யாம் சொல்வது… ஏதோ விளையாட்டிற்காக அல்ல…!

யாம் சொல்வது… ஏதோ விளையாட்டிற்காக அல்ல…!

 

நம் பிரபஞ்சத்தில் 27 நட்சத்திரங்களின் துணை கொண்டு தான் நம் சூரியன் வாழ்கிறது. பிற மண்டலங்களில் இருந்து 27 விதமான உணர்வுகளைக் கவர்ந்து 27 நட்சத்திரங்களும் தனக்குள் பால்வெளி மண்டலங்களாக மாற்றுகின்றது.

அதிலிருந்து வரக்கூடிய துகள்களைத் தான் நமது சூரியன் கவர்ந்து அது வாழுகின்றது. 27 நட்சத்திரங்களின் துணை இல்லை என்றால் சூரியனும் நாளடைவில் மங்க நேரும்.

நம்முடைய குடும்பத்தில் ஒரு பத்து பேர் இருக்கின்றார்கள் என்றால் மூத்தவர்கள் முதுமை அடைகின்றனர். குழந்தைகளுக்குத் திருமணமாகிறது. ஆனால் திருமணமான பின்
1.அவர்கள் தனித் தனிக் குடும்பங்களாகப் பிரிந்து சென்று விடுகிறார்கள்.
2.அப்போது… அவர்கள் குடும்பத்தைக் கவனிப்பதற்குத் தான் நேரம் இருக்கும்
3.இங்கே இந்தக் குடும்பத்தில் உள்ளவரைக் கவனிப்பதற்கு நேரம் இருக்காது.
4.அப்படியே இருந்தாலும் நம் மீது பற்று வராது.
5.அவர்கள் குடும்பத்தாரைக் காக்கத் தான் நினைவு வரும்.

அதைப் போன்று தான் 27 நட்சத்திரங்களும் நம் சூரியனைப் போலவே தனித் தனிச் சூரியக் குடும்பங்களாக மாறிக் கொண்டிருக்கின்றது. சரி பகுதிக்கு மேல் பிரிந்து சென்று விட்டது.

ஆகையினால்…
1.மற்ற பிரபஞ்சங்களிலிருந்து அது இழுத்துக் கொடுக்கும் உணர்வுகள் இங்கே இந்தச் சூரிய குடும்பத்திற்கு குறைவானதால்
2.மனிதனால் செயற்கையில் உருவாக்கப்பட்ட கதிரியக்கச் சக்திகளை ஜீரணிக்கக் கூடிய சக்தியை நம் சூரியன் இழந்து
3.சூரியனுக்குள் இந்தக் கதிரியக்கப் பொறிகள் அதிகமாகி சூரியனே கொதிகலனாக மாறி
4.பல மடங்கு விஷக்கதிரியக்கங்களைப் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றது.
5.(தினசரி பத்திரிக்கை படிப்பவர்களுக்கு இப்போது இது தெரியும் – “SOLAR STORMS” என்று சொல்வார்கள். இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒரு முறை இது ஏற்பட்டுக் கொண்டுள்ளது)

அதன் விளைவாக… பிரபஞ்சத்தில் வாழும் கோள்கள் அனைத்திலும் இதே போன்று கதிரியக்கங்கள் அதிகமாகச் சேர்ந்து கொண்டுள்ளது.

நம் பூமியில் எப்படிப் பூகம்பங்கள் ஏற்படுகின்றதோ அதே போல் எல்லாக் கோள்களிலும் இதே போன்று கொதிகலனாக எரிமலைகளாகிப் பூகம்பங்கள் ஏற்பட்டு நடு மையம் கரைந்து போகும் நிலை வருகின்றது…! (நாளடைவில் இதையும் பத்திரிக்கைகளில் படிக்கலாம்)

இப்படி… சூரியன் செயலிழந்தால் அது கரைந்து மீண்டும் அமில சக்தி அடையப்படும் பொழுது… இதைத் தொடர்ந்து இதற்கு உணவு கொடுத்த நட்சத்திரங்கள் 27ம் அதைக் கவர்ந்து அது சூரியனாக மாறி விடுகின்றது.

சூரியன் செயலிழக்கும் பொழுது கோள்கள் அனைத்தும் அந்தச் சுழற்சியில் இழுத்துக் கரைத்து ஆவியாக மாறிவிடும்.

இந்தப் பிரபஞ்சத்தில் பூமியில் வாழ்ந்த மனிதனும் மற்ற உயிரணுக்களும் இந்த உடலை விட்டுச் சிதைந்து சென்றால் பிரபஞ்சத்தில் மீண்டும் அணுத்தன்மையாக படரும்

ஆனால் இந்த மனித உடலில் வாழும் போது எத்தனை வேதனைப்பட்டு அவஸ்தைப்பட்டதோ அதை எல்லாம் உயிருடன் சேர்த்து “அந்த உயிரான்மா…”
1.உடலை விட்டு உயிர் செல்லும் போது எந்த வேதனையை அனுபவித்ததோ
2.எந்த வேதனையும் உணர்வுடன் செல்கின்றதோ அதற்குத் தக்க அடுத்த நிலை பெறும்
3.இருந்தாலும் தாவர இனங்களோ மற்ற நிலை இல்லாத போது அடுத்த உடலைப் பெறும் தகுதி இழந்து
4.மற்ற பிரபஞ்சத்தில் இயக்கப்படும் பொழுது “கடும் நரக வேதனைப்படும்…”

இதைப் போன்ற நிலையில் தான் உலகம் மாறிக் கொண்டிருக்கின்றது.

மிருகங்களைப் போன்று மனிதனுக்கு மனிதன் தீவிரவாதங்கள் என்று பெருகப்பட்டு யாரையோ காக்க… எதற்காகவோ என்று இல்லாதபடி… எல்லோரையும் அழிக்கும் நிலையாக வந்து கொண்டிருக்கின்றது.

1.பெரும் பெரும் கூட்டத்தையே அழித்து விடுகின்றார்கள்… அழிக்க முற்பட்டவனும் மடிந்து விடுகின்றான்
2.தன்னை மறந்து செயல்படும் நிலையில் தான் இன்றைய உலகம் இருக்கின்றது.

சூரியன் அழிந்தால் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் திசை மாறினால் மனித உடல்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பல விபரீதங்கள் ஏற்படத் தான் செய்யும்.

இதிலிருந்து மீள வேண்டும் என்று விரும்பினால் நம் குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தே ஆக வேண்டும்.
ஏனென்றால்
1.எது எப்படி மாறினாலும் அது அனைத்தையும் துருவ நட்சத்திரம் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது.
2.அதை நுகர்ந்து நமக்குள் வலிமை சேர்த்துக் கொண்டால் நமக்குள் அறியாது புகுந்த இருளை நீக்கலாம்… அமைதி கொண்டு வாழவும் முடியும்…
3.உடலை விட்டுப் பிரிந்தால் நாம் வலு சேர்த்த துருவ நட்சத்திரத்தின் சக்தியின் துணையால் அதன் ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்ல முடியும்.

Leave a Reply