துருவ நட்சத்திரத்தின் அழுத்தம் நம் உயிரிலே எப்போதும் இருக்க வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் அழுத்தம் நம் உயிரிலே எப்போதும் இருக்க வேண்டும்

 

நாட்டையோ தன் இனத்தையோ காப்பதற்காகத் “தற்கொலைப் படை” என்ற பெயரில் எங்கள் உயிரைத் தியாகம் செய்கின்றோம் என்று இருக்கின்றார்கள். போதை மருந்துகளைக் கொடுத்து அவர்கள் மனதை மாற்றி அவ்வாறு செயல்படுத்தி விடுகின்றார்கள்.

உன் குடும்பத்தை நாங்கள் காத்துக் கொள்கின்றோம்.
1.ஆண்டவன் உனக்கு எல்லாம் கொடுப்பான்… நீ அதற்காக உயிரைத் தியாகம் செய்…! என்று
2.தவறான பாதைகளைக் காட்டி உலகம் முழுவதற்குமே இந்தத் தற்கொலை படை பரவி விட்டது.

அவன் (முதலில் ஒருவன்) செய்கின்றான்… அவனைப் போன்று நாமும் செய்யலாம் அல்லவா…! நமக்கும் அந்த ஆண்டவன் கொடுக்க மாட்டானா…? என்று இப்படி ஒரு நிலை வந்து விட்டது.

வளர்வதைக் காட்டிலும் மனிதனை அழித்து வாழும் நிலை உருவாகி விட்டது. இப்படி உருவாக்கப்பட்ட விஷத் தன்மைகள் உலகம் முழுவதும் பரவி இருக்கும் இந்த நேரத்தில் நாம் எங்கே செல்லப் போகின்றோம்…?

இதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த உயிர் இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது எந்த வேதனை எடுத்ததோ… அடுத்து உடனடியாக உடல் பெறும் தன்மை இல்லை.

உயிர் உடலில் இருக்கும் பொழுதே நல்லதாக மாற்ற முடியவில்லை என்கிற போது… உயிருடன் சேர்த்து அந்த வேதனையுடன் தான் வாழ முடியும்… நரகத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருக்க முடியும்.
1.அதற்குத்தக்க (வேதனை) உடல்கள் பெற்ற பின் தான் அதிலே அடங்கும்
2.வேதனையையே உணவாக உட்கொள்ளும் தன்மை வரும்
3.விஷமான உடல் பெறும் வரையிலும் அது அடங்காது
4.அந்த வேதனையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்க வேண்டியிருக்கும்.

இது போன்ற நிலையிலிருந்து எல்லாம் நாம் விடுபட வேண்டும்.

தியான வழியினைக் கடைபிடிப்பவர்கள் சில நேரத்தில் இதையெல்லாம் காட்சியாகக் காண முடியும். உடலை விட்டுப் பிரிந்து சென்ற அத்தகைய உயிரான்மாக்கள் அவர்கள் எப்படி இருக்கின்றார்கள்…? என்பதைக் கூட நீங்கள் காண முடியும். அவர்கள் எத்தனை வேதனைப்படுகிறார்கள்…! என்பதையும் அந்த உணர்வின் அலைகளையும் காண முடியும்.

ஏனென்றால் இதையெல்லாம் நான் (ஞானகுரு) அனுபவித்துச் சொல்கின்றேன். குருநாதர் காடு மேடெல்லாம் எம்மை அலையச் செய்து அந்த உண்மையின் இயக்கத்தை “உயிரிலே என்னென்ன நடக்கின்றது…?” என்பதைத் தெளிவாகக் காட்டியுள்ளார்.

அதையெல்லாம் தெரிந்து கொண்ட பின்பு தான் எல்லோருக்கும் அந்த அருள் சக்தியைக் கொடுத்து “உங்களாலும் காண முடியும்…” என்று உணர்த்துகிறோம்.

ஆகவே
1.எத்தகைய தீமைகளும் வராதபடி தடுக்க அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை உங்களுக்குள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை வளர்த்துக் கொண்டால் – “ரிமோட் (REMOTE)”
3.தீமை என்ற உணர்வுகள் உங்கள் அருகில் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

விஞ்ஞான அறிவு கொண்டு இன்று எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற முறைப்படுத்தி கம்ப்யூட்டர் என்ற் சாதனத்தை வைத்து எத்தனையோ வேலைகளைச் செயல்படுத்துகின்றார்கள்.

ஒரு இடத்தில் பிழையாகி விட்டால் உடனே அந்தக் கம்ப்யூட்டர் அதைத் திருத்தி எத்தனையோ நிலைகளை மாற்றிச் சீர்படுத்துகின்றது.

அது போன்று தான்… நம் உயிர் எலக்ட்ரிக்காக இருக்கிறது… சுவாசிக்கும் உணர்வுகளை எலெக்ட்ரானிக்காக… (அழுத்தம்) உணர்ச்சிகளால் இயக்குகிறது.
1.நாம் சுவாசிக்கும் போது மாறுபட்ட உணர்வுகள் வந்தால்…
2.அது நம் அழுத்தங்களை மாற்றினால்… அது தவறு என்று தெரிந்தால்…
3.அடுத்த கணமே ஈஸ்வரா என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
4.துருவ நட்சத்திரத்தின் பேரருள் நாங்கள் பெற வேண்டும் என்ற “இந்த அழுத்தத்தைக் கொடுத்து”
5.முதலில் நுகர்ந்த மாறுபட்ட உணர்வின் அழுத்தங்களை மாற்றிக் கொண்டு
6.இனி நாளை நடப்பது நல்லதாக இருக்க வேண்டும் என்ற உணர்வை எடுத்து வலுவாக்கி…
6.இந்தக் கணக்கைக் கூட்டிக் கொண்டு வர வேண்டும்.

நாம் எடுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்… கண்ணின் கரு விழியால் பதிவாக்கிய நிலைகள் கொண்டு… உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் இணைத்து,,, நல்லதாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்…!
1.நல்ல நேரத்தை உருவாக்குவது உங்கள் கையிலே தான் இருக்கின்றது
2.துருவ நட்சத்திரத்தின் அழுத்தத்தைக் கொண்டு எதையுமே நல்லதாக்கும் ஒரு பழக்கம் நமக்கு வர வேண்டும்.

Leave a Reply