மகரிஷிகளின் அருள் சக்திகளை எலும்புக்குள் உள்ள ஊனிலே வலுவாக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

மகரிஷிகளின் அருள் சக்திகளை எலும்புக்குள் உள்ள ஊனிலே வலுவாக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

ஈரமுள்ள பொருள் எதுவாகிலும்… அதன் மேல் காற்று பட்டவுடன் அதன் மணம் வெளிப்படுகின்றது. மூடி வைத்துள்ள சமைக்கப்பட்ட பொருளைத் திறந்தவுடன் அதன் மேல் காற்று படும் பொழுதும் மணம் வீசுகின்றது.

மண் மரம் போன்றவற்றில் நீர் பட்டவுடன் அதிலிருந்து உஷ்ண ஆவி வெளிப்படும் பொழுது காற்றின் மேல் அந்த ஆவி வெளிப்பட்டு மணம் வெளி வருகின்றது.

எந்தப் பொருளைச் சமைத்தாலும் அச்சமைப்பின் உஷ்ணத்திற்கொப்ப “சமைக்கப்படும் பொருளின் ஆவி நிலையின் மணம்” வெளிப்படுகின்றது. இந்தக் காற்றில் தான் இந்தப் பூமி வளர்த்துப் பக்குவப்படுத்திய அனைத்து அமிலச் சத்துகளும் நிறைந்துள்ளன.

ஒன்றுடன் ஒன்று உராயும் உராய்வில் அதனுடைய மணமும் மாற்று நிலையும் செயல் கொள்கின்றது. இதைப் போன்று தான் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளி காந்த மின் அலைகளுடன் பூமியின் ஈர்ப்பு சக்தி மோதலினால் உராய்வாகின்றது.

ஒன்றின் மோதலில் இருந்து வெளிப்படுத்தும் உராய்வைக் கொண்டு அதனதன் மணம் எப்படி வெளிப்படுகின்றதோ… அதைப் போன்று சூரியனின் சமைப்பு அணு காந்த மின் ஒளியை இப்பூமியின் சமைப்பு ஓட்ட உராய்வினால் ஒளியாகக் காண்கின்றோம்.

சூரியனின் ஒளியை நம் பூமி எடுக்கும் உஷ்ண மின் அழுத்தத்திற்கொப்ப சுழலுகின்றது. அதே போல் சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற சுழற்சிக் கோளங்களான சந்திரன் செவ்வாய் வியாழன் புதன் சனி முதலான நாற்பத்தி எட்டுக் கோளங்களும் மற்ற நட்சத்திரக் கோளங்களும் அவை அவை வளர்ந்த விதம் தூர விகித நிலைக்கொப்ப அவை ஒளி மணம் பெறும் நிலை பெற்றுச் சுழன்று கொண்டுள்ளன.

சூரியக் குடும்பத்தின் சுழற்சி மண்டலத் தொடர்பு கொண்டு தான் சூரியனும் ஒளி பெற்று ஒளிர்ந்து கொண்டுள்ளது.

சாதாரணப் பொருளுக்கே காற்றின் மோதலினால் மணம் வெளிப்படுகின்றது.
1.சமைக்கப்படாத பொருளின் மேல் காற்று மோதி வெளிப்படும் மணத்தைக் காட்டிலும்…
2.“அதி உஷ்ணத்தைக் கொண்டு” சமைக்கப்படும் பொருளின் மணம் சமைக்கப்படும் காலத்தில் அதிகமாக வீசுகின்றது.

பூமியின் பொருளின் மணங்கள் சுழன்று கொண்டே… மோதலின் மாற்றம் கொண்டே… ஒளியாகி ஒளிர்வதைப் போன்று…
1.இந்த ஆத்ம ஜீவ சரீரத்தின் அணு வளர்ப்பை ஒளியாக்கும் நிலைக்கு
2.ஒளி கொண்டு வளர்வதற்கு வழி காட்டும் முறை தான் இந்த உபதேசம்.

பூமியின் சுழற்சியில் ஒலியாகி ஒளியாகி பூமி ஈர்ப்பின் சுவாசம் வெளிப்பட்டு பூமி சத்தெடுத்து ஆவி அலைகளை வெளிக் கக்குகிறது.

நிலத்திற்கு மேல் உள்ள நீர் நிலையான வட துருவம் தென் துருவம் மற்ற ஆறுகள் குளங்கள் கடல் ஆகியவை வெளிப்படுத்தும் ஆவி அலையின் சமைப்பு மணம் கொண்டு பூமி ஒளி பெற்று மணம் பெற்று ஜீவ ஞான செயல் வித்துக்களை உருவாக்கிக் கொண்டே உள்ளது.

ஆறறிவு கொண்ட பகுத்தறியக் கூடிய எண்ணம் செயல் கொண்ட மனித உருவகங்களை உருவாக்கிடும் கோடானு கோடி உயிரணுக்களை வளர்க்கும் சக்தி கொண்டது தான் இந்தப் பூமி.

இத்தகைய உருவாக்கும் சக்திகள் கொண்ட பூமியின் உண்மைகளை உணர்ந்து…
1.மனிதன் உன்னத உயர்வு ஒளி ஞானத்தைப் பெற
2.எண்ணத்தின் சமைப்பாகச் சுவாசம் எடுக்கும் எண்ணத்தின் உணர்வுக்கொப்ப இச்சரீர்த்தை மணமாக்கி
3.மணத்தின் ஒளி காந்த நுண் அணுவை இச் சரீரம் வளர்த்து
4.காந்த மின் அணுவின் வலுவை எலும்புகளின் ஊன் நிலையில் வலு ஏற்றி
5.அந்த வலுவின் ஆவி அமில முலாமினால் ஆத்ம வலு கூடி
6.ஆத்ம வலுவினால் வளரப் பெறும் ஒளித் தன்மைக்கு
7.மகரிஷிகள் வளர்த்துக் கொண்ட ஒளியின் வலுவை… காந்த மின் அலை வளர்ச்சியை…
8.மனிதச் சரீரத்திலே வளர்த்து வலுவாக்கும் வழி முறையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

Leave a Reply