இராமனையும் கண்ணனையும் நீல வண்ணமாக ஏன் காட்டினார்கள்…? – ஈஸ்வரபட்டர்

இராமனையும் கண்ணனையும் நீல வண்ணமாக ஏன் காட்டினார்கள்…? – ஈஸ்வரபட்டர்

 

சூரியனின் ஒளிக் கதிர்கள் பிரகாசிக்கும் தருணத்தில்… நம் பூமியில் மழை பெய்யும் தருணத்தில் மேகக் கூட்டங்கள் விலகி மப்பும் மந்தாரமுமாய் மழைத் துளிகள் விழும் தருணத்தில் சூரிய ஒளி பூமியின் ஈர்ப்பில் பட்டுப் பிரகாசிக்கும் சமைப்பு அலையினால் “வானவில்” ஒளியின் வண்ணத்தை நாம் காண்கின்றோம்.

இராமாவதார காலத்தில் வான்மீகி எழுதிய காவியத்தில் வண்ணத்தின் ஒளியில் வளரும் குண உருவ இராமனை “நீல உருவாக” காவியத்தில் காட்டினார்.

சூரியனுக்கும் பூமிக்கும் வான மண்டலப் பால்வெளியில் சமைக்கப்படும்
1.பூமி எடுக்கும் சத்தின் வளர்ச்சி வண்ண ஒளியின் தொடர் வளர்ச்சியை
2.வான்மீகி மகரிஷி பெற்ற ஜெபத்தின் தத்துவக் காவியத்தில்
3.உருவக நிலை உருவாகும் வண்ணத்தின் சேர்க்கையின்… ஆத்ம குணத்தின்… வளர்க்க வேண்டிய ஜீவ சரீரத்தைப் பற்றி…
4.இராமாயணத்தின் மூலம் அன்றே நமக்குப் பல உண்மைகளை உணர்த்தியுள்ளார்.

வானவில்லில் எப்படி வண்ணங்களைக் காணுகின்றோமோ அதற்கொத்த வண்ணத் தன்மை ஆறு வண்ணங்கள்… வலுக்கூடிய ஏழாம் வண்ணமான உருவக வண்ணம் கொண்ட செயல் நிலையில் தான்… மனித ஜீவனும் பிறக்கின்றது.

இச்சரீரத்தை இயக்கும் ஆத்மாவின் வண்ணம் ஆறு. வானவில்லின் ஒத்த வண்ணத்தின் வலு ஒளி பெற வேண்டும் என்றால்…
1.ஆத்மாவின் இயக்கத்தால் ஜீவ சரீரத்தின் உருவகத்தின் மூலம்
2.பகுத்தறியும் ஞான மனிதனை ஒளிச் சரீரமாக (வெண்மை நிறம்) வளர்க்க முடியும்.

ஆறு வண்ணத்தின் திரு உருவாய் ஆறுகுணத்தின் அறுசுவை உண்டு செயல் நிலைக்கு மனிதக்கரு உரு வளர வளர்ச்சி பெற்ற அடுத்தநிலை தான் இராமனும்… கிருஷ்ணனும்…!

அதாவது… ஆத்ம வலுவின் ஒளியைப் பெற்ற… அடுத்த தெய்வ நிலை பெற்ற…
1.அடுத்த தெய்வ நிலை பெறும் ஒளியைக் குறிக்க
2.ஜீவ உடலின் ஆத்ம வலுவின் மனிதனுக்கடுத்த வளர்ச்சி ஒளி நிலையான
3.தெய்வ நிலை பெறும் வண்ணத்தைக் குறிக்கும் ஒளி தானப்பா “நீல ஜோதி ஒளி நிலை…!” (இராமனும்… கிருஷ்ணனும்)

இராமரையும் கிருஷ்ணரையும் நீல வண்ணத்தில் உருவகம் தந்து தெய்வங்களாகக் குறிப்பு காட்டிய வான்மீகியார் தந்த காவியத்தில் இப்படிப் பல உண்மைகள் உண்டு.
1.ஜீவ சரீரத்தின் அடுத்த நிலை பெறும் சூட்சும மார்க்கங்கள் அனைத்தையும் குறிப்புகளாக
2.காவிய உருவத்தில் ரூப கர்ண நாமங்களைச் சூட்டி வடித்துள்ளார் வான்மீகியார்.

மிளகாயின் விதையை விதைத்தால் அதிலுள்ள காரத் தன்மைக்கு ஜீவ நீர் சேர்த்து வளரும் தருணத்தில் அதன் உணர்வின் நிலைக்கொப்ப இக்காற்று மண்டலத்திலுள்ள தனக்குகந்த கார அமில உணவைத் தன் வளர்ப்பின் சத்திற்கு எடுத்து வளர்கிறது.

மிளகாய்ச் செடி அதன் ஊன் நிலை வெளிக்கக்கும் ஆவி உஷ்ணத்தினால் இலைகள் எல்லாம் முதிர்ச்சியுற்றுப் பூவாகிக் காயாகி முற்றிய பிறகுதான் மிளகாயாகவும் வித்தாகவும் பலனைத் தருகின்றது.

இப்படி அந்த வித்தின் தொடர் வளர்ச்சியில் மிளகாயின் பலனை எப்படிப் பெறுகின்றோமோ அதைப் போன்றுதான் நம் ஆத்ம உயிர் வித்தின் பலனும்.

இச்சரீரக் காலத்தின் முதிர்வில் சரீரத்திலுள்ள எலும்புகளின் ஊன் நிலை அது வெளிக்கக்கும் அலை உணர்வின் வளர்ப்பு நிலை வளரும் குழந்தைப் பிராயத்தில் பருவ நிலையில் சரீர மாற்று உணர்வு வளர்ச்சி முற்றுகின்றல்லவா..?

ஏனென்றால் உணர்வின் வளர்ச்சி முற்றல் ஜீவ வளர்ச்சி வளர்க்கும் பக்குவ காலமே… “பருவ காலம்…”

அதைப் போன்று எண்ணத்தின் உணர்வால் ஆத்மாவின் வளர்ச்சி முற்றும் வலு நிலை கூட வேண்டும் என்றால்…
1.ஆத்ம ஜெபத்தால் பெறும் வீரியத் தன்மையால்
2.சமமான குண வலுவைக் கொண்டு
3;ஆறு வண்ணங்களின் உரு வண்ணத்தைப் பெற்ற சரீரத்தை
4.ஒளி வண்ணத்தின் ஒரு வண்ணமாய் நீல வண்ண ஒளி ஆத்மாவாய்
5.இவ்வுயிராத்மா வலுப்பெறும் அந்த வளர்ச்சியின் உண்மையை
6.ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

(குறிப்பு:- சரீர ஜீவ உருவக வாழ்க்கையிலேயே சாதாரண பிறப்பு இறப்புக்கு… அடுத்து ஜென்மத் தொடர் பெறுவதற்கும்… ஆத்ம வலு நிலை கூடியிருந்தால் தான் பிறப்பிற்கு வர முடியும்)

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் உயிர் “ஓ…ம்” என்று பிரணவமாக்கி இயக்குகின்றது. நாம் சுவாசிக்கும் உணர்வின் தன்மையை ஜீவனாக்கி ஜீவனின் மலமாக நம் உடலை ஆக்கிக் கொண்டேயிருக்கின்றது.

“ஓ…” பிரணவம் “ம்…” பிரம்மம்
1.எனக்குள் எண்ணியதைச் சிருஷ்டித்து அதனின் இயக்கமாக இயக்கி
2.ஈசனாக எனக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறாய் என்று
3.நம் உயிரை ஈசனாக மதிக்கும்படிச் சொன்னார்கள் ஞானிகள்.

நாம் எண்ணியதை இயக்கி எண்ணியதைப் பிரம்மமாக்கி நமக்குள் உடலாக்கி அந்த உணர்வின் செயலை நமக்குள் இயக்கிக் கொண்டே இருக்கின்றான் உயிரான ஈசன்.

அந்த உயிரே ஆண்டவன்.

1.நம் உடலில் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும்
2.பெருமாளாக வீற்றிருப்பதும் உயிரே.
3.பெருமானாக இருப்பதும் உயிரே.

மனிதனின் நிலைகள் உருபெற்ற நிலைகளை உங்களுக்குள் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.

நமக்குள் இருக்கும் ஆறாவது அறிவு என்பது “முருகு…”. அதாவது மாற்றி அமைக்கும் பெருமானாக இருப்பது நமது ஆறாவது அறிவு.

1.உடலின் இயக்க உணர்வுகள் அனைத்திற்கும் பெருமாளாக இருப்பது உயிரானாலும்
2.இயக்கத்தின் தன்மை ஈசனாக இருப்பினும்
3.நம்மை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனாக இருப்பினும்
4.ஆறாவது அறிவின் தன்மையை “முருகப் பெருமான்…!” என்றனர் ஞானிகள்.

அதாவது இந்த உடலை ஆண்டவனாக ஆண்டு கொண்டிருப்பது ஈசனாக இருப்பினும் அவனின் நிலைகள் கொண்டு மாற்றியமைக்கும் பெருமானாக இந்த ஆறாவது உணர்வின் துணை கொண்டே இந்த உயிர் நம்மை ஆட்சி புரிகின்றான்.

இது அனைத்தையும் ஆட்சி புரியும் நிலைகளை நாம் நினைவு கொண்டு நாம் அல்ல என்ற நிலைகளுக்கு வருதல் வேண்டும்.
1.நம் உடலை அவனின் உடல் என்றும்
2.அவனின் உணர்வு என்றும்
3.அவனின் கண் என்றும் உணர்தல் வேண்டும்.

எல்லாமே அவனின் நிலைதான் என்று அறிந்து கொண்ட பின் ஒருவன் என்னைக் கேவலமாகப் பேசி விட்டான்… நான் அவனை விடுவேனா…! என்ன செய்கிறேன் பார்…” என்ற நிலைகளில் சொல்லி “ரோசப்படுவது…” என்பது தேவையற்றது.

ஒரு உடலுக்குள் விளைந்த உணர்வுகளை எடுக்காது உத்தராயணம் என்ற நிலைக்கு வர வேண்டும்.

அதாவது மகாமகம் என்று சொல்வார்கள். நாம் சமையல் செய்யும் போது எப்படிப் பொங்கி வடிக்கின்றோமோ இதைப் போல இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு “உத்தராயணம்…” தீமைகளை நாம் மாற்றியமைக்க வேண்டும்.

இந்த நிலை வரும் போது தான் பங்குனி உத்திரத்தை நாம் தெளிவாகக் கொண்டாட முடியும். தெளிந்திடும் உணர்வு கொண்டு நாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

இதற்குத் தான் மாதத்திற்கு நாள் என்று விழாக் கோலம் வைத்தனர் ஞானிகள். பன்னிரண்டு ராசி என்று சொல்வார்கள்.

பன்னிரண்டு ராசி என்று சொல்லும் போது நமக்குள் எந்த ராசி அதிகரிக்கின்றமோ அதனின் விளைவின் தன்மை தான் நமக்குள் வருகின்றது.

“முருகப் பெருமான்” – நாம் மாற்றி அமைக்கும் ஆறாவது அறிவின் நிலைகள் கொண்டு அது உயர்ந்த நிலைகள் கொண்டு நமக்குள் பெருமாள் ஆக இருந்து ஆட்சி புரியும் உயிருடன் அவனுடன் ஒன்றி அவனாக நாம் ஆகும் நிலையே மகரிஷிகள் அன்று உணர்த்திய தியானம்.

தியானம் என்பது என்ன…?

நம்மை மாற்றி அமைக்கும் முருகப் பெருமானின் உறு துணை கொண்டு மெய் ஞானி உணர்வை நமக்குள் இணைத்து உயிருடன் ஒன்றிடும் நிலையாக அந்தப் பெருமானுடன் ஒன்றி என்றுமே நாம் ஒளியின் சுடராக வாழ்வதே தியானம்.

நமது எல்லை எது…? இனி உடல் பெறாத நிலை தான் உத்தராயணம்.

இந்த மனித உடலை விட்டு நாம் அகன்ற பின் ஒளியின் சிகரமாக நாம் ஆவதற்கே இந்தத் தியானம்.

Leave a Reply