உங்கள் வழிக்குத் தான் என்னை அழைக்கின்றீர்கள்… குரு அருளைப் பாய்ச்சினாலும் எவரும் மதிப்பதாகத் தெரியவில்லை…!

உங்கள் வழிக்குத் தான் என்னை அழைக்கின்றீர்கள்… குரு அருளைப் பாய்ச்சினாலும் எவரும் மதிப்பதாகத் தெரியவில்லை…!

 

விஷக் கிருமிகள் பரவிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் அந்த விஷத்தன்மைகள் நமக்குள் வராது தடுத்துப் பழகுதல் வேண்டும் காரணம்… இனி வரும் காலம் மிகக் கடினமாக இருக்கின்றது.

இன்று நாம் வாழக்கூடிய இந்தக் கால கட்டத்தில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இந்தப் பூமி முழுவதும் பரவச் செய்து
2.நம் உடலுக்குள் அதிகமாகப் பெருக்கி… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை
3.நமக்குள் “பெரும் வட்டமாக…” மாற்றிக் கொள்ள வேண்டும்.

எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்…! தீமையான உணர்வுகளை மாற்றி அமைக்கும் சக்தியினைப் பெறச் செய்வதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

பதிவானதை நினைவாக்கி உங்கள் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை பெறச் செய்வதற்குத் தான் இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்

மற்ற மார்க்கங்களில் எல்லாம் இப்படிச் செய்ய மாட்டார்கள். காசைக் கொடுத்துத் தான் அதிலே மெம்பராக வேண்டும். அவர்கள் சொல்கிறபடி எல்லாம் கட்டுப்பட வேண்டும்… கட்டுப்பட்டவர்களுக்குத் தான் சொல்லிக் கொடுப்பார்கள்.

ஆனால் யாம் உங்களுக்கு நேரடியாக பப்ளிக்காக (PUBLIC) சொன்னால்…
1.நீங்கள் என்ன செய்கின்றீர்கள்…? அலட்சியப்படுத்தி விடுகின்றீர்கள்…!
2.இங்கே இந்தப் பக்கம் கேட்டு விட்டு அந்தப் பக்கம் காது வழியாக வெளியில் விட்டு விட்டுச் செல்கின்றீர்கள்.

என் குடும்பத்தில் ஒரே தொல்லையாக இருக்கின்றது. என் பிள்ளைகள் இப்படி இருந்து கொண்டிருக்கின்றது. நான் எதைச் செய்தாலும் அது நஷ்டம் ஆகின்றது…! என்று இதைத்தான் இராகமாகப் பாட ஆரம்பிக்கிறீர்கள்.

“நான் (ஞானகுரு) கொடுத்த சக்தியைப் பயன்படுத்துவோம்…!” என்ற நிலை இல்லாது இருக்கின்றது. எவ்வளவோ சிரமப்பட்டுப் பெற்ற… எனக்குள் விளைய வைத்த… அந்த உயர்ந்த ஞானத்தைத் தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
1.ஆனால் கொடுத்த வித்தை உதறித் தள்ளிவிட்டு உங்களுக்குள் வேதனையைக் கூட்டிக் கொண்டு
2.என்னையும் வேதனைக்கு உள்ளாக்கும் நிலைக்குத்தான் நீங்கள் வருகின்றீர்கள்
3.உங்கள் வழிக்குத் தான் என்னை அழைக்கின்றீர்கள்
4.இருளை நீக்கும் குரு அருளைப் பாய்ச்சினாலும் எவரும் மதிப்பதாகத் தெரியவில்லை
5.இருக்கலாம்… மதிப்பதாக நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கலாம்…
6.ஆர்வம் இருக்கும்…! ஆனால் அப்புறம் என்ன செய்வீர்கள்…?
7.அவன் அப்படிப் பேசினான்… இவன் இப்படிச் செய்கின்றான்…! சும்மா விடுவதா…?
8.கடன் வாங்கிச் சென்றவன் பணத்தைத் திரும்ப கொடுக்கவில்லையே… என்னை ஏமாற்றுகின்றானே…! என்ற
9.இந்த நினைவுகள் தான் வருகின்றதே தவிர நான் சொல்லும் நிலைகளை எடுக்கும் நிலை இல்லை…!

இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமல் எத்தனையோ தீமைகள் ஆட்டிப்படைக்கின்றது. அதை எல்லாம் மாற்றி அமைக்க அருள் உணர்வுகளைப் பெருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் முடிவு மிகவும் நெருங்கி விட்டது…!

இன்று இளம் குழந்தையாக இருந்தாலும் சரி… வயது முதிர்ந்தவர்களாக இருந்தாலும் சரி… நம் பூமி கொதிகலனாக மாறிக் கொண்டிருக்கின்றது… விஷத்தன்மைகள் அதிகமாகப் பரவுகின்றது.

இந்தப் பூமிக்குள் மட்டுமல்ல…! இந்தப் பிரபஞ்சத்திற்குள்ளேயே கடும் தீய விளைவுகள் ஆகி அல்லோகலப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றது. யார்… எதைத் தேடி… எதைக் காக்கப் போகின்றோம்…!
1.இது போன்ற நிலைகளை எல்லாம் கடந்து
2.என்றுமே அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

இந்தச் சூரியனே அழிந்தாலும் பிரபஞ்சமே அழிந்தாலும் இந்தப் பிரபஞ்சத்திலே தோன்றிய உயிரணு மனிதனாக வளர்ச்சி அடைந்து.. தன் ஆறாவது அறிவை ஏழாவது… ஒளியாக மாற்றி விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக வாழ்வது போல் நாமும் அங்கே வாழ முடியும்…! ஏகாந்த நிலையை அடைய முடியும்… எதிர்ப்பே இல்லாத நிலையம் நஞ்சை ஒளியாக மாற்றிடும் திறனும் பெற முடியும்.

அதைப் பெறக்கூடிய தகுதியைத்தான் திரும்பத் திரும்ப உங்களுக்கு இங்கே ஏற்படுத்துகின்றோம்.

Leave a Reply