர்ந்தது.
கவர்ந்து வளர்ந்து அவருடைய கருவாக நாம் உருவானாலும் அவர் கருவில் இருக்கக்கூடிய காலத்தில்
1.அவர்கள் நல்லதைப் பற்றி ஏங்கி இருந்தால்
2.நல்ல உணர்வுகள் சேர்த்து நல்ல உடலை உருவாக்கும்.
ஆனால் நாம் கருவிலே இருக்கப்படும்போது வேதனையும் துயரமும் அதிகமாக அந்த உணர்வின் தன்மைகளைத் தாய் எடுத்திருந்தால் நம் உடலில் பல நோய்களும் ஊனமான உடலும் உருவாக்கும் தன்மை வருகின்றது.
ஆக நம்முடைய சந்தர்ப்பம் கருவில் இருக்கும்போது தாய் எடுத்துக் கொண்ட உணர்வுக்குத்தக்கத்தான் நம்மை நல்ல மனிதனாக உருவாக்கியது… சிந்தித்துச் செயல்படும் சந்தர்ப்பத்தையும் உருவாக்கிக் கொடுத்தது.
நாம் கருவில் இருக்கும்போது தாய் எடுத்த உணர்வால்தான் நாம் நல்லவராகவும் சிந்திக்கும் தன்மையும் இப்பொழுது இதைப் போன்ற நல்ல உபதேசங்களைக் கேட்கும் அருளும் நமக்குள் வலுக்கொடுத்தது.
எந்தத் தாய் அவ்வாறு எடுத்ததோ…
1.அப்படிப்பட்ட தாய் உடலில் வளர்ந்த உணர்வு கொண்டவர்கள் இருப்பின்
2.அவர்கள் தான் இந்த உபதேசத்தைக் கேட்பார்கள்… கூர்ந்து கவனித்து எடுத்துக் கொள்வார்கள்.
அந்த உணர்வின் தன்மை இருந்தால் தான் இதைக் கவர முடியும்.
அப்படிப்பட்ட உணர்வுகள் (தாய் கருவில் பெற்ற நிலைகள்) இல்லை என்றால்
1.கேட்பார்கள்… படிப்பார்கள்…
2.தனக்கு வேண்டியதை எதிர்ப்பார்ப்பார்கள்
3.அது இல்லை என்றால் போய்க்கொண்டே இருப்பார்கள்.
அந்த நல்ல உணர்வுகள் பெற வேண்டுமென்று உணர்வின் தன்மை அன்று தாய்க் கருவில் பெற்ற நிலை தான் இன்று உங்களை இங்கு அமர்ந்து கேட்கும்படி… கூர்ந்து கவனிக்கும்படிச் செய்கின்றது.
ஆகவே எத்தனையோ தொல்லைகள் இருப்பினும் எத்தனையோ துயரங்கள் இருப்பினும் மெய் உணர்வை நீங்கள் பெறும் தகுதியை ஏற்படுத்தியது உங்கள் தாயே. அதனால் அந்தத் தாயை நீங்கள் கடவுளாகவும் தெய்வமாகவும் மதித்துப் பழகுதல் வேண்டும்.
எத்தனை இன்னல் வந்தாலும் ஒவ்வொரு நொடியிலேயும்
1.நம்மை எத்தனையோ வகையில் காத்தருளிய தெய்வம் நம் தாய் தான்.
2.நமக்கு நல்ல வழி காட்டிய குருவும் தாயே.
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய தாயை மதித்து நடந்து பழக வேண்டும்.
ஏனென்றால் தாய் கருவில் இருக்கும்போது எடுத்துக் கொண்ட உணர்வே நம்மை நல்லவனாக்குவதும்… கெட்டவனாக்குவதும்…!
ஆகையினால் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து… தந்தையரின் உயிரைக் கடவுளாக மதித்து… அவர்களைத் தெய்வமாக மதித்து… இந்த வாழ்க்கைப் பயணத்தை நீங்கள் செயல்படுத்துங்கள்.
நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.உங்களுக்குள் யாம் ஆழப் பதிவு செய்ததை நினைவுக்குக் கொண்டு வந்தால்
2.உங்கள் வாழ்க்கையில் அந்த அருள் சக்திகளைப் பெறலாம்.
3.உங்களுக்குள் அறியாது வரும் இருளைப் போக்கலாம்
4.தெளிந்த மனம் பெறலாம்… தெளிவான வாழ்க்கை வாழலாம்.
முருகன் என்றால் அழகன்…! நாம் முருகனாக வேண்டும்
ஆரம்பக் கல்விக்குக் குழந்தையை நாம் அனுப்பும் பொழுது சில குழந்தைகள் பள்ளி செல்லவே… பயம் கொண்டு அழுது… பிறகுதான் பள்ளிக்குச் செல்கிறது.
பள்ளியில் கல்வி போதனையை அந்தந்தக் காலங்களில் வைக்கும் தேர்வு
1.அக்குழந்தைக்கு அதன் எண்ண வளர்ச்சியின்
2.அறிவின் அடிப்படையில் தான் அதன் ஞானம் வளர்ந்திருக்கும்.
3.அதைக் கொண்டு தேர்வு எழுதும் பொழுது… அதற்குகந்த பயம்… அச்சம்… இருந்து கொண்டு தான் இருக்கும்.
வளர… வளர… அதற்குகந்த அறிவின் செயல் ஞானத்திற்கொப்ப முதிர்ச்சியுற்ற பிறகு ஆரம்பக் கல்வியானது மிக மிகச் சுலபமாகவும் குழந்தையின் கல்வி போலவும் வளர்ந்தவர்களுக்குத் தெரிகிறதல்லவா…!
அதைப் போன்று மனிதனின் குண அமிலத்தை நற்குணங்களின் வழித் தொடர் கொள்ள அன்பு பாசம் வீரம் ஞானம் ஆசை என்ற இந்த ஐந்து குணங்களைச் சாந்தமாக்கி நம் குண அமிலத்தையே நற்குண அமிலமாகச் செயல் கொள்தல் வேண்டும்.
அப்படிச் செயல் கொள்ளும் பொழுது நம் உணர்வின் அலைத் தொடர் உயர் சக்தியின் அமில ஈர்ப்பில் இவ்வெண்ணம் செலுத்தும் முறை கொண்டு
1.முருகனின் அழகுடையவன்
2.குணமுடையவன் இனிமை கொண்டவன்
3.மணமுள்ளவன் ஒளியானவன் ஒலியானவன் என்ற தத்துவ உயர் ஞான முருகனாக
4.நம் உணர்வின் எண்ணம் முருகனாகச் செயல் கொள்ளும் நிலைக்கு வளரும்
5.ஐம்புலன்களான நற்குணங்களை ஆறாம் புலனாக வழிப்படுத்தி முருகனாக உருவாக வேண்டும்.
ஆக… வளர்ந்த கல்வியில் உள்ளவனுக்குப் பள்ளிப் பாடத்தில் முதல் வகுப்புப் பாடம் எப்படி எளிதாக உள்ளதோ… ஒவ்வொரு வகுப்பாகப் பரீட்சையில் தேறிய உயர் கல்வியில் உள்ளவனுக்கு முதல் பாட நூலில் தேர்வு வைத்ததைப் போன்று…
1.வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு இக்கட்டான செயலையும் வரும் இன்னலையும் மாற்றியமைப்பது என்பது
2.இந்த முருக குணம் கொண்டவனுக்கு மிக மிக எளிதாகிவிடும்.
நற்குணங்களின் வழித் தொடர் செயல் ஞான ஈர்ப்பிற்கு… நம் உணர்வைச் செலுத்தும் காலங்களில் ஏற்படும்… வாழ்க்கையில் எதிர் கொள்ளும் சோதனை எல்லாமே… “நம் உயர்வின் தேர்வு தான்…!”
இந்தத் தேர்வில் இருந்தெல்லாம் நாம் பெறும் மதிப்பெண் நிலைக்கொப்ப அடுத்த தேர்விற்கு நாம் உகந்தவர்கள் ஆகின்றோம் என்ற உணர்வின் எண்ணத்தில் சென்று கொண்டே நம் செயல் இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட ஆன வளர்ச்சி இருக்குங்கால் இந்நற்குணங்களின் செயலுடன் ஒன்றிய “முருகனின்… அழகனின் அழகென்ற பட்டத்தை..” நாம் பெற முடியும்… இனிமை என்ற உணர்வின் செயலுடன் நம் எண்ணத்தின் ஈர்ப்பு ஒலியின் ஒளியாகக் கலந்துவிடும்.
இச்சக்தி நிலை கொண்ட உருவம் தானப்பா முருகனேயன்றி தனித்தொரு சக்தி வந்து நற்குணங்களாக அவதரித்து நற்படைப்பைப் படைக்கவில்லை…!
ஆகவே…. இடும்பன் என்ற அரக்க குணத்தை வளரவிட்டு… வாழ்க்கையை இருள் என்ற அழுகையின் ஊடே சோர்வென்ற சக்திதனில் சுழலவிட்டு… உயிர் என்ற ஆத்மலிங்கத்தைச் சதா சர்வ காலமும் நிந்தித்துத் துவேஷித்து… உயர் சக்தியான உயிர் ஆத்மாவை மண்ணுடன் மண்ணாக புழுவாகப் பூச்சியாக சக்திதனில் சுழல விடாமல்…
1.உயர் வழித் தொடர் கொண்டு மனித பிம்பம் பெற்ற நாம்
2.உயர் அலைத் தொடரின் உணர்வின் வழித் தொடர் செல்ல
3.முருகனின் உருவாக நம்மை உருவாக்க வேண்டும்.
உணர்வின் இனிமையையும் உணர்வின் அழகையும் உணர்வின் மணத்தையும் உணர்வின் ஒலியையும் உணர்வின் ஒளியாக உயர் ஞானச் செயலின் ஈர்ப்பில் செயல் செல்ல… இந்த ஐம்புலன் என்ற நற்குணக் கூட்டைச் “சாந்தம்…!” என்ற சக்தி கொண்டு செயலாற்ற வேண்டும்.
“எவனோ… என்னமோ பேசுகிறான்…!” என்று எண்ணிவிட்டு நீங்கள் போவீர்கள்…
ஒரு பயிற்சி:-
1.நீங்கள் கண்களைத் திறந்து பார்த்துக் கொண்டே இருங்கள்.
2.கண் பார்த்துக் கொண்டு இருப்பதை (எண்ணாமல்) உயிரான நிலைகள் இழுக்காமல் நினைவை வேறு பக்கம் செலுத்திக் கொண்டு இருங்கள்.
அப்போது
1.நம் கண் பார்வையில் படும் உணர்வுகள் நம்மை இயக்க முடியாது
2.நம் நினைவு எங்கே செல்கிறதோ அது தான் இயக்கும்
செய்து பாருங்கள்.
இதைப் போன்று தான் ஒருவர் சாபமிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த நேரத்தில்… அந்த இடத்தில்… உங்களை வேறு யாராவது (நண்பர்கள்) “அங்கே வரச்சொன்னார்களே… நேரம் ஆகிப் போயிற்றே… இன்னும் காணோமே…!” என்று நீங்கள் நினைத்துப் பாருங்கள்.
சாபமிட்ட அலைகள்… அந்த நினைவுகள்.. உங்களுக்குள் வராது. ஏனென்றால் நீங்கள் எண்ணிய எண்ணம் அங்கே அது முதலில் வந்து விடுகின்றது.
நண்பர் நம்மை பார்ப்பதற்காக அங்கே வரச் சொல்லி முதலில் சொன்னார் இல்லையா. அவர் சொன்ன அந்தப் பதிவை நமக்குள் வைத்தவுடனே..,
1.ஐயோ.. நேரமாகிப் போய்விட்டதே…! என்று எண்ணிப் பாருங்கள்.
2.அந்த நேரத்தில் “நின்று…”
3.அந்தச் சாபமிடுபவன் சொல்வதைக் கேட்க முடியாது.
4.அப்பொழுது அந்தச் சாபம் இட்டது உங்களுக்குச் சுத்தமாகவே தெரியாது.
“எவனோ… என்னமோ பேசுகிறான்…!” என்று எண்ணிவிட்டு நீங்கள் போவீர்கள்.
இந்த மாதிரி உங்கள் வேலைக்கு அவசரமாகப் போவதை இங்கே பதிவாகிக் கொண்டு போகும் போது அந்தச் சாப உணர்வுகள் உள்ளுக்குள் வருவதில்லை.
அதே மாதிரித்தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவு செய்து கொள்ளுங்கள். அதற்குத்தான் இந்த உபதேசமே செய்கின்றோம்.
அவன் உணர்வு நம்மிடம் பட்டது. சாபமிடுகின்றான் என்று தெரிந்து கொள்கின்றோம். அடுத்தது என்ன எண்ண வேண்டும்…?
1.யாம் பதிவு செய்த அந்தத் துருவ நட்சத்திரத்தை நினைவுக்குக் கொண்டு வந்து
2.ஈஸ்வரா…! என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாம் வேலைக்குப் போகும் போது அதைப் பார்க்காமல் போவது வேறு. ஆனால் நாம் சாபமிடும் உணர்வைக் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டு… அதிலிருந்து போன பிற்பாடு நமக்குள் சுத்தப்படுத்த வேண்டுமல்லவா…!
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலைச் சுத்தப்படுத்திவிட்டு அவர்கள் இரண்டு பேருக்குள்ளும் ஒன்றுபட்டு வாழக்கூடிய அந்த சக்தி வரவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
1.நல்ல குணங்களை இப்படி நாம் காக்க வேண்டும்
2.இப்படிச் சுவாசித்துக் கொண்டோம் என்றால் நம் உடல் என்ன செய்கிறது…?
3.சாப அலைகள் உடலுக்குள் விளையவிடாமல் தடுக்கச் செய்கிறது.
அப்பொழுது நமக்குள் ஒரு சந்தோஷ உணர்வு வருகின்றது. நாம் அந்த நல்லதை… “சொல்லால் சொல்லிவிட்டுப் போய்விடுகிறோம்…!”
சாபமிட்டவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று சொன்னோம் அல்லவா. அவர்கள் இரண்டு பேர் உணர்வு இங்கே பதிவாகி இருப்பதால் நாம் இங்கே சமைத்து அனுப்பிய உணர்வுகள் என்ன செய்யும்…?
1.நம் உடலைச் சுற்றிக் கொண்டே இருக்கும்.
2.இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.
3.அவர்கள் ஒன்று பட்டு வாழ வேண்டும் என்று மீண்டும் மீண்டும் நம்மை நினைக்க வைக்கின்றது.
இப்படிச் செய்யாமல் போனால் அவர்களை நினைக்கும் போதெல்லாம் என்ன செய்யும்..?
நடு ரோட்டில் சாபமிட்டார்கள்…! என்று நினைக்கும் போதெல்லாம்
1.இவர்கள் விட்ட சாபத்தையெல்லாம் அடுத்தவர்களிடம் சொல்லி
2.அவர்களிடம் இந்த வித்தை எடுத்துக் கொடுத்து
3.நமக்குள்ளும் இதை வளர்த்துக் கொள்கிறோம்.
“இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமல் இப்படியெல்லாம் நடக்கின்றது…” இதையெல்லாம் நாம் மாற்ற வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எடுத்து ஒவ்வொருவரும் மாற்றிக் கொண்டால் சாபமிட்ட உணர்வுகளும் வேதனைப்படச் செய்யும் உணர்வுகளும் தீமையான உணர்வுகளும் அனாதையாகிவிடுகின்றது.
நாம் யாரும் ஈர்க்கவில்லை என்கிற பொழுது அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி இழுத்துக் கவர்ந்து கொள்கின்றது.
1.எது எது பிடிப்பில் இல்லையோ
2.அதையெல்லாம் சூரியன் எடுத்துக் கொண்டு போய் மறுபடியும் அதை மாற்றி
3.நல்ல கதிர்களாக உருவாக்கி வெப்பமும் காந்தமுமாக அனுப்புகின்றது.
4.இந்தப் பரமாத்மாவும் சுத்தமாகின்றது.
நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் “ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தும் பயிற்சி…” இது தான். செய்து பாருங்கள்…!
ஞானத்தைப் பகுத்தறியும் உயர் ஞானமாக்கி உயரக்கூடிய நிலைக்கு உயர் ஞானமாக்கி “ஞானியாகுங்கள்…!”
அறிவு மார்க்கம் பக்தி மார்க்கம் சித்து மார்க்கம் இப்படி ஒவ்வொரு வழியினரும் ஞானத்தை மனிதனுக்குகந்த மார்க்கமாகத்தான் உணர்த்துகின்றனர்… உணர்கின்றனர்.
ஞானம் என்பது மனிதனுக்கு மட்டும் தான் உண்டு. மிருகங்களுக்கு ஞானம் இல்லை…! என்கிறான் மனிதன். அறிவு மட்டும் மிருகத்திற்குண்டு. பகுத்தறியும் நிலை கொண்ட மனிதனுக்கு ஞானம் உண்டு என்று உணர்த்துகின்றான்.
1.அறிவு-கூர்மை…
2.அறிதல்-தெரிந்து கொள்வோம் என்ற ஆர்வம்…
3.அறிவோம்-அறிவின் ஆற்றலைச் செயல்படுத்தச் செல்லும் வழி.
எறும்பு அதற்குகந்த அறிவைக் கொண்டு ஞானத்தை எப்படிச் செயல்படுத்துகின்றது…?
தனக்கு வேண்டிய ஆகாரத்தை அறிவைக் கொண்டு அறிகின்றது. தன் செயலைக் கொண்டு அவ்வுணவைச் சேமிக்க மண்ணைப் பறித்து அவ்வுணவை அதில் சேமித்து பிறருக்குத் தெரியாவண்ணம் பாதுகாக்கின்றது.
1.அறிவைக் கொண்டு செயல்படுத்தி
2.தனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பாதுகாக்கும் எறும்பிற்கு ஞானமில்லையா…?
ஒவ்வொரு சிறு பிராணியும் தனக்குகந்த அறிவின் ஞானத்தைச் செயல் கொண்டுதான் ஜீவிக்கின்றது. மனிதனைக் காட்டிலும் அறிவும் ஞானமும் சில மிருகங்களிடம் உண்டு.
ஆனால் அதற்குகந்த அங்க அவயங்களும் சொல் வெளிப்படுத்தும் ஒலி பாஷையும் இல்லாததனால் உணர்வின் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தக்கூடிய பகுத்தறியும் ஞானம் இல்லை.
அறிவின் செயல் ஞானமுண்டு. உயர் ஞானத்தை உணர்வின் தன்மையை மாற்றியமைத்துச் சக்தி கொள்ளக்கூடிய ஞானத்தின் வளர்ச்சி அங்கில்லை.
இந்த ஞானத்தைச் செயலாக்கி ஒன்றுடன் ஒன்று சேர்த்து பிறிதொன்றின் கூட்டமைக்க மனிதனின் ஞானத்திற்குச் செயல் திறமை சொல்லாற்றல் இவை உண்டு.
இந்த ஞானத்தின் உயர் ஞானம் கொள்ளத்தான் பக்தி மார்க்கம்… சித்து மார்க்கம்… யோக மார்க்கம்…! என்றெல்லாம் இந்த மனித உடலின் உணர்வை எண்ணத்தால் ஒருநிலைப்படுத்தி “ஜெபம்…” என்று வழிப்படுத்துகிறார்கள்.
ஒவ்வொருவரும் அறிந்த ஒவ்வொரு மந்திரச் சொற்களைச் சொல்லி உயர் ஞானத்தைப் பெற்று ஆண்டவனிடம் முக்தி பெறும் மார்க்கத்தை இவ்யோக சாதனையால் உணர்வைக் கட்டுப்படுத்தி சுவாசத்தை ஒவ்வொருவரும் தான்… தான்… அறிந்த மார்க்கங்களை உணர்த்துகின்றார்கள்.
1.பக்தியினால் ஞானம் கொண்டு
2.சக்தியினால் உணர்வை ஒரு நிலை கொண்டு
3.எண்ணத்தால் உயர் ஞானத்தின் அலையை நாம் செயல்படுத்த
4.நற்குணங்களின் அலைத்தொடரில் இந்த ஞானத்தைச் செலுத்தி அந்த ஞானச் செயலாக நாம் ஒன்றாகலாம்.
இயற்கையின் படைப்பில் உயிரணுத் தோன்றி உருவாய் உருவமாக உருக்கொண்டு இயற்கைச் சுவாச முறையை மாற்றியமைத்துச் சகல சித்து நிலை பெறுவதல்ல…! உயர்ந்த ஞான சக்தியின் வழித் தொடர் பெறுவதற்கு.
இந்த ஞானம் கோபத்தில் உள்ளவனுக்கும் துணை செல்கிறது… திருடனுக்கும் துணை செல்கிறது… வஞ்சகனுக்கும் துணை செல்கிறது.. பெரும் காமுகனுக்கும் துணை செல்கின்றது.
அவரவர்கள் அறியும் அறிவின் செயலைச் செய்விப்பதே ஞானம் தான்.
1.ஞானத்தைப் பகுத்தறியும் உயர் ஞானமாக்கி
2.உயரக்கூடிய நிலைக்கு உயர் ஞானமாக்கி “ஞானியாகுங்கள்…!”
நற்குணங்களின் படைப்பை ஞானத்தின் சாந்தம் கொண்டு “மனிதனும் தேவனாகலாம்…!” என்று சித்தர்கள் உணர்த்திய முறை இதுவே.
உணர்வின் எண்ணத்தை “ஆண்டவனின் நாமத்தை” ஜெபித்து வருவதல்ல தெய்வ சக்தி…!
1.உணர்வின் எண்ணத்தை நற்குணங்களின் அமிலமாக
2.நாம் வளர்க்கும் செயல் முறை ஞானம் தான் மனிதன் தெய்வமாகும் முறை.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
தீவிரவாதம் தீவிரவாதிகள் என்ற நிலை உலகம் முழுவதும் பரவி வரப்படும்போது மனிதனுடைய வாழ்க்கையில் நிம்மதியை அறவே இழந்து வாழும் தன்மைகள் வருகின்றது.
நிம்மதியை இழந்துவிட்டால் வாழ்க்கையில் “நாமும் தீவிரவாதியாகி…” இந்த மனித உடலைவிட்டுத் தீமையின் செயல்களைச் செய்து வாழும் உலகை இனி உருவாக்கிவிடுவோம்.
1.இதைப் போன்ற நிலைகளில் இருந்து நினைவு இருக்கப்படும்போதே
2.நமது வாழ்க்கையை நாம் வளமாக்கிக் கொள்ளுதல் வேண்டும்.
எப்படி..?
துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கி அதை வளமாக்கி அந்த வளத்தின் நிலைகளை நமக்குள் வளர்த்துக் கொண்டால் இந்த மனிதனின் வாழ்க்கையின் முடிவு நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும்.
ஏனென்றால்…
1.இன்று உலக யுத்தம் “மூன்றாவது உலக யுத்தம்” வந்தால் யாரும் மிஞ்சப் போவதில்லை.
2.நமது பூமியும் சரி இந்த சூரியக் குடும்பமும் சரி. “எதுவும்… மிஞ்சப் போவதில்லை”.
இந்தப் பிரபஞ்சத்திற்குள் ஏற்கனவே அணுக்கதிரியக்கங்கள் அதிகமாகப் பரவி விட்டது. அணுக்கதிரியக்கங்களால் நமது பூமிக்குள் கொதிகலன் அதிகமாகும் போது இங்கு கூழாகி நிலநடுக்கங்கள் அதிகமாக வந்து கொண்டே இருக்கின்றது.
“தினசரி” எங்கேயாவது நிலநடுக்கம் ஏற்பட்டுக் கொண்டு தான் உள்ளது.
அதே சமயத்தில் கொதிகலன் அதிகமாகி மோதும் இடம் எங்கே இருக்கின்றதோ அங்கே பூகம்பமாக மாறி ஊரையே உள்ளுக்குள் கொண்டு போகின்றது.
இதே மனிதனால் உருவாக்கப்பட்ட இந்தக் கதிரியக்கங்கள் சூரியனுக்குள் சென்றவுடன் அதுவும் கொதிகலன் ஆகி கருப்புப் புகையை விஷத்தன்மையைக் கக்கிக் கொண்டு இருக்கின்றது.
விஷத்தை நீக்கும் தன்மை கொண்ட நிலையில் சூரியன் இருந்தாலும் விஷத்தின் உணர்வு அதன் உடலில் ஓடும்போது வரும் அணுக்கதிரியக்கங்களின் விஷத்தின் தன்மை மோதலாகி.., “விஷக் கதிரியக்கங்கள்” இன்று பிரபஞ்சத்தில் அதிகமாகப் பரவும் தன்மை வருகின்றது.
சூரியனிலிருந்தும் இன்று விஷத்தன்மைகள் பரவிக் கொண்டுள்ளது. இதே போல ஒவ்வொரு கோள்களுக்கும் இதே நிலை ஆகிக் கொண்டு வருகின்றது.
1.நாளடைவில் இந்த யுத்தங்கள் வந்து அணுகுண்டுகளை வெடிக்கச் செய்தால்
2.எல்லாக் கோள்களுக்குள்ளும் அணுக்கதிரியக்கங்கள் ஊடுருவி அது அனேகமாகக் கூழாக மாறி
3.நமது பூமியும் சிதைந்து சுக்குநூறாகச் சிதைந்து போகும் தன்மை வருகின்றது.
4.வெடித்துவிடும்… அது கூழாகப் பரவிவிடும்.
அந்த மாதிரிப் பரவிவிட்டால் இதில் வாழும் உயிரினங்களின் நிலை என்ன…?
பூமியைத் தவிர மற்ற கோள்களில் ஜீவணுக்கள் தான் உண்டு. ஆனால் ஜீவணுக்களின் தன்மை உயிரணுக்களாக ஆகி மனிதனைப் போல ஞான வளர்ச்சிப் பெற்ற உடல்கள் “மற்ற கோள்களில் இல்லை…”
இன்று இந்தப் பூமியில் ஞான வளர்ச்சி பெற்ற மனித உடல்கள் இருந்தும் இந்தப் பூமியே சிதைந்து விட்டால் சூரியன் நிலைகள் மறைந்து விட்டால் இந்த உயிர் இந்த உடலில் கடைசி நிமிடத்தில் எந்த வேதனைப்பட்டதோ அந்த வேதனை உணர்ச்சியுடன் தான் (நம்) உயிரான்மா பிரபஞ்சத்தில் பரவும்.
கோள்கள் இருக்காது… அதற்கு வேண்டிய தாவர இனங்கள் இருக்காது. இருந்தாலும் தாவர இனங்களிலும் அணுக் கதிரியக்கம் உண்டு. ஆனால் அதை உட்கொண்டாலும் கதிரியக்கங்கள் நம்மை மாற்றிவிடும்.
இது போன்ற சூழ்நிலை வருகின்றது.
இதே போலத்தான் கெமிக்கல் கலந்த நிலைகளில் விஷத்தின் தன்மை கொண்ட நிலைகளை ஒவ்வொரு தண்ணீரிலும் மற்ற நிலைகளிலும் தீவிரவாதிகள் பரப்பி உடலிலே கடும் நோயாக வரும் தன்மைகளை உருவாக்கிக் கொண்டுள்ளார்கள்.
1.இந்த மாதிரிக் காலத்தில் வாழப்படும்போது
2.“நாம் எப்படி இனி வாழ வேண்டும்…” என்ற நிலையை முடிவு செய்து கொள்ளுங்கள்.
அருள் ஞானிகள் காட்டிய வழிகளில் அந்த ஞானத்தை நமக்குள் வளர்த்துக் கொண்டால்தான் கூடுமான வரையிலும் இந்த உடலுக்குபின் நாம் பிறவியில்லா நிலைகள் அடையும் அந்தச் சக்தியைப் பெறுகின்றோம்.
இந்தப் பிரபஞ்சமே சிதைந்து போனாலும் நமது உயிர் இந்த உடலை விட்டுச் செல்லும்போது வேகா நிலை என்று இருக்கும் இந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குச் செல்லும்.
இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும், அகண்ட அண்டத்தில் அனைத்தும் அழிந்தாலும் இந்தத் துருவ நட்சத்திரம் என்றுமே அழியாத நிலைகள் கொண்டது.
ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் உயிரணு தோன்றி உணர்வின் தன்மை ஒளியான அந்த உடலின் தன்மையைக் கொண்டு
1.“துருவ நட்சத்திரமாகவும்.. சப்தரிஷி மண்டலங்களாகவும்…” சுழன்று கொள்ளார்கள்
2.ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் இவ்வாறு உண்டு.
3.இந்த உடலில் பிறந்த உயிரணுக்கள் அதை நேசித்து வந்தால் அதன் உணர்வை அதிகமாகப் பெருக்கி வந்தால்
4.இந்த உடலை விட்டு நாம் சென்றால் இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும்
5.“நமது உயிரான்மா துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பிற்குச் சென்று…” பேரானந்த நிலை என்ற ஏகாந்த நிலைகள் பெறுவது உறுதி…!
வீரத்தை… ஞானம் கொண்டு சாந்தப்படுத்தி.. “வீரிய சக்தியாக…” மாற்றிக் கொள்ள வேண்டும்
1.வீரமான உணர்வலைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் முக்கியம்.
2.வீரத்தின் உணர்வாற்றல் சக்தி தான் மனிதனின் வாழ்க்கை அமையும் நிலைதனை.
இந்த வீரத்தை ஞானம் கொண்டு சாந்தப்படுத்தினால் மனித வாழ்க்கையின் வெற்றிக்கு இவ்வீரம் தான் வித்தப்பா…!
இவ்வுலக நடைமுறை அரசியல் தலைவர்களின் உண்மை நிலையினை ஊன்றிப் பார்த்தால் வீரத்தின் ஞான சாந்தநிலை புலப்படும்.
ஆனால் நம் உணர்வில் கலந்ததுள்ள வீரத்தை நாம் அதன் நிலையிலேயே செலுத்தி விட்டால் வீரத்தின் வீழ்ச்சியை விரைவில் அடைவோம்.
1.வீரத்தை ஞானத்தால் சாந்தமாக்கிச் செயல்படும் பொழுது
2.அந்த வீரத்தின் வீரிய சக்தியை வளர்த்துக் கொண்டேயிருக்கலாம்.
வீரத்தைக் கோபத்தால் செலுத்தும் பொழுது நம் வீரத்தின் செயல் தெறித்துவிடும்… அதை நாம் உடனே அறியலாம்.
இஞ்ஞானத்தை எப்படி வழிப்படுத்துவது…?
திருடனுக்கும் ஞானம் உண்டு.. குருடனுக்கும் ஞானம் உண்டு… மிருகங்களுக்கும் ஞானம் உண்டு. பக்தி யோகம் எவ்வழிக்குச் செல்பவனுக்கும் ஞானம் உண்டு.
ஞானம் இல்லாவிட்டால் திருடன் எப்படிச் சாதுரியமாகப் பிறரை ஏமாற்றித் திருட முடியும்…?
திருடனும்…
1.தன் ஞானத்தைக் கொண்டு திருட வேண்டிய நிலைக்கு
2.பிறரை ஏமாற்ற அந்தச் சாந்தத்தைக் கற்றுத்தான்… பொறுமையுடன்…
3.தன் திருட்டைப் பிறர் அறியாவண்ணம் திருடிக் கொண்டு வர
4.மிகவும் சாதுரியமாகத் தன் ஞானத்தைச் சாந்தமாக்கித் தன் நிலையைச் சாந்தமாக்கிக் கொள்கின்றான்.
அதையே… ஏன் நாம் நல்வழியின் உணர்வுக்கு… ஞானத்தைச் சாந்தமாக்கி உயர் ஞானம் கொள்ள முடியாது…!
கண் ஒளியற்றவன் தன் ஞானத்தைச் சாந்தமாக்கி உணர்வின் எண்ணம் கொண்டே தன்னைக் காத்துக் கொள்கின்றான் அல்லவா…?
தான் வாழ வேண்டும் என்ற ஒரே ஆசை உள்ளவன் உணர்வை இச்சாந்தத்தின் பால் செலுத்தி ஞானம் கொண்டு கண் ஒளி உள்ளவர்களைக் காட்டிலும் அதிக ஆண்டுகள் ஜீவிக்கின்றான்.
மிருகத்திற்கு ஞானம் உண்டு. அந்த ஞானத்தை எப்படிச் செயல்படுத்துகின்றது…? எல்லா நிலைகளையும் மிருகம் உணர்ந்திருந்தாலும் அங்க அவயங்களும் சொல்லாற்றல் திறமையும் மனிதனை ஒத்த நிலை இல்லாததனால் அதன் ஞானத்தை எப்படிச் செயல்படுத்துகின்றது…?
1.ஒலியின் ஈர்ப்பை ஒளி கொண்டு
2.தன்னை வளர்க்கும் எஜமானரின் சொல் ஒலியை இவ்வொளியால் கவனித்து
3.தன் ஞானத்தை உடலுக்குள் பதியச் செய்து கொள்கின்றது.
சில குறிப்பிட்ட ஒலி அலைகளை… தன் மேல் விசுவாசம் கொண்டு பரிவுடன் செலுத்தும் வளர்ப்பவனின் ஒலியை…
1.தன் ஒலியால் ஈர்த்து எடுத்துப் பதிய வைத்துள்ள நிலைக்கொப்ப…
2.வளர்க்கப்பட்டவனின் ஒலி பாய்ச்சிய முறை கொண்டு
3.அதன் ஞானத்தின் செயல் இருக்கும்.
மனிதனின் வளர்ப்பில் உள்ள பிராணிகளுக்கு அந்தந்தப் பிராணிகளின் கூக்குரலின் நிலைக்கொப்ப இவன் ஒலியை அதன் ஒளியுடன் பாய்ச்சும் பொழுது அதன் ஈர்ப்பில் அதனுடைய ஞானம் வெளிப்படுகின்றது.
பக்தியின் நிலை ஞானம் எப்படிச் செயல்படுகின்றது..?
ஆண்டவனை வணங்கினால் அவன் அருள்வான் பல…! என்று தன் உடல் தேவைக்கும் செல்வத்திற்கும் வாழ்க்கையில் உழன்றுள்ள மற்ற நிலைகளுக்கும் ஆண்டவனை நினைத்து வணங்கும் ஞானம் எப்படிச் செயல் கொள்ளும்…? ஆகவே
1.அவரவர்களின் உணர்வுக்குகந்த
2.எதிர்பலனின் நிலையைத்தான் அவனவன் அடைய முடியும்.
தீமையை மாற்றியமைக்கும் “இந்தப் பயிற்சிகள் உங்கள் அனுபவத்திற்கு வர வேண்டும்…”
இன்று மனிதனின் வாழ்க்கையில் தீமைகள் எப்படி எல்லாம் வருகின்றது…? என்று தெரிந்து கொள்தல் வேண்டும்.
1.இதை மாற்றுவதற்கு உங்களுக்குச் சக்தி வேண்டும்.
2.உங்களுக்குத் தெரியாது… தெரிய வைக்கின்றோம்.
4.அந்தச் சக்தி பெறுவதற்குண்டான ஊக்கத்தையும் கொடுக்கின்றோம்.
5.தெரியக்கூடிய அளவிற்கு அருள் ஞானிகளின் அருள் வித்துக்களைப் பதிய வைக்கின்றோம்.
(1) ஞானம் கிடைக்கும் சந்தர்ப்பம் எது…?
திட்டியவனை நினைத்தவுடன் உடனே நமக்கு ஆத்திரம் வருகின்றது. நம்முடைய காரியங்கள் எல்லாம் தடைப்படுகின்றது.
அப்பொழுது அந்தச் சங்கடம் வரும்போது நான் (ஞானகுரு) உங்களுக்குள் பதிவாக்கியதை எண்ணினால் உங்களுக்குள் ஞானம் வரும். தீமையை விலக்கக்கூடிய யுக்தி வரும்.
உங்கள் சொல் என்ன செய்யும்…?
அந்த அருள் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் நாம் பேசும் இந்த உணர்வலைகள் திட்டியவர்கள் மனதிற்குள் போய்… நம் மீது உள்ள கடுப்பைக் கொஞ்சம் குறைக்கச் செய்யும்.
உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.
(2) நம் உணர்வு அடுத்தவருக்குள் புகுந்து மீண்டும் நமக்கே திரும்ப வந்து இயக்கும் நிலை
1.“என்ன்னிடம் இப்படிப் பேசினான்” ஆகவே… என்னை இப்படித்தான் எப்போதும் பேசுவான்…! என்ற உணர்வு வந்து
2.நாம் அந்த அச்ச உணர்வோடு பேசும் பொழுது ஏதாவது ஒன்று பதில் சொன்னோம் என்றால்
3.அவர்களுடைய செவியில் பட்டு “நம்முடைய அந்தப் பயப்படும் உணர்வே…” அவர்கள் உடலுக்குள் போய்
4.நம்மை அவர்கள் மிரட்டும் நிலையை உருவாக்கிவிடும்.
ஒருவரிடம் கடன் வாங்கி இருக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம் திருப்பிச் செலுத்தச் சிறிது கால தாமதம் ஆகின்றது. நாம் எப்படியும் வாங்கிய பணத்தைக் கட்டவேண்டும் என்று விரும்புவோம்.
அப்பொழுது அதை எப்படி எண்ண வேண்டும்…?
ஏனென்றால்… அவன் சரியான நேரத்தில் கொடுத்து உதவினான். அது நியாயம் தான். ஆனால்… நாம் வாங்கினோம் அவனுக்குக் கொடுக்க முடியவில்லை. இருந்தாலும்
1.சரியான முறையில் எப்படியும் கொடுக்கக்கூடிய சக்தி எனக்கு வர வேண்டும்.
2.நான் சொல்வதைக் கொஞ்சம் கேட்டு அமைதியாக இருந்து
3.எனக்கு அந்த வழி கொடுக்க வேண்டும்… அந்த நிலை பெற வேண்டும்… என்று நாம் எண்ணினோம் என்றால்
4.அந்த வலுவான உணர்வுகள் நாம் எண்ணும்போது மூச்சலைகள் வெளிப்படுகின்றது.
கடன் கொடுத்தவர் நம்மை எண்ணி வரும்போது அதை அவர் சுவாசித்தால் அவர் உடலில் இது இணைந்து நம் மேல் இருக்கக்கூடிய வெறுப்பின் தன்மையை “நிச்சயம் குறைக்கும்…”
இதே மாதிரி தொழிலே ஏதாவது நஷ்டம் ஏற்பட்டால் இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்துவிட்டு… இந்தப் பொருளை வாங்குவோர் நன்றாக இருக்க வேண்டும். அதற்குண்டான மன பலம் பெற வேண்டும்.
நம்மிடம் பழகும் நண்பர்களுக்கும் ஒத்துழைக்கக்கூடிய தன்மை வரவேண்டும். நம்மிடம் வேலை செய்பவர்களுக்கு நம்முடன் ஒத்துழைக்கும் தன்மை வரவேண்டும் என்று இப்படித்தான் இணைத்துக் கொண்டு போக வேண்டும்.
(3) சங்கடத்தை நீக்குங்கள்
வேலை செய்பவர்களிடம் போய்… சங்கடத்துடன் எண்ணி நீங்கள் ஒரு வேலையைச் சொன்னால் இதே சங்கடம் அவனை இயக்கி அவனைத் தவறு செய்ய வைத்துவிடும்.
நீங்கள் சங்கடத்துடன் ஒரு செடிக்குத் தண்ணீர் ஊற்றினால் வாடிப் போகும். நம்மை அறியாமல் இயக்கும் இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட நமக்கு ஒரு வலுவான சக்தி வேண்டும். அந்த வழி அறிந்து செயல்படும் நிலைகள் பெற வேண்டும்.
1.ஒரு பள்ளிக்குச் சென்றால் விஞ்ஞானியாக வேண்டும் என்றால் அது எப்படி…? என்ற நிலைகளைச் சொல்லிக் கொடுக்கின்றார்கள்.
2.ஒரு இஞ்சினியராக வேண்டும் என்றால் எப்படி…? என்றும்
3.ஒரு ஆசிரியராக வேண்டும் என்றால் எப்படி…? என்றும் சொல்லிக் கொடுக்கின்றார்கள்…
4.அதற்குண்டான பாடங்களைப் படிக்கின்றார்கள்.
இதைப் போன்று தான் குருநாதர் எனக்குக் கற்றுக் கொடுத்த அந்த உணர்வை நினைவுபடுத்தி உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். பதிவானது மீண்டும் உங்கள் நினைவுக்கு வரும் பொழுது
1.சங்கடங்களைச் சமாளிக்கும் ஞானம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
2.அந்த ஞானத்திற்குண்டான யுக்தி கிடைக்கச் செய்வதற்குதான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நீங்கள் பெற வேண்டும் என்று
3.அடிக்கடி சொல்லி அதை உங்களுக்குள் ரிக்கார்டு செய்து வைத்து விடுகின்றேன்.
அப்பொழுது “ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப்படும் பொழுது தீமையை நீக்கக்கூடிய சக்தியாக உங்களுக்குள் பெருகத் தொடங்குகின்றது.
(4) தீமையை நல்லதாக மாற்றும் முறை
உதாரணமாக… பாலில் சர்க்கரையைப் போட்டால் இனிப்பாக இருக்கின்றது. அந்தச் சர்க்கரையுடன் சேர்த்துக் காபித் தூளைப் போட்டால் அது ஒரு ருசியாக இருக்கின்றது.
சர்க்கரையுடன் கொஞ்சம் புளிப்பைச் சேர்த்தால் அது ஒரு ருசியாக இருக்கின்றது. அந்தப் புளிப்புடன் இலேசான காரத்தைச் சேர்த்தால் அது ஒரு ருசியாக இருக்கின்றது.
மிளகைப் போட்டுப் பாருங்கள் அது ஒரு ருசியாக இருக்கும். மிளகாயைப் போட்டுப் பாருங்கள். அந்தப் புளிப்பு காரம் எல்லாம் சேர்த்து “பானக்கம் கரைத்தால்” அது ஒரு ருசியாக இருக்கும்.
இதைப் போலத்தான் உங்களுக்குள் எத்தகைய தீமையான நிலைகள் வந்தாலும் அதை நல்ல சுவை மிக்கதாக மாற்றி அமைக்கக்கூடிய சக்தி உங்களுக்கு வேண்டும்.
அதற்குத்தான் இந்த வழிமுறைகளைச் சொல்கின்றோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மனிதனானவன் “முழு முதல் கடவுள்” என்றால் விஞ்ஞான அறிவு கொண்டு எத்தனையோ வகையான உயிரணுக்களை இன்று உருவாக்கியுள்ளார்கள்.
1.எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையில் புற நிலைகள் செய்தாலும்
2.அக நிலைகளிலும் ஜீவ அணுக்களை உருவாக்கும் விஞ்ஞானத் தத்துவமே இன்று வந்துவிட்டது.
கருவிற்குள் இருக்கும் ஒரு சிசுவின் தன்மையும் அது எப்படி அதனின் உணர்வு இயக்குகின்றது…? என்றும் காணுகின்றார்கள்.
அது வளரும் பருவத்தில் கரு உருவான பத்து நாட்களுக்குள் கருவின் சிசுக்கள் எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையை எலெக்ட்ரானிக் என்ற உணர்வின் அதிர்வை வைத்து அதனின் நிலையை விஞ்ஞானி அறிகின்றான்.
அது வளர்ந்து வரப்படும் பொழுதே அதில் வரக்கூடிய குறைபாடுகள் என்ன ஏற்படுகின்றது…? என்றும் கண்டறிகின்றார்கள்.
எந்த நிலையை இன்று புறத்தால் செய்தாலும் அதே எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற உணர்வின் அதிர்வுகளை உள்ளே விட்டு அந்தக் குழந்தைகள் உருமாறினாலும் உருமாற்றினலும் அதை மாற்றியமைக்கும் சக்தி கொண்டு வருகின்றான் விஞ்ஞானி.
இதை எல்லாம் நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம்.
இப்பேர்ப்பட்ட விஞ்ஞான வளர்ச்சிகள் வந்த இந்தக் காலத்திலும்
1.நான் மந்திரத்த்தை ஜெபிப்பேன் என்ற நிலைகளும்
2.ஜோதிடம் பார்த்து… வாஸ்து சாஸ்திரம் பார்த்து… அந்தச் சாஸ்திரம் பார்த்து நான் செய்வேன் என்ற நிலையில் நாம் சென்று கொண்டிருந்தால்
3.நம்மை நாம் இழுக்குப்படுத்துகின்றோம்.. மனிதன் நாம் நம்முடைய அறிவை இழந்து கொண்டிருக்கின்றோம் என்று தான் பொருள்.
“வாஸ்து” என்பது எது…?
வாசுதேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலையில் கண்ணன் பிறந்தான் என்று தெளிவாக நம் சாஸ்திரங்கள் கூறுகின்றது.
1.நாம் எதைச் சுவாசிக்கின்றோமோ “வாசுதேவன்…” உயிர் சுவாசித்ததை உருவாக்குகின்றான்
2.“தேவகி” நாம் எதைத் தேவை என்று எந்த உணர்வை எடுத்தோமோ அந்தச் சக்தியாக நம்மை இயக்குகின்றது.
“தான் பார்க்க வேண்டும்” என்ற உணர்வின் தன்மை வரும் பொழுது உடலான நிலைகள் கொண்டு நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் அறிவாக நமக்குள் தெரிந்து கொள்கின்றோம்.
கண்கள் இல்லாதபோது கண்ணின் உணர்வின் தன்மையை உருவாக்கியது நம் எண்ணமே. அந்த எண்ணத்தின் தன்மையை உருவாக்கியது உயிரே.
இதையெல்லாம் தெளிவாகக் கூறுகின்றது நம் சாஸ்திரங்கள்.
புறத்தால் நாம் இன்று உடலாக இருக்கின்றோம். “இன்னது செய்ய வேண்டும்…” என்ற உணர்வின் தன்மை வரப்படும் பொழுதுதான் உணர்ச்சியின் தன்மை அறிவாக உங்களை இயக்குகின்றது.
ஏன் உங்களை நம்பி இதைச் செய்ய முடியாது…?
விஞ்ஞான அறிவு இந்த நிலைக்கு வந்திருக்கும் பொழுது
1.மெய்ஞானத்தின் தன்மை அறிந்து கொண்ட நம் நாட்டில்
2.“இன்னும் அஞ்ஞான வாழ்க்கை வாழ்வது சரியா…?” சற்று சிந்தித்துப் பாருங்கள்.
“ஞானிகள் பெற்ற ஞானத்தை” நாம் பெற வேண்டியதன் அவசியம் என்ன…?
உணர்வின் எண்ணத்தை உணர்த்தி வந்தேன். மனித உடலின் அமில குணங்களையும் குணத்தினால் விளையும் உணர்வு உடல் ஆரோக்கியம் இவற்றையும் சில குறிப்பிட்டுள்ளேன்.
அணுவுக்குள் அணுவாக அணுவின் அணுவுக்குள் உள்ள நாம்
1.நம் எண்ண வலிமையை எப்படி வழி நடத்துகின்றோம்…?
2.மனிதனின் நற்குண அமிலமான அன்பு பாசம் பரிவு ஞானம் வீரம் சாந்தம் இவற்றை நாம் எப்படிச் செயல்படுத்துகின்றோம்…?
நம் குழந்தையிடம் அன்பை மட்டும் செலுத்தி அன்பின் செயலால் வளர்க்கப்படும் குழந்தை அவ்வன்பையே தனக்குச் சாதகமாக எடுத்துக் கொள்ளும்.
1.அவ்வன்பிலேயே வளர்ந்த நிலை கொண்டு
2.தனக்குச் சாதகமான… தனக்கு வேண்டிய உணர்வு தேவையின் நிலையைத்தான்
3.நம்மிடம் எதிர்பார்த்துப் “பிடிவாதத்தில்” நிற்கும்.
இப்படி வெறும் அன்பினாலேயே வளர்க்கப்பட்ட குழந்தை… அது வளர்ந்த பிறகு நம்மிடம் இந்த உணர்வின் குணத்தைத்தான் எதிர்பார்க்கும்.
அன்பினால் மட்டும் எச்சக்தியையும் செயல்படுத்திட முடியுமா…? அவ்வன்பே கடும் விஷம் ஆகி எதிர்த்துத் தாக்கும்.
அன்பைக் கொண்டு செயல்படுத்தி அச்செயலே நமக்கு எதிராகும் தருணத்தில் நம் உணர்வில் கோபம் குடிகொள்ளும். இதனை எப்படிச் செலுத்துவது…?
1.அன்புடன் ஞானத்தைச் செலுத்தி
2.சாந்தமாக நாம் ஊட்டும் அன்பினாலேயே
3.அக்குழந்தையை உயர் ஞானக் குழந்தையாக நாம் வளர்க்க முடியும்.
பரிவும் இதே போன்றது தான்…! பரிவை ஒருவருக்குச் செலுத்தப்படும் பொழுது… பரிவுடன் கூடிய ஞானத்தால் சாந்தம் கொண்டு அப்பரிவைச் செலுத்தும் பொழுது பரிவினால் விளையக்கூடிய நற்பயனை நாம் காணலாம்.
ஆசையின் நிலையும் ஆசையினால் உள்ளது தான் இந்த உலகமே..! உண்ண உடுக்க உணர எண்ண வாழ்க்கையின் ஆணிவேரே இவ்வாசை தான்.
ஆசை கொண்டு நாம் புதிதாக ஒரு தொழிலுக்கு வித்தூன்றி வளரச் செய்கின்றோம் என்றால்
1.அவ்வாசையின் வித்திற்கு ஞானம் என்ற முதல் போட்டு
2.சாந்தம் என்ற நீரை ஊற்றினால் தான்
3.அவ்வித்து வேரூன்றி வளர ஏதுவாகும்.
ஞானமில்லா வழியில் சாந்தம் கொள்ளாமல் ஆசை கொண்டு எதைச் செய்தாலும் அது வியாபாரமாக இருந்தாலும் சரி… வாழ்க்கை நடைமுறைச் செயலாக இருந்தாலும் சரி.. ஒரு வீட்டையே கட்டுகிறோம் என்றாலும் சரி… அது நிறைவு தராது.
ஆசைப்பட்டுத்தான் வீட்டைக் கட்ட நாம் முற்படுகின்றோம்.
ஆனாலும் வீட்டைக் கட்டி முடிக்கத் தன்னிடமுள்ளள பொருளாதாரச் சூழ்நிலை… மற்றும் அந்த வீட்டிற்குகந்த பொருள் கிடைக்கும் நிலை… இவற்றை எல்லாம் இந்த ஞானத்தால்
1.தன் ஆசையின் உருவத்தை ஞானம் கொண்டு
2.தன் ஆசையின் செயலை எந்த வடிவில் அமைக்க முடியும்…? என்ற ஞானம் அறிய “சாந்தம்” தேவை.
ஆசையை ஞானம் கொண்டு சாந்தப்படுத்தினால் நாம் அமைக்கும் வீடு நம் உணர்வின் ஆசைக்கு உகந்த நிலையில் அமையுமப்பா..!
“யாம் கொடுக்கும் சக்தியை…” நீங்கள் பெற வேண்டும்… அதை வளர்க்க வேண்டும்… மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்
காட்டிற்குள் சென்று தவம் இருப்பது என்பது… நம் உடலுக்குள் அதுவே பெரும் காடாகத்தான் இருக்கின்றது. வெறுப்பு வேதனை கோபம் ஆத்திரம் என்று எத்தனையோ கொதித்தெழும் உணர்வுகள் உள்ளது.
துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் தவமாக்கி நம் உடலில் இருக்கும் எல்லா அணுக்களிலும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று உடலுக்குள் சேர்ப்பிப்பபதுதான் உண்மையான தவம்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்து உடலில் இருக்கக்கூடிய உறுப்புகளுக்கு அதைச் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
1.சொந்தமில்லாத இந்த உடலுக்குச் சொந்தம் கொண்டாடி
2.வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் சஞ்சலம் கோபம் என்ற உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்து விடாதீர்கள்…
3.அதை வளராது தடுத்து விடுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளை வளர்த்து பிறவி இல்லை என்ற நிலையை அடையுங்கள். உயிரணு தோன்றி மனிதனான பின் கடைசி நிலை அது தான்.
பெண்கள் இந்த உண்மையின் இயக்கங்களை நீங்கள் உணர்ந்து வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிப் பழகுங்கள்.
1.தன் கணவருக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்றும்
2.அதே போன்று கணவன் தன் மனைவிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று
3.இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் தியானிக்க வேண்டும்.
அகஸ்தியன் தன் மனைவியோடு எப்படி ஒன்றி வாழ்ந்தானோ அதைப் போன்று கணவன் மனைவி நீங்கள் வழி தொடர்ந்து செயல்படுத்தி வாருங்கள்.
இந்த உடலுக்கு பின் பிறவி இல்லை என்ற நிலை அடைய “எமது குரு அருளும்… மகரிஷிகளின் அருள் சக்தியும் உறுதுணையாக இருக்கும்…”
1.குரு அருளை நீங்கள் அனைவரும் பெற்று
2.குரு துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று இருளை அகற்றி
3.உங்கள் வாழ்க்கையில் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழ்ந்திடும் அருள் சக்தி பெற்று
4.அமைதியும் சாந்தமும் ஞானமும் விவேகமும் பெற்று
5.உங்கள் வாழ்க்கையில் தீமைகள் புகாது அருளைப் பெருக்கி
6.அருள் வாழ்க்கை வாழ்ந்திடும் அருள் சக்தி நீங்கள் பெற எமது ஆசியும் அதுவாகி
7.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெருகி பேரின்பம் பெற எமது ஆசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கட்டும்.
உங்கள் உடலில் எத்தகைய வலியோ வேதனையோ வந்தாலும் உயிரான ஈசனை வேண்டி துருவ நட்சத்திரத்தின் பேரருளை அங்கே செலுத்திப் பழகுங்கள்.
“உங்களை உங்கள் எண்ணமே காக்கும்…”
எண்ணியதை உயிர் இயக்குகின்றது… எண்ணியதை உடலாக்குவதும் உயிர் தான். இதைப் போன்று உங்கள் வாழ்க்கையில் பேரின்பம் பெற எமது ஆசிகள்.
நான் சொன்ன முறைப்படி தியானப் பயிற்சியைச் சீராக மேற்கொள்ளுங்கள் யாம் (ஞானகுரு) கொடுக்கக்கூடிய உயர்ந்த சக்தியைப் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.
1.யாம் சொன்ன அருள் வழியைக் கடைப்பிடிக்கும் போது அது எப்படி உங்களுக்கு நல்லதாகின்றதோ இதைப் போன்று
2.குரு காட்டிய வழியில் பெற்ற சக்திகளை… நீங்கள் மற்றவருக்குள் பாய்ச்சப்படும் பொழுது
3.அவருடைய நோய் போக வேண்டும்… அவருடைய தீமைகள் அகல வேண்டும்.
4.உங்கள் சொல்லைக் கேட்டாலே மற்றவருடைய கஷ்டங்கள் போக வேண்டும்
5.”அத்தகைய சக்தி நாங்கள் பெற வேண்டும்” என்று நீங்கள் எண்ணிப்பாருங்கள்.
நான் சொல்லும் பொழுது உங்களுக்கு நல்லது ஆகிறது அல்லவா…! ஏன் இதைப் போன்று நீங்கள் சொல்லி அவர்களுக்கு நல்லதாகும் பொழுது அந்தக் கெட்டது வராமல் தடுக்கலாம் அல்லவா.
உங்களால் ஏன் இதைச் செயல்படுத்த முடியாது…? நிச்சயம் முடியும்.
1.தீமைகள் புகாது தடுக்கும் அந்தச் சக்தியை நீங்கள் பெற வேண்டும்
2.இந்தப் பழக்கத்திற்கு வந்தால் சாமியார் பேரைச் சொல்லியோ தெய்வத்தின் பேரைச் சொல்லியோ யாரும் ஏமாற்ற முடியாது.
“உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி… அதை மாற்றி அமைக்கும் திறன்…” மனிதனுக்கு மட்டும் தான் உண்டு
உணர்வுடன் கூடிய எண்ணத்தால் ஞானத்தின் சக்தி கொண்டு… பக்தி என்ற முறைப்படுத்தி உயர் சக்தியை ஞான வழியின் ஜெபமாக்கி… நமக்கு மேல் உயர்ந்த சக்தி கொண்ட சப்தரிஷிகளின் அலையை நாம் எடுக்க எடுக்க… நற்சக்தியின் அமில குணங்கள் நமக்குள் வளர்ச்சியாகிப் பெருகும்.
அப்படிப் பெருகத் தொடங்கினால் உடலுடன் கூடிய உணர்வான
1.சோம்பல்
2,தூக்கம்
3.பசி
4.காம இச்சைகள்
5.உடல் கழிவுகளின் உந்தல்
6.உடலில் ஏற்பட்டுள்ள வியாதியின் வலிகள் என்ற இந்த ஆறு நிலைகளும்
7.உணர்வால் வெளிப்படும் நிலைதனை நம்மால் மாற்றி அமைக்க முடியும்.
தன் எண்ண பலத்தால் எத்தன்மையான சோர்வு வந்தாலும் எண்ணத்தின் நிலைக்கொப்ப “சோர்வை…” அகற்ற முடிகின்றது.
“தூக்கத்தையும்…” நம் வேலையின் நேரத்திற்கொப்ப உணர்வால் எடுக்கும் எண்ணம் கொண்டு மாற்றி அமைக்க முடிகின்றது.
எண்ணத்தால் வேறு ஒரு செயலில் உள்ள பொழுது “பசியையும்…” மாற்ற முடிகிறது.
உடல் “காம இச்சையையும்…” மனிதனால் இச்சைக்குகந்த நிலையில் செல்லாமல் ஒழுங்குமுறைப்படுத்திக் கொள்ள முடிகிறது.
அதே போல் “உடல் வியாதியையும்…” எண்ணத்தால் அவ்வலியையே மறக்கக்கூடிய தன்மை மனிதனுக்கு உண்டு.
உணர்வால் உந்தப்படும் உடலின் இச்சைகளையே ஒழுங்குநிலைப்படுத்தி
1.உணர்வின் தன்மையில் செல்லாமல்
2.ஞானத்தால் கால நிலை அனுசரித்து
3.உடல் பிம்ப உணர்வு உந்தலின் அலையையே
4.எண்ணத்தால் ஒழுங்குபடுத்துகின்றான் மனிதன்.
எண்ணத்தைக் கொண்டு எச்செயலையும் செய்விக்கும் மனிதனைப் போல் மிருகங்களின் நிலைக்கு இல்லை.
அதன் உடலில் ஏற்படும் உணர்வின் உந்தலானது ஞானத்தின் எண்ணம் கொண்டு மாற்றியமைக்கக்கூடிய பக்குவமும் செயல் திறனும் மிருகங்களுக்கு இல்லாததனால்தான் மனிதனை ஒத்த உணர்வை மாற்றியமைத்து வாழ்க்கை என்ற “சமுதாயப் பிணைப்பு” ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.
ஆனால் மனிதன் தன் எண்ணத்திற்குகந்த வளர்ச்சி செயல் ஞானத்தைச் செய்விக்கின்றான். உணர்வை மாற்றி அமைக்கக்கூடிய எண்ணம் செயல் மற்ற இனங்களுக்கு இல்லை.
1.உணவைத் தேடி உண்டு கழித்து உறங்கி காம இச்சையின் இனப் பெருக்க உணர்வும்…
2.உடல் பிணியில் உண்டாகும் அவஸ்தையில் சர்வ சதா அவ்வலியின் தன்மையுடன் ஒன்றியும்…
3.உணர்வை மாற்றியமைக்க முடியாத நிலை தான் மற்ற இனங்களுக்குண்டு.
மனிதனின் ஞானம் எவ்வுணர்வையும் கால நிலை சூழ்நிலை இதன் வட்டத்தைக் கொண்டு ஒழுங்குமுறைப்படுத்தித் தன் ஞானத்தால் உணர்வின் எண்ணத்தையே செயல்படுத்தும் திறன் பெற்றது.
உடலில் வரும் வலியையும் வேதனையும் போக்க எண்ணத்தால் நாம் செய்ய வேண்டிய பயிற்சி
நம் உடலுக்குள் எத்தகைய விஷம் கொண்ட அணுக்கள் இருப்பினும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அங்கே செலுத்தச் செலுத்த அந்த அணுக்களை மாற்றி அமைத்து விடலாம்.
நம் உடலில் இடுப்பு வலியோ முதுகு வலியோ எலும்புகள் வலியோ அல்லது தசை மண்டலங்களில் வலியோ அதிலே வேதனைகள் வந்தால்
1.கண்ணின் நினைவு கொண்டு அந்த வலி இருக்கும் இடத்தில் எல்லாம்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைச் செலுத்தி வலி நீங்கி அங்கே நலமாகும் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணிப் பழகுதல் வேண்டும்.
ஒரு சிலருக்கு இருதய வலி இருக்கலாம் சிலருக்கு குலை நோய் இருக்கலாம் சிலருக்கு வயிற்றுக்குள் நோய் இருக்கலாம் சிலருக்கு கர்ப்பப்பையில் வலி இருக்கலாம்.
அங்கங்கே வலி வருவதை நம்முடைய கண்ணால் தான் அதை உணர முடிகின்றது. அதன் தொடர் கொண்டு “இன்ன இடத்தில் இப்படி வலிக்கிறது…” என்பதை உணர முடிகின்றது.
ஆகவே நாம் கண்ணிலே துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து கர்ப்பப்பையில் குறைபாடுகள் இருந்தால் அங்கே நினைவைச் செலுத்தி அங்கே இருக்கக்கூடிய கட்டிகள் கரைய வேண்டும்… கர்ப்பப்பை சீராக வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
உதிரப்போக்குகள் நிற்காது இருந்தால்…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அந்தக் கர்ப்பப்பையை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரருள் பெற்று இந்தப் பை சீராக உருவாக வேண்டும்
3.உதிரப் போக்கு நீங்க வேண்டும் உடல் நலம் பெற வேண்டும் என்று
4.பெண்கள் ஒரு நாளைக்கு ஐந்து தடவையாவது செய்து செயல்படுத்த வேண்டும்.
5.அதிலே பலவீனமான நிலைகள் மாறும்.
கர்ப்பப்பையை உருவாக்கி அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் வீரிய உணர்வுகள் பெறும் பொழுது அதில் உருவான விஷமான அணுக்களின் தன்மை மாறும். நல்ல அணுக்களை அங்கே நாம் உருவாக்க முடியும்.
இப்படி நம் உடல் உறுப்புகளில் எந்தப் பாகத்தில் வலி வந்தாலும் இருதயமோ குடல் பாகங்களோ நுரையீரல் போன்ற உறுப்புகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று கண்ணின் நினைவை உறுப்புகளில் செலுத்திக் கொண்டே வரவேண்டும்.
அப்பொழுது அங்கே இருக்கக்கூடிய குறைபாடுகள் அகன்று நல்ல அணுக்களாக உருவாக்க முடியும்.
ஆனால் வலியோ வேதனையோ நோயோ வரக் காரணம் என்ன…?
நாம் நல்லவர்களாகத் தான் இருக்கின்றோம். இருந்தாலும் பிறருடைய வேதனைகளைக் கேட்டு நுகரும் பொழுது நம் உடல் உறுப்புகளுக்குள் அந்த வேதனை பரவி உடல் உறுப்புகளில் அதே வலியும் வேதனை உருவாகின்றது.
1.கண்ணால் பார்த்துக் கவர்ந்த நுகர்ந்த அந்த உணர்வுகள்
2.நம் இரத்தத்தில் கலக்கப்படும் போது இப்படித் தீமைகள் பரவி விடுகின்றது.
கார்த்திகேயா…! எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளக்கூடிய சக்தியாக நமது ஆறாவது அறிவு இருக்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
நமது ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி
2.உயிரான ஈசனிடம் அதைப் பொருதப்படும் பொழுது
3.இந்த உணர்வின் இயக்கமாக உயிரிலேயும் வலுப் பெறுகின்றது.
ஏற்கனவே நாம் அறியாத நுகர்ந்த வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் சோர்வு வேதனை இவைகளை உள்புகாதபடி அகற்றி விடுகின்றது அல்லது மாற்றி விடுகின்றது.
இப்படி நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு நம் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை உணவாகக் கொடுத்து
1.கண்ணின் நினைவு கொண்டு அங்கே கட்டளை இடப்படும் போது இந்த உறுப்புகள் வலுப்பெறுகின்றது.
2.தீமையிலிருந்து விடுபடக்கூடிய சக்தியும் நோயிலிருந்து விடுபடக்கூடிய சக்தியும்
3.ஆரோக்கியமாக வாழும் நிலைகளும் நாம் பெறுகின்றோம்.
அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எல்லா அணுக்களிலும் சேர்க்கச் சேர்க்க துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து வாழும் அந்தத் தகுதியும் நாம் பெறுகின்றோம்.
இதே மாதிரி யாம் பயிற்சி கொடுத்த முறைப்படி செய்து பழகுங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
வீட்டில் நாம் குழந்தைகளைச் செல்லமாக வளர்க்கின்றோம்… ஆனால் “இப்படிச் செய்து கொண்டிருக்கின்றான்… என்று குறைகளைச் சொல்கின்றோம்.
நல்லவனாக்குகின்றோம். ஆனால் குறைகளைச் சொல்கின்றோம். பரிபக்குவமாக எடுத்துச் சொல்லும் நிலை இல்லை.
வீட்டிற்குள் சில நேரம் குறைகள் வந்துவிடுகின்றது. அவைகளைப் பரிபக்குவமான நிலைகளில் நிவர்த்தி செய்து பழகிக் கொள்தல் வேண்டும்.
பக்குவம் தவறிவிட்டால் என்ன ஆகும்…?
1.ஒருவரை “வாருங்கள்..” என்று அமைதி கொண்டு அன்பாகக் கூப்பிடுவதற்குப் பதில்
2.அழுத்தமான குரலில் “வாங்கஅ..” என்று சொன்னால் இதுவே குற்றமாகிவிடும்.
பக்குவத்தின் நிலையில் எதையுமே
1.நல்லவைகள் ஆக்குவதும்
2.கெட்டவைகள் ஆக்குவதும்
3.உணர்வை மாற்றுவதும்
4.குணங்களை மாற்றுவதும்
5.எதிரிகளாக்குவதும்… நண்பனாக்குவதும்
6.இவை எல்லாமே நம் உணர்வுகளின் பக்குவத்தைப் பொறுத்துத் தான் அமைகின்றது.
தொழிலிலோ மற்ற எதிலுமே சிறிது கஷ்டங்கள் வந்து விட்டால் நாம் பக்குவமான நிலைகள் கொண்டு ஓரளவிற்குச் சிந்தித்துச் செயல்பட்டோம் என்றால் அதைச் சரியாக நிவர்த்திக்கும் தன்மை வருகின்றது. பகைமையைக் குறைக்கலாம்.
இதே போல வாழ்க்கையில் வரும் தீமைகளை அந்தப் பரிபக்குவ நிலை கொண்டு மாற்றியமைக்க முடியும்.
யாருமே கெட்டவர்கள் அல்ல.. “சந்தர்ப்பம்…” அவர்களைக் கெட்டவர்களாக ஆக்குகின்றது. அதிலிருந்து மீட்டிடும் நிலையே நம் குருநாதர் காட்டிய அருள் வழி.
அதற்காக வேண்டி ஒரு முரடனிடம் போய்ப் பரிபக்குவமாகப் பேசினால் கேட்பானா…? ஒரு குடிகாரனிடம் போய்ப் பரிபக்குவமாகப் பேசினால் கேட்பானா…?
நாம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டுமே தவிர அவனிடம் பக்குவம் எடுத்துச் சொன்னால் கேட்க மாட்டான். அவன் கொடிய தவறு செய்ய விரும்புகின்றான். அவனிடம் பக்குவமாகச் சொன்னால் கேட்பானா..,?
ஒரு திருடன் இருக்கின்றான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனிடம் போய்… “ஏன் இப்படித் திருடுகின்றாய்…?” என்று பக்குவம் சொன்னால் கேட்பானா…? கேட்க மாட்டான்.
ஆகவே அந்தத் திருடனின் உணர்வுகள் நமக்குள் வராதபடி நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
1.நாம் ஒரு நல்ல பொருளை வைத்திருக்கின்றோம் என்றால் தூசியின் தன்மை அதற்குள் படாதபடி மூடி வைக்க வேண்டும்
2.அதைப் போன்று தான் தீமையின் உணர்வுகள் நமக்குள் போகாதபடி தடுத்துப் பழகுதல் வேண்டும்.
அதற்காக வேண்டி நாம் போக்கிரியையும் திருடனையும் பார்த்தால் பக்குவமாக நடந்து கொண்டால் எல்லாம் தலைகீழாகப் போய்விடும். நம் பக்குவமெல்லாம் தலை கீழாகக் கவிழ்ந்துவிடும்.
அவன் செய்யும் தவறுகள் நமக்குள் வந்து நாம் தவறு செய்யாமல் பரிபக்குவ நிலை கொண்டு தடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆகவே… நம் வாழ்க்கை சீராக நடக்கப் பக்
குவ நிலைகள் தேவை. எதெனெதன் நிலைகளில் நமக்குப் பக்குவ நிலை தேவையோ அதற்குகந்த நிலையில் பக்குவப்படுத்தி நாம் பழகுதல் வேண்டும்.
அதனால் தான்
1.பாட்டை மட்டும் பாடிவிட்டு… பல நினைவில் நான் இல்லாமல்
2.“பரிபக்குவ நிலை..” நான் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உயிரிடம் வேண்டும்படி சொல்கிறோம்.
உயிர் காக்கும் நண்பனாக இருந்தாலும் பரிதாபப்படக் கூடாது
இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் எடுக்கக்கூடிய உணர்வின் எண்ணச் சுவாசமானது பிறர் ஈர்ப்பில் பாவம் என்ற பரிதாபச் சுழற்சியில் தன் எண்ணத்தைச் செலுத்தாமல் இருத்தல் வேண்டும்.
1.தாயாக இருந்தாலும் தந்தையாக இருந்தாலும்
2.கணவன் மனைவி குழந்தைகள் என்று இருந்தாலும்
3.சகோதர பந்தபாசங்கள்… உயிர் காக்கும் நண்பனாக இருந்தாலும்
4.ஆண்டவனாக இருந்தாலும்…
5.அவர்கள் எடுக்கும் உணர்வின் எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படும் இன்னலைக் கண்டு உடல் நலக் குறைவு எதுவாக இருந்தாலும்
6.அவர்கள் மேல் பரிதாப எண்ணத்தைச் செலுத்தி அவர்கள் பரிதாப எண்ணத்தில் நாம் சிக்காமல்
7.சுயநலம் கொண்ட தன் நலமுடன் பிறரின் நலம் காண நம் உணர்வின் எண்ணச் செயல் பட்டு
8.அவர்கள் அலை நம் மேல் சாடாமல் நம் அலையின் சக்தியை அவர்கள் மேல் பாய்ச்சி
9.அவர்கள் நல்ல நிலை பெற வேண்டும்…! என்ற உயர்வான சக்தி அலையைத்தான் நம் எண்ணத்தில் எடுக்க வேண்டும்.
பரிதாபப்பட்டுச் செய்யும் தர்மம்… பரிதாப அலை உணர்வை நம்மை அறியாமல் நம் எண்ணம் எடுப்பதினால்… பரிதாப எண்ணத்திற்குரிய அலை குண அமிலமாக… “இவ்வுடல் பிம்ப அமிலம் அவர்கள் எடுத்த அலைத் தொடரின் ஈர்ப்பில் சிக்கிவிடுகின்றது…”
ஆக நம் உணர்வுடன் அது கூடி நம் எண்ணமே அச்சுழற்சி அலையுடன் சென்று நாளாவட்டத்தில் அவ்வுணர்வின் “பரிதாப நிலைக்கு நாமும் செல்லக்கூடிய நிலை…” ஏற்பட்டு விடுகிறது.
1.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் செயலின் ஈர்ப்பானது உடனே நம்மைச் சாடும்.
2.இரத்தத் தொடர்பு கொண்டவர்களின் அலைத் தொடர் “இன்னும் வேகமாக…!” நம் உணர்வுடன் ஏறிவிடுகின்றது
வைத்தியர்கள் மற்றவர்களுக்குத் தன் உணர்வின் எண்ணத்தைச் செயல் கொண்டு செய்விக்கும் மருத்துவத்தினால் வியாதியஸ்தர்களின் ஈர்ப்பில் பெரும்பகுதி சிக்க மாட்டார்கள்.
அவர்கள் சொல்லும் அந்த வியாதிக்குத் தக்கவாறு… “தான் செய்ய வேண்டிய மருத்துவ ஞான அலையை உணர்ந்து” அதன் வழியில் செய்யப்படும் மருத்துவத்தால் அவர்களுக்குக் குணமாக வேண்டும் என்ற செயலின் நிலைக்கொப்ப வைத்திய முறையைக் கடைப்பிடிக்க முடிகின்றது.
1.நோயாளிகளின் ஈர்ப்பில் சிக்காமல்
2.அவர்கள் படும் இன்னலின் பரிதாபம் கொள்ளாமல்
3.மருத்துவத்தால் மாற்றியமைக்கலாம் என்ற உணர்வுடன் செய்யப்படும் நிலைக்கொப்ப
4.பிறர் ஈர்ப்பும் இத்தகைய மருத்துவரைச் சாடுவதில்லை.
அப்படிப்பட்ட மருத்துவரால் செய்யப்படும் செயல் குணமும் நலம் பெற வழி கொள்கின்றது.
ஆனால் அதுவே தன் குழந்தை தன் தாய் தந்தையர் என்ற சுற்றத்தில் உள்ளவர்களின் நிலைக்காகச் செய்யப்படும் மருத்துவத்தில் பயம் கலந்த உணர்வு கூடி விடுகிறது.
அவ்வாறு கூடுவதனால்… உணர்வின் எண்ணம் பாசம் என்ற பரிதாப அலையை எடுக்கும் பொழுது தன்னுடைய செயலில் தடுமாற்றம் ஏற்படுகின்றது.
ஆகவே…
1“உணர்வின் எண்ண ஒலிக்கு உள்ள உண்மையை உணர்ந்து…!”
2.ஒவ்வொருவரும் பிறர் அலையின் ஈர்ப்பில் சிக்காமல்
3.சுயநலம் என்ற தன் நல வளர்ப்பால் பிறர் நலத்தை வளர்க்கக்கூடிய வளர்ப்பாக்குங்கள்.
உணர்வின் எண்ணம் உயர் ஞான சக்தியின் தொடர்புடன்… நமக்கு மேல் சக்தி கொண்ட நமக்குச் சித்தர்களினால் வழிப்படுத்திச் சென்ற சக்திகளின் தொடரை ஜெபம் கொண்டு “ஒவ்வொரு வழியிலும் உணர்த்தி வரும்… முன்னோர்களின் தொடர் அலையை எடுக்கப் பழகுங்கள்…!”
நாற்றமாகும் நம் உடலைத்தான்… ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் பெரிதாக மதித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்
நாம் இப்பொழுது “இது என் உடல்… நமது உடல்…” என்று நினைக்கின்றோம்.
1.நம் உடலுக்குள் எத்தனையோ விதமான உணர்வின் அணுக்கள் உண்டு….
2.அதனின் மலமே நம் உடல்…! அதாவது “அணுக்களின் மலம் தான்” இந்த உடல். தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த உயிரான ஈசன் உடலை விட்டுப் போய்விட்டால் இந்த உடலான சிவம் சவமாகி விடுன்றது.
நாம் எண்ணும் உணர்வுகள் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்று நம் உடலாக மாறிக் கொண்டேயுள்ளது. ஆனால் உயிரின் இயக்கத்தால் தான் நாம் இயங்குகின்றோம்.
உயிரின் இயக்கம் இல்லை என்றால் நம் உடலிலுள்ள அணுக்களிலும் இயக்கம் இல்லை.
எத்தகைய உணர்வை நாம் சுவாசித்து இந்த உடலில் வளர்த்துக் கொண்டோமோ அந்த அணுக்களின் மலமே நம் உடலாகின்றது.
அந்த அணுக்களின் மலமாக நம் உடலானாலும் இந்த உடலை விட்டு உயிர் சென்று விட்டால் நம் உடலையே தின்னும் அணுக்களாக மாறி விடுகின்றது.
அதாவது…
1.நம் உடலை உருவாக்கிய அதே அணுக்கள் உயிர் வெளியில் சென்றபின்
2.நம் உடலை உணவாக உட்கொள்ளும் அணுவாக மாறிவிடுகின்றது.
இப்படி ஆன அந்த அணுக்களின் மலம் வெளிப்படும் பொழுது நாற்றமாகின்றது.
முதலில் நுகர்ந்த உணர்வின் மணம் அந்த உணர்ச்சிக்கொப்ப நம் உடலாக நல்ல உடலாகின்றது. ஆனால், உயிர் வெளியே சென்று விட்டால் அதே அணு ஜீவ அணுவாக இருப்பது உயிரணுவாக மாறுகின்றது.
உயிரின் துடிப்பால் இயக்கும் அணு “ஜீவ அணு”. அது நுகர்ந்த உணர்வின் மலம் நம் உடலாகும் பொழுது சிவமாகின்றது.
ஆனாலும் இந்த உயிர் உடலை விட்டுச் சென்றபின் இந்த ஜீவ அணு உயிரணுவாக மாறுகின்றது. உயிரணுவாக மாறிய பின் எந்த ஜீவ அணு நம் உடலை உருவாக்கியதோ அந்த உடலையே உணவாக உட்கொள்ளும் நிலை வருகின்றது.
அது உணவாக உட்கொண்டு வளர்ந்த பின் உயிரணுவான பிற்பாடு அதன் மலத்தை வெளியிடும் பொழுது நாற்றம் சகிக்க முடியாது. இறந்த பின் உடலிலிருந்து நாற்றம் வருவதை நீங்கள் பார்க்கலாம்.
இந்த உடலாக நாம் எந்தெந்த குணத்தை நாம் எடுத்தோமோ அதற்குத்தக்க நம் உடலில் “நல்ல மணங்களாக” இருக்கின்றது. ஆனால்…
1.அதே உடலை இந்த உயிரணு நுகர்ந்து அது உணவாக உட்கொண்டால் நாற்றமாகின்றது
2.நம்மால் பக்கத்தில் இருக்க முடியவில்லை.
எத்தனை வகைச் செடிகளை இது கவர்ந்து அந்த அணுக்கள் அதன் உணர்வின் தன்மையை நம் உயிரணு கவர்ந்து ஜீவ அணுக்களாக மாறியதோ இது உயிர் சென்ற பின் இந்த உடலை இந்த ஜீவ அணுக்கள் உயிரணுக்களாக மாறி அதன் உடலாகிப் புழுக்களாகி விடுகின்றது.
மனிதனுக்குள் எத்தனை விதமன வேதனைகளைப் பட்டோமோ எத்தனை வேதனைப்படுத்தினோமோ எத்தனை துயர்படுத்தினோமோ இந்த உணர்வின் அணுக்கள் புழுவாகி மலமாகும் பொழுது அந்த நாற்றமாக வெளிப்படுகின்றது.
1.இப்படி நாற்றமாகும் உடலைத்தான்…
1.நம் வாழ்நாளில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் பெரிதாக மதித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்
3.யாரும் இல்லை என்று மறுக்க முடியுமா?
என் அம்மா என்போம்… அப்பா என்போம்… கணவன் என்போம்… மனைவி என்போம்… அண்ணன் தம்பி தங்கை… இன்னும் என்னென்னவோ சொல்வோம்.
உயிர் வெளியேறி விட்டால்
1.எவ்வளவு நேரம் அந்த உடலை வைத்திருக்கின்றோம்…?
2.”உடலை எப்பொழுது அடக்கம் செய்வார்கள்…?” என்று தான் உடனே கேட்கின்றோம்.
அந்த மெய் ஞானிகள் காட்டியது உயிரே கடவுள்..! அவனின்றி ஒரு அணுவும் அசையாது.
1.ஆனால் உயிரைப் பற்றி நாம் சிறிதளவாவது… சிறிது நேரமாவது சிந்திக்கின்றோமா…?
2.“அவனுடன் அவனாக” (உயிருடன்) – “அவனாக ஆகும் நிலையை” நாம் எய்த வேண்டும்
3.இதைத்தான் கோவில்களில் மனித உடலைப் பெற்ற நீ… “தெய்வமாக ஆகு…!” என்று தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
ஆனால் நாம் இன்றும் கடவுளைத் தேடிக் கொண்டே தான் இருக்கின்றோம்…!
குறைகளைக் காணும்போது அதை அறிவிப்பாக (INTIMATION) மட்டும் எடுத்துக் கொண்டு “நீக்கும் வழியைத் தான் நாம் பார்க்க வேண்டும்”
வெறுப்பு வேதனை கோபம் என்ற நிலையில் பிறரைக் குறை கூறும் உணர்வுகளைத் தான் நாம் இன்று அதிகமாக வளர்த்திருக்கின்றோமே தவிர… குறைகளை நீக்கும் உணர்வுகளை நாம் வளர்க்கவில்லை.
சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளந்து அதில் இருக்கும் நல்லதை நுகரும் வராகனைப் போன்று (பன்றி)
1.நாம் பிறருடைய குறைகளைக் கண்டுணர்ந்தாலும் அதைப் பிளந்து விட்டு
2.அவர்களை அறியாது சேர்ந்த அந்தக் குறைகள் நீங்க வேண்டும் என்ற நல்ல உணர்வை நுகரப் பழக வேண்டும்.
தெளிந்துணர்ந்து செயல்படும் அந்த உணர்வுகளை நமக்குள் வளர்க்கப்படும் பொழுது இந்த உணர்வின் எண்ணங்கள் நமக்குள் விளைந்து நம் சொல்லின் உணர்வுகளை அங்கே செலுத்தப்படும் பொழுது குறைகளை நீக்கிடும் சக்தியாக அங்கே தோன்றுகின்றது.
இதை எனக்குத் (ஞானகுரு) தெளிவாக்குவதற்குத் தான் சாக்கடை அருகே அமரச் செய்து சாக்கடை உபதேசமாகக் கொடுத்தார் குருநாதர்.
உனக்குள் வரும் தீமைகளை அகற்றிடும் சக்தியாகவும்… தீமைகள் உனக்குள் புகாத நிலையும் பெற வேண்டும் என்பதற்காகத் தான் சாக்கடை அருகே அமரச் செய்தேன்.
அப்போது நீ எதை நுகர்கின்றாய்…? அந்தச் சாக்கடையை எண்ணி ஐய்யய்யே…ஐய்யய்யே.. என்று நினைக்கும் போதெல்லாம் உனக்குள் அந்தச் சாக்கடை நாற்றமே வருகின்றது.
1.ஆனால் இந்த நாற்றத்தை நீக்க வேண்டும் என்று நீ எண்ணும் பொழுது
2.அதை நீக்கும் எண்ணங்களாக உனக்குள் வளர்கின்றது.
இதைப் போன்று தான் நீ யாரைக் கண்டாலும்… எவரைக் கண்டாலும்… அங்கே குறைகள் எதுவாக இருந்தாலும்… அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று உனக்குள் ஏற்றுக் கொண்டு
1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி அவர்கள் பெற வேண்டும்
2.அவர் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.மெய்ப் பொருள் கண்டுணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும் என்று நீ எண்ணுவாய் என்றால்
4.உனக்குள் அறிவித்த இந்த உணர்வுகள் “மெய்ப்பொருள் காணும் நிலையாக உன்னிலே வரும்…” என்று உணர்த்தினார் குருநாதர்.
ஆகவே நாம் இந்த மனித வாழ்க்கையில் பிறருடைய குறைகளைக் காண… அது நமக்குள் அறிவிக்கச் செய்கின்றது
1.அறிவிக்க மட்டும் தான் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
2.அதற்கு அடுத்து அதைப் பயன்படுத்தக் கூடாது..
ஏனென்றால் அறிவிக்கச் செய்யும் நிலையைத் திரும்பத் திரும்ப எண்ணினால் என்ன ஆகும்…?
இப்படிச் செய்தான்… அப்படிச் சொன்னான்… அப்படிச் செய்தான்… இப்படியே செய்து கொண்டிருக்கின்றான்…! என்று எண்ணும் பொழுது
1.அந்த அறிவிக்கும் நிலை நமக்குள் எதைத் தவறு என்று காட்டியதோ
2.அந்தத் தவறின் உணர்வுகளை நமக்குள் விளைய வைத்து
3.நம்மைத் தவறு செய்வோராகவே வளர்த்து விடும்.
அதற்குப் பதிலாக “தவறை நீக்கும் நிலைகளைக் கொண்டு வந்தோம்…” என்றால் அது தெளிவாக இருக்கும்.
ஏனென்றால் குறையே இல்லாத மனிதர்கள் எவரும் இல்லை.
ஒரு மனிதனுடைய சந்தர்ப்பம் குறையான உணர்வுகள் வரும் பொழுது… அதுவே இயக்கச் சக்தியாக இயக்கப்படும் பொழுது
1.அதிலிருந்து நாம் எவ்வாறு விலகிச் செல்ல வேண்டும்…?
2.குறைகளை எப்படி அகற்ற வேண்டும்…? என்று
3.அந்த அருள் ஞானிகள் உணர்வை வலுவாக ஏற்று நாம் எண்ணுவுமேயானால்
4.”குறைகளை அகற்றிடும் சக்தியாக நாம் மாறுகின்றோம்…”
ஆகவே நாம் யாருடன் பழகியிருந்தாலும் அவரின் உணர்வு நமக்குள் வந்தாலும் அவர் அறியாமல் வந்த தீமைகள் நீங்கி… பொருளறிந்து செயல்படும் ஆற்றல் அவர் பெற வேண்டும் என்று நாம் எண்ணும் பொழுது இருளை நீக்கிடும் நிலையாக… “ரிமோட் கண்ட்ரோல்…” போல் வேலை செய்யும்.
டி.வி. மற்றும் இது போல் உள்ள சாதனங்களில் மூடி மறைத்திருப்பதை “நாம் அந்த சுவிட்சைப் போடும்போது…” தெளிவாகத் தெரிகின்றது. அந்த படங்களைத் திறந்து கவர்ந்திடும் நிலையாக ஆக்குகின்றது.
இதைப் போன்று தான்
1.அருள் ஞானிகள் உணர்வினை நாம் எண்ணும் பொழுது
2.எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் எண்ணத்தை நமக்குள் கொண்டு வரும் பொழுது
3.மெய்ப் பொருளைக் கண்டுணரும் நிலைகள் “ரிமோட் கண்ட்ரோல்” ஆக நம்மை அங்கே அழைத்துச் செல்லும்
4.நம் சொல்லைக் கேட்பவருடைய நிலைகளும் அங்கே இயக்கும்
5.குறைகளை மாற்றி அமைக்க இது உதவும்.
6.நல்ல குணங்களை நமக்குள் தெளிந்து கொள்ளும் நிலையாகவும் வருகிறது.
இதைத்தான் “மகா சிவன் இராத்திரி – நீ விழித்திரு…!” என்று சொல்வது.
உருவாகும் சக்திக்கே “சுயநலம் தான் காரணம்…”
1.தன்னலத்தை வளர்த்துத் தான் பிற நலத்தை வளர்க்க முடியுமே அன்றி
2.பிறர் நலத்தால் தன் நலம் என்றுமே வளராது.
உருவாகும் சக்திக்கே சுயநலம் தான் காரணம்…! ஜீவ சக்தி கொண்ட துடிப்பனைத்திற்குமே சுயநிலையுடன் கூடிய தன்னலம் கொண்ட சுய நலம் உண்டு.
சுயநலமில்லா எச்சக்தியும் வளர முடியாது. உணர்வின் எண்ணத்திற்கே சுயநலம் உண்டு.
1.சுயநலம் கொண்டு தான் முருகனைப் படைத்த போகனும் செயல் கொள்கின்றான்
2.வெங்கடாசலபதியைப் படைத்த கொங்கணவனும் செயல்படுகின்றான்.
சூரியனாக உருளும் சூரிய தேவனின் சக்தியும் சுயநலம் கொண்டு தன் வளர்ப்பைத் தான் ஈர்த்துப் பிற மண்டலங்களுக்குச் சூரியனின் சக்தி செல்கிறது.
மிதந்து கொண்டேயுள்ள இப்பேரண்டத்தில் உருண்டோடுகின்ற மையப்புள்ளியாக தன் சுயநல வளர்ப்பின் சக்தி கொண்ட பெரிய மண்டலமான சூரிய மண்டலம் தன் வளர்ப்பின் சக்தி வளர சூரியனின் குடும்ப மண்டலமாக உள்ள நாற்பத்தியேழு மண்டலங்களையும் தன் ஈர்ப்பின் வட்டத்தின் சுழற்சியுடன் வளரவிட்டுக் கொள்கிறது.
வளர்ந்த மண்டலங்களின் அமில சுழற்சி கொண்ட அலையைச் சூரியன் தனக்கு உணவாக எடுத்துத் தன் வளர்ப்பில் தன்னைச் சார்ந்துள்ள பிற மண்டலங்களையும் வளர்க்கச் செய்கிறதேயன்றி சுயநலமின்றிப் பிற நலமாக எதுவும் செயல்படவில்லை.
சூரியனானாலும் சரி… வளர்ந்தோடும் மற்றெல்லா மண்டலங்களும் சரி… சப்தரிஷிகளானாலும் சரி… சப்தரிஷியின் தொடர் கொண்ட சகல ஜீவ உணர்வு உயிரணுக்களும் சரி… எல்லாமே சுயநலத்தின் தொடர் படைப்புத்தான்.
ஆதிசக்தியின் சக்தி என்கிறோம்…!
1.அச்சக்தியே ஆக்கல் காத்தல் மாற்றல் என்ற சுழற்சி சுயநலம் கொண்டு தான் படைக்கின்றான்
2.படைப்பின் பலன் காணுகின்றான்
3.மீண்டும் படைப்பின் படைப்பையே உருவாக்க படைத்ததை மாற்றி மாற்றி அழிக்கின்றான்.
4.உரு மாறி மாறி சக்தி நிலை செயல்பட்டால் தான் சக்தியின் சக்திக்கே சக்தி கூடுகின்றது,
ஒன்றான சக்திக்கு ஜீவன் ஏது…?
ஒன்று ஒன்றுடன் சேர்ந்து இரண்டு ஒன்றாகி… ஒன்றுடன் பிறிதொன்று சேர்ந்து இரண்டாகி.. ஒன்றாகி… இரண்டாகி… ஒன்றாகி…
1.சுயநலம் கொண்டு கருவாகும் சக்தி அலை இருந்தால் தான்
2.படைப்பின் பொருள் வளர்ந்து கொண்டே இருக்கும்.
சுயநலம் கொண்ட வாழ்க்கை தான் மனித வாழ்க்கை.
சுயநலம் கொண்டு பிறர் நலம் காணுங்கள். ஆக… தன் வளர்ச்சியைக் கொண்டு தான் பிற வளர்ச்சியை நிச்சயம் வளர்க்க முடியும்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நாம் நமக்குள் எதிர்ப்பு சக்தியான நிலைகள் எத்தனையோ உணர்வை எடுத்துத்தான் மனித உடலைப் பெற்றிருக்கின்றோம். தீமை என்ற உணர்வுகளை நுகர்ந்தால் நம் மனித உடலுக்குள் அது எதிர்க்கும் சக்திகள் நிறைய உண்டு.
1.எதைப் பார்த்தாலும் உடனே கவலை
2.எதைப் பார்த்தாலும் வேதனை
3.எதைப் பார்த்தாலும் சங்கடம்
4.இதைப் போன்று இருப்பவர்கள் உடலில் அந்த எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.
இப்படிப்பட்டவர்கள் உடலில் அந்த எதிர்ப்பு அணுவின் சக்தி குறைவாகி விட்டால் நுகரும் உணர்வெல்லாம் நுகர்ந்த உணர்வுக்கே அடிமையாகி அதனால் கடும் வேதனையாகும் நிலை வருகின்றது. அப்பொழுது அது நோயாக மாற்றுகின்றது.
உதாரணமாக ஒருவருக்கு மாற்றுக் கிட்னி பொருத்த வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது இரண்டு உடலின் உணர்வுகளையும் இணையச் செய்தல் வேண்டும்.
ஏனென்றால் இன்னொரு உடலிலிருந்து கிட்னியை எடுத்து வைக்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் இந்த உடலுக்குள் பிரித்துவிடும். இது தடுத்துவிட்டால் இணைத்துக் கொண்ட கிட்னியுடன் இணையாது.
அதற்காக வேண்டி…
1.நடு மையமாகும் நிலைகளில் இதற்குச் சமமான நிலையில் ஆக்குவதற்காக
2.இந்த உடலில் எதிர்ப்பு சக்திகளைக் குறைப்பார்கள்.
எத்தகைய உணர்வின் அணு கொண்டு இந்தக் கிட்னிக்குப் பொருத்தப்பட்டுள்ளதோ அதற்குத் தக்க விஞ்ஞானிகள் இதற்கு எதிர்ப்பு சக்தியான நிலைகளைச் சமப்படுத்தும் மருந்துகளைக் கொடுப்பார்கள்.
அப்பொழுது இந்த இரண்டு கிட்னியும் கொஞ்சம் ஒத்து வேலை செய்யும்.
இப்படி அவர்கள் இணைந்து அந்த மருந்தினைக் கொடுத்துக் கொண்டே வந்தால் அந்தக் கிட்னி சீராக இயங்கி வரக்கூடிய உப்புச் சத்தினை வடிகட்டக்கூடிய தன்மை வரும். உடல் ஆரோக்கியம் இருக்கும்.
ஆனால் இதில் சிறிதளவு வித்தியாசமாகி விட்டாலும் சங்கடம் தான்.
அதன் காரணம் என்ன என்றால்
1.இந்த இரண்டுக்கும் எதிர்ப்பு நிலை வரப்படும் பொழுது “எதிர்ப்பு சக்தியை” இந்த உடலுக்குள் குறைத்து விடுவார்கள்
2.அப்பொழுதுதான் சமமான நிலையில் பொருத்திய கிட்னி சீராக இயங்கும்.
ஆனால் காய்ச்சல் உள்ளவர்கள் மாற்றுக் கிட்னி பொருத்தியவர்களிடம் பேசினால் என்ன ஆகும். காய்ச்சல் உண்டாக்கிய கிருமி அது வலுவானது. இங்கே இந்த உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாததால் அவர்களை உடனே தாக்கும்.
அதே சமயத்தில் இவர்கள் சாப்பிடும்போது வாழை இலையிலோ அல்லது தட்டிலோ சுடு தண்ணீர் விட்டுக் கழுவ வேண்டும் கழுவவில்லை என்றால் அந்தக் கிருமிகள் ஒட்டிக்கொள்ளும்.
அப்படி ஒட்டிக் கொள்ளும்போது அந்தத் தட்டில் போட்டுச் சாப்பிட்டால் உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாததால் உடலுக்குள் கிருமிகள் சென்று சீக்கிரமாகவே அவர்களுக்கு நோய் வந்துவிடும்.
அதே மாதிரி காய்கறிகளையோ மற்ற உணவுகளையோ உட்கொண்டாலும் அவைகளைச் சமப்படுத்தும் மாத்திரை சாப்பிட வேண்டும்
1.அதாவது “ஜீவ மாத்திரை” என்று சொல்வார்கள்.
2.அதைத் தினசரி சாப்பிட்டுக் கொண்டேஇருக்க வேண்டும்.
3.ஒரு நாளைக்குச் சாப்பிடவில்லை என்றாலும் அந்த 24 மணி நேரத்தில் வேறு கிருமிகள் வந்துவிடும்.
4.இவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தால் தான் மாற்றுக் கிட்னி பொருத்தியவர்கள் வாழ முடியும்.
இதையெல்லாம் விஞ்ஞான அறிவிலே செய்கின்றார்கள்.
பெற்ற உண்மைகளை யாருக்குச் சொல்ல வேண்டும் என்று தெரியுமா…?
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைப் பல இடங்களுக்கு நேரடியாகவும் சூட்சமமாகவும் அழைத்துச் சென்று பல உண்மைகளை உணர்த்தினார்… காட்டினார்.
அதைப் போல
1.ஒவ்வொரு மெய் ஞானியும் எதன் வழி கொண்டு மெய் ஞானத்தின் மூலக்கூறுகளை அறிந்தார்கள்…? என்று
2.”அக்காலங்களுக்கே அழைத்துச் சென்று…” அந்த உணர்வுகள் பரவியிருப்பதையும் நுகரச் செய்து அறியும்படி செய்தார்.
அவர்கள் மனிதனாக வாழும்போது வரும் இன்னல்களிலிருந்து விடுபடும் ஆற்றல்களைப் பெற்று இன்று விண்ணிலே ஒளியின் சுழன்று கொண்டிருப்பதையும் உணர்த்தினார்.
இதை எல்லாம் அவர் காட்சியாகவும்… உணர்வுப் பூர்வமாகவும் அனுபவமாகவும் எனக்குக் காட்டினார். இயக்கத்தின் உண்மையை அறிந்து கொண்டேன்.
குருநாதர் கொடுத்தார்…!
1.என்னாலும் அதைப் பார்க்க முடிந்தது.. அறிய முடிந்தது… உணரவும் முடிந்தது
2.அந்த மெய் ஞானிகள் பெற்ற ஆற்றலையும் பெற முடிந்தது… பெற்றேன்.
அவ்வாறு யாம் பெற்ற இந்த நிலைகளை யாருக்குச் சொல்ல வேண்டும் என்று தெரியுமா…?
1.என்னுடன் சீடர்களாக வந்து நான் சொல்கிறபடியெல்லாம் கேட்கின்றவர்களுக்குச் சொல்ல வேண்டும்
2.அவர்கள் ஒழுக்கமாக வருகின்றார்களா…? இல்லையா…! என்று பார்த்து அதற்கப்புறம் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
3.சீரான நிலைகளில் வழி நடப்பதற்கு வரம்புகளை விதித்து, கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து அந்தக் கட்டுப்பாட்டின்படி வருகின்றார்களா..? இல்லையா..! என்று பார்க்க வேண்டும்.
4.உண்மைகளை எல்லாம் சொல்லிப் பதிவாக்கி அதன்படி நடப்பார்களா இல்லையா என்று தெரிந்து கொண்டு பல தடவை இழுத்தடித்த பின்பு மெம்பராக்க வேண்டும்.
5.கடைசியாக நான் இதிலிருந்து மாறவே மாட்டேன் என்று சொல்லி “சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்…”
இப்படிச் சத்தியம் செய்து கொடுத்தவர்களுக்குத் தான் மற்ற ஸ்தாபனங்களில் அவர்கள் கற்றுக் கொண்ட நிலைகளைக் கொடுப்பார்கள். ஒரு ஸ்தாபனத்திற்குள் (உள்ளுக்குள்) போனால் மாற மாட்டேன் என்ற வாக்கினை முதலில் வாங்கிக் கொள்வார்கள்.
உங்களிடம் இதையெல்லாம் நான் வாங்கவில்லை. குருநாதர் அப்படிச் செய்யச் சொல்லவில்லை.
1.உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கச் சொன்னார்
2.உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கச் சொன்னார்
3.ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயங்கள் பரிசுத்தம் ஆகவேண்டும் என்று “நீ தூய்மைப்படுத்து” என்றார்.
4.அவ்வாறு நீ தூய்மைப்படுத்தினால் உன் உயிரான ஈசன் உனக்குக் கூலி கொடுப்பான் என்றார்.
“அவர் காட்டிய வழியில்… அவர் சொன்ன முறைப்படித்தான்… அவர் இட்ட கட்டளைப்படித்தான்… இதைச் செய்து கொண்டிருக்கின்றோம்…!”
மகரிஷிகளுடன் நேரடித் தொடர்பு கொண்டால் எதையுமே சீராக்க முடியும்
நம் பூமி இல்லாவிட்டால் நாம் ஏது…? நம் பூமியையே வளர்க்கும் சூரியனின் சக்தி இல்லாவிட்டால் நம் பூமி தான் ஏது…?
சூரியனுக்குச் சக்தி தருவது சூரியனைச் சுற்றியுள்ள 47 மண்டங்கள் தாம். 47 மண்டலங்களின் துணையுடன் இயங்கும் சூரியன் தன் அலையைக் கொண்டு பிற மண்டலங்களின் அலையை எடுத்துத் தான் வளர்ந்து பிற மண்டலங்களையும் வாழ வைக்கின்றது.
சூரிய அலையை ஈர்க்கும் மண்டலமாக நம் பூமியின் ஜீவன் உள்ளது.
1.சூரிய மண்டலத்திலிருந்து வெளிப்படும் அலையைக் கொண்டு
2.நம் பூமி வெளிப்படுத்தும் அலையின் மோதலில் உருவான ஓ…ம் என்ற ஒலியின் சுழற்சி கொண்டு
3.உருண்டோடும் இவ்வுலக சுழற்சி ஓட்டத்தில் உருவான உயிர் ஜீவன்கள்
4.ஓமுக்குள் ஓமாய் ஓ…ம் என்ற நாதத்துடன் உருண்டோடும் பூமியில்
5.அந்நாதத்தால் உருவான ஜீவ நீரும் காற்றும் ஒளியும் கொண்டு ஜீவத் துடிப்பு பெற்று
5.இந்தப் பூமியின் ஈர்ப்பு ஜீவ உடல் கொண்ட உயிர் பிம்பங்களின் சுவாசத்தில் எடுக்கும் ஒலி தான் “ஓமுக்குள் ஓமாய் உள்ள ஒலி…!”
ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு தனித்தொரு நிலையில் எதுவும் இல்லாமல் இரண்டு ஒன்றாகி அவ்வொன்றுடன் பிறிதொன்று சேர்ந்து ஒன்றாகி உருளுகின்ற உயிர் ஜீவ சக்திக்குத் தனித்த சக்தி நிலை எது..?
1.தனித்த ஒன்றான நான் என்ற சக்திக்கு ஜீவனே இல்லை.
2.ஜீவனற்ற சக்தி தான் “நான்” என்ற சக்தி.
இதனை உணர்ந்து ஒவ்வொரு ஆத்மாவும் இவ்வுடல் பிம்பத்தில் ஏற்படும் எந்த ஒரு பிணியையும் உணர்வால் எடுக்கும் எண்ணத்தின் சக்தியை மகரிஷிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு நீக்கிட முடியும்.
“மேல் நோக்கிய சுவாசமாக…” இவ்வுடல் பிம்ப உணர்வு எண்ணம் கொண்டு உடல் பிம்பத்தில் நிறைந்துள்ள பன்னிரெண்டு வகையான குண அமிலத்தையும்… ஆறு வகை குண அமிலத்தையும்… நற்சக்திப்படுத்தும் நிலை கொண்டு செயல்படுத்திடல் வேண்டும்.
1.சலிப்பைச் சாந்தமாக்கி… கோபத்தை வீரமாக்கி… சங்கடத்தை அன்பாக்கி…
2.இப்படி உணர்வின் குணத்தால் உந்தப்பட்டு அவற்றினால் உடல் பிம்பத்தில் ஏற்கனவே ஏற்றிக் கொண்டுள்ள வியாதியின் தன்மையை மாற்றிட
3.நம் குண நலத்தை ஞான வழி பூண்டு மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளைக் கவர்ந்து
4.நம் உணர்வுடன் கூடிய எண்ணத்தால் உடல் பிம்ப ஆரோக்கியத்திற்கு அதை நம் உடலில் பாய வைத்துக் கொண்டு
5.உடல் ஆரோக்கியமும் ஞான வழி ஈர்ப்பையும் வழித் தொடர் ஜெபத்தையும் பெற்றிடலாம்.
இப்படி இந்தப் பூமியின் ஈர்ப்பு மண்டல சுழற்சியுடன் சிக்குண்டு வாழ் நாட்களை சலிப்பு சங்கடம் கோபம் வஞ்சனை குரோதம் காமம் வெறி என்ற உணர்வுகளிலிருந்து மாற்றிடும்
1.நற்குணத்தின் அமிலத்தின் வளர்ப்பின் ஞானத்தின் வளர்ச்சியால்
2.எந்த மண்டலத்திலும் செயல் கொள்ளும் நிலை பெற்ற உயிராத்மாவாக
3.நம் உயிராத்மாவை வளர்த்துக் கொள்ள முடியும்.
உடல் பிணியின் வேதனைப்பிடியிலிருந்து உணர்வின் எண்ணத்தைச் சுயநலம் மிக்க தன்னலம் கொண்டு செயல்பட்டால் தன்னலத்தின் வளர்ப்பால் பிற நலத்தை வளர்க்கலாம்.
1.உடல் என்ற பிம்பத்தை வைத்துத்தான் எந்த ஞானத்தையும் வளர்க்க முடியும்.
2.உடல் பிணிக்கு ஏற்ற மருந்து தேவை.
3.உணர்வின் பிடிக்கு உணர்வின் எண்ண நிலைக்கொப்ப சுழல விடாமல்
4.உணர்வின் எண்ணத்திற்கு ஞானம் தேவை.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒருவர் மேல் நாம் ரொம்பப் பிரியமாக இருக்கின்றோம், அவரும் நம் மேல் பற்றாக இருப்பார். ஆனால்… சந்தர்ப்பத்தில் கடுமையாக அவர் வேதனைப்படுகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.
அவர் வேதனைப்படுவதைப் பார்த்துவிட்டு “நல்ல மனிதன்… இப்படி ஆகிவிட்டாரே…” என்று நாமும் வேதனைப்படுவோம்.
அப்பொழுது என்ன செய்கிறோம்…? கதவைத் திறந்து வைத்து விடுகின்றோம்.
1.அந்த வேதனையான உணர்வுகள் உள்ளுக்குள் போய்விடுகின்றது. அதை மூடவேண்டும்.
2.கதவைத் திறந்து வைத்திருந்தால் காற்றடித்தது என்றால் வீட்டிற்குள் தூசி… மற்ற வேண்டாதது எல்லாமே உள்ளுக்குள் வருகின்றது அல்லவா.
3.அதே மாதிரி நாம் நமக்குள் தீமைகள் உட்புகாதவண்ணம் கதவை மூடிப் பழக வேண்டும்.
எந்தக் கதவை..,?
நம் மூக்கின் வழி போய் உயிரில் பட்டு மோதுகின்றது. இதில் உள்ள “மேக்னட்” (காந்தம்) என்ன செய்யும்…?
நமக்கு முன் நடப்பதைக் கண்களால் பார்க்கின்றோம். கருவிழி ருக்மணி என்ன செய்கின்றது…?
நம் விலா எலும்புகளில் ஊன் இருக்கின்றது. அதிலே பதிவாக்கி விடுகின்றது. நம் ஊனுக்குள் நாம் வேதனைப்பட்ட உணர்வை ஊழ்வினை என்ற வித்தாக நம் உடலில் பதிவாக்குகின்றது.
பதிவாக்கியபின் என்ன செய்கின்றது…?
இதுவெல்லாம் சுவாசித்துப் போவதில்லை.
கருவிழி ருக்மணி சுவாசம் ஆகாதபடியே ருக்மணி “டக்…” என்று படமாக்கி எக்ஸ்ரே மிஷினில் படம் எடுத்தால் உடலுக்குள் இருப்பதை எல்லாம் காட்டுவது போல் “இங்கே விலா எலும்புக்குள்… கடிகாரம் அடித்த மாதிரி அடிக்கும்…!”
1.பார்த்தவுடன் நமக்குள் “பட… பட…” என்று இழுக்கும்
2.“டக்…” என்று ரிக்கார்டு செய்யும்.. பதிவாகிவிடுகின்றது.
இப்படிப் பதிவான பின்னர் என்ன செய்யும்…?
கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் வேதனைப்படும் மனிதனிடமிருந்து வெளிப்படும் வேதனையான உணர்வை இயக்க அணு கவர்ந்து அதை இயக்கக்கூடிய அணுக்களாக நம் உடலுக்குள் மாறும்.
1.இதை மாற்ற வேண்டும் என்றால்…
2.நமக்குள் புகாது தடுக்க வேண்டும் என்றால்…
3.தீமை செய்யும் அணுக்கள் உடலுக்குள் உருவாகாமல் தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
தீமையானவற்றைச் சந்தித்த உடனே நம் நினைவு புருவ மத்திக்குச் செல்ல வேண்டும்.
“ஈஸ்வரா…” என்று உயிரான ஈசனிடம் கண்ணின் நினைவினைச் செலுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அங்கே நிறுத்துதல் வேண்டும்.
அப்பொழுது… தீமையான உணர்வுகள் சுவாசத்தின் மூலமாகவும் தடுக்கப்படுகின்றது. கண்ணின் நினைவு புருவ மத்தியில் இருக்கும்போது எந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் நினைவினைச் செலுத்துகின்றோமோ அது தான் நம் விலா எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாக மாறும். அந்த ஒளியான அணுவாகத்தான் உடலுக்குள் அது உருவாகும்.
இதற்குப் பெயர் தான் “ஆக்ஞை…” ஏனென்றால்… எல்லாவற்றிற்கும் டாக்டர் உங்கள் உயிர் தான்.
அந்த டாக்டரிடம் உங்கள் உணர்வான நிலைகள் கொண்டு சொன்னீர்கள் என்றால் அதற்குத் தகுந்த மாதிரி உங்கள் உயிர் இயக்கி உங்களை நல்வழிப்படுத்தும்.
நல்லது கெட்டது என்று உயிர் காட்டுகின்றது.
ஆகவே… வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம் என்ற உணர்வுகள் வரும் போது இந்த டாக்டரை மதிக்காதபடி… கெட்டது உள்ளுக்கே போகாதபடி தடுக்கவில்லை என்றால் என்ன நடக்கும்…?
நம் உடலுக்கு முடியாத சில சமயங்களில் டாக்டர் இதையெல்லாம் சாப்பிடாதீர்கள் என்று சொல்வார். ஆனால் அதைச் சாப்பிட்டால் என்ன ஆகும்…? நோய் இன்னும் அதிகமாகிவிடும்.
ஒருவர் சாப்பிடுவதைப் பார்த்துவிட்டு ஆசைப்பட்டு முடியாமல் இருக்கும் நேரத்தில் அதைச் சாப்பிட்டால் என்ன செய்யும்…? “டாக்டர் சொன்னபடி கேட்கவில்லை என்று அர்த்தம்…!”
பல கோடிச் சரீரங்களில் நாம் பெற்ற “தீமையை நீக்கும் சக்தி – சேனாதிபதி”
1.நம்முடைய ஆறாவது அறிவைச் “சேனாதிபதி…” என்று காட்டி
2.அதை இந்த உடலுக்குக் காவல்காரன்…! என்று உணர்த்தினார்கள் ஞானிகள்.
உதாரணமாக போர்முறை என்று வரும் பொழுது தன் நாட்டைக் காக்க இந்தச் சேனாதிபதி கட்டளையிட்டு… சிப்பாய்களை எல்லாம் தயார் செய்து வரும் எதிரிகளை வீழ்த்தும் தன்மை பெற்றது.
இது போன்றுதான் ஓர் உயிரணு பூமிக்குள் விஜயம் செய்து… அது பல கோடி உடல்களைக் கடந்து… அதிலே பல கோடித் தீமைகளை நீக்கிடும் அறிவாக… மனிதனாக ஆனபின் இந்த ஆறாவது அறிவாக உருவானது.
1.ஆதியிலே அப்படி வளர்ச்சி பெற்று விண்ணுலகம் சென்றவன் தான் அகஸ்தியன்.
2.அவன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி… இன்றும் ஒளியின் உடலாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றான்.
அவன் தீமைகளை வென்று வெளிப்படுத்திய உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நம் பிரபஞ்சத்தில் பரவச் செய்தாலும் துருவத்தின் வழியாக நம் பூமி அதைக் கவர்ந்து நமக்கு முன் பரவச் செய்கின்றது.
ஆறாவது அறிவு கொண்டு அதை நாம் கவர்ந்து உயிரிலே மோதச் செய்து… கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தி எல்லா அணுக்களையும் அந்தச் சக்தியைப் பெறச் செய்ய முடியும்.
இந்த மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில்…
1.எந்தத் தீமையை நாம் பார்த்தாலும் அது நமக்குள் ஊடுருவி
2.வாயிலே உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்து விஷமாகப் போவதற்கு முன்
3.கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் புருவ மத்தியில் வைத்துத் தடுத்து விட்டால் “அது சேனாதிபதி…!”
4.தீமை என்று தெரிந்து கொண்டபின் அதைத் தடுத்து நிறுத்த இப்படிப் பழகிக் கொள்ள வேண்டும்.
நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினைச் செலுத்தப்படும் பொழுது அந்த அணுக்களுக்கு “வீரிய சக்தி கிடைக்கின்றது…”
உதாரணமாக… ஒரு மனிதன் நமக்குத் தீங்கு செய்கின்றான் என்றால்… அந்த உணர்வின் தன்மையை நம் கண்களில் உள்ள கருவிழி ருக்மணி தான் விலா எலும்புகளில் வித்தாகப் பதிவாக்குகின்றது.
எனக்குத் தீங்கு செய்தான்… தீங்கு செய்தான்… என்று மீண்டும் எண்ணும் பொழுது அந்த உணர்வுகள்… தீங்கு செய்தவன் அமெரிக்காவில் இருந்தாலும்… அவன் உணவை உட்கொள்ளும் போது நினைத்தால் அவனுக்குள் புரையோடி… சாப்பிட முடியாது தடுக்கின்றது.
அல்லது அவன் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தால் “எனக்குத் துரோகம் செய்தான்… அவன் உருப்படுவானா…?” என்ற உணர்வைச் செலுத்தப்படும் பொழுது அவன் சிந்தனை குறைந்து அங்கே விபத்துக்கள் உண்டாகிறது.
அதே சமயத்தில் “அவன் இப்படிச் செய்தானே…” என்று வீரிய உணர்வுகள் நமக்குள் வரும் பொழுது நம்முடைய சிந்தனைகளும் குறைந்து மேடு பள்ளம் தெரியாதபடி… அல்லது எதிரிலே இருக்கும் பொருள் தெரியாது நாமும் மோதிக் கீழே விழுகும் நிலை வருகின்றது.
எது இதைச் செய்கிறது…? நாம் நுகர்ந்த உணர்வைத் தான் நம் உயிர் இவ்வாறெல்லாம் இயக்குகின்றது. ஆகவே… இதைப் போன்று
1.“இதன் வழி இப்படி வரும் – கார்த்திகேயா…!” என்று நாம் தெரிந்து கொள்ளும் நிலையாக
2.ஆறாவது அறிவை எப்படிப் பயன்படுத்துவது…? என்பதைத் தெளிவாக
3.அந்த ஞானிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.
திட்டியவனை எண்ணும் பொழுது இங்கே நமக்கு விபத்து ஆகின்றது… அங்கே அவனுக்கும் விபத்துக்களை உருவாக்கும் சக்தி ஆகிறது. உணர்வுகள் தடுமாறி உடலுக்குள் சென்ற பின் தீய விளைவின் உணர்வுகள் நல்ல அணுக்களைச் செயலற்றதாக ஆக்கி இந்த உடலுக்குள் நோயாக மாற்றுகிறது.
இதைப் போன்ற தீமையிலிருந்து விடுபடுவதற்குத் தான் உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குகிறோம்.
தீமை எப்பொழுது வருகின்றதோ பதிவாக்கியதை நினைவாக்கி… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணினால் உள் புகாது தடுக்கின்றது.
அதற்குப் பின் என்ன செய்ய வேண்டும்…?
எந்த மனிதன்… “அவன் தீங்கு செய்தான்…” என்ற உணர்வினை நம் கண் கருவிழி ருக்மணி பதிவாக்கியதோ அடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று
1.நாம் ஏங்கிப் பெற்றால் இதே கருவிழி ருக்மணி
2.அவன் செய்த தீங்கின் தொடர் கொண்டு பதிவானதன்… நம் உடலுக்குள் அதன் அருகிலேயே பதிவாக்கி விடுகின்றது.
இரண்டும் உயிரிலே மோதப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் வலுவான நிலைகள் வரப்படும் பொழுது வேதனையைத் தடுக்கும் சக்தி வருகின்றது… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் வலுவாகின்றது.
அதே சமயத்தில்…
1.அந்தத் தொக்கிய விஷத்தின் தன்மை உள்ளே போகாதபடி கவர்ந்து இழுக்காதபடி
2.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று
3.கண்ணின் நினைவை உள்ளே பாய்ச்சப்படும் பொழுது அந்த அணுக்கள் எல்லாம் வீரிய உணர்வுகள் பெறுகின்றது… இங்கே தடுக்கின்றோம்.
அதாவது நாம் கவர்ந்த தீமையின் உணர்வுகள் உமிழ் நீராக மாறி ஆகரத்தின் வழி சென்று… ஜீரணித்து… இரத்தத்துடன் கலந்து உடலுக்குள் பரவுவதற்கு முன்… “ஆறாவது அறிவால்…” முன் கூட்டியே அதைத் தடுத்து விடுகின்றோம்.
இப்படிப் பழகிக் கொண்ட பின் மிளகாயைக் குழம்பிலே போட்டு அதைச் சுவையாக மாற்றுவது போன்று
1.தீமை என்றோ வேதனை என்றோ உணர்வுகள் செயல்பட்டாலும் அல்லது அவைகளை அறிந்து கொண்டாலும்
2.அறிந்து கொண்ட அந்த விஷத்தின் தன்மையை நமக்குள் வளராது தடுக்க இது உதவும்.
அதற்குத்தான் தியானப் பயிற்சியாக இதைக் கொடுக்கின்றோம்.
நோய்க்குக் காரணமான “மூல வித்தை…” மாற்றியமைக்காது செய்யும் எந்த மருத்துவமும் முடிவில் பலன் அளிக்காது
உணர்வுடன் கூடிய எண்ணத்தால் வரக்கூடிய வியாதிகள் மனிதனுக்கு மட்டும் தான் உண்டு.
கை கால் உணர்விழந்து வாதப்பிடிப்பு நோய்கள் எப்படி வருகின்றன…?
1.கோப உணர்வை வளரவிட்டுப் படபடக்கும் உணர்வுடன்
2.சலிப்பு சோம்பல் என்ற சங்கடத்துடன் கோப உணர்வின் அலையை மீண்டும் மீண்டும் எடுத்து அதனை அடக்கி
3.தன் சந்தோஷ உணர்வைக் கூட்டிக் கொள்ள உந்தலை அடக்கி
4.மற்றொரு உணர்வின் ஈர்ப்பில் எண்ணத்தைச் செலுத்திச் செலுத்தி
5.கோபத்தினால் வரக்கூடிய விளைவுகளைக் கண்டு அஞ்சி
6.சந்தோஷத்தால் மாற்றியமைக்க முடியும் என்ற தன் எண்ணத்தை மாற்றியமைத்து
7.இன்பம் என்று எதனைச் செயல்படுத்த எண்ணுகின்றானோ
8.இவ்விரண்டு அலைகளும் இவன் உணர்ந்து எண்ணும் எண்ணத்தால் சுவாசமுடன் மோதுண்டு
9.சத்ரு மித்ரு நிலையாகி நரம்புகளின் இயக்கத் தன்மை குறைவாகி உணர்வின் ஈர்ப்பு நரம்புகள் பாதிக்கப்பட்டு
10.சிறு மூளை பெருமூளை நரம்புகள் சரிவர இரத்த ஓட்டங்கள் ஓடப் பெறாமல் சில அடைப்புகளாகி
11.அதனால் வரும் வியாதிகள் தானப்பா இந்த வாத நோய்கள் எல்லாம்.
தோல்களில் ஏற்படும் சர்ம வியாதிகள் எப்படி வருகின்றன…? கட்டிகளும் சில புண்களும் எப்படி வருகின்றன…? உடலில் உள்ள பாக்கித் தன்மை எல்லாம் சரி வர இருந்தாலும் சர்மங்களில் ஏற்படும் ஒரு சில வியாதிகள் எப்படி வருகின்றன…?
உடலில் உள்ள சிறு உறுப்பிற்கும் நகம் முதற் கொண்டு ரோமங்கள் வரை ஜீவ சக்தி இருந்தால் தான் சீராக வளர்கின்றது. உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் அதற்குகந்த அமில ஈர்ப்பை அந்தந்த உறுப்புகளே தனக்குகந்த ஆகாரத்தைத்தான் எடுத்து வளர்கின்றது.
நகத்தின் அமிலமும் பற்கள் ரோமம் எலும்பு சதை எல்லாமே அதனதன் குண அமில ஆகாரத்தைத் தன் ஈர்ப்பின் சுவாசத்தால் எடுத்துத் தான் வாழ்கின்றன.
இப்படி வாழும் நிலையில் சர்மங்களில் அந்தந்த இடங்களின் ஈர்ப்பு ஜீவ சக்தி பாதிக்கும் பொழுது அதற்குகந்த துடிப்பு உணர்வை எடுக்காத முறையில் ஏற்படுவது தான் உடலில் ஏற்படும் சில கொப்பளங்களும் நகங்களின் வெடிப்புத் தன்மையும்.
ஈறுகளில் ஏற்படும் விஷ அணுக்களின் தாக்குதலினால் பற்களில் வியாதியும் சில அமில பாதிப்பால் ரோம (தலை முடி) வளர்ச்சி குன்றி உதிர்வதும் ஏற்படுகின்றன.
மனித எண்ண உணர்வு நிலைக்கொப்ப வியாதிகள் வரும் பொழுது இன்றைய விஞ்ஞானத்தால் சில செயற்கை முறை கொண்ட மருத்துவத்தால் பல சாதனைகளைச் செய்கிறார்கள்.
டி,பி வியாதிக்கெல்லாம் அந்த வியாதிக் கிருமியை அழிக்க அதற்கு மேல் சக்தி கொண்ட சில மருந்துகளைச் செலுத்தி இவ்விஷ விரிய சக்தி உடலைப் பாதிக்காமல் இருக்க அதற்கு மாற்று மருந்தையும் அதனுடன் உட்கொள்ளச் செய்கின்றனர்.
1.உள்ள வியாதியை மற்றொரு சக்தியினால் அதனை மாற்றி…
2.மாற்றக்கூடிய அச்சக்திக்கு அதன் வீரிய குண படர்ப்பு உடலைப் பாதிக்காமல் இருக்க
3.மற்றொரு மருந்தையும் தந்து தான் விஞ்ஞான மருத்துவம் இன்றுள்ளது.
புற்று நோய்க்கெல்லாம் உறுப்புகளில் எந்தெந்தப் பாகத்தில் அதிகமாகத் தாக்கப்பட்டு அதனை ஆரம்ப காலத்தில் கண்டுணரும் முறை கொண்டு அந்தந்த உறுப்புகளை நீக்கி விடுகின்றனர்.
அதாவது உயிர் வாழக்கூடிய நிலை இருந்தால் கருப்பை மார்பகங்கள் குடல்கள் இவற்றின் நிலையில் புற்று நோய் தாக்கப்பட்ட இடங்களை நீக்கிச் செயல் கொள்கிறது மருத்துவ விஞ்ஞானம்.
நீக்கிவிட்டு உயிர் வாழ முடியாத பாகமாக இருந்தால் அத்தகைய தாக்குண்ட இடங்களில் உள்ள புற்று வியாதியை கதிரியக்கம் கொண்டு மின் அலையினால் அந்தந்தப் பாகங்களைச் செயலிழக்கச் செய்து செயல் கொள்ள வைக்கின்றார்கள்.
1.மின் அலையின் சாதனத்தால் உடல் மண்டல நரம்புகள் அனைத்தும் செயல் கொள்ளும் முறைகளையும்
2.உடல் உறுப்பின் உள் நிலைகளைக் காணக்கூடிய சாதனைகளையும் (X RAY, SCAN) இன்றைய விஞ்ஞானம் செய்கிறது.
இன்னும் பல விநோதக் கருவிகளை உருவாக்கி அதன் மூலம் உடல் முழுவதையுமே ஆராய்ந்து உயிர் காக்கும் செயல் ரூபம் அனைத்துமே
1.இன்று பொருளை ஈட்டும் வழியில் தான்…
2.விஞ்ஞான மருத்துவத்தில் வளர்ந்து கொண்டுள்ளதே தவிர
3.உணர்வின் எண்ணம் கொண்டு
4.நாம் எடுக்கும் சுவாசத்திற்கு வலுத் தந்து வளர்க்கும்
5.உன்னத சக்தியின் அலையை ஈர்ப்பார் யாரும் இல்லை…!
உடலில் தசைகளில் உருவான நோய்களை அகற்றினாலும் எண்ணத்தின் உணர்வால் உருவான “மூல வித்தை…” மாற்றியமைக்காது செய்யும் எந்த மருத்துவமும் முடிவில் பலன் அளிக்காது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இன்றைக்கு இருக்கக்கூடிய உலகம் காற்றிலே அதிகமாக விஷத் தன்மை பரவிக் கொண்டிருக்கின்றது. இன்று என்ன செய்கின்றார்கள்…?
நான் தீவிரவாதி…! நான் சொன்னபடி கேட்கவில்லை என்றால் உன்னை அழிப்பேன். என்னுடைய கட்டுப்பாட்டிற்குக் கீழ் நீ வரவேண்டும்.
1.அதாவது “என் வழிக்குத் திரும்பு… இல்லை என்றால் உன்னைக் கொன்று விடுவேன்” என்று சொல்கின்றார்கள்
2.பல பேரைக் கொன்று கொண்டும் இருக்கின்றார்கள்.
அதே போல் அமெரிக்கா எத்தனை வகையில் பல குண்டுகளைச் செய்து வைத்திருந்தாலும் கூட அவன் நாட்டுக்குள் இருந்து அவர்களுடன் பழகி அவனுடைய விமானத்தை வைத்தே கட்டடங்களையும் மக்களையும் கொன்று குவித்தார்கள். அவர்களுடைய ஞானம் அப்படி இருக்கின்றது.
ஏனென்றால் ஆண்டவனுக்கு எதிரான நிலைகளில் செயல்படும்போது அவர்களைக் கொன்றால் ஆண்டவன் ரொம்பச் சந்தோஷமாகின்றான்.
1.ஆண்டவன் சந்தோஷப்பட்டு இவன் உயிரை அவனிடம் அழைத்துச் சென்று விடுவான்… மோட்சத்திற்குக் கொண்டு போவான் என்று சொல்லி
2.“முட்டாள்தனமான அறிவுகளில்” செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.
உன் நாட்டைக் காக்க வேண்டும் என்றும் மக்களைக் காப்பாற்றுவதற்காக வேண்டி “நீ… உன் உயிரை விட்டால்…” உயிரை விட்டான் என்பதற்காக வேண்டி “கடவுள் உனக்கு மோட்சம் கொடுப்பான்…” என்பார்கள்.
இப்படிச் சொல்லும் நிலை ஒவ்வொரு மதத்திலேயும் ஒவ்வொரு இனத்திலேயும் ஒவ்வொரு சாதியிலும் இந்த நிலை இருக்கின்றது.
1.இன்று அந்த நிலைகள் உயிரைக் கொல்லும் தீவிரவாதமாக வளர்ந்து விட்டது
2.அடுத்தவனைக் கொல்வதில் ஒரு சந்தோஷப்படக்கூடிய நிலையில் வெறித் தன்மை ஊட்டி
3.இன்றைக்கு உலகமே அந்த நிலைகளுக்கு வந்துவிட்டது.
இத்தகைய உலக நடப்புகளை எல்லாம் பார்த்து… கேட்டுக் கொண்டபின் வீட்டில் நம் குடும்பத்துடன் வாழ்பவர்களுக்குள் என்ன செய்கின்றது…?
பையனை நன்றாக உயர்த்த வேண்டும் என்று எண்ணுகின்றோம். நாம் எண்ணியபடி அவன் நடக்கவில்லை என்றால்… “இவன் என்னத்தைச் செய்யப் போகின்றானோ…?” கோபம் வருகின்றது.
இந்தக் கோபம் பயமாக வந்து அவனை மிரட்டிக் கொண்டேயிருப்போம்.
அந்த மிரட்டும் உணர்வுகள் ஒரு தடவை அவன் மேல் வெறுப்பாகி அது நமக்குள் பதிவாகி அந்தச் சொல்லாகச் சொல்லி அவனுக்குள் பதிவாக்கி விட்டோம் என்றால்… அவன் இல்லாத பொழுதெல்லாம் நாம் என்ன செய்வோம்…?
வீட்டில் பெண்கள் அவனைப் பற்றிப் பேசினால் உடனே கோபப்படுவார்கள். அந்தப் பேச்சின் உணர்வுகள் செயல்படும்போது அவனுக்குள் பதிவாகிவிடும்.
அந்தப் பதிவு அவனை என்ன செய்யும்…?
அவன் ரோட்டில் நடந்து சென்றால் சிந்தனை இழந்தவுடன் மேடு பள்ளம் தெரியாதபடி விபத்துக்குள்ளாவான்.
அல்லது எதிர்த்தும் வரும் ஆளையோ எதிர்த்து வரும் வாகனத்தையோ தெரியாதபடி ஆக்சிடென்ட் ஆகும். நம்முடைய நினைவுகள் இப்படி ஒன்றுக்கொன்று எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகளில் இப்படித்தான் இயக்குகின்றது.
ஒரு குடும்பத்தில் ஒரு சிறு ஆக்சிடென்ட் ஆனது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படி ஆக்சிடென்ட் ஆன உணர்வுகள் வீட்டில் உள்ள அத்தனை பேருக்கும் அந்த உணர்வுகள் பதிவாகிவிடும்.
இந்த மாதிரி ஆன பின், அடுத்தாற்போல் வீட்டை விட்டு அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது வெளியில் சென்றார்கள் என்றால் என்ன ஆகுமோ,,,? ஏது ஆகுமோ…? என்ற அந்த உணர்வுகள் தூண்டும்.
அவர்களை எண்ணி இங்கே போகும்போது “இந்த நினைவு” என்ன செய்கின்றோம்…! என்று தெரியாதபடி முட்டி மோதிக் கொள்வார்கள். காரிலோ எதிலோ சென்றால் மறுபடியும் ஆக்சிடென்ட் ஆகும்.
1.இப்படி அந்தக் குடும்பத்திற்குள் தொடர்ந்து அந்த உணர்வுகள்
2.“இப்படி ஆகிவிட்டதே… இப்படி ஆகிவிட்டதே…” “கெட்ட நேரம் வந்து விட்டது போலிருக்கின்றது…” என்று
3.அதை எண்ணக்கூடிய நேரம் கெட்ட நேரமாக மாறும்.
அதை உடனே மாற்ற என்ன செய்ய வேண்டும்…?
துருவ நட்சத்திரத்தை எண்ணி அதிலிருந்து வரும் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி நமக்குள் அதை இணைத்துக் கொண்டு அந்த மன உறுதியை வலுப்படுத்திக் கொண்டால் அந்தக் கெட்ட நேரத்தை நாம் நல்ல நேரமாக மாற்றிக் கொள்ள முடியும்.
இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம். உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் வரக்கூடிய தொல்லைகளை உடனுக்குடன் இப்படி மாற்றி அமைக்க வேண்டும்.
“சாதாரணமாக எண்ணினாலே…” அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியைத்தான் உங்களுக்கு ஏற்படுத்துகின்றேன்
பல கோடிச் சரீரங்களில் வளர்ச்சி அடைந்து… மனிதனாக உருவாக்கிய நம் உயிரை மதித்துப் பழகுதல் வேண்டும். இது அவனுடைய உடல்…!
1.நாம் புறத்திலிருந்து நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும்…
2.பிறிதொரு அணுக்களின் மலமே இந்த உடல்
3.உயிரான ஈசனின் உணர்வின் இயக்கத்தில் இந்த அணுக்களின் இயக்கமாக இருக்கின்றது.
உயிரான ஈசன் வெளியே சென்று விட்டால் உங்களுக்கு ஏது மலம்…? உயிர் வெளியே சென்றால் இந்த உடலான சிவம் சவமாகி விடுகின்றது. சிறிது நேரம் இயக்கச் சக்தி இல்லை என்றால் உடல் நாற்றம் ஆகி விடுகின்றது.
நாற்றமாகும் பொழுது இந்த உடலை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் புழுக்களாக மாறுகின்றது. முதலில் ஜீவான்மாக்களாக இருக்கின்றது… உயிரான்மாவாக மாறுகின்றது.
எதன் எதன் உணர்வை எடுத்து இந்த உறுப்புகளில் எதை எதைச் சாப்பிட்டதோ அதற்குத்தக்க உறுப்பின் தன்மை கொண்டு “காற்றிலே சூட்சும இயக்க அணுக்களாக மாறுகின்றது…!
மற்றொரு உடலுக்குள் சென்றவுடன் அங்கே உறுப்புகளைச் சாப்பிடும் தன்மை வருகின்றது. நுரையீரல் கல்லீரல் என்று இப்படி மனித உடலுக்குள் சுவாசத்தின் வழி கூடி உள் சென்று அதை உணவாக உட்கொள்ளும் நிலை வருகின்றது.
அதே சமயத்தில் உடல் அழுகும் நிலை வரும் பொழுது தோலை உருவாக்கிய அணுக்களுக்குள் சென்றால் தோல் வியாதியாக தோல் உறியும் தன்மை வருகிறது.
1.உடலை விட்டு உயிர் வெளியே சென்ற பின்
2.இந்த உடலை வளர்த்த அந்த அதனை அணுக்களும்
3.எத்தனை ரூபங்களாக மாறுகிறது…? என்ற நிலையை உணர்ந்தால் போதும்.
எனது உடல்… எனது சொத்து… எனது நிலை…! என்று வரப்படும் பொழுது
1.தான் எண்ணியது நடைபெறவில்லை என்றால் வேதனையை வளர்த்து விஷத்தின் தன்மையாக மாறி
2.அதற்குத் தக்க அடுத்த உடலாகப் பெறும் தகுதியையே இந்த உயிர் உருவாக்கி விடுகின்றது.
ஆக… கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்… உயிர் அவ்வாறு மாற்றி விடுகின்றது. இதிலிருந்தெல்லாம் விடுபட வேண்டும்.
இருபது வருடம் காடு மேடெல்லாம் அலையச் செய்து இயற்கையினுடைய இயக்கங்கள் எவ்வாறு…? என்ற உண்மைகளை குருநாதர் எனக்கு (ஞானகுரு) உணர்த்தினார்.
சாதாரண பாமர மக்களுக்கும் இந்த உண்மையின் உணர்வை ஊட்டித் தீமைகளை அகற்றிடும் வலிமை பெறச் செய்ய வேண்டும் என்பதற்குத் தான் உபதேச வாயிலாக உங்களுக்குள் பதிவு செய்கிறோம்.
உதாரணமாக… இங்கே திருடன் வந்தான்… பொருள்களைத் திருடினான்…! என்று பதிவு செய்தால் அதை “உம்…” கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருப்பீர்கள்… பதிவாகும்.
சமயத்தில் ஒரு கஷ்டம் வந்தால்… “நாம் ஏன் திருடக்கூடாது…!” என்ற எண்ணம் தூண்டி நம்மையும் திருட வைத்துவிடும்.
அதே சமயத்தில் ஒருவன் அதைச் செய்தான்… இதைச் செய்தான்… ஆகையினால் பதிலுக்கு நான் அவனை உதைத்தேன்..! என்ற உணர்வை நுகர்ந்தால்… இந்த உணர்வுகள் திருத்தி வாழும் நிலைகளைச் செய்வதற்குப் பதிலாக உதைக்கும் நிலையே வருகின்றது.
ஆகவே அதைப் போன்ற நிலைகள் வராதபடி தடுப்பதற்காக… அருள் ஞான உணர்வுகளை உங்களுக்குள் ஊட்டி அதை ஆழமாகப் பதிவு செய்கின்றோம். அதை நீங்கள் பெற முடியும்… எளிதானது தான்…!
1.சாதாரணமாக நீங்கள் எண்ணினாலே அந்த அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியைத்தான் இப்பொழுது ஏற்படுத்துகின்றேன்.
2.இந்தத் தகுதியை நீங்கள் இழந்தால்… “உங்களுக்குத் தான் நஷ்டம் எனக்கு அல்ல…!”
நீங்கள் அந்த அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று ஆசை எனக்குள் வலுவாக இருக்கிறது. உங்கள் உயிரை மதிக்க வேண்டும்… அவனால் உருவாக்கப்பட்ட ஆலயத்தை… உடலைப் பரிசுத்தப்படுத்த வேண்டும்…! என்ற நோக்கத்தில் தான் இதைச் சொல்கிறேன்.
ஒரு சிலர் ஆலயத்திற்குச் சென்று தெய்வத்திற்கு தங்கத்தில் காசு அபிஷேகம்… செய்வார்கள். இது அது போன்று அல்ல.
1.மனதைத் தங்கமாக்க வேண்டும்
2.மனதைத் தெளிவாக்க வேண்டும்
3.மனதைத் தெளிந்த நிலையாகப் பெறச் செய்ய வேண்டும்
4.தங்கத்தைப் போன்று மன உறுதி கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்.
நோய் நீக்கும் மருந்தையே இன்று “உணவு போன்று உட்கொள்ளும் தேவை வந்துவிட்டது…
ஒவ்வொருவருக்கும் வரக்கூடிய வியாதியின் தன்மை குணநிலையை ஒத்துத்தான் இருக்கும்.
1.குண நிலைக்கு ஒத்த வியாதி தான் மனிதனுக்கு வருகின்றது.
2.மனிதனுக்குத் தான் பலவிதமான புதுப்புது வியாதிகள் வளர்ந்து கொண்டே உள்ளன
3.மற்ற மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும் அந்த அளவுக்கு இல்லை
4.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வியாதிகள்.
தாவரங்களுக்கு ஒன்றை ஒத்த நிலையில் தான் அதனதன் வியாதி அணுப்பூச்சிகள் அவைகளைத் தாக்குகின்றன. மிருகங்களின் நிலையிலே மனித நிலைக்கு முற்றிலும் மாறு கொண்ட நிலையுள்ளது.
மிருகத்தின் உணர்வின் எண்ணம் ஒலியின் ஈர்ப்பைக் கொண்டு பழக்கப்பட்ட ஒன்றின் செயலில் செல்வதனால் ஏறக்குறைய தாவரங்களின் நிலைக்கொத்த
1.பருவக் காலங்களில் தாக்கக்கூடிய விஷ அணுக்களின் நோய்த் தன்மை
2.ஒன்றுக்கொன்று தொடர் கொண்ட “ஒட்டும் நிலையில்”
3.ஒன்றை ஒத்த வியாதியில் தான் மிருக இனம் தாக்கப்படுகின்றது.
மனிதனுக்கும் சில காலகட்டத்தில் சீதோஷ்ண நிலைக்கொப்பவும் பூமி இழுத்து வெளிப்படுத்தும் உஷ்ண அலையின் வெக்கைக்குகந்த நிலை கொண்டு அந்தந்தக் காலங்களில் வளரக்கூடிய விஷக்கிருமிகளின் நிலையினாலும் காற்றிலும் நீரிலும் தொக்கியுள்ள விஷக் கிருமியினால் சில நோய்கள் வருகின்றன.
ஜுரம் வாந்தி பேதி கண்களைக் தாக்ககூடிய சில நோய்க் கிருமிகளும் கால நிலையில் இயற்கைக்கொப்ப ஒன்றின் தொடர் கொண்டு ஒருவரைப் படர்ந்த நிலையில் ஒன்றைப் போல் பலருக்கும் (தொற்று நோய்) சில வியாதிகள் தாக்கப்படுவதுண்டு.
கால நிலைகள் மாறி… இயற்கையின் மாற்றத்தால்…
1.அவ்வணுக்களின் ஈர்ப்பு குண விஷங்களும் மாறும் தருவாயில்
2.விஷக் காய்ச்சல்கள் தொற்றிப் பலருக்கு ஒரே சமயத்தில் இந்த வியாதி வந்தாலும்
3.இவ்விஷக் கிருமியினால் தாக்கக்கூடிய வியாதிகள் தொடர் கொண்டு வளராமல்
4.சிறிது காலத்தில் அதன் குணம் மாறிவிடுகின்றது.
ஆனால்… “உணர்வால் எடுக்கும் எண்ணம் கொண்டு ஏற்படும் வியாதிகள்…!” அவரவர்களின் எண்ண நிலைக்கொப்ப உடலின் அணுவின் அணுவாக ஒன்றி வளர்ந்து இந்த உடல் அழியும் வரை அதன் குணப்பிடிப்பிலேயே தான் மனிதன் சிக்கி அந்த நோயினாலேயே மாளுகின்றான்.
அம்மை வியாதிகள் மலேரியா டைபாய்டு வாந்தி பேதி போன்றும் இன்னும் புதிய புதிய விஷத் தன்மை கொண்ட வியாதிகளும் அந்தந்தக் காலங்களில் ஏற்படும் சீதோஷ்ண நிலைக்கொப்பப் படரக்கூடிய விஷத் தன்மையின் பாதிப்பு சீதோஷ்ண நிலையின் மாற்றத்தைப் போலவே அந்தப் பாதிப்பின் தன்மை வருகிறது.
இந்தப் பூமியின் ஈர்ப்பில் வெளிப்படும் உஷ்ணத்தின் விஷ அணுக்கள் இந்தப் பூமியில் வாழும் ஜீவ ஜெந்துக்களின் நிலையிலும் அதன் நிலைக்கொப்ப பூமியின் ஈர்ப்புடன் ஒன்றிய ஜீவன்களுக்கும் சாடுகின்றது.
அவ்வலையின் விஷத்தின் தாக்குதல்… காற்றலையில் கிருமிகளாகப் படர்ந்துள்ள அந்த நிலையில்
1.தன் சுவாசத்தில் ஈர்ப்புடன் எடுப்பவர்க்கெல்லாம்
2.குறிப்பிட்ட காலத்தில் ஒரே தன்மை கொண்ட வியாதி தான் பலரைத் தாக்கும்.
அதன் பின் கால நிலையில் அதன் சக்தியின் வலுக் குன்றி மாற்றமும் கொண்டு விடுகின்றது.
இத்தன்மையான தாக்குதல்…
1.நீருடன் கூடிய ஜீவ சக்தி கொண்ட
2.உணர்வின் துடிப்பு கொண்ட எவரையும் தாக்கத்தான் செய்யும்.
தன் சக்தியையே தெய்வ சக்தியாக்கிச் சப்தரிஷியின் நிலையில் ஜீவன் கொண்டு உள்ளவனாக இருந்தாலும்… “கால நிலையின் மாற்றத்தில் ஏற்படும் சில விஷ அணுக் கிருமிகளின் தாக்குதல்…” சுவாசமுடனும்… நீருடனும்… தாக்கத்தான் செய்யும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது…!
பூமியின் நிலையுடன் கூடிய கால மாற்றமாகும் பொழுது இவ்வணுவின் தன்மையும் மாறிவிடும். இவை இயற்கையின் உண்மையுடன் உருண்டுள்ள செயல் தொடர்பான குண நிலைகள் தாம்.
தாவரங்கள்… மிருகம்.. மனிதன்…! என்று இனம் பார்த்துத் தாக்காமல்
1.காற்றுடன் கலந்துள்ள நச்சுத் தன்மையின் செயல் வடிவங்கள் உண்டு
2.இதன் நிலையை மாற்றவோ அழிக்கவோ தப்பவோ முடியாதப்பா..!
ஏனென்றால் அதற்காக வேண்டி இயற்கைக்கு மாறாக நாம் சென்று செயற்கை வழியில் விஷமான மருந்துகளை அதிக அளவில் உட்கொள்ளும் பொழுது மற்ற நல்ல உறுப்புகளின் சீரான இயக்கத்தை அது பாதித்து விடுகிறது.
மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்குப் பதிலாக மருந்தே வாழ்க்கையாகி விடுகிறது… மருந்தையே உணவாக உட்கொள்ளும் பழக்கத்திற்கு வந்துவிடுகின்றோம்.
இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே நல்லது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மெய் ஞானிகள் வளர்த்த ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற வேண்டும் என்ற நிலையில்
1.நீங்கள் எல்லோரும் காட்டில் போய் தவமிருந்து என்றைக்குப் பெறப் போகின்றீர்கள்?
2.அப்படிப் பெற வேண்டும் என்றால் முடியாது.
குருநாதர் என் வீட்டில் உள்ள எல்லோரையும் கஷ்டப்பட வைத்து என்னை அழைத்துக் கொண்டு போய் காடு மேடெல்லாம் சுற்றச் செய்தார். “எப்படியெல்லாம் கஷ்டம் வருகின்றது…?” என்ற அனுபவம் பெறுவதற்காக அவ்வாறு செய்தார்.
இதை எதற்காகச் சொல்கிறேன் என்று அறிந்து கொள்ளுங்கள்.
ஒரு விஞ்ஞானி பல கஷ்டங்கள் படலாம். அவன் கண்டுபிடித்த ஒரு இயந்திரத்தினைச் சரியான முறையில் இயக்கப்பட்டு நாம் பயன்படுத்தும் பொழுது சரியான முறையில் ஏற்றுக் கொண்டோம் என்றால் அந்த விஞ்ஞான அறிவு நமக்குப் பயன்படும்.
ஒரு கம்ப்யூட்டரைக் கண்டுபிடிக்கின்றான் என்றால் அவன் எவ்வளவு சிரமப்பட்டு அதைச் செய்திருப்பான்…! அதை நாம் விளையாட்டாகத் தட்டிக் கொண்டிருந்தால் ஒன்றும் வேலை செய்யாது.
அதைப் போன்று தான் உங்களை அறியாமல் இயக்கக்கூடிய தீமைகளிலிருந்து நீங்கள் மீள வேண்டும் என்பதற்காகத்தான் ஆழமாக அருள் ஞான வித்துகளை உபதேச வாயிலாகப் பதிவு செய்கின்றேன்.
இதில் சிலர் என்ன செய்வார்கள் தெரியுமா?
“நான் நினைத்தது நடக்கவில்லை…! சாமியிடம் போய் என்ன நடந்தது…” என்பார்கள்.
எதை நினைத்து வந்தார்களோ அந்த ஆசையிலே தான் இருப்பார்கள். ஆனால்
1.சாமி சொன்னதை வைத்து… அதை நினைத்து…
2.எப்படிச் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு (சரியானபடி) வருவதில்லை.
1.நான் சொல்லிக் கொண்டு வருவதையெல்லாம் நீங்கள் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால்
2.உங்கள் கருவிழி ருக்மணி இந்த உணர்வின் அலைகளை உங்கள் உடலில் உள்ள செல்களில் பதிவாக்கிவிடும்.
3.“நீங்கள் கவனித்தால் போதும்…” உங்களுக்குள் நினைவு தன்னாலே வரும்.
உங்களுக்குத் தனியாக நினைவு வர வேண்டியதில்லை.
யாம் சொன்ன முறைப்படி சீராகத் தியானத்தில் இருப்பவர்களுக்கு அருள் ஞானத்தை புத்தகத்தில் உள்ளதைப் படித்துவிட்டு மீண்டும் அப்படியே அதைச் சொல்லச் சொன்னால் தெரியாது.
ஆனால்… அதில் படித்துக் கொண்ட கருத்துக்களைப் பற்றிக் கேட்டோம் என்றால் “அடுக்கடுக்காக வரும்…”
1.யாம் சொல்லும் நிலைகளைக் கடைப்பிடிப்பவர்கள் அருள் ஞானத்தைப் பேசுகின்றார்கள் என்றால்
2.புத்தகத்தைப் பார்த்துப் படித்து “மனப்பாடம் செய்து கொண்டு..” அதைச் சொல்லுங்கள் என்றால் அவர்களால் நிச்சயம் சொல்ல முடியாது.
யாம் பதிவாக்கிய நிலைகளை முறைப்படி எடுத்துக் கொண்டார்கள் என்றால்
1.அதில் படித்த கருத்துக்களின் மூலங்களை
2.“அடுக்கடுக்காக… அடுக்கடுக்காக…” இவர்கள் சொல்ல ஆரம்பிப்பார்கள்.
காரணம்… பதிவான உணர்வுகள் “எலெக்ட்ரிக்.. எலெக்ட்ரானிக்” அதாவது அந்த எலெக்ட்ரானிக் என்ற முறைப்படி காற்றிலிருக்கும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்து இயக்கச் சக்தியான அந்த “ஞானம்” உங்களுக்குக் கிடைக்கும்.
தேன் கூட்டில் தேனீக்கள் தேனைச் சேகரிப்பது போல் தான் உயிருடன் ஒன்றும் உணர்வுகளை நாம் ஒளியாக மாற்றுவதும்…!
உயிர் ஒளியாக இருக்கின்றது… எல்லாவற்றையும் தெரியச் செய்கின்றது… தெரிவிக்கச் செய்கின்றது…! இந்த உயிரைப் போன்றே உடலில் உள்ள ஜீவணுக்களை உயிர் அணுக்களாக… “ஒளியான அணுக்களாக…” மாற்றிட வேண்டும். அது தான் நம் குருநாதர் நமக்குக் காட்டிய வழி.
1.தேனீக்கள் தேன் கூடுகளை உருவாக்கித் தன் இனங்களைப் பெருக்கி
2.அதில் சுவைமிக்க தேனாக எப்படி உருவாக்குகின்றதோ அதைப் போன்று
3.உயிரைப் போன்று உடலில் இருக்கக்கூடிய அணுக்களை நாம் ஒன்றாக்க வேண்டும்.
4.தேன் கூட்டைப் போல்தான் நம் உடலும் அமைப்பாக இருக்கின்றது
5.அதிலே அருள் ஒளியினைச் சேர்த்து உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக நாம் பெற முடியும்.
ஏனென்றால் அப்படி உருவானது தான் துருவ நட்சத்திரம்…! இந்தப் பூமியிலே வாழ்ந்தவர்கள் யாரெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பின்பற்றிச் சென்றனரோ… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அவர்கள் இணைந்து… பிறவி இல்லா நிலையை அடைந்து அருள் வழியில் இன்றும் வாழுகின்றனர்.
சூரியனே கூட ஒரு காலம் அழியலாம். சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள கோள்களும் மறையலாம். ஆனால் சூரியக் குடும்பத்தில் உருவான உயிரணுக்களின் தன்மை மனிதனான பின்
1.உணர்வை ஒளியாக மாற்றிச் சென்ற துருவ நட்சத்திரமோ சப்தரிஷி மண்டலமோ
2.தன் ஆறாவது அறிவை ஏழாவது… ஒளியாக மாற்றியவர்கள் என்றுமே அழிவதில்லை.
3.பேரண்டத்தில் விஷத்தின் தன்மை கலந்தாலும் அதையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றவர்கள் தான் அவர்கள்.
அதாவது… ஒரு பாம்பினம் தன் வாழ்க்கையில் தன் உடலில் உருவான விஷத்தைப் பாய்ச்சிப் பாய்ச்சி… மற்ற உயிரின்ங்களின் உடல்களைத் தான் விழுங்கி விழுங்கி… அந்தந்த உடலின் விஷத்தையும் தன் உடலில் உருவான உருவான விஷத்தையும் (அனைத்தையும்) தனக்குள் அடிமையாக்கி… அந்த விஷமெல்லாம் ஒன்றாக ஆன பின் நாகரத்தினமாக அது மாறுகின்றது.
பாம்பு விஷத்தை நாகரத்தினமாக மாற்றுவது போல் தான் துருவ நட்சத்திரமும் விஷத்தை ஒளியாக மாற்றும் திறன் பெற்றது. ஆனால் அது கல்.. ஆனால் இது ஒளிக்கற்றைகளாக மின் கதிர்களாக மாற்றுகிறது.
இதை ஏன் சொல்கிறோம் என்றால் நம்முடைய மனித வாழ்க்கையிலும்… விஷத்தின் தன்மை சிறிதளவு நமக்குள் வந்தாலும் அறிந்து கொள்ள முடிகின்றது.
1.அப்போது உடனடியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து அதை அடக்கி
2.அந்த விஷம் நமக்குள் அடங்கியே வாழும் உணர்வின் தன்மையாக நாம் மாற்றிக் கொண்டே வர வேண்டும்.
அப்படி மாறினால் துருவ நட்சத்திரம் அழியாத நிலைகள் கொண்டு வாழ்வது போல் நாமும் அழியா வாழ்க்கை வாழலாம். நம் உயிர் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு அழைத்துச் சென்று ஏகாந்த நிலை பெறச் செய்யும்.
ஏனென்றால் விஷத்தின் துடிப்பின் தாக்குதலால் தான் வெப்பமும் மற்ற எல்லா இயக்கங்களும் வருகிறது. ஆகவே…
1.எந்த விஷமும் உயிரை இருளச் செய்யாதபடி ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்றது
2.மனிதனின் ஆறாவது அறிவு… அது தான் கடைசி நிலை…!
இதனைத் தெளிவாக உணர்ந்து குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் செயல்படுத்துவோம்.
உணவாலும் மருந்தாலும் மட்டும் எந்த வியாதியையும் “யாராலும்” குணப்படுத்த முடியாது
உணர்வின் எண்ணத்தைக் கொண்டு எதனையும் மாற்றியமைக்கும் சக்தி மனிதனுக்குண்டு.
சர்க்கரை வியாதி மனிதனுக்கு எப்படி ஏற்படுகிறது…? சர்க்கரை வியாதியின் குண நலன் என்ன…?
சிறு வயது முதற் கொண்டு ஒரு நிலையான வாழ்க்கை வாழ்ந்துள்ள நிலையில்
1.அதிகமான சந்தோஷங்கள் ஏற்பட்ட காலங்களில் – சந்தோஷ அலையின் சுழற்சி வாழ்க்கையில்
2.அதன் தொடர் அலையில் ஏற்படும் சலிப்பு குணம் உந்தப்படுபவனின்
3.உடல் அமிலத்தின் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு எடுக்கும் சுவாசத்தால்
4.சர்க்கரைச் சத்து என்ற அமிலச் சுரப்பி உடலுக்கு வேண்டிய இரத்தச் சக்தியிலிருந்து
5.அதிகமான சத்து நிலைகள் சிறுநீரில் கலந்து விடுகின்றன.
மருத்துவத்தில் சில நிலைகளை (INSULIN) இந்த உடலில் செலுத்தி மருந்துகளை அந்தந்தக் காலங்களுக்கு உணவுடனும் மருந்துடன் கொடுத்துச் சமப்படுத்தலாமே தவிர பூரண குணம் கிடைப்பதில்லை.
வியாதியில் சிக்குண்ட மனித ஆத்மாவானது “ஆத்ம தியானம்” என்ற குண நிலையைச் சமமான நிலைப்படுத்தி நற்குணங்களின் ஈர்ப்பில் தன் எண்ணத்தைச் செலுத்தித் தான் எடுக்கும் ஞானத்தால் மெய் ஞானிகளின் உயர் அலையின் தொடரை உடலிலே சுவாசிக்கும் தியானத்தை மேற் கொண்டால் எந்த வியாதியையும் மாற்றி அமைக்கலாம்.
1.தான் வாழ்ந்த எண்ணச் சுழற்சியில் இருந்து கொண்டே
2.உண்ணும் உணவாலும் மருந்தாலும் மட்டும் எந்த வியாதியையும்
3.எந்த மகான் வந்தாலும்…
4.அகிலத்தையே ஆட்டுவித்த ஆட்டுவிக்கும் ஆதிசக்தியின் தொடர்பிருந்தாலும் நலம் காண முடியாது…!
5.உணர்வின் எண்ணத்தைச் சமப்படுத்தும் செயல் எண்ணம் இருந்தால் தான்
6.மனித ஆத்மாவின் உடல் பிணியும் தீரும்… உயர் ஞானமும் வளருமப்பா…!
ஏனென்றால் உணர்வால் எடுக்கும் எண்ணத்தைக் கொண்ட வியாதிகள் தானப்பா இந்த மனித உடலில் ஏற்படும் எல்லா வியாதிகளும்.
இரத்தக் கொதிப்பு எப்படி ஏற்படுகிறது…?
உணர்வின் எண்ணத்தை கோபத்தின் அலையில் எடுக்கும் சுவாசம் கொண்டு கோபத்தின் தன்மையை அதே ஈர்ப்பில் மீண்டும் மீண்டும் எடுத்து அதை வெளிப்படுத்திக் கோப அலையில் வாழ்பவனுக்கு
1.இரத்த நாளங்களின் துடிப்பு நிலை அதிகமாகி
2.உஷ்ணமான கனம் கொண்ட ஈர்ப்பின் சுவாசத்தால்
3.உணர்வின் கொதிப்பே இரத்தக் கொதிப்பாகின்றது.
சஞ்சலம் கொண்ட சலிப்புக் குணத்தின் ஈர்ப்பின் உணர்வின் எண்ணச் சுவாசம் தான் புற்று நோய்க்கும் எலும்புருக்கி நோய்க்கும் வித்தப்பா…!
காமாலையும் உப்புச் சத்தும் எப்படிக் கூடுகின்றன…?
தன் உடலின் உறுப்புக்களின் சுரப்பி நிலைகளுக்கொப்ப அவன் செய்யும் வேலைகளும் அவ்வுடல் நிலையின் சக்திக்கு மேல் உடல் உழைப்பும் உறங்கும் கால நிலையும் மாற்றியமைக்கப்பட்டால் இத்தகைய வியாதிகள் வரும்.
ஏனென்றால் கடினமான உழைப்பால் உடலிலிருந்து வெளிப்படும் வியர்வையிலிருந்து உடலிலுள்ள அமில உப்புக்கள் வெளிப்பட்டு விடுகிறது.
அந்த நிலையில் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்த ஆகாரங்கள் உண்ணும் பொழுது அந்த உடலின் தன்மையில் அவை ஏற்கப்படாமல் நுரையீரல் பாதிக்கப்பட்டு விடுகிறது.
ஆக… இரத்தத்தைச் சுத்தப்படுத்தக்கூடிய சில அவயங்களில் இவன் உண்ணும் உணவால் உடலில் ஏற்கனவே இருந்த சத்துக்கள் வெளிப்பட்டவுடன்
1.இந்தக் கனமான கொழுப்பு நிலை கொண்ட ஆகாரங்கள்
2.செயல்படாத நிலையில் தான் இம்மாதிரி வியாதிகள் வருகின்றன.
கோபத்தைத் தன்னுள் அடக்கி அடக்கி… பிறர் மத்தியில் தன்னைச் சாந்தமானவனாகக் காட்டுபவனின் உணர்வின் எண்ணம் கொண்டவனுக்கு… குடல் புண்களும் (அல்சர்) சில மூல வியாதிகளும் வருகிறதப்பா…!
கோபத்தைக் கட்டுப்படுத்துவதாக… அவன் எண்ணம் வெளியில் தெரியாத இவனது குணத்தின் செயலை… உள் அடக்கிக் கொள்வதால் குடல் புண் நோய்கள் எல்லாம் ஏற்படுகின்றன.
ஒவ்வொரு வியாதியும் ஏற்படுவது இந்தத் தொடர்ச்சியில் தான்.
அதே சமயத்தில்…
1.இவ்வலைத் தொடர் கொண்ட ஆவிகளின் தொடர்ச்சியும்
2.பலவீனமான உணர்வுடன் நாம் எடுக்கும் சுவாசத்தால் பலவீனம் கொண்ட தொடர்பலையின் ஈர்ப்பும்
3.அந்தக் குணம் கொண்ட ஆவிகளின் தொடரும் நம்முள் எறிக் கொள்கின்றன.
நற்குணங்களின் ஈர்ப்பில் நாம் எடுக்கும் சுவாசத்திற்கும் இந்தக் குணமுண்டு. நாம் எடுக்கும் எந்தத் தொடருக்கும் இந்தக் குணமுண்டு.
நல்லவையானாலும்… தீயவையானாலும்…
1.இந்தச் சுவாசத்தால் எடுக்கும் உணர்வின் எண்ணச் சுழற்சியில் தான் நாம் வாழ்கின்றோம்.
2.எண்ணத்தின் உணர்வின் குண நிலைக்கொப்ப ஈர்ப்புடனே நாம் சுழல்கிறோம்.
நம் சுவாச நிலையை ஞானிகளுடன் தொடர் கொண்டு உயர்வாக்கி விட்டால் இந்த வாழ்க்கையில் வரும் இடரினை அகற்றிடும் சக்தி பெற்று நோய் வராது தடுத்து அந்தச் சித்தர்களுடனும் சப்தரிஷிகளுடனும் ஐக்கியமாகலாம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நம்மைத் தாக்கிப் பேச வேண்டும் என்றும்.. நமக்குத் தொல்லைகள் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் ஒருவர் வந்தால் அதை நம்மால் தாங்க முடியாது.
அப்பொழுது கோபமும் கொதித்தெழும் உணர்வுகளும் கொண்டு “அவனைத் தாக்க வேண்டும்.. அழித்துவிட வேண்டும்…” என்ற உணர்வே நமக்குள் தோன்றும்.
1.நாம் கோபப்படுகின்றோம்… ஆனால் தவறு செய்தது அவர்கள்
2.தவறு செய்ததை நாம் நுகர்ந்தறிந்தோம்… நம் உயிர் அதை அறியச் செய்கின்றது
3.அறியச் செய்தாலும் அந்தத் தவறின் அணுவாக நமக்குள் மாற்றிவிடுகின்றது.
அவன் எந்தத் தவறைச் செய்தானோ அதிலிருந்து உருவான அணு “நமக்குள் அது உடலுடன் ஒட்டி” அது வினையாக நமக்குள் இயங்கத் தொடங்கிவிடுகின்றது.
ஆனால் தவறு நாம் செய்யவில்லை.
நாம் எப்படியும் கெட்டுப் போக வேண்டும் என்ற உணர்வுகளை அவன் தனக்குள் வளர்த்து… நமக்குத் தொல்லைகள் கொடுக்கின்றான் என்றால் அந்த உணர்வை நுகரப்படும் போது அதே உணர்வின் அணுக்களாக உயிர் நமக்குள் உருவாகின்றது.
1.இப்படி உருவான அந்த அணுக்கள் தன் உணவுக்காக ஏங்கப்படும் போது
2.அந்த உணர்வின் செயலாகவே நம் உடலை இயக்கத் தொடங்கிவிடும்.
சற்று நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்.
இப்படிக் கடுமையாக ஒருவர் ஏசிப் பேசினார் என்றால் உடனே “ஈஸ்வரா..!” என்று உங்கள் உயிரை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் இந்த உணர்வைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
1.அந்தத் தீமையான உணர்வுகள் அணுக்களாக விளையாதபடி
2.அந்த மகரிஷிகளின் உணர்வுகளைச் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.
அப்பொழுது அவர் சொல்லும் உணர்வு… அதற்குள் இந்த அருள் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அவர் வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் வராதபடி தடுக்கும்.
அதே சமயத்தில் அந்த அருள் உணர்வுகள் நமக்குள் கூடிக் கொண்டே வரும். அறியாது செய்யும் தீமைகளிலிருந்து அவன் விடுபட வேண்டும் என்று எண்ணுங்கள்.
அதற்கு மீறியும் நம்மை வெறுத்துத் தாங்க முடியாத நிலைகளை அவன் நமக்குச் செய்தால்
1.“அவன் எதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றானோ… அவனுக்குள் அது விளைந்து அவன் உணரட்டும்…” என்று சொல்லுங்கள்.
2.“எனக்கு வேண்டாம்…! நீயே அதை அனுபவித்து நீ உன்னுடைய உணர்வுகளை அறிந்து அதன் வழியாக நீ அனுபவித்துப் பார்..” என்று சொல்லுங்கள்.
இந்த உணர்வுகள் அங்கே சென்று அதை உணர்த்தும் சக்தியாக இயக்கும். நம்மைத் தொல்லைப்படுத்தும் நிலைகளை நாம் இவ்வாறு தடுத்துக் கொள்ள முடியும்.
“நோயாகி விட்டது… நோயாகி விட்டது…” என்ற எண்ணத்தை வலுவாக்குவதால்… கடைசியில் நோயின் காரணமாகவே ஜீவன் பிரிகிறது
ஜீவ சக்தியுடன் கூடிய இந்த மனித உடலில் பல கோடி உயிரணுக்கள் உண்டு.
உடல் கூற்றை ஆராயும் மருத்துவ விஞ்ஞானிகள் மனிதனுக்கு ஏற்படும் வியாதியை அவன் உடலில் உள்ள இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் சிவப்பு அணுக்கள் மற்றும் எத்தனையோ நிலைகளில் உள்ள அணுக்களை ஆராய்ந்து காணுகின்றார்கள்.
அந்தந்த வியாதிக்குகந்த இரத்தத்தில் ஏற்படும் அணுத் தன்மையின் மாற்றத்தையும் எவ்வணுவின் நிலை உயர்ந்துள்ளதோ அவ்வுடலுக்குகந்த அணுத் தன்மையில் மனிதனின் வியாதிக்குகந்த மாற்றத்தையும் கண்டறிகின்றார்கள்.
1.நாம் “உணர்வின் குண அமிலம்” என்று உரைக்கின்றோம்.
2.அதையே விஞ்ஞான மருத்துவத்தில் “வைட்டமின்கள்” என்று உரைக்கின்றார்கள். (வைட்டமின் A B1 B2 B6 B12 C D K E)
3.இதுவல்லாமல் உடலில் உள்ள மாறு கொண்ட “விஷ அணுக்கள்” (VIRUS) உள்ளதையும் உணர்ந்து வெளிப்படுத்துகின்றார்கள்.
இந்நிலையில் சில அமிலங்களை அதில் செலுத்தி அணுக்களின் தன்மையை நுண்ணிய கருவிகளைக் கொண்டு கண்டுணர்ந்து
1.மனித உடலின் அணுக்களின் ஆராய்ச்சியின் விகித நிலைக்கொப்ப
2.மருத்துவ விஞ்ஞானம் மிக மிகத் துரித கதியில் முன்னேறி உள்ளது இன்று.
ஜீவன் பிரியக்கூடிய ஒரு மனிதனை மருத்துவ விஞ்ஞானத்தால் ஜீவிக்க வைக்கின்றான் மருத்துவன்.
மருத்துவ ரீதியிலும் விஞ்ஞான ரீதியிலும் நோய்க் கிருமிகளை ஆராய்ந்து அதற்குத் தகுந்த மாற்றுக் குணங்களை ஏற்றி அந்நோய்கள் பரவா நிலைக்காக
1.தன் செயலின் சக்தியையும்… பணத்தின் வலிமை கொண்டும்…
2.பல சாதனைகளை இயந்திரங்களின் நிலைக்கொப்ப
3.மனித உணர்வின் எண்ணங்களை விஞ்ஞான மருத்துவம் இழுத்துச் செல்கிறது.
ஆனால் இயற்கையின் குண அமில மாற்று நிலையை வழிப்படுத்தி
1.ஆத்ம தியானம் என்ற இயற்கையுடன் ஒன்றி
2.இயற்கைக் கோளமான மனிதக் கோளத்தின் வீரிய உயர் சக்தியின் ஞானத்தை
3.இயற்கை ஈர்ப்பின் குண அமிலத்துடன் ஒன்றச் செய்து
4.மண்டலங்களாக உருப்பெறும் இவ்வுடல் மண்டலங்களைச் செயலாக்கும் திறமைக்கு
5.இவ்வெண்ண ஈர்ப்பு உணர்வைச் செலுத்த முடியாதவர்களாகி விட்டனர் – இன்றுள்ள செயற்கை விஞ்ஞான மருத்துவ இயந்திர மனிதர்கள்.
இந்தப் பிம்ப ஜீவ மனித உடலில் பல கோடிக் கோடி உயிரணுக்கள் வாழ்கின்றது. சந்தர்ப்பத்தில் அதற்குள் பிணி ஏற்படுகிறது. அது எப்படி வந்தது…? என்று அறியும் நிலை இல்லை.
ஆக அந்த ஈர்ப்பிலேயே தொடர்ந்து செல்லும் நிலையில் அதே வியாதி நிலையில் சிக்குண்டு
1.அந்த ஆரம்ப வியாதி குணமாகாமல்…
2.அதன் சுழற்சியில் (குணமாகவில்லை என்ற வேதனையால்) உணர்வின் எண்ணத்தைக் கடினமாக்கிச் செலுத்தி
3.மேன்மேலும் அதன் ஈர்ப்பின் சுவாசத்தால் குறைவாக உள்ள இவ்வியாதியின் அணுவே
4.உடல் முழுமைக்கும் ஏற்றச் செய்து விடுகின்றனர்.
ஓர் நோயின் அணு பல அணுவையும் தன் குணத்தின் தொடரின் சுழற்சியினால் உடல் முழுவதற்கும் அந்த (அதன் குணச் செயல்) வியாதி தொற்றிக் கொண்டு விடுகிறது.
நோயாகி விட்டது… நோயாகி விட்டது… என்ற அதே சுழற்சி பயத்தினல்
1.அந்த உடலுக்குகந்த நல்ல அமிலங்கள் எல்லாம் மாற்றப்பட்டு
2.ஒன்றின் ஈர்ப்பு வியாதியுடன் ஒன்றி கடைசியில் பிரிவது தான் இஜ்ஜீவன்.
உலக மக்களை அருள் ஞானத்தின் பாதையில் அழைத்து வரும் அளவிற்கு “நீங்கள் தயாராக வேண்டும்”
இந்த வாழ்க்கையில் உங்களை அறியாது வரும் தீமைகளிலிருந்து மீள வேண்டும் என்பதற்குத்தான் தியானம் செய்யும் முறைகளையும் ஆத்ம சுத்தி செய்யும் பயிற்சிகளையும் கொடுக்கின்றோம்.
1.இங்கே கொடுக்கப்படும் உபதேசங்களைத் திரும்பத் திரும்பப் படியுங்கள்
2.உங்களுக்குள் பதிய வைத்துக் கொள்ளுங்கள்
3.பொழுது போக்காகவே இதை வைத்துக் கொள்ளுங்கள்.
அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுடன் ஒன்றி வாழுங்கள். எல்லோரும் நலம் பெற வேண்டும் என்று ஏங்குங்கள். அவர்கள் நலமாக வாழ்வதைக் கண்டு நீங்கள் மகிழுங்கள்.
ஆகவே… இதைப் போன்ற மகிழ்ச்சியின் தன்மையை உங்களுக்குள் வளர்த்து இருள் சூழா நிலை கொண்டு அடுத்து இந்த உடலை விட்டு அகன்றால்
1.துருவ நட்சத்திரத்தினைப் பின்பற்றியவர்கள் சப்தரிஷி மண்டலமாக எப்படி ஆனார்களோ அதனுடன் நாம் அனைவரும் இணைவோம்.
2.இதை நாம் உறுதிப் படுத்திக்கொள்வோம்… நம்முடைய வாழ் நாள் அங்கே தான்.
இந்த மனித வாழ்க்கையில் நாம் சேமித்த செல்வம் எதுவுமே நம்முடன் வருவதில்லை… வரப் போவதுமில்லை. ஏன்…! நம் உடலே நம்முடன் வருவதில்லை.
உடலில் விளைய வைத்த உணர்வுகள் எதைக் கவர்ந்தோமோ அதன் வழி அங்கே தான் நம்மை அழைத்துச் செல்லும். நமக்குத் தீங்கு செய்தான் தீங்கு செய்தான் என்ற உணர்வை வளர்த்தோம் என்றால் மீண்டும் கீழே செல்கின்றோம்.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட்டு என்றுமே நாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.
ஆகவே, நீங்கள் எல்லோரும் அந்த அருள் ஒளியைப் பெருக்குதல் வேண்டும். நோய்களைப் போக்கும் ஆற்றல் பெற வேண்டும். விஷத் தன்மைகள் நமக்குள் புகாது தடுத்துப் பழகுதல் வேண்டும்.
1.நமக்குள் பெருக்கிய இந்த ஆற்றல்களை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்தல் வேண்டும்.
2.மற்றவர்கள் அதை ஏங்கிப் பெறும் போது அவர்களின் தீமைகளைப் போக்கும் நிலைகளுக்கு “நீங்கள் தயாராகுதல் வேண்டும்…”
அதன் வழி நாம் செய்தோம் என்றால் இந்த உடலுக்குப் பின் அருள் ஒளிச் சுடரான அந்த மகரிஷிகளுடன் நாம் ஒன்றி வாழலாம்.
இந்த உடலின் ஆசைக்குப் பொருளுக்கும் புகழுக்கும் சென்றால் இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் வந்து மீண்டும் நரகலோகத்தைச் சந்திக்கும் நிலை வருகின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து ஒவ்வொருவரும் விடுபட வேண்டும். நீங்கள் எல்லாம் “அருள் ஞானிகளாக உயர வேண்டும்…” என்பதே எமது தவம்.
என் ஒருவனால் ஒன்றும் செய்ய முடியாது…
1.மக்கள் எல்லோரையும் அருள் வழியில் ஞானத்தின் பாதையில் அழைத்து வரும் அளவிற்கு நீங்கள் தயாராக வேண்டும்.
2.நான் ஒருவனே சொல்லிக் கொண்டிருக்க முடியாது… நீங்கள் அந்த நிலைக்கு வாருங்கள்.
இந்த உலகமும் காற்று மண்டலமும் நச்சுத் தன்மையிலிருந்து விடுபட வேண்டும். மக்களை அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழப் பழக்க வேண்டும்.
உங்களால் முடியும்… நிச்சயம் நீங்கள் செய்வீர்கள்…!
மகரிஷிகளால் உருவாக்கப்பட்ட பேருண்மை இது…!
மூதாதையர்கள்… நம் தாய் தந்தையர்கள்… உடலை விட்டுப் பிரிந்திருந்தாலும் அவருடைய உணர்வுகள் நம் உடலுக்குள்ளும் உண்டு.
1.இந்த உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் பரம்பரை நோய் பரம்பரைக் குணம் இது எல்லாமே வரும்
2.பரம்பரையினால் எங்கள் குடும்பத்தில் இது வந்தது என்று சொல்வார்கள்.
உதாரணமாக… காக்காய் வலிப்பு அல்லது சர்க்கரைச் சத்து அல்லது ஹார்ட் அட்டாக் போன்ற உபாதைகளினால் முன்னோர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் குடும்பத்தில் பரம்பரையாக இதே நோய் தொடர்ந்து அப்படியே வந்து கொண்டிருக்கும்… இரத்தக் கொதிப்பு இருந்தால் அதுவும் வரும்.
இத்தகைய பரம்பரை நோயை அழித்திட துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று
1.உடலுக்குள் மூதாதையர்களின் உணர்வுகள் இருக்கும் பொழுது
2.அதற்கு அருள் ஞான உணர்வை நாம் உணவாகக் கொடுக்க முடியும்.
இப்படிக் கொடுத்து… நம் உடலுக்குள் அருள் ஞான உணர்வைச் செலுத்தப்படும் பொழுது அவர்கள் அறியாது சேர்த்த தீமையின் விளைவுகள் நமக்குள் வராது தடுக்க முடியும்.
அதற்காகத்தான் உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கும்படிச் சொல்வது.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களை அங்கே சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து விட்டால் உடல் பெறும் உணர்வுகளைப் பாற்கடலில் கரைத்து விடுகின்றது.
1.பின் அந்த உயிர் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணையும் பொழுது
2.ஆறாவது நிலை ஏழாவது ஒளியின் உணர்வாக வளரத் தொடங்குகிறது – அது தான் “சப்தரிஷி” என்று சொல்வது.
அப்படிச் செய்த பின்பு… அவருடைய உணர்வு நம்முடன் இருப்பதால் நாம் அவர்களை எண்ணும் பொழுது நாம் நல்ல உணர்வுகளைப் பெற முடிகிறது.
1.அடுத்து நாம் உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும்
2.நம் மூதாதையர்கள் சப்தரிஷி மண்டலத்தில் இருப்பதால்
3.அதன் வழி நம்மையும் அங்கே அழைத்துச் செல்லும் நமது உயிர்.
ஆகவே துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வலுவாகச் சேர்த்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையினுடைய சூட்சும சரீரத்தைத் துருவ நட்சத்திரத்துடன் இணையச் செய்து விட்டால் (தலையாயக் கடமையாக) “சப்தரிஷி மண்டலத்தின் ஒரு அங்கமாகச் சேர்ந்து விடுகின்றது…”
நம்மை வளர்ப்பதற்காக அவர் உடலில் பட்ட நஞ்சுகள் அனைத்தும் அங்கே கரைக்கப்படுகின்றது. ஒளியின் உணர்வாக உயிர் அங்கே வாழத் தொடங்குகிறது.
அவருடைய உணர்வு கொண்டு தான் நாம் மனிதனாக வளர்ந்தோம்
1.அந்த உணர்வின் துணை கொண்டு நாம் அவர்களை அங்கே உந்தித் தள்ளப்படும் பொழுது
2.இந்த உணர்வின் தொடர் கொண்டு ஒளியான உணர்வை எளிதில் நாம் பெற முடியும்.
3.நமக்குள் வரும் தீமைகளை மாற்றிக் கொள்ள முடியும்… அதைத்தான் நமது குருநாதர் சொன்னார்.
அவ்வாறு விண் செலுத்திய பின்… “48 நாள் இதைத் தொடர்ந்து செய்து வந்தால் நமக்குள் முழுமை பெறுகின்றது…!”
அந்த மூதாதையினுடைய நிலை எத்தனை நிலை இருந்தாலும் துருவ நட்சத்திரத்தோடு ஒன்றாக வேண்டும்… ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அங்கே அந்த ஒளி உடல் பெறும் பொழுது…
1.நம் உடலில் அவருடைய தீயவினைகள் பதிவானது (சங்கடப்பட்டது நோயால் அவதிப்பட்டது) அணுவாக இருப்பது அது கரைக்கப்படுகின்றது
2.பரம்பரை நோய்கள் நம்மிலிருந்து அகற்றப்படுகின்றது.
அவருடைய உணர்வுகளுக்கு நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இவ்வாறு உணவாகக் கொடுக்கப்படும் பொழுது இந்த உடலுக்குப் பின் நம்மையும் அங்கே அழைத்துச் செல்லும் – மூதாதையர்கள் இருக்கும் இடத்திற்கு…!
இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்…
1.நம் முன்னோர்கள் முதலில் அவர்கள் மனிதனார்கள்
2.பாம்பாகவோ தேளாகவோ கொசுவாக நாம் இருக்கும் பொழுது
3.அவர்களைப் பாதுகாக்க நம்மை அடித்துக் கொன்றிருப்பார்கள்.
4.நமது உயிர் அவரது உடலின் ஈர்ப்பிற்குள் சென்றிருக்கும்.
5.அதே உயிர் தான் (தாய் தந்தை) நம்மை மனிதனாக உருவாக்கினார்கள்.
அதே சமயத்தில் அந்த அருள் உணர்வுகளை நாம் பெற்று அவர்களை ஒளி உடல் பெறச் செய்தால்… “அந்தத் தாய்ப் பாசம்…” அவர்கள் ஒளியின் உடலான பின் ஏழாவது நிலையாக நம்மையும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும்.
மகரிஷிகளால் உருவாக்கப்பட்ட பேருண்மையின் உணர்வுகள் இது…!
நம் நிலை உயர… “முருக குண அமிலங்கள் தேவை”
உணர்வின் எண்ணத்தை “வழி அமைத்து… வழி செல்லுங்கள்…” என்று உணர்த்திய பின் நிலை என்ன…?
உணர்வுடன் கூடிய எண்ணத்தின் சுவாசத்தால் மனித எண்ணத்திற்குத் தன் உணர்வின் எண்ண நிலையை அறிந்து செயல்படுத்தக்கூடிய ஆற்றலும் திறமையும் உண்டு.
ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் உணர்வின் எண்ண நிலைக்கொப்ப குண நிலையில் மாற்றமுண்டு.
1.தன் உணர்வின் எண்ணத்தைத் தன்னிச்சையில் செயல்படுத்தும்
2.தனக்குகந்த உணர்வு எண்ணத்தின் நிலையில் செல்ல மனிதனுக்கு முடியும்.
ஆனால் சில மிருகங்களின் நிலைக்கு உணர்வுடன் கூடிய எண்ணத்தைச் செயல்படுத்தி வழி கொள்ளும் திறமையில்லை.
அதனுடைய “ஒலி ஈர்ப்பு ஒன்றி…” சுவாசத்துடன் மோதுண்டவுடன் ஒன்றின் குண உணர்வுகொப்பத்தான் அதன் எண்ணத்தின் செயலைக் கொண்டு அதன் இன வர்க்கங்களும் ஒரே உணர்வு எண்ண ஓட்டமாக… ஒன்றுடன் சார்ந்தே… அதன் இன மிருகங்களின் நிலையும் ஒத்துச் செல்லும்.
1.பறவைகள் யானைகள் ஆடு மாடுகள் நீரில் வாழும் சில உயிரினங்கள் இவை எல்லாம்
2.ஒன்றின் ஈர்ப்பின் ஒலி அலை மோதுண்டு
3.அதன் உணர்வின் எண்ணத்தைக் கொள்ளும் நிலை கொண்டு
4.ஒன்றெடுத்த அலைத் தொடர்பு கொண்டே
5.அதன் இனக்கூட்ட வர்க்கங்களும் அதன் பின்னேயே செல்லும்.
6.தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும்… தன் உணவை நாடிச் செல்லும் ஒன்றின் தொடரிலேயே
7.ஒவ்வொன்றின் நிலையும் தொடர்ந்து செல்லும் “கூட்டமாக…!”
மனிதனிலிருந்து மாறு கொண்டு ஒரே நிலையான எண்ண வேட்கைக்குகந்த அமில குண இன ஈர்ப்பின் வளர்ப்புத்தான் மற்ற இனங்கள்.
ஆனால் மனிதன்…
1.ஞான சக்தியால் செயலாக்கும் செயல் திறன் உணர்வின் எண்ணம் கொண்டு
2.மனித குண அமிலத்தையே அசுர குணம் நீக்கி
3.முருகக் குணக் கலவை உணர்வுடன் கூடிய எண்ணத்தை எடுக்க முறைப்படுத்திக் கொண்டால்
4.மனித மகசூலின் வித்தாக நம் நிலை உயருமப்பா…!
இவ்வுணர்வின் எண்ணத்தை உணர்ந்திடல் வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் தன் உடல் பிம்ப ஜீவ சக்தியின் உயிருடனே உணர்வின் எண்ணத்தை ஞானத்தின் ஈர்ப்புக் குணமுடன் ஒன்றிய அலைத் தொடரின் செயல் நிலை இருந்தால்தான் “செயல்படுத்தும் செயலான ஆதிச் செயலுக்கே…” செயல் கூடுகின்றது.
ஆதி சக்தியின் சக்தி தான் அகிலத்தின் சக்தி. அண்டத்தையும் ஆதியையும் படைப்பவளும்… வளர்ப்பவளும்… மாற்றுபவளும்… அவளே…!
அப்படியிருக்க ஆதிமுதல்வன்… முதலாமவனே விநாயகனே… என்று விநாயகரை மூல முதல்வன் என்று “முதல் தெய்வம் விநாயகன்” என்று வணங்குகின்றோம்.
மூல முதல்வன் என்று சித்தர்கள் மூலமாகக் காட்டிய விநாயகனின் நாமத்தின் தெய்வ சக்தியென்ன..?
ஆதி சக்தியின் அமில சக்தியின் உருவாக… மூலவனாக… விநாயகனை
1.மனிதனின் உரு கரு வளரும் அமிலப் படைப்பின் உரு நிலையின் உருவிற்குத்தான் (மனித உடலை)
2.அந்த விநாயகரின் நாமத்தைச் சூட்டினார்கள்.
சித்தர்கள் உணர்த்திய ஒவ்வொரு செயலுக்கும் பொருள் உண்டு. ஆனால் காலப் போக்கில் உணர்ந்து வழிபடும் நிலை மாறிவிட்டது.
இன்றுள்ள கால நிலையில் உருண்டோடிய காலங்களுடன் நம் உணர்வின் எண்ணத்தை உருள விட்டு நம் சக்தியை அச்சுழற்சியிலேயே சுழன்று கொண்டுள்ளோம்.
ஆக… உண்மை எது என்று அறியும் நிலையை மாற்றி அறிந்துணரும் ஆக்கத்தின் வளர்ப்பு குணமுடன் இன்றுள்ள இக்கால நிலையில்
1.சமுதாயச் சுழற்சியில் சிக்குண்டு அதன் ஈர்ப்புடன் நம் சக்தியையும் கலக்க விட்டு
2.மிருக நிலையில் ஒன்றின் உணர்வின் எண்ணம் கொண்டு ஒன்றிச் செல்வதைப் போன்ற உணர்வுடன் நாம் சிக்காமல்
3.நம் உணர்வின் எண்ணத்தை உயர் ஞான அமிலமான
4.நற்குணங்களை வளர்த்துக் கொள்ளும் செயல் குண உணர்வாக நாம் உயரல் வேண்டும்.
உடல் என்ற பிம்பத்தை அழகுபடுத்த ஆடை தேவை. உயிர் என்ற ஆத்மாவை ஞானப்படுத்த வாழ்க்கை என்ற சமுதாய எண்ணம் தேவை. சமுதயாச் சுழற்சி எண்ணத்தால் ஆத்ம ஞானத்தை அழகுபடுத்துங்கள்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அரசியலிலோ அல்லது மற்ற மத இனம் என்ற நிலைகளில் இன்று மனிதனுக்கு மனிதன் உதவி செய்து கொண்டிருந்தாலும்
1.சந்தர்ப்பத்தால் வேதனை வந்துவிட்டால் செய்த உதவிகளையும் மறக்கச் செய்து
2.தவறுகளைச் செய்யும் உணர்ச்சிகளைத் தான் ஊட்டுகின்றது.
காரணம் மனிதனின் வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எதுவோ அந்த உணர்வின்படி அவர்கள் உயிர் இயக்குகின்றது.
மற்ற உயிரினங்களிலிருந்து இன்று மனிதனாகப் பிறந்தோம். மனிதனான பின் அசுர உணர்வுகள் விளைந்து விட்டால் மீண்டும் நரகலோகத்திற்குப் போகும் (பாம்பு போன்ற விஷ ஜெந்துக்களாக) உணர்வின் அணுக்களாக நமக்குள் மாற்றுகின்றது என்று பொருள்.
இன்று இரக்கமற்று ஒருவரைப் பேசலாம். இரக்கமற்று அவர்களுக்குத் தொல்லைகளையும் கொடுக்கலாம். அதே சமயத்தில் தொல்லை கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்கள் தொல்லைப்படுவதைப் பார்த்து இரசித்துக் கொண்டும் இருப்பார்கள்.
1.ஆனால், நாம் எதனை உருவாக்கினோமோ இந்த உணர்வுகளை நுகர நுகர நுகர
2.அந்த விஷத் தன்மை கொண்ட அணுக்களாக இங்கே விளையும்.
பின் நமக்குள் அது நோயாக விளையும்போது மனிதனல்லாத உருவாக உருவாக்கும் விஷத் தன்மை கொண்ட நிலைக்கு வந்துவிடும்.
அதிகமாக வேதனைப்படுவோரைப் பார்த்து “அவனுக்கு இப்படித்தான் வேண்டும்…” என்ற நிலைகளை நாம் எண்ணி ஏங்கி இரசித்தோம் என்றால்
1.அடுத்து மனிதனைப் பாம்பினமாக எப்படி உருப் பெறச் செய்கிறது…?
2.அந்த அணுக்களின் மாற்றங்களும் அதன் உணர்வின் இயக்கங்கள் எப்படி மாறுபடுகின்றது…?
3.இந்த உடல் எப்படி நலிகின்றது…? மனிதனின் உணர்வின் எண்ணங்கள் எப்படி இயக்குகின்றது…? என்பதனைக் குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.
ஆகவே எக்காரணத்தைக் கொண்டும் பிறர் வேதனைப்படுவதைக் கண்டு இரசிக்கவே கூடாது. அவர்கள் அதிலிருந்து விடுபடும் சக்தியைத் தான் நாம் பாய்ச்சிப் பழக வேண்டும்.
இப்படிச் செய்தோம் என்றால் அவர்கள் வேதனைகள் நமக்கு வராது… அதே சமயத்தில் நாம் செலுத்தும் அருள் உணர்வுகள் அவர்களை அதிலிருந்து விடுபடச் செய்யும் சக்தியாக ஊடுருவிப் பாயும்.
நம் பெரு மூளையிலே உருவாகும் “தீமையை வடிகட்டும் அமிலம்”
எத்தகைய தீமைகள் வந்தாலும் அதை எதிர்த்துத் தாக்கும் சக்தி நமக்கு வேண்டும். இயற்கையாகவே நமக்கு அது உண்டு.
எப்படி…?
1.நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நிலையை அல்லது
2.நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள் வரும் தீமையை
3.”பெரு மூளை உருவாக்கும் திரவகத்தை” – சளி என்ற நிலையில் அதை முன் செலுத்தி
4.நாம் நுகரும் உணர்வுகளை வடிகட்டி மற்ற உணர்வுடன் கலக்கச் செய்து
5.தீமையிலிருந்து விடுபடும் சக்தியாக இயற்கையிலேயே பரிணாம வளர்ச்சியில் வந்த மனிதனுக்கு உண்டு.
ஆனால் மற்ற உயிரினங்களோ விஷத்தின் தன்மையைக் கவர்ந்து விஷமான அணுக்களை உருவாக்கும் சக்தியே பெறுகின்றது ஆனால் மனிதனுக்கு இந்த ஆற்றல் உண்டு.
பெரு மூளையிலிருந்து வரும் அந்த அமிலம் உடலுக்குள் எதிர்ப்படும் உணர்வுகளை அதை வடிகட்டிச் சளி வழியாக வெளியேற்றி விடுகின்றது
அதாவது
1.நமது மூக்கின் நேர் பகுதியில் நஞ்சு உள்புகாது தடுத்துக் கொள்ளும் சளி என்ற நிலை உருவாகிறது.
2.சுவாசத்தினை அதிலே வடிகட்டித் தான் உள்ளே அனுப்புகின்றது.
ஆனால் அப்படி வடிகட்டினாலும் சந்தர்ப்பத்தில் வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் அதையெல்லாம் அதிகமாக எடுக்கும் பொழுது இந்த உணர்வின் அழுத்தம் வடிகட்டும் நிலையைத் தடுத்து இது வலுப்பெற்று விடுகின்றது.
நாம் நுகர்ந்த அந்தத் தீமையின் உணர்வுகள் உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்து அதற்குத் தக்க இரத்தமாக மாறி நம் இரத்த நாளங்களில் அது பெருகத் தொடங்கி விடுகின்றது.
அப்படிப் பெருகத் தொடங்கினால் பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கிடும் திறன் பெற்று வந்தாலும்… நம்மை அறியாது நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்து நம் உடலில் நல்ல உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் விஷத் தன்மையாகச் சேர்ந்து விடுகிறது.
1.அப்போது அந்த அணுக்கள் அனைத்தும் செயலிழந்து இந்த மனித உடலை உருக்குலையச் செய்து
2.உடலை விட்டுப் பிரிந்து செல்லும் பொழுது
3.எதனால் இந்த உடல் சுருங்கியதோ… எதன் உணர்ச்சிகளால் அது உருவானதோ… அதற்குத்தக்க உயிர் வெளியே சென்ற பின்
4.பரிணாம வளர்ச்சியில் தீமைகளை நீக்கி வளர்ந்து வந்த நிலையை மாற்றி
5.இன்று தீமைகளைச் சேர்த்திடும் தன்மை கொண்ட உடலாக மாற்றிவிடும் நமது உயிர்.
இதை எல்லாம் தெளிவாக அறிந்து கொண்ட ஞானி தான் அகஸ்தியன். அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி தன் உடலில் அப்படி வந்த நஞ்சினை மாற்றி… மாற்றி… உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிக் கொண்டான்.
அவன் ஒளியாக மாறக் காரணமானது “துருவத்திலிருந்து வரும் நிலை தான்…!”
1.விண்ணுலக ஆற்றலை பூமி அதன் வழியில் எவ்வாறு கவர்கிறது…? என்பதை உணர்ந்து
2.அந்த நஞ்சினை… துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் பெற்று அவனுக்குள் பெருக்கி
3.அதன் வலு அதிகமாகும் பொழுது இந்த நஞ்சினை வென்றிடும் ஆற்றல் பெற்றதனால்
4.மனித உடலை மாற்றியமைக்கும் சக்தி பெற்று ஒளியாக மாற்றுகின்றான் அகஸ்தியன்.
அவனுக்குத் திருமணம் ஆன பின் கணவன் மனைவி இரு உணர்வும் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றாக ஆன பின்…
1.விண்ணுலக ஆற்றலின் உணர்வின் தன்மையை உயிரைப் போல உணர்வின் அணுக்களை மாற்றி
2.எதிலிருந்து பூமி கவர்கின்றதோ அதை உற்று நோக்கி அதைத் தனக்குள் கவர்ந்து
3.விஷத்தைப் பிளந்து விஷத்தை ஒளியாக மாற்றிடும் ஆற்றலை இருவருமே பெறுகின்றனர்.
அதை நீங்களும் பெறக்கூடிய தகுதிக்குத் தான் இதைத் தெளிவாக உணர்த்துகின்றோம்.
மாறப் போகும் உலக நிலையில் நாம் மட்டும் இருந்து என்ன பயன்…? என்றில்லாமல் சப்தரிஷிகளின் மகசூலாக உருவாக வேண்டும்
இன்று இந்தப் பூமியில் மனிதனின் “தேவையின் வேகம்” விஞ்ஞானத்தின் அலையால் விஞ்ஞானத்துடனே ஓடிக் கொண்டுள்ளது.
உணர்வின் எண்ணச் சுழற்சியே விஞ்ஞானத்துடன் ஒன்றிய நிலையில்
1.தன் ஞானத்தை வளர்க்கக்கூடிய உணர்வு குண சித்து நிலையின் செயலுக்கு
2.நம் பூமியின் மனித ஆத்மாக்களின் ஈர்ப்பை எடுக்கக்கூடிய நிலையும்
3.சப்தரிஷிகளும் சித்தர்களும் அவர்கள் பெற்ற சக்திகளை மெய் ஞான விளைச்சலாக
4.இப்பூமியில் விளைய வைத்து அதன் மகசூலைப் பெருக்கச் செயல் கொள்கிறது.
ஆனால் இன்று இப்பூமியில் விஞ்ஞானத்தால் வாழ்ந்திட்ட செயற்கையின் செயல் குண உணர்வுடன் உள்ள நிலைகளை
1.மெய் ஞானம் கொண்டு – எண்ணத்தால் மனித குணங்களைப் பக்தி ஞானம் என்ற உயர் குண உணர்வு எண்ண சுவாசம் எடுத்து
2.நல்ல உணர்வில்… சப்தரிஷிகள் தான் பெற்ற சக்தி அலையைப் பயிர் செய்ய
3.அவ்வுணர்விற்கே மனித எண்ணங்களைத் திருப்ப முடியாமல் உள்ளது
4.விதியின் பயன்… விதியின் பயன்… என்று முன்னோர்கள் உணர்த்திய விதிச் செயலாகவே இந்தப் பூமி உள்ளது.
காந்த மின் அலையைப் பலவாகப் பல ரூபங்களில் பிரித்தெடுத்து விட்டான்… இன்னும் பிரித்து எடுக்கின்றான். உலகையே நிலை தடுமாற நிகழப் போகும் மாற்றத்தின் வித்தையும் ஊன்றிவிட்டான்.
இன்று இப்பூமியில் நடக்கும் சில இடங்களின் மாற்ற நிலைகளும்… போர்களும்…
1.இந்தப் பூமியின் காற்று மண்டலத்தையே முழுமையாக விஷமாக்கி விட்டது.
2.அதனால் உணவாக உட்கொள்ளும் பல பொருள்கள் விஷத் தன்மையில் கூடப் போகின்றன.
வரப் போகும் எதிர்கால முறை எல்லாமே விஞ்ஞான வளர்ச்சியில் பூமியின் இயற்கைச் சக்தியை உறிஞ்சி எடுத்ததனால் பூமியின் வலுக் குன்றி “தன் வலுவைத் தான் பெருக்க…” நிகழப் போகும் மாற்ற குணம் நெருங்கிவிட்டது.
சப்தரிஷிகளும் பல கோடிச் சித்தர்களும் தன் சக்தி உணர்வின் செயலைக் குன்றவிடாமல் வளர்த்துக் கொண்டிருந்தால் தான்
1.ஞானக் கரு உரு மனிதனை உண்டாக்கி
2.ஞானத்தால் வளரக்கூடிய சக்திகளின் வளர்ச்சிக்கே சக்தி கூடும்.
ஊரே உலகமே மாறு கொண்டு அழியும் தருவாயில் நம் உயிராத்மா மேலா…? நாம் மட்டும் இருந்தென்ன பயன்…? எல்லாமே விஷமாக உள்ள பொழுது ஜெப முறையில் எப்படித் தான் நாம் இருந்தாலும் விஷத்தின் சுழற்சியில் சிக்கத்தானே வேண்டும்…! என்ற வினா எழும்பலாம்.
இம்மனித ஜீவ உடலில் உணர்வின் எண்ண அலையை நல்ல உரமான சக்தி உரத்தை இட்டு ஆத்ம பலம் என்னும் ஞான பலத்தைக் கூட்டி
1.ஒவ்வொரு அணுவையும் உணர்வின் எண்ணத்தால் ஒளியின் அணுவாக உணர்வாக்கி விட்டால்
2.விஷமுடன் நாம் இருந்தாலும் அந்த விஷம் நம் உடலில் பாயாது.
அதற்குகந்த பக்குவத்தைத்தான் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் இங்கே வெளிப்படுத்தும் தன்மையில் பக்குவப்படுத்திக் கொண்டே வருகின்றோம்.
1.ஓர் ஆத்மா சக்தி கொண்டு வந்தால்
2.அச்சக்தியைக் கொண்டு பல சக்தியை வளரச் செய்யத்தான்
3.இந்தத் தியானத்தின் மூலம் ஆத்ம பலம் கொள்ளுங்கள் என்று உணர்த்துகின்றோம்.
எல்லாம் போகும் பொழுது நாமிருந்து என்ன பயன்…? என்று எண்ணாமல் ஓர் ஏக்கர் நிலத்தில் பத்து மூடை நெல் வந்தால் எல்லாமே உணவாகி விட்டால் விதை நெல் வேண்டுமல்லவா…!
விதை நெல் இருந்தால் தான் மீண்டும் மீண்டும் பயிர் செய்ய முடியும். குண வம்சமே அழிந்து விட்டால் அதன் குண வளர்ச்சியின் விதை வேண்டாமா…?
அதைப் போல் உணர்வால் எடுக்கும் தியானம் கொண்டு ஆத்ம பலம் என்ற ஞான வளர்ச்சியின் வழிக்கு வாருங்கள்.
1.உற்றார் உறவினர் என்ற சுழற்சியில் உணர்வின் எண்ணத்தைப் பதியச் செய்து
2.அதே சுழற்சி வலையில் சிக்குண்டு சிதறாமல்
3.உணர்வின் எண்ணத்தை உயர் தியானத்தால் ஞானம் கொண்டு
2.ஒவ்வொரு ஜீவ பிம்ப உடல்களையும் உம் எண்ண உணர்வால்
3.நல் உணர்வின் அலையைப் பாய்ச்சி உம் உணர்விற்குப் பலம் கூட்டுங்கள்.
இந்தப் பூமியில் பயிராகியுள்ள “மனித மகசூலின் விதையாக நீங்கள் இருக்க…” உணர்வின் எண்ணத்தை ஒவ்வொருவரும் நற்குணத் தியானமாக வழியமைத்துக் கொள்வீர்களாக..!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
கோவிலுக்குச் செல்பவர்கள் இன்று நடைமுறையில் எல்லா அபிஷேகங்களையும் செய்வார்கள்.
செய்துவிட்டு “சாமிக்கு அபிஷேகம் செய்து நான் என்னத்தைக் கண்டேன்…? சாமிக்காக வேண்டி நான் எத்தனை நாள் விரதம் இருந்தேன்…? எந்தச் சாமியைக் கும்பிட்டு நான் என்ன பண்ணுவது…?
இப்படித்தான் எண்ணுகின்றார்கள்.
ஏனென்றால்…
1.வாழ்க்கையில் தீமையான உணர்வுகள் வருவதை அவ்வப்பொழுது துடைக்காமல் விட்டுவிட்டால் என்ன ஆகும்…?
2.அழுக்கு சேர்ந்து விட்டால் நல்லதைக் காண முடியுமா…? முடியாது.
ஒரு பாத்திரத்தில் அழுக்குப்படுகின்றது. உடனே அதைச் சுத்தப்படுத்தி விட்டால் அழுக்குகள் போய்விடும். சுத்தப்படுத்தாது விட்டுவிட்டு அப்புறம் சுரண்டு சுரண்டு என்று சுரண்டினால் பாத்திரம் தேயத்தான் செய்யும்.
ஆகவே கோவிலில் பாலாபிஷேகம், தேனாபிஷேகம், சந்தனாபிஷேகம் செய்வது எதற்காக என்று நாம் தெரிந்து கொள்தல் வேண்டும்…?
1.பாலைப் போல தெளிந்த மணம் பெற வேண்டும்
2.தேனைப் போன்ற இனிமையான வாழ்க்கை நாங்கள் வாழ வேண்டும்.
3.சந்தனத்தைப் போன்ற நறுமணம் நாங்கள் பெற வேண்டும்
4.மகிழ்ந்து வாழும் சக்தி நாங்கள் அனைவரும் பெற வேண்டும்
5.எங்கள் குடும்பத்தில் உள்ளோரும் நாங்கள் பார்க்கும் குடும்பங்களில் உள்ளோரும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று
6.இப்படி நல்ல மனம் வர வேண்டும் என்று எண்ணுவதற்குத்தான் ஞானிகள் அதைச் செய்யச் சொன்னார்கள்.
இப்படி எண்ணினால் இங்கே நம் உயிரான ஈசனுக்கு அபிஷேகம் நடக்கின்றது. அந்த உணர்வுகள் நம் இரத்தத்தில் கலக்கின்றது. பகைமை உணர்வுகளை நாம் மறக்கின்றோம்.
அதே சமயத்தில் பிறரின் தீமையான உணர்வு நமக்குள் வராது தடுக்கப்படுகின்றது. அருள் உணர்வுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கின்றோம்.
1.பகைமைகளை மறப்பதற்கும் நல்ல உணர்வுகளைச் சேர்ப்பதற்கும் தான்
2.கோவிலில் உள்ள சிலைக்குத் தேனாபிஷேகம் பாலாபிஷேகம் சந்தனாபிஷேகம் செய்கின்றோம்.
பாலாபிஷேகம் செய்யும் போது பாருங்கள். ஒரே ஆனந்தமாக இருப்பார்கள்.
“ஆகா..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே “ஐயோ…! பையன் இப்படி இருக்கின்றானே… வாங்கியவர்கள் பணம் திரும்பக் கொடுக்க மாட்டேன் என்கிறார்களே… கொடுத்தவன் என்னை இப்படி ஏமாற்றிவிட்டாரே… நான் எல்லோருக்கும் நல்லது செய்கின்றேன்… என்னைப் பற்றிக் குறையாகப் பேசுகின்றார்களே…” என்று “இந்த உணர்வுகளெல்லாம் முன்னாடி இருந்து கொண்டு நல்லதை நினைக்கவிடாது.
அதே மாதிரி தியானத்தில் இருக்கும் பொழுது பார்க்கலாம்.
1.எப்படித்தான் உட்கார்ந்திருந்தாலும் கூட உள்ளுக்குள் இருப்பது முன்னாடி வந்துவிடும்
2.வந்தவுடன் அவன் அப்படிப் பேசினான்… இவன் இப்படிச் செய்கின்றான் என்று இது அத்தனையும் எண்ணத்திற்குள் ஓடும்.
3.ஏனென்றால் இதெல்லாம் நம் ஆன்மாவில் இருக்கின்றது… நம் ஆன்மாவில் உள்ளது அதில் எதனின் வலுவோ அதுதான் நம்மை இயக்கும்.
அதற்குத்தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
இப்படி எண்ணினால்
1.ஆன்மாவில் உள்ள தீமை செய்யும் உணர்வுகள் எல்லாம் அனாதையாகிவிடும்
2.நாம் அனாதையாக்கியதைச் சூரியன் கவர்ந்து கொண்டு மேலே சென்று விடுகின்றது.
கோவிலுக்குச் சென்று தீமை செய்யும் உணர்வுகளை நாம் ஒவ்வொருவருமே அனாதையாக்க வேண்டும். அதற்காகத்தான் ஆலயத்தை அமைத்தார்கள் ஞானிகள்.
வீட்டிலோ அல்லது மற்ற இடங்களிலோ இங்கே தியானத்தில் உட்கார முடியவில்லை என்றாலும் கூட அங்கே கோவிலுக்குச் சென்று அந்தச் சிலையைப் பார்த்தாவது அந்த நல்ல உணர்வுகளை எடுத்தீர்கள் என்றால் தீமை செய்யும் உணர்வுகள் அனாதையாகின்றது.
தீமைகள் நமக்குள் புகாதபடி தடைப்படுத்திவிடுகின்றோம். ஏனென்றால் நமக்குள் ஈர்க்க மறுப்பதைச் சூரியன் கவர்ந்து மேலே சென்றுவிடுகின்றது.
மற்றவர்களின் ஈர்ப்பு இருக்கும் பொழுது தீமைகளை இங்கே ஈர்க்கின்றது. நாம் அதை இழுக்கத் தவறினால் சூரியன் கவர்ந்து சென்று விடுகின்றது.
1.அன்றைய காலங்களில் எழுத்தறிவு இல்லை. அதற்காகத் தான் இந்த முறைகளைக் கையாண்டார்கள்
2.நம் ஞானிகள் ஞானிகள் காட்டிய இந்த முறையில் ஆலயங்களை நாம் மதித்தால் பகைமைகளை மறக்கலாம்.
3.நல்ல உணர்வுகளை நமக்குள் சேர்த்துக் கொள்வதற்குத் தான் ஆலயங்களில் அபிஷேகம் செய்யும் நிலைகளைக் காட்டினார்கள் ஞானிகள்.
சுயநலம் எதுவாக இருக்க வேண்டும்…?
எண்ணத்தால் உருவாக்கப்பட்டது தான் இந்த மனித உடல் “இராமேஸ்வரம்…” ஆனாலும்…
1.மனிதனாக உருவான பின் தீமைகளை நீக்கிய உணர்வுகளைப் பெற வேண்டும் என்று எண்ணத்தால் அதை நுகர்ந்து
2.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்தால் ஒளி உடல் பெற முடியும்.
அதாவது… எண்ணத்தால் தான் இந்த உணர்வின் தன்மை மனிதனாக உருவாக்கப்பட்டது. அதே எண்ணத்தால் இருளை நீக்கி ஒளி என்ற உடலைப் பெற்றது தான் “துருவ நட்சத்திரம்…”
அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அனுதினமும் காலையில் எடுத்து நம் உடலில் உள்ள இரத்தநாளங்களில் பெருக்கிப் பழகுதல் வேண்டும்… அந்தக் கணக்கைக் கூட்டுதல் வேண்டும்.
சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்கப்பிள்ளை என்பது போல் நாம எதை எல்லாம் சுவாசிக்கின்றோமோ அதை நமது உயிர் உருவாக்கி விடுகின்றது… உருவாக்கிய பின் உடலாக மாற்றுகின்றது.
மனிதனாக உருப்பெற்ற பின்… இந்த உடலில் வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் கோபம் ஆத்திரம் போன்ற குணங்கள் அதிகரித்து விட்டால் அந்தக் கணக்கின் பிரகாரம்… இந்த உடலுக்குப் பின் வேதனைப்படுத்தியே மற்றொன்றை உணவாக உட்கொள்ளும் அடுத்த உடலை இந்த உயிர் அமைத்துவிடும்.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபடுவதற்குத்தான்
1.இராமேஸ்வரத்தைக் காட்டினார்கள்…
2.அங்கே துருவ நட்சத்திரத்தினை நாம் நேரடியாக பார்க்கும்படி வைத்தார்கள் ஞானிகள்.
விநாயகர் ஆலயம் இருக்கும் இடங்களிலே அங்கே மரங்களை வைத்து விட்டால் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பார்க்க முடிவதில்லை… அல்லது கட்டிடங்கள் இருந்தாலும் அதைப் பார்க்க முடிவதில்லை.
1.ஆக… தனித்து அந்தக் கடல் பாகம் இருக்கப்படும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தை நாம் தெளிவாகப் பார்க்க முடியும்.
“நேரடியாகப் பார்த்து…” அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் இருக்கக் கூடிய ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் அனைத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நாம் நமக்குள் சேர்க்க முடியும்
ஒவ்வொருவரும் தன் உடலுக்குள் “துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சேர்க்க வேண்டும்…” என்பதற்குத் தான் அந்த இடத்தை ஞானிகள் தேர்ந்தெடுத்தார்கள்.
ஆக… மனிதனாக உருவாக்கிய உயிரை நினைவு கொண்டு… உயிரை ஈசனாக மதித்து… ஒளியின் உணர்வைப் பெறச் செய்வதற்குத் தான் இத்தனையும் விளக்கமாகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.
1.நீங்கள் எல்லோரும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்ற எண்ணங்களை
2.நான் (ஞானகுரு) எண்ணும் பொழுது எனக்கு அந்தப் பலன் கிடைக்கிறது.
3.இது என்னுடைய சுயநலம்…!
ஒருவர் இடைஞ்சல் செய்கின்றார்…! என்றால் அதை நீக்க வேண்டும் என்றோ அல்லது அதற்கு இன்னொரு இடைஞ்சலைச் செய்தோம் என்றால் இதுவும் சுயநலம் தான்.
1.ஆனாலும் அந்த இடைஞ்சலை நீக்கும் சக்தியை எடுத்துச் செயல்படும் நிலை வரும் பொழுது
2.எனக்குள் பல தீமைகளை நீக்கும் சக்தியாக அது வருகிறது.
தீமைகளை நீக்கும் உயர்ந்த சக்திகளை நான் பெறுவது போன்று ஒவ்வொருவரும் நீங்கள் எளிதில் பெற முடியும். பெற்று உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளைத் துருவ நட்சத்திரத்தைப் போன்று ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.
“ஆதி சக்தியின் சக்திக்கே…” துணை சக்தி கொள்ளும் வடிவெடுக்கும் உருவம் தான் மனித உடல்
தன் உணவைத் தான் எடுக்கப் போகன் செய்த செயல் முறைதான் “முருகா” என்ற சிலை.
1.ஒவ்வொரு சக்திக்கும் (அது) எந்தச் சக்தியாக இருந்தாலும்
2.தன் சக்தி வளர உணவு தேவை.
உணவை எடுக்க அவரவர்கள் உணர்த்திய முறை கொண்டு தான் போகனால் சீனாவில் பல மருத்துவங்களையும் வெடி குண்டுகளையும் முகம்மது நபியின் உடலை எடுத்து முஸ்லீம் நாடுகளில் தன் உணர்வைப் பதித்து உணர்வின் எண்ணமுடன் தன் உணவை எடுத்தார்.
இப்படி… தான் வளர தனக்குகந்த வளர்ச்சியில் ஆகாரமாகப் பல நிலைகளை உணர்வின் எண்ணமுடன் பதியச் செய்த முறை கொண்டு தான் அன்றிலிருந்து இன்று வரை பக்தி முறை தொடர் கொண்டுள்ளது.
பக்தியின் உண்மையான உணர்வின் எண்ணத்திற்கு அவர்களின் சக்தியைக் கொண்டு பக்திக்குகந்த பலனை அளித்துத் தனக்கு உணவை எடுக்கின்றார்.
கவிதைகளையும் பல காவியங்களையும் எழுத்தில் பதியச் செய்து பல சித்தர்கள் அதைப் படிப்பவர்களின் எண்ண உணர்வைத் தனக்குகந்த உணவாக எடுக்கின்றனர் “இன்றும்…!”
அன்றெழுதிய இராமாயணம் கீதை பைபிள் குரான் இவை எல்லாம் காலப் போக்கில் உருக்கள் மாறினாலும் அன்றெழுதிய உணர்வின் சக்தித் தொடரில் படிப்பவருக்கும்… எண்ணுபவர்க்கும்… அவ்வுணர்வின் சுழற்சியைக் கொண்டு…
1.இன்றளவும் அதனை எழுதியவருக்கு உணர்வின் எண்ணத்திற்கு
2.அவர்களுக்கு உணவு கிடைத்துக் கொண்டேயுள்ளது.
இந்தப் பூமியில் பல கோடிச் சித்தர்கள் பல உணர்வுகளில் இருந்தாலும் அவரவர்களின் வளர்ச்சிக் குணத்திற்கு உகந்தபடி எல்லாம் தன் எண்ண உணர்வை என்றும் அழியாத் தொடரிலும் சில சொல் ரூப மந்திரங்களிலும் பதியச் செய்துள்ளான் அந்தச் சித்தன்.
ஐயப்பனை எண்ணும் பொழுது ஒரு கோஷம். முருகனை எண்ணும் பொழுது வேறு ஒரு கோஷம். இப்படி இயேசு கிறிஸ்துவுக்கும் முகம்மது நபிக்கும் புத்தருக்கும் கொங்கணவருக்கும் அவர்கள் பதிய வைத்த இக்கோஷத்தால் இன்றளவும் தன் உணர்வுக்குகந்த உணவை எடுத்து தான் வாழ்ந்து… வளர்ந்து… பலவற்றையும் வாழ வைத்திருக்கின்றார்கள் “சக்தி கொண்ட சக்திகளை…!”
உணவில்லாமல் எதுவுமே வளர்வதில்லை…!
பிம்ப உடல் கொண்ட ஜீவத் துடிப்பு உருவங்களுக்குத் திடமான உணவு தேவை. ஆனால்
1.பிம்ப உடல் கொண்ட திட உணவை உட்கொள்ளும் இந்த மனித சக்தியில் இருந்து தான்
2.உணர்வின் எண்ண உணவையும் உட்கொள்ளும் சக்தி நிலை வளர்கின்றது.
தாவரங்கள் நீரையும் சில எருக்களையும் உணவாக உட்கொண்டாலும் உணர்வுடன் கூடிய எண்ண உணவெடுக்கும் முறை மனித ஞானத்திற்குத்தான் உண்டு. மனித ஞான உணர்வின் உயர் சக்தியில் ஊன்றியுள்ள உண்மைதனை உணரல் வேண்டும்.
மனித நிலையிலிருந்து மாறி மிருக நிலையிலும் மற்ற பட்சிகளின் புழு பூச்சிகளின் நிலையிலும் உணர்வின் எண்ண ஞான உணவெடுக்கச் சக்தியில்லை.
1.ஞானத்தின் உணவை எடுத்துச் சித்தன் என்ற செயலாகிச் சப்தரிஷியின் செயலாக்கி
2.ஆதி சக்தியின் சக்திக்கே துணை சக்தி கொள்ளும்
3.வடிவெடுக்கும் உருவங்கள் தானப்பா… இந்த மனித பிம்ப உடல்…!
பல கோடி ஆண்டுகளாகவே நற்சக்தியின் விதைகள் விதைக்கப்பட்டுப் பலனை எடுத்து… மீண்டும் மீண்டும் பலன் கொண்டு… தான் எடுத்த உயர் ஞானத்தைக் கொண்டு… பல ஞானங்களின் உணவு எடுத்துக் கருவாகி உருவாகி… தனியோரு மண்டலமாக உருவாகிச் சுழன்று கொண்டேயுள்ள சக்தியில் “முதல் எது… கடைசி எது…?”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
வீட்டில் சந்தோஷமாக இருப்பார்கள்… ஒரு சிறு குறை வந்துவிட்டால் போதும். கணவன் மனைவிக்குள் சண்டை வந்து ஒரே ரகளை தான்…!
1.“இப்படிச் சொன்னார்களே..!” என்று விஷம் கலந்து வளர்ந்து கொண்டே போகும்
2.இதை நிறுத்தும் நிலை இல்லை…
3.இன்று எத்தனையோ குடும்பங்களில் இது நடக்கின்றது.
ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்திற்குள் எல்லோரும் நல்லது செய்தாலும் ஒரு பிழை வந்தால் அது விஷமாக மாறி நமக்குள் நல்ல குணங்களையே மாற்றுகின்றது.
இதைப் போன்ற நிலைகளை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்…? என்பதற்காகக் கோவில்களில் சிலையை வைத்து நம் நல்ல குணங்களைக் காத்திடும் நிலைகளை அழகாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
1.ஞானிகள் சொன்னபடி அந்த நல்ல சக்திகளை நான் யாராவது எண்ணுகின்றோமா..?
2.எண்ணி எடுத்து அதை நமக்குள் சேர்க்கின்றோமா…?
3.ஞானிகள் சொன்னதையெல்லாம் மறந்துவிட்டோம்ம்.
கண்களால் அந்தச் சிலையை உற்றுப் பார்த்து நம் உணர்வுகளையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து அந்த அருள் உணர்வுகளை நுகர்தல் வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்கி அந்தச் சக்திகளைப் பெறுதல் வேண்டும்.
அடுத்து எங்கள் குடும்பம் முழுவதும் அந்த அருள் சக்தி படரவேண்டும். கணவன் மனைவி நாங்கள் ஒன்றி வாழ வேண்டும். என் மாமன் மாமியாருக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
கோவிலுக்குள் வரும் அத்தனை பேருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
பயிர் செய்கின்றோம்… பருவத்தில் மழை இல்லாமல் விளைச்சல் இல்லாமல் கருகிவிட்டது என்றால் கோவிலில் போய் என்ன நினைக்கின்றோம்…?
“இத்தனையும் கஷ்டப்பட்டுச் செய்தேன்… எல்லாம் பாழாகிப் போய்விட்டது… பயிர்கள் எல்லாம் கருகிப்போனது…” என்று இப்படித்தான் எண்ணுகின்றோம்.
ஆனால் அந்தக் கருகிய உணர்வை நாம் எடுத்தோம் என்றால் என்ன ஆகும் என்று நாம் அறியவில்லை. ஏனென்றால்
1.அதே உணர்வுடன் விவசாயத்திற்குச் செல்லும்போது கண்ணிலிருந்து அந்த (கருகிய) உணர்வுகள் பயிர்களில் தாக்கப்படுகின்றது
2.சங்கடத்துடன் ஒரு செடிக்குத் தண்ணீரை ஊற்றிப் பாருங்கள். பயிர் வளராது வாடிவிடும்.
சில குடும்பங்களில் சலிப்பு சஞ்சலம் என்று இருக்கும். அதை மாற்றும் நிலையைக் கோவிலில் வைத்து எடுக்கும்படிக் காட்டியுள்ளார்கள். அதை விட்டு விட்டு என்ன செய்கின்றார்கள்…?
சஞ்சல உணர்வுடன் “அவன் இப்படிச் செய்தான்.. இது இப்படி ஆகிவிட்டது…” என்று இதே உணர்வுடன் வயல்களுக்குச் செல்லப்படும் பொழுது அந்த உணர்வுகள் அங்கே படர்கின்றது.
நீங்கள் சங்கடத்துடன் எந்தப் பயிரை நட்டாலும் அது சரியாக விளையாது.
அதிலிருந்த சத்தை எடுத்துத்தான் நமக்குள் உணர்வாக மாறுகின்றது. ஏனென்றால் தாவர இனச்சத்தை உணவாக உட்கொண்ட நிலைகள் தான் உணர்வாகவும் எண்ணமாகவும் நமக்குள் வருகின்றது.
எதன் உணர்வு நம்முடன் சத்தாகின்றதோ நாம் சொல்லாகச் சொல்லும்போது அதில் (செடியில்) போய் இணையத்தான் செய்யும்.
அப்பொழுது நமக்குள் அதை எடுத்து விஷத்தைக் கலந்த உணர்வைப் பாய்ச்சப்படும் பொழுது செடிகள் கருகத்தான் செய்யும். இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
தொழிலேயும் இதே மாதிரித்தான் உணர்வுகள் இயக்கமாகின்றது.
1.பொருளை வாங்கிச் செல்பவர்கள் நலமும் வளமும் பெற வேண்டும்.
2.அவர்களுக்கு நல்ல வருமானம் வரவேண்டும்.
3.பாக்கியைச் சரியான முறையில் நமக்குக் கொடுக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமா என்றால் இல்லை.
தீமைகளை நீக்கிடும் அருள் சக்தி பெற வேண்டும். சிந்தித்துச் செயல்படும் திறன் பெற வேண்டும், அறிந்துணர்ந்து செயல்படும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று எண்ணி எடுப்பதற்காக வேண்டித்தான் கோவிலை உருவாக்கிக் காட்டியுள்ளார்கள்.
ஆக, நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் நம் உயிர் உருவாக்கும்.
1.கோவிலுக்குச் சென்று இதை எண்ணி எடுக்க முடியுமா முடியாதா..,?
2.“ஏன்..? மற்றவர்களை நம்புகின்றீர்கள்.. உங்களை ஏன் நம்ப முடியவில்லை..?” நம்பலாம் அல்லவா…!
உங்களை நம்புவதற்கு மன பலம் வேண்டும். உங்களை நீங்கள் நம்புவதற்கும் அந்த மன பலத்தை நீங்கள் பெறுவதற்குத்தான் காலையில் “துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எண்ணி எடுக்கச் சொல்கிறோம்..”
காலை 4.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடலிலுள்ள எல்லா உறுப்புகளிலும் படர வேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது தினசரி தியானியுங்கள்.
உங்களுக்குள் பேராற்றல் பெருகும். மன வலிமை பெறுவீர்கள். எதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற உபாயங்கள் உங்களுக்குள் தோன்றும். அருள் வழி வாழுங்கள். பேரானந்த நிலை அடையுங்கள்.
உங்கள் வழிக்குத் தான் என்னை அழைக்கின்றீர்கள்… குரு அருளைப் பாய்ச்சினாலும் எவரும் மதிப்பதாகத் தெரியவில்லை…!
விஷக் கிருமிகள் பரவிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் அந்த விஷத்தன்மைகள் நமக்குள் வராது தடுத்துப் பழகுதல் வேண்டும் காரணம்… இனி வரும் காலம் மிகக் கடினமாக இருக்கின்றது.
இன்று நாம் வாழக்கூடிய இந்தக் கால கட்டத்தில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இந்தப் பூமி முழுவதும் பரவச் செய்து
2.நம் உடலுக்குள் அதிகமாகப் பெருக்கி… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை
3.நமக்குள் “பெரும் வட்டமாக…” மாற்றிக் கொள்ள வேண்டும்.
எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்…! தீமையான உணர்வுகளை மாற்றி அமைக்கும் சக்தியினைப் பெறச் செய்வதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.
பதிவானதை நினைவாக்கி உங்கள் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை பெறச் செய்வதற்குத் தான் இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்
மற்ற மார்க்கங்களில் எல்லாம் இப்படிச் செய்ய மாட்டார்கள். காசைக் கொடுத்துத் தான் அதிலே மெம்பராக வேண்டும். அவர்கள் சொல்கிறபடி எல்லாம் கட்டுப்பட வேண்டும்… கட்டுப்பட்டவர்களுக்குத் தான் சொல்லிக் கொடுப்பார்கள்.
ஆனால் யாம் உங்களுக்கு நேரடியாக பப்ளிக்காக (PUBLIC) சொன்னால்…
1.நீங்கள் என்ன செய்கின்றீர்கள்…? அலட்சியப்படுத்தி விடுகின்றீர்கள்…!
2.இங்கே இந்தப் பக்கம் கேட்டு விட்டு அந்தப் பக்கம் காது வழியாக வெளியில் விட்டு விட்டுச் செல்கின்றீர்கள்.
என் குடும்பத்தில் ஒரே தொல்லையாக இருக்கின்றது. என் பிள்ளைகள் இப்படி இருந்து கொண்டிருக்கின்றது. நான் எதைச் செய்தாலும் அது நஷ்டம் ஆகின்றது…! என்று இதைத்தான் இராகமாகப் பாட ஆரம்பிக்கிறீர்கள்.
“நான் (ஞானகுரு) கொடுத்த சக்தியைப் பயன்படுத்துவோம்…!” என்ற நிலை இல்லாது இருக்கின்றது. எவ்வளவோ சிரமப்பட்டுப் பெற்ற… எனக்குள் விளைய வைத்த… அந்த உயர்ந்த ஞானத்தைத் தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
1.ஆனால் கொடுத்த வித்தை உதறித் தள்ளிவிட்டு உங்களுக்குள் வேதனையைக் கூட்டிக் கொண்டு
2.என்னையும் வேதனைக்கு உள்ளாக்கும் நிலைக்குத்தான் நீங்கள் வருகின்றீர்கள்
3.உங்கள் வழிக்குத் தான் என்னை அழைக்கின்றீர்கள்
4.இருளை நீக்கும் குரு அருளைப் பாய்ச்சினாலும் எவரும் மதிப்பதாகத் தெரியவில்லை
5.இருக்கலாம்… மதிப்பதாக நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கலாம்…
6.ஆர்வம் இருக்கும்…! ஆனால் அப்புறம் என்ன செய்வீர்கள்…?
7.அவன் அப்படிப் பேசினான்… இவன் இப்படிச் செய்கின்றான்…! சும்மா விடுவதா…?
8.கடன் வாங்கிச் சென்றவன் பணத்தைத் திரும்ப கொடுக்கவில்லையே… என்னை ஏமாற்றுகின்றானே…! என்ற
9.இந்த நினைவுகள் தான் வருகின்றதே தவிர நான் சொல்லும் நிலைகளை எடுக்கும் நிலை இல்லை…!
இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமல் எத்தனையோ தீமைகள் ஆட்டிப்படைக்கின்றது. அதை எல்லாம் மாற்றி அமைக்க அருள் உணர்வுகளைப் பெருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் முடிவு மிகவும் நெருங்கி விட்டது…!
இன்று இளம் குழந்தையாக இருந்தாலும் சரி… வயது முதிர்ந்தவர்களாக இருந்தாலும் சரி… நம் பூமி கொதிகலனாக மாறிக் கொண்டிருக்கின்றது… விஷத்தன்மைகள் அதிகமாகப் பரவுகின்றது.
இந்தப் பூமிக்குள் மட்டுமல்ல…! இந்தப் பிரபஞ்சத்திற்குள்ளேயே கடும் தீய விளைவுகள் ஆகி அல்லோகலப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றது. யார்… எதைத் தேடி… எதைக் காக்கப் போகின்றோம்…!
1.இது போன்ற நிலைகளை எல்லாம் கடந்து
2.என்றுமே அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
இந்தச் சூரியனே அழிந்தாலும் பிரபஞ்சமே அழிந்தாலும் இந்தப் பிரபஞ்சத்திலே தோன்றிய உயிரணு மனிதனாக வளர்ச்சி அடைந்து.. தன் ஆறாவது அறிவை ஏழாவது… ஒளியாக மாற்றி விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக வாழ்வது போல் நாமும் அங்கே வாழ முடியும்…! ஏகாந்த நிலையை அடைய முடியும்… எதிர்ப்பே இல்லாத நிலையம் நஞ்சை ஒளியாக மாற்றிடும் திறனும் பெற முடியும்.
அதைப் பெறக்கூடிய தகுதியைத்தான் திரும்பத் திரும்ப உங்களுக்கு இங்கே ஏற்படுத்துகின்றோம்.
“என் உணர்வைப் பெற்றால் தான்…” எனக்கும் உனக்கும் மத்தியில் உள்ள திரை விலகும்
படைப்பின் படைப்பனைத்திற்குமே ஒவ்வொன்றிற்கும் அதன் படைப்புக் குணம்… மணம் உண்டு. கல் மண் உலோகங்கள் அனைத்திற்குமே மணமுண்டு.
மணமில்லா உரு நிலை எதுவுமே பெறுவதில்லை.
நம் பூமிக்கு மட்டுமல்ல… பால்வெளி மண்டலத்திலும்… நட்சத்திர மண்டலங்களிலும்… வளர்ந்த பெரிய மண்டலங்கள் எதுவானாலும்… அதன் ஆரம்ப நிலை அமில ஈர்ப்பு ஜீவத் துடிப்பு மணமுடன் ஒலியாகி ஒளியாகி நீராகும் செயல் தான் கொள்கின்றது.
மணம் கொண்ட வழியிலேயே உணர்வும் பெறுகின்றது. மணத்துடன் கூடிய உணர்வால் தான் உணவையே உட்கொள்ள முடிகின்றது.
இந்நிலையை எதற்காக இங்கே உணர்த்துகின்றேன்…?
1.உன் ஜெப நிலையால் உன் உணர்வின் எண்ணத்தை
2.என் பால் (ஈஸ்வரபட்டர்) செலுத்தி எம் அலையின் தொடரை நீ பெற்றால்
3.உன் உணர்வின் உணவாக எம் அலை பாயும்.
ஒரு பருப்பில் பல பருப்புகள் விளைகின்றன. அதைப் போல்
1.எம் உணர்வை நீ எடுத்து
2.உன் உணர்விற்கு உணவாக ஊட்டம் கொடுத்து உன் வளர்ச்சியை நீ பெற்றால்
3.உனக்கும் எனக்கும் மத்தியில் உள்ள திரை விலகி
4.அனைத்தையும் காணும் “அபூர்வ சக்தியாக” ஞான சக்தியின் சித்து நிலை பெற முடியும்.
பருப்பு பருப்பாகவே இருந்தால் பல பருப்பைக் காண முடியுமா…? பயிர் செய்து பலன் பெற்று பலனின் பயிர் வளர் தொடர்பில்தான்… பருப்பென்ற பருப்பு குணப் பயிர் வளர்ப்பே வளர்ந்து கொண்டேயிருக்குமேயன்றி பயிர் செய்யாமல் பயிர் வளர் தொடர் எதுவும் காண முடியாது.
1.ஒன்றின் தொடர் ஒன்று வளர்கின்றது
2.ஒன்று என்றென்றும் வளர தன் வளர்ப்பிற்கு உணவு தேவை.
3.அதைப் போன்று நாங்கள் (மகரிஷிகள்) வளர உன்னை வளர்க்கின்றோம்.
4.நீ வளர நீயும் வளர்க்க வேண்டும் பிறரை…!
வளர்ப்பின் தொடர் வளர்ப்பு வளர்ந்து கொண்டேயிருந்தால் தான் எந்த ஒரு வளர்ச்சியும் வளர்ந்து கொண்டேயிருக்கும்.
1.பயிர் வளர்ப்பு மட்டுமல்ல….
2.ஜீவித வளர்ப்பு மட்டுமல்ல…
3.மண்டலங்களின் வளர்ப்பு மட்டுமல்ல…
4.ஞானிகளின் வளர்ப்பு மட்டுமல்ல…
5.அவ்வாதி சக்தியின் படைப்பின் சக்திக்கே… படைப்பின் படைப்பாகி பலவற்றின் படைப்பின் தொடர் படைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.
வழித் தொடர் வெள்ளாமை ஒவ்வொன்றிலும் வளர்ந்து கொண்டேயிருந்தால் தான் அவ்வளர்ச்சியின் செயல் வளர்ந்து கொண்டேயிருக்கும்.
1.முற்றுப் பெற்று… முக்தி பெற்று… முடிவடையும் சக்தி எதுவுமே இல்லை.
2.முழு முதலாக வளர்வது தான் ஆதியின் அந்தச் சக்தி.
உடல் வளர உணவு தேவை. உணர்வின் எண்ணம் வளர ஞானத்தின் உணவு தேவை. உணர்வின் எண்ணத்தை ஞானம் என்ற உணவை உட்கொண்டு இவ்வுடல் என்ற பிம்ப ஜீவ சக்தி கொண்ட வடிவின் அணுவின் உயிரணுக்களுக்கு ஞானத்தை உணவாகக் கொடுத்து
1.ஞானத்தால் வளர்த்த உடல் அணுக்களைச் சித்து நிலை பெற்றிடவே
2.ஞானம் என்ற உணர்வெடுத்துச் “சித்தன்” என்று உருவாகுங்கள்.
இப்பொழுது புரிகிறதா போகன் அமைத்த முருகனின் சிலை எதற்கு என்று…?
தன் நிலை உயர தன் உணர்வு வளர முருகனைப் படைத்தான் போகன். முருகன் சிலையைப் படைத்து முருகா… என்ற நாத உணர்வு ஜீவ சக்தியை உணவாக உட்கொள்கின்றான் இன்றும் போகன்.
1.ஒவ்வொரு சித்தனும் இந்த ஞான பூமியில் தன் ஞானத்தை வளர்த்துக் கொள்ள
2.தன் வளர்ப்பின் வளர்ப்பு வளர வழிப்படுத்திய உண்மைகள் பல உண்டு.
போகரின் வழித் தொடர் முருகன் முருகனின் உருவத்தை காட்டி உணர்வின் எண்ண ஜீவ உணவை உட்கொள்கின்றான் போகன்.
முருகன் ஆலயம் செல்லும் பக்தர்களில் உணர்வால் உண்மை பக்தி பூண்ட ஆயிரம் பக்தர்கள் சென்றால்…
1.ஆயிரத்தில் ஒன்றிரண்டு பக்திமான்களாவது
2.ஞானத்தின் சக்தி பெறச் செல்வதுண்டல்லவா…!
தன் உணவாக நல் மணிகளைத் தான் உண்டு பல மணிகளைத் தருகின்றான் போகன்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இன்று பெரும்பகுதி என்ன செய்கின்றார்கள்…?
சாமியிடம் சக்தி இருக்கின்றது. அவரிடம் சென்றால் எல்லாம் சரியாகப் போகும் என்று எண்ணுகின்றார்கள்.
1.சாமியினுடய சக்தியைத்தான் உங்களிடம் கொடுக்கின்றேன். அந்தச் சக்திகளை நீங்கள் பயன்படுத்த வேண்டுமா இல்லையா..,?
2.சாமி செய்கின்றார் என்று என்னைத்தான் நம்ப முடிகின்றதே தவிர சாமி கொடுத்த சக்தியை நீங்கள் நம்ப முடியவில்லையே.
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவோம் என்ற நிலைக்கு நீங்கள் வர வேண்டும்.
சில பேர் சங்கடத்துடனே அந்த மகரிஷிகளை எண்ணுவார்கள்… நான் நினைத்தேன் வரவில்லை என்பார்கள். ஒரு தடவைக்கு இரண்டு தடவை அந்த அருள் சக்திகளை எடுத்தால் அது நிச்சயம் கிடைக்கும்.
1.யாருக்கும் கிடைக்காது என்று எதுவும் இல்லை
2.உங்கள் எல்லோருக்கும் அந்த அருள் சக்திகள் கிடைக்க வேண்டும்
3.நீங்கள் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் தவமிருக்கின்றேன்.
ஏனென்றால் இந்தக் காற்று மண்டலம் நச்சுத்தன்மையாகிக் கொண்டே இருக்கின்றது… இதிலிருந்து நீங்கள் மீள வேண்டும்.
நமது குருநாதர் இதைத்தான் சொன்னார்
1.“நீ கடவுளை எங்கேயும் தேட வேண்டாம்…
2.மனிதனாக உருவாகிய நிலையில் “முழு முதல் கடவுள்” மனிதன் தான்.
உங்கள் உயிர் ஒரு கடவுள். அவனால் அமைக்கப்பட்ட உடல் அது ஒரு கோவில். அந்த ஆலயத்திற்குள் மனிதனாக உருவாக்கப்பட்ட நல்ல குணங்கள் தெய்வங்கள் அது காக்கப்படவேண்டும். அதைத் தான் குருநாதர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார். அருள் சேவையாகச் செய்யும்படி சொன்னார்.
உணர்வின் வலு கொண்டு உன் எண்ணத்தால்… கண் வழியாக அருளைப் பாய்ச்சு…! என்றார் குருநாதர்
குருநாதர் காட்டிய அருள் வழியில் நான் இருபது வருடம் முப்பது வருடம் காடு மேடெல்லாம் அலைந்தேன்.
1.ஒவ்வொரு நிமிடத்திலும் எதிர் நிலையான உணர்வுகள் உன் உடலுக்குள் என்ன செய்கின்றது…?
2.இதற்கு மாற்று நீ என்ன செய்ய வேண்டும்… நீ எப்படி இருக்க வேண்டும்…?
3.தீமைகளை நீ எப்படி மாற்ற வேண்டும்…? என்று தான் குருநாதர் காட்டினார்.
ஏனென்றால் பல தொல்லைகள் பட்டேன்… என் குடும்பத்தையே அனாதையாக விட்டு விட்டுத் தான் சென்றேன்.
அவர்களைப் பற்றி எண்ண விடாதபடி செய்தார் குருநாதர். ஆனால் சில சந்தர்ப்பங்களில் அவர்களைப் பற்றி எண்ணும் பொழுது… பாசத்தால் அவர்களின் உணர்வுகள் உன் உடலுக்குள் எப்படி வேகமாக வருகின்றது…! என்றும் காட்டினார் குருநாதர்.
ஒரு பாத்திரம் சரியாக இருந்தால் அது நலமாக இருக்கும். அதிலே ஓட்டை விழுந்து விட்டால் அதை உபயோகப்படுத்த முடியாது.
அது போல் இந்த உடல் என்ற இந்தப் பாத்திரத்திலே இருக்கக்கூடிய ஓட்டைகளை (பிற தீமையின் உணர்வுகள்) அடைக்க வேண்டும் என்றால்
1,அதைச் சமப்படுத்தினால் தான் நீ உன்னைக் காத்து உன் குடும்பத்தில் உள்ளவரையும் காப்பாற்ற முடியும் என்று
2.இதெல்லாம் அனுபவபூர்வமாகத் தான் குருநாதர் உணர்த்தினார்.
இமயமலையில் பனிப்பாறைகளுக்கு மத்தியில் நான் செல்லப்படும் போது எனக்குள் சில உணர்ச்சிகளைத் தூண்டச் செய்கிறார். பழனியில் என் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததை அங்கே நேரடியாகக் காட்டுகிறார்.
அதைக் கண்ட பின் என் குழந்தையை எண்ணும் பொழுது பனிப்பாறையிலே என் இருதயமே இரைச்சலாகின்றது… உறையும் தன்மை வருகின்றது. அப்படியே விட்டு விட்டால் உயிரே போய்விடும்.
அப்போதுதான்… நீ உன் குழந்தையை இங்கிருந்து எப்படிக் காக்கப் போகின்றாய்…? என்று வினா எழுப்பினார்.
உன் குழந்தையைக் காக்க வேண்டும் என்றால்
1.நான் உனக்குச் சொன்ன உணர்வின் வலு கொண்டு
2.உன் எண்ணத்தால்… கண் வழியாக அங்கே அருளைப் பாய்ச்சு
3.அவனைக் காப்பதற்குண்டான நிலைகளை நீ செய்…! என்றார்.
இப்படி என் குடும்பமே பல வகைகளிலும் அல்லல்பட்டது. என்னைச் சார்ந்தோர் அனைவரும் கஷ்டப்பட்டுத்தான் தான் நான் ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்ள முடிந்தது… “இப்படித்தான் தெரியச் செய்தார் குருநாதர்…”
அதைப் போன்று தான் இப்போது உங்கள் குடும்பத்திலும் உங்களை அறியாது எத்தனையோ தீமைகள் வருகின்றது. ஆனால் நீங்கள் தவறு செய்யவில்லை. பிற மனித உடலில் விளைந்த உணர்வுகளை நீங்கள் நுகரும் போது அந்த நிலை ஆகிறது.
பத்திரிக்கை வாயிலாக டி.வி. வாயிலாக உங்களுக்குள் தினசரி எத்தனையோ அதிர்ச்சியான உணர்வுகள் புகுகின்றது.
1.அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டு உங்கள் உடலை என்னவெல்லாம் அது பாடு படுத்துகின்றது…?
2.அப்போது அந்தத் தீமையே உங்களை ஆட்சி புரிகின்றது… நல்ல குணங்கள் ஆட்சி புரிவதில்லை.
3.உயிரிலே படும் அந்தக் கலக்கமான உணர்வுகளே இயக்கச் சக்தியாக வருகிறது.
காரணம்… நெருப்பிலே எந்தப் பொருளைப் போடுகின்றமோ அந்த மணம் தான் வரும். நம் உயிர் நெருப்புக்குச் சமம்.
ஆனால் நமது ஆறாவது அறிவால் இருளை நீக்கும் ஒளியான உணர்வுகளைச் சேர்த்தோம் என்றால் அந்த உணர்ச்சிகளை ஊட்டி… எண்ண வலிமை கொண்டு நம் வாழ்க்கையைச் சீர்படுத்த முடியும்.
இருளை நீக்கி ஒளியாக மாற்றும் அருள் ஞானிகள் உணர்வை நுகர்ந்து உடலில் இருக்கக்கூடிய இரத்தங்களில் செலுத்தி ஒவ்வொரு அணுக்களுக்கும் அதைப் பெறச் செய்தால்
1.இருளை நீக்கும் ஆற்றல் பெற்று சிந்தித்துச் செயல்படும் தன்மை வாழ்க்கையில் வரும்
2.அதே சமயத்தில் நம் மீது மோதும் தீமையின் உணர்வுகளை எதிர்கொண்டு நீக்கும் தன்மை வரும்.
எப்படி…?
எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்…! ஒரு உணர்வின் அழுத்தத்தின் தன்மை எதுவோ அதைக் கொண்டுதான் நவீன இயந்திரங்களை இன்று இயக்குகின்றான் மனிதன்… “விஞ்ஞான அறிவு கொண்டு…!”
இதைப் போன்று தான் நமது உயிர் நமக்குள் எலக்ட்ரிக்காக இருக்கின்றது… நாம் சுவாசிப்பதை எலக்ட்ரானிக்காக மாற்றி இயக்குகிறது. ஆனால் வேதனை என்ற உணர்வுகள் எலக்ட்ரானிக்காக மாறி விட்டால் அந்த வேதனையின் இயக்கமாகத் தான் உயிர் நமக்குள் உருவாக்கும்.
இதையெல்லாம் வென்ற
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எலக்ட்ரானிக்காக நாம் மாற்றினால்
2.இதன் உணர்வுகள் எதிர் கொண்டு அந்த வேதனைகளைத் தள்ளிவிட்டு விடும்
3.நமக்குள் சிந்தித்து செயல்படும் தன்மையும் அருள் வாழ்க்கை வாழ்ந்திடும் தன்மையும் வரும்
4.எதிர்வரும் தீமையின் உணர்வின் தன்மையை நமக்கு நாமே உணர்ந்து அந்த உணர்வுகள் நமக்குள் வளராதபடி தடுக்கவும் முடியும்.
உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் இப்பொழுது பதிவாக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவால்… இருளை நீக்கி என்றுமே உங்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழலாம். மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வாழச் செய்ய முடியும்.
1.நீங்கள் ஒருவர் மகிழ்ந்து வாழ்ந்தால் போதும்
2.அதன் உணர்வு உங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் மகிழ்ச்சி அடையச் செய்யும் சக்தியாகப் படரும்
3.உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களும் ஒளியாக மாறும்.
உங்கள் வாழ்க்கையில் பேரின்பப் பெரு வாழ்வு பெறும் பயிற்சியைத் தான் இப்பொழுது யாம் (ஞானகுரு) தந்து கொண்டிருக்கின்றோம்.
இதனைக் கற்றுக் கொண்டு நீங்களும் சரி உங்கள் குடும்பத்தாரும் சரி உங்களைச் சார்ந்த்தோரும் சரி எல்லா நலமும் வளமும் பெற்று… இந்த பூமியில் படர்ந்து கொண்டிருக்கும் நச்சுத்தன்மைகளை நீக்கக்கூடிய அந்த வலிமையை நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும்.
ஞானத்தின் வளர்ச்சிக்கு மகரிஷிகளின் தொடர்பிலேயே இருக்க வேண்டும்
நல் உபதேசத்தைக் கேட்பதும்… நல்ல நூலைப் படிப்பதும்… நம் உணர்வின் எண்ணமுடன் சுழன்று கொண்டே தான் இருக்கும்.
1.இஜ்ஜீவ உணர்வின் சக்தியைக் கொண்டு
2.இவ்வெண்ண நிலையை எதன்பால் திருப்புகின்றோமோ
3.அவ்வலைத் தொடரின் பதிவு ஒலிகள் அதனுடன் கூடிய நல் அலைகளை மீண்டும் பதியச் செய்ய
4.இவ்வெண்ணத்தால் எடுக்கும் தியானத்தால் இவ்வுணர்வு முழுவதுமே
5.நற்சக்தியின் அலையை நாம் பதிவு செய்து கொள்ள முடியும்.
கோவில் குளங்களுக்குச் செல்லும் பக்திமானுக்கு அவன் கனவிலும் நினைவிலும் இதே நிலைகள் தான் சுழன்று கொண்டிருக்கும்.
பல கோவில்களுக்குப் போவது போலவும் அங்குள்ள ஆண்டவனைத் தரிசிப்பது போல “கனவுகளிலும்…” அதே சமயத்தில் “நினைவான எண்ணத்தில்…” எக்கோயிலுக்குச் செல்லலாம்…? எந்த நூலைப் படிக்கலாம்…? எந்த ஞானியைத் தரிசிக்கலாம்…? என்ற உணர்வு அலைப்பிடிப்பில் தான் பக்திமானுடைய எண்ண உணர்வலை எடுக்கும் சுவாசம் கொண்ட அலை பதிந்திருக்கும்.
திருடனுக்கும் சரி… அவன் உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் சுவாசத்தைக் கொண்டு எவ்வலை ஓடுகின்றதோ…! அவ்வலையின் செயலுக்குகந்த எண்ணத்திற்கொப்பத்தான் அவன் நினைவும் கனவும் இருக்கும்.
விவசாயி ஆனாலும் சரி.. விஞ்ஞானி ஆனாலும் சரி… குடித்துத் தன் உணர்வை இழந்தவன் ஆனாலும் சரி…
1.எந்த ஒரு பழக்கப்பட்ட செயலுடன் கூடிய வாழ்க்கையுடன் வாழ்கின்றோமோ அதன் நிலைக்கொப்ப
2.உணர்வின் எண்ணத்திற்கொப்ப சுவாசத்தால் இவ்வுடலில் பதிவாகியுள்ள நிலைக்கொப்ப சுழற்சியில் தான்
3.ஒவ்வொரு மனித ஆத்மாவின் ஜீவ சக்தியின் அலைத் தொடரும் செயலும் வெளிப்படுகின்றன.
இச்சுழற்சியில் “அந்தந்தக் குண அமிலச் செயல் வட்டத்திற்குள்” மட்டும் உணர்வைச் செலுத்தி வாழ்பவனை அவனுள் பதிவாகியுள்ள குண அமிலத்திலிருந்து மீட்டுவது கடினம்…!
அதே சுழற்சியில் இருந்தாலும் ஆத்ம வளர்ச்சியை வளர்க்க முடியாது.
உணர்வுடன் கூடிய எண்ணத்தை நம்முள் “பல கோடி ஆண்டுகளாகப் பதிவாகி உள்ள குண அமிலத்துடன்…”
1.நற்சக்தியின் அமிலத்தை ஞானத்தால் நாம் எடுக்கும் ஜெபத்தைக் கொண்டு
2.நம்மைக் காட்டிலும் சக்தி வாய்ந்த சூட்சம நிலையில் உள்ள சப்தரிஷிகளுடன் தொடர்பு கொண்டு
3.உணர்வின் எண்ணமுடன் இழுக்கும் சுவாசத்தைக் கொண்டு உடல் முழுவதும் அதைப் பாய்ச்சி
4.ஏற்கனவே நாம் பல காலமாகச் சேமித்து வைத்துள்ள இக்குண அமிலத்துடன்
5.நற்சக்தியின் ஒலி அலை பாயப் பாய
6.மனிதச் சக்திக்குள் எச்சக்தியும் அறியக்கூடிய நிலை பெறலாம்.
நம்மைக் காட்டிலும் உயர்ந்த சக்தியைப் பெறும் வழித் தொடரை நாம் பெற்றோமானால் தான்
1.ஜீவனுடன் கூடிய இம்மனித உடல் பிம்பத்திலிருந்து எச்சக்தியையும்
2.இருந்த இடத்திலிருந்தே உணரவும் காணவும் மாற்றி அமைக்கவும் முடியும்.
ஆனால் நற்சக்தியின் பயனைப் பக்குவம் கொண்ட பத நிலையில் செயல்படுத்தக்கூடிய நிலையும் நாம் பெற வேண்டும்.
புகழ் கண்டு மயங்காதே…
புகழாரம் பாடாதே…
புகழ் தேடிச் செல்லாதே…!
இன்னல் கண்டு கலங்காதே…
இகழ்ச்சி கண்டு பதறாதே…
இகழ்ந்துரைக்க எண்ணாதே…!
நம் ஞானத்தின் வழித் தொடர் வெளிப்பட்டவுடன் நம்மை எதிர் நோக்கியுள்ள நிலைகள் தான் மேலே குறிப்பிட்டவை எல்லாம்.
1.இந்நிலையுடன் கூடிய உணர்வின் பிடியில் சிக்குண்டவர்கள்…
2.தன் வளர்ச்சியின் ஞானத்திலிருந்தே உயர முடியாத சுற்றலில்
3.இன்றளவும் பலர் சுற்றிக் கொண்டுள்ளார்கள்.
ஆகவே ஞானத்தின் வளர்ச்சிக்கு மகரிஷிகளின் தொடர்பிலேயே இருக்க வேண்டியது மிகவும் அவசியம்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
தாய் தந்தையர்… நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தன் பிள்ளைகளை வளர்த்து வருகின்றார்கள்.
ஆனால் பிள்ளைகள் அம்மா அப்பாவிடம் சண்டைக்கு வந்துவிட்டால் போதும். பையன் என்ன செய்கின்றான்…? கோவித்துக் கொண்டு சென்று விடுவான்.
சென்ற பின் உங்கள் அம்மா கீழே விழுந்துவிட்டார்கள். அடிபட்டுக் காயமாகிவிட்டது என்று கேள்விப்படுவான். அதைக் கேட்டுவிட்டு பையன் என்ன சொல்வான்…?
“அப்படித்தான் வேண்டும்…!” என்பான்.
அதே சமயத்தில் பையன் அம்மாவை அடித்து உதைத்திருக்கட்டும். அதன் பின் பையன் வெளியிலே செல்லும் போது அவனை அறியாமல் தவறிக் கீழே விழுந்திருக்கட்டும்.
அதைத் தாய் கேள்விப்பட்டவுடன் “அடப் பாவி மகனே என்னை இப்பொழுது தானடா அடித்தாய்… அதற்குள்ளே கீழே விழுந்து விட்டாயே…” என்று வேதனைப்படும்.
எழுந்திருக்க முடியவில்லை என்றாலும் கூட பையனைப் பார்க்க வேண்டும் என்று எழுந்து ஓடி வரும்.
1.அப்பொழுது தாயின் பாசம் எப்படி இருக்கும்…?
2.இயற்கையின் உண்மையின் உணர்வுகள் இது
3.ஆனால், தாயை நாம் எத்தனை பேர் மதிக்கின்றோம்…?
நன்றாக யோசனை செய்து பாருங்கள்.
1.நம்மை மனிதனாக உருவாக்கியது யார்…? தாய்.
2.தெய்வமாக நம்மைக் காப்பாற்றியது யார்…? தாய்.
3.நல்ல மொழிகளை நமக்குச் சொல்லிக் கொடுத்த முதல் குரு… நம் தாய் தான்.
ஆகவே… தாயை முதலில் நாம் மதித்துப் பழக வேண்டும். தாயின் உணர்வு உங்களுக்குள் பதிவாகி இருக்கின்றது. இந்தக் காற்று மண்டலத்திலும் பரவி இருக்கின்றது. நீங்கள் “அம்மா…அம்மா…” என்று எண்ணும் போது அந்த அலைகள் வந்து உங்களைக் காக்கும்.
காட்டுக்குள் சென்றால் புலியோ யானையோ மற்றதோ தாக்க வரட்டும். நீங்கள் “அம்மா..அம்மா..” என்று மட்டும் சொல்லிப் பாருங்கள். புலி வந்து தாக்குமா…? யானை வந்து தாக்குமா…?
நான் உங்களிடம் பந்தயம் கட்டுகின்றேன்… “தாக்காது…”
உதாரணமாக, ஒரு இடத்தில் நின்று இங்கே இந்த மரத்தின் அடியில் ஒருவன் “ஆ…” என்று பயந்துவிட்டான் இங்கே “பேய்.. வந்தது….” என்று சொன்னால் போதும்.
மற்றவர்கள் அதே மரத்துக்கு அடியில் போகும் போது “நேற்று இங்கே ஒரு பேய் வந்தது…” என்று பதிவாக்குவார்கள். உடனே என்ன ஆகும்…?
அந்த மரத்தைக் கண்ணில் பார்த்ததுமே “இங்கே தான்..,” அந்தப் பேய் வந்தது என்று சொன்னால் நமக்குள் அந்தப் பதிவின் உணர்வை நுகர்ந்தவுடன் “கிடு….கிடு…” என்று நடுங்குகின்றது.
1.நடுக்கம் வருகின்றதா இல்லையா…?
2.பதிவான உணர்வின் அலைகள் நம்மை இயக்குகின்றதா இல்லையா?
அதைப் போன்று தான், தாய் எப்பொழுதுமே தன் பிள்ளைகள் அவர்கள் உயர்ந்தவர்களாக வேண்டும், நல்லவர்களாக வேண்டும் இதையே தாய் தனக்குள் சதா வளர்த்து வைத்துக் கொண்டுள்ளது. அந்த உணர்வலைகள் நமக்கு முன் உண்டு.
ஆனால்… நாம் குறும்புத்தனம் செய்தால் திட்டாமலா இருப்பார்கள் சாதாரண வாழ்க்கையில் வந்தது.
எது எப்படி இருந்தாலும் தாய் பட்டினியாக இருந்தாலும் தன் பிள்ளைக்குக் கொடுக்க வேண்டும் என்று உணவைக் கொடுக்கத்தான் செய்யும். தனக்கு வயிற்றுக்கு இல்லை என்றாலும் தன் குழந்தைகளைக் காப்பதற்குத் தாய் எத்தனையோ சிரமப்பட்டுக் கொடுக்கின்றது.
ஆனால், அந்தத் தாயை நாம் மதிக்கின்றோமா…? ஆகவே நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்…?
எந்தக் கோவிலுக்குச் சென்றாலும்
1.என் தாய்க்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.எனக்காகப்பட்ட கஷ்டங்கள் எல்லாம் நீங்க வேண்டும்
3.என் தாய் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
“தாயின் அருள் துணை எப்பொழுதுமே எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்…!” என்று நீங்கள் எண்ணிப் பாருங்கள்.
உங்களுக்கு ஒரு பெரிய சிரமமே வருகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். தொழிலில் எவ்வளவோ கஷ்டம் வருகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
1.அந்த நேரத்தில் யாம் சொன்ன முறைப்படித் தாயை எண்ணித் தியானியுங்கள்
2.“தாயின் காக்கும் உணர்வு” வந்து உங்களுக்குச் சிந்தனை வரும். உங்களுக்கு நல்ல வழி காட்டும்.
உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.
“நாம் செய்யும் தொழில்…” எப்போது தெய்வமாகிறது…?
“நாம் உயர்வான எண்ணங்களை எண்ணும் பொழுதெல்லாம்…” அந்த நேரம் நல்ல நேரமாகின்றது. அப்போது உயர்வான சிந்தனைகளும் உயர்வான நிலைகளும் நமக்குக் கிடைக்கின்றது.
நாம் தொழில் செய்கிறோம்… கடையிலே பொருள்களைப் பொட்டலமாக வைத்து வியாபாரத்திற்காக வைக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.
கடைக்கு வருபவர்கள் பொருள் வேண்டும் என்று கேட்கின்றார்கள். பொருளைக் கையில் எடுத்துக் கொடுக்கும் பொழுது நாம் எந்தெந்த எண்ணத்துடன் கொடுக்கின்றோம்…?
பொருள்களுக்குண்டான பணத்தை
1.அவர் சரியானபடி கொடுப்பாரா…? தர மாட்டாரா…?
2.அல்லது போன தடவை போன்று பணத்தைக் கொடுக்காது இழுத்தடிப்பாரா…? என்ற
3.இந்த எண்ணத்தோடு நாம் கொடுத்தால் என்ன ஆகின்றது.
ஏனென்றால்… நம்மிடம் பொருளை வாங்கிச் செல்வோர் அதை நல்ல முறையில் உபயோகித்து (அல்லது மற்றவருக்கு விற்று) அந்தப் பணத்தை உடனே நமக்குக் கொடுக்க வேண்டும். அவருக்கும் அந்த வருமானம் வர வேண்டும் என்று எண்ணினால்
1.நாம் நல்லதாக எண்ணுகின்றோம் என்று அர்த்தம்… அந்த நேரமும் நல்ல நேரமாக அமைகின்றது.
2.அதே சமயத்தில் பொருளை வாங்கிச் செல்வோருக்கும் அங்கே நல்ல வியாபாரம் ஆகிறது.
ஏனென்றால் நாம் எதை எண்ணி… தொட்டு… அந்தப் பொருளை எடுத்துக் கொடுக்கின்றோமோ… அதிலே நம் உணர்வுகள் பதிவாகி விடுகின்றது எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்.. பொருள்களிலும் அந்தக் காந்தப் புலன் உண்டு.
நாம் தொட்டு எடுத்துக் கொடுக்கும் ஒவ்வொரு பொருளிலும் எத்தகைய எண்ணங்கள் உணர்வுகளைப் பதிவு செய்கிறோமோ “அது கலந்து தான்…” அங்கே செல்கின்றது.
நாம் சந்தேகப்பட்டு…
1.பணத்தைக் கொடுக்க மாட்டான்… இழுத்தடிப்பான்…! என்று
2.இந்தக் கலக்கமான உணர்வுடன் அதைத் தொட்டு எடுத்துக் கொடுக்கும் பொழுது
3.அவர்களும் இதை வைத்து வியாபாரம் செய்தார்கள் என்றால் அங்கேயும் வியாபாரம் மந்தமாகி விடுகிறது
4.அவர்களுக்கும் அந்த நேரத்திற்கு பணம் வராது… நமக்கும் சரியான நேரத்திற்குப் பணம் வராது.
5.அப்போது இந்த நேரம் என்ன ஆகிறது…? நாம் முதலிலே சந்தேகத்துடன் எண்ணித் தொட்டுக் கொடுத்த நேரம் கெட்ட நேரமாகி விடுகிறது.
இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால்… ஒவ்வொரு நாளும் உயர்ந்த குணங்களைத் தான் நாம் வளர்த்துக் கொண்டு வர வேண்டும். அப்போது உயர்ந்த உணர்வுகள் நம் கைகளிலும் பதிவாகின்றது. நாம் எதையெல்லாம் தொட்டுக் கொடுக்கின்றோமோ அந்த உணர்வுடனே பொருள்கள் வெளியே செல்கின்றது.
நல்ல நேரத்தை இப்படித் தான் நாம் உருவாக்குதல் வேண்டும்.
உதாரணத்திற்கு ஒரு பொருளை எடுத்துக் கொடுக்கப்படும் போது…
1.அந்தப் பொருளை வாங்கிச் செல்வோர் அவர் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டும்
2.மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
3.பொருள் அவர்களுக்கு நல்ல முறையில் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் கொடுத்துப் பாருங்கள்.
அவர்கள் வியாபாரம் நல்லதாகும்… இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.
அதே சமயத்தில் இரண்டு பேர் காசு கொடுக்க வேண்டும். ஆனால் கொடுக்காதபடி எதையோ பொய்யாகச் சொல்கின்றார்கள். அப்போது அந்த நேரத்தில்… பொய் சொல்கின்றான்… ஏமாற்றுகின்றான்… இப்படிச் செய்கிறானே…! என்று நாம் வேதனைப்பட்டால் என்ன ஆகிறது…?
அதே எண்ணத்துடன் அடுத்து இன்னொருவருக்குச் சரக்கை எடுத்துக் கொடுப்போம். கொடுத்தால் அந்தப் பொருளிலும் அந்த வேதனை பதிவாகி விடுகின்றது.
1.அவர்களுக்கும் இதே உணர்வு இயக்கப்பட்டு அங்கிருந்தும் பணம் அடுத்து வராது
2.இது போன்று எத்தனையோ நிலைகள் நம்மைத் தொடர்ந்து வருகிறது – நாம் அறியாமலே.
அந்த மாதிரி நேரங்களில் என்ன செய்ய வேண்டும்…?
சரி… அவர்களுக்கு அந்த வருமானம் வரட்டும்… கொடுக்க வேண்டும் என்ற அந்த எண்ணம் அவர்களுக்கு வரட்டும்… என்று நாம் எண்ணிக் கொடுத்தால் நம் உடலில் பதிவாகும் இந்த உணர்வுகள் தொட்டுக் கொடுக்கும் பொருளிலும் படுகின்றது. அவர்களுக்கு அது நல்ல நேரமாக அமைந்து விடுகிறது.
சங்கடப்பட்டு நாம் பொருளைக் கொடுத்தோம் என்றால் அது நமக்கும் கெட்ட நேரமாகிறது… நம் பணம் வருவதில்லை. சங்கட உணர்வு அங்கே இயக்கி அவர்களுக்கும் கெட்ட நேரத்தை உண்டாக்குகிறோம்.
1.ஏனென்றால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்… (உணர்வின் அழுத்தம்)
2.எல்லாமே எதன் உணர்வின் இயக்கமாக அமைகின்றதோ அதன் நிலையாக அது மாறி விடுகிறது.
நம் குழந்தை மீது பாசமாக இருக்கின்றோம். அவனிடமிருந்து தகவல் வரவில்லை என்ன ஆனதோ…? என்று வேதனைப்பட்டால் இதே உணர்வுகள் குழந்தையை இயக்கப்பட்டு அவன் சிந்தனையைச் சிதறும்படி செய்து விடுகின்றது… அவன் மேடு பள்ளம் தெரியாதபடி கீழே விழுந்து விடுவான்.
நாம் சுவாசித்துக் கவர்ந்து வெளிப்படுத்தும் எல்லா உணர்வுகளும் சூரியனுடைய ஈர்ப்புக்குள் தான் வளர்கின்றது… அதே சமயத்தில்
1.நம் உடலுக்குள் எதன் எதன் நிலைகளைப் பதிவாக்குகின்றோமோ
2.பதிவானது நம் ஈர்ப்புக்கு வருகின்றது… உணர்வின் இயக்கமாக நம்மைச் செயல்படுத்துகிறது.
ஒரு செடி எந்தச் சத்தைக் கவர்ந்து கொண்டதோ அதைத்தான் காற்றில் இருந்து கவந்து வளர்கின்றது. அதைப் போன்று தான் நம் உடலுக்குள் எத்தனை வகையான குணங்கள் இருக்கின்றதோ எதை எதை நாம் எண்ணி இயக்குகின்றோமோ அதை இழுத்து வளரத் தொடங்கும்.
இப்படி நம் உடலுக்குள் எண்ணிலடங்காத உணர்வுகள் உண்டு. அதிலே தீமையின் உணர்வுகள் அதிகமாகும் பொழுது நல்ல உணர்வுகளைச் செயலற்றதாக மாறுகிறது.
இதற்கு நாம் என்ன செய்வது…?
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அடிக்கடி பதிவாக்கி… அதைக் கூட்டி நமக்குள் பெருக்கி பழகுதல் வேண்டும். இது கூடினால் அதைத் தணிக்கின்றது.
எந்தக் காரியத்தைச் செய்ய தொடங்கும் முன்பும்…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
2.எல்லாவற்றிலும் அதைக் கலக்கும் ஒரு பழக்கம் வருதல் வேண்டும்.
3.அதற்குத் தான் இந்தப் பயிற்சி.
ஆகவே அருளைப் பெருக்குங்கள்… இருளை அகற்றுங்கள்… மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி பெறுங்கள்.
ஆதி சக்தியாக இருந்தாலும் சப்தரிஷியாக இருந்தாலும் உணவு இல்லாது வாழ (இயக்க) முடியாது
பருப்பைப் பயிராக்கினால் பல பருப்பை அந்த ஒரு பருப்பு பலன் தருகிறது. ஒன்று வளர தன் வளர்ப்பின் பலன் தான் ஒவ்வொன்றும். சூரியன் தான் வளரப் மற்றதை வளர்க்கிறது.
1.ஒவ்வொரு இயற்கையின் ஜீவ வளர்ப்பும் தான் வளர…
2.தன் வளர்ப்பில் பிற வளர்கிறதே தவிர…
2.தன் வளர்ப்பில்லாமல் பிற வளர்ப்பு எச்சக்தியும் வளர்த்திக் காட்ட முடியாது.
தன் உணவைத் தான் எடுத்து தான் வளர்த்து தன் வளர்ப்பில் பிறவற்றையும் வளர்க்கச் செய்கிறது சூரியன். மற்ற மண்டலங்களின் ஈர்ப்பைத் தனக்கு உணவாக எடுத்துத் தான் வளர்ந்து தன் வளர்ச்சியின் பலனை வெளிப்படுத்தி அவ்வளர்ச்சியின் நிலையால் பிறவும் வளர்ந்து ஒன்றின் வளர்ப்பில் படர்கின்ற வளர்ப்பின் செயல் தான் எல்லாமே…!
தான் உட்கொண்டு தன் உணர்வை ஒவ்வொரு உயிரணுவும் ஜீவ சக்தி கொண்டு உணர்வால் எடுக்கும் முறை கொண்ட வழி கொண்ட தொடர் நிலைப்படி தான் சகல நிலைகளும் உள்ளன.
1.மிகவும் சக்தி வாய்ந்த அகில சக்தியான ஆதி சக்தியின் படைப்பிற்கே
2.தன் படைப்பின் உணவை உட்கொண்டு உட்கொண்டு
3.தன் படைப்பின் படைப்பில் பலவற்றையும் படைக்கின்றான்.
அதே போல்
1.உயிரணு தோன்றி..
2.அவ்வுயிரணுவின் உயிர் தோன்றி..
3.உயிர் செயலின் வழித் தோன்றி…
4.உயர் ஞான சக்தியாகி…
5.சகலமும் காணும் சப்தரிஷியானாலும்…
6.“அந்தச் சப்தரிஷியின் உணர்வுக்கும்…!” தன் வளர்ப்பை வளர்க்க உணவு தேவை.
தான் உண்டு… தான் வாழ… பிறரையும் வாழ வைக்க முடியுமேயன்றி “பிறர் வாழ்ந்தால் தான் வாழ முடியும்…!” என்ற நிலை எதற்குமே இல்லை.
நட்சத்திர மண்டலங்களும்… வளர்ந்து விட்ட சகல மண்டலங்களும்… காற்றினில் கலந்துள்ள பல கோடி அமிலங்களின் ஜீவ சத்துக்களும்… நீரும்… ஒளியும்… அனைத்துமே… தன் உணவை உட்கொண்டு தான் வளர்ந்து கொண்டுள்ளளன.
1.உணர்வின் சுழற்சிக்கு உணவு தேவை
2.உணவில்லாமல் எந்த ஜீவத் துடிப்பும் உயிர் வாழ்வதில்லை.
ஜீவனுடன் கூடிய பிம்ப உடலுடைய மனிதன் “ஜீவ சக்தி கொண்ட நீரையும் திடப்பொருள் உணவையும்” உட்கொண்டு வாழ்கின்றான்.
மிருகங்களும் மனிதனை ஒத்த நிலையில் வாழ்கின்றன. தாவரங்களின் நிலை “ஈர்ப்பின் சுவாசமுடன் உணவை” உட்கொண்டு அவை வாழ்கின்றன.
உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்கள் உணர்வின் எண்ண நிலைக்கொப்ப தன் உணர்வு அழியாவண்ணம் நுகர்ந்து
1.தான் வாழ்ந்த காலத்தில் உண்டு வாழ்ந்த ஆகாரங்களின் வாசனையின் உணர்வை ஈர்த்து
2.தன் உணர்வுக்குகந்த உணவைக் காற்றிலிருந்து தன் சுற்றத்தாரின் உணர்வுடன் கலந்து
3.தன் உணவை உட்கொண்டுதான் ஆவி நிலையில் உள்ளவர்களும் வாழ்கின்றனர்.
ஆக..
1.ஜீவனற்ற பொருள்களுக்கு எதுவும் தேவையில்லை.
2.ஆனால் ஜீவனற்ற பொருளும் ஆவியாகக் கரைந்து பிறவற்றுக்கு ஆகாரமாகத்தான் செல்கிறது.
3.உணவில்லாமல் எந்த ஜீவ சக்தியும் வாழ்வதில்லை…
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
“நீ எண்ணிய உணர்வு தான் உன்னை இயக்குகின்றது” என்று சாஸ்திரங்கள் கூறுகின்றது.
எந்த உணர்வினை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ அதன் வழியிலேயே அது நம்மை அழைத்துச் செல்கிறது. இதைத்தான் கீதையிலே “நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்” என்று வியாசகர் தெளிவாகக் கூறியுள்ளார்.
அப்படி என்றால் எண்ணியவுடன்… உடனே எதுவும் நடக்குமா…?
1.எண்ணியவுடனே விஷத்தின் தன்மை இயக்கும்
2.எண்ணியவுடன் உணர்வின் இயக்கம் இருக்கும்.
3.ஏன்..? அந்த உணர்வின் வலு கொண்டு மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… என்னை அறியாது வந்த தீமைகள் அகல வேண்டும் என்று எண்ணி
4.அதை வலுக் கூட்டிச் செய்ய முடியாதா..? செய்ய முடியும்.
ஆனால் நாம் இதைச் செய்கின்றோமா…? யாருமே இதைச் செய்வதில்லை.
ஏனென்றால் ஒரு வித்தை நாம் ஊன்றினால் அது பல வித்துகளாக உருவாகும். இதைப் போலத்தான் அந்த மகரிஷிகளின் உணர்வின் சத்தை உங்கள் உடலுக்குள் படரச் செய்யும் போது தீமைகள் உங்களுக்குள் நாடாத நிலைகளைச் செயல்படுத்தும்.
“சாமி சொன்னார்… ஆனால் நடக்கவில்லை” என்று நீங்கள் திரை மறைவு போட்டீர்கள் என்றால் அதுதான் விளையும்.
1.அப்போது நான் கொடுத்த வித்திற்கு
2.அதற்குண்டான நிலைகளை நீங்கள் செயல்படுத்துவதில்லை என்று தான் பொருள்.
காரணம் வயலிலே நல்ல வித்தைப் போட்டு விட்டால் அதற்கு வேண்டிய தண்ணீரும் அதற்குண்டான உரமும் அதற்குண்டான பாதுகாப்பும் பார்த்தால் தானே அதனுடைய பலனை அது கொடுக்க முடியும்.
நாம் கொண்டு போவது எதுவும் இல்லை. நாம் எதைக் கொண்டு போகப் போகிறோம்…?
1.நம் உடலைக் கொண்டு போகின்றோமா…?
2.அல்லது இந்த உடலால் தேடிய செல்வத்தைக் கொண்டு போகின்றோமா…?
அதே சமயத்தில் நான் எல்லோருக்கும் நன்மை செய்தேன் என்ற நிலையில் பேரும் புகழும் பெறுகின்றோம். ஆனாலும் நன்மை செய்யும் போது வேதனை என்ற உணர்வை வளர்க்கும்போது நோயாகி அப்புறம் என்ன செய்கின்றோம்…?
கடைசியில் நோயாகி நான் இத்தனையும் செய்தேனே என்று பேயாகி யார் மீது பற்று வைத்திருக்கின்றோமோ அந்த உடலுக்குள் போகும். அந்த உடலுக்குள் போய் இதே தீவினையை உருவாக்கிக் கடைசியில் அந்த வேதனைக்குத் தக்கவாறு மனிதனல்லாத உருவைத்தான் உருவாக்கும்.
இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். யாம் உங்களுக்கு ஞாபகப்படுத்தித் தூண்டுகின்றோம்.
ஏனென்றால்… குருநாதர் உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கச் சொன்னார்… உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கும்படி சொன்னார். கோவிலைச் சுத்தப்படுத்தும்படி சொன்னார்.
அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றோம்.
மகரிஷிகள் நம் அருகிலே இருந்தாலும் அவரை அணுகவிடாது தடுப்பது எது…?
தியானத்தில் அமர்ந்து குருநாதரால் உபதேசிக்கப்படும் உபதேசத்தைக் கேட்பதற்கு முன் ஈஸ்வரபட்டரின் உருவமும் அவர் ஆசியும் கிடைத்தது.
ஒரு பக்கம் அவரும் மற்றொரு பக்கமும் நானும் அமர்ந்துள்ள நிலையில் அவருடன் தொடர்பு கொண்டதின் சக்தியினால் அவரிடமிருந்து நான் பெற்ற அருள் மொழிகள்… அவர் உணர்த்திய உண்மைகள் எல்லாம் தியானத்தின் மூலம் அவரிடமும் ஞானகுருவிடமும் தொடர்பு கொண்டிருந்தாலும்
1.அவர் உணர்த்தும் உபதேசங்களைக் கேட்டுக் கொண்டிருந்தாலும்
2.அவர் உபதேசித்த செயல் வடிவை என்னால் செயலில் காண முற்பட்டும் முன்னேறும் நிலை பெறவில்லை.
அவரிடம் தொடர்பு கொண்டவுடன்… என் எண்ணத்தில் “சகலத்தையும் அறியக்கூடிய உணர்வு எண்ணத் துடிப்புடன்” ஈஸ்வரபட்டரிடம் ஆசி கேட்டேன்.
உடனே தன் கையால் வாயை மூடிக் கொண்டார்…! எனக்கும் அவருக்கும் மத்தியில் மிகப் பெரிய நீளமான “திரைச் சீலை” ஓடியது.
திரைச் சிலைக்கு அப்பக்கம் மாமகரிஷி ஈஸ்வரபட்டரும் இந்தப் பக்கம் நானும் அமர்ந்துள்ள நிலையில் திரைச் சீலையின் இப்பக்கம் இருந்தே அவர் அமர்ந்திருப்பதுவும் பேசுவதும் கேட்கின்றது.
1.ஆனால் எனக்கும் அவருக்கும் மத்தியில் திரை…!
2.இந்தத் திரைக்குப் பொருள் என்ன…? என்று வினா எழுப்புகின்றார் குருநாதர்.
உடனே என் எண்ணத்தில் நான் இன்னும் பயந்த நிலையில் தான் இருக்கின்றேன்…. அவர் உணர்த்துவதை எடுத்துச் சொல்லும் பக்குவம் ஒன்று தான் உள்ளது.
அவர் அருளும் ஞானத்தின் வழி செயல் அடைய முடியாததற்கு இந்தப் பயம் தான் திரையாக உள்ளதா…? என்று எண்ணியவுடன் தலையை மட்டும் அவர் ஆட்டுவதை உணர்ந்தேன்.
பிறகு தியானத்தில் ஒரு நொடிப் பொழுதில் என் நினைவு இவ்வுலகக் குடும்ப எண்ணங்களுடன் மோதுண்டது.
1.என் உறவினரில் ஒருவர் அறியாது பெருமை கொள்ளும் செயலின் எண்ணம் வந்தது
2.பிறகு பிறரிடம் நெருங்கிய அந்த உறவினரின் குறையை நான் எண்ணிப் பார்க்கும் பொழுது
3.இதை எப்படியும் குருநாதர் நிறைவுபடுத்தித் தந்து விடுவார்… என்ற எண்ண மோதலில்
4.குருவிடம் அப்பொழுது அதை எண்ணித் தியானிக்கவும் செய்தேன்.
இப்படி வரிசையாக எண்ணங்கள் சென்ற பின் இப்பொழுது உனக்கும் எனக்கும் மத்தியில் உள்ள திரை எதற்கென்று புரிந்ததா…? என்று குருநாதர் கேட்டார்.
உன் குடும்பச் சுழற்சியில் எந்த ஒரு நிலைக்கும்…
1.எண்ணத்தின் ஈர்ப்பை அவர்களிடம் செலுத்தி
2.அவர்களுடனே ஒன்றி
3.அவர்களுக்காக வேண்டுகிறாய்.
பந்தம் பாசம் அன்பு பரிவு அனைத்தும் வேண்டியது தான்.
1.“பற்றற்ற நிலை…” என்ற உபதேசத்தை என்னிடம் பெற்றவரும் நீ தான்.
2.ஆனால் உன் ஞானத்தால் பற்றற்ற நிலையின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மற்ற உறவினர்களைக் காட்டிலும் இரத்தத் தொடர்புடைய சொந்தங்களின் ஈர்ப்பு அதிவிரைவில் நம்மை வந்து சாடும்.
தியானத்தால் நல்வழிப்பட்டு ஞானத்தின் பால் நீ செல்ல வேண்டிய நிலையில்… பந்த பாசங்களின் உணர்வு எண்ணத்தை உன்னுள் அவர்களின் நிலையையெல்லாம் ஏற்றிக் கொண்டே வருகின்றாய்.
1.அவர்களுக்காக அதே சுழற்சி வாழ்க்கையிலேயே இருந்து
2.அவ்வெண்ணத்துடன் உன் எண்ணத்தைக் கலக்கவிடுவதனால்
3.உன் ஞான வளர்ச்சியும் வளர முடியாது.
பந்தபாசங்களை எல்லாம் நீ ஒதுக்கிவிட்டு ஞான வழிக்கு வா…! என்று உணர்த்தவில்லை.
அவர்களிடம் உள்ள குறையையும் நிறையையும் உன் எண்ணத்துடன் நீ ஏற்றிக் கொள்ள வேண்டியதில்லை.
1.அவர்களின் நிலைக்காக அவர்கள் எண்ணச் செயல் மோதும் பொழுதெல்லாம்
2.அவர்களுக்கு நல் உணர்வு தா ஈஸ்வரா…
3.அவர்கள் நிலை உயரட்டும்…! என்ற எண்ணத்துடன் இறைசக்தியின் அலையைச் செலுத்த வேண்டும்.
ஆகவே அவர்கள் உணர்வலையுடன் நீ கலக்காமல் நீ பெற்ற நற்சக்தியின் அலையைக் கொண்டு அவர்கள் உயர உன் எண்ணத்தைச் செலுத்திடல் வேண்டும்.
1.பிறரின் எண்ணச் சுழற்சியில் “நீ சிக்காமல்…”
2.உன் எண்ணச் சக்தியை இறை சக்தியின் செயலாக
3.அவர்களிடம் செலுத்திவிடு…! என்று உபதேசம் அளித்தார் ஈஸ்வரபட்டர்.
இப்பொழுது தெரிகிறதா… உனக்கும் எனக்கும் உள்ள திரை எதற்கென்று…? என்று மறுபடியும் வினா எழுப்பினார் குருநாதர்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மகரிஷிகள் வெளிப்படுத்திய ஞானப் பொக்கிஷங்களை எல்லோருக்கும் பங்கிடுவோம்
உதாரணமாக ஒரு மனிதன் கடுமையான நோய்வாய்ப்பட்டிருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம்.
அதை மற்றவர்கள் வந்து நம்மிடம் சொல்லப்படும் பொழுது பாசத்துடன் அதனைக் கேட்டறிவோம். அந்த மனிதருடன் நாம் பாசத்துடன் பழகினோம். நல்ல மனிதர்… இப்பொழுது நோய் வந்து அவஸ்தைப்படுகின்றார்…! என்று எண்ணுவோம்.
பார்த்து அந்த விவரங்களைக் கேட்டறிந்தபின் நாம் என்ன செய்வோம்…?.
அடுத்தடுத்து அடுத்தடுத்து மற்ற நண்பர்களிடத்திலும் இதைச் சொல்வோம். அப்படிச் சொல்லப்படும் பொழுது அவர்களும் அந்த வேதனைப்பட்டு வருத்தப்படும் நிலைகள் வருகின்றது.
இது எப்படி ஒருவருக்கொருவர் இயக்குகிறதோ… அதைப் போலத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் தொடர்ந்து இங்கே கொடுக்கும் இந்த உபதேசத்தின் வாயிலாக
1.இதை நீங்கள் கேட்கக்கூடிய சந்தர்ப்பத்தை எடுத்து
2.“மறைந்த ஞானப் பொக்கிஷத்தை” மீண்டும் யாம் (ஞானகுரு) நினைவுபடுத்தி
3.அந்த அலைகள இங்கே பெருக்கிக் கொண்டே வருகின்றோம்.
4.உயர்ந்த ஞானத்தின் உணர்வலைகளை “நீ ஒலி பரப்பு…” என்று குருநாதர் சொன்னதால் தான் இதைச் செய்து கொண்டிருக்கின்றோம்
அது இங்கே பரவியிருப்பதனால் இதை நீங்கள் படிக்கும்போது ஒவ்வொரு அர்த்தமாக உங்களுக்குள் விளங்கத் தொடங்கும்.
அதை மற்ற நண்பரிடத்தில்
1.“சாமி இப்படிச் சொன்னார்…” என்று சொன்னால் இலேசாகப் பதிவாகும்…
2.இந்த உணர்வுகளை அவர்களும் நுகர நேரும்.
3.இப்படிச் சிறுகச் சிறுக இந்த மெய் உணர்வுகள் பரவும்.
ஆன்மீகத்தின் நிலைகளில் அந்த ஞானத்தைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்தால் அவர்களுக்கு இந்த உபதேசத்தின் உணர்வுகள் இது படும்.
நீங்கள் என்னுடைய உபதேசத்தைப் படிக்கின்றீர்கள். இதை நீங்கள் மற்றவர்களிடம் சொல்லப்படும் பொழுது இந்த உணர்வுகள் பதிந்த பின் யாம் எதையெல்லாம் வெளியிட்டோமோ அதை அவர்கள் நுகர நேருகின்றது.
ஏனென்றால்… இந்தப் பதிவு (RECORD) உங்களிடம் பண்ணியிருக்கின்றேன்.
ஒரு டேப்பில் பதிவு செய்த பின்…
1.அடுத்தடுத்து அடுத்த டேப்பில் பதிவு செய்யப்படும் பொழுது எப்படி நாம் மாற்றிக் கொண்டே போகின்றோமோ
2.இதைப் போலத் தான் உங்களுக்குள் பதிவான நிலை மற்றவர்களுக்குச் சொல்லப்படும் பொழுது அது பதிவாகின்றது.
அப்படிப் பதிவான பின் அந்த அலைகளை மீண்டும் அவர்கள் நுகர்ந்து அதைப் பெற முடியும்.
டேப்பில் பதிவு செய்வது ஜீவனற்றது. ஆனால்…
1.யாம் உபதேசம் செய்த நிலைகளை எடுத்துச் சொல்லப்படும் பொழுது
2.“ஓ” என்று ஜீவ அணுவாகி மீண்டும் அதனை வளர்க்கும்… வளர்த்துக் கொண்டிருக்கும் நிலைகளாகச் செயல்படும்.
இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் காற்று மண்டலத்தில் மெய் ஞானிகள் உணர்வுகள் பரவும்.
1.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அந்த மகரிஷிகளால் வெளிப்பட்ட அந்த மெய் ஞானப் பொக்கிஷங்களை
2.எல்லோருக்கும் பங்கிடலாம்… எல்லோரையும் பெறச் செய்ய முடியும்.
இது என் ஒருவனால் முடியாது. நாம் அனைவரும் சேர்ந்து ஒருங்கிணைந்தால் தான் சாத்தியமாகும்.
உங்களால் நிச்சயம் முடியும்.
இந்த மனித வாழ்க்கையில் நாம் எதிலே “முந்திக் கொள்ள வேண்டும்…?”
உங்கள் வாழ்க்கையில் தொழிலிலோ மற்றதிலோ…
1.எப்போதெல்லாம் சங்கடமோ கோபமோ ஆத்திரமோ சலிப்போ வெறுப்போ வருகிறதோ
2.அந்த உணர்வுகளை அடக்குவதற்கு நீங்கள் “முந்திக் கொள்ள வேண்டும்…”
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்குதல் வேண்டும்.
பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
1.எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
2.எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும்
4.எங்கள் கண்களில் உள்ள கருமணிகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
5.நரம்பு மண்டலங்கள் முழுவதும் படர வேண்டும்… அதை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும்
6.எங்கள் எலும்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
7.எலும்புக்குள் ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
8.இது போன்று வரிசையாக எண்ணித் தினமும் ஒரு இன்ஜெக்ஷன் செய்வது போன்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.
மருத்துவர்கள் எவ்வாறு ஊசி மூலம் மருந்தினை இரத்தத்தில் செலுத்தி அந்த உடலில் இருக்கக்கூடிய குறைபாடுகளை நீக்குகின்றனரோ அது போன்று
1.“உங்கள் கண்ணின் நினைவு கொண்டு”
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இரத்த நாளங்களில் இஞ்செக்ஷன் செய்வது போல் செலுத்தி
3.அதை வலுவாக்கிக் கொள்ள முடியும்.
ஏனென்றால் ஏற்கனவே நாம் எதைக் கண்களால் உற்றுப் பார்த்தோமோ அது தான் இரத்தத்திலே ஜீவ அணுக்களாக மாறுகின்றது.
அதே போன்று இதே கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இரத்தத்தில் எளிதில் பாய்ச்ச முடியும். அவ்வாறு பாய்ச்சி இரத்தத்தில் துருவ நட்சத்திரத்தின் அணுக்களாக மாற்றிக் கொள்ள முடியும்.
உதாரணமாக ஒரு வேகத்தின் உணர்வைக் (TENSION) கூட்டிவிட்டால் அந்த வேக உணர்வே இயக்ச்க சக்தியாக மாறிவிடுகிறது. உணர்ச்சி வசப்படும் நிலைகளை எல்லாம் சமப்படுத்துவதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இரத்தத்தில் வலுவாக்கி அதை நாம் நமக்குகந்ததாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
1.ஆக நாம் அதை அடக்க வேண்டுமே தவிர
2.அதன் வழியில் அதன் இயக்கமாகச் சென்று விடக்கூடாது.
சந்தர்ப்பத்தில் நாம் நுகரும் வேதனையோ வெறுப்போ சலிப்போ சஞ்சலமோ அவைகள் நம்மை ஆட்டிப் படைக்கின்றது. ஆனால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நாம் கண்ணின் நினைவு கொண்டு உள் செலுத்தி அடக்கிப் பழகுதல் வேண்டும். பயிற்சியாக இதை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.
சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை…! வாழ்க்கையில் வரும் கஷ்டங்களை மறக்கத் துருவ நட்சத்திரத்தை எண்ணிச் செயல்பட்டோம் என்றால் இந்தக் கணக்குக் கூடினால் துருவ நட்சத்திரத்துடன் நாம் இணைந்து விடுகின்றோம்.
இல்லை… இப்படிப் பேசினார்கள்… அப்படிச் சொன்னார்கள்…! என்று பிறருடைய உணர்வுகளை வளர்த்துக் கொண்டே வந்தால் மீண்டும் பிறவிக்குத் தான் வருகின்றோம்.
வேதனை அதிகமானால் நோய் அதிகமாகிறது. நோயாகி உடலை விட்டு சென்ற பின் விஷத்தன்மை கொண்ட உடலுக்கே உயிர் நம்மை அழைத்துச் சென்று விடுகிறது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து நீங்கள் விடுபட்டு நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் வாழ்க்கை வாழுங்கள்.
படைப்பின் படைப்பைக் காட்டிலும்… உயர் படைப்பாவது தான் ஆதிசக்தியின் சக்தி நிலை
சூரியனின் ஒளி அலையின் தொடர்பின் பிம்ப நிலை கொண்டு சிவனாகவும் ஈர்ப்பு நிலை கொண்டு சக்தியாகவும் வளர்ப்பின் படைப்பைக் கொண்டு உருவான உலக சக்தியே சூரியனைக் காட்டிலும் சக்தி வாய்ந்த நிலை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய “சக்தி பூமி இது…!”
இக்கலியின் மாற்றத்திற்குப் பிறகு…
1.இப்பூமியில் இன்றுள்ள மனித ஆத்மாக்களின் நிலை மாறி உருவங்கள் மாறு கொண்டு
2.பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பூமியின் ஈர்ப்பு ஓட்ட சக்தி
3.சூரியனைக் காட்டிலும் துரிதம் கொள்ளக்கூடிய நிலை கொள்ளப் போகின்றது.
உருவத்திலே சூரியனை விடச் சிறியதாக இருக்கும் காலத்திலேயே இதன் ஈர்ப்பு சக்தியினால் இதன் ஓட்ட நிலை துரிதம் கொண்டு… இன்றெப்படி சூரியனைச் சுற்றி சூரியக் குடும்பமாகச் சூரியனைச் சேர்த்து நாற்பத்தி எட்டு மண்டலம் உள்ளதுவோ அதைப் போன்று “பூமியின் ஈர்ப்பில்…” சூரியனும் சுழலப் போகின்றது…!
சூரியனை மையம் கொண்டு இன்று சுழலும் நிலையே பூமியை மையம் கொண்டு சுழலக்கூடிய நிலை உருவாகப் போகின்றது.
உயர் படைப்பின் படைப்பில் பலவுண்டு…!
1.அப்படைப்பிலேயே வளர்ச்சி கொள்ளும் நிலை கொண்டு
2.படைப்பின் படைப்பைக் காட்டிலும் உயர் படைப்பாவது தான் சக்தி நிலையே அன்றி
3.படைப்பின் குறுகும் நிலையல்ல உயர் சக்தியின் நிலை.
இப்பூமியில் ஞானத்தின் சக்தி கொண்ட மனிதக்கரு வளர்ந்துய்யும் நிலை கொண்டு… சக்தியின் நிலையினால் மனிதனின் ஞான வலுவால் ஆத்ம பலம் கொள்ளும் நிலை பெற்ற நம்மைப் படைத்த அவ்வாதி சக்தியின் படைப்பின் வலுக் கொண்ட சப்தரிஷிகளின் படைப்புடன் மனித ஆத்மாவின் ஆத்ம ஞான வளர்ச்சியினால் பூமியின் நிலை வளர்ந்தது.
பூமியின் ஈர்ப்புச் சுற்றலின் ஓட்டம் துரிதம் கொண்டு சுழலும் தன்மையில் பூமியின் ஈர்ப்புடன் வாழக்கூடிய சக்தி நிலை மனித உரு நிலைக்கு ஒப்பாமலும்
1.பூமியை மையம் கொண்டு சுழலும் பூமியின் ஈர்ப்புக்கு வரும் பிறிதொரு மண்டலத்தில் (சந்திரன்)
2.மனிதக் கரு உருவம் வளரக்கூடிய நிலைக்கு இன்றெடுக்கும் ஆத்ம சக்தியின் பலத்தால் “மனித இனம் வளரும்…!”
நொடிக்கு நொடி மாறிக் கொண்டே சுழல்கின்ற அனைத்து நிலைகளிலும் இன்றுள்ள மனித ஆத்ம பிம்ப நிலைக்கொப்ப உருவம் தான் இருக்குமா…! என்றால் அதுவுமில்லை.
1.ஒன்றை ஒத்த நிலையில்… ஒன்றிலிருந்து மாறுபடும் உணர்வின் எண்ணமானது
2.ஆவி நிலை கொண்டு மீண்டும் மீண்டும் ஆவியாகிப் பிம்பமாகி ஆவியாகிப் பிம்பமாகும் தருணத்தில்
3.எந்த ஒரு குண அமிலத் தன்மையும் மாறிக் கொண்டேதான் இருக்கும்.
நம் பூமியின் இயற்கைத் தன்மையில் கனி வளங்களின் ஆரம்பக் குண அமில வளர்ப்பில் வளர்ந்த தாவரங்களின் வளர்ச்சி நிலையில் மனிதக் கரு வளர்ச்சியும் மற்ற ஜீவராசிகளின் நிலையும் பூமியின் அமிலப் படைப்புக்கந்த இன வளர்ச்சியின் நிலைத் தொடரே பெற்றோம்.
நம் பூமியின் தாதுப் பொருட்களில் அதிகமாக உள்ளது எது…? இரும்பு தான் மற்ற தாதுப் பொருட்களைக் காட்டிலும் இப்பூமியில் அதிகம்.
ஆனால் இப்பூமியின் ஈர்ப்பு சுழற்சி வேகம் அதிகம் கொள்ளும் நிலையில்… பூமியின் ஈர்ப்புச் சுழற்சி துரித ஓட்டத்தினால்… பூமி இழுத்து வெளிக்கக்கும் சுவாச அலையினால்… பூமியின் ஈர்ப்பிற்கு மற்ற மண்டலங்களிலிருந்து வரக்கூடிய அமில குணத்தின் நிலையைக் கொண்டு…
1.இன்று இரும்பையே அதிகமாகக் கொண்டுள்ள இப்பூமியின் கனி வளத்தன்மையே
2.இரும்பு உள்ள நிலைக்கொப்ப தங்கம் வளரப் போகிறது… இது உண்மை..!
3.சூரியனின் நிலத் தன்மையில் தங்கத்தைக் காட்டிலும் சக்தி கொண்ட தாதுப் பொருள் உண்டு.
இரும்பைக் காட்டிலும் தங்கத்தின் குணம் உயர்ந்ததா…?
இரும்பைக் காட்டிலும் தங்கம் எத்தன்மைக்கும் இளகி வரும் குண நிலை கொண்டது. தங்கத்தை நுண்ணிய இழைகளாகவும் உருவாக்க முடியும்.
இரும்பை அதி உஷ்ணப்படுத்தித்தான் அதற்கு உருவங்கள் அமைக்க முடியும். மிகவும் உறுதி கொண்ட திடப்பொருள் இரும்பு. ஆனால் இளகும் தாதுப் பொருள் தங்கம்.
இன்று பூமியின் இரும்பின் குண அமிலம் நிறைந்த தாதுப் பொருள் உள்ள நிலைக்கொப்ப இப்பூமியில் வளரும் ஜீவன்களின் அமில வளர்ச்சியும் அதன் குணத்திற்கொப்ப இருக்கிறது.
இன்று ஓடும் பூமியின் சுழற்சி ஓட்டத்தின் வேகம் கொள்ளும் நிலைக்கொப்ப பூமியின் தாதுப் பொருட்களின் நிலையும் மாறுகொள்ளும்.
இரும்பெல்லாம் தங்கமாகும் நிலை உருவாகப் போகிறது. இப்பூமியில் இனி வரப் போகும் கல்கி காலத்தில் எல்லா நிலைகளும் ஒவ்வொரு நொடிக்கும் மாறிக் கொண்டு தான் உள்ளன.
1.ஆவி பிம்பமாகி..
2.பிம்பம் ஆவியாகிச் சுழலும் நிலைக்கொப்ப “உருண்டு வளரும் நாம்”
3.சுழற்சியுடன் ஒன்றிய எண்ணத்தின் வழித் தொடரில் இருந்தோமானால்
4.சுழற்சியுடன் சுழன்று கொண்டே ஆவியாகிப் பிம்பமாகி மீண்டும் ஆவியாகும் அதே சுழற்சியிலிருந்து பிம்பமான
5.பல கோடி கோடி ஆண்டுகளுக்குப் பலவற்றையும் வளர்க்கும் படைப்பாண்டவன் ஆகலாம்…
எதன் வழியில்..?
இவ்வெண்ணத்தை ஞானமாக்கி… “ஞானத்தால் ஜீவ ஆத்ம பலம் உய்யும் வழித் தொடர் கொண்டு…!”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இப்பொழுது யாம் (ஞானகுரு) தெளிவாகச் சொல்லி வருகின்றோம். முந்தி உபதேசம் கேட்டவர்களுக்கெல்லாம் (சுமார் 30-40 வருடங்களுக்கு முன்) தெரியும். உபதேசம் எக்ஸ்பிரஸ் மாதிரி திடு…திடு… என்று ஓடும்.
யாம் உபதேசம் செய்யும் போது அர்த்தம் ஆன மாதிரி இருக்கும். உபதேசம் ரொம்ப அற்புதமாக இருந்தது என்பார்கள். முடிந்த பிறகு கடைசியிலே…
1.“சாமி உபதேசம் செய்தது உங்களுக்கு ஏதாவது அர்த்தமாகியதா..?” என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்வார்கள்.
2.ஏனென்றால் ஆரம்பத்தில் அதிவேகமாக உபதசத்தை வெளிப்படுத்தினேன்.
இப்பொழுது இருப்பவர்களுக்கு ஒவ்வொன்றையும் ஒரு உணர்வின் இயக்கம் எவ்வாறு என்பதை நிறுத்திச் சொல்கின்றேன், விளக்கமாகக் கொடுக்கின்றேன்.
காரணம் அன்று எடுத்துக் கொண்ட நிலைகள் குருநாதர் கொடுத்த பின்பு இந்த மெய் உணர்வுகளை எடுத்து மீண்டும் இந்த உடலில் வளர்த்து இந்த உணர்வின் உணர்வலைகளை இங்கே பரப்பச் செய்தது.
1.புத்தக வடிவிலும் மற்ற நோட்டுகளிலும் நீங்கள் எப்படி எழுதி வைத்துக் கொள்கின்றீர்களோ
2.அதே மாதிரி எடுத்து அந்த அலைகளை வெளியிலே பரப்பி வைத்துக் கொள்கின்றேன்… கேட்பவர்களுக்குள்ளும் பதிவாகும்.
இப்பொழுது யாம் பேசியதை ஒரு டேப்பில் பதிவு செய்து கொண்ட பின்
1.குறைவான வேகத்தில் போட்டால் சப்தம்… தொண்டை கனமாகத் தெரியும்
2.அதி வேகமாக டேப்பில் ஓடச் செய்தால் “கீச்..பூச்.. கீச்..பூச்..” என்று தான் கேட்கும்.
அதே மாதிரித்தான் முதலில் வேகமாகச் சொல்லப்படும் பொழுது “கீச்..பூச்… கீச்..பூச்…” மாதிரித்தான் இருக்கும். வேகமாக இருக்கும், அர்த்தம் புரியாது.
அன்று ஆரம்பத்தில் எமக்குக் கிடைத்த சக்தியெல்லாம் ஒருவர் கேட்கிறார் என்றால் கேள்வி கேட்கச் சொல்லி உடனே எல்லாவற்றையும் உருவாக்கி அவர்களுக்குள் பதிவு செய்து அந்த அலைகளை அப்படியே வெளியில் பரப்பச் செய்வேன்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கேட்பார்கள். உடனே அதை எடுத்து குருநாதர் எனக்குள் பதிவு செய்ததை மீண்டும் எடுத்து… நினைவுபடுத்தி… அந்த அலைகளை இங்கே பரப்பிக் கொள்வேன்.
அப்பொழுது…
1.அந்த அலைகளை இங்கே பரப்பப்படும் பொழுது
2.எதை எதை எல்லாம் உங்களுக்குத் திருப்பிச் சொல்ல வேண்டுமோ
3.இப்பொழுது அதையெல்லாம் இப்பொழுது எடுத்துச் சொல்லிக் கொண்டே வருகின்றேன்.
முந்திச் சொன்னதைத்தான் இப்பொழுது சொல்லிக் கொண்டு வருகின்றேன். ஆனால்… முந்தி அர்த்தமாகாது… இப்பொழுது மீண்டும் அதைத் தெளிவாக எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.
ஆனால் அதே சமயத்தில் பதிவு செய்ததை உங்களுக்குள் பதிவானதை… “முந்தி அர்த்தமாகவில்லை…” என்றாலும்
1.சில நேரங்களில் சில சந்தர்ப்பங்களில் நீங்கள் எண்ணும்போது அதை ஓரளவிற்கு இப்பொழுது அர்த்தமாக்கிக் கொண்டு வருகின்றோம்.
2.அந்தச் சக்திகளையும் பெறக் கூடிய தகுதி பெறுகின்றீர்கள்.
அதே சமயத்தில் உங்களுக்குள் பதிவு செய்ததை நண்பர்கள் மத்தியில் நீங்கள் சொல்லப்படும் பொழுதும் அவர்களுக்குள்ளும் பதிவாகின்றது. பதிவாகி விட்டால் யாம் பேசிய இந்த உணர்வலைகளை அவர்களும் நுகர்ந்து அந்தச் சக்திகளைப் பெறும் தகுதியைப் பெறுகின்றார்கள்.
அகஸ்தியனைப் போன்ற மெய் ஞானியாக நீங்கள் ஆக வேண்டும் என்று தவமிருப்பதே “எனது வேலை”
1.பேரண்டத்தில் பிற மண்டலங்களிலிருந்து வருவதை எப்படி நட்சத்திரங்கள் தன் கதிரியக்கப் பொறிகளால் மற்றதை அடக்கித் தன் பால்வெளி மண்டலங்களாக மாற்றி அது தனக்குள் எப்படிக் கவர்ந்து கொள்கின்றது…?
2.நட்சத்திரங்கள் அவ்வாறு வெளிப்படுத்தும் உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் படர்ந்து வரப்படும் பொழுது இரண்டு நட்சத்திரங்கள் எதிர்மறையாகத் தாக்கப்படும் பொழுது பூமிக்குள் மின்னல்கள் எவ்வாறு மின்னுகின்றது…?
3.இந்த மின்னல் மற்ற தாவர இனங்களில் இது கலந்திருந்தால் அந்தச் செடியை எப்படித் தாக்குகின்றது…?
4.அதே மின்னலின் உணர்வுகள் பூமிக்குள் ஊடுருவி நடு மையம் எவ்வாறு அடைகின்றது…?
5.இதையெல்லாம் கண்டுணர்ந்தவன் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன்.
இப்பொழுது மனிதன் தன் கண்டுபிடிப்பால் இத்தகைய மின்னலின் ஒளிக் கதிர்கள் இந்த மண்ணில் மறைந்திருப்பதை விஞ்ஞான அறிவு கொண்டு அதிலுள்ள கதிரியக்கப் பொறிகளை… அணுவைப் பிளந்து அணுவைக் கூட்டி அணுகுண்டாக அதை உருவாக்கி அதை வெடிக்கச் செய்கின்றான்.
வெடிக்கச் செய்யப்படும் போது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அந்த அலைகள் மற்றொன்றோடு மோதப்படும் பொழுது இந்தக் கல்லுக்குள் இருக்கும் அதே கதிரியக்கப்பொறியுடன் இணையும் போது அந்தக் கல்லையே ஆவியாக மாற்றிவிடுகின்றது.
உலோகங்கள் எதுவானாலும் அதற்குள் இருக்கும் கதிரியக்கப் பொறியுடன் மோதப்படும் பொழுது தங்கமோ இரும்போ மற்ற உலோகங்கள் அனைத்தும் ஆவியாக மாறுகின்றது.
மாறி ஒரு புயலைப் போலச் சுழன்று கொண்டு அதனின் உணர்வுகள் எதிலே சேர்கின்றதோ தன் இனத்தின் தன்மையைப் பெருக்கி அது தன் வளர்ச்சியிலே கொண்டு போகின்றது.
அதைப் போன்று
1.அன்று அகஸ்தியன் விஷத்தின் தன்மையை… அணுவின் தன்மையைத் தனக்குள் அடக்கி
2.இருளைப் பிளந்து அதிலே நஞ்சின் தன்மையை நீக்கிவிட்டு நச்சுத் தன்மை அற்றதைத் தனக்குள் சேர்க்கின்றான்.
விஞ்ஞானியோ கதிரியக்கப்பொறிகள் தனக்குள் வந்தாலும் அதை வேகமாகச் செலுத்தச் செய்து இயந்திரங்களைத் துரித வேகத்தில் இயக்கும்படிச் செய்கின்றான்.
1.அதிலே வரும் கதிரியக்கப் பொறிகளை அடக்க ஹைட்ரஜனைக் கலந்து (D2)
2.அதனுடைய வீரியத் தன்மையைக் குறைக்கும்படிச் செய்து இயந்திரங்களை இயக்குகின்றான் விஞ்ஞானி.
மெய் ஞானியான அகஸ்தியனோ தன் (தாய் கருவில்) சந்தர்ப்பத்தால் கிடைத்த இந்த உணர்வினை
1.27 நட்சத்திரங்கள் ஒளிக் கதிர்களாக வீசிய அந்த இயக்கச் சக்திகளை
2.தன் பார்வையால் அதனின் செயலாக்கத்தை மாற்றித் தன் உடலுக்குள் கதிரியக்கங்களாக மாற்றினான்.
அதனின் துணை கொண்டுதான் இந்தப் பூமியின் ஈர்ப்பின் நிலையும் அதனின் வளர்ச்சியின் தன்மையையும் தெளிவாக்கினான்.
மனிதன் இந்த உடலைவிட்டு அகன்றபின்
1.இதிலே உள்ள நஞ்சின் தன்மையை ஒளிக் கதிராக மாற்றும் நிலை எது…? என்று
2.தன்னில் தான் முதன் முதலில் கண்டுணர்ந்தவன்தான் அகஸ்தியன்.
துருவத்திலிருந்து நம் பூமி கவர்வதை நேரடியாகவே அதனின் விஷத்தை ஒடுக்கினான். ஒளியின் கதிராக மாற்றும் உணர்வின் உடலாக மாற்றினான். அகஸ்தியன் இந்த உடலை விட்டுச் சென்றபின் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக ஆனான்.
அகஸ்தியன் தன் வலிமையான எண்ணத்தால் கூர்மையான நிலைகள் கொண்டு விண்ணிலே பார்க்கப்படும் பொழுது தன் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் ஒளிக் கதிராக மாற்றினான்.
அகஸ்தியன் பெற்ற நிலைகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார்.
1.நான் எனது வலிமை கொண்டு உனக்கு இந்தச் சக்தியைக் கொடுத்து இதைப் பெறச் செய்கிறேன்
2.பல ஆயிரம் மடங்கு வலிமை கொண்டு எனக்குள் பெற்ற சக்தியை உனக்குள் கொடுத்து அதை எடுக்கச் செய்கின்றேன்.
3.நீ இதன் வழியில் இதைப் பெற்றால் உனக்குள் இதனின் நிலைகள் வரும்
4.ஆனாலும் நீ ஒருவனே இந்தப் பலனைப் பெற முடிகின்றது.
ஆகவே பலரும் இந்தப் பலனைப் பெற வேண்டும் என்றால் நீ இதை எவ்வாறு செய்ய வேண்டும்…? என்று உபதேசித்தருளினார்.
ஒவ்வொரு உடல்களிலேயும் நீ கண்ட உணர்வின் அந்த ஞான வித்தை ஊன்று. மெய் உணர்வுகள் அங்கே பெருகி “விண்ணுலக ஆற்றலை அவர்கள் பெறும்படி நீ செய்.
மக்கள் மத்தியிலே பதியச் செய்யப்படும் பொழுது அவர்கள் எண்ணங்களிலும் இதைப் பெற ஏதுவாகும்.
அவர்களுக்குள் பதிந்த நிலைகள் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நிலையில்…
1.நீ எடுத்துக் கொண்ட சக்திகள் அனைத்தும்
2.அவர்கள் பெற வேண்டும் என்று “நீ தவம் இருக்க வேண்டும்”
நீ துருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானிக்கின்றாய்… உன்னிலே விளைய வைத்தாய். ஒவ்வொரு உடலிலும் அது இணைந்து கொண்ட பின்… அவர்கள் அந்த வழியில் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நீ தவம் இரு…! என்றார் குருநாதர்.
ஆகவே
1.குருநாதர் இட்ட கட்டளைப்படி… அகஸ்தியனைப் போன்ற மெய் ஞானியாக
2.நீங்கள் ஒவ்வொருவரும் ஆக வேண்டும் என்று தவமிருப்பதே எனது வேலை (ஞானகுரு).
மாதா பிதா குரு…!
இவ்வுலகம் தோன்றி உருளும் உணர்வில் ஒவ்வொரு அணுவும் தோன்றி வளரவும் உணர்வின் ஈர்ப்பு அமிலம் கொண்டே உருவாகி உணர்வாகி வந்த நிலையை நம் சித்தர்கள் காட்டிய வழியில் இராமாவதாரத்தில்
1.தந்தையின் குணத்தை உயர்த்தியும்
2.தந்தைக்குப் பின் தான் தாயின் நிலை காட்டப்பட்டுள்ளது.
3.அதே போல் உலகின் தெய்வமான சிவசக்தி என்ற சிவனை முதலிலும்
4.சக்தியின் நிலையைப் பிறகும் தான் உணர்த்தினர்.
ஆனால் நாம் வணங்கும் தெய்வத்தில் தாயை முதலிலும் தந்தையைப் பிறகும் தான் உணர்த்திக் காட்டி வணங்குகிறோம். இதன் உண்மை என்ன…?
எல்லாமே ஆதிசக்தியின் படைப்புத்தான்…!
1.ஆதிசக்தியின் படைப்பில் – “ஆவியான சக்தி நிலை”
2.திடம் பெறும் நிலைக்குச் “சிவன்” என்ற நாமத்தைச் சூட்டி
3.திடப்பட்ட பிம்ப நிலையின் ஈர்ப்புத் துடிப்பிற்குச் “சக்தி” என்ற பெண்ணின் நாமத்தைச் சூட்டினர்.
சிவ பிம்ப ஈர்ப்பு சக்தி நிலையை நம் சித்தர்களினால் ஆவியான அமிலம் திடம் கொள்வதை சிவன் என்ற நாமம் சூட்டி அதன் ஈர்ப்பு நிலைக்குச் சக்தி என்ற பெண்பாலை உணர்த்தினார்கள்.
அவ்வீர்ப்பின் சுழற்சி அலைத் தொடர் வளர்ப்பின் நிலையில் வழி கொண்ட ஜீவ சக்தியின் படைப்பில் “தாய் தந்தை” என்ற உண்மை நிலை உருப்பெறுகின்றது.
1.படைப்பின் படைப்புத் தான் சிவ சக்தியின் படைப்பு.
2.படைக்கப்பட்டவனின் படைப்பு தான் அனைத்து ஜீவாத்மாக்களின் படைப்பெல்லாம்.
3.இந்நிலையில் சக்தி கொண்டு ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று வளர “ஜீவ சக்தி கொண்ட குரு நிலை தேவை…!”
இராமாயண மகாபாரதக் காவியங்களில் எல்லாம் குருவின் நிலையை ஆண்டவனுக்கு முதலில் காட்டிய நிலை என்ன..?
ஞான சக்தி பெற… ஆரம்பத் தொடர் நிலைக்கு நம்மைக் காட்டிலும் சக்தி கொண்ட குரு நிலை தேவை.
1.நீரான சக்தி ஈர்ப்பில் (மனித பிம்ப உடலில்) காந்த மின் அலையின் தொடர் நிலையை
2.நேராக நாம் பெறுவது என்பது கடினமாகின்றது.
3.நம்மை ஒத்த ஜீவ உடல் கொண்ட ஞான சக்தியின் வழி பெற்ற குரு அமைந்தால்
4.நம் எண்ணத்தை அவர்பால் செலுத்த
5.அவர் எடுக்கும் அலையின் நிலையிலிருந்து
6.நம் ஞானத்திற்குகந்த அலையினைத் திருப்பி அனுப்பிட முடியும்.
ஜீவனற்ற சக்தியின் தொடர்பைக் காட்டிலும் ஜீவனுடன் கூடிய குரு நிலை அமைந்து அவர்பால் நாம் செலுத்தும் எண்ண நிலைக்கொப்ப காந்த மின் அலையின் தொடரை நாம் ஆரம்பக் காலத்தில் எடுப்பதற்கு உதவி நிலை கிட்டுகிறது.
குருவின் உண்மை நிலை 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் இந்நிலை தான் இருந்தது. காலப் போக்கில்…
1.குருவானவர்களே தன் ஞானத்தின் வழியைப் பிறர்பால் செலுத்தி
2.“அவர்கள் தன்னைக் காட்டிலும் உயர் நிலை கொண்டு விடுவார்கள்…!” என்ற எண்ண ஓட்டத்தினால் எல்லாமே மாறிவிட்டது.
அதுவுமல்லாமல்…
1.சிலர் எடுத்துச் செயல்படுத்திய வழி நிலையை
2.உணர்ந்தெடுக்கும் ஜீவாத்மாக்களும் செயல்படுத்தவில்லை.
மனித உரு கரு வளர்ந்த காலம் முதல் கொண்டே “குரு சிஷ்யன்” என்ற வழித்தொடர் இருந்து கொண்டு தான் இருந்தது, இன்றும் உண்டு.
ஆனால் பக்தி நிலை கொண்டு பணிந்து வணங்கும் நிலை தான் உண்டே தவிர ஞானத்தின் நிலையின் ஈர்ப்பு வழித் தொடருக்குக் குருவின் செயலை எடுப்பாரில்லை.
1.குருவின் தொடர்பால்…
2.தானே கிட்டும் என்ற நிலை தான் இன்றும் உள்ளது.
ஆனால் சக்தி வாய்ந்த சக்தியிலிருந்து தான் பல சக்திகள் உருப்பெறுகின்றன.
1.உருப்பெற்ற நிலையிலிருந்து மாறி மாறி வழித் தொடர் கொண்டு
2.உயர் சக்தியின் படைப்பில் தான் சக்தி வாய்ந்த சக்திக்கு மேல் சக்தி கொள்கின்றது இந்தச் சக்தி.
இது தான் உண்மை…!
நல்லதைச் சொல்லித் தான் நல்லதாக இயக்க முடியுமே தவிர கெட்டதைச் சொல்லி நல்லதாக்க முடியாது
வீட்டிற்குள் எதிர்பாராதபடி சில குறைகள் வருகின்றது. எப்படி…? நம் பையனைக் கூப்பிட்டு அவசரத்திற்குக் கடையில் சென்று இன்ன பொருளை வாங்கி வா…! என்று அனுப்புகின்றோம்.
ஆனால் கடையிலோ கூட்டம் நெருக்கடியாக இருக்கின்றது. வீட்டிலே விருந்தாளிகள் இருப்பார்கள். “இல்லைங்க… நேரமாகிறது நாங்கள் கிளம்புகிறோம்…! என்று அவர்கள் சொல்லும் அவசரத்திலே… “பையன் இப்பொழுது வந்துவிடுவான்… கொஞ்சம் பொறுங்கள்…!” என்று நாம் சொல்கின்றோம்.
ஆனாலும்… பையன் அந்தப் பொருளை வாங்கி வரக் காலதாமதம் ஆகின்றது.
1.எப்பொழுது பார்த்தாலும் நீ இப்படித்தான் செய்கின்றாய் என்று
2.விருந்தாளிகள் மேல் இருக்கக்கூடிய பாசத்தால்
3.அந்தச் சந்தர்ப்பம் தன் பையனைக் “குறை கூறும் உணர்வுகள்” வந்து விடுகின்றது.
எல்லாமே சந்தர்ப்பம் தான்…!
அப்படிக் குறை கூறும் உணர்வுகள் ஒரு தரம் வந்துவிட்டால் அடுத்து அவன் அதே போன்று சென்றாலும்
1.அன்று போல் இன்றைக்கும் ஏமாற்றி விடாதே…
2.போய் விளையாண்டு கொண்டிருக்காதே…! என்று சொல்லியே அனுப்புவோம்.
அங்கே அவன் போனவுடன் நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணினாலும் “நாம் சொன்ன உணர்வுகள் அவனைத் தாக்கி…” எங்கேயாவது இடறிக் கீழே விழுந்து விடுவான்.
முந்தைய சந்தர்ப்பத்தில் “காலதாமதமானது…” என்று நமக்குள் முதலில் பதிவானது. அது பதிவாகிய நிலைகள் கொண்டு அடுத்து இதைப் போன்று பையன் சென்றாலும் எங்கேயாவது விளையாண்டு கொண்டிருப்பான் வேடிக்கை பார்த்துவிட்டுத் தான் வருவான் என்று எண்ணப்படும் பொழுது
1.இதே உணர்வு எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்… அந்த உணர்வு கொண்டு பதிவானது அவனுக்குள் பாய்ச்சப்படும் பொழுது
2.வண்டியிலே மோதி விடுவான் அல்லது வாங்கிய பொருளைக் கை தவறிக் கீழே விட்டு விடுவான்… உடைந்து விடும்.
ஆனால் அவன் வருவதற்கு நேரம் ஆக ஆக… இங்கே நம்முடைய மனது வெடுக்கு…வெடுக்கு… என்று இயக்கிக் கொண்டிருக்கும். ஆனால் நம்முடைய எண்ணம் தான் அவ்வாறு இயக்கி அங்கே மாற்றிவிடுகிறது.
அவன் தவறு செய்தானா…? என்றால் இல்லை.
சந்தர்ப்பத்தால் நமக்குள் உருவாகும் இந்த உணர்வுகள் அவன் மேல் எடுக்கக்கூடிய உணர்வுகளும் பகைமை ஆகின்றது.
நண்பருக்குள் உதவி செய்தான் என்று பண்பாக எண்ணும் பொழுது விக்கல் ஆகின்றது. ஆனால் இடைஞ்சல் செய்தான் தொல்லை கொடுத்தான் பாவி என்று எண்ணினால் அங்கே புரையோடுகிறது… நண்பன் அமெரிக்காவில் இருந்தாலும் அங்கே அவனை இயக்குகின்றது.
அது போல் தான் நம் குடும்பத்தில் பையனுடைய நிலைகள் இவ்வாறு செயல்படும் போது அவன் செயல்படும் நிலைகள் நம்மை அறியாமலே இப்படி இயக்கிவிடுகின்றது… இது இயற்கை. அதே உணர்வுக்கொப்ப நம்மை வழிநடத்திச் செயல்படுத்தி வருகின்றது.
அவன் எங்கே போனான்…? எங்கே சென்றான்…? என்ன ஆனான்…? என்ற
1.இந்த வேவ்ஸ் (WAVES)… அலைகள்… உணர்வு… நமக்குள் இருப்பதால்
2.அங்கே எண்ணப்படும் பொழுது “என்ன நேரம் ஆகின்றதே…” என்ற பதட்டமானால் அங்கே அவனை உடனடியாகப் போய் இயக்குகின்றது.
3.நம்மைப் பதட்டப்படும்படி செய்து.. ஆனால் அவனைக் குற்றவாளியாக ஆக்கி விடுகின்றது.
அதே சமயத்தில் பையனை எண்ணி வேதனைப்படும் போது நாம் நுகர்ந்த அந்த வேதனை உணர்வுகள் நம் உடலுக்குள் சேர்ந்து அணுக்களாக விளைந்து கை கால் குடைச்சலாகி நம்மை வேதனைப்படும்படி செய்கின்றது.
நம்மை அறியாமலே தான் இந்த நிலைகள் எல்லாம் நடக்கின்றது. ஆக இது இயற்கை…!
இப்படியெல்லாம் தெரிந்து கொண்ட நிலைகள் கொண்டு வாழ்க்கையில் வருவதை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதற்குத்தான் உருவம் அமைத்து ஆலயங்களில் அதை உருவாக்கப்பட்டு
1.நீ உன்னுடைய வாழ்க்கையில் வரக்கூடிய நிலைகளுக்கு எவ்வாறு எண்ண வேண்டும்…?
2.எதனை நீ வழி நடத்த வேண்டும்…? வாழ்க்கை எவ்வாறு வழிப்படுத்த வேண்டும்…? என்று
3.கல்லை அங்கே சிலையாகக் கடவுளாகச் செய்து வைத்துக் காண்பிக்கின்றார்கள்.
ஆலயத்திலே காட்டப்பட்ட நிலைகளை எண்ணி “அந்தத் தெய்வீக பண்புகளை நீ வளர்த்துக் கொள்…” என்று அதை எண்ணி எடுக்கும்படி செய்து நமக்கு ஞானிகள் வழி காட்டுகின்றார்கள்.
தீமைகளை நுகரும் சந்தர்ப்பங்களில் எல்லாம்… அந்தப் பொருள் அறியும் நிலையாக அந்த ஆலயத்தில் விளக்கைக் காட்டும் போது
1.பொருளறிந்து செயல்படும் திறன் நாங்கள் பெற வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் திறன் என் பையன் பெற வேண்டும்
3.பொருளறிந்து செயல்படும் திறன் எங்கள் குடும்பத்தார் அனைவரும் பெற வேண்டும்
4.என் கணவருக்கு அது கிடைக்க வேண்டும் என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும்
5.என் மாமனாருக்குக் கிடைக்க வேண்டும் என் மாமியாருக்குக் கிடைக்க வேண்டும்
6.எல்லோரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று
7.இவ்வாறு மற்றவர்கள் மீது இருக்கும் வெறுப்பை நீக்கி
8.பொருளறியச் செய்யும் அந்த உயர்ந்த உணர்வுகளை நாம் வளர்க்க வேண்டும் என்று ஆலயத்தில் காட்டியுள்ளார்கள்.
யாருக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று நாம் சொன்னோமோ… நாம் எண்ணியது போன்று அவர்களும் இந்த ஆலயத்திற்கு வரும் போது எண்ணினால் வெறுப்புகளை அவர்களும் மாற்றிக் கொள்ள முடியும்.
ஒருவருக்கொருவர் வெறுப்பை மாற்றுவதற்குத் தான் அங்கே ஆலயத்தில் தெய்வச் சிலையை அமைத்து எல்லோரும் அந்த உயர்ந்த சக்திகளைப் பெறும்படி ஞானிகள் செய்துள்ளார்கள்.
காரணம் மாமியார் மீது மருமகளுக்கு வெறுப்பு இருக்கும் அதே போன்று மருமகள் மீது மாமியாருக்கு வெறுப்பு இருக்கும். குடும்பங்களில் இப்படித்தான் ஒருவருக்கொருவர் வேதனையை வளர்த்து நோயை உருவாக்கி சம்பாரித்த சொத்தையும் பாதுகாக்க முடியாதபடி மீண்டும் வேதனையைத் தான் உருவாக்க முடியும்.
ஆக மொத்தம் வேதனையில் இருந்து நாம் விடுபடுகின்றோமா…?
அதற்காகத்தான் அந்த ஆலயத்திலே விளக்கைக் காண்பித்து… அந்த விளக்கின் வெளிச்சத்தால் அங்கே எப்படிப் பொருள் தெரிகின்றதோ…? நம் ஆறாவது அறிவு கார்த்திகேயனாக (வெளிச்சமாக) இருப்பதைச் சரியான நிலைகள் பயன்படுத்துவதற்கு அதை நினைவு கூறி நாம் அந்த உயர்ந்த உணர்வுகளை எடுக்கும்படி செய்கின்றார்கள்.
இந்த ஆலயம் வருவோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்… என்னிடம் வேலை செய்பவர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்… என் வாடிக்கையாளர்களும் அவர் குடும்பத்தாரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும் வளம் பெற வேண்டும் என்று இப்படி சந்தர்ப்பத்தால் நாம் எடுத்துக் கொண்ட அந்த பகைமைகளை மறக்க இந்த எண்ணங்களை அந்த ஆலயத்தில் எண்ணும்படி ஒருமித்த நிலையில் கொண்டு வருவதற்கு இதை செயல்படுத்தினார்கள்.
ஒவ்வொருவருமே இந்த முறைப்படி செயல்படுத்தினால் ஒவ்வொருவரும் நுகர்ந்த உணர்வுகள் இறை(ரையாகி… இந்த உடலுக்குள் அது விளையப்பட்டு…
1.விளைந்த உணர்வு செயலாகும் போது அதுவே தெய்வமாக நமக்குள் வந்து
2.நல்ல உடலாக நல்ல சொல்லாக நல்ல எண்ணமாக நல்ல நினைவாக நல்ல இயக்கமாக நல்ல செயலாகச் செயல்படுத்தும்படி
3.நம்மைத் தெய்வமாக மாற்றும் அத்தகைய நிலையினை உருவாக்குவதற்குத் தான் ஆலயத்தை அன்று அமைத்தார்கள் ஞானிகள்.
ஞானத்தின் உயர்வால் மனிதன் தெய்வமாக முடியும்…!
பேராசையின் உந்தலில் ஏற்பட்ட எண்ணத்தினால் பேராசைக்குகந்த நிலை பெறச் சூழ்ச்சி வலை பின்னப்பட்டு அச்சூழ்ச்சியின் இன்னலில் எற்பட்ட செயல்கள் எல்லாம் “இராமாயணக் காவியத்தில்” வடிக்கப்பட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது.
இப்பேராசை உணர்வெண்ண ஆசையின் செயல்முறை எப்படி எப்படி எந்தெந்தச் சுற்றலில் இருந்தெல்லாம் சிக்கி… ஒரு மனிதனை… நற்குணம் அடைய வேண்டும் என்ற உணர்வு குணத்தை ஒரு வட்டத்திற்குள் சுழலவிட்டு…
1.மனிதனுக்குகந்த பண்பு பாசம் பக்தி வீரம் அன்பு ஆசை இப்படி ஒவ்வொரு குணத்தையும்
2.தந்தையின் சொல் மந்திர சக்திக்கும்
3.தமையனின் பாசப் பிணைப்பையும்
4.அன்பின் உருவைக் காதலிலும்
5.வீரத்தை வில்லாக்கியும்
6.பண்பைப் பலதிலும் படைத்துப் பிணைக்கப்பட்ட இராமனை அவதாரப் படைப்புக் காவியனாக்கி
7.வழிப்படுத்திக் காட்டிய இராமாவதாரக் காலத்தில் அன்றிருந்த நிலையைக் கொண்டு
8.அக்காலத்திற்குகந்த வாழ்க்கையின் முன்னேற்ற ஞானத்தைக் கொண்டு
9.இராமனாகப் படைக்கப்பட்ட உருவின் நிலையில்
10.ஆண்டவனான வழி நிலை பெறுகின்ற செயலனைத்துமே அன்றே காவியத்தில் வடிக்கப்பட்டன.
ஆனால்…
1.ஆண்டவனாகப் பிறந்தவனின் இன்னல் நிலையை உணர்த்தி
2.ஆண்டவனின் சக்தியைக் காட்ட வடிக்கப்பட்ட காவியமல்ல இராமனின் காவியம்.
பேராசையின் எதிர் நிலையில் சிக்குண்ட ஆத்மா… “தன் உணர்வின் எண்ணத்தில் தெய்வ சக்தி பெற வேண்டும் என்ற எண்ண சக்தி இருந்தால்…”
1.வாழ்க்கையில் செயல் எதிர் பிம்பம் எதுவானாலும்
2.தன் ஞானத்தின் உயர்வினால் வரும் இன்னலில் இருந்தெல்லாம் மீண்டு
3.”தெய்வமாகலாம்…!” என்று உணர்த்தப்பட்ட காவியம் தான் இராமனின் காவியம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
1.நன்மையின் நிலைகள் “எளிதானது…”
2.ஆனால் ஒருவர் வேதனைப்பட்டுக் கஷ்டம்… நஷ்டம்… என்று சொல்லும் போது “அது மிகவும் கடினமானது…!”
இருந்தாலும்… அதை நுகர்ந்தறிந்தபின் நாம் உதவி செய்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.
நாம் என்னதான் உதவி செய்தாலும்… பிணியிலிருந்து அவர் விடுபட அவருக்குள் எடுத்துக் கொண்ட நோயின் தன்மை வளர்ச்சி அடைகின்றது.
நாம் மீண்டும் பாசத்துடன் அவருக்கு உதவி செய்கின்றோம். உதவி செய்தாலும்… அவர் மடிந்தால் இவரின் எண்ணமே இங்கே அதிகமாகின்றது.
உடலை விட்டு வந்தபின் யார் அவருக்கு உதவி செய்தாரோ அவர் மேல் எண்ணமாகி அவர் உடலுக்குள் அந்த ஆன்மா வந்துவிடும்.
நாம் தவறு செய்யவில்லை. அப்பொழுது அந்த உடலில் விளைந்த நோய்வாய்ப்பட்ட உணர்வுகள் நம் உடலுக்குள்ளும் வரத் தொடங்கும்.
அப்பொழுது அத்தகைய சந்தர்ப்பங்களில்… நாம் வணங்கும் தெய்வங்களை எப்படி எண்ணுகின்றோம்…?
1.நான் எல்லோருக்கும் நன்மை செய்தேனே… என்னை இப்படி நீ சோதிக்கின்றாயே…! என்று
2.வணங்கி வரும் நல்ல குணங்களை நாம் பாதுகாப்பதற்கு மாறாகப் பழி தீர்க்கும் உணர்வுகளாக நாம் மாற்றிவிடுகின்றோம்.
பல கோடிச் சரீரங்களிலிருந்து தீமைகளை வென்று வென்றிடும் சக்தியாக மனித உடலுக்குள் 1008 குணங்கள் உருவாக்கப்பட்டது. இதையெல்லாம் சேர்த்துத்தான் மனிதனாக உருவாகியது.
ஆனால் மனிதனாக உருவாக்கிய இந்த நல்ல குணங்களைக் காக்க வேண்டும் அல்லவா…?
இதற்காகத்தான் இந்த விநாயகர் தத்துவத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
1.நமக்குள் மறைந்த மனிதனாக உருவான நல்ல குணங்களை ஆலயங்களில் சிலையாக வடித்து வைத்தனர் ஞானிகள்.
2.அந்த நல்ல குணங்களைக் காத்திடும் முறைகளையும் வழிவகுத்து அமைத்தனர்.
அதை யாரும் சிந்திக்கவில்லை.
அபிஷேகமும் ஆராதனைகளையும் செய்தால்… மந்திரங்களைச் சொன்னால் ஆண்டவன் நம்மைக் காப்பான்…! என்ற உணர்வுகளைத்தான் நமக்குள் வளர்த்திருக்கின்றோம்.
நன்மைகள் செய்… தர்மத்தையும் தானத்தையும் செய்தால் இந்தத் தெய்வம் உனக்கு வழி காட்டும் என்பார்கள். தர்மங்களையும் தானங்களையும் நாம் செய்தாலும் “நம்முடைய நிதானத்தையே இழந்துவிடும்” நிலைகளைச் செய்துவிடுகின்றது.
ஆகவே… கையிலிருந்த செல்வம் போய்விட்டது. பிறருடைய கஷ்டங்களை எல்லாம் கேட்டறிந்தோம். பின் அந்த உணர்வுகளே நமக்குள் இயங்கத் தொடங்கிவிடுகின்றது.
1.நம் நல்ல குணங்களை மாற்றிவிடுகின்றது
2.நுகர்ந்த உணர்வுகளோ நமக்குள் நோயாக மாறுகின்றது
3.நாம் எந்தத் தெய்வத்தை வணங்கினோமோ அந்தத் தெய்வத்தையே சாடும் நிலைகளுக்கு வந்துவிடுகின்றது….
4.நல்ல குணங்களைக் காக்கும் நிலை அற்றுவிடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து மனிதன் விடுபடுவதற்குத்தான் அன்று இதைத் தெளிவாகக் காட்டினான் ஞானி.
ஆகவே நம்முடைய பற்று எதன் மேல் வரவேண்டும்…? மனித உடலிலிருந்து விடுதலையாகி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமான அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைதல் வேண்டும்.
அவர்கள் சென்ற பாதையில் நாம் சென்றோம் என்றால் அடுத்து நமக்குப் பிறவியில்லை.
துருவ நட்சத்திரத்தின் அழுத்தம் நம் உயிரிலே எப்போதும் இருக்க வேண்டும்
நாட்டையோ தன் இனத்தையோ காப்பதற்காகத் “தற்கொலைப் படை” என்ற பெயரில் எங்கள் உயிரைத் தியாகம் செய்கின்றோம் என்று இருக்கின்றார்கள். போதை மருந்துகளைக் கொடுத்து அவர்கள் மனதை மாற்றி அவ்வாறு செயல்படுத்தி விடுகின்றார்கள்.
உன் குடும்பத்தை நாங்கள் காத்துக் கொள்கின்றோம்.
1.ஆண்டவன் உனக்கு எல்லாம் கொடுப்பான்… நீ அதற்காக உயிரைத் தியாகம் செய்…! என்று
2.தவறான பாதைகளைக் காட்டி உலகம் முழுவதற்குமே இந்தத் தற்கொலை படை பரவி விட்டது.
அவன் (முதலில் ஒருவன்) செய்கின்றான்… அவனைப் போன்று நாமும் செய்யலாம் அல்லவா…! நமக்கும் அந்த ஆண்டவன் கொடுக்க மாட்டானா…? என்று இப்படி ஒரு நிலை வந்து விட்டது.
வளர்வதைக் காட்டிலும் மனிதனை அழித்து வாழும் நிலை உருவாகி விட்டது. இப்படி உருவாக்கப்பட்ட விஷத் தன்மைகள் உலகம் முழுவதும் பரவி இருக்கும் இந்த நேரத்தில் நாம் எங்கே செல்லப் போகின்றோம்…?
இதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த உயிர் இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது எந்த வேதனை எடுத்ததோ… அடுத்து உடனடியாக உடல் பெறும் தன்மை இல்லை.
உயிர் உடலில் இருக்கும் பொழுதே நல்லதாக மாற்ற முடியவில்லை என்கிற போது… உயிருடன் சேர்த்து அந்த வேதனையுடன் தான் வாழ முடியும்… நரகத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருக்க முடியும்.
1.அதற்குத்தக்க (வேதனை) உடல்கள் பெற்ற பின் தான் அதிலே அடங்கும்
2.வேதனையையே உணவாக உட்கொள்ளும் தன்மை வரும்
3.விஷமான உடல் பெறும் வரையிலும் அது அடங்காது
4.அந்த வேதனையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்க வேண்டியிருக்கும்.
இது போன்ற நிலையிலிருந்து எல்லாம் நாம் விடுபட வேண்டும்.
தியான வழியினைக் கடைபிடிப்பவர்கள் சில நேரத்தில் இதையெல்லாம் காட்சியாகக் காண முடியும். உடலை விட்டுப் பிரிந்து சென்ற அத்தகைய உயிரான்மாக்கள் அவர்கள் எப்படி இருக்கின்றார்கள்…? என்பதைக் கூட நீங்கள் காண முடியும். அவர்கள் எத்தனை வேதனைப்படுகிறார்கள்…! என்பதையும் அந்த உணர்வின் அலைகளையும் காண முடியும்.
ஏனென்றால் இதையெல்லாம் நான் (ஞானகுரு) அனுபவித்துச் சொல்கின்றேன். குருநாதர் காடு மேடெல்லாம் எம்மை அலையச் செய்து அந்த உண்மையின் இயக்கத்தை “உயிரிலே என்னென்ன நடக்கின்றது…?” என்பதைத் தெளிவாகக் காட்டியுள்ளார்.
அதையெல்லாம் தெரிந்து கொண்ட பின்பு தான் எல்லோருக்கும் அந்த அருள் சக்தியைக் கொடுத்து “உங்களாலும் காண முடியும்…” என்று உணர்த்துகிறோம்.
ஆகவே
1.எத்தகைய தீமைகளும் வராதபடி தடுக்க அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை உங்களுக்குள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை வளர்த்துக் கொண்டால் – “ரிமோட் (REMOTE)”
3.தீமை என்ற உணர்வுகள் உங்கள் அருகில் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.
விஞ்ஞான அறிவு கொண்டு இன்று எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற முறைப்படுத்தி கம்ப்யூட்டர் என்ற் சாதனத்தை வைத்து எத்தனையோ வேலைகளைச் செயல்படுத்துகின்றார்கள்.
ஒரு இடத்தில் பிழையாகி விட்டால் உடனே அந்தக் கம்ப்யூட்டர் அதைத் திருத்தி எத்தனையோ நிலைகளை மாற்றிச் சீர்படுத்துகின்றது.
அது போன்று தான்… நம் உயிர் எலக்ட்ரிக்காக இருக்கிறது… சுவாசிக்கும் உணர்வுகளை எலெக்ட்ரானிக்காக… (அழுத்தம்) உணர்ச்சிகளால் இயக்குகிறது.
1.நாம் சுவாசிக்கும் போது மாறுபட்ட உணர்வுகள் வந்தால்…
2.அது நம் அழுத்தங்களை மாற்றினால்… அது தவறு என்று தெரிந்தால்…
3.அடுத்த கணமே ஈஸ்வரா என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
4.துருவ நட்சத்திரத்தின் பேரருள் நாங்கள் பெற வேண்டும் என்ற “இந்த அழுத்தத்தைக் கொடுத்து”
5.முதலில் நுகர்ந்த மாறுபட்ட உணர்வின் அழுத்தங்களை மாற்றிக் கொண்டு
6.இனி நாளை நடப்பது நல்லதாக இருக்க வேண்டும் என்ற உணர்வை எடுத்து வலுவாக்கி…
6.இந்தக் கணக்கைக் கூட்டிக் கொண்டு வர வேண்டும்.
நாம் எடுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்… கண்ணின் கரு விழியால் பதிவாக்கிய நிலைகள் கொண்டு… உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் இணைத்து,,, நல்லதாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.
உங்களை நீங்கள் நம்புங்கள்…!
1.நல்ல நேரத்தை உருவாக்குவது உங்கள் கையிலே தான் இருக்கின்றது
2.துருவ நட்சத்திரத்தின் அழுத்தத்தைக் கொண்டு எதையுமே நல்லதாக்கும் ஒரு பழக்கம் நமக்கு வர வேண்டும்.
தீமைகளிலிருந்து விடுபடும் மக்களை அதிகரிக்கச் செய்ய வேண்டும்
வேதனை என்ற உணர்வை நாம் எடுத்துக் கொண்டால் அந்த விஷத்தின் அளவுகோல் அதிகமானால் அது உடலுக்குள் கேன்சராக மாறுகின்றது.
உடலுக்குள் இருக்கும் அணுக்கள்
1.விஷத்தின் தன்மையை அதிகமாக நுகர்ந்து கொண்டால் அந்த விஷம் தன் விழுதுகளைப் பாய்ச்சி
2.நல்ல அணுக்களுக்குப் போகும் விஷத்தையும் இது கவர்ந்து கொள்கிறது…
3.பின் இந்த மனித உடலை உருவாக்கும் அணுக்களெல்லாம் இரத்தமாக மாறுவதற்குப் பதில் “நீர் சத்தாக” (தண்ணீராக) மாறுகின்றது.
நல்ல அணுக்களுக்களின் இயக்கச் சக்தி குறைக்கப்படும் பொழுது இரத்தத்தின் தன்மை குறைகின்றது. இது இரத்தக் கேன்சராக மாறும் போது இந்த அணுக்களின் தன்மையும் மற்ற அணுக்களுக்குக் கொண்டு போய் இதே வேதனைகளை உருவாக்கி விடுகின்றது.
இதைத் தெளிவாக எமக்குக் காட்டுகின்றார் குருநாதர்.
விஷத்தன்மை நமக்குள் அதிகமாகிக் கேன்சராக மாறும்போது அதற்கு மருந்து இல்லை. ஆனால் அக்காலங்களில் இத்தகைய கேன்சர் என்ற நிலை இல்லை.
புற்று நோய் என்று அக்காலத்தில் இருப்பினும் அதற்கு
1.அன்றைய பச்சிலையை எடுத்து அரைத்து… ஒரு துளி எங்கே புற்று நோய் இருக்கின்றதோ அங்கே அதைத் தடவி விட்டால்
2.அந்தக் கண்களின் (புற்றின்) வழி கொண்டு அந்தப் புற்றை உருவாக்கிய அணுக்கள் மடிந்து விடுகின்றது.
இதற்காக வேண்டி…
1.எம்மைக் காட்டுக்குள் அழைத்துச் சென்று சில பச்சிலைகளையும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டினார்.
2.இதை வைத்து நீ பிறருக்கு உதவி செய்தாலும் இந்த உணர்வை உனக்குள் பதிவு செய்து கொள்
3.இந்த உணர்வின் “வாக்காக” நீ அவர்களுக்குள் கொடு.
4.அதே அணுவின் தன்மை அங்கே விளையும்
5.அவர் தொடர்ந்து எடுத்தார் என்றால் அவர் செய்த பாவ நிலைகளைப் போக்கும் நிலை அங்கே வருகின்றது
5.அவர் எண்ணியதை அவர் உயிர் உருவாக்குகின்றது… அந்த அணுக்களைப் பெருக்குகின்றது.
உதாரணமாக… ஒருவர் கோபமாகப் பேசுவதை நாம் அதிகமாகக் கேட்க நேர்ந்தால் நமக்குள் அது இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது.
அதைப் போல
1.நான் உனக்குக் காட்டியபடி அந்தக் கேன்சர் நோயை நீக்கிடும் உணர்வை நீ நுகர்ந்தாய்
2.அந்த உணர்வின் தன்மை கொண்டு கேன்சர் (விஷ அணுக்கள்) செயலற்றதாக ஆகவேண்டும் என்ற “ஒரு வாக்கினைக் கொடு…”
யாரொருவர் இந்தப் பதிவினை நினைவு கொண்டு தியானிக்கின்றனரோ நஞ்சினை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அங்கே பெருகும். அப்பொழுது அவருக்குள் இருக்கும் அந்தக் கேனசர் ஒடுங்கும்.
அவர்கள் எதை எண்ணுகின்றார்களோ அதை “அவர்கள் உயிர் தான்… இயக்குகின்றது…”
1.“நான் செய்கின்றேன்…” என்று நீ இதைச் செய்தால் அவர்கள் செய்யும் தீமையிலிருந்து விடுபட மாட்டாய்.
2.உடல் நல்லதாகி விட்டால்… நல்லதான பின் மீண்டும் வேதனைப்படும் செயல்களைத்தான் செய்வார்கள்.
3.அந்த வேதனை உணர்வைத்தான் நுகர்வார்கள்… மீண்டும் அதே நோய் உருவாகும்.
அவரில் விளைந்த உணர்வுகள்… மற்றவர்கள் அவருடன் உறவாடும்போது அங்கே பதியும். பதிந்த உணர்வே மீண்டும் செயலாகும். இதை மாற்றும் நிலை இல்லை.
ஆகவே இதை மாற்ற வேண்டும் என்றால்… இந்தப் பிரபஞ்சத்தில் விஷத்தன்மை பரவாது தடுக்க வேண்டும் என்றால்… அருள் மகரிஷிகளின் உணர்வை நுகரச் செய். இந்த உணர்வின் தன்மை இருளை மாய்க்கச் செய்.
காரணம்… பிறவியில்லா நிலை அடையச் செய்யும் பருவம் பெற்றது இந்த மனித உடல்.
1.அவர்களின் உயிரை நீ ஈசனாக மதி… அந்த உடலைக் கோவிலாக மதி… உடலைச் சிவமாக மதி
2.அதற்கு “அருள் சேவை” என்ற நிலைகள் கொண்டு அருள் ஞானத்தை வினையாகச் சேர்க்க… ஊழ்வினை என்ற வித்தாக அவர்களுக்குள் ஊன்று.
“அந்த வித்தினை எவர் வளர்த்துக் கொள்கின்றனரோ…” அவர் பாவ வினையும் சாப வினையும் நீக்கும் நிலை பெறுகின்றார்கள். தீய வினைகளிலிருந்தும் விடுபடுகின்றனர்.
இதை வளர்க்க எண்ணினால் உயிருடன் ஒன்றி ஒளியின் தன்மை வளர்கின்றது.
இப்படி… இதை வளர்த்தால் தான் அதைப் பெற முடியுமே தவிர உன் கையால் பலருக்கு நன்மை செய்தாலும் அடுத்த கணம் நல்லதானாலும் அந்த நேரத்திற்குத்தான் நல்லதை எண்ணுவார்கள்.
அடுத்தாற்போல் இவர்கள் என்ன செய்வார்கள்…?
பிறர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தறிவார்கள். நுகர்ந்த உணர்வுகள் அந்த வேதனைப்படுத்தும் சொல்லாக மீண்டும் இவருக்குள் வரும்.
இவருக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவான நிலை மீண்டும் நுகர்ந்து அந்தத் தீய அணுக்களைத்தான் உருவாக்கும்…. நீ செய்த நன்மையும் பயனற்றுப் போகும்.
நீ சக்தி பெற்ற நிலையை…
1.அந்த ஞான வித்தை அங்கே ஊன்றிவிடு
2.அதை வளர்க்கும் உபாயத்தைக் கூறு
3.அதன் வழியே அவர்கள் நுகரட்டும்… அருள் பெறட்டும்… இருளை அகற்றட்டும் என்றார் குருநாதர்.
தீமைகளை அகற்றிடும் உணர்வுகளை விளைய வைத்து… தீமைகள் அகன்றிட வேண்டும் என்று கூட்டுத் தியானங்கள் இருந்து… இந்த உணர்வுகளைப் பரவச் செய்தால் “தீமைகளிலிருந்து விடுபடும் மக்களும் அதிகரிப்பர்…”
ஆகவே இதைப் போன்ற உணர்வின் தன்மை விளையப்படும் பொழுது நினைவுகள் அங்கே பயன்படுத்தக் கூடிய நிலைகள் இருக்கும். இதை நீ செய்…! என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
அதைத்தான் யாம் இப்பொழுது செய்து கொண்டிருக்கின்றோம்.
ஆனால் சில பேர் என்ன நினைக்கின்றார்கள்…? சாமியிடம் ஆசீர்வாதம் வாங்கினால் சரியாகும்…! என்று இப்படிக் கீழே போய்க் கொண்டிருக்கின்றார்கள்.
சாமியின் (ஞனாகுரு) ஆசீர்வாதம் எது…?
1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெற வேண்டும்
2.நீங்கள் அருள் உணர்வை நுகர்ந்தால் தீய வினைகளை மாற்றும் திறன் உங்களுக்குள் நிச்சயம் உண்டு.
“வாலிப வயதில் எடுக்கும் எண்ணத்தின் வீரியம்…” மனிதனின் அடிப்படை குணத்தையே மாற்றிவிடுகிறது
ஒரு சிட்டிகை உப்பெடுத்து நாக்கில் வைத்தவுடன் அதன் உவர்ப்பு தெரிகிறது. அதே நாக்கு புளிப்பு துவர்ப்பு காரம் இவற்றின் சுவையையும் அறிகின்றது.
சுவையை உணர்வதைப் போல் மணத்தின் மாற்றத்தையும் முகர்ந்து உணர முடிகின்றது. ஒளியின் மாற்றத்தையும் கேட்டறிய முடிகின்றது.
இவ்வுலக சுழற்சி வாழ்க்கையுடன் ஒன்றிய வாழ்வின் அன்றாடச் செயலாக இவ்வுணர்வின் வட்ட ஈர்ப்பில் உழன்று வாழும் நாம் இவற்றை உணர உருவ நிலை கொண்ட ஆரம்பச் செயலுக்கு நம் ஈர்ப்பைச் செலுத்திப் பார்த்தோம் என்றால்
1.ஒவ்வொரு உயிர்த் துடிப்பு நிலை கொண்ட உயிரணுக்கள் தோன்றிய நாள் தொட்டே
2.அவற்றின் வழி அலைத் தொடரினால் உருவாகிய உணர்வின் சேமிப்புக் காலத்தில்
3.பல கோடிக் காலங்களாக ஒவ்வொன்றின் தொடரும் சிறுகச் சிறுக ஒவ்வொரு வளர்ச்சி நிலை மாறி மாறி
4.இவ்வுணரும் பக்குவ நிலை அமிலக்கூட்டு உருவ மனிதனாக உருப்பெறும் காலத்தில்
5.பன்னிரெண்டு குண அமிலத்தைச் சேமித்ததன் மூலம்
6.மனித பிம்பச் சேமிப்பிற்குத் தேவையான வளர்ச்சி நிலை மனிதனாக ஆன பிறகு
7.சேமித்ததன் சக்தி இவ்வேழு பிம்ப உடல்களுக்கு ஜென்மம் எடுக்கக்கூடிய அமிலக் கூட்டு நிறைந்த பிறகுதான்
8.மனித பிம்ப உடலையே பெறுகிறது.
இவ்வாறு உருப் பெற்ற அனைத்தையும் உணரும் (SELF REALIZATION) உணர்வு மனிதனின் உணர்வு கூடிய எண்ண ஞானத்தைச் செலுத்தும் நிலைக்கொப்பத்தான் அமிலக்கூட்டை நிறைத்து (உடலிலே விளைய வைத்து) மனித பிம்ப உடல் கொண்டவனின் அவரவரின் செயல் திறன் அமைகின்றது.
1.பிம்ப உடலின் பிறப்பிலேயே பிறப்பெடுத்து வளர்ந்து
2.வயது நிலையின் நிலைக்கொப்ப உருவ வளர்ச்சியின் மாற்றங்களும்
3.ஞான சக்தியின் உணர்வாற்றலும் செயல்படுகின்றன.
“உருவ வளர்ச்சி நிலை” குறிப்பிட்ட காலத்துடன் நின்று விடுகின்றது. ஆனால் உணர்வின் எண்ண ஈர்ப்பு ஞானத்திற்கு…
1.உடலின் வளர்ச்சிப் பருவம் எய்திய காலத்தில் எடுக்கும் எண்ண நிலைக்கொப்பத்தான்
2.ஒவ்வொரு மனிதனின் குண நிலை செயல்படுகிறது.
பருவ வளர்ச்சிக் காலத்தில் (ADOLESCENT AGE) மனித பிம்பத்தின் ஈர்ப்பின் அமில குணமே
1.மிகவும் வீரிய காந்த மின் அலையின் சக்தியை
2.மின்சாரத்தின் ஈர்ப்புப் பாய்ச்சலைப் போன்று பாயும்
3.அமில வளர்ச்சியின் சேமித குணமான அடிப்படை அமைகின்றது.
“அத்தருணத்தில் வெளிப்படுத்தும் முறை கொண்ட மனிதனாகத்தான்” மனித ஜென்ம காலம் வரை ஒவ்வொருவனின் குண நிலையும் அமைகின்றது.
இவ்வுணர்வலையின் ஈர்ப்பு சக்தி “துரித ஓட்டத்தில்… ஓடும் காலமிது…!”
அதனைச் செலுத்தும் முறை கொண்ட… மனித வாழ்க்கை முறை பெறும் காலத்தை… எச்சக்தியில் செயல்படுத்துகின்றனரோ…!
1.அதன் உணர்வு ஈர்ப்பு அமிலத்தின் சேமிப்பை – அத்தருணத்தில் தான்
2.குணத்தின் அடிப்படை உணர்வு சேமிதம் உள்ளது.
பல துறைகளில் முன்னேறுபவர்களுக்கும் “அக்காலத் தருணம் தான்” ஏற்றதாக அமைகின்றது. அதி உல்லாச காமுக வழித் தொடரில் செல்பவனும் இப்பருவ கால ஈர்ப்பில் எடுக்கும் எண்ணத்தின் வழித் தொடர் மனிதனாகத்தான் ஒவ்வொருவனும் வாழ்கின்றான்.
1.இதனை மாற்றி அமைக்கும் செயலாக
2.எச்சக்தியைக் கொண்டு செயல்படுத்துவது…! என்பதும் கடினம் தான்.
உணர்வின் எண்ணத்தின் வழித் தொடர் அமிலமுடன் வழி கொண்ட நாம் அவரவர்களின் நிலைக்குகந்த செயல் வழியை “நினைத்த மாத்திரத்தில் மாற்றிக் கொள்வது…!” என்பது கடினமாகிறது.
பிறரால்…
1.அவர்களின் நற்சக்தியைச் செயலாக்கித் தீயவர்களை நன்மை ஆக்குவது என்பதும்
2.தீயவன் நல்லவனைத் தீமைப்படுத்துவதற்கும்
3.அந்தந்தக் குண அமிலத்தின் நிலையிலிருந்து மாற்றுவது கடினம்.
உணர்வினால் எடுத்த அமிலத்தின் வளர்ச்சியின் குண மனிதன் அவன் அலைத் தொடரில்தான் இன்று வரை வாழ்ந்து வருகின்றான்.
இந்நிலையை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய முடியும்…?
1.மிகவும் சக்தி வாய்ந்த காந்த மின் அலையின் ஈர்ப்பை எடுத்து
2.அவர்களின் எண்ணமும் – நல்லுணர்வின் பால் சக்தி அலையின் ஈர்ப்புடன் “கலக்கப் பெற்றால் தான்…!”
3.எச்சக்தியின் அலையும் அவர்கள் உடலில் பாய்ந்து
4.அவர்களின் குண நிலையின் வழித் தொடரையே மாற்றியமைக்க முடியும்.
முந்தைய இராமாவதார கிருஷ்ணாவதாரக் காலங்களில் காவியங்களில் காட்டப்பட்ட போர்களில்… ஒருவருக்கொருவர் போர் செய்யும் பொழுது…
1.ஒருவர் வில்லிலிருந்து வரும் அம்புடன் எதிர்த்து வரும் அம்பும் மோதுண்ட பொழுது
2.ஒளி நிலை பெற்று ஒன்றுடன் ஒன்று ஊடுருவி எதிர்நிலை கொண்டு
3.அதனதன் நிலைக்கே திரும்பிச் சென்றதாகக் காவியக் கதைகளில் படித்திருப்பீர்கள்.
4.உண்மையைக் கதைப்படுத்தி மறைக்கப்பட்ட தத்துவங்கள் பல உண்டு அவற்றில்…!
வான்மீகி மகரிஷியால் இராமாயணக் காவியத்தில் எழுதப்பட்ட அந்த உண்மையின் ஒவ்வொரு சொல்லுக்கும் பல கருத்துக்கள் உண்டு. “இன்று வரை அதன் உண்மைப் பொருளை உணர்ந்தாரில்லை…!”
ஞானிகள் கொடுத்த காவியங்களில் உள்ள மூலங்களை அறிந்திட முற்படுங்கள்..! அருள் வழியில் நடந்திட அதிலே தக்க உபாயங்கள் உண்டு.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
1.திட்டியவரை எண்ணியவுடன் புரையேறுகின்றது
2.திட்டியவரை எண்ணிக் கொண்டேயிருந்தால் அன்றைய காரியங்கள் தடைப்படுகின்றது.
3.வேதனைப்படுவோரைப் பற்றிச் சொன்னவுடன் நமக்கும் வேதனை வந்து விடுகின்றது… அடுத்து நல்ல வேலைகளைச் செய்ய முடியவில்லை.
4.வேதனைப்படும் உணர்வை எடுத்துக் கொண்டால் பெண்கள் சமையல் செய்யும்போது தவறாகப் போய்விடுகின்றது.
5.அதே சமயத்தில் பெண்கள் ஆகாரத்தைச் சரியாகச் செய்தாலும் ஆண்கள் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்துவிட்டு வந்து அந்த உணவை உட்கொண்டால் சுவைகளை மாறுபட்டதாக ஆக்கிவிடுகின்றது.
இதைப் போல நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை மாற்றிக் கொண்டேயுள்ளது. மனிதனான பின் நாம் இதை மாற்றிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்…?
இந்த மனித வாழ்க்கையில் எத்தனை கோடிச் செல்வம் இருப்பினும் நாம் எத்தனை நாள் வாழ்கின்றோம்…? செல்வத்தை நாம் தேடி வைத்தாலும் உடல் நலம் இல்லை என்றால் செல்வத்தால் சந்தோஷப்படுகின்றோமா…? இல்லை… அப்பொழுதும் வேதனைப்படுகின்றோம்.
நான் சம்பாரித்தேன்… எல்லோருக்கும் நன்மை செய்தேன்… எனக்கு இப்படி வந்துவிட்டதே…! என்று எண்ணி
1.“இவ்வளவு கஷ்டப்பட்டோமே…!” என்ற வேதனையில் தான் நாம் வாடுகின்றோம்
2.இனிமேல் என் பையன் என்ன செய்யப் போகின்றானோ..? என்ற இந்த அச்ச உணர்வுகள் வந்துவிடும்.
இப்படி அஞ்சும் உணர்வுகள் வந்து விட்டால் பையனின் நினைவை எடுத்து வேதனையின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து விடுகின்றது.
வேதனை வளர்ந்து விட்டால்
1.இறந்தபின் எந்தப் பையனைக் காக்க வேண்டும் என்ற எண்ணினோமோ
2.இந்த வேதனையான உணர்வு கொண்டு பையனின் உடலுக்குள் சென்று விடுகின்றது நம் ஆன்மா.
3.அவன் உடலுக்குள் சென்றபின் இப்பொழுது எதைப் புலம்புகின்றனரோ இதே நிலைகளுக்கு அவன் சிந்தனையைச் சீர்குலையச் செய்து
4.அவனால் சம்பாரித்த சொத்தையும் அவன் பக்குவப்படுத்தும் நிலையில்லாது சிதறச் செய்யும்.
ஆகவே பையனுக்கு எதைக் கொடுத்தல் வேண்டும்…?
அருள் ஞானத்தைக் கொடுத்தருளினால்… அருள் ஒளி அவன் பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்தால்… நாம் அவன் உடலுக்குள் செல்ல மாட்டோம்.
அவன் நல்ல குணங்கள் பெற வேண்டும்… சிந்திக்கும் திறன் அவனுக்குள் வரவேண்டும்… அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அவன் வாழ வேண்டும்…! என்ற இதைப் பருகி அங்கே பாய்ச்சுதல் வேண்டும்.
1.எத்தனையோ கோடிச் சரீரங்களில் நரகலோகத்திலிருந்து இன்று சொர்க்கலோகமான இந்த மனித உடலுக்குள் வந்துள்ளோம்
2.இந்தச் சொர்க்கலோகத்திலிருந்து நமக்குச் சொர்க்கவாசலைக் காட்டும் நம் உயிருடன் ஒன்ற வேண்டும்.
ஆகவே இதன் வழி நாம் சென்றோமென்றால் அருள் ஒளி பெற்ற சப்தரிஷி மண்டலங்களுடன் என்றும் ஒன்றி வாழலாம்.
விஷத்தை ஒதுக்கி விட்டால்… அது நம்மை ஒன்றும் செய்யாது – விளக்கம்
சில பேர் என்னிடம் (ஞனகுரு) எதையாவது எதிர்பார்த்து வருவார்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் “என்ன சாமி இவர்…?” என்பார்கள்.
இவர்கள் எண்ணத்தைத் தான் நான் நிறைவேற்றித் தர வேண்டும். ஆனால் யாம் சொல்வதை அவர்கள் வழிப்படுத்தி நடப்பதில்லை. அவர்கள் ஆசைக்கு நான் இணங்கி வர வேண்டும். இப்படி வரக்கூடியவர்களும் இருக்கிறார்கள்.
1.யாம் சொல்லும் முறைப்படி குருநாதர் காட்டிய நெறிகளை எடுப்பதற்கு இல்லாதபடி
2.தவறின் நிலைகளிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்
சாமியிடம் சென்றேன்… ஏதோ சொன்னார்… பின் நடக்கும் என்றார்…! என்று
1.யாம் சொன்ன முறைப்படி அவர்கள் செய்ய வேண்டியதை விட்டு விட்டு
2.அவர்கள் எதிர்பார்த்தது மட்டும் நடக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
இப்படித்தான் இந்தச் சமுதாயம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இங்கே எம்மிடம் வந்து கஷ்டத்தைத் தான் சொல்கிறார்கள். “கஷ்டத்திலிருந்து நான் மீள வேண்டும்…” என்று யாரும் கேட்பதில்லை.
குடும்பத்தில் உள்ள குறைகளையும்… “தொழிலில் கடன் வாங்கியவன் தன்னை ஏமாற்றுகின்றான்…!” என்றும் இதைத் தான் சொல்கிறார்கள்.
1.வாங்கிச் சென்றவர்களுக்கெல்லாம் பணத்தைத் திரும்பக் கொடுக்கும் எண்ணம் வர வேண்டும்
2.அதற்கு வேண்டிய வருமானம் அவர்களுக்கு வர வேண்டும் என்று எண்ணும்படி
3.பல முறை சொல்லியிருக்கின்றேன்… அதை யாரும் கேட்பதில்லை.
நீங்கள் சண்டை போட்டாலும் பணம் வரப் போகின்றதா…? இல்லை…! கோர்ட்… கேஸ் என்று அலைந்து… மேற்கொண்டு பணத்தைச் செலவழித்து வேதனையாகி நோயாக ஆனது தான் மிச்சம்.
பாவிகள் இப்படிச் செய்துவிட்டனர்…! அதனால் எனக்கு நோய் வந்து விட்டது… என்று தான் சொல்ல வேண்டி வரும்.
யாம் சொல்லும் முறைப்படி உங்கள் எண்ணங்களை நீங்கள் மாற்றினால் அங்கே நிச்சயம் மாறும்… அமைதி கிடைக்கும்… சாந்தம் கிடைக்கும்.
அவன் உடனடியாகக் காசைக் கொடுக்கவில்லை என்றாலும் கூட நம் எண்ணம் நம் செல்வத்தை வளரச் செய்யும். மன வேதனையாகி நோயாகாமல் தடுத்துக் கொள்ள முடியும். குடும்பத்தையும் சீராகக் காக்க முடியும்.
இப்படி…
1.விஷத்தை ஒதுக்கி விட்டால் அது நம்மை ஒன்றும் செய்யாது
2.ஆனால் நான் நன்றாகத் தானே சமைத்து வைத்தேன்… என் பொருளில் விஷம் விழுந்து விட்டதே…! என்று
3.அத்தனை பொருளையும் வெளியிலே தூக்கி எறிவதா…? என்று விஷம் பட்டதைச் சாப்பிட்டால் என்ன ஆகும்…?
4.அந்த விஷம் நம்மைக் கொல்லத்தான் செய்யும்.
ஆக… எல்லோருக்கும் நான் நல்லதைச் செய்தேன். எனக்கு இந்த நிலையைச் செய்கின்றார்களே…! என்ற வேதனை (வேதனை என்பது விஷம்) உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் அதைத்தான் செய்யும்
இருபது வருடம் அனுபவத்திலே இதையெல்லாம் தெரிந்து தான் உங்களுக்குச் சொல்கின்றேன். காடு மேடு எல்லாம் அலைந்து… குடும்பத்தில் உள்ள மனைவி பிள்ளைகள் அனைவரையும் விட்டுவிட்டு… குருநாதர் காட்டிய வழியில் உலக உண்மைகளை எல்லாம் தெரிந்த பிற்பாடு தான் இங்கு வந்து இதைச் செயல்படுத்த முடிந்தது.
அது வரையிலும்
1.என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனாதையாக இருந்து
2.செல்வத்தை இழந்து நரக வேதனைப்பட்டுத் தான் வாழ்ந்தார்கள்
ஆனால் இதை எல்லாம் அனுபவபூர்வமாக கொடுத்தாலும் குருநாதர் விளக்கத்தையும் கொடுக்கின்றார்.
உன் குடும்பம் நீ இல்லாத போது எத்தனை அவஸ்தைப்பட்டதோ… அதைப் போன்று
1.ஒவ்வொரு குடும்பத்திலும் சந்தர்ப்பத்தால் எத்தனையோ தொல்லைகள் ஏற்பட்டு விடுகிறது
2.அதனால் அவர்கள் அந்த ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்தை (உடலை) அசுத்தப்படுத்துகின்றார்கள்
3.அவர் அறியாமலே அதைப் புண்படுத்துகின்றனர்… அதை நீ அவர்களுக்கு உணர்த்து
4.உயிரான ஈசனை மதிக்கும்படி செய்… அவனால் உருவாக்கப்பட்ட ஆலயத்தை மதிக்கும்படி செய்…
5.உடலைச் சிவமாக மதிக்கச் செய்.
6.அவர்களுக்கு இதை நீ ஓதும் போது… உனக்கு அதிலே அந்தப் பங்கு கிடைக்கும்.
அவர்கள் தன் உடலை மதிக்கவில்லை என்று இருந்தாலும்…
1.மதிக்கக்கூடிய பண்புகள் அவர்கள் பெற வேண்டும் என்ற உணர்வை நீ எடுத்தால்
2.நீ எண்ணிய உணர்வு (இந்த உயர்ந்த எண்ணம்) உனக்குள் வளர்கின்றது.
ஒரு தீயவன் என்னைத் தவறாகப் பேசுகின்றான் என்றால் “இப்படிப் பேசுகின்றானே…” என்று மீண்டும் மீண்டும் எண்ணினால் அந்த உணர்வு எனக்குள் வளர்ந்து தீமையாகவே வருகின்றது.
அப்போது அந்த நேரத்தில்
1.அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் திறன் அவன் பெற வேண்டும் என்று எண்ணினால்
3.அவனுடைய வேக உணர்வு… அந்தத் தீமையான உணர்வு நமக்குள் வருவதில்லை.
இப்படி நம் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று மனதில் நிறுத்தி… பிறரின் உணர்வை நமக்குள் வளர்க்காதபடி… அந்த உயர்ந்த சக்தியை நாம் வளர்க்கப் பழகுதல் வேண்டும்.
பார்த்தால் “பாவமாக இருக்கிறது… பரிதாபமாக இருக்கிறது…!” என்று இரக்கப்பட்டால் நம்மை நாம் காக்க முடியாது – ஏன்…?
1.உணர்வின் எண்ணத்தை எந்த ஒரு செயலின் எண்ணத்திலும்… நம் எண்ண ஈர்ப்பிலும் செல்லாமல்
2.இவ்வுடலின் அமில குணத்தை நற்குணங்களின் அமில வளர்ச்சியுடன் வளர விட்டாலும்
3.நம் எண்ணத்தின் உணர்வைச் சங்கடமும்… பரிதாபமும்… பச்சாதாபமும்… காட்டும் உணர்வலைக்குச் செலுத்திடலாகாது.
பரிதாபப்பட்டுப் பிறரின் எண்ணமுடனே நம் உணர்வின் எண்ணத்தையும் அவர்களின் உள்ள நிலைக்கு இரங்கி நாம் எடுக்கும் எண்ணச் சுவாசத்தால் நம் உணர்வும் அதே சுழற்சியில் சென்று விடுகிறது.
அப்பொழுது அவர்களின் உடல் அமிலக் கூட்டின் எண்ண அலையை நம் ஈர்ப்புக்குள்… “அவர்கள் பால் செலுத்தும் எண்ணத்தால்” எடுத்துக் கொள்கிறோம்.
நம் உணர்வுகள் “பாவம்…!” என்ற பரிதாபச் சுழற்சி வட்ட உணர்வு அமிலத்தை ஏற்பதினால்… நம்முள் உள்ள உயர் குண அமில சக்தியினைப் பிறர்பால் செலுத்தும் உணர்வின் எண்ணத்தால்
1.நம் நிலைக்கும்
2.நாம் செல்ல வேண்டிய வழிக்கும் தடை ஏற்படுத்துகிறது.
நற்சக்தியை… ஆண்டவன் என்ற நிலை அடைய… ஆண்டவன் பால் செல்ல எல்லா உயிர் ஆத்மாக்களிடமும் அன்பைச் செலுத்துங்கள்..! என்று இன்றைய கலியில் பல மகான்களாக ஞானத்தின் வழித் தொடரில் வந்த நாம் அறிந்த பலரும் கூறியுள்ளார்கள்.
இருப்பினும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களின் பிம்ப உடலில் பல இன்னல்களைப் பெற்று அதே செயலில் உடல் பிம்ப வலுக் குன்றியதனால் அவர்களின் வாழ் நாட்களில் பல சக்திகளைப் பெற்றிருந்தும் இவ்வுணர்வின் எண்ண செயல்முறை செலுத்தும் வழி முறை அறியாமல் பிறரின் எண்ண உணர்வு நிலையின் சுழற்சியில் சிக்கி விட்டனர்.
இராமகிருஷ்ண பரமகம்சரும் விவேகானந்தரும் ரமண மகரிஷியாகப் பலர் போற்ற இருந்தவரின் நிலையும் இன்னும் இவர்களைப் போல் ஞானத்தின் ஈர்ப்பில் வந்தவர்களும்
1.எண்ணத்தின் உணர்வைப் பிறர்பால் “பரிதாபம்” கொண்டு செலுத்தி
2.இவர்கள் செலுத்திய அன்பின் பரிதாப நிலையினாலேயே
3.அவர்களின் உணர்வு எண்ண அலையின் ஈர்ப்பு இவர்கள் உடலிலும் “சாடியது…”
4.அதனால் தான் ஞானத்தின் வழி பெற்றிருந்தும் உடல் பிம்பக் கூட்டைக் காக்க முடியவில்லை.
5.உடல் பிம்பக் கூட்டிற்கு மட்டுமல்ல… நாம் எடுக்கும் உணர்வின் எண்ண உயர் ஞானச் செயலுக்கும் “இவை எல்லாம் தடைக்கற்கள் தான்…!”
இம்மனித பிம்ப உடல் “உணர்வு எண்ண ஈர்ப்பிற்கு” மிகவும் சக்திவாய்ந்த நிலையுண்டு…!
எண்ணமுடன் எடுக்கும் சுவாச அலையில் காந்த மின் ஈர்ப்பு குண உயிரணுக்களாக இவ்வுடல் முழுமைக்கும் ஈர்த்தெடுத்து வெளிக் கக்கும் இவ்வலையின் ஈர்ப்பு நாம் எடுக்கும் எண்ணத்தில் ஈர்ப்புடன் மோதுகிறது.
இங்கு இப்பொழுது உணர்த்தும் முறை கொண்டு
1.பிறர்பால் அன்பு செலுத்திடலாகாதா..?
2.பிறரிடம் இரக்கம் காட்டிடலாகாதா..?
3.பிறருக்கு நம்மால் முடிந்த தான தர்மங்கள் அளித்திடலாகாதா..? என்று கேட்கலாம்…!
பிறர்பால் அன்பைச் செலுத்தாதீர்…!
“பிறருக்கு அன்பான குண நிலை பெற வேண்டும்…” என்ற
2.அன்பலையை அவர்கள் வளர்க்க
3.அவர்களுக்கு “நம் எண்ணத்தால் நல் நிலை பெறட்டும்…” என்று
4.இந்த உணர்வைச் செலுத்துங்கள் “அன்பாக்கி..!”
நம்மைச் சார்ந்தவரும் சரி… நாம் கண்டுணர்பவரும் சரி… அவர்கள் படும் துயரமுடன் நம் உணர்வையும் பரிதாபமாக்கி… நம்மையும் பரிதாபப்படுத்திக் கொண்டு..
1.அவர்கள் அலையுடன் நாம் ஒன்றாமல் – நம் சக்தி அலையைக் கொண்டு
2.அவர்களுக்கு நல் நிலை நடக்கட்டும்..! என்ற ஒளி அலையைப் பாய்ச்சுங்கள்.
அவர்கள் உயரவும்… உடல் நலம் பெறவும்.. நம் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு
1.”நல் நிலை” அவர்கள் பெற நம் உணர்வின் எண்ணம் செல்ல வேண்டுமேயன்றி
2.நம் உணர்வையும் எண்ணத்தையும் அவ்வுணர்வின்பால் செலுத்திடலாகாது.
அதே போல் தர்ம நிலைக்கும்… இரக்கத்தின் உணர்வால் ஒன்றி தர்மம் செய்யாமல் “பல துயரங்களில் அவர்கள் உள்ளார்கள்…” என்ற இரங்கிய தர்மம் தராமல்
1.நாம் தரும் தர்ம ஈகையினால் அவர்கள் பெற்று உயர வேண்டும் என்ற உயர்ந்த உணர்வுடன் எண்ணத்தைச் செலுத்தி
2.நாம் தரும் தர்மம்… பெறுபவரையும் உயரும் எண்ணத்திற்குச் செல்லும் முறையில்
3.நம் தர்ம முறையும் இருக்க வேண்டும்.
அப்படி இல்லை என்றால் நம் ஞானத்திற்கு…
1.பிறரின் ஈர்ப்பால்
2.அவர்களின் குண ஈர்ப்பின் எண்ணமுடன் நாம் ஒன்றியவுடன்
3.நம் நிலையும் மாறும். (இது முக்கியம்)
நாம் அறிந்த பல ஞானிகளும் அவர்கள் இரங்கிப் “பிறர்பால் செலுத்திய அன்பினாலேயே..” அவர்கள் ஞானமும் குறைந்தது.
யாம் சொல்லும் இத்தகைய பரிபக்குவ உணர்வைக் கொண்ட எண்ண ஜெபத்தில் எடுக்கும் நிலையைக் கொண்டுதான்
1.நம்முள் சேர்ந்துள்ள அமில குணத்தின் வளர்ச்சியினால்
2.சக்தி வாய்ந்த ஒளி அலையின் காந்த மின் அலையின் ஈர்ப்பை
3.அந்த மெய் ஞானிகளிடமிருந்து பெற முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
1.இந்தப் பிள்ளை யார்…?
2.இந்த உடலை உருவாக்கியது யார்…? நீ சிந்தித்துப் பார்…!
இந்த உடலை உருவாக்கியது உயிரான ஈசன் தான். அவனின் பிள்ளை தான் இந்த உடல்.
அவன் (உயிர்) என்னை உருவாக்கினான். அவனை அறியும் பருவம் பெற்றத் தான் இந்த மனித உடல். அவன் ஒளியாக இருக்கின்றான். ஆகவே…
1.அவனுடன் ஒன்றி ஒளியாக மாற்றிடும் உணர்வின் நிலைகளை
2.நீ உனக்குள் எவ்வாறு செய்ய வேண்டும்…? என்று இதைத் தெளிவாக உணர்த்தியவன் அகஸ்தியன்.
ஏனென்றால் இந்தப் பூமியில் முதல் முதலில் நஞ்சினை வென்று பேரொளியாக மாற்றிடும் ஆற்றலைப் பெற்றவன் தான் அகஸ்தியன்.
1.அதிலிருந்து வரும் கடும் மின்னல்களை அகஸ்தியன் உற்றுப் பார்த்தான்.
2அதை நுகர்ந்து தனக்குள் இருக்கும் அணுக்களுக்கு அதை உணவாகக் கொடுத்து ஒளியாக மாற்றினான்.
சில நேரங்களில் நாம் மின்னலை உற்றுப் பார்த்தால் நம் கண்களையே பறித்துவிடும். இதைப் போல வானுலக நிலைகளை உற்றுப் பார்க்கும்படி குருநாதர் என்னிடம் சொன்னார்.
மின்னல்கள் தாக்கப்படும் போது
1.அதிலே நஞ்சின் கதிரியக்கப் பொறிகள் எப்படித் தாக்குகின்றது…?
2.அதை உற்றுப் பார்த்தால் எந்தெந்த நிலைகள் ஏற்படுகின்றது…? என்று இதைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.
அக்காலங்களில் தாய் கருவிலிருக்கும்போது பெற்ற ஆற்றலால் விஷத்தை ஒடுக்கிடும் நிலை பெற்றான் அகஸ்தியன். அதன் வழி கொண்டு மின்னலின் உணர்வுகளை அவனால் பெற முடிந்தது.
நட்சத்திரங்கள் மின் கதிரின் இயக்கங்கள் கொண்டது. அதே சமயத்தில் விஷத்தின் ஆற்றல் மிக்க சக்திகள் கொண்டது.
ஒரு நட்சத்திரம் வெளிப்படுத்தும் துகளும் மற்றொரு நட்சத்திரம் வெளிப்படுத்தும் துகளும் சந்தர்ப்பத்தால் மோதும் போது தான் பொறிகள் அதிகமாகக் கிளம்பி விரிவடைந்து சிதறுகின்றது.
அந்த மின் துகள்கள் சிதறுண்டு செல்லப்படும் பொழுது அதைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து “அதனதன் துணுக்குகளாக…” மாற்றுகின்றது.
அது மாற்றி மற்றதோடு மோதிப் பல பல உணர்வுகளாக எப்படி மாறுகின்றது…? என்பதை அகஸ்தியன் அன்று தெளிவாகக் காணுகின்றான். ஏனென்றால் அவன் தாயின் கருவில் சிசுவாக இருக்கும் பொழுது நஞ்சை ஒடுக்கிடும் ஆற்றல் பெற்றவன்.
வானுலக உணர்வின் ஆற்றலை… மின்னலின் கதிரியக்கங்களை நுகர்கின்றான். இந்த மின்னல் எங்கிருந்து உருவாகின்றது…? என்பதைக் காணுகின்றான்.
பேரண்டத்தில் பிற மண்டலங்களிலிருந்து கவரும் விஷத் தன்மை கொண்டு அது சுழலும் நிலைகள் தூசிகளாகி ஒன்றுடன் ஒன்றைச் சூரியன் கவர்ந்து இணைக்கப்படும் பொழுது
1.மோதல்கள் எப்படி வருகின்றது…?
2.அதனால் பல சிதைவுகள் எப்படி வருகின்றது…?
3.இதனின் அணுக்களின் உணர்வுகள் எப்படி மாறுகின்றது…? என்பதை
4.அன்று அகஸ்தியன் கண்டதை குருநாதர் தெளிவாக்குகின்றார்.
சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே திடீரென்று “மின்னலைப் பார்..!” என்று சொன்னார் குருநாதர்.
“என் கண்கள் போய்விட்டால் என்ன செய்வது…?” என்று கேட்டேன்.
அப்புறம் அதற்குண்டான நிலைகளைச் சொல்லித் தெளிவாகக் காட்டினார் குருநாதர். மின்னலுக்குள் இருக்கும் சில அற்புதங்களும் சில நிகழ்ச்சிகளும் எவ்வாறு நிகழ்கிறது…? என்று காட்டினார்.
இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்
1.அந்த அகஸ்தியனைப் போன்றே உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை நாமும் ஒளியாக மாற்றி
2.அழியா ஒளியின் சரீரம் பெற வேண்டும் என்பதற்குத் தான்…!