January 2022 உபதேசம்

தை…! இணைத்துவிடு…! துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து எல்லாவற்றிலும் இணைத்துவிட வேண்டும்

 

தை…! (தை மாதம்) என்றால் இணைத்தல் என்று பொருள். ஒரு நூலின் தன்மை கொண்டு இணைக்கப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று இணைந்து கொள்கிறது. அதைத் தான் “தை…” என்று காட்டினர்.

இணைத்திடும் உணர்வின் தன்மை கொண்டு இணைந்து வாழச் செயல்படுத்துவது தான் அதன் நிலை. அன்றைய கால பாஷையில்
1.“தை” என்ற நிலையில் “இணைத்து விடு…” என்று பொருள்படும்படி
2.உலகில் வாழும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்திடும் நிலையாக
3.சுவைமிக்க நிலைகளை உருவாக்கும் நாள் என்று தைப் பொங்கல் என்று காட்டினார்கள்

ஒருவருக்கொருவர் பகைமையை மறந்து அருள் உணர்வைத் தனக்குள் நுகர்ந்து ஒளியின் உணர்வாக அத்தகைய பெரும் சக்தியை எவ்வாறு நமக்குள் வளர்த்தல் வேண்டும்…? என்பதைத் தெளிவாக்கும் நாள்தான் தைப் பொங்கல்.

அதிகாலையில் எழுந்து நான்கிலிருந்து ஆறு மணிக்குள் சூரிய உதயத்திற்குள் பொங்கல் வைத்துப் பழகுதல் வேண்டும். பண்டைய காலத்தில் அப்படித்தான் வைப்பார்கள்.

அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். செல்லப்பிராணிகளை வைத்து அதை வணங்கும் முறையைக் காட்டி
1.அத்தகைய உயிரினங்களிலிருந்து தான் நாம் வளர்ந்து வந்திருக்கின்றோம்
2.மனிதனாக இன்று வந்திருக்கிறோம்…! என்று நினைவுபடுத்தும் நாள் தான் மாட்டுப் பொங்கல்.

அதாவது இன்று மனிதனாக இருக்கும் நிலையில் இதற்கு முந்திய நிலையில் நாம் எப்படி வாழ்ந்தோம்…? எப்படி வளர்ந்து வந்திருக்கின்றோம்..? இன்றைய மனித வாழ்க்கையில் அதை நாம் எப்படிச் செயல்படுத்துகிறோம்…? மற்ற உயிரினங்கள் எப்படி வாழ்கின்றது…? அதில் இருந்து வந்தவர்கள் தான் நாம்…! என்ற நிலை அங்கே தெளிவாக்கப்படுகின்றது.

காரணம்… ஒருவர் கஷ்டப்படுகிறார் என்று நாம் பார்த்தால் அவருடைய கஷ்டத்தை ஈகையால் நுகர்ந்து விட்டால் வேதனை உணர்வுகள் நமக்கு அதிகரித்துவிடும். நம்மையும் கஷ்டத்திற்குள் ஆழ்த்திவிடும்.

ஆகவே அந்த வேதனை நமக்குள் வராது தடுக்க அந்தப் பேரருள் பேரொளி பெற்ற அருள் ஞானிகள் உணர்வை நாம் ஈகையால் நுகர்ந்து மாற்றிக் கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில்…
1.ஞானிகளின் அருள் சக்தியை அவர்களுக்குள் பாய்ச்சி
2.அந்த வேதனையிலிருந்து அவரும் விடுபட வேண்டும் என்று எண்ண வேண்டும்
3.வெறுமனே எண்ணினால் நம்மைத் தீமையின் நிலைக்குத் தான் அது ஆளாக்கும்.

உதாரணமாக ஒரு பொருளை வேக வைக்கிறோம் என்றால் சூடு அதிகமாகி விடுகின்றது. ஒரு உபகரணத்தையோ அல்லது துணியையோ வைத்துத் தொட்டால் தான் அதை நாம் எடுக்க முடியும். இல்லையென்றால் கையைச் சுட்டுவிடும். ஆகவே அதை நாம் பக்குவமான நிலையில் எடுக்க வேண்டும்.

அது போலத் தான் வாழ்க்கையில் நாம் தீமைகளைச் சந்திக்கும் போது அந்த அருள் ஞானிகள் உணர்வை வைத்துத் தான் அதைச் செயல்படுத்த வேண்டும்.

ஒருவன் வேதனையால் அவதிப்படுகிறான். கேட்டறிந்தவுடனே அது வந்து விடுகின்றது. நாம் நல்ல பண்புகள் கொண்டிருப்பினும் வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் வந்துவிட்டால் நல்ல மனதையும் கெடுத்து விடுகின்றது. இதை எல்லாம் நாம் மாற்றிப் பழக வேண்டும்.

அகஸ்தியன் துருவனாகி… துருவ மகரிஷியாகி வாழ் நாளில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அந்த அரும் பெரும் சக்தியை யாரொருவர் நுகர்கின்றனரோ அந்த உணர்வினை வலுவேற்றி கொண்டால அடுத்து வரும் தீமை எதுவாக இருந்தாலும் அதை வளராது தடுத்து விடலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கூட்டினால் வேதனையை அகற்றிடும் சக்தியாக நமக்குள் வளரும்.

அரிசி இயற்கையில் சூரியனால் விளைந்தது தான். அதில் இருக்கக்கூடிய தோடை (உமியை) நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் அரிசியைத் தான் எடுத்து வேக வைக்கின்றோம்.

வேக வைப்பது எதற்கு…? வெறும் சுவைக்காக அல்ல…!

1.இயற்கையில் விஷத்தின் ஈர்ப்பால் அதனின் உணர்ச்சியைத் தூண்டி
2.அந்த உணர்வுக்கொப்பத் தான் அது விளைகின்றது.
3.ஆனால் வேக வைத்தாலோ தன் இனத்தை அது வளர்க்காது.

அதைப் போன்று வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால்… அது நமக்குள் வளராது அடக்க வேண்டுமென்றால்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் இணைத்து
2.அதை வேக வைக்க வேண்டும்.
3.அதனின் இயல்பை மாற்றி மகிழ்ந்து வாழச் செய்யும் சக்தியாக நாம் வளர்க்க வேண்டும்.

அது தான் ஞானிகள் அடைந்த வேகா நிலை என்பது.

வண்ணான் ஆடைகளைத் தூய்மைப்படுத்துகின்றான்… சுவாசத்தில் வரும் தீமைகளை நாம் தூய்மைப்படுத்த வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

இச்சரீர இயக்கத்தில் இன்று வாழக் கூடிய காலங்களில்… உணர்வின் எண்ணத்தைப் பக்குவப்படுத்தக் கூடிய வழி முறையில்… நாம் எடுக்கக் கூடிய சுவாசத்தின் உணர்வு மற்ற எந்த உணர்வின் அலையுடன் மோதினாலும் அதைச் சீராக்க வேண்டும்.

இச்சரீரத்தில் பதிவாகக் கூடிய எண்ண அலைகளை…
1.நாம் வண்ணானிடத்தில் அழுக்குத் துணிகளைப் போடும் பொழுது
2.அழுக்கை நீக்கித் தூய்மையான துணிகளை நமக்கு எப்படித் தருகின்றானோ அதைப் போன்று
3.நம்மை எதிர்படும் தீய உணர்வுகளை நம் எண்ணத்தில் எடுத்தாலும்
4.அதை உடனே உணர்வுடன் கலக்க விடாமல் அவ்வழுக்கை நீக்கி
5.தூய்மையான அலையை இச்சரீரத்தில் பதியக் கூடிய நிலைக்குப் பக்குவமாக்கி
6.அழுக்கை நீக்கித் தூய்மையான உடையை வண்ணான் தருவதைப் போன்று
7.நம் உணர்வுடன் மோதக்கூடிய தீய அலைகளைத் தூய்மையாக்கி
8.நம் ஆத்மாவின் ஒளிக்குத் தர வேண்டும்.

இருந்தாலும் வாழ்க்கை என்னும் பொழுது உணர்வுகளில் மாற்றமில்லாத் தன்மை ஏற்படாமல் இருக்காது.

ஆகவே… வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு நொடிப் பொழுதின் உணர்வையும்
1.சரீர எண்ணத்தில் நாம் எடுக்கக்கூடிய சுவாசத்தைக் கொண்டு
2.செயலாக்கத்தக்க அணு வளர்ச்சியின் காந்த ஒளி அலையால்
3.நாம் எடுக்கக்கூடிய சாந்த நற்குணத்தின் சம அலையால்
4.உயர் காந்த மின்காந்த சக்தியால் பெறவல்ல பக்குவத்தில்
5.இவ்வாத்மாவின் ஒளியைக் கூட்டிக் கூட்டி ஆத்மாவின் வீரியத் தன்மை பெற்று
6.வாழ்க்கையில் உள்ள பொழுதும் இச்சரீரத்தை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகும்
6.தன்னைத் தானே தான் உணர்ந்து தன் வளர்ச்சியைப் பெற்றுக் கொண்டே இருக்க முடியும்…!

அப்படி வலுப் பெற்ற ஆத்ம ஒளிகள் தானப்பா… இன்று நாம் வாழும் பூமியும்… நம்மை வாழ வைக்கும் சூரியனும்… மற்ற பல கோடி ஜீவ ஒளி மண்டலங்கள் யாவையுமே…!

ஆனால் அப்படிப்பட்ட உணர்வின் எண்ணத்தின்… ஜீவ வளர்ச்சியின் உண்மையை மனிதன் உணராமல்…
1.இன்றைய மனிதனின் எண்ணம் செயல் எல்லாம்
2.தன்னுள் இருக்கும் ஆத்மாவின் உண்மையை அறியாமல்
3.உடலின் சுகத்தின் உணர்வின் உந்தலின் வாழ்க்கையிலேயே
4.தன்னைத்தானே – இச்சரீரத்தையே உண்மை என்று நம்பி அழித்துக் கொள்கின்றான்.

மனிதனுக்குக் கிடைத்துள்ள பெரும் பொக்கிஷமே இச்சரீரம் தான். இந்தப் பொக்கிஷத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்…? என்பதைத்தான் ஒவ்வொருவரும் அறிதல் வேண்டும்

அதைத் தான் தொடர்ந்து இங்கே பாடநிலையாகக் கொடுத்துக் கொண்டுள்ளேன் (ஈஸ்வரபட்டர்).

கடிந்துரைக்க எண்ணாதே…!
கடுமையின் உணர்வு உன்னையும் சுடும்

கனிந்துரைப்பாய்…!
காரியத்தின் வெற்றியைச் சுவைக்கலாம்

மனதின் மமதைக்கு மருந்துண்டால்
மங்கிடும் மமதை மறைந்தே…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக மிளகாய் காரமாக இருக்கின்றது. அந்தக் காரமான மிளகாயிலும் புழு உருவாகிறது.

அதைக் காட்டிலும் கடுமையான பூச்சி மருந்துகளை அடித்து அந்தப் புழுவைக் கொல்லும் பொழுது புழு சாகின்றது.
1.புழுவைக் கொன்ற அந்த விஷம் ஆவியாக மாறுகின்றது.
2.அந்த மிளகாய்ச் செடியில் புழுவைத் தாக்கிய இந்த விஷம் ஊடுருவுகின்றது.

அந்த மிளகாய்ச் செடியில் விளைந்த மிளகாயை நாம் உணவுப் பதார்த்தங்களில் சேர்த்தால் விஷத்தன்மை கொண்ட அணுக்கள் உருவாகி நமக்குள் “நோயாகவும்…” மாறுகின்றது.

மனிதன் விஞ்ஞானத்தால் பல விஷப் பூச்சிகளைக் கொன்றாலும் இது இந்த நிலை ஆகின்றது.

முந்தைய காலங்களில் இத்தகைய விஷப் பூச்சிகள் ஏற்பட்டால் அதை இயற்கையான முறைகளைக் கையாண்டு பூச்சிகள் உருவாகாமல் தடுத்தார்கள்.

சாணத்தை எரிக்கும் பொழுது
1.அந்த நெருப்பால் விஷம் ஒடுங்குகின்றது.
2.அப்பொழுது விஷத்தை ஒடுக்கும் உணர்வுகள் அந்தச் சாம்பலில் கலந்துவிடுகின்றது

மாட்டுச் சாணங்களைச் சாம்பலாக உருவாக்கி அந்த சாம்பலைப் பயிர்களில் தூவி விடுவார்கள். சாம்பலைத் தூவினால் பயிர்களில் உருவான இந்தப் பூச்சிகள் இந்த மணத்தைக் கண்டு மடிந்துவிடும்.

ஆனால் அதற்கு எதிர்நிலையாகப் படும்போது அதை உணவாக உட்கொண்டாலும் நல்ல அணுக்களாக மாறுகின்றது.

அந்தச் செடியில் விளைந்து வருவதை உணவாக உட்கொண்டால் நமக்கு நோயில்லாத நிலை வருகின்றது.

தாவர இனக் கழிவுகளைச் சேர்த்துக் குளங்களில் வண்டலாக மாறுகின்றது. இந்த வண்டலையும் சாணத்தையும் கலந்து வரும் போது
1.இந்த மண்களில் விஷப் புழுக்கள் உருவாவதில்லை.
2.சோளமோ மற்ற பருப்போ அதிலே போட்டோம் என்றால் புழுக்கள் அதிகமாக விழுவதில்லை.

புழுக்கள் அதிகமானாலும் சாம்பலையும் வெறும் உப்பையும் கலந்து அதிலே தூவினால் பருப்பு காய்கறிகளில் வரக்கூடிய புழுக்கள் அதனுடைய செயலாக்கங்களை இழந்து விடுகின்றது.

நெற் பயிர்களுக்கும் இதைப் போல சாம்பலும் சாப்பாட்டு உப்பையும் கலந்து தூவினால் அந்த காலங்களில் நெல் பயிரும் நன்றாக இருந்தது.

இப்போது விஞ்ஞான முறைப்படி விஷத்தைத் தூவிப் புழுவைக் கொல்கின்றார்கள்.
1.அதனுடைய முட்டையில் இந்த விஷம் பட்டு
2.இந்த விஷத்தைத் தாங்கக்கூடிய புழுவாக அடுத்து வந்துவிடும்.

அடுத்து இதே மருந்தைத் தூவினால் அந்தப் புழு சாவதில்லை.

அதே சமயம் செடிக்குள் விஷத்தன்மை கலந்து அதிலே உருவாகும் நெல் மணியிலும் அது கலந்து விடுகின்றது. கத்தரிக்காய் மற்ற எல்லாக் காய்களுக்கும் விஷ மருந்து தூவவில்லை என்றால் அவை விளைவதில்லை.

செடியில் விஷம் கலந்தபின் அதில் விளைந்த காய்கறிகளைச் சாப்பிடும்போது தூவிய விஷம் நம் இரத்த நாளங்களிலே கலந்து நம் உடலிலுள்ள அணுக்களுக்கு ஆகாரமாகச் சேர்கின்றது.

விஷத்தின் தன்மை உணவாக உட்கொள்ளும் போது இந்த மனித உடலை உருவாக்கிய நல்ல அணுக்களும் அதனுடைய செயலாக்கங்களைக் குறைக்கின்றது.

செடியில் தூவிய விஷங்கள் அனைத்தும் ஆவியாக மாறியதைச் சூரியன் எடுத்து வைத்துள்ளது.

செடியில் விளைந்ததை நாம் உணவாக உட்கொள்ளும் போது நம் உடலில் உள்ள அணுக்களுக்குள் அந்த விஷங்கள் கலந்துவிடுகின்றது.

அதன் வளர்ச்சியில் செடிக்குத் தூவிய மருந்தினைச் சூரியன் ஆவியாகக் கவர்ந்து வைத்துள்ள அந்த விஷங்களை நம் உடலில் உள்ள அணுக்கள் அது இழுக்கும். இழுக்கும் பொழுது நம் ஆன்மாவாக மாற்றும்.

நம் ஆன்மாவாக மாற்றும்போது
1.நம் நல்ல குணங்களுடன் சேர்த்து
2.அந்த விஷமான ஆவியைச் சுவாசிக்கும் போது
3.நமக்குள் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
4.மனமும் பலவீனப்படுகின்றது.
5.சொல்லிற்குள் நயம் கெடுகின்றது.

விஷம் கலந்த உணர்வுகளை நாம் கலந்தால் எப்படி “ஆ…” என்று அலறுகின்றோமோ இதைப் போல நாம் நுகர்ந்த உணர்வுகள் சொல்லாக வெளிப்படும் போது ஒருவர் செவிகளில் கேட்டபின் அந்த உணர்வுகளை அவர் நுகரும் போது அவரை “உணர்ச்சிவசப்படும்படிச் செய்கின்றது”.

1.நன்மையின் தன்மையை நீங்கள் சொன்னாலும்
2.சிந்திக்கும் தன்மைகளுக்கு மாறாக
3.வெறுப்பின் தன்மை உருவாக்கும் நிலையே
4.இந்த விஞ்ஞான அறிவால் வருகின்றது.

பண்டைய காலங்களில் எல்லாம் மனிதனுக்குகந்த நிலைகள் கொண்டு காட்டிற்குள் விளைந்த பல பயிரினங்களைச் சேர்த்துத்தான் நெல்லாகவும் மற்ற மற்ற தானியங்களாகவும் உருவாக்கினார்கள்.

பயிரினங்களில் பூச்சிகள் விழாது தடுப்பதற்காக மற்ற தாவர இனங்களை இது உரங்களாக இட்டார்கள். அப்படி இடப்படும் போது இந்த உரங்கள் தாவர இன சத்தைக் கொல்லும் பூச்சிகளை வளரவிடாது தடுக்கின்றது

அந்த மெய்ஞான வழியில் உருவாக்கிய நிலைகள் தான் இவைகள்.

விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்திருந்தாலும் அன்று வாழ்ந்த மெய் ஞானிகளின் உணர்வை அறியாது செயல்படும் பொழுது மனிதனின் சிந்தனையைக் குறைக்கும் நிலைக்கும் அழிக்கும் நிலைக்குத்தான் கொண்டு செல்கிறது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தோஷம்

 

கோடிப் பணம் சம்பாதித்து விட்டோம் என்றால் “நிம்மதியாக இருந்து விடலாம்…” என்று நினைப்பார்கள்.

அவ்வாறு நிம்மதியாக இருக்கும் போது இவர் மிகவும் “நல்லவர்.. என் சொந்தக்காரர்…” என்று எல்லாம் சொல்லிக் கொண்டு நம்மைத் தேடி வருவார்கள்.

என் பையன் சேட்டை செய்கிறான் என்று சொல்வார்கள். பக்கத்தில் இருக்கும் வீட்டுக்காரன் சதா தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறான். நீங்கள் தான் நிவர்த்தி செய்து தர வேண்டும் என்பார்கள்.

இவர் கேட்பார். உடனே அதே உணர்வு இங்கு வரும். இவர் மேலே பாசமாக இருந்து அதையெல்லாம் எடுத்துக் கொள்வார்.

முதலில் இவர் அமைதியாக இருந்தார். செல்வம் எல்லாம் தேடி வந்தது. சம்பாரித்தார்…, நன்றாக இருக்கின்றார்.

இவர் நன்றாக இருப்பதைப் பார்த்து மற்றவர்கள் வந்து அவரவர் கஷ்டங்களையும் எல்லாம் சொல்ல ஆரம்பிக்கின்றார்கள்.

ஏனென்றால் இவர் மற்றவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கிறார். அவர்களுக்கு வேண்டிய உதவியும் செய்தார். அப்புறம் என்ன நடக்கின்றது?

உடலில் இல்லாத வலியெல்லாம் வரும்.
இடுப்பு வலிக்கிறது…
மேல் வலிக்கின்றது…
தலை வலிக்கின்றது…
சர்க்கரைச் சத்து வந்து விட்டது…
இரத்தக் கொதிப்பு வந்து விட்டது என்பார்கள்.

ஏனென்றால் தன்னை நாடி வருபவர்கள் சொல்வதை எல்லாம் இவர் கேட்பார். நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை – இது இந்த மாதிரி வந்துவிடும்.
1.நாம் சுவாசித்த உணர்வுகள் உயிரிலே படுவது நந்தீஸ்வரன்.
2.சிவனான இந்த உடலில் அந்தக் கணக்குள் கூடுகின்றது.

தவறே செய்யவில்லை. உதவி கேட்டு வருகின்றனர். அவர்கள் கஷ்டத்தைச் சொல்கிறார்கள்.

நல்ல மனதுடன் இவர் கேட்கிறார். நுகருகின்றார். உமிழ்நீராக மாறுகின்றது. சாப்பாட்டில் கலக்கிறது. நுரையீரலுக்குப் போகின்றது. கல்லீரலுக்குப் போகின்றது. கிட்னிக்குப் போகின்றது. இருதயத்திற்கு வருகின்றது.

1.பின்னர் இருதயம் பட…படா.. பட…படா… என்று வரும்.
2.அத்தனை பேருடைய கஷ்டத்தையெல்லாம் கேட்டு
3.அதற்குப் பஞ்சாயத்து செய்வதற்குப் போனார்.
4.இந்த உணர்வு பட…படா… என்று வரும்.

கடைசியில் இந்த மாதிரி ஆனவுடனே “சீனி சாப்பிடாதே…, காரத்தைச் சாப்பிடாதே… உப்பைச் சாப்பிடாதே… எண்ணெயைச் சாப்பிடாதே…” என்று டாக்டர்கள் சிபாரிசு செய்வார்கள்.

அவர் தவறு செய்யவில்லை.
1.செல்வம் இருக்கிறது.
2.ஆனால் அமைதி இருக்கின்றதோ…?

நாம் சுவாசித்த பிறருடைய உணர்வுகள் இவ்வாறு தோஷமாக வந்து விடுகின்றது. அதைத் தான் நந்தீஸ்வரா…! என்று காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

நந்தீஸ்வரன் (சுவாசிப்பது)) என்றால்
1.நாம் ஒவ்வோரு நொடியிலும் சுவாசிப்பதை உயிரான ஈசன் உருவாக்கும்.
2.நம் உடலுக்குள் போனவுடன் அதே குணத்தை உருவாக்கும்.

நந்தீஸ்வரன் எதுவாக இருக்க வேண்டுமென்றால்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று நந்தி நமக்குள் சென்று அவன் எப்படித் தீமைகளை நீக்கினானோ அதைப் போல நாமும் நமக்குள் தீமைகளை நீக்க வேண்டும்.

அப்படி நீக்குவதற்கு நாம் எப்படிச் சுவாசிக்க வேண்டும்…?

காலை நான்கு மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி… உயிரான ஈசனிடம் நினைவினைச் செலுத்தி…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
2.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று
3.நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு இப்படிச் சாப்பாடு கொடுக்க வேண்டும்.

அப்பொழுது நம் உடலில் உள்ள அணுக்கள் எல்லாம் உற்சாகம் அடையும். நோயாக மாற்றாது… பகைமையை உருவாக்காது… ஏகாந்தமான உணர்ச்சிகள் வரும்.

இதுதான் தோஷத்தைக் கழிக்கும் முறை…!

இந்தப் பிறவியே கடைசியாக இருக்கட்டும்…! – ஈஸ்வரபட்டர்

 

இச்சரீரத்தில் நாம் பெற்றுள்ள அமிலத்தின் தன்மைக்கும் இப்பூமியைச் சுற்றியுள்ள நட்சத்திரக் கோள்களின் அமிலத்தின் தன்மைக்கும் தொடர்புண்டு.

சுவை ஏழு… வண்ணம் ஏழு… நாதம் ஏழு… மணம் ஏழு… என்ற நிலையில் இந்த பூமியின் தொடர்பு நிலை மையத்தின் விகித நிலைகள் பலவாக மாறுபட்டாலும்… ஒன்றின் தொடர்பு கொண்ட வீரியத் தொடர்பில்.. பல மாற்றத்துடன் ஒவ்வொன்றும் ஜீவன் பெறுகின்றது.

ஜீவிதத்தின் தொடர்பில் ஒன்றிலிருந்து ஒன்று மாற்றப்படும் அமிலக் கலவையின் கூட்டு விகிதத்தில் செயல் தன்மை பலவாக மாறு கொள்கின்றது.

1.நொடிக்கு நொடி மாறுகொள்ளும் உணர்வின் செயல் வட்டத்தில்
2.இச்சரீரத்தின் எண்ணத்தை எப்படிப் பக்குவப்படுத்தல் வேண்டும்…? என்ற ஞானத்தைத்தான்
3.நாம் உயர் ஞானமாக்கும் வழிமுறைக்குச் செயல்படல் வேண்டும்.

நாம் வாழக் கூடிய வீட்டிற்கு முன் கதவு வைத்து நமக்குப் பாதுகாப்பிற்கான செயலுடன் வீடு கட்டிக் கொள்கின்றோம். வெளி உலகத் தொடர்பிற்கு நாம் வீட்டின் முன் கதவைத் திறந்துதான் வெளியே செயலுக்குச் செல்கின்றோம்.

உண்ண உறங்க இச்சரீரத்தின் பாதுகாப்பிற்கு வீட்டை அமைத்துக் கொள்கின்றோம். வெளி உலகத்திற்கும் வீட்டிற்கும் எப்படி முன் கதவு இருக்கின்றதோ அதைப் போன்று
1.சரீரம் என்பது நம் ஆத்மாவிற்கு வீட்டைப் போன்றது.
2.இவ்வீட்டிற்குள்ளே ஆத்மா குடியிருக்கக்கூடிய செயலானது
3.ஆத்மாவினுடைய வளர்ச்சியின் செயலுக்கான எண்ணத்தை வீட்டின் கதவைப் போன்று
4.வெளி உலகத்திற்கும் வீட்டிற்கும் எப்படிக் கதவை வைத்துப் பாதுகாப்பு அமைத்துக் கொண்டுள்ளோமோ
5.இக்கதவு என்ற எண்ணத்தைப் பாதுகாப்பின் செயலுக்காக நாம் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

இச்சரீரத்தின் உணர்வின் எண்ணத்தைக் கொண்டுதான்…
1.ஆத்மாவின் ஒளியைப் பிறவா நிலை என்ற
2.ஜோதி நிலைக்குச் செயல்படுத்திடல் முடியும்.

நிலைக் கண்ணாடியில் நம் பிம்பத்தைப் பார்க்கும் பொழுது நம்மைச் சுற்றியுள்ள பொருளையும்… நம் உருவத்தையும் எதிர்படுத்திக் காட்டுகின்றது

அதுவே இரசம் பூசப்படாத கண்ணாடியில் பார்க்கும் பொழுது வெளி உலகைத்தான் பார்க்க முடிகின்றது. நம் உருவமோ நம்மைச் சுற்றியுள்ள நிலையோ எதிர்படுத்தி இரசம் பூசாத கண்ணாடியில் பார்க்க முடிவதில்லை.

1.அதைப் போன்று இச்சரீரமென்பது நம் ஆத்மாவிற்கு இரசம் பூசப்பட்ட கண்ணாடியைப் போன்றது.
2.ஜீவனற்ற ஆத்மாவின் நிலை இரசம் பூசப்படாத கண்ணாடியைப் போன்றது.

தன் பிம்பத்தைத் தானேக் கண்டு… தன்னைச் சுற்றியுள்ள பொருளும் கண்ணாடியில் தெரிவதைப் போன்று… ஆத்மாவின் இயக்கத்தின் செயல் இச்சரீர ஜீவனில் வாழக்கூடிய செயலில்…
1.தன்னைத்தானே உணர்ந்து வளரும் வலுவிற்கு வலுக் கூட்டக் கூடியது
2.இச்சரீரத்தின் இயக்கமுடன் கூடிய ஆத்மாவின் வாழ்க்கை…!

உடலை விட்டு ஆத்மா பிரிந்து விட்டதென்றால் அவ்வாத்மாவிற்கு ஊடுருவிப் பார்க்கும் கண்ணாடியைப் போன்று எதிர் நிலையைத்தான் உணர முடியுமே தவிர “தன் ஆத்மாவை வளர்த்துக் கொள்ள முடியாது…”

ஆகவே இதைத் தெளிவாக உணர்ந்து கொண்டு
1.இப்போழுது இருக்கும் இந்த உடலையே கடைசி உடலாக எண்ணி…
2.உயர் ஞானத்தை இச்சரீரத்தில் விளைவித்து…
3.ஆத்மாவைப் பேரொளியாக ஆக்கி…
4.மகரிஷிகள் வாழும் இடம் செல்ல வேண்டும்.
5.அழியா ஜோதி நிலை பெற வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இருதயத்தில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை வலு ஏற்றி “நம் மன பலத்தைக் கூட்டிச் சிந்தித்துச் செயல்படும் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளும் வழி”

இந்த வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று மனதைத் தெளிவாக்கிக் கொள்ல வேண்டும்.

அந்த அருளைப் பெருக்கி இருளை அகற்றி நம்மை அறியாது வரும் தீமைகளைப் “பற்றற்றதாக…” மாற்றி
1.அருள் மகரிஷிகளின் உணர்வைப் பற்றுடன் பற்றி
2.அன்புடனும் பண்புடனும் பரிவுடனும் ஒன்றி வாழும்
3.அருள் குடும்பமாக நாம் மாற்றியாக வேண்டும்.

நம் குடும்பம் கூட்டுக் குடும்பமாக இருந்து பின் நாம் தனித்து நிற்க வேண்டிய சூழல் இருந்தாலும் பண்புடன் வழிகாட்டி பண்புடன் அரவணைத்து அன்புடன் அரவணைத்து வாழ வேண்டும்.

தனிக் குடும்பமாகச் சென்றாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கூட்டும் பொழுது அரவணைத்து வாழும் சக்தியை நாம் பெறமுடிகின்றது.

இதே போல உங்கள் வாழ்க்கையில் குடும்பத்தில் கஷ்டமானாலும் தொழிலில் நஷ்டம் என்றாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

எங்கள் இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று இருதயத்தில் வலுவேற்றிக் கொள்ள வேண்டும்.

அப்போது சிறிது நேரத்திலேயே நல்ல சிந்தனை வருகின்றது. ஏனென்றால்
1.உடலிலுள்ள எல்லா உறுப்புக்களுக்கும் எல்லா உணர்வுகளுக்கும்
2.உந்தித் தள்ளும் அந்த உணர்ச்சிகள்
3.இருதயத்திலிருந்து தான் (இரத்தத்தின் வழி) செல்லுகின்றது.

இருதயத்திலிருந்து உங்கள் உடல் முழுவதும் படரப்படும் பொழுது சிறு மூளையின் பாகத்திற்குச் சென்ற பின் சிந்திக்கும் ஆற்றலைக் கொடுக்கின்றது.

1.எதைச் செய்தால்… எது நல்லது…?
2.எப்படி இருந்தால் நமது வாழ்க்கையில் நல்லதாக இருக்கும்…?
என்று சிந்திக்கும் ஆற்றல் வருகின்றது.

அந்த அருள் உணர்வைப் பெருக்கும் பொழுது தீமைகளை நீக்கி நல் உணர்வைப் பெறும் ஞானம் சாந்தம் விவேகம் என்ற உணர்வுகள் நமக்குள் ஊடுருவிச் சென்று
1.நம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்த இது உதவும்.
2.வேறு யாரும் சொல்லி நம் வாழ்க்கையைச் சீர்படுத்த முடியாது.

ஆகவே உங்களுக்குள் வரும் உணர்வுகளைத் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெற்று இந்தத் தியான முறைப்படிச் செய்து வந்தீர்கள் என்றால் உங்களுக்குள் அருள் ஞானம் பெற்று இருளை அகற்றி மெய்ப் பொருளை காணும் திறன் நீங்கள் பெறமுடியும்.

இல்லை என்றால் உங்களுக்குள் வெறுப்பு வேதனை என்று ஆகி அதற்குத் தகுந்த உங்களுடைய சொல்லும் செயலும் செயல்படத் துவங்கி விடுகின்றது.

பிறிதொருவர் உங்களிடம் நல்லதைச் சொன்னாலும் ஏற்காதபடி இந்த நியாயத்தைத் தான் பேசுவீர்களே தவிர
1.பண்பை ஏற்றுக் கொள்ளும் தன்மையோ
2.பண்பை வளர்த்துக் கொள்ளும் நிலைகளோ
3.வரக்கூடிய தீமைகளை அகற்றக் கூடிய நிலைகளோ
4.நமக்குள் வருவது மிகவும் சிரமம்.

பரமாத்மாவிற்கு நாம் செய்ய வேண்டிய சேவை

 

நம் பூமியில் எங்கெங்கே எந்தெந்த ஊர்களில் பயமும் அதிகமான வெறுப்பும் வேதனையும் கொதிப்பும் கொண்டு அந்த உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்களோ
1.இவை அனைத்துமே மேக மண்டலங்களில் கலக்கின்றது.
2.மழை நீராகப் பெய்யும் பொழுது கடும் நோயாகவே மாற்றுகின்றது.

இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் இன்று விஞ்ஞான அறிவு கொண்டு எத்தனையோ புதிது புதிதாக உருவாக்குகின்றார்கள்… படைக்கின்றார்கள். அதில் உள்ள தீமைகளை அகற்றுகின்றார்கள். ஆனாலும்
1.அதிலே நஞ்சினைக் கலக்கின்றான்
2.தீமைகளை அகற்றுவதற்காக இத்தகைய நிலையைச் செயல்படுத்துகின்றான்.
3.தீமையை நீக்கிய அந்த நஞ்சின் உணர்வுகளைச் சூரியன் ஆவியாக மாற்றுகின்றது
4.மேகக் கூட்டங்களில் கலக்கின்றது… மழை நீருடன் கலக்கின்றது.
5.விஷத்தன்மைகளை உலகெங்கிலும் பரப்புகின்றது.

உலக மக்களுடன் நாம் அன்றாடம் பழகுகின்றோம்… உலகத் தொடர்பும் கொண்டுள்ளோம். அதன் மூலம் விஞ்ஞான அறிவால் உலகெங்கிலும் நடக்கக்கூடிய சம்பவங்களை ஒரு நொடிக்குள் நாம் காண நேருகின்றது.

எல்லாவற்றையும் படமாக்கி டி.வி. பத்திரிக்கை மூலம் ஒலி ஒளி என்ற அலைகளைப் பரப்புகின்றனர்.
1.அந்த ஒலிகள் நம் செவிகளில் படுகின்றது… உணர்ச்சிகள் தூண்டப்படுகிறது
2.தூண்டியவுடன் கண்ணின் நினைவாற்றலை அங்கே செலுத்துகின்றோம்… அந்த அசம்பாவிதங்களைக் கண் கவர்கின்றது…
3.கவர்ந்த்தை மூக்கின் வழியே நாம் சுவாசிக்கின்றோம்… உயிருடன் இணைக்கப்படுகின்றது… உணர்வின் அறிவாக அறிகின்றோம்.

அதன் உணர்வாக நமது உயிர் “ஓம் நமச்சிவாய…” என்று நம் உடலாக மாற்றி விடுகின்றது. உடலுக்குள் அணுவாக்கி விட்டால் நாம் எதை வேடிக்கை பார்த்தோமா… எதை ரசித்தோமோ… அங்கே நடக்கும் அசம்பாவிதங்களைப் பார்த்தவுடன் அந்த உணர்வின் கருவாக இங்கே உருவாகி அதன் உணர்வாகவே நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.

உலகில் எங்கெங்கு சிதைந்திடும் நிலையாகிப் போர்க்களங்கள் ஆகி மடியச் செய்யும் உணர்வுகள் பெற்றதோ அதை எல்லாம் நுகர்கின்றோம்.
1.அங்கே மடிகின்றான் என்று உணர்கின்றோம்
2.இதே உணர்வு நமக்குள் வரும் போது நமக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளை அது மடியச் செய்கின்றது
3.மனிதனை மடியச் செய்யும் உணவுகளை வளர்க்கின்றது.

நுகர்ந்த உணர்வுகள் எதிரி என்று ஆகிறது. நன்மைகளை இழக்கச் செய்கிறது… பகைமையை வளர்க்கின்றது.

அதை எல்லாம் செயலற்றதாக ஆக்குவதற்குத்தான் நமது குரு காட்டிய வழியில் கல்யாணராமா…!
1.நம் எண்ணங்கள் உணர்வுகளை ஒன்றாக்கிப் பகைமை என்ற காண்டீபத்தை ஒடித்துவிட்டு
2.அன்பென்ற அரவணைக்கும் சக்தியை வளர்த்து உயர்ந்த நிலைபெறச் செய்வதற்கு இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

யாம் உபதேச வாயிலாகக் கொடுக்கும் இந்த அருள் உணர்வுகளைக் கூட்டமைப்பாக எடுத்து நீங்கள் ஒவ்வொருவரும் அந்த ஞானிகளின் உணர்வுகளை மூச்சலைகளாக வெளிவிடும் போது சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்கின்றது. அந்த அருள் உணர்வுகள் மேகங்களில் கலக்கப்படுகின்றது.

மேகக் கூட்டங்களில் இந்த உணர்வுகள் பரவப்படும் போது
1.உலக மக்கள் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவருடனும் பற்று கொள்கின்றோம்
2.நமக்குள் அந்த அருள் பாசத்தை வளர்த்துக் கொள்கின்றோம்.

எதை வைத்து…?

இந்தப் பேரானந்தத்தைப் பேரின்பத்தை எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்று செலுத்தப்படும் போது அதே உணர்வின் தன்மை பேரின்பம் பெறும் உணர்வின் தன்மையை நமக்குள் வளர்க்கின்றது.

இத்தகைய உணர்வினை நாம் வளர்த்துக் கொண்டால் அந்த மூச்சலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது.
1.பரமான நம் பூமியின் எல்லையில் “பரமாத்மாவாக…” மாறுகின்றது.
2.பூமியில் வாழும் மக்கள் அனைவரும் இந்த பரமாத்மாவிலிருந்து அந்த அருள் உணர்வுகளைச் சுவாசிக்கும் போது அவருடைய “ஆன்மாவாக…” அது மாறுகிறது.
3.அப்போது அருள் உணர்வுகளை அங்கே இயக்கி… பேரின்பம் பெறும் உணர்வின் தன்மை அவர்கள் “ஜீவான்மாவாக…” மாறுகின்றது.

ஜீவாத்மாவாக மாறும் பொழுது பகைமையற்ற உணர்வுகளையும்… மகிழ்ந்து வாழ்ந்திடும் உணர்வுகளையும்… ஒன்றுபட்டு வாழும் உணர்வுகளையும்… அணுக்களாக மாற்றப்படும் பொழுது அது அவர்களின் “உயிரான்மாவாக…” மாறுகின்றது.
1.உயிருடன் ஒன்றி உணர்வினை ஒளியாக மாற்றும் தன்மையும்
2.பிறவியில்லா நிலை என்ற நிலையையும் அடைகின்றனர்.

ஆகவே நமது எண்ணங்கள் எவ்வாறோ அதன் வழியே அது நடக்கின்றது. அது தான் கீதையிலே நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்.

தெய்வ சக்தி பெற்ற மனித உயிராத்மாக்கள் தான் படைக்கப்படும் படைப்பிற்குத் தேவை – ஈஸ்வரபட்டர்

 

1.சிவனான ஆண் குண வலுவைக் கொண்டு
2.சக்தியான பெண் உணர்வின் எண்ண அமில ஈர்ப்பின் ஜீவித தொடர்பால்
3.இரண்டு ஆத்மாக்களின் ஈர்ப்பு வட்டம் ஒன்றின் தொடர்பு கொண்டு எடுக்கப்படும் தியான அலையின் வலுவைக் கூட்டக் கூட்ட
4.அவ்வலுவின் வளர்ச்சியால் ஆத்ம ஐக்கிய உணர்வு சரீர வாழ்க்கை பந்தத் தொடர்பில்
5.ஒரே எண்ண குண தொடர்பின் சுழற்சியில் வளர வேண்டும்.

ஏனென்றால் அப்படிப்பட்ட உயர் நிலையில் வளர்ச்சிக்கு வரும் இந்த மனித சக்திகளால் தான் ஒவ்வொரு கோள்களாகவும்.. ஒளி சக்தி கொண்டு ஒளிரும் சக்தியாகவும்… நம் பூமியில் சூரியனின் ஒளி அலைகள் வீசத்தக்க ஈர்ப்பின் தொடர் கொண்டு வளர்ந்துள்ள இயற்கை வள கனி வளங்களும் தாவர இனங்களும் உருவக அமைப்பின் தன்மையும் எல்லாமே உருப்பெற்று உள்ளன.

இன்று ஓர் பலூனை ஊதும் பொழுது… எந்த வடிவ அமைப்பில் அது உள்ளதோ… எந்த அளவுக்குக் காற்றின் அழுத்தத்தைச் சேமித்து உப்பக்கூடிய நிலை அதற்குள் இருக்கின்றதோ… அதனுடைய வடிவை அது பெறுகிறது. அதிகப்படும் பொழுது பலூன் வெடித்து விடுகின்றது.

அதைப் போன்று தான் உயிரணுவின் தோற்றத்தின் உருவ நிலைகள் யாவுமே…! மரம் செடி கொடிகள் மற்ற இன வர்க்கங்கள் ஒவ்வொன்றுமே
1.அதனதன் ஆத்ம அமிலச் சேர்க்கையின் நிலைக்கொப்ப
2.உயிர் பெறும் உருவக அமைப்பில் இப்பூமியின் காற்றழுத்த ஈர்ப்பின் வளர்ச்சி கொண்டு வளரும் தன்மை பெறுகிறது.
3.ஆனால் இது பிற கோள்களின் நிலையில் மாறுபடுகின்றது.

மனித உயிர் ஆத்மாவின் அமிலக் கூறின் உயிர் பெற்று ஜீவ வளர்ச்சியின் பருவக்காலம் வரை சேமிப்பின் அமில உருவக நிலை வளர்ந்தாலும் உருவ வளரச்சி நிலை பருவ காலத்திற்குப் பின் உயரும் நிலை தடைப்பட்டு விடுகின்றது.

இப்பூமியின் எந்தெந்த இடங்களில்… எக்காற்றின் அலைத் தொடர்பில் ஜீவன் பெறுகின்றதோ… அதற்கொப்பத்தான் அங்கங்குள்ள மனித இனங்களும்… மற்ற தாவரங்களும்… பிராணிகளும் உருவகம் பெறுகின்றது.

ஏறக்குறைய இப்பூமியின் அமைப்பின் சுழற்சியிலேயே சிறிது சிறிது மாற்றங்களுடன் உருவக வளர்ச்சி நிலைகள் யாவையும் வளர்கின்றன.

சில அபூர்வமாக உயரமாக வளரக்கூடிய தன்மைகள் மட்டும் அமிலத்தின் சேர்க்கை விகித நிலைக்கொப்பக் கூடியும் குறைந்தும் வளர்கின்றது.

இன்று நம் பூமியின் தன்மைக்கும் மற்றக் கோள்களின் தன்மையும் மாறுபாடான நிலை தான் உண்டு. உதாரணமாக சனி கிரகத்தில் மனித ஜீவனின் உணர்வின் எண்ணம் கொண்டு வாழக்கூடிய தன்மைக்கு சனிக் கோளின் அமைப்பு நிலை மாறுபட்ட தன்மையாக உள்ளது.

ஜீவனுள்ள உயிர் அணுக்கள் அங்கு வளர்ந்தாலும் இங்கு எப்படி கல் மண் மேல் படிந்துள்ள பாசி போன்று அங்கங்கு உள்ள ஜீவ வளர்ச்சி நிலையில் உள்ளது போல் தான் உண்டு. நம் பூமியில் உள்ளது போல் அவைகள் நகரும் தன்மையோ நடந்து பறக்கும் நிலை போன்று அங்கில்லை.

ஓர் ஜீவ உயிர் சனியில் பிறந்ததென்றால் அப்பூமியின் பிடிப்பில் ஒன்றியே பிறப்பெடுத்து இறுகிய நத்தைக்கும் மற்றச் சில பிராணிகளுக்கும் இருப்பதைப் போன்று கெட்டியான ஓடுகளுடன் பிறப்பெடுத்து அப்பிறப்பின் இறப்பிலேயே மாறும் தன்மையும் உள்ளது.

சனிக்கோள் அதி குளிரின் ஈர்ப்புப் பிடிப்பிற்கொப்ப சுழல்வதால் பிற கோள்களின் சந்திப்புச் செயல்நிலை இருந்தாலும் உஷ்ண அலையின் சமைப்பு நிலைக்கு நம் பூமியின் தன்மை போன்ற நிலை இல்லாததினால் மனிதர்கள் யாரும் அக்கோளில் பிறப்பெடுக்க முடியாது.

நம் பூமியிலிருந்து பார்த்தால் சந்திரனின் பௌர்ணமி நிலவு தெரிவதைப் போன்று தான்… சனியைச் சுற்றியுள்ள பன்னிரண்டு கோள்களின் நிலையிலும்… சனிக்கோளின் சுழற்சி சந்திப்பிற்கொப்ப இங்கெப்படி அமாவாசை பௌர்ணமி என்று ஒரு சந்திரனின் தொடர்பில் அறிவது போன்ற நிலை உண்டு.

சனிக் கோளின் தொடர்பு கொண்ட பன்னிரண்டு கோள்களும் அவை எடுத்து வெளிக் கக்கும் அலை அமில நிலைக்கொப்ப சனியின் சுழற்சி ஓட்டமும் பூமியைக் காட்டிலும் குறைவான நிலையிலும்
1.இரவில் சந்திர ஒளியின் வெளிச்ச அலையை எப்படி நாம் இங்கு காண்கின்றோமோ அதற்கொப்ப
2.குளிர்ச்சியில்… சனிக்கோளும் சனிக்கோளின் உப கோள்களும் மிகவும் ரம்மியமாய் செயல்படக் கூடிய நிலையில்
3.நம் சூரியக் குடும்பத்தில் ஜீவனைத் தரக்கூடிய மையமாக உள்ளது
4.சனியின் தொடர்பு நமக்குக் கிட்டும் வலுவில்தான் நம்முடைய ஜீவ நாடியே உள்ளது

சனிக் கோள் நம் சூரியக் குடும்பத்தின் ஜீவனான நீர் சக்திக்கே மிகவும் முதன்மையானது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று ஜோசியம் ஜாதகம் என்ற நிலையில் நீங்கள் வேண்டி விரும்பிப் பார்க்கிறீர்கள். அதில் இருக்கும் உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு சமயம் யாம் (ஞானகுரு) சுற்றுப் பயணம் வந்து கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். நம்மிடம் அவர் பழகியிருந்தார்.

அவரிடம் சினிமா தியேட்டர் ஒன்று உண்டு. அவர் குடும்பத்தில் அதாவது ஏறுசிங் இறங்குசிங் என்ற நிலையில் விவசாயம் செய்து கொண்டிருந்தால் பயிர் நன்றாக விளைச்சலாகி வரும். பின் சில சமயங்களில் அதில் ஒன்றுமே விளைந்திருக்காது.

சினிமா தியேட்டர்… ரைஸ் மில்… என்று எத்தனையோ வைத்திருந்தார். அவை அனைத்தும் ஓடும். ஆனால் காசு இருக்காது. மூடியே கிடந்தது.

இப்படி அவர் முயற்சி எடுத்து எத்தனையோ செய்து பார்த்திருக்கிறார்… முடியவில்லை.

அப்போது யாம் கொல்லூர் மூகாம்பிகையில் தியானம் இருந்தோம். மூகாம்பிகாவைக் கடந்து குடசாஸ்திரி என்று ஒன்று உண்டு. அங்கே மேலே தபோவனம் உண்டு.

அங்கே ஐந்து ஆறு வருடம் இருந்தேன்.

இங்கே அடிக்கடி வந்து சென்றாலும் அங்கே சென்று தியானத்தை மேற்கொள்வது. ஆதிசங்கரரின் இயக்கம் கோலமாமகரிஷி அவர் பெற்ற நிலையும் அந்த உணர்வின் தன்மை அறிவதற்காக இந்தத் தியானத்தை அங்கே மேற்கொண்டேன். கோலமாமகரிஷி பெற்ற உணர்வுகளை அறிவதற்கு இந்தத் தவத்தை மேற்கொண்டது.

இந்த நண்பர் தன் தியேட்டர் ஓடாததையும் விளைச்சல் இல்லாததையும் பற்றி என்னிடம் வந்து விபரம் கேட்டார்.

அதற்கு நீங்கள் இந்த மாதிரிச் செய்யுங்கள் என்று நான் சில விபரங்களைச் சொன்னேன்.

அதன் பின் அவர் வீடுகளில் புதைத்து வைத்திருந்த சில யந்திரங்கள் தகடுகள் எல்லாம் வெளி வந்திருக்கின்றது. வந்த பின் எனக்குத் தபால் எழுதியிருந்தார்.

எல்லாமே எடுத்துவிட்டோம். தன்னாலேயே அது எப்படி வந்தது…? என்று தெரியவில்லை.. எனக்கு அந்த உணர்வு தோன்றியது. அதை வைத்து எல்லாவற்றையும் எடுத்து விட்டேன் என்று கூறினார்.

மறுபடி தீபாவளி அன்று சினிமா தியேட்டரில் படம் ஓட்டப் போகின்றேன். அந்தச் சமயம் “சாமிகள்” நீங்கள் வர வேண்டும் என்று எனக்குத் தகவல் கொடுத்திருந்தார்.

மூகாம்பிகாவிலிருந்து பண்ணாரி வந்து அங்கே இருந்தேன்.

“என்ன நடக்கின்றது…!” என்று பார்த்துவிட்டுத் தீபாவளி அன்று மதியம் இரண்டு மணிக்கு நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.

இங்கே படம் ஓட்டுகிறார்கள். படம் ஓட்டினால் சத்தம் இல்லை. சத்தம் வந்தால் படம் தெரியவில்லை. டிக்கெட் எல்லோருக்கும் கொடுத்திருக்கின்றார்கள். ஆனால் படம் ஓட மாட்டேன் என்கிறது.

இருக்கிறவர்கள் பொறுமை இழந்து தியேட்டரே அல்லாடிக் கொண்டிருக்கின்றது. காசைக் கொடு என்று இந்த மாதிரி சூழ்நிலைகள் அங்கு வந்துவிட்டது.

அப்பொழுது நான் அங்கே வருகின்றேன்,

“சாமி வருவார்…! வந்தால் தியேட்டருக்குள் உள்ளே விட்டுவிடுங்கள்…” என்று அவர் ஏற்கனவே சொல்லி வைத்திருக்கின்றார்.

நான் தியேட்டருக்குள் போய் உட்கார்ந்தேன். உட்கார்ந்த உடனே படம் பாட்டுக்கு தாராளமாக ஓடுகிறது.

நன்றாக ஓடியவுடனே விழுந்தடித்து ஓடி வந்தார். யாராவது வந்தார்களா…?

ஆமாம்…! சாமி உள்ளே உட்கார்ந்து இருக்கிறார்… என்று சொல்கிறார்கள்.

அப்புறம் உள்ளுக்குள் வந்தார். படம் முழுவதும் ஓடி முடியும் வரையில் கூடவே இருந்தார்.

இந்த நண்பர் ஏற்கனவே இந்த ஜோசியம் ஜாதகம் எல்லாம் பார்த்து அடிக்கடி பதிவு செய்து கொண்டவர்,

இவர் நட்சத்திரம்… இவர் பெயர்… இவர் பூர்வ புண்ணியம்… இவர் எந்த எந்த வழி…? என்கிற வழியில் சொல்லால் அங்கே ஜாதகம் பார்க்கிறவரிடம் பதிவு செய்திருக்கிறார்.

தியேட்டர் வைத்திருக்கின்றார். ஆனால் இவருக்கு ஆகாதவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள்…?

இவருக்கு ஆகாதவர்கள் அந்த ஜாதகம் பார்ப்பவரிடம் குறிப்பை எடுத்துக் கொண்டு இவருக்கு “எந்த வகையில் கெடுதல் செய்வது…? என்று பார்க்கின்றார்கள்.

அந்த ஜோசியக்காரர் என்ன செய்கிறார்…?

காசை வாங்கிக் கொண்டு இவருடைய தியேட்டரைச் சூனியமாக்கி விவசாயத்தை நாஸ்தியாக்கும் நிலைக்குச் சூனியம் ஏவல் செய்து வைத்துவிட்டார்.

அதற்காக அந்த ஜோசியக்காரருக்கு நிறையக் காசு கிடைக்கிறது.

ஆனாலும் அந்த ஜோதிடக்காரர் ஜாதகம் பார்ப்பதில் பேரும் புகழும் கொண்டவர். குட்டிச் சாத்தானை வைத்துக் கொண்டு நீங்கள் நினைப்பதை எல்லாம் சொல்வார்.

ஆகையினால் பெரிய ஜோதிடக்காரர் ஆகி விடுகிறார்.

ஜோதிடம் ஜாதகம் எல்லாம் நன்றாகப் பார்க்கிறார்… நன்றாகத் தெளிவாகச் சொல்கிறார்…! என்று தேடி வருகின்றார்கள்.

குட்டிச் சாத்தானையும் கருவித்தைகளையும் வைத்து ஜாதகம் பார்ப்பதில் இப்படியெல்லாம் சில வேலைகள் செய்கிறார். அந்தக் கருவித்தைகளைப் பார்த்து வருபவர்களுடைய ஜாதகங்களைப் பார்ப்பது. அதன் வழியில் அவர்களுக்கு எல்லாம் சொல்கிறார்.

இதை நான் (ஞானகுரு) அனுபவத்தில் உங்களிடம் சொல்கிறேன்.

ஏனென்றால்
1.ஜாதகம் பார்ப்பதால் எத்தனையோ பேர் கெட்டிருக்கின்றார்கள்.
2.ஜாதகங்கள் பார்த்து எத்தனையோ குடும்பங்கள் எல்லாவற்றையும் தொலைத்திருக்கின்றார்கள்.
3.அந்த நம்பிக்கையினால் எத்தனையோ பேர் தன்னை இழந்து அவதிப்பட்டிருக்கின்றார்கள்.
4.அவரவர்கள் அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்.
5.ஆயிரத்தில் ஒன்று இரண்டு தான் தப்பித் தவறி நல்லதாக நடந்திருக்கும்.

ஜாதகக்காரரும் என்னுடைய இந்த நண்பர் வீட்டிற்கு அங்கே வந்திருக்கின்றார். ஏனென்றால் அடிக்கடி நான் அங்கே போகக்கூடியவன்.

ஆனால் அந்தச் சமயத்தில் வெளியில் வரப்படும் போது என்னைப் பற்றிய உண்மையைச் சொல்ல மாட்டேன். “சாமியார்…” என்று சொல்ல மாட்டேன். அரசியல் பற்றி ரொம்பக் கடுமையாகப் பேசிக் கொண்டு இருப்போம்.

ஆகையினால் யாருக்கும் நான் “சாமி…” என்கிற வகையில் தெரியாது. “சாமி..” என்கிற வகையில் தியேட்டரில் ஓடாத படத்தை ஓட வைக்கும் பொழுது தான் தெரியும்.

அதே சமயத்தில் சூனியம் வைத்த அந்த ஜோதிடம் பார்ப்பவர் என் நண்பரிடம் (தியேட்டருக்கு வந்து) வந்து சொல்கிறார்.

எனக்கு வீட்டுக்குப் போவதற்குக் கண் தெரிய மாட்டேன் என்கிறது. இந்த பக்கம் வருவதற்குத்தான் எனக்குக் கண் தெரிகிறது என்றார்.

“என்ன…!” என்று நண்பர் கேட்டார்.

நான் இன்னென்ன தவறுகளையெல்லாம் செய்திருக்கின்றேன். உங்களுக்குக் கெடுதல்கள் செய்திருக்கின்றேன்.

அவர் “தன்னாலே…” உண்மைகளை வெளிப்படுத்துகிறார்.

இந்த மாதிரி இங்கே ஒரு சாமியார் உட்கார்ந்திருக்கிறார் என்கிறார் அவர்.

“எந்தச் சாமியார்..?” என்று கேட்டார்.

அவர் உங்கள் கடைக்குக் கூட அடிக்கடி வந்திருக்கின்றார். நான் கூட உங்கள் கடைக்கு அடிக்கடி வந்து அவர் அரசியல் பேசும் பொழுது பார்த்திருக்கிறேன் என்று சொல்கிறார்.

“அப்படியா…” சரி பார்க்கலாம்…! என்று என்னிடம் அழைத்து வருகிறார். இந்தப் பக்கம் தான் (நான் இருக்கும் பக்கம்) வருகிறார். அந்தப் பக்கம் போனால் அவருக்குக் கண் தெரிய மாட்டேன் என்கிறது.

சாமியைப் பார்த்து நான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொல்கிறார். நான் காசை வாங்கி இத்தனைத் துரோகம் செய்து விட்டேன் என்றும் அவர் சொல்கிறார்.

அவர் இப்படிப் பேசியவுடன் என்னிடம் கூப்பிட்டு வந்தார். நான் தியேட்டருக்குள் உட்கார்ந்திருந்தேன்.

வந்தவுடன் நமஸ்காரம் செய்துவிட்டு நான் பாவங்கள் நிறையச் செய்துவிட்டேன் என்றார்.

நான் ஜாதகம் பார்த்ததுடன் மட்டும் இல்லாமல் பணத்தின் மீது ஆசைகள் கொண்டு ஒருவருக்கொருவர் அங்கங்கே போய்க் கேட்டுச் சில விபரங்களைத் தெரிந்து கொண்டு அதற்குத் தகுந்த தீயவினைகளைச் செய்தேன்.

அதனால் இப்பொழுது எனக்கு அந்தப் பக்கம் போனால் கண் தெரிய மாட்டேன் என்கிறது என்றார். அவர் செய்த உணர்வுகள் அவருக்குள் உள்ள அனைத்தையும் சொன்னார்.

என்னை மன்னித்துவிடுங்கள்… இனிமேல் இந்தப் பாவச் செயலைச் செய்யவே மாட்டேன் என்று சொல்கிறார்.

சரி.. என்று சொல்லி ஆசீர்வாதம் செய்தேன்.

இனிமேல் யாருக்கும் இந்தத் தீங்கைச் செய்யாதே. இந்த ஜாதகத்தைத் தொடாதே… நீ ஜாதகத்தைத் தொட்டால் மீண்டும் இந்தக் காசு ஆசைதான் வரும் என்று சொல்லி அனுப்பினேன்.

ஏனென்றால் இதைப் போன்ற ஜாதகக்காரர்கள் மக்கள் யார் யாரிடம் எல்லாம் போகிறார்களோ அங்கெல்லாம் போய் அவர் ஜாதகங்களைப் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வது.

ஜோதிடம் பார்ப்பதற்காக வரும் மனிதர்களின் நட்சத்திரம் என்ன…? ஏது…? அவர் உணர்வு என்ன…? என்று எல்லாம் அடுக்கு வரிசையில் தெரிந்து கொண்டு தன் இந்த மாதிரித் தவறுகளைச் செய்கின்றார்கள்.

இந்த லாட்ஜுகளில் கேம்ப் போட்டுச் செய்கின்றார்கள். இவர்களிடமெல்லாம் இந்த மாதிரி வேலைகள் ஏராளமாக உண்டு. ஒன்றும் தெரியாதது மாதிரிச் சொல்வார்கள்.

இதை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே அனுபவபூர்வமாக நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்கிறேன்.

“மனிதனுக்கு ஜாதகம் இல்லை”

மனிதன் அடைய வேண்டிய முழுமையின் நிலை

 

ஆதியிலே ஆவியாக இருந்தது அணுத் தன்மை அடைந்தது. பல அணுக்கள் ஒன்றாக இணைந்து கோள் என்ற நிலை அடைகின்றது. கோள் என்ற நிலை அடையும் பொழுது அதனின் வளர்ச்சியில் நட்சத்திரமாக மாறுகின்றது.

நட்சத்திரமாக ஆனபின் தன் மலத்தால் (பால்வெளி மண்டலம்) பிரபஞ்சத்தை உருவாக்கும் நிலை பெறுகின்றது… உணர்வின் இயக்கமாக மாறுகின்றது. ஒரு அமிலத்தின் தன்மையாக மாற்றி அமைக்கும் சக்தி பெறுகின்றது.

பின்… பிற மண்டலங்களின் சக்திகளைத் தனக்குள் நுகர்ந்து அந்த நட்சத்திரம் சூரியனாக மாறுகின்றது. சூரியன் ஆகும் போது தனது வளர்ச்சியில் அதன் வளர்ப்பில் ஓர் பிரபஞ்சம் என்ற நிலையை உருவாக்குகின்றது.

பிரபஞ்சம் என்று உருவான பின் அதில் சேர்க்கும் உணர்வின் தன்மை நட்சத்திரங்களின் இயக்கமாக ஒரு உயிரணு என்று உருவாகின்றது. அந்த உயிரணுவோ தான் நுகர்ந்த உணர்வின் தன்மையை அணுவாக மாற்றுகின்றது.

தாவர இனங்கள் உணர்வின் தன்மையை இந்த உணர்வுக்கொப்ப அந்தச் செடியின் ரூபமும் மணமும் அதன் இயக்கமும் என்ற நிலையை அடைகின்றது.

இதைப் போன்று பல நிலைகளைக் கவர்ந்து கொண்ட நிலைக்கொப்ப
வண்ணங்கள் மாறுகின்றது…
சுவைகள் மாறுகின்றது…
குணங்கள் மாறுகின்றது…
உணர்ச்சிகள் மாறுகின்றது.

1.ஆக… கோளாக இருப்பது இருண்ட நிலையிலிருந்து வேகும் நிலைகள் கொண்டு நட்சத்திரமாக எப்படி ஆனதோ
2.இதைப்போன்று நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தையும்
3.இந்த உயிருடன் ஒன்றிய ஒளியின் நட்சத்திரமாக என்று மாற்றுகின்றோமோ
4.அதுவே மனிதன் அடைய வேண்டிய முழுமையின் நிலை.

சூரியன் எவ்வாறு ஒளியாக மாற்றுகின்றதோ அதைப்போல உயிரின் தன்மை ஒளியாக மாற்றும் தன்மை பெறுகின்றது.

இதை எல்லாம் முழுமையாகக் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன். அவன் திருமணமான பின்
1.தான் கண்ட பேருண்மைகளை எல்லாம் தன் மனைவிக்குப் போதிக்கின்றான்
2.மனைவியும் கணவருடன் ஒன்றி ஒத்துழைக்கின்றது…
3.இருவரும் ஒன்றென இணைந்து இரு உயிரும் ஒன்றன இணைந்து உணர்வின் தன்மை ஒளியாகி ஒளியின் சரீரமாகத் தனக்குள் படைத்து
4.எந்தத் துருவத்தை உற்று நோக்கி அந்த ஆற்றலை நுகர்ந்தனரோ அதையே எல்லையாக வைத்து
5.பூமி கவரும் உணர்வினை ஒளியாக மாற்றி கொண்டுள்ளார்கள்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமையை அகற்றிய அத்தகைய அருள் ஞானியின் உணர்வுகள் இந்தப் பிரபஞ்சத்தில் பரவுகின்றது. நமது பூமி துருவப் பகுதி வழியாக அதைக் கவர்கின்றது.

துருவத்தின் வழி பூமிக்குள் வருவதை
1.ஆதியிலே அகஸ்தியன் கண்ட உண்மை போல அவன் கண்டறிந்த உண்மையை
2.நமது குருவும் கண்டுணர்ந்தார்… அதனை நுகர்ந்தார்
3.நுகர்ந்ததைத் தனக்குள் விளைய வைத்தார்… அருள் உணர்வினை வெளிப்படுத்தினார்
4.எம்மை நுகரும்படி செய்தார்… அவர் கண்ட அந்த உண்மையின் உணர்வை யாமும் அறிய முடிகின்றது.

அறிந்த உணர்வை இப்பொழுது உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். பதிந்த உணர்வினை நீங்கள் உங்களுக்குள் உருவாக்கினால் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிடும் சக்தி பெற முடியும். இந்த உடலுக்குப்பின் பிறவி இல்லை என்ற நிலையை அடையலாம்.

இல்லறத்தில் இருந்து உயர் ஞான வளர்ச்சி பெற முடியுமா…? ஈஸ்வரபட்டர்

 

சகலத்தின் சக்தியையும் சகலமாக்கித் தன்னைத்தானே தான் உணரும் உயர் ஞான ஒளி சக்தியாய் உயரும் வழித் தொடருக்கு… எண்ணத்தின் உணர்வு பக்குவ முறை கொள்தல் வேண்டும்.

இப்பூமியின் ஈர்ப்புப் பிடிப்பின் சுழற்சியில் இருந்து விடுபட எண்ணத்தின் வலுவை முதலில் பக்குவ நிலைக்கு நாம் செயல் படுத்துதல் வேண்டும்.

வாழ்க்கையில் இருந்தே நம் தியான முறையை வழிப்படுத்தும் சமமான நற்குண செயல் வழியை எண்ணத்தின் உணர்வு செயல்படும் முறை பக்குவத்தில்
1.உடல் உணர்வில் உந்தப்படும் இல்லற உணர்வின் வழித் தொடர் உகந்ததா…?
2.அந்த உடல் உணர்வின் உந்தலைச் சமப்படுத்தும் பக்குவத்தில் அடக்கும் பக்குவம் உகந்தந்தா…?
3.உடல் இச்சையின் உணர்வின் உந்தலில் எப்படிச் செயல்படுவது…? என்ற வினா ஒவ்வொருவருக்கும் எழும்பலாம்.

அதாவது தாம்பத்ய வாழ்க்கை உகந்த நிலையா…? பிரம்மச்சர்ய நிலையில் உயர்வு நிலை பெற முடியுமா…? என்ற வினா எழும்பலாம்.

ஆரம்ப மனித உணர்வின் வழித்தொடரே தாவர நிலைக்கடுத்த வளர்ச்சி நிலை யாவையும் நீரிலிருந்து உயிர் ஆத்ம ஜீவன்கள் பிறப்பெடுத்து வந்தது.

அதன் பின் (கடல் வாழ்) தாவர இனங்களில் இருந்து வளரும் புழு பூச்சிகள் உடல் உணர்வின் ஆண் பெண் இனச் சேர்க்கையில் வளரும் நிலை இல்லாமல் தாவரங்களின் உஷ்ண அலை வெளிக் கக்கும் அமிலத்தின் பிசின் போன்ற வழுவழுப்பான அமிலத்தின் கெட்டித் தன்மையில் உயிர் அணுக்கள் சிறு புழு பூச்சிகள் உற்பத்தியாகும் நிலை இனச் சேர்க்கையின்றி வளரும் நிலை தான் உண்டு.

நீரிலிருந்து உயிரணு தோன்றும் வளர்ச்சியில் இனச் சேர்க்கையில் ஆண் பெண் என்ற நிலை அபூர்வமாகச் சில இனங்களுக்கு மட்டும்தான் உண்டு.

ஆனால் ஜீவப் பிராணிகள் பெரும்பகுதி இனச் சேர்க்கையின் தொடர்பு கொண்டுதான் இனப் பெருக்கம் செயல் கொள்கின்றது.

இவற்றின் தொடர்பில் மனித உணர்வில் பகுத்தறியும் ஞான வித்தின் முதல் நிலையில்
1.அன்பான உணர்வின் குணம் தான்
2.உந்தப் பெறும் மனித நிலையின் குணத்தின் “முதல் நிலை…”

தன் உணர்வில் உந்தும் இச்சையின் ஆசையில்… உதிரத்தில் பிறக்கும் உயிர் ஜீவனே அந்த அன்பின் உணர்வுத் தொடரில் பிறக்கும். அன்பின் ஆசை நிலை அதற்கடுத்த நிலை.

உதிரத்தில் அன்பின் உணர்வு கொண்டு பிறக்கும் சிசுத் தொடரில்
1.ஆசையும் பாசமும் தன் உணர்வின் இச்சையிலேயே பிறக்கா விட்டால்
2.எஜ்ஜீவ சக்தியையும் எந்த ரிஷிகளாலும்… ஆதிசக்தியாலுமே… வளர்க்க முடியாது.
3.அன்பின் எண்ண உணர்வில் ஆசையின் பாசமில்லை என்றால் மனிதன் என்ற நிலையே உருவாகாது.

உயர் ஞான நிலைக்கு மனித உணர்வின் எண்ணத்தைச் சம குணப்படுத்தக் கூடிய வழி முறைக்கு வயது முதிர்ந்தவர்கள் தான் செயல்படுத்த முடியுமா…? சிறுவர்களும் புதிதாக மணமான தம்பதியர்களும் எப்படி அந்நிலை பெற முடியும்…? என்ற வினா எழும்பலாம்.

நாம் எடுக்கக்கூடிய தியான உணர்வின் ஆரம்ப உணர்வே… அன்பென்னும் ஆசையில்… பாசம் கொண்டு வளர வேண்டிய வழித் தொடரில் தான்… சத்திய நிலையின் ஜீவனை வளர்க்க முடியும்,

1.தம்பதியர்களின் உணர்வுகளில் உடல் உணர்வில் அன்பின் ஆசை கொண்டு பிறக்கும் சிசுவின் பாசம் எப்படி வளர்கின்றதோ
2.வாழ்க்கையில் உண்ண உறங்க உடுக்க எப்படி சம நிலை குணங்களைப் பக்குவப்படுத்தச் சொல்லிப் போதனைப்படுத்தினோமோ
3.மணமான சிறு வயது தம்பதியர்கள் அவர்களின் வம்சத்தின் கொழுந்து பிறக்கக்கூடிய காலத்திலேயே
4.எப்படி உடல் உணர்வில் சிசு பிறக்கின்றதோ அதைப் போல் ஆத்ம ஐக்கிய உணர்வு கொண்டு இரு எண்ணங்களும் ஒன்றுபோல் ஆகி
5.உயர்ந்த ஞானத்தின் உணர்வுடன் ரிஷிகளின் தொடர்பால் எடுக்கும் தியானத்தின் மூலம்
6.ஆத்ம ஐக்கிய உணர்வில் இரண்டு ஆத்மாக்களும் இணையக் கூடிய பக்குவ நிலை பெற்று
7.சாதாரண வாழ்க்கை நிலையில் ஆத்ம உயிருக்கு நம் அன்பின் ஆசையின் ஜீவன் தந்து பிறக்கும் குழந்தையைக் காட்டிலும்
8.ஆத்ம ஐக்கியம் கொண்டு ரிஷிகளின் தொடர்பில் எடுக்கும் ஜெபத் தொடர்பின் அலை ஈர்ப்பினால்
9.புது மணம் கொண்ட தம்பதியரின் ஈர்ப்பில் உயர்ந்த ஞான வித்தின் ஆத்ம உயிர்களுக்கு ஜீவன் தரும் பாக்கியத்தைப் பெற முடியும்.

இப்பூமியில் பிறப்பெடுத்து ஞானத்தின் வழியில் சித்து நிலையால் உயர்ந்த ரிஷிகளுக்குப் போக முடியாத பல நல்ல ஆத்மாக்கள் இன்றும் உள்ளன. அந்த உயர்ந்த ஆத்மாக்களுக்கு மீண்டும் ஜீவன் கிடைக்கச் செய்யலாம்.

நாமெடுக்கக்கூடிய (தாய் தந்தை) ஆத்ம ஐக்கியத்தால் எடுக்கும் உயர் குணத்தைக் கொண்டு அத்தகைய ஆத்மாக்களுக்கு… தான் பெற முடியாத ரிஷி சக்தியின் செயலைச் செயலாக்கி வழிதரக் கூடிய நிலையை…
1.ஒவ்வொரு தம்பதியரும் ஆத்ம ஐக்கியத்தில் நல்ல உணர்வின் செயல் வாழ்க்கையால்
2.இப்பூமியைப் பக்குவப்படுத்தக் கூடிய இல்லற உணர்வின் இச்சையின் ஆசைக்கு
3.உடல் உணர்வின் உந்தலைப் பக்குவப்படுத்தும் நிலை செயல்படுத்தலாம்.

வாழ்க்கை வழிமுறையில் துறவறம் என்ற பிரமச்சரிய முறையால் ஆண்டவனை அடைய முடியுமா…? உயர் ஞான வாழ்க்கைக்கு எம்முறை உகந்தது…? என்ற வினா எழும்பலாம்.

உணர்வின் எண்ண குணத்தைச் சமப்படுத்தும் பக்குவத்தால்… ஒவ்வொரு நாளும் இப்பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து ரிஷிகளின் எண்ணத்துடனும்… விண்ணின் ஆற்றலைப் பெறும் எண்ணத்துடனும்
1.எண்ணத்தின் உணர்வைத் தினசரி எடுக்கக்கூடிய தியான முறையில்
2.உணர்வின் இன்பம் அனைத்தும் ஏகாந்தத்தின் இன்பத்தை உணரும் பக்குவ இன்பத்தில்
3.இனிமை சுரக்கும் அன்பின் ஆசை உணர்வு கொண்டு பெறப்படும் பக்குவத்தில் ஆத்ம ஒளியே ஒளிரும் நிலை பெற்று விட்டால்
4.உடல் உணர்வின் இச்சை எச்சுவையையும் தனித்து எடுக்கக்கூடிய ஏக்கத்தின் உணவிற்கு
5.நம் எண்ணத்தின் உணர்வே செல்லாது (இதை அனுபவத்தில் பார்க்கலாம்).

ஏகாந்தத்தின் இன்பத்தை நுகரும் பக்குவத்தை… ஆத்ம ஐக்கியத் தொடர்பு கொண்டு… இரண்டு ஆத்மாக்களுக்கும் ஒரே எண்ணத்தின் வழிப்படுத்தும் வழி முறையில் கிடைக்கும் ஆத்ம ஐக்கிய ஒளியால்… எச்சிருஷ்டியையும் சிருஷ்டிக்கவல்ல தன்மையைப் பெறலாம்.

ஆனால் இரண்டு எண்ணங்களின் குண நிலை மாற்றப்பட்டு ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் ரிஷி சக்தியின் தொடர்பில் அதைச் சீர்படுத்தும் பக்குவ நிலையாக ஜெப ஈர்ப்பில்
1.ஒருவர் மேல் ஒருவர் எண்ணத்தைச் செலுத்தி
2.ஆத்ம ஐக்கிய உயர் ஞானம் பெற வேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டே
3.இரு நிலையையும் ஒரு நிலையாகக்கூடிய தன்மைக்கு
4.நிச்சயம் செயல்படுத்திட முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பூமிக்கடியில் அணுக்கதிரியக்கங்கள் இன்று மிகவும் அதிகமாகி விட்டது. இது வெடித்து மக்கள் இறந்தாலும் தொக்கிய உணர்வுகள் பூமிக்கடியில் அதிகமாகச் சேர்த்துக் கொதிகலனாக மாறி பாறையெல்லாம் குழம்பாக மாறப் போகின்றது.

அணு உலைகளில் அந்த எரி பொருளை எரித்தவுடனே வேகமாகச் சூட்டை உண்டாக்குகின்றது. அதைப் போன்ற நிலை நம் பூமியின் நடு மையத்திலும் அதிகமாகிவிட்டது.

உதாரணமாக மின்னல்கள் தாக்கப்படும் போது ஒரு நொடிக்குள் எல்லாவற்றையும் பஸ்பமாக்கி விடுகிறது. மின்னல்கள் கடலிலே விழுந்த பின் அடங்கி மணலாக மாற்றிவிடுகின்றது.

மணலாக மாற்றியதை யுரேனியமாகப் பிரித்து மீண்டும் வெடிக்கச் செய்கின்றார்கள் விஞ்ஞானிகள். (அணு உலைகள், குண்டுகள், லேசர் இயக்கங்கள், மிகவும் சக்தி வாய்ந்த எலெக்ட்ரானிக் கருவிகள்)

1.இருபத்தியேழு நட்சத்திரங்கள் இயற்கையாக வெளிப்படுத்தும்
2.கதிரியக்க உணர்வுகள் ஒன்றின் வலு அதிகமானதும்
2.மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட கதிரியக்கமும்
4.ஒன்றுடன் ஒன்று மோதும் போது
5.எல்லாவற்றையும் கடினமாகச் சூடாக்கச் செய்கின்றது.

(சூரியன் அடிக்கடி நெருப்பைக் கக்கிக் கொண்டிருக்கின்றது என்று சொல்வார்கள் – SUN FLARE)

அது மோதும் இடங்களில் உயிரினங்களையும் கல்லுக்குள் இருப்பதையும் மற்ற எல்லாவற்றையும் மடியும்படிச் செய்கின்றது.

அதை வெடித்துப் பரீட்சித்தார்ந்தமாகப் பார்த்தாலும்
1.எல்லாமே பூமியின் சுழற்சியால் நடுமையம் அடைகின்றது.
2.நடு மையத்தில் கொதிகலனாகவும் மாறுகின்றது.

அதே சமயம் பூமிக்குப் புறத்திலும் வெடிக்கச் செய்தது சூரியனுக்கும் மற்ற நம் பிரபஞ்சத்திலுள்ள அனைத்துக் கோள்களுக்கும் சென்றுவிட்டது.

இந்த விஷத்தின் தன்மைகள் நட்சத்திரங்களிலும் கோள்களிலும் பரவப்பட்டு நமது பிரபஞ்சத்திலும் அதிகமாக விஷத்தன்மை பரவி விட்டது.

நமது பூமிக்குப் பாதுகாப்பாக இருக்கும் விஷத் தன்மைகளை வடித்திடும் ஓசான் திரை உண்டு. அதிலே விஷ அடுக்குகள் உண்டு. தன் இனத்தைச் சேர்த்துக் கொள்ளும். பூமிக்குப் பாதுகாப்பு அது.

கீழே சுழலும் போது தனக்குத் தேவைப்பட்ட உணர்வு தான் இயக்கத்திற்கு வரும். ஆனால் அதுவும் இன்று என்ன ஆகி விட்டது,

பிரபஞ்சத்தில் மனிதனால் செயற்கையால் பரவச் செய்யப்பட்ட அணுக்கதிரியக்கங்கள் துருவப் பகுதி வழியாக மீண்டும் பூமிக்குள் நுழைந்து ஓசோன் திரையும் ஓட்டை ஆக்கிவிட்டது.

1.இந்தக் கதிரியக்க உணர்வுகள் அதிகமாகி
2.அது குவிந்து நம் துருவத்தில் வரப்போகும் போது
3அங்கிருக்கும் பனிப்பாறைகள் கரைகின்றது.
4.வட துருவமும் சரி தென் துருவமும் சரி கரைந்து கொண்டேயுள்ளது.

ஆனால் அதே சமயத்தில் பூமியின் நடு மையமோ கொதிகலனாக மாறுகின்றது. பூமிக்குள் இவ்வாறு ஆகப் போகும்போது
1.முதலில் கொதிகலன் சிறிதளவு இடத்தில் இருந்தது.
2.அப்புறம் அது கொஞ்சம் பெரிதானது.
3.இப்படிப் பெரிதாகப் பெரிதாகப் பெரிதாகக் கூழ் மாதிரி ஆகிக் கொண்டு வருகிறது.

(ஏற்கனவே) கூழாக மாறியதால் தான் பாறையில் மாற்றமும் நில நடுக்கம் பூகம்பம் நில அதிர்வு மற்ற நிலைகளும் வருகின்றது.

நாம் பாத்திரத்தை வைத்து அதில் பொருள்களைப் போட்டு பல சரக்குகளைச் சேர்த்து ஒன்றாக்குவது போல பூமியின் நடு மையத்தில் உணர்வின் தன்மை பல கலவைகள் ஆகின்றது.

கொதிகலனாகும் போது கலவையாகிய பின் வெடிப்பாகி மீண்டும் இறங்கி இதனுடைய உணர்வுகள் மாற்றிக் கொண்டே இருக்கும்.

துகள்கள் தூசிகள் போவதில்லை. ஆனால் கீழிருந்து உணர்வின் தன்மை மாறினால் மேலே உறைய உறைய உறைய அதன் உணர்வு மாறினாலும்
1.எல்லாம் கலவையாகச் சேர்த்துக் கீழே
2.நம் பூமியின் நடுமையம் “வெப்பத்தால்… உருக்கப்படுகின்றது”.

உருகிய நிலைகள் கொண்டு தான் ஆவியாக மாறுகின்றது. ஆவியாக மாற்றப்படும் போது ஒன்று சேர்த்து இருக்கும் போது ஒன்றுமில்லை. வெடித்து விட்டால் இதன் வழி கூடி ஆவியினுடைய சத்துக்கள் வெளி வருகின்றது.

சில நேரங்களில் உள் வெடிப்பு இருக்கும். பாறையில் மாற்றம் இருக்கும்.

ஆக உள் வெடிப்பு என்று இருக்கப்படும் போது இது சிறுகச் சிறுக மேலே வரும் போது வெடிப்பின் தன்மை அதிகரிக்கும்.

1.முதலில் 3,500 மைல் தூரத்தில் (அடியிலிருந்து) மேல் ஓடு இருந்தது என்றால்
2.அது 1,000 மைல் தூரம் ஆகி
3.இப்பொழுது 3,000 – 4,000 அடி தூரத்திற்குப் பக்கத்தில் வந்து விட்டது.
4.அதனால் தான் இன்று அடிக்கடி வெடிப்பின் தன்மை அதிகமாகின்றது.
5.இன்று இந்தப் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது என்று தினசரி நீங்கள் கேள்விப்படலாம்.

வெடித்தபின் மேலே எந்தப் பக்கம் அதிகமோ அமிழ்த்துகின்றது. இப்போது இந்தப் பக்கம் அமிழ்த்தினவுடனே இதை அடைத்து விடுகின்றது.

இப்படிச் சாய்ந்த பின் இதனுடைய அழுத்தம் அதிகமான பின்
1.உள்ளுக்குள் இருக்கக்கூடிய “சகதி… கூழ்…”
2.எப்படி ஒரு பைப்பிற்குள் போகும் போது ஏதாவது தடுத்தால் சப்தம் வருகின்றதோ
3.அந்த மோதலில் எங்கெல்லாம் தடுப்பாகின்றதோ
4.அந்த மோதலில் அதிர்வு வரும் போதெல்லாம்… போகும் பாதையெல்லாம் (நில) அதிர்வு உண்டாகும்.

நம் பூமி வட்டமாக இருப்பதனால் சுற்றி வரப்போகும் போது எதனெதன் திசைகளில் அதிகமாகச் சந்து வருகின்றதோ அதன் நிலைகள் மோதுகின்றது.

அப்பொழுது அது மோதும் இடங்களில் கொஞ்சம் மேடான நிலைகள் அதாவது மறைக்கும் இடம் இருந்தால் “மோதி… ஒரு செகண்ட்…” அது அழுத்திய நேரத்தில் அங்கே நில நடுக்கம் வருகின்றது.

அது மறுபடியும் மோதி இப்போது மோதிய இடங்கள் எல்லாம் பூமிக்குள் போகும். உதாரணமாக ஒரு இடத்தில் நடக்கிறது என்றால் இது நகர்ந்து இந்தப் பக்கம் விரிவான இடமாகப் போனால் நடுக்கம் இருக்காது. சப்தம் வரும். (EARTH QUAKE AFTER SHOCKS என்பார்கள்)

இப்படி அது ஓடும் நிலைகள் குறுக்கே வரும் நிலைகளுடன் மோதி அந்த இடத்தில் மோதலில் அழுத்தம் வருகின்றது. அதிகமாக இது ஓட ஓட ஓட அதே சமயத்தில் கரையும் தன்மை ஜாஸ்தியாகின்றது.

கதிரியக்கம் அதிமாக ஆக ஆக பூமியின் குழம்பு அதிகமாகி துருவத்தின் வழி வரும் விஷத் தன்மை அதிகமாகி இயக்கத்தின் தன்மை அதிகமாக ஆகி இன்று பனிப்பாறைகள் அனைத்தும் கரைந்து கடல்கள் பெருகுகின்றது.

(கடல்கள் மிகப் பெரிய அளவில் பெருகிக் கொண்டுள்ளது என்று உலக விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்துவிட்டார்கள்)

கடல் இருக்கின்ற பக்கம் இத்தகைய நிகழ்வானால் கடல் அலைகள் பொங்கி (சுனாமி) நகரை அழிக்கும் தன்மை வருகின்றது. இதைப் போன்று இயற்கையின் சீற்றம் வருகின்றது…. வந்து கொண்டேயிருக்கின்றது.

நாம் எந்த உணர்வின் தன்மை பெற்றோமோ அதன்வழியில் நாம் உடலை விட்டுப் போகும் போது
1.எந்த ஆசையை அதிகமாக எடுத்துக் கொண்டோமோ
2.இந்த உயிரிலே கடைசி நிமிடம் எந்த உணர்வு எடுத்தோமோ
3.உயிரால் கவரப்பட்டு அதற்குத்தக்க அடுத்த உடலைப் பெறுகின்றது.

அதிலிருந்து மீள நாம் இப்பொழுதிருந்தே தயாராகிக் கொள்ள வேண்டும்.

அதிகாலையில் இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் தியானத்தின் மூலம் எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

1.அது நமக்குள் ஒளியான அணுக்களாகப் பெருகப் பெருக
2.எந்த நிமிடத்தில் எது வந்தாலும்
3.நம்முடைய நினைவு அந்தத் துருவ நட்சத்திரத்தை அடைய வேண்டும் என்ற உணர்வானால்
4.”அந்த உணர்வு… அந்த நினைவு… அந்தப் பற்று வருமானால்
5.நம் உயிர் நிச்சயமாக அங்கே அழைத்துச் செல்லுகின்றது.

இத்தகைய நிலையானால் நாம் அந்த எல்லையை அடைகின்றோம்.

ஆனால் எனக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்ற நிலையாகி பொருளின் பற்றுக்கு வரப்போகும் போது இந்த உணர்வின் தன்மை இந்த உயிரிலே பட்டு கருகும் நிலைக்கே வருகின்றது. பின் அதற்குத்தக்க கருகும் உடலின் தன்மையே பெருகுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வு வரும் போது கருக்கும் தன்மைய இழக்கச் செய்கின்றது, நம் உணர்வு அங்கே செல்கின்றது.

ஆகையினாலே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்
1.உங்களுக்குள் பதிவாக்கி விட்டேன்.
2.உங்கள் நினைவு உங்களைக் காக்க வேண்டும்.
3.ஆக எவரும் காக்க மாட்டார்கள்.

ஏனென்றால் நீங்கள் எண்ணிய உணர்வை வைத்துதான் உங்கள் உயிர் அந்த வாழ்க்கையை நடத்துகின்றது. உணர்வின் தன்மை உடலாக்குகின்றது. அதன் வழியே உங்கள் உயிர் உங்களை ஆளுகின்றது.

இதை மனிதன் தான் அறிந்து கொள்ள முடியும்.
1.எல்லாவற்றையும் அறிந்து கொண்ட மனிதன்
2.இந்த நிலையைச் செயல்படுத்தவில்லை என்றால்
3.பின் யாரும் நம்மைக் காக்க மாட்டார்கள்.

குருவின் (வியாழன் கோளின்) மிக மிக சக்தி வாய்ந்த ஆற்றல்

 

நம் பிரபஞ்சத்தில் உள்ள வியாழன் கோள் தனக்குள் மற்ற சத்துக்களை எடுத்து
1.ஒவ்வொன்றிலும் கருவுறும் சத்தாக
2.குருவாக முன்னின்று இருக்கின்றது.

சந்திரனோ மற்றவைகளை எடுத்துச் “சாந்தமான நிலையில்…” தனக்குள் உருவாக்கும் நிலையாக உருப்பெறுகின்றது. காரணம் ஒவ்வொரு குணங்களின் தன்மை அது அது கவரும் நிலைகள் கொண்டு தான் கோள்களின் இயக்கம்.

சந்திரனின் சுழற்சி வட்டத்தினை எடுத்துக் கொண்டால்… வரும் சக்திகளை அது சாந்தமான நிலைகள் கொண்டு மெதுவாக எடுத்துத் தனக்குள் மாற்றி அமைக்கின்றது.

1.இதற்கு மாறாக வியாழனோ படு வேகமாகச் சுழற்றி
2.மற்றவைகளைத் தனக்குள் வேகமாகக் கவர்ந்திடும் சக்தி கொண்டது
3.அதனால் அதனுடைய வளர்ச்சி வேகமும் அதிகரிக்கின்றது.
4.வெகு தொலைவிலிருந்து வரும் உணர்வினையும் தனக்குள் கவரும் ஆற்றல் பெற்றது
5.அதே சமயத்தில் அதனின் உமிழ்த்தும் உணர்வின் வேகமும் அதிகம்.

மற்ற கோள்களைக் காட்டிலும் உயர்வான இடங்களில் அது இருப்பதனால் தனக்கு மேல் இருக்கும் கேது ராகு கோளின் சக்தியையும் கவரும் திறன் கொண்டது.

ராகு இருள் சூழ்ந்தது… கேதுவோ விஷம் கொண்டது. அவைகளையும் வியாழன் தனது சுழற்சியின் வேகத்தில் கவர்ந்து இந்தப் பிரபஞ்சத்திற்குகந்ததாக மாற்றுகிறது.

அதாவது…
1.சூரியன் எவ்வாறு தனது சுழற்சியின் வேகத்தில் மற்ற நட்சத்திரங்களின் ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து
2.கோள்களுக்கும் ஜீவனூட்டித் தனது நிலைகளில் அது ஒளியாக மாற்றுகின்றதோ
3.அதைப் போன்று வியாழன் கோள் மற்ற சத்துக்களைத் தனக்குள் கவர்ந்து
4.விஷம் மற்றவைகளையும் கலந்து அதை ஒரு குருவாக்கி
5.மற்ற கோள்களுக்கும் தனது இணையாக இணைத்துக் கொண்டு வருகின்றது.

கோள்கள் நட்சத்திரங்கள் உமிழ்த்தும் சக்தியை நமது பூமி கவர்ந்து உயிரணுக்களை ஜீவன் பெறச் செய்வதும்… உயிரணுக்களை வளர்க்கச் செய்வதும்… தாவர இனங்களைத் தனக்குள் வளர்ப்பதும்… தாவர இனத்தின் நிலைகள் கொண்டு உயிரினங்களுக்கு ஊட்டச்சக்தி கொடுப்பதுமாக மாற்றி அமைக்கின்றது.

இந்தப் பிரபஞ்சத்தைப் போன்று தான் நாம் மற்றவருடைய எண்ணங்களை எந்த அளவிற்குக் கவர்கின்றோமோ அந்த உணர்வின் சக்திகளை எல்லாம் “நம் உயிர் குருவாக நின்று…” இந்த உணர்வின் சத்தைப் பெருக்கி உடலாக மாற்றுகின்றது

1.சூரியன் இந்த பிரபஞ்சத்திற்கே குருவாக இருப்பினும்
2.இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் அணுக்களுக்கு வியாழன் கோளே குருவாக இருக்கின்றது.

இதைப் போல…
1.அனைத்து சக்திகளையும் எடுத்த இந்த மனித உடலுக்குள்
2.நாம் எண்ணும் எண்ணங்களுக்கு இந்த மனித உடல் உருவான நிலையே குருவாகின்றது.

ஏனென்றால்…
1.மற்ற சத்துக்களை எடுத்து வியாழன் கோள் தனது நிலைகளில் இந்தப் பிரபஞ்சத்தில் குரு தன்மையை எப்படி அடைந்ததோ
2.அதைப் போல மனித உடலாக உருவாக்கப்படும் பொழுது நம்முடைய உணர்வின் எண்ணங்களுக்கு இது குருவாகின்றது.
3.அதே சமயத்தில் உடலுக்குள் உயிர் குருவாகின்றது… நமக்குள் சூரியனாக அது மிளிரும் தன்மையை அடைகின்றது.

அன்று ஞானிகளால் சாஸ்திர விதிகளை வகுக்கப்பட்ட இத்தகைய உண்மைகளை எல்லாம் எண்ணத்தால் எண்ணி நமக்குள் அதைப் பொங்கச் செய்ய வேண்டும்.

சூரியன் எவ்வாறு தான் கவர்ந்து கொண்ட அணுக்களில் இருக்கும் நஞ்சினைப் பிளந்துவிட்டு நல்ல உணர்வினை எடுத்து ஒளிச் சுடராக மாற்றுகின்றதோ இதைப் போன்று
1.மகரிஷிகள் தமது வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் எத்தகைய நிலைகளைக் கவர்ந்து கொண்டாலும்
2.அதில் வரும் நஞ்சினைத் தனக்குள் அணுகாதபடி தன் உணர்வின் எண்ணங்களை ஒளியாக மாற்றி
3.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகி சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

சப்தரிஷி மண்டலத்தில் வெளி வரும் உணர்வுகளைச் சூரியன் தனக்குள் ஒளிச் சுடராகப் பொங்கி இங்கே பூமிக்குள் பரவச் செய்கிறது.

நமது வாழ்க்கையில் குடும்பத்திற்குள் வெறுப்போ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ ஏற்பட்டால் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து நமக்குள் அதை மாற்றி அமைக்க வேண்டும்.

தாவர இனங்களில் விளைந்ததை நாம் வேக வைத்து எப்படிச் சுவைமிக்கதாக உணவாகப் படைக்கின்றோமோ அது போல்
1.மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து
2.நமக்குள் வரும் அனைத்தையும் ஒளியாகப் படைக்கும் சக்தி பெற வேண்டும்.

மகரிஷிகளை எண்ணி நாம் எடுக்க வேண்டிய உயர்ந்த சக்தி – ஈஸ்வரபட்டர்

 

1.ஆதியின்… படைப்பின் கடவுள்… இறைவன்… தெய்வம் என்ற தொடரில்…
2.மனித ஒளி சரீரத்தின் ஒளித் தன்மை கொண்டு…
3.அவ்வொளியின் நாத உயர்வில் இறை நிலை பெற்ற மனிதன் “தெய்வத் தன்மை பெறுகின்றான்…”

பூமிக்கும்… பூமியில் வளரும் சகல ஜீவராசிகளும் ஒளித் தன்மையின் நிலை பெற்றிருந்தாலும்… ஒவ்வொன்றின் தொடர்பலையில் வலுக் கொண்ட ஒளி நிலை பெற்று… ஒளி சக்தியை வளர்க்கும்
1.உயிர் ஞான வழியை அறியக்கூடிய நிலை
2.மனிதனுக்கு மட்டும் தான் உண்டு.

குயில் அழகாக… இனிமையாக… அதனுடைய குரல் ஒலியை எழுப்பினாலும்… மனிதனின் எண்ணத்தின் உணர்வு ஞானம் அதற்கு இல்லை.

மனித உணர்வுடன் ஒட்டி… ஒன்றின் தொடரில் வளர்ச்சியின் நிலை பெருக்கத் தொடருக்கு… ஞானத்தை உயர்த்தித் தன் பகுத்தறிவைக் கொண்டு “பல நிலைகளை மாற்றியமைக்கும்” செயல் மனிதனுக்குத் தான் உண்டு.

ஒலியின் நாதத்தை உணர்வின் எண்ண ஊட்டத்தில் பகுத்தறியும் ஞானத்தால் மனிதன் இச்சரீர உயர்வை எண்ணி… இவ்வுணர்வால் இறை சக்தியின் உன்னத நிலையான இவ்வுயிர் ஆத்மாவை… இறை குணத்தை… உணர்வின் எண்ண ஞானத்தால் பகுத்தறியும் செயலைக் கொண்டு இவ்வுடலையே இறையாக்கி… இறைவன் படைப்பில் இறை சக்தியை எடுக்கக்கூடிய ஒலி நாதத்தைத் தன் ஆத்ம உயிருக்காக இறை உணர்வு பெற்றுத் “தெய்வ நிலை பெறும் சத்திய நிலையை…” மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மனிதன் இன்று எடுத்துள்ள உடல் பிம்ப வாழ்க்கைக்குகந்த பேராசைப் பிடிப்பையே தெய்வ நிலை பெறக்கூடிய பேராசையாய் உணர்வின் எண்ணத்தைப் பக்குவப்படுத்த வேண்டும்.

ஒளியின் ஒளிப் பெருக்கைப் பெருக்கவல்ல தொடரைப் பூமியில் படைத்த
1.ரிஷிகளின் சக்திக்கு ஒளி கூட்டும் ஒளி நிலை பெற
2.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் ஒலி கொண்டு
3.நம்முள் உள்ள இருளகற்றி ஒளி நிலையை நாம் பெற்றோமானால்
4.ஒளி கொண்டு மற்ற இருளையும் அகற்றும் சித்தை
5.நம் சித்தத்தின் உணர்வால் ஒவ்வொருவரும் பெறலாம்.

இச்சரீர அமைப்பைச் சிருஷ்டிக்கவல்ல சித்து சக்தியையே… இக்காற்றலையில் கலந்துள்ள சகல சத்திலிருந்து உருவை உருவாக்கும் சக்தியைப் பிரித்தெடுத்துச் செயலாக்கும் முறையை உயர் ஞானி அன்றைய தன் ஞானத்தால் செயல்படுத்திக் காட்டினான்.

ஆனால் இன்றைய விஞ்ஞானி தன்னைத்தான் தான் நம்பாமல் “இயந்திரங்களின் இயக்க ஒலி சக்தி கொண்டு தான்” விஞ்ஞானத்தில் சாதிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளான்.

பல முன்னேற்றங்கள் விஞ்ஞானத்தால் இன்று வளர்ந்திருந்தாலும் தன் ஆத்ம உயிருக்குக் கூட்டக் கூடிய ஒளியின் உயர்வைக் கூட்டாததால் அழிக்கும் நிலைக்குத் தன் உயிர் ஆத்மாவை மங்கச் செய்யும் நிலை ஏற்பட்டு விடுகின்றது.

அன்று ஞானிகள் காட்டிய உண்மைகளை எல்லாம்… ஞானிகள் தொடர்பால் இன்றும் எல்லோராலும் பெற முடியும்.

எண்ணத்தின் உணர்வை மனிதனுக்கு மனிதன்… தான்… எவ் ஒலி இறை உணர்வைப் பெற்று இச்சரீர உணர்வால் செயல்படுகின்றானோ அதே தொடர்தான் தன்னை ஒத்த மனித உணர்விலும் உள்ளதை அறிந்து கொண்டால்
1.தன் ஆத்ம பலத்தின் உயர்வைக் கூட்டிக் கொள்ளக்கூடிய உரம்
2.மனித உணர்வுடன் ஒட்டிய தொடர்பால்
3.பிறரிடம் இருந்து எதிர்படும் மூச்சலைகள்
4.நல் அலையின் உணர்வு கொண்டு பெறப்படும் தொடர்பால்
5.மனித உணர்வின் ஆத்ம உயிர் ஒலித் தன்மையின் வலு நிலையை
6.சம குணத்தின் அறுகுண ஈர்ப்பால் உயர்ந்த ஒளி ஞானியாகலாம்.

அதாவது… மனித உணர்வின் எண்ண வேட்கையின் சமைப்பின் ஒளி நிலை கொண்டு
1.ஒருவரின் மேல் உயர்ந்த குணத்தைப் பலரும் செலுத்தச் செலுத்த
2.அவ்வுரத்தின் உணர்வால் மனிதன் தெய்வமாகும் நிலையை
3.அன்றைய ஞானி உணர்ந்ததால் தான் அன்பையே தெய்வமாகக் காட்டினான்.

உணர்வுகள் உந்தப்பட்டாலும் அதைச் சமமாக்கும் பக்குவத்தை எவனொருவன் செயல்படுத்தி.. செயல் வழியில் உரத்தைப் பெறுகின்றானோ… அன்றே தெய்வ நிலை கொண்ட ஒளித் தன்மையில் செயல் கொள்ள முடியும்.

இக்காற்றலையின் சுழற்சியில்… மனித உணர்வில் பல உணர்வின் வேட்கை அலைக்கு மத்தியில்… “தன் ஞானத்தை உயர்வாக்க… உயர்ந்த ரிஷி சக்திகளின் எண்ண ஜெபத்தால்… உயர் காந்த மின் ஒளியின் தியானத்தைக் கொண்டு… மனிதன் தன்னைத் தானே தான் உணர்ந்து… தெய்வ நிலை பெறும் வழி நிலையை… அமைத்துக் கொள்ளல் வேண்டும்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கண்ணின் நினைவு கொண்டு… துருவ நட்சத்திரத்தினை எண்ணி உயிரின் காந்தத்தால் ஈர்க்கப்படும் பொழுது “புருவ மத்தியில் வெளிச்சங்கள்…” வருவதைக் காணலாம்

அவரவர்கள் அம்மா அப்பாவை எண்ணி எங்கள் அம்மா அப்பா அருளாசி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுங்கள்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாக துருவ நட்சத்திரமான அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.கண்ணின் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்
2.கண்களைத் திறந்து செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரம் என்று யாம் (ஞானகுரு) சொல்வதை நீங்கள் கேட்டுப் பதிவாக்கி விட்டீர்கள்.
1.இந்தப் பதிவின் நினைவை
2.உங்கள் கண்களுக்குக் கொண்டு வருகின்றீர்கள்.

உங்கள் கண்ணின் நினைவு நான் எதைத் “துருவ நட்சத்திரம்…” என்று சொன்னேனோ
1.உங்களுடைய உணர்வலைகள்
2.அங்கே அழைத்துச் செல்லுகின்றது.

இந்தக் காற்றிலிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவரும் சக்தி பெறுகின்றது.

“துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா” என்று
1.கண்ணைத் திறந்தே ஏங்கி இருங்கள்.
2.இப்போது கண்ணின் கரு மணிகளில் இந்த ஈர்க்கும் சக்தி வரும்.
3.கண்கள் லேசாகக் கனமாக இருக்கும்
4.மெதுவாகக் கண்ணை மூடுங்கள்.

புருவ மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் உங்கள் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்துங்கள்,

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினை உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.
1.உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை
2.ஈர்க்கும் சக்தியைக் கொண்டு வாருங்கள்.

அப்படி ஈர்க்குமானால் நம் புருவ மத்தியில் அந்தத் துருவ நட்சத்திர உணர்வு அதிகரிக்க நம் உடலுக்குள் இருக்கும் தீமை விளைவிக்கும் தீய உணர்வுகளுக்கு உணவு செல்லாதபடி தடைபடுத்தும்.

கண்ணிலே எப்படிக் கனமாக இருந்ததோ அதைப் போன்று
1.புருவ மத்தியில் துருவ நட்சத்திர அலைகளை ஈர்க்கும் சக்தி வரும் போது
2.புருவ மத்தியிலும் கனமாக இருக்கும்.
3.உயிரிலே இது மோதும் போது வெளிச்சங்கள் வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணப்படும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை ஈர்க்கும் சக்தி பெறுகின்றீர்கள்.

1.எதைக் கண்ணிலே நினைத்தோமோ
2.அதை உயிருடன் ஒன்றப்படும் பொழுது
3.உயிரில் உள்ள அந்தக் காந்தம் கவர்கின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உயிரில் (புருவ மத்தி வழியாக) ஈர்க்கப்படும் பொழுது இதைக் கடந்து தீய உணர்வுகள் உள் செல்ல முடியாது தடைபடுத்துகின்றது.

சந்தர்ப்பவசத்தால் தீமைகளை நுகர்ந்தாலும் துருவ நட்சத்திரத்தை இணைத்துத் அந்தத் தீமைகள் விளையாது தடுக்க முடியும்

 

ஓ..ம் ஈஸ்வரா.. குருதேவா.. என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் இரத்த நாளங்களிலுள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

காலையிலிருந்து இரவு வரையிலும் சலிப்பு சஞ்சலம் கோபம் குரோதம் வெறுப்பு வேதனை என்று
1.எத்தனையோ வகையான உணர்வுகளை நுகர்ந்தறிந்தாலும்
2.இவை அனைத்தும் நம் இரத்தத்தில் கரு முட்டைகளாக மாறிவிடுகின்றது.

பின் நாளடைவில் அந்தக் கரு முட்டைகள்
1.அதனதன் குணத்திற்குத்தக்க அணுக்களாக உருவாகி
2.எந்த உறுப்புகளில் இந்த முட்டைகள் தேங்கி விடுகின்றதோ
3.அந்த உறுப்புகளில் இந்த வேதனையாகி அங்கே நோயாகி
4.அந்த உறுப்புகளை உருவாக்கிய நல்ல அணுக்களைக் கொன்று விழுங்கும் நிலை ஏற்பட்டு விடுகின்றது.

ஆனால் இதைப் போன்ற நிலைகளைத் தடைபடுத்த நம்மால் முடியும்.

ஒரு மல்லிகைச் செடியின் மேல் தட்டான் பூச்சி முட்டையிட்டாலோ அதைப் போல பல வண்ணங்கள் கொண்ட மலரில் தட்டான் பூச்சி முட்டையிட்டாலோ அந்தந்த வண்ணம் கொண்ட பூச்சிகளாக பட்டாம் பூச்சியாக மாறுகின்றது.

இதைப் போலத்தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை
1.இரத்தநாளங்களில் உருவாகும் பல குணங்கள் கொண்ட அணுக்கருவிற்குள் சேர்த்தால்
2.அந்தக் கரு முட்டைகள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெறும் வலிமை பெறுகின்றது.
3.அப்பொழுது இரத்தத்தில் உருவாகும் கரு முட்டையிலேயே தீமையை நீக்கும் சக்தி பெறுகின்றது.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு ஊசி (INJECTION) மூலம் நோய்களை நீக்குகின்றனர். உடல் ஊனமானதையும் மாற்றியமைக்கின்றார்கள் விஞ்ஞானிகள்.

1.தாயின் கருவில் உருவான சிசு உடலில் சில குறைபாடுகள் இருந்தாலும்
2.அந்த உணர்வின் தன்மையை மாற்றி
3.உயர்ந்த ஞானக் குழந்தையாக வளர்க்க முடியும் என்று விஞ்ஞானம் ஊட்டுகின்றது.

இதைப் போல மெய் ஞானிகள் கூறிய உணர்வின்படி கண்ணின் உணர்வினைக் கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் இரத்தங்களில் செலுத்த முடியும்.

இரத்தத்தில் வளர்ந்து வரும் கரு முட்டைகளுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை உங்கள் இரத்தத்தில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

அதாவது…
1.அந்தத் தீயவினைகள் உருவாக்கும் கரு முட்டைகளில்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இணையச் செய்து
3.அதிலுள்ள தீயதை நீக்கி நல்ல உணர்வு பெறச் செய்யும்
4.அந்த முட்டைகளாக மாற்றி அமையுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து அதிலுள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரோளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் பாய்ச்சுங்கள்.

ஒரு நண்பரிடம் பழகுகின்றோம். அவர் உடலை விட்டுப் பிரிந்து சென்று விட்டால் அவர் உணர்வு நமக்குள் அதிகமானால் அந்த ஆன்மா நமக்குள் வந்துவிடும்.

அவர் பட்ட துயரமும் நம் இரத்தத்தில் விளைந்து நமக்குள் கலந்துவிடும். அந்தக் கருக்களை உருவாக்கி நம் உடலுக்குள்ளே தீய அணுக்களாகி நம் உடலை வீழ்த்தி விட்டு வெளிச்சென்ற பின் அந்த தீய அணுவின் உணர்வு கொண்டு வேறொரு உடலாக மனிதனல்லாத உடலாகத்தான் பிறக்கும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீளத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்திட வேண்டும் என்று கண்ணின் நினைவைச் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு…
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறும்படி செய்தால்
3.அதன் வளர்ச்சியில் நம் உடலிலுள்ள நோய்களை நீக்கவும்
4.உறுப்புகளை நல்வழியில் வழி நடத்தவும் உதவும்.

நமக்குள் அரும் பெரும் சக்திகளைச் சேர்க்கும் வழி இது தான்…!

சாதாரண வாழ்க்கையில் சந்தர்ப்பவசத்தால் மெய் ஞானத்தைப் பெற்ற ஞான ரிஷிகள் – ஈஸ்வரபட்டர்

 

1.இச்சரீர உணர்வில் பெறும் சுக துக்கங்கள் மாறி மாறி வந்தாலும்
2.அதிலே வரும் அந்தத் துன்ப உணர்விலிருந்து மீளும் நிலை எப்படி…? என்று அறிந்து
3.தன் வாழ்க்கையில் மோதப்பட்ட அத்தகைய சம்பவங்களினால் தான் சகல ஞானிகளும் மகரிஷிகளும் உருவானார்கள்.

வால்மீகியார் வேட்டையாடிப் புசிக்கும் வேடுவ குலத்தில் பிறந்து வேட்டை ஆடச் சென்ற காலத்தில் ஜோடியாக இருந்த இரண்டு புறாக்களில் ஒன்றை அம்பெய்து வீழ்த்துகின்றார்.

வீழ்ந்த புறா வேதனையில் துடிப்பதையும் வேதனையில் துடிக்கும் புறாவின் நிலையை அதனுடைய ஜோடிப் புறா பார்த்துத் துடிதுடிக்கின்றது.

பாச உணர்வால் துடிதுடிக்கும் புறாவின் வேதனையை தன் எண்ணத்தின் உணர்வில் உற்றுப் பார்த்த வேடனான வால்மீகியார்…
1.தாக்கும் நிலையை விடுத்துத் தன் ஞானத்தின் உயர்வை
2.வானை நோக்கி ஏகும் போது உண்மையை உணர்கின்றார்.

அந்த எண்ண அலைத் தொடரைக் கொண்டு அன்று அவருக்குப் பிறந்த ஞானம்தான் இராமாயணக் காவியமாக உருவாகியது.

அதற்குப் பிந்திய காலத்தில் மீனவனாய்ப் பிறந்த வியாசர்… மீன் பிடித்துத் தன் வாழ்க்கையை நடத்திச் சென்ற வழித்தொடரில்… கடலில் மீன் பிடிக்கச் சென்ற பொழுது கடலில் விழுந்து தவித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு மீன் (டால்பின்) அவரைக் கரை சேர்க்கின்றது.

1.எந்த மீன் இனத்தைத் தான் இம்சித்தோமோ அதே இன ஜீவன்
2.தன்னைக் காத்ததை எண்ணி அப்பொழுது ஏங்குகின்றார்.

அந்த நேரத்தில் உதித்த ஞானத்தின் உணர்வுதான் அவரின் உயர் ஞான சித்தில் மனித வாழ்க்கைக்கு உயரும் பக்குவமான “கீதையின் உபதேசமாகத் தன் தத்துவத்தை” வடித்து வெளிப்படுத்தினார்.

பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்… இந்த மனித வாழ்க்கையில் மனிதன் எந்த நிலைக்குச் செல்ல முடியும்…? எதை எதைப் பெற முடியும்…? என்ற ஞான உணர்வில் அகஸ்தியர் காடுகளில் ஜெபமிருந்தார்.

அப்பொழுது ஓரிடத்தில் பிரசவ வேதனையுடன் ஓர் பெண்ணின் அழு குரல் கேட்டு அருகில் சென்று பார்க்கும் பொழுது… குழந்தையைப் பிரசவித்த நிலையில் நீருக்காக அத்தாய் அழுவதைப் பார்க்கின்றார்.

அது படும் வேதனையைப் பார்த்து அப்பெண்ணைக் கூட்டி வந்த பெண்ணும் தாகம் தீர்க்கத் தண்ணீருக்கு ஓடிய நிலையைக் கேட்டு அறிகின்றார்.

அப்பெண் தாகத்திற்காகத் துடிக்கும் நிலையறிந்து தண்ணீர் கொண்டு வருவதற்குள் தாகத்தால் அந்தத் தாய் உயிர் நீத்துவிடுகின்றது.

இதைக் கண்ட அகஸ்தியர் இத்தனை காலங்களாக தன்னால் சாதிக்க முடியாத ஜெப சக்தியை நாம் பெற்றுள்ளோம். இருந்தாலும் நினைத்த மாத்திரத்தில் அந்தப் பெண்ணின் தாகத்திற்கு
1.நீரைக் கொடுக்கக் கூடிய சக்தி இருந்திருந்ததென்றால்…
2.தாகத்தால் உயிர் நீத்த அத்தாய்க்கு
3.தன்னால் நீர் தர முடிந்திருக்கும் என்ற உணர்வின் ஏக்கம் கொள்கின்றார்.

அந்த எண்ணத்தைக் கொண்டு வீரிய ஜெபம் இருக்கின்றார். அதன் வழி வந்த ஞானத்தால்
1.தான் பெற்ற அகத்தின் உணர்வின் ஸ்திரத்தால் அகஸ்தியர் என்ற நாமம் பெற்று
2.அவரின் சித்தின் உயர்வின் ரிஷி சக்தியால்…
3.அவர் அமர்ந்திருந்த இடங்களில் எல்லாம்
4.ஜீவ நதிகள் உற்பத்தியாகும் வழித்தொடர் உருப் பெறுகின்றது

மனித உணர்வுக்கு ஒத்த ஜீவ நீர் அலைத் தொடரில் “தன் சக்தியை” இன்றும் செயலாக்கிக் கொண்டுள்ளார்.

இப்பூமியில் குறுகிய காலத்தொடரில் கொங்கணவர் பெற்ற வழித்தொடரும் இதே முறையில் தான்.
காட்சி:
குன்றுகள் போன்று சிறு சிறு மலைகள் தெரிகின்றன. மேடான ஒரு மலையில் ஓலை வேயப்பட்டுச் சிறு சிறு குடிசைகளும் அதற்குப் பக்கத்தில் சாணியைக் கொண்டு மெழுகிய தரை விசாலமாகவும் தெரிகின்றன.

அதற்குச் சிறிது தூரத்தில் சிறு சிறு பையன்கள் குதித்து விளையாடுவதைப் போன்றும், விளையாடும் பையன்களைப் பார்த்து அந்த வழியாகச் சிறு மூட்டை ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு வந்த பையன் மற்றச் சிறுவர்களுடன் தானும் விளையாடப் போகின்றான்.

எதிர்பாராது ஓர் கூர்மையான கல்லில் இடிபட்டுப் பலத்த காயமுடன் விழுந்து அலறுகின்றான். குடிசையிலிருந்த ஓர் தாய் அச்சிறுவனை அக்குடிசைக்குள் படுக்க வைத்து அச்சிறுவனுக்கு உண்டான காயங்களுக்கு மருந்திட்டுப் பாதுகாக்கின்றது.

பின் அதே சிறுவன் அத்தாயுடன் சிறிது வளர்ந்த நிலையில் அத்தாய்க்கு உதவியாக மருந்து அரைத்துத் தருகின்றான்.

அதன் பிறகு ஓர் கல்லறையும் அக்கலறையில் மண் மேட்டில் அதே சிறுவன் மீண்டும் வளர்ந்த நிலையில் அக்கல்லறையின் கால்மாட்டில் அமர்ந்து அழுது கொண்டிருப்பதைப் போன்றும் காட்சி தெரிகின்றது.

அக்கல்லறையிலிருந்து அச்சிறுவனுக்கு உதவிய தாயே வெளிச்சமுடன் கூடிய உருவமாய் அச்சிறுவனின் உருவமுடன் ஒன்றியதைப் போன்றும்… மேடான ஓரிடத்தில் ஓர் மரத்தை வெட்டி அம்மரம் ஐந்து ஆறு அடி உயரத்தில் உயர்ந்த மேடை போன்று இருப்பதைப் போன்றும்… அந்த இடத்தில் சிறுவனாய் இருந்து பெரியவனான அப்பையன் அமர்ந்திருப்பதைப் போன்றும்… அதே பையனின் உருவம் வயது முதிர்ந்த நிலையில் தெரிகின்றது.

மற்ற ரிஷிகள் தெரியும் பொழுது அடர்ந்த முடி தெரியும். ஆனால் இவரின் நிலை சிறு சிறு முடியுடன் சன்னமான தேகமுடன் அமர்ந்திருப்பதைப் போன்றும் காட்சி தெரிகின்றது.

அவரை வணங்கி யாரோ ஆசீர்வாதம் கேட்கும் பொழுது… என்னிடம் ஒன்றுமில்லை… அத்தாய் சக்திதான்…! என்று அத்தாயை எண்ணி அவர் வணங்குகின்றார்.

அவருக்கு முன் ஒளியாக அத்தாயின் உருவம் தெரிந்து அத்தாயிடம் தான் ஆசீர்வாதம் பெற்றுத் தன்னிடம் ஆசீர்வாதம் வேண்டி நின்றவர்களுக்கு இவர் அருள் புரிகின்றார்.

இதனுடைய உண்மைத் தத்துவம் அனாதையான சிறுவன் பட்ட துன்பத்தை நிவர்த்தித்து ஆதரவு தந்து அத்தாயின் சக்தியால் உயர்ந்த கொங்கணவர்…
1.அத்தாயின் உணர்வுடனே தன்னையும் ஐக்கியப்படுத்தி
2.தனக்கு ஆதரவு தந்து தன்னை உருவாக்கிய அத்தாய் சக்திக்குத்தான் தன் சக்தி சொந்தமென்று தவிர்த்து
3.தன்னை உயர்த்திக் கொள்ளாமல் தாயின் ஜெபத்துடனே தன் உயர்வைக் கொண்டு
4.தாயின் உயர்வுடனே சகல சித்துத் தன்மையையும் பெற்ற பக்குவ நிலை கொண்டு செயல்பட்டார்.

ரிஷி சக்திகளின் உண்மைத் தொடர்பு ஆரம்ப வாழ்க்கை நிலைகள் எல்லாமே சகல மனிதர்களை ஒத்த நிலைதான்…!

ஆனால்… தங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய
1.எண்ணத்தின் உணர்வில் எதிர்ப்படும் மோதல் காலங்களில்
2.ஞானத்தின் உயர் ஞானத்தைக் கொண்டு உயர்ந்தவர்கள் தான் சகல மாமகரிஷிகளும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இப்பொழுது நமக்குள் நாம் கஷ்டப்பட்டது… வேதனைப்பட்டது… சங்கடப்பட்டது… சோர்வடைந்தது… வெறுப்படைந்தது… சண்டை போட்டது… இத்தனை உணர்வுகளும் பிறருடைய தோஷமாக இருக்கின்றது. அவை எல்லாம் நமக்குள் பதிவாகியிருக்கின்றது.

நாம் சிறிதளவு சோர்வடைந்தால் கூட நமக்குள் என்ன செய்யும்…?

1.மாமியார் திட்டிய உணர்வு வந்துவிடும்
2,மாமனார் கோபித்தது வந்துவிடும்
3.பிள்ளைகள் சேட்டை செய்தது நினைவுக்கு வரும்.
4.அவர்கள் ஒத்துழைக்கவில்லை… இவர்கள் இப்படிச் சொல்கிறார்கள்… என்ற எண்ணம் வரும்.

அடுத்து… பக்கத்து வீட்டில் இருக்கும் அவர்கள் ஏதாவது சொன்னால் அவர்கள் மேலும் நமக்குள் கோபம் வரும்.

நாம் சாப்பிடும் பொழுது அந்த உணர்வுகள் அனைத்தும் உடலுக்குள் உமிழ் நீராக மாறுகின்றது. அந்த உமிழ் நீர் இரைப்பைக்குப் போனவுடனே நம் இரைப்பை என்ன செய்கின்றது…?

நமக்குள் சேர்த்துக் கொண்ட அந்த விஷத்தின் தன்மையால் அது மயக்கமடைந்து நாம் சாப்பிட்டதைச் சாப்பிட முடியவில்லை. “என்னால் சாப்பிட முடியவில்லையே…! என்ற உணர்வு வருகின்றது.

இந்த வேதனை உணர்வு ஆன பிற்பாடு பெருங்குடலுக்கு வந்தவுடன் என்ன செய்கின்றது?

“புஷ்…ஷ்ஷ்..” என்று உப்பி வயிறு எப்படியோ உப்புசமாக ஆகின்றது என்று சொல்கிறோம்.

அப்புறம் என்ன செய்கின்றது…?

உடலுக்குள் போனவுடன் இந்த கணையத்தில் இந்த விஷத்தின் தன்மை இணைந்துவிடுகின்றது. இதெல்லாம் கல்லீரல் மண்ணீரலுக்கு வந்த பின் அங்கேயும் விஷம் அதிகமாகின்றது.

இங்கே வலிக்கின்றது… இடுப்பு வலிக்கிறது. “கும்..ம்…” என்று இருக்கின்றது என்று இத்தனை வேலைகளையும் செய்ய ஆரம்பிக்கின்றது. ஆக நம் உடலில் இத்தனை தொல்லைகளையும் எடுத்துக் கொள்கின்றோம்.

நம் உடலில் நாம் எடுத்துக் கொண்ட சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் குரோதம் போன்ற நினைவுகள் நமக்குள் வரும் போது அது உமிழ் நீராக மாறி நமது சிறு குடலில் சேர்த்தவுடன் நாம் சத்தான ஆகாரத்தைச் சாப்பிட்டாலும் அது நஞ்சாக மாற்றுகின்றது.

உதாரணமாகப் பாலில் போடும் பாதாமிற்குச் சக்தி இருக்கின்றது. அந்தப் பாலிற்கும் சக்தி இருக்கின்றது. அதனுடன் சீனி போட்டால் ருசியாகவும் இருக்கின்றது.

ஆனால்… ஒரு துளி விஷம் பட்டால் என்ன செய்யும்…? பாலில் ஒரு துளி விஷம்பட்டால்
1.அதில் சத்து இருக்கின்றதா…?
2.இல்லை… அந்தப் பாதாமிற்குத்தான் சத்து இருக்கின்றதா..?

அதே மாதிரி
1.நமக்குள் நல்ல குணங்கள் இருப்பினும்…
2.நல்ல ஆகாரத்தைத் தான் சாப்பிட்டாலும்…
3.இந்த விஷம் கலந்த பின் விஷம் கலந்த மயக்கம் தான் வருமே தவிர
4.நல்லது வருகின்றதோ…!

நம் உடலுக்குள்
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் எதனெதன் உணர்வோ
2.அதனதன் அறிவாக அதனதன் அணுக்கள் விளைந்து
3.நமக்குள் என்ன செய்கின்றது…? என்பதனைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் நல்லவர்களாக இருந்தாலும் நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடலுக்குள் அணுக்களாக எது எது விளைகின்றது…? என்பதைத் தெரிந்து தெளிந்து வாழ்வதற்குத்தான் இதை உங்களிடம் சொல்கின்றோம்.

தீமைகள் வரும் பொழுது அதை நீக்க அந்த மெய் ஞானிகளின் உணர்வை நுகர்ந்து அதை மாற்றியமைக்க வேண்டும். அதை நீக்கிப் பழக வேண்டும். அதற்குத்தான் அந்த மெய் ஞானிகளைப் பற்றித் திரும்பத் திரும்பச் சொல்லிப் பதிவாக்குகின்றோம்.

வசிஷ்டர் அருந்ததி நட்சத்திரங்கள்

 

ஆதிமூலம் என்ற உயிர் ஒவ்வொரு சரீரத்திலும் தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வு கொண்டு சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக மனித உடலை உருவாக்கியது.

மனித உடலை உருவாக்கிய எண்ணங்களுக்கு எல்லாம் ஈசனாக இருந்து இயக்கியது உயிர்…. கணங்களுக்கெல்லாம் ஈசனாக இருந்து இயக்கிய உயிரைக் கணேசா…! என்று ஞானிகள் காரணப் பெயர் வைத்துள்ளனர்.

மூஷிகவாகனா… எதை எதையெல்லாம் சுவாசித்தோமோ சுவாசித்த உணர்வின் தன்மைகளை வாகனமாக அமைத்துப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வளர்ந்து வந்திருக்கின்றோம்.

1.ஆதியிலே அவ்வாறு வளர்ச்சி அடைந்த முதல் மனிதன் அகஸ்தியன்…
2.தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு விண்ணின் ஆற்றலைச் சுவாசித்தான்.
3.தன் உணர்வின் தன்மையை ஒளியாக்கி அந்த உணர்வின் துணையால் மூஷிகவாகனா…
4.ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலங்களுடன் ஒன்றி வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான் துருவ மகரிஷி.

அவனைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள். “வசிஷ்டரும் அருந்ததியுமாக ஒன்று சேர்ந்து வாழ்ந்து…” இந்த வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி ஒளியாகச் சென்று உள்ளார்கள்.

திருமணமாகும் ஒவ்வொரு கணவன் மனைவியும் இந்த நினைவினைத் திருப்பூட்டும் போது எடுத்து அதைத் தமக்குள் வினையாக்க வேண்டும். ஆக… அருள் மகரிஷிகளுடன் ஒன்றி வாழும் நிலைகள் எப்படிப் பெற வேண்டும் என்பதற்குத்தான் அருந்ததி என்ற நட்சத்திரத்தைக் காணச் செய்தார்கள்.

விநாயகரை வணங்கும் பொழுது…
1.எங்கள் அன்னை தந்தையின் அரவணைப்பில் தான் மனிதனாகப் பிறந்துள்ளோம்.
2.எங்கள் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் பொழுது அந்த வசிஷ்டரும் அருந்ததியும் போன்று
3.இரு மனமும் ஒன்றி வாழ்ந்திடும் அந்த அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
4.அவர்கள் வாழ்ந்த காலத்தில் தங்கள் வாழ்க்கையில் இருள் நீக்கிப் பொருள் கண்டுணர்ந்த அந்தச் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற
5.இந்த உணர்வினை ஏற்று… இந்த உணர்வினைப் பதிவு செய்து விண்ணை நோக்கி ஏகி
6.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற இந்த அலைகளைப் பரப்ப வேண்டும்

கணவனும் மனைவியும் ஒன்று சேர்த்த இணைகள் இருவரும் ஒன்றாகி சூரியனின் காந்த சக்தியால் அது கவரப்பட்டு அலைகளைத் தொடரச் செய்வதுதான் இது.

இவ்வாறு அதை இணைந்து விட்டுத் திருப்பூட்ட வரும் பொழுது
1.விஷ்ணு அக்கினி… தனக்குள் இயக்கிக் கொண்டிருக்கும் உயிரை எண்ணி
2.அந்த உணர்வின் துணையால் எங்கள் இரு மனமும் ஒன்றாக வேண்டும் என்று இன்று இணைக்க வேண்டும்.

பின்… மலரைப் போன்ற மணம் பெற வேண்டும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். கனியைப் போன்று சுவையான சொல்லும் செயலும் எங்களிலே வளர வேண்டும்.
1.என்றென்றும் எங்கள் அன்னை தந்தையரின் அரவணைப்புடன் நாங்கள் வாழ்ந்திட வேண்டும்.
2.அவர்கள் உணர்வுகள் எங்களுக்குள் குருவாக இருந்து வழி நடத்தும் அந்த அருள் சக்தி நாங்கள் இருவரும் பெற வேண்டும் என்று
3.திருப்பூட்டும் முன் மணமக்கள் ஏங்கி இருக்க வேண்டும்

அதே சமயத்தில் வாழ்த்துரைக்க வந்த மற்றவர் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழச் செல்லும் அவர்கள் இருவரையும் ஒன்றாக இணைக்கச் செய்ய அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத் தங்களுக்குள் வலுவாக்கிக் கொண்டு அந்த மணமக்களைப் பார்த்து…
1.வசிஷ்டரும் அருந்ததியும் போல இரு மனமும் ஒன்றி அவர்கள் வாழ வேண்டும்
2.வாழ்க்கையில் வரும் இருளைப் போக்கி பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும்
3.அவர்கள் அன்னை தந்தை அருள் ஒளியால் தெளிந்த மனங்கள் கொண்டு மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும் என்று
4.அனைவரும் இதை எண்ணிக் கண் ஒளியால்… நினைவால் அந்த உணர்வலைகளைப் பரப்ப வேண்டும்.

மணமக்களைக் கருத்தில் கொண்டு இந்த எண்ண அலைகளைப் பரப்பப்படும் பொழுது இந்த உணர்வின் சக்தி அங்கே அவர்களுக்குள் ஆழமாகப் பதிந்து நம்முடைய வாழ்த்துரைகள் அவர்கள் வாழ்க்கையைச் சீராக்க இது உதவும்.

ஆக…
1.மணமக்களை எவ்வாறு வாழ்த்த வேண்டும்…?
2.வாழப் போவோருக்கு நாம் எப்படி நல்லாசி கூற வேண்டும்…?
3.நாம் கொடுக்கும் அந்த ஆசிகள் இருளைப் போக்கிடும் அரும் பெரும் சக்தியாக எப்படி வலுப்பெறச் செய்ய வேண்டும் என்று தான்
4.நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.

ஆதிசங்கரருக்குப் பின் மெய் வழி செல்லும் பாதையே மாறி விட்டது…! ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எண்ணத்தின் உணர்வைச் சமமாக்கும் ஆத்ம வலுக் கொண்டு ரிஷிகளுடன் தொடர்பு கொண்டு உயர் காந்த மின் ஒளியை ஜெபத்தால் எடுக்கும் நிலைக்கு வளர வேண்டும்.
1.இப்படிப்பட்ட வாழ்க்கைத் தொடரில் வளர்த்துக் கொள்ளும் உயிராத்மா இணைப்பில்
2.கணவன் மனைவியின் கூட்டு ஜெபத்தால் மனிதன் தெய்வ நிலை பெற முடியும்.

அண்டத்தின் அகிலமாய்… ஆதி சக்தியின் அனைத்துப் படைப்பிலும்…
1.ஆண்டவன் என்ற உயர்ந்த நிலையில்
2.அதன் தொடர் பெற்று வளரும் தன்மையை இறை நிலையாக்கி
3.இறை சக்தி கொண்டு… இறை உணர்வு பெற்று…!
4.தெய்வத் தன்மை கொள்ளும் தொடர்பு நிலை தான் “இயற்கையின் உண்மை நீதி நிலை…!”

மனிதனின் எண்ணத்தின் உணர்வில் பகுத்தறியும் உயர் ஞானத்தின் வழித் தன்மை கொண்டு இறை நிலை பெற்று… இறை சக்தியாய்… இறை உணர்வு குணத்தை… இச்சரீர வாழ்க்கையில் வலுப்பெறும் வளர்ச்சிக்கொப்ப… மனிதன் தெய்வமாகும் நிலை உண்டு.

மனித வாழ்க்கைக்குத் தேவையானதை… நாளை செயல் கொள்ள இன்றே சேமிக்கும் செயலை… அந்தத் திறமை கொண்டு வழி அமைக்கும் பக்குவம் “மனிதனுக்குதான் உண்டு…!”

வாழ்க்கையின் நடைமுறைக்கு உழுது பயிரிட்டுப் பலன் பெற்றுத் தான் இன்றைய மனிதன் சமைத்து உண்ணுகின்றான்.

உடலின் சுக நிலைக்கு ஏற்ற பல வழி முறைகளைத் தன் ஞானத்தால் மனித வாழ்க்கை நடைமுறையில் செயல்படுத்தும் நாம்…
1.நம் ஞானத்தின் உயர்வால் உயிராத்மாவைத் தெய்வத் தன்மை கொள்ளும் பக்குவத் தொடர் தான்
2.இங்கே இந்த உபதேச வாயிலாக விளக்கப்படும் இயற்கையின் உண்மையின் நியதிகள்.

மிருகங்கள் தனக்குக் கிடைத்ததை உண்டு உறங்கும் வாழ்க்கையாக அதனின் உணர்வின் எண்ணத்தின் நிலை இருந்தாலும் உயர் ஞானத்தால் செயல்பட முடியாத உண்மை நிலையை அன்றே ஞானிகள் தன் உணர்வின் எண்ணத்தால் கண்டுணர்ந்தனர்.

ஆனால் காலப் போக்கில் ஞானத்தின் வழி செல்வது என்பது பல நிலைகளில் மாற்றப்பட்டு… உண்மைத் தத்துவங்கள் மறைக்கப்பட்டு விட்டது.

தன்னுள் உள்ள இறை சக்தியை இறை உணர்வாக்கும் நிலையை மனிதன் அறிய முடியாமல்
1.இறைவன் என்பதையே யாரென்று அறிய முடியாமல்
2.பூஜித்துப் பலன் காணும் வேத விற்பனர்களிடம் அடிமைப்பட்டு
3.சிதறுண்ட நிலையாகத் தான் இன்றைய நிலை உள்ளது.

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே உணர்வின் எண்ணத்தில் தன் எண்ணத்தாலே சக்தி பெற்று… உயர்வை வளர்க்கும் உயர்ந்த தத்துவத்தை ஆதிசங்கரர் அத்வைத முறைப்படுத்திக் காட்டினார்.

அதற்கடுத்து வந்தவர்கள் நான்கு வகை வேதங்களாக்கி… மனித உருவங்களை அமைத்து… மந்திர ஒலி எழுப்பி… அறியக்கூடிய நிலைக்கும் பக்தி மார்க்க நிலைக்கும்… வான சாஸ்திரத்தின் தொடரை அறியவும் கொண்டு சென்றனர்.

அந்த நான்கு வேதங்களின் தொடரில் இது தான் பெரிது… இல்லை அது தான் பெரிது… என்று பல வேதங்களைப் பிரித்து மனிதனின் எண்ண உணர்வால் தெய்வத் தன்மை பெறக்கூடிய வழியை மாற்றி விட்டனர்.

அரசு நிலைக்கும்… குடிமகன் நிலைக்கும்.. நாட்டியக்கலை மற்ற இசைக் கலைகளுக்கும்… வேதத்தின் விற்பன்னர்களுக்கும்… என்று நான்கு மறையாக்கி வகுக்கப்பட்ட நிலையில் அந்தந்தத் தொடருக்குப் பல நிலைகளைப் பிரித்தனர்.

அது மட்டுமல்லாமல் காலப்போக்கில் ஒலி அலையின் தொடர் பெற்று உருவகங்கள் மாறி மாறி
1.அன்று கண்ட ஞானியின் உண்மைத் தத்துவத்தை
2.இன்றைய நிலையில் உணரும் தன் ஞானமும் அற்றுப் போய்
3.விஞ்ஞானப் பிடிப்பிலேயே வாழுகின்ற நிலை எல்லோருக்கும் ஏற்பட்டு விட்டது.

இதிலிருந்து மீள வேண்டும் என்றால்… ஞானத்தின் வழித் தொடரில் உயர் ஞானமாக்கும் ஆத்ம தியானத்தால்… தன்னைத்தான் தான் உணரும் பக்குவம் பெற்று மனிதனுக்கு அடுத்த உயர்வு நிலையான “தெய்வ நிலை” பெற முடியும்

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“வேதனை…வேதனை…வேதனை… என் வாழ்க்கையே வேதனை…” என்று எண்ணினால் பல விதமான பாம்புகளாகத்தான் அடுத்து உடல் பெறுவோம் – மீளும் மார்க்கம் என்ன?

உயிரணு தோன்றி எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து மனிதனாக நாம் வந்த பின் விஷத்தை மலமாக மாற்றி நல்ல உணர்வுகளைக் கொண்டு வந்தது இந்த உடல்.

அவ்வாறு நல்ல உடலாக நாம் பெற்று வந்தாலும் இன்றைய வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் உணர்வுகள் நம்மை வேதனைப்படச் செய்கின்றது.

ஆனால் வேதனை என்ற உணர்வுகளைச் சுவாசித்துச் சுவாசித்து எல்லா அணுக்களிலும் இந்த விஷத்தைச் சேர்த்துச் சேர்த்து வளர்த்து விட்டால் என்ன சொல்வோம்…?

எம்மா…! என்னாலே முடியவில்லையே… அவன் அப்படிச் செய்கின்றான்… இவன் இப்படிச் செய்கின்றான்… என்று கடும் வேதனையாக நாம் பேசத் தொடங்குவோம்.

அப்பொழுது நம் நண்பரிடம் சொல்லி உதவி கேட்கலாம் என்று செல்கிறோம். அவரிடம் கடுமையான நிலைகளில் வேதனைப்பட்டதைப் பற்றி விவரித்துச் சொல்லும் பொழுது அவரும் உற்றுக் கேட்கின்றார்.

அப்பொழுது அவருக்குள் அந்த வேதனை உணர்ச்சிகள் அதிகமான பின் அவருக்கு மயக்கமாகி விடுகின்றது.

நாம் எந்த எதிர்பார்ப்பில் இருப்போம்…? வேதனையைச் சொல்லி அவர்களிடம் ஏதாவது காசு வாங்கலாம் என்று எண்ணிக் கஷ்டத்தை அதிகமாகச் சொல்வோம்.

இந்தக் கஷ்டமான உணர்வுகள் அவர்களுக்குள் பாய்ந்து அவர்களுக்கு வருமானம் வருவதையும் தடுக்கும். கடைசியில் அவர்களையும் (மயக்கம்) நோயாக்குகின்றது.

அப்பொழுது அந்த நேரத்தில் கேட்டால் “பணம் இல்லை…” என்பார்..

நாம் என்ன நினைப்போம்…! இந்த நண்பர் எனக்கு உதவி செய்கிறேன் என்று நேற்று சொன்னார். இன்று “இப்படி இல்லை…” என்கிறாரே…! என்போம். ஆனால்
1.நம்முடைய உணர்வு தான்
2.அவரை இப்படிச் சொல்ல வைக்கின்றது என்று நமக்குத் தெரிவதில்லை.

நமக்கு அவர் எந்த உதவியும் செய்யவில்லை என்று மீண்டும் இந்த உணர்வின் தன்மை வேதனையாகி நம் உடலுக்குள் வரப்படும் போது விஷங்கள் அதிகமாக வளர்ந்து விடுகின்றது.

அப்பொழுது நம் உடலுக்குள் என்ன நடக்கின்றது…?

எல்லா அணுக்களுக்குள்ளும் வேதனை படர்கின்றது. விஷத்தின் தன்மை நல்ல அணுக்களைக் கொன்று சாப்பிட ஆர்ம்பிக்கின்றது.

ஒரு விஷம் கொண்ட பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சித்தான் மற்ற உயிரினங்களை விழுங்கித் தன் உடலாக மாற்றுகின்றது.

அதைப் போல வேதனப்படும் இந்த விஷமான அணுக்கள் மனித உடலை உருவாக்கிய நல்ல அணுக்களைக் கொன்று சாப்பிடுகிறது.

நம் உடல் அப்படியே நலிந்து போய்விடும். ஐய்யய்யோ…, அம்மம்மா என்று சொல்லத் தொடங்குவோம்.

கேன்சர் நோயுடன் இருப்பவர்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள்…? என்ன செய்கிறார்கள்…? நாளுக்கு நாள் நாளுக்கு நாள் வேதனையைத் தான் சேர்க்கின்றார்கள்.

சரவாங்கி நோயோ மற்ற நோய்களோ வரப்படும் போது மூட்டுக்கு மூட்டு வலிக்கின்றது. வேதனை வெறுப்பு கோபம் இதெல்லாம் சேர்த்தவுடனே நம் உடலில் உள்ள நல்ல அணுக்களை அது கொன்று சாப்பிடுகிறது.

1.விஷத்தைப் பாய்ச்சி தனக்கு இரையாக்கிவிடும்.
2.அதனுடைய மலம் நம் உறுப்புகளைத் தின்றுவிடும்.
3.அதனுடைய மலம் உறுப்புகளைத் தின்றால் உடல் உறுப்புகள் குறையத் தொடங்குகிறது.
4.கடைசியில் மனிதன் வாழ்க்கையைக் குறைக்கச் செய்துவிடுகின்றது.

இந்த உடலை விட்டுப் போன பிற்பாடு எங்கே போகிறது…? பாம்பின் உடலுக்குள் சென்று பாம்பின் உடலைத்தான் பெறுகின்றது.

கேன்சர் நோய் உள்ளவர்கள் இறந்தார்கள் என்றால் அடுத்துப் பாம்பின் நிலைக்கே போகிறார்கள்.

வேதனை வெறுப்பு கோபம் என்று வரப்படும் போது கட்டுவீரியன் பாம்பாகத்தான் போகவேண்டும். விஷத்தின் தன்மை அளவுகோல் எப்படி இருக்கின்றதோ அதற்குத்தக்க கண்ணாடிவீரியன் பாம்பாகப் போகிறார்கள்.

உடல் பெற்ற நிலைகளில்
1.எந்தெந்த உயிரினங்கள் ஊர்ந்து செல்கிறதோ
2.அது போல கை கால் எல்லாம் இழந்து
3அத்தகைய உயிரினங்களின் உடலாக ஆக்கிவிடும் நம் உயிர்.
4.இதுவும் உடல் சிவம் தான்.

ஆனால் இருளுக்குள் வேதனை என்ற உணர்வு வரும் போது சிந்திக்கும் தன்மை இழந்து அதற்குத்தக்க உடலை இந்த உயிர் தான் உருவாக்குகின்றது.

காரணம் “சந்தர்ப்பம்… தான்”.

வேதனைப்படுவோர்களுக்கு எல்லாம் அடிக்கடி ஏதாவது வரும். வந்தது என்றால் அது சந்தர்ப்பம் தான்.

ஐயோ… “நல்ல மனிதன்… இப்படி இருக்கின்றானே…!” என்று நீங்கள் எண்ணுவீர்கள்.

இந்தச் சந்தர்ப்பம் நம் உடலில் வேதனை அதிகமாகச் சேர்த்தவுடனே என்ன செய்கிறது…? வேதனை என்ற விஷம் உள்ளுக்குள் போய் நல்ல குணங்கள் அனைத்தையும் சாப்பிட்டு விழுங்குகின்றது.

நான் எல்லாருக்கும் உதவி செய்தேனே… பண்பாக இருந்தேனே… பரிவாக இருந்தேனே… என்று நாம் சொல்லலாம்.

யானை தேய்ந்து கட்டெறும்பாகப் போன மாதிரி “அம்மா… தாங்க முடியவில்லையே… என்றைக்குத் தான் இந்த உடலை விட்டுப் போகப் போகிறேனோ…?” இது… வந்துவிடும்.

நான் இத்தனை பேருக்கு உதவி செய்தேனே…! என்று எண்ணுவோம்

ஆனால் கடைசியில அதைக் கூட மறந்துவிட்டு “எப்படா… (உடலை விட்டு) என்னைக் கொண்டு போகப் போகிறாய்?” என்று சொல்லிப் புலம்புவோம்.

இந்த உணர்வுதான் தோன்றும். வெளியில் போனவுடன் என்ன செய்யும்…?

அதற்குத்தக்க பாம்பின் ஈர்ப்புக்குள் போய் அதனின் கருமுட்டையாக அமைந்து அமைதியாகி… பாம்பாகப் பிறக்கும். பாம்பாகப் பிறந்த பிற்பாடு விஷத்தைப் பாய்ச்சி சந்தோஷமாக இருக்கும் நிலை வருகிறது.

பாம்பு தன் உணவுக்காக ஒரு சுண்டெலியையோ அல்லது பெரிய எலியையோ பார்க்கிறது. விஷத்தால் தீண்டியவுடன் எலி இறந்து போகின்றது.

தன் விஷத்தைப் பாய்ச்சிக் கொன்ற பிற்பாடு வாயைத் திறந்து அந்த எலியை விழுங்குகிறது. உள்ளுக்குள் செல்லும் நிலையில் உடல் உப்புசமாகி பாம்பு நரக வேதனைப்படுகின்றது.

1.முதலில் (மனித உடலில்) அதிகமான வேதனைப்பட்டது.
2.அடுத்தாற் போல பாம்பாகப் பிறந்து விஷத்தைப் பாய்ச்சிச் சந்தோஷமாக இருக்கின்றது.
3.பாம்பான பின் தன் இரையை விழுங்கும் போது இத்தனை நரக வேதனைப்படுகிறது.

உடலுக்குள் கொண்டு போய்ச் சேர்ப்பதற்குள் அது படும் பாடு பார்த்தால் அது எத்தனை நரக வேதனைப்படுகிறது…?

பாம்பு தன் இரையை முழுங்கிய நிலையில் இருக்கும் பொழுது அதை நீங்கள் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். அது எத்தனை அவஸ்தைப்படுகிறது என்று.

கேன்சர் நோய் உள்ளவர்கள் சாப்பிடும் போது எத்தனை வேதனைப்படுகிறார்கள்…? அதே மாதிரி
1.பாம்பின் உடல் பெற்ற பிற்பாடும்
2.அதே வேதனை தான் வருகின்றது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் என்னமோ… “கடவுள் எங்கேயோ இருந்து இயக்குகின்றார்…! அவர் தான் எல்லாவற்றிற்கும் காரணம்…!” என்று எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் ஞானிகள் சொன்னது.
1.உள் நின்று இயக்கும் நம் உயிர் தான் கடவுள்.
2.நம் சந்தர்ப்பம் நாம் எதை நுகர்கின்றோமோ
3.அதனின் இயக்கமாக சுவாசித்ததை நம் உயிர் இயக்கி
4.எண்ணம் சொல் செயல் என்று செயல்படுத்துகின்றது.

நாம் நுகரும் உணர்வுகள் தான் அனைத்திற்கும் காரணம்.

சூரியனுக்கே இல்லாத சிறப்பு நமக்கு உண்டு

 

இந்தப் பேரண்டத்திலே மற்ற அணுக்களாகி… துகள்கள் ஆகி… கோள்களாகி நட்சத்திரமாகி வளர்ச்சியில் சூரியனாகி அதன் வழிகளில் பிறந்த நிலையில் அனைத்தும் தெளிந்திடும் அணுவின் தன்மை பெற்று உலகையே சிருஷ்டிக்கும் நிலைகள் பெற்றது தான் “சப்தரிஷி மண்டலம்…” என்பது.

விண்ணின் ஆற்றலைப் பெற்று பேரண்டத்திலிருந்து வரும் நஞ்சினைப் பிளந்துவிட்டு உணர்வினை ஒளியாக மாற்றியவர்கள் ஒளிச்சுடராகச் சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள். பிறவா நிலை என்ற நிலை அடைந்துள்ளார்கள்

தீமை எது…? நன்மை எது…? என்று உணர்ந்து அதிலே தீமைகளை அகற்றி நன்மைகளை உருவாக்கும் எண்ணங்களைத் தனக்குள் வளர்த்து தீமைகளை அகற்றிடும் வலுவைத் தனக்குள் சேர்த்துச் சேர்த்து ஆற்றல்மிக்க சக்தியை தனக்குள் உருவாக்கிய நிலைகள் கொண்டு உயிருடன் ஒன்றி அழியா ஒளி சரீரம் பெற்றுப் பேரின்ப பெரு வாழ்வு என்ற நிலைகளை அகஸ்தியன் அடைந்தான்.

ஆவியாக இருப்பது அணுக்களாக வளர்ந்தாலும் அதிலே மனிதனான பின் உணர்வின் சத்து உயிருடன் ஒன்றிய ஒளியின் நிலைகள் ஒளியின் சிகரமாகப் பெற்றபின்
1.அதனின்று வெளிப்படும் உணர்வுகள் அனைத்தும்
2.பேரண்டத்தில் பெரும் சக்தியாக மாற்றமடைந்து வருகின்றது.

இப்படித் தான் தன்னுடைய வளர்ச்சியில் வந்த மனிதனின் உயிர் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறியபின் உலகையே படைக்கும் சக்தியாக வருகின்றது.

ஆகையினால் இந்த மனித வாழ்க்கையில் நாம் சிந்தித்து… எதனை நமக்குள் சமைக்க வேண்டும்… பொங்கலாக்க வேண்டும்… எதை ஒளியாக மாற்ற வேண்டும்…? என்பதைச் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

சூரியன் எவ்வாறு இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து அதிலே மற்ற அனைத்தையுமே வளர்ச்சி அடையச் செய்கின்றதோ அதே போன்று மனிதனானவன் சூரியனைப் போன்ற நிலைகள் அடைந்து படைக்கும் திறனைப் பெற்றவன் தான்,

அதனை அறிந்து அதன் வழிகளில் தீமைகளை அகற்றிடும் உணர்வைத் தனக்குள் வளர்த்து முழுமை அடைந்தவர்கள் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் வளர்ச்சி அடைந்துள்ளார்கள்.

சூரியன் எவ்வாறு மற்ற கோள்களையும் நட்சத்திரங்களையும் உருவாக்கியதோ அதைப் போன்று முதல் மனிதனான அகஸ்தியன் துருவத்தின் நிலைகளை உணர்ந்து துருவ நட்சத்திரமாக இன்றும் நிலை கொண்டுள்ளான்.

அதிலிருந்து உமிழ்த்திய உணர்வுகளைப் பெற்று அந்த அகஸ்தியனைப் பின்பற்றிச் சென்ற மனிதர்கள் அனைவருமே ஒளிச் சரீரமாகி ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக மாற்றிச் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்

நம் பிரபஞ்சத்தில் உள்ள சூரியனோ அது குறிப்பிட்ட காலத்தில் மடிந்துவிடும். ஆனால் இந்தப் பிரபஞ்சத்தில் உருவான உயிரணுக்கள்
1.தீமைகளை அகற்றிடும் உணர்வின் சத்தைத் தனக்குள் தெளிவாக எடுத்துக் கொண்டால் அது என்றுமே மடிவதில்லை.
2.இந்தப் பேரண்டத்தை உருவாக்கும் சக்தி பெறுகிறது.

அத்தகைய ஆற்றல் பெற்றவர்கள் தான் அகஸ்தியனும் மற்ற மகரிஷிகளும். நாமும் அந்த ஆற்றலைப் பெற வேண்டும். அதற்குத் தான் இந்த உபதேசம்…! (ஞானகுரு).

மகரிஷிகள் மனிதரைத் தேடி வருவதன் காரணம் என்ன…? ஈஸ்வரபட்டர்

 

காட்சி: பிரகாசமாக சூரிய வட்டம் தெரிந்து பல ரிஷிகளின் உருவமும் அவர்களின் செயல் முறையும் தெரிகின்றது. உருவம் தெரிந்து அவ்வுருவம் அப்படியே பிரிந்து… ஒளியாக ஒரு உருவம் பிரிந்த பிறகு… மீண்டும் பல உருவங்களாகவும் தெரிகின்றது.

பல கோடி ரிஷிகள் உள்ள பொழுது இப்பூமியில் இன்று தன்னைத் தானே உணர முடியாமல் வாழ்கின்ற மனிதனின் மேல்
1.அவர்கள் வளரத் தன் சக்தியை ஏன் உபயோகித்துச் செயல்பட வேண்டும்…?
2.சிருஷ்டியின் தன்மையையே சிருஷ்டிக்கும் ரிஷிகள்
3.மனிதனின் உணர்வுடன் ஒட்டிச் செயல்படும் நிலைகள் எதற்கு…? என்ற வினா எழும்பலாம்.

சூரியனும் பூமியும் ஒன்றின் ஈர்ப்புத் தொடர் கொண்டு ஒவ்வொன்றும் தொடர்ந்து ஓடிக் கொண்டே செயல்படுகின்றது. ஈர்ப்பின் பிடிப்பில் இருந்து எந்த மண்டலமும் தனித்த ஒன்றாகச் சுழன்று செயல்பட முடியாது.

1.ஒன்றின் தொடர்பு பெற்று…
2.ஒன்று ஓடும் ஜீவ வளர்ச்சி ஏற்படும் தொடரில் தான்
3.எல்லா மண்டலங்களின் சுழற்சியும் உள்ளது.

இச்சுழற்சியின் மையக் கருவாக ஈர்க்கப்படும் சக்தியின் தொடர் வளர்ச்சியுற்றுக் கொண்டே… அத்தொடரின் வலுக்கொண்டு வளரும் தொடரில் தான்… மண்டலங்களும் அதில் வளரும் தொடரும் செயல் கொள்கின்றது.

அதைப் போன்று தான் சகல சித்து நிலையின் படைப்பின் படைப்பையே படைக்கவல்ல “ரிஷிகளின் தொடர்பிற்கு…” உணர்வின் எண்ணம் கொண்ட ஜீவ காந்த ஒலி சரீரத் தொடர்பின் எண்ணம் கொண்டுதான் அந்த ரிஷி சக்திகளின் மூலக்கருவே செயல் கொள்கின்றது.

1.தன்னுடைய வலுவின் தொடர் வலுவில் வளர்ப்பை வளர்க்கவல்ல நிலைக்கு…
2.ஜீவ காந்த உணர்வு எண்ண செயல் சக்தியைக் கொண்டு…
3.ரிஷிகளின் தொடர்புடன் மனித எண்ணத்தின் தொடர்பு சுழற்சி வலுப் பெறப் பெற…
4.ரிஷிகளைக் காட்டிலும் மனித உணர்வால் ஜீவ செயலில் உபதேசிக்கும் உண்மை உயர் ஞானத் தத்துவ ஈர்ப்பினால்…
5.மனித உணர்வின் அன்பைப் பெற்றானானால்…
6.மனிதச் சரீரத்தில் இருந்தே பலரின் அன்பான அலையின் வலுவைக் கொண்டு…
7.இச்சரீர ஆத்மாவிற்கு உயர்ந்த முலாமை வளர்த்துக் கொண்டு…
8.இச்சரீரத்தில் இருந்தே அஷ்டமாசித்தின் ஒளி சக்தி பெற்று உயர்வு நிலை பெற…
9.இச்சரீரத்தின் எண்ணத்தின் உயர்வில் வலு நிலை கூடுகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எத்தனை கோடி உடல்களில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து இன்றைக்கு மனிதனாக வந்திருக்கின்றோம்.

மனிதனாகப்போகும் போது ஆசையின் நிமித்தம் அது எத்தனையோ பேர் பல விதமான பழக்கங்கள் வைத்திருக்கின்றார்கள்.

தண்ணீர் (மது) சாப்பிட்டு பழக்கப்பட்டவர்களுக்குத் திரும்பத் திரும்ப அந்தத் தண்ணியைக் குடித்தால் தான் அவருக்கு சந்தோஷம்,

சிகரெட் பீடி குடித்துப் பழகிவிட்டால் அது இல்லை என்றால் வேறு எந்த வேலையும் என்னால் செய்ய முடியவில்லை… “முடியாது…” என்பார்கள்.

கடைசியில்…
1.இருமல் வருகிறது…! இருதயமும் நுரையீரலும் கெட்டு விட்டது…! என்று தெரிந்தாலும் கூட
2.அப்பொழுதும் இரண்டு குடித்தால் தான் எனக்கு நல்லது… அது தான் எனக்குச் சந்தோஷம் என்ற நிலைதான் வருகிறது.
3.நிறுத்த முடிகின்றதா…? என்றால், இல்லை .

அதே போல் மட்டன் சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு மட்டன் சாப்பிடவில்லை என்றால் என்ன சொல்வார்கள்…? என்னாலே மட்டன் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை என்பார்கள்.

ஆனால் அந்த மட்டன் சாப்பிட்ட பிற்பாடு என்ன நடக்கின்றது…?

ஆடு மாடெல்லாம் தான் உணவாக உட்கொள்வதிலிருக்கும் விஷத்தைத் தன் உடலாக மாற்றிக் கொள்கின்றது. நல்லதைத் தன் கழிவாக வெளிப்படுத்துகின்றது.

இப்படி ஆட்டினுடைய உறுப்புகளுக்குள் அது கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தைச் சேர்த்துத் தன் உடலாக்கி வலுவாக்கிக் கொள்கின்றது.
1.அந்த ஆட்டைச் சாப்பிட்டவுடன் நமக்கும் உடல் வலுவாகிவிடுகிறது.
2.முரட்டுத்தனமான புத்தியும் வரும்… மட்டன் சாப்பிட்டவுடனே அந்த வாசனை தான் நம் உடலிலிருந்து வரும்
3.ஆட்டைக் கண்டாலே “அடித்துக் கொன்று சாப்பிடலாமா…” என்ற எண்ணம் வரும்.
4.ஆட்டைப் பார்த்தாலே இப்படிச் சாப்பிடும் எண்ணம் தான் வரும்.

மீண்டும் மீண்டும் மட்டன் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உடலில் இதெல்லாம் வலுவான பிற்பாடு
1.நமக்குள் மனித குணம் இருக்கிறது அல்லவா.
2.அதை எல்லாம் இது கொன்று சாப்பிட்டுவிடும்.
3.எது…?
4.இந்த விஷம்.

கறி சாப்பிட்டவர்கள் அவர்கள் உடலில் சென்ட்டை (வாசனைத் திரவியம்) போடவில்லை என்றால் நாற்றம் தான் வரும். மட்டன் சாப்பிடுகிறவர்கள் சென்ட் போடாமால் இருக்க முடியுமா…!

சென்ட் போடவில்லை என்றால் அவர்கள் பக்கத்தில் போனாலே கவிச்சி நாற்றம் இருக்கும். ஆகவே
1.அந்த மணத்துடன் உடலை விட்டு வெளியே வந்த பிற்பாடு உயிர் என்ன செய்யும்…?
2.ஆடு மேய்ந்து கொண்டிருக்கும்.
4.அதன் ஈர்ப்புக்குள் இழுத்துக் கொண்டு போய்விடும்.

அங்கு போனவுடனே அதற்குள் கருவாகி ஆடாகிறது. நீ சாப்பிட்டாய். நீ அதே மாறிப் போ. உயிருடைய வேலை அது தான்.

நம் சந்தர்ப்பம் வலு எதுவோ அந்த நிலைகளுக்கு நம் உயிர் மாற்றிக் கொண்டே இருக்கும்.
1.இன்றைக்கு மனித உடல் ஒரு சட்டை.
2.நாளைக்கு ஆட்டு உடல் ஒரு சட்டை.

பாம்பு விஷத்தால் மனிதனைத் தீண்டிவிடுகிறது. உடலுக்குள் பாம்பின் விஷம் ஆன பிற்பாடு செத்தால் பாம்பு உடலுக்குள்ளே உயிர் போகின்றது.

ஆனால் பாம்பை ஒரு மாடு மிதித்ததென்றால் அதனுடன் இணைத்துக் கொண்டு மாட்டையே எண்ணி அந்தப் பாம்பினுடைய உயிர் மாடு உடலுக்குள் போய் மாடாகப் பிறக்கின்றது.

மனிதன் அடித்துக் கொன்றாலும் மனிதன் மேல் நினைவு அதிகமாகி மனிதனுக்குள் வந்து பாம்பு மனிதனாகப் பிறக்கிறது.

ஆனால் மனிதனைப் பாம்பு கடித்தாலோ பாம்பின் நினைவு வரும். மீண்டும் மனிதன் பாம்பாகப் போவான்.

இயற்கை எப்படி வளர்த்து வைத்திருக்கின்றது என்பதை இன்று விஞ்ஞானியும் தெரிந்து வைத்திருக்கின்றான்.

மெய்ஞானி தெரிந்து நாம் எப்படி வாழ வேண்டும் என்று இராமயாணம் மகாபாரதம் கந்த புராணம், சிவ புராணம் எல்லாவற்றிலும் அன்றைக்கே கொடுத்திருக்கிறான்.

நாம் புரிந்து கொண்டோமா…? என்றால் இல்லை…!

நான் சொல்வதை “ஏதோ…” என்று இலேசாக விட்டுவிடாதீர்கள்

 

எத்தனையோ கோடி சரீரங்களைப் பெற்ற பின் மனிதனாக நாம் உருவானாலும் நாம் சந்தர்ப்பத்தால் நுகரும் தீமையான உணர்வுகள்
1.மனித உடலை எப்படி அழிக்கின்றது..?
2.நம் நினைவாற்றலை எப்படி மாற்றுகின்றது…?
3.மீண்டும் பரிணாம வளர்ச்சியில் தேய் பிறையாகி
4.மனிதனல்லாத உடலுக்குள் எப்படிச் செல்லுகின்றோம்? என்று
5.இதையெல்லாம் நாம் யாருமே சிந்திப்பதில்லை…!

அந்தத் தேய் பிறையான நிலைகளுக்குச் செல்வதை நிறுத்த வேண்டும் என்றால் அருள் ஞானியின் உணர்வை நமக்குள் விளைய வைக்க வேண்டும்.

தீமையின் நிலைகளுக்குச் செல்லாது அருள் ஞானியின் உணர்வை எடுத்து ஒளியாக மாற்றி என்றும் பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலைகளுக்கு உங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே குருநாதர் எமக்கு (ஞானகுரு) இட்ட அருள் பணியாகும்.

உங்களுடைய நினைவாற்றல் மகரிஷிகளின் பால் இருக்கச் செய்வதே இந்த உபதேசத்தின் நோக்கம். உங்கள் உடலுக்குள் மகரிஷிகளின் உணர்வுகள் ஊடுருவும் போது தீமையின் நிலைகளைக் கரைத்துவிடும்.

நான் வெறும் சொல்லாகச் சொல்வதாக நீங்கள் எண்ணலாம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் (குருநாதர்) என்னிடம் சொல்லும்போது
1.அவன் சொல்லுகின்றான்… நான் எதைப் பெற முடியும்..?
2.அவன் காட்டுகின்றான்… நான் எதைப் பெற முடியும்…! என்று இப்படித்தான் முதலில் எண்ணினேன்.

அவன் (குருநாதர்) சொன்னதை
1.அந்த வலுவின் தன்மை எனக்குள் வரப்படும் பொழுது
2.பின்னாடி தான் அவர் சொன்ன உணர்வுகள் அனைத்தையும்
3.காட்சிகளாக நான் காண முடிந்தது… உணரவும் முடிந்தது…!

மெய் ஞான அறிவின் தன்மை அது எப்படி…? என்றும் ஒவ்வொரு உயிரிலும் உணர்வுகள் எப்படி விளைகின்றது…? என்ற நிலையும் பின் தான் நான் உணர முடிந்தது.

அதைப் போல இன்றைய நிலைகள் நான் சொல்வதை “ஏதோ…” என்று இலேசாக விட்டுவிடாதீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் அறியாது வந்த தீமையின் நிலைகளை நிறுத்த அருள் மகரிஷிகளின் உணர்வை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துப் பழகிக் கொள்ளுங்கள்.

தீய வினைகளைக் கரைத்து மெய் ஞானிகளின் அருள் ஒளியைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

தீயவைகளுடன் மோதாமல் நல்லதைப் பாதுகாக்கும்  ஜெபமாகத்தான் நாம் செயல்படுத்த வேண்டும்…! ஈஸ்வரபட்டர்

 

சாதாரணமாக ஒரு பானையில் தண்ணீரை ஊற்றி வைத்து விட்டோமானால சில நாட்களில் அந்நீர் வழுவழுப்புத் தன்மை கூடி பாசி பிடிக்கின்றது.

“அவ்வழுவழுப்பு நிலை” ஏற்பட்ட பிறகுதான் அடுத்த வளர்ச்சி நிலை ஒவ்வொன்றிலுமே வளருகின்றது. “பிசின்” போன்ற நிலை ஏற்பட்ட பிறகுதான் அதன் ஜீவத்தன்மை முதிர்வு நிலை கொள்கின்றது.

அதுவே ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி காய்ச்சும் பொழுது அப்பாத்திரத்திற்கு அடியில் மண் போன்று படிவங்கள் வெள்ளையாகப் படிந்து விடுகின்றது.

இதைப் போன்று…
1.மனித உணர்வில் எடுக்கப்படும் அலைத் தொடர்பின் உணர்வு
2.சரீரம் சமைக்கும் நிலை கொண்டு ஆத்ம அலையின் “படிவமாகி விடுகின்றது…”

ஆத்மாவின் வண்ணத் தன்மை கொண்டு பிரகாச நிலை ஒளி சக்திகளை இச்சரீர சமைப்பினால் மனிதன் பெற்றானானால் மனித சக்தியில் சித்து நிலை பெற முடியும்.

மகரிஷிகளின் உயர் காந்த அலையை…
1.உணர்வின் எண்ணம் கொண்டு “விழி கொண்டு ஒளி பார்த்து இச்சரீரத்தின் உணர்வில் எடுக்கும் ஜெப முறையினால்…”
2.மனித உணர்வின் சஞ்சலமற்ற சம உணர்வு வளர்ச்சியின் தியானத்தின் முறை அறிந்து…
3.தன்னைத்தான் தான் உணரக்கூடிய வழி அறிந்தானானால்…
4.தன் வாழ்க்கை செயலில் அமைதியையும் தன் ஆத்மாவின் உயர்வின் வழியையும் ஒவ்வொருவரும் பெறலாம்.

நம் தேவைக்குகந்த நெல்லைப் பயிரிடுகின்றோம். நிலத்தை உழுது பருவம் பார்த்துப் பயிரிட்டு அதற்குகந்த பாதுகாப்பு எல்லாம் செய்கின்றோம். பின் அதனுடைய பலனை நாம் கண்டு நெல்லை அறுத்து பக்குவமாய் சேமிக்கவும் முற்படுகின்றோம்.

ஆனால் அதை நாம் எடுத்துச் சேர்ப்பதற்குள் பெரிய மழை வந்தால் எல்லாம் அழிகின்றது. அதைப் போன்று…
1.தியானத்தின் மூலம் பல பக்குவமான முறைகளை இச்சரீரத்தில் வளர்த்துப் பலன் பெறும் பக்குவத்தில்
2.உணர்வில் மோதும் பலமான மாற்றத்தினால் பல நாள் செயலின் பலனை இழந்துவிடும் நிலை போன்று
3.சரீர உணர்வால் எண்ணத்தில் பலமாக மோதும் எதிர்ப்பைத் தாங்காமல்
4.தவறிவிடும் நிலை உணர்வின் எண்ணத்தில் மோதுவது உண்டு.

ஆகவே… நெல்லை அறுக்கின்றோம் என்றால் அந்த நேரத்தில் மழை வருகிறது என்றால் அதற்குண்டான வேகத்தைச் செலுத்திப் பெற்ற பலனைப் பாதுகாக்கத் துரிதம் கொள்கின்றோம் அல்லவா…!

அது போன்று… நம் வழி முறையில் நல்லொழுக்கத் தொடரில் வளர்த்த வலுவை…
1.எதிர்ப்படும் மோதலிலிருந்து பாதுகாக்கும் துரிதமாக
2.எண்ணத்தின் துரிதத்தைத் தீயவைகளுடன் மோதாமல்
3.நல்லதைப் பாதுகாக்கும் உணர்வு ஜெபமாகத்தான் நாம் செயல்படுத்த வேண்டும்…!

தன்னைத்தான் தான் உணரும் பக்குவத்திற்கு…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைய செயல் நாளைய சரீரம் – “நம்முடைய இன்றைய செயல் எதுவாக இருக்க வேண்டும்…?” என்று நீங்கள் தீர்மானம் செய்து கொள்ளுங்கள்

நான் (ஞானகுரு) என்னுடைய சிறிய வயதில் தெரியாமல் ஒரு குருவியைப் பிடித்து என்ன செய்தேன்…? நெருப்பில் உயிரோடு வாட்டினேன்.

குருநாதர் பிற்பாடு அதை என்னிடம் சுட்டிக் காண்பித்தார். அந்தக் குருவி எப்படி எரிந்தது தெரியுமாடா…? என்று கேட்டார்.

அது… “எரிந்தது” தெரியும். அது உள்ளுக்குள் எப்படி ஆனது…? என்று எனக்குத் தெரியாது என்றேன்.

இப்பொழுது… “பாருடா…!” என்றார்.

அது உடலில் எத்தனை கொதிப்பானதோ அந்த எரிச்சல் எல்லாம் எனக்குள் அப்படியே வந்தது.

இப்பொழுது என்னடா செய்கிறது…? என்று கேட்டார்

1.அது எரிந்தது.
2.வேதனைப்பட்ட மூச்சலைகளை வெளிவிட்டிருக்கிறது.
3.அந்த (குருவியின்) உயிரும் உன்னிடம் இருக்கிறது.

தெரியாத வயதில் நீ செய்திருந்தாலும் இப்பொழுது நினைவுபடுத்தியவுடன் அது எரிந்த உணர்வைச் சுவாசிக்கின்றாய். சுவாசித்தவுடன்… உன் உடலை என்ன செய்கிறது பாருடா…! என்றார்.

நீ தெரியாமல் தான் செய்தாய்,
1.“உன் உயிர்” அதை விட்டு விடுகிறதா…?
2.அது வேதனைப்பட்ட உணர்வுகள் அனைத்தையும் கவர்ந்து கொண்டது.

அந்தக் குருவியும் செத்தது. உன் உடலுக்குள்ளே இருக்கிறது. நீ ஆண்பாலாக இருக்கின்றாய் உனக்குள் கருவாக இருக்கின்றது.

இது எந்தக் கருவில் போய் இது பிறக்கின்றதோ “எரிகிறதே…! எரிகிறதே….!” அந்த உடலை எரியச் செய்யும். இப்பொழுது உன் உடலிலேயும் “எரியும்டா… பாருடா…” என்றார்.

இதை அப்படியே அனுபவபூர்வமாகக் கொடுக்கின்றார். சொல்வது அர்த்தம் ஆகின்றதா…!

அதனால் எல்லாமே சந்தர்ப்பம் தான். பல கோடி உடல்களில் சந்தர்ப்பங்களில் வந்த தீமைகளை நீக்கி நீக்கி வந்து தான் இந்த மனித உடலைப் பெற்றுள்ளோம்.

ஆகவே நம்முடைய சந்தர்ப்பத்த்தில் எதை எதை எண்ணுகின்றமோ அதைத்தான் நம் உயிர் உருவாக்குகின்றது. நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை. சுவாசித்தது தான் கணக்காக அமைகிறது.

நாம் உருவாக்கும் (படைக்கும்) சக்தி பெற்றவர்கள்… மற்றொன்றுக்கு இரையாகி விடக்கூடாது

 

1.கோள்கள் உமிழ்த்தக் கூடிய சத்துக்கள் மற்றொன்றுக்கு இரையாகத் தான் அமையும்
2.நட்சத்திரங்கள் தனக்குள் படைத்தது மற்றொன்றுக்கு இரையாகி அந்த உணர்வுடன் இயங்க முடியும்.
3.ஆனால் சூரியனோ மற்றதை இணைத்து மற்றதை உருவாக்கும் செயல் பெற்றது.

இதைப் போன்று இந்தப் பிரபஞ்சத்திற்குள் சூரியனைப் போன்று எண்ணத்தால் தெரிந்து… உணர்ந்து… அறிந்து செயல்படும் சக்தியாக உணர்வின் எண்ணங்களைப் பெற்றவன் தான் மனிதன்.

அப்படிப்பட்ட நிலையாக ஒளியின் சுடராக மாற்றி முழுமை பெற்றவர்கள் தான் மகரிஷிகள். “அந்த மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்திட வேண்டும்…” என்பதற்குத் தான் இதைப் பிரித்துப் பிரித்துக் காட்டுகின்றேன் (ஞானகுரு).

நம் உடலுக்குள் பகைமையற்ற நிலைகளும் பகைமையான உணர்வு நமக்குள் பதிந்திருந்தாலும் அந்தப் பகைமையை அகற்றிடும் நிலையை உருவாக்குதல் வேண்டும்.

“மிளகாயை…” வாயில் வைத்தால் அதை நாம் வெறுக்கின்றோம். ஆனால் அதைக் குழம்புடன் சேர்த்துச் சமப்படுத்தும் பொழுது சுவையைக் கூட்டும் நிலையாக வருகின்றது… மகிழ்ச்சியூட்டும் செயலும் வருகின்றது.

ஆனால் தனித்து உட்கொண்டால் வெறுக்கும் நிலையும் நம் உடல் உறுப்புகளில் வேதனை உருவாகும் நிலையும் உருவாக்குகின்றது பல பொருட்களுடன் இணைத்துச் சமப்படுத்தும் பொழுது சுவைமிக்கதாகி நமக்கு மகிழ்ச்சி தருகின்றது.

இதைப் போன்று தான்
1.அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் எடுத்து உருவாக்கி
2.சூரியன் எப்படி இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கியதோ அதே போன்று
3.உடலான இந்த உலகிற்குள் தீமைகள் வராதபடி நாம் அருள் ஞானிகள் உணர்வைப் படைத்துப் பொங்கச் செய்ய வேண்டும்.

அதை உருவாக்க வேண்டுமென்றால்
1.முதலிலே தன் குடும்பம்
2.பின் தன் பந்துக்கள்
3.தன் தெரு தன் ஊர் இந்த உலகம் என்று
4.எல்லோரும் மகிழ்ந்து இருக்க வேண்டும் என்ற எண்ணங்களை நாம் வளர்த்தோம் என்றால்
5.நமக்குள் படைத்த உயர்ந்த உணர்வலைகள் வெளிப்படும்போது
6.சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து அனைவருக்குள்ளும் பொங்கச் செய்து மகிழ்ச்சி ஊட்டும் சக்தியாக மலரும்.

இன்றைய நிலையில் சில விஷத்தன்மைகளை (பூச்சிகளை… கிருமிகளைக் கொல்லும் மருந்துகள்) உருவாக்கி விஞ்ஞான அறிவால் மக்களைக் காக்க இன்று பரவச் செய்தாலும் அதிலே பல பொருள்களை இணைக்கும் பொழுது அதில் சில நஞ்சின் தன்மை வெளிப்படுகின்றது.

அந்த நஞ்சினை சூரியன் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் படரப்படும்போது அதை நுகர்ந்தோருக்கு நோயாகவும் தீமைகளும் உருவாக்கிவிடும். இது மனிதனால் உருவாக்கப்பட்ட நிலைகள்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் தப்ப வேண்டும் என்றால்
1.அருள் ஞானிகளின் உணர்வலைகளை ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்து நமக்குள் அதைப் படைத்து
2.நம் ஆன்மாவிலும் இந்தக் காற்று மண்டலத்திலும் பரவச் செய்ய வேண்டும்.
3.அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து தீமைகளை அகற்றிடும் சக்தியாகவும் நோய்களை அகற்றிடும் சக்தியாகவும் உருவாக்கச் செய்யும்.

இது ஞானிகள் நமக்கு சாஸ்திரங்கள் மூலம் உணர்த்திய பேருண்மைகள்.

“உரமேறிய கட்டை” – ஈஸ்வரபட்டர்

 

மனிதனுக்குத்தான் உணர்வின் எண்ணங்கள்… பல நிலைகளில் பல வளர்ச்சியை வளர்க்கத்தக்க ஒளி நிலை கொண்ட உயிர் ஆண்டவனின் பிம்ப நிலை உண்டு.
1.உணர்வுகளை எப்படிப் பக்குவப்படுத்த வேண்டும்…? என்ற
2.அந்த வழித் தொடரில்தான் ஞானமே பிறக்கும்.

உணர்வில் கார அலைகள் (கோப அலை) உந்தா விட்டால் வீரம் பிறக்காது. ஆனால் அந்தக் கோப உணர்வு ஏற்படும் காலத்தில் அதன் வளர்ச்சியை சரீரம் அதே தொடர்பில் வளர்த்துக் கொண்டதென்றால் விளைவு வேறாகிவிடும்.

காரமான மிளகாய் விதையை மண்ணிலே ஊன்றியவுடன் அது வளர்ந்து மூன்று மாதத்திற்குபின் அதன் வளர்ச்சியின் பலனை அம்மிளகாய் விதை வளர்த்த மிளகாயை எப்படிப் பெறுகின்றோமோ அதைப் போன்று
1.இக்கார உணர்வான கோப நெடியை நாமெடுக்க
2.அதே உணர்வைச் சரீரம் வளர்க்க இதன் தொடர் அன்றே தெரியாது.
3.கோப குணத்தின் அணுக்கள் சரீரம் முழுவதும் வளர்ந்து அதனுடைய பலனாக
4.மூன்று மாதத்திலிருந்து ஆறு மாதத்திற்குப் பிறகு
5.வாதமோ இரத்தக் கொதிப்போ இதய வலியோ மனிதன் நிச்சயம் பெறுகின்றான்.

ஆகவே கோப உணர்வு உந்தும் நிலையிலேயே அதைத் தன் ஞானத்தால் வீரமாக்கிக் கொள்ள வேண்டும். இப்படி அந்த வீர உணர்வை நாம் பெறும் பொழுது
1.எண்ணத்தின் வலுக் கொண்டு உயர் ஞானம் பிறந்து
2.மீண்டும் அக்கோபமான உணர்வில் நாம் சிக்காமல் இருக்கும் நிலையாக
3.பாதுகாப்பு வேலியான சாந்த குணத்தை நாம் நமக்குள் அவசியம் வளர்க்க வேண்டும்.

கோப குணத்தின் காரமான உணர்வால் எப்படி உடலில் நலிவை ஏற்படுத்திக் கொள்கின்றோமோ அதைப் போன்று
1.அதே கோபத்தை வீரமாக்கும் ஞானத்தின் சாந்தத்தால்
2.ஆத்ம வலு சரீரத்தையே உறுதியான தன்மைக்கு
3.எதற்கும் அஞ்சாத “உரமேறிய கட்டை அவன்…” என்ற ஞானத்தின் வழித் தொடரைப் பெற முடியும்.

ஆக… உறுதியான எண்ணத்தின் செயலுக்கு இச்சரீரத்தை இக்கோப உணர்வு உந்தினால்தான் அதைச் செலுத்தும் நிலைக்கொப்ப “உறுதி நிலையோ… அல்லது நலிவு நிலையோ…” ஏற்படும் தன்மை கொள்கின்றது.

இதைப் போன்று தான் மனித உணர்வின் எண்ணத்தில் உந்தப்படும் குணத் தன்மை ஒவ்வொன்றையுமே “தன் ஞானத்தால்” பக்குவ குணத்தை நாம் பெறல் வேண்டும்.

இதன் தொடரில் தான் பய உணர்வு ஏற்படும் பொழுது பயத்தின் தொடர்பில் “மரண பயம்” என்ற கோழை உணர்விற்குச் செலுத்தாமல்
1.தைரியம் என்ற பல உணர்வைச் சாந்தமுடன் நாம் செலுத்தும் பொழுது மன பலம் கூடி
2.ஞானத்தால் சிந்திக்கும் திறனை நாம் வளர்த்துக் கொள்ள முடியும்.

குழந்தைகள் வளரும் நிலையிலேயே பயமுடன் கூடிய தைரியத்தில் மன பலம் கூடும் பக்குவத்தை வளர்க்கும் செயல் தான் “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்று சொன்னதன் பொருள்…!

வளரும் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட உபதேச உணர்வுகளை ஊட்டி குழந்தைகள் உயர் ஞானத்தைச் சிந்திக்கவல்ல மன பலம் கொண்ட தைரியத்தை ஊட்டி நாம் அவசியம் வளர்க்க வேண்டும்.

ஆனால் வெறுமணே பயத்தை ஊட்டி மரண பயம் என்ற உணர்வில் அச்சத்தை ஊட்டும் குழந்தை கோழையாகிவிடும்.

மேலும் அந்தப் பய உணர்வின் எதிர் அலையால் அக்குழந்தையே விபத்தில் சிக்கும் சந்தர்ப்பம் உண்டாகின்றது. விபத்துகள் நடப்பதெல்லாம் அச்சத்தின் உணர்வு வளரும் இத்தகைய பய அலையினால்தான்.

ஆக மொத்தம்…
1.மனித உணர்வின் எண்ணம் எதை எடுக்கின்றதோ
2.அதில் ஜீவன் பெறுவதைத்தான் மனைவியாக (சக்தியாக) அன்று ஞானிகள்
3.தத்துவ நூல்களில் மறைமுகமாகச் சுட்டிக் காட்டினார்கள்.

இப்படி… எந்தெந்த எண்ணத்தை எக்குணத்தில் இச்சரீரம் வளர்த்துக் கொள்கின்றதோ… அஜ்ஜீவ வளர்ச்சியின் பலனை சாந்தமான நற்குணத்தைக் கொண்டு… இருபாலரும் இல்லற இணைப்பின் இறை சக்தியின் உண்மையை உணர்ந்து…
1.உயர் காந்த மின் சக்தியை
2.உணர்வின் எண்ணத்தால் வளர்க்கும்
3.ஆத்ம ஐக்கிய இணைப்பினால் ரிஷித் தன்மை பெறலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆட்டை வெட்டிக் கருப்பணச் சாமிக்குக் கொடுத்துவிட்டால் நம்மைக் காப்பாற்றுவான் என்ற நிலையில்
1.ஆட்டை வெட்டி ஆட்டின் உயிரை மனிதனாக ஆக்குகின்றோம்.
2.ஆட்டின் கறியை ருசித்துச் சாப்பிட்டு நாம் ஆடாகப் பிறக்கின்றோம்.

இதைப் போன்ற அசுர உணர்வின் தன்மையைத்தான் நமக்குள் வளர்க்க முடிகின்றது.

இன்றைய உலகில் விஞ்ஞான அறிவு கொண்டிருந்தாலும் மன பேதம் இன பேதம் மொழி பேதங்களை உருவாக்கிவிட்டார்கள்.
1.இன்று மனிதன் வெளியிலே செல்ல முடியவில்லை.
2.ஒவ்வொரு நிமிடமும் மரண பயம் கொண்டு வாழ்கின்றோம்.

தீமையான உணர்வுகளை நாம் எண்ணப்படும் பொழுது மனிதனல்லாத உருவை உருவாக்கிவிடும் நம் உயிர்.

பாம்பு எப்படி… அதனை நாம் தாக்கிவிடுவோம் என்று அது முந்தித் தாக்குகின்றதோ அது போன்றே “சாந்த மனம் கொண்டவன் கூட..,” அவனுக்கு முன் எதிரிகள் வந்தார்கள் என்றால் அவர்களுக்கு முந்தி இவன் தாக்கும் நிலைக்கு வருகின்றான்.

1.தீமை செய்வோனைக் காட்டிலும் தீமையற்ற நிலையில் இருப்பவர்
2.“சாது மிரண்டால் காடு கொள்ளாது..,” என்ற நிலைகளில்
3.சாந்த உணர்வு கொண்டோர் இத்தகையை தீமைகளைக் கண்டால்
4.வேகமாக எதிர்த்துத் தாக்கும் நிலைக்கு வந்துவிடுகின்றார்கள்.

மனிதன் என்ற உருவையே இன்று அழித்திடும் நிலை இன்று வந்துவிட்டது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டும்.

அதிலிருந்து மீண்டிடும் நிலையாகக் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த அருள் ஞானிகள் கண்ட மெய் உணர்வினை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

விண்வெளியில் இன்றும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களும் துருவ நட்சத்திரமும் அவைகளிலிருந்து வெளிப்படும் உணர்வலைகளைக் கவரும் நிலையாக
1.உங்களுடைய நினைவினை அங்கே செலுத்தச் செய்து
2.அந்தப் பேரருள் உணர்வினை ஈர்க்கும்படி செய்கின்றோம்.

வராக அவதாரத்தில் காட்டியபடி தீமைககள நீக்கி நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்ந்ததோ அதைப் போன்று இன்றைய விஞ்ஞான உலகில் காற்றில் கலந்து வரும் நஞ்சின் தன்மையிலிருந்து நல்லதை நுகரப் பழக வேண்டும்.

சாக்கடையான இந்தக் காற்று மண்டலத்தில் மிதந்து கொண்டிருக்கும்
1.அருள் மகரிஷிகளின் உணர்வைப் பதிவாக்கி
2.அந்த எண்ணத்தை வலுவாக்கி அருள் உணர்வை நுகர்வோம்.
3.நம்மை அறியாது வரும் இருளைப் போக்குவோம்.
4.மெய்ஞானிகளின் அருள் ஒளியைப் பெறுவோம்.

அந்த மெய்ஞானிகளின் தொடர்பு கொண்டு முன்னோர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்துவோம்.

முன்னோர்கள் இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும் அவர்கள் வெளி வரும் பொழுது இந்த உணர்வின் துணை கொண்டு அவர்களையும் நாம் விண் செலுத்துவோம்.

ஏனென்றால் இதற்கு முன்
1.நமது முன்னோர்களை நாம் விண் செலுத்தத் தவறிவிட்டோம்.
2.இந்தக் காற்று மண்டலத்தில் தான் சுழன்று கொண்டுள்ளார்கள்.
3.நம் முன்னோர்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.

அதன் துணை கொண்டு அந்த அருள் ஒளிகளை நமக்குள் பாய்ச்ச வேண்டும். நம்மை அறியாது வரும் இருளை நீக்க வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.

நாமும் விண்ணின் ஆற்றலைப் பெறும் பொழுது இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் அங்கே சென்றடையலாம். நம் எல்லை சப்தரிஷி மண்டலம் தான்.

நம்முடைய நண்பன் யார்… எதிரி யார்…?

 

கடை வைத்து நாம் வியாபாரம் செய்கின்றோம். மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு ஐந்து நிமிடம் ஆத்ம சுத்தி செய்து விட்டுக் கடையில் உள்ள சரக்குகளைப் பார்க்க வேண்டும்.
1.இந்தப் பொருளைப் பயன்படுத்துபவர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும்.
2.அவருடைய உள்ளங்களில் மகிழ்ச்சி தோன்ற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
3.எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்…. எங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும்.
4.எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும்.
5.பிறர் எங்களைப் பார்க்கும் பொழுது நல் உணர்வின் தன்மை கொண்டு பார்க்க வேண்டும் என்று
6.இத்தகைய உணர்வலைகளைக் கடையில் முதலில் பரப்பிவிட்டு வியாபாரத்தைத் தொடங்க வேண்டும்.

ஒரு தடவைக்கு இரண்டு தடவை மூன்று தடவை மாற்றி மாற்றி அதைச் சொல்லிப் பாருங்கள். உங்கள் உணர்வின் தன்மை வலுப்பெறும்… தொழில் சீராகும்… வியாபாரத்தில் நஷ்டம் என்பது வராது.

ஒவ்வொரு நிமிடமும்…
1.நாம் எடுத்துக் கொண்ட இந்த உயர்ந்த உணர்வுகள் ஒலிபரப்பாகி
2.அது மீண்டும் நமக்குள் கவரப்பட்டு ஒரு பாதுகாப்புக் கவசமாக
3.சக்தி வாய்ந்த உணர்வின் அலையாக அங்கே தேங்கி நிற்கும்.

அப்போது நாம் யாரைச் சந்தித்தாலும் நாம் பேசும் உணர்வுகள் இது முன்னணியில் சென்று அங்கே நல்ல உணர்வுகளை ஊட்டும். யானை வரும் பின்னே… மணி ஓசை வரும் முன்னே…!

உதாரணமாக சங்கடமான அல்லது வேதனையான உணர்வுகளை ஒரு பதினைந்து நிமிடம் நாம் எடுத்து விட்டால் அடுத்து நாம் எந்த நல்ல காரியத்திற்குச் சென்றாலும் அல்லது நல்லதையே செய்தாலும் நாம் பேசும்போது
1.இந்த உணர்வுகள் முன்னணியில் சென்று
2.நாம் எந்த வேதனைப்பட்டோமோ அந்த உணர்ச்சிகளை அடுத்தவருக்குத் தூண்டி
3.அந்த உணர்வின் எண்ணத்திலேயே நம்மைப் பார்க்க வைக்கும்.

எந்த வேதனையினால் துடித்துக் கொண்டிருக்கின்றோமோ இந்த உணர்வின் தன்மை அங்கே செயல்பட்டு நாம் எடுத்துக் கொண்ட அந்த காரியத்திற்குத் தடை விதிக்கும் நிலையாக உருவாகிவிடும்.

இதைத்தான் “யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே…” என்று சொல்வது.

ஆகவே நாம் வெளிப்படுத்தும் உணர்வின் நிலைகள் உடனே அங்கே காட்டிக் கொடுத்து நம்முடைய உணர்வே அங்கே நம்மை எதிர்க்கச் செய்யும்… மற்றவர்கள் அல்ல.

1.நேற்று நல்லதைச் சொன்னார்கள்… இன்று என்னமோ கெட்டதாகச் சொல்கிறார்கள் என்று நாம் எண்ணினாலும்
2.நாம் அன்று எடுத்துக் கொண்ட உணர்வின் நிலை அவர்களுக்குள் பாய்ந்து அவ்வாறு அவர்களைப் பேசச் செய்கின்றது.
3.அவர்கள் நம்மை அவ்வாறு பேசவில்லை… நம் உணர்வே நமக்கு எதிரியாக மாறி விடுகின்றது.

ஆனால் நம்முடைய உணர்வே நமக்கு நண்பனாக வேண்டுமென்றால் அடிக்கடி அவசியம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும். ஆத்ம சுத்தி மூலம் நல்ல உணர்வின் தன்மையை நாம் சுவாசிக்கச் சுவாசிக்க நம் உயிர் அது அனைத்தையும் படைக்கின்றது.

இதைத் தான் கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாக ஆகின்றாய் என்று சொல்வது.

இவ்வாறு மகரிஷிகளின் அருள் ஒளியை உயிரின் துணை கொண்டு நமக்குள் படைத்து
1.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்திலே சுழல வேண்டும் என்ற நினைவைக் கூட்டி வளர்த்தால்
2.மீண்டும் ஒரு உடல் பெறாத நிலையில் நாம் அங்கே விண் செல்கிறோம்.

“பிரம்மச்சரியத்தால்” எந்தத் தவசியும் ரிஷியும் உருவாக முடியாது…! – ஈஸ்வரபட்டர்

 

மெய் ஞானி அன்று தன் ஞானத்தின் உண்மை நிலையில் உணர்த்திய தத்துவ வழி முறையில்
1.தெய்வத்தின் செயல் நிலையில் சுட்டிக் காட்டிய விக்கிரக வழிபாட்டு முறையிலேயே
2.ஒரு உயிர் அணு மூல முதலாக வளர்ச்சியுற்ற வழித் தொடருக்கு
3.விநாயகன்…! என்ற யானையின் தோற்றமுடன்…
4.மனித உரு முருகா…! என்ற அறு குண அழகனைக் காட்டினார்கள்.

உருவத்தில் பெரியது யானை…. எண்ணத்தில் உயர்ந்தவன் மனிதன். அவ்வுயிரணுவைத் தெய்வமாகத் தொடர்புபடுத்திச் சுட்டிக் காட்டிய வழித் தொடரில்… உருவ அமைப்புகளில் ஆதியில் மெய் ஞானிகள் வழிகாட்டிய தத்துவத்தில் “பல உண்மைகள் உண்டு…”

சில தெய்வங்களுக்குக் கிருஷ்ணாவதார கீதையின் தத்துவத்தில் ஒருவனுக்குப் பல ஆயிரம் மனைவிகளைச் சுட்டிக் காட்டினார்கள். அதன் உண்மைத் தத்துவத்தை நம் ஞானத்தால் எடுத்தால் அவ்வுண்மை நமக்குப் புரியும்.

மனிதன் பெற்ற ஒளி சக்தியில்… மனித எண்ண ஞானம்.. தான் பகுத்தறிவில் உயர் தன்மை கொண்டு மனித உடல் ஜீவனுடன் உள்ள பொழுது
1.உணர்வுடன் கூடிய எண்ணத்தால் எடுக்கப்படும் குணங்களின் வளர்ப்பு ஒவ்வொன்றையுமே ஜீவிதம் கொண்ட மனைவியாய்
2.பெண் சக்தி மனிதனுக்குள் வளரும் நிலை பெண் தன்மை கொள்ளும் குணங்களை எல்லாம் மனைவியாகச் சுட்டிக் காட்டி
3.கீதையின் தன்மையை நமக்கு அன்றே மெய் ஞானிகள் புகட்டினார்கள் பாடநிலையாக…!

இராமாவதாரத்திலும் கிருஷ்ணாவதாரத்திலும் எந்த அவதாரமாக இருந்தாலும்…
1.மனிதன் பிரம்மச்சரியம் கொண்டு எச்சக்தியையும் பெற முடியாது என்ற நிலையைத்தான்
2.மெய் ஞானிகளும் ரிஷிகளும் சுட்டிக் காட்டினர்
3.தானும் அவ்வழியில்தான் தன் ஞானத்தை வளர்த்தனர்.

இல்லற உணர்வில் எண்ணத்தில் வளர்க்கும் குணத்தில் இரு நிலை வளர்ச்சியின் அன்பால் பெறும் நிலையின் மகவுகளின் பரிவு பாசம் வளருமேயன்றி உணர்வின் எண்ணத்திலேயே
1.அன்பின் ஜீவிதத் தொடர்பின் உணர்வு பிணைப்பு வளரா விட்டால்
2.எத்தவசிகளும்… ஞானிகளும்… “சரீரம்” பெற்றிருக்க முடியாது.

ஜீவ உணர்வின் எண்ணத்தில் வளரும் குணத்தின் பிடிப்பு நிலை கொண்டு… தொடரும் இல்லறப் பிணைப்பின் உடல் தொடர்பின்… “ஆத்ம தொடர்பு கூடும் இரு எண்ணங்களும்…” ஒன்றாய் வலுக் கூடத் தொடங்கும்.

1.அப்படிக் கூடப்பெறும் எண்ணத்தின் உயர் ஞான தியானத்தால்…
2.ரிஷி பத்தினி சக்தியின் வளர்ச்சி ஈர்ப்பில்…
3.இரு நிலை கொண்டு ஒரு நிலை வளர்க்கும் செயல் வழி சரீரப் பிணைப்பில் மக்கள் தொடரும்..
4.ஆத்மப் பிணைப்பின் உயர் ரிஷி சக்தி பெறக்கூடிய படைப்பின் படைப்பிற்கு…
5.இவ்விரு ஆத்மாவின் ஐக்கிய தொடர்பில் பிணைக்கப்பட்டு மூலக்கரு வளர்ச்சியுறும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குடும்பத்திலும் வியாபாரத்திலும் கொடுக்கல் வாங்கலில் பகைமையாகி “உருப்படுவாயா…” என்று சாபமிட்டுக் கொள்வார்கள் – அதை மாற்றுகின்றனரா…? – தீப ஆராதனை காட்டுவதன் தத்துவம் என்ன?

இன்று நாம் மனிதனுக்குள் ஒருவருக்கொருவர் நாம் பாசமாக அன்பாகத்தான் வாழ்கின்றார்கள்.

இருந்தாலும் சந்தர்ப்பத்தால் சில சிரமங்கள் ஏற்பட்டால் அதிலிருந்து மீளத் தன்னை வளர்த்துக் கொள்வதற்காக நண்பர்களையோ உறவினர்களையோ தேடி வருகின்றார்கள்.

ஏனென்றால் அவர்களிடம் பணம் இருக்கிறது. பணத்தை வாங்கிச் சமாளிக்கலாம் என்று வாங்குகிறார்கள்.

சீக்கிரம் திரும்பத் தந்துவிடுவேன் என்று சொன்னபின் அவர்களும் பணத்தைக் கொடுக்கிறார்கள்.

எப்படியோ (ஏமாற்றி) பணத்தை வாங்கிக் கொள்வார்கள். வாங்கிய பணத்தைச் செலவழிக்கின்றார்கள்.

ஆனால் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டால் கெட்ட பெயர் ஏற்படுகிறது.

இப்பொழுது கொடுக்க முடியவில்லை. “தருகிறேன்…” என்று சொல்வார்கள்.
1.இரண்டாவது தடவை கேட்கும் பொழுதும் அதே பதில் வருகிறது.
2.மூன்றாவது தடவையும் கேட்டவுடனே என்ன சொல்வார்கள்…?

“நான் தான் கொடுக்கிறேன்…!” என்று சொன்னேனே அதற்குள் என்ன அவசரம்…? என்பார்கள்.
1.தக்க சமயத்தில் அன்று தனக்கு உதவி செய்தார்கள் என்ற
2.அந்த நல்ல எண்ணம் வருவதில்லை.
3.ஆக பணத்தைத் திருப்பிக் கேட்பவருக்குச் சரியான பதில் சொல்ல முடியவில்லை.

அப்பொழுது அவருக்குக் கோபம் வரும்.

கோபத்தின் தன்மை பணம் கொடுத்தவருக்கு வரப்படும் போது உதவி செய்தார்கள் என்ற எண்ணம் பணம் வாங்கியவருக்கு மறந்துவிடுகின்றது. அப்புறம் அவருக்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

பணம் கொடுத்தவர் என்ன சொல்வார்…? பார்… அன்றைக்கு உதவி செய்தேன். பாவிப் பயல் இன்றைக்கு அவன் எனக்குத் தொல்லை கொடுக்கிறான்…! என்பார்.

அப்பொழுது தொல்லையின் உணர்வுகளைத்தான் இவர் உடலிலே வளர்க்க முடிகிறது. தொல்லைகளை நீக்கும் நிலை இல்லை.

இப்படி மனிதனுக்கு மனிதன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் உணர்வுகள் மாறுகின்றது.
1.பகைமை உணர்ச்சிகள் உருவாகி உடலுக்குள் வந்தவுடன்
2.உறுப்புகள் சீர் கெடுகின்றது.. கடும் நோயாக மாறுகின்றது.

இந்த நோயை மாற்ற என்ன வழி…?

மனிதன் சந்தர்ப்பத்தால் நல்ல குணங்களை நல்ல முறையில் பயன்படுத்தினாலும் வாங்கிய பணத்தைத் திருப்பி அவர்களால் கொடுக்க முடியவில்லை என்ற நிலைக்கு வந்தவுடன் அங்கே என்ன நடக்கின்றது…?

“என்னைத் தொந்தரவு செய்கின்றார்களே… எனக்கு இடைஞ்சல் செய்கின்றார்கள்…” என்ற உணர்ச்சிகள் தன்னை அறியாமலே அதிகரித்துவிடுகின்றது.

உண்மையில் அவனால் பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாத நிலையில் இருந்தாலும் இரண்டு தடவை பணத்தைத் திருப்பிக் கேட்டாலே போதும். அங்கே உணர்ச்சிகள் மாறும்.

வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இவருக்கு இருக்கிறது. “தருகிறேன்…” என்று சொல்வார்.

ஆனால் முயற்சி எடுக்கும் பொழுது வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது அந்த உணர்ச்சிகளால் இவர் செல்வம் தேடுவதும் இழந்து விடுகின்றது.

ஆனால் அதே சமயத்தில் இரண்டு தரம் பணத்தைத் திரும்பக் கேட்டு நிர்ப்பந்தப்படுத்தும் போது அந்த வெறுப்பு காழ்ப்புணர்ச்சியாக வருகின்றது. இந்த வேதனையின் உணர்வைத் தனக்குள் எடுத்தவுடன்
1.ஒன்று இவர் தவறு செய்பவராக மாறுகின்றார்.
2.இல்லை என்றால் அவர் நுகர்ந்த உணர்வு கடும் நோயாக மாறுகின்றது.
3.இதன் உணர்வுகள் இப்படித் தான் போகின்றது.

பணம் கொடுத்தவரோ… பாருங்கள்… அன்றைக்குக் கொடுத்தேன். இன்றைக்கு எதிர்க்கிறான்… கொடுக்காமல் ஏமாற்றுகிறான்.. என்பார்.

ஏனென்றால் இயற்கையில் (உண்மையில்) பணத்தை அவரால் திரும்பக் கொடுக்க முடியவில்லை.

அவருக்கு எப்படியோ நல்ல நேரம் வரட்டும். அவருக்குக் கொடுக்க வேண்டிய வலு வரவேண்டும். பணத்தைத் திரும்பக் கொடுக்கக்கூடிய திறன் வரவேண்டும் என்று “பணம் கொடுத்தவர்கள்… எண்ணுகிறார்களா…!” என்றால் இல்லை.

அப்படி எண்ண முடியவில்லை.

பணத்தைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்ற வேதனை உணர்வு தான் வருகிறது. அப்பொழுது அந்த வேதனையைச் சமைக்கும் உணர்வுகள் பணம் கொடுத்தவர் உடலிலும் வருகிறது.

நான் அவ்வளவு உதவி செய்தேன். இந்த மாதிரி எல்லாம் செய்கிறானே என்று இவர் சந்தர்ப்பத்தில் விளைந்த உணர்வுகள் கடன்காரனை எண்ணி எடுக்கும் போது “ஓ…ம்” வெறுப்பான உணர்வுகள் ஜீவனாகி
1.இவனெல்லாம் உருப்படுவானா…?
2.என்னை இப்படி ஏமாற்றுகிறான் பார்…! என்று
3.சாபமிடும் நிலைக்கு வந்துவிடுகின்றார்.

அன்றைக்குக் கேட்டதும் பணத்தைக் கொடுத்தேனே… இவன் உருப்படுவானா…? என்று இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் சேர்த்து இந்த உணர்வுகள் உடலிலே விளைகின்றது.

இதே போல உணர்வுகள் அங்கே பணத்தை வாங்கியவர் உடலிலும் படருகிறது. இதை எண்ணும் போது அவரின் செயலின் தன்மையும் இழக்கச் செய்கிறது.

1.கடைசியில் பணம் கொடுத்தவருக்கும் வேதனை வருகின்றது. பணம் வாங்கியவருக்கும் வேதனை வருகின்றது
2.நல்லதின் பலனை இரண்டு பேரும் அடைய முடியவில்லை.

இதைப் போன்ற நிலைகளை மாற்றியமைப்பதற்காகத்தான் ஆலயங்களில் தீப ஆராதனை காட்டுகின்றார்கள். ஏனென்றால் மறைந்திருக்கும் பொருள்கள் அந்த வெளிச்சத்தால் தான் தெரிய வருகின்றது.

அப்பொழுது நாம் எண்ண வேண்டியது எது…?

1.பொருளறிந்து செயல்படும் திறன் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ண வேண்டும்.
2.இந்த ஆலயத்திற்கு வரும் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.
3.எங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.
4.என்னிடம் தொழில் செய்வோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
5.என்னுடைய வாடிக்கையாளர்கள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
6.என்னைப் பார்க்கும் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.

இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சந்தர்ப்பத்தால் ஏற்படும் பகைமைகளை அகற்றச் செய்வதற்காகத்தான் தீப ஆராதனை என்ற “விளக்கை… அந்த ஜோதிச் சுடரைக்” காட்டினார்கள் ஞானிகள்.

நாம் அனைவரும் சகோதரர்களே…!

 

எவ்வளவு உயர்ந்த நிலைகளை நாம் பேசிக் கொண்டிருந்தாலும் சந்தர்ப்பத்தில் நம் நல்ல எண்ணங்கள் எல்லாம் என்ன ஆகிறது…!

உதாரணமாக… கடலிலே பெருங்காயத்தைக் கலக்கினால் அந்த வாசனை சிறிது நேரமே இருக்கிறது. அடுத்த நிமிடம் அது கரைந்து விடுகின்றது. பெருங்காயத்தின் மணம் இல்லாது போய்விடுகின்றது.

ஆக… கடலைப் போல ஒவ்வொரு நிமிடமும் வேதனையும் வெறுப்பும் உப்பு கைப்பது போன்ற உணர்வுகளே அதிகமாக இந்த மனித வாழ்க்கையில் இருக்கின்றது.

1.நல்லதை எண்ணினாலும் கடலில் கரைத்த பெருங்காயம் போன்று சிறிது நேரமே அது வலுவாக இருக்கின்றது
2.அடுத்த நிமிடம் நமக்குள் இருக்கக்கூடிய அந்த நல்ல எண்ணங்கள் அனைத்தும் மறைந்து
3.கவலையும் வெறுப்பும் சோர்வும் வேதனையும் படக்கூடிய உணர்ச்சிகளை நமக்குள் தூண்டி
4.”நம்மால் முடியாது போலிருக்கிறது…” என்ற நிலை வந்து விடுகிறது.

சிறிது நேரம் சிந்திக்கின்றோம் நல்லது செய்ய வேண்டும் என்று… ஆனால் அடுத்த கணம் அது எப்படி நடக்குமோ…? எப்படி நடக்கப் போகின்றதோ…? நாளைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லையே…! என்று தனக்குத்தானே பலவீனமாகி சந்தேக உணர்வு தோற்றுவிக்கின்றது.

மனித வாழ்க்கையில் இத்தகைய நஞ்சுக்குள் சிக்கப்பட்டு நம் எதிர்காலமே நசிந்து கொண்டிருக்கும் நிலையாகத் தான் இன்று இருக்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால்
1.நாம் கூட்டமைப்பாக இருந்து மெய் ஞானிகள் காட்டிய அருள் நெறிகளை நாம் எண்ணி ஏங்கி
2.அந்த உணர்வை நமக்குள் பதியச் செய்து… அந்த உணர்வின் அலைகளாக நமக்குள் பெருகச் செய்து
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று நம் உடலுக்குள் அதைச் சேர்த்து வலுவாக்க வேண்டும்.

அனைவரும் சேர்த்து ஒன்றாக இயக்கி இந்த உணர்வின் தன்மை கொண்டு உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்ற எண்ணத்தை ஓங்கச் செய்ய வேண்டும்.

நாம் யாரையெல்லாம் சந்திக்கின்றோமோ…
1.எந்த மதத்தவராக இருந்தாலும்
2.எந்த இனத்தவராக இருந்தாலும்
3.எந்த மொழி பேசுவோராக இருந்தாலும் அவர்களை எல்லாம் சகோதரர்களாக எண்ணி
4.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

உதாரணமாக… நமக்கு ஒரு பொருள் வேண்டும் என்றால் எந்த மதத்தவரோ… இனத்தவரோ… வேறு மொழி பேசுவோரோ… கடை வைத்திருந்தாலும் அவர்களிடம் சென்று வாங்கத்தான் செய்கிறோம்.

அதே போல் அவர்களுக்குப் பொருள் வேண்டும் என்றால் நம்மிடம் வந்து வாங்கத்தான் செய்கிறார்கள்.
1.இதில் வேற்றுமை இருக்கின்றதா…? இல்லை…!
2.இவ்வாறு வேற்றுமை இல்லாத நிலைகள் வாழப்படும் பொழுது
3.நம் மனதிற்குள் மட்டும் ஏன் வேற்றுமைகளைக் கொண்டு வரவேண்டும்…?

வேற்றுமை ஏற்பட்டால்
1.இந்த மனித வாழ்க்கையில் நமக்கு நாமே நைந்து கொள்ளும் நிலை தான் வருகின்றது
2.மனிதன் என்ற நல்ல உணர்வு அழிந்து கொண்டிருக்கின்றது.

ஆகவே… ஒவ்வொரு நிலைகளிலும் எந்த மதமாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் எந்த மொழி பேசுவோராக இருந்தாலும் இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபடும் நிலையாக
1.உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்றும்
2.எங்களுக்குள் சகோதர உணர்வுகள் வளர வேண்டும் என்றும் நாம் எண்ணி
3.நமக்குள் இருக்கும் பகைமை உணர்வுகளை ஓங்கச் செய்யாது அதைத் தாழச் செய்ய வேண்டும்.

இதைச் சிறிது பேர் செய்வதில் பலனில்லை.

காரணம்… எல்லோரும் இதைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மாதத்தில் ஒரு நாள் பண்டிகையாகத் தேர்ந்தெடுத்து
1.சகோதர உணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும்
2.மனிதனின் பண்பை வளர்க்கவும்… இருளை நீக்கி மகிழ்ச்சியை ஏற்படுத்தவும்
3.மகரிஷிகளால் உருவாக்கப்பட்ட நிலைகள் தான் இது.

திருப்பித் திருப்பிச் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்

எத்தனையோ உணர்வுகள் நமக்குள் மாறி மாறிச் சுழன்று கொண்டிருக்கின்றது. திரும்பத் திரும்பச் சொல்லி நினைவின் ஆற்றலை பெருக்கச் செய்து அந்த மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை நீங்கள் பருக வேண்டும் என்பதற்குத்தான் சொல்வது (ஞானகுரு).

தனதான இறை உயிரை… தன்னில் தானே… இருள் அகற்றித் தன்னில் தானே… ஒளியாகலாம்…! – ஈஸ்வரபட்டர்

 

தன்னைத்தான்… தான்…
தான் உணர்ந்து…
தன்னைத்தான்… தான் நம்பி

தன்னைத்தானே… தான் வளர்த்து…
தன் வழியின் வழியறிந்து

தன் வழியைத் தான் அமைத்து…
தன் உயர்வைத் தான் வளர்க்க

தன்னில் தான்… இறை உணர்ந்து…
தன்னையே தான்… இறையாக்கி

தனதான இறை உயிரை…
தன்னில் தானே… இருள் அகற்றி
தன்னில் தானே… ஒளியாகலாம்…!

மனிதன் தன்னைத்தான் தான் உணர்ந்து… தன் வழியில் தன்னை நம்பி…
1.உண்மை நிலையை அறிந்து
2.தன் உயர்வை வளர்த்துக் கொள்ள
3.இப்பூமியில் மனித உணர்வு எண்ணம் செயல்பட்ட காலத்திலேயே
4.சித்தர்களும் சப்தரிஷிகளும் பல உண்மையை உணர்த்தியும் செயல்படுத்தியும் காட்டினர்.

ஆதிசங்கரின் காலத்தில் அத்வைதத் தத்துவப்படி… மனிதன் உணர்வின் எண்ணத்தை உயர் ஞானமாக்கி… உயரும் மார்க்கத்தை அணுவுக்குள் அணுவாக உணரும் பக்குவத்தை மனிதனுக்கு உணர்த்தினார்.

அதன் தொடரில் மனிதன் தன்னைத்தான் தான் நம்பி உயரும் பக்குவத்தை அவருக்கு அடுத்த நிலை நான்கு வகை வேதங்களாக்கி தன் வாழ்க்கை நிலைக்கு ஒத்த சௌகரியப்படி காலப்போக்கில் மாற்றி விட்டனர்.

1.வேத மந்திர உச்சரிப்புகளும் பலி பீட மந்திரங்களும் பல வழியில் பிரிக்கப்பட்டு
2.மகரிஷிகளினால் வழிப்படுத்தப்பட்ட தன்மைகள் எல்லாம்
3.மத வழிகளிலும் அரசாட்சியின் பிடிப்புக்கொப்ப மாற்றப்பட்ட தன்மையினால்
4.இன்று தெய்வத் தன்மையின் உண்மை நிலையையே அறிய முடியாமல் போய்விட்டது.

இன்றைய காலப்போக்கில் “பூஜையும்… பக்தியும்…” வழி தெரியாத முறையில் மனிதனின் நாட்டங்கள் சென்று கொண்டிருக்கும் சிதறுண்ட இத்தன்மையை மாற்றி
1.மனிதன் முதலில் தன்னைத்தானே தான் உணர்ந்து
2.தன்னை நம்பி… தன் வழியை மெய் அறிந்து…
3.உயர வேண்டிய ஒளித் தன்மையின் சத்தியத்தின் உண்மை நிலை அறிந்து செயல்பட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக நாயை எடுத்துக் கொண்டால் அதற்குப் புல்லை மேய்ந்து பழக்கம் இல்லை.

ஆனாலும் அதற்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டால் என்ன செய்யும்…?

அந்தப் புல்லைக் கொஞ்சம் மென்று தின்று அது உள்ளுக்குள் சென்ற பின் வாந்தி எடுத்து அந்த அமிலத்தை வெளியேற்றிவிடும்.

அதற்குண்டான அறிவு அது…!

புல்லை மேயச் செல்லும்போது நாயைக் கவனித்துப் பார்த்தால் தெரியும். அதற்குச் சோர்வு வரும் பொழுது அந்த உணர்வுக்குத் தக்க அதனுடைய அறிவு புல்லை நுகரச் செய்கின்றது. தன் உடலில் வந்த தீமைகளை அகற்றுகின்றது.

இயற்கை வைத்தியம் என்ற நிலையில் மனிதனுக்கு அருகம்புல் சாறைச் சாப்பிட்டால் நலம் என்று சொல்வார்கள்.
1.அதை அளவுகோல் படி
2.அந்தந்த நேரங்களில் சிறு துளிகள் சாப்பிடலாம்.
3.அளவுக்கு மீறிச் சாப்பிடவும் கூடாது.

அந்த அளவு கோல்படி அருகம்புல் சாற்றைப் பச்சையாக எடுத்துச் சாப்பிட்டால் நம் இரத்தங்களில் இது கலக்கப்படும் போது
1.இரத்தத்தில் ஊறிய கழிவு நிலைகளை (கட்டிகளை)
2.இது மாற்றி உடைத்து விடுகின்றது.

அதே மாதிரி அடைப்புகள் இருதயங்களிலோ கால்களிலோ இரத்த அழிப்புகள் வந்தால் சிறிதளவு அருகம்புல் சாறைச் சாப்பிட்டால் அதாவது
1.ஒரு மடக்கு அருகம்புல் சாறைச் சாப்பிட்டால்
2.இயற்கை வழிகளில் அடைப்புகளை நீக்குகின்றது.

ஈஸ்வரன்… ஈஸ்வரி…! – சிருஷ்டிக்கும் ஆற்றல்

 

மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதைச் சொல்லிச் சொல்லி கணவன் மனைவி இருவருமே ஆத்ம சுத்தி செய்து கொண்டால்
1.இந்த உடலை விட்டுச் சென்றால் வேறு எங்கேயும் போகாது…
2.சிவசக்தி என்ற நிலையில் இங்கே வருகின்றது.

யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்யும் பொழுது எந்த விண்வெளியை நோக்கி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நம் உணர்வுகளைச் செலுத்திக் கொண்டோமோ அந்த மகரிஷியின் எல்லையை அடையலாம்.

மனைவியோ கணவனோ ஒருவருக்கு ஒருவர் யார் முந்திச் சென்றாலும் ஆத்மா இந்த உடலுக்குள் தான் போகும். அப்போது இருவருமே சேர்ந்து எடுத்துக் கொண்ட மெய் ஒளியின் தன்மை தனக்குள் ஒளியாக ஆக்கப்படுகிறது,
1.இன்னொரு பிறவிக்குப் போகாதபடி இரண்டு எண்ணங்களும் ஒன்று சேர்த்து
2.மெய் ஒளியின் தன்மையைக் கூட்டி உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றும் ஆற்றல் பெறுகின்றது.

அதே சமயத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்று உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று நம்முடைய குழந்தைகளையும் எண்ணச் சொல்லி உந்தி விண்ணிலே செலுத்தப் பழக்கிக் கொடுக்க வேண்டும்.

கூட்டுக் குடும்ப தியானங்களிலும் இதைப்போல செய்து இறந்த உயிரான்மாக்கள் அங்கே இணைய வேண்டும் என்று உந்திச் செலுத்த வேண்டும்.

இவ்வாறு செய்யும் பொழுது இரண்டு நிலைகளாக இருந்தாலும் அது சிவ சக்தியாக ஒன்றாகச் சேர்த்து இன்று எப்படிக் குடும்ப வாழ்க்கையில் இருக்கின்றோமோ இதே நிலையாக ஒளியின் தன்மையை அங்கே வாழ முடியும்.

1.சப்தரிஷி மண்டலமாக ஆனது என்பது… தனித்து எந்த மனிதனும் சென்று உருப் பெற்றதில்லை.
2.கணவன் மனைவியும் இந்த உணர்வின் தன்மை இணைத்துக் கொண்ட நிலைகள் கொண்டு தான்
3.அங்கே சிருஷ்டிக்கும் தன்மை பெற்றது.

எப்படி இருந்தாலும் பெண்களுடைய கரு உணர்வின் தன்மை என்பது ஒரு உயிரின் தன்மை கொண்டு தனக்குள் வளர்க்கும் ஆற்றல் பெற்றது.

அதாவது கணவன்-மனைவி சரீரம் இரண்டாக இருந்தாலும்… உயிரின் தன்மை ஆணாக இருந்தாலும்… சக்தி என்ற தாவர இனச் சத்தை இது இரண்டும் சேர்த்துத் தான் உருவமாகிறது. உணர்வின் அணுக்களாகத் திசுக்களாக மாற்றும் நிலை தாவர இனச் சத்தினால் தான் உருப்பெறுகிறது.

1.உயிரின் துடிப்பு ஈசனாக உருவாக்கினாலும்
2.ஈஸ்வரியாக உருவாக்கும் இந்த சக்தியின் தன்மையால் கருவின் தன்மை உருவாகி ஒரு உருவின் தன்மை கொண்டு வரும்.

அதைப் போன்று தான் சூட்சம நிலை பெற்று இந்த மனித உணர்வு வந்தபின்
1.ஒலி ஒளி என்ற நிலைகள் கொண்டு கணவன் மனைவி உணர்வின் தன்மை ஒன்று சேர்த்து
2.இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது அது ஒளியின் சரீரம் பெற்று
3.இந்த மனித வாழ்க்கையில் எப்படி இருக்கின்றோமோ ஒளியின் கூட்டாக அது அமைகின்றது.
4.விண்ணின் ஆற்றல் எது வந்தாலும் ஒளியின் சரீரம் ஆகின்றது
5.அதனால் தான் சப்தரிஷிகள் என்பதைக் கணவன்-மனைவி ஒன்று சேர்த்த நிலைகளாக உணர்த்தினார்கள்.

சாதாரண மனிதனும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் நளாயினி சாவித்திரி கதைகளைக் காட்டினார்கள்.

கணவன் மனைவி இரண்டு உடலாக இருந்தாலும் உணர்வுகள் இரண்டறக் கலந்து ஒரு உணர்வாக ஒளியாக மாறுகிறது. இதை நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கணவன் மனைவி ஒன்று சேர்ந்து ஒளியின் தன்மை பெறுவதற்கு அக்காலத்தில் இப்படிக் காட்டியிருந்தாலும் இன்று அவரவருக்கு உகந்தபடி “எப்படி எப்படியோ பிரித்து விட்டார்கள்…”

அந்த மெய் ஞானிகள் காட்டிய பேருண்மையைத் தான் இங்கே உணர்த்துகின்றோம்.

சஞ்சலமில்லாத எண்ணத்துடன் மகரிஷிகளுடன் நேரடித் தொடர்பு கொள்ள வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு ஞானியும் தன் வாழ்க்கையின் எண்ணத்தின் உணர்வால் பெற்ற சஞ்சல அலையின் உண்மைகளைப் புரிந்து உணர்ந்து பெற்ற உயர் ஞானத்தால் தான் அந்த ரிஷி சக்தியைப் பெற்றார்கள்.

அதே போல் மனிதன் தன் உணர்வின் சஞ்சலத்தைப் போக்கி…
1.தன்னைத்தான் தான் உணர்ந்து
2.தன்னிடமுள்ள திரையை விலக்கி
3.உயர் ஞானத்தின் உண்மையின் ஒளி சக்தி பெற
4.உணர்வின் குணத்தைச் சமப்படுத்தி அறியும் பக்குவத்தைப் பெற
5.ரிஷிகளாய் அன்றும் இன்றும் தன்னுடைய உயர் தத்துவத்தை
6.மனித எண்ணத்தின் உணர்வின் வலுவிற்கு வழி காட்டுகின்றனர்.

தன்னைத்தான் உணரக்கூடிய வழி முறையில் தன் ஞானத்தைப் பெறும் பொழுது…
1.கோபம் வேதனை பயம் சலிப்பு போன்ற குணங்கள் உந்தப் பெறும் பொழுது
2.அந்த உந்தல்களைச் சமப்படுத்திட…
3.தைரியத்தின் உயர் ஞானம் கொண்டு உயரக் கூடிய வளர்ச்சிக்கு
4.இச்சரீர உயிர் அணு… உயிராத்மாவின் வலுவைக் கொண்டு…
5.உயர்ந்த ஒளி சக்தியை மனித ஞானம் வளர்த்துக் கொள்ளும் நிலைக்கு
6.மெய் வழி காட்டும் தொடரில் ரிஷிகள் படைத்த காவியங்களில் பல உன்னதத் தத்துவங்கள் உண்டு.

ஒன்றை ஒத்து ஒன்று… ஒவ்வொரு நொடிப் பொழுதும் மாறத்தக்கதே இந்த உலகச் சுழற்சி ஓட்டத்தின் நியதி.

பூமியின் ஆரம்ப உயிர் அணுத் தோன்றி மனித உணர்வின் எண்ண குணங்கள் வளர்ந்தமைக்கும்… இன்றைய கலியில் மனிதப் பெருக்கத்தின் எண்ணத்தின் ஈர்ப்பலையும்… மின் காந்த வானொலி அலைத் தொடரும்… செயற்கையின் விஞ்ஞான அமிலத்தின் செயலும்… இக்காற்றலையில் அதிகமாக இன்று படர்ந்துள்ளது.

அன்று ரிஷிகள் காட்டிய தத்துவ முறைக்கும் இன்றைய கலியின் நடைமுறைக்கும் பல கோடி மாற்றங்கள் ஆகி விட்டது.

1.நம் உணர்வின் ஞானத்தைச் சஞ்சலமில்லா சாந்தத் தொடரில் ரிஷிகளின் எண்ணமுடன் கலந்து…
2.நாம் எடுக்கும் நேரடி சுவாச மின் காந்த உயர் சக்தியின் வலுவை.. இச்சரீரம் பெறப் பெற…
3.இச்சரீரமே “ஒளித் தன்மை கொள்ளும்…!”

பக்தி மார்க்க வழித்தொடரில் மனதை அந்தந்தத் தருணங்களில் இனிமை கலந்ததாகப் பக்குவப்படுத்தலாமே தவிர தன் ஞானத்தை உயர் ஞானமாக்கும் நிலை இல்லை.

உணர்வின் எண்ணத்தைச் சஞ்சலமில்லா ஒளி சக்தியின் ரிஷி சக்தியின் தொடர்பால் அவர்கள் பெற்ற சக்திகளை நம் உடலுக்குள் பெருக்கி அவர்களின் ஈர்ப்பு வட்டத்தில் நம் எண்ணத்தின் உணர்வு வீரியம் கொள்ள வேண்டும். அவர்கள் வேறல்ல… நாம் வேறல்ல…! என்ற நிலையை அடைதல் வேண்டும்.

இக்கர்ம காரிய வாழ்க்கையில் பலவாகப் பல கோடி ஆண்டுகளாகப் பல கோடி மனிதர்கள் எடுத்து வளர்த்த உணர்வலையின் சுழற்சியின் மத்தியில் வாழும் நம் உணர்வின் எண்ணத்தை இவ்வுலக ஈர்ப்பில் செலுத்தும் பொழுது தன்னைத்தான் உணர முடியாத நிலைக்கு இன்றைய உலக நிலை வந்துவிட்டது.

மேலும் இக்காற்றலையில் உள்ள உணர்வுகளின் வலுவையும் நம் ஆத்மாவில் ஏற்றிக் கொண்டு அதன் குறைவு நிறைவில்…
1.நம் சரீரத்தில் வளரும் உயிரணுக்களையும் உயிர் ஆத்மாவையும்
2.குறை உணர்வின் மத்தியில்
3.குறைவான எண்ணத்தில்
4.குறை கொண்ட வாழ்க்கையாக அமைந்து விட்டது.

இதிலிருந்து மீள ஒளி சக்தியின் வீரியம் கொண்ட மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு… ஞானத்தால் உணரக்கூடிய “உயர் ஞான திருஷ்டி” என்ற சில உண்மைகளை உணர்த்தி வரும் அவர்கள் தொடர்பில் நாமும் வளர்ந்திடல் வேண்டும்.

அவர்கள் மூலம் பெற்ற நல் உணர்வின் சுவாசம் கொண்டு… நாம் வளரும் பூமியில்… நம் உணர்வின் சேவை… “பிறரையும் வளர்க்க…” சஞ்சலமில்லா உணர்வைச் சாந்தமுடன் நாம் பெற வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இரவு தூக்கத்தில் கெட்ட கனவு வந்தது… என்னை அப்படியே அமுக்குவது போல் இருந்தது… “ஒன்றுமே செய்ய முடியவில்லை” என்று சொல்வார்கள் – விளக்கம் – எப்படித் தடுப்பது?

விஞ்ஞான அறிவு கொண்டு ஒலி/ஒளிபரப்புச் செய்யும் போது எந்த ஸ்டேசனில் வைக்கிறோமோ TV ரேடியோ மூலம் அந்த ஒலி அலைகளைக் கவர்ந்து அது வருகின்றது… பார்க்கின்றோம்… கேட்கின்றோம்…!

மனிதனின் வாழ்க்கையில் யாருக்கும் நாம் தீங்கு செய்யவில்லை. நாம் ரோட்டிலே அல்லது பஸ்ஸிலே போகும் போது ஒரு ஆக்சிடெண்டைப் பார்க்கின்றோம். அவன் உடல் சிதைகின்றது.

அந்த மனித உணர்விலிருந்து அலறும் அந்த ஓலங்கள் ஒலி அலைகள் பரவுகின்றது. அடிப்பட்ட நிலையில் எத்தனை விதமான ஒலி அலைகள் பரவுகின்றதோ இதைச் சூரியனின் காந்த சக்தி எடுத்து வைத்துக் கொள்கிறது.

அடிபட்ட மனிதனை நம் கண் கருவிழி படமாக்கி நம் உடலிலே பதிவாக்கி விடுகிறது.

அடிபட்ட மனிதன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரவச் செய்கின்றது. அதை நாம் நுகர நேருகின்றது.

நம் உடலிலே ஆக்சிடெண்டைப் பார்த்த உணர்வுகள் வலுவாக இருப்பதால் மற்ற சிந்தனை இல்லாது இரவிலே உறங்கப்படும் போது அது கிளர்ந்தெழுகின்றது.

பதிவாக்கி நுகர்ந்த உணர்வுகள் இயக்கி நம்மை அறியாமலேயே இரவில் “திடுக்…” “திடுக்…” என்று பயப்படுவோம்.

பாலிலே பாதாமைப் போட்டாலும் ஒரு விஷத்தைப் கலந்தால் அந்த விஷம் தான் முன்னிலையில் வரும். ஒரு “சப்…” என்று இருக்கக்கூடிய பொருளுடன் காரத்தை இணைத்தால் அந்தக் காரம் தான் முன்னிலையில் இருக்கும்.

வாழ்க்கையில் நல்லொழுக்கங்களும் நல் செயல்களும் நல்ல நிலைகளைப் பார்த்து வாழ்ந்து வந்தாலும் சந்தர்ப்பத்தில் எதிர்பாராத நிலையில் ஆக்சிடெண்ட் ஆகி அவன் உடல் சிதைந்ததைப் பார்க்கின்றோம்.

அடிபட்டவர்களைக் கருவிழி இங்கே உடலில் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனறிவு அந்த உடலிலிருந்து வேதனைப்படும் உணர்வைக் கவர்கின்றது. நம் ஆன்மாவாக மாறுகின்றது.

ஆன்மாவிலிருந்து நுகர்ந்த பின் (சுவாசித்தது) அவன் வேதனைப்பட்டது போல் நமக்குள் பயமும் அச்சுறுத்தும் உணர்வுகளும் உருவாகின்றது.

நுகர்ந்தாலும் அந்த அணுத் தன்மையை நமக்குள் அதிகமாகப் பெருக்கி விட்டால் புலனடங்கித் தூங்கும் போது
1.நாம் ஈர்த்துக் கொண்ட அந்த அணு
2.பயமான உணர்வலைகளை அதிகமாக இழுத்து
3.நம் ஆன்மாவில் வந்து சுவாசித்து
4.உயிரிலே பட்டபின் நம்மை அறியாமலே தூக்கத்திலே அலறுகின்றோம் துடிக்கின்றோம்.

சில பேருக்கு ஆக்சிடெண்டைக் கண்டவுடனே “எழுந்து ஓடும் நிலைகள் வரும்…”

ஆக்சிடெண்டைப் பார்த்து அதை நுகர்ந்தவர்கள் தூக்கத்தில் அதே உணர்ச்சிகள் வந்த பின் “என்னை யாரோ அடிக்க வருகிறார்கள்…!” என்று எழுந்து ஓடுபவர்களும் பலர் உண்டு.

விபத்தில் மனிதன் அடிபடுவதை வேடிக்கை பார்க்கின்றனர். அந்த உணர்வின் தன்மை கருவிழி பதிவாக்கி விடுகின்றது. அவன் உடலிலிருந்து வரக் கூடிய அஞ்சி ஓடும் உணர்வலைகள் படர்கின்றது
1.அடிப்பவனைப் பார்க்கின்றோம்
2.விபத்தினால் அஞ்சி ஓடுபவனையும் பார்க்கின்றோம்.
3.இரண்டு உணர்வையும் நம் கருவிழி பதிவாக்கி உடலுக்குள் வைத்து விடுகின்றது.

இதைக் கலந்த உணர்வின் தன்மை ஊழ்வினை என்ற வித்தாக இங்கே வருகின்றது. (நன்றாகக் கவனிக்க வேண்டும்).

Agricultureல் பல பொருள்களைச் சேர்த்து புதுப் புது வித்துக்களை உருவாக்குகின்றனர். அதைப் போல ஆக்சிடெண்டைப் பார்த்த பின் இத்தகைய புதுவிதமான உணர்வின் வித்துக்கள் நமக்குள் உருவாகின்றது.

அடிபடுபவனின் வேதனைகளும் அடிபடுகிறோம் என்று அரண்டு ஓடும் உணர்வுகளையும் இரண்டும் கலக்கப்படும் போது உயிரால் நுகரப்படுகின்றது.

நுகர்ந்தது இதில் எதனின் ஆக்கம் அதிகமாகின்றதோ… “இப்படிச் செய்கின்றானே பாவி…” என்ற நிலை வரும் போது ஓடுபவரிடமிருந்து வெளிப்பட்ட அந்த பயத்தின் உணர்வுகள் நமக்குள் பதிவாகி விடுகின்றது.

“இந்தப் பதிவின் துடிப்பு…” அதிகரிக்கப்படும் போது இரவிலே நாம் தூங்கும் போது அவன் உடல் நம் நினைவுக்கு வருவதில்லை.

ஆனால் இரவில் நாம் தூங்கிக் கொண்டு இருந்தாலும் யாரோ என்னை அடிக்க வருகின்றனர் என்ற உணர்வு கொண்டு அஞ்சி எழுந்து ஓட ஆரம்பிக்கின்றோம்.

புலனடங்கித் தூங்கினாலும்
1.நம் ஆன்மாவில் பட்ட உணர்வுகளை நாம் சுவாசிக்கும் போது
2.நம் உயிரிலே பட்டு அந்த உணர்வுகள்
3.இயற்கையில் நாம் விழித்திருக்கும் போது என்ன செய்வோமோ
4.அதே செயலைச் செய்யும் அந்தச் செயலாற்றலைக் கொண்டு வருகிறது.

சிலர் எழுந்து ஓடுவதையும் பார்க்கலாம். சிலருக்கு
1.ஐயோ என்னைக் கொல்கிறார்களே…! என்ற நிலைகளும் வரலாம்.
2.என்னை அமுக்குகின்றனர்… கொல்கின்றனர்… என்றும் சொல்வார்கள்.

விபத்துக்குள்ளாகித் தாக்குதலான நிலைகளை நண்பர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள். அங்கே இப்படி நடந்தது… இங்கே இப்படி ஆனது…! என்பார்கள்.

நண்பர் சொல்வதை உற்று நோக்கி அந்த உணர்வின் தன்மை பதிவாக்கினால் அந்த அதிர்ச்சியின் உணர்வுகள் அது வலு கொண்டதாக இருப்பதால் புலனடங்கித் தூங்கும் போது நண்பன் சொன்ன நிலைகள் இரவிலும் வருகின்றது.

அவர் விபத்தைப் பார்த்தார்… நாம் பார்க்கவில்லை. ஆனால் பேசும் பொழுது நாம் கூர்மையாகக் கேட்டிருப்போம்.

என்னப்பா…! அநியாயத்துக்கு இப்படி அடித்துக் கொல்கிறார்களே… என்று அவர் நம்மிடம் சொன்னால் போதும். அவருக்குள் பதிவான உணர்வுகள் சொல்லாக வருகின்றது.

அவர் உற்றுப் பார்த்து உணர்வின் தன்மை பதிவான பின் அந்த உணர்ச்சிகளைச் சொல்லாக வெளிப்படுத்துகின்றார். ஆனால் நாம் ஆளைப் பார்க்கவில்லை.
1.அவர் சொல் நமக்குள் பதிவான பின்
2.நாம் புலனடங்கித் தூங்கும் போது
3.அந்த மனிதனின் ரூபமே நமக்குத் தெரியும்.

அவன் வேதனைப் படுகின்றான் துரத்துகின்றான் அவனை அடிக்கச் செல்லுகின்றான் என்று பதிவான உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் அந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்ட பின் இரவிலே
1.“நம்மை அடிக்க வருகிறான்” என்று நாம் எழுந்து ஓடுவோம்.
2.அல்லது என்னை அடிக்க வருகிறான் என்று தூக்கத்தில் கத்துவோம்.

ஒருவன் நீரிலே மூழ்கினான். அதனால் அவன் மூச்சுத் திணறி இறந்து விட்டான். அதை இன்னொருத்தர் பார்த்து வீட்டிலே வர்ணனை செய்வார்.

ஒரேயடியாக இந்த மாதிரி மூச்சுத் திணறி இறந்துவிட்டார் என்று சொல்வார். அவன் பட்ட பாடு எப்படி இருந்தது தெரியுமா…! என்று சொல்லுவார்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம் அந்த உணர்வுகள் அப்படியே பதிவாகும்.

வீட்டிலே அன்றைக்குக் கஷ்டம் என்ற நிலைகள் இருந்திருக்க வேண்டும். அத்தகைய சலிப்பான சங்கடமான நிலைகளோடு அவர் தூங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

சோர்வென்ற நிலைகள் இருக்கும் போது அவர் சொன்ன நிலைகள் கிணற்றில் விழுந்து மூழ்கினான் கதறினான் கத்தினான் என்று பதிவான உணர்வுகள்
1.தூங்கும் பொழுது இயக்கி அறியாமலேயே
2.குளத்துக்குள் மூழ்குவது போலவே அவருக்குத் தோன்றும்.
3.தண்ணீருக்குள் மூழ்கினால் கத்துவது போல் கத்துவார்.
4.இவையெல்லாம் பதிவான உணர்வின் இயக்க நிலைகள்.

புலனடங்கித் தூங்கிக் கொண்டிருந்தாலும்
1.உயிரின் தன்மைகள் அந்த உணர்ச்சிகளை நம் உடலிலே சுழலச் செய்து
2.அதே செயலாக்கமாக இயக்கிக் காட்டும்.

இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

விபத்துகளையோ அசம்பாவிதங்களையோ பார்க்க நேரந்தால் அல்லது கேட்க நேர்ந்தால்
1.அடுத்த கணம் “ஓ..ம் ஈஸ்வரா…” என்று
2.புருவ மத்தியில் உயிரை எண்ணி
3.அதைத் தடுத்து நிறுத்திப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற உணர்வை உடலுக்குள் பல முறை செலுத்த வேண்டும்.

பின் விபத்தில் அடிபட்டவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் விரைவில் உடல் நலம் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அடிபட்டவர்கள் இறந்திருந்தால்… உடலை விட்டுப் பிரிந்த அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று விண்ணை நோக்கி உந்திச் செலுத்த வேண்டும்.

ஓ…ம் நமச்சிவாய… சிவாயநம ஓ…ம்…! – இதனின் உட்பொருள் என்ன…?

 

நம்மைத் திட்டியவர்களைக் கூர்ந்து கவனித்த பின் நாம் என்ன சொல்கிறோம்.

“இருக்கட்டும்… நான் பார்க்கின்றேன்… உதைக்கின்றேன் பார்… அவன் வந்துவிடுவானா… நான் பார்த்து விடுகிறேன்…!” என்றெல்லாம் உணர்ச்சிவசப்படுகின்றோம்.

வருவோர் போவோரிடம் எல்லாம் இதைச் சொல்லி “இப்படிச் செய்கிறான்… அவன் உருப்படுவானா…?” என்று சொல்கிறோம்.

கீதையிலே சொன்னது… நீ எதை நினைக்கிறாயோ அதுவாகின்றாய்.

அவன் உருப்படுவானா…? என்று சொல்லும்போது நாம் கெட்டு… அதைச் சமைத்து… வாக்கைச் சொல்லி… அங்கே பட்டு… அடுத்தவரிடம் சொல்லி அப்படியா…? என்று இரண்டாவது வருகின்றது.
1.முதலில் நாம் தான் கெடுகின்றோம்.
2.இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் திட்டுகிறோம் என்று சொன்னால் நம் உயிரான ஈசன் உடனே அதைப் பிரணவம்… ஜீவன் ஆக்கி விடுகின்றான். நமக்குள் சக்தியாக அது இயங்க ஆரம்பிக்கிறது.

ஓ…ம் நமச்சிவாய… நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வு ஓ…ம் பிரணவம். அந்த உணர்வின் சக்தி எனக்குள் சேர்ந்தபின் சிவமாகிறது (உடலாகிறது). ஓ…ம் நமசிவாய… சிவாய நம ஓ…ம்.

நான் உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கின்றேன். சொல் வெளிப்பட்டவுடன் அந்த உணர்வு எனக்குள் ஜீவன் பெறுகின்றது அந்த உமிழ் நீர் எனக்குள் சிவம் ஆகின்றது. ஓ…ம் நமச்சிவாய என்னுடைய சொல் உங்களிடம் சென்றபின் அது உதவி செய்ய வைக்கும்.

ஆனால் “உதைக்கிறேன்…” என்று சொல்லைச் சொன்னேன் என்றால் அடுத்து சிவாயநம… உதைக்க வேண்டும் என்று இந்த உடலையே இழுத்துக் கொண்டு போகும்.

1.நான் எடுத்துக் கொண்ட உணர்வின் அலை ஈசனிடம் பட்டவுடன் பிரம்மமாகி
2.“பிரணவம்…” அந்தச் சக்தி என் உடலில் அந்த ஆற்றலாக இயக்கும்.
3.ஏனென்றால் சிவம் (உடல்) என்பது உயிரிலே படும் உணர்வால் இயக்கக்கூடிய பொம்மைதான்.

கோபம் வந்துவிட்டால் என்ன செய்கிறோம்…? கையைப் பிடித்து நிறுத்திப் பாருங்கள்… நிற்க முடியுமா என்று…!

கோபம் வந்துவிட்டால் கொஞ்சம் நிறுத்து… இரு…! என்று யாராவது சொன்னால் கேட்போமா…? எல்லாம் உன்னால்தான் வந்தது…! என்று அவரையே உதைக்கச் செல்வோம்.

ஆகவே நான் எதை எடுக்கிறோமோ உயிருக்குள் பட்டவுடன் ஈசனுக்கு எரிச்சல் ஆகிறது. இந்த உணர்வைத் தாங்கி உடலுக்குள் சக்தியாகப் பட்டால் என்ன செய்யும்…?

நம் மீது நெருப்பு பட்டால் என்ன ஆகும்…? சிவன் மேலே பட்டால் ஐய்யய்யோ… ஐயோ…! என்று துள்ளுவோம்.

அதே மாதிரியான உணர்வுகள் ஈசனுக்குள் (உயிருக்குள்) பட்டவுடன் ஐய்யய்யோ.. ஐயோ…! என்று துள்ளுவோம். ஆகவே இதை எல்லாம் நாம் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அந்தந்த உணர்வின் தன்மை நாம் சுவாசிப்பது எதுவோ அதனின் செயலின் தன்மையாகத் தான் நாம் இயக்கப்படுகின்றோம்.
1.தீமை செய்யும் உணர்வின் தன்மை என்றால் அது நமக்குள் சிவமாகி
2.ஐய்யய்யோ என்று உடலிலே குடைந்து நோயாக வந்து கொண்டே இருக்கும்.

அதைக் காட்டுவதற்குத் தான் மூஷிகவாகனா (மூச்சு – வாகனம்) விநாயகருக்கு முன் மூஞ்சூரைப் போட்டு வைத்திருக்கின்றார்கள். ஒருவனை அழித்து விடுவேன் என்ற உணர்வை நாம் சுவாசித்தால் நம் உடலான கட்டிடத்தை அந்த உணர்வுகள் கவர்ந்து இடித்துவிடும்.

ஆனால் முதலிலே விநாயகருக்கு முன் மாம்பழத்தைத் தான் போட்டுக் காட்டினார்கள். காய் கனிகளைச் சாப்பிட்டுத் தனக்குள் வாகனமாக அந்தச் சுவை கொண்டுதான் உடலை வளர்த்து வந்தது என்று காட்டினார்கள்.

அதாவது விநாயகர் தத்துவத்தைப் படமாகக் காட்டும் போது முதலிலே எலி இல்லாது இருக்கும். அதற்குப் பின்னாடி தான் எலியைப் போட்டுக் காண்பித்தார்கள்.

இது எல்லாம்… அந்த இயற்கையின் நிலையை நாம் கண்ணுற்றுப் பார்த்ததும் தெரிந்து கொள்வதற்காக வேண்டி ஞானிகள் தெளிவான நிலையில் நமக்குக் கொடுத்திருக்கின்றார்கள்.

ஒளி நிலை பெற வேண்டியதன் அவசியம் என்ன…? – ஈஸ்வரபட்டர்

 

தன் ஞானத்தின் வலுவை வலுப்படுத்தி… உயர் தியானத்தால் ஒளி சக்தியின் சக்தியை வலுப்படுத்தியதின் உண்மைத் தன்மை யாது…? (எதற்கு) என்பதை அறிதல் வேண்டும்.

ஒவ்வொரு செயலிலும் ஒன்று வளர்ந்து… அது மாறிப் பிறிதொன்றாய் வளர்ந்து தொடர் நிலை கொள்கின்ற வளர்ச்சி பெறும் உருவக அமிலத்தன்மையில்… பொருள் நிலை மாறினாலும் மூல ஒளி நிலை பெற்ற உயிர் அணு எவையுமே மடிவதில்லை…!

உயிர்களுக்கு என்றுமே அழிவில்லை…!

ஆகையினால்..
1.ஒளி நிலை பெற்ற அந்த உயிரணுக்களின் கூட்டுச் செயல் நிலை வளர்ந்தால் தான்
2.அத்தொடரின் வலுவில் வலுவாகக் கூடிய மண்டல வளர்ச்சி உருப் பெற உரம் தர முடியும்.

அமிலமாய்… உருவாய்… ஆவியாய்… உருவாகும் உருத்தொடரின் உயிரணுக்களில்… வீரிய நிலை பெற்ற வளர்ச்சி உரு முதிர்வு நிலை என்பது “மனித உணர்வின் எண்ண ஓட்டச் செயல் நிலைதான்…!”

இச்செயல் நிலையையும் ஜீவ சரீரத்தில் எண்ணத்தின் வளர்ப்பு கொண்டுதான் வலுப்படுத்திக் கொள்ள முடியும்.

அத்தொடரின் அழியா நிலை பெற… அன்று மாமகரிஷியாக உயர்ந்த மனிதன் தன் வலுவைக் கூட்டிக் கொள்ள மனித அறிவில் தன் உணர்வைச் செலுத்தி வளர்ச்சியுறத்தக்க நடைமுறை செயலுக்கு அன்று உள்ள மனித ஜனத்தொகை மிக மிக சொற்பம்… மிருக உணர்வின் தொடர்பில் உயர் ஞான எண்ணச் செயல் குறைவு,

அதன் தொடரில் தன் உயிராத்மாவிற்கு உயர் நிலை பெற தாவர இனத் தொடர்பில் தன் சரீரத்தைப் பல பக்குவங்களுக்கு உட்படுத்திக் “காயகல்ப சித்தி” பெற்றார்கள்.

ஆனால் இக்கலியில் நாம் இன்று வாழக்கூடிய வாழ்க்கைத் தொடரிலேயே….
1.எச்சக்தியையும் பெறக்கூடிய வலுவிற்கு
2.அன்று பெற்ற ரிஷி சக்திகளின் எண்ணமுடன் நம் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி
3.அவர்களின் தொடர்பலையை நம் ஜீவகாந்த சரீரத்திற்குச் செலுத்தச் செலுத்த
4.உயிரின் பரிமாணமும் உயிரணுக்களின் பரிமாணமும் கூடக் கூட
5.இவ்வாத்மாவின் ஒளி வட்டம் தன் இயக்கச் செயலினால்
6.தனித்து இயங்கும் ஒளி சக்தியின் வலுவைச் சிறுகச் சிறுகப் பெருக்கிக் கொள்ள முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மலரில் உருவாகும் மதுரத்தைப் போல… “மகிழ்ச்சியும் பேரானந்தமும் கொண்ட மதுரத்தைப் பெறுங்கள்”

செடியிலோ மரத்திலோ மலர் மலர்ந்து விட்டால் மீண்டும் மீண்டும் மலர்ந்து அதிலிருந்து அதனின் மணம் கமழ்கிறது.

மலராக உருவான பின்
1.அதில் மதுவான இனிமை கொண்ட மதுரத்தைத் தனக்குள் நுகர்ந்து
2.அந்தத் தேனினை இணைத்து அதற்குள் கருவுற்று
3.கருவுற்ற நிலைகள் கொண்டு தன் வித்தாக உருவாக்குகின்றது.

அதைப் போல நாம் எடுத்துக் கொண்ட மகரிஷிகளின் உணர்வின் தன்மை மலரின் மணம் போன்று அருள் மணமாகக் கமழ்கின்றது.

1.மகரிஷிகளின் மணத்தை நுகர்ந்தால் அது மதுரமாகி
2.மகிழ்ச்சியான அலைகளாக நம் ஆன்மாவாக மாறி
3.அந்த உணர்வின் தன்மையை நாம் சுவாசிக்கும் பொழுது
4.நமக்குள் வளர்ந்து அருள் ஞான ஒளியின் வித்தாக
5.முழுமை பெறும் தன்மையினை நாம் நிச்சயம் அடைய முடியும்.

ஆகவே என்னமோ… ஏதோ…! என்ற நிலையில் யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளை அலட்சியப்படுத்தாது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை நீங்கள் பெற வேண்டும். குருவின் அருளால் நீங்கள் தெளிந்திடும் நிலை வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெற்று உங்களுக்குள் தெளிந்த மணம் பெற வேண்டும் என்று விரும்புகின்றேன். உங்களை நான் பார்க்கும் பொழுது எனது குருவின் அருளை உங்களிடம் பார்க்க விரும்புகின்றேன்.

உங்களை அறியாது வந்த இருள்களை நீங்கள் போக்கும் நிலை பெற வேண்டும். அப்பொழுது மகிழ்ந்திடும் பேரானந்த நிலையான அந்த மதுரம் உங்களுக்குள் வரும்.

அந்த உணர்வின் தன்மையை நான் நுகரும் போது எனக்குள்ளும் மதுரமாகின்றது. உயிரான ஒளியுடன் ஒன்றி என்றும் நிலையாக நிலைக்கும் நிலைகளை நாம் அனைவரும் பெறுகின்றோம்.

சூரியன் எவ்வாறு இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டு தனக்குள் கலந்து வரும் நஞ்சினைப் பிரித்து விட்டு உணர்வின் ஒளியாக மாறுகின்றதோ இதே போல
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பேரொளியாக மாற்றினார்.
2.அவர் வழியில் நான் பெற முடிகின்றது.
3.அதன் வழி நீங்கள் அனைவரும் பெற முடியும்.
4.இதில் கடினம் எதுவும் இல்லை.

அனைவரும் இந்த முறைப்படுத்தி வாருங்கள். பிறர் தீமையான நிலைகளில் செயல்பட்டாலும் அதை நீங்கள் கேட்டறிந்தாலும் அடுத்த கணம் ஒரு 50 முறையாவது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு உங்களை அறியாது வரும் அவர்களுக்குள் (பிறரின் இருளான உணர்வுகள்) பட்ட இருள் உங்களை மறைத்திடாது தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் உணர்வை ஒளியாக மாற்றுங்கள்.

அந்த வலுவின் துணை கொண்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள்.
2.உங்கள் பிணிகள் அகலும். உடல் நலம் பெறுவீர்கள்.
3.மகரிஷிகளின் அருள் ஒளியால் உங்கள் நோய்கள் நீங்கும்.
4.உங்கள் குடும்பம் நலமாக இருக்கும்.
5.உங்கள் தொழில்கள் வளரும்.
6.உங்கள் குடும்பங்களில் அனைவரும் ஒன்று சேர்ந்து இருப்பீர்கள் என்று
7.உங்கள் வாக்கை மற்றவர்களுக்குள் அருள் ஞான வித்தாகப் பதிவு செய்யுங்கள்.

இதன் வழி கொண்டு மெய் வழியில் தொடர்ந்து நீங்கள் செய்து வாருங்கள்.

1.தீமைகள் அகன்று தீமைகளை அகற்றும் உணர்வுகள் அனைவரது உடல்களிலும் விளைந்து
2.அந்த உணர்வலைகள் வெளி வரும்போது சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு
3.இந்தப் பரமான பூமியில் பரமாத்மாவாகப் பரவச் செய்யும்.
4.இந்த அருள் உணர்வுகள் பரவப்படும் போது கடவுளாக
5.இந்தப் பரமாத்மாவுக்குள் தீமையை அகற்றும் அலையின் தொடராக
6.யார் எண்ணி ஏங்கினாலும் அடுத்த கணம் அவர்கள் தீமைகளை அகற்றும்.
7.அந்தக் கடவுளாக மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் சிருஷ்டிக்கும் தன்மை வரும்.

ஆனால் இன்றைய மனித வாழ்க்கையில் நாம் எதை இந்தப் பரமாத்மாவில் கலந்து கொண்டிருக்கின்றோம்…?

பஸ்சில் போனால் பயம்; வீட்டில் இருந்தால் பயம்; அதிகமான காசு கொண்டு போனால் பயம்; ஏதாவது வாய் திறந்து பேசினால் பயம் என்ற நிலையில் அஞ்சியே வாழ்ந்து கொண்டிருக்கும் உணர்வுகளை ஒவ்வொருவரும் வெளிப்படுத்துகின்றோம்.

இந்த உணர்வலைகள் படரப் படர அலைகளாக மலர மலர மகரிஷிகளின் அருள் ஒளியை… அந்த மெய் ஒளியை… இங்கே நாம் பெற முடியாது இருள் சூழும் நிலையே வருகின்றது.

அந்த இருளான உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து பரவச் செய்யும்போது அச்சுறுத்தும் உணர்வின் தன்மை கொண்ட கடவுளாக – அதைத்தான் பரமாத்மாவாக மாற்றுகின்றோம்.

அத்தகைய உணர்வுகளை நாம் நுகர்ந்தால் நமக்குள் வந்து அஞ்சி வாழும் நிலைகளைத்தான் நம்மை இயக்கச் செய்யும்.

இதைப் போன்ற நிலைகளை அகற்றுங்கள். உயர்ந்த நிலைகள் பெற அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நுகரப் பழகிக் கொள்ளுங்கள்.

“சாமி செய்து தருவார்…” என்ற எண்ணத்தை வளர்த்தால் உங்களுக்கு அதிலே ஏமாற்றம் தான் வரும்

 

நம்மை ஒருவர் திட்டினால் அதைக் கூர்ந்து கவனிக்கின்றோம். அடுத்தாற்போல் அதே செயலில் நாமும் இயங்க ஆரம்பித்து விடுகின்றோம்.

அது போன்று யாம் (ஞானகுரு) இங்கே உபதேசிக்கும் போது யார் ஒருவர் இதைக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ
1.சாமி சொன்ன வழிகளில் நாம் போக வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால்
2.அந்த உணர்வுகள் உங்களுக்குள் வருகின்றது.

கீதையிலே சொன்னது போல் நீ எதை நினைக்கிறாயோ அதுவாகின்றாய்… மூஷிகவாகனா…! எதை நினைக்கின்றீர்களோ அதையே நீங்கள் சுவாசிக்கின்றீர்கள்.

அப்படி அந்த ஞானிகளை நினைப்பதற்குண்டான ஆற்றலையும் அதை நீங்கள் பெறுவதற்கும் அதைச் சுவாசிக்க கூடிய நிலைகளுக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கும் நிகழ்ச்சி தான் தியானம்.

அந்த முறைப்படி நினைக்கப்படும் பொழுது மெய் ஞானிகள் காட்டிய வழிகளிலே அங்கே போகலாம்.
1.சாமி செய்து கொடுப்பார் என்று எண்ணினால் ஏமாந்து தான் போக வேண்டும்.
2.சாமி பெரிய மகான்…! அவர் கொடுக்கின்றார் பிரசாதம் கொடுக்கின்றார்… அது கொடுக்கின்றார்… என்று எண்ணிக் கொண்டிருந்தால்
3.உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று தான் அர்த்தம்.

இயற்கையின் உண்மை இதுதான் என்று உங்களுக்குள் அருள் உணர்வின் வித்தாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அந்த விதைக்கு நீரூற்றி வளர்க்க வேண்டியது “உங்களுடைய பொறுப்பு…”

குருநாதர் எனக்கு அந்த அருள் வித்தைக் கொடுத்தார்… அதற்கு வேண்டிய பக்குவத்தைச் சொன்னார்… எடுத்துக் கொண்டேன். அதன்படி விளைய வைத்த வித்தின் தன்மையை உங்களுக்குள் கொடுக்கப்படும்போது அதை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கின்றேன்.

“சாமி கொடுப்பார்…” என்று கோவிலில் தெய்வத்திடம் சென்று வரம் வாங்கிக் கொடு…! என்று கேட்பது போன்று கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

சாமி பெரிய சக்தி வாய்ந்தவர்…! என்ற எண்ணத்தில் தலைவலி என்னை விட்டே போக மாட்டேன் என்கிறது… முழங்கால் வலி போகவே மாட்டேன் என்கிறது என்று சொல்லிக் கேட்கின்றார்கள்.

வலி நீங்கி நான் நன்றாக வேண்டும் என்று கேட்கச் சொல்கின்றேன். மீண்டும் தலை வலி விட மாட்டேன் என்கிறது… ஐந்தாறு மாதமாக விட மாட்டேன் என்கிறது… என்னென்னமோ வைத்தியம் பார்த்தேன் என்றே சொல்கிறார்கள்.

இப்போது என்ன வேண்டும்…? என்று கேட்டாலும் அது தான் வலி விட மாட்டேன் என்கிறது என்று மீண்டும் அதையே தான் கேட்கிறார்கள். ஏனென்றால் அந்த உணர்வுதான் நம்மைப் பேச வைக்கின்றது.

எத்தனை தடவை சொன்னாலும் கூட அதைத்தான் திருப்பிக் கேட்கின்றார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு நமக்குள் பக்தியை வளர்த்து வைத்து விட்டார்கள்.

டாக்டரிடம் சென்று தலை வலி… இடுப்பு வலி மேல் வலி என்று சொல்கிறார்கள். அவர்கள் அதற்குண்டான மருந்தை கொடுத்து மற்ற எல்லாம் சொல்கின்றார்கள்.

டாக்டர் சொன்ன வழிப்படி செய்தால் தானே அந்த நோய் சரியாகும்.

ஊசியையும் போட்டு மருந்தையும் உட்கொண்ட பின் ருசியாக இருக்கிறது என்று டாக்டர் சாப்பிடக்கூடாது என்று சொன்னதைச் சாப்பிட்டால் என்ன ஆகும்…?

மீண்டும் கை கால் குடைச்சல் உடல் வலி வரத்தான் செய்யும்.

அதே போன்று இங்கே தியானத்தைச் சொல்லிக் கொடுத்து மெய் ஒளியின் தன்மையைப் பதிவு செய்கின்றோம். அதை எடுத்து உங்களுக்கு வரக்கூடிய தீமையைப் போக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லும் போது அதை நீங்கள் செய்தால் தான் சரியாகும்.
1.உங்களை நீங்கள் நம்புங்கள் என்று தான் சொல்கிறேன்
2.நான் சரியாக்கித் தருகின்றேன் என்று சொல்ல வரவில்லை.

பல கோடி ஆண்டுகளாக வளர்ச்சி பெற்ற மனித இனமே இந்த நூற்றாண்டில் அழிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளது – ஈஸ்வரபட்டர்

 

அலை வரிசைகளின் மூலம் இன்று நாம் பார்த்து.. கேட்டுக் கொண்டிருக்கும் ரேடியோ… டி.வி. இண்டெர்னெட்… எல்லாமே எவ்வமிலத்தில் உலோகத்தைப் பூசி ஒலி பரப்பப்பட்டதோ.. அது காற்று மண்டலத்தில் பரவி… எத்தொடரில் ஒலிபரப்பானதோ… அவ்வொலியின் பலவாகப் பரவும் செயல் ஜீவன் கொண்டு… ஒரு இடத்தில் ஒலிப்பரப்பப்பட்ட நிலை இக்காற்று மண்டலம் முழுமைக்கும் பல மைல்களுக்கப்பால்… அதன் தன்மை கொண்ட அமில மோதல் தொடர்பில் ஜீவன் பெற்று விடுகிறது.

அந்த இணைப்பு பெறும் தொடர்பிலெல்லாம் ஒலிப்பரப்பாகும் ஒலியை நாம் அவ் ஈர்ப்பில் கேட்கும் பொழுது
1.எவ்விஷ அலையின் முலாம் பூசப்பட்ட அமில ஈர்ப்பின் ஒலிப்பதிவு
2.இந்தக் காற்று மண்டலத்தில் ஜீவன் பெற்றதோ
3.மீண்டும் அதே அலையின் உணர்வை நம் எண்ண உணர்வு எடுக்க எடுக்க
4.இவ்வுடலும் அவ்விஷ அலையின் ஈர்ப்பிற்குத்தான் செல்ல முடியும்.

எப்படி இயந்திரங்களை ஒன்றின் இணைப்பு கொண்டு பிறிதொன்றை இணைத்து ஓட்டும் பொழுது… அதன் தொடர்பில் இதுவும் ஓடுகின்றதோ அதைப் போன்று… உணர்வின் எண்ண அலையின் தொடர்பு அலையில் எத்தொடர்பில் ஒலி அலை.. ஒளி அலை பதிவு பெற்றனவோ… அவற்றின் ஈர்ப்பிற்கு மனிதர்கள் தம் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது… அவ் ஓட்டத்தின் சுழற்சியில் தன் உணர்வும் சிக்கி… அவ்விஷ அலையில்தான் இம்மனித ஆத்மாவும் செயல் கொள்ளத் தொடங்கி விட்டது.

இந்தக் குறுகிய நூற்றாண்டில் வளர்ச்சி கொண்ட இவ் அலையின் தொடர்பினால்… “பல கோடி ஆண்டுகளாக” வளர்ச்சியுற்ற வலுக் கொண்ட இவ்வுயிர் ஆத்மாவை நல் உணர்வின் ஞானமுடன் செயல்படுத்த முடியாத நிலை ஆகி விட்டது.

இன்றைய செயற்கை மின் காந்த ஒலி… ஒளிக் காட்சிகளின் தொடர்பினால்…
1.ஆத்மாவானது உயரும் நிலை பெறாமல்
2.உடலை விட்டு உயிர் பிரிந்தவுடன்
3.உயிருடன் வலுக் கொண்டு… உயிருடன் ஆத்மா வலுப் பெறாமல்
4.ஆத்மா சிதறுண்ட நிலையில் இக்காற்று மண்டல சுழற்சியில்
5.மனித உணர்வின் எண்ண நிலைக்கொப்ப அந்தந்த மோதல் நிலை பெற்று
6.தன் வலு நிலையை இழந்து விடுகின்றது.

ஆகவே.. ஆத்மாவுடன் கூடிய உயிரும்… ஆத்மா பிரிந்த அவ்வுயிரும் வலுவிழந்த நிலையில்… பிறப்பின் தொடருக்கு மீண்டும் மிகவும் கீழ் நிலையான உயிரின நிலைக்குத்தான் செல்ல முடிகின்றது.

இன்று இக்காற்று மண்டலமே மிகவும் நஞ்சாக உள்ளது. மனித உணர்வின் எண்ண ஆத்மாவிற்கு வேண்டிய உயர் காந்த மின் அலையை எடுக்கும் உயர் ஞானத்தின் சக்தி நிலை பெறத்தக்க சூழ் நிலையை
1.இன்றைய விஞ்ஞானம் காற்று மண்டலத்தில் கலக்க விட்டுள்ள பல அலையின் செயலினால்
2.அந்த மனித சக்தியையே வலுவிழக்கச் செய்துவிட்டது.

விஞ்ஞானத்தில் செயல்படும் நிலையே தன் ஞானம் செயல்படக்கூடிய வழி வளர்ந்த தொடரில் வளர்ந்திருந்தது என்றால்
1.இன்று இப்பூமியில் கலியின் கடைசியை அழிவு நிலை இல்லாமல்
2.மனிதனின் உயர்வு வளர்ச்சியான அடுத்த கல்கி அவதாரத்தை மனிதர்கள் பெற்றிருக்கலாம்.

சில நிலைகள் வெளிப்படுத்திய நிலையும் யூதர்களினால் அன்று மனித உணர்வின் ஆத்மா வலுப்பெற்ற நிலையும் அழிவு நிலைக்குச் சென்று விட்டது.

அன்றைய ஞானிகள் மனித ஆத்மா உயர்வு பெற மனிதன் எச்சக்தியையெல்லாம் பெற முடியுமென்ற தத்துவத்தை விளக்கிக் காட்டினர்.

1.அதை வளர்க்கும் நிலையைக் காட்டிலும் எதிர்க்கும் நிலையும்
2.தன் தேவைக்குத் தந்திரமான முறையில் செயல்படுத்தப்பட்டதினால்
3.இன்று அவை எல்லாம் வேறு ரூபமெடுத்துவிட்டன.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யானையோ தன் உடலின் வலுக் கொண்டு தான் உணவாக உட்கொள்ளும் பெரும் கட்டைகளை தனக்குள் உருவாகும் அமிலத்தின் வலுவால் துரித நிலைகளில் கரைத்து அதனின் சத்தைத் தன் உடலாக மாற்றிக் கொள்ளும் திறன் பெறுகின்றது.

ஆனால் அதன் மலத்தை (லத்தி) வெளியிடும் போது அதை மனிதன் மிதித்தால் குதிங்கால் வாதம் நீங்குகின்றது.

மனிதனின் வாழ்க்கையில்
1.வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்தால்
2.அதன் புவியின் ஈர்ப்பில் இத்தகைய வாத நோய்கள் வந்துவிடுகின்றது.

குதிங்கால் வாதம் என்பது நாம் நடக்கும் போது தெரிவதில்லை. நாம் அமைதியாக இருக்கும்போது கால்களில் அந்த வலியும் வேதனையும் தெரியத் தொடங்கிவிடும்.

நாம் படுக்கும்போது இதைப் போன்ற வலி இருப்பதை உணர முடிகின்றது.

யானையின் லத்தியை அது சூடாக இருக்கும் போது அதை அவர்கள் மிதித்தார்கள் என்றால் இந்த உடலிலுள்ள வாதங்கள் நீங்கிவிடுகின்றது.

விஷத்தின் தன்மை நம் உடலில் உறைந்திருந்தால் லத்தியில் வரும் ஆவியின் தன்மை
1.பாதங்கள் வழியாக உடலுக்குள் ஊடுருவி அதைக் கரைத்து விடுகின்றது.
2.அந்தப் பாகம் இரத்தம் எளிதாகச் சீர்படும் தன்மை வருகின்றது.

இயற்கையின் இயக்கங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதைப் போல் கால்களில் முழங்கால் வாதம் கடுமையாக இருந்தால் எருமை மாட்டின் சாணத்தை உபயோகப்படுத்தி அதைக் குறைக்க முடியும்.

எருமை விஷத்தின் தன்மை கொண்டு உடல் வலிமை பெற்றது.

எருமைச் சாணம் சூடாக இருந்து அதைத் துணியில் எடுத்துப் பிழிந்து மேலே போட்டால் மூட்டுவாதங்கள் மற்றும் குதிங்கால் வாதங்களை நீக்க உதவுகின்றது.

சாணம் போட்டதும் வெதுவெதுப்பான நிலையில் எடுத்துப் பிழிந்து காலில் வைத்துப் பாருங்கள். அது ஒரு மருந்தாகப் பயன்படுகின்றது.

மிகவும் கடினமான விஷத்தை மனிதன் உட்கொண்டால் அந்த விஷத்தின் தன்மையைத் தடைபடுத்த எருமைச் சாணத்தை மிதித்தால் புவியின் ஈர்ப்பில் ஈர்ப்பாக இருப்பதால் இரத்தத்தில் கலந்து அந்த விஷங்களை முறிக்கின்றது.

எருமை மாட்டின் சாணத்திற்கு கடுமையான விஷத்தையும் முறிக்கும் ஆற்றல் இருக்கின்றது.

அக்கால மக்கள் பல கோடி உடல்களில் இருந்து தீமையை நீக்கினாலும் அவர்கள் சந்தர்ப்பத்தால் கண்டுணர்ந்த உணர்வுகளை மனிதனுக்கு வரும் உபாதைகளை நீக்கப் பயன்படுத்தினர்.

மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்து அம்பாகப் பாய்ச்சிப் பழக வேண்டும்

 

உணர்வுகளின் இயக்கம் வெப்பம் காந்தம் மணம் இந்த மூன்றும் உடலில் சேர்த்து மூன்று அறிவாகக் கண்ணில்லாத ஒரு புழுவாக இயக்கினாலும் “தான் பார்க்க வேண்டும்…” என்ற ஏக்கத்தின் உணர்வு கொண்டு கருவிழிகள் தோன்றுகின்றது.

தனக்குள் செயல்படும் ஒவ்வொன்றையும் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வின் நிலைகளாக வரும் போது தான் இருளுக்குள் பிறக்கின்றான் கண்ணன்.

1.தான் சுவாசித்த அந்த உணர்வு வாசுதேவனாக இயக்கி…
2.தேவகி… உணவை உட்கொள்ள வேண்டும் என்று தன் தேவைக்காக வேண்டி எடுத்துக் கொண்ட அந்தச் சக்தியின் தன்மை கொண்டு
3.தனக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை அதனால் பிறக்கப்பட்ட இந்த உணர்வு தான் கண்ணன்.
4.வாசுதேவன் என்ற அரசனுக்கு மகனாகப் பிறக்கிறான் கண்ணன்

தீயதை நீக்கி நல்லதைச் செய்யும் நிலைகள் கொண்டு நான்காவது நிலையாகக் கண்ணன் உதிக்கிறான் என்ற காவியத்தை அங்கே படைத்தார்கள்.

இது தான் கடவுள் என்று மந்திரமும் மாயமும் போட்டு… அவனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்தால் எல்லாம் கொடுப்பான்…! என்று தன்னுடைய பேராசையையும் பெரு நிலைகளையும் வளர்த்துக் கொள்வது தான் என்ற நிலையில் ஞானி சொன்னதை மாற்றிக் காட்டுகின்றனர்.

1.அந்த மெய் ஞானி வியாசன் உண்மையை உணர்த்தினான்
2.இவர்கள் மந்திரத்தை உருவாக்கி விட்டார்கள்.
3.ஆனால் பதிவு செய்த மந்திரத்தை எடுத்துக் கொண்டால் இன்னொரு ஆன்மா தான் நமக்குள் வரும்.

அதைச் செய்கிறேன்… இதைச் செய்கிறேன்… என்றும் அர்ச்சனை ஆராதனை மந்திரங்களை ஒலிக்கச் செய்து… “உனக்காக எல்லாமே படைக்கின்றேன். ஆகவே நீ எனக்கு என்ன செய்கின்றாய் என்று கேள்வி…!”

இப்படிப்பட்ட உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து உணர்வின் தன்மைகளை நாம் பக்குவப்படுத்தும் நிலை இழந்து இறந்தபின் மந்திரக்காரன் கையிலே போய் நாம் சிக்குகின்றோம். அதற்குத் தான் இது பயன்படும்.

உதாரணமாக வேப்பமரம் தன் இனமான சத்தைக் காற்றிலிருந்து பிரித்து எடுத்துக் கொள்கின்றது அதே மாதிரி
1.எந்த குணத்தின் தன்மையை நாம் முன்னணியில் வைக்கின்றோமோ அந்தச் செயலுக்குகந்த அதே மணத்தின் தன்மை இருக்கின்றது.
2.அதே உணர்வு (மணம்) கொண்ட இன்னொரு மனிதன் இருப்பான்.
3.அவனுக்குள் ஈர்க்கப்பட்டு அங்கே போய் இணை சேர்ந்து அது வளரும் நிலை பெறுகின்றது.

வேதனையை உருவாக்கும் எண்ணம் கொண்டு அங்கே புகுந்து வேதனையை அதிகமாக அங்கே உருவாக்கச் செய்து விஷத்தின் தன்மையைத் தனக்குள் கவர்ந்து அவனையும் அழித்து… அழித்துக் கொள்ளும் உணர்வு கொண்டு உயிராத்மா வெளியே வரப்படும் பொழுது மனிதனுடைய நிலைகளையே எட்ட முடியாத நிலை ஆகிவிடுகின்றது.

விஷம் அதிகமாகும்போது எந்த விஷத்தையும் தனக்குள் சமாளிக்கும் உடலின் அமைப்பு கொண்ட விஷமான மிருகங்களுக்குள் ஈர்க்கப்பட்டு “மனிதனை மிருகமாகப் படைத்து விடுகின்றது…” இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீள வேண்டும்.

கண்ணன் கீதா உபதேசம் செய்வதாகத் தத்துவங்களைச் சொல்கின்றனர். அன்று ஞானியர்கள் உணர்த்திய உண்மைகளைப் பார்ப்போம்.

தீய வினைகள் அனைத்தும் பாசத்தால் வரக்கூடியது தான்.

எதிரி என்ற நிலையில் போர் செய்யும் பொழுது தவறான உணர்வுகளில் சிக்கித் தவிக்கும் நிலைகளில் இருந்து அவர்களை மீட்க வேண்டும். அதை எவ்வாறு மீட்க வேண்டும்..? என்ற நிலையைக் கண்ணன் உபதேசித்ததாகக் கீதையிலே எழுதுகின்றனர்.

1.ஒருவன் செய்யும் தவறான உணர்வை உன் உடலுக்குள் சேர்க்கா வண்ணம் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
2.அவன் செய்யும் தவறான உணர்வை எண்ணாதபடி அவனுக்குள் உன் எண்ணத்தைச் செலுத்த வேண்டும்.

தன் சகோதரன் என்று உணர்ந்தாலும் தீய விளைவுகளிலிருந்து, அவர்கள் தீயவர்கள் என்று உணர வேண்டும்.
1.இதை உணர்த்தவே அங்கு அம்பாக எய்யச் சொன்னது
2.அதாவது மகரிஷிகளின் அருள் உணர்வுகளை அவர்களுக்குப் பாயச் செய்வது.

அவர்கள் செய்யும் தவறான உணர்வுகளைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் நமது நல்ல குணங்களை அழித்து விடுகின்றது. எதிரிகளிடம் உண்மையின் நிலைகளைத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று…
1.உணர்வின் இயக்க நிலைகளை அன்று ஞானியர்கள்
2.கண்ணன் சொன்னதாக உணர்த்தினார்கள்.

அழிவுப் பாதையிலிருந்து மீண்டு “மகரிஷிகள் வழியில்” செல்ல வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

மனிதனின் உணர்வின் எண்ணம்… தன் ஞானத்தின் உயர் ஞானத்தால் படைப்பின் பல பொருள்களை எல்லாம் இவ்வுடல் தேவைக்குச் செயலாக்கித் தன் சரீர ஜீவிதத்தை இன்று பக்குவப்படுத்திக் கொண்டுள்ளான்.

அதைப் போன்று… இவ்ஈர்ப்புப் பிடிப்பில் பூமியின் சுழற்சியுடன் சிக்குண்ட இஜ்ஜீவ உடலின் “உயிரையும்… உயிரணுக்களையும்…” இந்த உடலில் உள்ள பொழுதே இது வரை யாம் சொன்ன வழித் தொடர்பினால் உயர் காந்த மின் அலைகளை எடுத்துச் சேமிக்கும் பக்குவம் பெறல் வேண்டும்.

1.இஜ்ஜீவ காந்த சரீரம் இப்பூமிப் பிடிப்பின் சுவாசத்தை எடுத்து
2.சாதாரண வாழ்க்கையில் வளரும் நிலையிலிருந்து
3.உயர் தன்மைக்கு வீரியத்தைச் செலுத்திடல் வேண்டும்.
4.இப்படி மேல் நோக்கி ஈர்க்கப்படும் தொடர் சுழற்சியினால் இக்காற்று மண்டலப் பிடிப்பில் சிக்காமல் தப்ப முடியும்.

(உடலை விட்டுச் சாதாரண நிலையில் பிரியக்கூடிய உயிராத்மா இந்தப் புவியின் காற்று மண்டலப் பிடிப்பில் தான் சுற்ற முடியும்)

ஆக… வீரியத் தன்மை கொண்ட இவ்வுயிராத்மா மேல் நோக்கிப் பெற்ற உயிர் காந்த மின் அலையின் வளர்ச்சியினால்….
1.உயிருடன் உயிர் அணுக்களும் சேர்ந்த ஈர்ப்பின் உந்தலை
2.எண்ணத்தின் உந்தல் கொண்டு ஒளி கொண்ட ரிஷியின் ஈர்ப்பில் செலுத்தும் நிலையால்
3.ஒளியின் ஒளியாகப் பிரகாச நிலை அடைந்து
4.இந்த மனித உடலிலிருந்தே மனிதன் “பறக்கும் நிலை” பெற்றிருக்கலாம்.

ஆனால் உணர்வின் எண்ணம் இந்த உடல் வாழ்க்கையில் பூமிப் பிடிப்பில் தொடர் நிலையுடன் ஓடும் தன்மையால் சரீரம் அழுகிய நிலையில் உடலின் ஆத்மா பிரிந்ததென்றால்… உடலின் உயிரணுக்களும் வலுவிழந்த தன்மையால் பெற்ற உயிர் சரீர நிலையைக் காட்டிலும்… மீண்டும் பிறப்பு நிலையில் மனிதப் பிறப்புக்கே வந்தாலும் ஞானமும் அங்க அவயங்களின் தன்மையும் “குறுகிய நிலை தான்” பெற முடியும்.

விவசாயத்தில் இன்றெப்படி அதற்குகந்த வீரிய இரசாயண உரங்களைச் செலுத்தி மகசூலில் அதிக நிலையும் காய்கறிகளின் தன்மையை வீரியப்படுத்தி விவசாயம் வளர்ந்துள்ளது. அதைப் போன்று….
1.இச் சரீர உடலின் உயிராத்மாவிற்கு வீரியத் தன்மை தரும்
2.உயர் ஞானத்தின் செயலை மனிதன் செயலுக்குக் கொண்டு வராமல்
3.உடலின் ஆரோக்கியத்திற்கும்… உணவின் சுவைக்கும்தான்… தன் ஞானத்தைச் செலுத்தி விட்டான்.

உயிருக்கும் உயிரணுவிற்கும் தரப்படும் வீரியத் தன்மையில் உணர்வின் எண்ணத்தில் “பிற நிலையின் ஈர்ப்பு நிலையற்று… தன் செயலை வீரியப்படுத்தும் நிலையினால் தான்…” உயர்வு நிலைக்குச் செல்ல முடியும்.

உணர்வுகள் மாற்றப்பட்டு எண்ணத்தின் செயல் பூமியின் ஈர்ப்புப் பிடிப்பிற்குச் செலுத்தும் பொழுது மகான்களினால் அன்று வெளிப்படுத்திய சில உண்மை நிலைகளில் மருத்துவ நிலையும் இன்று விஞ்ஞானத்தின் விஸ்வரூபம் எடுத்து விட்டதைப் போன்று
1.அழிவு நிலைக்குச் சென்றுவிடும் பக்குவத்தின் பலனை அறிந்து
2.அதிலிருந்து மீண்டிட மகரிஷிகள் காட்டும் வழியில் செயல்படல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆலயங்களுக்குச் செல்லும் பொழுது அங்கே படர்ந்திருக்கும் தெய்வ சக்திகளை நாம் எவ்வாறு எடுப்பது…? என்று ஞானிகள் காட்டியிருந்தாலும் அவ்வழியில் நாம் செய்கிறோமா…!

நான் போனேன். தேங்காய் பழம் அர்ச்சனைத் தட்டு வாங்கினேன். சாமிக்கு அதைச் செய்தேன்.

ஏனென்றால் கோயிலுக்கு முன்னாடி கடை இருக்கின்றது. அவர்களுக்கு லாபம் வேண்டும். ஏனென்றால் சாமிக்குத் தானே கொடுக்கப் போகிறார்கள். அதை உற்றுப் பார்க்கப் போகிறார்களா…? இல்லை.

வீட்டுக்குக் குழம்புக்காகக் காய்கறி வாங்கினால் சுண்டிப் பார்ப்பார்கள். தட்டிப் பார்ப்பார்கள். தேங்காய் நன்றாக இருக்கிறதா… இல்லை அழுகலா…? என்று பார்ப்பார்கள்.

சாமிக்குப் போகும் போது தாம்பாலத் தட்டிலே வைத்துத் தேங்காயையும் இரண்டு பழத்தையும் பூவையும் பத்தியையும் வைப்பார்கள்.

பத்தியை எப்படித் தயாரிக்கின்றார்கள்…?

கரியை நசுக்கி கொஞ்சம் மெழுகைப் போட்டு அதனுடன் குச்சியிலே உருட்டியவுடன் ஒரு நல்ல வாசனை உள்ள பொருள்களுடன் கொண்டு போய் ஒரு பெட்டிக்குள் போட்டு அடைத்து வைப்பார்கள்.

இதெல்லாம் போட்ட உடனே அந்த வாசனை அதற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கும். எடுத்துக் காகிதத்தில் சுற்றிக் கொள்வார்கள். அதை எடுத்துக் கொஞ்சம் நுகர்ந்து பார்த்தோம் என்றால் நல்ல வாசனையாகத் தெரியும்.

கொஞ்சம் நேரம் வெளியில் வைத்தால் வாசனை எல்லாம் பறந்து போய்விடும். வெறும் கரிக்கட்டை மட்டும் தான் இருக்கும். கெமிக்கல் கலந்ததைச் சாமிக்காக என்று ஊது பத்தியைக் கொடுத்து விற்பார்கள்.

ஆனால் எந்தக் கோயிலிலும் ஊது பத்தி வைப்பது இல்லை.

சாமிக்கு நீ நல்ல பத்தியைக் கொடு என்று கேட்டால் சாமி பேரைச் சொல்லித் தப்பு பண்ணி இப்படிச் சம்பாதிக்கிறவர்கள் இருக்கிறார்கள்.

இதை போன்ற நிலைகளைத் தான் நாம் கற்றுக் கொண்டோம்.

1.ஆலயத்திற்கு வருவோர் அனவரும் புனிதம் பெற வேண்டும் என்று சொல்வார் யாரும் இல்லை.
2.புனிதம் பெறுவதற்குண்டான அருள் ஞானத்தை அவர்களுக்குப் போதிக்க வேண்டும் என்ற நிலை இல்லை
3.அதற்குண்டான அருள் சேவை நாம் செய்ய வேண்டும் என்ற நிலைகள் எதுவும் இல்லை.

“செய்யும் தொழிலே தெய்வம்…” என்ற நிலையை மறந்த நிலலையில் தான் உள்ளார்கள்.

உயர்ந்த குணங்கள் கொண்டு
1.பொருளை வாங்கிச் செல்வோர் நலம் பெற வேண்டும் என்று எண்ணத்தை கூட்டி
2.பொருளை வியாபாரம் பேசி அனுப்பப்படும் பொழுது அவர்களும் நலம் பெறுகின்றார்கள்.
3.நலம் பெறும் சக்தியால் அவர்கள் மகிழ்ந்திடும் நிலை வரும் பொழுது நாமும் மகிழ்ச்சி அடைவோம்.

நம்மால் மற்றவர் மகிழ்வதும் அதைக் கண்டு நாம் மகிழும் நிலைக்குத்தான் ஆலயங்களைக் கட்டினார்கள் ஞானிகள். இப்போது நாம் எதைச் சேர்க்கிறோம்…?

முருகன் கோயிலுக்கோ மற்ற கோயிலுக்கோ போகும் போது விலை பேசி இவர்கள் செய்யும் போது அங்கே ஏமாற்றம் அடைகின்றார்கள்.

பத்தாயிரம் ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து காண்ட்ராக்டில் கடைகளை எடுத்திருக்கிறோம். எங்களுக்கு வேறு வழி இல்லை. நாங்கள் இதில் தானே பணத்தை எடுக்க வேண்டும்.

கோவிலுக்கு வருகிறவர்களிடம் தான் நாங்கள் வசூல் பண்ண வேண்டும். ஆக கோவிலுக்கு வந்தவர்களிடம் ஏமாற்றுகிறார்கள். இப்படித்தான் நமது ஆலயங்களில் உள்ள திருப்பணிகள் போய் விட்டது.

ஆலயங்களில் பத்தியோ தேங்காய் பழமோ மலர்களோ அங்கு தேவையில்லை. ஆலயத் திருப்பணியாளர்கள் அங்கு அதையெல்லாம் செய்து வைத்திருப்பார்கள். அவர்கள் அதைச் செய்யட்டும்.

1.நீங்கள் எந்த ஆலயத்திற்குப் போனாலும்
2.திருப்பணிக்கு உதவும் நிலையில்
3.இந்தக் காசை உண்டியலில் வேண்டுமானால் போடுங்கள்.
4.ஏனென்றால் திருப்பணியாளர்கள் அதைச் செய்வார்கள்.

நீங்கள் பழத்தை வாங்கிச் சாமிக்கு அபிஷேகம் கொடுத்து அதைக் கண்டு மகிழ்வது அல்ல.

நீங்கள் எப்படித் தேங்காயை இரண்டாக உடைக்கின்றீர்களோ… அதைப் போல
1.உங்களுக்குள் இருக்கும் தீமையைப் பிளந்துவிட்டு
2.அருள் ஞானியின் உணர்வுகளை எண்ணி எடுக்க வேண்டும்
3.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நான் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

தெய்வத்திற்குப் பால் அபிஷேகம் தேன் அபிஷேகம் இதைப் போன்ற அபிஷேகக் காலத்தில் நீங்கள் சாமியைச் சந்திக்க நேர்ந்தால் நீங்கள் எப்படி எண்ண வேண்டும்…?

1.இந்த பாலைப் போன்ற மணம் நாங்கள் பெற வேண்டும்.
2.தேனைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் பெற வேண்டும்.
3.சந்தனத்தைப் போன்ற நறுமணம் நாங்கள் பெற வேண்டும்

கனி அபிஷேகம் செய்கிறார்கள் என்றால் கனியைப் போன்று சொல்லிலே இனிமையும் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்று இதை நுகர்ந்து சுவாசிக்க வேண்டும்.

அங்கே அபிஷேகம் தெய்வத்திற்கு நடக்கும் பொழுது அதை எண்ணி இப்படி நுகர்ந்தீர்கள் என்றால் உங்கள் (புருவ மத்தியிலிருக்கும்) உயிரான ஈசனுக்கு அந்த நல்ல உணர்வுகள் அனைத்தும் அபிஷேகம் ஆகின்றது.

அப்பொழுது
1.ஈசனுக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது.
2.அந்த உணர்ச்சிகள் உமிழ் நீராகி உடலுக்குள் செல்லும் பொழுது
3.உடலான சிவனுக்கு அமுதாகின்றது.
4.உங்கள் உள்ளமும் உடலும் களிப்படைகின்றது.

அந்த மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணி எடுக்கச் செய்வதற்குத்தான் ஆலயங்கள்.

கண்ணன் தேரின் சக்கரத்தை அழுத்தினான் என்றால் உட்பொருள் என்ன…?

 

அர்ச்சுனன் சகலகலா வல்லவன் என்று காட்டுகின்றார்கள். சகல சக்தியான அந்த வல்லமை பெற்ற நிலைகள் நம் எல்லோருக்கும் உண்டு என்பாதை நினைவுபடுத்திக் கண்ணின் நினைவு கொண்டு நாம் செயல்படுத்த வேண்டும்.

ஒருவன் தீமை செய்கிறான் என்றால் உடனே ஈஸ்வரா…! என்று இங்கே புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணத்தைச் செலுத்தி அங்கே தாக்க வருபவர் உள்ளத்திற்குள் அதைப் பாய்ச்ச வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வின் தன்மையைத் தன் புலனறிவால் எடுத்து
1.தீமை செய்ய வேண்டும் என்று எவன் எய்ய விரும்புகின்றானோ
2.அவனுக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பாய்ச்சி
3.என்னுடன் நேசமாக வரும் எண்ணங்கள் அங்கே வளர வேண்டும் என்று
4.இந்த அம்பை நம்மை எய்யச் சொன்னார்கள்.

அதாவது அங்கிருக்கும் தீய அலையின் தன்மையை வீழ்த்தச் சொன்னார்கள் ஞானிகள். ஆனால் ஆளையே வீழ்த்தச் சொன்னார் என்றும் அது தான் வீரம்… வல்லமை…! என்று இங்கே காட்டுகின்றார்.

ஒருவன் நமக்குக் கெட்டது செய்கிறான் என்றால் பதிலுக்கு அவனை அழிக்க வேண்டும் என்று தான் பெரும் பகுதி எண்ணுகின்றோம்.

ஆனால் அதே சமயத்தில் ஈஸ்வரா அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்து
1.அறியாத நிலையில் செயல்படுவதிலிருந்து அவன் விடுபட வேண்டும்
2.நல்லது செய்யக்கூடிய எண்ணங்கள் அவனுக்குள் உதயமாக வேண்டும் என்ற இந்த அம்பை எய்ய வேண்டும்.

இது மனிதனின் தலையாயக் கடமை…!

ஏனென்றால் மனிதன் உருவாக்கும் நிலைகள் பெற்றவன்… பிரம்மாவாகச் சிருஷ்டிக்கும் நிலைகள் பெற்றவன். ஒளியின் சிகரமாகச் செல்லக்கூடியவன். இதை அனுபவத்தில் கொண்டு வருவதற்குத் தான் கீதா உபதேசத்தின் நிலைகளைக் காட்டினார்கள்.

எந்தெந்த உணர்வின் தன்மை தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வுகளை நினைவு கொண்டாயோ அந்த உணர்வின் தன்மை கொண்டு
1.சகலத்தையும் உருவாக்கும் ஆற்றலாக இந்த உடலை உருவாக்கினேன்.
2.அனைத்திலும் நான் கலந்துள்ளேன்
3.எதை எடுத்தாலும் எதை நினைத்தாலும் நான் அதிலே கலந்தே வந்தவன்.
4.நீ எதை நினைக்கிறாயோ அதை நான் வழி நடத்திச் செல்கின்றேன் என்று கண்ணன் சொல்வதாக…
5.அதாவது “நம் கண்கள்…!” சொல்வதாகக் கீதையில் அவ்வளவு தெளிவான நிலைகளைத் தத்துவமாகக் கொடுத்துள்ளார்கள்.

இதை நாம் உணர்ந்து கொண்டு ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்ய பழகிக் கொள்ள வேண்டும்… தயவு செய்து அலட்சியப்படுத்தி விடாதீர்கள். ஒவ்வொரு நொடிக்கும் அதை எடுத்துப் பழகுங்கள்.

1.எப்பொழுது ஒருவர் நமக்குத் துன்பம் ஏற்படுத்தும் நிலைகள் ஏற்படுத்துகின்றாரோ
2.அந்தத் துன்பம் நமக்குள் வந்த பின் அவனைத் துன்ப்படுத்த வேண்டும்… அழிக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ
3.அது தான் ஓ…ம் நமசிவாய சிவாய நம ஓ…ம்.
(துன்பம் ஏற்படுத்தியது நமக்குள் சிவமாகி ஓ…ம் நமசிவாய… நம்மிடமிருந்து அதுவே அடுத்தவரைத் துன்ப்பபடுத்தும் சக்தியாக வெளி வருகிறது சிவாய நம ஓ…ம்)

எந்தக் குணத்தை எண்ணுகின்றேனோ அது எனக்குள் ஜீவன் ஆகி ஓ…ம் என்று பிரணவத்தின் சக்தியாக வளர்கின்றது. அந்தச் சக்தி என் உடலுக்குள் சேருகின்றது. அது தான் ஓ…ம் நமசிவாய சிவாய நம ஓ…ம். நான் எதை எண்ணினாலும் அந்த உணர்வு எனக்குள் சிவமாகிறது (உடலாகிறது).

நான் ரோட்டில் நடந்து செல்லும் போது
1.ஒருவன் செய்கையைப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சி… அந்த உணர்வை எனக்குள் சேர்க்கும் பொழுது உமிழ் நீராகச் சேர்ந்து சிவம் (உடல்) ஆகின்றது.
2.அடுத்து ஒருவன் தவறு செய்கின்றான்… அயோக்கியத்தனம் செய்கின்றான்… என்று பார்த்து அந்த உணர்வை எடுத்தவுடனே அதுவும் உடலாகிறது

இப்படி சதாசிவமாக நம் உடலாக ஆகிக் கொண்டே உள்ளது. வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு மூச்சையும் உடலாக ஆக்கிக் கொண்டே இருக்கின்றோம்.

கீதையில் சொன்னது போன்று நீ எதை நினைக்கின்றாயோ அதுவாக ஆகிந்றாய். நீ எதைச் சுவாசிக்கின்றாயோ அந்தச் சுவாசத்தின் வழி அதுவாகிறாய்.

எப்பொழுது தீமை உங்களுக்குள் வருகின்றதோ அப்பொழுதெல்லாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று மெய் ஒளியின் சக்தியை நமக்குள் சிவமாக ஆக்கிடல் வேண்டும்.

1.எதிரிகள் எத்தகைய நிலைகள் கொண்டு நம்மைத் துன்புறுத்துகின்றனரோ
2.தீய உணர்வுகள் நமக்குள் உணர்ச்சிகளைத் தூண்டுகிறதோ
3.எத்தகைய ஆவியின் தன்மை நமக்குள் தீமையை உருவாக்குகின்றதோ
4.அப்போதெல்லாம் ஈஸ்வரா என்று (புருவ மத்தியில்) குருக்ஷேத்திரப் போரில் நின்று
5.அந்த மகரிஷிகள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
4.எனக்குள் இருக்கக்கூடிய ஆன்மாக்கள் அனைத்தும் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும்
5.என் பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பயக்கக் கூடிய சக்தியாக வளர வேண்டும்
6.என் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும் என்ற உணர்வுகளை எடுக்க வேண்டும்.

யார் நமக்குத் தீமை செய்தாலும் மேலே இந்த உணர்வின் தன்மை அங்கே பாய்ச்சப்பட்டு அவன் அறியாமையிலிருந்து விடுபட வேண்டும் பிறருக்கு நன்மை செய்யக்கூடிய சக்தி அங்கே ஓங்கி வளர வேண்டும் என்று
1.இந்த அம்பை அங்கே பாய்ச்ச வேண்டும்
2.அர்ஜுனன் சகலகலா வல்லவன் என்று சொன்னாலும் அந்த அருள் உணர்வின் தன்மை கொண்டு
3.இந்த எண்ணத்தை அந்த ஸ்தலத்திலே நிறுத்திவிடு… குருக்ஷேத்திரப் போராக நடத்து…! என்று காட்டினார்கள்.

ஆனால் போரை நடத்த வேண்டும் என்றாலும் அங்கே என் குருநாதர் இருக்கின்றார் என் சகோதரர்கள் இருக்கிறார்கள் இவர்களை வைத்து நான் எப்படி சண்டையிடுவது…?

உன் சகோதரன் என்று இருந்தாலும் அவனை அறியாத விஷமான எண்ணங்கள் அவனையே அந்த உணர்வுகள் அழித்திடும் எண்ணமாக வருகின்றது. தீமையுடன் சேர்த்துத் தீமையை உருவாக்கும் நிலையாக வருகின்றது.

1.அவன் தீமை செய்யும் எண்ணத்தை அழிக்க நீ எடுத்துக் கொண்ட மகரிஷிகளின் சக்தியை
2.உயர்ந்த உணர்வின் அம்பாக அங்கே பாய்ச்சு… அங்கே தீமையை வீழ்த்து…! என்று சொன்னான்.

இதனுடைய ரகசியத்தை அன்று மெய் ஞானியான வியாசன் சொன்ன நிலைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

“கண்ணன் தேரின் சக்கரத்தை அழுத்தினான்…” என்று காட்டினால் அதனுடைய உட்பொருள்
1.அந்தத் தீமையான உணர்வு தனக்குள் வராதபடி அழுத்தி
2.தன் உணர்வின் எண்ண அலைகளை அங்கேயே பாய்ச்சி அந்த உணர்வை அழித்தான்
3.நல்ல உணர்வின் தன்மையை ஊட்டச் செய்தான்… இந்த அம்பைப் பாய்ச்சினான்.

இதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

வாழ்நாள் முழுதும் உடலைக் காக்க முயற்சிப்பதற்குப் பதில் தன் உயிராத்மாவைக் காக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

இன்று விஞ்ஞானத்தில் மருத்துவத்துறையிலும் மற்ற தொழிலிலும் அணுக் கதிர்கள் செயல்படுத்தக் கூடிய நிலைக்கும் ஜீவ காந்த சரீரத்தின் வளர்ச்சியில் இச்சரீர செயலுக்கும் உயிர் அணுக்களின் செயல் எப்படிச் செயல் கொள்கிறது…?

மருத்துவ விஞ்ஞானத்தின் மூலமாக… மனித உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களுக்கு… அதாவது நோயின் தன்மை அறிய உடலிலிருந்து வெளிப்படும் சிறு நீர் மலம் கபம் இவற்றையும் உதிரத்தையும் எடுத்துப் பரிசோதனைக்கு உட்படுத்த சில கால கட்டத்தில் அதிலுள்ள உயிரணுக்கள் பிரியா நிலையில் ஆராய்ந்து அதனுடைய தன்மையை அறிகின்றார்கள்.

உடலிலிருந்து வெளிப்பட்டு… “சில மணி நேரங்களுக்குள் அதைப் பரிசோதனைப்படுத்தினால் தான்…” அதிலுள்ள உயிரணுக்களின் தன்மையைக் காண முடிகின்றது.

செயலுடன் கூடிய ஜீவ ஓட்டத்தில் உயிர் கொண்ட உயிரணுக்கள்…
1.ஜீவ ஓட்டம் அற்றுப் பிரியும் பொழுது… ஈர்ப்பின் ஓட்ட நிலை இல்லாமல்
2.அந்த உயிரணு பிரிந்து காற்று மண்டலத்தில் கலந்து விடுகின்றதல்லவா…?
3.அதைப் போன்று தான் இந்த உடலை விட்டு ஆன்மா பிரிந்தாலும்
4.இஜ்ஜீவ ஓட்டப் பிடிப்பு மாறியவுடன் காற்று மண்டலத்தில்
5.உயிரும் இந்த உடல் அணுக்கள் யாவையும் சுழலும் நிலை ஏற்படுகின்றது.

இதனுடைய தொடரிலிருந்து… உடலில் ஏற்படக்கூடிய சில வகை வியாதிகளுக்கு விஞ்ஞான மருத்துவ முறையில் மின் கதிரியங்களைச் செலுத்தி…
1.வளர முடியாத சில அணுக்களை வளர்க்க…
2.அதற்குகந்த மருந்தைச் செலுத்தி… அதற்குகந்த வீரியத்தைத் தர (உயிரணு வளர)
3.கதிரியக்க முறை விஞ்ஞான மருத்துவத்தில் மனிதன் முன்னேறி இருக்கின்றான்.

தன் ஞானத்தால் இந்த உடலில் வளரும் உயிரணுக்களுக்கு அடுத்த நிலை பெறக்கூடிய நிலையை… “வீரிய மருத்துவத்திலும்… மற்ற பல செயலிலும் செயல்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய விஞ்ஞானம்…
1.தன் ஞானத்தைக் கொண்டு மனிதன் இன்று பறக்கும் நிலைக்கும்
2.எண்ணியதைச் செயலாக்கும் உயர் தெய்வ நிலைக்குச் செயலாக்கி இருக்கலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமக்கு முன் ஒரு விழுதை வைத்துக் கொண்டால் அல்லது ஒரு பச்சிலையே நசுக்கிக் கையில் வைத்துக் கொண்டால் பாம்பினங்கள் படம் எடுப்பதைத் தவிர்க்கின்றது. அதன் விஷத்தைக் கக்குவதில்லை.

இதே போல் ஒரு பச்சிலையை நசுக்கி விட்டால் அதன் மணத்தைக் கண்டவுடன் தேளினுடைய வீரிய விஷம் ஒடுங்குகிறது. வீரியச் செயல் இல்லை.

தேனீக்கள் தன் குஞ்சுகளைப் பாதுகாக்க அதனின் விஷத்தைக் கொண்டு எதிரிகளை வீழ்த்துகிறது.

மனிதன் ஒரு பச்சிலையை எடுத்து வாயால் மென்று அந்தக் கூட்டில் “பூ…” என்று ஊதினால் போதும். அந்த மணத்தால் விஷங்கள் ஒடுங்குவதனால் அந்தத் தேனீக்கள் இவனைக் கொட்டுவதில்லை.

மனிதன் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு இந்த விஷத்தை ஒடுக்கும் தன்மை வருகின்றது.

இதே போலத்தான் ஆரம்ப நிலைகளில் காட்டு விலங்குகளுடன் வாழ்ந்த மனிதன் தன் குகையில் இரவில் உறங்கப்படும் போது விஷத்தை ஒடுக்கிடும் பச்சிலைகளை அரைத்துத் தன் உடலில் பூசிக் கொள்கின்றான்.
1.தன் உடலிலிருந்து வரும் வெப்பமோ
2.உடலில் பூசிய மணங்களை வெளிப்படுத்துகிறது.

ஆதலால் இரவில் தூங்கும் போது இந்த உயிரினங்கள் தன் இரைக்காக நுகர்ந்தறிந்து செல்லும்போது இவர்கள் பக்கம் திசை திருப்பினால் இவர்கள் உடலில் உள்ள விஷத்தன்மைகள் அவைகளை இருளடையச் செய்கின்றது.

அவர்கள் படுத்திருக்கும் பக்கம் இந்த மிருகங்கள் போவதில்லை.

இவ்வாறு பச்சிலையின் பாதுகாப்பில் படுத்து மறைந்து அவர்கள் வாழ்ந்து வந்தாலும் மற்ற மிருகங்களுக்கு இரையாகாது தன்னக் காத்துக் கொண்டு (பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த) மனிதன் அவனுக்குத் தெரிந்த அறிவால் வாழ்ந்து வந்தனர்.

ஏனென்றால் பல உணவுகளை உட்கொண்டு வந்தவன் தான் மனிதன். ஆனாலும்
1,இவன் அறிவு நுகர்ந்தறிந்த பின் எதற்குப் பயன்படும்…? என்று
2.அறியும் ஞானத்தால் இவன் இப்படி இதைச் செய்கின்றான்.
3.பச்சிலைகளைத்தான் தன் உடலில் பூசிக் கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொண்டான்.

ஆனால் இவர்கள் பூசிய பச்சிலைகள் விஷத்தை ஒடுக்குவதாக இருப்பினும் கர்ப்பமாகும் பொழுது அந்தத் தாய் கருவில் ஒன்றிலிருந்து தொண்ணூறு நாள்களுக்குள் அவர்கள் நுகர்ந்த உணர்வுகள் கருவில் இருக்கும் சிசுவுக்கும் அது படர்கிறது. ஆனால்
1.இவர்கள் நுகரும் போது தாய் உடலில் இரத்த நாளங்களில் கலக்கின்றது.
2.தாய் கருவில் வளரும் சிசுவுக்கும் பச்சிலை விஷங்கள் போய்ச் சேர்ந்து
3.விஷத்தை ஒடுக்கும் அணுக்களாக விளைகின்றது.

இப்படி உடலில் விளைந்த உணர்வுகள் தான் அவன் (அகஸ்தியன்) பிறந்த பின் அவன் அருகிலே மற்ற யானையோ புலியோ பாம்போ தேளோ கொசுவோ விஷ வண்டுகளோ நெருங்குவதில்லை.

ஆனால் அதன் வீரியங்கள் குறைகின்றது. இப்படிக் விஷத்தின் வீரியத்தைக் குறைத்து வந்தவன் தான் தனக்குள் வளர்ச்சி பெற்றதனால் தன்னை அறிகின்றான்.

அவன் வானை நோக்கிக் காடுகளில் படுத்திருக்கும் போது சூரியன் இயக்கத்தைக் காணுகின்றான். ஏனென்றால் விஷத்தை ஒடுக்குவதனால் விஷத்தை ஒடுக்கும் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதும் உணர்வுகளைக் காணுகின்றான்.

சூரியனின் செயலாக்கங்கள் இவனுக்குள் பதிவாகின்றது. ஆனால் சிறு குழந்தையாக இருப்பதால் சொல்ல முடிவதில்லை. சொல்லவும் முடியாது.

குளவி ஒரு புழுவை எடுத்துத் தாக்கி அதைக் கூட்டுக்குள் வைத்து மூடி விடுகின்றது. பின் குளவியின் விஷத்தன்மைகள் புழுவின் அணுக்களுக்குள் பட்ட பின் அந்த உணர்வின் தன்மையைப் புழுவை உருவாக்கிய உயிர் தன் துடிப்பின் நிலை கொண்டு இதை இயக்கிக் கொண்டிருப்பினும் இந்தக் குளவியின் விஷத்தன்மைகள் உட்புகுந்து அந்த உணர்வின் தன்மை கொண்டு புழு குளவியாக மாறுகின்றது.

புழு குளவியான பின் வளர்ச்சி பெற்றபின் உமிழ் நீர் கூடுகின்றது. மண்ணாலே அடைக்கப்பட்ட கூட்டில் உமிழ் நீரைப் பாய்ச்சி அதைப் பிரிக்கின்றது. குளவியாக வெளி வருகின்றது.

வெளி வந்த பின் தாய் என்ன செய்ததோ அந்த உணர்வின் தன்மை கொண்டு தான் இதுவும் இயங்குகின்றது.
1.புழுவின் நிலைகளை அது மறந்து விடுகின்றது.
2.இந்த உணர்வின் தன்மை வரும் பொழுது (புழுவின் எண்ணங்களை இழந்து)
3.குளவியின் உணர்வுகளே வருகின்றது.

குளவியாக மாறிய பின் அதற்கு யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை.

இந்தக் குளவி எந்த வகையில் செயல்பட்டதோ இதைப் போன்று அந்த குளவிக்கும் உமிழ் நீர் சுரக்கின்றது. மண்ணைப் பிசைந்து கூடு கட்டுகின்றது.

அதே போன்று தான் இவனுடைய வாழ்க்கையில் நஞ்சினை வென்றிடும் உணர்வின் அணுக்கள் அகஸ்தியனுக்குள் விளைகின்றது.
1.இளம் பருவத்தில் ஒவ்வொன்றையும் அறிந்திடும் நிலையும்
2.வலுகொண்ட உணர்வும் அவனுக்குள் வருகின்றது.
3.எந்த மிருகமாக இருந்தாலும் இவனைக் கண்டு அஞ்சி ஒடுங்குகின்றது.

இதே போல தாவர இனங்களில் நீக்கிய நிலைகள் இவன் உணவாக உட்கொண்ட உணர்வின் தன்மை வரப்படும் போது தாவர இனங்கள் ஒடுங்குவதைக் காண்கின்றான். அதன் இயக்கத்தை உணர்கின்றான் தன் இளமைப் பருவத்தில்.

எப்படிக் குளவிக்கு…
1.யாரும் சொல்லிக் கொடுக்காத நிலையில் தன் இனத்தைப் பெருக்கும் நிலை வந்ததோ
2.இதே போல இந்த உணர்வின் இயக்கங்கள் வருகிறது.
3.அவன் அறியாதே சில செயல்களைச் செய்கின்றான்.

விஷத்தை ஒடுக்கும் தன்மை வரப்படும் போது
1.மற்றவர்களுக்கு விஷம் தாக்கினால் மயக்கம் வருகின்றது.
2.ஆனால் விஷச் செடியின் அருகில் அகஸ்தியன் சென்றால் மீண்டும் இவன் வீரியம் அடைகின்றான்.

விஷத்தை ஒடுக்கும் தன்மையின் வல்லமை வருவதனால் அவன் தெளிந்த மனமும் வலுவான உணர்வு கொண்டவனாக மாறுகின்றான். இப்படி அவன் ஐந்தாவது வயது வரப்படும்போது புவியின் ஈர்ப்பு தன்மையை அடைகின்றான். ஆனால் அதை அறிகின்றான்.

அதே சமயத்தில் நமது பூமி எப்படித் தனக்குத் தேவையான ஆகாரம் எடுக்கிறது…? என்பதை உற்று நோக்குகின்றான். வானுலகை இளமைப் பருவத்தில் கண்டுணர்ந்தாலும் பிரபஞ்சத்திலிருந்து நமது பூமி துருவப் பகுதி வழியாகக் கவர்வதை உணர்கின்றான்.

ஆனால் உணர்ந்தாலும் விஷத்தின் தன்மையே மேலிருந்து வருகின்றது. இந்த உணர்வின் தன்மை தாவர இனங்கள் விஷத்தின் உணர்வின் செயலால் தான் வளர்கின்றது. இருப்பினும்
1.தாவர இனங்களுக்குச் செல்வதை இவன் நேரிடையாக உட்கொள்கிறான்.
2.உணர்வினை ஒளியின் அணுக்களாக மாற்றும் திறன் பெறுகின்றான்.
3.துருவத்தை உற்று நோக்கிப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை அறிகின்றான்.

இவனுக்குள் விஷத்தின் ஆற்றல் உருவாகும் பொழுது விஷத்தின் அளவு கோலால் எப்படி விஷம் உண்டானது…? என்ற நிலையையும் “முதல் மனிதனின் உடலில் இதை உணர்கின்றான்”.

இதை வைத்துத்தான் அகண்ட அண்டம் எப்படி இருந்தது…? அதனின் நிலைகள் கொண்டு எப்படி வளர்ந்தது…? இதை இவன் துருவத்தை உற்று நோக்கும் போது தான் இந்தப் பிரபஞ்சமும் அகண்ட அண்டமும் எப்படி உருவானது…? என்ற நிலையை இவனுக்குள் கண்டறிகின்றான்.

விளைந்த உணர்வுகள் இவனின்று வெளிப்படுவதைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்கின்றது. அலைகளாக மாற்றுகின்றது. அதன் வழி கொண்டு தான்
1.அகஸ்தியனுக்குப் பின் வந்த மக்கள் அதனை அறிவாகக் அறிகின்றனர்.
2.அதனின் வளர்ச்சியாகத் தெரிகின்றனர்.
3.இருளை வெல்லும் செயல் பெற்ற முதல் மனிதன் அகஸ்தியனே.

உடலுக்குப் பின் நாம் செல்ல வேண்டியது எங்கே…?

 

நம்மைப் பாசத்துடன் ஒருவர் கவனித்துக் கொண்டிருந்தால் போதும். எனக்கு இவர்தான் உதவி செய்தார் என்று சாகப் போகும் போது எண்ணினால் போதும்.
1.அந்த ஆத்மா வேறு எங்கும் போகாது இவருடன் தொடர்பு கொண்டு இந்த உடலுக்குள் தான் வரும்.
2.வந்த பின் நோய்களைத் தான் அந்த உடலிலும் உருவாக்கும்.

எல்லோருக்கும் நல்லதைச் செய்து தர்மத்தைச் செய்தால் ஆண்டவன் எனக்குத் தருவான் என்று எண்ணி இருந்தாலும் எல்லோருடைய நிலையையும் எண்ணி எண்ணி எண்ணி வேதனைகளை எடுத்துக் கொண்டு அதனால் நோயாகி இருக்கப்படும் பொழுது யாராவது ஒருவர் எனக்கு உதவி செய்திருந்தால் போதும் அந்த உடலுக்குள் தான் செல்லும்.

அங்கே போய்க் குழந்தையாகக் கருவாக்க முடிகிறதா என்றால் இல்லை. நோயைத்தான் உருவாக்கச் செய்யும். அதீதமாக ஆசைப்பட்டு இறந்தவர்களின் ஆன்மாக்கள் தன்னாலே அடுத்த உடலுக்குள் நின்று பேசுவதையும் பார்க்கலாம்… தன் ஆசைகளை அங்கே பிரித்துக் காட்டும்.

மனிதன் மீண்டும் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்றால் இன்னொரு மனித உடலுக்குள் சென்று தான் பிறக்க முடியும்.

ஆகவே இந்த வாழ்க்கையில் எப்போது கெட்டது என்று உணர்ந்தாலும் “ஈஸ்வரா…” என்று நம் உயிரிடமே முறையிட வேண்டும்.
1.புருவ மத்தியியில் குருக்ஷேத்திரப் போராக நடத்தி
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று சுவாசித்து உள்ளே செலுத்த வேண்டும்
3.இதனுடன் கலந்து உடலின் தன்மை இணைக்கப்படும் போது ஒளியின் தன்மையாகின்றோம்.

அதற்காக வேண்டித்தான்
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்தச் சக்தியை உங்களுக்குக் கொடுக்கின்றோம்
2.உங்கள் உயிரை ஈசனாக மதித்து இந்த உணர்வின் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று சதா தியானிக்கின்றேன் (ஞானகுரு)

எனக்கு அது கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன். அதே எண்ணத்தின் உணர்வை உங்களுக்குள்ளும் பதிவு செய்கின்றேன். அந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிந்து அதை நீங்கள் படைக்க வேண்டும்… சப்தரிஷி. சப்தரிஷி… என்றால் நாதம்…!

நாம் ஒரு வாத்தியத்தை இனிமையாக வாசித்தோம் என்றால் நம் தலைகள் எப்படி அசைகின்றது…? ஆனால் அதிலே நாதத்தின் சுருதி குறைவானால் அதை உடனே நாம் வெறுக்கிறோம்.

இதைப்போல நாம் சிருஷ்டிக்கும் அந்த மகிழ்ச்சியின் நிலைகள் ஒளியின் ஈர்ப்பலைகளுக்குள் நாதங்கள் ஆனாலும் நாம் கவர்ந்து சென்று அதே அலைகளிலே நாம் நிற்கின்றோம்.

நாம் அந்த இனிமையின் நிலைகள் கொண்டு உருவாக்கக் கூடிய நிலைகள் ஏழாவது ரிஷி.
1.இந்த உடலுக்குள் நாம் எடுத்துக் கொண்ட அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நமக்குள் கெட்டதை நீக்கி நல்லதாக உருவாக்கும் நிலை “ஏழு…” அது தான் ரிஷி
2.நாம் சிருஷ்டிக்கும் தன்மை. “எட்டாவது” உணர்வு ஒளியாக மாறுகின்றது… இந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் மகிழ்ச்சி ஊட்டுகின்றது.
3.இந்த உணர்வின் சக்தி உயிருடன் சேர்க்கப்படும் போது “ஒன்பதாவது” ஒளியாக மாறுகின்றது.
4.உடல் எப்படிக் கெட்டதை நீக்குகின்றதோ.. இந்த உடலை விட்டு வெளியே சென்ற பின் இன்னொரு மாடோ ஆடோ மனிதனோ நம்மை இழுத்து விடாது… “பத்தாவது நிலை…!”

அகவே நமக்குள் படைக்க வேண்டியது எது…? கொடுப்பதை நமது உயிர் படைத்துக் கொடுக்கின்றான்…! மகரிஷிகள் சக்தியை ஒவ்வொரு நொடியிலும் நமக்குள் சேர்த்து உடலுக்குள் அருள் உணர்வுகளைப் பொங்கச் செய்ய வேண்டும்.

நம் உடல் விஷத்தை எப்படி மலமாக மாற்றுகிறதோ அது போன்று உயிராத்மா வெளியே வந்தபின் எந்த உடலும் (எந்த விஷமும்) நம்மை இழுத்து விடக் கூடாது… கவர்ந்து விடக்கூடாது.

நாம் செல்ல வேண்டியது எங்கே…?
1.நாம் எந்த மகரிஷியின் தொடர்பைப் பெற்றோமோ… அவருடைய ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்று
2.அவர் படைத்த உணர்வின் சத்தாக நமக்கு உடலாக மாற்றிக் கொள்கின்றோம்
3.அது தான் நிலையான சரீரமாகிறது.

அவர்கள் படைத்த உணர்வின் சத்தை நமக்குள் உணவாக மாற்றிக் கொள்கிறோம். அங்கே நிலையான ஒளிச் சரீரமாகி விண்ணிலே எத்தகைய விஷத்தின் ஆற்றல் வந்தாலும் நாம் அதனின் உணர்வை ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

அழிப்பதற்காகப் பயன்படுத்தும் சக்தியை… ஆக்கபூர்வமான செயலுக்காகப் பயன்படுத்த வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

“பல நூறு டன் எடையுள்ள மணலிலிருந்து” விஞ்ஞானத்தின் செயலில் ஒரு அவுன்ஸ்க்கும் குறைவான சில இரசாயன சக்தியை (URANIUM) மனிதன் பிரித்தெடுத்து இவ்வுலகத்தையே அழிக்கவல்ல வெடி குண்டுகளைச் செய்விக்கின்றான்.

மனிதனின் எண்ணமும் செயலும் எப்படித் தன் ஞானத்தைச் செயல்படுத்திச் சில சக்தி வாய்ந்த அழிவு நிலைக்கு உட்படுத்தும் குண்டுகளை உருவாக்குவது போல்
1.எண்ணத்தின் உணர்வை மாற்றியமைக்கும் உயர் ஞானத்தைக் கொண்டு
2.இவ் உடலின் ஒவ்வொரு அணுவையுமே வீரியத் தன்மைக்கு
3.சம உணர்வு கொண்டு பரிமளிக்கும் செயலினால்
4.மனிதன் தெய்வ நிலை கொண்டு வளர் சக்திகளை உருவாக்க முடியும்.

விஞ்ஞானத்தில் மனிதக் கருவையே உருவாக்கக் கூடிய ஞானமும் செல்கின்றது. தாய் தந்தை இல்லாமல் அமிலச் சேர்க்கையின் உயிரணு வளர்ச்சி கொண்டு… ஜெட பிம்ப வளர்ப்பிற்கு விஞ்ஞானம் செல்கின்றது.

ஆனால் செயலின் பலன் எதிர் நிலையான உணர்விற்குச் சென்று விடும். அப்படி உருவாகும் சிசுக்கள் மனிதனைக் காட்டிலும் வீரிய விஷச் சக்தி கொண்ட பிம்பமாய்த்தான் செயல்படுத்த முடியும்.

இந்தப் பூமியில்… விஞ்ஞானத்தில் தன் ஞானத்தை இக்கலி கடைசியில் இன்றெப்படி மனிதன் செயல்படுத்துகின்றானோ அதற்கு மேல் வீரிய சக்தி கொண்டு வியாழனில் இருந்த மனிதர்கள் அன்று செய்தார்கள்,

1.நம் பூமியில் இப்பொழுது வளர்ந்துள்ள விஞ்ஞானத்தைக் காட்டிலும்
2.பல மடங்கு வீரியத் தன்மை கொண்ட விஞ்ஞானச் செயல்
3.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செயல்பட்டதுண்டு.

அந்தச் செயலின் தொடர் இன்றளவும் சில நிலைகளில் தொடர் கொண்டுதான் உள்ளது.

தன் ஞானத்தின் உயர் ரிஷி சக்தியை… மனித உணர்வு வளரும் செயலுக்கு
1.தியானத்தில் சம உணர்வு கொண்டு எடுக்கப்படும் உயர் காந்த மின் சக்தியைக் கொண்டு
2.இஜ்ஜீவகாந்த சரீரத்தின் உயிர் ஆத்மா பெறும் உயர்வுதான்
3.ஒளியின் ஒளியாய் எதையும் வளர்க்கும் பிம்பச் செயலுக்குச் செயல்படுத்த முடியும்.

பரப்பிரம்மமாய்.. பிம்பமாய்… பரப்பிரம்மமாகச் செயல் தொடர் பெற.. எண்ணத்தின் உணர்வைக் கொண்டு இஜ்ஜீவகாந்தம் உயர் காந்த மின் ஒளியாய் ஒளி பெறும் தன்மை கொண்டுதான் ரிஷி சக்திக்குச் செல்ல முடியும்.

எண்ணத்தின் உணர்வை இச்சரீர கர்ம காரியத்தில் பொருளீட்டி… உண்டு… உறங்கி… கழித்து… வாழும் வாழ்க்கையில் இச்சரீர ஆசையை வைக்காமல்… எண்ணத்தின் உணர்வை உயர் ஞானத்தில் உய்யும் வழியை உணர்ந்தே… ஒளி பெறல் வேண்டும்.

வாழ்க்கையில் எவ் அலை சுவையை இவ்வெண்ண உணர்வு பெற்றதோ அதன் உந்தலுக்குகந்த இச்சையில்தான் நாம் வாழுகின்றோம்… வாழவும் முடியும்.

ஆனால் மனிதனின் உயர்ந்த தத்துவ சக்தியைக் கொண்டு ஞான ஒளி பெறும் வளர்ச்சிதானப்பா உயர்ந்த வளர்ச்சி…!

1.எல்லா உயிரனங்களிலும் உயர்ந்த நிலை கொண்ட இம்மனிதக் கரு வளர
2.சமமான எண்ணம் கொண்ட சாந்த உணர்வுடன் கூடிய ஜெபத்தால் பெறும்
3.உயர் காந்த மின் சக்தியின் அணுக்களைக் கொண்டு
4.இவ்வுயிர் அணுக்கள் ஒவ்வொன்றையுமே உயர்வு நிலை பெறச் செய்ய முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.விஞ்ஞான அறிவின் தன்மை கொண்டு
2.உடலுக்குள் இருக்கும் நிலைகளை ஊடுருவி
3.தசைகளைத் தாண்டி எலும்புகளைப் படமாக்கி
4.எலும்பிற்குள் உறைந்து இருக்கும் சளியைக் காணுகின்றார்கள்.

எலும்பிற்குள் இருக்கும் சளியின் விளைவால் ஏற்படும் அணுக்களின் சிதைவின் தன்மையும் அது எலும்புகளை எப்படி அரிக்கின்றது (டி.பி. நோய்) என்பதையும் எக்ஸ்ரே மூலம் மருத்துவர்கள் காணுகின்றனர்.

அதைப் போல உடலின் உறுப்புகளில் உள்ள பாகங்களில் இந்தத் தசை மண்டலங்களில் விஷத்தின் ஆற்றல் அளவு கோல் அதிகமாகி விட்டால் அந்த உறுப்புகளில் வீக்கமோ அல்லது சீராக இயங்க முடியாமல் ஏதாவது அடைப்பாகிவிடும்.

இவ்வாறு அந்தந்த உறுப்புகள் செயலற்றதாக ஆகின்றது என்பதனை விஞ்ஞானிகள் எக்ஸ்ரே மூலம் கண்டறிகின்றனர். கருவி கொண்டு அவன் அறிகின்றான்.

எக்ஸ்ரே என்றால்
1.உணர்வின் ஒளிகளை ஒன்றிலே (ஊடுருவிப்) பாய்ச்சி
2.அதன் உணர்வின் அதிர்வுகளை வெளியாக்கி
3.அதைப் படமாக்கி எடுத்துக் கொள்வது

எக்ஸ்ரே என்று அதற்குக் காரணப் பெயர் வைக்கின்றனர்.

உடலுக்குள் இருக்கும் நிலையை இந்த விஞ்ஞான அறிவால் நம்மை அறிந்திடச் செய்கின்றனர். இதைக் கண்டறிந்தது மனிதன் தான்.

ஆக உடலிலுள்ள உணர்வைக் கூர்மையான நிலையில் கண்டறிந்து எக்ஸ்ரே என்று படமாக எடுக்கின்றார்கள்.

அதைப் போன்று நாம் எத்தனையோ பேரைப் பார்க்கின்றோம். அவர்களுடன் பழகுகின்றோம். அவர்களை அறிந்து கொள்கின்றோம். அவ்வாறு அவர்கள் உணர்வுகள்
1.நமக்குள் பதிவான உணர்வுகளில்
2.மீண்டும் மீண்டும் பதிவானதை நினைவுக்குக் கொண்டு வந்தால்
3.எந்த மனிதனின் உணர்வோ அது நுகரப்படும் போது
4.இதுவும் எக்ஸ்ரே தான்.

அடுத்தவர்களைப் பற்றி ஊடுருவி அதன் வழி அவர்கள் உணர்வலைகளை நாம் நுகரப்படும்போது அந்த (அவர்) உணர்வுகள் அதன் வழிப்படி நமக்குள் இயக்குகின்றது.

டி.பி. நோய் வந்தது என்றால் எலும்புகளையோ தசைகளையோ கரைக்கும் அணுக்களுக்கு அதற்கு மாற்றான அணுக்களை நம் உடலிலே உருவாக்குகின்றார்கள்.

மற்ற மருந்தின் துணை கொண்டு அதாவது இவன் எடுக்கும் உணர்வுகளை உள் செலுத்திப் புது விதமான அணுக்களை எலும்புக்குள் உருவாக்குகின்றார்கள். நோயை நீக்குகிறார்கள்.

இது விஞ்ஞான அறிவால் கண்டறிந்து செயல்படுத்தப்படுகிறது. ஆனாலும் அந்த மருந்தின் அளவுகோல் உடலுக்குள் அதிகமாகும் பொழுது
1.நம் உயிரான்மாவில் நஞ்சு அதிகமாகின்றது.
2,அதற்குத்தக்கத்தான் அடுத்த உடல் நாம் பெறுவோம்.
3.விஞ்ஞான அறிவு கொண்டு உடலைக் காக்கலாம்.
4.உயிரான்மாவை ஒளியாக ஆக்க முடியாது.

மெய் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் வழிப்படி அவர்கள் தங்கள் கண்ணின் புலனறிவை விண்ணிலே செலுத்தி அந்த ஆற்றல்களைத் தங்கள் உடல்களிலே வளர்த்து வாழ்க்கையில் வந்த நஞ்சை வென்று உணர்வுகளை உயிருடன் ஒன்றச் செய்து ஒளியின் சுடராக மாற்றினார்கள்.

அந்த மெய்ஞானிகள் விளைய வைத்த உணர்வை நாம் நுகர்ந்து அதை நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அப்பொழுது அந்த மெய் ஞானிகளின் உணர்வுகள் எக்ஸ்ரே போன்று நம் உடலுக்குள் ஊடுருவிப் பாய்ந்து உறுப்புகளில் உள்ள தீமையான அணுக்களை அடக்கி அருள் ஒளியின் அணுக்களாக உருவாக்கும்.

தீமைகளையும் அகற்றுகின்றோம். நோயையும் அகற்றுகின்றோம். அதே சமயத்தில் ஞானிகள் உணர்வுகள் நம் உடலுக்குள் ஒளியான அணுக்களாக விளையத் தொடங்கும்.

விளைந்தது உயிரான்மாவில் சேர்ந்து ஒளியின் சுடராகும். இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது அவர்கள் இருக்கும் எல்லையை நாம் அடையலாம். ஒளியின் சரீரம் பெற முடியும்.

உடல் ஆசைக்காக வேண்டி… நாட்டாசைக்காக வேண்டி… உலகையே அழிக்கும் தன்மையாக இன்று வந்து விட்டது

 

இன்று விஞ்ஞான உலகில் ஏற்படுத்தப்பட்ட கொதிகலன்கள் (விஷக் கதிரியக்கங்கள்) சூரியனால் மாற்ற முடியாது. அது எதை எடுத்ததோ சூரியன் அதன் வளர்ச்சியில் அதைத் தான் மாற்றும்.
1.நம் சூரியன் விஷத்தை முறிக்கும் ஆற்றல் முதலிலே பெற்றிருந்தது
2.ஆனால் இன்று மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கையான கதிரியக்கங்கள் சூரியனுக்குள் கலக்கப்பட்டு
3.அதை மாற்ற முடியாதபடி அந்த விஷத்தையே மீண்டும் உமிழ்த்தும் தன்மை அதிகரித்து விட்டது.

விஷத்தின் தன்மையை நல்லதாக மாற்றும் நிலைகள் அங்கே மாறுபடும்போது விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட கருவிகள் (சூரியனை மையமாக வைத்து வேலை செய்யும் சாதனங்கள்) நாளடைவில் செயலிழந்துவிடும்.
1.இந்தச் சூரியனும் செயலிழந்துவிடும்
2.சூரியனால் ஈர்க்கப்பட்ட மற்ற கோள்களும் அது திசை மாறிவிடும்.

இத்தகைய விஷத்தன்மை கொண்ட உணர்வுகள் வெளிப்படும் பொழுது நமது பூமி அதைக் கவர்ந்தாலோ நம் பூமியிலிருக்கும் மனித இனங்களையும் மாற்றிவிடும்.

இவ்வாறு விஷத் தன்மையாக மாற்றிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுத்தே ஆக வேண்டும்.

காரணம் துருவ நட்சத்திரம் அகண்ட அண்டத்திலிருந்து வரும் எத்தகைய விஷத் தன்மையையும் ஒளியாக மாற்றும் ஆற்றல் கொண்டது.

உதாரணமாக பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சிப் பலவிதமான ஜந்துக்களை விழுங்கி அதனுடைய விஷமும் இதனுடைய விஷமும் ஒன்றாகும் போது பாம்பின் உடலில் ஒளி கொண்ட நாகரத்தினமாக மிளிரச் செய்கின்றது.

இதைப் போன்றுதான் எத்தனையோ வகையான விஷத்தன்மை கொண்ட உணர்வுகள் நமக்குள் இருப்பினும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துச் சேர்த்துச் சேர்த்து
2.நம் உடலுக்குள் அந்த உணர்வின் அறிவாக மாற்றி அறிவின் ஒளியாக மாற்ற வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உயிரைப் போன்றே உணர்வுகளை ஒளியாக மாற்றி எத்தகைய விஷமும் நமக்குள் வராதபடி அதைப் பேரருளாக மாற்றி அந்த ஏகாந்த நிலை என்ற முழுமை அடைய முடியும்.

மின்னல்கள் கடலிலே தாக்கப்பட்டாலும் அது மணலாக மாறுவதை அதற்குள் இருப்பதை விஞ்ஞானிகள் வடிகட்டி கதிரியக்கப் பொறிகளாக மாற்றிப் பல விதமான அணு ஆயுதங்களைத் தயார் செய்துவிட்டார்கள்.
1.உடல் ஆசைக்காக வேண்டி… நாட்டாசைக்காக வேண்டி… உலகையே அழிக்கும் தன்மையாக வந்து விட்டது
2.அதிலே வெளி வந்த கதிரியக்கங்கள் இந்த உலகம் முழுவதற்கும் பரவி விட்டது.

பூமியிலிருந்து பரவும் அந்தக் கதிரியக்கங்களைச் சூரியன் கவர்ந்தாலும் அது கவர்ந்து செல்லும் பாதையில் மற்ற கோள்களும் இதைக் கவர்ந்து நமது பிரபஞ்சமே கதிரியக்கமாக மாறிக் கொண்டிருக்கின்றது.

விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட இந்த விளைவால் உலகமே இருள் சூழும் நிலைக்கு வந்துவிட்டது சிறுகச் சிறுக சூரியனும் செயலிழந்து கொண்டிருக்கின்றது… அது செயலிழக்க நம் பூமியும் செயலிழக்கும்.

பூமியில் வாழும் மனிதனும் அசுர உணர்வு கொண்டு ஒருவரை ஒருவரை ஒருவர் கொன்று தின்னும் நிலை வருகின்றது.

சூரியன் உருவாக்கும் அந்தப் பாதரசமே (வெயில்) கருகிய விஷத் தன்மையாக மாறும் தன்மை சூரியனுக்குள்ளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. சூரியன் செயலிழக்கும் தன்மையினால் சூரியனால் உருவாக்கப்பட்ட இந்தப் பிரபஞ்சமும் அதே நிலை அடைகின்றது.

நான் (ஞானகுரு) வெறும் சொல்லாகச் சொல்லவில்லை.

இந்த உணர்வைப் பதிவாக்கி நீங்கள் நினைவின் தன்மை கொண்டு வந்தால் சூரியனின் இயக்கத்தை நீங்கள் தெளிவாக உணர முடியும். சூரியனின் தொடர் கொண்டு இந்தப் பிரபஞ்சம் இயங்குவதையும் உணர முடியும்.

ஆனால் இதிலிருந்து தப்பிய துருவ நட்சத்திரம் என்றும் அழிவதில்லை. எத்தகைய நஞ்சாக இருந்தாலும் அதை மாற்றி விடுகின்றது.

நம் பூமியின் துருவத்திற்கு நேராக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எப்போதும் நீங்கள் பெறலாம்.
1.அதைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தத்தான் அடிக்கடி வலியுறுத்தி
2.நினைவாற்றலை உங்களுக்குள் கொண்டு வரச்செய்து அந்த நினைவைக் கூட்டி
3.நஞ்சை வென்று உணர்வினை ஒளியாக மாற்றும் திறனாக உங்களைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்.

விஞ்ஞான அறிவு ஒரு பக்கம் விஷத்தைப் பரப்பினாலும் அதிலிருந்து மீட்டிக் கொள்ளும் அரும் பெரும் சக்தியாக நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இங்கே பதிவாக்கும் உணர்வுகளை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். கூட்டுத் தியானங்கள் இருங்கள். கணவனும் மனைவியும் சேர்ந்து இதைச் செயல்படுத்துங்கள்.

நம் எண்ணத்தைச் (மனதை) சமப்படுத்தும் முறை – ஈஸ்வரபட்டர்

 

எப்படி ஒவ்வொரு கோளத்தின் சந்திப்பினால் கால மாற்றங்கள் இப்பூமியின் பருவ காலம் பெறுகின்றதோ அதைப் போன்று இச்சரீரமும் பெறுகின்றது.

பூமியின் பருவ காலத்தில் சில அதிர்வு நிலைகளால் கடல் பொங்குவது… சூறாவளி… காற்று வீசுவது… எரிமலை வெடிப்பது… பூகம்பம் வருவது…! இத்தன்மை போன்று மனித உடலின் தன்மைக்கும் ஏற்படுகின்றது.

கால மாற்றத்தில் பிற மண்டலங்களின் சந்திப்பில் பூமி ஈர்க்கும் அலையின் தன்மையில் அதிர்வு ஏற்படுகின்றது. அதைப் போன்றே….
1.இம்மனித ஜீவ சரீரத்தில் எண்ணத்தின் உணர்வுகள் ஏற்காத் தன்மை மோதும் பொழுது
2.அதிர்வு நிலைகளை இச்சரீர இயக்கமும் பெறுகின்றது.

இந்தப் பூமியில் எந்த நிலை கொண்டெல்லாம் கால மாற்ற சீதொஷ்ண நிலை மாறுபடுகின்றதோ அதற்கொப்ப இந்த உடல் பிம்பச் செயல்களில் “உணர்வுகள் மாறும் போது..”
1.இச்சரீர ஆரோக்கியத் தன்மையிலும்
2.எண்ணத்தைச் செயல்படுத்தும் ஞான வழியிலும்… பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

உடனே மனிதன் நான் எண்ணியது ஓன்று… நடப்பது ஒன்றாக உள்ளது… “எல்லாம் விதியின் செயல்…!” என்று எண்ணி விடுகின்றான்.

எண்ணத்தின் வாழ்க்கைத் தொடரில் செயல் கொள்ளும் ஞானம்… ஓர் மாற்று நிலைக்குச் செயல்படும் பொழுது… உணர்வின் உந்தலால் உடலையே பாதிக்காத தன்மைக்குத் தன் ஞானத்தைக் கூட்டி… மதியைக் கூட்டி வென்று
1.சம உணர்வின் சாந்த குணமுடன்
2.இச்சரீர இயக்கத்தின் அணு சக்திகளை வீரியமாக்கி
3.உயிராத்மாவை ஒளிரச் செய்தல் வேண்டும்

மணலை அதி உஷ்ணமாக்கிக் கண்ணாடி செய்து தன் பிம்பத்தையும் எதிர்படும் எதனையும் அக்கண்ணாடியில நாம் பார்க்க முடிகின்றது.

அதைப் போன்று இந்த உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் சம உணர்வுபடுத்தும் செயலில் விண்ணிலிருந்து வரும் மின் காந்த ஒளி அலையை எடுத்து உணர்வின் எண்ணத்தால் வீரிய சக்தியாக உடலிலே வளர்த்திட வேண்டும்.

1.அத்தகைய உயிராத்மாவின் சமைப்பினால்…
2.மனிதன் “ஞான திருஷ்டி” என்ற சகல சித்து நிலையையும் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ நிலைகளைப் பத்திரிக்கை வாயிலாகவும் தொலைக்காட்சி வழியாகவும் தினசரி பார்க்கின்றோம்.

தொலைக்காட்சி வழியாகப் பார்த்தோம் என்றால் உலகில் நடக்கின்ற அசம்பாவிதங்களை எல்லாம் “ஆ…” என்று பார்க்கின்றோம். கண்கள் அப்படியே அதை ஈர்த்து நமக்குள் ஆழமாகப் பதிவாக்குகின்றது.

1.டி.வி.யில் அந்தக் காட்சிகளைப் பார்க்கும் பொழுது
2.நம் நினைவு முழுவதும் அங்கே அந்த இடத்திற்கே போகின்றது.
2.அங்கே பரவியிருக்கும் நினைவையே நாம் சுவாசிக்க நேர்கின்றது.

அவ்வாறு நாம் உற்றுப் பார்த்துப் பதிவு செய்த உணர்வின் தன்மை கொண்டு அவர்கள் செய்த (அசம்பாவித) உணர்வெல்லாம் இந்த விஞ்ஞான அறிவால் நமக்குள் வந்து விடுகின்றது.

அதே சமயத்தில் ஒரு நாட்டினை அழிக்க…
1.தொலைக்காட்சிப் பெட்டி மூலமாக ஒலி அதிர்வுகளைக் கொடுத்து நமக்குள் பதிவாக்கி
2.நம் புத்தியைச் செயலிழக்கச் செய்வதற்கும் விஞ்ஞான அறிவு இன்று சென்றுவிட்டது.

இப்படி ஒலிபரப்பும் நிலைகளில் நாம் டி.வியைப் பார்க்கப்பப்படும் பொழுது நம் மனித எண்ணங்களையே சீரழிக்கும் நிலைகள் வருகின்றது.

விஞ்ஞான அறிவால் கேட்ட உணர்வுகள்
1.நாம் வீட்டிலிருந்தபடியே தீமையின் உணர்வை நமக்குள் வளர்ப்பதும்
2.பகைமை உணர்வுகள் ஊட்டுவதும்… ஒருவனை எப்படி மாற்றுவது என்ற நிலைகளும்வருகின்றது.

டி.வி.யில் காண்பித்த நிலைகளையும் மற்றவைகளையும் உற்றுப் பார்க்கும் போது (சினிமாவில்) காட்டும் காட்சிகளில்
1.கொலை செய்வது எப்படி?
2.கொலையிலிருந்து தப்புவது எப்படி? என்ற நிலையெல்லாம் வந்த பின்
3.இந்த உணர்வுகளே நமக்குள் பதிவாகின்றது.

தன் வாழ்க்கையில் ஒரு சிரமம் வந்தால் அது மாதிரி நாம் ஏன் இதைச் செய்யக்கூடாது என்ற உணர்வுகள் தூண்டுகிறது. அதன் வழியிலே தான் தவறுகள் அதிகமாக இன்று உலகம் முழுவதும் வளர்கின்றது.

ஆக மொத்தம் விஞ்ஞான அறிவால் அஞ்ஞான வாழ்க்கையே நாம் வாழுகின்றோம்.

மெய் ஞானத்தின் நிலைகளில் பக்தி என்ற நிலை வந்தாலும் அதிலேயும் குறைகளைக் கூறி நல்ல நிலைகள் எடுக்க முடியாதபடி ஆலயங்களையும் அசுத்தப்படுத்துகின்றோம்.

இதைப்போன்ற நிலைகளிலெல்லாம் இருந்து நாம் விடுபட வேண்டும். அன்று அகஸ்தியன் கண்ட பேருண்மையின் உணர்வின் வழிப்படி
1.நம் வாழ்க்கையில் விழித்திருத்தல் வேண்டும்.
2.ஒவ்வொரு தீமைகளிலிருந்தும் பகைமையிலிருந்தும் நாம் மாறுபடுதல் வேண்டும்.

எப்பொழுதெல்லாம் தீமைகளைக் காண்கின்றோமோ “ஓ..ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நாங்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் அதிகமாகச் செலுத்திப் பழக வேண்டும்.

அதை நீங்கள் பெறும் தகுதிக்காகத்தான் மணிக்கணக்கில் உங்களிடம் பேசுகின்றேன். உபதேச வழியாகப் பதிவாக்குகின்றேன். நினைவு கொள்ளுங்கள்.

மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் வரும் தீமையான உணர்வுகளை
1.உங்களால் மாற்றி அமைக்க முடியும்.
2.பகைமை தோற்றுவிக்கும் உணர்வை உங்களால் அடக்க முடியும்.
3.பகைமையற்ற உணர்வுகளை வளர்க்க முடியும்.
4.உடலை விட்டுச் சென்ற பின் அருள் ஒளியின் சுடராக என்றும் பிறவியில்லா நிலையும் அடைய முடியும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனும் மனைவியும் இதைப் போன்று மகரிஷிகள் காண்பித்த அருள் வழியில் செயல்படுத்துங்கள்.

உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைவோம்… என்றுமே ஏகாந்தமாக வாழ்வோம்

 

தீமையான உணர்வுகள் நமக்குள் புகுந்தால் அதை மடியச் செய்யும் சக்தியாகத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும். அதை நீங்கள் எளிதில் பெறலாம்.

நான் (ஞானகுரு) சிரமப்பட்டேன்… பார்த்தேன்… குருநாதர் அருளால் எல்லாவற்றையும் தெரிய முடிந்தது.
1.தீமையான உணர்வுகள் எனக்குள் எப்படிச் செயல்படுகிறது…? என்று முதலில் காட்டினார்.
2.பின் அந்தத் தீமையை நீக்கும் வழியையும் காட்டினார்.

அதைப் போன்றுதான் வாழ்க்கையில் நீங்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உங்கள் உடலுக்குள் எவ்வாறு இயங்குகிறது…? என்பதை உணர முடியும்.

தீமை என்று உணர்ந்தவுடனே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து உங்கள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்து அதை மாற்றிக் கொள்ளும் சக்தி உங்களுக்கு வர வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் பெறக் கூடிய தகுதிக்குத் தான் இதை ஆழமாகப் பதிவு செய்கிறேன்.

உதாரணமாக…
1.செல்ஃபோன்களில் எதை எதையெல்லாம் பதிவு செய்கின்றோமோ அதை மீண்டும் திரும்பப் பார்க்க முடிகின்றது….
2.பதிவானதை இன்னொருவருக்குச் செலுத்தவும் முடிகின்றது.

இதைப் போன்றுதான் கேட்ட… பார்த்த உணர்வுகள் எல்லாமே நம் உடலில் எலும்புக்குள் உள்ள ஊனுக்குள் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

தீமை என்று பதிவானால் அந்த உணர்வு தனித்து இயங்காதபடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதற்கு அருகிலேயே இதைப் பதிவாக்க வேண்டும்.

காரணம்… துருவ நட்சத்திரத்தின் சக்தி அதைக் காட்டிலும் வலுவானது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எண்ணி எடுத்துக் கொண்ட பின் அடுத்து
1.அவன் நல்லவனாக வேண்டும் நல்லது செய்ய வேண்டும்
2.நல் வழி வர வேண்டும்… உலகம் நலம் பெற வேண்டும் என்று
3.நாம் இதைப் பதிவாக்கிக் கொண்டால் அதைச் சுற்றி “பெரிய வட்டமாக…” மாறிவிடுகின்றது.

ஒரு குழம்பை வைக்கிறோம் என்றால் பல பொருட்களைச் சேர்க்கின்றோம். அதில் எந்தப் பொருள் அதிகமோ அதன் சுவை தான் முன்னணியில் வருகின்றது.

இதைப் போன்று அந்த அருள் ஞானிகள் உணர்வை நாம் சிந்திக்கும் உணர்வுகளுக்குள் கலந்து விட்டால்… சிந்தித்துச் செயல்படும் சக்தியாக வளரத் தொடங்கும்.

உங்கள் அனுபவத்தில் நீங்கள் இதைப் பார்க்கலாம்.

இரவில் படுத்துத் தூங்கும் பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்திலேயே உறங்கச் செல்லுங்கள்.

காலையில் எழுந்ததும்… கண் விழித்ததும் இதே நிலைகளைச் செயல்படுத்துங்கள். அதற்குப் பின் மற்ற காரியங்களைச் செயல்படுத்துங்கள்.

எந்தக் காரியத்தை ஆரம்பிக்கும் முன்பும் உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் சுருக்கமாக இப்படிச் சொல்லிக் கொண்டு வரலாம்.

1.வெளியில் செல்லும் பொழுதும்
2.தொழிலுக்குச் செல்லும் பொழுதும்
3.வீட்டிற்கு வந்தாலும் அமைதியாக இருக்கும் போதும் இதைச் செய்யலாம்
4.எந்தச் சந்தர்ப்பத்திலும் அருள் உணர்வைப் பெருக்கிக் கொண்டே வரவேண்டும்.
5.காற்று மண்டலத்தில் விஷத் தன்மைகள் நமக்குள் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.
6.பேரின்ப வாழ்க்கையாக உயிருடன் ஒன்றி ஒளியின் தன்மையாக நாம் மாறுவோம்.

மனிதனாகத் தோன்றிய பின் உயிர் என்ற நிலையில் அனைத்தையும் அறிந்திடும் உணர்வு கொண்டால் கார்த்திகேயா… அந்த வெளிச்சத்தின் உணர்வாக மதி கொண்டு நாம் செயல்படுத்த வேண்டும்.

ஆகவே ஒளி என்ற மதி கொண்டு நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும். அதைப் பெற்று உடலுக்குப்பின் பிறவியில்லா நிலையை நாம் அடைவோம்… என்றுமே ஏகாந்தமாக வாழ்வோம்.

அதிக காலம் வாழ்வதைவிட “தெய்வ நிலை பெறுவது” தான் மனிதனின் முதிர்வு நிலை – ஈஸ்வரபட்டர்

 

தாவரங்களில் அதனுடைய முதிர்வுத் தன்மையில் அத்தாவரத்தின் பலன் வெளிப்பட… பூவும் பிஞ்சும் பிடிக்கும் தருணத்தில் பால் பிடித்து அதனுடைய முதிர்வின் பலனை அந்தந்த இன வளர்ச்சிக்கொப்ப பலனை எப்படித் தருகிறது…?

இதில் தாவரத்திற்குத் தாவரம் மாறுபடுகிறது. இதில் சில மரங்கள் தன் வளர்ப்பின் பலனான காய் கனிகளை வெளிப்படுத்துவதில்லை.

ஆனால் தன்னுடைய முதிர்வின் ஈர்ப்பில் விழுதுகளையும் ரோமம் போன்ற முதிர்வின் செயல் வெளிப்பட்டு அதனுடைய வளர்ச்சித் தன்மையின் தொடர் கொண்ட சில மரங்கள்… பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு மரமே மலையாகும் ஈர்ப்பு வளர்ச்சி முதிர்வு செயல் கொள்கின்றது.

பலன் தரத்தக்க மா… பலா… இப்படி உள்ள மரங்கள் சில நூறு ஆண்டுகளுக்குப் பலனைத் தந்த பிறகு மரமே பட்டுவிடுகின்றது. ஜீவத்தன்மையில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிலை பெற்று உடல் மாறும் வரை தன் பிறப்பின் பிறப்புத் தொடரைச் செயல்படுத்தி மடிகின்றது.

இத்தொடரில் இருந்தெல்லாம் சில மிருகங்களின் நிலையும் மனிதனின் நிலையும் மாறு கொள்கின்றன.

ஆனால் பிறப்பிலிருந்து வளர்ச்சி பெற்றுப் பிறப்பு நிலை வளர்க்கும் காலங்களுக்கு எல்லாத் தன்மையிலுமே… எப்படிப் பூ பிஞ்சில் பால் பிடித்து பலன் தருகின்றதோ… அதைப் போன்று மனித மிருக நிலையிலும் பருவ முற்றலில் பால் உணர்வு கொண்டு இரு நிலை கொண்ட சேர்க்கையில் பிறப்பின் தொடரை (கரு) வளர்க்கும் வழி நிலை பெறுகின்றதல்லவா…!

மனித உணர்வில் பருவம் பெற்று பெண் தன்மையில் கரு வளர்க்கும் வயது வரம்பு காலத்திற்குப் பிறகு இயற்கையின் கர்ப்ப கால தன்மை மாறி மாதவிடாய் நின்று மீண்டும் குழந்தைப் பருவ நிலைக்கொப்ப உடல் நிலை பெறுகின்றது.

இடைப்பட்ட தருணத்தில் கரு வளர்க்கும் காலம் ஆரம்ப வளர்ச்சி வளரும் நிலையும் முதிர்வு நிலைக்கு மீண்டும் எந்த் நிலையுமற்ற தன்மை கொண்டு சரீர இயக்கமே தான் பெற்ற அமிலக் கூறின் வளர்ச்சிக்கொப்ப முதிர்வு நிலை என்ற ஓர் நிலை பெற்ற பிறகு கரு வளர்க்கும் நிலையற்றதாக ஆகிவிடுகின்றது.

இச்செயல் நிலைக்கும் ஓர் அடுத்த நிலை உள்ளதல்லவா…?

மனிதப் பிறப்பு இறப்பில் வயது நிலையற்றுச் சரீர உணர்வில் எடுக்கும் அலை நிலைக்கொப்ப பிறப்பு இறப்பு நிகழ்கின்றன. ஆனாலும்… பிறந்த சிசுவிலிருந்து வயது முதிர்ந்த நிலை வரையிலும் எத்தருணத்திலும் இறப்பு நிலை ஏற்படுகின்றது.

இத்தன்மையின் உடலை விட்டுப் பிரியும் உயிராத்மா
1.வயது வரம்பு கொண்டு முதிர்வு நிலை பெறுகின்றதா…?
2.ஆத்மாவிற்கு முதிர்வுத் தன்மை எப்படிக் கூடுகின்றது?

மாமரத்தில் பூ பிடிக்கும் தருணத்தில் இம்மரத்தின் இலைகளே தெரியாத அளவிற்கு அதிகமாகப் பூக்கள் பிடிக்கின்றன. ஆனால்… நல்ல கனியாகி பலன் வெளிப்படுத்தும் விகித நிலை “நூற்றில் ஒரு பாகம் கூட… முதிர்வு நிலைக்கு வருவதில்லை…!”

ஆனால் முதிர்வு நிலை பெற்ற கொட்டைகளைப் பதித்தால் தான் மீண்டும் மாங்கன்று வளருகின்றது. கனியில் சொத்தை விழுந்த கொட்டைகள் வளர்ச்சிக்கு வருவதில்லை.

இதைப் போன்று ஒவ்வொரு விதைத் தன்மையிலுமே உள்ளதல்லவா…?

இம்மனித உயிர் ஆத்மாவானது தன் பிறப்பின் கருவைப் பருவ வளர்ச்சிக் காலத்தில் கருவின் தொடரை வளர்க்கின்றது. சில தாவரங்களைப் போன்று தன் வளர்ப்பின் பலன் தந்த பிறகு மரத்தின் நிலை பட்டுப் போவதைப் போன்று கருத்தரித்த பிறப்பு நிலை வளர்க்கும் கால நிலை மாறினாலும் மனித வாழ்க்கையின் செயல் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் கூட… மீண்டும் பல வருடங்களுக்கு வாழ முடிகின்றது.

1.இம்மனித அமிலம் தான் எல்லாத் தன்மையிலும் முதிர்வு பெற்ற உயிராத்மா கொண்டது.
2.இதிலும் அடுத்த நிலை பெறுவதென்பதுதான் ஞானத்தால் ஒளி நிலை பெறும்
3.பிறவா நிலையான “பிறப்பின் பிறப்பையே காக்கும் நிலை…”

சிறு வயதில் தான் எடுத்த உணர்வின் இச்சையை மாற்றாமல்
1.தன் குண வளர்ப்பில் ஆத்ம பலம் பெறாத சிசுக்களோ சிறுவர்களோ
2.அல்லது வாழும் பருவத்தில் பாதி நிலையில் உணர்வின் இச்சையினால் தற்கொலையும் விபத்துக்களும் ஆளானவர்களோ
3,தன்னைத் தான் மறக்கும் குடி வெறிகளிள் சிக்கியவர்களோ
4.கொலை செய்யப்பட்டோ வாழும் பருவத்தில் அதிவேதனையால் உடல் அழுகிய நிலையில் பிரியும் உயிராத்மாக்களோ
5.இவை எவையும் மீண்டும் பிறப்பிற்கு வருவது என்பது…
6.எப்படி சொத்தை விழுந்த மாங்கொட்டையை விதைத்தாலும் அதன் வளர்ச்சி நிலை வளர்வதில்லையோ
7.அதைப் போன்று இம்மனித உணர்வின் எண்ண ஞானத்தின் செயல் உருவ அங்க அவயங்களின்
8.அழகின் பொலிவு கொண்டு பிறப்பு நிலை பெற முடியாது (இது முக்கியம்)

பிறப்பு நிலைக்கு வந்தாலும்.. எத்தொடர்பில் ஆத்மா பிரிந்ததோ அதே நிலையில் அங்ககீனமுள்ள நிலையில் தான் பிறக்க நேரும். ஞானமுடன் கூடிய அறிவு வளர்ச்சியற்ற குழந்தைகளாகத்தான் சாதாரண வழித் தொடரிலேயே பிறப்பு இறப்பு செயல் கொள்கின்றது.

இன்று அங்ககீனமுள்ள குழந்தைகளும்… மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளும் அதிகமாகப் பிறப்பதன் காரணம் புரிந்ததா…!

எண்ணத்தின் வலுக் கொண்ட… “ஆத்ம பலம் பெற்ற ஆத்மாக்கள் தான்..” மீண்டும் தன் இனத் தொடர்பில் பிறப்பு பெற்று… முதிர்ந்த கொட்டைகள் பக்குவமான வளர்ச்சிக்கு வருவதைப் போன்று… மனிதப் பிறப்பு பெற்று வருகின்றது.
1.இதில் அடுத்த நிலை பெறுவது என்பதுதான்
2.இங்கே உணர்த்தப்படுகின்ற மனிதன்… “தெய்வ நிலையாகும்” தன்மை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.குருவின் உணர்வை நீங்கள் பெற்றீர்கள் என்றால்
2.அந்த உணர்விலிருந்து எல்லாமே நீங்கள் பெறலாம்
அந்த நிலையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் திரும்பத் திரும்பச் சொல்கின்றேன்.

சாமியாரைப் பார்த்து.. அவரைப் பார்த்து… இவரைப் பார்த்து… கடைசியில் “சாமியார் தான் எல்லாவற்றையும் மீட்டிக் கொடுப்பார்…” என்று நினைக்கிறீர்கள்.

அருள் ஞானியின் உணர்வை நீங்கள் நுகர்ந்தால் உங்கள் எண்ணம் உங்கள் உடலுக்குள் இருக்கும் பகைமை உணர்வை நீக்குகின்றது. உங்கள் உடலை நலமாக்குகின்றது. உங்கள் வாழ்க்கையை உயர்த்துகின்றது.

இந்தப் பழக்கங்கள் வரவேண்டும்.

டி.வி, ரேடியோவில் ஒலி/ஒளி பரப்பு செய்கிறார்கள் என்றால் எந்த ஸடேசனை நீங்கள் திருப்பி வைக்கிறீர்களோ அதுதான் வருகிறது. அந்த அலைகளை நீங்கள் காட்சியாகவும் பார்க்கின்றீர்கள். பாடல்களையும் கேட்கிறீர்கள்.

இதே மாதிரித்தான் உங்கள் உடலுக்குள்ளும் நடக்கின்றது.

பல பேரைச் சந்திக்கிறீர்கள். சண்டை போடுகிறவர்களைப் பார்க்கின்றீர்கள்; வேதனைப்படுவோரைப் பார்க்கின்றீர்கள் கோபப்படுவோரைப் பார்க்கின்றீர்கள்; சஞ்சலப்படுவோரைப் பார்க்கின்றீர்கள்; சங்கடப்படுவோரைப் பார்க்கின்றீர்கள்; குரோதமாக இருக்கிறவர்களையும் பார்க்கின்றீர்கள். குரோதத்தால் பிறரை அழிக்கக்கூடிய உணர்வையும் பார்க்கின்றீர்கள்; தெரிந்த்தே தப்புப் பண்ணுபவர்களையும் பார்க்கின்றீர்கள்.

இதை எல்லாம் பதிவாக்கிக் கொள்கிறீர்கள்.

1.இதிலே நீங்கள் எந்த ஸ்டேசனைத் திருப்பி வைக்கின்றீர்களோ…
2.”அடப் பாவிப் பயலே… இப்படிச் செய்கிறேயடா..!” என்று
3.அந்த ஸ்டேசனைத் திருப்பி வைத்தால் அந்தக் காட்சிகள் தான் வரும்.

எந்தக் காட்சி? அவன் சண்டை போடுவது திருடுவது ஏமாற்றுவது.

நான் அன்றைக்கு அந்தப் பையனைப் பார்த்தேன்… கஷ்டப்படுகிறான்… என்ற நினைவு வந்து அந்த ஸ்விட்சைப் போட்டீரகள் என்றால்
1.“அடப்பாவமே அவன் இப்படிக் கஷ்டப்படுகின்றான்…” என்று இந்தக் காட்சி உங்களுக்குள் வரும்.
2.அந்த வேதனை உங்களுக்குள் வரும். இத்தனை வேலையும் நடக்கும்.

அதே மாதிரி பணம் கொடுத்தவன் திரும்பக் கொடுக்கவில்லை. அவன் ஏமாற்றிவிட்டுப் போய்விட்டானே என்று அந்த ஸ்டேசனை வைத்தால்
1.ஏமாற்றப்பட்ட உணர்வலைகள் காற்றிலிருக்கின்றது,
2.உடனே அது உங்களுக்குள் வந்து வேலை செய்கிறது.
3.அப்பொழுது உங்கள் நல்ல உணர்வுகள் வாடுகின்றது.

இதே போலத்தான் அருள் மகரிஷிகளின் உணர்வு இந்தக் காற்றிலே கலந்திருக்கின்றது. உங்களுக்குள் ஆழமாக அதைப் பதிவு செய்யவேண்டும் என்று தான் திரும்பத் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம்.

சூரியன் எப்படி உருவானது? மனிதன் எப்படி உருவானான்? மனிதனான பின் அகஸ்தியன் ஒளிச் சரீரம் எப்படி ஆனான் என்று சொல்கிறோம்.

அகஸ்தியன் தனக்குள் கண்டுணர்ந்த உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கிறோம். அவ்வப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ண வேண்டும்.

1.இந்த ஸ்டேசனைத் திறந்தால்
2.அந்த அகஸ்தியனின் உணர்வு வரும்.
3.நமக்குள் கோபிக்கும் உணர்வை தடுக்கும்.
4.நமக்குள் அருள் ஞானத்தை வளர்க்கும்.
5.நம்மை அறியாத வந்த தீமைகளைத் துடைக்கும்.

இதை நீங்கள் பெற வேண்டும் என்பதற்காகத்தான் மணிக்கணக்கில் உபதேசிக்கின்றேன். ஏனென்றால் குருநாதர் அந்தச் சக்தி கொடுத்தார். எல்லாமே செயல்படுத்திக் கொண்டு வருகிறேன்.

சாமி பார்த்துக் கொள்ளும் என்று கோயிலில் போய் கஷ்டத்தை எல்லாம் சொல்கிற மாதிரி அந்த நம்பிக்கையிலே இருக்கும் போது என்னைப் பார்த்தவுடனே ஆயிரம் கஷ்டங்களைச் சொல்கிறார்கள். ஆயிரம் வம்புகளைச் சொல்கிறார்கள்,

நான் இதையெல்லாம் கேட்டு என்ன செய்ய…!

இப்படி நூறு பேர் வந்து என் காதில் சொன்னால் நான் எடுத்துக் கொண்ட சக்தியை நீங்கள் தடைப்படுத்துகிறீர்கள் என்று தான் அர்த்தம்.
1.நீங்கள் நல்லதைப் பெறுவதற்கு பதில்
2.அதைத் தடை விதித்துக் கொள்கிறீர்கள்.

உங்களுக்குள் அந்த உணர்வு வளர்ந்து விட்டால் நான் சொன்ன அந்த வாக்கை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது போய் விடுகிறது.

1.அருள் ஒளி பெற வேண்டும்.
2.என்னை அறியாத இருள் நீங்க வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும்.
4.உடல் நலம் பெற வேண்டும்.
5.எங்கள் குடும்பம் நலம் பெற வேண்டும்.
6.என் தொழில் நலம் பெற வேண்டும்.
7.என் பையன் நல்லவனாக வேண்டும் என்று கேளுங்கள்.

அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்களுக்கு இந்த நிலை வேண்டும் என்று தான் நான் கேட்கச் சொல்கிறேன்.

எத்தனை பேர் இப்படிக் கேட்கிறீர்கள்…!

இவ்வளவு தூரம் நான் சொல்கிறேன். இருந்தாலும் இப்பொழுத் தான் உங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். “நீங்கள் பெரிய மகான்…” என்று சொல்லி “என் கஷ்டம் இப்படி இருக்கிறது…!” என்று சொல்லி உடனே அழுக ஆரம்பித்துவிடுகிறார்கள்.

நான் சொன்னதை எல்லாம் மறந்துவிடுகின்றார்கள். அவர்களுக்குள் எது பதிவானதோ அந்த உணர்வு தான் வேலை செய்கிறது.

யாம் சொல்லும் உயர்ந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை அவர்கள் பெறும் தகுதியை அவர்கள் உடலுக்குள் இருக்கும் உணர்வே தடை படுத்துகின்றது என்று உணர்கிறார்கள். உணர்ந்தாலும் அதை அறிய முடிவதில்லை.

ஒரு இடத்தில் அழுக்குத் தண்ணீர் இருக்கிறது என்றால் அதைத் தூய்மைப்படுத்துகின்றோம்.
1.இன்னும் கொஞ்சம் இருக்கிறது
2.அதையும் தூய்மையாக்கிப் பழக வேண்டும் என்ற நிலைக்கு நீங்கள் அனைவரும் வரவேண்டும்,

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அருள் சக்திகளை பெற்று உங்கள் வாழ்க்கையில் தீமைகள் புகாது ஒவ்வொரு நொடியிலும் விழித்திருத்தல் வேண்டும்.

நீங்கள் ஒவ்வொருவரும் மகரிஷிகளாக உருப்பெற வேண்டும்

 

விண்ணுலக ஆற்றலும்… மண்ணுலக ஆற்றலும்… உயிரின ஆற்றலும்… எவ்வாறு இருக்கிறது…? என்ற நிலையை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தெளிவாக எமக்கு (ஞானகுரு) எடுத்துரைத்தார்.
1.உபதேச வாயிலாக எனக்குள் ஞான வித்தாகப் பதியச் செய்தார்.
2.அவர் பதியச் செயத உணர்வினை நினைவு கொண்டு நான் எடுக்கப்படும் போது
3.விண்ணின் ஆற்றலைப் பருகும் தன்மைகள் எனக்குள் வந்தது… மண்ணுலக ஆற்றலை அறியும் தன்மையும் வந்தது.

விண்ணுலகம் சென்றடைந்து ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மாமகரிஷிகள் மண்ணுலகில் அவர்கள் வாழ்ந்த காலத்தில் பெற்ற ஆற்றல் மிக்க சக்திகள் இங்கே நமக்கு முன் பூமியிலே பரவி உள்ளது.

தீமைகளை அகற்றிப் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் ஆற்றலாகத் தனக்குள் விளைய வைத்த அந்த மகரிஷிகளின் ஆற்றல்களை நாம் கவர்தல் வேண்டும்.

ஆகவே…
1.மகரிஷிகளின் அருள் ஆற்றலை நாம் பெறுவோம்… மகிழ்ந்திடும் வாழ்க்கையாக வாழ்வோம்
2.மகிழ்ச்சி பெறும் செயலாகச் செயல்படுத்துவோம்
3.நாம் பார்ப்போரெல்லாம் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று மகிழ்ந்து வாழ்வோம்.

பிறர் ஆனந்தமாக வாழ்வதைக் கண்டு நாம் மகிழ்ச்சி பெற வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் புத்துணர்வு பெற்று அவர்கள் குடும்பம் நலம் பெறுவதை எண்ணி எண்ணி அந்த நலம் பெறும் சக்திகளைக் கண்டு நாம் மகிழ்ச்சி பெறுவோம்.

நாம் பார்ப்போர் எல்லாம் மகிழ்ந்து வாழ வேண்டும் உலகம் நலம் பெற வேண்டும் என்று தியானிப்போம் தவமிருப்போம்.

குருநாதர் அனுபவம் பெறுவதற்காக வேண்டி எமக்கு எத்தனையோ இன்னல்களைக் கொடுத்தார். அதை எல்லாம் கடந்து அவர் காட்டிய வழியில் மெய் ஞானத்தை எனக்குள் வளர்க்க முடிந்தது. ஞான வித்துக்களாகப் பெருக்கவும் முடிந்தது.

அந்த நல்ல விதைகளை உங்களுக்குள் விளையச் செய்வதற்கு மீண்டும் மீண்டும் நினைவாக்கிக் கொண்டு வருகிறேன் (ஞானகுரு).
1.நாம் நன்றாக இருக்க வேண்டும்…
2.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்… என்ற
3,இந்த உயர்ந்த எண்ணத்தை வளர்ப்பதற்காக மகரிஷிகளின் சக்திகளை அருள் ஞான வித்துகளாகப் பதியச் செய்கிறோம்.

இந்தப் பூமி முழுவதும் சுற்றப்பட்டு அந்த அருள் ஞான வித்துக்கள் அழிந்திடாதபடி உங்களுக்குள் அதை விளையச் செய்ய ஒவ்வொரு நாளும் கூட்டுத் தியானத்திலும் பௌர்ணமி தியானத்திலும் இதை உணர்த்திக் கொண்டே வந்திருக்கின்றோம்.

தீமைகளை அகற்றக்கூடிய வாக்காகக் கொடுத்து அதன் வித்தாக உங்களுக்குள் விளையச் செய்யும் பொழுது ஏற்றுக் கொள்வார் எத்தனை பேர் இருக்கிறார்கள்…?

அது போன்று ஆகாதபடி…
1.அருள் ஞானியின் உணர்வுகள் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகி அது ஓங்கி வளர்ந்து
2.மகரிஷிகளின் அருள் சக்தியாக நீங்கள் ஒவ்வொருவரும் உருப்பெற வேண்டுமென்று எல்லா மகரிஷிகளையும் வேண்டிக் கொள்கிறேன்.

நீர் சக்தி என்ற ஜீவ சக்தியின் முக்கியத்துவம் – ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு செயலிலும் அதன் வளர்ப்பின் முதிர்வு நிலை (பலன்) எவ்வாறு தெரிகின்றதோ… அதைப் போன்ற மனிதன் பெறும் ஒளி சக்தியைக் கொண்டு…
1.இவ்வெண்ணத்தின் உயர் ஞானத்தால்
2.எதனையும் தெய்வம் நமக்குத் தரும்…! என்ற மனிதனின் உயர்வு குணமாய்
3.எத்தெய்வத்தை மனிதன் எண்ணுகின்றானோ… அத்தெய்வமாய் மனித நிலை ஆக முடியும்.

மனித உணர்வின் எண்ணத்தில் இப்புவியில் வளரவல்ல ஒவ்வொரு தொடரிலும் தன் ஞானத்தைச் செலுத்தி அதன் தொடர் வளர்ப்பின் செயலைப் பார்த்தால்… செயலின் முதிர்வின் தொடர் நிலை வளர்ப்பு முற்றலை அறியலாம்.

நீரின் சுவையே… ஒன்றிலிருந்து வளர்ப்பின் தொடர் பெற்றுப் பிரியும் பொழுது… “உராயும் தன்மையில்” தொடர் நிலை அச்சுவையுடன் ஒட்டி அச்சுவை சக்தியின் ஆவியாகி… அதே தொடரின் பிறிதொன்றில் அந்நீர் ஆவித் தன்மை திடம் கொண்டு… செயல் மோதலின் சுழற்சியில் பல செயல்கள் மாறி மாறி வளர்கின்றன. (நாம் சமைக்கும் நிலையிலிருந்து இயற்கையில் உருவாகும் அனைத்துமே இதற்கு உதாரணம் தான்)

எல்லாச் செயலுக்கும்… காற்று மண்டலத் தொடரில் இந்நீர் ஆவியாகி அமிலமாகித் திடம் கொண்டு மீண்டும் அதிலிருந்து பிரிக்கப்படும் தொடர் நிலையில் “கனம் கொள்ளும் செயல் வளர்ச்சி தான்..!”

“நீரான ஆதி சக்தியின் சக்தித் தொடர்” இஜ்ஜீவ பிம்ப சரீரத்திலிருந்து இச்சரீரத்தை இயக்கும் உயிர் பிரிவதற்குள்ளேயே… இச்சரீரத்தின் ஜீவ ஜெனிப்பில் நீர் சக்தியின் வளர்ப்பின் சத்தாய் இச்சரீரத்திலுள்ள ஒவ்வொரு உயிரணுக்களும்… இஜ்ஜீவ நீரின் உணவைப் பெற்று வாழும் இதன் உணர்வின் எண்ணத்திலேயே உயர் நிலை பெற… நம் செயல் இருக்க வேண்டும்.

எப்படி நீரை ஊற்றி விதைப் பயிரில் அதன் பலன் மகசூலைத் தாவரம் தருகின்றது…?

எப்படி நீர் சக்தியின் தொடர்பில் பூமியில் கனி வளங்கள் அதனதன் வளர்ச்சிக்கொப்ப முற்றிய நிலை பாறையே தன் வளர்ப்பின் முற்றலாய் வைரத்தை வளர்க்கின்றது…?

மண் படிவங்கள் எத்தொடரில் எவ் உலோக வித்து வளர்ந்தாலும் அதன் முற்றலில் படிவங்களாக அதது எடுக்கும் நீர் சக்தியில் தங்கமே மண்ணுடன் கலந்த நிலையும் படிப்படியாகக் குவிந்த தன்மையில் அடர்த்தியாகத் தன் இனத்தைப் பெருக்கும் வளர்ப்பில் அதனதன் இனத் தொடரில் முதிர்வுத் தன்மை பெறுகிறது.

அதனின் தொடர் வளர்ப்பில் கனி வளர்ச்சிக்கு அடுத்த நிலை வளர்ப்பான… மண் வளத்தின் ஆவி அலையில் தாவர இன வளர்ப்பில்… புழு, பூச்சி, ஊர்வன, பறப்பன, இப்படி வளர்ப்பின் முதிர்வுத் தொடர் வரிசையாக வருகின்றது.

இவை ஒவ்வொன்றிலுமே பல மாற்றத்தின் சுழற்சி ஓட்டம் அந்தந்தப் பூமியில் அது எடுக்கும் அலைத் தொடர்புக்கொப்ப ஆதி சக்தியுடன் ஜீவ சக்தியாய் நீர் சக்தியில் சுழற்சி ஓட்டம் சுழலும் முதிர்வில் மனித உரு வருகின்றது.

மனிதனான பின் அறியும் ஞானத்தின் உயர் ஞானப் பகுத்தறிவில் ஜீவநீர் இச்சரீரத்திலேயே முதிர்வின் தொடர் பெற்ற மனிதக்கரு உரு சொல் செயல் எல்லா நிலைகளையும் பெற்ற தன்மையினால் இத்தன்மைக்கடுத்த உயர் செயலுக்கு எண்ணத்தை உயர் காந்த மின் அணுக்களைக் கவரும் ஆற்றல் பெறுகின்றது.

ஆகவே நீருடன் கூடிய இச்சரீரத்தின்
1.ஜீவ அணுக்கள் ஒவ்வொன்றையுமே வீரிய ஒளி பெறச் செய்ய…
2.எண்ணத்தை மேல் நோக்கிச் செலுத்தி வலுக் கூட்டி
3.எவ்வுணர்வின் அலையும் இச்சரீர இயக்கத்தில் வந்து மோதாமல்
4.இச்சரீர உணர்வின் அலை மட்டும் வீரியத் தன்மை பெற
5.எண்ணத்தின் செயலைக் கொண்டு உயிரணுக்கள் ஒவ்வொன்றையுமே வலுக் கூட்ட வேண்டும்.

அத்தகைய வலுக்கூட்டிக் கொண்ட… வீரிய சக்தி பெற்ற உயர் காந்த வலு ஆத்மாவை… இப்பூமி இயக்கத்தில் பிறருடன் தொடர்பு கொள்ளும்… வார்த்தையோடும்… எந்த எண்ண உணர்வும் அது பாதிக்காது.

இவ்வாத்மாவின் வளர்ப்பும் இச்சரீர ஜீவ காலத்திலேயே ஜீவனுடன் கூடிய உணர்வின் எண்ணத்தில் ஒளி சக்தியை ரிஷி சக்தியின் சக்தித் தொடர்புடன் வலுக் கூட்டும் செயலுடனே செயல்படுத்திக் கொண்டே இருத்தல் வேண்டும்.

1.இப்பூமியின் பிடிப்பிலிருந்தும்… வேறு எப்பூமிப் பிடிப்பிலும் சிக்காமலும்
2.எப்பூமியின் எம்மண்டலத்தின் தொடர்பையும் அறியும் வலுவையும் கூட்டி…
3.கூட்டப் பெற்ற வலுவின் செயலை… இச்சரீர இயக்கத்தின் தொடர்பில்
4.புதிய நிலையை ஜீவப் படைப்பில் படைக்கும் வழித் தொடருக்கு ஞானத்தைச் செலுத்திட வேண்டும்.

அத்தகைய முதிர்வை மனிதனால் தான் படைக்க முடியும்.

அன்று சித்தர்கள்… ரிஷிகள் எழுதிய காவியத்தில்…
1.மனித உருவம் கொண்ட தெய்வத்தைக் காட்டி
2.அத்தெய்வத்திற்கு நெற்றியில் கண்ணும் பல கைகளும்
3.ஒரு பாதி பெண்ணாகவும் மறு பாதி ஆணாகவும் காட்டிய தன்மையின் உள் அர்த்தங்கள் பல உண்டு.

ஒவ்வொருவரும் தன் ஞானத்தால் அறிந்து உயர்வு நிலைக்குச் செயல் கொள்ளும் மார்க்கத்தில்… காற்று மண்டலத்தில் தன் வளர்ப்பின் உயர்வை அறியும் ஞானத்திற்குப் பல சக்திகளை சரீர ஜீவிதத்தில் ஒளி பெற்றுப் பல நினைவுகளை அறியலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அன்று காட்டு விலங்குகளுடன் வாழ்ந்து வந்த மனிதர்களோ மற்ற மிருகங்களைக் கண்டு அஞ்சி குகையில் வாழ்ந்தார்கள்.

பகலிலே மிருகங்கள் ஒதுங்கி நிற்கின்றது. இரவிலே இரை தேடி வருகின்றது. தன் உடலுக்குள் இருக்கும் நஞ்சின் தன்மை கொண்டு மிருகங்கள் நுகர்ந்தறியும் ஆற்றல் பெறுகின்றது.

உதாரணமாக
1.பூமிக்குள் வங்கிட்டுக் குடிகொண்டு வாழும் சில உயிரினங்கள்
2.நிலநடுக்கம் வருகிறதென்றால் முன்னாடியே அறிந்து வெளி வந்து விடுகின்றது.

அதே சமயத்தில் மழை வருகிறதென்றால் அந்த உணர்வுகளை நுகர்ந்து எறும்புகளும் எலிகளும் இடம் விட்டு இடம் மாறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விடுகின்றது.

ஏனென்றால் அவைகளுக்கு அறியும் அறிவு ஜாஸ்தி உண்டு.

1.தனக்குள் இருக்கும் விஷத்தின் தன்மை கொண்டு
2.ஊடுருவும் சக்தியால் கவர்ந்து
3.அந்த நுண்ணிய உணர்வின் அணுக்களை
4.இது தனக்குள் அறியும் தன்மை வருகின்றது.

ஆகவே அது தன்னை அறிந்து செயல்படுகின்றது.

இன்று விஞ்ஞானியோ சாதாரண எலக்ட்ரிக் என்ற நிலைகளை வைத்து எலக்ட்ரான் என்ற நிலையை மாற்றுகின்றான்.

விஷம் கொண்ட உணர்ச்சிகளை ஊட்டும் அல்லது கவரும் தன் உணர்வின் அதிர்வுகளை வெளிப்படுத்தும் உணர்வுகளை அது அதிர்வுகளுக்குத் தகுந்த மாதிரி அந்த உணர்வின் இயக்கத்தை மனிதன் கண்டுணர்ந்தான்.

1.ஒலி நாடாக்களில் பதிவு செய்து
2.அந்த நாடாக்களில் தட்டெழுத்துகளில் எழுதுவது போலத் தட்டினால்
3.அந்த உணர்வின் அதிர்வுக்கொப்ப அதனுடைய செயலாக்கங்கள் எலக்ட்ரானிக்காக மாற்றி
4.இவன் எண்ணும் உணர்வுகளைக் கணக்கிடுகின்றது. உருவமாக்குகின்றது.
5.எத்தனையோ வேலைகளைச் செய்கின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு இவ்வாறு செய்வதை இன்று பார்க்கின்றோம்.

இதே போன்றுதான் (நாம்) நுகர்ந்த உணர்வுக்கொப்ப அதனின் ரூபங்களை உயிர் அமைக்கின்றது.

உயிர் எலெக்ட்ரிக்காக இருந்தாலும் தனக்குள் எலக்ட்ரானிக் என்ற நிலைகள் வரப்போகும் போது உயிர் நுகர்ந்ததை (அந்த) உணர்வுகொப்ப ரூபங்களை மாற்றுகின்றது.

எதிர் நிலைகள் காணும் போது அதிலிருந்து வரும் நுண்ணிய அணுக்களையும் மற்ற உயிரினங்கள் காணுகின்றது. ஆனால் இதை எல்லாம் கடந்து வந்த நாம் மனிதன் இருக்கும் (ஒரே) இடத்தில் இருக்கின்றோம்.

மற்ற உயிரினங்கள் தன் மணத்தால் நுகர்ந்தறிகின்றது.
1.இரையைத் தேடி எண்ணித் தன் மூச்சலைகளை விடும் போது
2.வெகு தொலைவில் இருக்கும் மணத்தையும் கவர்கின்றது.
3.கவர்ந்ததைத் தனக்குள் இருக்கும் விஷத்தால் மோதும் போது
4.அருகிலே வெளிச்சம் தெரிகின்றது
5.அப்பொழுது அதற்குத் தான் போகும் பாதையும் தெரிகின்றது.

அது இருக்கும் இடங்களில் மற்ற உயிரினங்களுக்குக் கண்கள் தெரியும். தன் அருகிலே ஒளி மோதும் போது அந்த வெளிச்சம் வருகின்றது. தன் உணர்வுகளில் அதை அறிகிறது. அதன் வழி அங்கே செல்லுகின்றது.

விஞ்ஞானி “இருளுக்குள் இருப்பதையும்…” படமாக எடுக்கின்றான். இன்று நாம் பார்க்கின்றோம்,

மற்ற உயிர் இனங்களுக்கு மோதலில் எப்படி வெளிச்சம் வருகின்றதோ அதே போல் விஷத்தின் தன்மை கொண்டு அவன் கேமராவில் நிறுத்தப்படும் போது இந்த ஒலி அதிர்வுகள் எதைக் குறி வைக்கின்றானோ படமாக எடுக்க முடிகின்றது.

1.அந்த உணர்வின் அதிர்வினைப் பாய்ச்சி
2.எலக்ட்ரானிக் என்ற நிலைகள் கதிரியக்கப் பொறிகளை வைத்து
3.உணர்ச்சிகளை ஊடுருவச் செய்யும் போது
4.மோதும் உணர்வுகளை வடிவமைத்துக் கொடுக்கின்றது.

பூமியின் அதிர்வை வைத்து பூமிக்குள் வாழும் உயிரினங்கள் நிலநடுக்கத்தை அறிவது போல பல கோடிச் சரீரங்களில் நாம் எப்படி மாறி மாறி வந்தோம் என்ற உண்மையின் உணர்வை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மகரிஷிகள் கண்ட பேருண்மைகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மை அறியும்படி செய்தார். அந்த ஆற்றல்களையும் எம்மைப் பெறச் செய்தார். அவைகளை என்னாலும் அறிய முடிந்தது.

அந்த உண்மைகளைத்தான் இங்கே உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

இந்த மனித வாழ்க்கை மாய வாழ்வாக இருக்கின்றது… நீ எதைக் காணப் போகிறாய்…? என்று கேட்டார் குருநாதர்

 

1.நோய் எல்லாம் போய்விடும்… நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று யாம் (ஞானகுரு) சொன்னால் எங்கெங்கே…? என்று அதைத்தான் திருப்பிக் கேட்கிறார்கள்.
2.குடும்பத்தில் கஷ்டமாக இருக்கிறது… என்று சொல்வார்கள். “அது எல்லாம் நீங்கிப் போய்விடும்… நீங்கள் நன்றாக ஆகிவிடுவீர்கள்…” என்று யாம் சொல்வோம்.
3.நீங்கள் சொல்கிறீர்கள்… என் பையன் எப்பொழுது பார்த்தாலும் என்னிடம் எதிர்த்துக் கொண்டே இருக்கின்றான்…! என்று சொல்லி
4.யாம் கொடுக்கும் வாக்கினை அப்பொழுதே அதை ஜீவனற்றதாக மாற்றி விடுகின்றார்கள்.

எவ்வளவோ சிரமப்பட்டுத் “தந்திரமாக…” உங்கள் உடலிலே அருள் உணர்வைப் பாய்ச்சி… அருள் ஞான வித்தை உங்களுக்குள் தங்க வைக்க வேண்டும் என்று யாம் முயற்சி செய்கிறோம்.

ஆனால் விளை நிலத்தில் விதைத்த விதைகளை எறும்புகள் எடுத்துச் சென்று எப்படி முளைக்காமல் செய்து விடுகின்றதோ… அதைப் போல்
1.உங்கள் உடலில் ஏற்கனவே பதிந்த சாப அலைகள் நின்று
2.யாம் கொடுக்கும் உபதேச உணர்வுகளை ஆழமாகப் பதிய விடாதபடி அது தடுத்து விடுகிறது.

எம்மிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வார்கள். பின் ஊருக்குப் போய் வருகிறேன் என்பார்கள். ஆனால் அடுத்த கணம் என்னுடைய கஷ்டம் இப்படியெல்லாம் இருந்து கொண்டே இருக்கிறதே என்று திருப்பி
1.நான் கொடுத்த வாக்குகளை விட்டுவிட்டு கஷ்டத்தைத் தான் எடுத்துக் கொண்டு செல்கின்றார்கள்
2.நான் கொடுத்த அருள் வாக்கை இங்கேயே விட்டுவிட்டு கஷ்டத்தைத் தான் வாங்கிச் செல்கின்றார்கள்.

காரணம் இந்த சாப அலைகளே இதற்கு மூலம் ஆகின்றது. அவருடைய குறை அல்ல. ஆகவே நான் உங்களைக் குறையாக எண்ணவில்லை.

முந்தைய நிலையில் உங்களுக்குள் விளைந்த உணர்வுகள் உங்களை அறியாது எப்படி எல்லாம் இயக்குகின்றது…? அதிலிருந்து நீங்கள் எப்படி மீள வேண்டும்…? என்பதைத்தான் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

உங்கள் வீட்டில் ஒருவர் சொன்னபடி கேட்கவில்லை என்றால் உங்கள் மனது எப்படிச் செல்கின்றது…? நன்றாக இருக்க வேண்டும் என்று ஒருவருக்கு எல்லா உதவியும் செய்து கொடுக்கின்றீர்கள். ஆனால் அவரால் அதைச் சரியாகச் செயல்படுத்த முடியவில்லை என்றால் உங்கள் மனது அது எப்படி ஆகின்றது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆனால் எண்ணிலடங்காத பேர் என்னிடம் வாக்கினை வாங்கிச் செல்கிறார்கள். நீங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று குருநாதர் கொடுத்த நிலைகளை அப்படியே உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

என்னை எத்தனையோ ஆபத்தான நிலையில் எல்லாம் குருநாதர் சிக்க வைத்தார். ஒவ்வொரு நொடியிலும் அந்த உணர்வின் எண்ணங்கள் உனக்குள் எப்படி இயங்குகின்றது…? நீ எப்படி இருக்க வேண்டும்…? என்று
1.மூன்று லட்சம் பேரின் குடும்ப நிலைகளைக் காட்டி
2.மனித உடலிலே மாய வாழ்வாகத் தான் இருக்கின்றது
3.இதில் நீ எதைக் காணப் போகின்றாய்…? என்றார்

என்றும் நிலையான நிலைகளில் இருக்கும் மகரிஷிகளின் எல்லையை நீ எப்படி அடைய வேண்டும்…? என்று .தெளிவாகச் சொன்னார். இதை எல்லாம் அனுபவ ரீதியில் குருநாதர் காட்டுகின்றார்.

நம்முடைய கடைசி எல்லை அந்த மகரிஷிகளின் அருள் வட்டம் தான். அவர்கள் ஒளிச் சரீரம் பெற்று வாழும் சப்தரிஷி மண்டல எல்லையில் தான் நாம் இருக்க வேண்டும்.. அதைத் தான் பின்பற்ற வேண்டும்…! என்று குருநாதர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார்.

மனிதச் செயலின் வீரியம் விஞ்ஞானத்திற்கு அடிமைப்பட்டு விட்டது – ஈஸ்வரபட்டர்

 

விஞ்ஞானத்தில் இன்று வரையிலும் இப்பூமியில் ஒலி அலைகளையும் ஒளிக் காட்சிகளையும் காற்றலையில் கலக்கவிட்டுப் பதிவு செய்கின்றார்கள்.

மேலும் இப்பூமிக்கும் மற்றக் கோள்களுக்கும் உள்ள தொடர்பை அறிய… விஷமான அமிலத்தை (CHEMICALS) உலோகத்தில் செலுத்திப் பிற மண்டலங்களிலிருந்து இப்பூமியின் தொடர்பிற்கு வலுவாக்க… வளர்ச்சியுறும் உண்மை நிலை அறிய… விஞ்ஞான சாதனைகளைச் செயல்படுத்தவும்… மனிதனின் எண்ண உணர்வு செயல் கொள்கின்றது.

ஒவ்வொரு மனிதனுக்கும் மனித சரீர ஜெனிப்பில் சாதாரண வாழ்க்கை நிலையில் ஆயுட்காலம் அதது எடுக்கும் தன்மை கொண்டு எப்படியும் சராசரி அறுபதோ எழுபதோ எண்பதோ ஆண்டுகள் தான் இருக்கப் போகின்றது.

விஞ்ஞானத்தால்… பிற மண்டலங்களுக்குச் செல்லவும் அங்குள்ள உண்மை நிலையறியவும் கருவிகளின் நிலையால்
1.இன்றைய கருவியின் செயற்கைக்கு மின் காந்த அலையை
2.இயற்கையில் மனிதனின் உணர்வு எண்ணத்தை வளர்க்கவல்ல உயர்காந்த நுண்ணிய மின் அணுக்களை
3.விஞ்ஞானிகள் செலுத்தும் செயல் சாதனைக்கு அனுப்பப்படும் செயற்கைக் கோள்களினால் கிடைக்கப் பெற முடியாது…!

இன்று மனிதனால் பெறப்பட்டு வளரும் உயர் காந்த மின் அலையின் செயல்… இக்கோள்களில் (SATELLITES) செலுத்தப்பட்டு செயற்கையில் ஒலி பரப்பப்படும் தொலைக்காட்சிகளில் ஒளிப் படங்கள் வண்ண ஒளிப் படங்கள் ஒலி அலை வானொலிப் பெட்டி தொலைபேசி மற்றும் பல மின் ஒளிச் சாதனங்களுக்காகப் பிரித்து எடுக்கின்றனர்.

இவ்வாறு மின் காந்த அலைகளைப் பிரிப்பதினால் மனித எண்ண உணர்விற்கு நேரடியாகக் கிடைக்கப் பெற வேண்டிய… உயர் ஞான எண்ணத்தை அறியவல்ல… தன்னைத்தான் உணர்ந்து செயல்படச் செய்யும் இயற்கையான சக்திகளைப் பெற முடியாத நிலை உருவாகி விட்டது.

தனக்குள் உள்ள இறை சக்தியை.. எண்ணத்தின் உணர்வால் வலுவாக்கி வளரும் ஜீவித சரீரத்தை “இச்செயற்கை அலைகள்… சூழ்ந்து விட்டது…!

ஜீவ சரீரத்தில் ஜீவ சரீரமுடன் மனிதனுக்கு மனிதன் பேசப்படும் உறவு படுத்திக்கொள்ளும் உணர்வின் செயல் வளர்ப்பிற்கு…
1.வானொலியில் கேட்கப்படும் ஒலி அலைக்கும்
2.தொலைக் காட்சியில் காணும் ஒளி அலைக்கும்
3.இச்சரீரத்தின் உணர்வைச் செலுத்தும்பொழுது
4.அதே உணர்வைத்தான் இச்சரீரம் எடுக்க முடியும்.

செடிக்குத் தண்ணீரை ஊற்றினால் அதைத் தனக்குச் சத்தாக எடுத்து வளருகின்றது. அதுவே காய்ச்சிய நீரை… ஆற வைத்து ஊற்றினாலும் அச்செடிக்கு வேண்டிய ஜீவ சக்தி கிடைக்காது. அதனால் அத்தாவரம் வளர்வதில்லை.

அதைப் போன்று இச்சரீர உணர்விற்கு செயற்கை மின் காந்த ஒலியைக் கேட்கும் உணர்வினால் இச்சரீர ஜீவ ஆத்மாவானது…
1.தன் உயர்வு நிலைக்குத் தேவையான எண்ணத்தின் உணர்வு எடுக்கும் கவன நரம்பின் பொட்டின் பதிவிற்கு
2.உயர் காந்த மின் ஜீவ அலை உணர்வை எடுக்கவல்ல வளர்ச்சி நிலை குன்றி விட்டது.

ஏனென்றால் எண்ணத்தின் உணர்வுகள் எவ்வலையை எடுக்கின்றதோ அதே நிலையைத்தான் இச்சரீர நிலையில் வளர்க்கும் நிலை உள்ளது.

இன்றைய மனித உணர்வின் எண்ணங்களே… செயற்கை அலையை அதிகமாகக் கேட்டு… பார்த்து… பழக்கப்படுத்தி வளர்த்துக் கொண்ட வலுவினால்… எதனையும் உணரும் பக்குவம் மாறி… இவ்வாத்மாவையே செயற்கை அலையுடன் செயல்படுத்தும் முறைக்கு மாறி விட்டது.

ஆகவே..
1.இவ்வாத்மாவை இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கு அடகு வைக்கும் வாழ்க்கையையும்…
2.தன்னைத்தான் உணராமல் பித்தனாக வாழும் மனிதச் செயல்களையும்…
3.தன் ஆறாவது அறிவின் துணை கொண்டு மாற்றி ரிஷிகள் காட்டிய மெய்யை வளர்க்க வேண்டும்.

இப்பூமியின் மண் வளங்கள் அது எடுக்கும் அலை ஒன்று. அதே மண் வளத்தின் தொடர்பில் வளரும் தாவரம்… தன் உணவை எடுத்து வளர்ந்து பலன் தருகிறது. ஆனால் எண்ணமில்லாத உணர்வு… செயலுடன் அது வளருகின்றது.

மிருகத்தின் நிலையோ… தனக்கு வேண்டிய உணவைத் தேடவும் புசிக்கவும் எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் உறங்கவும் தன் உணர்வின் இச்சையில் தேவையை அறிந்து கொள்ளவும் தன் ஐந்தறிவைக் கொண்டு வாழ்கிறது.. வளர்கிறது.

ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் இக்குறுகிய நூற்றாண்டில் விஞ்ஞானத்தின் பெருக்கத்தால் தன்னைத் தானே உணராத நிலைக்குச் சென்று செயற்கையின் பிடிப்பிலேயே சிக்குண்டு விட்டான்.

1.செயற்கை ஒலி அலைகளையும் தொலைக்காட்சி ஒளி அலைகளையும்
2.தன் எண்ணத்தின் உணர்வில் பதியவிடும் அலையினால்
3.மனிதனுக்குக் கிடைத்துள்ள ஆறறிவு பொக்கிஷமான பகுத்தறியும் உயர் ஞானத்தையே
4.தவற விடும் நிலைக்கு இன்று கொண்டு வந்து விட்டார்கள்.

இது தான் இன்றைய உண்மை நிலை…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

போகன் அவன் தான் பல கோடித் தாவர இனச் சத்தை நுகர்ந்தறிந்து விண்ணின் ஆற்றலை நுகர்ந்தறிந்த பின் அவன் செயலின் தன்மை “உலகம் முழுவதற்கும் வலம் வரும் தன்மையாக… சுழன்று வந்தான்”.

எவ்வாறு இன்று ரேடியோவில் உலகம் முழுவதும் ஒலி அலைகளைப் பரப்புகின்றமோ இதைப்போல அவன் கவனக் குளிகை என்ற நிலைகளில் செயல்பட்டான்.

பல தாவர இனச் சத்தைத் தனக்குள் உயர்ந்த சக்தியாக எடுத்து
1.மற்ற தாவர இனங்கள் இதே இனங்கள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றதோ
2.அங்கே இந்த உணர்வின் தன்மை அதனுடைய நிலைகள் எண்ணப்படும் போது
3.அதன் ஈர்க்கும் நிலையாக
4.இந்த உயிரான்மா இந்த உடலயே அழைத்துச் செல்லுகின்றது.

பல வகையான பறவை இனங்கள் மற்ற எங்கெங்கோ இருப்பினும் அதனதன் வேனில் காலங்களை அறிந்துணர்கின்றது.

ரஷ்யாவிலேயோ அமெரிக்காவிலேயோ பிரான்சிலேயோ உருவான அந்தப் பறவைகள் அதன் காலக் கெடுகள் முடியும் போது அதனின் உணர்வான இனங்கள் கொண்ட அந்த நிலையை நுகர்ந்து திசை நோக்கிக் கவர்ந்து இடம் மாறுகின்றது (MIGRATION).

“யாரும் சொல்லவில்லை…!” என்றாலும் தன் எல்லையை அறிந்து அங்கே வந்து காலங்களைக் கழித்து தன் இனப் பெருக்கத்தைக் கூட்டுகின்றது. அந்தப் பருவத்திற்குத் தக்கவாறு இனப் பெருக்கத்தைக் கூட்டியபின் மீண்டும் தன் இருப்பிடமே செல்லுகின்றது.

இனப் பெருக்கத்திற்கு காலம் உகந்ததாக எண்ணி பறவைகள் அவ்வாறு செய்கின்றது. இதைப் போலத் தான் அன்று போகன் பல உயிரினங்களின் உணர்வை நுகர்ந்தறிந்து அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பருகும் சக்தி பெற்றான்.

அவன் தாயின் எண்ண நோக்கம் அதனின் மெச்சிய உணர்வுகள் இவன் உடலுக்குள் சென்ற பின் அந்த நிலையைச் செய்து அவனால் உலகம் அறியும் நிலையும் இவன் நுகர்ந்தறிந்து தன் உணர்வின் செயலால் மற்றோர் இடத்திற்கு இவன் பறந்து செல்லும் நிலையை அவன் பெறுகின்றான்

பட்சிகள் தான் சிறகடித்தாலும் மிதக்கும் தன்மை கொண்ட உணர்வுகள் அதை மிதக்கச் செய்கின்றது.

கோழி இனமும் அதுவாக இருப்பினும் எடை கூடும் நிலைகளைத் தன் எடை குறைக்கும் நிலை அற்றது. அதனால் பறக்கும் நிலை அதற்கில்லை.

இன்று நாம் காரை ஓட்டுகின்றோம். அதிகமான வேகத்தில் ஓட்டும் போது பறக்கும் நிலை அடைகின்றது. ஆனால் பறக்கும் நிலை வந்தால் இதனுடைய நிலை திசை மாறுகின்றது. எங்கே மோதும்…! என்று சொல்ல முடியாது.

1.காற்றழுத்தத்தை எதிர்க்கும் ராடர் (RADAR) என்ற நிலைகள் அமைத்து
2.அதனின் செயலாக உருவாக்கப்படும் போது காற்றழுத்தத்தைச் சமாளித்து
3.மிதக்கும் தன்மை பெறுகின்றது “விமானம்”.
4.பறவைகளும் காற்றழுத்தத்தைச் சமாளித்துத்தான் தனக்குள் மிதக்கும் உணர்வின் தன்மை பெற்றது.

இருப்பினும் தான் நுகர்ந்தறிந்த திசையை அறிந்து வரும் இந்த நிலைகள் பெற்ற இந்தப் பட்சியின் தன்மையைப் போகன் கண்டுணர்ந்தான்.

மற்ற பட்சிகளின் உணர்வின் சத்தை அதன் பாச ஒலியை அதிலிருந்து இந்தத் தாவர இனங்களை நுகர்ந்தறிந்த அவன்
1.மற்ற பட்சிகளின் அந்த உணர்வு இயக்கமும்
2.அதில் எழும்பும் நாதத்தை இவன் கண்டுணர்ந்து
3.அது வெளிப்படுத்தும் உணர்வை நினைவு கொண்டு
4.கண் கொண்டு கூர்ந்து அதை நுகர்ந்தறிந்து
5.அதை மோகித்து அதைப் போகித்தான் தன் உடலுக்குள்.

இவ்வாறு சென்றடைந்த இந்த உணர்வு கொண்டு தான் அவன் விண்ணிலே தன்னிச்சையாகப் “பறக்கும் நிலை…” பெற்றான்.

பறக்கும் நிலை என்றால்
1.உடலைத் தனக்குள் ஆவியாக மாற்றி
2.அதனின் உணர்வு கொண்டு எங்கே செல்லுகின்றோமோ குவித்து
3.அங்கு இறங்கும் நிலை பெற்றான்.

உடலைக் கடந்து அவன் மேலே பறந்து செல்லவில்லை.

மாந்திரீகத்தில் ஓர் இடத்திலே ஒரு பொருளை வைத்துவிட்டு மனிதனில் உடலில் விளைய வைத்த இந்த உணர்வின் சத்தைக் கவர்ந்து அது இன்னொரு இடத்தில் மீண்டும் அதைக் காண்பிப்பார்கள். இதைக் கரையான் மந்திரம் என்று சொல்வார்கள்.

கரையான் எவ்வாறு தன் மேலே உருவாகும் அந்த உணர்வின் வேட்கைகள் மரத்தில் பட்டபின் பெரும் வைரம் போல் உள்ள மரமாக இருந்தாலும் ஆவியாகக் கரைந்து அது மண்ணாக மாற்றி விடுகின்றது.

அதனின் சத்தை உணவாக உட்கொண்டு இந்தக் கரையான் தன் உணர்வின் செயலாக அது இயக்குகின்றது. இதைப் போன்று தான் கரையான் மந்திரத்தைக் கற்றுணர்ந்தவன் இந்த உணர்வின் சத்தைத் தனக்குள் எடுத்தான்.

மந்திர ஒலிகள் சொல்பவர்கள் இந்தப் பொருளை அதற்குள் இணைத்த பின் உலோகமாக இருந்தாலும் மனிதன் செயற்காகச் செய்த பொருளாக இருப்பினும் அதனை உருகச் செய்யும் மறையச் செய்யும் உணர்வின் சத்தை அதன் மேல் பாய்ச்சியபின் அந்தப் பொருள் ஆவியாக மாறிவிடும்.

பின் டப்பாவை மூடி விட்டு அதில் சிறு ஓட்டையைப் போட்டு விட்டு ஈயம் வைத்துப் பற்ற வைத்து விட்டால் கடுகளவு இருக்கக்கூடிய ஓட்டைக்குள் அது அங்கே டப்பாவில் நிற்கும் அளவுக்கு எந்தப் பொருளோ அது உள்ளே நிற்கும்.

கரைத்து ஆவியாக அந்த டப்பாவிற்குள் இருப்பதை மீண்டும் அவன் சொல்லும் எதிர்மறை விட்டபின் அது உறைந்து அப்பொருளாக மாறும். இதுதான் மந்திரங்களில் இப்போது செயல்படுவது.

1.தங்கம் வா…!
2.எலுமிச்சம்பழம் வா…!
3.ஆப்பிள் வா…!
4,லிங்கம் வா….!
4.அது வா இது வா என்ற நிலையும்
5.வேப்ப இலையைக் கசக்கிய பின் தங்கம் வருவதும்
6.வேப்ப இலையைக் கசக்கிய பின் சிலைகள் வருவதும்
“எல்லாம்…” இந்த நிலை தான்.

செய்வினை வைத்திருக்கின்றார்கள் என்று சொல்வார்கள். மண்ணிற்குள் தோண்டிய நிலைகள் பார்த்தவுடனே செய்வினை செய்து விட்டான் என்று நம்மை “ஏமாற்றுவதும்…” இப்படித்தான்.

1.யாரும் செய்யவில்லை
2.அவன் செய்தான்… இவன் செய்தான்… என்று இவனே செய்கின்றான்.
3.இவனே எடுக்கின்றான் பொருளைக் காட்டுகின்றான்.
4.நினைவு படுத்துவதும் அவனே நமக்குள் நினைவு கூறும்படிச் செய்பதும் அதேதான். (மந்திரங்கள் செய்யும் படி)

போகமாமகரிஷியோ தான் கண்டறிந்த உணர்வின் தன்மையை இந்த உடலைப் பிரித்து மற்றதைச் செய்தாலும் அவன் கண்டுணர்ந்த நிலையை தன் உடலைக் காயகல்பமாக மாற்றினார். உயிருடன் ஒன்றும் உணர்வை ஒளியாக மாற்றினான்.

இந்த உணர்வின் நிலையை இங்கே உறையச் செய்த உடலை நிறுத்தி விட்டு தன் உடலின் தன்மை கொண்டு உணர்வை ஒருங்கக் குவித்துத் தான் எண்ணிய இடத்தில் இந்த உடலை மீண்டும் குவிக்கச் செய்து உருவானான்.

இப்படி வந்தவன் தான் அவன்.

ஆதியிலே ஒரு கோள் உருவாகி அது கரைந்து மீண