துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

 

நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறப்படும்போது இந்த உடலும் நலியத்தான் செய்யும்.

அசுர உணர்வு கொண்டு வளர்த்துக் கொண்ட இந்த உடலில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு வரப்படும்போது அசுர உணர்வால் வளர்க்கப்பட்ட அணுக்கள் மாறத்தான் செய்யும்.

அதே சமயத்தில்
1.நம் உயிரின் அணுக்கள் ஒளியாக்கப்படும்போது
2.இதுவும் (உடலிலுள்ள அணுக்கள்) குறுகப்பட்டு அந்தச் சத்தினை வடிக்கப்பட்டு
3.உணர்வின் தன்மை ஒளியாக்கப்படும் பொழுது
4.இந்த உடல் கட்டாயம் மடிந்தே தீரும்.

இந்த உணர்வின் தன்மை ஒளியாக்கப்பட்டு உயிருடன் ஒன்றப்படும் பொழுது ஒளியின் உடலாக மாற்றிச் செல்லும்.

எப்படி ஒரு புழு எதன் உணர்வை எடுத்ததோ அதற்குள் தான் சிக்கப்பட்டு அது தட்டாண் பூச்சியாக மாறுகின்றது. அதனுடைய முட்டைகளை எதன் எதனில் இடுகின்றதோ அந்த உணர்வுக்கொப்ப மாறுகின்றது.

பல வகையான “பட்டாம் பூச்சிகளாக” மாறுகின்றது. இதெல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

இதைப்போலத் தான் நமது மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் அருள் ஞானக் குழந்தைகளை உருவாக்க வேண்டும். இந்த நாட்டில் விஞ்ஞானத்தால் வந்த பேரழிவை அவர்களால்தான் மாற்ற முடியும்.

நாம் இந்த உடலில் குறுகிய காலமே வாழ முடியும். அகஸ்தியரைப் போன்ற உலகைக் காத்திடும் மெய் ஞானிகளை நாம் உருவாக்கிப் பழகுதல் வேண்டும்.

Leave a Reply