September 22 உபதேசம்

விஷத்தால் நெருப்பு உருவானாலும்… நெருப்பு அந்த விஷத்தையே ஒளியாக்குகிறது

 

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். அந்தப் பதிவை மீண்டும் நினைவாக்கினால் “உங்களை நீங்கள் அறிய முடியும்…”

உயிர் ஒளியாக இருக்கின்றது… நெருப்பிலே மனிதன் குதித்தால் உயிர் அழிவதில்லை… உடல் கருகுகின்றது. ஆனால்
1.அகண்ட அண்டத்தில் விஷத்தின் தன்மை தாக்கி மற்றதைக் கருக்கும் நிலை இல்லை.
2.விஷம் தாக்கித் தான் நெருப்பாக மாறியது
3.நெருப்பாக ஆனபின் விஷத்தைப் பிரிக்கின்றது… இது இயற்கை…!

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் விஞ்ஞான அறிவிலே படித்துக் கொண்டவர்கள். டெக்னிக்கல் (நுட்பம்) என்ற அறிவை வளர்த்துக் கொண்டவர்கள். குருநாதர் காட்டிய வழியில் மெய் ஞானிகள் சொன்ன உண்மைகளை யாம் நினைவுபடுத்தும் பொழுது உங்களிலே இது ஆழமாகப் பதிவாகும்.

1.பதிவானதை மீண்டும் மீண்டும் நினைவாக்கி
2.இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையும் சக்தியாக மாற்றிக் கொள்ளும் ஆற்றல் உங்களுக்குள் வரவேண்டும்.
3.தீமையான உணர்வுகளை நுகர நேர்ந்தாலும் அதனுடைய வளர்ச்சி உங்களை மாற்ற நேர்ந்தால்
4.அதை உங்கள் நிலைக்கு மாற்றி அமைக்கும் அந்தத் திறன் பெற வேண்டும் என்பதற்குத்தான்
5.நமது குருநாதர் காட்டிய வழியில் ஆயுட்கால மெம்பராக துருவ நட்சத்திரத்துடன் உங்களை இணைக்கச் செய்கின்றோம்.

குருவுடன் இணைந்து… துருவ நட்சத்திரத்துடன் இணைந்து… ஆயுள் கால மெம்பராக ஆகும் பொழுது 2000 சூரியக் குடும்பங்களில் விளைந்த உணர்வின் ஆற்றல்களை நீங்கள் பெற முடியும்.

1.ஒரு உயிரணு நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடல்களை எப்படி மாற்றி அமைக்கின்றதோ அதைப் போல்
2.உடல் பெறும் உணர்வுகளை மாற்றி உயிர் ஒளியாக இருப்பது போன்று
3.உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக மாறும் நிலை தான்.

ஆகவே கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றென இணைந்து ஒளியாக மாறுதல் வேண்டும்

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி “துருவ நட்சத்திரமாக ஆன அந்த நிலையை… நாம் அனைவரும் பெற முடியும்… பெற வேண்டும்.

ஞான வழியில்… வளர்ச்சி பெறுவது என்பது தனக்குத் தானே தவிர அடுத்தவர் கொடுத்துப் பெறுவதல்ல அது

 

நாம் எடுத்த வினைக்கு நாயகன் இந்தச் சரீரம் என்றால் முழுமையின் பொருள் விளங்கிடுமா…? உருவத்தில் மனித உடலையும் யானையின் தலையையும் சித்தர்கள் காட்டியதன் சூட்சமப் பொருள் என்ன…?

மனித மனம் தீய குணத்தின் வசம் ஆட்படும் பொழுது எடுக்கும் எண்ணச் செயல் சோர்விற்குப் பின் உணர்வுகளின் உந்துதல் காமத்தின் வழி மோகமாகின்றது. அந்தச் சூட்சமப் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1.விநாயகருக்குப் பெரிய வயிற்றினைக் காட்டி
2.சகல உலகமும் அதனுள்…! என்று தத்துவம் கூறினால் புதிர் விடுபடுமா…?

உணவாக உட்கொள்ளும் உணவின் அந்த அமில குணங்கள்
1.சலிப்பின் செயலுக்கு மனித மனத்தின் உணவின் மாறுபாட்டால்
2.பத்துத் தலைகள் கொண்ட உருவம் உதித்தது… என்பதுவே
3.”உணவினால் உண்டாக்கப்பட்ட மோக குணங்கள் தான்…”

அந்த மோகத்தின் செயலைச் சித்தரிக்கவே எலியை வாகனமாகக் காட்டினார்கள். பூமிக்குள் மறைந்து வாழும் எலியைப் போல்
1.மனித மனத்தில் புதைந்து கிடக்கும் காமமும்
2.உணவின் செயலால் உணர்வுகள் கிளர்ந்தெழுந்த மோகமும் உள்ளது என்ற வகையில் உண்மையை உணர வேண்டும்.

வினையின் நாயகனே விநாயகர் என்று சொன்னதன் உட்பொருள் என்ன…?

எண்ணம் கொண்டு எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப உருவான இந்தச் சரீரமான நாயகனைக் கொண்டு தன் உயிராத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்பதே…!

பூமியின் ஈர்ப்பில் வாசனை கொண்டு எடுத்துக் கொண்ட எண்ணம் கொண்டு தன்னை அறியும் பக்குவ கதிக்காக வேண்டி
1.அன்று சித்தனால் வழியமைத்துக் காட்டிய
2.சூட்சம உருவகப்படுத்திக் காட்டப்பட்டதே விநாயக உருவம்.

இந்தச் சரீர பிம்பத்தில் இருக்கும் கோடானுகோடி உயிரணுக்களும் வினையின் நாயகன் செயலுக்கு தியான ஈர்ப்பின் தொடரில் ஆட்கொள்ளப்பட்டுச் சக்தி ஈர்த்துச் சக்தி அளித்திடும் செயல் வழியின் உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்திடல் வேண்டும்.

அதை உணர்ந்தால் உலகோதய வாசனைப் பிடிப்பில் வாழும் நாம் ஒலி கொண்டு ஒளி பெற்றிடும் நிலையில்
1.உயிர் குரு (நம் உயிராத்மா) தன் தனித்துவச் சக்தியைப் பெற்றுக் கொள்ள
2.கணங்களாகிய இந்தச் சரீரத்தில் உள்ள உயிரணுக்களுக்கு ஒளி சக்தியை ஊட்டி
3.அந்தக் கணங்களின் கூட்டத்தில் “பதியாக” ஓர் சிறப்பிடத்தை உயிராத்ம சக்தி பெற்று
4.தன் வலு ஈர்ப்பின் சக்தி கொண்டு வலுவின் வலு வீரியமாகத் தன்னை வளர்ச்சிப்படுத்திட முடியும்.

இப்படி ஒவ்வொரு உயிரும் ஆத்ம சக்தியின் கலப்பில் தன்னைத் தானே வளர்ச்சிப்படுத்திக் கொண்டிட முடிந்திடுமே அல்லாது “பிறிதொருவர் அளிப்பது அல்ல எந்த ஜெப சக்தியையுமே…!”

மகரிஷிகளால் சூட்சமம் கொண்டு உணர்த்திட வருவதெல்லாம்…
1.தங்களின் வழித் தோன்றல்கள் வாழையடி வாழையாக வரும் உயிராத்மாக்கள்
2.”நன் நிலை பெற வேண்டும்…” என்ற பாச உணர்வினால் தானப்பா…!

இந்தச் சரீரத்தின் செயலில் அகத்தியர் அன்று காட்டினார் “வாதாபி ஜீரணம்…” என்று. வாதாபி ஜீரணம் என்றால் என்னப்பா…?

அறிந்து கொண்டிருக்கும்… அனைத்தையும் உணர்ந்து கொண்டிருக்கும் நிலையில்… அறியாத நிலையில் அசுர குணங்கள் மனிதனின் எண்ணத்தில் ஆட்கொள்ளும் பொழுது உடலில் சோர்வும் ஜீரண அவஸ்தையும் ஏற்படுகின்றது.

அதன் பின் அந்த அசுர குணங்களினால் இந்தச் சரீரம் கொண்டு செயல்படுத்திட முற்படும் மோக உணர்வுகளையும்… அந்த மோக உணர்வுகளைத் தூண்டிடும் உயிரணுக்களையும்… “ஞானாக்கினியான எண்ணம் கொண்டு சுட்டெரித்ததே வாதாபி ஜீரணம்…!”

பத்துத் தலைகள் என்று காட்டியதெல்லாம் மோகத்தின் கிளைகளே…!

“உணவின் மாறுபாடும்…” மோக உணர்வுகளைக் கூட்டும். அதைச் சுட்டிக் காட்டுவதே விநாயக உருவத்தில் சிவப்புத் திலகமிட்டுக் காட்டப்பட்டது.

எடுக்கும் எண்ண வலுவில் ஈர்த்து ஒளியைக் கூட்டிக் கொள்ளும் ஜெப நிலை பெற்றவன் மனிதச் சரீரம் கொண்டே உயிராத்ம சக்தியை உயர்த்திடல் வேண்டும் என்றால் “நாவின் சுவைக்கு…” அடிபணிந்திடாத பக்குவத்திற்கு வர வேண்டும்.

1.உணர்வுகள் கிளர்ந்திடும் மூலமே “வயிறு…” என்றும்
2.மோகத்தின் கிளர்தலின் மூலமும் அங்கு தான் என்றும்
3.அந்த மோகத்தின் கிளைகள் வலுப் பெற்றுவிட்டால் அறிவின் ஆற்றல் சிதைந்து விடும் என்ற
4.அந்த உண்மையின் கருப்பொருளை உணர்த்திடவே ஞானக்கண் என்றும்… செந்தூரத் திலகம் என்று காட்டினார்கள் சித்தர்கள்.

நாம் கொள்ள வேண்டிய உயர் ஞான வலுவைப் பெற்று விட்டால் உரப்புயலாக எழுந்த அந்த மோக குணங்கள் அனைத்தும் ஞான அக்கினியில் பொசுங்கிவிடும்.

“எண்ண வலு கொண்ட ஜெப சக்தி பெற்றவனால்…” உணவின் உயிரணுக்களையும் அதனின் மோக குணங்களையும் மாய்க்க முடியும்.
1.அவைகளையும் தன் சரீர ஒளி உயிரணுக்களுடன் ஒன்றச் செய்து
2.அவைகளுக்கும் சக்தி அளித்திட முடியும் என்பதன் பொருளை
3.ஆய்ந்து தெளிந்து செயல்பட வேண்டும் என்பதே இந்தப் பாடத்தின் சிறப்பு.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோரும் பெற வேண்டும். அந்தப் பேரருள் பேரொளி உணர்வுகள் அனைவரும் பெற வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

தீமைகளை வளர்க்காது தடைப்படுத்திடவும் நல்ல உணர்வின் தன்மைகளை நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்கள் அனைத்திற்கும் கொடுப்பதற்காகவும் தான் ஒவ்வொரு மாதத்திலும் நந்நாளை உருவாக்கிக் கொடுத்தார்கள் ஞானிகள்.

ஏனென்றால் ஒவ்வொரு நாளும் நாம் எத்தனையோ பேரைச் சந்திக்கின்றோம். அவர்களுடைய துன்பங்களை எல்லாம் நாம் கேட்டறிந்துள்ளோம். நமக்குள் அந்த அணுக்களின் தன்மை பதிவாகியிருக்கும்.

பதிவான அத்தகைய தீய உணர்வுகள் நமக்குள் வளராது தடுப்பதற்குத்தான் “சிவன் இராத்திரி அன்று விழித்திரு” என்று உணர்த்தினார்கள் ஞானிகள்.

“விழித்திரு..,” என்றால் ஒருவர் துயரப்படும் பொழுது உற்று நோக்கினால் அந்த உணர்வுகள் தனக்குள் வராதபடித் தடுத்து நிறுத்த அப்பொழுதே நாம் விழித்திருத்தல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். எது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எது எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வலைகளை நமக்குள் காலை நான்கு மணிக்கெல்லாம் எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்து நாங்கள் பார்ப்பவர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

தினசரி வாழ்க்கையில் “யார் யாரையெல்லாம் நாம் சந்தித்தோமோ…” அவர்கள் குடும்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும். மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அதே சமயத்தில் நாம் உலகில் உள்ள எத்தனையோ பேரிடம் பழகுகின்றோம். பத்திரிக்கை வாயிலாகவோ, டி.வி. மூலமாகவோ உலக மக்கள் உணர்வுகளை நாம் நுகர நேர்கின்றது.

ஆகவே உலக மக்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று அவர்கள் எல்லா நலமும் எல்லா வளமும் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இவ்வாறு காலையில் 4 மணியிலிருந்து ஆறு மணிக்குள் எண்ணினால் நம் வாழ்க்கையில் சந்தித்த நல்லதோ கெட்டதோ சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ இதைப் போன்ற உணர்வுகள் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்திருந்தால் “அந்த அணுக்களுக்கு ஆகாரம் போகாது தடைப்படுத்தப்படுகின்றது…”

காலை 6 மணிக்கெல்லாம் நாம் ஈர்க்க மறுத்த அந்தத் தீமையான உணர்வுகளைச் சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து அழைத்துச் சென்றுவிடுகின்றது. நம் ஆன்மா சுத்தமடைகின்றது.

மகா சிவன் இராத்திரி.., பல கோடிச் சரீரங்களிலிருந்து மனிதனாக உருவாக்கிய உயிர் நாம் நம் உடலுக்குள் மறைந்துள்ளது. மனிதனான பின் நமக்குள் பல கோடி குணங்கள் நமக்குள் மறைந்துள்ளது.

சிவனுக்கு அபிஷேகம் செய்வதும் ஆராதனை செய்வதும் அதையெல்லாம் செய்தால் மெச்சி அவன் நமக்குச் செய்வான் என்ற நம்பிக்கையில் தான் நாம் ஆலயங்களுக்குள் செல்கின்றோம்.

ஆனால் ஞானிகள் காட்டிய சாஸ்திரப்படி சிவன் யார்…? நம் உடலே சிவம்.

இந்த உடலான சிவனுக்கு உயர்ந்த உணர்வின் குணங்களை நாம் நுகர்ந்தால் அபிஷேகம் ஆகின்றது. அந்த அருள் உணர்வுகள் மகிழ்ச்சி பெறும் உணர்வாக ஆராதனையாக மாறுகின்றது. தெளிந்த மனதை நமக்கு ஊட்டுகின்றது.

நமக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்குச் சுவைமிக்க அமுதாகக் கிடைக்கின்றது. அது மகிழ்ந்து வாழும் உணர்வுகளை உணர்ச்சிகளை உந்துகின்றது.

அதன் வழி கொண்டு சிவனான இந்த உடலில் அந்த அரும்பெரும் சக்தியாக மகிழ்ந்து வாழும் நிலை உருப்பெறுகின்றது என்பதைத்தான் உருவத்தை அமைத்துத் “துவைதம்” (திடப்பொருள்) என்று சிலையை வைத்துக் காட்டினார்கள்.

அதில் உணர்த்தப்பட்டுள்ள நற்குணங்களை “அத்வைதம்” (சூட்சமம்) என்றும் அப்பொழுது (அந்தச் சிலையை உற்றுப் பார்த்து) நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் இயக்கப்படும் பொழுது “விசிஷ்டாத்வைதம்” என்றும் மிகத் தெளிவாகக் காட்டினார்கள்.

“உயர்ந்த குணங்களை… நமது உடலாக்க வேண்டும்…” என்பதுதான் ஆலயத்தின் பண்புகள்.

இந்த உடலுக்குள் (இருளுக்குள் – இராத்திரி) இயங்கி அந்த உயர்ந்த உணர்ச்சிகளை உந்தி அதன் வழி நமக்குள் நுகர்ந்தறிந்து தீமைகளை நீக்கும் நிலை பெறுகின்றோம்.

இந்த உணர்வின் இயக்கமாக நாம் எப்படி உருப்பெறுகின்றோம் என்பதை உணர்த்துவதற்குத்தான் அன்று சிவன் இராத்திரி அன்று “விழித்திரு” என்று உணர்த்தினார்கள் ஞானிகள்.

இதை வகுத்துத்தான் சிவன் ஆலயத்தில் இவ்வாறு வைத்தார்கள்.

வில்லிப்புத்தூரார் உருவாக்கிய “ஆண்டாள் திருஸ்தலம்”

 

“நாத விந்துகள் ஆதி நமோ… நமோ… வேத மந்திர சொரூபாய நமோ… நமோ… வெகு கோடி…!”
1.நாம் எதனின் உணர்வை நுகர்ந்தோமோ அந்த உணர்ச்சியின் உருவமாக
2.பல கோடிச் சரீரங்களைப் பெற்று வந்தோம் என்ற நிலைகளை அருணகிரிநாதர் இப்படிப் பாடுகின்றார்.

ரிக் வேதத்தில் கூறியது போல வான் வீதியிலிருந்து வரும் ஆற்றல்கள் ரா…ரா…ரா… ரீ…ரீ…ரீ…ரீ… ரு…ரு…ரூ…ரூ… ரு…ரு…ரூ…ரூ… ரீ…ரீ…ரீ…ரீ… என்று இந்த உணர்வின் தன்மையைப் பாடலாகப் பாடுகின்றான்.

காரணம் 27 நட்சத்திரங்கள் அது வெளிப்படுத்தக்கூடிய உணர்வுகள் சூரியன் ஈர்க்கும் பாதைக்குள் வரப்படும் பொழுது ஒன்றோடு ஒன்று மோதிய பின்
1.அதனுடைய சப்தங்கள் பலவாறு எப்படி மாறுகின்றது…?
2.அதற்கொப்ப உணர்வுகள் எப்படி மாறுகின்றது…? என்ற உண்மைகளை இந்தப் பாடலின் மூலம் உணர்த்துகின்றார்.

ஆனால் பதஞ்சலி முனிவராக இருக்கும் நிலையில் உடலின் நிலைகளுக்கு ஆசைப்பட்டான். அந்த உடலிலிருந்து அதை மறுத்து உண்மையின் உணர்வை அறியப்படும் பொழுது திருமூலராகின்றான்.

தவறின் வழிகளில் சென்ற அருணகிரிநாதரைத் தெளிவான நிலைகள் கொண்டு வருவதற்காக அந்த்த் திருமூலர் கண்ட உண்மையின் உணர்வுகளை அருணகிரியின் சகோதரி படித்தது.

ஆனால் அருணகிரிநாதரைத் திருத்த முடியாத நிலையில் உடலை விட்டுப் பிரியும் சகோதரியின் ஆன்மா
1.அருணகிரியின் உடலில் புகுந்து அந்த உடலை இயக்கி
2.திருமூலர் கண்ட உண்மைகளைப் பாடலாக வெளிப்படுத்தச் செய்கின்றது
3.அருணகிரிநாதரைத் திருந்தி வாழச் செய்கின்றது.

வில்லிபாரதம் என்று சொல்லுகின்றோமே… அதை எழுதிய வில்லிபுத்தூரார் அருணகிரி வாழ்ந்த காலத்தில் இருந்தவர் தான்.

புலமை பெற்றவர்கள்… கவிநயங்கள் கொண்டு பாடும் பாடல்களுக்குச் சரியான விளக்கம் சொல்லவில்லை என்றால் அவமதிக்கும் நிலையில் துரட்டியைப் போட்டுக் காதை இழுத்து ஊனமாக்கி விடுவார்கள். அக்கால வழக்கம் இது.

அருணகிரிநாதர் அங்கே செல்லும் பொழுது ஆறாவது அறிவின் தன்மையின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றார். வான்வீதியிலிருந்து வரும் உணர்வின் தன்மைகளைப் பெறும் போது அதன் வழியில் ஆறாவது அறிவு எப்படித் தெரிந்து கொண்டது…? தெளிந்து கொண்டது…? என்று அதை எடுத்துச் சொல்கின்றான்.

அப்போது அருணகிரிநாதர் ரா…ரா…ரா… ரீ…ரீ…ரீ…ரீ… ரு…ரு…ரூ…ரூ… என்ற பாடலைப் பாடப்படும் பொழுது “இதற்குண்டான விளக்கங்கள் சொல்ல வேண்டும்…!” என்று சொன்னவுடனே வில்லிப்புத்தூரால் அதைச் சொல்ல முடியவில்லை.

1.ரா..ரா.. ரீ..ரீ… என்ற உணர்வின் ஒலி அதிர்வுகளையும்
2.உணர்வுகள் மாற்றத்தையும் உணர்வுக்கொப்ப உடல்களின் அமைப்பும்
3.கோள்களின் அமைப்பும் பிரபஞ்சத்தின் மாற்றமும் என்ற நிலைகளில்
4.உயிர் என்ற இந்தப் பிரபஞ்சத்தில் உணர்வின் இயக்கமாக உடல்கள் எப்படி மாறுகின்றது…? என்ற தத்துவத்தைத் தான் அவன் பாடுகின்றான்.

இந்த விடைகளை அங்கே கேட்கப்படும் பொழுது வில்லிபுத்தூரர் சொல்ல முடியவில்லை. ஆனால் அவன் பாடிய பாடல்களுக்கு அருணகிரி விடை கொடுக்கின்றான் ஆனால் இவன் பாடிய பாடலுக்கு அவனுக்கு விடை கொடுக்க முடியவில்லை,

மகாபாரதப் போர் என்ற நிலையில் வரப்படும் பொழுது வில்லி பாரதத்தை எழுதிய வில்லிப்புத்தூரார் அருணகிரிநாதரிடம் இந்த விளக்கங்களைக் கேட்ட பின் “ஆண்டாள்…” என்ற நிலையிலே அந்த உணர்வின் தன்மையைப் பதியச் செய்கின்றான்.

ஏனென்றால்…
1.எதனின் உணர்வின் தன்மையை நாம் நுகர்கின்றோமோ அந்த உணர்ச்சிகள் தான் தன்னை ஆளுகின்றது (ஆண்டாள்).
2.நாம் நுகரும் உணர்வுகள் உயிரிலே படும் பொழுது தான் அரங்கநாதன் என்றும்
3.உணர்வின் தன்மை தனக்குள் ஆளுகிறது என்றும் ஆண்டாள் என்று திருஸ்தலத்தை அவன் அமைக்கின்றான்.

அதன் வழி வில்லி பாரதத்தை எழுதி வில்லிப்புத்தூரார் (திருவில்லிப்புத்தூர்) திருந்தி வாழ்ந்தான்.

1.ஆகவே உடலை விட்டுப் பிரிந்த ஒவ்வொரு உயிரும் எந்த நிலையில்… எப்படிச் செயல்படுகின்றது..? என்பதை உணர்ந்து
2.இந்த மனித வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும்…? என்பதை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது.

நம் மீது மோதும் எதிர் நிலைகளுக்கு நம் எண்ணத்தைச் செலுத்திடலாகாது… அதற்கு அடிமையாகவும் கூடாது

 

சரீரத்தில் தாக்கப்படும் நோயை நீக்க மருத்துவ அறிவின் எண்ணமானது நோயின் குணத் தன்மைகளை நாடி அளவறிந்து “மருந்து கொடுப்பது…” என்பது அணுபோக முறைப்படி செயல்படுத்த வேண்டும்.

சரீரத்தில் செயல்படும் தன்மைகளை நாடிகளின் துடிப்பலையால் காலம் அறிந்து அந்த நோயின் தன்மைகளை அறிந்து கொண்டு நோய் கடிந்திடும் செயலின் மூலம் மருத்துவப் பொருள்களைச் “சூரணம்…” செய்து கொடுத்து நற்பயன் விளைவித்தனர் அக்காலங்களில்.

அப்படிக் கொடுக்கப்பட்ட வைத்திய முறையில் மனப்பக்குவம் பெற்றிடும் வழி முறைகளுக்கு
1.“நாவின் அதி சுவை குணங்களை…” நீக்கிடும் எண்ணத்திற்கே
2.மருத்துவத்தின் தன்மைக்கொப்ப விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன.

ஆனால் இன்றைய விஞ்ஞான மருத்துவத்தில் நோயின் குணங்களைச் சரீரத்தில் கண்டவுடன் அந்த நோயை நீக்கிடும் செயலுக்கு அதி தீவிர செயல் புரிந்திடும் மருந்துகளைச் சரீரத்தினுள் செலுத்தி நோயைக் கண்டவுடனேயே மருத்துவத்தால் குணமாக்கினாலும்… “பல்கிப் பெருகிடும் புதிய புதிய நோய்கள் ஏற்படக் காரணம் என்ன…?”

1.மாறு கொண்ட எண்ணங்களால் நற்குணங்களையே சூரணம் செய்து
2.தீமையான குணங்களுக்கு அவைகளையே உரமாக்கிக் கொள்ளும் எண்ணம் செயல்படுவதால்
3.ஜீவாத்மா பிறவி என்ற நோயில் அகப்பட்டு வதைப்படுகிறது.

இத்தகைய செயலுக்கு மூல காரணம் யார்…?

ஆனால் ஆத்ம பலத்தில் பரிபூரணம் பெற்றிட வேண்டும் என்றால் உலக வாழ்க்கைச் சூழலில் நம்மை மோதிடும் எதிர் நிலைகளுக்கு நம் எண்ணத்தைச் செலுத்திடலாகாது… அதற்கு அடிமையாகிவிடக் கூடாது.

1.இந்த உண்மையின் முழுமையைக் கொண்டு ஆக்கம் பெற்றிடவும்
2.எண்ணத்தில் பீடித்துள்ள பிணிகளை நீக்கிச் செயல் கொள்ளவும்
3.நற்சுவாசப் பரிசுத்தம் கொள்ள வேண்டும் என்றே உரைக்கின்றேன்.
4.ஞானச் செல்வம் பெற்றிட வேண்டும் என்றே கூறுகின்றேன்.

பேரருள் சக்தியாகத் தன்னுள் “மெய் ஞான விழிப்பு…” கண்டால் எண்ணத்தின் பரிசுத்தத்தால் ஈஸ்வரரின் ஆசி கொண்டு மகரிஷிகளின் அருளாசி பெற்றிடலாம்.

சிலவற்றை மறைத்தே உரைத்திட வேண்டியதுள்ளது. பேரருள் உலகோதயச் செல்வத்தை அளித்திடும் நிலையில் இன்று இல்லை.

இன்றை மனிதனின் எண்ணத்தின் மாறுபாடே காரணம் என்றால் சூட்சமங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
1.எண்ணத் தூய்மை கொண்ட இந்தத் தியானத்தின் வழியிலேயே பேரருள் ஆசி பெற்று
2.வாழ்க்கை நிலையையும் கூட உயர்வு பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று நாம் பக்தி கொண்டு சிலையைப் பார்த்து இதுதான் முருகன் என்றோ மற்றதென்றோ நாம் மந்திரத்தைச் சொல்லி அதன் உணர்வைச் ஜெபித்து “அதைப் பெற வேண்டும் என்ற ஆசையில்..” நாம் உணர்வினைப் பதிவாக்கிக் கொள்கின்றோம்.

திரும்பத் திரும்ப அப்படிப் பதிவாக்கிவிட்டால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவான பின் கடைசியில் நாம் இறந்துவிடுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

1.இன்று அந்தத் தெய்வத்தை எதன் ரூபத்தில் காட்டினரோ (காட்டுகின்றார்களோ)
2.அதன் உணர்வின் அலையாக உடலுடன் இருக்கும் பக்தி கொண்ட ஆன்மாக்களுக்கு
3.(நாமே) தெய்வமாகக் “காட்சி கொடுக்கும் நிலை” வரும்.

காரணம்… நம் ஆசையைக் கூட்டி அந்த மந்திரத்தைச் சொன்னால் இதனால் இன்ன பலன் கிடைக்கும் என்று கூறுகின்றார்கள். நாமும் அதை நம்பி மந்திரங்களை ஜெபிக்கத் தொடங்குகின்றோம்.

எந்தச் சிலையைப் பார்த்து மந்திரங்களைச் சொல்லி இந்த உணர்வின் தன்மை நமக்குள் வளர்த்துக் கொண்டபின் இந்த உடலை விட்டுச் சென்றபின் எதன் உணர்வின் அலைகள் நமக்குள் பதிவானதோ அது தான் நம் ஆன்மாவில் பதிவாகியிருக்கும்.

ஒரு பட உருவை கேமராக்களில் எடுத்து அதை அலைகளாக மாற்றி மீண்டும் நீங்கள் திரைகளில் காணும் பொழுது அதே உருவத்தைக் காட்டுவார்கள். நாம் அதைப் பார்க்கின்றோம்.

இதைப் போன்றுதான் நாம் பக்தி மார்க்கங்களில் எதன் வழி பட்டு எதனின் உணர்வை எந்தெந்த ஆசைகளை எண்ணி அந்த உணர்வின் வழி பெறுகின்றோமோ அதே சமயத்தில் அந்தச் சிலைக்கு என்னென்னெ புஷ்பங்களைப் போடுகின்றோமோ என்னென்ன நிறங்களில் உடைகளை உடுத்துகின்றோமோ அவைகள் அனைத்தையும் சூரியனின் காந்தப்புலனறிவுகள் கவர்கின்றது.

அலைகளாக மாற்றுகின்றது.

நம்முடைய கண்கள் உற்று நோக்கிய உணர்வைப் பதிவாக்குகின்றது. நுகர்ந்த உணர்வு உயிரிலே படுகின்றது. அந்த உணர்வுகள் உடல் முழுவதும் அந்த உணர்வின் அலைகள் படர்கின்றது.

1.“நாம் ஆசையின் நிமித்தம்… அந்தத் தெய்வத்தை வழிப்பட்டு” அதன் வழிகளில் நாம் பெருகி வந்தாலும்
2.இந்த உடலை விட்டு ஆன்மா செல்லும் பொழுது இன்னோரு பக்தி கொண்ட ஆன்மா இதே போல செய்தால்
3.இந்த ஆன்மா அங்கே சென்று “அருளாடும்”

நீங்கள் பார்க்கலாம். அந்தத் தெய்வம் வந்தது, இந்தத் தெய்வம் வந்தது என்று சொல்வார்கள்.

அதே சமயத்தில் சில மந்திரவாதிகள் என்ன செய்கின்றார்கள்..?

இன்னென்ன மந்திரம் கொண்டு ஜெபித்தால் “இந்தத் தெய்வத்தைக் கைவல்யப்படுத்திக் கொள்ளலாம்…” என்று மந்திர ஒலிகளை எழுப்புவார்கள்.

அப்படி அவர்கள் ஜெபித்தார்கள் என்றால் நாமே இந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் வளர்த்துக் கொண்ட நிலைகள் கொண்டு நம் உயிரான்மா அவன் கையில் சிக்கும்.

அவன் கையில் சிக்கப்படும் பொழுதுதான் அந்த உணர்வுக்கு மாற்றாக மந்திரவாதிகள் சில வேலைகளைச் செய்வார்கள்.

அற்புதக் காட்சிகளாகக் காட்டுவதும் பல தீய வினைகளைச் செய்வதும் பல பொருள்களை வரவழைப்பதும் காட்சியாகவும் உங்கள் முன்னாடியே காண்பிப்பார்கள்… வெளிப்படுத்துவார்கள்.

உதாரணமாக…
1.ஒரு மனித உடலில் உருவான உணர்வினை ஒரு தாவர இனத்திற்குள் பதிவாக்கிவிட்டால்
2.மீண்டும் அதை எண்ணத்தில் செயலாக்கினால்.. “ஒரு இலை அப்படியே நகர்ந்து வரும்”
3.ஒரு தேங்காயை வைத்து இந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்கி அதில் ஏற்றிய பின்
4,அதை எண்ணத்தால் சுழலச் செய்ய வேண்டும் என்றால்.. “அந்தத் தேங்காயே சுழலும்”

இதைப் பார்ப்போர்கள் எல்லோரும் அதனைக் கண்டு வியந்து “அவரிடம் அபூர்வமான சக்தி இருக்கிறது..” என்று செல்லத் தொடங்குவார்கள்.

இந்த வாழ்க்கையில் அவன் சொல்லைக் கேட்டால் அந்தத் தெய்வ சக்தி பெறுவோம் அதன் வழியில் செல்வத்தைத் தேடுவோம், சுகத்தைத் தேடுவோம் என்ற உணர்வுகளைத்தான் இன்று “நூற்றுக்குத் தொண்ணூறு மக்கள்.., வாழ்ந்து கொண்டுள்ளார்கள்”.

1.கற்றவரும் சரி.. கற்காதவரும் சரி..
2.தெய்வமே இல்லை என்று சொல்வோரும் சரி..
3.தனது செல்வத்தைக் காக்க மந்திரங்களைக் கைக் கொண்டு
4.இதனால் தான் தப்பிக்க வேண்டும் என்ற உணர்வு கொண்டு அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றனர்.

இதையெல்லாம் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அனுபவபூர்வமாகக் காட்டிய நிலைகள்.

அமாவாசை அன்று செய்யக் கூடாதது…

 

பிறந்ததிலிருந்து இறக்கும் வரை மந்திரம் சொல்லும் பழக்கம் இன்றுள்ள பெரும் பகுதியான மக்களிடம் உள்ளது.
1.இறந்த பின் அந்த உடலைக் கருக்கி விட்டாலும்
2.உடலில் இருந்து வெளியேறிய உயிரான்மா இந்தக் காற்று மண்டலத்தில் தான் இருக்கும்.

“ஐந்தாம் படை…” என்று சொல்வார்கள். நாட்டுக்கு நாடு ஒவ்வொரு அரசனுக்கும் அது இருக்கும். எங்கெங்கே என்ன இருக்கின்றது…? என்று இறந்தவர்களைப் பற்றிய முழு விவரங்களை அரசனுக்குச் சொல்வார்கள்.

அதனின் செயல்கள் இன்றும் குடுகுடுப்புக்காரன் என்ற பெயரில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. நாம் நடந்து செல்லும் போது பாதம் பட்ட நிலைகளில் வீட்டு வாசல்படியில் இருக்கக்கூடிய மணலை எடுத்துக் கொள்வார்கள்.

நல்லது செய்வதாக… ஜோதிடம் சொல்வது மாதிரி நம் வீட்டிற்கே வந்து தலை முடியையும் பழைய துணியையும் கேட்டு வாங்கிச் செல்வார்கள்.

குடுகுடுப்புக்காரர்கள் என்று சொல்வதெல்லாம் அரசர்களுக்கு ஐந்தாம் படை வேலை செய்தவர்கள் தான். அன்றைய அரசன் காட்டிய உணர்வின் தன்மை கொண்டு மக்கள் மத்தியில் வந்து இந்த மூன்று பொருள்களை எடுத்துக் கொள்வார்கள்.

இறந்த முன்னோர்களுக்கு நாம் இங்கே என்ன செய்கின்றோம்…?

சுட்ட சாம்பலை எடுத்துக் கரைத்து விடுகின்றோம். அமாவாசை அன்று அவர்களுக்கு உணவு படைத்து அவர்கள் அணிந்த துணிகளை எல்லாம் வைத்து அழைப்போம்.

அதே சமயத்தில் அமாவாசை அன்று பித்ருக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்களை எழுதி வைத்துள்ளார்கள். அதனின் உட்பொருள் என்ன…?

அமாவாசை அன்று சூரியனுடைய ஒளிக்கதிர்கள் அதிகமாக நமக்குக் கிடைப்பதில்லை. ஏன்…?

பூமியைச் சேர்த்துச் சுழன்று கொண்டிருக்கும் சந்திரன் சூரியனுடைய ஒளிக் கதிர்களைக் கவர்ந்து ரசம் பூசிய கண்ணாடி போல் எல்லா நாளும் நமக்குப் பரப்பிக் கொண்டு இருக்கின்றது. அதாவது பூமியின் இயக்க உணர்வுக்கு உதவி செய்கிறது சந்திரன்.

ஆனால் சந்திரனை பூமி முழுமையாக மறைக்கப்படும் போது
1.சூரியனுடைய ஒளிக்கதிர்கள் வராதபடி அது பூரண அமாவாசை ஆகின்றது.
2.அதனால் சந்திரன் மூலம் சூரியனின் ஒளிக்கதிர்கள் நமக்குச் சரியாகக் கிடைப்பதில்லை (பூமியிலிருக்கும் எல்லாவற்றுக்கும் இதே நிலை தான்)
3.அன்று கனமான சுவாசமாக நமக்கு இருப்பதன் காரணமே இது தான்

ஆகையினால் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் இங்கே சுழன்று கொண்டிருக்கப்படும் போது அமாவாசை அன்று வழக்கமாகக் கிடைக்கும் அலைகள் அவர்களுக்கும் கிடைப்பதில்லை.

அமாவாசை அன்று நாம் சாப்பாடு போட்டுத் துணிமணிகளை எல்லாம் வைத்து முன்னோர்களைக் கூப்பிடுவோம்.

ஆனால் அரசன் என்ன செய்வான்…?

அதற்கென்று ஒரு ஆளை நியமித்திருப்பான்.
1.வாழும் போது நாம் எந்தெந்த மந்திரங்களை எல்லாம் பதிவு செய்தோமோ
2.அந்த விவரங்களை எல்லாம் அவன் அரசனிடம் சொல்வான்.

அதன் பிரகாரம் கோவில்களோ மற்ற இடங்களிலோ “மந்திரங்களைச் சொல்லி” யாகங்களை வளர்ப்பார்கள். மந்திர ஒலிகளை வைத்து அந்த உணர்வின் தன்மை கொண்டு நம் முன்னோர்களின் ஆன்மாக்களைக் இழுத்து கைவல்யப்படுத்திக் கொள்வார்கள்.

அதாவது
1.நாம் இங்கே உணவையும் அவர்களின் துணியையும் வைத்துக் கூப்பிடும் போது
2.அவர்கள் அங்கே இழுத்துக் கவர்ந்து கொள்வார்கள்.

ஆக மொத்தம் உடலுடன் இருக்கப்படும் பொழுது அரசனுக்கு அடிமை. இறந்த பின்னும் ஆன்மாவை அவன் கைவல்யப்படுத்தி விடுவான்… நம் ஆன்மாவும் அவனுக்கு அடிமை தான். கைவல்யப்படுத்திய ஆன்மாக்களை எதிரி நாட்டின் மீது ஏவிப் பில்லி சூனியங்களுக்குப் பயன்படுத்துவான்.

அரசர்களுக்குள் போர் முறை வரப்படும் பொழுது பக்தியின் தன்மை கொண்டு இறந்தார்கள் என்றால் எதிரிகளை வீழ்த்தும் உணர்வுடனே மடிகின்றனர்.
1.அந்த ஆன்மாக்களையும் கவர்ந்து கொண்டு எதிரிகளை வீழ்த்த ஏவல் செய்வான்.
2.இதைப் போன்று தான் மாற்று அரசனும் செய்வான்.
3.மனித உடலிலிருந்து எடுத்துத் தான் அன்று இந்த வேலைகளைச் செய்வார்கள்.
4.அன்றைய அரசர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் இது தான்.

தனுர் வேதம் கற்றுக் கொண்டவர் தான் போர்முறை நடத்த முடியும் என்று இதைத் தான் மகாபாரதத்தில் சொல்லியிருப்பார்கள்.

தனுர் வேதம் என்றால் ஒரு மனிதனுக்குள் மந்திரங்களைச் சொல்லிப் பதிவு செய்து அதன் பின் அதே பதிவை வைத்து மீண்டும் இறந்த பின் அந்த ஆன்மாவைக் கவர்ந்து ஏவத் தெரிய வேண்டும்.

அப்படி ஏவத் தெரிந்தவன் எவனோ அவன் தான் அந்த நாட்டையும் மற்றதையும் பாதுகாக்க முடியும் என்று அரசு நியதிகள் அன்று உண்டு.

ஒரு மனிதனுக்குள் மந்திர ஒலியினைப் பதிவாகி அந்தப் பதிவை மீண்டும் எடுத்துக் கொள்ளத் தெரிய வேண்டும். அதை வைத்துத் தான் அன்று பல நிலைகளைச் செயல்படுத்தினார்கள்.

எளிதில் ஆன்மாக்களைக் கவர்வதற்குத் தான் அமாவாசை என்று அந்த இருண்ட நாளை அன்று அரசன் தேர்ந்தெடுத்தான்
1.அன்று அரசன் எதைக் காட்டினோ அதே வழியில் தான் நாமும் செயல்படுகிறோம்.
2.அரசனால் காட்டப்பட்ட சாஸ்திர விதிகளில் இப்படிச் சிக்கி
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை உயர்ந்த நிலை பெறச் செய்யாதபடி
4.ஐதீகம் என்ற முறைகளில் மாதத்தில் ஒரு நாளும் வருடத்தில் ஒரு நாளும் ஒரு சாங்கியத்தைச் செய்து விட்டு
5.அதனுடன் திருப்தி அடைந்து கொள்கிறோம்

அதைப் போன்ற நிலைகளிலிருந்து மீண்டு நாம் முன்னோர்களை விண் செலுத்தப் பழக வேண்டும். சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று சப்தரிஷி மண்டல ஒளி அலைகளை முதலில் நமக்குள் வலு கூட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

எங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் அனைத்தும் சப்தரிஷி மண்டல ஒளி அலையுடன் கலந்து
1.உடல் பெறும் உணர்வுகள் அனைத்தும் அங்கே கரைந்து
2.என்றென்றும் மகிழ்ந்திடும் நிலையாக அழியா பருவம் பெற்ற ஒளியின் சுடராகி
3.பேரானந்தப் பெரு நிலை அடைய வேண்டும் என்று வீட்டிலுள்ளோர் அனைவரும் உந்தித் தள்ளுதல் வேண்டும்.

அந்த ஆன்மாக்கள் எடை இல்லாமல் இருப்பதால் நாம் உடலுடன் ஒரு இயந்திரம் போன்று இருப்பதால் நாம் பாய்ச்சும் அந்த சப்தரிஷி மண்டல உணர்வுகள் அவர்கள் உயிராத்மாவில் இணையப்பட்டு
1.சப்தரிஷி மண்டல ஒளி அலையும் இந்த உயிராத்மாவும் சந்திக்கும் நிலையில்
2.புவி ஈர்ப்பின் பிடிப்பைக் கடக்கச் செய்து “நேரே…” அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கே அழைத்துச் சென்றுவிடும்…!

இவ்வாறு “தினசரி” நாம் எண்ணுதல் வேண்டும்.

ஒவ்வொரு உயிரும் பெற வேண்டிய உயரிய தன்மையைத் தான் அகஸ்தியர் விநாயகனாகக் காட்டினார்

 

மனித குலம் உண்மையை உணர்ந்து வாழவும் அந்த வாழ்வில் உயர் ஞானச் செயலின் சிறந்த பேறு பெறும் வழியாகவும் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய குணங்களின் விசேஷத் தன்மைகளைச் “சிலை வடிவில்…” சித்தர்கள் அன்று உணர்த்தினார்கள்.

அந்தச் சித்தர்களின் மனித குல உயர்விற்கு வழி காட்டிய தெய்வச் சிலைகளின் தத்துவத்தையே கேடுறச் செய்து ஆர்ப்பரித்துப் பகட்டைக் காட்டிடும் நிலைக்கு இன்று வந்து விட்டார்கள்.

சித்தன் படைத்த செயலையே மனிதன் பகட்டிற்காகவும் கௌரவ வாழ்விற்கும் பயன்படுத்திச் சீர்குலைத்து விட்டனர். அப்படிச் சீர்குலைக்கப்பட்டதால்
1.வாழையடி வாழையாக வழி வரும் மெய் ஞான உயர் சக்தி பெற விழைந்த ஆத்ம ஞானிகளால்
2.உட்பொருள் வெளிப்படுத்தும் எண்ணமின்றி மறைக்கப்பட்டு விட்டது.

விநாயகர் உருவத்தைக் காட்டி ஆற்றங்கரையில் வைத்த நிலை எல்லாம் இன்று கேலிக்குரிய நகைச்சுவைப்படுத்தி ரசித்து மகிழும் நிலைக்குச் சென்று விட்டது.

இன்றைய மனித மனங்கள் உட்பொருளை நாடி அறிந்து கொள்ளத் தயங்குதுவும்… பயம் என்ற போர்வை கொண்டு பக்தி என்ற குளிர் போக்கத் தானும் நடுநடுங்கி… அறிவொழிந்து…! அதிலிருந்து விடுபட முடியாத நிலை ஆகிவிட்டது.
1.ஜோதி என்ற தன் உயிர்க்கனலின் நெருப்பே பக்தி என்ற குளிரை விரட்டும்…! என்று அறியாமல் போனதென்ன…?
2.அந்தக் குளிரை நீக்க வந்தவனும் உட்பொருளை அறிந்ததில்லை…!

ஆவியான நீர் அமிலங்கள் எல்லாம் தன் செயலில் தான் நெருங்கி… ஒன்றோடொன்று கண பரிமாணம் கொண்டு… பிறிதொன்றின் சேர்க்கையில் நீர்த் திவலையாகும் நிலையில் “அதுவே சிவமாகின்றது” (திடமாகி உருவமாகின்றது).

அது பூமிக்குள் வரும் காரிய நிலை கொண்டு சுழலும் தன்மையிலே சக்தியாகவும்… பூமியில் படிந்து பின் எழும் செயலின் தொடர்பில் மீண்டும் நீராகவும்… அதுவே எழும் தொடரில் ஆவி நீர் அமிலமாகவும் செயலுறும் தொடர்புகளை அறிந்து கொள்தலே “பிரம்மம்…!”

அத்தகைய பேருண்மைகளை அறிந்து கொண்டவர் தான் “அகத்தியர்…!”

அவர் உயிரணுவின் செயல் சுழலும் சக்தியாகப் பரிணமித்துப் பூமிக்கு வந்த காரியத்தில் வினையான தன்மைக்கு நாயகனாக இந்தச் சரீரம் பெற்றார்.

வினையின் நாயகனே விநாயகர் என்று தன் உயிர் ஆன்ம சக்தியையே உயர்த்திக் கொள்ளும் வழியாக
1.எல்லா உயிர்த் தொகைகளுக்கும் உயிரணுக்கள் பொதுவாகவும்
2.அது பெறும் வீரியத்தில் வித்தியாசமும்… அதுவே பின் எண்ணத் தொடரில் சரீரமாகவும்
3.தன் அமில குண நிலைக்கொப்பத் தனக்குகந்த… தான் பெற்ற தன்மை கொண்டு… ஞான வழியில் “ஒவ்வொரு சரீரமும் பெறுகிறது…” என்றார் அகத்தியர்.

அத்தகைய உயிரணுக்களுக்குள் வீரிய சக்தி கொண்டது “யானை…” என்றும் அது பெற்ற சக்திக்கு அதன் “சுவாசமே…” காரணம் என்று தெளிவாக உணர்த்தினார்.

மனித குலம் ஞானத்தில் உயர்வடைய வேண்டும் என்றால்
1.தான் எடுக்கும் எண்ண ஓட்ட சுவாச கதியை உயர்வாக்க வேண்டும் என்பதற்காக
2.விநாயகரை உருவகப்படுத்திக் காட்டினார் அந்த அகத்தியர்.

நீர்ச் சக்தியைத் தன் எண்ண ஓட்ட கதியுடன் ஒன்றுபடுத்திக் கண்ட அந்த அகத்திய மாமகரிஷி “சுவாச வழியில் வீரியம் பெறும் நிலையைப் புகட்டினார்…!”
1.வினைக்கு நாயகனே விநாயகன் என்று
2.தன் உயிர் குருவைக் கண்டு கொண்ட பின்
3.அவர் சென்ற வழியின் உயர்வே “கணபதி…”

கணங்களை ஆளக்கூடிய தலைவன் “கணநாதன் என்ற உயிர்ச் சக்தியானது” தன்னுள் உள்ள கணம் என்ற கூட்டமாகிய அனைத்து உயிரணுக்களுக்கும் நாயகனாக வினையின் நாயகனாகச் செயல்படுகிறது.

1.கணங்களுக்கெல்லாம் (உயிரணுக்களுக்கெல்லாம்) அதிபதியாக ஒரு வழிகாட்டியாக
2.உயிர் ஆத்ம சக்தி… தான் சக்தி பெறும் மார்க்கமாகச் சக்தி பெற்று
3.தான் பெறும் சக்தியையே சரீர உயிரணுக்களுக்கும் ஊட்டிடும் நிலையே “கணங்களின் பதியான கணபதி ஆவான்…” என்று
4.உயிர் பெறும் உயரிய தன்மைக்குச் சித்தனால் காட்டப்பட்டதே விநாயகர் என்பதை அறிந்துணர்தல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கருவுற்றிருக்கும் தாய்மார்கள் ஒன்றிலிருந்து தொண்ணூறு நாள்களுக்குள் மந்திரவாதிகளோ அல்லது அதைப் போன்ற மற்றவர்கள் தந்திரங்கள் செய்வதை உற்றுப் பார்த்தால் அவர்கள் உணர்வை நுகர நேர்ந்தால் கருவிலிக்கும் குழந்தைக்குள் அது இணைந்து விடுகின்றது.
1.அதனால் அதனின் வளர்ச்சி குன்றிவிடுகின்றது
2.சிந்திக்கும் தன்மையை இழந்துவிடுகின்றது.

இப்படிப் பிறிதொரு பக்கம் தீமைகள் நடப்பதைக் கருவுற்றிருக்கும் தாய் நுகரும்போது இதே போன்ற தீமைகள் ஏற்படுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீள வேண்டும் அல்லவா..!

ஒரு குடும்பத்திலே தாய் கருவுற்றிருக்கிறார்கள் என்று அறிந்து கொண்டாலே அந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அடுத்து அந்தக் கருவில் வளரும் குழந்தை துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி அந்தச் சிசு பெற வேண்டும். உலகைக் காத்திடும் அருள் ஞானம் அந்தக் குழந்தை பெற வேண்டும் என்ற இந்த உணர்வுகளைப் பாய்ச்சுதல் வேண்டும்.

நமது சாஸ்திரங்களில் சரஸ்வதி என்ற படத்தைப் போட்டுக் காட்டி அதை “ஞானத்தின் தொடர்” என்று சொல்வார்கள்.

கருவுற்ற தாயை அந்தப் படத்தை உற்றுப் பார்க்கும்படிச் செய்து அது எவ்வாறு ஞானத்தின் தொடரில் வளர்ந்து வந்ததோ அதைப் போல “ஞானத்தைப் பெறும் சக்தியாக… என் கருவில் வளரும் சிசு பெற வேண்டும்” என்று எண்ணிச் சுவாசித்தல் வேண்டும்.

அதே போன்று இலட்சுமி படத்தை உற்றுப் பார்த்து அனைவரையும் மகிழச் செய்யும் அந்த உணர்வின் சக்தி என் கருவில் வளரும் குழந்தை பெற வேண்டும் என்று இப்படி அந்தத் தாய் எண்ணுதல் வேண்டும்.

சரஸ்வதியைப் போன்ற ஞானத்தின் சக்தியும் இலட்சுமியைப் போன்ற மகிழ்ந்து வாழச் செய்யும் சக்தியும் கருவிலிருக்கும் குழந்தைக்கு அந்தத் தாய் கிடைக்கப் பெறச் செய்தல் வேண்டும்.

குடும்பத்திலுள்ளோர் அனைவருமே அந்தத் தெய்வீக உணர்வுகளை உற்று நோக்கி அந்தச் சக்திகள் அனைத்தும் கருவிலிருக்கும் சிசு பெற வேண்டும் என்று எண்ணினால் அதே உணர்வுகள் கருவிலே வளரும்,
1.அந்தப் படம் எவ்வளவு அழகாக இருக்கின்றதோ அதே போல உணர்வுகள் இங்கே குழந்தைக்கும் வரும்
2.அப்படிப் பிறந்தால் தன்னைக் காக்கும். தன் குடும்பத்தைக் காக்கும். இந்த ஊரையும் காக்கும்… இந்த உலகையும் காக்கும்.

ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட அருள் ஞானம் பெற்றவர்களாக உருவாகிட வேண்டும் என்பதற்குத்தான் நம்முடைய முன்னோர்கள் இங்கே இவ்வளவு ஆலயங்களையும் சாஸ்திரங்களையும் வடித்தார்கள்.

இன்று நாம் அதையெல்லாம் சிறிதளவாவது எண்ணுகின்றோமா..,? சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

ஆகவே நம் நாட்டிலே தோன்றிய அந்த அருள் ஞானிகள் உருவாக்கிக் கொடுத்த சாஸ்திரங்கள்படி நாம் இந்த வாழ்க்கையில் வாழ்ந்தால் பேரானந்தப் பெரு நிலை என்ற நிலை எய்த முடியும்.

இது தான் குருநாதர் எமக்குக் காட்டிய நிலைகள்.

எண்ணம் சொல் செயல் இந்த மூன்றையும் நேர்கோட்டில் வைத்திருப்பவனே குருவாக முடியும்

 

பரவெளியில் படர்ந்துள்ள ஒளியான மின் அணுக்கள் காந்தத்தின் உள் நிகழ்வாக அசையும் நிலை சூட்சமமாக அதற்குள் இருந்தாலும் சஞ்சலமில்லாத மனத்திறன் கொண்டு வைராக்கியப் பற்று கொண்டோன் நல் ஆக்கத்தின் செயலுக்காகத் தன்னைத் தான் உணர்கின்றான்.

உணர்ந்து தெளிந்த வழியின் ஈர்ப்பினால் சகலத்தையும் தன்னுள் சக்தியாகக் கூட்டும் செயலாகப் “பேரருள்…” என்ற மூலத்தில் கலக்கின்றான்.

சகலத்தையும் அறிந்து கொள்வது என்பது நடைமுறைச் சாத்தியம் இயலாது என்றாலும்
1.தனக்குள் தானே நல் வழி ஆக்கத்திற்காகச் செயல்படும் விதம்
2.ஒவ்வொருவரும் தன் ஆத்மாண்டவனை உயர்த்தும் செயலே கடமை விதி.

அதே போல் சரீரத்துடன் கலந்து எண்ணிடும் செயல் அனைத்திற்கும் ஓர் வரைமுறைக்கு உட்படுத்தப்பட்ட செயலைக் காட்டும் கடமை விதியும் உண்டு.

உலகோதய நடைமுறை வாழ்க்கை நெறியில் தன் சிந்தனையைத் தெளிவாக்குவதற்காகக் குருவை நாடுகின்றான்.

குரு என்றால் என்னப்பா…?

குரு என்றாலே “ஒளி நிலை…” என்பது பொருள்…!

1.தனக்குத் தானே உபதேசத்தை ஏற்றுக் கொண்டவன் தான்
2.பிறருக்கு உபதேசிக்கத் தகுந்தவன்.

அவ்வகையில் கூறும் குரு… எண்ணம் சொல் செயல் அனைத்தும் நேர்கோடாகப் பரிணமிக்கத் தன் செயல் நடைமுறைகளால் குருவாகின்றார்.

கடமை விதி… சிஷ்யர்களாகிய அனைவருக்கும் உண்டு என்றாலும் குருவிற்கும் உண்டு.
1.கடமை விதி… உலகோதய நிலை விடுத்துப் பேரருள் தெய்வத் தன்மை நிலை அடைவதற்கு
2.ஓர் வழி காட்டும் அமைப்பே குரு.

பேரருள் சூட்சமம் அறிந்த கோடானுகோடி உயிராத்மாக்கள் நல்லாக்கச் செயல் நிகழ்வுகளில் மூலத்தில் கலந்து வாழ்கின்றனர். ஆனால் சிலரே அனைத்து உயிர்களும் அந்தப் பேரானந்த லயத்தில் இன்புறுதல் வேண்டும் என்று கண்டுணர்த்தினர்.

அவர்கள் காட்டிய அன்பு நெறிகளில் “நான்…!” என்ற நிலை இல்லையப்பா…!
1.நான் என்ற சொல்லும்
2.நான் தான் பெற்றுத் தருவேன்…! என்ற சொல்லும் எதற்கப்பா…?

“தனித்துவமான சக்தி…” பெறும் நிலையன்றோ நாம் புகட்டியது.

ஒவ்வொரு உயிராத்மாக்களும் நல் நிலை பெற வேண்டும் என்று எமக்குள்ள ஆசையால் தானே எல்லாமுள் எல்லாமாக விளங்கும் பேரருள் சக்தியுடன்… மாமகரிஷிகளின் ஆசியுடன்… “மறைக்கப்பட்ட இந்த உண்மை நிலைகளை…” இங்கே எடுத்து இயம்பிக் கொண்டிருக்கின்றோம்.

1.இதில் நான் என்ற நிலை எங்கே உள்ளது…?
2.பரப்பிரம்ம நிலைதனில் சகல உயிர்களையுமே
3.அந்த ஈஸ்வரனாக எண்ணிச் செயல் கொள்ளும் அன்பு வழியைத்தானே இங்கே காட்டுகின்றோம்.

குருவே உன் உயிராக ஆத்மாவில் இயக்கும் செயலில்… சரீரம் கொண்டு செயல்படும் நிலையில் எல்லாம்… கடமை விதி என்பது பக்தி நிலை தானே தவிர “நீ உன்னை உயர்த்தும் சிங்கார அழகு எங்கே…?”

1.குருதேவர் (ஈஸ்வரபட்டர்) ஊட்டுவார்…! குருதேவரே ஊட்டட்டும்… என்று
2.உன் முயற்சியின் வழியை விலக்கினால்
3.உன் உயிராத்மா உயர்ந்த சக்தி பெறும் அந்த ஒளியின் அழகு சுயப்பிரகாசமாக வளர்வது எங்கே…?
4.யாம் விரும்புவதே ஒவ்வொரு ஆத்மாக்களின் சுய முயற்சிதான்.
5.அதுவே நல்லாக்கத்தின் வழி.
6.வினைக்கு நாயகன் விநாயகன்..! என்று தன்னைத்தானே அறிந்து கொள்வதே குரு காட்டிய கடமை விதி.

உன்னை நீ உணர்ந்து சித்தன் காட்டிய விநாயகரின் உருவத்தில் மனித உடலும் யானையின் தலையும்…? எதற்காக என்ற வினாவிற்குரிய தெளிவை அறிவின் துணை கொண்டு தெளிதலே நல்லாக்கத்தின் வழி.

தெளிந்த பின் தன் உயிராத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் செயலும் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியர் அவர் மனைவியும் ஒன்றி வாழ்வது போல் கணவன் மனைவி நீங்கள் ஏகாந்தமாக வாழும் அருள் சக்தியைப் பெறுங்கள்
இன்று கணவன் மனைவியாக வாழ்பவர்களில் எந்த அளவிற்கு ஒன்றுபட்டு வாழ்கின்றார்கள் என்று பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

குடும்பங்களில் எடுத்துக் கொண்டால் சில நேரங்களில் கணவரை எதிர்த்துப் பேசும் நிலைகளும் சில நேரங்களில் மனைவியை அடிமையாக்கும் உணர்வுகளும் தான் “பெரும் பகுதி” இன்று வருகின்றது.

கணவன் மனைவியை அடிமையாக்கும் இந்த உணர்வின் தன்மை வந்து விட்டால் “வெகுண்டெழுந்து.., சீறிப்பாயும் உணர்வுகள்.., பெண்கள் மத்தியில் உருவாக்கிவிடுகின்றது”.

இதைப் போன்ற “சீறிப் பாயும் உணர்வுகள்” பெரும்பகுதி வீடுகளிலும் சரி… சொந்தபந்தங்களிலும் சரி… இதைப் போன்ற எத்தனையோ இடங்களிலும் சரி… கடுமையான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டே தான் உள்ளது.

இத்தகைய விஷமான உணர்வலைகள் சூரியனின் காந்தப்புலனறிவினால் கவரப்பட்டு காற்றிலே அதிகமாகப் பரவிக் கொண்டுள்ளது.
1.அத்தகைய கருக்கள் அதிகமாகி விட்டால்
2.அந்தக் குடும்பத்திலேயே விஷத் தன்மைகள் பரவி
3.சிந்தித்துச் செயல்படும் செயல்களையே இழக்கச் செய்துவிடுகின்றது.
4.ஒன்றி வாழும் நிலையை இழக்கச் செய்கின்றது
5.மன அமைதியைக் குலைக்கின்றது.

நம்மை அறியாமல் குடும்பத்திற்குள் ஒருவருக்கொருவர் சண்டை இட்டுக் கொண்டாலும் இந்த உணர்வுகள் நமக்குள் நுகரப்படும் பொழுது அங்கிருப்போர் அனைவருக்கும் வெறுப்பின் உணர்வுகளும் வெறியான உணர்வுகளுமே உடலுக்குள் பெருகத் தொடங்கிவிடுகின்றது.

அதே சமயத்தில் வீட்டிற்குள் அமர்ந்திருக்கும் பொழுது
1.“சண்டையிட்ட உணர்வுகளும்… வெறுப்புடன் பேசிய உணர்வுகளும்”
2.வீட்டில் உள்ள தரைகளிலும் சுவர்களிலும் மற்ற இடங்களிலும் “பதிவாகிவிடுகின்றது”

இவ்வாறு ஒருவருக்கொருவர் வெறுப்பான செயல்களைச் செய்யப்படும் பொழுது கடைசியில் வேதனை அதிகமாகிவிடுகின்றது.

வேதனையான உணர்வுகளை நுகரப்படும் பொழுது “கடும் வாத நோய்களை” உருவாக்கிவிடுகின்றது. மனிதனின் உறுப்புக்களைச் சீர் குலையச் செய்து சிந்திக்கும் தன்மை அனைத்தும் இழந்து “ஏங்கித் தவிக்கும் நிலையே” உருவாகிவிடுகின்றது.

கை கால் அங்கங்கள் செயல்படவில்லை என்றால்.., “யார் கொடுப்பார்..,? எவர் கொடுப்பார்..,? யார் நமக்கு உதவி செய்வார்கள்..,? என்ற உணர்வினை ஏங்கிப் பெறும் நிலையே வருகின்றது.

ஏங்கிப் பெறும் நிலைகள் வந்தாலும்… “ஏங்கும் பொழுது கிடைக்கவில்லை என்றால்..” மீண்டும் எல்லை வேதனையே அதிகமாகின்றது.

இதைப் போன்ற நிலைகளை மாற்ற வேண்டுமா வேண்டாமா…! கணவன் மனைவியாக வாழ்பவர்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.“எப்பொழுதுமே… கணவன் மனைவிக்குள்… பகைமை உணர்வே வரக்கூடாது”
2.இதை இருவருமே உறுதியாக்கிடல் வேண்டும்.

எப்பொழுதும் சந்தர்ப்பபேதங்கள் வருகின்றதோ அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் நினைவினைச் செலுத்தி அதிலிருந்து வரும் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஒருவருக்கொருவர் பாய்ச்சுங்கள்.

நாங்கள் கணவன் மனைவி இருவருமே வசிஷ்டரும் அருந்ததியும் போன்று ஒரு மனமும் ஒரு மனமாகி நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரியைப் போன்று ஒன்றிய நிலைகள் கொண்டு வாழ்ந்திட வேண்டும் என்ற உணர்வை இழுத்துச் சுவாசியுங்கள்.

அந்தத் துருவ மகரிஷி எப்படிக் கணவனும் மனைவியும் இணைந்து வசிஷ்டரும் அருந்ததி போன்று ஒன்றி வாழ்ந்தனரோ அதே போல நாமும் இந்த வாழ்க்கையில் நிச்சயம் வாழ முடியும்.

இந்த உணர்வுகளைப் பதிவாக்கிவிட்டால் இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் நாம் சிக்காது “ஏகாந்த நிலைகள் கொண்டு..,” பிறவியில்லா நிலைகள் அடைய முடியும்.

நாம் உயிருடன் ஒன்ற வேண்டும்.. உடலுடன் அல்ல…! என்று தான் இராமாயணம் காட்டுகிறது

 

கர்ப்பமாக இருக்கும் சீதாவை இராமன் காட்டிலே விட்டு விட்டுச் சென்று விடுகின்றான். அங்கே கர்ப்பிணியாகத் தவித்துக் கொண்டிருக்கும் சீதாவின் நிலையை உற்றுப் பார்த்து அருகிலே வான்மீகி இருக்கும் ஆசிரமத்திற்குச் அழைத்துச் செல்கின்றனர்.

வான்மீகி சீதாவின் உண்மை நிலையை உணர்ந்து கொள்கின்றார்.

சீதா என்ற மகிழ்ச்சி என்ற உணர்வின் தன்மை…
1.இராமனின் செயலும் – அந்த எண்ணத்திற்குத் தக்க இந்த உணர்வுகள் எப்படி வேலை செய்கிறது…? என்றும்
2.அரசாங்க நிலைகள் எப்படி ஆகின்றது…? என்றும்
3.மக்கள் எப்படி வாழுகின்றனர்…? என்றும் இந்தக் காவியத்தின் உண்மை நிலைகளைச் சொல்கின்றார்.

வான்மீகி சீதாவிற்கு ஓதிய வான இயலின் உணர்வுகள்… சீதா நுகர்ந்த அந்த மெய் உணர்வுகள்… இரத்தத்தில் கலந்து கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாகக் கிடைக்கின்றது.

பத்து மாதம் ஆகிப் பிறந்த பின் வளர்ச்சியாகி லவ குசா என்ற நிலையில் இராம காவியத்தை வெளிப்படுத்துகின்றார்கள்.

தன் தாயின் செயலை…
1.சீதா மாசு பட்டதல்ல… மாசற்ற நிலை கொண்டது
2.எதனிலும் கலக்கவில்லை… உண்மையின் உணர்வுகளையே பெற்றது என்ற நிலையில்
3.இராமனின் நிலைகள் எதனெதன் உணர்ச்சியின் தன்மையோ அதனதன் உணர்வுகள் தான் செயல்படுகிறது என்று பாடலாகப் பாடுகின்றார்கள்.

இது எல்லாம் மனிதர்கள் புரிந்து கொள்வதற்குத் தான்.

ஆனால் வெறும் கதையாகத் தான் படித்துத் தெரிந்து கொள்கின்றோமே தவிர உண்மையின் உணர்வை நாம் அறிந்து கொள்ளும் நிலையே அற்றுப் போய்விட்டது.

காரணம்… “நமது உணர்வுக்கொப்ப” உற்றுப் பார்க்கப்படும் போது அதே உணர்வு வருகின்றது. அந்த உணர்வைத் தான் நாம் வளர்த்துக் கொள்கின்றோமே தவிர
1.ஞானத்தின் உணர்வைப் பெறும் தகுதி இல்லாது
2.காவியத் தொகுப்புகளை அவரவர்கள் இஷ்டத்திற்குச் செயல்படுத்தி விட்டார்கள்.

ஆனால் குருநாதர் இதை எல்லாம் எமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டினார்.

வான்மீகி உணர்த்திய அந்த வழிப்படி லவ குசா இராமனைப் பற்றிப் பாடுகின்றனர். பாடலைக் கேட்கும் பொழுது இராமன் தன் மனைவி சீதா மாசு பட்டவள் அல்ல என்ற உண்மையை உணர்கின்றான்.

சீதா எவ்வளவு தொல்லை பட்டிருக்கும் என்ற உண்மையை உணர்ந்து மகிழ்ச்சி என்ற நிலைகளில் இனி அரவணைத்து
1.தான் செய்த குற்றத்தை மறந்து என்னுடன் இணைந்து மீண்டும் வாழலாம் என்ற நிலைக்கு இராமன் வருகின்றார்
2.ஆனால் மாசுபடும் உணர்வுடன் கலந்தால் அந்த உணர்வின் தன்மை எப்படி இருக்கும்…? என்ற நிலையைத் தான் இங்கே காட்டப்படுகின்றது.

விஷ்ணுவின் பக்தன் ஆஞ்சநேயர் என்றாலும் அதே உணர்வின் தன்மை தான் எண்ணிய உணர்வுகள் உயிருடன் ஒன்றுகின்றது. விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன் என்று கூறப்படுகின்றது.

எதை எல்லாம் நுகர்ந்தோமோ உயிரான விஷ்ணுவிடம் வரும் போது அது வரம் கொடுக்கும் நிலையாக அமைந்து விடுகின்றது. இந்த உணர்வின் தன்மை உடலில் சேர்க்கப்படும் பொழுது சீதா – மகிழ்ச்சியின் தன்மையை பிரம்மம் ஆகின்றது. பிரம்மாவின் மனைவி சரஸ்வதி அந்த ஞானத்தின் தன்மை கொண்டு வருகின்றது.

இருந்தாலும் இந்தச் சீதா…
1.தன் உணர்வின் தன்மை என்றும் ஒளியின் மயமாக வேண்டும் என்றும்… அருளொளியாக வளர வேண்டும்
2.கணவன் மனம் தெளிந்திட வேண்டும் தெளிவான நிலைகள் வளர வேண்டும் என்ற
3.தெளியச் செய்யும் உணர்வின் தன்மையைத் தான் எண்ணத்தால் எண்ணி எடுக்கப்படும் பொழுது
4.எந்தச் சுவையின் தன்மையோ… விஷ்ணுவிடம் இணையும் நிலை தன்மை வரப்படும் பொழுது
5.நுகர்ந்த உணர்வின் தன்மை (சீதா) ஒளியாகி அதைத் தன்னுடன் அரவணைக்கும் தன்மை வருகின்றது.

இதைக் காட்டுவதற்குத் தான் தன் கணவன் (விஷ்ணு) என்ற நிலையில் மகிழ்ச்சியான நிலைகள் கொண்டு “நிலையான நிலைகள்” பெற்றதனால்
1.கடைசியில் இராமன் அரண்மனைக்குக் கூப்பிடும் பொழுது
2.இந்தப் பூமியில் விளைந்த உணர்வின் சத்து பூமியைப் பிளந்து
3.உடலில் பெற்ற சத்துக்கள் எல்லாம் பூமியுடனே ஐக்கியமாகின்றது.

ஆனாலும்… பூமியிலே வந்த மணத்தின் உணர்வுகள்… உணர்ச்சிகள்… வந்ததெல்லாம் சீதா எடுத்துக் கொண்டதனால் உணர்வின் தன்மை ஒளியாகி… உணர்வின் தன்மை அது இயக்கமானது போல
1.”சீதா – சீதாராமா என்ற சுவையின் உணர்வின் ஒளியாக விஷ்ணுவுடன் ஐக்கியமாகின்றது…
2.சொர்க்கம் அடைந்தது என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

இதனின் விரிவாக்கம் சொல்ல வேண்டும் என்றால் குறைந்த்து இரண்டு மாதம் ஆகும். உங்களுக்குச் சுருக்கமாகச் சொல்லி இந்த உண்மைகளை நீங்கள் உணரும்படி செய்கின்றோம்.

இந்த மனித வாழ்க்கையில் வரும் உண்மையின் இயக்கங்களை நீங்கள் அனுபவங்களாகத் தெரிந்து கொள்ளலாம். ஆகவே இராமாயணத்தில் அவ்வளவு பெரிய உண்மைகள் உண்டு.

காட்டிற்குள் அழைத்துச் சென்று… சீதா என்ற சுவையைப் பற்றிய உண்மை நிலைகளை “மனிதனான பின் இதையெல்லாம் தெரிந்து கொள்கிறோம்…” என்று குருநாதர் எனக்கு உணர்த்துகின்றார்

நான்…! என்பது யார் என்று புரிந்ததா…?

 

1.மொழி அமைப்பின் கோர்வையில் பொருள்களின் நுட்பங்களைக் கற்பவரும்
2.கற்றறிந்து… பொருள் புரிந்து… அறிந்து… தெளியும் வகைகள் புலப்பட எழுத்தில் வடிக்கும் ஆசானும்
3.தன்னுடைய அறிவியல் தொடர்பில் தான் பெற்ற அனுபவ ஞானத்தையும் இணைத்தே
4.ஏட்டின் வாயிலாக வெளிக் கொணர்ந்து அளித்த தன்மைகளில்
5.கற்றுக் கொண்ட அறிவு… கற்றவர் அளித்திட்ட பிற பட்டங்கள் (GRADUATION) இவை எல்லாம் எதற்குத் துணை போயின…?

கற்ற கல்வியைப் பறைசாற்ற பெரும் விவாத மேடையன்றோ அமைக்கின்றான் மனிதன்…! ஆய்ந்து அறிதல் என்பது எண்ணத்தின் செயல்பாட்டில் எந்த நிலை பெற்றுள்ளது..?

எண்ணத்தின் செயல்பாடு தான் “நான்…” என்றால் வெறும் உலகோதய நடைமுறைகளின் புகழ் தேடிச் செல்லும் நிலைக்கன்றோ சென்று விட்டது “அறிவு…”

எண்ணத்தின் செயல்பாடு அனைத்தும் ஆத்மாவின் சிந்தனை வசமானால்
1.ஆத்மாவா…. நான் என்பது…?
2.எண்ணத்தின் அலையே சுவாசமாகி…
3.சுவாசத்தின் உணர்வே ஆத்மாவாகி…! என்று பாடுகின்றோம்.

ஜீவ பிம்ப சரீரம் கொண்ட பிறகு நான் என்பது யார்…? என்ற முயற்சியாக வினா எழுந்துள்ளது. எண்ணத்தின் செயல்பாட்டிலும் பொருள் உள்ளது.

அது மாத்திரம் “நான்” ஆகிவிடாது.

சரீரம் பெற்ற நிலையில் அன்றாடம் செயல் கொள்ளும் காரண காரியங்களில் பஞ்சேந்திரியங்கள் செயல்படும் தொழிலுக்கு “நொடிக்கும் குறைவான நேரத்தில்…” மனிதர்கள் எத்தனை எத்தனை செயல்கள் புரிகின்றார்கள்…?

இந்த ஜீவ பிம்ப சரீரத்தைக் கொண்டு உண்ணுவதும்… உறங்குவதும்… புறத் தொழில் புரிவதும்… கழிவுகளை நீக்குவதும்… பார்த்தல்… கேட்டல்… நுகர்தல்… சுவைத்தல்… ஸ்பரிசித்தல்… அனைத்துக் காரியங்களும் தொழிற்படு வினையாக
1.எண்ணத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்ட அந்தக் காரியங்கள்
2.எண்ணாமல் என்பதே… இயல்பாக… “இயற்கையாகச் சரீரத்தின் நடைமுறைச் செயல் அனைத்திலும்…”
3.ஆத்மாவின் தொடர்பின்றி நடந்தனவா…?

சரீரத்தின் உட்பொருளாகச் செயல்படும் நாடிகளின் சுவாச அலைகளில் எண்ணம் கொண்டு செயல்பட்டது எது…?

எண்ணத்தின் அலையே சுவாசமாக சுவாசத்தின் உணர்வே ஆத்மாவாகி என்ற அந்த எண்ணச் செயல்பாட்டின் மூலத்தையே அறிந்து கொள்ள வேண்டும்.

சுவாசத்தின் நல்வினைச் செயல்பாடே ஒளி தான். “நான்…” என்பதே எண்ணத்தின் செயல்பாடு என்றால் அதைத் தெரிந்து கொண்ட பின் அங்கு ஆத்மாவைக் கைக்கொள்ள வேண்டும்.
1.நாம் ஆத்ம பலம் பெற வேண்டும்..!” என்று
2.உரைத்த சொல்லின் உண்மையை உணர்ந்து பார்க்க வேண்டும்.

ஆத்மா பலம் பெற்று விட்டால் உள் நிறைந்த சக்தி எந்த மூலச் சக்தியுடன் கலந்து செயல்பட… மூல சக்தியாகச் சக்தி பெற்ற ஆத்மா
1.தான் கொண்ட உயிருடன் இணைந்து
2.பேரின்ப லயத்தில் திளைத்துக் கலந்துவிடும் சூட்சமம் தான் “நான்…!”

நான்…!” என்பது யார் என்று இப்பொழுது… “புரிந்ததா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இராமேஸ்வரத்தில் இராமன் செல்லப்படும் பொழுது சிவலிங்கத்தைப் பூஜிக்க லிங்கத்தை எடுத்து வருவதற்கு ஆஞ்சநேயனை அனுப்பினான்.

ஆனால் அவன் வரக் காலதாமதமாகிவிட்டது.
1.ஆகவே “இராமன் மணலைக் குவித்தான்”
2.அதைச் சிவலிங்கமாக வைத்து வணங்கினான் என்று காட்டுகின்றார்கள்.

இராமாயணத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதன் உட்பொருள் என்ன…?

இராமன் என்றால் நம் எண்ணங்கள். ஆக, எண்ணத்தால் உருவாக்கப்பட்டது இராமேஸ்வரம். நம் மனதைக் குவிக்கும் இடம்தான் “இராமேஸ்வரம்…”

கடைசியில் “நேரமாகிவிட்டது…” என்று இராமன் என்ன செய்கின்றான்…? மணலைக் குவித்து பூஜித்தான்.

1.எல்லோரும் அன்போடு இருக்க வேண்டும் என்று (நம் எண்ணங்களை) நம் மனதைக் குவித்துப் பழக வேண்டும்.
2.மனதைக் குவிக்கவில்லை என்றால் என்னவாகும்…? இரண்டும் சேர்த்துச் சண்டைப் போட்டுக் கொள்ளும்.
3.“சிறிது காலமே… இந்த மனித உடலில் வாழ்கின்றோம்..!” அதற்குள் இந்த மனித உடலில் மனதைக் குவித்தல் வேண்டும்.
4.அதாவது எல்லாக் குடும்பங்களும் நல்லது பெற வேண்டும் என்று மனதில் எண்ண வேண்டும்.

ஆனால் இப்பொழுது என்ன செய்கின்றார்கள்? விஷ்ணு பக்தர்கள் சிவனை வணங்க மறுக்கின்றனர்.

சிவனை வணங்குவோர் இராமனை வணங்கினால் அது பாபம் என்றும் இராமனை வணங்குவோர் சிவனை வணங்கினால் அது தோஷம் என்றும் இப்படியெல்லாம் நம்மைப் பிரித்து விட்டனர்.

மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு உண்மைகளின் இயக்கத்தை நாம் அறிய முடியாது அரசர்கள் ஆண்ட நிலையில் காலத்தால் தடைப்படுத்தப்பட்டுள்ளது.

ஞானிகளால் உணர்த்தப்பட்ட பேருண்மைகளை நாம் அறிய முடியாதவண்ணம் காலத்தால் அழிந்தே போய்விட்டது.

இன்று அதை யாம் வெளிப்படுத்தினால்…
1.இது என்ன…? “புதிதாக இருக்கின்றது…!”
2.இவர் கடவுளே இல்லை.., என்று சொல்கிறாரே… என்றெல்லாம் எண்ணத் தொடங்கிவிடுகின்றார்கள்.

இராமேஸ்வரத்தில் இராமன் மணலைக் குவித்ததாக இராமாயணத்தில் காட்டுகின்றார்கள். இராமேஸ்வரத்தில் “மனிதனுடைய பொக்கிஷம்” அத்தனையும் உண்டு.

இராமாயணத்தில் “இராமேஸ்வரம்…” எண்ணத்தின் உணர்வின் தனமையை உயிர் இயக்குகின்றது என்பதை உணர்த்தும் நிலையாக இராமர் தனுசுகோடிக்கு வந்தபின் “பூஜைக்கு நேரமாகிவிட்டது…” என்று அங்கு இருக்கும் மணலைக் குவித்து சிவலிங்கமாகச் செய்து பூஜை செய்தார்.

1.“நேரமாகிவிட்டது…” என்றால் பூஜை செய்ய நேரமாகி விட்டது என்று மற்றவர்கள் சொல்கின்றனர்
2.ஆனால் “இந்த உடலில் காலதாமதமாகி விட்டது…” என்பது தான் அதனுடைய பொருள்.

நமது உணர்வுகளை ஒருங்கிணைத்துச் சேர்க்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்கு இராமர் மணலைக் குவித்து (மனதைக் குவித்து) சிவ பூஜை செய்தார். சிவலிங்கத்தை பூஜித்தார்… சிவலிங்கமாக மாற்றினார்… என்று காண்பித்தார்கள்.

எண்ணங்களைக் குவித்து உருவானதுதான் இராமேஸ்வரம்.

1.நாம் எண்ணத்தால் பல தீமைகளை அகற்றி உணர்வின் எண்ணங்களைக் குவித்தால்
2.அத்தகைய எண்ணங்களால் உருவானது தான் “உயிரின் ஒளிகள்..,” என்பதை
3.“இராமலிங்கம்..” என்று காரணப் பெயரை வைத்து அழைக்கின்றனர்.

எதனின் உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கின்றதோ அதை நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை அணுவாகி அந்த உணர்ச்சியின் செயலாக நாம் செயலாக்கி அந்த “உணர்ச்சிக்கொப்ப உடலின் ரூபங்கள் ஆனது..,” என்று இராமாயணத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

கல்லாவின் பால்

 

யாம் கூறி வரும் தியானத்தின் வழியாக “மௌனம் கொண்டே சக்தி பெற்று வளர்த்திடுங்கள்…!” என்று உணர்த்தி வருவதெல்லாம் உயிராத்மாவின் சக்தி வலுவைக் கூட்டிட வேண்டும் என்பதற்காகத்தான்.

ஒவ்வொரு உயிராத்மாவும் பெற்ற தனித்துவத் தன்மையில் மேலும் வளர்ச்சி கொள்ளத் தான் கடைப்பிடிக்கும் தியானமாக உயிராத்மாவை எண்ணி
1.ஆத்ம பலம் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்ற சிந்தனையின் வசமாக
2.ஒளிப் பிரவாகத்தினுடைய தொடர் நிலை பெற்றிடவே “மௌனம்…”

மௌனம் என்றால் என்னப்பா…?

1.ஆத்மாவை எண்ணியே சக்தி வலுக் கூட்டும் சம்பாஷணையே (உரையாடல்) மௌனம்…!
2.மௌனம் என்றால் “பேச்சு என்ற வாய்ச் சொல் உரை அல்ல…”

கல்லாவின் பால் என்று கூறுவதெல்லாம் ஆத்மா பெற்றிடும் சக்தியின் பரிபூரணத்தைத்தான்…!
1.ஏடறிவின் வழி கற்றவர் அன்றி படிப்பறிவில்லாத எவரும்…
2.தன்னை எண்ணிடும் சிந்தனையின் வசமானால் கல்லா அறிவு சித்திக்கும்.

கல்லா அறிவின் தொடரில் அண்ட சராசரங்களையும் அறிந்து கொண்டே “தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும்…” எண்ணத்தின் செயல்பாட்டிற்கு வர வேண்டும்.

அதற்குச் சக்தி ஊட்டிடும் செயலாக அந்தச் சக்தியின் வளர்ப்பாகத் தன்னை வளர்த்து ஆதி சக்தியின் சக்திக்கே சக்தியூட்டி அதனுடன் ஒன்றிடும் செயல்பாட்டின் நிகழ்வாக ஆக்கம் பெற வேண்டும்.

உயிரணு குழந்தையாகப் பிறப்பிற்கு வந்த பின் தன் முன் தொடர் அறியாத் தன்மையில் அதே உயிரணு எண்ணம் கொண்டு ஆத்மாவாகும் சூட்சமங்களை யார் விளக்கிடுவார்…?

சகலத்திலும் சகலமாகக் கலந்துள்ள அண்டம்… பால்வெளி எங்கும் வியாபித்துள்ள… ஒளி காந்த சக்தியாக நிறைவு பெற்றுள்ள “மூல சக்தி…!” அதை அறியத்தானே சப்தரிஷிகளும் முயலுகின்றனர்.

1.ஆதி சக்தியின் சக்தியாக ஒன்றிச் செயல் கொண்டிடும் சப்தரிஷிகளின் ஒலி ஒளியாகச் செயல் கொள்ளும் சூட்சமங்களை எல்லாம்
2.மெய் ஞான விழிப்பறியும் “ஞானச் செல்வங்கள்” அறிந்து கொண்டு
3.என் நிலைக்கும் உயர்ந்து வாருங்கள்…! என்றே அழைக்கின்றேன்.

ஆத்மாவாக உதித்திடும் ஆதி சக்தியின் மூல சக்தி உயிரணுவின் எண்ணத்தின் ஈர்ப்பில் வலு வீரியத்தின் தின்மைக்கொப்ப ஒளி காந்தமாக ஒன்றி உயிராத்மாவாகப் பிறப்பிற்கு வந்திட… எண்ணமே வலுவாகப் பிறந்த பின்… தன்னை உணர்ந்து “நான் என்பது யார்..?” என்ற வினாவில்
1.கற்ற கல்வி உரைக்கின்றதே எண்ணத்தின் செயல்பாடு என்றால்…
2.அந்த எண்ணத்தில் எது செயல்பட வேண்டும்…?

ஆத்மாவின் பலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தின் செயல்பாட்டில் ஆத்மா என்பது யார்…? என்ற நிலையில் உயிர் மீண்டும் பிறப்பிற்கு வராத் தன்மை செயல் கொள்ள வேண்டும்.

மூலச் சக்தியின் பிம்பமாம் ஆத்மா வலுக் கொண்டு உயிரணுவில் ஒன்று கலந்து சூழ்ந்தே “பிரகாசிக்கும் ஜோதியாக ஆக வேண்டுமப்பா…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஜோதிடம் ஜாதகம் பார்த்து நல்ல நேரம் வருகின்றதா.,,! கெட்ட நேரம் வருகின்றதா..,? என்று பலர் கூடிப் பார்க்கின்றார்கள். யாகங்கள் பல செய்கின்றார்கள்.
1.அவர்கள் எல்லாம் உடலுடன் இன்று இருக்கின்றனரா…?
2.அவர்கள் உடலிலுள்ள துன்பங்களைப் போக்கினார்களா…?
3.துன்பத்தைப் போக்கினாலும் அவர்கள் செல்வத்தையெல்லாம் நிலை நிறுத்தினார்களா…?
4.செல்வம் இவருடன் செல்கின்றதா..,? உடலுடன் செல்கின்றார்களா…? என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

பல ஜாதகங்களையும் ஜோதிடங்களையும் பார்த்துத்தான் நல்ல நேரத்தை அமைத்துத் திருப்பூட்டுகின்றனர். திருப்பூட்டிய பின் ஒரு சிலரே அவருடைய சந்தர்ப்பம் “உயர்ந்த வாழ்க்கை” வாழ்கின்றனர்.

நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம் ஜாதகம் ஜோதிடம் பார்த்தாலும் திருமணமாகி வீட்டுக்கு வந்த பின் பல புகைச்சல் பல வெறுப்புகள் பல வேதனைகள் “எல்லாமே வருகின்றது…”

எல்லாப் பொருத்தமும் பார்த்துத் திருமணம் செய்தாலும் இங்கே பகைமை உணர்வு வளர்ந்து விட்டால் அதனால் பல நோய்களும் வந்துவிடுகின்றது.

ஒருவருக்கொருவர் வெறுத்துப் பேசும் பொழுது வெறுப்பின் உணர்வு வீட்டிற்குள் பரவப்படும் பொழுது “பாவி மகள் என் வீட்டிற்குள் வந்தாள்… எல்லோருக்கும் நோய் வந்துவிட்டது” என்பார்கள்.

இவர்கள் பண்படுத்தும் உணர்வைத் தவறியதனால் வெறுப்பின் உணர்வைத் தனக்குள் வளர்த்ததால் அந்த உணர்வால் இவர்களுக்குள் நோயாகி விடுகின்றது.

ஆனால் “மருமகள் வந்தாள்… அதனால்தான் என் குடும்பம் சிதைந்து விட்டது…” என்று இவர்கள் செய்யும் தவறை விடுத்து… வந்த மருமகள் மேல் பழியைப் போட்டு “மீண்டும்… குடும்பத்தில் சிக்கல்களையே ஏற்படுத்துகின்றனர்…”

ஜாதகம் ஜோதிடம் பார்த்துத்தான் திருமணத்தைச் செய்து வருகின்றனர். ஆனால் மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை வந்தே விடுகின்றது.

அப்பொழுது துயர்படும் உணர்வுகள் வரும் பொழுது விஷத் தன்மையான உணர்வுகள் ஆகிவிடுகின்றது.
1.அப்பொழுது இவர்கள் பார்த்த ஜோதிடம் எங்கே போய்விட்டது…?
2.இவர்கள் வணங்கிய தெய்வங்கள் என்னவாகிவிட்டது…?

பெண்ணைத் தேர்ந்தெடுப்பதற்காக தெய்வத்தின் மேல் பூவை வைத்துக் கேட்பார்கள். இந்தக் கலர் பூ வந்தால்… “எனக்கு நல்லது” என்றும் எண்ணுவார்கள்.

சிலை மீது அந்தப் பூவை வைத்தபின் இவர்கள் எண்ணம் எப்படியோ அப்படித்தான் விழுகும்.

கலக்கமான எண்ணத்தின் தன்மை கொண்டு அந்த உணர்வுடன் கண்ணின் பார்வை அங்கே பட்டால் உணர்வுகளுக்குள் உணர்வுகள் மோதப்படும் பொழுது அன்று அதன் வழி தான் நடக்கும்.

உதாரணமாக அன்று வேதனையை அதிகமாக எடுத்திருந்தால் வேதனை வரும். “எப்படியும்.. இன்று நல்லதாக வேண்டும்…” என்று எண்ணியிருந்தால் அதற்குத்தக்க நல்ல பூ வரும்.

நல்ல பூ விழுந்த பின் என்ன செய்கின்றனர்…? எல்லாத் தெய்வமும் ஒத்து வந்துவிட்டது… ஜாதகமும் ஒன்றி வந்துவிட்டது. ஆகவே திருமணத்தை நடத்தலாம் என்று வருகின்றனர்.

அத்தகைய நிலைகளில் பார்த்தாலும் திருமணமாகி வந்தபின் இவர்கள் எண்ணிய நிலைகள் கொண்டு அடக்கி ஆட்சி புரியும் நிலைகள் வரப்படும் பொழுது வெறுப்பென்ற உணர்வுகள் வருகின்றது.

ஒன்றுபட்டு வாழும் நிலைகள் மாறிவிடுகின்றது. பகைமை ஆகிவிடுகின்றது.
1.அப்பொழுது அந்த ஜாதகம் காக்கின்றதா…?
2.பூ வைத்துக் கேட்ட அந்தத் தெய்வம் காக்கின்றதா…?

இல்லை…! “உங்களுடைய எண்ணங்களை உயர்த்தி வரப்படும் பொழுது… அதுவே தெய்வமாகின்றது…”

ஞானிகள் காட்டிய அருள் வழியில் ஜாதகம் மனிதனுக்கு இல்லை.

இயற்கை தாவர இனங்களுக்கு உண்டு. “கிரேதா…” என்ற நிலையில் செடி கொடி இவைகளுக்கும் சூரியன் மற்ற கோள்களுக்கும் ஜாதகம் உண்டு.

தனக்குள் கிரகித்து உணர்வின் தன்மை சேர்த்துக் கொள்ளும் நிலைகளுக்கு அது உண்டு. அது எந்த உணர்வு கொண்டு உடல் பெற்று அதன் உணர்வின் மணத்தால் நுகர்ந்து செல்லும் மற்ற உயிரினங்களுக்கும் ஜாதகம் உண்டு.

ஆனால் மனிதனோ தீமைகளை அகற்றிவிட்டு உணர்வினை ஒளியாக மாற்றும் இந்தச் சக்தி பெற்றவனுக்கு ஜாதகம் என்பது இல்லை.

நியுமராலஜி – இந்தப் பெயரை இப்படி மாற்றி வைக்க வேண்டும் அப்படி வைக்க வேண்டும் என்றும் அதனால் நன்மை கிடைக்கும் என்று தாய் தந்தை வைத்த நல்ல பெயரை மாற்றிக் கொள்கின்றார்கள்.

வாஸ்து சாஸ்திரம் – வீட்டில் வாசலையோ சுவரையோ இப்படி மாற்றினால் சரியாக வரும் என்று அதற்காக கட்டிய வீட்டை இடித்து மாற்றவும் செய்கின்றார்கள்.

பணத்தைச் செலவழித்து மாற்றியமைத்துச் சிறிது காலம் நன்றாக இருந்தாலும் அடுத்த கணம் சொந்தத்தில் பிரியப்பட்டவர் ஒரு ஆக்சிடெண்ட் ஆகி இறந்துவிட்டால் என்ன செய்வார்கள்…?

“அடப் பாவி மகனே…” எப்படி இருந்தான்..,? இப்படிப் போய்விட்டானே…” என்ற வேதனை உணர்வை அதிகமாகத் தனக்குள் எடுத்துக் கொள்வார்கள்.

எந்த வாஸ்து சாஸ்திரத்தைப் பார்த்துவிட்டு அதன்படி கட்டினார்களோ அந்த வீட்டிற்குள் இத்தனை வேதனை உணர்வுகள் பரவப்படும் பொழுது தன் உடலுக்குள்ளும் பெருகிவிடுகின்றது.

அடுத்து இதே உணர்வின் வேதனை தொழிலிலும் பரவிவிட்டால் வாஸ்து சாஸ்திரம் வந்து காக்குமா…? காக்க முடியாது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றால் உங்களுக்குள் சிந்திக்கும் திறன் கிடைக்கும். அதன் வழியில் தீமைகளை நீக்கி மகிழ்ச்சி என்ற உணர்வை உருவாக்க முடியும்.

இந்த உடலில் வாழும் பொழுது பகைமை உணர்வுகள் நமக்குள் வளராது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பற்றை நாம் பற்றுடன் பற்றிடல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பற்றுடன் பற்றும் பழக்கம் வந்துவிட்டால் இந்த உடலை விட்டுச் சென்ற பின் இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் வராதபடி நாம் பிறவியில்லா நிலைகள் அடைய இது உதவும்.

அந்த அகஸ்தியன் கண்ட உணர்வை அவன் ஒளியின் சரீரமாக துருவ நட்சத்திரமாக ஆன பின் அவனைப் பின்பற்றிச் சென்ற ஞானிகள் எத்தனையோ பேர் உண்டு.

அவர்கள் அனைவருமே இன்று துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றனர். நம்முடைய எல்லை அது தான்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பிறருடைய தவறான செயல்களை உற்றுப் பார்த்தால் அது உங்கள் ஆன்மாவில் (நாம் இழுத்துச் சுவாசிக்கும் பாதையில்) முன்னனியில் வந்துவிடும். தவறையே மீண்டும் சுவாசித்தால் என்ன ஆகும்…? நம்மையும் தவறு செய்ய வைத்துவிடும்.

ஆகவே… தவறான செயல்களை உற்றுப் பார்த்த அடுத்த கணம் “ஈஸ்வரா…” என்று உயிரான ஈசனை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வை உடலுக்குள் செலுத்துதல் வேண்டும்.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடல் முழுவதும் சுழலச் செய்து
2.அந்தத் தீய செயலின் உணர்வு உங்களுக்குள் அது வளராது அதனுடைய உணர்வைச் சமப்படுத்துதல் வேண்டும்.

ஆனால் சமப்படுத்திச் சென்றாலும் நாம் தொழிலுக்குச் செல்லும் பொழுது அங்கே தொழில் சம்பந்தமாக மற்றவர்களைச் சந்திக்கும் பொழுதும் இதைப் போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.எங்கள் செயல் அனைத்தும் நலம் பெற வேண்டும்
2.நாங்கள் உருவாக்கும் உற்பத்தி செய்யும் பொருள்கள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்.
3.அந்தப் பொருள்களைப் பயன்படுத்துவோர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று
4.கண் கொண்டு அந்த உணர்வுகளைப் பாய்ச்சுதல் வேண்டும்.

அடுத்து எங்கள் சொல்லைக் கேட்போர் வாழ்வில் இனிமை பெற வேண்டும். நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் மலரைப் போன்ற மணங்கள் பெருக வேண்டும். மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இவ்வாறு எண்ணி எடுக்கும் உணர்வின் செயலாக்கங்கள் அங்கே கூடினால் தொழில் செய்யும் இடத்தில் உள்ள தொழிலாளியிடமோ அல்லது மேலதிகாரியிடமோ பேசும் பொழுது நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நமக்குள் இணைந்து வாழச் செய்யும்.

இப்படிச் சுத்தப்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும்…?

நாம் ரோட்டில் வரப்படும் பொழுது தீய செயலை ஒருவர் செய்கின்றார் என்றால் அந்த உணர்வை நாம் நுகர்ந்தால் நம் உடலில் ஆன்மாவில் முன்னனியில் வந்துவிடும்.

அதை நுகர்ந்து விட்டுத் தொழிலுக்கு வந்தால் நாம் சுவாசித்த உணர்வுகளே “நமக்குள் எதிரியாக வந்துவிடும்” என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

அப்பொழுது வேதனையான உணர்வைச் சுவாசித்துவிட்டுச் சென்று தொழிலில் ஒரு இயந்திரத்தை இயக்கினாலும் தவறான நிலைகளில் அது செயலுக்கு வரலாம். அது தவறான நிலைகளில் இயக்கப்படும் பொழுது பழுதாகித் தடையாகவும் ஆகலாம்.

அதனால் நண்பரிடத்தில் அல்லது மேலதிகாரியிடத்தில் பகைமை ஊட்டும் நிலை வரும். ஏனென்றால் நம் உடலுக்குள் வந்த அந்தத் தீமையான உணர்வுகள் நல்ல நண்பர்களையே பகைமையாக்கிவிடும்.

அதனால் தொழிலையும் வெறுக்கும் நிலை வரும்.

இதைப் போன்று நம்மையறியாது வரும் தீமைகளிலிருந்து விடுபட நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அருள் ஒளி பெற்றால் இருளை அடக்கிடும் ஞானமும் வரும். தெளிந்த மனதுடன் வாழவும் முடியும். ஆகவே இதை நீங்கள் எண்ணி எடுத்துப் பழகுங்கள்.

இதனால் உங்கள் தொழிலும் விருத்தியாகும். செல்வமும் தேடி வரும். வேலை பார்க்கும் இடத்தில் மகிழ்ச்சியும் கிடைக்கும். உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் உங்களால் ஒரு மன நிம்மதி கிடைக்கும்.

செவிக்கும் வயிற்றுக்கும் உணவு கொடுக்கின்றோம்… “உயிருக்கு” உணவு கொடுக்கின்றோமா…?

 

மனிதன் கொண்ட அறிவின் ஞானம் மொழி அறிவால் கற்றறிந்து உணர்கின்ற வகையில் உள்ளது.

மொழி அறிவென்பது மருத்துவம் மனோதத்துவம் உயிரியல் புவியியல் வானியியல் சித்தாந்தம் வேதாந்தம் வாழ்வியல் பொருளாதாரம் என்ற ஒவ்வொரு வகையின் தன்மைகளிலும் மனிதன் தான் கொண்ட அனுபவ ஞானத்தால் சமுதாய அமைப்பு முறை பெற்றுள்ளது.

அதிலே மேன்மேலும் கற்ற அறிவின் வளர்ச்சி உயர வழி வகை காட்டியது எந்த நிலையப்பா..?

அன்று ஆண்ட அரசர்கள் காலம் தொட்டே உண்மை நிலை அறியாத் தன்மையில் சமுதாய அமைப்பில் குறிப்பிட்ட ஓர் பிரிவினர் மட்டும் “தங்களைக் கடவுளின் குழந்தைகள்…” என்றே பறைசாற்றி வந்தனர்.

மக்கள் என்றுமே மாக்களாக இருந்திட்டால் தங்கள் குலம் வாழ வழியுண்டு…! என்ற கருத்தாய்வாகக் கொண்டு அரசனுக்கு அரசியல் சாசனங்களை வழியமைத்துத் தந்தனர்.

சித்தர்களும் மகரிஷிகளும் கொடுத்த உண்மைகளை அறியவிடாது அதைச் சீர் கெடுத்துவிட்டனர்.

மொழியறிவின் வளர்ச்சிக்கு ஏற்படுத்தப்பட்ட அசை நூல் (இலக்கண நூல்) வகையினைப் பின்பற்றுகின்றார்கள்.

ஆனால் அசை நூலாலும் விளங்கிக் கொள்ளா தன்மையாகக் காரணப் பெயர் காட்டிப் பொருள்களுக்கெல்லாம் மறைபொருளாகச் சித்தர்களால் இடுகுறிப் பெயர்கள் இடப்பட்டு மனித குலத்திற்கு மிக மிகத் தேவையான மருத்துவ முறைகள் கூறப்பட்டது.

ஆனால் மனிதர்களால் அந்தப் பொருள்களின் குணங்களை உலகோதய எண்ணத்தினால் அறிந்து கொள்ள வகையின்றி அவை அனைத்தும் மறைந்து விட்டன என்றே எண்ணுகின்றார்கள்.

1.அசை நூல் கொண்டே உரையும் உரை நடையும் மற்றும் கவிப் பாடல்கள் பலவற்றை அறிந்திட்டாலும்
2.கற்ற கல்வியின் செருக்கால் இலக்கண நூல் கொண்டு ஆயிரம் விளக்கங்களைக் கூறினாலும்
3.மறை பொருள் தன்மையின் காரணங்களை அறியாதது இவன் கொண்ட செருக்கினாலயே ஆகும்.
4.அந்தச் செருக்கு என்பது உண்மை ஞானத் தொடருக்குப் பகையப்பா…!
5.செருக்கின் தொடரில் எழுந்திடும் கோபம் உண்மை ஞானத்தை உணர்ந்து கொள்ள வழி காட்டாது.

உணர்வில் கோப குணத்தை வளர்ச்சிப்படுத்திக் கொண்டால் உணர்விலேயே கோபமுள்ளவன் உண்மையை உணர்வது எதுவப்பா..?

மெய்யறிவே வாலறிவாக்கும் செயலுக்குக் கற்ற கல்வியும்… அந்தக் கல்வியினால் பெற்ற அனுபவமும்… ஆத்திரம் கொண்டு புறப் பொருள் குணத் தன்மைகளை அதைச் சரீரத்தினுள் ஏற்றுக் கொண்டால் மாத்திரம் “உயர் ஞானம் சித்திக்குமா…?”

1.ஒரு மருத்துவன் நோயின் குணத்தை அறிந்து அதற்குண்டான மருத்துவத்தைச் செய்தாலும்
2.நோய்வாய்ப்பட்டவன் தான் பிழைத்தெழ வேண்டும்…! என்ற எண்ணத்திற்கு உணர்வுகள் கூட்டிக் கொள்ள வேண்டும் அல்லவா..?

அதற்கு எது முக்கியம்..?

1.நோய்வாய்ப்பட்டவன் அவனுக்குள் இருக்கும் பயத்தையும் விரக்தியையும் விலக்கிக் கொள்ள மன உறுதி தேவை.
2.ஏனென்றால் அனைத்திற்கும் மூலம் கோபமே.

கல்வி அறிவு என்பது பல நூல்களைக் கற்று அந்த நூல்களில் உள்ள கருத்துக்களின் உட்பொருளை அறிந்து… தெளிந்து… கற்ற கல்வியின் நீதி போதனைகளைத் தன்னுள் ஏற்று அந்த வழி நல் வழியாக இருந்தால் அதைக் கைக் கொள்ளுதல் (கடைப்பிடித்தல்) என்ற வகையில் தான் கொண்ட குணங்களுக்கொப்ப கற்ற கல்வி அறிவின் செயல் கொண்டிடும்.

ஏட்டின் வாயிலாகக் கற்ற கல்வியின் தொடரில் சிந்தனையின் தெளிவில் பெற்றிடும் ஞானம் நற்பண்புகளைக் காட்டுமேயானால்
1.ஏட்டின் வழி அறிந்து கொண்டிடா…
2.கல்லா அறிவின் வாயில் திறந்தே… சிந்திக்க வேண்டியது என்பது வள்ளுவ நாயனாரின் வாக்கு.

செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்…! என்பதில்
1.செவிக்குணவு என்பதே இன்றைய கால கட்டத்தில்
2.உண்மையின் பொருளை ஆராய்ந்து ஆய்வின் வழி உண்மையை உரைத்தல் என்பதெல்லாம் மாறு கொண்டு
3.”பட்டிமன்றங்கள்…” என்ற பெயரில் கற்ற கல்வியின் செருக்கைத் தான் கொண்ட புலமையையும் சொல்லின் ஆற்றலையும் வெளிப்படுத்தி
4.பெரும் ஆரவாரப் புகழ் தேடிடும் வழியாக்கிக் கொண்டதே வெறும் ஏட்டுக் கல்வியினால் கற்ற ஞானம்.

செவிக்கு உணவு வயிற்றுக்கு உணவு என்பது போன்றே
1.உயிருக்கு ஊட்ட வேண்டிய உணவை அறிந்து கொள்ள
2.கற்ற கல்வியின் ஞானம் செயல் கொள்ள வேண்டும்.

கல்லா அறிவை ஏடறிவின் அளவுகோலால் அளந்திட முடியாது.

ஆனால் கல்லா அறிவை ஆய்வதற்கு ஏடறியும் ஒரு நிலைக்களன் என்பதிலும் பண்பு வேண்டும் என்பதற்காகக் கல்வியின் செருக்கால் ஏற்பட்ட “நான்” என்பதை நீக்கி விட்டால் பகை இல்லையே…!

பகை என்பது என்ன..? தான் கொண்ட எண்ணமே பகையாகும். வாய்மொழியால் யாரையும் தூசித்திடல் ஆகாது.

1.வாய்மை மொழியே தான் கொண்ட எண்ணத்தின் பண்பு நிலையால்
2.கல்லா அறிவு என்னும் மெய் ஞானம் பெற்ற மகான்களை எண்ணி அவர்களிடம் ஆசி பெற வேண்டும்.

உட்கார்ந்து தியானமிருப்பது என்பது “ஒரு பயிற்சி… பழக்கத்திற்குத் தான்…!”

 

பள்ளிக்குச் சென்று படித்து முடிக்கின்றோம். பிறகு சிக்கல்கள் வரும்பொழுது “மீண்டும்” பள்ளிக்குச் சென்று யாரும் படிப்பதில்லை.

படித்து விட்டு வந்துவிட்டோம். படித்து முடித்து வந்தபின் தப்பாகி விட்டால் “ஓடிப் போய்ப் பள்ளியில் உட்கார்ந்து” மீண்டும் படிப்பதில்லை.

பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்த பாடநிலையைப் பார்த்து அதன்படி செய்த நிலைகளில்… “இதில் என்ன குறை இருக்கின்றது…” என்று “திரும்பிப் பார்க்க வேண்டும்…” ஆகவே
1.தியானம் இருந்து பழகியபின்
2.பழையபடி ஓடி வந்து தியானமிருப்பதில்லை.

இங்கே பாட நிலையை உங்களுக்குள் உறுதிப்படுத்தியபின் அருள் உணர்வுகளின் “பதிவு… RECORD” உங்களுக்குள் இருக்கின்றது.

1.வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் சிக்கலாகின்றதோ அந்த இடத்திலேயே… அப்போதே… இதனுடய சிந்தனை என்ன…?
2.சாமி என்ன உபதேசம் செய்தார்…?
3.“சாமி உபதேசம் செய்ததற்கும்… நமக்குள் இப்போது வருவதற்கும்,,. என்ன வித்தியாசம் இருக்கின்றது…?”
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
5.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணினால்…
6.உங்களுக்கு அப்பொழுதே “விடை” தெரியும்.
7.அந்த விடையை வைத்து மாற்றிக் கொள்ளும் சக்தி உங்களுக்கு வர வேண்டும்.

ஆனால் இப்பொழுது என்ன செய்கிறோம்…?

சாமியை நம்புகிறோம்… சாமியாரை நம்ப முடிகின்றது.. மந்திரக்காரரை எல்லாம் நம்ப முடிகின்றது. நாம் இப்படித்தான் தேடிப் போகின்றோம்.

நமக்குள் இந்தச் சக்தியை வளர்த்து இந்த வாழ்க்கையில் வந்த துன்பங்களை நீக்கி அந்தப் பேரருள் என்ற உணர்வை வளர்த்து இனிப் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும் என்ற அந்த நிலைக்கு வருதல் வேண்டும்.

அப்பொழுது இந்த வாழ்க்கையில் தீமை புகாது “தீமைகளை அடக்கிடும் வல்லமை” வருகின்றது.

ஆனால் இதை விட்டு விட்டு என்ன சொல்வார்கள்…?

தீமை வரப்படும் பொழுது…
1.எனக்குக் கஷ்டமாக இருக்கின்றதே…
2.இந்த வேலை செய்தால் அப்படி நடக்கின்றது… தொழில் செய்தால் நஷ்டமாகின்றது…
3.இந்த வண்டியை ஓட்டினால் கஷ்டமாக இருக்கின்றது…
4.”எதைச் செய்தாலும்…” எனக்கு ஒரே தொல்லையாக இருக்கின்றது என்பார்கள்.

இப்படிக் கஷ்டங்கள் ஆனபின் அப்புறம் அந்த உணர்வு கொண்டு பிள்ளைகளை எண்ணினால் அவர்களுக்குள்ளும் இந்த உணர்வுகள் பதிவாகி விடுகின்றது. அவர்கள் தொழில் செய்தாலும் நஷ்டமாகின்றது.

இப்படியே…
1.என் குடும்பத்தில் தொடர்ந்து எல்லாமே நஷ்டமாகின்றது
2.என் குடும்பத்திற்கு “யாரோ… ஏதோ… என்னமோ… செய்து கொண்டிருக்கின்றார்கள்…”
3..யாரோ செய்துவிட்டார்கள்…! என்ற இந்த உணர்வு தான் வரும்.

அதற்குத் தகுந்த மாதிரி ஜோதிடம் பார்ப்பவர்களிடம் செல்வார்கள். அவன் என்ன செய்வான் தெரியுமா..,?

நாம் இந்த எண்ணத்துடன் செல்கிறோம் அல்லவா.., இதை மீண்டும் உறுதிப்படுத்திவிடுவான் (RE – RECORD). உங்களுக்குத் “தோஷத்தைச் செய்துள்ளார்கள்…” என்பான்.

சகஜ வாழ்க்கையில் ஏதாவது சிறு குறைகள் இருந்தால் அந்தக் குறையின் தன்மை வரும் பொழுது என்ன செய்வோம்…? “இன்னார் தான்… செய்திருப்பார்கள்” என்று உறுதிப்படுத்துவோம்.

அதே மாதிரி நாம் எண்ணும்பொழுது இந்த உணர்வு கலந்து அலைகளாகப் பாய்ச்சப்படும் பொழுது.., நீங்கள் அங்கே போனவுடன் (ஜோதிடம் பார்ப்பவன்) இன்னொரு ஆவியின் உணர்வு கொண்டு… அல்லது உணர்வின் வலிமை பெற்று… இதை அறியும் உணர்வு மோதப் பெற்றவுடன் அவன் என்ன சொல்வான்..?

1.உங்களுக்குப் பக்கத்தில் தான் இருக்கின்றார்கள்
2.ரொம்பவும் தெரிந்தவர்கள்தான்… என்று இலேசாக ஒரு வார்த்தையை விட்டுப் பார்ப்பான்
3.இவராக இருக்குமோ என்று நம்மிடம் இருந்து சொல்கள் வந்தவுடன்
4.”அவர்களே தான்” என்பான்…
5.கடைசியில் இவர்கள் தான் செய்தார்கள் என்று பகைமையை உண்டாக்கிவிடுவான்.

உங்களுடைய சந்தர்ப்பம்… சந்தேகமாக இருந்தாலும்… பின் “அவர்கள் தான் செய்திருப்பார்கள்…” என்று உறுதியாகிவிடும்.

இந்த மாதிரிச் செய்து விட்டார்கள் என்ற உணர்வு ஆனபின் அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம்… “ஜிர்… ஜிர்…” என்று பகைமை உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

“பாவிப்பயல்…” ஒன்றும் தெரியாமல் இருந்து கொண்டு “எந்த வேலையைச் செய்திருக்கின்றான் பார்…” என்ற எண்ணங்கள் வரும்.

ஆனால் அவர்கள் நம்மைப் பார்க்கும் பொழுது “ஏன்… இப்படி முறைத்து முறைத்துப் பார்க்கின்றார்கள்…?” என்று அந்த உணர்வை அவர்கள் எடுத்துக் கொண்ட பின் அதற்குத் தக்க மாதிரி பதிலுக்கு அவர்களுக்குள்ளும் கலக்கமாகும்.

பின் ஒருவருக்கொருவர் என்ன ஆகும்…? அங்கேயும் வித்தியாசமாகி அவர்களும் முறைத்துக் கொள்வார்கள்.

அப்பொழுது என்ன முடிவுக்கு வருவார்கள்…?

1.“பார்த்தாயா.., ஜோதிடக்காரன் சொன்னது… “கரெக்ட்…”
2.அடுத்து வீட்டிற்குள் வம்பு வந்தது…! என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இப்படி… நாம் “பிறருடைய உணர்வுகளைத்தான்” வளர்த்துக் கொள்கின்றோமே தவிர நல்லதை எடுப்பதற்கு முடிகின்றதா…?

நம் குருநாதர் காட்டிய வழியில் அருள் உணர்வை வளர்த்துக் கொண்டால் இருள் சூழும் நிலைகளிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ளும் சக்தி “உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்…!”

இவ்வளவு பெரிய உடலை வளர்த்து வந்ததும்… உங்களுடைய வாழ்க்கைக்கு வழி காட்டி வந்ததும்… நீங்கள் நுகர்ந்த உணர்வு தான்… உங்கள் உயிர் தான் இதையெல்லாம் உருவாக்கியது.

எதெனெதன் நிலைகளில் எண்ணுகின்றோமோ அதன் வழியில் தான் உயிர் இயக்கிக் காட்டுகின்றது.

1.நாம் உயர்ந்த உணர்வை எடுத்தால்… அது கருவாகி
2.அதை வளர்த்து விட்டால்… “உயர்ந்த ஞானத்தையும் தீமைகள் புகாத நிலையும்”
3.உங்களுக்குள் வளர்க்க இது உதவும்.

அதற்குத் தான் எம்முடைய உபதேசமே… (ஞானகுரு).

காயகல்பம்…!

 

பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனைச் சுற்றிக் கொண்டு பால்வெளியில் உள்ள மற்ற கோள்களின் தொடர்பு கொண்டே பல சக்திகளை ஈர்த்துச் சமைத்துச் சுவாச அலைகளாக வெளிவிடுகின்றது.

பூமி சூரியனைச் சுற்றி வரும் நிலையில் நெருங்கியும் விலகியும் சுழன்றோடும் நீள் வட்டத் தொடரில் பூமியில் ஏற்படும் இயற்கை மாற்றங்களையே “பருவ காலங்கள்…” என்று அன்றே ஞானிகள் கண்டுணர்ந்தார்கள்.

ஒவ்வொரு பருவ காலத்தையும் அந்த இயற்ககையின் செயல் நிகழ்வுகளை தன் சரீர உணர்வு கொண்டு அனுபவ ஞானத்தால் உணர்ந்து கொண்டார்கள்.

அவ்வாறு உணர்ந்து கொண்ட அந்த இயற்கையின் சூழலில்
1.அண்டத்தின் அதி உன்னதத் தன்மைகள் அனைத்தையும்
2.சமுதாய நல அமைப்பிற்கு நல் வாழ்க்கை நெறிகளாக
3.பல வழிகளில் பேருண்மைகளை நமக்குக் காட்டினர் அன்றைய மகரிஷிகள்.

புவியியல்… உயிரியல்… வானியல்… என்றே மூன்று வகைக் கோணத்திலேயும் இயற்கையின் செயல்பாட்டை அவர்கள் உணர்ந்து தெளிந்தனர்.

அதே சமயத்தில் அந்த வானியல் தன்மைகள் பூமியின் தொடர்பில் ஏற்படுத்திக் கொள்ளும் கிரியைகள் அனைத்தையும் தன் சரீரத்தில் கண்ட பொழுது “உயிரியல் தத்துவமாக” அதை உலகிற்கு உணர்த்திக் காட்டினார்கள்.

1.அறிந்ததை அறிந்ததாக எண்ணப் பெட்டகத்தினுள் வைக்கப்பட்டு
2.மௌனம் என்ற பூட்டால் பூட்டப்பட்டு
3.உணர்ந்து கொண்ட உணர்வின் அனுபவ ஞானங்கள் அனைத்தும் (காலத்தால்) மறைக்கப்பட்டதால்
4.வாழ்க்கையின் நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டிய பல செயல்களை அவர்கள் உரைத்திருந்தாலும்
5.இன்றைய சமுதாயத்தின் எண்ணங்களால் “மாற்றமே” காணப்படுகின்றது.

காயகல்பத் தொடருக்கு உணர்த்தப்பட்ட மண் வள குணத் தன்மைகள் மறை பொருளாகவே இருக்கட்டும்…!

1.வியாழன் கோளிலிருந்து வெளிப்படும் அலைகளைப் பூமி அதிகமாக ஈர்த்திடும் காலகட்டங்களில்
2.பருவ காலத்தின் சுழற்சியில் குளிர்விப்பு குணத் தன்மைகளும்
3.கார்த்திகை மாதம் தொடங்கி… மார்கழியில் செயல் கூடி.. தை மாதத்தில் உருவாகும் “உவர் அமில அடர்வாக…”
4.பூரணச் சந்திரனின் “தண் ஒளி…” (குளிர்ச்சியான) கலந்திடும் செயலின் உருக்கோலமும் வண்ணமும் காட்டி
5.இரவுக் காலங்களில் பூமியின் வெக்கையால் மண் நெகிழ்ந்தே இருக்கும் நிலையில்
6.அமில அடர்வின் குணம் லேசான தன்மையாக வெளிப்படும் செயலை அறிந்து கொள்ள வேண்டும்.
7.ஆகாய நீர் உரித்தே எடுத்துக் கொள்ளவும்…
8.சூரிய வெப்ப அலையில் அந்த நீரினுள் மறைத்துக் கொள்ளவும்…
9.சுடாத நெருப்பில் காய்ச்சிக் கொள்ளவும்…
10.உயர் ஞானத் தெளிவாகத் தெரிந்து கொள்ளவும்………

இந்த உண்மைகளைக் கண்டுணர்ந்து அனுபோக மருத்துவ முறைப்படி இதையே குரு என்ற பெயர் நாமமிட்டு குருக்கோளின் (வியாழன்) தொடர்பினால் பெற்றதையே ஔஷதங்களில் கலந்து உடல் பிணிகளை அகற்றிடும் செயலுக்கே செயல் கொண்டனர்.

அனுபவ முறைகளைச் செவிப்புலனறிவால் அறிந்து கொண்ட சிலரால் மக்களின் அறியாமையைப் பயன்படுத்திச் செல்வம் சேர்த்திடும் நிலைக்கும் இதே முறையைப் பயன்படுத்துகின்றனர்.

1.ஆனால் இந்தச் செயல்கள் அனைத்தையும் மெய் ஞான வளர்ச்சிக்குப் பயன்படுத்தினால் – “காயகல்பமாக…”
2.மேன்மேலும் ஆக்கத்தின் செயலுக்கு உண்மையைக் காட்டும்.
3.அதைப் பெற்று நீங்கள் உயர்ந்திட எமது ஆசிகள். (ஈஸ்வரபட்டர்)

நீ பேசவில்லை… “பச்சிலை தான் பேசுகிறது…” என்றார் குருநாதர்

 

குருநாதர் என்னைக் காட்டிற்குள்ளும் மேட்டிற்குள்ளும் அழைத்துச் சென்று பல கஷ்டங்களைச் செயற்கையாக ஏற்படுத்தித் தான் உண்மைகளை உணரும்படி செய்தார்.

ஆனால் நீங்கள் இங்கே சமமான இடத்தில் அமர்ந்து இந்த உபதேசங்களைக் கேட்கின்றீர்கள்.
1.எந்த அளவிற்கு இதைக் கூர்ந்து கவனித்துப் பதிவாக்குகின்றீர்களோ
2.உங்கள் வாழ்க்கையில் தெளிந்து தெரிந்து வாழ்வதற்கு இது உதவும்.

ஒரு பச்சிலையைக் காட்டி… “இந்தப் பச்சிலை பேசுமாடா…!” என்பார் குருநாதர்.

அது எப்படி சாமி பேசும்…? என்பேன். அவர் ஒவ்வொன்றாகத் தொட்டுத் தொட்டுத் தொட்டுத் தொட்டுக் காண்பிக்கின்றார். பச்சிலை எப்படி சாமி பேசும்…! என்று நான் கேட்கின்றேன்.

“பச்சிலை தான் பேசுகிறது…” என்பார்.

நான் பேசாது என்பேன். இரண்டு பேருக்கும் “சண்டை” வரும்.

காட்டிற்குள் அழைத்துச் சென்ற பின்…
1.பச்சிலை தான் பேசும் என்பதை நீ தெரிந்து கொள்ளும் வரை
2.“உன்னை விடமாட்டேன்” என்பார் குருநாதர்.

அப்போது நான் என்ன செய்ய முடியும்…! அவர் ஒவ்வொரு பச்சிலையாகக் கொடுத்து முகர்ந்து பார்க்கும்படி சொல்வார். பல பச்சிலைகளை முகர்ந்த பின் கடைசியிலே என்ன செய்தார்…?

எனக்குத் தெரியாமலே ஒரு விஷமான செடியைக் கையில் கொடுத்து அதை என்னை நுகரும்படி செய்தார்.

மயக்கம் வருகின்றது… அம்மா… அப்பா…! என்று சொல்கின்றேன்.

இப்பொழுது யாருடா பேசுகிறது…? என்று கேட்கின்றார்.

என் உடலில் “நோய் பேசுகிறது…” என்று சொன்னேன்.

நோய் எப்படிடா வந்தது…? இந்த பச்சிலை தானே காரணம் என்று சொல்கிறார் குருநாதர்.

சில பச்சிலைகளை நுகரும் பொழுது எனக்கு உற்சாகம் வந்தது… ஜம்… என்று இருக்கின்றது.

காட்டிற்குள் அங்கே சாப்பாடு ஒன்றும் கிடையாது. ஒரு லிட்டர் அரிசி; ஒரு டப்பா; மோரில் ஊறப் போட்ட கத்திரிக்காய்; மோரில் ஊறப் போட்ட மிளகாய்… (உப்பு கலந்தது) இதை வைத்துத் தான் இரண்டு மாதம் நாங்கள் இரண்டு பேரும் காட்டிலே காலம் தள்ளினோம்.

இரண்டு கட்டையை வைத்துத் தீயை மூட்டி மேலே பாத்திரத்தை வைத்து நீரை அதிகமாக ஊற்றி அரிசியைப் போட்டுக் கஞ்சி மாதிரிக் காய்ச்ச வேண்டும். அதிலே மிளகாயையும் கத்திரிக்காயையும் ஒரு துண்டு போட்டால் அது தேவாமிர்தமாக இருக்கும். இது தான் அங்கே சாப்பாடு.

ஆனால் குருநாதர் பச்சிலைகளை நுகர்ந்து பார்க்கும்படி சொன்னார். நுகர்ந்து உடலுக்குள் மாற்றங்களாகும் போதுதான் எனக்குத் தெரிய வருகின்றது.

பச்சிலை பேசுமாடா என்று கேட்டுக் கேட்டுச் சில விஷமான பச்சிலைகளை நுகரும்படி செய்ததும் எனக்கு மயக்கம் வந்து விட்டது. எம்மா… எப்பா…! எம்மா… எப்பா…! என்று கத்தத் தொடங்கினேன்.

என்னடா செய்கிறது…? என்று குருநாதர் கேட்டார்.

சாமி… எதையும் சாப்பிட முடியவில்லை.. தலை வலி வருகின்றது எப்படியோ மயக்கமாக இருக்கிறது…! என்று சொன்னேன்.

இதை எல்லாம் பேசுவது யாருடா…? என்று கேட்டார்.

“நான் தான் பேசுகிறேன்…” என்று சொன்னேன்.

உன்னை பேச வைப்பது எது…? அது யாருடா…! நீ நுகர்ந்த பச்சிலை தான் இவ்வாறு பேச வைக்கின்றது என்றார்.

பச்சிலைகளுக்கு மணம் உண்டு.
1.தன் மணத்தால் மற்றொரு செடியின் மணத்தை அருகில் விடாது தள்ளி விடுகின்றது
2.இப்பொழுது நீ நுகர்ந்த பச்சிலையின் உணர்வுகள் உன் உடலில் உள்ள அணுக்களில் சேர்ந்த பின்
3.இந்த வேலையை எல்லாம் செய்கின்றது… நல்லதை வர விடாதபடி தடுக்கின்றது…!

நீ எம்மா… எப்பா… என்று அலறுகிறாய் என்றால் அப்பொழுது எது பேசுகின்றது…?

உயிரணு எப்படி ஆனதோ இதைப் போன்று அந்தப் பச்சிலை உருவாகி குறித்த காலம் வந்து உனக்குள் இவ்வாறு செய்கின்றது. “பச்சிலை தான் பேசுகிறது…” என்பதை இவ்வாறு உணர்த்துகின்றார்.

உயிர் தோன்றிய பின் வளர்ச்சியில் மனித உடல் பெற்ற பின் உணர்ச்சிக்கொப்ப எண்ணமும் அதற்குத்தக்க செயலும் வந்தது. ஆனால் விஷமான செடிகளின் மணத்தை நுகர்ந்த ஐந்தாறு நாட்களுக்குள் உனக்கு இப்படி ஆகிவிட்டது. எம்மா… எப்பா… என்று வேதனைப்படுகின்றாய்…!

உங்களிடம் இப்பொழுது நான் சொல்கின்றேன் ஆனால் நான் காட்டிற்குள் சிரமப்பட்டு… இன்னல்பட்டு… வேதனைப்பட்டுத் தான் அதையெல்லாம் அறிந்து கொண்டேன்.

விஷமான செடிகளின் மணங்களை நுகரும்படி செய்து கை கால் குடைச்சல்களை ஏற்படுத்தித் தான் குருநாதர் தெரிய வைத்தார்.

ஒரு மாதம் இரண்டு மாதம் இவ்வாறு சுற்றிய பின் ஒவ்வொரு குணங்களுக்கும் நீ நுகர்ந்தது என்ன செய்கின்றது…/
1.இந்த உணர்வுகள் உன் உடலில் என்ன செய்கின்றது…?
2.அந்த அணுக்களுக்குள் என்ன இயக்கங்கள் ஏற்படுகின்றது…?
3.அதை மீண்டும் சரி செய்வது எப்படி…?

அதைத் தெரிய வைப்பதற்காக வேண்டி வேறு சில பச்சிலைகளை நுகரும்படி செய்தார். அதை நுகர்ந்த பின்பு “அப்பாடா…!” என்று சொல்கிறேன். உடல் நன்றாக ஆகின்றது.

உன் உடல் இப்பொழுது எவ்வாறு நன்றாக ஆனது…? என்று அதை எல்லாம் அனுபவபூர்வமாகத்தான் குருநாதர் எனக்குக் காட்டினார்.

நாம் எப்படி இயங்குகின்றோம்…? என்பதைத் தெரிய வைப்பதற்குத் தான் இதை எல்லாம் செய்தார்.

தான் விரும்பியது உடனே கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் தியானம் செய்தால் என்ன ஆகும்…?

 

தியானத்திற்கு வருகின்றோம் என்று சொல்பவர்கள் எந்த நினைவுடன் வருகிறார்கள்…?
1.என் பிள்ளைக்கு நன்றாகப் படிப்பு வர வேண்டும்
2.நான் தியானம் எடுத்தால் உடனே செல்வம் வர வேண்டும்… செல்வாக்கு வர வேண்டும்… என்று
3.இவைகளை எண்ணித்தான் தியானம் எடுக்கின்றார்கள்

ஆனால் அவ்வாறு எண்ணித் தியானம் செய்த பின் ஒன்றும் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்கின்றார்கள்…?

காரணம் ஆசை ஒன்றிலே இருக்கின்றது… செய்வது வேறாக இருக்கிறது.

பலகாரத்தைச் செய்யும் போது இன்னென்னதைச் சேர்த்தால் ருசியாக வரும் என்று நினைக்கின்றோம். ஆனால் ஆசை என்ற உணர்வுகள் செல்லும் பொழுது கலக்கும் பொருளைச் சேர்த்து அதை ருசியாகக் கொண்டு வருவதற்கு மாறாகக் கலக்கும் பக்குவத்தை மாற்றினால் ருசி எப்படி வரும்…?

ஏனென்றால்…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து உங்களை அறியாது இயக்கும் சங்கடமான உணர்வுகளைத் துடைத்துவிட்டு
2.சிந்தித்துச் செயல்படும் தன்மைக்கு நீங்கள் வர வேண்டும் என்பதற்குத் தான் இந்தத் தியானத்தையே கொடுக்கின்றோம்.

ஆனால் தியானத்தை எடுத்து என்ன செய்கின்றார்கள்…?

1.தான் பெற வேண்டும் என்ற ஆசையில் வரப்படும் பொழுது
2.நாளுக்கு நாள் அதையே கூட்டுகிறார்கள்… கவர்கின்றனர்
3.வலுவாக (அழுத்தமாக) எண்ணி எடுக்க வேண்டிய அருள் சக்திகளையும் அதைப் பயன்படுத்தும் முறைகளையும் விட்டுவிடுகிறார்கள்.

கம்ப்யூட்டர் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகள் கொண்டு தான் இயக்குகின்றது.
1.அதனுடைய அழுத்தங்கள் எந்த அளவிற்கு இருக்கின்றதோ அந்த அளவிற்குத் தான் இயக்கமாகின்றது – அனைத்தும் மேக்னட்
2.அதற்குள் உணர்வின் உணர்ச்சிகளைத் தட்டும் போது (ஆணைகள் – COMMANDS) அழுத்தம் எதுவோ அந்த ஒலி அலைகளை எழுப்புகிறது.

அதாவது… காந்தப்புலன் அறிவால் வரக்கூடிய உணர்வுகளும்… அதனுடன் சேர்த்துக் கெமிக்கலில் அந்த அழுத்தத்திற்குத் தக்க ஒலி அலைகளைப் பரப்புகின்றது.

அதே போன்று தான் நம் உயிரின் தன்மைகள் கொண்டு எதனின் உணர்வுகளை நுகர்கின்றமோ உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகள் எழும்பி அதற்குத் தக்க தான் ஒலி/ஒளியாகி நம்மை இயக்குகின்றது.
1.இன்றைய விஞ்ஞானம் இதை நிரூபிக்கின்றது
2.அன்றைய மெய் ஞானிகள் சொன்னதை நாம் ஏற்க மறுக்கின்றோம்.

ஆகவே இதைப் போன்றுதான் நம் நம்மை அறியாமலே பல தவறுகள் இயக்கத் தொடங்கி விடுகின்றது. நடக்கவில்லை… கிடைக்கவில்லை… என்ற பிடிவாதமான உணர்வு வளரப்படும் பொழுது இப்படியே நடக்கின்றதே… இப்படியே நடக்கின்றதே… இப்படியே நடக்கின்றதே…! என்று வேதனைப்படும் பொழுது எல்லாருடைய மனமும் கெடுகின்றது.

சிந்திக்கும் தன்மை இழக்கப்படும் பொழுது
1.தன்னை அறியாமலே அவரும் தவறு செய்கின்றார்
2.நம்மையும் தவறு செய்யும் நிலைகளுக்கு அது அழைத்துச் சென்று விடுகின்றது.

கார்த்திகை நட்சத்திரம்

 

எண்ணம் கொண்டே வாழ்க்கை நிலைகளுக்கு உரைத்து வந்ததில்…
1.மனத்தின் பக்குவம் உலகோதய வாழ்க்கை நெறி முறைகளில் எதிர் மோதல் குணத் தன்மைகள் அலை அலையாக வந்திட்டாலும்
2.துடுப்பிட்டுச் செல்லும் படகு அலைகளின் மீதே சென்று… சேருமிடம் சேர்வதைப் போல்
3.நம் நிலையிலும் உணர்வுகளைச் சமன்படுத்திட வேண்டும் என்ற எண்ணம் உந்துதலாக
4.அதன் வழி முறைகளைச் சிந்தையில் இருத்திச் சித்தன் நிலை பெற வேண்டும்.

பேருண்மைகளைப் புகட்டுவதெல்லாம் உயர்வு தாழ்வு முறைகளுக்கு அல்ல.

மருத்துவ குணங்களாகப் புகட்டினலும் எண்ணத்தின் நிறைவன்றோ சரீர சுகம் அளிக்கின்றது. சரீரத்தில் நோய் அகல மருத்துவன் அளித்திடும் மருந்து வீரியம் கொண்டு எதிர்மோதல் குணத் தன்மைகளில் நோயை விலக்கிட்டாலும் மீண்டும் அதே நிலை காணப்படுவதெல்லாம் எண்ணத்தின் செயல் தான்.

1.நோய் உடலிலா…? எண்ணத்திலா…?
2.சுவாச நிலைகளின் இயல்புத் தன்மையை மாற்றினாலே எண்ண ஈர்ப்பைப் பெற்றிடும் செயல்கள் இயற்கை கொண்டா…? என்ற தொடருக்கும் விடை கிடைக்கும்.
3.எண்ணத்தைச் சிதறவிடாது நிலைப்படுத்தும் முனைப்பில் நல்லாக்கம் பெற்றிடலாம்.

கார்த்திகை தீபம் பார்க்கின்றோம். அதன் சூட்சமப் பொருள் புரிந்திட்டதா…? இன்றைய நடை முறைக்கு அது பெரும் சடங்காகிவிட்டது.

அன்று சித்தன் கண்ட உண்மைப் பொருள் பௌர்ணமி நிலவின் ஒளி சக்தியும் நட்சத்திர அலைகளின் சங்கமிப்பும் பூமியின் ஈர்ப்பில் செயல் கொண்டே சில சூட்சம வித்தின் தன்மைகள் பூமித் தாய் அளித்திடும் செயலுக்கே மறைபொருள் காட்டி ஜோதியின் உட் பொருள் காட்டி ஜோதியின் பொருள் உணர்த்த கார்த்திகை மார்கழி தை மாதங்களில் பருவ நிலையின் குளிர்விப்பும் கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியில் பூமி ஈர்த்துப் பெற்றிடும் சக்தியின் செயலையே அந்த மாதத்தில் தீபமேற்றி வணங்கிடும் முறை காட்டப்பட்டது.

எல்லாக் காலங்களிலும் தான் பூமித் தாய் தன் சக்தியை வளர்ச்சிப்படுத்துகின்றாள். இருப்பினும் இயற்கையின் செயலில் அன்றைய சித்தர்கள் மருத்துவத்தின் ஆய்வில் உயர் ஞானம் கொண்டே அறிந்த காயகல்ப முறையே ஜோதி தீப வணக்கமாகக் கூறப்பட்டது.

இந்த மாதக் காலங்களில் சிற்றின்ப நுகர்வுகள் விடுத்து மனத்தை ஒருமுகப்படுத்திவிட்டு தியானிக்கச் செய்த வழி கார்த்திகை மார்கழி மாதங்களில் சிந்தனையில் செயல் ஒருமுகபடுத்தப்பட்ட தை மாத பௌர்ணமியில் பூமித் தாய் வெளிப்படுத்தும் சூட்சம சக்தி அலைகள் பெற்றிடவே ஞானிகளால் சிஷ்யர்களுக்கு உணர்த்தப்பட்டது.

அந்த வழி முறைகள் எல்லாம் இன்றைக்கு மாற்று நிலை பெற்றுவிட்டது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக கருணைக் கிழங்கை அப்படியே சாப்பிட்டால் அதிலுள்ள விஷம் நம்மை வீழ்த்திவிடும். ஆனால் ஆறாவது அறிவு கொண்ட மனிதன் “முருகு” மாற்றியமைக்கக்கூடிய சக்தி பெற்ற நாம் என்ன செய்கின்றோம்…?

1.கருணைக் கிழங்கில் விஷம் இருக்கிறதென்றால் “வேக வைத்து” விஷத்தின் தன்மை தணிக்கின்றோம்.
2.தொக்கியுள்ள இதனுடன் ஒன்றிய நிலைகளை “புளியைக் கரைத்துச்” சேர்த்து அந்த விஷத்தின் தன்மைகளைத் தணிக்கின்றோம்.
3.மிளகாயைத் தனியாக வாயில் போட்டால்.., “ஆ..ஆ..,” என்று அலறுகின்றோம். இதைக் கலந்து புளியுடன் சேர்த்து “உணர்ச்சியைத் தூண்டும்” சக்தி பெறச் செய்கின்றோம்.
4.உப்பைக் கலந்து அதனுடன் பல சரக்குகளைச் சேர்த்து இணைத்துச் “சுவையாக…” மாற்றுகின்றோம்.

இதைத்தான் “முருகு” மாற்றியமைக்கும் சக்தி பெற்றவன் மனிதன என்று சொல்வது.

கருணைக் கிழங்கில் “விஷம் இருக்கின்றது..,” என்று தெரிந்து கொள்கின்றோம்.., கார்த்திகேயா.

மிளகாயில் “கார உணர்ச்சிகள் உண்டு…” என்று தெரிந்து கொள்கின்றோம்… கார்த்திகேயா.

புளியை வாயில் வைத்தால் முகத்தைச் சுளிக்கச் செய்கின்றது. இந்தப் புளியைக் கரைத்துவிட்ட பின் விஷத்தின் நேர்முக இயக்கத்தை அடக்குகின்றது. உப்பை அதனுடன் கலந்த பின் சுவையின் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது… கார்த்திகேயா.

இவை அனைத்தையும் தன் உணர்வால் சுவையுள்ளதாக மாற்றி அதை உணவாக உட்கொள்ளும் பொழுது நம் உணர்ச்சிகள் எப்படி வருகின்றது…?

கருணைக் கிழங்கைத் தனியாகச் சாப்பிட்டால் குடல் எல்லாவற்றையும் அரித்துவிடும்.

அதற்குப் பதிலாக இப்படிப் பல சரக்குகளைச் சேர்த்த பின் கருணைக் கிழங்கைக் குழம்பாக வைத்து “ருசித்துச் சாப்பிடும்போது…” இந்த உணர்வுகள் அந்த உணர்ச்சிகள் “பஞ்ச அபிஷேகமாக…” மகிழ்ச்சியான நல்ல உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

அப்பொழுது அந்த உணர்ச்சிகள் (விஷத்தை வென்ற உணர்ச்சிகள்) நம் உயிரிலே பட்டு… அந்த உணர்வின் “(ஊறும்) அமிலங்களை” உருவாக்குகின்றது.

அப்பொழுது அந்த அமிலங்கள் நம் “உமிழ் நீராக…” மாறுகின்றது.

நாம் உணவாக உட்கொள்ளும் அந்தச் சக்திக்குள் “மகிழ்ச்சியூட்டும் உணர்வை ஊட்டப்படும் பொழுது…” அது நம் உடலில் இரத்த நாளங்களில் கலக்கப்படுகின்றது.

அப்பொழுது அந்த அணுக்களின் மலமாகி நம் உடலே நல்லதாகி நம் உடலை “ஆரோக்கியமான நிலைகளில்” உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

ஆனால் விஷத்தை அடக்குகின்றது. இது தான் ஆறாவது அறிவு மகிழ்வாகனா. மயிலைக் காட்டி அது தோகை விரித்து மகிழ்ச்சியாக ஆடுகின்றது என்று சாதாரண மனிதனுக்கும் புரியும் வண்ணம் காட்டினார்கள் ஞானிகள்.

ஆனால், இன்று நாம் இதையெல்லாம் அறியாதபடி சூடத்தையும் பஞ்சாமிர்தத்தையும் அங்கே கொடுத்தால் “முருகன் செய்வார்…!” என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

“பஞ்சாபிஷேகம்” என்றால்.., விண்ணிலிருந்து வரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்தியைக் கண்களாலே, காதாலே, வாயாலே, உடலாலே, சுவாசத்தாலே எடுத்து நமக்குள் சேர்க்க வேண்டும்.

பஞ்சாமிர்தம் அந்த ஐந்து வகையான அமிர்தங்களாக நமக்குள் எப்படிச் சுவையை ஊட்டுகின்றதோ இதைப் போல புலனறிவில் கவர்ந்து கொண்ட துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் இவை அனைத்தும் அந்தப் புலனறிவின் பஞ்ச அமிர்தம் என்ற நிலை அங்கே வருகின்றது.

அதுதான் “காயத்ரி..,” என்பது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நாம் அந்த எண்ணத்தை ஏங்கினால் அதன் உணர்வுகள் நம் உயிரிலே படும் பொழுது “அந்த உணர்ச்சியின் இயக்கமாக…” நம்மை இயக்குகின்றது. மகிழ்ச்சி ஊட்டும் உணர்வாக இய்க்குகிறது.

துருவ நட்சத்திரத்துடன் இணைவதற்குத் தான் பயிற்சி கொடுக்கின்றோம்

 

நோயாளியிடம் நோயின் உணர்வைப் பற்றி நாம் அதிகமாகக் கேட்க நேர்ந்தாலும் அது நமக்குள் பதிவாகி விடுகின்றது… இரத்தத்தில் கருவாக உருவாகின்றது… அணுவாக வளர்கின்றது.

அதே போல் சண்டை போடுபவர்களைப் பார்த்தாலும் அந்தக் கார உணர்வுகள் நமக்குள் கருவாக உருவாகி உடலிலே அணுக்களாக விளைகின்றது.

நாம் கோபப்படவே வேண்டாம்…!
1.கோபப்படுபவர்களை ஒரு பத்து நாளைக்குச் சேர்ந்தால் போல் வேடிக்கை பார்த்தால் போதும்.
2.அதற்குப் பின் இரத்தத்தைப் பரிசோதித்துப் பார்த்தால் இரத்தக் கொதிப்பிற்கு உண்டான அறிகுறிகள் இருக்கிறது என்று சொல்வார்கள்.

ஆஸ்த்மா நோய் உள்ளவர்களை அதிகமாகக் கவனித்துப் பார்த்தால் அதற்குப் பின் இரத்தத்தைப் பரிசோதித்துப் பார்த்தால் சளி இருக்கிறது… ஆஸ்த்மாவிற்கு உண்டான அறிகுறிகள் தென்படுகிறது என்று சொல்வார்கள்.

ஒரு சர்க்கரைச் சத்து அதிகமாக உள்ளவரிடம் நாம் அடிக்கடி பேசிப் பழகினால் போதும். அதே சர்க்கரைத் சத்தை உருவாக்கக்கூடிய அணுக்கள் இரத்தத்தில் கலந்துவிடும். இரத்தத்தைப் பரிசோதித்தால் சர்க்கரை வியாதி உங்களுக்கு ஆரம்பித்துவிட்டது என்பார்கள்.

1.இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்
2.எந்த வகையில் நமக்கு நோய் வருகிறது…? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான்.

சர்க்கரை வியாதியால் அவதிப்படுபவர்கள் “என்னால் முடியவில்லை… முடியவில்லை…” என்று சொல்லும் போது அதை நாம் கேட்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்…?

அடுத்த கணமே நம் நினைவு ஈஸ்வரா என்று புருவ மத்திக்குச் செல்ல வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்ட வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இரத்த நாளங்களில் இதைக் கலக்கச் செய்ய வேண்டும்.

அதற்குப்பின் நோயாளி உடலில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். அவருடைய சர்க்கரை வியாதி நீங்க வேண்டும் என்று இவ்வாறு நாம் அங்கே பாய்ச்சி விட்டால் அந்த நோய் நமக்குள் உருவாகாதபடி தடுத்துவிடலாம்.

இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

நாம் எல்லோருடனும் சகஜமாகத்தான் பழகுகின்றோம். வலி அதிகமாக இருக்கிறது என்று அவர் வேதனைகளைச் சொல்லும் பொழுது நாம் பரிவுடன் தான் கேட்கின்றோம். இந்த உணர்வு உயிரிலே பட்ட பின் பதிவாகி விடுகிறது.
1.இதைப் போன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம்
2.ஞாபகமாக இருந்து ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்றும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அந்த நோயிலிருந்து அவர் விடுபட வேண்டும் என்றும் நாம் சொல்லிவிட வேண்டும்.

இந்த உணர்வுகள் உடனே நம் இரத்தத்திலே கலந்துவிடுகிறது. அந்த நோயைத் தணிக்கக் கூடிய சக்தியாக மாறிவிடுகின்றது.

கையிலே அழுக்குப் பட்டால் உடனடியாக எப்படித் தூய்மைப்படுத்துகின்றோமோ… உடையிலே பட்டால் அதை எப்படித் துவைத்துத் தூய்மையாக்குகின்றோமோ இது போன்று எந்த நோயைப் பற்றிய உணர்வு நமக்குள் வந்தாலும் அதை மறந்து பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலில் படர வேண்டும்…
1.உடல் நலமாகக் கூடிய சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.சர்க்கரைச் சத்து நீங்க வேண்டும் இரத்தக் கொதிப்பு குறைய வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி உடலிலே படர வேண்டும்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று இதைப் பெருக்கிக் கொண்டே வரவேண்டும்.

இப்படிப் பெருக்கிக் கொண்டால் இரத்தத்தைப் பரிசோதித்துப் பார்த்தால் இரத்தக் கொதிப்போ சர்க்கரை வியாதியோ அவைகள் எல்லாம் குறைவதைப் பார்க்கலாம்.

நம் எண்ணத்தாலேயே இதையெல்லாம் மாற்றி அமைக்க முடியும்.

அருள் ஞானச் சக்கரத்திற்கு முன் அமர்ந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என் உடல் நோய் நீங்க வேண்டும் உடல் நலமாக வேண்டும் நரம்பு மண்டலங்கள் சீராக இயக்க வேண்டும் என்று என்று எண்ணிக் கொண்டே வர வேண்டும்.

இது கூடக் கூட நம் உடலில் எல்லாம் மாறத் தொடங்கும்.

ஆனால் எப்படித்தான் இருந்தாலும்
1.நீடித்த நாள் இந்த உடலில் நாம் வாழப் போவதில்லை
2.குறித்த காலம் வரையிலும் நாம் அந்த அருள் சக்தியைப் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க இந்த உடலுக்குப் பின் தீமைகள் நமக்குள் சேராதபடி பிறவி இல்லா நிலை அடைகின்றோம். இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு அவசியம் வர வேண்டும்.

காரணம்… நாம் கொண்டு போவது என்ன இருக்கின்றது…?

அருள் சக்தியைப் பெருக்கிக் கொண்டே வந்தால் நோய் பலவீனமாகும்… சிந்திக்கும் தன்மை வரும். சிந்திக்கும் தன்மை வந்தாலும்
1.உதாரணமாக ஒரு செடி மரமாகிக் காய்த்து அதனுடைய காப்பு எல்லாம் முடிந்த பின் அந்த மரம் பட்டுப் போகத் தான் செய்யும்.
2.அது போல் நம் உடலில் உள்ள அணுக்கள் மடியத்தான் செய்யும்.

மடிந்தாலும் கடைசியில் எந்தச் சத்து உயிருடன் ஒன்றி இருக்க வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உயிரிலே எஞ்சி இருக்கப்படும் பொழுது நாம் அங்கே செல்கின்றோம்.

ஆகவே இந்த உடலுக்குப் பின் உயிரோடு ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைவதே “சொர்க்கம்” என்று சொல்வது.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெருக்கிக் கொண்ட பிற்பாடு நமது உயிர் அங்கே இழுத்துக் கொண்டு செல்கின்றது.
2.அதற்குத்தான் உங்களுக்கு இப்பொழுது பயிற்சி கொடுக்கின்றோம்.

குரு நாடி – உயிர் நாடி

 

நாம் எடுக்கும் எண்ணத்தின் வழியாக உணர்வுகளின் சம நிலை மாற்றப்படும் பொழுது சுவாசம் கனமாகின்றது. கனமான சுவாசத்தால் ஓட்ட நிகழ்வாக அகக்கருவிகளில் (ஐம்புலன்களில்) செயல்படுத்தும் நாடிகளின் இயக்கம் மாறுகின்றது.

எண்ணத்தின் உணர்வுக்கொப்ப ஆங்காங்கு ஓடிடும் காற்றின் சுதியே நாடிகளாகச் செயலுக்கு வரும் பொழுது துடிப்பின் நிலைகள் மாறுகின்றது.

உதாரணமாக நாம் எடுக்கும் எண்ணம் “பயம்..” கொண்ட செயலாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது விழி படம் எடுத்து நாசி சுவாசம் எடுத்து செயல்படும் பொழுது
1.விழிகளைக் காத்திடும் ரப்பைகள் (இமைகள்) படபடத்து
2.சரீரம் முழுவதையும் சிலிர்க்கச் செய்திடும் செயலாகச் செயல்பட்டு
3.நாடியின் இயக்கம் மூலாதாரம் தொடங்கி விழிப் பார்வையில் அமையப் பெற்று
4.எண்ணம் கொண்டு எடுக்கும் சுவாசத்தின் வழி விழிக் காற்றாகச் செயல்படுகின்றது.

மார்பு தொடங்கி நாபியின் வழியோடி மூலாதாரத்தில் இணையும் ஓர் நாடி இதே தொடரில் எண்ண உணர்வுகளுக்கொப்ப விக்கலையும் சலிப்பு சோர்வு கொண்ட கொட்டாவியையும் சரீரத்தில் உருவாக்கிக் காட்டுகின்றது.

1.“குரு…!” என்று அழைக்கப்படுகின்ற ஓர் நாடி சரீரத்திலும் உண்டு.
2.அது செயல்படும் விதங்களின் உண்மையை உணர்ந்து கொண்டால்
3.விந்துவே நாத விந்து எனும் “பிந்து” (உருவாக்கும் சக்தி – CREATOR) என்ற செயல்பாட்டைத் தெளிந்து கொள்ளலாம்.

அந்த நாடி மூலக்காற்றுடன் செயல்படும்முன் மேலும் இரு நாடிகளை இணைத்துக் கொண்டு
1.உணவுகளின் கழிவுகளையும் சிறு நீரையும் வெளியேற்றுவதோடு
2.ஆண்களின் குறி ஸ்தானத்தில் விந்துவையும் உணர்வுக்கொப்ப வெளியேற்றிச் செயல் புரிகின்றது.

சரீரத்தில் கால் எலும்புப் பகுதிகளும் இடுப்பு எலும்புப் பகுதிகளும் சேரும் இடத்தில் “ஓர் மறைமுக நாடி” இயங்குகிறது.

அது சீதம் கபம் என்ற நிலைகளை உருவாக்கி நோயின் அறிகுறியைக் காட்டுகின்றது. அதாவது இருதய நாடிகளின் தொடர்பு கொண்டு காற்றின் செயலாகச் செயல்பட்டு அந்த உபாதைகளை வெளியே காட்டிடும் காற்றாகச் செயல்படுத்துகின்றது.

அதே காற்று உயிராத்மா பிரிந்த பிறகு உடலை மாற்றம் கொள்ளச் செய்து சரீரம் முழுவதும் (நீராக) வியாபித்தே
1.சரீர பிம்பத்தையே பெருக்கச் செய்து
2.வெடிக்கும் விதமாகச் செயலாக்குகின்றது.

பெண்களின் தாய்மைப் பேறு காலத்தில் சிசுவை வெளியேற்றத் தாய் தன் உணர்வு கொண்டு உந்தித் தள்ளும் நிலைக்கும் இந்த மறைமுகக் காற்றே உதவுகிறது.

இதே போல் சுவாசத்தின் ஓட்ட கதியில் சரீரத்தையே வழி நடத்திடும் செயல்களில் செவிகளில் செயல்படும் நிலைகளும் மற்றும் பல நிலைகளும் உண்டு.

மனித உடலுக்குள் நுண்ணிய நிலைகளில் செயல்படும் நாடிகளையும் அதற்குக் காரணமான காற்றின் இயக்கங்களையும் சிறுகச் சிறுகக் கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

புருவ மத்தியில் “ஈஸ்வரா…” என்று எண்ணி ஏங்கித் தியானித்தால் புருவத்தின் (ஈசன்) வழியாகச் சுவாசித்தால் முழுமையும் உங்களால் அறிய முடியும்… உணரவும் முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆரம்ப நிலைகளில் சில இடங்களில் அருள் உணர்வுகளை வளர்ப்பதற்கு முயற்சி எடுத்தேன். ஆனால் அங்கே அதை ஏற்றுக் கொள்ளும் பண்பு இல்லாது போய்விட்டது.

1.அவர்கள் ஆசை ஒரு பக்கம் இழுக்கின்றது. “பேராசை…” ஒரு பக்கம் இழுக்கின்றது.
2.“தனது நிலைகள் (தான்) வளர வேண்டும்” என்று எண்ணுகின்றது.
3.“பிறரை வளர்க்க வேண்டும்..,” என்ற எண்ணம் இல்லாது போகின்றது.

பிறர் வளர வேண்டும் என்று எண்ணினால் நாம் நிச்சயம் வளர்கின்றோம். இதுதான் உண்மை.

“நீங்கள் வளர வேண்டும்…” என்று எண்ணினாலே முதலில் நான் வளர்கின்றேன். “இவருக்கு என்ன வேலை…?” என்று அந்த உணர்வை அங்கே குறைத்தால் நானும் குறைந்து விடுகின்றேன்.

அங்கேயும் குறை உணர்வே விளைந்து இரண்டு பேரும் போர் முறைக்குத் தான் வரும். அப்பொழுது தீமையின் இயக்கத்திலிருந்து மீளும் நிலை இல்லாது போய்விடுகின்றது.

அப்பொழுது என்ன ஆகின்றது..?

“இப்படி இருந்தோம்.., அப்படி இருந்தோம்..,” என்று இதைத்தான் பேசிக் கொண்டிருக்க முடியும். இந்த உணர்வின் தன்மை நமக்குள் “வளர்ச்சியற்ற நிலை” அடைந்துவிடுகின்றது. பிறகு “இந்த உடலுக்குள்… சேர்த்தது என்ன…?”

எதனின் வெறுப்பின் உணர்வை வளர்த்ததோ இதனின் வலுப் பெற்றால் புவியின் ஈர்ப்புக்கே நிச்சயம் வருகின்றது. ஆகவே புவியின் ஈர்ப்புக்கு வருவதிலிருந்து நாம் தடுத்தல் வேண்டும்.

ஏனென்றால் இந்த பூமியின் தன்மையில் நஞ்சினை அகற்றும் ஆற்றல் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. நீங்கள் பெற வேண்டும் என்ற இச்செயல், யாம் உபதேசித்ததைக் கீதையிலே சொன்ன மாதிரி “நீ எதை நினைக்கின்றாயோ… அதுவாகின்றாய்…”

மெய் உணர்வைக் காணும் நிலைகளில் உங்கள் பேச்சும் மூச்சும் வெளிப்பட்டு இன்று விஞ்ஞான உலகால் ஏற்பபடுத்தப்பட்ட நஞ்சினை வென்று இந்த பூமியின் தன்மையில் நஞ்சினை அகற்றி அனைவரும் “ஏகாந்தமாக.., மகிழ்ந்து வாழ முடியும்”.

இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை என்னும் அழியா ஒளிச் சரீரம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தில் என்றும் பதினாறு என்ற நிலையை அடைந்திட முடியும்.

உணர்ச்சிகள் (சுவாசக் காற்று) நாடிகள் வழி உடலை இயக்கிக் காட்டும் விதம்

 

மனிதனின் அன்றாட சமுதாய வாழ்க்கையில் காட்சிப் புலனறிவு… செவிப் புலனறிவு… உணர்வுப் புலனறிவு… நுகர்தல் புலனறிவு… சுவைத்தல் புலனறிவு… என்று ஜீவ சரீரம் கொண்டு அறிந்து தெளிந்து கொண்டே உள்ளோம்.

இருந்தாலும் புலனறிவால் கவரப்பட்ட அந்த நிலைகள் ஏற்கனவே நமக்குள் பதிவான நிலைகளுடன் கலக்கப்படும் பொழுது தோன்றும் எண்ணங்களும் உணர்வுகளும் இரு வினைச் செயல்களாகச் செல்கிறது.

ஐம்புலனறிவு என்ற அந்தக் கருவிகளின் செயலில்
1.சரீரத்தில் உணர்வுகளின் வழியாக மோதிடும் இரு வகைச் செயல்பாட்டின் முறைகளை
2.அறிவின் ஆற்றல் தொடர் கொண்டு தெள்ளத் தெளிந்த மகரிஷிகளும் ஞானிகளும்
3.இந்த மனித சமுதாயம் உயர் நிலை பெறுவதற்காக உணர்த்திய மருத்துவம் மனோத்துவம் என்ற வகைகளில்
4.அவர்களால் புகட்டப்பட்ட அந்த நல்லாக்கப் பணிகளை இன்றைய சமுதாய அமைப்பு முழுமையாக ஏற்றுக் கொண்டு நற்பயன் பெற்றதா…?

சக்தி சிவன் என்ற மூச்சையே வகைப்படுத்தி அதிலுள்ள உண்மைகளைக் கூறினாலும் நடைமுறை வேறாகி விடுகிறதப்பா. உட்பொருளைக் கூறுவதிலும் தயக்கம் தான்.

எண்ணம் கொண்டு நல் சுவாசத்தினால்
1.ஆத்ம பரிசுத்தமும் ஆத்ம பலமும் பேரின்பப் பெரு வாழ்வும் பெற்றிட
2.இங்கே உணர்த்தப்பட்டுக் கொண்டு வரும் தியான வழி மூலம்
3.உடல் என்ற கூட்டில் “சிவனின் சித்திரம் தீட்டிட…!” சரீரம் காக்கப்பட வேண்டுமப்பா…!

“ஈஸ்வரா…!” என்று ஒலி நாதம் கூட்டுகின்ற சுவாச ஓட்டம் கண்டத்தில் (தொண்டை) செயல்படும் பொழுது அங்குள்ள நாடிகளின் சுவாசமே கதியாகும் விதம் உணர்வின் உந்துதல் கூட்டிச் செயல்படும் நிலைக்கு ஒலிக் காற்று என்று பெயர். அது சாப்பிடும் ஆகாரத்தை உள்ளிழுத்து விழுங்கவும் செயல்படுகின்றது.

விழி (கண்கள்) படம் எடுத்துச் செயல்படும் நிகழ்வுக்குச் சுவாச ஓட்ட நாடிகள் அங்கு செயல்படுவதை விழிக் காற்று என்று பெயர். இரு விழிகளையும் செயல்படுத்தும் அந்த நாடியானது மூலாதாரம் வரை செல்கிறது.

விழிப் பார்வையில் செயலில் காட்சிகள் மட்டுமா காண்கின்றாய்…?

சோம்பல் ஏற்படுத்துவதும் வேதனையின் பால் முக்கல் முனகல் முதலிய சரீரம் கொண்டு உணர்ந்திடும் அனைத்துச் செயல்களும்
1.சுவாசத்தில் சுதியும்… விழிக் காற்றும்…
2.எண்ணம் கொண்டே செயல்படுத்தும் நாடிகளும் செயல்படுகின்றன.

விழிகளைக் காத்திடும் ரப்பைகள் (இமைகள்) செயலுக்கும் ஓர் நாடி செயல்படுகிறது. காற்றின் செயலாக ரப்பைகள் இமைத்தலும் மற்றும் உணர்வுகளின் வழியாக மனிதன் சிரிக்கின்ற சிரிப்பும் அந்தச் சிரிப்புக்கும் அழகு உணர்வுகளுக்கும் செயல்பட்டே மூலாதாரத்துடன் இணைந்து செயல்படுகிறது,

1.கண்ணில் நீர் பெருக்கமும்
2.உடலையே கலகலத்துக் குறு குறுக்கும் உணர்வால் “தும்முதல்…!” என்று செயல்படுத்தும் காற்றும்
3.நாசி வழிப் பாதையில் ஓரிட அமைவு பெற்ற நாடியாகச் செயல்படுகின்றது.

எண்ணம் கொண்டு தான் அனைத்துமே…! என்றாலும் பிணிகள் இந்தச் சரீரத்தில் தோற்றம் காட்டுவதெல்லாம்
1.ஆங்காங்கு அமையப் பெற்ற சுவாச நாடிகளின் வழியும்
2.ஆங்காங்கு சுதியுறும் காற்றின் செயல் கொண்டே உபாதைகளை (வலிகளை) உணர்த்தும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எண்ணும் உணர்வுகள் சிரசின் பாகம் “ஈஸ்வரலோகம்”. எதன் உணர்வை நாம் நுகர்கின்றோமோ அதன் உணர்வின் கருவாக உருவாக்கி நம் இரத்தநாளங்களில் அது வரப்படும்பொழுது அது “இந்திரலோகம்”.

அங்கே அந்த உணர்வின் தன்மை அணுவாக உருவாக்கிவிட்டால் “பிரம்மலோகம்” என்று அது அந்த உணர்வினை வளர்த்துவிடும்.

எந்தக் குணத்தின் தன்மை எடுத்துக் கொண்டோமோ அணுவாக ஆனபின் அதனின் மலமே நம் உடலாகின்றது. நல்ல குணத்தைக் கொண்ட அணுவின் மலமாக இருந்தால் நம் உடல் சீராக இருக்கின்றது. அழகாக இருக்கின்றது. மகிழ்ச்சியாக இருக்கின்றது.

வேதனை என்ற உணர்வை நாம் நுகர்ந்தால் உயிரான ஈசன் அதைக் கருவாக்கி இந்திரலோகமாக மாற்றி பிரம்மலோகமாக உரு பெற்றுச் சிவலோகமாக மாற்றுகின்றது.

ஆக வேதனை என்ற உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால் “நரகலோகமாக” மாற்றுகின்றது என்று பல முறை உங்களுக்குள் சொல்லியுள்ளேன்… தெளிவாக்கியுள்ளேன்.

செல்வம் தேடுகின்றோம். ஆனால் தேடிய செல்வத்தால் மனிதர் நிலைத்திருக்கின்றனரா..? மனிதனால் தேடிய செல்வத்தைக் காக்க முடிகின்றதா..?

செல்வத்தைக் குவித்து வைத்திருந்தாலும்… நிம்மதி வருகின்றதா..? வேதனையுடன் தான் வாழ்கின்றோம்.

செல்வத்தைத் தேட ஆசைப்படுகின்றோம். அதற்கடுத்து அந்தத் தேடிய செல்வத்தைக் காக்க… மீண்டும் வேதனைப்படுகின்றோம்.

நேற்று சிரமப்பட்டுக் கொண்டிருந்தோம். இன்று செல்வத்தைத் தேடிக் குவிக்கின்றோம்.

சிரமப்படும்பொழுது நண்பராகப் பழகியவர்.., “நீ இவ்வளவு பணம் வைத்திருக்கின்றாயே… ஏன்.., எனக்குச் பணம் கொடுக்கக் கூடாதா..,?” என்று கேட்பார்.

முதலில் ஏழ்மையில் வாடுகின்றோம். பின் வசதியாக வந்து விட்டோம். ஏழ்மையாக இருக்கும் பொழுது நண்பனாகப் பழகியவன் வசதியான பின் நம்மிடம் பணம் கேட்கும்பொழுது நாம் கொடுக்கவில்லை என்றால் என்ன சொல்வான்…?

“நம்மைக் குற்றவாளியாக ஆக்க வேண்டும்..” என்ற உணர்வினை எடுத்துக் கொண்டு மற்றவர்களிடம் அவ்வாறு சொல்லிப் பறைசாற்றுவான்.

“கொடுக்கவில்லை” என்பதற்காக என்னை இப்படியெல்லாம் பேசுகின்றானே…! என்று வேதனை நமக்குள் வந்துவிடும்.

அத்தகைய வேதனை வந்துவிட்டால் நுகர்ந்த உணர்வுகள் நம் ஈஸ்வரலோகமாக இருக்கும் சிரசிற்குள் அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக கருவாக உருவாக்கிவிடுகின்றது நம் உயிர்.

எந்த மனிதன் வேதனைப்படுத்தும் உணர்வை வெளிப்படுத்தினானோ ஈஸ்வரலோகத்திற்குள் கருத்தன்மை அடைந்த பின் இந்திரலோகமாக மாறி அந்த அணுவின் தன்மை உருவாகிவிட்டால் பிரம்மலோகமாக மாறுகின்றது.

அணுவாகிவிட்டால் எந்த மனிதன் எதனால் குறை கூறி வேதனைப்பட்டானோ அந்த வேதனை உணர்வை நுகர்ந்து வேதனைப்படும் அணுக்களைப் பெருக்கி இந்த உடலையே வேதனைக்குரிய நிலையாக நோயாக மாறுகின்றது. நோயாக மாற்றி சிந்திக்கும் நிலையை இழக்கச் செய்துவிடுகின்றது.

இதை நீங்கள் நடைமுறையில் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

1.ஆகவே செல்வத்தைத் தேடினாலும் சந்தர்ப்பத்தால் இப்படி ஒரு நிலை.
2.செல்வத்தைக் காக்கும் நிலை இல்லை
3.செல்வம் தேடினாலும் உடலைக் காக்கும் நிலை அதிலே இல்லை.

நமது ஆசையின் நிமித்தம் இந்த உடலின் இச்சைக்கே தான் வாழ்கின்றோமே தவிர “இந்த உடலுக்குப் பின்.., என்ன..?” என்ற நிலையை யாரும் சிந்திக்கவில்லை.

நம்மைக் காக்க வேண்டும் என்றால் அதற்குண்டான சக்தி நமக்குத் தேவை.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கூறிய அருள் வழிப்படி அருள் மகரிஷிகளின் உணர்வை நம் வாழ்க்கையின் துன்பம் வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிறுகச் சிறுக நமக்குள் சேர்த்துக் கொண்டே வரவேண்டும்.

அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நம் உயிர் அணுக்களாக நம் உடலில் உருவாக்கிவிட்டால் அது தன் பசிக்காக உந்தும் பொழுது அந்த ஆற்றல்மிக்க உணர்வுகளை நாம் எளிதில் பெற முடியும்.

அதை வளர்க்க வளர்க்க…
1.எந்த மகரிஷியின் உணர்வுகளை அதிகமாக நாம் கவர்கின்றோமோ
2.அவரின் ஈர்ப்பின் நிலைகள் கொண்டு அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பிறவியில்லா நிலையை அடைய முடியும்.
3.இதுதான் நாம் சேமிக்க வேண்டிய அழியாச் செல்வம்… அழியாச் சொத்து.

உடல் அழுகினாலும்… பிறவியில்லா நிலை அடைவது தான் நமது குறிக்கோளாக இருத்தல் வேண்டும்

 

நாம் எப்படித் தான் இந்தத் தியானத்தில் வலிமை பெற்றாலும் நம் உடலிலுள்ள தீமையின் நிலைகள் அது அழுகும். அது அழுகிய பின் தான் இந்த உயிரே வெளியே செல்லும்.

ஒரு பழம் கனிந்தது என்றால் உட்கொண்டால் சுவையாக இருக்கின்றது. சுவையின் தன்மையாக இருந்தாலும் கடைசியில் அது தன்னிச்சையாக அழுகத் தான் செய்யும்.
1.அழுகிய மணங்கள் காற்றிலே கலக்கப்படுகிறது
2.ஆனால் அதில் உள்ள வித்தின் சத்து அந்த உணர்வின் தன்மை தனக்குள் தெளிவாக்குகின்றது
3.கனிந்து அழுகி வெளியே செல்லவில்லை என்றால் “வித்து முழுமை பெறாது…”

அழுகிய உணர்வு காற்றிலே படர்கின்றது. அதன் உணர்வின் சத்தைச் சூரியன் கவர்ந்து கொள்கின்றது.

ஆனால் அதே சமயத்தில் அந்த வித்தை மீண்டும் நிலத்தில் ஊன்றப்படும் பொழுது அதே சத்தின் தன்மையைக் கவர்ந்து அதே கனியைப் போன்று உணர்வின் தன்மை உரத்தின் சத்தாக “மரங்களை விளையச் செய்கின்றது…”

இதைப் போன்று தான் நம் உயிரான உணர்வின் நிலைகள் கொண்டு இருளை நீக்கிடும் உணர்வின் சத்தை விளைய வைக்கப்படும் பொழுது மனிதனாக நாம் விளைகின்றோம்.

ஆனால் அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கப்படும் பொழுது இந்த உணர்வினைச் சேர்த்து ஒளியாக மாற்றி இந்த உடல் என்று அழுக்கை நீக்கி அழுக்கை நீக்கிடும் உணர்வின் தன்மை பெற்று என்றும் ஏகாந்த நிலை என்ற நிலையினை அடைய முடியும்.

இதுவே நம் குருநாதர் காட்டிய நிலைகள்.

கோடிச் செல்வம் வைத்திருந்தாலும் அது நம்முடன் வருவதில்லை. இந்த உடலும்… உடலின் அழகும் நம்முடன் வருவதில்லை. வாழ்ந்தோம்… மகிழ்ந்தோம்… வளர்ந்தோம்… என்று இருப்பினும் இந்த உடலில் நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப இந்த உடல் அழுகத் தான் செய்கின்றது.

இந்தப் பிடிப்பின் தன்மை உடல் அழுகிய நிலைகள் ஆன பின்… அணுக்களின் இயக்கம் இல்லையென்றால் இந்த உயிர் வெளியே செல்கின்றது.

எதன் வழியில் இந்த இயக்கத்தைச் சேர்த்து இந்த உடல் அழுகுகின்றதோ அதற்குத்தக்க… கடைசி நிமிடத்தில் இந்த உயிர் வெளியே செல்லும் பொழுது அதன் வழி வெளியே செல்கின்றது உயிர்

1.ஆனால் நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கி அதனை வலுவாக்கப்படும் பொழுது
2.இந்த வலுத்தன்மை கொண்டு உடலை விட்டுச் செல்லும் உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைகின்றது.
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இது ஈர்க்கப்படுகின்றது.
4.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைக்கப்படுகின்றது… ஒளியின் சரீரம் பெறுகின்றோம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் பிறவி இல்லா நிலை அடையத் தான் இதைச் செயல்படுத்துகின்றோம்.

மூன்று நாடிகளும் சந்திக்கும் நெற்றிப் பொட்டே… ”திரிவேணி சங்கமம்…!”

 

மனிதனின் ஜீவ பிம்ப சரீரத்தில் உள்ள உட்கருவிகள் செயல்படும் விதங்களை உண்ர்ந்து கொண்டால் பல கிளையாக மூச்சலைகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள முடியும். நல் ஆக்கத்தின் செயலுக்கு அனைத்துச் சக்திகளையும் அளிப்போம்.

சூரிய கலை என்ற சிவ நாடியும் சந்திரகலை என்ற சக்தி நாடியும் சரீரத்தில் செயல்படுகிறது. இந்த இரு நாடிகளுக்கும் பொதுவான அக்கினி நாடி சரீரத்தின் மையப் பகுதியில் நேர்கோடாகச் செயல் கொள்கிறது.

அக்கினி நாடியானது மூலாதாரத்தில் மூல அக்கினியுடன் ஆங்குள்ள நான்கு தலை போல அமையப் பெற்ற நாடியுடன் இணைவதற்கு முன் கண்ட நாடி மார்பு நாடி நாபி நாடி குய்ய நாடி ஆகியவைகளுடன் இணைந்தே செயல்படுகிறது.

மூலாதாரத்தில் செயல்படும் இந்த மறைமுக நாடியை அனுசரித்தே சிவ சக்தி நாடிகள் (சூரிய சந்திர நாடிகள்) செயல்படுகின்றன.
1.இந்த மூன்று நாடிகளும் சந்திக்கும் “நெற்றிப் பொட்டே…”
2.”திரிவேணி சங்கமம்…!” என்று சூட்சமப் பொருளாகக் கூறப்படுகின்றது.

சிரசின் உச்சிப் பகுதியில் ஆயிரம் தலையுள்ள நாடிகள் வட்ட வடிவில் கிளைத்து அதனுள் மறைமுகமாக எட்டு நாடிகள் செயல்படுவதைத்தான் “ஆயிரத்தி எட்டு இதழ் கொண்ட தாமரை…” என்று கூறுவதின் மறை பொருளை உணர்ந்து கொள்ளலாம்.

சிற் சில காலகட்டங்களில் சிரசினுள் சிறு மூளைப் பகுதி இருக்கும் இடத்திற்குக் கீழ் பிடரி என்று சொல்லும் இடத்தில் வெப்பம் அலைகளாக வெளிப்படுவதை உணரலாம்.

இந்த வெப்ப அமில குணங்களை மீண்டும் சுவாசத்தில் ஈர்த்துக் கொள்ளும் செயலும் உண்டு.

எட்டு சூட்சம நாடிகள் சிறு மூளைப் பகுதியிலிருந்து வெளித் தள்ளும் வெப்பமில குணங்களை நல் நிலைப்படுத்திடவே வாசனை மலர்களைச் சூடிக் கொள்ள அன்று வழி காட்டினார்கள் ஞானிகள்.

ஒவ்வொரு மலரிலும் அதற்கென்று வாசனை இருந்தாலும் இயற்கை அளித்திட்ட அந்த நறுமணங்களில் ஒன்றுக்கொன்று எதிர் மோதல் செயல்பாடுகள் உண்டு.

1.சிறு மூளை வெளித்தள்ளும் வெப்ப அமில குணங்களை நல் நிலைப்படுத்திக் கொள்ள
2.அன்றைய காலங்களில் நறுமண மலர்களைச் சூடிக் கொள்ளும் வழக்கம் பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் இருந்தது. ஆனால் இன்றைய கால நடைமுறைகளுக்கு அது பொருத்தமற்றதாக மாறு கொண்டு விட்டது.

1.நாம் காட்டும் தியான வழித் தொடரில்
2.எண்ணத்தின் உந்தும் செயல் கொண்டு
3.சிரசின் பின்புறம் சிறுமூளைப் பகுதியில் ஓர் காற்று மண்டலத்தையே ஏற்படுத்தி
4.ஆத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் சூட்சமும் உள்ளது.

சரீரத்தில் உள்ள உள் கருவிகளுக்கு “ஜீவ ஆக்கமளித்திடும் காற்று நாடிகளை முழுமைப்படுத்தி அளித்திடவே…” இதை எல்லாம் சிறுகச் சிறுக உணர்த்துகின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“சப்” என்று இருக்கக்கூடிய உணவுப் பொருளில் சிறிதளவு காரத்தைப் போட்டு அதில் உப்பையும் சிறிது இணைத்தால் ருசியாக இருக்கும்.

ஆனால் காரத்தையும் உப்பையும் சேர்க்கவில்லை என்றால் ருசி இருக்காது. அதை இணைக்கப்படும் பொழுது உணர்ச்சியின் தன்மை தூண்டுகின்றது… உணர்வின் தன்மை செயல்படுகின்றது.

ஏனென்றால் மிளகாய் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தியை வெகு வீரியமாக வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றது. அதனால் தான்
1.ஒரு மனிதனுக்கு அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் நிலைக்குக் கோபம் அவசியம் தேவை.
2. ஆனால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் நம்மை அது விழுங்கிவிடும்.

காரம் அதிகமாகிவிட்டால்… என்ன சொல்கின்றோம்…? “ஸ்..ஸ்..ஆ..ஆ..,” என்று சப்தத்தை எழுப்புகின்றோம்.

அந்தக் காரத்தைச் சமப்படுத்தும் பொழுது ருசியாகின்றது. “ஆஹா..ஹா.., தலையயும் ஆட்டுகின்றோம். ஆகவே அந்த உணர்ச்சியைத் தூண்டும் சக்தி தேவை.

காரத்தின் தனித்தன்மையை மாற்றி அந்தக் கோபத்தை உருவாக்கிவிடக் கூடாது. அந்தக் காரம் என்ற கோபமான உணர்ச்சியை ஊட்டிவிட்டால் அந்த உணர்வு உணர்ச்சியை ஊட்டும் அணுக்களைப் பெருக்கிவிடும்.

அடிக்கடி மற்றவர்களை எண்ணி.., “அவன் இப்படிச் செய்கின்றன்.., அப்படிச் செய்கின்றான்..,” என்ற இந்த உணர்வு வரப்படும் பொழுது வேதனை கலந்து சிந்திக்கும் தன்மை எர்த் ஆகி (குறைந்து) கோபத்தின் நிலை அதிகமாகிவிடும்.
1.அப்பொழுது நம்மால் கட்டுப்படுத்த முடியாது போய்விடும்.
2.“கிடு..கிடு..கிடு..கிடு… என்று நம்மையறியாமலே உடலெல்லாம் நடுங்கும்.
3.கோபம் வருபவர்கள் “சிலரைப் பார்த்தோம்” என்றால் இப்படித்தான் இயக்கும்.

எனக்குக்கூட சில சமயங்களில் அந்தக் கோபம் வரும்போது இந்த மாதிரி ஆகும்.

ஏனென்றால் அந்த உணர்வின் அணுக்கள் நமக்குள் “ஊழ்வினை.., என்ற பதிவு” இருக்கின்றது. அது ஒட்டுமொத்தமாகக் கூட்டும் பொழுது அது வளர்ந்து விட்டால் நம் சிந்தனையை மாற்றிவிடும்.

இப்படி வந்தால் அந்த மகரிஷிகளின் ஒளி பெற வேண்டும் என்று நாம் எண்ணி இதை அடக்கி இதைத் தணித்து “நமக்குள் தெளிவு..,” என்ற நிலைகளில் கொண்டு வருதல் வேண்டும்.

பாதாம் கலந்த பாலைச் சாப்பிட்டால் சத்துதான். அதைப் போன்று நண்பர்களுடன் நாம் பழகி அன்பால் பண்பால் நாம் பல உதவிகளைச் செய்கின்றோம்…, நல்லதுதான்.

ஆனால் அவர்களுடைய சந்தர்ப்பம் வேதனை என்ற உணர்வாகி விட்டால் அதை நாம் நுகரும் பொழுது நம்முடைய நிலைகளும் மாறி அந்த வேதனையை நமக்குள்ளும் உருவாக்கிவிடுகின்றது.

அந்த வேதனை நமக்கு வராது பாதுகாத்தல் வேண்டும்.

யாம் இப்பொழுது கொடுக்கும் இந்தச் சக்தியின் துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா.., என்று உயிரான ஈசனிடம் ஏக்கத்தைக் கொடுத்து வேண்டிடல் வேண்டும்.

ஏனென்றால் நம் உயிரிடம் அவன் உற்பத்தி செய்ய நாம் ஏங்கி எடுத்தல் வேண்டும்.

அடுப்பில் நெருப்பை வைத்து அதில் எந்தப் பொருளைக் கலக்கின்றோமோ அந்த ருசி தான் வரும். நம் உயிரின் வேலை நுகர்வதை உருவாக்குவதுதான்.

இதைத்தான் விஷ்ணு வரம் கொடுக்கின்றான், பிரம்மா உருவாக்குகின்றான், சிவனோ அழிக்கின்றான் என்று ஞானிகள் காட்டுகின்றார்கள்.

1.எனக்கு வரம் கொடுப்பதுதான் தான் வேலை என்று விஷ்ணு சொல்கிறார். அப்படி என்றால் நம் உயிரில் படும் உணர்வை எல்லாம் அது ஜீவன் பெறச் செய்கின்றது என்பதை அவ்வாறு காட்டுகின்றனர்.
2.பிரம்மாவோ… என் தந்தை விஷ்ணு இட்ட கட்டளைப்படி “உருவாக்குவது தான் என் வேலை…” என்று சொல்கிறார்.

நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டு ஜீவனாகி அணுவின் கருவாகிவிடுகின்றது. அணுவின் கருவாகிவிட்டால் எந்தக் குணத்தின் தன்மை அணுவாகின்றதோ அந்த ஞானத்தின் வழி உணர்ச்சியை ஊட்டுவதும் அதைச் செயலாக்குவதும் அதனுடைய வேலை.

ஆகவே பிரம்மாவின் மனைவி சரஸ்வதி என்று காட்டுகின்றார்கள்.

அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் வந்தால் சிவனோ.., அரவணைத்துக் கொள்கின்றான். உயிரில் மோதி ஜீவனாகி அணுவாகி பிரம்மமாகும் நிலையில் வருபவர்களை எல்லாம் வாருங்கள் என்று தான் வரவேற்கத்தான் முடியும் என்று இந்த உடலான சிவம் காட்டுகின்றது.

நாம் எதை எண்ணினாலும் இந்த உடல் வரவேற்று வைத்துக் கொள்கின்றது.

நம் உயிரின் இயக்க நிலைகளைச் சாதாரண மனிதனும் புரியும் வண்ணம் காவியப் படைப்புகளாக்கி இதையெல்லாம் நமக்குத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

தீமைகள் புகாது தடுக்கும் பித்தனாக இருக்கின்றேன் – ஈஸ்வரபட்டர்

 

நமது குரு அவருடைய வாழ் நாளில் பல நஞ்சான உணர்வுகளை நீக்கி ஒரு பித்தரைப் போன்று தான் வாழ்ந்தார். ஆனால் மக்கள் பித்துப் பிடித்த நிலையில் தான் இந்த உலகிலே வாழுகின்றனர். அதிலிருந்து அவர்கள் அகல வேண்டும் என்ற நிலையைத் தான் எனக்கு குருநாதர் சொன்னார்.

ஏன் சாமி…? பைத்தியம் பிடித்த மாதிரி போஸ்ட் கம்பியில் கல்லைக் கொண்டு தட்டுகிறீர்கள்…! என்று நான் அவரிடம் கேட்டேன்.

நீ தான்டா கேட்டாய்…! வேறு யாரும் கேட்கவில்லை…!
1.பைத்தியம் என்று சொல்லுகின்றாய்… என்னிடமே நீ அதைக் கேட்கின்றாய்
2.என் செயலை நீ அறிய விரும்புகின்றாய்
3.நீ நாளடைவில் அறிந்து கொள்வாய்
4.அதைப் போன்று நீ செயல்படு…! என்று காட்டினார்.

உலக மக்கள் தான் நுகர்ந்த உணர்வின் ஆசைகள் கொண்டு பித்தரைப் போன்று தான் வாழ்கின்றனரே தவிர தனக்குள் இருளை நீக்கிடும் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துவதில்லை.

தீமைகள் எனக்குள் வராதபடி பித்தனாக நான் இருக்கின்றேன்…!
1.தீமைகள் புகாது தடுக்கும் பித்தனாக நான் இருக்கப்படும் போது எனது உயிர் ஒளியின் சரீரம் பெறுகின்றது
2.ஒளி பெறும் சரீரத்தை அதனின் உண்மை ரகசியத்தை நீ அறிந்து கொள்…
3.என்னுடன் இணைந்து வா…! என்றார்.

தாவர இனங்களின் மணங்கள் எப்படி இயங்குகின்றது…? தாவர இனம் பேசுமா…! என்று குருநாதர் என்னிடம் கேட்டார்.

பேசாது…! என்று நான் சொன்னேன்.

அப்போது காட்டிற்குள் என்னை அழைத்துச் சென்று தாவர இனங்களின் உணர்வின் சத்தை நுகரும்படி செய்து அனுபவமாகக் காட்டினார்.
1.தாவரங்களின் மணமே நம் எண்ணங்களாக வருவதும்… நம்மை இயக்கச் செய்வதும்
2.அது தான் நம்மைப் பேச வைக்கின்றதே தவிர… நாம் அல்ல…!

எந்த உணர்வின் சத்து நம்முள் உண்டோ… அதனின் உணர்வின் மணங்கள் நமக்குள் எப்படி உண்டோ அந்த உணர்ச்சியின் இயக்கமாக நம்மை இயக்கிக் காட்டுவது உயிருடைய வேலை. அந்த உணர்வின் தன்மை உடல் ஆக்குவதே உயிரின் வேலை.
1.உணர்வின் தன்மை எது அதிகமோ
2.அதன் வழி தான் நம்முடைய இயக்கமும்… அடுத்த உடல் வாழ்க்கையும் என்று குரு தெளிவாக்கினார்.

காட்டிற்குள்ளும் மேட்டிற்குள்ளும் அலைந்து உண்மையின் உணர்வுகள் அறிந்ததை… பல காலம் பல தொல்லைகளுக்கு மத்தியில் அவர் ஊட்டிய உணர்வின் தன்மைகளை அறிந்து கொண்டோம்.

அதை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று குரு சொன்னார். ஏன் அதைச் சொன்னார்…?

ஒவ்வொரு உயிரையும் கடவுளாக எண்ணி… அந்த உடலை உயிர் தான் உருவாக்கியது என்ற நிலையில் அதை ஆலயமாக மதித்து
1.ஒவ்வொரு மனிதனையும் கடவுளாக மதித்தால்
2.அவர்கள் செய்யும் குறைகள் உன்னைச் சாடாது என்றார் குரு.

அந்தக் குறைகள் நீக்கப்பட வேண்டும் என்று உணர்வினை நீ எடுத்தால் இந்த உணர்வலைகள் காற்றலைகளில் பரவுகின்றது. நம் பூமியிலே பரமாத்மாவிலே படர்கின்றது.

அவர்கள் குறைகளை எண்ணாதபடி அவர்கள் நல்ல மனம் நிறைவு பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்தால்
1.நமது உயிரான கடவுளுக்கும் சேவை செய்கின்றோம்
2.இந்த உடலான ஆலயத்திற்குள் அசுத்தத்தை நீக்கிடும் சக்தி பெறுகின்றோம்
3.நல்ல உணர்வைக் காக்கும் தன்மை பெறுகின்றோம்.

ஆகவே பேரருள் என்ற உணர்வுகளைச் சேர்த்துப் பழகி ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று “ஆலயங்களில் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வது போன்று… ஒவ்வொரு உயிருக்கும் அதை நீ செய்ய வேண்டும்…!” என்று எனக்கு உபதேசித்தருளினார் குருநாதர் (ஈஸ்வரபட்டர்).

தியானத்தின் மூலம் நற்குணங்களாக நல்லெண்ணம் கொண்டாலே சுவாசத்தின் கனம் குறைந்துவிடும்

 

பிண்டத்தைக் கொண்டே அண்டத்தையும் கால அடிப்படையில் ஞானமாக அறிந்து கொண்ட செயலுக்கு அறுபது நாழிகைகளில் அன்றைய நடைமுறை வாழ்க்கையில் சற்றேறக்குறைய அறுபத்தி ஓராயிரத்தி இருநூற்றி ஐம்பது மூச்சலைகளைக் கணக்கிட்டனர் ஞானிகள்.

ஆனால் ஆத்ம வலுவைப் பெற்று விட்டால் இயற்கையின் சுவாச கதியில் சரீரத்தில் இன்னும் சுவாச சுதி குறைவுபடும் என்றனர்.
1.குறைவுபடும் என்பது கனமற்ற பேரானந்த சுவாசத்தைச் சுட்டிக் காட்டி
2.அந்தச் சுவாச கனத்தை நீக்கி நற்சுவாசம் எடுத்திடவே குறிப்பு காட்டப்பட்டது.

நாடிகளின் வழி ஓடிடும் சுவாசக் காற்று
1.அதிகாலையில் மூலப்பகுதியில் அறுநூறு முறைகள் ஓடுகின்றன என்றும்
2.ஆண் பெண் குறியில் உச்சிப் பொழுதுக்கு முன்பாகவே ஆறாயிரம் சுவாச ஓட்டங்களும்
3.உச்சிப் பகுதியிலிருந்து நாபிப் பகுதியின் சுவாச ஓட்டம் ஆறாயிரம் முறைகளும்
4.இருதயப் பகுதியின் சுவாச ஓட்டம் நடு ஜாமம் வரை ஆறாயிரம் முறைகளும்
5.அதிகாலைப் பொழுதிற்குள் கண்டப் பகுதியில் ஆயிரம் முறைகளும்
6.நெற்றிப் பொட்டில் காற்றின் நரம்போட்டச் செயலில் ஆயிரம் முறைகளும்
7.சிரசின் உச்சியில் ஆயிரம் முறைகளும்
8.ஆக இருபத்தி ஓராயிரத்தி அறுநூறு சுவாச ஓட்டங்களே நடைபெறும்.

“சுவாச ஓட்டம் குறைகிறது…!” என்று விபரக் கணக்கிட்டுக் காட்டினால் மூச்சை அடக்கிவிடும் செயலுக்கு வந்துவிடக் கூடாது.

நற்குணங்களாக நல்லெண்ணம் கொண்டாலே சுவாசத்தின் கனம் குறைந்துவிடும். இயற்கையாக ஓடும் சுவாசத்தில் “எண்ணத்தின் வலுவே முக்கியம்…!”

இந்த உண்மைகளை எல்லாம் கூறுவது என்பது… அறிந்து கொள்வதற்காகவே தவிர மூச்சலைகளை எண்ணச் சொல்லவில்லை. அன்று ஞானத்தால் ஞானிகள் தெளிவுபடுத்தியதையே எளிமையாக உணர்த்திட்டேன்.

என்று உரைத்தது…? என்ற வினா எழும்பலாம். பரிணாம வளர்ச்சி பற்றிப் பல பாடங்களில் கூறி வந்துள்ளேன்.

இன்று பக்குவப்படுத்திச் சமைத்திடும் அறுசுவை உணவு வகைகள் அன்றைய மனித ஞானத்தில் உதித்ததுவா…? உணவின் முறைகளே எத்தனை பக்குவம் பெற்றுவிட்டது…?

ஆரம்ப உயிரணு முதல் கோடி கோடியாகப் பல்கிப் பெருகிவிட்ட உயிர்ச் சக்திகள் மனிதன் என்ற வளர்ச்சியின் நிலைப் பக்குவம் பெற்றிட… பரிணாம முதிர்வு எத்தனை எத்தனை காலங்கள் கொண்டே ஞான வளர்ப்பு பெற்றிருக்கின்றது…?

கரும்பின் சாறு சிதறிடாமல் காக்கின்ற கணுவுகள் போல் உயர் ஞான சக்தியின் வளர்ப்பை மகரிஷிகள் அன்பு கொண்டே காத்து வந்துள்ளனர்.
1.கரும்பின் சாறை எடுத்து உண்ணுவதற்கே எளிதாகத் தருகின்றோம்.
2.பெற்று வளர்ச்சி நிலை பெற ஆசிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் வாழ்க்கையில் எல்லோரும் அன்புடன் பண்புடன் பழகுகின்றோம். அவர்களின் கஷ்ட நஷ்டங்களைக் கேட்கின்றோம். அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது.

ஆகவே அதைப் போன்ற நிலைகளில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் “நீ விழித்திரு” என்று பெயரை வைக்கின்றார்கள்.

கஷ்டப்படுகின்றவர்களையும் குறை கூறுபவர்களைப் பற்றியும் வேதனைப்படுபவர்களையும் நாம் எண்ணினோம் என்றால் அந்த உணர்வுகள் நமக்குள் வந்தால் தீமை செய்யும்.

அப்பொழுது உடனே நாம் என்ன செய்யவேண்டும்?

“ஈஸ்வரா..,” என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணி உடலுக்குள் நினைவினைச் செலுத்த வேண்டும்.

ஒருவர் நோயுடன் மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள்.., “உங்கள் உடல் நலமடையும்” என்ற உணர்வை அவருக்குப் பாய்ச்சுதல் வேண்டும்.

ஒருவர் உங்களிடம் மற்றவர்களைப் பற்றிக் குறை கூறுகின்றார்கள். அல்லது உங்களைப் பற்றிக் குறையாகச் சொல்கிறார்கள் என்றால் உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணி அதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தூய்மைப்படுத்திக் கொண்ட பின்.., “எல்லோரும் நல்லவராக வேண்டும். எல்லோருக்கும் என் மீது அன்பு வரவேண்டும்.., அந்தச் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் ஈஸ்வரா..,” என்று எண்ணுதல் வேண்டும்.

இவ்வாறு எண்ணினோம் என்றால் அந்தத் தீமையான உணர்வுகள் எதுவும் நமக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாவதில்லை.

அதனால் தான் “நீ விழித்திரு…, நீ தனித்திரு..,”

அப்படி என்றால் விழித்திருந்து மற்ற தீமையான உணர்வுகளை நமக்குள் விடாதபடி நாம் எந்த உயர்ந்த உணர்வுகளை எடுத்தோமோ அதிலே நாம் தனித்து இருக்க வேண்டும்.

நீ விழித்திரு… நீ தனித்திரு என்று சொன்னால்… உடனே என்ன செய்கின்றார்கள்…? வேறு விதமாக “எங்கேங்கோ…” கொண்டு செல்கின்றார்கள்.

அர்த்தத்தை அனர்த்தம் செய்து அதர்ம உணர்வைத்தான் அவரவர்கள் உணர்வுக்குத் தகுந்த மாதிரி நமக்குள் புகுத்தியிருக்கின்றார்கள்.

எப்பொழுதுமே.., “பிறிதொரு உணர்வுகள் நம்மை இயக்கக்கூடாது…”

அந்த அருள் உணர்வுகள் நாம் பெற வேண்டும் என்று நாம் தனித்து நின்று மற்றவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்…?
1.“அந்த அருள் ஒளியினை நாம் பாய்ச்சி…
2.இப்படித்தான் ஆகவேண்டும்” என்று எண்ணினால் அவர்களையும் நல்லவர்களாக்க முடியும்.
3.நம்மை அவர்கள் பார்க்கப்படும் பொழுது நம்மைப்பற்றி குறை சொல்லும் உணர்வுகளே அங்கே மாறிவிடும்.

இரண்டு தரம் நல்லதாக வேண்டும் என்று நாம் சொன்னாலும் மீண்டும் கொஞ்சம் தூண்டிப் பார்ப்பார்கள்.

ஆனாலும் நாம் “எல்லோரும் நல்லவராக வேண்டும்…” என்னைப் பார்க்கும் பொழுது எல்லோருக்கும் பேரன்பு வரவேண்டும்.., மகிழ்ந்திடும் உணர்வுகள் வரவேண்டும்.., என்று மீண்டும் நமக்குள் இந்த உணர்வைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற இந்த உணர்வைச் சேர்த்து இதை உருவாக்கி விட்டீர்கள் என்றால் அந்தக் கரு மீண்டும் அந்த உணர்வைக் கூட்டித் தீமை நமக்குள் புகாதபடி தடுக்கச் செய்யும்.

எப்படிக் காரமான மிளகாயைச் சேர்த்துச் சுவையாக மாற்றுகின்றோமோ உப்பைச் சேர்த்து சுவைப்படுத்துகின்றோமோ இதைப் போல நம் உணர்வின் அணுக்களைச் சுவைமிக்கதாக நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

அதனால் தான் நம் ஆறாவது அறிவைப் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்று காட்டுகின்றார்கள்.

இன்று விஞ்ஞான அறிவைக் கொண்டு மற்ற அணுக்களைச் சேர்த்து உயிரினங்களை மாற்றித் தாவர இனங்களை மாற்றி உடலுக்குள் நோய்களை மாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.

இதே போல நமக்குள் அணுக்கள் உற்பத்தி ஆகும் பொழுது மற்ற தீமையான அணுக்கள் அது கலந்தாலும் அதைத் தணித்து நாம் அருள் உணர்வின் தன்மையை வளர்க்க வேண்டும். வளர்க்க முடியும்.

புத்தகத்திலோ ஏட்டிலோ படித்து யாம் உபதேசிக்கவில்லை… அன்று நடந்ததை நுகர்ந்தறிந்து தான் சொல்கிறோம்

 

அருணகிரிநாதர் பல தவறுகள் செய்தவர். செல்வத்தை வைத்துப் பேரின்பம் பெற விரும்பியவர்.

அதன் வழி எல்லை கடந்து தன்னுடைய சகோதரியிடமே கேட்கப்படும் பொழுது “நீ எதை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ என்னையவே நீ அனுபவித்துக் கொள்…” என்று ஏக்க உணர்வுடன் மூர்ச்சையாகி மாரடைப்பால் சகோதரி இறந்து விடுகின்றது.

தம்பி மீது உள்ள உணர்வுகளை வைத்து அவனுடைய உடலிலே அந்த ஆன்மா சேர்கின்றது.

தன்னுடைய சகோதரி இறந்து விட்டதே… உணவு கொடுத்த தாயை மறந்து விட்டோமே…! என்று அப்போது தான் தன் தவறைப் பற்றிச் சிந்திக்கின்றான் அருணகிரி.

ஆனால் அவருடைய சகோதரியோ… தன் சகோதரன் நல்லவனாக வேண்டும் என்றும்… உலகத்தை அறிந்திட வேண்டும் என்றும்… உலகத்தை அறிந்திட்ட திருமூலரின் உணர்வுகளையே எடுத்து வளர்த்துக் கொண்டது.

இந்த உடலை விட்டுச் சென்ற பின் என்ன நடக்கின்றது…?

இவனோ மரணமடைய எண்ணுகின்றான். திருவண்ணாமலையில் உள்ள கிளிக் கோபுரத்தின் மீது ஏறி அதிலிருந்து கீழே விழுந்து தன் உடலை மாய்த்துக் கொள்ள விரும்புகின்றான்.
1.இந்த உடலில் இந்தப் பிறவியில் நாம் செய்த தவறுகள் போதும்…
2.இனி அடுத்த பிறவியாவது “தவறில்லாத நிலைகள்” நடந்து கொள்ள வேண்டும் என்று உடலை அழிக்க முயற்சிக்கின்றான்.

ஆனாலும் அவனுடைய சகோதரி இந்த உடலை விட்டுச் சென்ற பின் அவனுடைய உடலுக்குள் சென்று அந்த உணர்வினை ஈர்த்துவிட்டது உள் சென்ற பின் உடலுக்குள் உந்தி அவனை மடிய விடாதபடி அவனுள் நின்றே தான் வளர்த்த உணர்வை அங்கே நிறைவேற்றுகின்றது.

சிறிது நேரம் கழித்த பின் அவன் சிந்திக்கின்றான்.
1.அவன் உடலிலிருந்த சகோதரியின் உணர்வுகள் இயக்கப்பட்டு
2.”நாத விந்துகள் ஆதி நமோ நமோ… வேத மந்திர சொரூபாய நமோ நமோ… வெகு கோடி…!” என்று பாடலையே பாடுகின்றான்.

எதனின் உணர்வுகள் கொண்டு எந்த இசையின் தன்மையை வருகின்றதோ அந்த உணர்வின் தன்மை உடலில் இரத்த நாளங்களில் சேர்க்கப்படும் போது… அதனின் உணர்வை உருவாக்கும் விந்துகளாக ஆகின்றது.

இப்படி இந்த உடலில் எடுத்துக் கொண்ட பல கோடி உணர்வுகள் உடலுக்குள் எப்படிச் சேர்கின்றது…? ஆகவே எப்போது எதனை அதிகமாகச் சேர்த்தோமோ அதனின் உணர்வு கொண்டு தான் வருகின்றது என்று தன்னை அறியும் நிலையில் அவன் வெளிப்படுத்துகின்றான்.

தன் உடலில் சேர்த்துக் கொண்ட அகந்தை என்ற உணர்வுகளும் ஆசை என்ற உணர்வும்
1.ஆசை என்ற உணர்வு கொண்டு பிறிதொரு வேதனையை உணராத நிலையில்
2.குருடனைப் போன்று தவறின் வழியிலே செய்து கொண்ட உணர்வுகள்
3.அந்த உணர்ச்சியின் நாதங்களே அவனுக்குள் அதை இயக்கிவிட்டது என்ற இந்த நிலையை அறிகின்றான்.

அந்தச் சகோதரி அவனுள் நின்று “திருமூலரின் மந்திரத்தை” தான் நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் உயிர் எப்படி அதனின் இசையாக மாற்றுகின்றது…? நீ குஷ்டரோகியாக எப்படி ஆனாய்…” என்ற இந்த உணர்வுகளை இங்கே உணர்த்தப்பட்டு இந்த பாடலைப் பாடுகின்றான்.

அந்த சகோதரி தன் சகோதரனை மீட்ட வேண்டும் என்ற உணர்வுடன் அந்த உடலுக்குள் சென்று… 1.27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிருந்து கவரக்கூடிய உணர்வுகள்
2.சூரியனுடைய ஈர்ப்புக்குள் உணவாக அது வரும் நிலையில் ஒன்றுடன் ஒன்று மோதி நாதங்கள் மாறுவதும்… சுருதிகள் மாறுவதும்…
3.ரா ரா ரா ரா ரா… ரீ ரீ ரீ ரீ ரீ…. ரூ ரூ ரூ ரூ ரூ… டூ டூ டூ டூ டூ… என்ற நிலைகளில் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த நாதங்கள் எப்படி மாறுகின்றது…? என்று
4.திருமூலர் கண்ட உண்மையை உணர்த்துகிறது.

இதைப் போன்று தான் உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து உணர்வுகள் உயிரிலே உராய்வுக்குத் தக்க எண்ணங்களும் எண்ணத்தின் உணர்வும் உணர்வுக்கு ஒப்ப செயல்களும் அதற்குத்தக்க உடல் என்ற நிலையில் இதை தெளிவாக திருமூல மந்திரத்தின் உணர்வினை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

காலத்தால் அதை எல்லாம் மாற்றி விட்டார்கள்.

ஆனால் இந்த உண்மைகளை உணர்வதற்காக குருநாதர் என்னை அந்தந்த ஸ்தலங்களுக்குச் செல்லும்படி செய்து அக்காலத்தில் நடந்த சம்பவங்கள் அந்த உணர்வுகள் பரவி இருப்பதை அருணகிரிநாதர் என்ன எடுத்தார்…? சகோதரி என்ன எடுத்துக் கொண்டது…? என்று காட்டுகின்றார்.

அருணகிரியின் வாழ்க்கையைப் பற்றிப் புத்தக வாயிலாக வந்திருப்பினும் ஏடுகளில் இது பதிவாக்கப்பட்டு இருப்பினும்
1.அவர்கள் (அருணகிரியும் அவருடைய சகோதரியும்) உடலிலிருந்து வெளிப்பட்ட உண்மையின் உணர்வுகள் எப்படி இருக்கிறது…? என்று திருவண்ணாமலைக்கு என்னைப் போகச் சொல்லி
2.அதன் உணர்வின் தன்மை எப்படி இருக்கிறது…? என்று இந்த காற்றிலே படர்ந்து இருப்பதை நுகரும்படி செய்து
3.ஆந்த உணர்ச்சிகளால் அவன் பாடிய பாடலும் அவன் பிறவி இல்லாத நிலை அடைந்ததும்
4.அவன் உடலுக்குள் இருந்த சகோதரி இந்த உணர்வின் தன்மை எடுக்கச் செய்ததும்
5.உடலுக்குப் பின் இரண்டு உயிரான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று ஒளியின் சரீரம் எப்படி அடைந்தனர்…? என்று தெளிவாகக் காட்டினார்.

அதைத்தான் உங்களுக்குச் சொல்கின்றேன் (ஞானகுரு).

காற்று (பிராணன்) நம்மை இயக்கும் விதம்

 

பஞ்ச பூதங்கள் என்ற ஆகாயம் காற்று நீர் நெருப்பு மண் இவைகள் சரீரத்தில் செயல்படும் செயலுக்குப் பிராணன் என்றிட்ட உயிர் காற்று நாடிகள் வழியோடி அந்தந்த இடங்களில் சுவாச அலையைக் கூட்டி இயக்குகின்றது.

அதாவது மனிதச் சரீரத்தில் இயற்கையாக நடைபெறும் சுவாசத்தின் கதியே சரீரத்தின் உட்கருவிகள் செயல்பட நாடிகளின் வழி ஓடி ஆங்காங்கு பஞ்சேந்திரிங்களின் தொழிலுக்குச் செயல்பட “இந்தச் சுவாசக் காற்றே பற்பல செயல்களுக்கு வழி வகுக்கின்றது…!”

உயிர்க் காற்று என்று கூறப்படும் பிராணக் காற்று என்பது
1.இருதயப் பகுதி நாடிகளிலிருந்து மேலெழுந்து சென்று வெளிச் சுவாசங்கள் மோதிடும் நெற்றிப் பொட்டில் கலந்து
2.அங்கு செயல்படும் சூரிய அக்கினி சந்திரன் என்ற முத்தலை நாடிகளுள் சந்திர நாடியின் வழி கீழே ஒடி
3.மூலத்தைச் சுற்றி மேலெழுந்து நாபிப் பகுதியில் பத்துத் தலையுள்ள பச்சை வண்ண நாடியில் சுற்றி ஓடும் பெரிய சுவாச நாடியில் கலந்து
4.மீண்டும் மேலெழுந்து சிரசின் மூளைப் பகுதியில் சுவாச நாடிகளின் வழி இரண்டு சுற்றுகளாகச் சுற்றி
5.மீண்டும் வெளிச் சுவாச அலைகள் மோதிடும் நெற்றிப் பொட்டில் கலந்து ஈர்த்து அதே மோதலில் செயல்படுகின்றது.

சரீரத்தில் சுவாசம் நாசியின் வழியாக உட்செல்லும் பொழுது உடலினுள் இயங்கும் இந்த உயிர்க் காற்று என்பது நொடிக்கும் குறைவான நேரத்தில் நாடிகளின் வழியாக ஓடிச் செயல்படுகிறது… செயல்படுத்துகின்றது. பசி தாகம் ஏற்படுவதெல்லாம் இந்த உயிர்க் காற்றின் மூலம் தான்.

சரீரச் செயல் அனைத்தையும் ஒரு கட்டுக்குள் வைத்து பஞ்சேந்திரியங்கள் புற வாழ்க்கைச் செயலில் இயங்கும் இயக்கத்தை நிலை நிறுத்தி
1.ஒருமையும் ஐந்தடக்கி தியானத் தொடரில் நிலை பெற்று விட்டால்
2.காற்றிலிருந்தே ஆகாரம் பெற்றிடும் அமைப்பு ஏற்பட்டுவிடும்.

சரீரத்தின் குறி ஸ்தானம் என்றிட்ட மர்ம ஸ்தானத்திலும் மலம் கழியும் இடமாகிய மூல இடத்திலும் வட்ட வடிவில் சுழன்றோடும் காற்று அங்குள்ள நாடிகளின் வழியே செயல்படும் பொழுது உணர்வின் உந்துதலாக மலம் நீர் இவற்றை வெளியேற்றும் செயலுக்கும் ஆண் குறியின் சுக்கிலத்தைக் கிளர்ந்து வெளித் தள்ளும் செயலுக்கும் இயக்குகிறது. அதை மூலத்தின் காற்று என்பர்.

சுவாசக் காற்றின் செயல் நாபிப் பகுதியில் உள்ளிட்ட நாடிகளில் ஓடிடும் பொழுது இரைப்பையில் உணவை ஜீரணித்துச் சாறு என்றும் சக்கை என்றும் பிரித்திடும் செயலுக்கு உதவுகின்றது,

அதே சமயத்தில் உணவின் சத்துக்களை நரம்புகளின் வழி கொண்டு சென்று சரீரத்தின் அனைத்து உறுப்புகளுக்கும் பகிர்ந்தளிக்கும் சுவாசக் காற்றாகவும் சுவாசத்தின் கதியில் காற்று நூலாகச் செயல்கள் நிகழ்கின்றன.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உங்களுக்குள் திரும்பத் திரும்ப அருள் ஞானத்தைப் பதிவு செய்கின்றோம். பெண்கள் இதிலே பெரும்பகுதி பங்கு கொள்ள வேண்டும்.

உங்கள் “குடும்பத்தைக் காக்கும்” அரும் பெரும் சக்தி கொடுத்திருக்கின்றோம்.

ஆகவே குறைகளை எண்ணாதீர்கள்… அதை உங்களுக்குள் புக விடாதீர்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி தங்கள் கணவர் பெறவேண்டும் குழந்தைகள் பெறவேண்டும் என்று எண்ணுங்கள். எங்கள் குழந்தைகள் அருள்ஞானம் பெறவேண்டும் அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.

“குறைகளை எப்பொழுது காணுகின்றீர்களோ..,” அந்த நேரத்தில் “விழித்திருந்து” இப்படி எண்ணிப் பழகுங்கள்.

குழந்தைகளுடைய குறைகள் உங்களுக்குள் வராதபடி அருள் ஒளி என்ற உணர்வை உங்களுக்குள் எடுத்துக் கொள்ளுங்கள்.

“நீ என்றும் நல்லவனாவாய்.., நீ எல்லோரும் போற்றும் நிலை பெறுவாய்.., உனக்குள் பண்பு கொண்ட உணர்வுகள் வளரும் என்று “பல முறை” சொல்லுங்கள்.

இதைக் குழந்தைகளைக் கூர்ந்து கவனிக்கச் செய்யுங்கள்.

நாம் சொல்லும் உணர்வுகளை அவர்கள் நுகர்வார்கள். அவர்களுக்குள் அது கருவாகும். குழந்தைகளைப் பற்றிய எண்ணம் வரும் பொழுதெல்லாம் இப்படி எண்ணுங்கள்.

நண்பர்களுக்குள் நன்மை செய்தான்… என்று எண்ணினால் “விக்கலாகின்றது… துரோகம் செய்தான் பாவி… என்று எண்ணினால் “புரையோடுகின்றது…”

குழந்தைகள் மேல் உள்ள பாசத்தால் “என் குழந்தை இப்படி இருக்கின்றதே…” என்று வேதனைப்பட்டால் அந்த உணர்வுகள் அவர்களை “இயக்கும்…”

குழந்தைகள் பால் உயர்ந்த குணங்கள் கொண்டுதான் இருக்கின்றோம். ஆனாலும் வேதனைப்படும் உணர்வு கொண்டு குழந்தைகள் வெகு தூரத்தில் இருந்தால் அங்கே எப்படித் தனியாக இருக்கின்றார்களோ..,? என்ன செய்கின்றார்களோ…? என்றெல்லாம் எண்ணங்கள் ஓடும்.

வீட்டிலே இருந்தால் நான் எப்படி எல்லாம் நல்ல முறையில் குழந்தைகளைக் கவனிப்பேன்…! அடிக்கடி அவர்களுக்கு நல்ல உணவைக் கொடுக்க முடியும்.

ஆனால் இப்பொழுது “இல்லையே…” என்ற எண்ணத்தில் “வேதனைப்பட்டு நினைத்தீர்கள்” என்றால் அவர்கள் “எவ்வளவு பெரிய திறமைசாலிகளாக இருந்தாலும்” அங்கே சிந்திக்கும் தன்மை போய்விடும்.

தொழிலோ அல்லது மற்ற வேலைகளில் இருந்தாலோ அங்கே பின்னமாகின்றது. “ஐயோ… மகனே இப்படி… நினைத்தேனே” “ஐயோ… மகளே இப்படி.. நினைத்தேனே” என்ற நிலை வந்துவிடும்.

இதைப் போன்று நம்மையறியாமல் இயக்கும் நிலைகளிலிருந்து நீங்கள் விடுபடும் அருள் சக்தி பெற வேண்டும்.

யாம் முதலிலே சொன்ன முறைப்படி உங்களுக்குள் பதிவு செய்துவிட்டு எப்பொழுதெல்லாம் குழந்தைகளைப் பற்றி நினைவு வருகின்றதோ அப்பொழுதெல்லாம் என் குழந்தைகள்
1.அருள் ஞானத்தைப் பெறுவார்கள்…
2.அருள் செயல்களைச் செயல்படுத்துவார்கள்…
3.அருள் வழியிலே வாழ்வார்கள்
4.பேரன்பைத் தனக்குள் பெருக்கிக் கொள்வார்கள்… என்று
5.இப்படிப்பட்ட நிலைகளை எண்ணிக் குழந்தைகள் பால் பாய்ச்சிப் பாருங்கள்.

உங்கள் உணர்வால் எத்தகைய நிலைகளையும் மாற்றியமைக்க முடியும்.

“குழந்தைகளை நல்லவராக்கும் உணர்வை” உங்களுக்குள் கருவாக்கும் நிலையை உருவாக்க முடியும். “அருள் உணர்வின் ஒலிகளை” குழந்தைகளுக்குள் பரப்ப முடியும்.

அவர்களுக்குள் அந்த உண்மையின் உணர்வை வளர்க்க முடியும் என்ற இந்தத் தன்னம்பிக்கையுடன் “உங்களுக்குள் வளர வேண்டும்” என்று வேண்டிக் கொள்கின்றேன்.

அருள் வழியில் வாழுங்கள்… அருளானந்தம் பெறுவீர்கள்.

செல்வத்தின் மேல் வரும் “பற்று” நம்மை நரக வேதனைக்குள் தான் அமிழ்த்தும்

 

மனிதர்கள் நாம் வாழ்வது சிறிது காலம் தான். நாம் தேடிய செல்வங்களும் “என்றும்” நம்முடன் இருந்ததில்லை.

செல்வம் தேடி வைத்திருக்கும் குடும்பங்களை எல்லாம் பார்த்தால்… கோடிக் கணக்கில் பணம் இருக்கும்…! ஆனால் குடும்பத்தில் எத்தனை வேதனைப்படுகிறார்கள் என்று பார்த்தால் தெரியும்… நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

செல்வம் இருக்கும்… வேதனையிலிருந்து மீள முடியாத நிலை தான் அங்கே இருக்கும். துயரத்தின் உணர்வுகள் எல்லை கடந்து இருக்கும்.
1.செல்வம் எது இருப்பினும் அதுவே எதிரியாக மாறுகின்றது.
2.செல்வத்தின் நிலை சிந்தனைகளைக் குறைக்கச் செய்கின்றது… செயல்களை மாற்றுகின்றது…
3.செல்வம் இருந்தாலும் தன்னை மதிக்கவில்லை என்றால் வேதனை தான் வரும்.

வேதனை என்றாலே விஷம். ஆகவே சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது. உடலில் உள்ள அணுக்களில் விஷத்தன்மை பரவி நோயாக மாறுகின்றது.

செல்வத்தைப் பார்க்க வேண்டியதுதான்… ஆனால் “ஆசையோ விடாது…” அதையே ஒவ்வொரு நிமிடமும் நினைத்து நரக வேதனையைத் தான் அது உருவாக்குமே தவிர நல்லது செய்யாது.

ஆகவே செல்வம் இருந்தாலும் அருள் செல்வம் (ஞான சக்தி) என்ற நிலை இருந்தால் தான் செல்வத்தைப் பாதுகாக்கும் தன்மையாக வரும். நம் உடலில் அருள் ஒளி என்ற உணர்வைப் பெருக்க முடியும். இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை அடைய முடியும்.

நம் உயிர் ஈசன்… நம் உடல் சிவம்…! ஒவ்வொரு நிமிடத்திலும் எந்தெந்த உயர்ந்த குணங்களை எண்ணுகின்றோமோ அது எல்லாம் நல் வினைகளாக உடலுக்குள் உருவாக்கி அந்த வினைக்கு நாயகனாக அது நம்மை இயக்குகிறது… அதுவே நம்மை வழி நடத்தும். ஆகவே நல்வினைகளையே நமக்குள் சேர்த்தல் வேண்டும்.

எத்தகைய தீமைகள் வந்தாலும் வயல்களில் களைகளை எப்படி நீக்கிக் கொண்டே இருக்கின்றோமோ அதைப்போல
1.உடலில் வரும் தீமை என்ற நிலைகளை
2.அவ்வப்போது துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அவைகளை நீக்குதல் வேண்டும்.

தீமைகளை நீக்கும் அருள் சக்திகளைப் பெறுவதே அழியாச் செல்வம்.

“உணர்வுடன் கூடிய சுவாசமே…” சரியான தியானமாகும்

 

ஜீவ பிம்பச் சரீரத்தின் அகக்கருவிகளான மனம் அறிவு நினைவாற்றல் செயல்படுதலின் முனைப்பு கொண்டு அண்டசராசரங்களையும் பஞ்ச பூதத் தத்துவமாகச் சரீரத்தில் கண்டுணர்ந்த செயலுக்குத் தெய்வீக உருவ அமைப்புகளை ஞானிகள் காட்டியதே “உயர் ஞானத் தெளிவிற்கே…!”

அதனை எல்லாம் இன்று இந்த மனித குலம் எடுத்துக் கொண்ட விதங்களை என்ன என்று சொல்வது…?

பக்தியாகப் பஜனைகள் பாடுகின்றார்கள்…
1.ஆனால் நாத விந்து தான் நாராயணன் என்பதை உணர்ந்தானா…?
2.நாராயணன் நீருக்குள் சர்ப்பப் பஞ்சணை மேல் பள்ளி கொண்டுள்ளான்…! என்று சித்தர்களால் சூட்சமமாகக் காட்டப்பட்டது.

“பச்சை வண்ணப் பரந்தாமன்…” என்று கூறிய நாராயணன் வயிற்றுப் பகுதியுள் நாபியுள்ள இடத்தில் சர்ப்பம் போல் வட்டமிட்டு ஓடும் பஞ்ச பூதத் தத்துவ நாடிகளைச் செயல்படுத்திடும் பத்துத் தலைகள் போன்ற பச்சை வண்ண நாடி நீரமிலம் என்று கூறப்பட்ட தொப்புள் இடத்தில் (நாபி) சுதியுற்றுச் செயல்படும் விதமே
1.குளிர்ந்த நீருக்குள் நாராயணன்…
2.அதாவது சரீர உஷ்ணத்தைக் குதம் என்றிட்ட மலவாய்ப் பகுதியில் சிறிது தூரத்தில் மேலே உள்ள
3.வெப்பமிலம் செயல்படும் அதி உஷ்ணத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திடும் செயலே “உஷ்ண நாதம் – காத்திடும் விஷ்ணு…!” என்பது.

1.மூலத்தைக் கணபதி என்றும்…
2.குறிப்பகுதி பிரம்மன் என்றும்…
3.நாபிப் பகுதி விஷ்ணு என்றும்…
4.இருதயப் பகுதியை உருத்திரன் என்றும்…
5.கண்டப் பகுதியை மஹேஸ்வரன் என்றும்…
6.நெற்றிப் பகுதியை சதாசிவன் என்றும்…
7.சிரசின் உச்சிப் பகுதியை ஆயிரம் இதழ் மலர்ந்த தாமைரையினுள் ஆகாய ஜோதி என்றும்… ஈஸ்வரர் என்றும்…
8.மறை பொருளாக நற்சுவாசம் கொண்டு உண்மையை உணர்த்த வந்த ஞானிகளின் செயல் இன்று மாறு கொண்டு விட்டது.

இந்தக் காற்று நூல் தருவதெல்லாம் எதற்கப்பா…?

எந்தப் பொருளிலும் உண்மையை அறிதலே ஞானம். காற்று நூல் காட்டி உண்மையை உணர்த்தியது மூச்சைப் பிரித்தறியும் எண்ணச் செயலுக்கு அல்ல…! அந்த எண்ணம் கூடச் சுவாசத்தை மாற்றிவிடும்.

ஈஸ்வரபட்டனாகிய யான் சுட்டிக் காட்டும் இந்தப் பேரின்பத் தியான வழிதனில் நல்லெண்ணம் கொண்டு ஆத்ம வலுவைக் கூட்டி உயர்ந்த நிலை பெறவே “எல்லோரையும் அன்புடனே அழைக்கின்றேன்…!”

எண்ண வலு பெற்றிடும் நம் தியானத்தில்
1.சுவாசத்தின் செயலை உணராது செயல்படாமல்
2.உணர்வுடன் கூடிய சுவாசம் எடுத்திட்டாலே அனைத்து நற்பயன்களும் சித்திக்கும்…!
3.ஆத்மாவும் சுயப் பிரகாசத்தைப் பெற்றிடும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பெண்கள் உங்கள் வீட்டில் “கணவர் இப்படி இருக்கிறார்… அப்படி இருக்கின்றார்…” என்று எண்ண வேண்டாம்.

ஏனென்றால் அவர் தீமையான பழக்கங்களைக் “கட்டுப்படுத்த வேண்டும்” என்று விரும்புகின்றார்.

சிகெரெட் குடிப்பவர்களைப் பாருங்கள். குடித்துக் கொண்டே இருப்பார்கள். நீங்கள் என்ன தான் சொன்னாலும் “வெறுப்பு” வந்துவிடும்.

அதே மாதிரி தண்ணி (மது) போடுபவர்களைப் பாருங்கள். வீட்டில் மிகவும் தரித்திரமாக இருக்கும். பெண்கள் நகையை அடமானம் வைத்துக் குடிப்பார்கள்.

நண்பரைப் பார்த்தால்… “நீ வாப்பா… நாம் தண்ணி போடப் போகலாம்” என்பார்கள்.

“தண்ணி போடும் ஆள்கள்” தண்ணியை வாங்கிக் கொடுத்து சிநேகம் ஆன பிற்பாடு…“அடச் சாப்பிடு…” என்று சொன்னால் போதும்.

“அண்ணே நீ சொல்வது தான் சரி…” என்று சொல்லிக் கொண்டு உடனே அங்கே இருந்து வந்து இவன் வாங்கிக் கொடுப்பான்.

அந்தத் தண்ணி போடுபவன் தண்ணி ஒருவனுக்கு வாங்கிக் கொடுத்தான் என்றால் “அண்ணனைப் போல… யாருமே உலகில் இல்லை…” என்று புகழ் பாடிக் கொண்டிருப்பான்.

இங்கே வீட்டிலோ மிகவும் தரித்திரமாக இருக்கும். அவன் வந்தவுடன் “அண்ணே..!“ என்று சொன்னால் போதும்.

குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடப்பான்.

அங்கே வந்து மனைவி “என்னங்க.., இப்படி இருக்கின்றீர்கள்..,? என்று கேட்டால் போதும்.

“உனக்கு அறிவு இருக்கின்றதா..?” என்று சண்டை போட்டு மனைவியை அடிப்பார்கள். “எதையாவது கொடு… ஒரு சிறு பாத்திரத்தையாவது கொடு. நான் விற்றுத் தண்ணி சாப்பிடனும்…” என்று மனைவியிடம் வம்பு செய்வார்கள்.

குடும்பத்திலோ பணமில்லை. ஆனால் இப்படி விற்றாவது அடுத்தவருக்குத் தண்ணியை வாங்கிக் கொடுத்து அதன் வழியில் அங்கே “அவர்களிடம் மயங்கிக் கிடப்பார்கள்…”

“இதற்கெல்லாம்… காரணம் எது?”

அன்று மந்திரங்களிலேயும் மாயங்களிலேயும் “சோமபானம்” என்று அதர்வண வேதத்தில் கலக்கப்பட்டு இந்த உணர்வின் உணர்ச்சிகளை ஊட்டித்தான் அதிலே மந்திரங்கள் ஓதப்பட்டு அதற்குள் “வசியபடுத்தப்பட்ட நிலைகள்” தான் இது.

நாம் நினைக்கின்றோம் “போதை…” எங்கிருந்து வந்தது…? என்று.

இந்தத் தீயிலே கருக்கப்பட்டு உணர்வின் தன்மை இந்த யாக வேள்விகள் நடத்தப்படும் பொழுது சோமபானம் என்ற நிலையை ஊற்றுவார்கள்.

“புகையுடன் கலந்து வரும் பொழுது நுகர்ந்து விட்டால்” நுகர்ந்த உணர்வு அந்தக் கருவின் தன்மை அடைகின்றது.

இந்தப் போதையின் நிலைகள் தான் “வசியம்…” என்று “இந்தச் சாமி செய்யும்… அந்தச் சாமி செய்யும்…” என்ற நிலைகளில் இன்று போய்க் கொண்டிருக்கின்றோம்.

இதெல்லாம் ராஜ தந்திரத்தில் ராஜ தந்திரம்.

ஏனென்றால் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்திய விளக்க உரைகளைச் சொல்கின்றோம்
1.மக்கள் எத்தனையோ நிலைகளில் ஏமாற்றப்பட்டுக் கொண்டுள்ளார்கள்
2.அதிலிருந்து காக்கப்பட வேண்டும் என்று உணர்த்தியதை இங்கே வெளிப்படுத்துகின்றோம்.

குடும்பங்களில் இதைப் போன்ற எத்தனையோ சிக்கல்கள் வருகின்றது. ஆகவே வீட்டில் கணவரைக் குறை கூறும் உணர்வுகளை எடுக்க வேண்டாம். அவர் அறியாத நிலைகளில் செய்கின்றார்.

ஒருவர் சாக்கடையில் விழுந்துவிட்டால் என்ன செய்கின்றோம்…? அவரை மீட்டுத் தூய்மைப்படுத்துகின்றோம்.

இதைப் போன்று குறைபாடுகள் வந்தால் நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்தப் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி அது என் கணவர் உடல் முழுவதும் படர வேண்டும் அவர் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும்.

நாங்கள் கணவன் மனைவி இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ வேண்டும். நளாயினியைப் போன்று நாங்கள் ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும். சாவித்திரி போன்று எங்கள் இரு உயிரும் ஒன்றிடல் வேண்டும் எங்கள் இரு மனமும் ஒன்ற வேண்டும் இரு உணர்வும் ஒன்றாக வேண்டும் என்ற “இந்த வலுவான உணர்வை” நீங்கள் எடுத்துக் கொண்டே வாருங்கள்.

இந்த அருள் உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலுக்குள் கருவாக உருவாகிக் கொண்டே இருக்கும். கருவாகும் பொழுது அவருடைய உணர்வைச் சேர்த்து… அருள் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால்…
1.அவருடைய உணர்வுகள் உங்கள் உடலுக்குள் உண்டு
2.அவர் “தவறுகள் பல செய்தார்… செய்து கொண்டேயிருக்கின்றார்.,” என்ற உணர்வுகள் உங்களுக்குள் உண்டு.
3.அவரைப் பார்த்தவுடனே… “இப்படிச் செய்கின்றாரே…” என்ற வேதனை வரும்.

அந்த வேதனையை மாற்றுவதற்கு இந்த முறைப்படி நீங்கள் செய்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து இதைக் கருவாக்கிக் கொள்ளுங்கள்.

அதைத் திரும்பத் திரும்ப இதே மாதிரி நீங்கள் எண்ணினால் உங்கள் உடலுக்குள் அணுக்களாக விளைந்துவிடும்.

கணவருக்கு உணவு மற்ற நிலைகள் கொடுக்கும் பொழுது
1.“அவர் உயர்ந்த ஞானியாக வேண்டும் மகானாக வளர வேண்டும்…”
2.என் கணவரின் செயல்கள் எல்லாம் அனைவரும் போற்றக்கூடிய சக்தி அவர் பெற வேண்டும் என்று இதை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

இந்த உணர்வின் தன்மை (அவர்) உற்றுக் கேட்கும் பொழுது சந்தர்ப்பத்தில் அவருக்குள் பதிவாக்கிவிடுங்கள். இது பதிவாகும் நிலைகளில் அவருக்குள் நிச்சயம் உருவாகும்.

எப்படியும் நீங்கள் சமையல் செய்யும் பொழுது அந்த மிளகாயை அளவுடன் சேர்த்து ருசியாக உருவாக்குகின்றீர்களோ அதைப் போல அவருடைய நிலையை நீங்கள் மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.
1.தவறு செய்பவர்களை மாற்றலாம்… உங்களால் நிச்சயம் முடியும்.
2.பெண்களுக்குள் அதிகமான அளவில் வளர்க்கும் சக்தி உண்டு.

அதிகாலை 4 – 6க்குள் ஒரு பாலை வைத்து அல்லது தண்ணீரை வைத்து அல்லது இரண்டு வில்வம் தழையாவது எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

யாருக்காவது நோய் இருந்தது என்றால் அந்த வில்வம் தழையைத் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுத்துக் கொடுங்கள். பல நோய்களையும் போக்க உதவும்.

ஏனென்றால் உங்களுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் கூடும் பொழுது உங்கள் உணர்வின் ஆற்றல் நோய்களைப் போக்கும்.

சக்தி உங்களுக்குள் அதிகமாகக் கொடுக்கின்றோம். நீங்கள் எடுத்துப் பாருங்கள்.

யாம் கொடுக்கும் உபதேசங்களை விளைய வைத்தால் தான் உங்களுக்கு ஞானம் கிடைக்கும்

 

பிறருடைய கஷ்டங்களையும் துயரங்களையும் வேதனைகளையும் தவறுகளையும் நாம் நுகர்ந்தறிந்தாலும் அந்த உணர்வுகள் நமக்குள் வராதபடி துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்துத் தூய்மையாக்கிக் கொண்டே வந்தால் மன பலம் பெற்று… விவேகத்துடன் நடந்து கொள்ளும் தன்மையும்… நம் வாழ்க்கையை அமைதி கொண்ட வாழ்க்கையாகவும் அமையச் செய்யும்.

பகைமையற்ற உணர்வுகளை வளர்த்து “என்றுமே ஏகாந்த நிலையாக” மகிழ்ச்சியுடன் வாழும் அந்த ஒளிச் சரீரத்தைப் பெறுகின்றோம்.

கணவனும் மனைவியும் குடும்பத்தில் ஏகக்காலத்தில் இதைப் பயன்படுத்திப் பழகுங்கள்.
1.குடும்பத்தில் கோபமோ குரோதமோ வராதபடி
2.அருள் உணர்வுகளைப் பெற்றுச் சிந்தித்து செயல்படும் திறனாக மாற்றிக் கொண்டே வரவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தியானத்தின் மூலம் எடுக்கப்படும் போது நமக்குள் வரும் வெறுப்பையும் வேதனையும் சமப்படுத்திச் சிந்திக்கும் தன்மை கிடைக்கின்றது. அப்போது நமது உணர்ச்சிகள் “விவேகத்துடன்” நடந்து கொள்ளும் நிலையாக வருகின்றது.

இதை எல்லாம் மனதில் வைத்து யாம் கொடுத்த உபதேசங்களை நூல் வடிவில் வந்ததை அனைவரும் திரும்பத் திரும்பப் படித்து அதை எடுத்து வளர்த்துக் கொண்டால் இதுவே “மிகப்பெரிய தியானம்” ஆகின்றது.

வாழ்க்கையில் வரும் இடையூறுகளை அகற்றிடும் சக்தி பெற்று மற்றவரை நல்வழிப்படுத்தும் அருள் ஞானிகளாகவும் நாம் மாற முடியும்.

ஆனால்…
1.பிறரிடம் நாம் சொல்லிச் செயல்படுத்தும் நிலை ஆகாது… முடியாது..
2.பிறருக்கு நல்ல புத்திகளைச் சொன்னால் அதை அவர்களால் ஏற்க முடியாது
3.ஏனென்றால் அது இயங்காது.

இவ்வளவு தூரம் இங்கே உபதேசிக்கிறோம் என்றாலும்
1.இந்த உணர்வுகளைப் பதிவாக்கித் தனக்குள் வளர்த்து
2.உங்கள் உடலிலே விளைந்தால் தான் அந்த ஞானமே வரும்.

சொல்லும் பொழுது… கேட்கும் போது… நன்றாகத்தான் இருக்கும். ஆக உங்கள் உடலுக்குள் விளையச் செய்து அந்த உயர்ந்த கருத்துக்களை என்றுமே நீங்கள் வளர்த்தல் வேண்டும்.

அது வரவேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை உங்கள் உடலுக்குள் அதிகமாகச் சேர்த்து வளர்த்தல் வேண்டும். அதைப் பற்றுடன் பற்றித் தீமைகளையும் கஷ்டங்களையும் சங்கடங்களையும் பற்றதாக மாற்றிக் கொள்ளுதல் வேண்டும்.

எந்த நிமிடத்திலும் துருவ நட்சத்திரத்தின் பற்றுடனே நாம் வாழ்ந்திட வேண்டும்.

1.ஒரு காரியத்தைச் செய்யச் சென்றாலும்
2.வெளியில் சென்றாலும்
3.உறங்கச் சென்றாலும்
4.உணவு உட்கொண்டாலும்
5.ஒருவரிடம் பேசுவதாக இருந்தாலும் கூட
6.அதற்கு முன் ஒரு நொடி அந்தத் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு… அந்த வலுவைக் கூட்டிக் கொண்டு
7.நாம் சொல்லக்கூடியது அவருக்கு நல்லதாக வேண்டும் நல்லதாக அமைய வேண்டும்
8.என் சொல்லை அவர் மதித்து நடத்த வேண்டும்
9.எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும் என்று
10.எதற்குமே இப்படி ஒரு தொடர்பு வைத்துக் கொண்டால்
11.அருள் உணர்வுகள் உங்களுக்கு அந்த ஞானத்துடன் விவேகத்துடன் வரத் தொடங்கும்.
12.எதிர்ப்புகளைத் தணிக்கும்… எதிரிகள் உணர்வு வராதபடி தடுக்கும்
13.கோபத்தை வளர விடாதபடி அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்காது தடுக்கும்.

இதை எல்லாம் மனதில் வைத்துத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சீராகத் தியானத்தில் எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

“மூச்சையும் காற்றையும்” பற்றிச் சிந்திப்பார் யாரும் இல்லை

 

“உஷ்ண நாதமே காக்கும் விஷ்ணுவாக…!” என்ற சொல் சூட்சமத்தில் மனிதச் சரீரத்தில் செயல் கொள்ளும் உஷ்ண நாதம் உடலினுள் ஓடிடும் 72000 நாடி நரம்புகளில் செயல்படுகிறது.

அவைகள் செயல்படும் கதியை… எண்ணம் கொண்டு செயல்படுத்தும் பஞ்சேந்திரியங்களும்… அவைகளின் தொழில் நிகழ்வுக்குப் பஞ்ச பூதங்களில் காற்றின் அமிலக்கூறு மின்காந்தச் செயலாக நடைபெறுகின்றது.

அதி தீவிரச் செயல்பாடு கொண்ட நாடிகள் ஆயிரத்து எட்டும் சரீரத்தில் தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பத்துத் தளைகள் கிளைத்துள்ள சுவாசத்தின் முக்கியக் கேந்திரத்தில் செயல்படும் நாடி ஒன்றும் கிளைத்துச் செல்லும் அந்த இடத்தில் வட்டமிட்டுச் சுழன்றே செல்கின்றன.

பச்சை வண்ண ஒளி காட்டும் பத்துத் தளைகள் கிளைத்தது போல் காணப்படும் தொப்புள் கொடி பஞ்ச பூத சரீரத் தத்துவத்தில் நீரமில சக்தி கொண்டது.

அண்டத்தையே பிண்டத்தில் கண்ட ஆத்ம ஞானிகள் நல்லெண்ணச் சுவாசம் கொண்டு இந்தச் சரீர கதியின் செயல்பாட்டைக் கொண்டே பரவெளியில் படர்ந்துள்ள பரமாத்மாவை உணர்ந்து தெளிந்தனர்.

பஞ்ச பூதத் தத்துவபடி (ஆகாயம் நீர் காற்று அக்கினி மண்)
1.”ஆகாயம்…” என்பதே கண்டம் என்றிட்ட சரீரத்தில் உள்ள தொண்டைப் பகுதியும்
2.அங்கு செயல்படும் நாடிகள் தொண்டையின் குழிப்பகுதியில் பதினாறு தலையுள்ள கிளைகள் போல் ஓடுவதும்
3.ஆகாயத்தின் மேகத்தின் வண்ணம் போலத் தோன்றி மிகுந்த ஒளி போல் விளங்குவதையும்
3.அந்த நாடிகளே ஜீவ பிம்பச் சரீரத்தில் சுவாசத்தின் தன்மைக்குச் செயல்படும் நாடிகள் என்றும்
4.பதினாறு தலையுள்ள அந்த நாடிகள் ஒன்றாக இணைந்து சர்ப்பத்தின் அசைவைப் போல் தெளிவாக உருவம் காட்டி
5.”பஞ்ச பூதத் தத்துவத்தில் நீரமில சக்தி…” செயல்படும் தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பத்துத் தலை அமைப்பாக உள்ள பச்சை வண்ண நாடியை
6.சர்ப்பம் வட்டமிட்டுச் சுருண்டு கிடக்கும் அமைப்பாக அமைத்துக் கொண்டுள்ளன.

உடலில் இருதயம் அமைந்துள்ள இடத்திலுள்ள மற்றொரு நாடி “பஞ்சபூதத் தத்துவத்தில் காற்றமிலச் செயல்பாடாக…” இயற்கை கதிச் செயலாக தலை சாய்த்த மலராகத் தோற்றம் காட்டுகிறது.

பன்னிரெண்டு தலைகளாக நிலைத்திட்ட அந்த நாடி வயிற்றில் தொப்புள் பகுதி நாடியைச் சுற்றி இரைப்பையில் போடப்படும் உணவுகளைச் செரிக்கச் செய்யும் கருவியாகச் செயல்படுகின்றது.

தொப்புள் பகுதியைச் சுற்றி வட்டமிடும் மற்றொரு நாடி
1.“பஞ்ச பூதத் தத்துவத்தில் அக்கினிக் கேந்திரமாக…”
2.ஆண் பெண் குறி என்ற மர்ம ஸ்தானத்தில் ஆறு தலை போல் கிளைத்து
3.உயிர் உற்பத்தி ஸ்தானமாகச் சரீரத்தில் செயல்படுகின்றது.

“பஞ்ச பூதத் தத்துவத்தில் மண்ணமிலத் தன்மையாக…” மற்றொரு நாடி நான்கு தலைகளுடன் கூடி மலவாயில் என்ற மூலத்தில் தொடங்கி தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பச்சை வண்ண நாடியைச் சுற்றிச் செல்கின்றன.

இந்தப் பஞ்ச பூத அமைப்புகள் அனைத்தையும் செயல் நடத்திடும் “கட்டளைக் கேந்திரம்…” (உயிர்) சிரசின் நெற்றிப் பகுதியில் உள்ளது.

சூரிய சந்திர அக்கினி என்ற மூன்று நாடியாகத் தொடங்கி… ஆகாயம் என்ற கண்டப் பகுதி… காற்று என்ற இருதயப் பகுதி… நீர் என்ற வயிற்றுப் பகுதி… அக்கினி என்ற குறிப் பகுதி… மண் என்ற மூலப் பகுதி… இவை அனைத்தையும் இணைத்துக் கொண்டு அந்தக் கட்டளைக் கேந்திரம் செயல்படுகிறது.

அதே சமயத்தில் சிரசின் உச்சிப் பகுதியில்
1.ஆயிரம் தலையுள்ள நாடிகள் ஒன்றாக இணைந்த அந்த இடத்தை
2.நீல வண்ண ஆத்மாவின் ஜோதி தத்துவமாகக் காட்டினான் அன்றைய ஞானி.

அதை எல்லாம் காட்டியிருந்தாலும் இன்றைய உலகோதய நடைமுறை வாழ்க்கைச் செயலில் பரபரப்பான எண்ணச் செயலில் மனிதர்களின் சுவாசத்தின் கதி என்பது…
1.ஒரு நாளில் இலட்சக்கணக்கான மூச்சலைகளாகச் சுவாசத்தின் கனமாகச் சுவாசத்தில் ஓடும் பொழுது
2.பல வகையான எண்ணங்கள் மோதிடும் செயல்பாட்டில்
3.சக்தி வலுவிழந்து விடுகின்ற நிலையே இன்று அதிகம் உள்ளது.

மூச்சையும் காற்றையும் பற்றிச் சிந்திப்பாரும் இல்லை. அதைப் பற்றி அறிய விரும்புவாரும் இல்லை… அதனின் இரகசியத்தை அறிய முயற்சிப்போரும் இல்லை…!

காற்று நூல்…! என்ற வழி வகையில் பஞ்ச பூதங்களாக அமைவு காட்டிய இடங்களில் செயல்படும் நாடிகளில் “சுவாசகதி…” ஓடுவதைத் தியான வழி கொண்டு கண்டு அன்றே தெளிந்தார்கள் சித்தர்களும் ஞானிகளும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் “வான இயல் புவிஇயல் உயிரியல்” அனைத்தையும் அறிந்தவன்.

1.அகஸ்தியன் தனக்குள் பேரண்ட இயக்க உணர்வின் தன்மையை எப்படிக் கற்றான்…?
2.இந்த உணர்வின் ஈர்ப்புத் தன்மை அவன் உடலிலே எப்படி வந்தது…? என்ற நிலையை எல்லோரும் அறிய முடியும்.

அவன் நட்சத்திரங்களின் இயக்கங்களையும் கோள்களின் இயக்கங்களையும் தன்னில் அறிந்தவன். வான இயல் தத்துவம் புவிஇயலின் நிலைகளாக எவ்வாறு மாறுகின்றது…? என்பதையும் அறிந்து கொண்டான்.

விண்ணுலக ஆற்றல் அது புவியியலுக்குள் வந்து அது கலக்கப்படும் பொழுது “தாவர இனங்களாக..” புவியியலாக எப்படி மாறுகின்றது…? என்பதையும் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.

இவ்வாறு அவன் தனக்குள் அறிந்த “உணர்வின் எண்ண அலைகளை” இன்று நீங்களும் பார்க்கலாம்… உணர முடியும்.

ஏனென்றால் இதெல்லாம் ஆரம்பக் காலங்களில் அவருக்குள் விளைந்த உணர்வின் தன்மை அது வெளியில் படர்ந்திருப்பதை நாம் நுகர முடியும்.

இன்று நாம் ரேடியோக்களிலும் டி.விகளிலும் நாம் எப்படி ஒலி ஒளியைக் காணுகின்றோம்…?

1.காந்த ஈர்ப்பு கொண்ட நாடாக்களில் இயந்திரத்தின் மூலம் ஒலி ஒளியாக அது பதிவு செய்து
2.அதற்குண்டான சாதனங்களை வைத்து ஒலி அலைகளாக அனுப்பப்படும் பொழுது
3.சூரியனின் காந்தப் புலன் கவர்ந்து அலைகளாகப் படர்கின்றது.

பின்… நாம் அதே அலைவரிசையில் வைக்கப்படும் பொழுது அதனின் தொடர் கொண்டு இதைக் கவர்ந்து உருவங்களைப் பார்க்கின்றோம். ரேடியோ டி.விக்களில் பாடல்களை நாம் கேட்கின்றோம். பல உருவங்களையும் நாம் காணுகின்றோம்.

இதைப் போலத்தான் அன்று வாழ்ந்த அந்த மெய்ஞானிகள் வெளிப்படுத்திய உணர்வுகள் இன்றும் இங்கே படர்ந்துள்ளது. சூரியனின் காந்தப் புலனறிவுகள் அதைக் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.

நாம் அதைக் கவரும் தன்மை வரப்படும் பொழுது அந்த அருள் ஞானியின் உணர்வுகளைப் பார்க்கும் திறனும் நமக்குள் வருகின்றது.

நமக்குள் “அருள் ஞானத்தின் அடர்த்தியின் வளர்ச்சி…” எவ்வளவு வருகின்றதோ அதன் தொடர் கொண்டு இந்த உணர்வின் வலிமை கொண்டு இந்தக் “காற்றிலே மிதந்திருக்கக்கூடிய… மெய்ஞானிகளின் உணர்வலைகள” நாம் அனைவருமே எளிதில் பெற முடியும்.

நீங்கள் அந்த மெய்ஞானிகளின் ஆற்றல்களைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது.

ஏனென்றால் ஒவ்வொரு தன்மையும் நமக்குள் எது பதிவாகின்றதோ அந்தப் பதிவின் தன்மை எண்ணங்கள் வரப்படும் பொழுதுதான் அதை நுகரும் ஆற்றல் வருகின்றது.

1.“ஒருவன் தீமை செய்தான்” என்று நாம் பதிவு செய்து கொண்டால்
2.நம் உடல் சோர்வடையப்படும் பொழுது அந்தத் தீமை செய்தோனின் நினைவு வருகின்றது.
3அப்பொழுது அவனை எண்ணப்படும் பொழுது அந்த உணர்வுகள் வந்து
4.நம்மையறியாமலே நம் உடலுக்குள் நடுக்கமும் பல தீமைகளும் உருவாகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீண்டிட வேண்டும்.

அதைப் போன்றுதான் அகஸ்தியமாமகரிஷியைப் பற்றி உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். உங்களுக்குள் பதிவாக்கிய இந்த நினைவு கொண்டு நீங்கள் எண்ணினால் “உங்கள் நினைவாற்றல்” அந்த அகஸ்தியன் பால் செல்லும்.

அதன் மூலம் அகஸ்தியர் தனக்குள் கண்டுணர்ந்த உணர்வுகளையும் விண்ணை நோக்கி எடுத்த அந்த துருவத்தின் ஆற்றலையும் நீங்கள் பெற முடியும்.

அகஸ்தியன் துருவ மகரிஷியான பின் அவரில் விளைந்த உணர்வுகளும் இங்கே பரவியுள்ளதை “இதை வரிசைப்படுத்தி” உங்களில் இதை நுகரும் ஆற்றல் பெறச் செய்வதற்குத்தான் உபதேசிக்கின்றோம்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியர் “அவரின் பாதம் பட்ட இடங்களில்… அவரின் ஆற்றல்கள்… இங்கே (தமிழ் நாட்டில்) தரையிலும் பதிவாகியுள்ளது…” அவரின் ஈர்ப்பு வட்டத்திற்குள் அவருடைய அருள் உணர்வுகள் இங்கே சுழன்று கொண்டுள்ளது.

“அதைப் பெற்று” அந்த அகஸ்தியனைப் போன்று உலகைக் காக்கும் மெய் ஞானியாக அருள் மகரிஷியாக விண்ணிலே என்றுமே அழியா ஒளிச் சரீரம் பெற்று ஏகாந்தமாக வாழலாம்.

தென்னாடுடைய சிவனே போற்றி…
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!

மனிதன் ஒருவன் தான் என்றுமே அழியாத நிலை பெற முடியும்

 

மூதாதையரின் உணர்வுகளை அதிகமாகப் பதிவாக்கி வைத்திருந்தால் அவருடைய உணர்வு நமக்குள் அதிகமானால்… உடலை விட்டு அவர்கள் சென்ற பின் இந்த ஆன்மாக்கள் நம் உடலுக்குள் வந்துவிடும்.

எந்தெந்த நோய்களை அவர் பெற்றார்களோ அந்த நோய்களும் நமக்குள் உருவாக்கப்பட்டு நமக்குள் வேதனை வெறுப்பு என்ற நிலையே வரும்.

இப்படி… இதற்கு முன் நாம் செய்யத் தவறிய உணர்வுகள் மூதாதையரின் உயிரான்மா அந்த உயிரணுக்கள் அனைத்தும் நம் உடலில் உண்டு.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தியானத்தின் மூலம் வலுவாக எடுத்துக் கொண்ட பின்
2.அவருடைய (முன்னோர்) உணர்வுகள் நமக்குள் இருப்பதால் அதன் துணை கொண்டு
3.அந்தச் சூட்சம சரீரங்களைச் சப்தரிஷி மண்டலத்தில் நாம் இணையச் செய்ய முடியும்.

இந்த உடலில் எத்தனை கடுமையாக நோயினால் வேதனைப்பட்டனரோ அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் செலுத்தும் பொழுது அந்த சப்தரிஷி மண்டலத்தில் ஊடுருவி அங்கே நிலை கொள்ளும்.

பின் இந்த உடல் பெற்ற நஞ்சுகள் அனைத்தையும் அங்கே கரைத்து விட்டு துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் மூதாதையரின் உயிரான்மாக்கள் வாழத் தொடங்கும்.

இப்படி அவர்கள் வளர்ந்தால் அடுத்து அவர்களுக்குப் பிறவி இல்லை. மனிதன் ஒருவன் தான் இதை செய்ய முடியும்.

நம் மூதாதையர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெற்ற நிலைகள் கரைந்து விட்டால் அழியா ஒளிச் சரீரம் பெறுகின்றார்கள்.
1.துருவ நட்சத்திரம் விஷத்தை முறிக்கும் உணர்வை ஒளியாகக் கொடுக்கும்
2.அந்த உணர்வலைகளை உணவாக எடுத்து வாழும் சக்தி பெறுகின்றார்கள்

சூரியன் ஒரு காலம் அழியலாம். ஆனால் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும் எக்காலத்திலும் அழியாது.
1.அகண்ட அண்டத்தில் உள்ள எத்தனையோ சூரியக் குடும்பங்களும் அழியலாம்
2.ஆனால் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும் அழிவதே இல்லை.

நமது பிரபஞ்சத்தில் இருப்பது போல ஒவ்வொரு சூரிய குடும்பத்திலும் மனிதர்கள் வாழ்ந்து முழுமை அடைந்த பின் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் அமைந்துள்ளார்கள்.
1.சூரியக் குடும்பங்கள் அழிந்தாலும்
2.அந்த ஒளிச் சரீரம் பெற்ற உயிராத்மாக்கள் என்றுமே அழியாது.
3.உயிர் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக ஆனபின்
4.மனிதன் ஒருவன் தான் இந்த அழியாத நிலை பெற முடியும்.

தீமைகளை நீக்கிப் பேரின்பம் என்ற நிலைகளில் என்றைக்குமே பேரானந்த நிலையில் வாழ முடியும். ஆகவே உணர்வை ஒளியாக மாற்றுவது தான் மனிதனின் கடைசி நிலை.

அதைத்தான் இராமேஸ்வரம் என்றும்… பல கோடிச் சரீரங்களில் எடுத்துக் கொண்ட உணர்வு கோடிக்கரை என்றும்… மனிதனுக்குப் பின் தீமைகளை நீக்கியது தனுஷ்கோடி என்றும் காட்டினார்கள்.

நமது வாழ்க்கையில் சந்திக்கும் தீமைகள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செலுத்தி அவ்வப்பொழுது அதைச் செயலற்றதாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுப்பெறச் செய்து இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைவதே மனிதனின் கடைசி நிலை.

இதையெல்லாம் மக்களுக்கு உணர்த்துவதற்குத் தான் காவியத் தொகுப்புகளாக அமைத்து அந்த உண்மைகளை நாம் பெறும்படி செய்தனர் ஞானிகள்.

ஈஸ்வரபட்டனின் வாழ்த்து

 

பிண்டத்தைக் (உடல்) கொண்டே அண்டத்தையும் வான இயல் தொடர்பில் எல்லாம் அண்ட சராசரங்களையும் தன் ஞான விழிப் பார்வை கொண்டு அறிந்து உலகினுக்கு ஈந்த மகா மகான்களும் மகா மகரிஷிகளும் எத்தனையோ பேர் உண்டு.

எதைக் கொண்டு அதை எல்லாம் அவர்கள் உணர்ந்தார்கள்…?

இந்த ஜீவ பிம்ப சரீரத்தில் ஒலி ஒளி மணம் சுவை உணர்வு ஸ்பரிசச் செயல் மூலமாக
1.ஓசை கொண்டு கேட்டல்
2.ஒளி கொண்டு பார்த்தல்
3.சுவை கொண்டு சுவைத்தல்
4.மணம் கொண்டு நுகர்தல்
5.தேகமாகப் ஸ்பரிசித்தல் என்ற நிலைகளில்
6.ஐம்புலனின் இயக்கமாகச் செயல்படும் தன்மைகள் அனைத்தையும்
7.அறிவின் ஆற்றலால் அறிந்துணர்ந்து… தெளிந்ததை… ஆக்கபூர்வமான செயலாக
8.ஞான வழியின் தொடர்பில் பஞ்சேந்திரியங்கள் ஒளிபடும் செயலுக்கு வரைமுறை ஏற்படுத்தி
9.மனக்கட்டுப்பாடாக அவர்கள் வழி வகுத்துத் தந்ததே “சுவாச நாடிகள் பற்றிய காற்று நூல்…!”

எண்ணம் கொண்டு எடுக்கும் சுவாச அலையில் காமத்தின் அடியாக எழும் மோகமாக கீழான ஈர்ப்புச் செயலாகச் சரீரத்தின் அடிப்பகுதி இனிப்பு என்று காமச் சுவையைக் காட்டியது உலகோதய நடைமுறை வாழ்க்கையில் கீழாம் ஈர்ப்பாக உடல் தொடர்பாக இன்பம் பெறுதல் ஆகும்.

ஆனால்
1.இந்த மோகத்தை வென்ற ஞானி.. உயர் ஞான சித்திகளைப் பெற்று விட்டால்
2.அந்தக் காமச்சுவை கொண்ட மோகம் என்பது
3.“மேல் கரும்பாக… அவர்களுக்குச் சுவையற்றதாகத் தோன்றும்…!”

மண்ணினுள் வாசம் செய்யும் அந்தப் பிராணியைக் காட்டியதே மனத்தினுள்ள அந்த மோகத்தைக் காட்டவே..!

ஆண் பெண் என்ற உடல் கலப்பில் மூலாதாரத்தில் குதம் என்று பெயர் நாமப்படுத்திக் காட்டிய அந்த இடத்தில் நான்காகக் கிளைத்த அந்த நாடியானது… கால் கட்டை விரலிலிருந்து மேல் எழுந்து குறி ஸ்தானத்தில் பின்னிப் பிணையும் சூரிய சந்திர நாடிகளுடன்
1.உடல் தொடர்பால் இரண்டும் இணைந்து செயல்படும் பொழுது
2.விந்தின் செயலில் அக்கினி ஜுவாலையாகச் சூரியன் போல் பிரகாசித்து
3.அது சிற்றின்ப அறிவிற்குச் செயல்பட்டு விடுகின்றது.

ஆனால் ஒளி என்ற விந்து… சிரசின் உச்சிக்கு “நாத விந்துவாக.. மேலான அறிவாக…”
1.ஆத்ம ஞானி அதைச் சூரியப் பிரகாசமாக ஆக்கும் செயலில்
2.தன் ஆத்மாவே சிவலிங்க வடிவில் ஜோதியாகத் தெளிவுறும்.
3.இதுவே பாம்பு உள்ள இடத்தில் எலி இல்லை என்பது…!

நல்லெண்ணம் கொண்டு நல் சுவாசம் எடுத்திட வேண்டும் என்று கூறியவற்றில் தியானத்தின் வழித் தொடர்பில் தன்னை உணர்ந்து அறியும் பக்குவம் பெற்றிட வேண்டும் என்ற ஆரம்ப வழித் தொடர்பிலும்… ஆத்ம வலுவைப் பெற்றிட வேண்டும் என்ற எண்ணச் செயலிலும்… வைராக்கியச் சிந்தனையின் எண்ண வலு கொண்டே
1.உண்மையின் பாதையில் செல்லும் ஞானச் செல்வங்களே…!
2.நீங்கள் அனைவரும் இன்னும் உயரிய நிலை பெற வேண்டும் என்று
3.பேரன்பு கொண்டே ஈஸ்வரபட்டன் வாழ்த்துகின்றேன்…!

குருவை உடலோடும் ஏற்றுக் கொள்ளலாம். சூட்சம ஒளிச் சரீரம் பெற்றவர்களையும் குருவாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் குரு என்பவன் சிஷ்யனின் உண்மை ஞானம் அறியும் உயர் ஞான அறிவிற்கு “ஞானப் பால் ஊட்டுபவனாக இருக்க வேண்டும்…!”

இந்தக் கலியில்
1.சித்தர்களும்… மகரிஷிகளும்… சப்தரிஷிகளும்.. பாசம் கொண்டே தேடி வருவது
2.உண்மையான ஞான வித்துக்களைத் தான்…!

அதில் ஏன் நீங்களும் ஒருவராக இருக்கக்கூடாது…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இங்கே நம் பூமியில்…“ அகஸ்தியன் நடந்து சென்ற பாறைகளை” குருநாதர் காட்டுகின்றார்.

1.பாபநாசத்திலும்… “காவிரி” என்ற திருநகரிலும் அகஸ்தியனின் சுழற்சி வட்டங்கள் ஜாஸ்தி
2.“இமயமலையிலும்” சில பகுதிகளில் “அவர் பெரும்பகுதி சுழன்ற இடங்கள் உண்டு…” என்பதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டுகின்றார்.

“அந்தந்த இடங்களில்…” அகஸ்தியர் சுழன்று வந்த உணர்வுகள் “வேகா நிலை” என்று அழிந்திடாத நிலைகளில் இன்றும் உண்டு.

“சாகாக்கலை” என்று மந்திரங்களால் உருவாக்கப்பட்ட நிலைகள் இந்தப் பூமியிலே படர்ந்திருந்தாலும் அவைகள் எல்லாம் அழிந்துவிடுகின்றது. அதே சமயத்தில் சாகாக்கலை என்ற நிலைகளால் விஷத் தன்மைகளே படர்கின்றது என்பதைத் தெளிவாகக் காட்டினார் குருநாதர்.

வேகாக்கலை என்ற நிலையில் அந்த மகரிஷிகள் அவர்கள் பெற்ற உணர்வின் ஆற்றலையும் காட்டுகின்றார்.

எவ்வாறு உயிர் ஒளியின் துடிப்பாக இருக்கின்றதோ அதைப் போல உயிரின் உணர்வின் தன்மைகள் கொண்டு இணைக்கும் சக்தியாக நஞ்சினை அடக்கி அதே சமயம் “வைரம்… ஒளியின் சுடராக” இருப்பது போல உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றியதையும் காட்டுகின்றார் குருநாதர்.

1.வாழ்க்கையில் சந்தர்ப்பவசத்தால் நஞ்சான உணர்வுகள் நல்ல உணர்வுக்குள் கலந்தாலும்
2.அந்த ஞானிகள் “விண்ணுலக ஆற்றலை எடுத்து” அதன் மேல்… “அடுக்கடுக்காகப் பரப்பி”
3.இந்த வாழ்க்கையில் வந்த நஞ்சினை… “அதை ஒடுக்கியது எவ்வாறு…?” என்றும் காட்டுகின்றார்.

நஞ்சினை ஒடுக்கிய உணர்வின் தன்மையை வளர்த்து அந்த உணர்வின் ஒளி அலையாகத் தன் உயிருடன் அது ஒன்றி இன்றும் துருவத்தைக் கண்டுணர்ந்து… துருவம் நுகரும் நஞ்சினைத் தனக்குள் உணவாக உட்கொண்டு அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் பரப்பி அதனின் துணை கொண்டு “ஒளியின் சிகரமாக…” இன்று அகஸ்தியன் இருப்பதையும் காட்டுகின்றார்.

அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்தறிந்து துருவ உணர்வினைத் தனக்குள் ஒளியாக மாற்றி “துருவ மகரிஷியாக” ஆனான்.

எந்தத் துருவத்தின் நிலையை அவன் ஈர்ப்பாக எடுத்தானோ பூமிக்குள் வரும் இந்த நஞ்சினைத் தனக்குள் மாற்றியமைத்து துருவ மகரிஷி “துருவ நட்சத்திரமாக… இன்றும் சுழன்று கொண்டுள்ளான்” என்பதைக் குருநாதர் உணர்த்திக் காட்டுகின்றார்.

அகஸ்தியர் உணர்த்திய அந்த உணர்வின் வழி கொண்டு அவனைப் பின்பற்றியவர்கள் இன்று விண்ணுலகில் “சப்தரிஷி மண்டலம்…!” அவருடைய ஈர்ப்பு வட்டத்தில் ஒளியாக எவ்வாறு சுழன்று கொண்டிருக்கின்றார்கள்…? என்ற நிலையையும் காட்டுகின்றார்.

1.மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் முழுமையான உணர்வின் தன்மை பெறச் செய்து
2.“முழுமையாக்கிய உணர்வின் சத்தை” அது எவ்வாறு அங்கே தனது ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்திற்குள்
3.அகஸ்தியர் அழைத்துச் செல்கிறார் என்று தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

உடலுடன் அல்ல… “உயிரோடு ஒன்றி வாழும்” உணர்வினை வளர்த்தால் அடுத்து நமக்குப் பிறவி இல்லை

 

மனித உடலில் இரத்தக் கொதிப்பு இருக்கிறது என்றால் மருத்துவ ரீதியிலே இரத்தத்திலே ஆசிட் ஊற்றிய பின் உடலுக்குள் எந்த அளவு நோய் இருக்கிறது என்பதை அது காட்டுகின்றது.

அதைப் போல துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் இரத்தநாளங்களில் கலக்கச் செய்தால்
1.நம் உடலில் கோபத்தின் உணர்வுகள் அது எந்த அளவு இருக்கின்றது…? அதை எப்படிச் சமாதானப்படுத்த வேண்டும் என்று தெளிவாக்குகின்றது.
2.வெறுப்பு என்ற உணர்வு வரும் பொழுது துருவ நட்சத்திரத்தை எண்ணினால் அந்தக் கலக்க உணர்வை மாற்றிவிட்டு
3.அதை எவ்வாறு சீர்படுத்த வேண்டும் என்று நமக்குத் தெரிய வருகின்றது… தீமையிலிருந்து நம்மை விடுவிக்கச் செய்கின்றது.
4.அதை நாம் எப்படிச் செயல்படுத்துவது என்ற உண்மையின் உணர்வை நாம் அறிய முடியும்.

தியானத்தைக் கடைப்பிடிப்போர் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெருக்கினால் வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்கி அருள் உணர்வுகளைப் பெருக்கிச் சிந்தித்து செயல்படும் ஆற்றலைப் பெற முடியும். இந்த வாழ்க்கையில் ஏகாந்த நிலை பெற முடியும்.

ஆகவே எத்தகைய தீமைகள் நம் மீது வந்து மோதினாலும் அதை அகற்றப் பழகுதல் வேண்டும். அருள் உணர்வுகளைப் பெருக்க வேண்டும்… துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக நாம் அமைய வேண்டும்

ஏனென்றால் ஆசையின் நிமித்தம் கொண்டு நமக்குள் பெருக்கிய உணர்வுகள் ஏராளம் ஏராளம் உண்டு. அந்த உணர்வை அடக்க ஒவ்வொரு நிமிடத்திலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுத்துப் பழக வேண்டும்.

இதைத் தான் இராமாயணத்தில் கோடிக்கரை என்று காட்டுகின்றார்கள்.

அதாவது… பல உடல்களைக் கொன்று தின்று அதன் உணர்வின் தன்மை கொண்டு எத்தனையோ உடல்களை மாற்றிக் கடைசி நிலையான கோடிக்கரை என்ற இந்த மனித சரீரத்தைப் பெற்றிருக்கின்றோம்.

இருந்தாலும் தீமை என்ற உணர்வு வரப்படும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அதை அடக்க வேண்டும்.

நம் உடலில் கோடிக்கணக்கான உணர்வுகள் உண்டு. ஒவ்வொன்றும் அது அது தன் உணவுக்காக உந்தும்.

அப்படி உந்தும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அவைகளைச் சமப்படுத்தி ஒளியாக மாற்றி அது அனைத்தையும் உயிருடன் ஒன்றாக்கப்படும் பொழுது தனுசுக்கோடி.

இதைத் தெளிவாக்குவதற்காக இராமன் நேரமாகிவிட்டது என்று இராமேஸ்வரத்தில் மணலைக் குவித்துச் சிவலிங்கமாக்கி அதைப் பூஜிக்கத் தொடங்குகின்றான் என்று காட்டுகின்றார்கள்.

இந்த உடலில் நாம் இருக்கப்படும் பொழுது…
1.உணர்வின் தன்மையை நமக்குள் இணைந்து வாழும் தன்மையாக
2.உடலுடன் அல்ல… “உயிரோடு ஒன்றி வாழும் உணர்வின் தன்மையை நாம் சேர்ப்பித்தால்…”
3.அடுத்து நமக்குப் பிறவி இல்லை.

இந்த உடலில் குறுகிய காலம் தான் நாம் வாழ்கின்றோம் என்றாலும் அந்தக் குறுகிய காலத்திற்குள் நாம் எதைச் சேர்க்க வேண்டும்…? என்று சற்று சிந்திக்க வேண்டும்.

1.சந்தர்ப்பத்தால் வரும் தீமையான உணர்வுகள் நம்மை அடிமை ஆக்காதபடி
2.அருள் உணர்வுகளை நமக்குள் கூட்டி அந்தத் தீமைகளை நாம் அடிமையாக்கி
3.தீமை நம்மைக் கவர்ந்திடாது விண் செல்லும் நிலை தான் தனுசுக்கோடி.

காரணப்பெயர் வைத்து இராமாயணத்தில் காட்டியுள்ளார்கள் எண்ணத்தின் தன்மை கொண்டு நாம் பிறவி இல்லா நிலை அடையும் வழிகளை.

சுவாசமும்… நாடியும்…

 

மனித சரீரத்தில் செயல்படும் சுவாசத்தையே சூரிய சந்திர அக்கினி என்றும் மும்மலங்கள் என்றும்… முக்குணங்கள் என்றும்… உயிராத்மா பிறப்பபிற்கு வரும் தொடர்பில் “மும்மல நீக்கம் பெற வேண்டியதன்…” முக்கியத்துவத்தையும் காட்டினார்கள் ஞானிகள்.

உலகோதய வாழ்க்கை நடைமுறையில் மும்மலங்களின் செயல்பாடே கீழாம் அறிவு என்றும் இந்த முக்குணங்களை அறிந்து தெளிந்து தியான வழித் தொடர்பில் நீல வண்ண ஆத்மாவாகச் சக்தி பெற்றுப் பேரானந்தப் பெரு வாழ்வு பெற வேண்டும் என்று உணர்த்தினார்கள்

சரீரத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாடிகள் எழுபத்தி இரண்டாயிரத்திலும் சகலத்தையும் ஆட்டுவிக்கும் நாடிகளான
1.பொன் போல் நிறம் காட்டிய சூரியன் என்ற வலது நாசித் துவாரமும்
2.சந்திரகலை என்ற இடது நாசித் துவாரமும்
3.அக்கினி என்ற மறைமுக நாடியையும் அறிந்து கொண்ட ஞானிகள்
4.அண்ட சராசரங்களின் செயலை அதாவது அந்த ஆதிசக்தியின் சூட்சமத்தையே
5.மனித உடலான ஜீவ பிரம்ம சரீரத்திலேயே கண்டனர் ஞானிகள்.

உயிராத்மா பிறவி எடுத்து எடுத்துத் தான் எடுத்துக் கொண்ட சரீரம் கடைசியில் மரணத்தின் பிடியில் ஆட்படுவதையே அன்றைய சித்தன் “காளியின் உருவமாக…!” அமைத்துக் காட்டினான்.

1.ஆத்ம சக்தியை வலுக்கூட்டிக் கொள்ளாத ஜீவன்கள்
2.சரீரத்தில் மறைந்துள்ள சக்தியைத் தன் உயிராத்ம வலுவிற்கு ஈர்த்துச் செயல் கொள்ளாத ஜீவன்கள்
3.உலகோதயப் பிடிப்பில் நாத விந்துச் சக்தியின் வலுவை இழந்து
4.எண்ணிறந்த பிறவிகள் எடுத்து மீண்டும் மீண்டும் அவஸ்தைப்படுவதையே
5.காளி என்ற உருவில் பயமுறுத்தும் தன்மைக்குச் சித்தர்களால் காட்டப்பட்டது.

அதே சமயத்தில் வினைக்கு நாயகன் “விநாயகா…” என்று உயிரை முதன்மைப்படுத்தி உருவகமாகவும் காட்டியுள்ளார்கள். பின்னிப் பிணைந்த நிலையில்
1.இரு நாகர்கள் எழுந்து நின்று ஒன்றை ஒன்று பார்ப்பது போல் உருவமும்
2.இரண்டிற்கும் நடு மையத்தில் சிவலிங்கமும்
3.விநாயக உருவத்திற்கு எதிர்புறம் மூஷிகமும் காட்டினார்கள்.

மனித உடல் பெற்ற பின் தன்னைத் தான் உணர்ந்து மேலான நிலை பெற வேண்டி கீழான நிலையை விலக்கித் தன் உயிராத்மாவை ஜோதி நிலை பெறச் செய்ய ஜோதித் தத்துவமாக உயிரும் ஆத்மாவும் ஒன்றாகக் கலந்து உயர் நிலை பெறவே அனைத்துமே போதனை ஆக்கப்பட்டன.

இந்த மனித சமுதாயம் நல் நிலை பெறவேண்டும் என்று புகட்டப்பட்ட பாட நிலைகளில் எத்தனை உயிராத்மாக்கள் உண்மையின் பொருளை உணர்ந்து கொண்டனர்…?
1.எண்ணத்தைத் தெளிந்து ஒவ்வொரு உயிராத்மாவும்
2.சுயப்பிரகாசமாகச் (ஒளிச் சரீரம்) சக்தி பெற்றிடவே இந்தப் பாடங்கள்…!

மூவுலகம் என்ற சுவாசத்தின் தன்மைகளை அறிந்து வான இயலாகக் காலத்தைக் கணித்த ஞானி சரீர பிம்பத்தைக் கொண்டே உயர் ஞானம் சித்திக்கும் வழியையும் காட்டினான்.

1.வலது சுவாச நாடி வலது கால் பெருவிரல் தொடங்கி மேல் எழுவதைப் போல்
2.இடது சுவாச நாடி இடது கால் பெருவிரலிலிருந்து மேல் கிளம்பி
3.கபாலத்தை நோக்கிச் சிரசின் உச்சிக்குச் செல்லும் பொழுது
4.அந்த இரண்டு நாடிகளும் உடலின் குதம் என்ற மூலத்தில் எழும் அக்கினி மண்டலத்தில் பின்னிப் பிணைந்து பிரிந்து
5.மேலெழுந்து அதற்கும் மேல் உள்ள மர்ம ஸ்தானத்தில் சந்தித்து இரண்டு நாடிகளும் பின்னிப் பிணைந்து
6.மேலெழுந்து இரண்டாகப் பிரிந்து இடுப்பின் பகுதியை வட்டமிட்டு சரீரத்தின் வயிற்றுப் பகுதியில் நாபி என்ற இடத்தில் மீண்டும் பின்னிப் பிணைந்து
7.மேல் எழுந்து பிரிந்து மார்புப் பகுதியை வட்டமிட்டு
8.மீண்டும் சிரசின் உச்சிப் பகுதிக்கும் உள் நாக்கின் மேல் பகுதிக்கும் நடு மையத்தில் நெற்றிப் பொட்டின் உள்ளிடத்தில் பின்னிப் பிணைந்து
9.சிரசின் உச்சியில் அந்த இரண்டு நாடிகளும் எதிர் எதிராகச் சந்தித்துக் கொள்வதைக் காட்டுவதற்கே
10.விநாயகர் அருகே நாகர்களைக் காட்டியது…!

ஒவ்வொருவரும் ஆத்ம லிங்க ஜோதித் தத்துவத்தை உணர்ந்து வலுப் பெற்றிடுங்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு சரீரத்திலும் நாம் நுகர்ந்த உணர்வுகள் பாதுகாப்பான உணர்வுகள் சேர்த்துச் சேர்த்து வளர்ந்து வந்தோம்.

அப்படி எடுத்துக் கொண்ட பாதுகாக்கும் உணர்ச்சிக்கொப்ப இந்த உடல்களை அமைத்துக் கொடுத்தது நம் உயிர் தான்,

அந்த உடல்களை அமைத்து எல்லாவற்றையும் பாதுகாக்கும்
1.மனித உருவை உருவாக்கிய உயிருக்கு உரிய மரியாதையை நாம் செலுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்.
2.எல்லாவற்றையும் அறியும் உணர்வுகளும்.. தீமையை அகற்றும் உணர்வுகளும்.. தீமையை அகற்றும் சக்திகளும் தந்த..
3.“நம் உயிரான ஈசனை” நாம் மதித்தல் வேண்டும்.

அவனால் உருவாக்கப்பட்டு மனித உடலாக உருவாக்கியபின் “இந்த மனித உடலை.. எனது..!” என்று சொந்தம் கொண்டாட யாருக்குமே உரிமை கிடையாது.

ஆக… “அவனுக்குச் சொந்தமானது தான்… இந்த உடல்”.

அவனை வைத்தே தான் நாம் வாழ்கின்றோம். “நாம் எதனை விரும்புகின்றோமோ…” அதனையே தான் செயலாக்குகின்றான் நமது உயிர் என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் உயிர் என்றுமே அழியாது. ஏனென்றால் உயிர் நட்சத்திரங்களால் உருவானது.

ஆனால் சேர்த்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப இந்த உடல்கள் தான் மாறுகின்றது. உயிர் என்றுமே மாறாதது.

இதைத் தெளிவாக அறிந்துணர்ந்த மெய் ஞானிகள் உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி “உயிர் வேறல்ல… நான் வேறல்ல…” என்ற நிலை எய்தி என்றும் பதினாறு என்ற நிலையில் “பேரொளியாக” வாழ்கின்றார்கள்.

ஆகவே அந்த மெய் ஞானிகளைப் போன்றே நாமும் உயிரை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே இருக்க வேண்டும்…?

 

மனிதன் ஆன பின் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும் அதுதான் கடைசி நிலை. அதை விடுத்து விட்டு… “சாமியைப் (ஞானகுரு) பார்த்தேன் தொழில் நனறாக நடக்க வேண்டும்…” என்று எண்ணினால் தொழில் எல்லாம் உங்களிடம் தான் இருக்கின்றது.

காரணம் அதற்குண்டான மன வலு பெற வேண்டும். மன வலிமை பெற வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும்.
1.சாமியை நம்பி வந்தேன்… தியானம் செய்தேன்…
2.“எனக்கு அது கிடைக்கவில்லை… இது கிடைக்கவில்லை…” என்று சொன்னால் உங்களை நீங்கள் நம்பவில்லை என்று தான் பொருள்.

கடலிலே ஒரு படகிலே செல்கிறோம் என்றால் அது கடந்து செல்லப்படும் பொழுது அலைகள் வந்து மோதும். அப்பொழுது அந்த அலைகள் இருந்து தப்பி நாம் அடைய வேண்டிய எல்லையை அடைய… துடுப்பை வைத்து மாற்றிக் கொள்கின்றோம்.

இதைப் போன்று தான் மனிதன் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்ற நிலை வரும் பொழுது பாச அலை வெறுப்பு அலை வேதனை அலை சங்கட இலை என்று இந்தப் பூமியில் எத்தனையோ அலைகள் நம் மீது மோதுகின்றது.

அதிலிருந்து கடந்து செல்ல வேண்டும் அல்லவா…!

ஆகவே நமது எல்லை எது…? அந்தத் துருவ நட்சத்திரம்தான் என்ற உறுதி கொண்டு அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் சென்றால் பிறவி இல்லாத நிலை அடைகின்றோம்.

ஆகவே ஒவ்வொரு நாளும் எதை எண்ண வேண்டும்…? நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்.

எல்லோருக்கும் யாம் உபதேசத்தைக் கொடுக்கின்றோம். இருந்தாலும்..
1.சாமி சொன்னார்…! நான் தியானம்தான் செய்கின்றேன் எனக்கு ஏன் இந்தக் கஷ்டம் வருகின்றது…?
2.தியானத்தைச் “செய்து கொண்டே இருக்கின்றேன் அல்லவா…” எனக்கு ஏன் நோய் வருகின்றது…” என்றால்
3.துடுப்பைக் கையிலே கொடுத்த பின் கடலிலே எல்லையை நோக்கிப் போகாதபடி “இப்படி அலைகள் வந்து கொண்டே இருக்கிறது…!” என்றால்
4.அலைகளில் மோதி எந்த உணர்வின் தன்மையோ அதில் தான் மூழ்க நேரும்.

அன்றாட மனித வாழ்க்கையில் எத்தனையோ அலைகள் மோதிக் கொண்டே தான் இருக்கின்றது. நமது எல்லை பிறவி இல்லா நிலை தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அருள் உணர்வைப் பெற வேண்டும் என்ற உணர்வை வலுப்படுத்தினால் சிந்திக்கும் ஆற்றலும் உணர்வின் வலுவும் நமக்குள் வரும்.

குருநாதர் என்னைப் பல இன்னல்களைப் படச் செய்தார்.
1.எது உன்னை என்ன செய்கின்றது…?
2.எதன் உணர்வு உனக்குள் என்ன செய்கின்றது…? என்பதை உணர்த்தினார்.

இந்தப் பச்சிலை பேசுமாடா…? என்று குருநாதர் அடிக்கடி என்னிடம் கேட்பார்.

அவர் சொன்னபடி நுகர்ந்த பின் கசப்பு என்றால் ஐய்யய்ய…! என்றும் காரமாக இருந்தால் ஸ்ஸ்… ஆ… என்பேன். அப்பொழுது எது பேசுகின்றது என்று கேட்பார்.
1.நீ பேசவில்லை…
2.உன் உயிரின் உணர்வுக்குள் அந்த உணர்வின் சத்து
3.அதில் பட்ட சுவையின் உணர்ச்சிகள் தான் உன்னை இயக்குகின்றது
4.எதன் சுவையின் உணர்வை நுகர்கின்றாயோ அந்த உணர்வின் வழியே உன்னை இயக்குகின்றது
5.அது நீ அல்ல…!
6.நுகரும் உணர்வே இயக்கமாகின்றது… அதன் உணர்வே உடலாக மாறுகின்றது…
7.அதன் வழி (தன்னை) அதை வளர்க்க அது உடலுக்குள் உருவாகின்றது.

ஆகவே தீமைகளை நீக்க நீ என்ன செய்ய வேண்டும்…?

தீமை என்ற நிலையோ… அதீத ஆசை என்ற நிலையோ… இருளான நிலைகள் வரப்படும் பொழுது அதை எல்லாம் அப்பொழுதே தவிர்த்து துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பழக வேண்டும்.

அந்தச் சந்தர்ப்பத்தில் என்ன செய்ய வேண்டும்…? என்று நம் உள்ளே வரும் உணர்வுகளுக்குத் தக்கச் சரியான உபாயத்தை அது காட்டும்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எடுத்து ஆயுள்கால மெம்பராகி அமைதிப்படுத்தி ஞானத்தின் நிலைகள் சிந்தித்து செயல்படும் நிலைகளும் பொருளறிந்து செயல்படும் தன்மை பெற வேண்டும் என்றா உண்மையின் உணர்வை அறிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து உடலுக்குள் அதைச் செலுத்திப் பழகுதல் வேண்டும்

அடிக்கடி இதைச் செய்தோம் என்றால் தங்கத்தில் திரவத்தை ஊற்றினால் செம்பு பித்தளை ஆவியாக மாறுவது போன்று நமக்குள் வரும் கலக்கமோ வேகமா ஆசையோ அனைத்தையும் அது மாற்றி அமைக்கும்.

ஏனென்றால்
1.ஆசையினால் வருவது தான் அனைத்துமே
2.ஆசையின் உணர்வுகள் தடைபட்டால் வேதனை.
3.வேதனை என்று வரும் பொழுது சிந்தனை குறைந்தால் கோபம்
4.கோபம் என்று வந்துவிட்டால் அடித்து நொறுக்கும் உணர்வாக வெறி கொண்டு தாக்கும் உணர்வு வரும்.
5.இது என்ன…? என்று உதறித் தள்ளும் உணர்வைத் தான் நமக்குள் உருவாக்கும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் வேதனை என்று வரும் பொழுது சிந்திக்கும் தன்மை இழந்து தன் உணர்வின் இயக்கத்தையே மாற்றி விடுகின்றது.

இதை போல் உலகெங்கிலும் தீவிரவாதங்கள் நுழைந்து ரேடியோ டிவி என்ற நிலையில் விஷத்தன்மை பரவி இருப்பதால் அதையெல்லாம் நாமும் பதிவாக்கி இருப்பதினால் ஒவ்வொரு சந்தர்ப்பமும் அந்தத் தீமையின் நிலைகளுக்கே நம்மை அழைத்துச் செல்கின்றது.

1.தீமைகளை நீக்கிய அருள் உணர்வை உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றேன்
2.எப்பொழுதெல்லாம் உணர்ச்சிகள் மாறுகின்றதோ… உணர்வுகள் மாறுகின்றதோ… செயல்கள் மாறுகின்றதோ… அது நமக்கே தெரிய ஆரம்பிக்கும்.

அந்த மாற்றத்தை அடக்க என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்த வேண்டும்.
1.இதன் வழி செய்தால் நமக்குள் ஏற்பட்ட கலக்க உணர்வுகளை மாற்றும்
2.நாளை எப்படி அதை வழி நடத்த வேண்டும்…? என்ற நல்ல சிந்தனை வரும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

 

நாம் இன்று எந்த உலகில் வாழ்கின்றோம்…!
1.மெய் உலகில் வாழ்கின்றோமா…?
2.பொய் (மாய) உலகில் வாழ்கின்றோமா…? என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

மெய் என்றால் “உயிர்…” அந்த உலகை அடைய வேண்டும். நம் உடலெல்லாம் பொய் உலகம். அதைப் பொய் என்றுதான் சொல்ல முடியும்.

ஏனென்றால் இன்று நாம் மனிதனாக இருக்கின்றோம். அடுத்தாற்போல் பார்த்தால் சுருங்கிப் போய்விடுகின்றது. சுருங்கிய உணர்வு கொண்டு இந்த உயிர் என்ன செய்கின்றது…? வேறு ஒரு உடலை உருவாக்கத் தொடங்கி விடுகின்றது.

ஆகவே நாம் பொய் உலகில் நாம் வாழ்கின்றோம் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

குருநாதர் அடிக்கடி சொல்வார். “ஏண்டா… பொய் உலகத்திற்குப் போகின்றாய்…? “மெய் உலகிற்குப் போடா…” என்பார்.

மெய் உலகம் என்றால் உயிரை நீ எப்படி மதித்தல் வேண்டும்…?
1.உயிர் எல்லாவற்றையும் உணர்த்துகின்றான்… உணரச் செய்கின்றான்… உணரும் வழியில் வாழச் செய்கின்றான்.
2.ஆனால் ஆறாவது அறிவால் தெரிந்து கொண்டவன் நீ… எந்த உலகிற்குச் செல்கின்றாய்…?” என்று
3.சில இக்கட்டான நேரங்களில் குருநாதர் உணர்த்திக் கேட்பார்.

சிக்கலான நிலைகள் வரும்போது நான் என்ன செய்வேன்…?

“என்ன வாழ்க்கை…? போ…! மனைவியை நோயிலிருந்து மீட்டிக் கொடுத்தார் குருநாதர். ஆனால் காட்டுக்குள் கூட்டிக் கொண்டு போய் இப்படியெல்லாம் கடுமையான தொல்லைகள் கொடுக்கிறார் என்று சொல்லி “ரொம்பவும் கஷ்டம் வரும் பொழுதெல்லாம்” என் நினைவுகள் இப்படி வரும்.

எங்கேயாவது உடலை விட்டுப் போய்விடலாம்… “தற்கொலை செய்து கொள்ளலாம்…” என்று சொல்லி இரண்டு மூன்று தடவை முயற்சி செய்தேன்.

அப்பொழுதுதான் குருநாதர் சிரிக்கின்றார்.

இந்த உலகை… என்ன என்று அறிந்தாய். உன் உயிரை… யார் என்றும் அறிந்தாய்… இந்த உடலின் நிலையையும்… அறிந்தாய். “மீண்டும் ஏண்டா பொய் உலகிற்குப் போகின்றாய்…?”

ஆக மொத்தம் இந்த வேதனையிலிருந்து தப்ப வேண்டும் என்று நீ எண்ணுகின்றாய். நீ தற்கொலை செய்து கொண்டால் இந்த உணர்வுகள் கேட்டவன் உணர்வுக்குள் தான் செல்லும்.

அவன் உடலுக்குள் பேயாகப் போய் இதையே நீ செய்வாய். அவனையும் வீழ்த்துவாய். இந்த உணர்வின் தன்மை வந்தால் இந்த உடலுக்குப் பின் என்ன ஆவாய்…?

பிறிதொன்றைக் கொன்று தின்னும் இந்த உணர்வின் தன்மை தான் உனக்குள் வரும். இன்று நீ மனிதனாக இருக்கின்றாய். அடுத்து நீ “பொய் உலகிற்கல்லவா போகின்றாய்…”

உயிரென்ற நிலை வரும் பொழுது பரிணாம வளர்ச்சியில் ஆறாவது அறிவால் தெரிந்து கொள்ளும் நிலைகளில் கார்த்திகேயா என்று “தெரிந்து கொண்டேன்…” என்ற நிலைகளில் என்று வந்தாய்.

இன்று மறுபடியும் ஏன் பொய் உலகிற்குச் செல்கிறாய்…? என்று அந்த இடத்தில் வைத்து விளக்கங்களைக் கொடுத்தார் குருநாதர்.

ஏனென்றால் பல தொல்லைகளைக் கொடுப்பார்.

நம் சகஜ வாழ்க்கையில் வியாபாரமோ மற்ற தொழிலோ எல்லாம் நன்றாகச் செய்ய வேண்டும் என்று ரொம்பவும் ஆர்வமாக இருப்போம். ஆர்வமாக இருக்கும் போது சந்தோஷமாக இருப்போம்.

அப்படிச் சந்தோஷமாக இருக்கும் பொழுது… “அதிலே சிறிது குறை வந்துவிட்டால்…” போதும். “என்ன வாழ்க்கை…?” என்ற நிலையில் நம் மனது இருண்டுவிடும்.

இதைப் போன்று இந்த உடலைக் காக்க எத்தனையோ வகைகளில் இன்று சிரமப்படுகின்றோம். அதைச் செய்வோம்.. இதைப் பேசுவோம்.. சண்டையிடுவோம். எல்லா வழிகளிலும் முயற்சி செய்வோம்.

ஆனால் “ஒரு சொல்” தாங்கவில்லை… என்று சொல்லிவிட்டு “என்ன வாழ்க்கை” என்று தற்கொலை செய்யப் போவோம்… “ஒரு சொல்லுக்காக…”

அப்பொழுது “இந்த உடலுக்காக” நாம் எதை எண்ணினோமோ அதை வளர்த்து விடுகின்றது. இந்த உடலை அழிக்க வேண்டும் என்றால் “அதன் வழியே நீ செய்…” என்றுதான் அந்த உணர்ச்சிகளை இயக்கி ஆளுகின்றது நம் உயிர்.

அதன் வழி சென்றபின் இந்த உடலை முழுமையாக நாம் வளர்ச்சியற்ற நிலைகளில் குறைக்கப்படும் பொழுது குறை உணர்வு கொண்ட விஷமான உயிரினங்களாக உயிர் நம்மை மாற்றிவிடுகின்றது என்பதனைக் குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

மெய் உலகம் என்பது உயிர். இந்த உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மை பெற்றதுதான் துருவ நட்சத்திரம். ஆகவே அந்த மெய்யை நீ அடைய வேண்டும்.

“மெய்… மெய்யாக வரும் உன் உணர்வுகள்” மெய்யை உணர்த்தும் உணர்வுகள் பெறும்போது “நீ எப்படி இருக்க வேண்டும்” என்பதனை உணர்த்துவார் குருநாதர்.

ஆகவே… கடவுளின் அவதாரம் பத்து – “கல்கி” என்ற நிலையில் நமது உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறி துருவ நட்சத்திரத்தைப் போன்று நாமெல்லாம் குரு வழியில் அழியாத நிலைகள் பெற வேண்டும்.

27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் “மின் கதிர்களுக்குண்டான ஆற்றல்”

 

உதாரணமாக இடி மின்னல் தாக்குகிறது என்றால் மரங்களில் பட்டால் கருகிவிடும்.
1.மாட்டுச் சாணங்கள் குவியலிலே இந்த மின்னல்கள் பாய்ந்தால் இந்த உணர்வின் தன்மை அதிலே பல விதமான நிலைகள் வரும்.
2.காட்டில் வாழும் மிருகங்கள் அதன் உணர்வின் தன்மை பெற்றால் வீரியத்தன்மை அடக்கி ஒளிப்பிளம்பாகக் கிடப்பதைக் காணலாம்.
3.இது அதிசயப் பொருளாகவும் இருக்கும்.

ஒரு மிருகத்தின் உணர்வுகளிலே இது படப்படும் பொழுது அது அவ்வாறு மாற்றுகின்றது. மிருகத்தின் உணர்வை அடக்கும் உணர்வுகள் இங்கே வரப்படும் போது மின் கதிர்களையும் அடக்கும் உணர்வுகளாகப் பரவி அதைச் சுவாசிக்கும் தன்மையும் வருகின்றது.

அது போல் தாய் கருவிலே விஷத்தின் தன்மை இருந்ததால் அதை அடக்கி அந்த உணர்வின் (மின்னல்கள்) உணர்ச்சியை மாற்றும் தன்மை வருகிறது. 10 மாதங்கள் தாய் கருவிலே அகஸ்தியன் “இந்தச் சக்தியை…” பெற்றுத் தான் பிறக்கின்றான்.

அவன் பிறந்த பின் தரையிலே மல்லாந்து படுத்துக் கிடக்கும் பொழுது வானை உற்றுப் பார்த்து
1.சூரியனால் விரிவடையும் நிலையும்
2.பல மின்னல்கள் தாக்குவதை உற்றுப் பார்ப்பதும்
3.அதன் உணர்வுகள் இவனுக்குள் அடங்கும் நிலையும் வருகிறது.

“நட்சத்திரங்களின் இயக்கத்தால் உயிர் எப்படி ஒளியானதோ” அதைப்போல (அந்த ஒளியான உணர்வின் தன்மை) உயிரைப் போலவே உணர்வின் வலுவைச் சேர்க்கின்றான்.

பல பேர் பல உயிர் என்ற நிலை இருந்தாலும்
1.“ஒரே எண்ணங்கள் கொண்டு” நாம் செயல்படுவோம் என்றால்
2.அதனுடைய வலிமையின் தன்மையே வேறு.

ஏனென்றால் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு நிலை பெற்றது தான்.
1.உயிரின் தன்மை கொண்டு நாம் அனைவரும் சேர்ந்து
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்கின்றோம் என்றால் அது மிகவும் வலுக் கூடியதாகின்றது.

உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும் அதைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்துவதற்குத் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் கால மெம்பராக உங்களை இணைக்கின்றோம் (ஞானகுரு).

உதாரணமாக… ஒரு செடிக்கு உரம் இடும் பொழுது உரத்தின் தன்மை கொண்டு அதிலே சேர்த்துக் கொண்ட உணர்வுகள் எந்தெந்த நிலை இருந்ததோ “காற்றிலிருந்து தான் அதனின் உணர்வின் சத்தை… அந்தச் செடி எடுத்து வளர்த்துக் கொள்கிறது…”

செடிக்கு உரமிடுவது போல் தான்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களுக்குள் ஒரு தடவை ஆழமாகப் பதிவாக்கி விட்டால்
2.மீண்டும் நினைவு கொள்ளும் போது அந்தச் சக்தியைக் காற்றிலிருந்து நீங்கள் எளிதில் கவர முடியும்.

அகஸ்தியன் பெற்ற உண்மையின் உணர்வுகளை அவனிட்ட மூச்சலைகள் சூரியனால் கவரப்பட்டு இந்த பரமாத்மாவில் தான் காற்றிலே கலந்துள்ளது…!

அகஸ்தியரும் அவர் மனைவியும் இரு உயிரும் ஒன்றாக இணைந்து… 27 நட்சத்திரங்களின் மின் கதிரின் இயக்கங்களை இருவருமே சேர்த்து… உயிரைப் போன்று உணர்வின் அணுக்களை ஒளியாக உருவாக்கும் தன்மை பெறுகின்றனர்…! துருவ நட்சத்திரம் அப்படி உருவானது தான்.

அந்த அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆன உணர்ச்சிகளை இப்பொழுது ஊட்டப்படும் பொழுது அவன் உடலில் விளைந்த உணர்வுகளை நீங்கள் நுகர முடியும்.

அதைச் சுவாசிக்கச் செய்து துருவ நட்சத்திரத்தின் ஒளியான அணுக்களை உங்கள் இரத்த நாளங்களில் பெறச் செய்கின்றோம்.
1.துருவ நட்சத்திரத்தைப் போன்று பேரருள் பேரொளியாக
2.நீங்கள் ஒவ்வொருவரும் ஆக வேண்டும்.

மூவுலகம்

 

ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழிலின் செயல்களை அகண்ட அண்டத்திலும் சரி… பூமிக்குள்ளும் சரி… ஒரு உயிரணுவிற்குள்ளும் சரி… படைப்பின் இயக்கங்களைப் பற்றிப் பகர்ந்திட வேண்டும் என்றால் சொல் நாமப்படுத்தித்தான் கூறிட முடியும்.

அந்தச் சொல் நாமப் பொருளின் சூட்சமத்தை அறிந்து தெளிந்திட தியான வளர்ப்பில் மனம் ஒருமைப்படும் செயலில் ஒவ்வொரு உயிராத்மாவும் உணர்ந்து அறிந்து கொள்ள முடியும்.

மூல சக்தியான ஒளி காந்தத்திற்குள் நீர் அமில சக்தியையும்
1.அதனுள் கோடானு கோடி வண்ணமிலம்
2.கோடானுகோடி குண அமிலம்
3.கோடானு கோடி மண அமிலம் என
4.முத்தொடரையும் தன்னுள் ஐக்கியம் கொண்டு “விஸ்வரூப சக்தியாகக் காட்டப்பட்டதே ஆதிசக்தி…!”

பால்வெளி சூட்சமத்தில் எங்கும் நிறைந்திருக்கும் ஆதிசக்தியின் செயல் நிகழ்வுகள் கோடானு கோடியாகக் குணங்களும்… மணங்களும்… நிறங்களுடன்.. ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு செயல்படும் செயலாக உள்ளது.

அதன் மூலம்
1.பிறிதொன்றை உருவாக்கியும்
2.ஈர்ப்பின் தொடர்பில் தன்னை வளர்ச்சிப்படுத்தியும்
3.அதே தொடர்பில் பிறிதொன்றை வளர்த்துக் கொண்டும் பரந்து செயல்படும் அந்தச் செயலை
4.மூவுலகம் என்ற சூட்சமப்படுத்திக் காட்டியதை முழுமையாக யாராலும் விளக்க முடியாது.

உதாரணமாக ஒரு உயிரணு மூன்று நட்சத்திரத்தின் சக்திகளைக் கொண்டதாக இருந்தாலும் அதில் எது வீரியமோ அதுவே உயிரின் சக்தியாகவும் மற்ற இரண்டும் குண வளர்ப்பிற்குத் துணையாகவும் இயங்குகிறது. உயிரணு தனக்குள் ஈர்த்திடும் செயல் நிலைக்கொப்ப பிறப்பிற்கும் (சரீரமாக) வருகிறது.

அதனின் இயக்கங்களையும் செயல்களையும் சித்தர்களால் பெயர் நாமப்படுத்தி விளக்கப்பட்டுள்ளது. தன்னைத்தான் உணரும் பக்குவத்தில் தன் உயிருக்குள் இயங்கும் மூல சக்திகளை தியானத்தின் மூலம் உணரலாம். உயிரை அறிந்திட மனதில் உள்ள சஞ்சலங்களை எல்லாம் அகற்றிடும் வைராக்கிய சிந்தனை வேண்டும்.

“ஆட்டுவிக்கும் சக்தி…!” என்பது கண்ணுக்குப் புலப்படாத நிலையில் வளர்ச்சி கொண்டிடும் பரவெளியின் செயலைத்தான் மூவுலகம் என்று சொன்னார்கள் மகா ஞானிகள்.
1.ஒவ்வொரு உயிரணுவும் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும் செயலுக்கும்
2.அதே தொழில் புரியும் மற்ற மற்ற நிலைகளுக்கும் நாமத்தில் வேறுபாடே தவிர செயல் அனைத்தும் ஒன்றே…!

மூவுலகம் என்பது எவை…?
1.கோடானு கோடி நிறங்கள் ஓர் உலகமாக
2.கோடானு கோடி மணங்கள் ஓர் உலகமாக
3.கோடானு கோடி குணங்கள் ஓர் உலகமாக
4.நிறம் மணம் குணம் என்றிட்ட அமிலத் தன்மைகளுடன் கலந்து வியாபித்துச் செயல்படும் நிலையில்
5.உயிரணுக்கள் சரீரம் கொண்ட பிறகு முத்தொழிலின் செயல்பாடு ஒவ்வொரு சரீரத்திலும் உண்டு.

மூவுலகம் என்றால் அதல.. சுதள… பாதாளம்…! என்ற எண்ணமா…?

இவைகள் எல்லாம் உலகிற்கு நீதியைப் புகட்டி… நற்பண்பின் வளர்ப்பில் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள… மனதின் திறனை வலுக் கொள்ளச் சொல்லப்பட்ட தத்துவங்களாக விளங்கிடல் வேண்டும்.

சிவ சக்தி என்பது… ஆண் பெண் சரீரத்திற்குள்ளும் சிவ சக்தியின் தொடர்பை அறிந்து கொள்பவன்
1.தாய்க்குகந்த சக்தி அனைத்தையும்
2.இந்த மனித சரீரப் பிண்டத்திற்குள்ளேயே (தனக்குள்) அறிந்திட முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

திட்டியவர்களைப் பதிவு செய்தால் எனக்கு இந்த மாதிரி எல்லாம் துரோகம் செய்தான் அவன் உருப்படுவானா…? என்று நீங்கள் திரும்பத் திரும்ப எண்ணுகின்றீர்கள் அல்லவா.

அதே சமயத்தில்… குழந்தை மேல் பாசமாக இருக்கும் பொழுது ஒரு மாதத்திற்கு லெட்டரோ மற்ற தகவலோ இல்லை என்றால்… “என்ன ஆனதோ..? ஏது ஆனதோ..? என்று வேதனைப்படுகின்றீர்கள்.

1.நீங்கள் இங்கே வேதனைப்படும் பொழுது அங்கே குழந்தை சிந்திக்கும் தன்மை இழந்துவிடும்.
2.ஒரு சைக்கிளிலோ மோட்டர் சைக்கிளிலோ காரிலோ சென்றால் அந்த நேரம் ஆக்சிடென்ட் ஆகும்.
3.நடந்து செல்லும் பொழுது இந்த மாதிரி எண்ணினால் மேடு பள்ளம் தெரியாமல் கீழே விழுந்துவிடுவார்கள்…
4.பாச உணர்வால் இப்படி இயக்கப்படுகின்றது.

அதே சமயம் சிந்தனை குறையும் போது நாம் என்ன செய்கிறோம்…? குழந்தையைப் பற்றிய ஒன்றும் தகவலே இல்லை என்று வேதனையாக பொழுது வீட்டில் சமையல் செய்து கொண்டிருப்பார்கள்.

குழந்தை மேல் உள்ள நினைவால் ஒரு துணியையோ மற்றதையோ வைத்துத் தூக்குவதற்குப் பதில் வெறும் கையில் எடுக்கும் பொழுது கை சுட்டுவிடும்.

கை தவறிக் கீழே போட்டு உடல் மீது சூடானவைகளை ஊற்றிக் கொள்பவர்களும் உண்டு.

குழந்தை மீது பாசமாக இருந்து குழந்தையைப் பற்றி ஒன்றும் தகவல் இல்லையே என்ற ஏக்கத்தில் நினைவெல்லாம் அங்கே இருக்கும்.

1.ஆனால்… அங்கேயும் கெடுதலாகின்றது… இங்கேயும் நினைவிழந்து சிந்தனையற்ற செயல்களைச் செய்வோம்.
2.சமையல் செய்தாலும் சரி… மற்ற எந்த வேலைகளைச் செய்தாலும் சரி… கவனமில்லாத செயல்களாகி கெடுதலான நிலையாகிவிடும்.
3.பாசத்தால் நம் உணர்வுகள் இப்படிச் சென்றால் இந்த நிலை ஆகிவிடும்.

சில குடும்பங்களில் பார்த்தால் நாங்கள் நன்றாகத் தான் இருந்தோம் ஆனால், “தொடர்ந்து இப்படியே தான் நடக்கின்றது” என்பார்கள்.

அதே போல ஒருவர் திட்டிக் கொண்டே இருக்கின்றார் என்ற எண்ணத்தைச் செலுத்தினால் போதும். “இப்படித் திட்டுகின்றாரே…” என்று மீண்டும் மீண்டும் நினைவினைச் செலுத்தினால் அங்கே புரையோடும்… அவர்கள் செயலும் கெடும்.

அதே சமயத்தில் சிந்தனை இழந்து இங்கேயும் ஒரு கணக்கைப் பார்த்தாலும் சரி… அடுப்பிலேயே ஒரு பொருளை வைத்தாலும் சரி… தவறான செய்கைகளைச் செய்ய வைத்துவிடும்.

இப்படி எல்லாம் ஆனால்.. அப்புறம் சிந்தனை எப்படிப் போகும்…?

நாசமாகப் போகின்றவர்கள்… என் மீது கண் பட்டுக் கண் பட்டு… எதைத் தொட்டாலும் எனக்கு இடைஞ்சலாகின்றது…! என்பார்கள்.

பாசத்தால் எண்ணி வேதனைப்பட்ட பின் அந்தக் குழந்தைக்கு ஆன பிற்பாடு… “என்னமோ தெரியவில்லை..! என் கெட்ட நேரம் போலிருக்கின்றது…” என்று இப்படி எண்ணுவார்கள்.

இதுவெல்லாம் எதைக் காட்டுகின்றது…?

“நாம் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட அந்த உணர்வைக் காக்க..” இந்த எண்ணங்களை மாற்றுவதும் அதன் வழி “நாம் நுகர்ந்த உணர்வை… நம் உயிர் எப்படி உருவாக்குகின்றது…?” என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம் உயிர் “அரங்கநாதன்..,” நாம் நுகரும் உணர்வு அரங்கத்திலிருந்து உணர்வுகளை அது உள்ளிருந்து நாதங்களை எழுப்புகின்றது. அந்த உணர்ச்சியின் தன்மை நமக்குள் வரும் பொழுது “ஆண்டாள்…” பெண்பாலாகக் காட்டுகின்றார்கள். அதுதான் (அந்த உணர்ச்சிகள்) நம்மை ஆளுகின்றது… ஆண்டாள்.

இந்த உயிர் பத்தாவது நிலை (கல்கி) அடைய வேண்டும் என்றால் நம் வாழ்க்கையில் வரும் நஞ்சினை நீக்கிப் பழகுதல் வேண்டும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாகி பத்தாவது நிலை அடைந்தது கல்கி. அதைப் பின்பற்றிச் சென்றவர்கள் ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றிச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலம்.

அதிலே நாம் சென்றடைய வேண்டும். அதைப் பெறச் செய்வதற்குத்தான் உபதேச வாயிலாகப் பதிவு செய்கின்றோம்.

இன்று இருக்கும் “கால மாற்றங்கள்” அனைத்துமே மனிதனால் உருவாக்கப்பட்டது தான்

 

1.அகஸ்தியன் பெற்ற பேரருளும்… இருளை அகற்றிடும் அருள் ஞானமும்…
2.அகஸ்தியன் துருவனான பின் துருவத்தின் வழி வானுலக ஆற்றலை அவன் நுகர்ந்த சக்திகளையும்
3.2000 சூரியக் குடும்பப் பிரபஞ்சங்களில் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றலை அகஸ்தியன் ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்தப் பேரருளையும்
4.நாங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று கூட்டுத் தியானங்களிந் மூலம் வலுப்படுத்துவோம்.

அதன் மூலம் அகஸ்தியன் எப்படி இந்த உலகைக் காத்தானோ… தன் தாய் தந்தையைக் காத்தானோ… அதே போல விஞ்ஞான உலகில் இன்று வரும் பேரழிவிலிருந்து எல்லோரையும் காக்கலாம்… உடலுக்குப் பின் நாம் ஒளியின் சரீரம் பெறலாம்.

விஷத்தன்மைகள் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட்டமைப்பாக இருந்து வலுவான நிலைகள் கொண்டு “நீங்கள் இடும் மூச்சலைகளால்” ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு வீட்டிலும் இதைச் செயல்படுத்தும் போது… வீட்டுக்குள்ளோ தெருவிற்குள்ளோ கிராமத்திற்குள்ளோ தீமைகள் வராதபடி… ஊரையும் வீட்டையும் உங்களையும் காக்கக்கூடிய சக்தியாக வருகின்றது.

இன்று வரக்கூடிய கால மாற்றங்கள் அனைத்துமே மனிதனால் உருவாக்கப்பட்டது தான். மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த நிலைகளிலிருந்து மீட்க அருள் ஞானிகள் உணர்வை நாம் எடுத்தே ஆக வேண்டும்.

ஞானிகள் இருளை அகற்றி ஒளியின் சரீரம் பெற்ற அருள் சக்திகளை நாம் அனைவரும் எடுத்து அந்த உணர்வை வளர்த்து
1.நம்மைக் காத்து உலகைக் காத்திடும் சக்தியாக நாம் உருவாக்குவோம்.
2.மெய் ஞானத்தின் உணர்வுகளை நமக்குள் வளர்ப்போம்.
3.இருளை அகற்றிடும் உணர்வுகளை இந்த உலகில் பரப்புவோம்.
4.விஞ்ஞான உலகில் இருள் சூழ்ந்த நிலைகளை அகற்றுவோம்
5.அருள் உணர்வுகளை நம் பூமியிலே பரப்புவோம்.

ஆகவே “மெய் ஞானத்தை உருவாக்க முடியும்…” என்று உறுதி கொண்டு நமது குருநாதர் காட்டிய வழிகளில் நாம் வாழ்வோம் என்றால் பிறவி இல்லாத நிலை அடைகின்றோம்.

நாம் இடும் மூச்சலைகளால் இந்த உலகை அருள் ஞான உலகமாக மாற்றுவோம். மதம் இனம் மொழி என்ற பேதங்களினால் தீவிரவாத உணர்வுகள் கொண்டு மனிதனையே கொன்று அழித்து ரசித்துக் கொண்டிருக்கும் நிலையிலிருந்து மனிதர்களை விடுபடச் செய்வோம்.

அவர்களால் உருவாக்கப்பட்ட விஷத்தன்மைகளை எல்லாம் இந்தக் காற்று மண்டலத்தில் இருந்து அகற்றச் செய்வோம். துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளைப் பெருக்கப் பெருக்க அது ஓடி ஒடுங்கியே விடும்.

இந்த உணர்வின் தன்மை கூட்டக் கூட்ட… காலையில் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அந்த இருளை எல்லாம் மாற்றிவிடும். இந்தப் பூமியும் புனிதமாகும்… பூமிக்குள் அருள் உணர்வுகள் பெருகும்.

குரு காட்டிய அருள் வழியில் இனி வரும் ஆண்டுகளை மகிழ்ச்சிக்குரியதாக்கி
1.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அனைவரையும் இணைந்து வாழச் செய்யும் ஆண்டாகவும்
2.பிறவில்லா நிலைபெறும் ஆண்டாகவும்
3.இருளை அகற்றிடும் ஆண்டாகவும்
4.நஞ்சினை வென்றிடும் ஆண்டாகவும் நாம் உருவாக்குவோம்.

கூட்டுத் தியானத்தின் மூலம் நாம் எடுக்கும் முயற்சிகள் இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மைகளை மாற்றி… அருள் உணர்வுகளைப் பெருக்கி… இந்த உலகில் அசுர உணர்வுகளை அகற்றிடும் சக்தியாக நாம் பெறுவோம்.

மெய் ஞானத்தை வளர்த்து அருள் ஞானத்தை வளர்க்கும் மெய் உலகை “நாம் உருவாக்குவோம்…!”

“ஒளி நிலை பெறக்கூடிய தகுதி எல்லோருக்கும் உண்டு” என்பதை உணர்த்துவதே சைவ சித்தாந்தம்

 

சைவ சித்தாந்தத்தின் உண்மை நிலை என்ன…?
1.ஒளி நிலையாக ஒளிர்வது அனைத்தும் சைவமாகவும்
2.சைவத்தை வளர்க்கும் மாற்றுத் தன்மை யாவும் அசைவமாகவும் ஆகின்றது.
3.இந்த உயிர் சைவம்…. உடலோ அசைவம்…!
4.பூமி அசைவம்… பூமி பெறும் ஒளியோ சைவம்…!

இருள் இருந்தால் தான் ஒளியைப் பாய்ச்சி உண்மையை அறிய முடியும். ஆகவே அசைவமான உணர்வைச் சைவமாக்கிடும் சித்தம் கொண்டு ஒளியின் ஒளியாக ஒளி நிலையை வளர்க்க வேண்டும். அசைவமான உடலிலிருந்து அழியா வளர் சக்தியான சைவைத்தை வளர்த்திடல் வேண்டும்.

ஜீவ பிம்ப சரீர அசைவ உணர்வினால்
1.சைவ ஆத்மாவை எண்ணத்தின் சித்தம் கொண்டு
2.சிவ சக்தி நிலை பெறச் செய்ய வேண்டும்.

அசைவமான உடலிலிருந்து தான் உயர்வான எண்ணங்களைச் சமைத்துச் சைவமான இந்த உயிராத்மாவை வளரும் நிலைக்குக் கொண்டு செல்ல முடியும்.

ஏனென்றால் ஜீவனற்ற ஆத்ம உயிர்களினால் எண்ணத்தின் சமைப்புத் தன்மைக்கு அசைவ நிலை இல்லாததினால் வளரும் நிலைக்கு வழியில்லை.
1.சமைக்கப்படுவது அனைத்தும் அசைவம்.
2.வளர்வது அனைத்தும் சைவம்.

மாறு கொண்டு சுழலும் நிலையிலிருந்து பகுத்தறியும் ஆற்றலின் சித்தத்தினால் இந்த உயிராத்மாவையே சைவ சித்தமாக்கிடல் வேண்டும்.

இந்தக் கலியான உலகில் யாம் சொல்லும் முறைப்படி தியானித்தால் அன்று சித்தர்கள் மகரிஷிகள் கண்டுணர்ந்த இயற்கையின் பேருண்மைகளை அறியலாம். அணுவுக்குள் அணு மாறுபடும் நிலைகளையும் பூமியின் உள் நிலை மற்ற கோளங்களின் செயல் முறைகளையும் அறிந்திடலாம்.

சைவத்தின் சித்தத்தால் தன் நிலை உணர்ந்து அனைத்து நிலையையும் அறியும் அந்த அருள் ஞான சக்தி மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு உயிராத்மாவிற்கும் உண்டு.

அதை உணர்த்துவதே சைவ சித்தாந்தம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள்… நாம் வேடிக்கை பார்க்கின்றோம். அதைப் பார்த்தவுடன் நமக்கும் கோபம் வருகின்றது.

ஒருவன் வலுவான நிலைகளில் அடிக்கின்றான். அடி வாங்கியவன் “ஐய்யய்யோ…” என்று அலறிக் கொண்டு செல்கிறான். “இருடா… நான் உன்னைப் பார்க்கின்றேன்..” என்று கோபமாகத் தாக்குகின்றான்.

“இரண்டையும் பார்த்தவுடன்…” சும்மா போகின்றவனை இப்படி அடிக்கின்றானே என்று நம்மையறியாமலே அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.
1.அடிபடுபவனைப் பார்த்தவுடன் பாசம் வருகின்றது
2.அடிப்பவனைப் பார்த்தவுடன் கடுமையாகின்றது.

இந்த இரண்டையும் சேர்த்து அவன் மேல் குறி வைத்து ஓடுபவனை நாம் பார்க்கப்படும் பொழுது துணிந்து போய்… “சும்மா போகிறவனை ஏனப்பா அடிக்கின்றாய்..?” என்று கேட்போம்.

ஆனால் அதே சமயத்தில் அடிப்பவன் முரட்டு ஆளாகத் தெரிந்தால்… “கேட்டால்… நம்மையும் உதைத்துவிடுவான்” என்று இந்த உணர்வுகளை எடுக்கும் பொழுது பயமான உணர்வுகளும் வரும்.

இப்படி இரண்டு நிலையும் வரும்.

ஆனால் பய உணர்வு வந்துவிட்டால் என்ன ஆகும்…? அடுத்தாற்போல் யாராவது கோபமாகப் பேசினால் “கிடு.. கிடு…” என்று நடுக்கமாகும்.

ஆக ஏன் பேசுகிறார்கள் எதற்காகப் பேசுகின்றார்கள் என்ற உணர்வு வராது. பய உணர்வுகள் வந்த பின்… ஒரு பொருளே கீழே விழுந்துவிட்டால் அந்தச் சப்தத்தால் “அதிர்வின் தன்மை ஆகி…” நம்முடைய சிந்திக்கும் நிலையை இழக்கச் செய்துவிடும்.

1.இதைப் போன்ற நிலைகள் எல்லாம் பிறிதொரு உணர்வின் இயக்கங்களாக
2.இன்னொரு உடலில் ஏற்கனவே விளைந்த உணர்வுகள் “சிவ தனுசாக” நம்மைத் தாக்குகின்றது.

அதை நாம் மாற்ற வேண்டுமல்லவா..,?

அதற்குத்தான் சக்தி வாய்ந்த நிலையை குருநாதர் எமக்குக் கொடுத்ததை உங்களிடம் உபதேச வாயிலாகப் பதிவு செய்கின்றோம்.

எப்படித் தீமைகள் வருகின்றது என்ற நிலைகளை குருநாதர் உணரச் செய்து… ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை மாற்றியமைக்கும் சக்தியைக் கொடுத்தார்.

அவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள்ளும் பதியச் செய்து உங்களை எல்லாம் “ஆயுள் கால மெம்பராக.., அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்துக் கொண்டே இருக்கின்றேன்”.

ஆக நீங்கள் அதன் வழி கொண்டு பிறவியில்லா நிலை அடைய முடியும். இது.. “விஷ்ணு தனுசு…”

எப்படிப் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் இந்த உயிர் தீமைகளை வென்றிடும் சக்தி பெற்ற மனிதனாக நம்மை உருவாக்கியதோ மனிதனான பின் நம் உணர்வுகளை ஒளியாக மாற்ற வேண்டும்.

உயிருடன் ஒன்றி ஒளியாக இருக்கும் அந்த மகா ஞானிகளின் உணர்வுகளை “அந்த ஆயுதத்தை” அடிக்கடி நாம் எடுத்துப் பழகுதல் வேண்டும்.

சண்டை போடுபவர்களைப் பார்த்தவுடன் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா.., அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

நாம் பார்த்த சண்டை போடுபவரின் உணர்வைக் கண்ணின் கருவிழி இங்கே பதிவாக்குகின்றது.
1.அடுத்து அதே கண்ணின் நினைவை நாம் துருவ நட்சத்திரத்தின் பால் கொண்டு செல்லும் பொழுது
2.அதை அடக்கி “இது மேலே வந்துவிடுகின்றது”.

வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நோயாளியைப் பார்க்கின்றோம். “அடடா… இப்படி ஆகிவிட்டதே…” என்று “வேகமாக” அந்தப் பாசம் இயக்குகின்றது.

அடுத்த கணம் “ஈஸ்வரா…” என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று இந்த நினைவினைக் கூட்டி “அந்த வேகத்தின் தன்மையைத் தணித்து” தீமையை நீக்கிடும் வீரியத்தின் தன்மையைக் கொண்டு வருதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று நுகரும் பொழுது அந்த வேதனைப்படும் உணர்வுகள் உடலுக்குள் பரவுவதற்கு முன் இதை மாற்றிவிடுகின்றோம்.

அந்த நோயாளி உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும், அவர் உடல் நலம் பெற வேண்டும் அவர் மகிழ்ச்சிக்குரிய நிலைகளாகப் பெற வேண்டும் என்று இப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்.

சண்டை போடுபவர்களைப் பார்த்தபின் நமக்குள் வெறுப்பின் உணர்வுகள் வரும்.

அந்த வெறுப்பின் உணர்வுகள் வந்தபின் நாம் ஏதாவது ஒரு காரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்யும் பொழுது சிறிது தடைபட்டால் போதும். என்ன செய்வோம்…?

உடனே அந்தப் பொருளைத் “தூக்கியெறி..!” என்ற இந்த உணர்வு தான் வரும்.

அதே மாதிரி வெறுப்பான உணர்வுகள் வரும் பொழுது வீட்டில் மனைவி சாப்பாடு எடுத்து வரச் சிறிது நேரமானால் போதும். நீ எப்பொழுது பார்த்தாலும் “இப்படித்தான் செய்து கொண்டிருக்கின்றாய்…” என்ற நிலையில் வெறுத்துப் பேசும் நிலை வந்துவிடும்.

பொறுமை என்ற நிலையை மாற்றி அதை இழக்கச் செய்துவிடும். இதையெல்லாம் மாற்றவேண்டும் அல்லவா…?

பிறவிக் கடலை நீந்திக் கரை சேர்ந்த குரு அருளைப் பெறுங்கள்… நீங்களும் கரை சேருங்கள்

 

நம் உடல் பல கோடி உணர்வுகள் சேர்த்துக் கோடிக்கரையாக வந்தது. மனித உடலின் தன்மை உருவானது – இது சிவ தனுசு.

ஆனால் வாழ்க்கையில் எப்போதெல்லாம் தீமைகள் வருகின்றதோ அந்தத் தீமைகள் உட்புகாது துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளைச் சேர்த்துச் சேர்த்து அதைத் தணித்தல் வேண்டும்.
1.இப்படித் தணித்துக் கொண்டு வந்தோம் என்றால் அது வலுப்பெறுகின்றது…
2.விஷ்ணு தனுசுவாக மாறுகின்றது.

ஒவ்வொன்றிலும் அழுக்கை நீக்கும் நிலைகளாக… நம் வாழ்க்கையில் எத்தனை விதமான உணர்வை எடுத்துக் கொண்டுள்ளமோ அது அனைத்திலும் அருள் உணர்வுகள் சேர்க்கப்பட்டுத் தீமைகளை அகற்றிடும் தன்மையாக வரும் போது தனுசுக்கோடி..!

ஆகவே உயிர் என்ற நிலைகள் வரப்படும் பொழுது நமக்குள் இருக்கும் கோடி உணர்வு உணர்வுகளையும் உயிருடன் ஒன்றிடும் போது ஒன்று…! அது தான் தனுசுக்கோடி என்று கூறுகின்றனர்.

அதாவது… நமது வாழ்க்கையில் வரும் துன்பங்கள்… சங்கடங்கள்… சலிப்புகள்… வெறுப்புகள்… பாசத்தால் கவர்ந்த பல விஷத் தன்மையான உணர்வுகள்… இவைகளை நமக்குள் விடாதபடி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு தணித்திடும் உணர்வின் தன்மையாக வரும் பொழுது “கோடி ஆகின்றது…”
2.பகைமை இல்லாத நிலையில் “ஒன்றாகின்றது…”

அதனால்தான் இராமேஸ்வரத்தில் இராமன் தனது நிலைகள் கொண்டு மணலைக் (தன் மனதை) குவித்துப் பூஜித்தான் தனுசுக்கோடி… இராமலிங்கம்…! என்று காட்டியுள்ளார்கள்.

ஆகையினால் இந்த உடலை விட்டுச் செல்வதற்கு முன் நாம் எதை எல்லாம் ஒன்றாகச் சேர்க்க வேண்டும்…?

ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது நிலை ஒளியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்டே வரப்படும் போது அதன் வழி அங்கே அழைத்துச் செல்கிறது. அடுத்து நாம் “பிறவி இல்லை” என்ற நிலையை அடைகின்றோம்.

எந்த நிலை ஆனாலும் இதன் உணர்வின் வழிப்படி நாம் செயல்படுவதே மனிதனின் கடைசி நிலை. அதை அடையச் செய்வதற்காகத் தான் அருள் வாக்காக இப்பொழுது கொடுத்துப் பதிவாக்கினோம். துருவ நட்சத்திரத்துடன் இணையும்படி செய்கின்றோம்.

குருநாதர் எனக்கு எப்படி அந்த அரும்பெரும் சக்தியைக் கொடுத்தாரோ அதே போன்று உங்களை அந்த்த் துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பராக ஆக்குகின்றோம். பிறவி இல்லா நிலை அடைய உங்களுக்குள் அந்த அருள் சக்தியைப் பதிக்கின்றோம்.

குருநாதர் எனக்கு எப்படி உபதேசித்தாரோ உங்களுக்குள் அந்த உணர்வின் ஞானத்தைப் பதித்து இந்த காற்றுக்குள் பரவி வரும் அருள் ஞானிகளின் உணர்வை நுகரச் சொல்கிறோம்.

உங்கள் வாழ்க்கையில் இருளை அகற்றி மெய் ஞானத்தின் உணர்வைப் பெற… அருள் உணர்வுகளைப் பெற… உங்களுக்குப் பிரார்த்திக்கிறேன்.

1.எனது புருவ மத்தியை எண்ணி ஈஸ்வரா… என்று எண்ணி இருங்கள்
2.உங்கள் உயிரை ஈசனாக மதியுங்கள்
3.ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது உங்கள் உயிரை நினைத்து கண்களில் (கண்களைத் திறந்து) என் புருவ மத்தியை எண்ணுங்கள்
4.குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்நேரம் வரை அந்தத் துருவ நட்சத்திரத்தின் அணைப்பிலே சென்றேன்
5.அதன் உணர்வை எனக்குள் கவர்கின்றேன்
6.எனது புருவ மத்தியில் நீங்கள் எண்ணும் பொழுது “நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செல்கின்றோம்…”

கடலிலே நீந்தும் பொழுது நீந்திக் கரை சேர்ந்த ஒருவரைப் பின்பற்றிச் சென்றால் அதன் வழி நாமும் கரை சேரலாம். இதைப் போன்று
1.பிறவிக் கடலில் நீந்திச் சென்று ஒளியான நமது குருவின் உணர்வு கொண்டு
2.அவர் காட்டிய அருள் வழியில் நீங்கள் என்னை உற்றுப் பார்க்கும் பொழுது அதை நீங்கள் காணலாம்.

அகஸ்தியன் துருவனாகி… துருவ நட்சத்திரமாக ஆன அதனின்று வெளி வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிரான ஈசனிடம் புருவ மத்தியில் ஏங்கித் தியானியுங்கள்.

குருநாதர் காட்டி அருள் வழியில்…
1.என்னுடைய நினைவுகள் கண்ணின் நினைவு உயிரின் நினைவும் நட்சத்திரத்தின் பால் செல்கின்றது
2.நீங்களும் இப்பொழுது என் உயிரைப் புருவ மத்தியில் எண்ணிப் பாருங்கள்
3.பார்த்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்.

இப்பொழுது உங்களுக்குள் அரும் பெரும் சக்தியைப் பெரும் தகுதி பெறுகின்றீர்கள்…
1.அருள் உணர்வுகளைக் கூட்டியது
2.அருள் உணர்ச்சிகளை ஈர்த்தது…!

ஆகவே அருளைப் பெறும் தகுதியை ஏற்படுத்தும் நேரத்தில் நீங்கள் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைக் கவர்ந்து உங்களுக்குள் உருவாக்குங்கள்.

உயிர் குருவைச் “சைவ சித்தமாக்க வேண்டும்”

 

ஒன்றை ஒன்று அழித்துத்தான் ஒன்று வளர்கின்றது. சைவத்திற்கு எதிர்ப்பதம் ஒன்றுண்டு. ஏனென்றால் அழியும் மாறு கொண்ட நிலை இல்லாவிட்டால் “வளர்ப்பிற்கே வழியில்லை…!”

ஜீவ ஆத்ம உடலும் ஒவ்வொரு அணு வளர்ப்பு முறையும் இரண்டும் ஒன்றாகி வளரும் தன்மையில் உடல் பிம்பங்கள் அனைத்துமே அசைவம் தான்.

1.இந்த உடல் என்ற கோளத்தில் நாம் உட்கொள்ளும் உணவும்
2.எண்ணத்தால் எடுக்கும் உணர்வும் இரண்டும் சமைக்கப்படும் பொழுது அணுத் தன்மையாக மாறுகிறது
3.அது அனைத்தும் சைவத்திற்கு எதிர் நிலை அசைவமாகின்றது.

ஆதி சக்தியின் படைப்புகள் அனைத்தும்
1.அமிலம் ஆண் சக்தியாகவும்
2.திடம் கொண்டு செயல்படும் ஜீவ சக்தி பெறுவது பெண் சக்தியாகவும்
3.சிவ சக்தி வளர்ப்பான ஆதிமூலம் (விநாயகர்) முதல் உணர்வு நிலை கொண்டு வழித் தொடர் வளர்கின்றது.

அண்ட கோளங்கள் அனைத்திலுமே – தான் எடுக்கும் அல்லது தனக்குள் சேரும் நிலைக்கொப்ப தொடரின் செயல் நிலை வளர்கின்றது. வளர்ப்பின் வளர் தன்மையில் எடுக்கக்கூடிய ஒலிக்கொப்ப ஒளித் தன்மை பெறுகின்றது.

ஒளியின் வளர்ப்பில் ஒலி ஒளி சுழற்சியில்… ஒன்றின் தொடர் கொண்டு ஒவ்வொன்றின் மோதலில் பலவாகி… தான் எடுக்கும் எண்ணத்திற்கொப்ப வழிப்படுத்தும் வளர்ச்சியில் “உயர்வு நிலை கொண்டவன் தான் மனிதன்…!”

மனித உடலுக்குள் “சைவமான எண்ணத்தை… அந்தச் சித்தத்தை வளர்க்கும் ஞானமாக… அதை வளர்க்கும் நிலைக்குச் “சைவ சித்தம்” வளர வேண்டும்.
1.சைவம் என்றால் வளர்ப்பு
2.சித்தம் என்றால் உண்மையின் உயர்வு நிலை

ஆகவே உயர்வை வளர்க்கும் சைவ சித்தமாக எண்ணத்தைப் பகுத்தறியும் வழி முறைக்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உடல் என்ற கோளத்தில்
1.எண்ணத்தில் எடுக்கும் உணர்வை நற்குணச் சமைப்பாக்கி
2.உடல் கோளத்தில் உயிர் குருவைச் சைவ சித்தமாக்கி
3,மெய் ஒளியைப் பெறும் நிலையாகத் தன் ஆத்ம ஜோதியை ஒளியாக்க வேண்டும்.

சலிப்பு சோர்வு கோபம் அதி காமம் வெறி குரோதம் இந்த இச்சையில் உணர்வுகளும் எண்ணங்களும் கூடும் பொழுது உடலின் ஒவ்வொரு அங்க அவையங்களும் உடல் அணுக்கள் ஒவ்வொன்றும்
1.தன் சைவ சித்தத்தை வளர்க்காமல் அசைவத்தின் அழிவு நிலைக்குச் செல்கிறது.
2.ஆகவே சரீர உணர்வில் எடுக்கும் தீய குணத்தால் தன் சித்தத்தை அழிக்கும் தன்மைக்குச் செல்லக் கூடாது.

அன்பு பாசம் பரிவு வீரம் ஞானம் சாந்தம் என்ற நற்குணங்கள் கொண்டு வளரும் வழித் தொடரில் சித்தமாகி மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்தும் ஒளி சக்திகளை ஆத்ம குருவை வளர்க்கும் தொடருடன் செயல்படுத்தினால்
1.ஒளி நிலைக்குச் சென்று வளர்க்கும் வழித் தொடரில்
2.சைவ சித்த சத்திய உண்மையை
3.ஆதி சக்தியின் சிவ சக்தியாக
4.ஆத்ம ஒளி உயரும் வழிக்கு உயர்வு கொள்ள முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைய உலகில் நிறையப் பேர் ஆசையில் சிக்கி ஏமாற்றப்பட்டுக் கொண்டுள்ளார்கள். ஆசைகளை ஊட்டி மயங்கச் செய்து வாய் பேசாது மூடும்படி ஆக்கிவிடுகின்றனர்.

இன்றைய விஞ்ஞான உலகில் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருந்தாலும் “ஏமாற்றம் தான் வருகின்றது…” கஷ்டம் அதிகமாகின்றது…! ஏமாறிக் கொண்டேயிருக்கின்றோம்.

நீங்கள் வயலில் விதையை விதைத்துவிட்டுப் போய் ஜோதிடரிடம் கேட்கிறீர்கள். அவர்… நிறைய வெள்ளாமை “கொட்டும்” என்று சொல்கிறார்.

கேட்டுவிட்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டால்… “என்ன கொட்டும்…?” தரித்திரத்தைத்தான் கொட்டும். செடிகள் அனைத்தும் பட்டுப் போகும்.

ஏனென்றால் தன் பிழைப்பிற்காக ஆசை வார்த்தைகளைச் சொல்லி நமக்குள் ஆசையை ஊட்டி அதன் வழியில் அவர்கள் வாழ்கின்றனர்.

ஜாதகமோ மந்திர தந்திரம் செய்பவர்களையோ மற்றவைகளையோ பார்த்தபின் உங்களுக்கு இந்தத் தடவை “அமோகமான விளைச்சல்… அது அப்படி வரும்… இப்படி வரும்” என்று சொல்லியபின்… அப்படியே வந்து பேசாமல் இருங்கள்.

வெள்ளாமை வருமா… என்று பார்க்கலாம்..!

இதுவெல்லாம் என்ன என்றால்..
1.நம்முடைய ஆசை கொண்டு நம்மைத் திரை மறைவாக்கி உண்மையை மறைக்கச் செய்யும் நிலைகள் தான்.
2.அந்த ஆசையிலேயே தவழ்ந்து கடைசியில் “ஒன்றும் கிடைக்கவில்லையே…!” என்று வேதனை தான் வரும்.

வேதனைகள் அதிகமாகிவிட்டால் இந்த உடலிலே கடும் விளைவுகளாகி இந்த மனித உடலையே இழக்கச் செய்து அடுத்து விஷமான ஜெந்துக்களாகப் பிறக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கிவிடுகின்றது நம் உயிர்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்குத்தான்… “அவ்வளவு பெரிய சக்தியை” உங்களுக்குள் இந்த உபதேச வாயிலாக ஊட்டுகின்றோம்.

நீங்கள் இதை வளர்த்துக் கொண்டீர்கள் என்றால் “உங்களைக் காக்க… உங்கள் எண்ணம்” அது உதவும்.

நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை… “மெய்ஞானிகளின் ஞான வித்துக்களை” உங்களிடம் ரிக்கார்டு (பதிவு) செய்கின்றோம்… அவ்வளவு தான்…!

ஒரு விதையைக் கொண்டு பூமியில் விதைத்துவிட்டால் அது என்ன செய்கின்றது…?

அந்த வித்தின் தன்மை எதுவோ பூமியின் துணை கொண்டு “தன் தாய்ச் செடியின் சத்தை எடுத்து நுகர்ந்து… மள… மள..” என்று வளரத் தொடங்குகின்றது.

அதிலே எந்தெந்த நேரத்தில் என்ன பருவமோ அதிலே உரமோ மருந்தோ மற்றதோ அதைப் போட வேண்டும் என்றால் அதைச் சரியாகப் போட்டு விட்டால் நிச்சயம் நன்றாக விளைகின்றது. அந்தப் பலனைக் கொடுக்கின்றது.

அதைப் போன்று தான்.. உங்களுக்குப் பருவம் யாம் என்ன சொல்கிறோம்…?

“கஷ்டம் வரும் பொழுது… அந்தக் கஷ்டத்தை விட்டுவிடுங்கள்…” அந்த அருள் ஒளியைப் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை எடுங்கள்.

பல வகைகளிலும் திரும்பத் திரும்ப உங்களுக்குள் அந்த மெய்ஞானிகளின் வித்துக்களை ஊன்றிக் கொண்டேயிருக்கின்றோம் அல்லவா.

அப்படி ஊன்றி இருக்கும் பொழுது… “அதற்கு” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இந்த உரத்தைக் கொடுத்துக் கொண்டே வாருங்கள்.

அது போதும்.

இப்படிச் செய்து கொண்டே வந்தோம் என்றால் உங்கள் உடலில் “ஊழ்வினை என்ற வித்து” வளர்ச்சி அடைந்து கொண்டே வரும். உங்களுக்குள் அந்தப் பலன் கிடைக்கும்.

வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து விடுபடக்கூடிய ஞானம் தன்னாலே வரும். மன பலமும் மன தைரியமும் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகைய இருள் சூழ்ந்த நிலைகளிலிருந்தும் விடுபட்டு மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறுவீர்கள்.

கணவன் மனைவிக்குள் “பற்று…” எப்படி இருக்க வேண்டும்…?

 

குடும்பத்தில் சஞ்சலம் என்று உணர்வு வந்து விட்டால் கணவன் மீது பற்றாக இருக்கும் மனைவி கணவர் வெளியே செல்லப்படும் பொழுது அவருடைய தொழில் எப்படி இருக்கின்றதோ…? அங்கே என்ன நடக்கின்றதோ ஏது நடக்கின்றதோ…? என்று மனைவி அடிக்கடி எண்ணினால் இதே உணர்ச்சிகள் கணவருக்குத் தூண்டப்பட்டு அங்கே சிந்தனையற்ற செயல்களாகி… பகைமை ஆகி… தொழில் செய்யும் இடங்களில் தீமைகள் வருகின்றது.

கணவன் மனைவிக்குள் இது போன்று வருகின்றது. இதைத் தடுக்க மனைவி எப்படி எண்ண வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் தன் உடலில் மனைவி அதை வலுவாக்கிக் கொண்டு அந்த அருள் சக்தியைக் கணவனுக்குள் பாய்ச்ச வேண்டும்.
1.அவருக்கு அந்த ஊக்கமான நிலை கிடைக்க வேண்டும்
2.அவர் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும்
3.அவர் பார்ப்பவருக்கெல்லாம் நல்ல உணர்வுகள் கிடைக்க வேண்டும் என்ற இந்த உணர்வுகளைப் பரப்பிப் பழகுதல் வேண்டும்

கணவர் மீது பற்று இருப்பினும் அவர் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று ஒவ்வொரு நொடியிலும் எண்ணும் பொழுது அவருக்கு வரக்கூடிய தீமையில் இருந்து மீட்க முடியும். கணவனுக்குத் தீமை வராது மனைவி காத்துக் கொள்ள முடியும்.

ஆகவே… துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் அருள் உணர்வுகளை காலை துருவ தியானத்தில் இரண்டு பேருமே எடுத்து அந்தச் சக்தி வாய்ந்த நிலைகளை இணைத்துப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நுகர்ந்து பேரின்பம் பெறும் உணர்வாகப் பெற்று இந்தப் பிறவியில் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.

நோயாளியை உற்றுப் பார்த்து நோயை அறிந்து கொள்கின்றோம். இருந்தாலும் அந்த உணர்வு நமக்குள் இயக்காதபடி அதை அடக்கித் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நோயாளியை நாம் பார்க்கப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் எண்ணி எடுத்தால் அது விஷ்ணு தனுசு.

நோயாளி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று பிரார்த்தித்து விட்டால் இந்த உணர்வுகள் அங்கே உருவாகின்றது. அவர் உடல் நலம் பெறும் சந்தர்ப்பமும் உருவாகிறது.

இத்தகைய வல்லமை பெற்ற சக்தியாக வர வேண்டும் என்றால் காலையில் கணவன் மனைவி இருவருமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்று
1.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்
2.எங்கள் இரத்த நாளங்களில் அந்தச் சக்தி கலக்க வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று சுவாசிக்க வேண்டும்
4.நுகரும் அந்த உணர்வுகள் எல்லாம் உயிரின் இயக்கத்தில் ஒன்றி அது பிரணவமாகின்றது (ஜீவன் பெறுகிறது)
5.உயிரான ஈசனிடம் பட்ட பின் ஓ…! என்று உணர்ச்சிகளாக மாறி இரத்தநாளங்களில் கலக்கின்றது
6.துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகள் உடலிலுள்ள அணுக்களிலே படரப்படும் பொழுது தீய அணுக்கள் ஒடுங்குகின்றது.

ஆனால் அதே சமயத்தில் தீய அணுக்களை நுகர்ந்தால் அதன் உணர்ச்சி கொண்டு இயக்கப்பட்டு நல்ல அணுக்கள் செயலற்றதாகிந்றது… நாம் சோர்வடைகின்றோம்… சஞ்சலப்படுகின்றோம்…! இந்த உணர்வு அதிகரித்தால் உடலில் மாற்றமே (வலியோ நோயோ) வருகின்றது.

ஆகவே கணவன் மனைவியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இரு உணர்வும் ஒன்றாகி விட்டால் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது. இந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

கல்யாணம் ஆகிவிட்டால் மனைவியைக் கண்டபடித் திட்டுவதும்… உதைப்பதும்… போன்ற நிலையில் சிலர் இருப்பார்கள்.

அதே சமயத்தில் பெண்களும் கணவர் செயல் பிடிக்கவில்லை என்றால் அவரைச் சாபமிடும் நிலைகளுக்கே வருகின்றார்கள்.

இது போன்ற நிலைகளில் இருவரும் செயல்பட்டால் மனிதனாக இருக்கக்கூடிய நிலையினைப் பிரிக்கப்பட்டு
1.எதனின் விஷத்தின் தன்மை இருவருக்குள்ளும் கலந்ததோ அதற்குத்தக்க அடுத்து தீமையான உடல்களுக்குத் தான் செல்ல நேரும்.
2.அடுத்து மனித உருப் பெரும் தகுதியை இழந்து விடுகின்றோம்
3.நரக லோகத்தைச் சந்திக்கும் நிலையே வருகின்றது.

இது போன்ற நிலையிலிருந்து விடுபட குடும்பத்தில் கணவன் மனைவி ஒவ்வொருவரும் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுங்கள்.

வசிஷ்டரும் அருந்ததி போன்று கணவன் மனைவி ஒன்றி வாழ்ந்து ஒருவரை ஒருவர் மதித்து நடந்து அந்த அருள் உணர்வு பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஆனால் பற்று கொண்ட நிலையில் வேதனையைச் சேர்த்து விட்டால் அந்த வேதனை உருவாக்கப்படும் பொழுது இங்கே இருவருக்குள்ளும் நோயாக மாறுகின்றது அதாவது
1.”வெளியிலே எனக்கு இடைஞ்சல்…” என்று கணவன் மனைவியிடம் சொல்லப்படும் பொழுது
2..அதை ஏற்று மீண்டும் திருப்பி கொடுக்கும் நிலையாக ஆண் பெண் என்ற நிலையில் “நோயே…” இங்கே ஜீவன் பெறுகின்றது

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கணவன் பெற வேண்டும்… என்று மனைவியும் மனைவி பெற வேண்டும் என்று கணவனும் இணைத்து விட்டால்… அது மிகவும் உயர்ந்த சக்தியாக இங்கே ஜீவன் பெறுகின்றது.

அதைத் தான் கணவனும் மனைவியும் உருப் பெறச் செய்ய வேண்டும்.

பரணி நட்சத்திரத்தின் சக்தி

 

1.தன்னையே தான் அறிந்து உணரும் செயல்பாட்டில்
2,அண்டத்தையே அறிந்து கொண்டிடும் அந்தத் திறனில்
3.இந்தப் பிண்டத்தையும் அறிந்து கொள்ள மனித மன ஞான எண்ண வழிச் செயல் முறையின் முயற்சியே
4.மகரிஷிகள் அருள் உணர்வுடன் ஒன்றி சக்தியளித்துச் சக்தி பெற்றிடும் சூட்சமத்தில்
5.தன் ஆன்மா வீரிய வளர்ச்சி பெற்று உயர் ஞானம் கொண்டிடும் பக்குவத்திற்கு
6.இந்தச் சரீரத்தின் (எலும்புகள்) மூலம் சேமிக்கும் சேமிப்பு அவசியமாகும்.

மகரிஷிகளின் ஆற்றலை ஈர்த்துச் செயல் கொள்ளும் உடல் உறுப்புகளில் “எலும்புகளின் அமில குண சக்தி வளர்ச்சியின் முதிர்வு…!” ஒரு பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுகின்றது.

பிராணிகளில் ஊர்வனவாக இருக்கும் நத்தை, ஆமை, சிப்பி, சங்கு இத்தகைய உயிர்த் தொகைகள் தனது உயிர்ச் சக்தி வளர்ச்சிக்கு ஆயுட்காலம் எப்படி உள்ளது…?

உருவின் செயல் சிறு வடிவில் இருக்கும் சங்கு
1.ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீரின் சக்தியில் வளர்கிறது.
2.தன் வளர்ச்சிக்குகந்த சுவாச அமில குணத் தன்மைகளை ஆகாரமாக ஈர்த்திடும் நிலையில்
3.”பரணி நட்சத்திரத்தின்…” சக்தியையும் சேமித்து வளர்ச்சிப்படுத்திக் கொள்கின்றன.

மனித உடல் வளர்ச்சி தாயின் கருவிலே உருக் கொள்ளும் நிலையில் சரீரமாகி வெளியில் வந்து தன் வாழ்க்கையில் உலகோதய நடை முறைக்கு ஆற்றல் கொண்டிடும் பக்குவமே தாயின் கருவில் சிசுவாக இருக்கும் பொழுது பெறும் “பரணி நட்சத்திரத்தின்…” ஆதிக்க வலுவின் மூலம் கிடைக்கும் எலும்புகளின் வளர்ச்சி தான்.

ஆகவே உயிர் சக்தியின் வலுவுக்கு வலுக் கொண்டிடும் சேமிப்பாகப் பரணி நட்சத்திரத்தின் அமில குண ஆதிக்க எலும்புகளில் சத்தாகப் பேராற்றல் கொண்டிடும் பக்குவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

1.நான் (ஈஸ்வரபட்டர்) சுட்டிக் காட்டும் இந்தத் தியான வளர்ப்பின் மூலம்
2.எலும்பின் வீரிய குண விரியத்தை உணர்ந்து
3.சுண்ணம் என்றிட்ட அமில குணங்கள் அடர்வு கொண்டு
4.தன் வளர்ச்சியின் சிறப்பிடத்தைப் பெறும் பொழுது
5.இருபத்தியேழு நட்சத்திரங்களின் ஒளியையும் சேமிக்கும் சக்தியாக அந்த எலும்புகள் செயல்படும்.

சரீரம் தன் வினைப்பயனை அனுபவிக்கும் பொழுது உடல் நலம் குன்றி… உயிர்ச் சக்தி இந்தக் கூட்டினை விட்டுப் பறக்கும் பொழுது… “சரீரம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு யார் மூல காரணம்…?” வேதனைப்படாமல் எப்படி உடலை விட்டுப் பிரிவது…?

1.நம்மை நாம் உணர்ந்து கொண்டு
2.நல்வினைப் பயனாக ஆக்கச் செயலுக்குண்டான எண்ணம் கொண்டு செயல்படும் பொழுது
3.உடலில் உள்ள எலும்புகள் மகரிஷிகள் பெற்ற ஒளி காந்தச் சேமிப்பைப் பெற்றிருக்கும் பொழுது
4.மூலாதாரம் தொடங்கி எழும் வீரியச் சக்தி முதுகுத் தண்டுவடம் வழிப்போந்து நெற்றிப் பொட்டை அணுகித் தாக்கி
5.உயிர் பறிக்கும் அந்தச் செயலைச் சரீர அவஸ்தை இன்றி எந்தவிதத் தடங்கலும் இன்றி உயிரை வெளியேற்றலாம்.
6.ஞானிகள் கபாலம் மூலம் தன் உயிர் சக்தியை வெளியேற்றுவர்.

மனித உடலை அவஸ்தையிலிருந்து காப்பவைகள் எலும்புகளின் தொடர்பே…! இருந்தாலும் அந்த எலும்புகளில் முற்றிய நோய் இருந்தால் சரீரத்தில் குறைவுபட்டிருக்கும்.

பரணியின் அமில குணத்தை கொங்கணவ மாமகரிஷியை எண்ணி ஈர்த்துத் தியானிப்பதன் மூலம் அதைச் சொஸ்தப்படுத்த முடியும்.

1.பரணி நட்சத்திரத்தை எண்ணி ஈர்த்திடும் பொழுதே
2.இந்தத் தொடரினை வழி காட்டிய கொங்கணவ மாமகரிஷியையும் எண்ணி
3.சரீரக் கட்டளைக் கேந்திரத்தில் செயல் கொண்டிடும் கார்த்திகை நட்சத்திரத்தையும் எண்ணி
4.ரச மூல அமிலச் சுக்கிரனையும் (வியாழன்) எண்ணி
5.இந்த முத்தொடரையும் சூரியச் சமைப்புடன் பெற்றிட்டால் எலும்புகளின் வலுக் கூடும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் உபதேசிக்கும் உணர்வுகளைப் படிக்கும் சமயத்தில் பல உணர்வுடன் இருப்பார்கள்.

1. என் குடும்பத்தில் கஷ்டம்,..,
2. என் குடும்பத்தில் தொல்லை..,
3. என் குடும்பத்தில் சண்டை..,
4. என் பையனின் நிலைகள் இப்படி..,
5. நான் கடன் கொடுத்தவன் ஏமாற்றுகின்றான்..,
6. அவன் தரவே முடியாது என்கிறான்..,
7. என் உடல் நிலை சரியில்லை..,
8 என் குடும்பத்தில் என்னை எல்லோரும் எதிர்க்கிறார்கள் என்று
9.இப்படிப் பல சிக்கல்களின் உணர்வு கொண்டு தான் இதைப் படிக்கின்றோம்.

எம்முடைய அருள்ஞான உபதேசங்களைப் படிக்கும் நேரம் அந்த மாதிரி அணுக்களானால் அந்த அணுவெல்லாம் தன் உணவாக எதைக் கேட்கும்…?

எவர் மேல் பகைமை கொண்டு சிக்கல்கள் ஆகி இந்த உணர்வின் தன்மை அணுவாக ஆனதோ… “அது அது…” தன் உணர்ச்சிகளை உந்தும்.

உபதேசிக்கும் உணர்வை எடுக்கவிடாது… “அது உந்தித் தடைப்படுத்தும்”. “நல்ல உண்மைகளைப் பெற முடியாதபடி… தடைப்படுத்திக் கொண்டிருக்கும்…”

தடைப்படுத்தும் நிலைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்… “எப்படியும் நீங்கள் அதிலிருந்து மீண்டிட வேண்டும்” என்று தான் வலிமையான உணர்வு கொண்டு “உங்கள் கவனத்தை இங்கே திருப்பி” அருள் உணர்வு கொண்டு உங்களுக்குள் பதிவு செய்து கொண்டுள்ளோம்.

அந்த மெய்ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் “அணுக்களாக விளைந்து” பகைமையற்ற உணர்வுகள் உங்கள் உடலிலே விளைய வேண்டும் என்ற நிலைக்கு உபதேசிக்கின்றோம்.

உங்கள் பார்வை பகைமையை உட்புகாது தடுக்கும் நிலையாக வர வேண்டும் என்றும்… “உங்கள் பார்வை” எங்கே பகைமை உருவாகின்றதோ “அங்கேயே… அதை அடக்கிடும் சக்தி” பெற வேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு வருகின்றோம்.

பகைமை என்றால் விஷத் தன்மை கொண்ட விஞ்ஞான அறிவால் வெளிப்படுத்திய உணர்வுகள் “எத்தனையோ… எத்தனையோ” நமக்கு முன் சந்தர்ப்பத்தால் வந்து கொண்டே இருக்கின்றது.

அத்தகைய தீமை செய்யும் நிலைகளை நாம் காண நேர்கின்றது. செவி வழி கேட்கவும் நேர்கின்றது.

இதைப் போல “செவி கொண்டு கேட்டுணர்ந்த உணர்வுகள் உடலுக்குள் பதிவாகி… கண் வழி கொண்டு நுகர்ந்தறிந்து…” அதன் வழி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நாம்… இயற்கையின் செயலாக்கங்களிலிருந்து “நம்மை எப்படி மீட்டிக் கொள்ள வேண்டும்..?” என்பதைத்தான் குருநாதர் காட்டிய வழிகளில் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

சூரியன் எவ்வாறு தன் உணர்வின் தன்மை கொண்டு மற்றவைகளை வளர்க்கின்றதோ அதைப் போன்று குருநாதர் நாம் எல்லோரும் அருள் ஞானம் பெற வேண்டும் என்ற ஆசையில் வளர்க்கின்றார்.

அவர் இன்று சூரியனாக இருக்கின்றார். அகஸ்தியன் பெற்ற உண்மைகளை அவர் கண்டார். அவர் வாழ்க்கையில் அறிந்துணர்ந்தார். அவர் வழியில் அவர் கண்ட உண்மையும் அதன் உணர்வை எனக்குள் பதியச் செய்தார்.

“பதிந்த உணர்வுகளை…” மீண்டும் நினைவு கொண்டேன். அதை நுகரும்… அறியும்… சந்தர்ப்பத்தை எனக்குள் உருவாக்கினார்.

அதன் உணர்வின் தன்மை பெருகும் நிலைகளில்… “அவர் கவர்ந்து கொண்ட உண்மைகள்… அவர் வெளிப்படுதிய உணர்வுகள் எதுவோ” அதை நான் பருகினேன்.

எனக்குள் அந்த அணுவின் தன்மையை உருவாக்கினார். அது அணுவான பின் தன் உணவுக்காக ஏங்குகின்றது. அந்த உணர்ச்சிகளை உந்துகின்றது.

உணர்வை அறிகின்றேன். “அதையே” இங்கே உங்களிடம் சொல் வடிவில் வெளிப்படுத்துகின்றேன்.

அதைக் கேட்கும் பொழுதும்… படிக்கும் பொழுதும் உங்களுக்குள் அந்த உணர்ச்சிகளை உந்துகின்றது. இதை உங்களுக்குள் அணுவாக மாற்றிவிட்டால் தெளிந்த மனம் வரும்.

ஏற்றுக் கொள்ளும் பண்பு… உங்களுக்கு வேண்டும்.

ஆனால் “கதவை அடைத்து விட்டால்..,! என்ன செய்யும்…? யாம் உணவைக் கொடுத்தால் அதை நீங்கள் உட்கொண்டால் தானே உங்களுக்குள் அது சத்தாக மாறும்.

யாம் பதிவு செய்யும் அந்த ஞான வித்துக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உரமாக ஏற்றுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உரமாகக் கொடுத்தால் தான் ஞானத்தைப் பெருக்க முடியும்

 

தெருவிலே சாக்கடை இருக்கின்றது… வீட்டிலோ… தொழிலிலோ… “மிகுந்த கஷ்டம்…” என்ற எண்ணத்தில் இருக்கும் பொழுது நம்முடைய உணர்வுகள் சாக்கடை நாற்றத்தை எடுத்துச் சாப்பிடும் (நம்மை அறியாமலே).

ஆனால் யாம் சொன்ன முறைப்படி தியானம் அதிகமாக இருப்பவர்களைப் பாருங்கள். அவர்களுக்குச் சாக்கடை நாற்றமே பெரும்பகுதி தெரியாது.

1.சாக்கடை அருகிலே இருந்தாலும் கூட… அந்த உணர்வுகளை நுகரவிடாது
2.எடுத்துக் கொண்ட தியானம் அதைத் தடுக்கும்… உங்கள் அனுபவத்தில் இதைத் தெரிந்து கொள்ளலாம்.

இது போன்ற அத்தகைய ஆற்றலைப் பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களிடம் யாம் பதிவு செய்த ஞான வித்தை நீங்கள் வளர்க்க வேண்டும்.

பயிர்களை விவசாயம் செய்யும் போது பார்க்கலாம். புகையிலைக்கு ஒரு உரம் போடுகின்றார்கள்… நெல்லுக்கு ஒரு உரம் போடுகின்றார்கள்… சோளத்திற்கு என்று ஒரு உரம் போடுகின்றார்கள்.

அதே மாதிரி யாம் கொடுக்கும் ஞான வித்திற்கு “அருள் ஞான உணர்வின் உரத்தை” நீங்கள் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

யாம் உபதேசிக்கும் உணர்வுகள் “ஞான வித்தாக” ஊழ்வினை என்று வித்தாக உங்களுக்குள் பதிவாகின்றது. ஒவ்வொரு நிமிடத்திலும் அதற்குச் சத்து கொடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களிலே அது படர வேண்டும் எங்கள் உடலில் இருக்கும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இரத்தங்களில் கலக்கச் செய்யப்படும் போது இது கொஞ்சம் கொஞ்சமாக நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களை உயர்த்தும்.

1.நான் தியானம் செய்து கொண்டு தான் இருக்கின்றேன்… என் வீட்டுக்காரர் என்னைத் திட்டிக் கொண்டே இருக்கின்றார்
2.தியானம் செய்து கொண்டே இருக்கின்றேன்… கடன்காரன் பணத்தை திரும்பத் தர மாட்டேன் என்கிறான் என்று இப்படி விட்டு விட்டால் இது சவாரி செய்து விடும்
3.தியானம் செய்து கொண்டே இருக்கின்றேன்… எனக்கு நோய் வந்து விட்டது என்று எண்ணினால்
4.அருள் சக்திகளைப் பெறுவதை விட்டுவிட்டு இதை எடுத்துக் கொள்கின்றீர்கள்
5.கெட்டதற்குத் தான் நீங்கள் சக்தி கொடுக்கின்றீர்கள்… அதையே வளர்க்கிறீர்கள்.

இந்த மாதிரி எண்ணங்கள் எதனால் வருகின்றது…?

உடலில் உள்ள அணுக்களுக்கு அதற்குப் பசி எடுக்கும் பொழுது அது உணர்ச்சியைத் தூண்டி நல்லதை எடுக்க விடாது இப்படித் தடுக்கும்.

அந்த மாதிரித் தடுக்கும் நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…? உங்களுக்குக் கொடுத்த ஆத்ம சுத்தி பயிற்சி மூலம் அந்த அருள் சக்திகளை எடுக்க வேண்டும்.

ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரருளும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அந்த சக்தி படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்த்து நல்ல உரமாகக் கொடுத்தால்
2.ஞானத்தை நாம் பெருக்க முடியும்
3.தீமையான உணர்வுகள் உள்ளுக்கே புகாதபடி தடுக்கவும் முடியும்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா. இப்படி நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ரோட்டில் ஒருவன் போகின்றான்… யாரையோ கோபமாகப் பேசுகின்றான். அதைப் பார்த்தவுடன் நம் நினைவுகள் எப்படி வருகிறது…?

பார்… இந்த மாதிரி நடுரோட்டில் பேசுகின்றானே…! இந்த உணர்வு வந்த பின் உயிரிலே பட்ட பின் நமக்குள்ளும் அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

நாமாக அப்படிச் செய்கின்றோமா…? இல்லை…! அவன் உணர்வு நம்மை இயக்குகின்றது. ஆகவே இந்த இடத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியிலே உயிருக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் வளர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உள்ளுக்குள் செலுத்த வேண்டும்.

உடலுக்குள் இந்த வலுவான நிலைகள் இங்கே ஆனபின்
1.அவன் உணர்வைத் தள்ளி விட்டு விடும்
2.காரணம் இங்கே அடைத்து விடுகின்றோம்
3.துருவ நட்சத்திரத்தின் வலுவைக் கூட்டுகின்றோம்
4.ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோம்

துணியில் அழுக்குப்பட்ட பின் சோப்பைப் போடுகின்றோம். நுரை என்ன செய்கின்றது…? அந்த நூலுக்குள் மறைந்துள்ள அழுக்கை அப்புறப்படுத்துகின்றது.

சோப்பு போடாதபடி… என்ன தான் துணியைத் துவைத்தாலும் கூட அழுக்குப் போகாது. இருட்டடித்த மாதிரி தான் இருக்கும். வெள்ளையாக இருக்காது.

உப்பைப் போட்டுத் துணிகளை வேக வைத்த பின் அழுக்கை எல்லாம் வெளியேற்றி விடுகின்றது. அது போன்று தான் நம் ஆன்மாவைத் தூய்மை செய்ய வேண்டும்.

இதை நீங்கள் ஒவ்வொருவரும் செய்து பழகுங்கள்.

ஆத்ம நிலையைத் தன் வழிக்கு “ஏற்க வந்தவர்களுக்கு…” அறிந்திடத் தான் இந்தப் பாட நிலை

 

கண்டெடுத்த இரசாயணத்தைக் கண்ணாடியில் பூசித் தன் பிம்பத்தைத் தானே காணும் நிலையை அறிந்துள்ளீர்கள்.

மாயக் கலியில் அவதரித்த செயற்கை யுகம் கொண்ட மனிதர்கள் எல்லாம்
1.தன் எதிரில் உள்ள பிம்பத்தைத்தான் அந்தக் கண்ணாடியில் காண்கின்றார்கள்.
2.ஆனால் எல்லாவற்றையும் அன்றே கண்ணால் (எந்தக் கருவியும் இல்லாது) கண்டான் சித்தன்.

உலக நிலையையும்… மற்ற மண்டலங்களின் நிலையையும் அறிந்து வாழ்க்கைக்கு என்ன பயன்..? என்றும் சிலர் எண்ணிடலாம்.
1.ஆத்ம நிலையைத் தன் வழிக்கு ஏற்க வந்தவர்களுக்கு அறிந்திடத் தான்
2.இந்தப் பாட நிலையையே கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
3.மனிதச் சக்தியில் எந்த நிலையில் சக்தி நிலை கலந்துள்ளது…? என்று அறிந்து கொள்ளுங்கள்.

இந்தப் பூமி எப்படிச் சூரியனிலிருந்து வரும் அணுக் கதிர்களைத் தன் சக்தியில் ஈர்த்துப் பல நிலைகளை நமக்களிக்கின்றாளோ… பூமித் தாயின் அந்த நிலையான சக்தி எல்லாமுமே இந்தப் பூமியில் வாழ்ந்திடும் நமக்கும் “அந்த ஈர்க்கும் தன்மை எல்லாமே உள்ளன…!”

1.சூரியனிலிருந்து வெளிப்படும் தன்மை எல்லாவற்றையுமே நாம் நேராகவே நம் நிலைக்கு ஈர்த்திடலாம்.
2.நம் உடலில் வரும் நோய்களை நீக்கவும் அந்தச் சூரியனிலிருந்தே
3.பல வகை மூலிகைகள் கொண்ட மருந்தின் நிலையை நம் உடலுக்கு நாம் ஈர்த்திடலாம்.
4.நம்மைச் சுற்றியுள்ள ஒலிகள் நம் செவியில் பட்டுக் கேட்பதைப் போல் நாம் காணாத இடத்திலுள்ள ஒலிகளையும் ஈர்த்திடலாம்.

நாம் எடுக்கும் சுவாசத்தில் அந்த ஒலியுடன் கலந்துள்ள ஒளியை நாம் ஈர்க்கும் பொழுது எங்கெங்கும் நடக்கும் நிலையையும் நாம் ஈர்க்கும் தன்மை கொண்டு
1.அந்த ஒளியின் பிம்பம் படும் நிலையில் உள்ள எல்லாவற்றையுமே
2.இருந்த இடத்திலிருந்தே நாம் கண்டிடலாம்.

இந்த மனித சக்திக்குக் கால நிலை… பூகம்பம் வரும் நிலை… பெரும் மழை வரக்கூடிய நிலை…! இது எலலாவற்றையுமே உணரும் தன்மை நம் உடலில் இருக்கின்றது. நம் நினைவை மாற்றி விடுவதால் இதை எல்லாம் அறிந்திடாமல் தவற விடுகின்றோம்.

பூமிக்கு எப்படி ஈர்ப்பு நிலை என்னும் காந்த சக்தி உள்ளதுவோ அதைப் போல் இந்தப் பூமியில் உதித்த உயிர் அணுக்கள் எல்லாவற்றுக்குமே அந்தச் சக்தி உள்ளது என்றாலும்
1.மனித உடல் பெற்ற ஆத்மாக்களுக்கு அனைத்தையுமே அறிந்திடும் சக்தி உள்ளது.
2.செயல்படுத்தும் தன்மை வாய்ந்த உறுப்புகளும் உள்ளன.

ஆனால்… இந்த மனிதன் உண்டு… உடுத்தி… உறங்குவது தான் வாழ்க்கை…! என்ற சுகத்தை எண்ணுகின்றான். இந்தச் சுகம் எத்தனை நாளைக்கு…?

1.தன் எண்ண சுகத்தைக் கொண்டே ஆத்மாவைச் சுகமாக்கிடாமல்
2.இந்த உடல் சுகத்தைத்தான் பெரிதாக எண்ணி வாழ்கின்றான்.

ஆகவே இந்த உடல் என்னும் கூட்டிற்கு அனைத்துச் சக்திகளையும் அறிந்து வாழும் சக்தி உள்ளது என்பதை உணர்ந்து நமக்கு முன் வாழ்ந்த பெரியவர்கள் சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகள் அடைந்த பேரானந்த நிலையை அடைய முற்படுங்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதர்களான நாம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமைகளை அகற்றும் வல்லமை பெற்றவர்கள். எதனையுமே நமக்குள் எளிதில் உருவாக்கக்கூடிய சக்தி பெற்றவர்கள்.

விஞ்ஞானி விண்ணிலே அண்டத்தின் நிலைகளையும் பூமிக்கடியில் உள்ள நிலைகளையும் ஊடுருவிப் பார்த்துப் பல பொருகளை அறிகின்றான். அதை எல்லாம் இணைத்து எத்தனையோ புதுப் புது இயந்திரங்களை உருவாக்குகின்றான்.

“ஒலி.. ஒளி..” அலைகளைப் பெருக்கப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மை அங்கே விஞ்ஞானத்தின் நிலைகளில் இயக்குகின்றது.

கடந்த காலத்தில் ஞானிகள் இதைப் போன்று சப்தமிடுவதில்லை. மனதிற்குள் ஒடுக்கி வைத்துள்ளார்கள்.

“தான் பெற்ற ஆற்றல்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்…” என்ற உணர்வுகளை உள் நின்று பாய்ச்சப்படும் பொழுது மற்றவர்கள் ஏங்கி நிற்கும் பொழுது அந்த உணர்வலைகளை நுகர நேர்கின்றது,

இவன் எண்ணி வெளிவிடும் உணர்வுகளை “மௌனமாக இருந்து…” உணர்வினை நுகர்ந்து இந்த ஞானியின் உணர்வுகளை அவர்கள் சீடர்களும் உருவாக்கும் தன்மை பெற்றார்கள்.

இப்படித்தான்…
1.“அகஸ்தியன் தான் கண்டுணர்ந்த உணர்வுகளை…” சொல் என்ற நிலைகள் வராதபடி… “உணர்வென்ற நிலையில்”
2.தான் நுகர்ந்த உணர்வுகளைத் தன் இன மக்கள் பெற வேண்டும் என்று உணர்வுகளை “மூச்சலைகளாக…” வெளியிட்டுள்ளான்.

அதே மாதிரி அகஸ்தியனை உயர்ந்த நிலைகள் கொண்டு எண்ணும் பொழுது இந்த உணர்வுகள் அகஸ்தியனின் சகாக்களுக்குள்ளும் வளரப்பட்டு தீமைகளை அகற்றும் நிலை பெற்றார்கள்.

அருள் உணர்வை அவன் பெற்றது இந்த வழியில் தான். ஆகவே, நாம் ஒவ்வொருவரும் அருள் ஞானத்தில் வளர்ந்திட வேண்டும்,

விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவுகள்… “சூறாவளி புயல்” போன்ற நிலைகள் வரும் பொழுதெல்லாம்
1.இந்த உடலும் நமக்குச் சொந்தமல்ல…
2.நாம் தேடிய செல்வமும் நமக்குச் சொந்தமல்ல… என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

நாம் சொந்தமாக்க வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். ஒவ்வொரு மனிதனும் உயர்ந்த நிலைகளில் வாழ வேண்டும்… என்ற “இந்த உணர்வை” நமக்குள் சொந்தமாக்க வேண்டும்.

உயர்ந்த நிலைகளில் வாழ வேண்டும் என்றால் அந்த அருள் உணர்வைத் தான் பெற்று ஒவ்வொருவரும் தெளிந்த மனம் பெற வேண்டும் என்று எண்ணினால் அதனுடன் கலந்து நமக்குள் தெளிவான நிலையும் பெறுதல் வேண்டும்.

பேரன்பைப் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.

சிலர் தவறு செய்தாலும் அந்த உணர்வு நம்மை இயக்காத நிலையும் அருள் உணர்வை நமக்குள் பெருக்கி வாழ்தல் வேண்டும். ஏனென்றால் குறுகிய காலமே நாம் வாழ்கின்றோம்.

இனி எதிர்காலம் மிகவும் சிந்தனையற்ற காலமாகவே மனிதனின் செயல்கள் இருக்கும். மனிதன் மனிதனாகத்தான் இருப்பான்.

ஆனால் மனிதன் பல கொடூரமான செயல்கள் செய்வதும் கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும் ஏமாற்றும் நிலைகளில் செல்வம் வைத்திருந்தாலும் வீடு புகுந்து அடித்துக் கொன்று விட்டு பொருளை அபகரித்துச் செல்லும் நிலை வந்துவிடுகின்றது.

அப்பொழுது நாம் தேடிய செல்வம் எங்கே இருக்கின்றது…?

நாம் எடுக்கும் மூச்சின் அலைகள் கொண்டு எந்தத் தீமையான உணர்வுகளும் நமக்குள் புகாது பாதுகாத்தல் வேண்டும். இதைப் போன்ற நிலைகளில் நீங்கள் செயல்படுத்த வேண்டும் என்று தான் வேண்டுகின்றோம்.

குருநாதர் எம்மை எப்படி அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்தரோ அதே போன்றுதான் “உங்களையும் துருவ நட்சத்திரத்துடன் இணைக்கச் செய்கின்றோம்…”
1.உலகில் இன்று நடக்கும் தீமையின் உணர்வுகளும்..,
2.அதை நீக்கிடும் அருள் உணர்வுகள் பெற்றதையும் இணைத்து…
3.இரண்டையும் கலக்கப்படும் பொழுது இணைத்து…
“தீமைகளை நீக்கும் அருள் உணர்வுகள்… உங்களுக்குள் வலுப்பெற வேண்டும்” என்ற நிலைக்குக் கொண்டு செல்கின்றோம்.

அருள் உணர்வை உங்களுக்குள் பெருக்கச் செய்கின்றோம்.

துருவ நட்சத்திரத்திற்கே உங்களை அழைத்துச் செல்கிறேன்

 

இன்று கோடிச் செல்வங்களை நாம் வைத்திருந்தாலும் அழகான உடலாக வைத்திருந்தாலும் சந்தர்ப்பத்தால் பண்பால் பரிவால் கேட்டறிந்த உணர்வுகள் உடலுக்குள் கடும் நோயாக மாறும் பொழுது “நம் அழகான உடல் நிற்கின்றதா…?”

ஆடை அலங்காரங்களை எல்லாம் செய்து பிறரை மகிழச் செய்யும் நிலை நமக்கு இருந்தாலும்
1.வேதனை வெறுப்பு போன்ற உணர்வுகளை நுகர்ந்தால் என்ன ஆகிறது…?
2.நோய்வாய்ப்பட்டிருக்கும் பொழுது அழகான ஆடையை மேலே போட்டால் என்ன சொல்வீர்கள்…?

நல்ல ஆடைகளைப் பார்த்தால் வெறுப்பு தான் வரும்.

மீறி யாராவது கொடுத்தால் என்னைக் கேலி செய்கின்றீர்களா…? நான் நோயாக இருக்கும் போது இப்படிச் செய்கின்றீர்களே…! என்று வெறுக்கும் தன்மை தான் வரும்.

நோய்வாய்ப்பட்டிருக்கும் போது ஒரு நல்ல ஆடையைக் காண்பித்து இது எப்படி இருக்கிறது பாருங்கள்…! என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்…?

காட்டுவர்கள் மீது ஏரிந்து விழுவோம்… எந்த நேரத்தில் எதைச் செய்கிறார்கள் பார்…! என்று. ஆகவே அதை அப்போது ஒதுக்குகின்றோம் அல்லவா…!

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் எத்தகைய ஆடம்பர நிலை பெற்றிருந்தாலும்
1.அருள் ஒளி என்ற நிலையை நாம் பெருக்கி
2.அருளைப் பெறும் ஆசையாக நாம் மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

இருளை நீக்கும் அந்த வலிமை பெற்று நமது வாழ்க்கையில் பேரருளைப் பெறும் அருள் சக்தியாக நாம் வாழ்ந்து இந்த உடலுக்குப் பின் முழுமை பெறுதல் வேண்டும்.

உங்களை எங்கே அழைத்துச் செல்கின்றேன்…? துருவ நட்சத்திரத்திற்கே இப்போது அழைத்துச் செல்கின்றேன்…!

நம் பிரபஞ்சத்தின் இயக்கம் 2000 சூரியக் குடும்பத்தில் இணைந்து வாழும் தன்மை பெற்றது.
1.அதைக் கண்டுணர்ந்த மகரிஷிகளின் உணர்வின் தன்மையை உங்களுக்கு உணர்த்தப்படும் போது
2.உங்கள் நினைவாற்றல் அந்த 2000 சூரியக் குடும்பங்கள் வாழும் எல்லைகளுக்கே செல்லுகின்றது
3.அதன் உணர்வின் தன்மையைப் பெருக்கி பிறவில்லா நிலையை அடையும் நிலைக்கு நீங்கள் வர வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

ஆகவே உங்கள் ஆழ்ந்த சிந்தனையைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து அறியாது வந்த இருளை நீக்கிடும் அரும்பெரும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

கணவன் மனைவி எங்கள் இரு உயிரும் ஒன்றாக வேண்டும். வசிஷ்டர் அருந்ததி போல நாங்கள் ஒன்றி வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து சாவித்திரி போன்று தீமைகள் புகாது இரு உயிரும் ஒன்றிட வேண்டும் என்று கணவன மனைவி இந்த உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

1.ஆகவே உயிருடன் ஒன்றும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று
2.பேரின்பப் பெரு வாழ்வு வாழக்கூடிய நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்.

தியானிக்கும் முறைகளை வழி காட்டினோம்… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் பதிவு செய்தோம்.

அதை நினைவுக்குக் கொண்டு வந்து துருவ நட்சத்திரத்துடன் இணைத்து “ஆழ்ந்த நித்திரைக்கு முன் நீங்கள் கொண்டு வந்தால்” என்றும் ஏகாந்த உணர்ச்சி கொண்டு உங்கள் உடலுக்குள் உண்மையின் உணர்வை அது உணர்த்தும்… பேரருளைப் பெருக்கும்… பேரொளியாக மாறுவீர்கள்.

“சித்சத்துவ பரமார்த்த புருஷர்கள்”

 

ஒவ்வொரு உயிர் அணுக்களின் (உயிரினங்கள்) உயர் அமில வீரிய குணச் செயலின் தொடர் என்பது சுழல் சக்தி எண்ணமாக… பிரம்மத்தின் பிம்பமாக… சரீரச் செயல் வாழ்க்கையாகப் பூமியின் ஈர்ப்பில் செயல்படுகிறது.

அந்த உயிரினங்கள் தன் வாசனை குணத்திற்கொப்ப ஈர்ப்பின் பக்குவமாக வளர்ச்சிப்படுத்திக் கொண்டு செயல்படும் அனைத்திலுமே
1.இரு குண அமிலங்கள் சந்திக்கும் நேர் தொடரில் கலந்து
2.சத்ரு…மித்ரு… என்ற செயல் நடக்கிறது.

அதனால் அந்த இரு குண அமிலங்களில் எது வீரியத் தன்மையோ அதன் குணத்திற்கொப்ப மற்றொன்று அதனுள் கலந்து மற்றொன்றாக உருவாக்கிடும் செயல் நடக்கின்றது.

இப்படிப்பட்ட எதிர் மோதல்களை எல்லாம் தன் வாழ்க்கை நடை முறையில் சந்திக்கும் பொழுது
1.அந்த நேரத்தில் அந்த எண்ண மோதல்களை
2.அறிந்து உணர்ந்து செயல் கொண்டிடும் அவகாசக் காலம் ஒரு நொடிப் (நொடிக்குள்) பொழுதின் காலம் தான்.

அந்த நொடிப் பொழுதில் அறிந்ததை உடனே தெளிதலும் தெளிந்ததின் பொருள் விளங்கி எதிர் மோதல் குணங்களை தன்னைப் (ஆன்மா) பாதித்திடா வண்ணம் காத்துக் கொள்ளும் நிலைக்கு வருகின்றது.

அது மட்டுமல்ல…!
1.அந்த எதிர் மோதல் குணங்களையே மாற்றியமைத்து நற்குண நீர் பாய்ச்சி
2.தன்னுள் எதிர் மோதல் குணங்களையே அமுதமாக உட்கொண்டுவிடும் வல்லமை பொருந்தியவர்கள் தான்
3.”சித்சத்துவ பரமார்த்த புருஷர்கள்…!”

பிராணிகளில் மான் தன் குட்டிக்குப் பாலைப் புகட்டும் பொழுது அது எடுக்கும் உணர்வின் தன்மை எப்படிப்பட்டது…?

பாலை ஊட்டும் பொழுதே இயற்கையாகச் செயல் கொள்ளும் தொடரில் தன்னைப் புசிக்க வரும் கொடிய விலங்குகளின் உணர்வுகள் காற்றிலே அலைகளாக வரும் பொழுது தன் மீது வந்து மோதியவுடன் அந்த வாசனையை அறிந்து கொள்கிறது.

1.உடனே தன் சுவாசத்தின் ஈர்ப்பினால் எதிர் மோதல் குணங்களை அறிந்து
2.தான் சுரந்திடும் பாலைத் தடைப்படுத்தி நிறுத்தி விடுகிறது.

தன் குட்டிக்கும் அதே உணர்வை ஊட்டி ஒரு நொடிக்குள் நடைபெறும் இயற்கையின் சூட்சம உணர்வில் அது எடுக்கும் அச்ச உணர்வு கொண்டு விரைந்து தப்பி ஓடிவிடும்.

ஏனென்றால் அதற்குள் இருக்கும் குண அமிலச் சுரப்பிகள் இயற்கையின் வழி வரும் (மற்ற கொடிய மிருகங்கள்) அந்த வாசனைக்கொப்ப உணர்வு கொண்டு அந்தச் (மானின்) சரீரத்தைச் செயல்படுத்தச் செய்கிறது.

அதாவது ஒரு கட்டளைக் கேந்திரமாகச் (CONTROLLING STATION) செயல்படும் எண்ணத்தின் பிடர்தல் உந்துவிசை கொண்டு எந்த உணர்வுகள் அச்சத்தை ஊட்டியதோ (ஈர்த்ததோ)
1.அதே உணர்வுகளில் நொடிக்குள் மாறு கொண்ட விநோத செயல்பாட்டை அறிந்து
2.தன்னைத் தற்காத்துக் கொள்ளும் செயல்கள் துரித கதியில் செயல்படுகிறது.

இதே செயல் முறை தான் கௌதம புத்தருக்கும் அன்று ஏற்பட்டது.

புத்தர் தான் பெற்ற அனுபவ ஞானத் தொடரில் சரீர அவஸ்தைகளிலிருந்து மனிதன் விடுபட்டு இந்தச் சரீரத்தைக் காத்திட வேண்டும் என்றால் மனிதன் விடுபட வேண்டிய குணங்களில் “அதி ஆசையை முதன்மையாகக் காட்டினார்…!”

ஆக பிறவித் துன்பங்களுக்குக் காரணமே “ஆசை” என்ற சொல் நாமப்படுத்திச் சூட்சமங்களை உள் மறைத்து உயிரான்ம சக்தியை வலு கொண்டதாக ஆக்கிடும் செயலில் புத்தருக்குப் பரிபூரணத்துவம் உண்டு.

நம் உயிரான்ம சக்தியைக் காத்திடும் பஞ்ச உறுப்புகளில் எதிர் மோதல் தன்மைகளைப் பக்குவமாக விலக்கிடும் உணர்வுகள் கொண்டு அறிந்து செயல்படும் பிடர்தல் செயல்பாட்டின் பொழுது
1.உயிரான்ம சக்தியில் ஏற்கனவே பதிவு செய்த செயலை வீரியமாக்கிடாமல்
2.ஆன்மாவில் பதிந்த பின் சுவாசத்தின் வழி கொண்ட சரீர உணர்வுகளில் செயலாக்கத்திற்கு
3.ஞான விழிப்பார்வை கொண்டு “நொடி நேரச் செயல்பாடாக…”
4.அருள் உணர்வுகளைத் தன் ஒளிகாந்த சக்தியால் வலுக் கூட்டிக் கொண்டு அதனைப் பார்வை வழியாகச் செயல்படுத்துதல் வேண்டும்
5.ஆனால் அப்பொழுது செயல்படும் செயலின் ஈர்ப்பில் அச்ச உணர்வுகளைக் கூட்டிக் கொள்ளக் கூடாது.

காத்திடும் பக்குவமும்… எதிர் மோதல் குணங்களையே தன் ஒளி காந்தத்தால் வசமாக்கி.. அன்பு கொண்டு ஈர்த்திடும் செயலாக… தன் எண்ண அசைவு கொண்டு செயலாற்றிடல் வேண்டும்.

புத்தரைக் கொல்ல வந்த காட்டுக் கள்வன் எடுத்த விரக்தியின் உச்சகட்ட ஆவேச உணர்வுகள் “சாது என்றோ… சம்சாரி என்றோ…” அறிந்து கொள்ளாத செயல்பாடாக இருந்தது.

அவனின் அறிவின் மௌடீகம் எவ்வளவு கொடுமையாக வீரியமாக அவனுக்குச் செயல்பட்டாலும் அதை ஒரு நொடிக்குள் மாற்றியமைத்துச் சமப்படுத்திய
1.அந்தப் புத்தனின் செயலாற்றும் திறன்
2.எல்லா ஞானச் செல்வங்களும் (மனிதர்கள்) பெற்றிட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“சாமியைப் பார்த்தோம்.. சாமியாரைப் பார்த்தோம்…” ஆகவே எல்லாம் நமக்குக் கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்.

நாம் எதை நுகர்கின்றோமோ.. “அதைத்தான்” நம் உயிர் அந்த வழிப்படி செயல்படுத்துகின்றது என்று நான் அடிக்கடி சொல்லி வருகின்றேன்.

நீங்கள் “இருந்த இடத்திலிருந்தே… நல்ல சக்திகளைப் பெற முடியும்”. அந்தத் தன்னம்பிக்கை வேண்டும்.

உதாரணமாக ஒருவர் திட்டும்பொழுது அவர் உணர்வை பதிவாக்கிக் கொள்கின்றீர்கள். பின் என்ன நினைக்கின்றீர்கள்…?

1.என்னைத் திட்டினார்… என்னைத் திட்டினார்… என்று எண்ணுகின்றீர்கள்.
2.அடுத்து என்னைத் திட்டினால் அவன் உருப்படுவானா.., உருப்படுவானா..,?” என்று எண்ணுகின்றீர்கள்.

இந்த உணர்வு என்ன செய்யும்…? அங்கேயும் இயக்குகின்றது. இங்கேயும் இயக்குகின்றது.

அதே மாதிரி உங்கள் குழந்தை மேல் பாசமாக இருக்கின்றீர்கள். வெளி ஊரில் படிக்கின்றது. சமயத்தில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் “என்ன ஆனதோ…? ஏதாச்சோ…?” என்று வேதனைப்படுகின்றீர்கள்.

வேதனைப்படும் பொழுது அந்த வேதனை உங்களுக்குள்ளும் விளைகின்றது. அந்த குழந்தைக்கும் வேதனை வரப்படும்பொழுது… “சிந்திக்கும் தன்மை குறைந்து படிப்பில் கெடுகின்றது”.

குழந்தை… “இதற்கு முன்னாடி நன்றாகப் படித்துக் கொண்டிருந்ததே…!” என்று எண்ணுவீர்கள். இதைப் போன்று ஏதாவது வேதனை உணர்வுடன் உங்கள் குழந்தையை எண்ணினீர்கள் என்றால் குழந்தைக்கு என்ன செய்யும்…?

சிந்திக்க முடியாதபடி படிப்பிலே அது ஓரளவிற்கு நினைவை இழக்கச் செய்கின்றது. “முக்கியமான பாடங்கள் இருக்கும்போது” நீங்கள் குழந்தையை வேதனைப்பட்டு எண்ணினால் “அது (படித்தது) நினைவிழந்து போகின்றது”.

நினைவில்லை என்கிற பொழுது “நான் நன்றாகப் படித்து வந்தேனே… இப்படி ஆகிவிட்டதே…!” என்று அதுவும் வேதனைப்படும்.

இதுவெல்லாம்.. “நம்மையறியாமல் செயல்படக் கூடிய நிலைகள்” என்பதை அடிக்கடி நான் உங்களுக்குத் தெரியப்படுத்துகின்றேன்.

“நீங்கள் எல்லோருமே… அருள் ஞானம் பெற வேண்டும்” என்று தான்
1.உங்கள் உயிரைக் கடவுளாக நான் வணங்குகின்றேன்.
2.உங்கள் உயிரை ஈசனாக மதிக்கின்றேன்.
3.ஈசனால் உருவாக்கப்பட்ட உடல் தான் உங்கள் உடல் சிவம் என்று மதிக்கின்றேன்.

“எண்ணத்தால் உருவானது தான் கண்” என்றும்… “கண்ணால் தான் உருவாகி… எண்ணத்தைக் கொடுக்கின்றது” என்றும் எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களை நான் மதிக்கின்றேன்.

எண்ணத்தால் தான் நாம் எல்லாம் இயக்குகின்றோம்.

1.நம் சொல்லே இராமனாகின்றது
2.கண்ணே கண்ணன் ஆகின்றது.
3.உடலே சிவம் ஆகின்றது என்ற நிலைகளை வைத்து
4.ஒவ்வொருவரும் நாம் இதைப் போல நினைக்க நேர்ந்தால்
5.நாம் ஒவ்வொரு உயிரையும் ஒவ்வொரு உடலையும் கோவிலாகவும் ஈசனாகவும் சிவனாகவும் விநாயகனாகவும் சொல்லை இராமனாகவும் கண்களைக் கண்ணனாகவும் நாம் மதிக்க முடியும்.

இவ்வாறு மதித்து விட்டால்… “நம்மை அறியாமல் வரும் தீமைகளை” அகற்றும் சக்தி “நாமே பெறுகின்றோம்”.

தீமையான உணர்வுகளை நுகரப்படும் பொழுது நம் உயிரிலே பட்டுத் தீமையை விளைவிக்கும் உணர்ச்சிகள் நம் உடலிலே சுழல்கின்றது.

உயிருக்கு “விஷ்ணு” என்று காரணப் பெயர் வைத்து அழைக்கின்றனர்.
1.இயக்கத்தின் நிலையை ஈசன் என்றும்
2.இயக்கத்தால் ஏற்படும் வெப்பத்தை விஷ்ணு என்றும்
3.வெப்பத்தால் ஈர்க்கும் காந்தத்தை இலட்சுமி என்றும் தெளிவாக நம் ஞானிகள் எடுத்துரைத்துள்ளார்கள்.

நாம் எதை எண்ணுகின்றோமோ உயிரிலே மோதும் பொழுதுதான் அந்த உணர்ச்சிகள் நம் உடலில் இயக்கத் தொடங்குகின்றது.

அதனால் தான் அவனைச் “சங்கு சக்கரதாரி” என்று தெளிவாகக் கூறுகின்றது நம் சாஸ்திரங்கள். இதைப் பல முறை உங்களுக்கு எடுத்துச் சொல்லியுள்ளேன்.

பிறரின் வேதனைப்படும் நிலைகளை நுகர்ந்தோம் என்றால் அந்த வேதனையின் உணர்ச்சிகளே நம்மை இயக்குகின்றது. நம் உடலான ஆலயத்தில்… “அசுத்தத்தைச் சேர்க்கின்றோம்…” நம் உயிரான ஈசனுக்கும்… “துயரத்தைக் கொடுக்கின்றோம்…”.

நம் கண்ணின் “கருவிழியால்” கண்ணுற்றுப் பார்க்கும் உணர்வின் தன்மை தெளிவாக்கும் நம் கண்ணுக்கே வேதனை என்ற உணர்வு வரும் பொழுது “கண் மங்கும் நிலையும்” சிந்திக்கும் தன்மையும் சீரான உணர்வைக் கவரும் தன்மையும் “இழக்கின்றது” என்பதையும் தெளிவாகக் கூறுகின்றோம்.

இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொண்டு வாழ்க்கையில் வரும் சந்தர்ப்பத்தால் வரும் நுகரும் தீமையான உணர்வுகளைத் துடைத்துப் பழக வேண்டும்.

இதைத் துடைப்பதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை உங்களுக்குள் பதிவாக்கி அதனை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால்
1.“இருந்த இடத்திலேயே.., தீமைகளை அகற்றலாம்”.
2.உணர்வின் சக்தியை நீங்கள் பெறலாம்
என்றுதான் சொல்கின்றேன்.

எப்பொழுதுமே… “உங்களிடம் தான்… நான் வரம் கேட்கின்றேன்”.

காரணம்.., “உயிரான ஈசன் வீற்றிருக்கும்… அந்த இடத்தில்” அமைதி கொண்ட உணர்வுகள் நீங்கள் சுவாசித்தால்… அந்த அருள் உணர்வுகள் வெளி வரும்போது.., அதைக் கண்டு நான் ஆனந்தப்படுகின்றேன்…”

அப்பொழுது என் உயிரான ஈசனுக்கும் அந்த அமுதைக் கொடுக்கின்றேன்.

அதனால் தான் தெளிவாகச் சொல்வது. குறைகள் அகற்றுங்கள். அருளைப் பெருக்குங்கள். இருளை அகற்றுங்கள்.

மெய்ப்பொருள் காணும் அந்த அருள் சக்தியைப் பெற ஒவ்வொரு மனிதனின் நிலையையும் கடவுள் என்ற நிலையில் மதித்துப் பழகுங்கள்.

கடும் தவத்தால் கொடுக்கப்பட்டது தான் இந்த அருள் ஞானச் சக்கரம்

 

ஆயுள் கால மெம்பர்களுக்கு அந்த உண்மையின் உணர்வின் சக்தி பெற கடும் தவத்தால் கொடுக்கப்பட்டது தான் அருள் ஞானச் சக்கரம். எமக்கு குருநாதர் முதலிலே அப்படித்தான் கொடுத்தார்.

அதைப் போல அவர் காட்டிய அருள் வழியில்
1.27 நட்சத்திரங்களும்
2.சிவசக்தி விஷ்ணு சக்தி பிரம்ம சக்தி சித்தி விநாயகர் என்ற இந்த உணர்வின் தன்மை இணைத்து
3.அந்த வட்டத்திற்குள் கணங்களுக்கு அதிபதி சித்தி விநாயகர் என்று அதை முறைப்படுத்தியது.

இன்று கம்ப்யூட்டர் நாடாக்களில் எப்படிப் பல விதமான ஆணைகளைப் பதிவு செய்கின்றனரோ அதைப் போன்று தான் அருள் ஒளியின் உணர்வின் தன்மைகளை எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் பதிவாக்குகின்றோம். உங்கள் உடலிலும் பதிவாக்கி உள்ளோம்.

1.அந்தச் சக்கரத்தைப் பார்த்துத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் நுகரப்படும் பொழுதெல்லாம்
2.தீமைகளை அகற்றி உங்கள் செயல்களை அது நல்லதாக மாற்றும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் எங்கள் உடலில் படர வேண்டும்… அகஸ்தியரின் உணர்வு எங்களுக்குள் படர வேண்டும்… மெய் ஒளி காணும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… என்று இந்த உணர்வுகளை எடுத்து வலிமை பெறச் செய்து விட்டு… அடுத்து எந்தக் காரியமாக இருந்தாலும் எந்தச் செயலாக இருந்தாலும் அது நல்லதாக அமைய வேண்டும் என்று செயல்படுத்திப் பாருங்கள்.

அதே சமயத்தில் எங்கள் சொல்லும் செயலும் புனிதமாக வேண்டும் என்ற இந்த உணர்வுடன் உங்கள் வாழ்க்கையை வழி நடத்துங்கள். அருள் உணர்வுகளைப் பெறுங்கள்… இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறுங்கள்.

1.குரு காட்டிய நிலையில் கொண்டு உங்களை ஆயுள் கால மெம்பராக அமைத்து
2.அதன் வழி துருவ நட்சத்திரத்துடன் இனைந்து வாழச் செய்ய
3.கம்ப்யூட்டரில் ரெக்கார்ட் செய்வது போன்று இதைப் பதிவு செய்கின்றோம்.

இதன் வழி உங்கள் எண்ணத்தைச் செலுத்துங்கள்… பேரருளைப் பெறுங்கள். இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றுங்கள். நஞ்சினை வென்றிடும் ஆற்றலைப் பெறுங்கள்.

எங்கள் சொல்லும் செயலும் இந்த உலகைப் புனிதமாக்கும் நிலை பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அருள் மகரிஷிகள் உணர்வுகளைப் பெருக்கி இந்த உணர்வின் தன்மையை எல்லா இடங்களிலும் பரப்பப்படும் பொழுது இந்த உலகில் வரக்கூடிய தீமைகளிலிருந்து நாமும் மீண்டு மற்றவரையும் மீட்டிட முடியும்.

நாட்டுக்கு நாடு மதத்திற்கு மதம் இனத்திற்கு இனம் ஊருக்கு ஊர் தெய்வத்திற்குத் தெய்வம் என்று எத்தனையோ பேத உணர்வுகள் இன்று சூழ்ந்து கொண்டுள்ளது.

விஞ்ஞானத்தால் ஏற்படுத்தப்பட்ட கதிரியக்கங்கள் “நியூட்ரான்” என்ற விஷத்தன்மைகளும் பரவிக் கொண்டுள்ளது. இது எல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான்.

குருநாதர் காட்டிய வழியில் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற்று சூழ்ந்திருக்கும் இந்த விஷத் தன்மையிலிருந்து மீண்டு அனைவரையும் மீட்டிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்று எடுக்கும் போது நம் உடலுக்குள் அந்த உணர்வுகள் வலுப் பெறுகிறது.

1.எத்தகைய நஞ்சையும் பிளந்து உணர்வினை ஒளியாக மாற்றி
2.துருவ நட்சத்திரத்துடன் இணைந்து என்றும் பிறவில்லா நிலை அடைவோம்.

மனிதன் தெய்வத் தன்மை பெற முயற்சித்தால்… அது திருவினையாக்கும்

 

1.எண்ணிலடங்காத பிறவிகள் எடுத்து எடுத்து இளைக்கலுற்றேன் இறைவா…! என்று கவி புனைந்தவனும்
2.ஏழு பிறப்பின் வினைகளும் அகல வேண்டும் என்றே உரைத்த வகையிலும்
3.எண்ணிலடங்காத பிறவிகளைப் பற்றியும் ஏழு பிறவிகளைப் பற்றியும் அந்த உண்மை நிலைகளை யாரப்பா அறிந்து கொண்டார்கள்…?

ஏனென்றால் இது விவாதம் கொண்டு உரையாட வேண்டிய விஷயம் அல்ல…! சிந்தனையில் கொள்ள வேண்டிய தனித்துவ நிலையப்பா இது.

உயிராத்மா தன் எண்ணம் கொண்டு பிறப்பிற்கு வரும் செயலில் தனக்குள் சேர்த்துக் கொண்ட அமிலத் தன்மைகளில் குணங்களால் அதனுள் எழுந்திட்ட வீரிய நிலைக்கொப்ப சுவாசம் கொண்டே தனக்கொத்த தன்மைகளில் பிறப்பிற்கு வருகின்றது.

மனிதனாகப் பிறப்பிற்கு வரும் உயிராத்மா… பிறவி என்ற மாயையில் தன் உண்மை நிலை மறக்கப்பட்டே பிறந்து வருகின்றது.

பூமி சமைத்து வெளிப்படுத்தும் சக்திகளைச் சுவாசமாக்கி அதன் வழி அறிவின் ஞானம் பெற்று அனுபவமாகப் பெறும் செயல்களில் மனித எண்ணத்தின் செயல்பாடே…
1.தனக்குத் தேவையான காரியங்களைச் செயல்படுத்தும் அனைத்திலும்
2.“நான்…!” என்ற உணர்வைக் கூட்டிக் கொண்டே வினை செயல் புரிகின்றது.
3.எந்த எண்ணம் வலுவோ அந்த எண்ணத்தின் வட்டச் சுழற்சியில் முதிர்வு நிலை பெற்று
4.புவி ஈர்ப்பின் பிடிப்பில் தான் வலுக் கொண்டிட்ட குணங்களுக்கொப்ப “மீண்டும்…மீண்டும்…” பிறப்பிற்கு வருகின்றது.

பிறவி எடுத்திட்டதனின் பயன் என்ன..? என்ற வினா எழும்பினால்… தியான வழியில் அறிவின் ஞானம் உயர் ஞானமாக்கும் சிந்தனை கொண்டு… தெளிவு கொண்டிட முயற்சிக்கும் பக்குவத்தில் “அனைத்துமே சித்திக்குமப்பா…!”

ஞானத்திற்குத் தேவை ஒன்று உண்டு. அதுவே உயர் ஞானம் பெற்றிட முயலும் “முயற்சி…!”

1.தன் உயிராத்ம வலுவின் முலாமைக் கூட்டிக் கொண்டு
2.எண்ணத்தின் செயலுக்கு எது தேவையோ அதையே முயற்சித்து… அந்தப் பேரருளைக் கூட்டி
3.இதற்கு முன் எடுத்துக் கொண்ட வினைப் பயனை மாற்றிடும் நல்லாக்கத்தின் செயலே
4.மனிதன் தெய்வத் தன்மை பெற முயற்சித்தால் அது திருவினையாக்கும்.

தெய்வத் தன்மை பெறுவதுவும் ஒரு பிறவியப்பா…!

1.என் (ஈஸ்வரபட்டர்) நிலைக்கு ஞானச் செல்வங்கள் (மனிதர்கள்) உயர்ந்திட வேண்டும் என்பதற்காக
2.சூட்சம இரகசியங்கள் அனைத்தையும் கூறி வருகின்றேன்.
3.அது அனைத்தையும் நீங்கள் பெற்று “என்னையும் முந்திச் செல்லவே ஆசி கூறுகின்றேன்…!”

மனிதன் என்ற பிறப்பில் தன்னைத் தான் உணரும் பக்குவத்திற்கு தன்னுள் உள்ள இறைச் சக்தியை வலுக் கூட்டும் முயற்சிக்குச் சங்கட அலைகளை வாழும் வாழ்க்கை மோதலிலிருந்து அறவே விலக்கிடல் வேண்டும்.

எண்ணத்தில் கடுமையும் சொல்லில் உபதேசமும் உரைத்திடும் எத்தகைய சக்தி பெற்ற ஞானவான்கள் யாராக இருந்தாலும்
1.சத்தியம் என்ற நேர் பாதை காட்டிடும் உண்மை நிலைக்கு
2.தனக்குள் இருக்கும் எண்ணத்தின் கடுமையை மாற்றிக் கொண்டால்
3.அவர்களும் நல் நிலை பெற்றிட முடிந்திடும்.

ஆகவே எல்லா உயிர்களையும் சமமாக… கடவுளாக மதிக்கும் உயர் ஞானத் தன்மையின் வலுவைக் கூட்டிக் கொண்டால் இந்த மனிதப் பிறவியிலேயே தெய்வப் பிறவி நிலை பெற்று விடலாமப்பா…! எனது ஆசி உங்களுக்கு உறுதுணையாக இருக்குமப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு துளி விஷம் பாலில் பட்டால் அதைக் குடித்தால் என்ன ஆகின்றது…? நம்மை மயங்கச் செய்கின்றது. சிறிது விஷம் அதிகமானால் மரணமடையும் நிலையே வந்துவிடுகின்றது.

இதைப் போன்று தான் சந்தர்ப்பத்தால் நாம் வேதனைப்படுகின்றோம். வேதனை என்பதே விஷம்.

வேதனை உணர்வுகள் இரத்தத்தில் கலந்ததென்றால் நம் உடலில் உள்ள நல்ல அணுக்களில் இது பட்டபின் நம்மை “மயங்கச் செய்துவிடுகின்றது”.

அப்பொழுது சிந்தனை என்ற நிலைகளை இங்கே இழக்கச் செய்கின்றது. தன்னை அறியாமலே வெறுப்பும் வேதனைப்படும் நிலைகளைச் செயல்படத் தொடங்கிவிடுகின்றது.

இதிலிருந்து நாம் மீள வேண்டும் அல்லவா…! அதற்கு என்ன உபாயம் இருக்கின்றது…?

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குள் பதிவு செய்த அந்த வழிப்படி உங்களுக்குள் விஷத்தை அடக்கிடும் அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதிவு செய்கின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்குதல் வேண்டும்.

பின் கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தி எங்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று “உள்முகமாகப் பாய்ச்சுதல் வேண்டும்”.

இப்படி எண்ணினால் அந்தத் தீமைகளை மறைத்துவிடுகின்றது. அப்பொழுது அந்த வேதனை என்ற உணர்வுகள் “இழுக்காது… தடைப்படுத்தப்படுகின்றது…”

இது வலுப் பெறும் பொழுது நம் ஆன்மா மீது சுருண்டு கிடக்கும் வேதனைப்படச் செய்யும் தீமைகள் நீக்கப்படுகின்றது.

எத்தகைய நிலைகள் வந்தாலும் இதைப் போல நம்மைப் பாதுகாக்கும் வலுவான உணர்வுகள் வருதல் வேண்டும்.

இன்று இருக்கும் இந்த விஷமான உலகில் “நம்முடைய சிந்தனைகள் சிதறாது” அருள் உணர்வை நமக்குள் சேர்த்துப் பழக்குவதற்குத்தான் அடிக்கடி உங்களுக்குள் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

மெய் ஞானிகள் பெற்ற அருள் உணர்வுகளை உங்களுக்குள் அடிக்கடி உந்தச் செய்கின்றோம். உங்கள் “மனம் மாறும் நிலைகளில்” எல்லா உணர்வுகளுடன் இதைக் கலக்கச் செய்து உணர்வைப் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

பதிவாக்கியதை நினைவு கொண்டு நீங்கள் மீண்டும் ஏங்கினால் தீமைகளை அகற்றிட முடியும். அந்தத் தன்னம்பிக்கை வர வேண்டும்.. உங்களை நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்கே இதைச் செய்கின்றோம்.

தீமையை வென்ற உணர்வின் தன்மை “உணர்ச்சிகளாகக் கொடுத்து” நீங்கள் எல்லோரும் அதைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

இது உலகைச் சுற்றி ஊரைச் சுற்றிக் காட்டைச் சுற்றி உணவில்லாதபடி நான் அலைந்தேன். அகண்ட அண்டத்தின் நிலைகளையும் உலக அனுபவத்தையும் குருநாதர் கொடுத்தார்.

நீங்கள் உங்கள் வீட்டிற்குள் இருந்தே அந்த அனுபவத்தைப் பெற முடியும்.

அதைப் பெற… “உங்கள் நினைவு ஒன்றுதான்” தேவை.

தீமை என்று நீங்கள் காணும்பொழுதெல்லாம்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்.
2.தீமையிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும்.
3.தீமை செய்வோர் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வினைப் பாய்ச்சினால்
4.“தீமையை நுகரும் சக்திகள்” அங்கே மாறிவிடுகின்றது.

இதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பத்திலேயும் கணவனும் மனைவியும் இதைச் செய்தே ஆக வேண்டும்.

இப்படி ஒவ்வொரு நொடியிலேயும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்கள் உங்களுக்குள் வளர்ந்து வரும் நிலையில் இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது இந்த உயிர் எதை வலுவாக எடுத்ததோ அங்கே அழைத்துச் செல்கின்றது.

நாம் “பிறவியில்லா நிலை” அடைகின்றோம்.

Leave a Reply