“எந்தச் சக்தியும் தனித்துச் செயல்பட முடியாது…!” – ஈஸ்வரபட்டர்
1.இச்சரீர அணுத் தன்மை ஒவ்வொன்றுமே மலம் தான்.
2.இச்சரீர சதை அணு மலத்தின் வளர் அணு வளர்ப்பு வார்ப்பு எலும்புகளின் வலுத் தன்மைதான்.
3.ஒளி பெறும் ஆத்ம சக்தியை எண்ணத்தில் எடுக்கும் உயர்ந்த குணத் தன்மையால்
4.சரீரம் வளர்க்கும் ஒவ்வொரு அணுவையுமே
5.ஏற்கனவே எக்குணத்தின் வழித் தொடரில் பழக்கப்பட்டு வழி பெற்றிருந்தாலும்
6.எண்ணத்தால் எடுக்கும் ஞானத்தின் நற்குணத் தொடர்பைக் கொண்டு உடலில் அணு வளர்ந்து
7.அதனின் சமைப்பினால் எலும்புகள் வளர்ந்து
8.காந்த மின் அலை உணர்வுத் தன்மையினால் எலும்புத் தன்மை உறுதி கொள்ளும் வார்ப்பு நிலைக்கொப்ப ஆத்ம வலு கூடுகின்றது.
இச்சரீர பிம்ப அணுக்களின் வளர்ப்பு நிலைக்கொப்பத்தான் இவ் எலும்பின் வளர்ப்பு அமைகின்றது. காந்த மின் சக்தியின் ஈர்ப்பினால் எலும்புகள் உறுதியாகி ஆத்ம வலு கூடுகின்றது.
அப்படிப்பட்ட வலுத் தன்மை பெற்று ஒளி பெறும் உயர்ந்த சக்தியாக்கி விட்டால்… காந்த மின் சக்தியின் வார்ப்பான எலும்பின் வலுத் தொடரைக் கொண்டு
1.ஒளி கொண்ட ஆத்ம சக்தியை எதனிலும் ஊடுருவவிட்டு
2.உயர் தன்மையின் வார்ப்பாக ஆத்ம சக்தியை ஒளி பெறச் செய்யலாம்.
உயர் குண சக்தியால்… தன்னைத்தான் நம்பி தன்னுள் வளரும் பல கோடி கோடி உயிரணுக்களையும்
1.உயர் நிலை அணுக்களாக வளர விட்டு
2.அவ்வுயர்வின் வலுவை எலும்புத் தன்மையில் வலுவாக்கி
3.ஆத்ம சக்தியை உயர்த்திக் கொண்டோமோனால்
4.தன் ஆத்மாவைத் தானே பார்க்கவும் பேசவும்
5.ஆத்மாவைக் கொண்டு எச்சக்தியும் பெறவும் உயர்வு ஞான சக்தியால் வழிப்படுத்தவும் முடியும்.
ஆத்ம வலு தான் மனிதனுக்கு அடுத்த தெய்வ சக்தி நிலை…!
ஆத்ம வலுக் கொண்ட தன்மையினால் இவ்வாத்மாவின் ஒளித் தன்மையைக் கொண்டு முன்கூட்டி அறியும் ஞானத்தையும்… உலகச் சுழற்சி தொடர்பு முறையினால்..
1.உலகத் தன்மையில் எங்கெங்கு மாற்று நிலைகள் ஏற்படும் நிலையை அறியவும்
2.ஏற்படக்கூடிய மாற்றத்தின் அபாயத்தை ஆத்ம வலுக் கொண்டு அறியும் தன்மையில் மாற்றியமைக்கவும் முடியும்.
பிற ஈர்ப்பலையில் சிக்கா ஒளி வட்ட ஞானத்தால் ஆத்ம வலுவின் சித்துத் தன்மையில் அறியும் அஷ்டமாசித்து நிலை அனைத்தும் ஆத்ம வலுவில் பெற்றாலும்
1.எவ்வாத்ம வலுவை எவ்வழித் தொடரில் பெறுகின்றோமோ
2.அவ்வலுவுக்குத் தகுந்த உணவு நிலையைப் படைத்துக் கொண்டே தான் இருக்க வேண்டும்.
உடலுக்கு உணவை உண்ணுகின்றோம். உணர்வுக்குத் தக்க உறக்கம் கொள்கின்றோம். அதைப் போன்றே ஆத்ம வளர்ப்பிற்கு வளர் தொடர் சக்தி நிலைக்கு உணவாக
1.மனித ஆத்ம பிம்பத்தால் பெற்ற ஆத்மாவின் வலுவிற்கு உணவு
2.எவ்வழித் தொடரில் உயர்வு கொண்ட ஆத்ம நிலை பெற்றோமோ
3.அத்தொடர்பு கொண்ட சரீர பிம்ப ஆத்மாக்களின் பால் இருந்து வெளிப்படும்
4.எண்ண உணர்வின் சப்த அலையின் தொடர்பு நிலை சுழற்சி நிலை இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
தனித்து ஆத்ம சக்தி பெற முடியாது…! ஆணுக்குப் பெண் சக்தியும் பெண்ணிற்கு ஆணின் சக்தியும் கூட்டுச் சக்தியின் போதனைத் தொடர் அலை சக்தியும் அவசியம்.
எண்ணத்தின் உணர்வைக் கொண்டு… அன்பு பாசம் வீரம் சாந்தம் கொண்ட உயர் குணத்தின் வழித் தொடர் வாழ்க்கையில் கலந்துறவாடும்… ஆத்மாக்களின் நம் பால் செலுத்தப்படும் அலை உணர்வின் ஈர்ப்பினால்… நம் ஆத்மாவிற்கு நாம் செலுத்தும் உணவு… நாம் எத்தொடரில் ஞானம் பெற்றோமோ அத்தொடர்பின் உணவாக நமக்குக் கிட்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
இப்பொழுது வேதங்கள் என்று சொல்வது… அன்று சாஸ்திரங்களில் தமிழ் சித்தாந்தம் வழி… சைவ சித்தாந்தத்தின் தன்மை தான் அங்கே உருவாக்கப்பட்டது. பின் வேதங்கள் என்ற நிலைகள் உருமாற்றப்பட்டது.
ஏனென்றால் சைவ சித்தாந்தம் என்பது அகஸ்தியனால் வெளியிடப்பட்டது.
அந்த உணர்வின் தன்மை வெளிப்பட்டதை இவர்கள் வேதங்களாக இதே தமிழ் மொழியைத்தான் வடிவமைக்கும் தன்மைகள் மாற்றி ஒலியின் தன்மையை மாற்றி வேறு ஒரு ரூபத்தில் அலைகளாக மாற்றினார்கள்,
1.அகஸ்தியனால் வெளிப்படுத்தப்பட்ட சைவ சித்தாந்தத்தின் பேருண்மைகள்
2;.இன்றும் அழியாதவண்னம் நம் பூமியில் படர்ந்திருக்கின்றது… பிரபஞ்சத்திலும் படர்ந்துள்ளது.
அகஸ்திய மாமகரிஷி பெற்ற அருள் சக்திகளை நமக்குள் சேர்த்து நாம் அந்த விண்ணில் உருப்பெறும் உணர்வின் தன்மையை நமக்குள் கவர்ந்து ஒளிக் கதிராக மாற்றிடல் வேண்டும்.
1.சப்தரிஷி மண்டலங்களும் துருவ நட்சத்திரமும்
2.அகண்ட அண்டத்தில் வருவதை எப்படி ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளதோ
3.அதைப் போல அந்த உணர்வினை நமக்குள் இணைத்து விட்டால்
4.ஒளியின் தன்மையாக நாம் உயிருடன் ஒன்றி
5.என்றும் பேரின்பப் பெரு வாழ்வாக வாழ முடியும்.
இதைச் சுருங்கச் சொல்கிறேன்… விரிவாகச் சொன்னால் இன்னும் எத்தனையோ வகைகளில் சொல்லலாம். ஆனால் ஏதோ என்றும்… இது மிகவும் எளிதில் கிடைக்கிறது என்று யாரும் அலட்சியப்படுத்திவிட வேண்டாம்.
குருநாதர் எனக்குள் பதிவு செய்த உணர்வின் தன்மைகளை அதை எல்லாம் அறியும் தன்மையாக 20 வருடங்கள் தனித்து அனுபவம் பெறும்படி செய்தார்.
ஞானிகள் கண்ட பேருண்மையை அறிவதற்காகக் குடும்பத்தைப் பிரிந்து காடு மேடெல்லாம் அலைந்து உண்மையை உணர்ந்து அதைப் பெறும் தகுதியைப் பெற்றேன்.
1.அதை அனைவருக்கும் பெறச் செய்ய முடியும்…
2.அனைவரும் பெற முடியும்… என்ற இந்த உண்மையைக் குருநாதர் காட்டியதால்
3.உங்களுக்கும் இதைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றேன்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வேறு வேறு விதமாக நான் சொல்வேன்.
1.காரணம்… அந்தச் சந்தர்ப்பத்தில் கிட்டும் அந்த மெய் உணர்வின் சக்தியை
2.உங்களுக்குள் எப்படியும் அதைப் பாய்ச்சிட வேண்டும்
3.அதை நீங்கள் பெறும் தகுதியை உருவாக்கிட வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது.
ஏனென்றால் காலத்தால் அழியாத இது “மிகப் பெரிய பொக்கிஷம்…” கிடைப்பது… “மிக மிக அபூர்வம்”.
1.என்னில் இது கிடைத்து
2.என்னுடன் இது மறைந்திடாது
3.எல்லோரையும் இதைப் பெறச் செய்து இது மறைந்திடாது
4.எல்லோரும் வளர்ந்திட வேண்டும் என்பதற்கே இதை நான் சொல்வது.
நல்லது செய்பவர்களைக் காப்பாற்றி… நல்லதை ஓங்கச் செய்வது தான் தர்மம்
யதார்த்தமாக நல்லதையே நாம் சொல்லிக் கொண்டு வருகிறோம் என்று சொன்னாலும் நம்மை ஏமாற்றுபவர்கள் என்ன செய்கின்றார்கள்…?
வீட்டில் பணமெல்லாம் நிறைய வைத்திருக்கின்றேன்.
1.இரவெல்லாம் கூடக் கதவைத் திறந்து வைத்திருப்பேன்… எதையும் பூட்டுவதில்லை என்று சொல்லி இருந்தால்
2.அடுத்தாற்படி அதைக் கேட்பவர்கள் ஓஹோ… அப்படியா… சரி…! என்று சொல்லிவிட்டு லேசாகத் தாராளமாக வந்து எடுப்பார்கள்.
நாம் யதார்த்தமாகச் சொல்கின்றோம். ஆனால் கபடு சூதில்லாதபடி சொல்கின்றோம். ஆனால் அதை மூடி மறைக்கவில்லை என்கிற போது என்ன செய்யும்…?
அவர்களிடம் நாம் தன்னை அறியாமலேயே…
1.எப்பொழுதெல்லாம் வீட்டில் இல்லாது வெளியிலே இருப்போம் என்றும் சொல்லியிருப்போம்
2.எங்கள் வீட்டிற்குள் யாரும் வந்து திருடுவதில்லை என்றும் நல்லதாகச் சொல்லியிருப்போம்.
அடுத்தாற்படி இதைக் கேட்டவுடனே நேராக வந்து எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள்.
இதே மாதிரித் தான் நான் பொய்யே சொல்ல மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் என்ன ஆகும்…?
நான் பெரிய சாமியாராக இருக்கின்றேன். காட்டிற்குள் நான் தவம் இருந்து கொண்டிருக்கின்றேன். அந்தப் பாதையில் நல்லவர்களும் கெட்டவர்களும் வந்து போய்க் கொண்டிருக்கின்றார்கள்.
திருடன் வருவதும் தெரிகின்றது. மற்றவர்கள் அவரவர்கள் வாழ்க்கைக்குச் செல்வதும் தெரிகிறது. அங்கே “பொய்யே சொல்ல மாட்டேன்…!” என்கிற வைராக்கியத்தில் நான் இருக்கின்றேன் என்று வைத்துக் கொள்வோம்,
அந்த வைராக்கியத்துடன் இருக்கும் பொழுது என்ன நடக்கிறது…?
நகை நட்டுகளுடன் குடும்பத்துடன் முன்னாடி வருகின்றார்கள். அவர்கள் வருவதைப் பார்த்தவுடனே “நீங்கள் எந்த ஊருக்குச் செல்கின்றீர்கள்…?” என்று கேட்கின்றேன்.
இன்ன ஊருக்குப் போகிறோம்… இந்தப் பாதையில் தான் போகிறோம் என்றும் சொல்கிறார்கள்.
சரி நல்லபடியாகச் சென்று வாருங்கள்…! என்று நான் ஆசிர்வாதமும் கொடுக்கின்றேன்.
இவர்கள் நகை போட்டு வந்ததைப் பார்த்துவிட்டு அடுத்தாற்படி ஒரு திருடன் வேகமாக வருகின்றான்.
வந்தவுடன் பார்க்கின்றான். நான் உட்கார்ந்திருக்கின்றேன். நான் தான் பொய்யே சொல்ல மாட்டேன் அல்லவா…!
சாமி…! இந்தப் பக்கம் ஒரு நான்கு ஐந்து பேர் போனார்களா…? எங்கே போகின்றார்கள்…? என்று என்னிடம் அவன் கேட்கிறான்.
1.இவன் திருடன் என்று எனக்குத் தெரிகிறது
2.அவன் கேட்பவர்கள் நகைகளை அணிந்து கொண்டு செல்கின்றார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.
3.அப்போது… ஆமாம்… இந்தப் பாதையில்தான் செல்கின்றார்கள் என்று நான் சொன்னால் என்ன ஆகும்…?
இந்த இடத்தில் “நான் பொய்யே சொல்லக் கூடாது…” என்ற விரதத்தில் இருந்தேன் என்றால் நல்லவர்களைக் காப்பாற்ற முடியாதபடி ஆகி நேராகத் திருடனுக்கு வழி காட்டியது போல ஆகிவிடும்.
அவன் போனால் என்ன செய்வான்…?
அவர்கள் கழுத்தை அறுத்துவிட்டு போட்டிருக்கும் நகைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு போய்விடுவான்.
1.நான் என் தர்மத்தைக் காப்பாற்ற நினைத்தாலும் அந்த நல்லவர்களை எப்பொழுது காப்பாற்றுவது…?
2.காப்பாற்ற முடியுமா…? இல்லை.
ஓரு பெரிய கட்டிடத்தை நாம் கட்டும்போது பொய்க்கால் வைத்துத் தான் சிமெண்ட்டைப் போடுகின்றோம். அந்தப் பொய்க்கால் இல்லை என்றால் நம்மால் சிமெண்ட்டை வைக்க முடியாது.
ஆகவே ஒரு நல்லது செய்ய வேண்டும் என்றால் எதிலுமே அந்த வலுவான எண்ணம் வேண்டும். ஆக…
1.விஷம் இல்லை என்றால் சூரியன் இயங்காது.
2.விஷம் இல்லை என்றால் எந்த அணுவும் இயங்காது.
விஷம் இருந்தால் தான் நெகட்டிவ் பாசிட்டிவ் ஒரு இயக்கச் சக்தியாக வரும். “கரண்ட்” அப்படி இல்லையென்றால் அது இயங்காது.
ஆகவே எல்லாவற்றிலுமே இயக்கத்தின் தன்மையை நாம் சமப்படுத்த வேண்டும்.
இந்த மனித வாழ்க்கையில் நாம் எப்படி நடக்க வேண்டும் என்று ஞானிகள் சொல்லியிருக்கின்றார்கள். இப்பொழுது அதைத் தான் உங்களுக்குள் பதிவு செய்கிறேன்.
1.இதற்கு முன்னாடி எந்தத் துன்ப நிலைகள் இருந்தாலும் அதையெல்லாம் நீங்கள் நிறுத்திவிட்டு
2.மெய் ஞானிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் ஓங்கி வளரச் செய்வதற்குத்தான் இதை எல்லாம் சொல்வது (ஞானகுரு).
முக்காலமும் அறியவல்ல சக்தியை நாம் ஒவ்வொருவரும் பெற முடியும்…! – ஈஸ்வரபட்டர்
அகம் புறம் சூட்சமம் இவற்றின் உண்மைத் தத்துவத்தை உணராமல் புற நிலையைக் காணும் வாழ்க்கையின் சுழற்சி ஓட்டம் தான் இன்று உள்ளது. சூட்சமத்தால் வெளிப்படுத்தப்பட்ட பல தத்துவங்கள் மறைக்கப்பட்ட நிலையில் தான் இன்றளவும் உள்ளது.
மனித ஞானம் பக்குவம் பெற்று… வாழ்க்கை என்ற கூட்டமைப்பு நெறி முறை நிகழ்ந்த காலத்திலிருந்தே… மனித ஞானத்தின் வாழ்க்கையின் வழி முறைச் செயலுக்கு “பல பக்குவ ஆரோக்கிய நிலைகளைச் சித்தர்கள் காட்டிச் சென்றனர்…!”
சமைத்து உண்ணும் உணவைப் பச்சை வாழை இலையில் சூடாகப் படைத்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தியது சித்தர்கள் தான்…!
உணவின் உஷ்ணம் வாழையிலையின் மீது பட்டு அதிலிருந்து வெளிப்படும் ஆவிச் சத்துடன் உணவை உண்ணும் பொழுது
1.உணவின் சுவையும்…
2.அவ்வாவியிலிருந்து வெளிப்படும் இரசசத்தான அமில குணம் உடலுக்குள் சேர்ந்து
3.உணவின் செரிப்பிற்கும் உடல் ஆரோக்கியத் தன்மைக்கும் வழிகாட்டியாக உள்ளதன் நிலையை உணர்ந்து
4.அந்தப் பக்குவ முறையைச் சித்தர்கள் காட்டிச் சென்றனர்.
இதைப் போன்று வாழ்க்கை நெறிக்குப் பல உண்மைகளை உணர்த்திச் சென்றார்கள். அதைப் போன்ற சூட்சமத்தால் மறைக்கப்பட்ட பல நிலைகள் இன்றும் உள்ளன வாழ்க்கையில்…!
ஆதி சக்தியின் பரம்பொருளின் சக்தி நிலையைச் சிறிய இவ் இரண்டு கண்களைக் கொண்டு பரந்த கண்ணுக்கெட்டிய பலவற்றையும் பார்க்கும் சக்தி கொண்ட மனிதப் படைப்பு தான் நாம்…!
விஞ்ஞானத்தில்… இன்று ஓர் இடத்திலிருந்து ஒளி பரப்பபடும் உருவத் தொடர் காட்சிகளை இக்காற்றில் கலக்க விட்டுப் பல மைல்களுக்கு அப்பால் அதே உருவத்தின் செயலை அமிலச் சேர்க்கையின் உலோக அலைத் தொடரில் காணும்படி செய்கிறார்கள்.
அதாவது மின் அலையின் மோதலினால் எங்கோ தொலைவில் நடைபெறும் நிகழ்ச்சிதனை… காற்றலையில் கலந்து வரும் அந்த அலைத் தொடரை உருவமாக்கி இருந்த இடத்திலேயே பார்க்கச் செய்கின்றனர்.
இதைப் போன்ற ஞானத்தைக் கொண்டு
1.ஆத்ம தியானத் தொடரால் இவ் எண்ணத்தின் உந்தலை எதில் செலுத்துகின்றோமோ
2.அத்தொடரில் உள்ள நிலைகள் அனைத்தும்
3.புருவத்தின் மத்தியில் உள்ள எலும்பு கவன நரம்புகளில் எண்ணிய சுவாச மோதல் ஏற்பட்டவுடன்
4.எதை எண்ணித் தியான நிலை எண்ணம் செல்கின்றதோ
5.அங்கு நடக்கும் நிலையைத் தொலைக்காட்சியில் காண்பதைப் போன்று
6.பக்குவம் பெற்ற ஆத்ம ஞானத்தால் காணவும் ஒலி/ஒளி கேட்கவும் முடியும்.
ஆத்ம ஞானத்தால் முக்காலமும் அறியவல்ல சக்தியை ஒவ்வொரு ஆத்மாவும் பெற முடியும்…!
சென்ற காலம் நடந்தவை யாவையுமே இக்காற்றலையில் தான் கலந்துள்ளன. உணர்வின் எண்ணத்தைப் பின்னோக்கிய அலைத் தொடரில் செலுத்தப்படும் நிலைக்கொப்ப உயிரணு தோன்றிய காலம் தொட்டே மனித ஞான சக்தியால் எதனையும் காண முடியும்.
நிகழ் நிலையையும் எண்ணத்தைச் செலுத்தும் உணர்வின் மோதலினால் “ஞானதிருஷ்டி” என்று சித்தர்கள் உணர்த்திய நிலையால் நிகழும் காலத்தையும் அறியலாம்.
எதிர் கால நிலையை நாளை நடப்பதை இன்றெப்படி அறிய முடியும்…! என்ற வினா தான் இன்றைய செயலில் உள்ளது.
பிறப்பும் இறப்பும் ஆண்டவன் செயல்… காலதேவனின் கருணை…! என்ற எண்ணம் பக்தி மார்க்கத்தில் உணர்த்துகின்றார்கள்.
அதையே விஞ்ஞானின் அமிலச் சேர்க்கையின் நிலையை இயந்திரச் சாதனங்களின் துணையைக் கொண்டு கால நிலைகளின் மாற்றத்தையும் மண்டலச் சேர்க்கைக் காலங்களில் புள்ளி விவரங்களையும் வைத்து உணர்த்தத்தான் செய்கின்றனர்.
ஒரு இயந்திரத்தால் உணரக்கூடிய எதிர்கால நிலைகளை
1.ஆத்ம ஞான வலுக்கூட்டிக் கொண்ட ஞான சக்தியினால்
2.எதிர் காலத்தில் நடக்கும் நிலைகளை இன்றே உணரக்கூடிய உண்மை பெறும் நிலைய அடையலாம்.
“முக்காலமும் உணரும் பொற்காலமாக..” இவ்வாத்ம காலத்தைப் பக்குவப்படுத்துங்கள் “பொற்கோவிலாக..” ஆத்மாவின் வளர்ப்பில் எவ் ஈர்ப்பின் உணர்வும் மோதாமல் “புடம் போட்ட பொன்னாகப் பக்குவப்படுத்துங்கள்…”
ஈயம் பித்தளை செம்பு தங்கம் இவற்றில் திரவகத்தை விடும் பொழுது மற்ற உலோகங்கள் கரைந்தாலும் தங்கம் எப்படித் தனித்து நிற்கின்றதோ அதைப் போன்ற புடம் போட்ட தங்கமாக இவ்வாத்ம வலுவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
எக்காலமும் அறியவல்ல ஆற்றலும்… முக்காலமும் உணரும் சக்தி நிலையும்.. இவ்வாத்ம ஞானத்தால் பெறவல்ல சக்தியை.. இந்த உபதேசத்தின் சக்தியால் பெறும் ஜெப தியானத்தால்…
1.என் ஈர்ப்பின் வட்டத்தில் வழி வந்த
2.ஆத்ம தியானம் கொண்ட தம்பதிகள் ஆண் பெண் இருவரும் இணைந்து
3.என் சக்தி நிலையில் உணர்த்தப் பெற்ற உபதேசத்தின் உயர்வை இதைப் படிக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் வளர்த்து
4.தன் ஆத்ம தொடர்பு கொண்ட பல ஆத்மாக்களுக்கும் இந்த ஆத்ம தியானத்தின் உண்மைச் சத்தியத்தை உனர்த்தி
5.ஆதி பரம்பொருளின் சக்தியின் படைப்ப்பின் உயர்வுப் படைப்பை ஒவ்வொரு ஆத்மாவும் பெற்று
6.”சக்தியின் சக்திக்கே… ஆண் பெண் இனம் வளரச் சக்தி தாருங்கள்…!”
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
மாடு ஆடு இவை எல்லாம் நஞ்சின் சத்தைத் தன் உடலாக மாற்றிக் கொள்கின்றது. ஆனால் அசிங்கமான பொருள்களையும் பல தாவர இனங்களையும் உணவாக உட்கொள்கிறது.
அவைகளை உணவாக உட்கொண்டாலும் அந்த நஞ்சின் தன்மையைத் தன் உடலாக வலுவாக சேர்த்துக் கொள்கின்றது. ஆனால் அதே சமயம்
1.நஞ்சின் சத்தை உடலாக்கிக் கொண்டாலும்
2.நல்ல சத்தினை மலமாக மாற்றுகிறது.
உதாரணமாக விஷத்தை ஒருவர் உட்கொண்டு விட்டார் என்று வைத்துக் கொள்வோம். அதனால் உடலு முழுவதும் நஞ்சாக மாறுகின்றது.
அதற்கு எருமை மாட்டின் சாணத்தைக் கரைத்து விஷத்தைக் குடித்தவரின் பாதத்தை அதன் மேல் வைத்தால் அவர் உடலில் இருக்கக்கூடிய நஞ்சின் தன்மை கீழே இறங்கிவிடும்.
இது வைத்தியரீதியிலேயே இவ்வாறு உண்டு.
ஒரு விஷம் கொண்ட தண்ணீரில் மருந்துகளை அதிகமாகக் கொடுத்து அதனின் தன்மை அந்த உடலிலே விஷங்கள் பரவச் செய்தாலும் அவரைக் காக்க முடியும்.
உடனடியாக எருமைச் சாணத்தை எடுத்துக் கொண்டு இது கரைக்கச் செய்து
1.அவருடைய பாதத்தை அதன் மேல் வைத்து விட்டால்
2.பூமியின் நிலைகள் இருக்கும் இந்த காந்தப்புலன்
3.அதை இழுத்துவிடும்.
தாவர இனத்தில் இருக்கும் சத்தினை எப்படி இந்த மாட்டின் தன்மை உணவாக எடுத்துக் கொண்டதோ இந்த மாட்டின் உடலிலே இருந்த இந்தச் சத்து இது கரைத்தது போல்
1.இந்த மாட்டுச்சாணம் உடலிலுள்ள விஷத்தினை இழுத்துக் கவர்ந்து
2.பூமியிலே விட்டுவிடும்.
ஆகவே இதைப் போல ஒரு விஷத்தின் உணர்வின் சத்து எவ்வாறோ அதனின் நிலைகள் இதைச் செய்யும். இது தான் கூர்மை அவதாரம் என்பது.
நஞ்சின் இயக்க நிலைகளையும் அதை முறியடிக்கக்கூடிய ஆற்றல்களையும் அந்த ஞானிகள் கண்டுணர்ந்த பேருண்மைகளைக் குருநாதர் காட்டிய அருள் வழியில் இங்கே உணர்த்துகின்றோம்.
1.நஞ்சை இழுத்துத் தனக்குள் சேர்த்து சாணத்தை நல்லதாக்குகின்றது மாடு.
2.அந்தச் சாணத்தை நாம் மிதித்தால் நம் உடலிலுள்ள விஷத்தை இழுத்து நம் உடலை நல்லதாக்குகின்றது.
ஆண் பெண் அமில சக்தி தான் நம் பூமியின் சக்தியே…! – ஈஸ்வரபட்டர் சொன்னது
சரீரத்தைக் கொண்டு யோகாசனம் சில வித்தை விளையாட்டுக்கள் எல்லாம் செயல் புரிகிறார்கள். அவர்களின் அங்கக்கூறின் அமிலத் தன்மையே அவ் ஈர்ப்பின் எண்ண உணர்வின் வலுவான அணு வளர்ப்பினால்
1.சரீரத்தைப் பத்து நாட்கள் அல்லது பதினைந்து நாட்கள்
2.சுவாசத்தை அடக்கிய முறையிலேயே சில விந்தை புரிபவர்களும் உண்டு.
அதைப் போன்றே சரீர இயக்கத்தால் சரீரத்தைப் பல விந்தைச் செயலாக யோகாசனம் (GYMNASTICS) போன்ற வழி முறையில் செயல்படும் முறையும் இதன் தன்மைக்கு உகந்தது தான்.
நாட்டியம்… சங்கீதம்.. உடல் பயிற்சி… சில விளையாட்டு வழி முறைகள் இவற்றில் ஒவ்வொன்றிலுமே
1.எண்ணத்தின் உணர்வைக் கூர்மையாக்கி
2.எத்துறையின் வழிப்படி இச்சரீர இயக்கம் அதிகப்படியாகச் செயல் கொள்கின்றதோ
3.அதற்குகந்த அணு வளர்ப்பை இச்சரீரம் பெற்று
4.எடுக்கும் எண்ணத்தினாலேயே அவ்வமிலத்தைக் காந்த மின் அணு வளர்ப்பாக சரீரம் வளர்ச்சி கொள்கின்றது.
அதாவது… எண்ணத்தின் உணர்வைக் கூர்மையாக்கி… துரிதம் கொண்ட ஆர்வ உணர்வின் உந்தலுக்குகந்த வார்ப்பாகச் சரீரம் வழி வகுத்துக் கொள்கின்றது.
இத்தொடர் சரீர இயக்கத்தில் மட்டும் அல்லாமல்… தொழில் முறையிலும்… மற்ற கலைகள் ஒவ்வொன்றிலுமே… ஒரு மனிதன் தன் வாழ் நாளில்…
1.எண்ணத்தின் உணர்வு சுவாசத்தை எச்செயலுடன் ஒன்றிய சுழலில் வாழ்கின்றானோ
2.அவ்வலையின் வளர்ப்பைச் சரீர அணுக்களே வளர்ப்பதோடு மட்டுமல்லாமல்
3.அதே நிலை கொண்ட அமிலக்கூறின் ஆவி நிலை அமிலத் தொடர்பும்
4.இவ்வளர்ப்பின் தொடர்புடன் வளரும் அலைத் தொடர்பாக இவ் ஈர்ப்புடன் தொடர்ந்து வளர்கின்றது.
“இனம் இனத்துடன் சேரும்…” என்ற உண்மையின் தத்துவ உணர்வு இதன் அடிப்படையில் சொல்லப்பட்டது தான்.
ஆகவே இச்சரீர உணர்வின் எண்ணத்தைச் “செலுத்தும் வழி முறையைக் கொண்டு” வாழ்க்கையின் நடைமுறைச் செயலையே..
1.மனித சக்தியின் செயலை உயர்வின் வழியமைக்கச் செயல்படுத்தும் முறை அறிந்து
2.எண்ணத்தின் உணர்வை உயர்வு கொண்ட மகரிஷிகளின் தொடர்புடன் தன் ஞானத்தை வளர்த்து
3.சகல சித்தும் அறியும் ரிஷித் தன்மையின் வழி பெறலாம்.
சரீர உணர்வுடன் இந்த ரிஷித் தன்மை பெற ஆண் பெண் கூட்டு உணர்வு எண்ண வழி முறையின் வளர்ச்சியினால் தான் முடியும். சகல சித்துவும் பெறும் தன்மை அடைய வேண்டும் என்றால் வாழ்க்கையில் ஆண் பெண் எண்ணக் கூட்டு நிலை தேவைப்படுகின்றது.
ஒவ்வொரு சித்தரும் ஒவ்வொரு நிலையில் சக்தி பெற்றார்கள்.
ஞானச் சித்தின் வளர்ப்பு நிலைக்குச் சிவ சக்தி என்ற ஆண் பெண் அமிலக் கூட்டின் உணர்வுத் தொடர்பு அவசியம்.
தனித்த சக்தியினால் நான் செயல்படுவேன்…! என்பது வளர்ப்புத் தன்மையக் காட்டிலும் மலட்டுத் தன்மையான முனிவர்களின் நிலையை ஒத்துத்தான் தனித்து இயங்க முடியும்.
ஏனென்றால் ஆண் பெண் அமில சக்தி தான் நம் பூமியின் சக்தியே…!
அச்சக்தியின் தொடர்பு போன்றே பூமியில் உள்ள சகல நிலைகளும் இன்றளவும் வளர்ந்துள்ளதைப் போன்று ஞானத்தின் தொடருக்கும் இவ்வழி முறையைப் பெற்றிடுங்கள்.
நன்மை என்று விரும்புவதா…! தீமை என்று வெறுப்பதா…?
எப்படித்தான் இருந்தாலும்… காற்று அடிக்கிறது…! மழை பெய்கின்றது…! வெயில் அடிக்கிறது…! குளிர் அடிக்கிறது…! நான்கு காலமே இங்கே மாறி மாறித்தான் வருகின்றது.
இதைப் போன்றுதான் நாம் இன்று மகிழ்ச்சியாகச் சென்றாலும் போகும் போதே ஒருவன் வாகனத்திற்குக் குறுக்கே போகின்றான்… ஒருவன் கீழே விழுந்து விடுகின்றான்.
1.அதைப் பார்த்து வேதனைப்படுகின்றோம்
2.பயமாகி நடுக்கம் அடைந்து குளிர் போல் ஆகி விடுகின்றது.
இரண்டு பேர் சண்டை போடுகின்றனர். எரிச்சலான பேச்சுகளைப் பேசுகின்றனர்.
1.அதை நுகர்ந்த உடனே நமக்கும் எரிச்சல் வருகின்றது
2.வெப்பமாகிறது…!
அதே சமயத்தில் ஒருவருக்கொருவர் பரபரப்பான நிலைகள் கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். அதை நாம் பார்க்கப்படும் பொழுது பெரும் புயலாக மாறுகிறது,
1.ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதைப் பார்க்கும் பொழுது
2.பெரும் புயலாக (காற்று) மாறி நம் எண்ணங்களைச் சிதறச் செய்து நம்மை ஓட வைக்கிறது.
இப்படி ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் வரக்கூடிய நிலைகள் ஒவ்வொன்றும் மாறி மாறி காலங்கள் மாறுவது போல் வந்து கொண்டே தான் இருக்கின்றது.
குளிர் அடித்தால் நாம் என்ன செய்கின்றோம்…? வெயில் அடித்தால் பரவாயில்லை என்கிறோம்.
அதே சமயத்தில் வெயில் அடிக்கும் பொழுது காற்றே அடிக்கவில்லை என்றால் “காற்று வந்தால் பரவாயில்லை…!” என்று நினைக்கின்றோம்.
காற்று அதிகமாக வந்தபின் “காற்று அதிகமாகி விட்டது… நம்மால் தாங்க முடியவில்லை…!” என்று சொல்கின்றோம்.
1.ஒன்றை நாம் நாம் விரும்புகிறோம்
2.ஆனால் வந்தபின் அதை வெறுக்கின்றோம்.
வெயில் அடிக்கின்றது… பொருளைக் காய வைக்க வேண்டும் என்றால் அந்த வெயில் தேவைப்படுகிறது. ஆனால் பொருளை காய வைப்பதற்கு முன் வெயில் அதிகமாகி விட்டால் “அப்பப்பப்பா… உடம்பெல்லாம் எரிகிறது…!” என்று சொல்கின்றோம்.
பொருளும் காய வேண்டும் தான்…! ஆனால் வேதனையும் படுகின்றோம்.
1.ஒன்று நன்மை செய்தாலும்… அதனின் நன்மைக்காக வேண்டி எண்ணுகின்றோம்
2.அடுத்த நிமிடம் அதனாலேயே வேதனைப்படுகின்றோம்.
துணி காய வேண்டும் என்றால் காற்று அடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். காற்று அதிகமாகித் துணியைத் தூக்கி எறிந்து விட்டால் இப்படித் தூக்கி எறிந்து விட்டதே…! என்று வேதனைப்படுகின்றோம். ஆக… அதிகமாகக் காற்றடித்தால் எதுவாக இருந்தாலும் தூக்கி எறிந்து விடுகிறது.
இப்படி
1.எல்லாமே நமக்கு நன்மை செய்தாலும்
2.அதிலேயும் சில தீமைகள் இருக்கத்தான் செய்கின்றது…!
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
ஒரு மின் மினிப் பூச்சி தன் ஒளிகளைப் பாய்ச்சும் பொழுது விஷ அணுக்கள் விலகி அந்தத் தாவர இனங்களை உணவாக உட்கொள்கின்றது.
அதைப் போன்று வாழ்க்கையில் எப்பொழுது வேதனையான உணர்வுகளை நாம் நுகர நேர்ந்தாலும் அதை நீக்க அருள் மகரிஷிகளின் உணர்வைத் தனக்குள் நுகர்ந்து இதை இணைத்துவிட வேண்டும்.
பின் எந்த வேதனையின் நிலை வந்தாலும் நமக்குள் வராதபடி அவருக்குள் வேதனைப்பட்ட நிலைகள் இருளை நீக்கிவிட்டு நமக்குள் அடுத்து பொருள் காணும் நிலைக்கு வரவேண்டும்.
மின் மினிப் பூச்சி தன் ஒளியைப் பாய்ச்சி விஷமானதை விலக்குவது போல் “மகரிஷிகளின் அருள் ஒளிகளை அந்த மின்னணுக்களை எடுத்து” நமக்குள் வரும் விஷத் தன்மைகளை ஒளியாக்க வேண்டும்
நீங்கள் எவ்வளவு பெரிய உயர்ந்தவராக இருந்தாலும் கோடிச் செல்வங்கள் இருப்பினும் பிறர் படும் துயரங்களைப் பார்க்காமல் இருக்க முடியாது.
ரோட்டில் நீங்கள் செல்லும் போது ஒரு பையன் தவறிக் கீழே விழுந்து விடுகின்றான். விழுந்தவன் உங்கள் பையன் இல்லை… என்று “கிடக்கிறான் விடு… என்று அப்படியே விட்டுவிட்டுச் செல்வீர்களா…? இல்லையே…!
அடப் பாவமே.., யார் பெற்ற பிள்ளையோ….! இந்த மாதிரி விழுந்து விட்டானே…! இரத்தம் வந்து விட்டால் இங்கே உங்களுக்குப் பட..பட.. என்று வந்துவிடும்.
உங்கள் நல்ல மனம் இருள் சூழ்ந்து விடுகின்றது. ஆக நீங்கள் தப்பா செய்தீர்கள்…?
இந்தப் படபடப்பு வந்தவுடனே என்ன நினைப்பீர்கள்.
அதே சமயத்தில் தன் பிள்ளைகள் வேகமாக வந்தால் “டேய்..டேய்…டேய்..! கீழே விழுந்துவிடாதடா…” என்று சொல்லத் தோன்றும்.
இரண்டு தடவை சொல்வீர்கள். மூன்றாவது தடவை சொல்வீர்கள். கீழே விழுவான்.
நான் நினைத்தேன்…! கீழே விழுவான் என்று… சொன்ன மாதிரியே விழுந்துவிட்டான்.
இந்த உணர்வின் வேகத் துடிப்புகள் இவ்வாறு இயங்குகின்றது.
இதைப் போன்ற தீமைகளை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் ஆழமாக இப்பொழுது பதியச் செய்கின்றேன்.
யாரை நீங்கள் நோயுடன் கண்டாலும் அந்த நோயின் தன்மை உங்களைப் பற்றிவிடாது அந்த மகரிஷிகளின் உணர்வை இணைக்கப்படும் பொழுது அந்த நோயின் சாரம் உங்களுக்குள் வராதபடி தடுக்க முடியும்.
அருள் மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து வளர்த்து உங்களுக்குள் தெளிவாக்கி உங்கள் எண்ணம் உங்கள் வாக்கு அவர்களைப் பார்க்கப்படும் பொழுது
1.உனக்குப் பிணிகள் இல்லை
2.நீ நலமாக இருப்பாய்…! என்ற இந்த உணர்வினை அதை எடுத்துப் பாய்ச்சுங்கள்.
3.அங்கே இருள் மாயும். ஒளிகள் தெரியும்.
4.அவர்கள் நோயும் நீங்கும்.
நடப்பதெல்லாம் “ஞானத்தைப் பெறச் செய்வதற்குத் தான்…!” – ஈஸ்வரபட்டர்
ஆத்ம வலுப் பெறுவது என்பது ஆண்டவன் அருளால் ஒரு நொடிப் பொழுதில் கிட்டிவிடுவது என்பதல்ல…!
இச்சரீரக்கூறின் உணர்வின் எண்ணத்தையே உயர் ஞான வழி முறைக்குச் செயல்படும் ஒவ்வொரு செயலுக்குமே செயலின் வழி முறையில் செலுத்தப்படும் எண்ணத்தில் உடல் ஏற்கும் உணர்வு நிலைக்கொப்பத்தான் செயல்படுத்த முடியும்.
உணர்வு நிலை என்பது…
1.சகல நிலைகளிலும் இவ்வெண்ணம் மோதும் பொழுது
2.சமமான சாந்த நிலையுடன் கூடிய எண்ணத்தின் பால்
3.அந்த உணர்வின் செயகையை உடல் நிலை ஏற்று வழிப்படுத்தும் நிலைக்கொப்ப
4.சகல சக்திகளிலும் சமமான சாந்த சக்தியைச் செயல்படுத்தும் வழி முறையினால் தான்
4.ஆத்ம பலத்தைக் கூட்டிக் கொள்ள முடிகிறது.
ஆத்ம பலம் பெற்ற… ஞானத் தன்மையினால் எண்ணத்தின் உணர்வைச் சாந்தப்படுத்தும் வழிச் செயலை “அவ்வாத்மாவே…” பிறகு செயல்படுத்தி வழி நடத்தும்.
சிறு சிறு துளிகள் சேர்ந்து தான் பெரு வெள்ளமாகின்றது. அதைப் போன்று ஒவ்வொரு செயலிலும் எண்ணத்தின் வழி முறையைச் செயல்படுத்தும் தனமை கொண்டு தான் ஆத்ம பலம் கூடி வலுவாகின்றது.
1.ஆத்ம பலம் பெற்று விட்டாலும்
2.வாழ்க்கையில் நடக்கும் எதிர் நிலை உந்தல்கள் பல மோதத்தான் செய்யும்.
பெரும் வெள்ளத்தில் எதிர்படும் குப்பைகள் எப்படி அடித்துச் செல்லப்படுகின்றனவோ அதைப் போன்றே ஆத்ம பலம் பெற்ற வாழ்க்கையில் எதிர்ப்படும்
1.உணர்ச்சிகளை உந்தக்கூடிய சில நிலைகள் ஏற்பட்டாலும்
2.வெள்ளத்தில் அடித்துச் செல்லும் குப்பைகளைப் போன்று
3.அது நம் ஆத்மாவுடன் கலக்காது.
பல காலமாக உழைத்துச் சம்பாதித்து வீடு கட்டும் பொழுது… வீட்டின் அஸ்திவாரத்தைப் பலம் கொண்டு கட்டியவுடன்… அதற்கு அழகு செய்வது கடினமல்ல…!
அப்படிக் கட்டப்பட்ட வீட்டில் ஆங்காங்கு ஏற்படும் துப்புரவு நிலைகள் சில செய்து கொண்டே தான் இருக்க வேண்டும்.
அதைப் போன்றே ஞானத்தால் சித்து கொண்ட ஆத்ம பலம் பெற்று இச்சரீரமுடன் வாழும் காலத்தில்
1.கட்டப்பட்ட வீட்டின் குப்பைகள் அண்டுவதைப் போன்றும்
2.காரைகள் உதிர்வதைப் போன்றும் சில நிலைகள் ஏற்படத்தான் செய்யும்.
அதைத் துப்புரவுபடுத்திக் கொண்டு தான் இருக்க வேண்டும்.
உடலுடன் கொண்ட வாழ்க்கையில் எதிர்ப்படும் யாவையுமே
1.நம் ஞானத்தை வளர்க்கவல்ல வழி முறையாக
2.ஆத்மாவின் செயலைக் கொண்டு வழி பெறும் பக்குவத்தை நாம் பெறல் வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
மனிதனின் வாழ்க்கையில் பிறர் படும் வேதனையை நாம் நுகர்ந்தோம் என்றால் அந்த வேதனையின் உணர்வுகள் நம் நல்ல குணங்களை அந்த வேதனை என்ற விஷம் இயக்கித் தெளிவாக்காதபடி நம்மை இருள் சூழச் செய்து விடுகின்றது.
அப்பொழுது சிந்தித்துச் செயல்படும் தன்மை இழக்கப்படுகின்றது. நல்ல சொல்களோ நல்ல பாதைகளோ நாம் சொல்லத் தவறி விடுகின்றோம்.
ஆக அந்த நிமிடத்தில் ஒரு நல்லதை நாம் செய்ய வேண்டும் என்றாலும்
1.நல்லதை நம்மால் சொல்ல முடியாது போய்விடுகின்றது.
2.நல்ல உணர்வுகள் நமக்குள் நினைவே இல்லாது போய்விடுகின்றது.
3.நல்ல காரியத்தைச் செயல்படுத்த முடியாது போய்விடுகிறது.
உதாரணமாக நான் புதிதாகத் தொழில் ஆரம்பிக்கப் போகிறேன் என்று வைத்துக் கொள்வோம். இந்த எண்ணத்தை வலுவாக்கிக் கொண்டு செய்யப்படும் பொழுது அதற்குண்டான எண்ணங்களை எடுத்துச் செயலுக்குப் போகின்றோம்.
ஆனால் செயலுக்குப் போகும் பொழுது ஒருவர் அசரீரி போல இடைவெளியில் வந்து
1.அவன் எல்லாம் செய்தான்…
2.ஆனால் நஷ்டமாகி விட்டான்…! என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டிருப்பார்கள்.
தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செல்லும் பொழுது இந்த உணர்வுகள் பட்டவுடன்
1.போகும் பொழுதே இப்படி எதிரொலி வருகிறதே என்ன ஆகுமோ…?!
2.இதை இணைத்துக் கொள்கின்றார்கள்.
வாழ்க்கைக்கு எப்படியும் தொழிலும் செய்ய வேண்டும். எடுத்த காரியத்தை நடத்த முயற்சி எடுக்க வேண்டும் என்று எண்ணினாலும் “இந்தச் சந்தேக உணர்வுகள்” கலந்து விடுகின்றது.
இப்படிக் கலந்து விட்டால் அதனின் துணையாக நீங்கள் போகும் பொழுது இந்த இக்கட்டான உணர்வுகளே அங்கே தோன்றும்.
ஆகவே இந்த உணர்வின் தன்மை தனக்குள் வரப்படும் பொழுது எண்ணங்கள் வலுப் பெற்றுவிடுகின்றது. அப்புறம் அந்த வியாபாரத்தை வைக்கும் பொழுதே தொழில் ஆரம்பித்தவுடன்
1.இது விற்குமா விற்காதா…!
2.வாங்குவார்களா வாங்க மாட்டார்களா…? இந்த எண்ணம் வரும்.
3.இந்த உணர்வுகள் தான் வெளி வரும்… இந்த மணங்கள் வந்துவிடுகின்றது.
இந்த எண்ணம் நம்மிடமிருந்து வெளிவந்த பின் என்ன ஆகும்…?
வாடிக்கையாளர்கள் நாம் வைத்திருக்கும் சரக்கைப் பார்ப்பார்கள்.
சரக்கை எடுத்துப் பார்க்கும் பொழுதே இந்த மனிதன் எடுத்துப் பார்க்கிறான்… என்ன சொல்லப் போகின்றானா…? இந்த உணர்வு ஓடும்.
அந்த வெறுப்பின் தன்மை வரப்படும் பொழுது “இது என்ன விலைங்க…” என்பார்கள்…?
“இது என்ன விலைங்க…” என்று சொல்லப்படும் பொழுது இது இன்ன விலை… என்று எடுத்தவுடன் ஆரம்பித்துவிடுவோம்.
1.நான் இதைப் பத்து ரூபாய்க்கு வாங்கி வந்தேன்.
2.அதில் ஐம்பது காசு தான் லாபம் வைத்திருக்கின்றேன்.
3.10.50க்குத் தருகிறேன்.
இப்படி உண்மையைச் சொல்லி நாம் விற்கலாம் என்று சொல்வோம். ஆனால் இப்படிச் சொன்னவுடன் அவர்கள் என்ன சொல்வார்கள்…?
“சரி… சரி… ஒன்பது ரூபாய்க்குத் தருகிறீர்களா…?” என்பார்கள்.
இப்படி… இந்த உணர்வுகள் என்ன செய்யும்…? 9 ரூபாய்க்குத் தருகிறீர்களா…! என்று வரும்.
இந்த உணர்வுகள் அங்கே பட்ட பின் வியாபாரம் எதை எண்ணி வந்தோமோ அதிலே “சந்தேகத்தை” இங்கே உருவாக்கிக் கொண்டேயிருக்கும்.
இதுவெல்லாம் நமக்குள் விளைந்த உணர்வுகளே நமக்குள் அணுக்களாக விளைந்து அந்த அணுக்களுக்கு உணவு தேடும் பொழுது இந்த உணர்வின் ஆன்மாக்கள் வரும்.
அந்த மாதிரி நேரத்தில் எதைச் செய்ய வேண்டும்…?
பிள்ளையார் சுழி போட்டு அவருக்கு இரண்டு அபிஷேகத்தையும் அர்ச்சனையும் செய்து விட்டு அருகம்புல்லையும் தேங்காய் வாழைப் பழத்தையும் கொடுத்துவிட்டுப் பார்த்தால் அந்த வினை இங்கே ஆகாது.
அதற்காகத்தான் விநாயகரை வைத்து நாம் எதை நமக்குள் வினையாக்க வேண்டும்…? வினைக்கு நாயகனாக எதை இணைக்க வேண்டும் என்றும் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
உயிரணு தோன்றிப் பல கோடிச் சரீரங்கள் எடுத்து இன்று நம்மை மனிதனாக உருவாக்கி மனிதனான பின் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாக ஒளியின் சுடராக வாழ்ந்தும் வளர்ந்தும் கொண்டுள்ளான் அகஸ்திய மாமகரிஷி.
நமக்குள் மகிழ்ச்சியாக உருவாக்கும் தன்மையை அந்த மகரிஷிகளின் சக்தியை நாம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
பரம்பரை நோயை நீக்கும் வழி
நம் குடும்பத்தில் மூதாதையர்களோ உடலை விட்டு பிரிந்து சென்றிருந்தாலும் அவர்களுடன் நாம் பழகி இருக்கும் பொழுது அவர்கள் உணர்வுகள் நம் உடலில் உண்டு.
அவர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின் பாசத்தின் வலிமையிலே நாம் ஈர்த்தோம் என்றால் அந்த ஆன்மாக்கள் நம் உடலுக்குள் வந்துவிடும்.
அவ்வாறு வந்தால்…
1.அந்த உடலில் ஏற்பட்ட நோய்களும் அவர் பேசிய புலம்பிய உணர்வுகளும் நம்மையும் புலம்ப வைத்து விடும்.
2.பின் நம் உடலிலும் அதைப் போன்ற சில நிலைகள் வந்துவிடும்.
அவருடன் பழகி ரொம்ப காலம் இருந்தாலும் ஒருவர் உடலுக்குள் போனாலும் மற்றொரு உடல்கள் அவர் உடலிலிருந்த நோய் சிறிதளவு இருக்கும். இருந்தாலும் அது பரம்பரை நோயாக விளையும்.
1.ஆஸ்மா நோய் இருக்கிறது என்றால் பரம்பரை நோயாக அடுத்த மக்களுக்கும் அது வந்து சேரும்.
2.இரத்தக் கொதிப்பு இருந்து அதன் வழி அவர் இறந்திருந்தால அது பரம்பரை நோயாக வரும்
3.சர்க்கரை சத்து இருந்தால் அது பரம்பரை நோயாக அடுத்தவர்களுக்கு வரும்
4.சரவாங்கி நோய் மற்ற எந்த நோயாக இருந்தாலும் இது போன்று பரம்பரையாக வரும்.
ஏனென்றால் அந்த உணர்வின் வேகம் துடிப்புகள் பழகிய உணர்வுகள் சேர்க்கப்படும் பொழுது அவர் இறந்தால் இந்த உடலில் அணுக்கள் பெருக்கப்பட்டு அந்த நோயின் வன்மையை இங்கே காட்டும்.
அதே சமயத்தில் கருவில் வளரும் குழந்தைகளுக்கும் கூட…
1.அந்தத் தாய் அது வேறு ஒரு குடும்பத்தில் இருந்து வந்தாலும் அந்தத் தாயின் கருவிலே சிசு வளரப்படும் பொழுது
2.இந்த உணர்வுகள் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தன் பரம்பரையின் கதைகளைச் சொன்னால் அந்த நோய்கள் வந்துவிடும்.
ஒரே குடும்பத்தில் ஒரே வம்சத்தில் சேர்ந்த அக்கா மகள்… தம்பி மகள்… இந்த மாதிரி இரத்த சம்பந்தம் உள்ளவர்களைச் சம்பந்தம் செய்யும் பொழுது “பரம்பரை நோயென்ற நிலைகளே வரும்…”
அந்நியத்தில் பெண் எடுத்து வந்தால் அவர்கள் உணர்வுக்கு ஒத்து வராது. ஆனால் அங்கே இந்தக் குழந்தைகளுக்குப் பரம்பரை நோய் வருவதில்லை.
1.ஆனால் அவர்கள் தாய் வழி இந்தப் பரம்பரை நோய் அங்கே இருந்தால் அதன் வழி இங்கே வந்து சேருகின்றது
2.ஆண் வழியில் இருந்தாலும் இதே மாதிரி ஒரு உடலின் உணர்வுகள் கலக்கப்படும் பொழுது அதன் வழி வந்துவிடும்.
தாத்தா பாட்டிக்கு அந்த நோய் இருந்தால் அந்த அம்மாவுக்கும் இருக்கும். அதன் உணர்வு வரப்படும் பொழுது தாய் கருவிலே இருக்கும் பொழுது குழந்தைக்கு வந்துவிடும்.
இதைப் போன்ற நிலைகள் எல்லாம் நாம் தவிர்க்க வேண்டுமென்றால் காலையில் துருவ தியான நேரங்களில் உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாக்களை அவசியம் விண் செலுத்த வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று முதலிலே நமக்குள் வலுவை ஏற்றிக் கொண்டு அதன் பின் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த எல்லா ஆன்மாக்களையும்
1.சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்…
2.அங்கே உந்தித் தள்ள வேண்டும்.
அந்த ஒளிக் கடலில் முன்னோர்களின் உயிராத்மாக்கள் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பிறவியில்லா நிலையை அடைய வேண்டும்… அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று இதைப் போல தினமும் அந்த ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கலாம்.
யார் உடலை விட்டுப் பிரிந்தாலும் உடனடியாக நினைவுபடுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருளை வலுப் பெறச் செய்து… உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.
இந்த முறைப்படி செய்தால் பரம்பரை நோய்களை மாற்ற முடியும்.
பசி… தூக்கம்… கழிவு… காமம்… போன்ற உடலின் செயல் இயக்கத்தை ஆத்ம வலுவைக் கொண்டு மாற்றியமைக்க முடியும் – ஈஸ்வரபட்டர்
நம் பூமியின் இயக்கத்தில் எப்படி இருள் அதிகமாகவும் ஒளி குறைவாகவும் உள்ளதுவோ அதைப் போன்றுதான் மனிதனின் எண்ணச் செயலும் உள்ளது.
1.கடும் இருட்டிலும் சிறிது வெளிச்சம் ஊடுருவி ஒளி பாய்ச்ச முடியும்.
2.ஆனால் சிறிது வெளிச்சத்தையே மறைக்கக் கடும் இருட்டு தேவையாக உள்ளது.
நம் எண்ணத்தின் இருளை ஒளியாக்கும் ஆத்ம வலுவை நாம் பெற்றோமானால்
1.உடலின் எண்ண நிலைக்கொப்பச் செயல்படும் குணத்தையே
2.ஆத்மாவின் செயலாக உடலைச் செயல்படும் வகையில் செயலாக்கி
4.இருளில் இருந்து ஒளி பெறும் ஞான ஒளியாக
5.நம் ஆத்ம ஒளி பிரகாசிக்கும் சக்தியைப் பெறும்.
எண்ணத்தில் உள்ள இருள்கள் எவை…?
சலிப்பு… சோர்வு… பிறரிடம் உள்ள குறை காணல்.. புகழுக்காக ஏங்கும் ஏக்க நிலை… மரண பயம்…! போன்ற இருள் தன்மைகள் எல்லாவற்றையும் எண்ணத்தால் எடுக்கும் ஞான சக்தி கொண்டு நாம் மாய்க்க வேண்டும்.
குரோதம் வஞ்சனை என்ற தீய குணங்கள் வேறு. எண்ணத்தால் மறைத்துவிடும் இருள் குணங்கள் வேறு.
ஆத்ம ஞானத்தால் நாம் வளர்ந்து வரும் காலங்களில் சலிப்பின் சோர்வை அண்ட விடக் கூடாது.
சலிப்பின் ஏக்கத்தால் “உயர்வு கொள்வோம்” என்ற
1.உயர் ஞான வழிக்கு அந்த ஏக்க நிலையைச் செலுத்தி
2.அந்த ஏக்கத்திலேயே ஆத்ம வளர்ப்பை வளர்க்கவும் முடியும்.
ஆனால்… பிறர்பால் பொருளைப் பார்த்து ஏக்கப்படும் ஏக்கத்தால் மனித வாழ்க்கை அழிவிற்கும் செல்வதுண்டு.
குணங்களை வழிப்படுத்தும் ஞானத்தால் பெறவல்ல ஆத்ம பலத்தால் தான் இருள் என்ற நிலை நீங்கும். மேலும் ஒளியான ஆத்ம வலுவைப் பெற்ற ஆத்ம ஞானத்தால்… எண்ணிய எண்ண நிலைக்கொப்ப கடும் பசியையும்… உடல் சோர்வையும்… கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
அதே போல் உடலின் எந்தப் பாகத்தில் எந்த வகையான உபாதைகள் ஏற்பட்டிருந்தாலும்… இவ்வுடலின் செயலுக்கும்…
1.இவ்வாத்ம ஞானத்தால் மகரிஷிகளின் அலைத் தொடர்பில் தொடர்பு கொண்டு
2.அவர்கள் ஈர்ப்பலை வரிசையில் எண்ணத்தைச் செலுத்தி சுவாசம் எடுக்கும் பொழுது
3.எதை எண்ணிச் சுவாசம் எடுக்கின்றோமோ… அவ்வலை அமில உணர்வு இந்த உடலில் சாடி ஏற்படும் எண்ண நிலைக்கொப்ப…
4.”ஆத்ம பலத்தைக் கொண்டு” இவ்வுடலின் செயலையும் சீராக்கிடும் வழியை வகுத்துக் கொள்ளலாம்.
இந்த உடல் ஒரு அடுப்பு தான். இந்த உடலில் சமைக்கும் அமில உணர்வின் ஆவி நிலையை ஆத்மா பெற்று அதன் வழியில் ஆத்மா வாழ்வது என்பது “சாதாரண வாழ்க்கை நிலை…!”
ஆனால் வாழ்க்கையின் ஞான ஈர்ப்பு நற்குணத் தியானச் செயலால்… எண்ணத்தின் சுவாசத்தில் ஆத்ம பலம் பெற்ற ஒரு ஞானியினால்…
1.உடல் சமைப்பிலிருந்து ஆத்மா பலம் பெறும் நிலை மாறி
2.ஆத்மாவின் செயலுக்குகந்த சமைப்பாக இந்த உடலை இயக்க முடியும்.
பசி… தூக்கம்… கழிவு… காமம்… போன்ற உடலின் செயல் இயக்கத்தையே ஆத்ம வலுக்கூடிய ஞானியினால் ஆத்ம வலுவைக் கொண்டு மாற்றியமைக்க முடியும்.
அத்தகைய தன்மைக்கு… இச்சரீரக்கூறின் எலும்புகளை மின் காந்த வலுக் கொண்ட உறுப்புக்களாக உறுதி கொண்டிடும் செயலால்
1.சரீர உணர்வின் சாதாரண நிலையையே
2.எண்ணத்தின் இயக்க நிலைக்கொப்ப மாற்றியமைக்கும்
3.ஆத்ம வலுவைக் கொண்டு செயலாக்கத்திற்குக் கொண்டு வர முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
மின் மினிப் பூச்சி உடலிலிருந்து வெளிப்படும் உணர்வின் தன்மை அந்த ஒளிக்கற்றைகள் பட்ட பின் சிறு அணுக்கள் விலகிச் சென்றுவிடும். அதன் மூலம் இலையிலுள்ள அந்த நுண்ணிய அணுக்களை உணவாக உட்கொள்ளும்.
மின் மினிப் பூச்சி வந்ததென்றால் ஒரு தூக்கணாங்குருவி என்ன செய்யும்…?
இந்த மின் மினிப் பூச்சியைப் பிடித்துக் கொண்டு தன் கூட்டில் களிமண்ணை ஒட்ட வைத்து அதில் இந்த மின் மினிப் பூச்சியை ஒட்ட வைத்துக் கொள்ளும்.
எதற்காக…?
தன் கூட்டில் வெளிச்சத்திற்காக அதை ஒரு விளக்காக (LIGHT) வைத்துக் கொள்கிறது.
தூக்கணாங்குருவி இருக்கும் கூட்டுக்குள் பார்த்தால் களிமண் இருக்கும். பறந்து செல்லும் மின்மினிப் பூச்சியைக் கொத்தித் தன் கூட்டிற்குள் ஒட்ட வைத்துத் தன் குஞ்சுகளுக்கு வெளிச்சத்தைக் காட்டி வழி கொடுக்கின்றது.
குஞ்சுகள் இருட்டுக்குள் தவிக்காதபடி இந்த உணர்வின் தன்மை அஞ்சிடாமல் சப்தமிடாமல் இருப்பதற்காகவும் சப்தமிட்டால் மற்ற எதிரிகள் இங்கே வந்துவிடும் என்பதற்காகவும் இவ்வாறு செய்கின்றது.
தூக்கணாங்குருவி கனமான இடத்தில் அது கூடு கட்டாது.
ஏனென்றால் எலியோ மற்ற தன் எதிரிகளோ அந்த இடத்திற்குள் வந்துவிடாமல் இருப்பதற்காக மரத்தில் அந்த இலை நுனியில் வைத்துத்தான் தன் கூட்டைக் கட்டும்.
இலை நுனியில் ஏன் கூட்டைக் கட்டுகிறது…?
பலவீனமான இடத்தில் கூடு இருப்பதால் அங்கே வேறு எதிரிகள் வந்து உட்கார்ந்தால்
1.உடனே தெரிந்துவிடும்.
2.கூடு கட்டியிருக்கும் இடத்தின் வலு குறைந்துவிடும்.
3.இவ்வாறு அதற்குண்டான ஞானத்தைக் கொண்டு செயல்படுத்துகிறது.
தன் அறிவின் தெளிவு கொண்டு ஒரு மரத்தில் கூட்டைக் கட்டி மின்மினிப் பூச்சியை ஒட்ட வைத்து அதன் வெளிச்சத்தால் குஞ்சுகள் சப்தம் எழுப்பாதபடி செய்கிறது.
ஏனென்றால் வெளிச்சம் இல்லாத பொழுது குஞ்சுகள் சப்தங்களை எழுப்பும். அந்த உணர்வின் ஒலிகளைக் கேட்டுப் பூனையோ அதைப் போன்று வௌவாலோ வந்து குஞ்சுகளை இரையாக்கி கொள்ளும்.
வௌவாலெல்லாம் தன் உணர்வின் ஒலி கொண்டு குஞ்சுகளைக் கொன்று தன் உணவாகப் புசித்துவிடும்.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து தன் குஞ்சுகளைக் காக்க குஞ்சுகளிடமிருந்து அந்த ஒலிகள் வராதபடி தடுப்பதற்காக அதனின் சப்தத்தை அமுக்க மின் மினிப் பூச்சியை ஒளியாக அங்கே வைக்கின்றது.
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இயற்கையின் தன்மை வரப்படும் பொழுது
1.ஒவ்வொரு உயிரினமும் எவ்வாறு விளைந்தது?
2.அதனின் ஞானம் எப்படி இருக்கிறது?
3.”அதை நீ உற்றுப் பார்…” என்று காட்டினார் குருநாதர்.
தூக்கணாங்குருவி இரவிலே இரை தேடச் செல்ல முடியாது. அது வரையிலும் மின்னிக் கொண்டிருக்கும் அந்த வெளிச்சத்தைப் பார்த்துக் குஞ்சுகள் அப்படியே ஏங்கிக் கொண்டிருக்கும்.
அந்த நிலையிலேயே உறங்கிவிடும்.
குருநாதர் காட்டிய வழி கொண்டு இரவு முழுவதும் தூக்கணாங்குருவி என்ன செய்கிறது…? அதனின் எண்ணங்கள் எப்படி இருக்கிறது…? குஞ்சுகள் என்ன செய்கிறது…? என்று இரவு முழுவதும் பார்த்த்துக் கொண்டிருந்தேன்.
1.இதை அறிவால் அறியக் கூடிய நிலை இருந்தாலும்
2.அதை உணர்வால் எப்படி நீ அறிய வேண்டும்…? என்று குருநாதர் காட்டிய நிலைகள் தான் இது.
இன்றைய உலகில் நல்லதோ… கெட்டதோ… எல்லாமே “அதீத வேகமாக” இயக்கப்படுகிறது – ஈஸ்வரபட்டர்
சூரிய அலை ஈர்ப்பிலிருந்து (SOLAR) இன்றைய விஞ்ஞானத்திற்காகச் செயற்கை மின் காந்த அலையை மிகத் துரித இயக்கமாக இந்த நூற்றாண்டில் மனித விஞ்ஞானம் பிரித்தெடுத்துக் கொண்டே உள்ளது.
செயற்கை ஒளி காண… சூரிய சக்தியின் அலையை இந்தப் பூமிக்குத் துரிதப்படுத்தியதன் “செயற்கை இயக்க வேகம்…” உயிரினங்களின் ஈர்ப்பு வார்ப்பிலும் இக்காற்றலையின் தொடர்பினால் பெறவல்ல துரித இயக்கத்தினாலும்
1.இக்கலி மனிதர்களின் ஞான ஈர்ப்பும்
2.இயக்கத் துரிதமும் மிக வேகமாக முன்னேறியுள்ளது.
முன்னேறியுள்ளது…! என்பது இயற்கையின் அலை ஈர்ப்பானது உயிரினங்களின் சுவாச ஈர்ப்பிற்குத் துரிதம் கொள்ளும்… காந்த அணுக்களின் மின் ஈர்ப்பு நிலை… உயிரின வளர்ப்பு யாவற்றுக்குமே துரிதப்பட்டுள்ளது இயற்கை.
“செயற்கையின் செயலுக்காக” சூரிய அலையின் மின் காந்த அலைகளைப் பிரித்தெடுக்கும் இயக்கத்தால்… பூமியின் தன்மைக்கே அந்தக் குணம் கூடிவிட்டது.
அத்தகைய வேகத்தின் செயலினால்தான்… இந்நூற்றாண்டில் மனித விஞ்ஞானச் செயல்கள் அனைத்தும்… துரித வேக ஓட்டம் கொண்டு… மிகவும் வளர்ச்சியுற்று ஓடிக் கொண்டுள்ளது இன்று.
இத் துரித ஓட்டத்தையே சீர்படுத்தி வழிப்படுத்தும் ஞான ஈர்ப்பின் இயற்கைச் சக்திக்கு ஆத்ம தொடர்புடன் செயல்படுத்தினோமானால் ஆயிரம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வளர்ச்சியுற்ற நிலையைக் காட்டிலும் உயர் வளர்ச்சிக்குக் கொண்டு போகலாம்.
அதாவது இன்றைய (இக்கலியின்) மின் அலைச் செயலுக்கு உட்படுத்தப்பட்ட மின் சக்தியின் துரிதம் போன்றே
1.எண்ணத்தில் எடுக்கும் சுவாசத்தால்… ஞானத்தின் ஈர்ப்பு நிலையினால்…
2.இவ்வாத்ம வார்ப்பை ஒளி நிலையாக்கி…
3.உயர் ரிஷிகளின் தொடர்பில்… சித்து நிலை கொண்ட ரிஷித் தன்மைக்கு உட்படுத்த முடியும்.
அதே சமயத்தில் தீய சக்தியின் செயல்களும் இன்று பல நிலைகளில் துரிதம் கொண்டு மாந்திரீகத்தாரால் அவர்கள் அறியாத நிலையிலேயே அவர்களுக்குள் சில துரித ஆவேச அலை உணர்வு கொண்ட ஆவி ஆத்மாக்கள் அவர்கள் ஈர்ப்புக்குள் சிக்கிவிடுகின்றன.
அவ்வாத்மாவின் உந்தலின் சுவைக்கு உகந்த ஆகாரத்தை இவர்கள் தந்து… மந்திரவாதியின் (சூனியக்காரர்களின்) செயலுக்காக அவ்வாவிகள் எச்செயலையும் செய்விக்கும் தன்மையில் பல விபரீதச் செயல்களும் நடை பெற்றுக் கொண்டுள்ளன.
அதிலெல்லாம் சிக்காது… உண்மையின் இயற்கை ஆத்ம வலுவை
1.நாம் நற்குணங்களின் வார்ப்பாக இயக்கவல்ல இயக்கத்தால்
2.இவ்வாத்ம வலுவைக் கொண்டு துரிதமாக ரிஷித் தன்மை பெற முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
1.சித்தி
2.சைவ சித்தி
3.சைவ சித்தாந்தம்
4.சித்தாந்தம்
5.ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது வேதங்களில் உபநிஷத்துக்கள் – பிரித்துக் காட்டும் நிலை கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல்.
ஒரு பொருளுடன் ஒரு உணர்வு இணைந்தால் அதனுடன் இணை சேர்த்த உணர்வின் தன்மை மாறுகின்றது.
இதைப் போலத் தான் சைவத்தில் அசைவம் என்ற நிலை எப்பொழுது உருவாகின்றது…?
கோபமான ஆத்திரமான வீரிய உணர்வுகள் நமக்குள் அதிகமாக வரும் பொழுது அது நம் உடலிலுள்ள மற்ற அணுக்களின் தன்மையைக் கொன்று புசிக்கின்றது.
கொன்று புசிக்கும் உணர்வுகள் நம் உடலுக்குள் விளைந்தாலும் நாம் மடிந்த பின் இதே அணுவின் தன்மை உடல்களிலிருந்து உருவாகி விடுகின்றது. அவ்வாறு உடலிலிருந்து வெளிப்பட்டதை சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.
அதை யார் பற்று கொண்டு
1.அந்த மடிந்த மனிதனை மீண்டும் எண்ணும் பொழுது
2.அந்த மனித உடலில் விளைய வைத்த தீமையான உணர்வுகளை இவர் தனக்குள் நுகரப்படும் பொழுது
3.அந்த அசைவத்தை உணவாக உட்கொள்ளும் அணுவாக வருகின்றது.
இவர்கள் நல்ல குணங்கள் கொண்டிருந்தாலும் ஒரு மனிதன் பால் அன்பு பண்பு கொண்டிருந்தாலும்
1.அந்த மனித உடலில் இந்த வேதனை என்ற உணர்வுகள் உருவாகி
2.நல்ல அணுக்களைக் கொன்று புசித்த நிலைகள் இந்த உடலில் நோயாக மாற்றுகின்றது.
இந்த உடலில் நல்ல அணுக்கள் வளர்ச்சியற்ற நிலை வரும் பொழுது மற்றொன்றைக் கொன்று புசிக்கும் உடலாக உருவாக்கும் பொழுது நல்ல அணுக்களால் உருவான இந்த உடலும் நலியத் தொடங்குகின்றது.
இவ்வாறு அந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது தான் இது அசைவமாகின்றது.
தாவர இனத்தின் சத்தை நாம் உணவாக உட் கொண்டு அணுவின் தன்மை அடைந்தாலும் இந்த வேதனை என்ற விஷத்தின் தன்மை அணுக்களில் உருவாகிவிட்டால் என்ன ஆகின்றது…?
நம் உடலில் டி.பி. போன்ற நோய்களும் உடல் அரிப்பின் நிலைகளும்
1.உடலின் தசைகளை உணவாக உட்கொள்ளும் அணுக்கள் உருவாகி
2.தசைகள் சீழ் பிடித்து
3.நல்ல இரத்தங்கள் உருவாவதைத் தடைப்படுத்துகின்றது.
அதே சமயத்தில் இரத்த ஓட்டங்களைச் சீராக இயக்காதபடி அதில் வரும் உணர்வின் தன்மைகள் உடலை உணவாக்கும் நிலையாக உணவாக உருவாகும் அணுக்களை இடைமறித்து வெள்ளணுக்கள் அது உணவாக உட்கொள்ளத் தொடங்குகின்றது.
இவ்வாறு வெள்ளை அணுக்களின் தன்மை அதிகமாகி விட்டால் நீரின் சத்தாக மாற்றுவதும் சுவையின் இனிப்பாகத் (குளுகோஸ்) தனக்குள் வரும் பொழுது
1.கரையும் தன்மை கொண்டு
2.எதிலே கலந்தாலும் நீராக வடித்து விடுவதும்
3.இதைப் போன்ற உணர்வின் அணுக்கள் அது மாறிவிடுகின்றது.
வேதனையான நிலைகளை நாம் அதிகமாக எடுத்துக் கொண்டால் இந்த விஷத்தின் தன்மை ஊடுருவப்படும் பொழுது நம் உடலில் உள்ள அணுக்கள் சீராக இயக்கவில்லை என்றால்
1.நம் உடலில் இரத்தத்தை உருவாக்கும் அணுக்களை மடியச் செய்து
2.உடல் முழுவதும் நீராக மாற்றிவிடுகின்றது.
பார்த்தால்… “இரத்தம் காணவில்லையே…!” என்று இதற்காக செவ்வணுக்களை உருவாக்கும் உணர்வின் அணுக்களை மற்றொரு உடலிலிருந்து இந்த உடல்களுக்கு விஞ்ஞான அறிவு கொண்டு மாற்றி இதை உருமாற்றி செவ்வணுக்களை உருவாக்குகின்றார்கள்.
ஆனால் அதே சமயத்தில் அடிக்கடி அந்த இரத்தங்களை இங்கே கொடுத்தால் தான் அது வளரும் தன்மை வருகின்றது.
அதற்குள் இந்த உணர்வின் தன்மை வளர்ந்து கொண்டு மற்ற உணர்வின் அணுக்களை உருவாக்கி அந்த உடலை நலமாக்கும் தன்மைகள் விஞ்ஞான அறிவால் வருகின்றது.
இதைப் போலத்தான் மெய் ஞான அறிவு கொண்டோரும்
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகளைத் தனக்குள் எடுத்து
2.தீமையான உணர்வின் அணுக்களைச் சமப்படுத்தி
3.அந்தத் தீமையின் உணர்வுகளை “ஒளியாக மாற்றும் அறிவின் ஞானமாக” மாற்றினார்கள்.
அதைத்தான் அன்று சைவ சித்தாந்தத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த மகரிஷிகளின் உணர்வுகள் தன்னுடன் ஒன்றிய நிலைகள் அனைத்தையும் ஒளி கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் அணுக்களாக மாற்றி விண்ணுலகில் வாழ்ந்து ஒளிர்ந்து கொண்டுள்ளார்கள். பேரொளியாக உமிழ்த்திக் கொண்டுள்ளார்கள்.
மின் மினிப் பூச்சியைப் பார்க்கின்றோம்.
அது தன் சுவாசத்தை எடுக்கப்படும் பொழுது அந்த உணர்வின் அலைகள் மூச்சலைகளாக மாறும் பொழுது
1.அதற்குள் இருக்கக்கூடிய கந்தகம் போன்ற நிலைகள்
2.உராயப்படும் பொழுது அது மின்னித் தனக்குள் வெளிச்சமாகி ஒளிக்கற்றைகளை உமிழ்த்துகின்றது.
இதைப் போன்று தான் நம் ஒவ்வொரு உணர்வின் அணுக்களிலேயும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை இதனுடன் இணைக்கப்படும் பொழுது என்ன ஆகும்…?
நமது வாழ்க்கையில் எண்ணங்கள் இருள் சூழும் பொழுது அந்த இருளிலிருந்து வெளிப்படும் நிலைகளை
1.மகரிஷிகளின் ஒளியின் தன்மை கொண்டு (இருளுக்குள் இந்த ஒளியைப் பாய்ச்சும்போது)
2.நமக்குள் இருக்கும் இருள் சூழ்ந்த நிலையை நீக்கிவிட்டு
3.உட்பொருளின் தன்மையை நாம் அறியும் சக்தியாக வரும்.
ஆகவே நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை இணைக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
திடீரென்று நம்முடைய உணர்ச்சிகள் மாறி அதைக் கட்டுப்படுத்த முடியாது போவது ஏன்…?
உதாரணமாக நம்மைக் கோபித்தவனின் உணர்வை நாம் பதிவாக்கினால் அது ஒரு ஸ்டேசனாக அமைகின்றது
1.அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் அங்கு இருக்கின்றது… நமது உணர்வும் அவனிடம் இருக்கின்றது.
2.என்னை இப்படி மோசம் செய்தான் என்று அவனை எண்ணினால் அந்த அலைகள் வரும்.
அதே நேரத்தில் அந்த உணர்ச்சிகள் என்ன செய்கிறது…?
அந்த உணர்ச்சிகள் நமக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது நம்மை அறியாமலேயே தவறு செய்ய ஆரம்பித்து விடுகின்றோம் இதைப் போன்று உலகில் எத்தனையோ உணர்வுகள் நம்மை ஒவ்வொரு நிமிடமும் இயக்குகின்றது.
1.ஒரு விபத்தை நேரடியாகப் பார்க்கின்றோம்… அது ஒரு ஸ்டேஷன் ஆக அமைந்து விடுகின்றது
2.இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள்… ஆத்திரமாக அது பதிவாகி ஒரு ஸ்டேஷன் ஆகிவிடுகிறது
3.ஒருவன் ஒருவனைக் கடுமையாக மிரட்டிச் செல்கின்றான்… அந்த அலைகள் இங்கே இருக்கின்றது… பதிவாகி ஒரு ஸ்டேஷனாக அமைகின்றது
4அந்த உடலிலிருந்து வந்த அலைகள் இங்கே இருக்கின்றது… அழிவதில்லை.
அவனுக்குள் விளைந்திருக்கின்றது… அவரிடம் இருந்து வெளிவருகிறது. நமக்குள்ளும் பதிவு இருக்கிறது. அந்த அலைகளை நுகரச் செய்கிறது அது அழிவதில்லை.
ஆனால் அதை அழிக்க வேண்டுமா இல்லையா…!
இது எல்லாம் நமக்குள் இருக்கும் போது என்ன செய்கின்றது…? நாம் சோர்வடையும் நேரத்தில் எல்லாம் காரமான உணர்ச்சி கொண்டு நம்மை இயக்குகின்றது.
1.திடீரென்று நமக்குக் கோபம் வரும்.
2.அந்த நேரத்தில் எதை எடுத்தாலும் அந்த வேகம் வரும்.
பெண்கள் வேலை செய்யும் போது பார்க்கலாம். காயை நறுக்கி மெதுவாகப் போட்டுக் கொண்டிருப்பார்கள். சோர்வடைந்த நேரத்திலே காயைத் தூக்கி எறிவார்கள்.
அதே போன்று பலகாரம் சுட்டுக் கொண்டிருந்தால் வித்தியாசமான உணர்வுகள் வந்தது என்றால் வடையை சட்டியிலே மெதுவாகப் போடுவதற்கு பதில் டப்… என்று போடுவார்கள்.
எண்ணெய் மேலே தெறித்துவிடும்.
இதை எல்லாம் செய்வது எது…? நாம் நுகர்ந்த உணர்வுகள் தான்…!
இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் நாம் அதை அடக்கப் பழக வேண்டும் அப்போது அந்த உணர்வுகள் அது நம்மை இயக்காது.
ரேடியோ டிவி ஸ்டேஷன்களில் சந்தோஷமாக பேசியதை ஒலி பரப்பு செய்கிறார்கள் என்றால் அதைக் கேட்கின்றோம்… பார்க்கின்றோம்.
ஒரு சில நேரங்களில் காரசாரமான உணர்வின் உணர்ச்சிகள் இன்னொரு அலைவரிசையில் வருகிறது என்றால் இதே அலைவரிசையில் சேர்ந்து வரப்படும் பொழுது என்ன நடக்கிறது…?
ஏரியல் அல்லது ஆண்டென்னா மூலம் தான் வருகின்றது.
அலைவரிசை அதிகமாக வந்து விட்டதென்றால்… வரக்கூடிய அதிர்வு அதிகமான பின் ஜிர்… என்று சத்தம் போடும். அலைவரிசையில் வரும் பொழுது எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் வந்தாலும்
1.எலக்ட்ரிகல் என்று அந்த உணர்வலைகள் வரும்பொழுது எலக்ட்ரிக்கின் (நம் வீட்டில்) துணை கொண்டு தான் இயங்குகின்றது.
2.அதன் தொடர்புடைய ஏரியலின் நிலைகளில் வந்தாலும் இதனுடன் எர்த் (EARTH) ஆனபின்
3.இன்னொரு ஸ்டேசன் வலுவான நிலைகள் ஆன பின் அதை இழுத்து அந்த அதிர்வுகளையே (கர்… புர்… என்ற சப்தமாக) காட்டுகின்றது.
அதே போல் தான் நம் உயிர் எலக்ட்ரிக்காக இயக்கினாலும் ஒரு எதிர் உணர்வான எலக்ட்ரிக்கை அந்த எலக்ட்ரானிக் ஆக (உணர்ச்சியாக) மாற்றப்படும் போது
1.நம்முடைய சிந்தனையைக் குறைக்கச் செய்து
2.நம்மை அறியாமலே தவறான சொற்களை இயக்கி
3.தவறான செயல்களைச் செய்ய வைக்கிறது… நம்மை இயக்க வைக்கின்றது.
சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…!
அக்கால வழக்கங்களையே வலியுறுத்தாமல் இன்றைய கலி காலத்திற்கொப்ப ஆத்ம வலுவைக் கூட்ட முடியும் – ஈஸ்வரபட்டர்
ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் நாம் எடுக்கும் சுவாசத்தால் ஆத்ம அலையின் தொடர்பு கொண்டுதான் சரீர இயக்கச் செயலினால் ஆத்மாவின் வலுவும் கூடிக் கொண்டே உள்ளது.
இயற்கையின் மாற்றக் குணங்களும்… உருவாகும் ஒவ்வொரு சக்தியுமே…
1.நொடிக்கு நொடி மாற்ற உராய்வு வளர்ப்பு தன்மையில் தான் மாற்றமும் வளர்ப்பும்
2.சுழற்சி ஓட்டத்தில் எல்லா வகை குண வளர்ப்பு முறையிலும் வளர்ந்து கொண்டுள்ளது.
காட்சி:-
அடர்ந்த காட்டுப் பகுதியில் மேடான மலைப் பகுதி தெரிகிறது. அதிலே மலையும் பாறைகளும் தெரிகிறது. மலையும் பாறையும் சேர்ந்து இருந்தாலும் ஓரிடத்தில் “மிகப் பெரிய பாறை ஒன்று” நிற்பதைப் போன்றும் தெரிகின்றது.
பிறிதொரு இடத்தில் அழகான குளமும் அக்குளத்தின் நீர் பாசி படிந்த கிளிப் பச்சையும் நிறம் போலவும் அப்பச்சையின் நிறம் மாறி மாறி கரும் பச்சையைப் போலவும் அதைச் சுற்றிச் சுற்றி மேலும் சில செடி கொடிகள் வளர்வதைப் போன்றும் தெரிகிறது.
பிறிதொரு இடத்தில் ஏற்றம் இறைக்கும் கிணறு இருக்கின்றது அதிலே நீர் உயர்ந்து குறைந்து இருப்பதைப் போன்றும் ஆனால் நீரின் நிறம் தெளிவு கொண்ட நீராகவும் காட்சியில் தெரிகின்றது.
இதன் விளக்கம் என்ன…?
பூமியின் பிடிப்புள்ள பாறைக்கும் அதற்கு மேல் பிடிப்பற்ற… அதாவது
1.பூமியின் வளர்ப்பு நிலையிலிருந்து மாறி
2.ஒரு பாறையின் மேல் ஒரு பாறை நிற்கின்றது என்றால்
3.அப்படி நிற்கும் நிலை எப்படி ஏற்படுகின்றது…?
பூமியின் வளர்ப்புப் பிடியுடன் வளரும் பாறைகள் இப்பூமியில் ஏற்படும் பிரளய காலங்களில்
1.சில மண்டல ஓட்டங்களின் சேர்க்கைக் காலங்களிலும்
2.பூமி ஈர்க்கும் அமில மாற்றத்திலும்
3.பூமி ஈர்த்து வெளிக் கக்கும் உஷ்ண அலையின் அமில வளர்ப்பில் அந்தந்த இடங்களில் வளரும்
4.கனி வளங்களுக்கும் கல் மண் இவற்றின் வளர்ப்பு நிலைகளுக்கும்
5.அதற்குக் கிடைக்கப் பெறும் ஊட்டச் சத்து மாறுபட்டவுடன்
6.பழக்கப்பட்டு எடுத்த வளர்ப்பு நிலை குன்றிய நிலையில் அக்கல்களில் சில வெடிப்பு நிலைகள் ஏற்பட்டு விடுகின்றது.
ஆகவே வளர்ந்த நிலையில் அதனுடைய சக்தி கிடைக்காமல் தடைப்பட்ட பின் அதன் தன்மை அதே நிலையிலேயே வெடிப்புப் பெற்று கீழிருந்து வளரும் பாறையின் மேல்… இப்பாறைகள் கரடு முரடாக… மலைகளில் ஒன்றுக்கு மேல் தனித் தனிப் பாறைகளாக உருண்டு நிற்கின்றன.
ஆனால் பூமியின் பிடிப்புடன் வளரும் பாறை மாறு கொண்ட வளர்ப்புடனே வளர்ந்து கொண்டுள்ளது.
நீரின் நிலை பாசி படர்ந்து வண்ணங்கள் மாறி தெரிந்ததன் நிலையும் இதைப் போன்றே ஒவ்வொரு நொடிக்கும் மாறும் உஷ்ண வெக்கையின் ஆவி நிலைக்கொப்ப மாற்றத் தன்மைகள் வருவதால் தான்.
இத்தகைய இயற்கையின் உண்மைகளை எல்லாம் எப்படி இதைப் போன்று அறிகின்றோமோ அதைப் போன்று தான் வளரும் மனித ஆத்ம வளர்ப்பிலும் மாற்றங்கள் உண்டு.
இப்பூமியின் பிடியுடன் வாழும் தன்மையில்… மாறி மாறி வளர்ந்து கொண்டுள்ள இயற்கையின் சுழற்சியில்… ஒன்றை ஒத்த தன்மையில் ஒன்றில்லாத உலகச் சுழற்சி நிலையில்
1.பல கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த மனிதனின் வளர்ப்பு ஞானமும்
2.பத்தாயிரம் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த சித்தர்கள் பெற்ற ஞான சக்திக்கும்
3.இன்றைய வளர்ந்த கலியின் ஆத்ம ஞான சக்திக்கும் மிக மிக மாறுபாடுகள் உண்டு.
இன்றைய விஞ்ஞான காலத்திலும்
1.நம் செயலும் இயற்கையுடன் ஒன்றிச் சென்றுதான் ஞான சக்தி பெறவேண்டும் என்ற எண்ணத்தின் ஈர்ப்பைச் செலுத்தி
2.ஆசார அனுஷ்டானங்களை வலியுறுத்தி வகைப்படுத்தித்தான் எண்ணத்தைச் செலுத்தி வழி பெறவேண்டும் என்று உணராமல்
3.இக்கலியின் காலத்தில் மனித ஈர்ப்புத் துரித அறிவாற்றலின் சக்தியை
4.இக்கால நிலையின் சுழற்சியுடன் கலந்துள்ள தன்மையிலிருந்தே
5.அவரவர்களுக்கு அமைந்த வாழ்க்கையின் வளர்ப்பில் ஒவ்வொரு செயலிலுமே உயர்வின் ஞானத்தைச் செலுத்தி
6.ஆத்மாவின் வலுவுக்கு வலுக் கூட்டும் வழி முறையை வகுத்துக் கொள்ளுங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
எம்மிடம் நல்ல வாக்குகளை வாங்க வருகிறார்கள்.
அதை யாம் இலேசாகக் கொடுத்தாலும்… அதை எளிதில் பெறச் செய்தாலும் கூட உங்களால் அது முடியவில்லை.
அங்கிருந்து வந்து சாமியிடம் (ஞானகுரு) உபதேசம் கேட்பதற்காக வருகிறோம். உபதேசம் கேட்டு முடிந்த பிறகு சாமியிடம் ஆசி கேட்போம் என்று இல்லை.
ஏனென்றால் வந்தவுடன் ஒரு முறை ஆசி வாங்க வேண்டும். இரண்டாவது முறை இங்கு வந்து ஆசி வாங்க வேண்டும். ஆசீர்வாதம் வாங்கி விட்டால் சரியாகப் போகும் என்று தான் நினைக்கிறார்கள்.
அந்த ஆசீர்வாதத்தைக் காட்டிலும் உபதேசம் செய்வதை முழுமையாகக் கேட்டுணர்ந்து… அதன் பின் வரிசையில் நின்று கேட்கும் போது
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் பரவ வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள நோய்கள் நீங்க வேண்டும்
4.எங்கள் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் நீங்க வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பத்தின் மீது படர வேண்டும்
6.நாங்கள் எல்லோரும் மன பலம் பெற வேண்டும்
7.எங்கள் விவசாயம் நன்றாக இருக்க வேண்டும்
8.நாங்கள் ஆரம்பித்த தொழில் நன்றாக இருக்க வேண்டும்
9.என் பிள்ளைகளுக்குச் சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டி வந்தீர்களானால்
10.இந்த வாக்குகளை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்ய முடியும்.
பிள்ளைகளுக்குக் கல்யாணம் ஆக வேண்டும் என்று எண்ணிக் கேட்கலாம். அதற்குள்ளேயே நான்கு ஐந்து கோரிக்கைகளுடன் வரக் கூடாது. நான்கு ஐந்து வாக்குக் கொண்டு வந்தால் அத்தனையும் FAIL தான்.
காரணம் பெண்ணிற்கு நல்ல வரன் வர வேண்டும், சீக்கிரம் திருமணம் நடைபெற வேண்டும் என்று கேட்டால் அந்த பெண்ணிற்கு சீக்கிரம் திருமணம் நடக்கும்.
“பத்திரிக்கையைக் கொண்டு வாருங்கள்…” என்று வாக்கைப் பதிவு செய்கிறோம்.
பதிவு செய்தபடி நீங்கள் எண்ணி எடுத்தால் அதை நீங்கள் திருப்பிக் கொண்டு வந்தால் சீக்கிரமாகவே அந்தத் திருமணம் நடக்கும். ஏனென்றால் யாம் ஜெபித்த இந்த உணர்வின் ஆழமான சத்தான நிலைகளை “ஒருமுகமாகப் பதிவு செய்கிறோம்.”
அப்பொழுது நீங்கள்… சரி…! என்ற நிலையில் அதே மகிழ்ச்சியோடு போக வேண்டும்.
இந்த வாக்கை முதலில் வாங்கிக் கொள்வார்கள்.
ஆனால் அடுத்தாற்போல் வீட்டில் கஷ்டமாக இருக்கிறது பணத்திற்கே கஷ்டமாக இருக்கிறது என்பார்கள்.
சரி… “அதுவும் நடக்கும்” என்று யாம் சொல்வோம்.
பிறகு என் பையன் எப்பொழுது பாத்தாலும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான். பக்கத்து வீட்டுக்காரர்கள் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்று வரிசையாக “அடுக்கிக் கொண்டே இருப்பார்கள்”.
1.நாம் எதன் அடிப்படையில் வருகிறோமோ… “ஒன்று தான்”.
2.வாக்கிற்கு வன்மை.
அங்கிருந்து வருகிறீர்கள் என்றால் அதில் முக்கியமான ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
குடும்பத்தில் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும், எங்கள் குடும்பத்தில் உள்ள கஷ்டம் எல்லாம் நீங்க வேண்டும். மகரிஷிகளின் சக்தியால் தொழில் வளமும் செல்வமும் பெற வேண்டும் என்று எண்ணினால் “இந்த ஒரு வாக்கில் எல்லாமே நடக்கும்”.
செல்வம் வந்தால் உங்கள் கஷ்டத்தை நிவர்த்தி செய்துவிடலாம்.
ஆனால் அதற்கு இப்படி நல்ல வாக்குகளைப் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும் கூட… அதை ஏற்றுக் கொள்ள சமுதாயத்தில் இடம் இல்லை.
எதைச் சொன்னாலும் சாமியிடம் ஒரு ஐந்து முறையாவது ஆசிர்வாதம் வாங்கினால் தான் அது நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறார்கள்.
1.சாமி வாக்கை ஏற்று அந்த ஒரு வாக்கு இருந்தாலும் போதும்.
2.இரண்டாவது ஒரு முறை பதிவு செய்து… தியான மண்டபத்திற்குள் வந்து தியானித்து
3.சாமி சொன்ன வாக்கு நிறைவேற வேண்டும்.
4.எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்
5.என் குழந்தைக்குச் சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்று எண்ணினால் போதும்.
“திருமணம் நடக்கும்” என்று சொல்லி வாக்கினைக் கொடுக்கிறேன்.
அடுத்துப் பணத்திற்குக் கஷ்டம் என்பார்கள். திருமணம் நடக்க வேண்டும் என்று கேட்பார்கள். ஆனால் அவர்களே இரண்டாவது “பணம் இல்லையே…” என்பார்கள்.
இதெல்லாம் அவர்களே இதற்குத் தடை விதிப்பதாகும்.
இது போன்ற நிலைகளை விடுத்துத் திருமணம் நடக்கும்…, பத்திரிக்கை கொண்டு வாருங்கள்…! என்று சொன்னால் அதற்கு வேண்டிய வழிகள் நடக்கும்.
1.வாக்கு சாதாரணமானது அல்ல.
2.பல லட்சம் கொடுத்தாலும் இந்த மாதிரியான வாக்குகள் உங்களுக்கு அமைவது கடினம்.
அந்த வாக்கை நீங்கள் பதிவு செய்து கொண்டீர்களானால் அது உங்களுக்கு நன்மை செய்யும்.
ஒருவர் திட்டுவதையும் வேதனைப்படுவதையும் பதிவு செய்கிறீர்கள். அவர்களை நினைக்கும் போதெல்லாம் உங்களுக்குக் கோபம் வருகிறது. வேதனை உங்களுக்குள் பதிவாகிறது. அது உங்களுக்குள் விளைகிறது.
இதைப் போலத்தான் சாமி அன்று என் பிள்ளைக்குத் திருமணம் நடக்கும்… நல்ல வரன் கிடைக்கும்…! என்று சொன்னார்கள் என்று எண்ணி…
1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என் குடும்பத்தில் அது படர வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் என் மகளுக்கு நல்ல வரன் வர வேண்டும்,
3.அந்தக் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். அது குடிபுகும் இடத்தில் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எடுத்துப் பாருங்கள்.
அது எவ்வளவு பெரிய உண்மை என்று நீங்கள் பார்க்கலாம்.
யாம் கொடுத்த வாக்கும் உங்கள் எண்ணமும் உங்கள் நினைவும்
1.உங்களை எப்படிக் காக்கிறது…?
2.உங்களுக்கு நல்ல வழியை எப்படிக் கொண்டு வருகிறது…? என்பதை
3.நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் தெரியும்.
ஏனென்றால் நாம் பல முறை சொல்கிறோம். உங்கள் வாழ்க்கையிலே எப்பொழுதும் “சாமி சொன்ன வாக்கு நிறைவேறும்” என்று எண்ணினீர்கள் என்றால் அது நிறைவேற்றிக் கொண்டே இருக்கும்.
அதைப் பதிவு செய்த பிற்பாடு… சாமி அன்றைக்கு வாக்குக் கொடுத்தார். அது எங்கிட்டு…? என்று விட்டீர்கள் என்றால் போய்விட்டது.
ஒரு விதையை ஊன்றிவிட்டோம் என்றால் அதற்குத் தகுந்த தண்ணீர் ஊற்ற வேண்டும். அந்தந்தக் காலத்திற்குத் தகுந்தாற் போல் உரத்தையும் போட வேண்டும்.
அது போலத் தான் சாமி சொன்ணார்கள். எப்படியும் பெண்ணிற்குத் திருமணம் நடக்கும்… நல்ல வரன் வரும்…! என்ற உணர்வை மட்டும் வைத்திருந்தால் போதும்.
1.ரொம்பச் சீக்கிரமும் நடக்கும்…
2.காலம் தாமதமானாலும்… “ஒரு நல்ல வரனாகவும்” கிடைக்கும்.
ஏனென்றால் உங்கள் உணர்வுகளில் மிகவும் கடுமையான நிலைகளைப் பதிவு செய்து வைத்திருப்பதால் உங்கள் பதிவே உங்களுக்கு எதிரியாகும். நீங்கள் எந்தெந்த அளவிற்கு வேதனையையும் கஷ்டத்தையும் வைத்திருக்கிறீர்களோ உங்கள் ஆன்மாவில் அது அதிகமாகப் பரவியிருக்கும்.
எந்த நல்ல சமாச்சாரத்தைப் பேசினாலும்
1.உங்களை அறியாமலேயே உங்கள் கஷ்டத்தைச் சொல்லி விடுவீர்கள்.
2.உங்களை அறியாமலேயே என் கஷ்டம் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது என்றே சொல்வீர்கள்.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
ரேடியோ டி.வி அலைகளில் எந்தெந்த ஸ்டேசனை வைக்கின்றோமோ அந்தந்த அலையில் தான் வருகின்றது. கோபித்தவனுடைய உணர்வைப் பதிவாக்கிவிட்டால் அது ஒரு ஸ்டேசன் ஆகின்றது.
அவன் உடலில் விளைந்த உணர்வு அங்கே இருக்கின்றது. நம் உணர்வு அவனிடம் இருக்கின்றது. “என்னை இப்படி மோசம் செய்தான்…” என்று எண்ணினால் அந்த அலைகள் வருகின்றது.
அதே நேரத்தில் அந்த உணர்ச்சிகள் நம்மை ஞாபகப்படுத்துகின்றது. உடனே நம்மை அறியாமலே இங்கே தவறுகள் செய்ய ஆரம்பித்துவிடுகின்றோம்.
இதைப் போன்ற நிலைகளில் உலகில் எத்தனையோ உணர்வுகளைப் பார்க்கின்றோம். ஒரு ஆக்சிடென்டைப் பார்க்கின்றோம். அப்பொழுது அது ஒரு ஸ்டேசனாக அமைந்துவிடுகின்றது.
இரண்டு பேர் கடுமையாகச் சண்டை போடுவதைப் பார்க்கின்றோம். ஒருவன் மற்றொருவனை மிரட்டிப் பேசுகின்றான்.
1.அவன் உடலிலிருந்து வெளிவந்த அலைகள் இங்கே இருக்கின்றது.
2.அவனுக்குள் விளைந்திருக்கின்றது. அவனிடமிருந்து வெளி வருகின்றது.
3.நமக்குள் பதிவாகியிருக்கின்றது. அந்த அலைகளை நுகரச் செய்கின்றது.
4.அது அழிவதில்லை.
5.அதை (அந்த ஸ்டேசனை) அழிக்க வேண்டுமல்லவா…!
அது நமக்குள் இருக்கும் பொழுது என்ன செய்கின்றது?
நாம் சோர்வடையப்படும் பொழுது காரமான உணர்ச்சி கொண்டு நம்மை இயக்கச் செய்கின்றது. திடீரென்று நமக்குக் கோபம் வரும்.
அப்பொழுது எதை எடுத்தாலும் வேகம் வரும். ஒரு பொருளை எடுத்தாலும் அந்த வேகம் வரும். சோர்வடைந்த அந்த நேரத்தில் தூக்கி எறிவார்கள்.
ஒரு பலகாரம் சுட்டுக் கொண்டிருக்கும் பொழுது இந்த மாதிரி ஆகட்டும். உடனே என்ன செய்வார்கள்?
வடையை எணணெய்ச் சட்டிக்குள் மெதுவாகப் போடுவதற்குப் பதில் தூக்கி “டப்..” என்று போடுவார்கள். எண்ணெய் மேலே படும்.
செய்வது எது…? நாம் நுகர்ந்த அந்த உணர்வுகள் தான்.
இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் அந்த உணர்வுகள் நம்மை இயக்காது நாம் அதை அடக்க வேண்டும்.
ஒரு ரேடியோ ஸ்டேசனில் உணர்வலைகள் சந்தோசமாகப் பேசிக் கொண்டிருக்கின்றது. சில நேரங்களில் காரசாரமான உணர்ச்சிகள் இன்னொரு அலைவரிசையில் வருகிறது என்றால் இதே அலைவரிசையில் வரப்படும் பொழுது இதிலிருந்து இந்த ஏரியல் வழி கூடித்தான் எடுக்கும்.
அந்த ஏரியலில் வரும் பொழுது இந்த அலை வரிசை அதிகமாகிவிட்டதென்றால் இதனின் அதிர்வலை “ஜிர்..ர்ர்..ர்ர்” என்று சப்தம் போடும்.
ஆகவே இதில் அலை வரிசையில் வரும் பொழுது எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையில் வந்தாலும் எலெக்ட்ரிக்கின் உணர்வலைகள் வரப்படும் பொழுது அந்த எலெக்ட்ரிக்கின் தொடர்பு கொண்டுதான் இங்கே இயக்குகின்றது.
அந்த உணர்வின் தன்மை எரியல் வழி கூடி அது வந்தாலும் இது எர்த் ஆன பின் இன்னொரு ஸ்டேசனை வலுவான நிலைகளை இழுத்து என்ன செய்கின்றது?
அந்த அதிர்வுகளையே காட்டுகின்றது. (நீங்கள் கேட்டிருப்பீர்கள் – இரண்டு ஸ்டேசன் ஒரே அலைவரிசையில் வந்தால் ரேடியோவாக இருந்தாலும் டி.வி.யாக இருந்தாலும் அதிர்வாகி இரைச்சலாகும்) இதைப் போல
1.நம் உயிர் எலெக்ட்ரிக் என்றாலும்
2.ஒரு எதிர் உணர்வான எலெக்ட்ரிக் அந்த எலெக்ட்ரானிக்காக மாற்றப்படும் பொழுது
3.நம்முடைய சிந்தனை குலைந்து
4.நம்மை அறியாமலே தவறான சொல்களைச் சொல்லச் செய்து
5.தவறான செயல்களைச் செய்யச் செய்துவிடுகின்றது.
சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதா…?
ஆத்ம சுத்தி மூலம் நாம் சக்தி பெறும் மார்க்கம்
ஒரு பொருளுக்குள் ஒரு விஷம் பட்டால் அனைத்தையுமே நாசமாக்குகின்றது. இதைப் போன்று
1.நம் உணர்வுக்குள் சிறிதளவு வேதனையாகி விட்டால்
2.நமக்கு மட்டுமல்ல… மற்றவர்களுக்கும் சேர்கிறது.
ஒரு குழந்தை தவறு செய்தால் “இப்படி ஆகிவிட்டதே…” என்று வேதனையை எடுத்தீர்கள் என்றால் இது விஷம்.
இந்த விஷமான உணர்வு கொண்டு குழந்தையைப் பார்க்கப்படும் பொழுது விஷம் அதிகமாகக் கூடி அவன் புத்தியையே மட்டமாக்கும்.
இப்படிப் பண்ணிவிட்டாயே…? பாவி…! என்று சொல்லி இந்த விஷத்தின் தன்மை கொண்டு ஆக்கப்படும் பொழுது அவனிடம் இருக்கக்கூடிய அந்த வளர்ச்சியின் தன்மையை மட்டமாக்கி… அங்கே விஷமாகி… அவன் சிந்திக்கும் செயலையும் இழந்து விடுகின்றான்.
நமக்குள் என்ன சக்தி இருக்கின்றது…? என்று நினைத்துப் பார்த்தால், சிந்தித்துப் பார்த்தால் இந்தச் சொல் எதிலிருந்து வருகின்றது…? என்பது தெரியும்.
நாம் சுவாசித்த உணர்வின் தன்மைகள் உயிரில் பட்டு உணர்ச்சிகளாகின்றது.
1.நாம் பேசும் பொழுது அந்த உணர்வின் ஒலியாக மாறி
2.இந்த உணர்வுகள் மற்றொன்றுடன் கலக்கப்படும் பொழுது
3.அந்த உணர்ச்சிகளைத் தூண்டிச் சுவாசிக்கச் செய்து அங்கே விளைந்து விடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் மீள்வதற்கு மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி ஆத்ம சுத்தி செய்து நமக்குள் துனபங்கள் தாக்கும் துன்பங்களை உருவாக்கும் நிலையை மாற்ற வேண்டும்.
கருணைக் கிழங்கை வேக வைத்து விஷத்தின் தன்மையை நீக்குகின்றோம். எத்தனையோ விஷத்தன்மை கொண்ட எத்தனையோ உணர்வு கொண்ட காய்கறிகளை வேக வைத்து அதிலிருக்கக்கூடிய காரல்களை நீக்கிச் சுவை கொண்டதாக மாற்றிக் கொள்கின்றோம்.
இதைப் போன்று நம் மனித வாழ்க்கையில் எத்தகைய துன்பமான நிலைகள் வந்தாலும் அதைத் நமக்குச் சாதகப்படுத்துவதற்கு வேக வைத்துச் சுவையாக்கும் நிலையாக ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.
அப்படிச் செய்தால் அது சுவைமிக்க சொல்லாக நமக்குள் சென்று சுவையான செயல்களைச் செய்யக் கூடிய உணர்வுகளாகத் திருப்பிப் பேசும்படி செய்யும்.
அப்பொழுது நம் சொல்லைக் கேட்பவர்களுக்கும் மகிழ்ச்சியுட்டும் நிலைகளாக மாற்றும் சக்தி கிடைக்கின்றது.
நம் உணர்வைச் சுவையற்றதாக ஆக்காதபடி சுவையான தன்மையாக நமக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.
சிறிது காலம் யாம் சொல்வதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பக்குவப்படுத்திக் கொண்டால் அது தானாகவே பேசும்.
கோபம் வந்துவிட்டால் அடங்காத பையனை அடிக்கடி நினைத்தவுடன் கோபம் வருகின்றது. அதே மாதிரி அந்தப் பையன் நன்றாக ஆகவேண்டும் என்று தியானத்தில் எடுத்துக் கொண்டு
1.“நன்றாக ஆகவேண்டும்… நன்றாக ஆகவேண்டும்…” என்று
2.அடிக்கடி எண்ணினால் பையன் நல்லவனாக ஆகிவிடுகின்றான்.
3.தன்னாலே தன்னிச்சையாக வரும்.
இப்படிச் சொல்லிப் பழகிவிட்டால் அதே நிலைகள் வரும்.
ஒரு குழந்தை படிப்பிலே மட்டமாக இருக்கிறது. “படிப்பிலே இப்படி இருக்கிறானே…” என்று நாம் எண்ணும் பொழுதெல்லாம் மற்றவர்களிடத்தில் எல்லாம் சொல்வோம். நினைக்கும் பொழுதெல்லாம் இந்த வேதனைப்பட்டே நினைப்போம்.
இவ்வாறு நினைக்கும் பொழுது இந்த வேதனைகள் அவன் உடலிலே சேர்ந்து இதையேதான் உருவாக்கும்.
ஆகையினாலே இதையெல்லாம் நீங்கள் மனதிலே பக்குவப்படுத்தி இந்த நிலைகளெல்லாம் நீங்கவேண்டும் என்று ஆத்ம சுத்தியைச் செய்து வரும் தீமைகளைப் போக்கிக் கொள்ளுங்கள்.
1.“ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உங்கள் உயிரிடம் நினைவைச் செலுத்துங்கள்
2.ஓம் ஈஸ்வரா குருதேவா… உங்கள் அருளால் மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கியிருங்கள்
3.திரும்பத் திரும்ப மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்ற நினைவுடன் ஏங்கி இருங்கள்
4.நினைக்கும் பொழுதெல்லாம்… “அந்த அலைகள் இழுக்கும்…”
மகரிஷிகளின் அருள் சக்தியை எங்கள் ஜீவாத்மா பெற அருள்வாய் ஈஸ்வரா என்று மெதுவாகக் கண்களை மூடிக் கண்ணின் நினைவை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.
கண்ணுக்குள் இருந்து மெதுவாக உங்கள் உடலுக்குள் முழுமையாகச் செலுத்திக் கொண்டு வாருங்கள். இப்பொழுது மகரிஷிகளின் அருள் சக்தியை எங்கள் ஜீவாத்மா பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நினையுங்கள்.
இதுதான் ஆத்ம சுத்தி.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
எம்முடைய (ஞானகுரு) உபதேசத்தை எல்லோரும் ஆர்வமாகக் கேட்கின்றனர்.
உங்களுக்கு “நோயில்லை… துன்பம் இல்லை…” என்று நான் வாக்காகக் கொடுக்கின்றேன்.
நல்ல வாக்கைக் கொடுத்தாலும் நான் படும் அவஸ்தை “எனக்குத்தான் தெரியும்” என்கிறார்கள்.
சரி இனிமேல் நோய் நீங்கிப் போகும்…! என்று யாம் சொல்கிறோம்.
“இல்லைங்க..,!” என் தொல்லை என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது என்று சொல்கிறார்கள்…!
ஒரு அம்மாவிடம் நான் நல்ல உணர்வை வாக்காகச் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். அந்த அம்மா எல்லாவற்றையும் கேட்டுவிட்டு என்ன சொல்கிறது…?
நான் இங்கே வந்தால் நன்றாக இருக்கின்றது. வீட்டிற்குச் சென்றால் சுத்தமாக எல்லாம் மாறிப் போகின்றது. என்னென்னவோ நடக்கிறது… என்று சொல்கிறது.
வீட்டிற்குப் போனாலும் என்ன அம்மா…? எங்கே போனாலும் இதே மாதிரி நல்லதை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள் என்று சொல்கின்றேன்.
“அதற்கு இல்லைங்க….!” வீட்டிற்குப் போனாலே என் தொல்லை என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது…! என்று அதை “இறுகப் பிடித்துக் கொள்கிறார்கள்”.
அதே மாதிரி இனி நோய் இல்லை போங்கள்… இதைப் பின்பற்றுங்கள் நீங்கள் நன்றாக ஆகிவிடுவீர்கள்…! என்று நல்ல வாக்கைக் கொடுக்கின்றோம்.
ஆனால் இதைக் கேட்பார் யாரும் இல்லை.
1.சாமிக்கு என்ன தெரியும்…?
2.நான் படுகிற அவஸ்தை எனக்குத் தானே தெரியும் என்கிறார்கள்.
ஆனால் தன்னைத் “திட்டுபவர்களை” மட்டும் மனதில் எண்ணி “என்னை இப்படிப் பேசினாய் அல்லவா…, இரு நான் பார்க்கிறேன்… உன் குடும்பத்தை நான் தொலைத்துக் காட்டுகிறேன்…” என்று மட்டும் இறுக்கிப் பிடித்துக் கொள்கிறார்கள்.
இந்த உணர்வு
1.அவர்களை இவர்கள் தொலைத்துக் கட்டுவதற்கு முன்னால்
2.இவர்கள் உடலுக்குள் புகுந்து இந்த உடலைத் தொலைத்துக் கட்டும் என்பதை மறந்து போகின்றார்கள்.
சிலர் வீட்டில் பார்க்கலாம். கொஞ்சம் “சுருக்…” என்று சொன்னால் போதும். ஆ… நீ என்னை என்ன சொன்னாய்…! உன்னை விடுவதா…? இருக்கட்டும்… நான் உன்னை என்ன செய்கிறேன் பார்…! என்று சொல்லிவிட்டு வாயில் வந்ததையெல்லாம் பேசுவார்கள்.
நீ அப்படிப் போவாய்… இப்படிப் போவாய்… இந்த மாதிரியெல்லாம் உனக்கு ஆகும்…! என்றெல்லாம் பேசுவார்கள்.
ஆனால் இப்படிப் பேசுபவர்கள் எல்லோரையும் பாருங்கள். உடலில் கை கால் குடைச்சல் கண் எரிச்சல் தலை வலி இடுப்பு வலி கால் வலி மூட்டு வலி எல்லாம் இருக்கும். “இது பேசியவர்களுக்கு”.
சிலர் பேசாமல் இதைப் பொழுது போக்காக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
1.இப்படிப் பேசுகின்றார்களே பாவிகள்… அந்த அம்மா நல்ல அம்மா…!
2.இப்படிப் பேசுகின்றார்களே பாவிகள்…. அந்த அம்மா நல்ல அம்மா…! என்று
3.இப்படியே திரும்பத் திரும்ப எண்ணி
4.அந்தச் சண்டை போடுபவர்களை உற்றுப் பார்த்துத் தனக்குள் பதிவாக்கிக் கொள்வார்கள்.
ஒரு பொல்லாதவரை எண்ணுவது. நல்லவரைப் பார்த்து இங்கே “இப்படி ஆகிறதே…” என்று இதை வளர்த்துக் கொள்வது.
1.நல்லவர் மேல் இரக்கமும்
2.பொல்லாதவர் மேல் ஆத்திரமும் இந்த இரண்டும் இங்கே வரும்.
இப்படி வந்தவுடனே “அம்மம்மா…ஆ…” வயிறெல்லாம் வலிக்கிறதே… குடலெல்லாம் முட்டுகிறதே… அவர்களுக்கு இந்த நோய் வரும்.
ஆனால் நல்லவர்கள் தான்.
இந்த மாதிரிச் சண்டை நடக்கும் இடங்களில் என்ன நடக்கிறது என்று பார்க்கும் பொழுது என்ன ஆகிறது…?
1.எனக்கு எப்படியோ வருகிறது… என்னென்னமோ செய்கிறது.
2.நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லையே…
3.தெய்வம் என்னை இப்படிச் சோதிக்கிறதே…
3.நான் அடிக்கடி வணங்கும் தெய்வமும் இப்படிப் பண்ணுகிறதே…!
4.இப்படித்தான் எண்ணி இதைத்தான் கூட்டிக் கொள்ள முடிகின்றது.
தெய்வம் எங்கே இருக்கின்றது…? எந்த ரூபத்தில் இருக்கின்றது…? என்பதை வியாசகர் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.
நம் உயிரே கடவுள் நம் உடலே கோவில். எண்ணும் எண்ணமே இறைவன். இறையின் செயலே தெய்வமாக அமைகின்றது.
நாம் எண்ணியதை உயிர் “ஓ…” என்று இயக்கி “ம்…” என்று உடலாக ஒவ்வொரு நொடிப்பொழுதும் உருவாக்கிக் கொண்டேயுள்ளது.
நாம் யார்? நாம் எண்ண வேண்டியது எது? நமக்குள் சேர்க்க வேண்டியது எது? நாம் அடைய வேண்டிய எல்லை எது…? இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்…?
இத்தகைய நிலைகளை எல்லோருக்கும் அறிவிப்பதற்காகத்தான் தன்னை அறிந்து கொள்ளும் நிலைக்காகத்தான் ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள்.
இதை அறியாதபடி நாம் வாழ்ந்தால் எந்த உணர்வைச் சுவாசிக்கின்றோமோ அதனின் இயக்கமாக இயங்கி அதன் வழியில் தான் செல்ல வேண்டியதிருக்கும்.
அத்தகைய நிலைகளிலிருந்து விடுபடும் நிலைக்குத்தான் உங்களுக்கு அந்த ஞானிகளைப் பற்றிய உணர்வுகளைப் பதிவாக்கிக் கொண்டே வருகிறோம்.
“இப்படி ஆகிவிட்டதே… இப்படிச் செய்து விட்டாயே…” என்று உணர்ச்சி வசப்பட்டால் இருளாகிறது. அந்த உணர்ச்சிகளை “மகரிஷிகளின் உணர்வு கொண்டு வேக வைத்து” நமக்குச் சாதகமாக்க வேண்டும்.
நாம் வெளிப்படுத்தும் உணர்வுகள் பிறர் மீது தாக்கப்பட்டு… மீண்டும் நமக்கே எப்படிக் கெடுதலாக வருகிறது…?
இரண்டு பேர் நீங்கள் சண்டை போடுகிறீர்கள் என்றால் அந்தச் சண்டையிட்ட உணர்வுகள் இருவர் உடலிலும் இருக்கின்றது. இருந்தாலும் அவர் மீது நீங்கள் வெறுப்பாக இருக்கின்றார்கள்.
அவருக்கும் உங்களுக்கும் சேர்த்த நண்பர் இங்கே வருகிறார். இவர் எதிர்பாராதபடி அந்தப் பழைய நண்பரைச் சந்திக்கின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
நான் ஊருக்குப் போயிருந்தேன். உங்களை இந்த மாதிரி மோசம் செய்துவிட்டுப் போன நண்பன் இப்பொழுது அங்கே நன்றாக இருக்கின்றான்…! என்று சொன்னால் போதும்.
உடனே உணரச்சி வசப்படுவீர்கள். பாவிப்பயல்… அவனெல்லாம் உருப்பட மாட்டான்…! என்ற இந்த உணர்வு தோன்றியவுடன் எதிர்நிலையாகிறது.
தூண்டியவுடன் இந்த உணர்ச்சிகள் என்ன செய்கிறது…?
1.இதே உணர்வு கண்ணின் நினைவு அங்கே ஓடுகின்றது.
2.ஏனென்றால் சொன்னவுடன் பார்க்கலாம்… அந்த உருவம் தெரியும்.
3.உணர்ச்சிகள் (அலைகள்) அங்கே போகும்… திடீரென்று அவனுக்கும் உணர்ச்சிகள் தாக்கிய உடனே
4.எதிர்பாராத இந்த நினைவு அவனுக்கும் வரும்… பார்க்கலாம்.
அதனின் நினைவு வரப்படும் போது நம் உருவம் அங்கே தெரியும். இந்த உணர்ச்சிகள் அங்கே சென்ற பின் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் என்றால் உள்ளே சாப்பாடு போகாது.
ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தான் என்றால் சிந்திக்கும் தன்மை குறைந்து ஓரத்தில் போய்க் கொண்டிருப்பவன் திடீரென்று நடுரோட்டுக்குச் செல்வான்… விபத்து ஆகிவிடும்.
காரை ஓட்டிச் சென்றால் விபத்து ஆகிவிடும். ஒரு எலக்ட்ரிகல் வேலை செய்து கொண்டிருந்தான் என்றால் சிந்தனை இழந்து ஷாக் அடித்துவிடும்.
இது எல்லாம் புரை என்ற நிலையின் இயக்கங்கள். வெறுப்பின் தன்மையால் மட்டும் தான் இது போன்ற கெடுதல் செய்யவில்லை.
பாசத்துடன் இருக்கின்றோம்… வெளி ஊரிலிருந்து பையன் தகவல் கொடுக்கவில்லை… அவன் பேசவில்லையே… என்று எண்ணிக் கொண்டிருந்தால் போதும்.
இந்த உணர்வின் தன்மை இயக்கப்பட்டு அவன் சாப்பிடும் பொழுது இதே உணர்வு புரை ஓடும்.
1.பாசத்தினால் உணர்வின் வேகங்கள் கொண்டு
2.வேதனை என்ற உணர்வு கலக்கப்படும் போது உறுப்புகளின் இயக்கச் சக்தியும் குறையும்.
பிள்ளையை எண்ணி வேதனைப்படும் சமயத்தில் ஒரு கணக்கை நீங்கள் எழுதிக் கொண்டிருந்தால் என்ன ஆகும்…? கணக்கைத் தவற விட்டு விடுவோம்… ஆபீசில் குற்றவாளி ஆகி விடுவோம்.
தினசரி தகவல் கொடுக்கக் கூடிய பையன் கொடுக்கவில்லை என்றால் என்ன ஆச்சோ…? ஏது ஆச்சோ…? என்று எண்ணினால்
1.அந்தச் சந்தர்ப்பம் அவன் மீது இருக்கும் பிரியத்திலே வேதனைப் படும்போது
2.பாசத்திலே கலந்து இது தாக்கப்பட்ட உடனே
3.நாம் பார்த்துக் கொண்டிருந்த கணக்கே தவறாகி விடுகிறது.
4.அங்கே அவனுடைய செயலையும் குன்றச் செய்கின்றது.
இந்த மாதிரி இயக்குகிறது. ஐயோ நான் நினைத்தேனே… நான் நினைத்த மாதிரி என் பையனுக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று சொல்கிறோம் அல்லவா..!
குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். பிள்ளை படிப்பிலே ஒரு மக்காக இருக்கின்றானே. இவன் என்றைக்குத் தான் நன்றாகப் படிக்கப் போகின்றானோ…? என்று இந்த வேதனைப்படும் நிலைகளைச் செயல்படுத்தினால் இந்த உணர்வுகள் பாய்ந்து அவனுடைய நல்ல சிந்தனையை அது குறைக்குமே தவிர நல்லதாக ஆக்காது.
1.அவன் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும்… உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று
3.நாம் யாராவது சொல்கிறோமா என்றால் இல்லை…!
இப்படியே இருக்கின்றான்… சரியான ஞாபகசக்தி வர மாட்டேன் என்கிறது என்ற இந்த உணர்வை எடுத்துப் பாய்ச்சும்போது கொஞ்ச நஞ்சம் இருக்கக்கூடிய நல்ல உணர்வுகளின் இயக்கமும் தடைபட்டுப் பாடம் சுத்தமாக வருவதில்லை.
பள்ளிக்கூடம் போகச் சொன்னால் போகவே மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருப்பான். காரணம்…
1.நம்முடைய ஆசை உணர்வின் வேகம் இந்த மாதிரிப் பாய்ச்சுகிறது.
2.நம் உடலில் விளைந்தது எதுவோ இந்தப் பாசத்தினால் தவறாகிவிடுகிறது.
பையன் படிக்கவில்லை என்று அவனை நாம் வெறுத்தோம் என்றால் “பள்ளிக்கூடமே நான் போகவில்லை…!” என்பான். ஆக மேலும் மேலும் படிப்பு குறையும்.
இது எல்லாம் ஒருவருக்கொருவர் இணைந்து வாழும் நிலையில் நாம் வெளிப்படுத்தும் உணர்வுகள் தாக்கப்பட்டுக் கெடுதலாக மீண்டும் நமக்கே எப்படி வருகிறது…? என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதற்குத் தான் இதை உணர்த்துகின்றோம்.
ஓருவரின் குறையிலோ நிறைவிலோ ஆத்மாவிற்கு வலுப் பெறும் தன்மையோ வளரும் தன்மையோ யாரும் பெற முடியாது – ஈஸ்வரபட்டர்
இன்றைய பக்தி மார்க்கத்தில் மதில் சுவர் எழுப்பி… ஆலயக் கோபுரம் கட்டித் தெய்வத்தின் உருவச் சிலையைப் பஞ்சலோகங்களைக் கொண்டு பிரதிஷ்டை செய்து… அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவித்து… மேளங்கள் முழங்க வேதனகள் ஓதி… தீபாராதனை காட்டி… தெய்வங்களை வழிபடுகின்றார்கள்.
மேலும் அதற்கென்ற அறங்காவலர்களையும் பொறுப்பேர்க்கும் பொருட் காவலர்களையும் நியமித்துத் “தெய்வ சங்கல்பம் பெறும்” பக்தி மார்க்கத்தால் கிடைக்கப் பெறும்… நடைமுறைச் செயல் வழியை வழிப்படுத்துகின்றனர்.
ஆனாலும்…
1.தன் ஜீவாதாரத்திற்கே பொருளீட்ட முடியாத…
2.செயல் நிலை கொள்ளா மனிதக் கூட்டங்கள்… போற்றலில் புகழ் கொண்டு
3.பொருளைப் போட்டு தெய்வ பக்தியை வளர்க்கும்
4.தேவக் கூட்டங்களை எதிர்க்கும் எண்ணம் கொண்டு குரோத… பொறாமை… ஆவேச உணர்வுடன்
5.தான் வளர்க்க வேண்டிய உயர் குணத்தையே மறந்து
6.பொருள் கொண்ட பக்தி உணர்வின் கூட்டத்தைக் கூடச் செய்து
7.பொருளற்ற ஏக்க உணர்வு கொண்ட மனிதக் கூட்டங்களின் சலிப்பின் சோர்வினால்… பொறாமை உணர்வு ஏற்பட்டு
8.தான் அடைய முடியாத நிலையால்… ஏமாற்றும் குணங்களை வளர்த்து
9.ஆலயங்களில் நடைபெறும் பஜனைக் கூட்டத்தின் வலுவைக் காட்டிலும்
10.ஏமாற்றும் உணர்வு கொண்ட… “திருடும் நிலைக் கூட்டங்கள் தான்…” இன்று வளர்ந்துள்ளது
ஆலயத்திற்குச் செல்லும் அத்தகைய இரு சாராரும் பயந்த உணர்வு கொண்டே செல்கின்றனர்.
ஏன்…? எதற்காக…!
ஆலயத்திற்குச் செல்வோருக்கு… எங்கே தான் அணிந்து செல்லும் நகைகளோ பொருளோ “பறிபோய்விடுமோ…!” என்ற பய உணர்வின் அச்சம் ஒரு பக்கம்.
மறுபக்கம்… பக்தியுடன் வருபவர்களிடம் ஒன்றுக்கு இரண்டாக ஏமாற்றிப் பூஜை சாமான்களின் விலையை ஏற்றி விற்கின்றனர். அப்படி விற்பவரின் உணர்வோ… “தான் ஏமாற்றிப் பிழைக்கும் செயலுக்காக” இந்தத் தெய்வம் தண்டித்துவிடுமோ…? என்ற பய உணர்வு கொண்ட தன்மையும் உள்ளதப்பா.
அது எல்லாம் போக.. அந்தத் தெய்வச் சிலையை “களவாடும் உணர்விலும்” தான் இன்றைய ஆலய நிலைகள் யாவும் உள்ளதப்பா…!
இதிலிருந்து… உண்மை தெய்வ சக்தியின் அலையைப் பெறும் நிலை மனித உணர்வின் பால் செலுத்த முடியாத செயலாகத் தான் வளர்ந்து விட்டதப்பா…!
1.இன்றைய மனிதக் கூட்டங்களின் இத்தகைய செயலிலிருந்து
2.ஞான அலையை ஈர்க்கும் வழியற்ற ஈர்ப்புப் பிடியினால்
3.வலுக் கொண்ட மகரிஷிகளின் செயலையே இக்கலியில் கலக்க விடாதபடி
4.மனிதனின் எண்ண ஓட்டங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றது.
பொறாமை உணர்வுகளும் பேராசை உணர்வும் தான் வலுவாகி உள்ளதே அன்றி முருகனின் குண நிலையை ஒத்த சாந்த சக்தி நிலை வளர முடியாத “கலியாக” இன்றைய நிலை உள்ளது.
எண்ணத்தின் வீரியத்தைப் பிறர் மேல் நாம் செலுத்தும் அலை தெய்வத் தொடர்பு கொண்டு
1.சாந்த வழித் தொடரின் ஞானத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு வந்தாலும்
2.தெய்வத்தின் தெய்வமாகவே நம் ஞான சக்தி உயர்ந்து இருந்தாலும்
3.பிறர் மேல் நாம் செலுத்தும் அலைத் தொடர் குறை காணும் எண்ணத்தைச் செலுத்தாமல்
4.நிறைவு கொண்ட நல் அலைகளை நலம் பெறவேண்டும் என்ற உணர்வு கொண்டு செலுத்தி
5.கீழிருந்து மேலாகத்தான் – ஒவ்வொரு ஆத்மாவையும் தெய்வ உருவாக எண்ணி
6.நல் வழியில் சென்று அந்த அலையின் சக்தியை எடுத்து வளர வேண்டுமே அன்றி
7.வேறு ஓருவரின் குறையிலோ நிறைவிலோ ஆத்மாவிற்கு வலுப் பெறும் தன்மையோ வளரும் தன்மையோ யாரும் பெற முடியாது.
பிறர் பால் செலுத்தும் எண்ணத்தில் அவ்வீர்ப்புப் பிடியில் நம் உணர்வைச் செலுத்திவிட்டோமேயானால் “அவர்கள் பிடியில் சிக்குண்ட ஆத்மாவாகத்தான்” நாம் எடுக்கும் சுவாசத்தால் நம் ஆத்மாவும் வழி பெறும்.
ஞான வழியில் பயணிப்போர் இதை அவசியம் தெரிந்து கொள்வது நல்லது…!
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
வைரம் தனக்குள் நஞ்சினை அடக்கி அது தன் பிரகாசமான நிலைகளை வெளிப்படுத்துகின்றது. இதைப் போல் தான்
1.மகரிஷிகள் அனைவரும் நஞ்சு கொண்ட உணர்வுகள் எதுவாகினும்
2.அதனை அடக்கித் தன் உயிருடன் ஒன்றிய
3.ஒளியின் சரீரமாக என்றும் நிலைத்துள்ளார்கள்.
அத்தகைய ஞானிகள் இன்னொரு மனிதனின் ஈர்ப்புக்குச் செல்லாது தன் உணர்வின் தன்மையைத் தன் நிலை அடைந்து உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகச் சப்தரிஷி மண்டலமாகத் திகழ்ந்து கொண்டுள்ளார்கள்.
ஒளியின் உணர்வாக அந்த அருள் ஞானிகள் உடலிலிருந்து வெளிப்பட்ட அந்த உணர்வின் சத்தை நாம் கவர வேண்டும் என்றால் நமக்கு அத்தகைய வலு வேண்டும்.
சாதாரணமாக ஒரு நூலை வைத்து ஒரு கடினமான பொருளைத் தூக்குவோம் என்றால் அது அறுந்துவிடுகின்றது.
இதைப் போல சாதாரண மக்களாக இருக்ககூடிய நாம் ஞானிகள் மகரிஷிகளின் மிகச் சக்திவாய்ந்த எண்ணங்களை அவர்களின் உணர்வுகளை
1.நம் எண்ணத்தால் கவர வேண்டும் என்றால் அது முடியாத காரியம்.
2.நம்முடைய எண்ணத்திற்கு வலு இல்லை.
3.அது செயலற்றதாக ஆகிவிடுகின்றது.
4.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற நம் எண்ணத்திற்கு வலிமை வேண்டும்.
ஒரு சிறு கல்லாக இருந்தால் அதை ஒரு மனிதன் தூக்கிவிடுவான். பெரும் கல்லாகும் பொழுது அவனால் தூக்க முடியாது. ஆனால் பலரும் சேர்ந்தால் அதை எளிதாகத் தூக்க முடிகிறது.
ஒரு நூல் நிலையாக இருப்பினும் பல நூல்கள் கொண்டு அதை ஒருக்கிணைந்து கயிறாகத் திரிக்கும் பொழுது அந்தக் கயிறால் ஒரு கடினமான பொருளையும் தூக்கிட முடிகின்றது.
இதைப் போலத்தான் நாம் அனைவரும் சேர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எல்லோரும் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வை கூட்டுத் தியானங்களில் தூண்டச் செய்கிறோம்.
1.அந்த உணர்வால் உந்தச் செய்து தியானிக்கச் செய்து
2.அவ்வாறு தியானிக்கும் பொழுது தான்
3.படர்ந்திருக்கும் அருள் ஞானியின் உணர்வை
4.நம் உடலின் அருகே கொண்டு வர முடியும்.
ஆலயங்களில் உள்ள பெரும் தேரை நாம் வடம் பிடித்து இழுக்கப்படும் பொழுது பலரும் ஒருக்கிணைந்த நினைவுடன் தேரை இழுத்தால்தான் அது எல்லை வந்து சேரும்.
ஒருவர் தெற்கே ஒருவர் கிழக்கே ஒருவர் மேற்கே ஒருவர் வடக்கே என்று அந்த வடத்தை இழுத்தால் அந்தத் தேர் எல்லை வந்து சேராது.
இதைப் போல் தான் நாம் அனைவரும் ஒருக்கிணைந்த நிலைகள் கொண்டு
1.அந்த மகரிஷிகளின் நினைவலைகளைக் குவித்து
2.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று உங்களை எண்ணச் செய்கிறோம்.
நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் உயிரை ஈசனாக மதித்து
1.ஈசன் வீற்றிருக்கும் இந்த ஆலயத்திற்குள்
2.மகரிஷிகளின் அருள் சக்தி அது கிடைக்க வேண்டும்
3.அந்த ஆலயம் புனிதமாக வேண்டும்
4.அதற்குள் இருக்கும் நல்ல குணங்கள் தெளிந்திட வேண்டும்
5.அந்தத் தெய்வ நிலைகள் அங்கே வளர வேண்டும் என்று
6.உங்களை நான் தியானிக்கின்றேன்.
உங்களுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு நீங்கள் எண்ணி ஏங்கும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று உங்களை நான் எண்ணும் பொழுது அந்தச் சக்தியின் தொடரை நீங்கள் பெற முடிகின்றது. கவர முடிகிறது.
இன்று டி.வி.யோ மற்ற சக்தி வாய்ந்த எதுவாக இருந்தாலும் அதைக் கவர்வதற்கு “ஆன்டெனா” வைத்துள்ளார்கள்.
அதனுடன் சக்தி வாய்ந்த இயந்திரங்களையும் நுண்ணிய கருவிகளையும் பொருதி அதன் துணை கொண்டுதான் இந்த ஆன்டெனா தனக்கு முன் இருக்கும் மிகச் சக்திவாய்ந்த அலை வரிசைகளைக் கவர்கின்றது,
அவ்வாறு ஆன்டெனா கவரும்போது நிசப்தமான நிலைகளிலும் சீராகவும் திரைப்படங்களில் காண்பது போல் அந்த அலைகளை ஒருமித்த நிலை கொண்டு சீராக நாம் பார்க்க முடிகின்றது.
இதைப் போல் தான் எண்ணங்கள் அனைத்தும் ஒருக்கிணையச் செய்கின்றோம். நீங்கள் அதைப் பெறுவதற்காக
1.உங்களை நான் தியானிக்கும்போது
2.நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நான் தியானிக்கும் பொழுது
3.அந்தச் சக்திகளை நீங்கள் பெற முடிகிறது.
நீங்கள் ஒவ்வொருவரும் குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியால்
1.உங்களை அறியாது சேர்ந்த தீமைகள் அகல வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் திறன் நீங்கள் பெறவேண்டும்.
3.உயிரான ஈசனுக்கு நீங்கள் எண்ணும் உயர்ந்த எண்ணங்கள் அது மகிழ்ச்சியூட்டும் செயலாக வளர வேண்டும்.
4.அந்த உணர்வின் தன்மை உங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்
5.உங்கள் உடலுக்குள் மனிதனாக உருவாக்கிய மகிழ்ந்திடச் செய்யும் அந்த ஆற்றல்மிக்க நல் உணர்வுகள் அனைத்தும் சீராக விளைந்திட வேண்டும்
6.அது நல்ல வலுவின் தன்மை அடைய வேண்டும்.
7.என்றுமே உங்களுக்குள் மகிழ்ச்சி நிலைத்திட வேண்டும்
8.தீமைகள் வரும்போது அதை போக்கிடும் ஆற்றல்கள் நீங்கள் பெறவேண்டும் என்ற
9.இந்த நிலையில் தான் உங்களை நான் தியானிக்கின்றேன்.
அதே சமயம் “நீங்களும்…” மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது உங்களுக்கு முன் காற்றிலே படர்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க இச்சக்திகளைக் கவர முடிகிறது.
அவ்வாறு கவரும் பொழுது ஒவ்வொருவருடைய ஆன்மாவின் நிலைகளிலும் மகரிஷிகளின் அருள் சக்தி வந்து கலக்கின்றது.
இதை நீங்கள் சுவாசிக்கும் பொழுது உங்களுக்குள் அந்த அருள் ஞானியின் உணர்வைச் சேர்ப்பிக்கும் நிலையாக அமைகின்றது.
அதற்குத்தான் இத்தகைய “கூட்டுத் தியானங்களை” அமைப்பது.
விஷம் தாக்கினால் இருளாகும்… விஷத்தை அடக்கினால் ஒளியாக மாறும்
ஆதியிலே உருவான உயிர் பல கோடிச் சரீரங்களை எடுத்துத் தீமைகளை வெல்லும் சக்தி பெற்றவன் முதல் மனிதன் அகஸ்தியன். அவனுக்கு எப்படிப் பேராற்றல்கள் கிடைத்தது…? என்று பார்ப்போம்.
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர் விஷம் கொண்ட மிருகங்களிடமிருந்தும் கொடூரமான பாம்பினங்களிடமிருந்தும் பூச்சிகளிடமிருந்தும் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக
1.விஷங்களை வென்றிடும் தாவர இனங்களையும் பச்சிலைகளையும் மூலிகைகளையும்
2.தன் அருகிலே பரப்பியும் தன் உடலில் பூசிக்கொண்டும் வாழ்ந்து வந்தனர்
3.சந்தர்ப்பத்தால் அந்தத் தாய் கருவுறுகிறது… அகஸ்தியன் என்று சிசு உருவாகிறது.
கருவுற்ற தாயின் உடலில் பூசிய மணங்கள் உடல் வெப்பத்தால் வெளிப்படும் பொழுது அந்தத் தாய் அதை நுகர்கின்றது கருவில் இருக்கும் குழந்தையும் அதை நுகர்கிறது. விஷத்தை முறிக்கும் ஆற்றலாக அதற்குக் கிடைக்கின்றது.
தாய் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் கருவிலே விளைந்த குழந்தைக்குள் உருவாகி… உருவாகி…
1.தீமைகளை அகற்றும் நிலையும்
2.நஞ்சை அடக்கும் உணர்வுகளும்
3.ஒரு பொருளை அறிந்துணர்ந்து செயல்படும் ஞானமும் அங்கே வருகின்றது
உதாரணமாக… விஷம் தாக்கி விட்டால் சிந்தனை போய்விடும். ஆனால் விஷத்தை அடக்கும் பொழுது அதனின் செயலாக்கங்களை அறியும் ஆற்றலாக வரும்.
ஆகையினால் விஷங்களை நீக்கும் உணர்வுகளை அகஸ்தியனின் தாய் நுகரப்படும் பொழுது… அது இரத்தத்தில் கலந்து அதன் மூலம் சிசுவிற்குக் கிடைத்து
1.நஞ்சை அடக்கிடும் அரும் பெரும் சக்தியாக
2.வாழ்க்கையில் சிந்தித்து செயல்படும் உணர்ச்சிகளாக அகஸ்தியனுக்குள் அங்கே உருப்பெறுகின்றது.
அகஸ்தியன் என்று அவனுக்குப் பெயர் வரக் காரணமே அணுவின் இயக்கங்களை அறிந்துணர்ந்து அதனின் ஆக்கச் செயல்கள் எது…? என்றும் அவன் உணர்ந்தவன் என்பதனால் தான்..!
சாதாரணமாக ஒரு பச்சிலையின் மணத்தை நாம் நுகர்ந்தால் அந்த ஞானவழிப்படி தான் நாம் செயல்படுவோம். அதே போன்று ஒரு நறுமணமான பூவை நுகர்ந்தால் அதன் மணம் அதனின் ஞானத்தின் வழி நம்மை மகிழ்ச்சி பெறச் செய்கின்றது.
மற்றவரிடம் ரோஜாவின் மணம் எப்படி இருக்கிறது தெரியுமா…? என்று இந்த மகிழ்ச்சியான உணர்வைச் சொன்னபின் கேட்போர் உணர்வுகளிலும் அதே மகிழ்ச்சி வருகின்றது. அவருக்குள்ளும் அந்த மகிழ்ச்சியை ஊட்டுகின்றது.
காரணம்… இந்த ஞானம் “ஆயுதமாக…” அவருக்குள் இயக்கப்படுகின்றது.
அதே போல் ஒரு மிளகாயிற்குள் காரம் மறைந்திருக்கின்றது. ஆனால் தெரியாமல் கடித்தவுடன் “ஆ…” என்று அலறுகின்றனர்.
இந்த உணர்வின் ஒலியைக் கேட்டவுடனே அடுத்தவருக்கும் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. அவர் மீது இவருக்குப் பரிவு இருந்தால் உடனே தண்ணீரை எடுத்துக் கொடுக்கச் சொல்லி அதைத் தணிக்கச் செய்கிறது.
தவறான நிலைகள் கொண்டு ஆசையில் எடுத்து அவர் மிளகாயைக் கடித்து விட்டாலும்கூட… ஏம்ப்பா…! பார்த்துச் சாப்பிடக் கூடாதா..? என்று சொல்லச் செய்கின்றது.
காரணம் இந்த உணர்வுகள் அங்கு எதிர் நிலையாகப் படும் பொழுது இந்த உணர்ச்சியின் தன்மை பெறுகின்றது.
அவன் அறியாது உட்கொண்டாலும் பார்த்துச் செய்யப்பா…! என்று சொல்லி உடனே தண்ணீரை எடுத்துக் கொடுப்பது… ஞானம் “சரஸ்வதி…” பாசத்தால் இப்படி அவனை அமைதிப்படுத்தும் நிலைகளுக்கு உதவுகின்றது இந்த உணர்வின் ஞானம்.
இப்படிப் பல கோடித் தீமைகளை அகற்றிடும் ஞானம் பெற்றுத் தான் நாம் ஒவ்வொருவரும் மனிதனாக இன்று வளர்ச்சி அடைந்து வந்துள்ளோம்.
உதாரணமாக…
1.வான்வீதியில் மின்னல்கள் பாயும் பொழுது அங்கே இருள் மறைகின்றது.
2.பளீர்…ர்ர்… என்று ஒளி தெரிகின்றது. ஆனால் அந்த மின்னலும் விஷமே…!
அந்த மின்னல் ஊடுருவி மற்றொன்றோடு தாக்கப்படும் போது
1.அதையும் ஒளிக் கற்றையாக… ஒளியாக மாற்றுகின்றது.
2.அதிலிருக்கும் விஷத்தை அடக்கி தனக்குள் அந்த ஒளியின் அணுவாக மாற்றுகிறது.
விஷத்தை அடக்கும் சக்தியைத் தாய் கருவிலேயே அகஸ்தியன் பெற்றதனால் அந்த உணர்வின் வலிமை கொண்டு மின்னலிலிருந்து வரக்கூடிய விஷத்தைத் தனக்குள் அடக்கி உடலில் இருக்கும் அணுக்களை எல்லாம் ஒளியாக மாற்றும் திறன் பெற்றான்.
உயிர் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வந்தாலும்… சந்தர்ப்பம் தாய் கருவிலேயே விஷத்தை அடக்கும் சக்தியை அகஸ்தியன் பெற்ற நிலையில்
1.அந்த வினைக்கு நாயகனாகத் தீமையை அடக்கும் உணர்வின் ஒளியாக அது செயல்படுகின்றது…
2.அதனின் ஞானமாக அது இயக்குகின்றது… அவ்வாறு பெற்று வளர்ந்தவன் தான் அகஸ்தியன்.
3.இன்றும் அவன் துருவ நட்சத்திரமாக உள்ளான்.
அதிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் தீமையை அகற்றும்… எதையுமே ஒளியாக மாற்றும்…! என்று தெரிந்து கொண்டோம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுக்கப் பழகிக் கொண்டால் அகஸ்தியன் ஒளியாக ஆனது போன்று நாமும் ஆக முடியும்.
பேரின்பம் என்ற “பேரானந்தப் பெரு நிலை” – ஈஸ்வரபட்டர்
இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்தால் அணுக் கதிர்களின் (கதிரியக்கம்) செயலைக் கொண்டு மிக மிக நுண்ணிய வைத்திய முறைகளைச் செயல்படுத்துகின்றார்கள்.
மேலும் அதை வைத்துத் தொழில் நுட்ப முறைக்கும்… வானக் கோளங்களின் தொடர்பு நிலைகளை அறியவும் இந்தப் பூமியின் உள் நிலையை அறியவும் முற்படுகின்றார்கள்.
இருந்தாலும் ஒவ்வொரு நாடுமே…
1.ஒன்றுக்கொன்று தெரியாத நிலையில்
2.பூமத்திய ரேகையின் மையப் பகுதியில் அணுச் சேர்க்கையின் நுண் அணு வீச்சுக் கதிர்களைக் கொண்டு
3.பூமியின் உள் பாகத்தில் கிடைக்கப் பெறும்
4.சில ஆக்கச் சக்தியின் அலைத் தொடர்பு வளர்ப்புக்களைத் தன் பாகத்திற்குத் திருப்பி
5.தன் நாட்டை வளப்படுத்துவதற்காகவும்
6.அதே சமயத்தில் தனக்கு மேல் விஞ்ஞானத்தில் வளர்ந்த சில நாடுகளை வளரவிடாத தன்மைக்காகவும்
7.பூமியின் உள் பாகங்களிலேயே விஞ்ஞானத்தால் இவ்வொளிக் கதிர்வீச்சினைப் பாய்ச்சி
7.அதாவது நீர் வாயு லேசர் இயக்க அலைகளைப் பாய்ச்சிப் பல பாகங்களில் பூகம்ப நிலை ஏற்படும் வண்ணம்
8.பல வேலைகளை நடத்திக் கொண்டிருக்கின்றனர்
9.(வளர்ச்சி அடைந்த நாடுகள் செய்கின்றன இன்று வரையிலும்)
விஞ்ஞானத்தின் செயலைக் கொண்டு… உயிர் காக்கும் நிலைக்காக மருத்துவ ஞானங்கள் பல செயல்படுத்தியிருந்தாலும்… செயலின் வேகத்தில்… உண்மை உயர்வு வாழ்க்கை எது..? என்று மனிதன் இன்று அறியவில்லை.
தன்னுடைய இனம் புரியாத இன்பத்திற்காக உயர் குண உயிரை உணரும் பக்குவ நிலை இன்றித்தான் இன்றைய மனித வாழ்வு உள்ளது.
உடலை விட்டுப் பிரிந்த ஆத்ம உணர்விற்கு இன்பம் உண்டா…?
1.ஜீவ சக்தியின் சரீர வாழ்க்கையில் பெறும் இன்பம் தான் இன்பம் என்ற எண்ணம் மனிதனுக்கு உண்டே தவிர
2.ஆத்ம ஞானத்தில் உணரும் உயர் இன்ப நிலையின் உண்மை நிலை புரியவில்லை…!
சரீர நிலையில் உணரும் இன்பத்தைக் காட்டிலும்… “பேரானந்த பெரு நிலை…” என்று நம் முன்னோர்கள் உணர்த்திய உயர் நிலையின் உண்மை நிலையை வளர்ந்த ஆத்ம ஞானத்தின் சித்து நிலையிலே உணரலாம்.
உணவின் சுவையும்… மணத்தின் மகிழ்வும்… இசையின் இனிமையும்… இயற்கையின் எழிலையும்… பிள்ளைக் கனியமுதின் சொல் அமுதையும்…
1.இந்த உடல் வாழ்க்கையில் உணரும் பக்குவத்தைக் காட்டிலும்
2.ஆத்ம சித்து சக்தியின் தொடர்பினால் ஆத்மா பெறும்
3.இன்பத்தின் பெரு நிலையை உணரும் சக்தி நிலை பெற்றால்
4.சரீர வாழ்க்கையில் பெற்ற இன்பத்தைக் காட்டிலும்
5.பல கோடி இன்ப நிலைகள் சித்து ஞானத்தில் பெற முடியும்.
வாழ்க்கை நிலையில் கலந்து உறவாடும் எண்ணப் பரிமாற்ற நிலை எபப்டி உள்ளதோ… அதைப் போன்றே.. ஆத்ம தொடர் ஞான சித்துவின் வலுக் கொண்ட வளர்ச்சி பெற்ற தொடர்பு நிலையும் பலவாக உண்டு.
கூடிய வாழ்க்கையும்… கலந்துறவாடும் எண்ண நிலையும்… வாழ்க்கைத் தொடர்பில் எப்படி உண்டோ அதைப் போன்றே
1.ஞானச் சித்தின் ஞானிகளும் ஆத்ம சொந்தம் கொண்டு
2.இன்பம் கொண்ட இரு நிலை இன்பத்தையும் பெறுகின்றனர்.
ஜாதி… மதம்… உற்றார்… உறவினர்… என்ற பிடிப்பு வேலியற்ற “உயர் ஞான சொந்த பந்தங்கள்” ஆத்ம தொடர் கொண்டு அடையும் நிலையில்…
1.இரு நிலை இன்பத்தின் பெரு நிலை பெறும்
2.வளர்ப்பு நிலை இப்படி உண்டு.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
நாம் ரோட்டில் செல்லும் பொழுது ஒரு வாகனம் வேகமாகச் செல்கிறது என்று வைத்துக் கொல்வோம். இது யார் மீதாவது மோதிவிட்டால் “அவர்கள் அவதிப்படுவார்களே…” என்ற எண்ணங்கள் நமக்குள் தோன்றுகிறது.
அந்த எண்ணங்கள் தோன்றும் பொழுது நமக்குள் அந்த வாகனத்தின் வேக உணர்வுகள் காணும் பொழுதே மனது நமக்குள் “பட… பட…” என்று துடிக்கின்றது.
அப்படிப் பயத்தின் உணர்வுகள் துடிக்கப்படும் பொழுது பய அலைகள் நமக்குள் பெருகி விட்டால் நம் சிந்திக்கும் திறனே இங்கே இழக்கப்படுகின்றது.
அப்பொழுது அந்த வேதனையின் உணர்வுகள் “இது என்ன ஆகுமோ…!” என்ற மன பயத்தால் வேதனை என்ற உணர்வுகள் தூண்டுகின்றது.
வேதனை என்ற அந்த நஞ்சு இதனுடன் கலக்கப்படும் பொழுது என்ன ஆகும்…?
1.ஏதாவது ஒரு பொருளைப் பார்த்தவுடன்
2.“அது கீழே விழுந்துவிடுமோ…” என்ற பயமாகி விட்டால்
3.அந்தப் பொருளை அந்த எண்ணத்தால் எண்ணும் பொழுது பார்க்கலாம்.
4.அந்தப் பொருள் கீழே கண்டிப்பாக விழுகும்.
ஆனால் அதே சமயத்தில்
1.அந்த மன வலுக் கொண்டு
2.இதை மாற்றி வைக்க வேண்டும் என்று எண்ணினால்
3.உடனே அது வரும்.
நாம் அப்படி எண்ணாமல் “இது கீழே விழுந்துவிடும்..” என்று தான் எண்ணுவோம். ஆனால் எடுத்து அதை “மாற்றி வைக்க வேண்டும்” என்ற மனம் வராது.
ஆகவே இந்த உணர்வுகள் இத்தகைய நிலைகள் கொண்டு அதே எண்ணத்திலிருக்கும் பொழுது இந்த உணர்வின் அலைகள் மோதும் பொழுது
1.நாம் எண்ணிய எண்ணங்களும்
2.எதிர்படும் உணர்வுகளும் மோதப்படும் பொழுது
4.காற்றலை போல் வந்து
4.அந்தப் பொருள் ஆடுவதைப் பார்க்கலாம்.
ஆக “மனிதனின் உணர்வின் உணர்ச்சிகள்” அது சிறிதளவு இருப்பதை இதிலுள்ள காந்தப் புலன் இழுத்து “டப்…” என்று கீழே விழுகச் செய்யும்.
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
தீமையை உருவாக்கும் சந்தர்ப்பங்களைத் தீமையை அகற்றும் சந்தர்ப்பங்களாக மாற்ற வேண்டும்
நண்பராகப் பழகுகின்றோம்… அவருக்குத் தக்க சமயத்தில் உதவியும் செய்கின்றோம். சந்தர்ப்பத்ததில் நாம் ரோட்டில் செல்லும் போது அந்த நண்பர் எதிரே வருகின்றார்.
ஆனால் அவரோ அவசரமாகச் சென்று கொண்டிருக்கின்றார் அது நமக்குத் தெரியவில்லை.
அவரை பார்த்தவுடன் இங்கே வாப்பா…! என்று கூறுகின்றோம்.
கூப்பிட்டவுடனே அவர் “இருங்கள்… நான் வருகிறேன்…” என்று சொல்லி விட்டுச் சென்று விடுகின்றார்.
அட… இங்கே வந்து விட்டுப் போப்பா…! என்று இரண்டாம் முறையும் கூப்பிடுகின்றோம். அவர் அப்படியே சென்று விடுகிறார்.
இவனுக்கு வந்த கிராக்கியைப் பார்…! அன்றைக்குத் தேவைக்கு நம்மிடம் வந்தான். இன்றைக்குக் கவனிக்கவே இல்லை. நாம் கூப்பிட்டால் வர மாட்டேன் என்கிறான்.
அனால் தேவை என்று அவன் கேட்கும்போது அவனுக்கு நாம் கொடுத்தோமே…! என்று இப்படி அந்த உதவி செய்த நிலைகள் தான் வருகின்றதே தவிர “அவருடைய சந்தர்ப்பத்தைப் பற்றிச் சிந்திக்கும் தன்மை வருவதில்லை…”
1.அவர் எந்த அவசரத்தில் போகின்றாரோ…!
2.போகும் வேகத்தைப் பார்த்த பின் அந்த உணர்வுகள்… அந்த ஞானம்…
3.சரி போகட்டும் ஏதாவது அவசர வேலையாக இருக்கும் போல் தெரிகின்றது என்று
4.அந்த நேரத்தில் நம் மனதைச் சமப்படுத்திக் கொள்ள வேண்டும்.
5.அவன் போகக் கூடிய காரியத்தைத் தடைப்படுத்திவிட்டோமோ…? என்னமோ…!
6.அவன் போகும் காரியங்கள் ஜெயமாக வேண்டும் என்று நாம் எண்ணிவிட வேண்டும்.
இப்படி எண்ணினால் நம் மனதும் அமைதிப்படும்.
அடுத்ததாக ஒரு பொருளை எடுக்க வேண்டும் என்றாலும் கூட சிந்தனைக்குத் தகுந்த மாதிரி நாமே சென்று அதை சீராக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.
இப்படி எண்ணவில்லை என்றால் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும்…
1.அந்த ஒரு நிமிடம் அல்லது அந்த ஒரு நொடியானால்
2.நமக்குள் மனதைக் கெடுக்கக்கூடிய நிலை ஆகி நம் நல்ல குணங்களை மாற்றி அமைத்து விடுகின்றோம்.
நல்ல குணங்களை நமக்குள்ளும் செயலற்றதாக மாற்றுகின்றோம். அதே போல் அந்த நண்பருக்குள்ளும் செயலற்றதாக ஆக்குகின்றோம். அப்பொழுது இரண்டு பேருடைய நல்ல மனமும் கெடுகின்றது.
ஆக… எதன் உணர்வைச் சேர்க்கின்றோமோ அதன் ஞானமாகத்தான் உயிர் நம்மை இயக்குகிறது. எதன் உணர்ச்சியோ அதை நுகரப்படும் பொழுது அதன் வழிதான் நம்மை இயக்குகின்றது.
எதன் உணர்வு நம் நம் உடலில் சேர்கின்றதோ அந்த இணைந்த உணர்வு கொண்டு தான் பிரம்மமாகி அதனின் சக்தியாக நம்மை இயக்குகின்றது.
இணைந்த நிலைகள் நம் உடலில் இருக்கும் பொழுது
1.உயிர்… வசிஷ்டர் – கவர்ந்து கொண்ட உணர்வுகள் உடலாகிறது.
2.அதனின் சக்தியாகவே அது இயக்குகிறது.
அதாவது மனித உடலுக்குள் உயிரின் தன்மை ஈசன் என்றாலும் உணர்வின் தன்மை உடலாகின்றது பிரம்மம் என்பதை இப்படிக் காவியங்களில் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்கள்.
நன்றாகப் படித்து பாருங்கள். நான் மனிதன் வாழ எத்தனையோ வழிகளை ஞானிகள் காட்டி உள்ளார்கள்.
விஜயதசமி என்று சொல்லும் பொழுது தீமைகளை அகற்றிப் பழக வேண்டும். நம் உயிர் பூமிக்குள் விஜயம் செய்து பல கோடிச் சரீரங்கள் பெற்றுத் தான் மனிதனாக இன்று நம்மை உருவாக்கி உள்ளது.
1.ஒருவன் தீமை செய்வதைச் சந்தர்ப்பத்தால் பார்த்துணர்ந்தால்
2.அல்லது நாம் சந்திக்கும் உணர்வுகள் தீமையாக இருந்தால்…
3.அதை எல்லாம் ஒவ்வொரு நொடிகளிலும் நாம் சுத்தப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.
சுத்தப்படுத்தத் தவறினால் பத்தாவது நிலையை (தசமி) அடையக்கூடிய தருணம் தடைபட்டு மீண்டும் புவியின் ஈர்ப்புக்கே வந்து விடுகின்றோம்.
காரணம் நல்ல குணங்கள் கொண்டு வேதனைப்படுவோரை நுகர்ந்தால் நம் நல்ல குணத்திற்குள் விஷத்தின் தன்மை பட்டு… விஷத்தின் ஆற்றல் வலுவான பின் நல்ல குணங்கள் மடிகின்றது.
அதை மாற்ற மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நம்முடைய எண்ணங்கள் கூர்மையானால் தீமைகளை விலக்கும் நிலை வருகின்றது.
1.தீமையை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வை நாம் அவ்வப்போது நுகர்ந்தால்
2.எந்தத் தீமையும் அணுகாதபடி நம்மை நாம் காத்துக் கொள்ளலாம்…
3.நம் நல்ல குணங்களையும் காக்க முடியும்.
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
தன் வாழ்க்கை முடியும் தறுவாயில்… கடைசியாகத்தான்… தெய்வீகத் தன்மையை இன்று தேட ஆரம்பிக்கின்றார்கள் – ஈஸ்வரபட்டர்
இச்சரீர பிம்ப உடலில் உணர்வின் எண்ணத்தில் காணும் இன்ப நிலை ஒன்றைத்தான் மனிதன் பெரு நிலையாக எண்ணத்தின் ஏக்கத்துடன் வாழ்கின்றான்.
1.உணவின் சுவை…
2.நுகரும் மணத்தின் நிலை…
3.உறக்கத்தின் இன்ப நிலை…
4.உடல் இச்சையின் காதல் களிப்பு நிலை.. இவற்றின் இன்பத்தையும்
5.ஒளி கொண்டு காணும் இயற்கை அழகு… கலை இன்ப நிலை…
6.நகைச்சுவை நிலை… பிள்ளைக் கனியமுதின் வளர்ப்பு நிலை…
7.அன்பு பாசம் பரிவு பரவசச் செயல் நிலை…
8.இவற்றின் தொடரில் எல்லாம் மனித உணர்வின் எண்ணம் இன்பம் கண்டு
9.இவற்றின் தொடரில் கிடைக்கப் பெறும் அமைதிக்காக
10.பொருள் சேர்க்கையின் வரவு நிலையிலும் இன்பம் உள்ளது என்ற தொடர் வாழ்க்கையில் “இன்பம்” அடைகிறான் மனிதன்
ஆனால் அதே சமயத்தில்…
1.உடல் உபாதையில் ஏற்படும் எதிர்ப்பு நிலையில் அவதிக்கும்
2.குடும்ப வாழ்க்கையில் உண்டாகும் மற்றவரின் எதிர்நிலையின் சோர்வுக்கும்
3.இன்ப நிலை என்று உணரும் தன்மையில் எதிர்ப்படும் மோதல் நிலை எதுவாகிலும்
4.”துன்ப வாழ்க்கை” என்ற சோர்வில் எண்ணத்தைச் சோர்வுப்பட்டு
5.முந்தைய நிலையைச் சுட்டிக் காட்டி – இன்ப நிலைக்காக எதிர்படும் எவையுமே துன்பம் என்ற அச்ச உணர்வினால்
6.வாழ்க்கையில் ஏற்படும் எதிர்நிலை சோர்வைக் கொண்டு
7.எண்ணத்தின் உணர்வில் (முதலில்) ஏற்றிக் கொண்ட இன்பத்தைத்தான்
8.“மனித வாழ்க்கையின் இன்பமே அடங்கி உள்ளது…!” என்று மனித ஓட்டக் காலங்கள் ஓடுகின்றன இன்று.
ஆத்ம நிலையின் தொடர்பையும் அதில் உள்ள உன்னத நிலையையும் ஞானிகள் உணர்த்தினால்
1.வாழ்ந்த வாழ்க்கையில் சலிப்புற்ற நிலையில்… கடைசியாகத்தான்…
2.வாழ்க்கையிலிருந்து அடையக் கூடிய தெய்வீக பக்தி மார்க்கத்திற்காக
3.ஆத்ம ஞான போதனையைச் செலுத்த வேண்டும் என்ற உணர்வுடன் உள்ளார்கள் இன்றைய மனிதர்கள்.
ஏனென்றால் மனித சக்தியினால் இன்று முன்னேறிய தொழில்நுட்ப வைத்திய முன்னேற்ற செயலின் விஞ்ஞான வளர்ச்சியைக் காட்டிலும் வளரும்
1.இவ்வாத்ம ஞானத்தைக் கொண்டு
2.ஆத்ம ஞானத்தின் ஆற்றலைக் கொண்டு
4.பல உன்னத உணர்வு ஞானத்தையே உருவாக்கலாம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
ஒரு மனிதன் அரிப்பின் காரணமாக மேலில் அரித்துக் கொண்டிருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். உற்று நாம் அதைப் பார்த்தால் போதும்.
பார்க்கலாம்…! உடனே நம்மை அறியாமலே நம் உடலில் எங்கேயாவது கையை வைத்துத் தேய்க்க (அரிக்க) ஆரம்பிப்போம். அந்த உணர்வின் உணர்ச்சிகள் நம்மை அறியாமலே அதே உணர்ச்சிகளைத் தூண்டச் செய்யும்.
ஏனென்றால் இது இயற்கையின் உணர்வுகள்.
1.நாம் எதை உற்றுப் பார்க்கின்றோமோ
2.அது நம் சுவாசத்திற்கு வருகின்றது. அதை நுகர்கின்றோம்.
3.”அதே உணர்வு” நம்மை அறியாமலே அந்தச் செயல்களைச் செயல்படுத்துகின்றது.
ஒருவர் தன் தலையைச் சொறிவதைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் போதும். நம்மை அறியாமலே நம் கை என்ன செய்யும்…? தலையைச் சொறியப் போகும்.
காரணம் அந்த உணர்வின் எண்ணங்கள் நாம் நுகரப்படும் பொழுது அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.
1.கண்களால் பார்க்கின்றோம் தெரிந்து கொள்கிறோம்
2.காதால் கேட்கிறோம் அறிகிறோம்
3.உடலால் உணர்ச்சிகளை அறிகின்றோம்…
4.வாயில் சுவையை அறிகின்றோம்.
ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் சுவாசிக்கும் உணர்வின் தன்மைகளை நாம் யாரும் அறிவதில்லை. அதைப் பற்றிச் சிந்திப்பதுமில்லை.
1.மனிதனுடைய ஆணிவேர்
2.அவனுடைய சுவாசம் தான்.
நாம் எண்ணக்கூடிய உணர்வின் எண்ணங்கள் தான் இயக்குகின்றது. இதைத் தெளிவாக நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
ஞானத்தைப் பெற வேண்டும் என்றால் நமக்கு நாமே விசாரணை செய்ய வேண்டும்…!
சரஸ்வதி பூஜையை நாம் கொண்டாடுகின்றோம். சரஸ்வதி என்றால் ஞானம். அன்றைய நாள் முழுமைக்குமே ஞானத்தை வளர்த்திடும் நாளாக நாம் அமைக்க வேண்டும்.
அதற்காக நமக்கு நாமே விசாரணை செய்ய வேண்டும்…1
1.என் குடும்பத்தில் நான் என்ன செய்தேன்…?
2.கல்வியில் நான் எதை எதைத் தவறவிட்டேன்…?
3.தொழிலில் நான் என்னென்ன செய்தேன்…? அதிலே எந்தெந்தக் குற்றங்கள் வந்தது…? அதனால் தொழில் எப்படி மந்தமானது…?
இதைப் போன்று ஒவ்வொரு நிலையிலும் சிந்திக்கும் நாள் தான் ஆயுத பூஜை நந்நாள் என்பது.
நமது வாழ்க்கையில்
1.இந்த வருடம் முழுவதுமே நாம் என்ன செய்தோம்..?
2.குடும்பத்தில் எப்படி ஒற்றுமையாக இருந்தோம்…?
3.நம் சொல்லால் குடும்பம் எப்படி ஒற்றுமையானது…? என்ற நிலையில் இந்த ஞானத்தை அறிதல் வேண்டும்.
ஆனால் சந்தர்ப்பத்தால் அந்த ஞானம் குறையப்படும் போது… அந்தக் குறைந்த நிலைகள் எப்படி இயக்குகின்றது…? ஞானம் குறைந்ததன் காரணமாக
1.வாழ்க்கையில் சிரமங்கள் எப்படி வந்தது…? துன்பங்கள் எப்படி வந்தது…? தொழில் எப்படி நஷ்டமானது…?
2.ஞானம் தவறி நுகர்ந்த உணர்வால் நம் உடலில் நோய்கள் எப்படி வந்தது…? என்று
3.அதை எல்லாம் விசாரணை செய்து நம்மை நாமே சிந்திக்கக் கூடிய நாள் தான் இது.
ஒவ்வொரு நாளும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம்மை நாமே தூய்மைப்படுத்தி இந்த அருள் ஞான சக்தியை வளர்க்க வேண்டும்.
உதாரணமாக கடையிலே நஷ்டமாகி இருந்தால் அந்த நஷ்டம் எதனால் ஆனது…? என்று சிந்தனை செய்ய வேண்டும். ஆனால் சிந்தனைக்கே வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்…?
அழுக்குப்பட்டுப் பட்டு ஒரு பொருள் அங்கே மறைந்திருந்தால் அதைத் துடைத்தால் தான் மீண்டும் உள்ளிருக்கும் அந்தப் பொருள் தெரிகிறது… தெளிவாகத் தெரிகின்றது.
அதைப் போன்று…
1.வாழ்க்கையில் அப்படித் தெரியப்படுத்தும் உணர்வுகளை
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நாம் தூய்மைப் படுத்தும் பொழுது
3.எது நம் நல்ல குணங்களை மறைத்தது…? எதனால் வியாபாரம் நஷ்டமானது…?
4.ஒற்றுமையாக இருந்த நம் குடும்பம் எதனால் பிரிந்து செல்லும் நிலை வந்தது…?
5.பிரிந்து வாழ்ந்ததனால் நமக்குள் நல்ல சொல்கள் எப்படி இழக்கப்பட்டது…?
6.நல்ல சொல்கள் இழந்த நிலையினால் நம் தொழில்கள் எப்படிக் குன்றியது…?
இது எல்லாம் சீர்கெடும் போது நம் உடலில் நல்ல உணர்வுகள் மாறி ஒருவருக்கொருவர் கடும் சொல் சொல்லும் போது
1.அன்னை தந்தையைப் பிரிந்து வாழும் நிலை எப்படி வருகின்றது…?
2.சகோதர உணர்வுகள் எப்படி மறைகிறது…? சகோதரர்களுக்குள் போர் செய்யும் முறைகள் எப்படி வருகின்றது…?
3.எந்தெந்தக் குற்றங்களால் நன்றாக வாழ்ந்தவரின் நிலைகள் மாறுகிறது…?
4.ஒற்றுமையாக இருந்த நண்பர்கள் எல்லாம் எப்படிப் பகைமையானார்கள்…? என்று
5.மேலே சொன்ன தீமைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபடும் முறைகள் எது…? என்று
6.நமக்கு நாமே விசாரணை செய்ய வேண்டும்.
ஆகவே சரஸ்வதி பூஜை என்றால் அந்த அருள் ஞானத்தை எடுத்து நமக்குள் வளர்த்துக் கொள்ளும் நாளாக நாம் கொண்டு வருதல் வேண்டும்.
ஞானிகள் காட்டிய வழியில் அந்த அருள் ஞானத்தை எடுத்து அருள் சக்திகளை வளர்த்து தீமைகளிலிருந்து மீட்கும் உபாயத்தைக் கடைப்பிடித்தல் வேண்டும்.
எது எது அழுக்குகள் இருந்தததோ அதை எல்லாம் தூய்மைப்படுத்துதல் வேண்டும்.
1.நம் நல்ல எண்ணங்களைக் கூர்மையாக்கி… அதனுடன் ஞானிகள் உணர்வை இணைத்து வலிமை பெறச் செய்து
2.நம் சொல்லால் செயலால் மூச்சால் எல்லோருக்கும் நன்மை பெறச் செய்யும் சக்தியாக நாம் மாற வேண்டும்.
மனிதனால் தான் “தெய்வ சக்தியை உருவாக்க முடியும்…” பிறந்த பலனை இழக்காதீர்கள் – ஈஸ்வரபட்டர்
இச்சரீர உடலில் உணரும் எண்ண வேட்கைகள் யாவையும்… சாதாரண வாழ்க்கை நிலையில் உள்ள மனிதனுக்குப் பூமியின் ஈர்ப்புப் பிடியுடனே சிக்கி உள்ளது.
பூமியின் அலைத் தொடர்பை இவன் எடுத்து…
1.உணர்வின் பிடியை எண்ணத்தின் வேட்கைக்கொப்பச் சம நிலை கொள்ளாத் தன்மையாலும்
2.சந்தர்ப்பத்தால் எடுக்கும் உணர்வின் வேக உந்தலினாலும்
3.ஒவ்வொரு மனித உடலிலும் ஜீவனற்ற ஆத்ம உயிர்கள் குடியேறி உள்ளது.
அவ்வாறு “குடியேறிய ஆத்மாக்கள்” மனிதனின் எண்ண உணர்வையே தன் இச்சையில் செயல்படும் “ஞான அணு” வளர்ப்பை வளர்க்க விடாமல்… “அந்த ஆத்மாக்கள் வளர்க்கும்” உணர்வின் எண்ண நிலைக்கொப்ப வளரும் தன்மையே உருவாகின்றது.
அந்த மாறு கொண்ட தன்மையால் குடியேறிய ஆத்மாவின் அணு வளர்ப்பினால் சரீர பிம்பத்தில் ஏற்படும் தொல்லைகளில் ஆங்காங்கு ஏற்படும் உடலின் கட்டிகளினாலும் சில புண்களினாலும் கரப்பான் சொறி போன்ற சரும வியாதியினாலும் உதிரமே சீழாகி அச்சீழ் வளர்க்கும் அணுவை மேன் மேலும் வளர்க்கும் நிலையினால் கடுமையான நோய்களும் உருவாகின்றது.
ஆக மொத்தம்… உணர்வின் எண்ணத்தின் செயலுக்கொப்ப…
1.உட்கொள்ளும் உணவிலும் போதைவஸ்தின் ஈர்ப்பிலும் காம இச்சை வெறியிலும் இச்சரீர பிம்பத்தையே “அழுகும் மூட்டையாக்கி”
2.ஆத்மாவின் செயலையே இவ்வீர்ப்பின் ஆத்மாவாக்கி
3.பல காலமாக… பல கோடி உயிர் தொடர் பிம்பத் தொடர்பில் எல்லாம் முலாம் பெற்ற ஆத்மாவை…
4.உயர்ந்த தெய்வ சக்தியாக செயல் கொள்ளும் எண்ணத்தால்… எதனையும் செயல் புரியும் மனித சக்தி பெற்ற பிறகு…
5.உடல் உணர்வின் உந்தலின் வேட்கைக்காக மனித ஆத்மாக்களின் இன்றைய செயல்
6.தன்னைத் தானே இழக்கும் நிலையாகச் (மனித வித்துக்கள்) சென்று கொண்டிருக்கின்றது.
அதை மாற்றிடத் தெய்வ சக்தி பெற்ற தேவர்களின் (மகரிஷிகளின்) தொடர்பைக் கொண்டு மேல் நோக்கிய வளர்ச்சியினால் நம் வளர்ப்பலையின் தொடர்பை எவ்வீர்ப்பு அலையிலும் சிக்காமல் சகல சக்திகளையும் உணர்ந்திடலாம்.
இயற்கைச் சக்தியின் செயலாகச் செயலாற்றும் சப்தரிஷிகளின் ஞானத் தொடர்பலையுடன் உணர்வின் எண்ணமுடன் அந்த ஞான ஈர்ப்புத் தொடர்பலையை பெற்றோமானால்
1.இஜ்ஜட சரீர அணு மூட்டையின் பிடிப்பிலிருந்து
2.உயர் கொண்ட ஞான ஈர்ப்பிற்குச் செல்லலாம்.
மனிதனைக் காட்டிலும் உருவத்திலும்.. பலத்திலும்… அறிவிலும்… சுவாச ஈர்ப்பு நிலையிலும்… சக்தி கொண்ட “யானைக்கே…” மனிதனை ஒத்த செயல் அங்கங்களோ சொல்லாற்றும் திறமையோ அற்றதினால் எல்லா நிலைகளும் உணர்வும் தன்மை இருந்தும் ஞானத்தை வளர்க்கும் வளர் நிலைக்குச் செல்ல முடியவில்லை. இதைப் போன்ற நிலை மிருகங்களில் பலவற்றுக்கும் உண்டு.
எறும்போ கொசுவோ மூட்டைப் பூச்சியோ உருவத்தில் மிகச் சிறியதாக இருந்தாலும் அவை மனிதனைத் தாக்கும் பொழுது அதன் கடி நிலைக்குப் பயந்து பல முன் ஏற்பாடுகளைச் செய்து பல நிலைகளைச் செய்கின்றான் மனிதன்.
1.ஒவ்வொரு நொடிக்குமே இச்சரீர ஜட பிம்பத்தின் ஈர்ப்பு எண்ண வேட்கைக்குத் தான் மனிதன் வாழுகின்றான்.
2.அதிலிருந்து மீண்டு ஆத்ம ஞானத்தின் உணர்வை மனித ஞானம் பெற முடியும்.
3.மனிதன் மட்டும் தான் அந்தத் “தெய்வ சக்தியை” உருவாக்க முடியும்.
அன்று போகன் தன் உடலால் பெற்ற சக்தியை இந்த உலகம் முழுமைக்கும் பரப்பும் நிலை கொண்டு தன் ஆத்மாவில் பெற்ற உயர் அலையின் தொடரை இந்த உலகம் முழுமைக்கும் அந்தந்த இடங்களில் ஜீவன் கொண்ட சக்தி அலைத் தொடர்புகளை பூமியில் பதிய வைத்துள்ளான்.
அவ்வலையின் ஞானத்தால் பல கோவில்களை அமைத்து மனிதனின் எண்ணத்தில் தெய்வ ஞான சக்தியை வளரச் செய்தான்.
போகரும் கோலமாமகரிஷியும் கொங்கணவரும் அகஸ்தியரும் ஐயப்பனும் ஆதிசங்கரர் போன்று பல எண்ணற்ற ரிஷிகளும் இன்றளவும் சரீரத்தின் தொடர்பு கொண்டு அன்று பதிய வைத்த அலைத் தொடர்பின் வழித் தொடர்பினால் செயலாற்றிக் கொண்டுள்ளார்கள்.
இக்கலியின் கடைசியில் எண்ணத்தின் உணர்வைக் கொண்டு நாம் எடுக்கும் தியானத்தால் அந்த உயர்ந்தோரின் உயர்வுடன் அவர்களின் செயல் நிலைக்கொத்த தன்மைக்கு நாமும் வளரலாம்.
மேல் நோக்கிய சுவாச அலையினால் எண்ணத்தின் உணர்வை ஞானத்தின் பால் செலுத்தி இச்சரீர ஜடப் பொருளை கொண்டு ஆத்மாவின் வலுவைக் கூட்டிக் கொண்டோமானால்
1.இப்பூமியிலே மனிதனாக பிறந்து சகல சித்தியும் அடைந்து
2.சப்தரிஷியாக வாழும் பலரின் நிலை போன்று நாமும் வாழ்வாங்கு வாழ முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
ஒரு ரோஜாப்பூவின் மணம் அதிகமாக வீசும் இடத்தில் அதன் அருகில் இருக்கும் தீமை விளைவிக்கக்கூடிய ஒரு நஞ்சான செடியிருந்தாலும் அதனின் மணம் விலகிச் சென்றுவிடும்.
இதைப் போல நாம் அடிக்கடி வேதனை என்ற உணர்வை அதிகமாகக் கூட்டும் பொழுது நமக்குள் வந்து சேரும் நல்ல குணங்களை விலக்கித் தள்ளிவிட்டுத் தீமையின் உணர்வையே செய்து தீமையின் உடலாகவே நம்மை மாற்றிவிடும்.
1.ஒரு தாவர இனத்தின் “மணம்”
2.இன்னொரு தாவர இனத்தின் மணத்தை “விலக்கித் தள்ளுவது போல்”
3.நாம் தீமைகளை நம்மிடமிருந்து விலக்கித் தள்ள வேண்டும் என்றால்
4.தீமைகளை அகற்றிட்ட அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் அதிகமாகச் சேர்ப்பித்துக் கொள்ள வேண்டும்.
1.கூட்டுத் தியானத்தால் எடுத்துக் கொண்ட உணர்வின் வலுக் கொண்டு
2.அந்த உணர்வின் தன்மை ஒருக்கிணைந்து நாம் விடும் மூச்சலைகள் கொண்டு
3.தீமையை விளைவிக்கும் உணர்வுகளை நம்மிடமிருந்து விலகிச் செல்லச் செய்ய முடியும்.
நாம் அந்த அருள் ஞானியின் உணர்வை நமக்குள் பருகும் நிலையாக நாம் அனைவரும் ஒருக்கிணைந்து எடுக்கும் இந்த எண்ண வலுவின் துணை கொண்டு தான் நாம் இவ்வாறு செய்ய முடியும்.
ஒரு நெல்லை வைத்து ஒருவர் உணவாக உட்கொள்ள முடியாது.
நாம் எல்லோரும் சேர்ந்து எடுக்கும் உயர்ந்த எண்ணங்கள் கொண்டு அது பல நெல்களாகக் குவிகின்றது. அதைச் சமைத்துச் சாப்பிட்டால் அவரவர் பசி தீர்வதைப் போல்
1.நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் ஒருக்கிணைந்து
2.அந்த வலுவின் தன்மை கொண்டு
3.உயர்ந்த ஞானியின் உணர்வை நமக்குள் சமைத்து
4.அருள் ஞான உணர்வை நமக்குள் விளையச் செய்ய முடியும்.
ஒரு பொருளுக்குள் இருக்கும் நஞ்சினை வேக வைத்து நீக்குவது போல் அருள் ஞானிகளின் உணர்வை நம் நற்குணங்களுடன் இணைத்து நம்மை அறியாது வந்த தீமையை அகற்றிடல் வேண்டும்.
அருள் ஞானிகள் உணர்வை… “இணைத்து இணைத்து” நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிட முடியும். அனைவரும் இதைப் பெற வேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் பிரார்த்திக்கின்றேன்.
புத்தி மழுங்கி விட்டது… என்று சொல்வதன் உட்பொருள் என்ன…?
மாணவ மாணவிகள் தங்கள் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ வேதனைப்படுத்தும் உணர்வுகளையோ அல்லது கோபப்படுத்தும் உணர்வுகளையோ கேட்க நேர்ந்தால் அந்த உணர்வுகளை நுகர்ந்து கொண்டபின் பாடம் கற்பதிலே குறைபாடுகள் ஏற்படுகிறது.
பள்ளிக்குச் சென்று நன்கு படிக்க வேண்டும்… ஞானத்தை வளர்க்க வேண்டும்… ஞான சக்திகளை வளர்க்க வேண்டும்… என்று எண்ணினாலும் கூட யாரைப் பார்த்துக் கோபத்தை வளர்த்தார்களோ அதைச் சேர்க்கப்படும் பொழுது இந்த உணர்ச்சியின் வேகமே கலக்கின்றது.
ஆனால் பள்ளியில் பாட நிலைகளிலோ முக்கிய குறிப்புகள் இருக்கும். இந்தக் கோப உணர்ச்சிகளின் வேகம் இருக்கும் போது அந்தக் குறிப்புகளைப் பற்றிய சிந்தனைகள் வராது… படித்த நிலைதான் வரும்.
ஆகவே அந்தக் கோப உணர்வுடன் படித்த நிலைகள் வரப்படும் பொழுது என்ன ஆகிறது…?
1.உணர்ச்சி வேகத்தால் படித்து மீண்டும் பாடத்தை நினைவுக்குக் கொண்டு வரலாம்.
2.ஆனால் மீண்டும் அவர்களைக் கண்டபின் உணர்ச்சிவசப்படும் அந்த ஞானம் தான் வரும்.
3.அதோடு சேர்ந்து இந்தக் கோபமும் வரும்
4.அந்தக் கோபத்தால் அவனை எப்படித் திட்டலாம்…? எப்படி விரட்டலாம்…? என்ற உணர்வுதான் வரும்.
அப்படிப்பட்ட உணர்வு வரப்படும் பொழுது
1.நல்லதுக்குள் இது கலந்து நல்லதற்றவையாக அதை மாற்றி…
2.கூர்மையாகச் செயல்படும் அறிவின் ஞானத்தை அந்த ஆயுதத்தை… நல்ல குணங்களை மழுங்கச் செய்து விடுகிறது
3.சிந்தனையற்ற நிலையில் போகின்றது. (புத்தி மழுங்கி விட்டது என்று சொல்கிறோம் அல்லவா..!)
எந்தச் செயலும் சரியாக வேலை செய்வதில்லை அதே சங்கட நிலைகளிலில் யாரிடமாவது ஒரு சொல்லைச் சொன்னாலும் அவர்களையும் அது சங்கடப்படச் செய்யும்.
இதைப் போன்ற நிலைகளை மாற்றிட நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று அடிக்கடி இந்த உணர்வுகளை எண்ணி எடுத்து உடலுக்குள் சேர்க்க வேண்டும்.
நாம் எந்ததெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ அது எல்லாம் ஓ…ம் நமச்சிவாய… என்று நம் உடலாகிப் பிரம்மமாக உருவாகின்றது. பிரம்மாவின் மனைவி சரஸ்வதி… அந்த ஞானமாக நம்மை இயக்குகிறது.
அதாவது…
1.எக்குணத்தின் அணுவின் தன்மை நமக்குள் பெறுகின்றதோ
2.அதன் வழிப்படி தான் அந்த அணு வளரத் தொடங்கும்.
ஒரு மரமோ செடியோ எந்த உணர்வின் தன்மை பெற்றதோ அதிலே விளைந்த வித்தினை மீண்டும் நிலத்தில் ஊன்றினால்… அந்த வித்தின் உணர்வுகள் எதைச் சேர்த்ததோ… அந்த உணர்வுக்கொப்ப
1.மரத்தின் ரூபமும்
2.அதனுடைய மணமும் குணமும்
3.அதனுடைய வளர்ச்சியும் அடைகின்றது.
இதைப் போன்றுதான் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் சேர்க்கப்படும் பொழுது அந்தக் குணத்திற்கொப்ப அணுவின் தன்மை நம் உடலிலே வளர்ச்சி அடைகிறது.
அத்தகைய நல்லவைகளை நுகரப்படும் போது நம் உடல் நன்றாக இருக்கிறது… சந்தோஷமாக இருக்கின்றது… மகிழச் செய்கிறது…! நம் சொல்களும் இனிமையாக வருகின்றது. நம் சொல்லைக் கேட்போருக்கும் மகிழ்ச்சியாகி நம்முடன் இணைந்து வாழும் செயலாக அமைகின்றது.
சப்தரிஷிகளின் செயல்கள் – ஈஸ்வரபட்டர்
தன் பெருமைக்காகவோ… புகழுக்காகவோ… சித்து நிலை வளர்ப்புப் பெற்ற ரிஷித் தன்மையின் “ஆக்கத் தன்மை” செயல்படவில்லை.
மனித இனத்தின்… வளர்ப்பின் ஞான வித்தின் வழித் தொடரை அந்த வித்து அழியாமல் செயல்படும் செயலுக்காகத் தன் சக்தி நிலையைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
1.மனிதக் கரு உயர் ஞானம் பெற வல்லமை பெற்ற
2.அத்தகைய செயல் கொள்ளும் கோளங்களில் எல்லாம்
3.அவ்வித்தின் நிலை வளர்ந்திட சப்தரிஷிகளின் செயல் முறை செயல்படும் தன்மை தான்
4.ரிஷித் தன்மை பெற்ற வளர் குணத்தின் வளர்ப்பு நிலை.
நம் பூமியைக் காட்டிலும் ஞானத்தில் உயர்ந்து மனித குண வீரிய உயர் சக்தி கொண்ட ஞான வளர்ச்சி பெற்ற மக்கள் நம் சூரியக் குடும்பமல்லாதபடி பேரண்டத்தில் மற்ற இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களில் உண்டு.
ஆனால் விஞ்ஞானத்தைக் கொண்டு செயற்கையின் ஞானம் பெற்ற இனத் தன்மை நம் பூமியில் உள்ள மனிதனுக்குத்தான் உண்டு.
மற்ற கோளங்களில் உள்ள மனித இனங்கள் எல்லாம் ஞானத்தால் உயர்ந்து… “பறக்கும் தன்மை கொண்ட” சரீர உடல் வளர்ந்த பக்குவ வளர்ப்பாகச் செயல் கொள்கின்றனர்.
நம் பூமியில் தன் ஞானத்தை இயந்திரங்களில் செலுத்திப் பழக்கும் நிலையை இன்று கொண்டுள்ளான் மனிதன்.
இந்தப் பூமியில் ஆதியிலே உயிரணுத் தோன்றி வளர்ச்சி கொள்ளும் வளர்ப்புத் தன்மையில் மோதுண்டு… மோதுண்டு… வளர்ச்சி பெறும் வளர்ச்சி நிலையில் கனி வளங்களும் தாவர இனங்களும் வளர்ச்சி கொண்டு… வளர்ச்சி கொண்டு… வளர்ச்சியின் முற்றிய தன்மை கொண்ட பிறகு தான் “மனித இனங்களே” உருவானது.
தன் உணர்வின் எண்ணத்தால் செயல்படும் அங்க அவயங்களும் சொல்லாற்றும் திறமையின் வளர்ச்சியும் பெற்று வளர்ந்து வந்தாலும்
1.அநத் தொடரின் வளர் தன்மை
2.அடுத்த உயர்ந்த நிலைக்கு மனித இன வர்க்கம் செல்லாதபடி தடையாகி விட்டது.
இப்பூமியில் கிருஷ்ணாவதாரக் காலம் தொட்டே (3000 – 4000 ஆண்டுகளுக்குள்) பேராசைப் பிடி உல்லாச வாழ்க்கை எண்ண உரு வளர்ப்பு வளர்ச்சி பெற்றதனால் மனித வளர்ப்பின் சரீர செயல் எண்ண வளர்ப்பும் தடைப்பட்டு தன் ஞானத்தில் செயல்படும் நிலை மாறி விட்டது.
கல்வி என்பதும் அடிமை கொண்ட குண போதனை ஆகி விட்டது. குரு சிஷ்யன் என்ற குரு குலத் தொடர்பு நிலையில்
1.மனிதனின் எண்ணத்தில் தன் உயர்வின் பெருமையில்
2.பிறரின் நிலையை அடக்கி ஆளும் வழித் தொடரில்
3.ஞானிகளால் கொடுக்கப்பட்ட உண்மைகள் அனைத்தும் மறைக்கப்பட்ட போதனையாகி
4.இந்தப் பூமியில் வளர்ச்சி கொண்ட அந்த ஞான வித்தின் வித்தகத் தன்மையே
5.சூழ்ச்சி கொண்ட சூட்சம நிலையில் மறைக்கப்பட்டு விட்டது.
ஆனால் அதே சமயத்தில்…
1.சூட்சமத்தால் வெளியிடப்பட்ட சில சுவடிகளின்படி
2.உண்மையைக் காவியக் கதை கற்பனை ரூபமாகக் காட்டிய தொடர் கொண்டு
3.விஞ்ஞான ஆராய்ச்சியின் செயல் திறமையினால்
4.மனித உருவக வளர்ச்சியும் ஞான வளர்ச்சியும் தடைப்பட்டு விட்டது.
விஞ்ஞான வளர்ச்சியினால் இன்று சூரிய அலையுடன் சில அலைத் தொடர்களைப் பாய்ச்சி தன் விஞ்ஞானச் செயலுக்காக சில சக்தி அலைகளைப் பிரித்தெடுத்துக் கொண்டேயுள்ளார்கள்.
அதனால் மனித ஞானத்தை வளர்க்கவல்ல காந்த மின் அலையின் ஒளி அலையில்… “வெண்மை அணு சக்தியின் வளர் சக்தியே” தடைப்பட்டு… ஞான வளர்ச்சியும் தடைப்பட்டு விட்டது.
இதிலிருந்தெல்லாம் எண்ணத்தின் வீரிய குணம் கொண்டு இந்தப் பூமியின் பிடிப்பிலிருந்து விடுபட்டு ஒவ்வொருவரும் விண்ணுலக மகரிஷிகளின் அலைத் தொடர்பைப் பெறவேண்டும்.
இன்று பலவாக உள்ள எண்ண குண ஈர்ப்பின் சரீர உணர்வை… நல் அணு வளர்ப்பின் குணத் தன்மை கொண்டு… மகரிஷிகளின் அருள் சக்தியை எண்ணத்தின் ஞானத்தால் “நேராக எடுக்கும்” பக்குவத்திற்கு வர வேண்டும்.
அப்படிப் பெற்றால்…
1.தன் ஆத்ம பலம் பெற்ற தன்மையில் எவ்வீர்ப்புப் பிடியிலும் இந்த ஆத்மா சிக்காமல்
2.இந்தப் பூமியின் மாற்றத் தன்மை எதுவாக இருந்தாலும்
3.வளர்ப்பின் வளர்ப்பை வளர்க்கும் ரிஷித் தன்மையின் வலுவுடன் நாமும் கலந்து
4.மனித வித்துக்களை அழியாத் தன்மைப் படுத்தலாம்.
அதற்குத்தான் ஈஸ்வரபட்டனாகிய யான் இதை உணர்த்திக் கொண்டு வருகின்றேன்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
நம் பிரபஞ்சத்திலுள்ள வியாழன் செவ்வாய் இராகு கேது சனி என்று நவக் கோள்களின் தன்மையும் ஒவ்வொன்றும் தனித் தன்மை கொண்டது.
இருப்பினும் அவை அனைத்தும் உமிழ்த்துவதைச் சூரியன் தனக்குள் கவர்ந்து “ஒளியின் சிகரமாக…” மாற்றுகின்றது. இதைப் போல தான் நம் உயிரான நிலையும் நமக்குள் சூரியனாக இருக்கின்றது.
தினசரி நம் வாழ்க்கையில் எத்தனையோ பேரைச் சந்திக்கின்றோம். நாம் சந்திப்போர் ஒவ்வொரு உடலிலேயும் சில சில கஷ்டங்களும் இருக்கும் துன்பங்களும் இருக்கும் அனைத்தும் இருக்கும்.
1.நாம் (அனைவரும்) ஒன்றிய நிலைகள் கொண்டு
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளியுடன் இணைக்கப்படும் பொழுது
3.இந்தத் துன்பங்களை நீக்கிடும் அகற்றிடும் அந்தச் சக்தியாக நாம் விளைய முடியும்.
1.பாசத்தின் நிலைகள் கொண்டு வேதனை என்ற நிலைகளைச் சுவாசிப்பதற்குப் பதில்
2.பாசத்தின் பற்று கொண்டு மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
அவ்வாறு எண்ணும் பொழுது அந்தப் பற்றுதல் அதனின் நிலைகள் கொண்டு நமக்குள்ளும் அந்தப் பாசத்தின் நிலைகள் கொண்டு அருள் ஞானியின் உணர்வைப் பருக முடிகின்றது.
நமக்குள் தீமையை அகற்றும் சக்தியாக விளைகின்றது. ஒவ்வொரு நாளும் இதிலிருந்து நீங்கள் ஆரம்பித்துப் பாருங்கள்.
1.உங்களை நீங்கள் நம்பிப் பாருங்கள்.
2.எண்ணியதை உங்கள் உயிர் இயக்குகின்றது.
3.அந்த இயக்கத்தின் நிலைகளை அறிந்து கொள்கின்றீர்கள்.
4.அறிந்த உணர்வை உயிர் உடலாக்குகின்றது.
5.மீண்டும் நினைவாக்கும் பொழுது நன்மையின் தன்மையை உயிர் உருவாக்கிக் காட்டுகின்றது.
6.எதனின் உணர்வை நமக்குள் விளைய வைக்கின்றோமோ விளைய வைத்த நிலையை உயிர் தன்னுடன் அணைத்துச் செல்கிறது.
7.எண்ணிய பாதையில் உயிர் அங்கே அழைத்துச் செல்கிறது.
8.என்றும் அழியா நிலையான ஒளியின் சரீரமாக பெருவீடு பெரு நிலையாக உயிர் நம்மை அடையச் செய்கின்றது.
8.மனிதன் அடைய வேண்டிய முழுமையான நிலை அது தான்.
ஆகவே பிறவியில்லா நிலையை நாம் அடைய வேண்டும்.
மனிதன் முழுமையடையும் தருணம் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகும் இந்தத் தருணத்தை நழுவவிடாது அருள் ஞானிகள் காட்டிய நிலைகள் கொண்டு என்றும் உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு அவர்கள் காட்டிய நெறியின் நிலைகள் கொண்டு உணர்வின் தன்மை என்றும் ஒளியாக நிலைத்திருப்போம்.
நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் நிலை என்றால் என்ன…? எப்படி விடுபடுவது…?
நமது வாழ்க்கையில்
1.தெளிந்த சக்தியான நல்ல குணங்கள் நமக்குள் இருப்பினும்…
2.பிறர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்து விட்டால் என்ன ஆகின்றது…?
பாலில் பாதாமைப் போட்டு வைத்திருந்தாலும் அதில் ஒரு துளி விஷம் பட்டால் அந்தப் பாதாமிற்கே சக்தி இழந்தது போல வேதனையை நுகர்ந்து விட்டால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் அனைத்தும் சக்தி இழந்து விடுகின்றது.
1.ஒரு விஷம் பட்டால் எப்படி நம் தலை சுற்றுகின்றதோ
2.விஷம் பட்டால் நம் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றதோ அதைப் போல
3.எதை எடுத்தாலும் பெரும் பாரம் போலத் தோன்றும்.
நம் காரியத்தைச் செய்ய முடியவில்லை என்றால் “கோபம்…” என்ற உணர்ச்சிகள் வரும். நம்மை அறியாமலேயே தவறு செய்யும் நிலைகள் உருவாகும்.
நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் நிலையும் வருகின்றது.
இதைப் போன்ற நிலைகளில் எல்லாம் இருந்து விடுபடுவதற்கு அதிகாலையில் துருவ தியானத்தை எடுத்து “வாழ்க்கையே தியானம்” என்ற நிலைகள் கொண்டு வாருங்கள்.
உங்கள் நினைவு எப்பொழுதும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றியே இருக்கட்டும். உங்கள் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள யாம் உபதேச வாயிலாகப் பதிவு செய்ததை எண்ணினால்
1.இந்தக் காற்றில் உள்ளதை அருள் சக்திகளைக் கவர்ந்து உங்கள் தீமைகளை நீக்கச் செய்யும்.
2.சிந்திக்கும் ஆற்றல் உங்களுக்குள் பெருகி வாழ்க்கையை நல் வழியில் வழி நடத்தும் உணர்வுகள் உங்களுக்குள் இயக்கும்.
உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை பெறச் செய்வதே நமது குரு காட்டிய அருள் வழியில் இந்தத் தியானம்
உதாரணமாக ஒரு பேட்டரியை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு நொடியிலேயும் அது இயங்கிக் கொண்டே உள்ளது.
அதில் சார்ஜ் குறைவாகி விட்டால் மறுபடியும் பேட்டரியைச் சார்ஜ் செய்ய வேண்டும். சார்ஜ் செய்யவில்லை என்றால் அதிலுள்ள மற்ற செல்கள் எதுவும் இயங்காது.
இதைப் போல… உயிரிலும்… உயிர் வழியாக உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் வீரியத்தை ஊட்டினால் சிந்திக்கும் வலிமையான ஆற்றல்கள் கிடைக்கும்.
பேட்டரியில் சார்ஜ் சரியாக இருந்தால் தான் அதன் மூலம் அந்தக் கருவிகள் எல்லாம் சீராக இயக்கும். அது உறுதுணையாக இருக்கும்.
1.மற்ற உணர்வுகளைக் கேட்டுச் சோர்வின் தன்மை வரப்போகும் போதெல்லாம்
2.மீண்டும் மீண்டும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வைத்து நாம் இயக்கி
3.நமக்குள் அந்த வலிமை பெறச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
“அஷ்டமாசித்து” – ஈஸ்வரபட்டர்
இக்கர்ம வாழ்க்கையின் முறையிலிருந்து… ஆத்ம ஞானத்தின் சூட்சம நிலையான “நிர்வாண நிலை அடையக்கூடிய வலு ஈர்ப்பிற்கு… இஜ்ஜீவ சரீரப் பாத்திரம்…” இருந்தால் தான் ஆத்ம வளம் பெற முடியும்.
எவ்வுலோகத்தால் செய்த பாண்டமானாலும் அதனை அடுப்பில் வைத்து நீரில்லாமல் எரிக்கும் பொழுது உஷ்ணத்தின் நிலை கூடக் கூட அடுப்பில் ஏற்றிய அப்பாண்டமும் உருக்குலைந்த நிலை ஏற்பட்டு மாற்று நிலை கொள்கிறது.
ஆனால் அதையே சமையல் செய்யும் பக்குவத்தில்
1.”நீர் சக்தியைக் கொண்டு” அதில் சமைக்கப்படும் நிலைக்கு
2.எத்தனை காலங்கள் ஆனாலும் அதன் தேய்மானமோ துவார நிலையோ ஏற்படாத காலங்கள் வரை
3.அடுப்பில் ஏற்றிச் சமைக்க இப்பாண்டம் உபயோகப்படுகின்றது.
அதைப் போன்று தான்… இச்சரீர சமைப்பிற்கு ஜீவ சக்தியின் தொடர்பு கொண்டு இவ்வாத்ம பாத்திரம் செயல்படும் வழி முறையில்… எண்ணத்தில் எடுத்து உணர்வில் சமைக்கும் ஜீவ சக்தியின் வலுக்கொண்டு இவ்வாத்மா வளர்கின்றது.
இக்கர்ம வாழ்க்கைக்கு உட்பட்ட தேவையின் விகித நிலை ஒவ்வொன்றிலும் இருந்துதான் வாழ்க்கைச் செயலே ஓட வேண்டியுள்ளது.
அவ்வீர்ப்பின் பிடியில் பேராசை கொண்டு “கர்மம்” என்ற சிந்தையில் செயல் பிடியின் உணர்வாகி… எண்ணத்தின் சுவாசமே அந்தக் கர்ம சிந்தனையில் சிக்கி விட்டால்
1.தன்னுள் உள்ள தன் வளர்ப்பின் வளர்ப்பான
2.”ஆத்மாவின் வளர்ப்பு தான் இச்சரீர கர்ம வாழ்க்கை..!” என்பதனை மறந்து
3.இது தான் (இப்பொழுது வாழும் கர்மா) வாழ்க்கை…! என்ற பிடி உணர்வுடன்
4.பூமி ஈர்ப்புடன் ஈர்ப்பாக்கிச் சுழலும் வட்டத்திலேயே ரங்கராட்டினம் போல் சுழல வேண்டியிருக்கும்.
இதிலிருந்து மீள
1.மேல் நோக்கிய சுவாசத்தால்…
2.எண்ணத்தின் ஞானத்தை இச்சரீரப் பிடிப்பிலிருந்து
3.உயரும் ஞான ஈர்ப்பிற்குச் செல்வதாக நம் செயல் வழி இருக்க வேண்டும்.
காந்தம் தன் ஈர்ப்பிற்கு இரும்பை இழுப்பதைப் போன்று… இந்தப் பூமி வளர்த்த வளர்ப்பின் வளர்ப்பை தன் ஈர்ப்புப் பிடிக்கு சுழல் ஓட்டத்தின் சுழற்சியுடன் பிடித்துக் கொண்டுள்ள “அத்தகைய ஈர்ப்புப் பிடியில் தான்” இன்று நாம் வாழுகின்றோம்.
ஆக… இன்றைய சூழலில் (கலியில்) இந்தப் பூமி… மனித இன ஞானத்தின் வளர்ப்பலையை வளர்த்த செயல் அலைத் தொடர் குன்றியுள்ளது.
இந்தக் கலியில் நாம் மேல் நோக்கிய சுவாசத்தால்… ஞானத் தொடர்புடைய மகரிஷிகளின் எண்ண ஜெப தியானத்தால்… இப்பிடியின் உணர்விலிருந்து… எவ்வலையிலும் மனித ஞானம் வளரும் வளர்ப்பில்… நாம் பெற்ற வலுவின் வலுவால் வளர்ச்சி கொள்ள வேண்டும்.
ஆகவே… இக்கர்ம வாழ்க்கைச் சிந்தையில் சிக்குண்டு…
1.பக்தி என்று பகவானை எண்ணியே ஏங்காமல்
2.ஞானத்தின் உயர்வால் தன்னுள் உள்ள ஆத்மாண்டவனை உயர்த்தும் உயர்வான எண்ணத்தை
3.ஞான வளர்ப்பு ஈர்ப்பலையினால் வலுக் கூட்டிடல் வேண்டும்.
ஆகாய விமானத்தை மேல் நோக்கிய உந்தலினால் அதற்குகந்த காற்றழுத்த இயந்திரச் செயலைக் கொண்டு மனித விஞ்ஞானம் பறக்க விடுகின்றதல்லவா…!
அதைப் போன்று உணர்வின் எண்ணத்தால்… தன் ஞானத்தால் இச்சரீர பிம்பத்தை மேல் நோக்கிய சுவாச ஈர்ப்பினால் எந்நிலைக்கும் இச்சரீரத்தைப் பறக்க விடவும் முடியும்… பிரித்து மீண்டும் கூட்டுச் சேர்க்கையாக்கவும் முடியும்.
அத்தகைய தன்மைக்கு இவ்வுடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஒவ்வொன்றையும் ஒளியான உயிராத்மாவாக்கி
1.இவ் ஒரு சரீரத்தில் இருந்தே
2.பல கோடிச் சரீர செயல் அலைக்கே
3.உயர் ஆத்ம வலு கொண்டவர்களினால் செயலாக்குவது என்பது தான்
4.அஷ்டமா சித்து என்பதின் மூன்றாம் சித்து.
முருகா…! என்றதும் முருகன் ஓடி வந்து செய்வானா…? என்பது வேறு கதை. போகநாதனின் வலுத் தன்மையினால்… எண்ணத்தால் எண்ணும் பல கோடி ஆத்மாக்களுக்கும் “அவன் அருள் ஞான ஆசி கிட்டுகிறது…” என்றால் அவனின் அலைத் தொடரின் அருளும் ஆசியும் தான்.
1.ஆயிரம் கண்ணுடையாள் அகிலத்தைக் காத்தருள்வாள் அமராவதி… அபிராமவல்லி…! என்றெல்லாம் உணர்த்தும்
2.சித்தின் தொடர் அப்படிப்பட்டது தான்.
அதாவது பல கோடி ஆத்மாக்களும் ஒரே சமயத்தில் அத்தேவியின் பால் செலுத்தும் பக்தியின் ஜீவ சக்தி கொண்ட சித்தினால் அழியாத் தன்மை கொண்ட சரீர ஆத்மாவினால் ஆயிரம் கண்ணல்ல… அகிலத்தையே கண்ணாகக் கொண்டு வளரும் சக்தியைப் பெற்றவர்கள் தான் அவர்கள்.
நம் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு சுவாச அலையின் வளர்ப்பினால் இந்தக் கர்ம வாழ்க்கையின் சிக்கலில் இருந்து மீண்டு உயர் ஞான ஈர்ப்புடன் சித்துத் தன்மையில் வழித்தொடரை நாம் பெற வேண்டும்.
1.போற்றி வணங்கும் தெய்வ சக்தியின் அருளை வேண்டி
2.பக்தியுடன் பணிவெய்திப் பணிந்திடமால்
3.அத்தெய்வத்தின் சக்தியையே மேல் நோக்கிய ஞான தொடர்பின் ஈர்ப்பினால்
4.அத்தெய்வத்தின் தொடர்புடனே நாமும் தெய்வ சக்தி பெறும் தன்மையைத் தொடரலாம்.
இது எல்லோராலும் சாத்தியமானதே..!
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
உங்கள் வாழ்க்கையில் குறைகள் இருந்தது என்றால் “ஈஸ்வரா…” என்று எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று எண்ணுங்கள்.
யாரும் சொன்னபடி கேட்கவில்லை என்றால் “சொன்னபடி கேட்கவில்லையே…” என்று எண்ணக் கூடாது. அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தியால்
1.குடும்பப் பொறுப்புடன் அவர்கள் நடக்க வேண்டும்
2.அந்தச் சக்திகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று இப்படித்தான் நாம் எண்ண வேண்டும்.
அதைப் பெறச் செய்வதற்குத்தான் தபோவனத்தை அமைத்துள்ளோம்.
பௌர்ணமி அன்று எல்லோரையும் இங்கே வரச் சொல்லி
1.எல்லோருக்கும் “உயர்ந்த சக்திகளைக் கூட்டிக் கொடுப்பதற்காக”
2.இங்கே கூட்டுத் தியானத்தை அமைத்துள்ளோம்.
மகரிஷிகளின் அருள் சக்தியால் எல்லோருக்கும் உடல் நலம் பெற வேண்டும் மன வளம் பெற வேண்டும் மன பலம் பெற வேண்டும் என்று வேண்டித் தியானிக்கின்றோம்.
இந்தச் சொல்லை உங்களிடம் பதியச் செய்த பிற்பாடு வீட்டிக்குச் சென்றாலும் தொழிலில் இருந்தாலும் வெளியில் எங்கு சென்றாலும் “ஈஸ்வரா..” என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டுச் செல்ல வேண்டும்.
யாருக்கும் உடல் நலம் இல்லை என்றால் அவர்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் நன்றாக ஆக வேண்டும் என்று எண்ண வேண்டும்.
மற்றவர்கள் நலம் பெற வேண்டும் என்று நாம் முதலில் எண்ணித் தியானித்தால் நமக்கு முதலில் அந்தச் சக்தி கிடைக்கின்றது. நாம் சொல்லும் பொழுது அவர்களுக்கும் அந்த நல்லது நடக்கின்றது.
இந்த மாதிரிப் பழக்கத்திற்கு வந்துவிட்டால் அது… இது… என்று சொல்லி உங்களை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றாதபடி உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். நீங்கள் சம்பாரித்த பணம் உங்களுக்கு மிச்சமாகும்.
மற்றவர்கள் சொல்லக்கூடிய மாதிரி “அவருக்குப் பேய் பிடித்திருக்கிறது… அவருக்கு அந்தக் குணம் இருக்கிறது… இந்தக் குணம் இருக்கிறது…
1.உங்கள் மனதிற்குத் தகுந்த மாதிரி ஏதோதோ சொல்லும் பொழுது
2.அதை மனதில் பதிய வைத்துக் கொண்டால்
3.அதையே உங்களுக்குள் விளைய வைத்துக் கொள்கின்றீர்கள்.
4.“அந்த மாதிரி இல்லாதபடி” நீங்கள் உங்களை நம்ப வேண்டும்.
உங்களுக்குள் இருக்கக்கூடிய சக்தியை நீங்கள் முழுமையாக அதைப் பெற வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் தபோவனத்தை அமைத்தது.
இங்கே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்திற்கு வரக்கூடிய அனைவரும் கூட்டுத் தியானத்தில் கலந்து கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் செருகேற்றிக் கொள்ளுங்கள்.
இதை நீங்கள் செம்மையாகப் பயன்படுத்தி எதையெல்லாம் நல்லதாக வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ அதை எண்ணி “நல்லதாக வேண்டும்” என்று திரும்பத் திரும்ப எண்ணினீர்கள் என்றால் அது நடக்கும். நல்லதாகும்,
நாம் உருவாக்க வேண்டிய சொர்க்கலோகம்
எதையெல்லாம் எண்ணினோமோ… எதையெல்லாம் கேட்டோமோ… எவையெல்லாம் நுகர்ந்தோமோ… உயிரால் நுகரப்பட்டது அனைத்தும் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று உடலாக மாறுகின்றது,
1.இப்போது இங்கே யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் போது நீங்கள் கேட்டறிந்த உணர்வுகள்…
2.நீங்கள் எண்ணிய உணர்வின் குணங்களை உயிரான ஈசன் உருவாக்கி…
3.உடலில் இந்திரலோகமாக மாற்றி… உடலுக்குள் அந்த குணங்களை உருவாக்கும்
4.“பிரம்மமாக்கும்” உணர்வினை உருவாக்குகின்றது.
ஆகவே சிந்தித்துச் செயல்படும் ஞானிகள் உணர்வினை நாம் அறிந்தால் இதே உணர்வுகள் சிந்தித்துச் செயல்படும் சக்தியின் உணர்வாக நம் உடலில் அணுவாக… பிரம்மமாக… உருவாக்கும்.
அதனின் உணர்வு உடலாகச் சேர்க்கப்படும் பொழுது அணுவின் மலம் சிவமாக மாறுகின்றது. அதைத் தான் ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய என்று சொல்வது.
அதாவது நாம் எண்ணிய உணர்வுகளை உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது உயிர். உடலில் சதாசிவமாக ஆக்கிக் கொண்டே உளளது நமது உயிர்.
எதை எண்ணுகின்றோமோ… எதைக் கேட்கின்றோமோ… அது எத்தகைய குணமாக இருந்தாலும்… அதை எல்லாம் சதாசிவமாக… உடலாக… நம் உயிர் மாற்றிக் கொண்டே இருக்கின்றது என்பது தான் இதனின் பொருள்.
தீமையை அகற்றும்… சிந்தித்துச் செயல்படும் அந்த அருள் ஞானிகள் உணர்வினை
1.நீங்கள் உபதேச வாயிலாக இப்பொழுது நுகர்கின்றீர்கள்
2.அது ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றும் இந்திரலோகமாக உங்களுக்குள் மாறுகின்றது.
அதனின் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அதை அணுவாக உருவாக்கும் கருவின் தன்மை அடைந்து பிரம்மலோகமாக மாறுகின்றது.
உபதேசிக்கும் உணர்வைக் கேட்டறிந்த பின் அந்த உணர்வுகள் உங்கள் இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது இந்திரலோகமாகி… மகிழ்ச்சிக்குரிய உணர்வுகளாக உங்களுக்குள் தோற்றுவிக்கின்றது.
மகிழ்ந்திடும் இந்த உணர்வுகளைத் திரும்பத் திரும்ப வளர்த்துக் கொண்டே சென்றோம் என்றால் குறித்த காலத்திற்குள் அணுக்களாக உருவாகின்றது.
அணுக்களாக உருவான பின் அதனின் ஞானமாக நம் சொல்லும் செயலும் புனிதம் பெறும் தன்மை அடைகிறது… இது பிரம்மலோகம்.
எதனின் உணர்வை நமக்குள் எடுத்தோமோ அதனின் ஞானமாக நம் சொல்லும் செயலும் அமைந்து… தீமைகளிலிருந்து விடுபடும் உணர்ச்சிகள் நமக்குள் வளர்ந்து ஞானிகள் வழியிலே நம்மை வாழச் செய்யும்.
ஆகவே… பிரம்மலோகம் எதுவாக எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்…?
துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கப்படும் போது சொர்க்கலோகமாக மாற்றுகின்றது.
எதன் வழி மாற்றுகின்றது…? நம் உயிர் வழி…!
1.நம் நெற்றி பாகம்… உருவாக்குமிடம் ஈஸ்வரலோகம் என்றும்
2.பிரம்மலோகமாகி… இந்திரலோகம் என்று உடலாக அமைகின்றது என்றும்
3.உயர்ந்த குணங்களை வளர்க்கப்படும் பொழுது சொர்க்கலோகமாக மாற்றுகின்றது என்பதையும் சாஸ்திரங்கள் கூறுகிறது.
ஆகவே சொர்க்க வாசல் என்பது உயிர் இருக்கும் இடமே…!
1.அந்த வாசல் வழி தான் வந்தது
2.அதன் வாசல் வழியிலே தான் நாம் வெளியிலே செல்ல வேண்டும்.
ஆனால் வேதனை என்ற உணர்வை வாழ்க்கையில் எடுத்தால் நரகலோகம். அந்த நரகலோகத்தைச் சிருஷ்டிப்பது எது…?
1.நம் உயிரான நிலைகளிலிருந்து தான்
2.நாம் சுவாசித்த நிலைகள் இருந்துதான்.
இதை உருவாக்குவது எது…?
ஈஸ்வரலோகத்தில் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் வேதனைகளாக அமைந்து விட்டால் நரகலோகமாக மாற்றி விடுகின்றது.
1.கடும் வேதனையாகும் போதுதான் உடலுக்குள் நரகலோகமாக மாறுகின்றது
2.நரகத்திற்குச் செல்லும் வாசலாகவும் இது அமைந்து விடுகிறது.
3.எதன் வழி சென்றோமோ உயிர் வேதனைப்படும் உடல்களுக்குள் அழைத்துச் செல்கிறது.
பாம்பு மற்ற உயிரினங்கள் மீது தன் விஷத்தைப் பாய்ச்சி ரசிக்கின்றது… தன் உணவாக்கிக் கொள்கிறது. அது போன்று மனிதனின் வாழ்க்கையில் வேதனை என்ற உணர்வுடனே வாழ்ந்து அதே உணர்வுடன் உடலை விட்டுச் சென்றால் பாம்பாகப் பிறந்த பின் தான் அது அடங்குகின்றது.
கோபமும் கொதித்தெழும் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் புலியின் ரூபமாகப் பெற்று அதில் சென்று ஒடுங்குகின்றது. பின் புலியின் ரூபமாக உயிர் நம்மை மாற்றி விடுகின்றது.
இப்படித்தான்…
1.மனிதன் தான் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப
2.நரகமும் சொர்க்கமும் நமக்குள்ளே தான் உருவாகின்றது.
சொர்க்கவாசல் என்ற உயிரின் உணர்வு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துச் சேர்த்துச் சொர்க்கலோகமாக நாம் மாற்றுதல் வேண்டும்.
ஆகவே
1.சொர்க்க வாசல் என்ற உயிர் வழி சென்று துருவ நட்சத்திரத்துடன் இணைந்து
2.பிறவியில்லா நிலை என்றும்… பகைமையே இல்லாது ஏகாந்த நிலை என்றும்… சொர்க்கம் என்றும்… அங்கே அடைய முடிகின்றது.
வெண்மை நிறத்திற்குண்டான உண்மையான சக்தி என்ன…? – ஈஸ்வரபட்டர்
பன்னிரெண்டு வகை குண அமிலங்கள் கொண்ட… உணர்வின் எண்ணம் கொண்ட சரீர பிம்ப இயக்கத்தில்… ஆத்மீக போதனையின் வழித் தொடரில்… ஞானத்தின் பால் செயல்படும் உணர்வின் எண்ணத்தைச் செயல்படுத்த வேண்டிய பக்குவ முறை யாது…?
பல குணங்களின் உணர்வின் உந்தல் கொண்ட வாழ்க்கையில் மனிதனின் எண்ண உணர்வு தான் வளர வேண்டிய ஆத்ம வளர்ப்பின் வலு நிலையைக் கூட்ட என்ன செய்ய வேண்டும்…?
இச்சரீர பிம்ப இயக்க எண்ணத்தை சமநிலை கொண்ட நற்குணத் தொடர்பினால்
1.சாந்த குண அமிலமான “வெண்மையின் அமிலத்தின்” சேர்க்கை விகிதம் கூடிடல் வேண்டும்.
2.அதன் தொடர்பு கொண்ட காந்த மின் அலை ஈர்ப்பு செயலினால்
3.இச்சரீர பிம்பமே ஆத்ம வார்ப்பிற்கு வளர் நிலை தரத்தக்க “இயந்திர நிலையாக” உயரும்.
அதாவது சூரியனின் சக்தியைக் கொண்டு… காந்த மின் அலையின் தொடர்பினால்… ஜீவ சக்தியான நீர் சக்தியின் தொடர்புடன்… உலோக ஈர்ப்பில் மின் அலையைச் செலுத்தி.. அதன் செயலின் வீரிய குணத்தை (SOLAR POWER) எடுக்கின்றார்கள் அல்லவா..!
அதைப் போன்ற இயக்கச் செயலாக…
1.சரீர பிம்பத்தின் நீர் சக்தியைக் கொண்டு
2.இச்சம குண உணர்வினால் பெற்ற உறுப்புகளின் வளர்ப்பினால் உருவாகும் காந்த மின் அலைத் தொடர்பினால்
3.இச்சரீர உணர்வு எண்ணத்தைச் சகலத்திலும் கலக்கச் செய்து
4.எவ்வீர்ப்புப் பிடியிலும் இவ்வெண்ணத்தின் உணர்வு மோதாமல்
5.எண்ணத்தின் செயல் கொண்டே ஆத்ம அலையை எல்லாவற்றிலும் எல்லாமாகக் கலக்கச் செய்து
6.நிர்வாண சக்தியாக நிலை பெறச் செய்யலாம் இந்த ஆத்ம சக்தியை.
“வெண்மை அமிலத்தின்” தொடர்பு கொண்டு தான் மின் அலையே உருவாகின்றது. வண்ணத்தின் கூட்டு நிலைக்கொப்பத்தான் வளர்ப்பு நிலை ஒவ்வொன்றுமே உருவாகிறது.
வானவில்லின் வண்ணத்தைக் காட்டி இராமாயணக் காலத்தில் வான்மீகியார் எழுதிய காவியத்தின் உட் கருத்தை மாற்றப்படாமல் வைத்திருந்தால்
1.வண்ணங்களின் தொடர்பு கொண்டு
2.உயிர் வளர்ப்பின் அணுத் தொடர் வளர்ச்சியின்
3.அணுவுக்குள் அணு வளரும் உயர் சக்திகளை இன்று நாம் அறிந்திருக்கலாம்.
வெண்மையின் அமிலமான சக்திகளால் தான் நம் உடல் உறுப்பின் எலும்புக்கூறுகள் உருவாகி அதன் தொடர்பு கொண்ட அணு வளர்ச்சி வார்ப்பாக ஆத்மாவின் வலு வலுக் கொள்கின்றது.
சூரியனின் அலைத் தொடர்பிலிருந்து பூமியின் சுழற்சிக்கு பூமிக்கு வடிகட்டி பூமியின் ஈர்ப்பிற்கு வரும் அமிலச் சத்தின் உயிர்ணு வளர்ப்பு அமிலமே “இந்த வெண்மையின் சக்தி தான்…!”
சாந்த குணமான வெண்மையின் சக்தி அலைகளை உணர்த்தத்தான் வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் கலைமகள்… ஞானமகள்…! என்றனர்.
ஆகவே…
1.ஞானத்தின் ஈர்ப்பு நிலைக்கு வெண்மை உடுத்தும் தாய் குண சரஸ்வதி என்றும்
2.”ஞானத்தின் தொடர்பு கலைமகள்” என்ற சூட்சம வட்டத்திற்குள்
3.அச்சக்தியின் தொடர்பை நமக்குத் தெளிவாக உணர்த்தினர் நம் சித்தர்கள்.
வண்ணத்தின் சேர்க்கைக்கொப்பத்தான் உருவக செயல் உருவாகின்றது. அதன் தொடர்பு கொண்ட உணர்வின் செயல் தான் மாற்றங்களின் நிலையும்.
இன்றைய இக்கோளத்தின் உயர் வார்ப்பான உயர் வண்ணமான வெண்மையின் தன்மைக்கே கருமையின் பழுப்பு நிலை கூடிக் கொண்டே வருகின்றது.
இன்றைய கலி காலத்தில்…
1.மனிதனின் ஞானம் நிர்வாண உணர்வாக… வார்ப்பின் வார்ப்பாக
2.ஆத்ம வளர்ப்பை வளர்க்கும் ஞானம் பெற்று
3.நிர்மலமான ஜோதி நிலையுடன் கலந்திட வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
1.ஆண்டவன் எங்கோ இருக்கின்றான்
2.இறைவன் எங்கோ இருக்கின்றான்
3.தெய்வங்கள் எங்கோ இருக்கின்றது என்று தான்
இன்றும் நாம் தேடிக் கொண்டேயுள்ளோம்.
ஆனால்
1.நாம் எண்ணிய உயர்ந்த குணங்கள் தான் நமக்குள் தெய்வமாக இருந்து
2.உயர்ந்த குணங்களை எண்ணியதை நம் உயிர் ஆள்கின்றது
3.அந்த நல்ல வழியில் நம்மை இயக்குகின்றது என்பதை நாம் மறந்து விட்டோம்.
நாம் எதையெல்லாம் நல்லதாக எண்ணுகின்றோமோ அதன் வழி கொண்டு நமக்குள் இருக்கும் கண்கள் அந்த நல்ல வழியைக் காட்டிக் கொண்டிருக்கின்றது.
இதை மகாபாரதத்தில் கண்ணன் (கண்கள்) கீதா உபதேசம் செய்கிறான் என்று தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.
ஒவ்வொரு நிலையிலும் உலகிலுள்ள உணர்வுகள் அனைத்தும் நம் உடலுக்குள் அடக்கி மெய்ப்பொருளின் தன்மையைக் காட்டுவது கண்களே.
நாம் எதை எண்ணுகின்றோமோ அவை அனைத்திற்கும் கண்களே தான் காரணமாக இருக்கின்றது
1.கண்களே தான் கெட்டதைக் காட்டுகின்றது
2.அந்த உணர்வைப் பதிவு செய்வதும் கண்கள் தான்.
3.மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது அதே கண் தான் அந்த வழியைக் காட்டுகின்றது.
பார்த்த உணர்வுகள் கொண்டு ஒவ்வொரு உறுப்புகளும் எவ்வாறு இயங்குகின்றது என்ற நிலையைத் தெளிவுறக் காட்டுவற்காக வேண்டி மகாபாரதப் போர் என்று காவியமாக உருவாக்கினார்கள்.
அதில் நடு மையமாகக் கீதை என்ற நிலையை வைத்துக் கண்ணன் “சாரதியாக வந்து” வழி நடத்துகின்றான் என்றும் “குருக்ஷேத்திரப் போர்” என்றும் எத்தனையோ வகைகளில் நாம் தெளிவாகத் தெரிந்திட நாம் புரிந்து கொள்ளும் வண்ணம் மாமகரிஷிகள் காட்டியுள்ளார்கள்.
ஆனால் மகரிஷிகள் காட்டியதைக் காலத்தால் படித்துணர்ந்தவர்கள் அவரவர் சுயநலன்களுக்காகத் திசை திருப்பிவிட்டு விட்டார்கள்.
தான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்ட பெரிய மகான் என்ற நிலைகள் கொண்டு அவரைக் கண்டு நாம் வணங்கும் நிலையும் அவருக்குப் பொருள்களைக் கொண்டு குவிக்கும் நிலை தான் இன்று உள்ளது.
1.உண்மையின் நிலைகள் மறைந்து விட்டது
2.மறைந்த நிலைகள் கொண்டு தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இதிலிருந்து விடுபட்டு இந்த விஞ்ஞான உலகால் மனிதனின் நினைவு அழிந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நாம் அனைவரும் மகரிஷிகள் காட்டிய அருள் நெறிகளைப் பின்பற்றி அதனின் சக்தியைப் பெறுவோம்.
நமது குருநாதரோ பித்தரைப் போன்று மிகவும் எளிய நிலையில் அவர் சாக்கடையிலும் மற்ற அதைப் போன்ற இடங்களிலும் தான் அமர்ந்திருந்தார்.
அந்தச் சாக்கடையைச் சாக்கடை என்று எண்ணவில்லை. உலகத்தைச் சாக்கடையாகக் கருதினார்.
1.அந்தச் சாக்கடையிலிருந்து விலகி நிற்க வேண்டும் என்று
2.அருள் ஞானிகளின் உணர்வின் சத்தைத்தான் அவர் நுகர்ந்து கொண்டிருந்தார்.
தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மையை நீ உலகுக்கு எவ்வாறு காட்ட வேண்டும்…? என்ற நிலையை எனக்கு (ஞானகுரு) உணர்த்துவதற்காக என்னைச் சாக்கடையில் அமரச் செய்தார்.
மகரிஷிகள் கண்டுணர்ந்த உண்மைகளை எனக்குச் சாக்கடை உபதேசமாகக் கொடுத்துத் தீமைகளிலிருந்து விடுபடும் நிலையைத் தெளிவாக உணர்த்தினார் பித்தரைப் போன்று திரிந்த குருநாதர்.
எனக்குக் கல்வியறிவு இல்லை என்றாலும் இந்த உணர்வின் ஆற்றல்மிக்க நிலையும் அது அவர் உணர்த்திய உபதேசத்தின் அருள் வழியில் அவர் காட்டிய நெறிப்படி அதை நான் கவர முடிந்தது.
எனக்குள் அந்த மெய் ஞானத்தை வளர்த்துக் கொண்டேன்.
தீமைகள் வராதபடி காத்திடும் நிலையாக அனைவருக்கும் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அவர் உபதேசித்தார். அந்த அருள் வழிப்படித்தான் உங்களுக்கும் உபதேசிக்கின்றேன்.
சக்கரம் போன்று சுழன்று எடுக்க வேண்டிய தியானம்
1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும்
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் பெற வேண்டும் என்று
3.அடுக்கடுக்காக நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி அந்த இயக்க நிலை கொண்டு
1.“அகஸ்தியர் வாழ்ந்த காலத்திற்கு உங்கள் நினைவினைச் செலுத்துங்கள்…”
2.அகஸ்தியனை நினைவுக்குக் கொண்டு வந்து அவரின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
ஈஸ்வரா என்று உயிரை எண்ணி…
1.அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று
2.மீண்டும் மீண்டும் இந்த நினைவினை ஒரு சக்கரம் சுழல்வது போன்ற திரும்பத் திரும்ப இணைத்து
3.இரத்த நாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்ற நினைவினை
4.அதன் அடிப்படையிலேயே சுழல விடுங்கள்… உங்கள் இரத்த நாளங்களில் அந்த ஆற்றலைப் பெருக்குங்கள்.
இப்படி ஒரு ஐந்து முறையாவது திரும்பத் திரும்ப எண்ணி எடுத்துச் செயல்படுத்துங்கள். உங்கள் உடலில் எந்த உறுப்புகளில் எல்லாம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ அங்கெல்லாம் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று கண்ணின் நினைவைக் கொண்டு அங்கே உள்ளே செலுத்துங்கள்.
இதே மாதிரி சுவாசத்தை எடுத்து அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று உடல் முழுவதும் பரப்புங்கள்.
1.எத்தகைய நோயாக இருப்பினும்… நோய்க்குக் காரணமாக எத்தகைய அணுக்கள் இருப்பினும்
2.அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று அந்தச் சக்திகளை உடலுக்குள் அடிக்கடி செலுத்துங்கள்.
இந்த அருள் சக்தி உயரும் பொழுது நோயை உருவாக்கும் அணுக்களின் செயலாக்கங்கள் சிறுகச் சிறுக தணியும். இதற்கு முன் உடலில் அறியாது சேர்ந்த நோய்களை உருவாக்கும் அந்த அணுக்களின் வீரிய சக்திகளைக் குறையச் செய்யும். நோயை உருவாக்கும் அணுக்கள் பலவீனமடையும்.
ஒவ்வொரு நாளும் இரவு முழுவதும் அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடனே உறங்கச் செல்லுங்கள்.
1.இந்த நினைவாற்றல் உங்களுக்கு அரும் பெரும் சக்தியாக வளரும்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உங்கள் உணர்வலைகளை அழைத்துச் செல்லும்
3.இயற்கையின் உண்மையின் உணர்வினை உங்களுக்குள் உணரச் செய்யும்.
4.அகண்ட அண்டத்தின் ஆற்றல்… உடலான நம் பிண்டத்திற்குள் எப்படி இயங்குகிறது…? என்ற உணர்வினை அறிய முடியும்.
அந்தச் சக்தி இந்த உபதேசத்தைக் கேட்போர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று உங்களுக்காக நானும் (ஞானகுரு) இரவில் பிரார்த்திக்கப் போகிறேன்… தியானிக்கப் போகின்றேன்.
நீங்களும் அதே நிலையில் அந்த உணர்வின் சக்தியை எடுத்து தியானனத்தின் மூலம் உங்கள் இரத்த நாளங்களில் அந்த அருள் சக்தியைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் நினைவாற்றலைப் பெருக்கி பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.
உலக ஓட்டத்தில் செல்வதா…? அல்லது ஞானிகள் வழியில் செல்வதா…? – ஈஸ்வரபட்டர்
மணம்… ஒலி… இவற்றுடன் கூடிய அமிலச் சேர்க்கையின் உருவக உணர்வு… வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு மோதலின் உணர்வு நிலைக்கொப்ப எல்லாம்.. நாம் எடுக்கும் சுவாசத்தின் மூலம் உடலில் அணுக்கள் வளர்கிறது.
இத்தொடரின் வாழ்க்கை நிலையில் எவை எவை நம்மிடம் (எண்ணங்கள் உணர்வுகள்) மோதுகின்றனவோ… அவற்றின் உணர்வை அதிகமாக ஈர்க்கவல்ல தன்மையில்…
1.நாம் நுகரும் ஈர்ப்பு நிலைக்கொப்ப அணு வளர்ப்பு கூடுவதினால்
2.அதை அப்படியே விட்டுவிடலாமா…?
அதாவது… சுழற்சி ஓட்ட வாழ்க்கையில் சுழன்று ஓடும் நாம்… ஓடும் நிலைக்கொப்ப எல்லாம் நம் வாழ்க்கை ஓட்டத்தை ஓட விடாமல்… இவ்வெண்ணத்தின் உணர்வை அந்தந்தக் கால நிலைக்கொப்ப ஏற்படும் மோதலை எல்லாம் தன் ஈர்ப்புப் பிடியில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
சூடான பொருளை நாம் உண்ணும் பொழுது நம் உடலில் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்கு அதனை ஆறவைத்துத் தான் உட்கொள்கின்றோம். அதைப் போன்று…
1.எண்ணத்தில் மோதும் செயல் எதனையும்
2.மிகத் துரித வேகத்தில் பிறரிடம் இருந்து எதிர்ப்படும் சொல் அலையானாலும்
3.குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் இன்னலின் துன்பச் சம்பவமானாலும்
4.மகிழ்ச்சியின் ஆராவாரச் செயலானாலும்
5.உட்கொள்ளும் உணவை எப்படி உடல் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் மட்டும் நாம் உண்ணுவது போல்
6.இவ்வெண்ணத்தின் செயலைக் கொண்டு அந்தந்தக் காலங்களில் ஏற்படும் மாற்றத்தை
7.ஞானம் கொண்ட சிந்தனை வழியிலும் அமைதி கொண்டு ஏற்படும் தொடருக்கு உட்பட்ட உணர்வை எடுத்துப் பழகுங்கள்.
மனித உணர்விற்கு… உடலின் மேல் காரத்தையோ.. புளிப்பையோ… பிய்ப்பெடுக்கும் சில காய்கறிகளின் சாறுகளையோ… வைத்தவுடன் உடலின் உணர்வு அதைத் தெரிந்து கொள்கின்றது.
அதைப் போன்ற தொடர் அலை அமிலத்தின் சேர்க்கை குணம் யாவையும் இக்காற்றலையில் கலந்துள்ள நிலையில்… இவ்வெண்ணத்தில் எடுக்கும் சலிப்பு சாந்தம் கோபம் எதுவாகிலும்… அத்தொடர்பு கொண்ட அணு வளர்ப்பின் வார்ப்பால் உடல் வளர… உடலில் வலுவான ஆத்மாவிற்கு அம்முலாமின் வலுக் கூட… இப்பிடிப்பிலிருந்து மீள முடியா நிலைக்கு நம் ஆத்மாவைச் செயல்படுத்தி விடுகின்றோம்.
இச்சரீர வாழ்க்கையின் எண்ணத்தில் சம நிலை உணர்வினால்… ஞானத்தின் ஒளி அலையை நாம் எடுக்கும் சுவாச வலுக் கொண்டு… நம் ஆத்மா வலுக் கொள்ளும் வளர்ச்சி அலையை… சமமான குணத்தினால் எடுக்கும் முறையில் இவ்வாத்மா வலுப் பெற்று விட்டால்… இவ்வாத்மாவைக் கொண்டு உருவாக்கும் சக்தி அலை தான் சகல அலைகளுமே…!
தெய்வீக சக்தி… பிறவா வரம்… முக்தி நிலை… மோனப் பெரு நிலை.. நிர்வாண நிலை.. இதைப் போன்ற
1.தான் தான் உணர்ந்த நிலைகளில்…
2.ஒவ்வொருவரும் உணர்த்திய தொடர் நிலையின் செயல் நிலை என்பது
3.ஞானத்தால் பெறும் சமமான நிலை கொண்ட சாந்த குண உயர் ஞானச் சித்தை அறியும் நிலை தான்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
நம் வாழ்க்கையில் நஞ்சான நிலைகள் வேதனை என்ற நிலைகள் வந்தாலும் அதைத் துடைக்க துடைத்திட்ட அருள் ஞானிகளின் உணர்வை நாம் பருக வேண்டும் என்ற இந்த நிலையைத்தான் அன்றைய ஞானிகள் தெளிவுறக் காட்டியுள்ளார்கள்.
1.எந்த உயிர் நம்மை சிருஷ்டித்ததோ
2.அந்த உயிரிடமே வேண்டி
3.என்னை அறியாத பிழைகளை நீக்கி
4.அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்று
5.எந்த மனிதன் ஏங்குகின்றானோ
6.அந்த உணர்வின் துணை கொண்டு அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும்.
நம்மை ஆண்டு கொண்டிருக்கும் இந்த உயிரை ஈசனாக மதித்து நாம் எண்ணியது அனைத்தையும் சிருஷ்டித்துக் கொண்டிருக்கின்றது நமது உயிர் என்ற இந்த நிலையை உணர்த்துவதற்குத்தான் இராமாயாணம் மகாபாரதம் கந்தபுராணம் என்ற காவியங்களைச் சாதாரண மக்கள் புரிந்து கொள்வதற்குத் தீட்டினர் ஞானிகள்.
நம் முன் சூட்சமத்தில் காற்றலைகளுக்குள் படர்ந்திருக்கும் நிலையும் நாம் எண்ணிய உணர்வுகள் சூட்சமமாக மறைந்திருக்கும் நிலையை உயிருக்குள் பட்டு “ஓ…” என்று ஜீவனாகின்றது.
அந்த உணர்வின் சத்து “ம்…” என்று நம் சரீரமாகி நம் சரீரத்திற்குள் நின்று நாம் எந்தெந்த குணங்களை எண்ணினோமோ அதனின் சக்தியாக நமக்குள் இயங்குகின்றது.
பின் அதே உணர்வு நமக்குள் இயக்கப்பட்டு அதன் துணை கொண்டு நாம் உயர்ந்த குணங்களை எடுத்தால் உடல் ஆரோக்கிய நிலை பெறுகின்றோம்.
ஆனாலும் உயர்ந்த குணங்களை எடுத்துக் கொண்டாலும் வேதனை என்ற உணர்வினை ஒரு துளி எடுத்தாலும் இந்த உடல் அனைத்தும் சோர்வடைந்து நல்ல குணங்கள் அனைத்தும் மறைந்து விடுகின்றது.
இதையெல்லாம் நாம் அறிந்து கொள்வதற்காகப் பல காவியங்களை எழுதி மனிதன் இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு நாம் அதைத் தீமைகளை நீக்கிட முடியும் என்று காட்டினார்கள் ஞானிகள்.
ஆறாவது அறிவைத்தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்பது. முருகு என்பது மாற்றியமைக்கும் நிலை. முருகா என்பது அழகுபடுத்தும் நிலை.
இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு நமக்குள் நம்மை அறியாது புகுந்த தீமைகளை அகற்றிடும் நிலையாகத்தான் இந்த நிலையைத் தெளிவுற எடுத்து உணர்த்தினார் குருநாதர்.
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக ஈசனாக மதி என்றார்.
2.அவர்கள் உடலை ஆலயமாக மதி என்றார்.
3.அந்த ஆலயங்களில் அமைந்துள்ள உயர்ந்த குணங்கள் அனைத்தும்
4.மனிதனாக உருவாக்க உதவிய அந்த நற்குணங்களைத் தெய்வமாக மதி என்றார்.
1.ஒவ்வொரு மனிதனையும் தீமைகளிலிருந்து அகற்றிடவும்
2.மனிதன் என்ற புனிதத் தன்மை பெறவும்
மனித நிலையிலிருந்து விடுபட்டு ஒளியின் சரீரமாக என்றும் நிலையாக நிலைத்திருக்கும் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று “நீ பிரார்த்தனை செய்” என்றார்.
1.உனக்குக் கிடைக்க வேண்டும் என்று எதை நான் பிரார்த்தித்தேனோ
2.எதை உபதேசித்தேனோ
3.அதை நீ எவ்வாறு கூர்ந்து கவனித்தாயோ
4.இந்த உணர்வுகள் உனக்குள் பதிவாகின்றது
அந்தப் பதிவை மீண்டும் நீ நினைவாக்கப்படும் பொழுது நான் கூறிய உணர்வும் நான் உணர்த்திய உணர்வும் நீ பெறும் தகுதியைப் பெறுகின்றாய்.
“நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்”.
பிறருடைய தீமைகளை அகற்றி அதன் வழியில் மெய் வழி பெற வேண்டும் என்று ஏங்கி அதனை நீ ஒவ்வொரு உயிரையும் ஈசனாக மதித்து நீ செயல்படு என்றார்.
நான் உனக்குக் காட்டிய அருள் வழிப்படி அந்த ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு விண்ணின் ஆற்றலைப் பருக நீ எண்ணு.
“எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்…” என்ற ஏக்க உணர்வுடன் நீ பெறுவாய் என்றால்
1.எல்லோருடைய வலுவும் உனக்குக் கிடைக்கின்றது.
2.அவர்களின் துணை கொண்டு மெய் ஒளியினைப் பெறுகின்றாய்.
3.அது உனக்குள் விளைந்து உன் சொல்லைக் கேட்போர் உடலுக்குள்ளும் விளையும்.
அவ்வாறு விளையச் செய்ய அந்த மெய்ஞானிகளின் அருள் உணர்வுகளை ஆழப் பதியச் செய் என்றார். அவர்களை மீண்டும் நினைவு கொள்ளும்படிச் செய்.
அவர்கள் நினைவு கொள்ளும் பொழுது அவர்களும் தீமைகளிலிருந்து விடுபடுகின்றனர் என்றார் குருநாதர்.
உடலை ஆலயமாக மதிக்க வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
ஞானத்தின் சுழற்சி வட்டச் செயலில் பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் அறியப்பட்ட சித்து நிலை பெற்றோரின்… செயல் சித்தைப் பெற்றவர்கள் (பின் வந்தோர்) எப்படியப்பா செயல்பட்டார்கள்…?
1.உண்மை வழி ஆத்ம வலுவை வளர்க்கும் செயல் சித்தை உணராமல்
2.சுயநல ஈர்ப்புப் பிடியில் விருப்பு வெறுப்பு ஏற்பட்ட காலங்களில்
3.ஜெப முறை பக்தி மார்க்கம் சிலை வைத்துப் பூஜித்ததின் செயல் வழி இவற்றின் பிடியிலே சென்று
4.உருவக நாமகரண வேதாந்த பாராயணத்தால் (பல மொழிகளில்) புரிய முடியாத தன்மையில்
5.இறை சக்தியின் உண்மை ஆத்ம வலுவை ஒவ்வொரு ஆத்மாவும் உணர முடியாமல் சென்று
6.இச்சரீரப் பிடிப்பின் அலைத் தொடரில் தான் இன்று வரையும் வாழ்க்கை பந்தம் உள்ளது.
பெற முடியாத பொக்கிஷமான ஞான வளர்ப்பின் சரீரத்தை… (மனித உடலை) அதன் உண்மை நிலையை அறியவில்லை… அறிய முற்படவும் இல்லை…!
1.சரீரம் என்பது நாம் தங்கி எடுக்கும் புனிதமான கோவில் தான்…!
2.அவ்வாத்மாண்டவனை வளர்க்கும் இல்லமாக எண்ணாமல்
3.சரீரத்தைத்தான் “நான்…!” என்ற சுகபோகச் சுவையில்
4.உண்டு கழிக்கும் நிலையில் நாம் வைத்துள்ளோம்.
ஆக… உண்மையான பேரானந்தத்தை வளர்க்கும் ஆலயத்தை செயற்கை இயந்திர கதியைப் போன்ற… “உண்டு கழிக்கும் இயந்திரமாகத் தான்” நாம் வைத்துள்ளோம்.
இவ்வுலக ஈர்ப்பில் உள்ள நன்மை தீமை என்ற வட்டத்தில்… தீமையில் நன்மையைக் காண்பதைப் போன்று உணர்வில் மோதும் செயலில் ஏற்படும் எண்ணக் கோவையில் நாம் எடுக்கும் உணர்வானது… நல்வழிப்படுத்தும் செயல்வழி சேமிப்பாக இச்சரீர ஈர்ப்பு சமைத்து… இவ்வாத்ம வலுவின் வலுக்கூடிய தன்மையை செயல் சித்திற்கு ஆரம்பக் காலங்களில் செயல்படுத்தலாம்.
உயிரை விட்டு ஆத்மா பிரிந்து செல்லுமா…? உயிரற்ற ஜட பிம்பமாக இச்சரீரத்தை வைத்து உயிராத்மா பிரிந்து செல்லாது. இவ்வுயிர்ச் சரீரக் கூட்டின் இயக்கமுடன் வலுக்கூடிய ஆத்ம அலையைக் காண முடியுமா…? முடியும்.
எப்படி நிலைக்கண்ணாடியில் நம் உருவத்தைப் பார்த்தால் எதிர்பிம்பம் தெரிகின்றதோ… அதைப் போன்றே இவ்வாத்ம பிம்பத்தைப் பார்க்கவும்… இவ்வாத்ம அலையைச் செலுத்தி எச்செயலிலும் ஊடுருவி ஒவ்வொரு நிலையையும் அறிய முடியும் என்பதை ஏற்கனவே உணர்த்தி உள்ளேன்.
இச்சரீர பிம்ப செயலில் நற்குண அலைத் தொடரினால் பெறக்கூடிய ஆத்ம பலத்தின் வளர் தன்மையின் செயல் சித்தின் செயல் முறையினால் தான் ஞானத்தின் தொடரைப் பெற முடியும்.
1.விருப்பு வெறுப்பற்ற உண்மை வலுவின் அலைத் தொடரின் வளர்ச்சி கொண்டு
2.வேறு எந்த ஒரு ஈர்ப்பின் பிடியில் சிக்காமல் உயர் வழியில் சென்று
3.“என்றுமே அழியாத் தொடர் வழி வளர்ப்பை வளர்க்க முடியும்…!”
4.இந்தச் செயல் வழியின் உண்மைச் சித்தறியும் வழி பெற்ற ஆத்மாக்கள்தான்
5.உயர் வழித் தொடர் கொண்ட “ரிஷித் தன்மை” பெற முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
உதாரணமாக ஒரு கருவுற்ற தாய் வேதனைப்படுபவர்களை உற்றுப் பார்த்து நுகர்ந்து விட்டால் அதனின் கருவிலே வளரும் அந்த உணர்ச்சிகள் சிசுவுக்கும் பதிவாகின்றது.
அவருடைய கஷ்டங்களை தாய் உணர முடியும். ஆனால் தாயின் உடலிலும் இத்தகைய அணுக்கள் விளைகின்றது.
ஆஸ்த்மாவோ கான்சரோ மற்ற கடுமையான நோய்வாய்ப்பட்டவர்களின் உணர்வுகளை கர்ப்பமாக இருக்கும் தாய்
1.ஒன்றிலிருந்து தொண்ணூறு நாளுக்குள் நுகர்ந்தால்
2.அந்தத் தாய் கருவிலே விளையும் சிசுவுக்கும் அந்த உணர்வுகள் பட்டு
3.அந்த உடலுக்குள் விஷ அணுக்களை உருவாக்கும் நிலைகள் வருகின்றது.
குழந்தைப் பருவத்தில் தெரியவில்லை என்றாலும்
1.எந்தப் பருவத்தில் எந்த மனிதனின் உடலிலிருந்து அந்த உணர்வுகள் வந்ததோ
2.அந்தப் பருவம் வரும்போது அவர் உடலில் எது விளைந்ததோ
3.அதைப் போல அதே நோயின் தன்மை
4.குழந்தை உடலில் விளையத் தொடங்கிவிடும்.
இன்று இதையெல்லாம் நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.
இவையெல்லாம் தாய் கருவிலே விளையும் உணர்வுகள். தாய் நுகர்ந்த வேதனையான உணர்வுகள் அது உடலுக்குள் ஊழ்வினையாக என்ற வித்தாக மாறி விடுகின்றது.
அதே சமயத்தில் அந்த வேதனையான உணர்வு குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகின்றது.
நாம் நல்ல மனிதர்களாக இருக்கிறோம் என்றால் நம் தாய் கருவிலே இருக்கப்படும் போது இத்தகைய தீமைகளிலிருந்து தப்பியவர்கள்… இன்று நல்ல உடல்களை நாம் உருவாக்கி உள்ளோம்.
ஆனாலும் நாம் கருவிலிருக்கும்போது பிறருடைய கஷ்டங்களையும் துன்பங்களையும் சாப வினைகளையும் கேட்டு அறிந்திருந்தால் அந்தச் சாப அலைக்குள் நம்முடைய திறமை எது இருந்தாலும் அது செயலிழந்து இந்த வாழ்க்கையில் அதனால் நமக்குத் தொல்லைகள் வரும்.
இந்த உணர்வுகளை நம் உயிர் நுகர்ந்தபின் அந்த உணர்வின் இயக்கமாக மாற்றுகின்றது.
1.”இப்போது அல்ல…”
2.தாய் கருவிலே விளையும் போது தாய் எடுத்த உணர்வின் வித்து
3.அதனுடைய பருவம் வரும் போது அதை விளைய வைத்துவிடும்.
தென்னை மரங்களை எடுத்துக் கொண்டால் அதனுடைய காலம் வரும்போது தான் அதனுடைய காய்களை விளைவிக்கின்றது.
ஒரு செடியின் தன்மை எடுத்துக் கொண்டால் அதன் காலம் வரும் பொழுது தான் அதனுடைய விளைச்சலைக் கொடுக்கின்றது.
நெல் பயிரை எடுத்துக் கொண்டால் ஆறு மாதம் கழித்து நெல் மணிகளை உருவாக்குகின்றது.
இப்பொழுது 3 மாதத்திலும் 2.5 மாதத்திலும் அதற்குத் தக்க உணர்வுகள் உண்டாக்கித் துரித நிலையில் கொண்டு விளையும் பருவத்தையும் விஞ்ஞான அறிவால் கண்டுபிடித்துள்ளார்கள்.
இணை சேர்த்த உணர்வின் தன்மை கொண்டு துரித நிலைகளில் இவ்வாறு வளர்வதும் உண்டு.
இதைப் போன்று கருவிலே இருக்கும் போது தாய் உற்றுப் பார்த்த உணர்வுகள் அனைத்தும் விளைந்து அதற்குத்தக்க நம்மை இப்படியெல்லாம் மாற்றி விடுகின்றது.
இதைத்தான் “பூர்வ புண்ணியம்” என்று சொல்வது.
ஒரு தீமை செய்பவனையோ திருடுபவனையோ அல்லது தவறான வழிகளில் நடப்பவனையோ உற்றுப் பார்த்து அந்த உணர்வினை கருவுற்ற தாய் நுகர்ந்திருந்தால் கருவிலே அந்த உணர்வுகள் விளைந்து
1.குழந்தை வளர வளர
2.அவன் “தவறு செய்பவனாகவே…” மாறிவிடுகிறான்.
3.நீங்கள் என்ன தான் சொல்லி அவனைத் திருத்திப் பார்த்தாலும் முடியாது.
இதுவெல்லாம் இயற்கையின் சில நியதிகள்.
ஏனென்றால் நமது உயிர் நாம் நுகர்வதையெல்லாம் “ஓ…” என்று இயக்கி “ம்…” என்று நமக்குள் அணுவாக உருவாக்கும் உடலாக மாற்றிக் கொண்டேயுள்ளது
இன்று சாதாரண நிலைகளில் சாமிக்குத் தீபாராதனை காட்டியோ சாமியாருக்கு இலஞ்சம் கொடுத்துப் பார்த்தோ யாரை வேண்டிக் கொண்டு எதைப் பண்ணினாலும் அவனை மாற்ற முடியாது.
ஆனால் அதே தாய் “மகரிஷியின் அருள் உணர்வுகள் தன் குழந்தை பெற வேண்டும்…” என்று ஏங்கித் தன் குழந்தைக்கு அந்த உணர்வினைப் பாய்ச்சினால் ஒழிய அதை மாற்ற முடியாது.
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் ஒளியாக வாழும் உயிரான்மாக்கள் உண்டு
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனைப் பற்றி இங்கே உபதேசிக்கும் பொழுது… அவன் கண்ட உணர்வுகளை நீங்கள் நுகர நுகர… அந்த அணுக்கருக்களாகப் படிப்படியாக உங்கள் உடலுக்குள் மாற்றம் ஆகும்.
அதை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்த உணர்வின் சத்தாக உங்களுக்குள் மாறி அதன் வழி கொண்டு தீமைகளை அகற்றிடும் அணுக்கள் பெருகும்.
அத்தகைய அணுக்கள் பெருகினால்…
1.பிறவியில்லா நிலை அடைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அகஸ்தியரிடம் அழைத்துச் செல்லும்
2,அடுத்து நாம் பிறவியில்லா நிலையை அடையலாம்.
உதாரணமாக ஒரு நண்பர் வேதனைப்படுவதை நாம் பார்க்கின்றோம். அந்த வேதனையை அதிகமாக நாம் நேசித்து விட்டால் அவரின் உனர்வு நமக்குள் விளையத் தொடங்குகிரது.
ஆனால் நண்பர் உடலில் வேதனை அணுக்கள் பெருகி வளர்ந்த நிலையில் நோயை விளைய வைத்த அந்த உயிரான்மா வெளி வந்துவிடுகிறது.
வெளி வந்தபின் நம் உடலில் புகுந்து விடும். ஏனென்றால் அவருடைய உணர்வு நம் உடல் வலிமையாக இருக்கும் பொழுது நமக்குள் வந்துவிடுகின்றது
உதாரணமாக ஒரு ஆடு நரியைப் பார்த்து அதனுடைய வேக உணர்வைக் கண்டு அஞ்சி… அதையே சுவாசித்தது என்றால் நரியின் உணர்வை ஆடு நுகர… நுகர… அந்த நரியின் வலுவான உணர்வு ஆட்டின் உடலுக்குள் வந்த பின் நோயாக மாறுகின்றது.
பின் நரியை எண்ணி எண்ணி இந்த உடலின் தன்மை வலுப் பெற்று விட்டால் ஆடு மடிந்த பின் உடலை விட்டு வெளி வரும் ஆட்டின் உயிரான்மா நரியின் உடலுக்குள் சென்று பரிணாம வளர்ச்சியில் நரியாக விளைகின்றது.
இப்படித் தான் நாம் பரிணாம வளர்ச்சியில் பல கோடிச் சரீரங்களைப் பெற்று மனிதனாக இன்று வந்துள்ளோம். ஆனால் நோயுற்றவரின் உணர்வுகளை நமக்குள் அதிகமாகப் பெருக்கிய பின் அதே நோயின் தன்மை நமக்குள்ளும் வளர்கிறது.
நோயினால்…
1.நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்களின் வளர்ச்சி குன்றி… விஷத்தின் தன்மை அதிகமாகப் பெருகி
2.எந்த மனிதன் பாசத்துடன் நம்மை அதிகமாக நேசித்தானோ
3.நாம் இறந்தபின் அந்த உடலுக்குள் தான் செல்வோம்… நம் இருப்பிடம் அதுதான்
ஆனால் இந்த மனிதனின் வாழ்க்கையில் முழுமை பெற்ற ஞானிகளும் மகரிஷிகளும் பிறவியில்லா நிலையை அடைந்து அகண்ட அண்டத்தில் இன்றும் ஒளியின் சுடராக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
1.இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை என்று முடிவடைந்த அந்த உயிர்கள்
2.அகண்ட அண்டத்தில் எங்கே… எது… உருவானாலும்
3.அதனின் உணர்வை ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்ற நிலையில் வாழ்ந்து கொண்டுள்ளனர்.
3.இப்படி ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் ஒளியாக ஆனவர்கள் உண்டு.
நம் சூரியக் குடும்பம் மட்டும் இந்த அண்டத்தில் வாழவில்லை. எண்ணிலடங்காத சூரியக் குடும்பங்கள் உண்டு ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் நம் பூமியைப் போன்று ஒரு பூமி உண்டு.
அதிலே வடித்த உணர்வுகள்… அதிலே உருவான உயிர்களுக்கு ஒளியாக மாறும் ஆற்றலும் உண்டு, அத்தகைய நிலையை நாமும் பெறுவதற்குத் தான் இந்த உபதேசம்.
மனித ஜெனனம் எப்படி நடக்கிறது…? – ஈஸ்வரபட்டர்
“ஒலி கொண்டு உராயும்…” அமிலச் சேர்க்கையின் வார்ப்பின் வார்ப்பாகத்தான் பல தொடர்பலையில் வலுக் கொண்ட உயிராத்மாவானது… சுவாச ஈர்ப்பில் நம் உடலுக்குள் எண்ண நிலைக்கொப்ப குண நல ஈர்ப்புப் பிடியில்… சில சில காலங்களில் வந்து சேர்கிறது.
அதாவது மனித எண்ணத்தின் பன்னிரெண்டு வகை குண அமில நிலைக்கொப்ப எந்தக் குண நிலை கொண்டுள்ளோமோ அக்குண ஈர்ப்புத் தொடர் கொண்ட ஆத்ம உயிரானது… நாம் எடுக்கும் சுவாசத்தால் நம் உணர்வின் குண நிலைக்கொப்ப “நம் சுவாசமுடன்” நுரையீரலில் உட்புகுந்து விடுகிறது.
எந்த ஆத்மா நம் குண ஈர்ப்பிற்கு நம் சுவாசமுடன் வந்ததோ அவ்வுயிராத்மாவின் துடிப்பு நிலை நம் சுவாசமுடன் நுரையீரலில் உட்புகுந்து அதன் துடிப்பான அணுக்களை வளர்த்து இரத்த நாளங்களில் உட்புகுந்து விடுகிறது.
1.ஆத்மாக்கள் பெரும்பகுதி குடியிருக்கும் இடம் இரத்தநாளங்கள் தான்.
2.அதிலே சுழன்று கொண்டே இருக்கும்.
அப்படிச் சுழலும் நிலையில் அதற்குகந்த வேட்கை குண அணுக்களை நம் உடலில் வளர்க்கத் தொடங்குகிறது.
நாம் சில சந்தர்ப்ப காலங்களில்
1.தன் நிலை மறந்த உணர்வுடன் கூடிய ஈர்ப்பு எண்ணத்தில் செல்லும் பொழுது
2.நம் உடலுக்குள் குடி வந்த ஆத்மாவானது
3.அது வளர்க்கும் அணுக்களின் அதன் எண்ணச் செயலில் வேகத்தால்
4.அதன் ஈர்ப்புப் பிடிக்கு நம்மை உட்படுத்தி… அதன் வசத்திற்கு நாம் செல்லும் காலங்களும் உண்டு.
5.அவையே நம் வளர்ப்பின் கருவாக உருப்பெற்று குழந்தைகளாக ஜெனனம் பெறுவதும் உண்டு.
நற்குண சுவாச ஈர்ப்பில் முந்தைய காலத் தொடர்பு கொண்ட வலுப் பெற்ற உயிராத்மாக்களும் தொடர்பு கொண்டு ஈர்ப்புப் பிடியில் ஜெனனத்திற்கு வருகின்றன.
இரத்தநாளங்களில் உள்ள இவ்வுயிராத்மாக்கள் தான் ஆண் பெண் உறவு நிலையில்
1.காந்த ஈர்ப்பு நுண் அலையை வளர்க்க வல்ல வண்ணங்களில்
2.வெண்மை அமிலக்கூறின் வார்ப்புச் செயலான ஆணின் அணு வளர்ப்பின் சேர்க்கை வித்துடன்
3.காந்த மின் அலையை ஈர்க்க வல்ல வீரிய உணர்வு கொண்ட உஷ்ண அலையின் சேர்க்கைக் காலங்களில்
4.நம் உடலில் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்
5.பெண்ணின் வீரிய குண உஷ்ண அணுக்களின் உயிரணு வளர்க்கும் காலங்களில்
6.ஆணின் அமிலச் சேர்க்கையில் கரு ஈர்ப்பிற்கு வந்து கருத்தரிக்கின்றது.
கருத்தரித்த காலத்தில் தாய் எடுக்கும் சுவாசத்தால் இக்கருவானது அதன் உயிர் ஆத்மா திடம் (உடல்) கொள்கிறது, திடம் கொண்ட நிலையில் அவ்வாத்மா வளர்க்கும் அவ்வமிலத்தின் உஷ்ண அலையில் உயிரணுக்கள் வளரத் தொடங்குகிறது.
கருவுற்ற நிலையில் அந்த ஆத்மா உராய்ந்து உராய்ந்து வலுப் பெற்று உருவாகி வளரும் அந்த அணுக்களின் மலம் வெளிப்பட்டு அதுவே மீண்டும் அணுவாகி வளரும் கரு வளர்ப்பு வார்ப்பு சரீர நிலையாக உருவாகின்றது.
தாயின் கர்ப்பத்திலேயே கர்ப்பப் பையில் தான் அவ்வாத்மாவும் வளர்கின்றது. ஆத்மாவின் ஈர்ப்பு உஷ்ண அலையின் வார்ப்பாகத்தான் அக்கரு வளர்ந்து அக்கருவின் எலும்புப் பாகங்கள் உறுதி கொள்கிறது.
எலும்பின் ஈர்ப்பு வளர்ச்சி வளர்ந்த பின்பு தான் அந்த உயிராத்மாவானது ஜெனனப் பிறப்பிற்கு வருகின்றது.
வலுக் கொண்ட காந்த ஈர்ப்பு வார்ப்பு வார்ப்பாக சரீரம் உருவான பிறகு…
1.அச்சரீரத்தை இயக்கி வளர்ந்த ஆத்மா வலுக் கொண்ட பிறகு
2.தாயின் சரீரத்திற்கும் சேயின் சரீரத்திற்கும் தொடர்பு கொண்ட
3.தொப்புள் கொடியின் தொடர் ஓட்ட நிலை சேய் வளர்ச்சி கொண்ட நிலையில்
4.தாயின்றித் தனித்துச் சக்தி பெறும் ஆற்றல் கொண்ட நேரத்திலேயே
5.அதன் துடிப்பு வேகம் அதிகப்பட்டு…
6.தாய்க்கும் சேய்க்கும் தொடர்பான தொப்புள் கொடியைப் பிரித்துக் கொண்டு
7.தன் இச்சைக்கு வளரும் சிசுவாகப் பிறக்கின்றது.
தாயின் கருவில் சிசுவாக வளரும் காலத்தில் துடிப்பு நிலையின் இயக்கம் ஒன்று தான் அச்சிசுவிற்கு உண்டே தவிர… சிறுநீர் கழிப்பதோ.. மலம் கழிப்பதோ… சுவாசம் எடுப்பதோ… உணவு எடுப்பதோ… இச்செயல்கள் எவையும் இல்லை.
ஆனால் தாயெடுக்கும் சுவாசத்தால்… தாய் எடுக்கும் உணர்வுகளின் எண்ணத்தின் அலைத் தொடர்பு யாவையுமே… ஒலி ஈர்ப்பின் தொடர்பை அச்சிசு பெறுகின்றது.
கரு வளர்ப்பில் அக்கருவின் ஆத்மா தாய்க்கும் சேய்க் கருவிற்கும் தொடர்பு கொண்ட “உதிரத் தொடர்பில்”
1.உதிர அணுக்களின் வளர்ப்பணு உராய்வு திட வளர்ப்பினால் தான்
2.அணு முட்டையாகத்தான் கரு உருவகம் பெறுகின்றது
3.உண்டு கழித்து உருவாகுவது இல்லை… “உருவாகும் உயிரணுக் கரு…!”
உஷ்ண அலையின் வார்ப்பாகத்தான் உயிராத்மா தாயின் உதிரத் தொடர்பைக் கொண்டு தன் வளர்ப்பிற்குச் சத்தெடுத்து உருவாகின்றது.. வளர்கின்றது… பிறக்கின்றது.
பிறந்த பிறகுதான் தன் இச்சையில் சுவாசம் எடுத்து உணவெடுத்து செவி ஈர்ப்பும் ஒளிப் பார்வையும் ஒளி வீச்சும் செயல்பட ஆரம்பிக்கின்றன.
மனித உரு கரு உருவாகும் தருணத்தில் உருவங்களும் நிறங்களும் அங்க அவயங்களின் வார்ப்புகளும் தாயின் உதிர உஷ்ண ஓட்டத்தால் இவ்வாத்ம உயிர்…
1.ஏற்கனவே எந்தெந்த முலாமில் எல்லாம் வார்ப்பாகி வார்ப்பாகி வலுக் கொண்டு வழித் தொடர் பெற்று
2.எதை வளர்க்கக்கூடிய வித்தாக அவ்வுயிராத்மாவின் முலாம் இருந்ததோ
3.அதன் தொடர்பு கொண்ட உருவக அங்க இலட்சணங்கள் தான்
4.கருவகக் காலத்தில் பெற்று வந்த வார்ப்பு உருவாகப் பிறப்பெடுத்து வளர முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
(1).பையனை எண்ணி வேதனைப்பட்டு வெறுப்படைந்த உணர்வுகள் அவன் தொழிலுக்குச் செல்லும்போது அவனை எப்படி இயக்குகின்றது…?
நம் பையன் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறான் என்று வைத்துக் கொள்வோம். வீட்டில் இந்த மாதிரிச் சொல்லி ஏதாவது கேட்கவில்லை என்றால் அதே வேதனையான நிலைகளில் அங்கே போய் வேலை பார்ப்பான்.
அந்தச் சங்கடமான நிலைகளில் இருக்கும்போது “ஏனப்பா… இது இந்த மாதிரி இருக்கிறது இதை எடுத்து இந்த மாதிரி வையப்பா…” என்று அங்குள்ளவர்கள் சொன்னால் பையன் என்ன சொல்வான்?
“அ..ஆ…, என்று மறுத்து…” அதெல்லாம் முடியாது…! நீ என்ன சொல்கிறது… நான் என்ன செய்கிறது… “நீயே செய்…! என்று வரும்.
ஏனென்றால் இங்கே வீட்டில் வந்த வெறுக்கும் உணர்வு அங்கே தொழிற்சாலையில் மேலதிகாரி வேலையைச் சொன்னவுடனே
1.“ஜிர்…’ என்று கோபமாகி முறைத்துப் பார்க்கச் சொல்லும்.
2.அங்கே எதிர்ப்பான். நீயே செய் என்பான்.
இதைப் பார்க்கலாம் நீங்கள்.
ஏதாவது உங்கள் வீட்டில் சங்கடப்பட்டு வேலைக்குச் சென்றால் உங்கள் மேலதிகாரி வேலை சொன்னால் உங்களுக்கு என்ன எண்ணம் வருகிறது என்று பாருங்கள்…!
உங்களுக்குத் தெரியாமலே அங்கே சண்டை போட வைக்கும். உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.
இந்தச் சண்டையை அங்கேயும் மூட்டிவிட்டு யாரிடம் பதில் சொன்னாலும் விடாப்பிடியாக
1.எனக்கு இப்படி இடைஞ்சல் செய்கிறார்கள்
2.என்னை அப்படிச் சொல்கிறார்கள் என்று
3.இதைத் தான் சொல்லச் சொல்லும்.
உங்கள் வீட்டில் வந்த இந்தக் குறை அங்கே போய் மோதி உங்கள் தொழிலேயும் இடைஞ்சல் கொடுக்கும்.
இந்த மாதிரி ஆனவுடன் நம் உடலுக்குள் உள்ள நல்ல குணங்களுக்கு இதெல்லாம் எதிரியாகிவிடும். உடலுக்குள் வெறுப்பும் வேதனையும் உண்டாகிக் கொண்டேயிருக்கும்.
அதே போல நம் நண்பர்களுக்கும் நம்மைப் பார்க்கும் பொழுது அதே வேதனையும் வெறுப்பும் வந்து கொண்டேயிருக்கும்.
இந்த விஷம் எல்லா இடத்திலும் பரவிவிடுகின்றது. இதே மாதிரித் தொழில் செய்யும் இடங்களில் அவரவர்கள் குடும்பத்திலேயும் இந்த மாதிரி இருக்கின்றது.
நாம் என்ன நினைக்கிறோம். நான் நல்லது தான் நினைக்கின்றேன். ஆனால் என் வீட்டிலும் தொழிலும் இப்படி இருக்கின்றது என்று எண்ணி வேதனைப்படுவோம்.
நம் பையன் மீது பிரியமாக இருக்கும் பொழுது இந்த மாதிரி நடந்தால் “அடப் பாவிகளா.. இந்த மாதிரிச் செய்கிறார்களே…! என்று உணர்ச்சி வசப்படுவோம்.
“பார்த்து வேலை செய்டா” என்று சொல்லிவிட்டு “உனக்கு இப்படித் தொல்லை கொடுக்கின்றார்களே” என்று எண்ணி அதிலும் வேதனை வரும். ஏனென்றால் அங்கே இடைஞ்சல் வரும் போது தாய் என்பதால் பையன் எல்லாவற்றையும் இங்கே வந்து சொல்வான்.
அதே சமயத்தில் நண்பர்களிடம் சொல்லும் போது இப்படிப் பண்ணுகின்றார்கள் பாருங்கள் என்று சொல்வோம். எதற்கெடுத்தாலும் என் பையனுக்கு இடைஞ்சல் செய்கிறார்கள் என்று அவர்களிடம் சொல்லி அவர்கள் உடலிலேயும் இந்த வேதனையைச் சேர்ப்போம்.
நாலு தடவை இப்படிச் சொன்னால் ஐந்தாவது தடவை நம் நண்பர்கள் அப்புறம் நம்மைக் கண்டாலே ஒதுங்கிப் போய்விடுவார்கள். இவன் என்னடா எப்பொழுது பார்த்தாலும் இந்த மாதிரிக் குறையையே சொல்லிக் கொண்டுள்ளான் என்று விலகிச் செல்வார்கள்.
இத்தகைய நிலைகள் கடைசியில் பகைமையாகி எதிரியாக்கிவிடும்.
காரணம் என்ன…?
1.நாம் நல்லதை எண்ணுவோம் ஆனால் நல்லதைக் காப்பதில்லை
2.உடலிலுள்ள நல்ல குணங்களுக்குத் தேவையான நல்ல சக்திகளை நாம் கொடுப்பதில்லை
நல்ல செடிகள் விளையும் இடத்தில் விஷச் செடிகளை விதைத்தால் நல்ல செடிகளுக்குண்டான சத்தையெல்லாம் அது எடுத்துக் கொண்டு நல்ல செடிகளுக்கு உணவே இல்லாது செய்துவிடும்.
களை அதிகமாகிவிட்டால் நல்ல செடிகள் விளையுமோ…?
நல்ல செடிக்கு வரும் சத்தெல்லாம் களை “லபக்..” என்று எடுத்து அது நன்றாக வளரும். ஏனென்றால் அது விஷம். இதே மாதிரித்தான்
1.நம் நல்ல குணங்களுக்குக் கிடைக்க வேண்டிய சத்தையெல்லாம் அது எடுத்துக் கொள்ளும்.
2.அப்பொழுது நல்ல குணங்களையே எண்ண முடியாதபடி அது தவிக்கும்.
3.நல்ல குணங்கள் உடலை வளர்த்தது அனைத்தும் சோர்வடையும்.
நல்ல குணங்களை எண்ணவிடவில்லை என்றால் இந்தத் தீமை செய்யும் குணங்கள் “ஆட்சிக்கு” வந்துவிடும்.
நாம் தவறு செய்யவில்லை பாசத்தினால் இப்படி வந்துவிடுகின்றது.
இந்த மாதிரியெல்லாம் நடந்ததால் பையனுக்கு அவன் வேலை செய்யும் தொழிற்சாலையில் கெட்ட பேர் வருகின்றது. அவனுக்குள் வெறுப்பாகும் பொழுது அந்த வெறுப்பான நிலைகளிலே அங்கே எதிரியாகின்றது.
அங்கே வேலை செய்ய முடியாது. வீட்டுக்கு வர மாட்டான். ஹோட்டலில் போய்ச் சாப்பிடுவான். காசே பையன் சரியாக வீட்டுக்குத் தர மாட்டேன் என்கிறானே என்று வேதனைப்படுவோம்.
இதெல்லாம் செய்வது யார்…? நம் உயிர் தான்.
நம் உயிர் தான் நாம் எண்ணிய அனைத்தையும் இயக்குகின்றது. நாம் எண்ணியது அனைத்தும் தெய்வமாக இருக்கின்றது .அதையும் காட்டுகிறார்கள் ஞானிகள்
(2).காளி – கோபம் – காளிக்கு முன்னாடி புலி
காளி மாரியம்மன் இப்படி எத்தனையோ தெய்வங்களைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.
பையன் மேல் ரொம்பப் பிரியமாக இருக்கின்றேன். ஆனால் எனக்குப் பிடிக்காததைச் செய்தான் என்றால் “ஜிர்ர்ர்….” என்று கோபம் வந்துவிடுகின்றது.
நம் சொன்னபடி பையன் கேட்கவில்லை என்றால் காளியாகவே மாறிவிடுகின்றோம்.
காளிக்கு முன்னாடி என்ன வைத்திருக்கின்றார்கள்?
புலியை வைத்துக் காண்பித்துள்ளார்கள். ஏன் வைத்துள்ளார்கள்? எனக்குக் கோபம் வந்துவிட்டால் முன்னாடி நிற்பதைப் பார்க்கின்றேனா?
புலி தன் பசியைத் தீர்க்க மற்றவைகளை அது இரக்கமற்றுக் கொன்று அது சாப்பிடுகின்றது.
அது எவ்வளவு தான் “விர்ர்ரா…விர்ர்ரா” என்று கத்தினாலும் அதைக் கேட்காது தன் பசியினுடைய அந்த ஆவேசத்தில் தான் இருக்கும். கடித்துக் குதறும். உணவாகப் புசிக்கும்.
அதே மாதிரித்தான் பையன் சொன்னபடி கேட்கவில்லை என்கிற பொழுது உன்னை அடித்து நொறுக்கினால் தான் உனக்குப் புத்தி வரும் என்று சொல்லி ஆவேசமாக அடிப்பார்கள்.
1.இந்தக் காளி இப்படி நொறுக்கும்.
2.புலி தன் பசியைப் போக்க எப்படி ஆவேசப்படுகின்றதோ அதே ஆவேசம் இங்கே வரும்.
3.அதனால் தான் “காளி – கோபம்” என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.
இந்த வாழ்க்கையில் கோபமும் கொதிப்பும் அடிக்கடி எடுத்துப் பேச ஆரம்பித்தார்கள் என்றால் அடுத்த பிறவி “நிச்சயம் புலி தான்”.
இந்தக் கோபமான எண்ணத்தை எண்ணினால் உயிரான ஈசன் அதைப் படைத்து உடலுக்குள் வினையாகச் சேர்க்கின்றான்.
1.அப்பொழுது இந்த உடல் அது வினைக்கு நாயகனாக விநாயகா
2.அந்தப் புலியின் உடலாகவே மாற்றுகின்றது நம் உயிரான ஈசன்.
இதைக் காண்பிப்பதற்குத்தான் கோவிலில் இப்படி வைத்துள்ளார்கள். ஏனென்றால் இதெல்லாம் நம் உயிரின் இயக்க நிலைகள். தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
(3).மற்றவரை ஏமாற்றினாலும் உயிரிடமிருந்து யாரும் தப்ப முடியாது
1.நான் உங்களை ஏமாற்றலாம்.
2.யாரை வேண்டுமானாலும் ஏமாற்றிவிடலாம்.
3.எனக்குள் இருக்கும் உயிரிடம் நான் ஏமாற்றவே முடியாது.
உங்களை நான் ஏமாற்றுகின்றேன் என்று வைத்துக் கொள்வோம். ஏமாற்றும் உணர்வு எனக்குள் வந்துவிடும்.
1.ஏமாற்றும் உணர்வு எனக்குள் வந்தவுடன்
2.என்னிடம் உள்ள நல்ல குணங்களை எல்லாம்
3.இது ஏமாற்றிக் கொண்டேயிருக்கும்.
ஏமாற்றியவுடனே நாம் என்ன செய்வோம்? அதைக் கண்டு நாம் இரசிப்போம். ஆனால் ஏமாற்றப்பட்டவன் வேதனைப்படுவான்.
அவன் வேதனைப்படும் உணர்வுகள் வெளிப்படுவதைக் கண்டு நாம் இரசித்தோம் என்றால் நமக்குள் வந்து நம் நல்ல குணங்களை எல்லாம் ஏமாற்றிவிடும்.
நான் அவனை ஏமாற்றி விட்டேன் என்று எண்ணினேன். ஆனால் எனக்குள் வந்து வேதனையாகிவிடுகிறது. இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதையெல்லாம் தெரிந்து கொள்வதற்காகத்தான் கோவிலைக் கட்டி வைத்து விநாயகரை முன்னாடி நிறுத்தி நம்மை நாம் அறியும்படிச் செய்தார்கள் ஞானிகள்.
வினைக்கு நாயகனான அமைந்த இந்த மனித உடலை எப்படிப் பெற்றோம்…?
முந்தி மிருக நிலையிலிருந்தோம். மிருகமாக இருக்கும்போது சேர்த்துக் கொண்ட நல் வினைகளால் மிருக நிலையிலிருந்து மீண்டு மனிதனாக உருவாக்கியது நம் உயிர்.
மனிதாக இருக்கும் நாம் இன்று எந்த வினைகளைச் சேர்க்க வேண்டும் என்பதை நீ சிந்தித்துப் பார்…! என்று “கேள்விக் குறியும்” போட்டுப் பச்சையாகவே காட்டுகின்றார்கள்.
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய முதல் மனிதன் உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக மாற்றிப் பிறவா நிலை அடைந்தான் அகஸ்தியமாமகரிஷி.
1.அவன் கண்டுணர்ந்த இயற்கையின் பேருண்மகள்
2.அவன் உடலில் விளைய வைத்த அந்தச் சக்திகள்
3.இப்பொழுது உபதேசிக்கின்ற மாதிரி
4.அவன் உடலிலிருந்து வந்த வாசனைகளை எல்லாம்
5.சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்து வைத்துள்ளது.
அகஸ்தியா மாமகரிஷிகளின் உணர்வலைகளை நாம் கவர்ந்து இந்த வாழ்க்கையில் நம் உடலிலிருந்து வரும் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்ற வேண்டும்.
படித்தவர்கள் என்னவோ…! என்று விட்டுவிடுகிறார்கள்… படிக்காதவர்கள் “கூர்ந்து பதிவாக்குகின்றார்கள்…”
அணுவின் ஆற்றலை அறிந்து துருவத்தின் ஆற்றலைப் பெற்று அகஸ்தியன் ஒளியின் சரீரமாககித் துருவ நட்சத்திரமாக நிலை கொண்டுள்ளான்.
அவனைப் பின்பற்றிச் சென்றோர் அனைவரும் அவன் உணர்வைக் கவர்ந்து துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக ஒளியாக வாழுகின்றனர்.
இதை எல்லாம் கேட்கும் நீங்கள்… சாமி (ஞானகுரு) என்னமோ சொல்கிறார் அர்த்தமாகவில்லை…! எதை எதையோ பேசுகிறார்…! என்று எண்ண வேண்டியதில்லை.
காரணம்… படிக்காதவன் தான் இத்தனையும் நான் பேசுகிறேன். எம்முடைய பேச்சைக் கேட்பவர்களில்…
1.படித்தவர்கள் சிந்திக்கும்போது அவர்கள் படித்ததை வைத்து… “சாமி என்னமோ சொல்கிறார்…!” என்ற நிலைகளில் விட்டு விடுகின்றார்கள்
2.மிகவும் படிக்காதவர்கள் “சாமி என்ன சொல்கிறார்…?” என்று கூர்மையாக உற்றுக் கவனிக்கின்றார்கள்.
படிக்காதவர்களுக்குள் யாம் உபதேசிக்கும் இந்த உணர்வின் தன்மை கருவாகி விட்டால்
1.தன்னையும் அறிகின்றனர்… அண்டத்தையும் அறிகின்றனர்… அகண்ட அண்டத்தையும் அறிகின்றனர்.
2.அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆகி
3.எப்படி ஒளியின் தன்மையாக மாற்றுகின்றானோ அந்த நிலையை அவர்கள் அடைகின்றார்கள்.
உதாரணமாக ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார் என்று கண்டறிந்த பின் அந்த உணர்வின் தன்மை நமக்குள் கருவாக உருவாகி விட்டால் அதே நோயின் தன்மை நமக்குள் உருவாகின்றது.
நோயாளியைப் பார்த்துத் திரும்பத் திரும்ப அவனை எண்ணும் பொழுது
1.கோழி கேறுவது போன்று அந்த உணர்வின் தன்மையாகி
2.நோயை உருவாக்கும் கரு முட்டையாகி அந்தக் குஞ்சாக ஆன பின் அதே நோயின் தன்மையை ஊட்டி
3.இரத்த நாளங்களில் கலந்து உயிருக்கு எட்டி
4.அந்த நோயின் உணர்வைக் கண் காது மூக்கு என்று அனைத்திற்கும் இழுத்துக் கொண்டு வரும்.
வேதனையாக இருக்கும் பொழுது உங்கள் மேலே யாராவது தொட்டால் உடனே சுருக்… என்று கோபம் வரும். வேதனையாக இருக்கும் பொழுது ஒருவர் நம்மிடம் மகிழ்ச்சியாக ஒரு சொல்லைச் சொன்னால் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது… அந்த மணம் நம்மைத் தடுத்துவிடும்.
ஆனால் வேதனையைப் பற்றிச் சொன்னால் இந்த உடல் மிகவும் ரசிக்கும். ஆகவே… வேதனையாக இருக்கும் பொழுது
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் ஆன்மாவிலிருந்து இதைத்தான் பிரித்தெடுத்து உயிருக்குக் கொடுக்கும்.
2.அந்த உணர்வின் தன்மை தான் உடலுக்குள் சென்று அந்த அணுவிற்கு ஆகாரமாகப் போய்ச் சேரும்.
இதைப் போன்று…
1.நோயை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
2.அதைத் திரும்பத் திரும்ப நீங்கள் எண்ணினால் போதும்
3அந்தக் கரு முட்டை உங்களுக்குள் வளர்ச்சி அடைந்து அணுக்களாகப் பெருக்கப்படும் பொழுது அது உணவுக்காக உந்தும்.
4.அந்த உணர்வின் தன்மை உந்தும் போது அந்த அருள் ஒளியின் உணர்வுகள் உங்களுக்குள் பெருகும்.
ஞானிகளின் உனர்வை இப்படித்தான் நமக்குள் பெருக்கிக் கோண்டு வர முடியும்.
நம் ஆன்மாவுடன் பேச முடியுமா…? – ஈஸ்வரபட்டர்
நம் பூமியின் முக்கியத் தாதுப் பொருள் இரும்பு. இதன் நிலையில் ஒத்த ஜீவ ஜெந்துக்களும் தாவர இன வளர்ப்புகளும் இதன் தொடர் வளர்ச்சியுடையதாகத்தான் வளர்ந்து வந்துள்ளன இன்றளவும்.
எப்படி உலோகங்களிலேயே ஒவ்வொரு உலோகத்திற்கும் அதன் கன அளவுக்குக் கொள்ளளவு நிறையில் வித்தியாசம் உள்ளதோ… அதாவாது ஒரு எடை போடும் தராசில்
1.இரும்பின் கனம் ஒரு கிலோவுக்குள்ள எடையின் கொள்ளளவைக் காட்டிலும்
2.பிற உலோகங்கள் அதிகமாக நிறை தெரிகின்றது அல்லவா…! (உருவ நிலை)
இதன் நிலைக்கொப்ப “நம் பூமியின் நிறை” கனம் பொருந்திய ஜீவ ஈர்ப்பில் நீர் சக்தி வளர்ந்துள்ள இரும்புத் தாதுப் பொருளின் கூடுதல் நிறை கொண்டது அத்தகைய வளர்ப்பில் தான் பூமியில் உள்ள வளர்ப்பு யாவும் உள்ளன.
இniniனி வரும் காலத்தில் இம்மண்டலச் சேர்க்கைக் காலத்தில் பூமியைப் பாதிக்கவல்ல சில நிலைகள் ஏற்படப் போகிறது.
அத்தொடரிலிருந்து நாம் தப்ப இந்தப் பூமி ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபடக்கூடிய தன்மைக்கு நம் சுவாசத்தில் மேல் நோக்கிய தொடர்புடையதாக சூரிய அலை வட்டத்தில் நுண்ணிய காந்த அலையை நாம் எடுக்கப் பக்குவப்பட வேண்டும்.
அந்த விண்ணின் ஆற்றலை நம் உடல் உறுப்பான எலும்புகளில் சேர்த்து அவ்வலைத் தொடரான குண ஈர்ப்பு வார்ப்பு அணுக்களை இவ்வெலும்புக்குள் ஒளியான அணுக்களாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒளியான அணுக்களை வளர்க்க வளர்க்க…
1.இச்சரீரக் கூட்டையே பூமியின் பாதிப்பு நிலை ஏற்பட்டாலும்
2.விண்ணின் ஆற்றலை நாம் எடுக்கும் சுவாச அலையின் சுவாச அலை வளர்ப்பினால்
3.இவ்வுடல் வாழ்க்கை இந்தப் பூமியில் வாழ்ந்தாலும்
4.நம் எண்ணத்தில் எடுத்த சுவாசத்தால் தன் ஆத்ம வலு கூடி
5.சூரியக் குடும்பத்திற்குச் சொந்தப்பட்டதாகச் செயல்படத்தக்க பக்குவ ஆத்மாவாகின்றது.
இங்கே பாடத்தில் உணர்த்துவதும்… போதனை தருவதும்… சாதாரண நிலையிலும் விளையாட்டுப் போன்ற உணர்விலும் இருக்கலாம்.
ஆனால் நடக்கப் போகும் காலத்தில்…
1.இனி நிகழ்பவை எல்லாமே ஞானத்தைச் செயலாக்கும் மனிதனின் சித்தமெல்லாம் கலங்கி
2.சிதறும் அழிவு நிலையில் தான் ஓடிக் கொண்டுள்ளது.
மனிதன் தன்னைத் தான் உணர்ந்து.. ஆத்ம வலுவை உயர் ஞான ரிஷிகளின் அலையுடன் தொடர்பு படுத்தினால் அன்றி… இந்தப் பூமிப் பிடிப்பு சாதாரண வாழ்க்கை நிலையில்.. “தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் நிலைதான் ஏற்படும்…!”
1.ஆத்மாவின் உண்மை அறிந்து
2.ஆத்மாவைக் காணவும்
3.ஆத்மாவுடன் நாம் பேசவும்
4.ஆத்மாவைக் கொண்டே அகிலத்தையும் அறியும் ஆற்றலையும் நாம் பெறும் பக்குவத்திற்கு
5.இச்சரீர எண்ணத்தின் சுவாசத்தை இது நாள் வரை சொன்ன முறைக்கொப்ப தியானத்தால் வலுக்கூட்டுங்கள்.
சநதிர மண்டலத்தின் ஒளி பிரகாசமாக ஒளிராமல் இருப்பதற்கு அதன் ஈர்ப்பில் பூமியை ஒத்த கனம் பொருந்திய இரும்புத் தாதுப் பொருள் குறைவாக உள்ளது தான் காரணம்.
சந்திர மண்டலத்தைச் சுற்றியுள்ள காற்று மண்டலமே மண்ணும் நீரும் கலந்த கனத்த காற்றாக அங்கு வீசிக் கொண்டிருப்பதனால் அதன் ஒளி வீச்சு குறைவாக உள்ளது.
அதைப் போன்று ஒவ்வொரு மண்டலத்திற்குமே தனித் தனி மாறு கொண்ட ஈர்ப்பு நிலை உள்ளது. சூரியக் குடும்ப மண்டலங்களிலேயே ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிலை. ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட வளர்ப்பிலேயே “பல மாற்றங்கள் உண்டு…”
அதைப் போன்று மனிதனின் எண்ண குணத்திலும் மற்றெல்லா வளர்ப்புத் தன்மையிலும் மாற்றங்கள் உண்டு…!
ஒலி கொண்டு ஒளியான உயிரணு அமிலக்கூட்டு நிலைக்கொப்ப வளரப்பெற்ற வளர்ப்பில்…
1.ஞான வளர்ச்சி கொண்ட மனிதக் கரு வார்ப்பு மனிதன்
2.ஒருவரைப் போன்று ஒருவருக்கு ஞான வழிச் சித்து அமையும் என்று எண்ணாமல்
3.மேல் நோக்கிய சுவாச ஈர்ப்பு வலுவினால்
4.தன் ஆத்ம வலுவை தன் அமிலக் கூட்டின் நிலைக்கொப்ப உயர்வாக்கிக் காணுங்கள்.
வரப் போகும் மாற்றத்திலிருந்து உங்களால் விடுபட முடியும்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
(1).வேதனையான உணர்வுடன் கடைக்குச் சென்றால் நல்ல பொருளை நிச்சயம் வாங்க முடியாது
உதாரணமாக துணிக்கடைக்குச் சென்று துணி எடுக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். உங்கள் பையன் வந்து “நானும் அங்கே வருவேன்…” என்று அடம் பிடித்தால் அப்பொழுது சங்கடமாகும்.
அப்பொழுது என்ன எண்ணுவீர்கள்…?
பார்…, இந்தப் பையன் இப்படியே பண்ணிக் கொண்டிருக்கின்றான் எங்கேயும் போகவும் முடியவில்லை… வரவும் முடியவில்லை…! என்ற வேதனைப்படுவீர்கள்.
கடைசியில் அந்த வேதனையுடன் தான் கடைக்குச் செல்வீர்கள்.
அந்த வேதனைப்படும் உணர்ச்சியுடன் ஜவுளிக் கடைக்குச் சென்று நீங்கள் நல்ல துணி மட்டும் தேர்ந்தெடுத்துக் கொண்டு வாருங்கள் பார்ப்போம்.
யாம் உங்களிடம் பந்தயமிடுகின்றோம்… உங்களால் முடியாது.
வேதனைப்பட்டதற்குத் தகுந்த மாதிரித் துணியைத்தான் தேர்ந்தெடுப்பீர்கள். கடையில் உள்ளவர்கள் நல்ல துணிகளாக எடுத்துப் போட்டால்… “வேண்டாம்… இது வேண்டாம்…! இது வேண்டாம்…!” என்று ஒதுக்கித் தள்ளிக் கொண்டேயிருப்பீர்கள்.
எந்த அளவிற்கு வேதனைப்பட்டு வந்தீர்களோ அது இயக்கும். ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு நிறம் உண்டு. அந்த வேதனைப்பட்ட குணத்திற்குண்டான நிறம் தான் உங்களுக்குப் பிடிக்கும்.
கரு நீலமான நிறம் என்றால் ரொம்பவும் பிடிக்கும். அது விஷம். இந்த நிறம் கொண்ட துணியை எடுத்து வந்துவிடுவீர்கள். நீங்கள் “உங்கள் மனதுக்குப் பிடித்தது…” என்று எண்ணி எடுத்து வீட்டுக்கு வந்தபின் அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள்?
“இது என்ன…! இந்தத் துணியைப் போய் எடுத்துக் கொண்டு வந்திருக்கின்றீர்கள்…?” என்பார்கள்.
ஏன்…? “இந்தத் துணிக்கு…, என்ன வந்துவிட்டது…!” என்று சொல்லிக் கொண்டு சண்டைக்குப் போவோம்.
மறு நாள் எல்லாம் சாந்தமான பிற்பாடு எடுத்து வந்த துணியைப் பார்த்தால் என்ன நினைப்போம்…?
நேற்றுப் போகும் பொழுதே சனியன் மாதிரி வந்து என்னை இப்படித் தொல்லை பண்ணிக் கொண்டிருந்தான் என்று சொல்லிவிட்டு “எல்லாம் என் நேரம்…” என்று வேதனைப்படுவோம்.
கடைக்காரனிடம் திருப்பிக் கொடுத்தால்… “வாங்குவானோ இல்லையோ… தெரியவில்லை…!” என்போம். அப்பொழுது தான் கண்ணுக்கே “நல்லதா கெட்டதா” என்று தெரிய வரும்.
(2).நம் குணத்திற்குத் தக்கதான் ருசியும் நம் சொல்லும் வரும்
நீங்கள் கோபமாக இருக்கும் பொழுது பாருங்கள். கொஞ்சம் காரமானதைக் கொடுத்துச் சாப்பிட்டவுடனே “ஸ்ஸ்… ஆகா…” என்று கொஞ்சம் உற்சாகமாகச் சாப்பிடுவீர்கள்.
ஆனால் அதே கோபமான நேரத்தின் ஒரு இனிப்பானதைச் சாப்பிடச் சொல்லிப் பாருங்கள்.
“தூ…” என்று துப்புவீர்கள். அந்த இடத்தில் உமட்டலாக வரும். எதிர்த்து வரும். வாந்தி வருகிற மாதிரித் தெரியும்.
மகிழ்ச்சியாக (இனிப்பாக) இருப்பவர்களுக்கு இந்தக் காரத்தைக் கொடுத்தோம் என்றால் “அப்பப்பா…யப்பப்பா…” என்று சப்தம் போட ஆரம்பிப்பார்கள்.
1.நம் உடலில் இருக்கக்கூடிய குணத்திற்குத் தகுந்த மாதிரித்தான் “ருசியும்” வருகின்றது.
2.நம் குணத்திற்குத் தக்கவாறு தான் “நம் சொல்லும்” வருகின்றது.
நம் சொல் அடுத்தவர்கள் காதில் பட்டவுடனே அதே திருப்பி அந்தப் பதில் திரும்ப வரும். ஆனால் நாம் தவறு செய்யவில்லை. நம் ஆன்மாவில் பட்டது இந்த மாதிரி இயக்குகின்றது.
பையன் மீது பிரியமாகத் தான் இருந்தோம். ஆனால் நம் மீது பட்ட அழுக்கைத் துடைக்கத் தெரியவில்லை.
தினசரி உடலில் உள்ள அழுக்கைப் போக்கக் குளிக்கின்றோம். துணியில் உள்ள அழுக்கைப் போக்கத் துவைத்துக் கொள்கிறோம்.
1.நம் எண்ணத்தால் பட்ட அழுக்கு நமக்குள் போனதே.
2.அந்த அழுக்கைத் துடைக்கின்றோமா…?
யாரும் காண்பிக்கவில்லை. நாம் துடைக்கவில்லை. துடைக்கத் தெரியவில்லை.
எனக்கு வந்த தீமைகள் மற்றவர்களுக்கு வரக்கூடாது… உலக மக்கள் காக்கப்பட வேண்டும் என்ற இந்த எண்ணத்தைப் பரப்புங்கள்
எந்தச் செல்வமும் நம்மைக் காப்பது இல்லை. எந்த உயர்ந்த குணமும் நம்மைக் காப்பதில்லை.
1.அருள் மகரிஷியின் அருள் சக்தியின் துணை கொண்டு தான்
2.அந்த உயர்ந்த குணங்களை நாம் காத்திடல் வேண்டும்.
3.உலகைக் காத்திடும் உணர்வு வரவேண்டும்
4.உலகைக் காத்திடும் உணர்வுகள் நம்மில் விளைய வேண்டும்.
நாம் வெளியிட்ட உணர்வுகள் இந்தக் காற்றிலே பரவ வேண்டும். இதனின் துணை கொண்டு வந்தால் தான் இந்தப் பூமியும் சுகம் பெறும்… நம் உடலும் சுகம் பெறும்… நம் உணர்வும் சுகம் பெறும்…!
ஆகவே மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் இதைப் பெறுவோம் என்று உறுதி கொள்ளுங்கள்.
உலகில் நடக்கும் அசம்பாவிதங்கள் இன்று எத்தனையோ… சொல்ல முடியாது. பத்திரிக்கையை வாங்கிப் படித்தால் அல்லது டி.வி.யைப் பார்த்தால் உலகில் நடக்கும் அந்தத் தீமைகள் எதுவோ அதைக் கண்ணுற்று பார்க்க நேர்கிறது.
அந்த உணர்வின் தன்மைகளை எல்லாம் நமக்குள் பதிவு செய்து “அந்த நினைவினைக் கொண்டே தான்” உலகில் இன்று நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம்.
ஒரு சம்பவம் நடக்கிறது என்றால் அடுத்த சில நொடிகளுக்குள் அது உலகம் முழுவதும் பரவும் அளவிற்கு விஞ்ஞான அறிவு வந்துவிட்டது.
1.இங்கே நடக்கும் செயல்களை அங்கே பார்க்கின்றோம்…
2.அங்கே நடக்கும் செயல்களை இங்கே பார்க்கின்றோம்.
நாம் பார்த்து… கேட்டு… உணர்ந்து வெளிப்படும் இதைப் போன்ற உணர்வலைகளைச் சூரியன் காந்த சக்தி கவர்ந்து உலகெங்கிலும் தீமையை விளைவிக்கும் உணர்வுகளாகப் பரவச் செய்து கொண்டிருக்கின்றது.
இத்தகைய வேளையில் யாம் உபதேசமாகக் கொடுக்கும் இந்த உணர்வின் துணை கொண்டு பத்திரிகையையோ டிவியையோ பார்த்தாலும்
1.அதற்கு பின் ஒரு நிமிடமாவது ஒதுக்கி
2.அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்து
3.உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்… உடனே தூய்மைப்படுத்துங்கள்.
மகரிஷிகளின் அருள் சக்தி உலகம் முழுவதும் படர வேண்டும் என்ற ஏக்கத்தின் உணர்வலைகளைப் படரச் செய்யுங்கள்.
நாளை நடப்பது அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரது உணர்வுகளிலும் ஊடுருவ வேண்டும். தீமைகள் மறைந்து விட வேண்டும்.
மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் உலகம் எங்கும் பரவ வேண்டும். உலக மக்களைக் காத்திட வேண்டும் என்ற இந்த உணர்வுகளை அனைவரும் ஒருங்கிணைந்து பரப்புங்கள்.
1.நாம் விடும் மூச்சலைகள் வீண் அல்ல
2.நாம் எண்ணிய உணர்வுகள் நமக்குள்ளும் தீமையை நீக்கிடும் உணர்வாக விளைகின்றது
3.மற்றவரின் தீமையைப் போக்கும் சக்தியாகவும் வளர்கிறது.
ஆகவே உங்கள் வாழ்க்கையில் எத்தகைய தீமையைக் கேட்டுணர்ந்தாலும் இப்போது கொடுக்கும் அருள் சக்தியின் துணை கொண்டு அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று பல முறை சொல்லுங்கள்.
வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை வரும் சிக்கல்கள் எதுவாக இருந்தாலும்… துயர்பட்ட நிலைகள் இருந்தாலும்… வேதனைகள் எது இருந்தாலும் அதை எல்லாம் கொடுக்கும் சக்தியை வைத்து மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.
இதற்கு முன் அறியாது சேர்ந்த நம் உடலில் பல நோய்கள் இருக்கும். பல இன்னல்கள் இருக்கும். அந்த நோய்கள் இருப்பினும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அது என் உடல் முழுவதும் படரவேண்டும் என் உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகள் நீங்க வேண்டும். தீய வினையால் வந்த நோய்கள் நீங்க வேண்டும் என்று இதை எண்ணிச் செய்யுங்கள்.
நோய்களை மறக்க இதைச் செய்யுங்கள் அந்த மகரிஷிகள் சக்தியைப் பற்றுடன் பற்றுங்கள்.
1.எனக்கு வந்த தீமைகள் மற்றவர்களுக்கு வரக்கூடாது…
2.உலக மக்களைக் காத்திட வேண்டும் என்ற இந்த எண்ணத்தைப் பரப்புங்கள்.
ஒவ்வொருவரும் இதைச் செய்வோம் என்றால் இந்த உலகில் உள்ள தீமைகள் மாறும். தீமையை அகற்றும் உணர்வுகள் நமக்குள் விளைய விளைய… கல்கி என்ற பத்தாவது நிலையான ஒளி நிலை அடைகின்றோம்.
ஒளியாக விளைந்த உணர்வின் தன்மை கொண்டு இந்த உடலை விட்டு நாம் அகன்றால் தீமையற்ற உலகில் நாம் வாழ்ந்திட முடியும். இங்கேயும் வாழ்ந்திட முடியும். தீமைகள் நாடாத நிலைகள் கொண்டு நிச்சயம் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.
மனிதனை மனிதனே இனம் காண முடியாத நிலை தான் இனி வரப் போகும் கால நிலை (கலி முடிவு) – ஈஸ்வரபட்டர்
1.ஆத்மாவாகித்தான் சரீர பிம்பத்தையே பெறுகின்றோம்
2.சரீர பிம்பத்தின் சமைப்பைக் கொண்டுதான் ஆத்மாவின் வலுவைக் கூட்ட முடிகின்றது.
சரீர எண்ண இயக்கத்தின் பிடிப்பு வாழ்க்கை அலையிலேயே நம் எண்ணங்கள் சென்று கொண்டிருந்தால் அதே அமிலச் சத்தின் குண வலுவை ஆத்மா பெற்றுப் பெற்று… அதன் தொடரிலேயே தான் செல்லும்.
அத்தகைய சரீர இயக்க ஈர்ப்பலையின் பிடியிலிருந்து…
1.எண்ணத்தின் உணர்வை உயர் ஞான ஜெப முறையினால்
2.மேல் நோக்கிய சுவாசம் கொண்டு விண்ணிலிருந்து வரும் ஆற்றல்களின் வலுவை
3.உடலில் உள்ள எலும்புகளில் அந்த வலுத்தன்மையைக் கூட்டிக் கொண்டால்
4.அந்த வலுவின் அமிலத்தால் ஆத்ம வலுவும் உன்னத வலுத் தன்மை பெற்று விடும்.
இப்படி… சரீர இயக்க எண்ண உணர்வையே இவ்வுயர் ஞான ஈர்ப்பலை வலு ஆத்மா பெற்றால் ஆத்மாவானது தனித்து எங்கும் சென்று செயலாற்றக்கூடிய வலு பெறும்.
1.இவ்வுடலின் இயக்கத்தால் ஏற்படும் காந்த ஈர்ப்புத் தொடர் அலையால் எங்கும் ஆத்மாவைச் செலுத்தி
2.பால்வெளி மண்டல எந்நிலையிலும் ஆத்மாவைச் செலுத்தி
3.உடல் ஈர்ப்பின் தொடரிலேயே எதனையும் அறிய முடியும்.
ஆகவே இச்சரீர எலும்புக்கூட்டினை வலுவாக்கி அதன் காந்த மின் அலையின் ஈர்ப்பை வலுக் கொண்டதாகச் செயல்படுத்தி இவ்வாத்மாவை இவ்ஈர்ப்புப் பிடியிலிருந்தே தனித்து அனுப்பி… உடல் தொடர்புடனே உணரும் பக்குவம் அடைய வேண்டும்.
உடலைச் சுற்றித் தான் இவ்வாத்மா உள்ளது…!
1.ஆத்மாவின் அலை மோதலில் உடல் உருவாகிச் செயல் கொண்ட நிலையை
2.உடலின் இயக்கம் கொண்டே இவ்வாத்ம வலுவால் நாம் பெறும் உயர் ஞானச் சித்து செயலினால்
3.”சகல சித்துத் தன்மையுமே” நாம் பெற முடியும்.
ஒரு காந்தமானது எப்படி இரும்பைத் தன் வசத்திற்கு இழுத்துக் கொள்கின்றதோ அதைப் போன்று உயர் ஞான வசத்தில் (ஈர்ப்பில்) எண்ணத்தின் ஈர்ப்புச் செயல் இருக்குமேயானால் “மனிதனின் உயர் குணத்தை மனிதனே அறிய முடியும்…!”
ஆனால் பல காலமாகச் சேமித்த ஆத்ம வலுவினை… இன்றைய செயற்கை முறை வாழ்க்கைக்காக… உன்னத நிலை பெறும் ஞான வழித் தொடர் அறியும் “உயர் தியான முறையை…” வாழ்க்கையின் செயலுடன் ஒன்றச் செய்து விட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும்…?
1.மாறு கொள்ளப் போகும் மண்டல ஈர்ப்புச் சுழற்சி ஓட்ட கதியில்
2.மண்டலச் சேர்க்கையின் காலங்கள் (கல்கியுகம்) உருவாகும் தருணத்தில்
3.ஞானத்தின் ஈர்ப்பை எடுக்கவல்ல காற்றலையின் தொடர் நிலையே
4.மண்டல ஓட்டச் சேர்க்கைக் காலத்தால் பாதிப்பு ஏற்பட்டு
5.மனிதனின் எண்ண உணர்வே சித்தம் கொண்ட பிரமை கொண்ட நிலையில்
6.மனிதனை மனிதனே இனம் காண முடியாத நிலை தான் இனி வரப் போகும் கால நிலை (கலி முடிவு).
இதிலிருந்தெல்லாம் தப்பி… தன் ஞான சக்தியை உயர்த்தி… தன் ஆத்ம வலுவையே… தான் உணரும் பக்குவத்தின் உண்மைச் செயலாகச் செயல்படுங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
(1).தெய்வத்தை எங்கே போய்த் தேடுகின்றோம்…?
சாமியாரைப் போல உள்ளவர்களைத் தேடிச் செல்கின்றோம். ஏனென்றால் அவர்களிடம் தெய்வம் அடிமையாக இருக்கிறது என்று செல்கிறோம்.
அவர்களிடம் சென்றால் நமக்கும் “ஏதாவது கிடைக்கும்…!” என்று செல்கிறோம். ஆனால் அந்தத் தெய்வம் எங்கே இருக்கின்றது…?
நீங்கள் தேடும் அந்தத் தெய்வம் உங்கள் எண்ணத்தில் தான் இருக்கின்றது. உயர்ந்த எண்ணங்களை எடுத்து நமக்குள் சேர்த்தோம் என்றால் நம் உயிர் என்ன செய்கிறது…?
1.“ஓ…” என்று இயக்கச் செய்கிறது.
2.“ம்…” என்று நம் உடலாக்குகிறது.
3.“ஓம் நமச்சிவாய” என்று சிவமாக நம் உடலாகின்றது.
4.அப்பொழுது நம் உடலைச் சிவமாக வணங்க வேண்டும்.
ரோஜாப்பூவின் மணத்தைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்வது மாதிரித்தான்
1.இந்த உடலான சிவத்திற்கு…
2.உயிரான ஈசனுக்குச் செய்ய வேண்டும்.
மலரைப் போல் மணம் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உள்ளுக்குள் எண்ணினோம் என்றால் இந்த வாசனை நம் உடல் முழுவதும் பரவி “ம்…” என்று உடலான சிவனுக்கு அமுதாகச் சேர்கின்றது. “அழகான உடலாக்குகின்றது”.
கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டினால் “உடலுக்குள் சந்தோஷம் வரும்.”
அப்பொழுது உங்கள் உடலிலிருந்து வரக்கூடிய வாசனை இனிமையானதாக இருக்கும். நம் சொல் யாரிடம் சொன்னாலும் அந்தக் கனிவாகச் சொல்லச் சொல்லும்.
அப்பொழுது அவர்கள் உங்கள் சொல்லைக் கேட்டாலே மகிழ்ச்சி அடைவார்கள்.
(2).குடும்பத்தில் வரும் வேதனைகளை அதிகமாக எண்ணினால் அதனின் விளைவுகள் எப்படி எல்லாம் இருக்கும்…?
ஒரு வேதனையான உணர்வை எடுக்கின்றீர்கள் என்றால் உங்கள் உயிருக்குள் பட்டவுடனே அந்த வேதனையை உங்களுக்குள் உருவாக்குகின்றது.
எப்புறம் என்ன சொல்வீர்கள்…?
இராத்திரிக்கெல்லாம்…, என் மேல் வலிக்கின்றது என் இடுப்பு வலிக்கின்றது. என் பையன் சொன்னபடி கேட்கவில்லை. வியாபாரம் சரியில்லை. கொடுத்த பணமெல்லாம் திரும்ப வரவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை…!
ஆண்டவன் இன்னும்… என்னைச் சோதித்துக் கொண்டே இருக்கின்றான்… என்று சொல்லி வேதனையைத்தான் அதிகமாக எடுக்கின்றோமே தவிர நல்லதை எண்ணுவதில்லை.
1.நமக்கு ஆண்டவன் தான் எல்லாம் செய்து கொடுக்கின்றான் என்று நினைக்கின்றோமே தவிர
2.நம் உயிர் நாம் கொடுப்பதைப் (எண்ணிச் சுவாசிப்பதை) படைக்கின்றான் என்று
3.நாம் மறந்தே போய்விட்டோம்…, மறக்க வைத்துவிட்டார்கள்.
ஆகவே அந்த வேதனைப்படும் உணர்வை எடுத்தவுடன் வேதனையான சொல்களையே நாம் சொல்வோம். அதைக் கேட்பவர்கள் கொஞ்ச நேரம் நம் வேதனைகளைக் கேட்பார்கள்.
அப்புறம் என்ன ஆகும்…?
இவன் எப்பொழுது பார்த்தாலும் வேதனை வேதனை என்று சொல்லிக் கொண்டேயிருக்கின்றான். நம்மைக் கண்டாலே அவர்கள் வெறுத்துப் போக ஆரம்பிப்பார்கள்.
இந்த வெறுப்பான உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறினால் கடையிலிருந்து சரக்கை எடுத்துக் கொடுக்கும்போது என்ன ஆகும்…?
என்ன சரக்கு வேண்டும்…? “உம்ம்ம்ம்…” என்று சொல்லிச் சங்கட சலிப்பு வெறுப்போடு தான் சரக்கை எடுத்துக் கொடுப்போம்.
ஒரு நாள் பூராம் இப்படிச் சொல்லிக் கொடுத்தால் “இவன் எப்பொழுது பார்த்தாலும் இப்படிச் சலித்துக் கொள்கிறான்” என்று சொல்லிவிட்டு யாரும் வரவில்லை என்றால் அப்புறம் “கடையில் வியாபாரமே ஆகவில்லை…” என்போம்.
வியாபாரம் நல்லாக வேண்டும் என்ற நோக்குடன் கடன் வாங்கியாவது கடையில் நல்ல சரக்காக வாங்கி வைத்திருப்போம்.
இந்தச் சலிப்பான உணர்வுடன் பேசியவுடன் மற்றவர்கள் காதில் பட்டு இந்தச் சலிப்பான உணர்ச்சிகள் மாறி நாம் அடுத்து அவர்களைப் பார்த்தோம் என்றால் கண்களிலிருந்தும் வேதனையான உணர்வுகள் தான் வெளி வரும்.
வேதனை உணர்வுடன் சரக்கைப் பார்த்தால் நல்ல சரக்குகளைத் தேர்ந்தெடுக்க முடியாது.
துருவப்பகுதி கரைந்து கடல்கள் பெருகிக் கொண்டுள்ளது… கடலுக்குள் ஆழ்த்தப் போகின்றான் விஞ்ஞானி
மீண்டும் மீண்டும் தீமையின் உணர்வின் எல்லைக்கே சென்று இன்று உலகம் முழுமைக்கும் அசுர உணர்வுகள் பெருகும் நிலை வந்துவிட்டது.
இந்தக் காற்று மண்டலத்தில் விஷத்தின் தன்மை அதிகமாகப் பரவி மனிதனின் சிந்தனை இழக்கப்பட்டு, மனிதனுக்கு மனிதனே இரக்கமற்றுக் கொல்லும் உணர்ச்சிகள் அதிகமாகி விட்டது. மனிதனைக் காக்கும் உணர்ச்சிகள் எங்கும் இல்லை.
மனிதனுக்குள் அரக்க உணர்வு கொண்டு உடலுக்குள் உள்ள நல்ல பண்புகளை இழக்கச் செய்து எடுத்துக் கொண்ட அசுர உணர்வுகள்தான் நம்மை ஆளுகின்றதே தவிர நமது நல்ல உணர்வு கொண்டு ஆட்சி புரியும் செயலை இழந்திருக்கின்றோம்.
உலக நிலையில் இன்று பார்த்தால் தீவிரவாதம் என்று மதம் இனம் மொழி என்ற நிலையில்தான் அரக்க உணர்வுகளின் செயல்கள் உண்டாகி இன்று மனிதனை மனிதனே ஒரு நொடிக்குள் கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றான்.
ஒரு குண்டு வெடித்தால் 1000 கிலோமீட்டர் வரையிலும் அந்த மனிதர்கள் மடிவார்கள். இப்படிப் பல குண்டுகளை வெடித்தால் வெடித்த ஆவியின் தன்மை வெளியிலே படரும்.
அந்த ஆவித்தன்மை படர்ந்து சூரியனின் ஒளிக்கதிர்கள் எங்கே அதிகமாகத் தாக்குகின்றதோ அங்கே குளிர் பிரதேசமாக மாறும்.
1.ஒரு பக்கம் அந்த நீரின் தன்மை குளிர் பிரதேசமாகி எடை கூடப் போகின்றது
2.கடல் மாறப் போகின்றது.
இதைப் போன்ற நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நிமிடமும் நாளுக்கு நாள் இப்பொழுது மாறிக் கொண்டுதான் வருகின்றது.
ஓசோன் திரை கிழிந்ததனால் அதனின் வலு குறைந்ததால் துருவப் பகுதியில் விஷத்தின் அழுத்தம் வெப்பத்தின் தணல் அதிகமாக்கப்பட்டும் விட்டது.
அணு விஷக் கதிர்கள் (கதிரியக்கங்கள்) எவ்வளவு துரிதமாக ஒரு இயந்திரத்தை இயக்குகின்றதோ… அணுகுண்டை வெடிக்கச் செய்த உணர்வுகள் துருவப் பாதையில் அங்கே வந்தவுடனே வான்வீதியில் பறந்து செல்கிறது.
அப்பொழுது…
1.விஷக் கதிரியக்கங்கள் துருவத்தின் வழி கவரப்பட்டு
2.நமது துருவ எல்லையில் உள்ள பனிப் பாறைகளைக் கரைத்து
3.கடல்களும் பெருகிக் கொண்டே வருகின்றது (உபதேசித்த வருடம் 2001).
தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று சொல்லும் முதலிலே தோன்றிய அகஸ்தியன் இந்தப் பூமியை நல் வழியில் திசையில் சீராகத் திரும்பும்படி அவனுடைய சக்தியின் திறமை கொண்டு செய்தான்.
இன்று அதே போலத்தான் விஞ்ஞான உலகின் தன்மை வரப்படும்போது அணுக் கதிரியக்கங்களைச் செயல்படுத்தும்போது ஒரு பக்கமிருந்து சீராக்குவதற்குப் பதில் நம்மையெல்லாம் கடலுக்குள் ஆழ்த்தப் போகின்றான் விஞ்ஞானி.
குண்டை ஒரு பக்கம் வெடித்தால் இதற்குள் சென்று விஷத்தை நுகர்ந்த உயிரணு (நம் உயிர்) விஷத்தின் உணர்வின் அணுக்களை உருவாக்கும். இறந்தபின் விஷப் பூச்சிகளாகத் தான் நாம் பிறக்க வேண்டுமே தவிர மனிதனாகப் பிறக்கும் நிலை இல்லை.
மனிதன் என்ற நிலையில் ஒன்று இரண்டு தப்பினாலும் அவனும் வாழும் சந்தர்ப்பம் இழந்திருக்கின்றான்.
ஆகவே இதிலிருந்து நாம் தப்ப வேண்டும் என்றால்…
1.ஒவ்வொரு நொடிப்பொழுதும் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து
2.இருள் சூழாத நிலைகள் கொண்டு நம்மைக் காத்துக் கொள்வதற்கு நாம் செயல்பட வேண்டும்.
ஐந்துமுகச் செயலின் வலுவால் ஆத்ம சக்தியைக் கூட்ட முடியும் – ஈஸ்வரபட்டர்
ஜீவராசிகளின் எண்ண ஈர்ப்பின் சமைப்பு நிலையில் ஏற்படும் ஆவியான உஷ்ண அலைகள் வளர்வதினால் தான் இவ்வெண்ணத்தின் ஓட்ட அடக்க நிலையின் உறக்க நிலையால் சரீர பிம்பம் சாந்தம் கொண்டு மீண்டும் விழிப்பிற்கு வந்து செயல் கொள்கிறது.
இவ்வெண்ணச் ஓட்டச் செயல் ஒவ்வொரு ஜீவராசிக்கும் உறக்க விகிதம் மாறுபட்டு இருந்தாலும் உறங்கா நிலையின்றி ஜீவராசிகளால் இருக்க முடியாது. வலு நிலை கூடிய ஆத்மாவிற்கு உறக்க நிலையும் வேண்டியுள்ளது.
1.”ஐம்புலனை அடக்கி…!” நாம் பெறும் தியானம் என்பது
2.ஞானத்தின் வளர் கூட்டை வளர்க்கும் தன்மையற்று உறக்க நிலையும்
3.சமாதி நிலை பூண்டு புலன் அடங்கிய தன்மையில்
4.இச்சரீர பிம்பத்தின் எண்ணத்தின் உணர்வின் செலுத்தும் ஞானத்தின் வலுவை
5.இவ்வாத்மா வலுவாக்கிக் கொள்ள முடியாது.
உறக்க நிலையினால் சரீர சமைப்புச் செயல் அங்கங்கள் ஓய்வு பெறும் நிலை தான் ஏற்படுகிறது.
ஒலி ஈர்த்து… ஒளி கண்டு… உணர்வின் எண்ணம் எடுக்கும்… சுவாச அலையின்
1.ஒளி
2.ஒலி
3.உணர்வு
4.எண்ணம்
5.சுவாசம் என்ற
6.இந்திரிய ஐந்துமுகச் செயல் வடிவில் தான் சரீர பிம்ப இயக்கமும்
7.இயக்கத்தால் வலுக் கொள்ளும் ஆத்ம வலுவும் வலுவாகிறது.
8.எண்ணத்தின் சுவாசத் தொடர் இருந்தால் தான் இவ்வாத்மாவின் வலுவை வளர்க்க முடியும்.
எண்ணத்தின் உணர்வை
1.இனிமை கொண்ட இனிய செயலில் இனியன வளர்க்க
2.இனிது வாழும் வாழ்க்கையில்
3.இல்லறச் சுவையில் இனிய சொல்லை உரமாக இட்டு
4.இனிய மணமாக இவ்வாத்மா வலுப் பெறும் வளர்ப்பிற்காக
5.எண்ணத்தின் உணர்வைப் பிற ஈர்ப்பின் மோதலை ஏற்கக்கூடிய ஈர்ப்புப்பிடியில் சிக்க விடக்கூடாது.
இனிய குண வழித் தொடர் வார்ப்பாத்மாவாக இவ்வாத்மாவை… இனிமை கொள்ளும் ஞானத்தால்… உயர் ஞானத் தொடர்பு கொண்ட ஆத்மத் தொடரில் அறியும் உண்மைகளை…
1.சஞ்சல சபல பேராசை என்ற ஈர்ப்புப் பிடிக்குச் செயல்படுத்தாமல்
2.உண்மையான இறை நிலையை வளர்க்க
3.இனிய குண வார்ப்பாத்மாவின் தொடர் செயல் கொள்ளுங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
ஒரு கருவுற்ற தாயைத் தேள் கொட்டிவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். மருந்து போட்டுத் தாய் தப்பித்துக் கொள்கின்றது. ஆனால் கருவில் வளர்ந்த அந்தக் குழந்தை பிறந்த பின்பு
1.தேள் அவனைக் கொட்டினால்
2.தேளின் விஷம் அவனை ஒன்றும் செய்யாது.
இதே மாதிரிக் கருவிலே இருக்கும் போது ஒரு தேனீ கொட்டினால் இந்தக் குழந்தை தேனீயைப் பிடித்தானென்றால் அவனைக் கொட்டாது. இதைப் போல
1.கருவுக்குள் (சிசு) உணரும் உணர்வுகள் அதன் வழி கொண்டு
2.இங்கே சந்தர்ப்பத்தால் இத்தகைய தன்மை பெறுகின்றது.
இப்போது இங்கே மெய் ஞானிகளைப் பற்றிப் பேசுகின்றோம். ஒரு கருவுற்ற தாய் இதைக் காதில் கேட்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
இந்த ஞானத்தைப் பேசும் போது
1.அது தாயின் உணர்வுக்குள் பதிவாகின்றது.
2.ஞானிகளின் உணர்வுகளை நுகர்கின்றது.
3.கருவுக்குள் இருக்கும் சிசுவும் ஞானிகளின் உணர்வைப் பெறுகின்றது.
4.அந்த உணர்வின் தன்மை வளர்ச்சி அடைகின்றது.
எதனின் தன்மை அங்கு உருவாகின்றதோ அந்தக் குழந்தை பிறந்தபின் இந்தத் தத்துவத்தைப் பெறும் சக்தி பெறுகின்றது.
ஆகவே கருவுற்ற தாய்மார்கள் தீமைகளை அகற்றிவிட்டு உண்மையின் உணர்வைப் பேசும் அருள் ஞானிகளின் உணர்வை நுகரப் பழகிக் கொள்ளுங்கள்.
கருவுற்ற காலங்களில் அருள் உணர்வுகளை நுகர்தறிந்தால் அந்த உணர்வின் கருவே சிசுக்களுக்குத் தீமையை அகற்றும் வல்லமை கிடைக்கின்றது.
அந்தக் குழந்தை பிறந்தபின் உங்கள் துன்பத்தைப் போக்கும். நீங்கள் பேரின்பத்தைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.
பல இன்னல்கள் பட்ட குடும்பங்களில் பார்தோம் என்றால் அந்தக் குடும்பங்களில் ரொம்பத் தரித்திரத்திலும் சிரமத்திலும் இருப்பார்கள்.
பல நோய்வாய்ப்பட்டுப் பல இன்னல்கள் கொண்டு பல தரித்திரத்தில் வாழப்படும் போது இதையெல்லாம் மறந்துவிட்டு கருவுற்ற தாய்
1.தான் “என்றைக்கு நல்லதைப் பெறப் போகிறோம்… என்று ஏங்கித் தவிக்கின்றதோ”
2.அந்தச் சிரமமான காலங்களில் தாய் தான் எப்படியும் மீளவேண்டும் என்ற உணர்வினை அது சிந்தித்து
3.ஞானிகளையோ தன்னைக் காக்கும் உணர்வு கொண்ட ஞானத்தின் உணர்வுகளை நுகர்ந்தது என்றால்
4.அந்தக் கருவில் வளரும் குழந்தைக்கும் அந்த நிலைகள் பெற்று
5.அது பிறந்தபின் பெரிய தத்துவ ஞானியாக உலகம் போற்றும் நிலைக்கு வருகின்றான்.
அவனுடைய சந்தர்ப்பம் தரித்திரத்தில் வாழ்ந்தாலும் தாய் பல சிரமங்களிலிருந்து மீளவேண்டும் என்ற உணர்வை அது நுகர்ந்ததால் அந்தக் குழந்தை அத்தகைய நிலை பெறுகின்றது.
சில குடும்பங்களில் படிப்பதற்கே வசதி இல்லை என்றாலும் அவன் ஞானத்தின் நிலை கொண்டு அதீத வளர்ச்சி அடைந்திருப்பதை நாம் பார்க்கலாம். இதைப் போன்ற நிலைகள்
1.”அத்தகைய சந்தர்ப்பங்கள் தான்”
2.அந்த நேரத்தில் நாம் “நுகரும் உணர்வுகள்” தான்
3.நம்மை உருமாற்றுகின்றது வாழ வைக்கின்றது.
ஆனாலும்
1.அருள் மகரிஷியின் உணர்வு கொண்டு
2.நாம் எந்தச் சந்தர்ப்பத்தையும் உருமாற்றக் கூடிய சக்தி பெற்றவர்கள் என்பதை
3.உணர்தல் வேண்டும்.
சந்தர்ப்பத்தால் பகைமை கொண்ட உணர்வுகளையோ நோய்வாய்ப்படும் உணர்வுகளையோ தீமை செய்யும் உணர்வுகளையோ நுகர்ந்து விட்டால் உடனே நாம் என்ன செய்ய வேண்டும்…?
அடுத்த கணமே அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்து அந்தச் சந்தர்ப்பத்தால் வந்த தீமைகளை அகற்றிடல் வேண்டும். ஏனென்றால் ஆறாவது அறிவு கொண்ட நாம் நல்லதை உருவாக்கும் பண்பு பெற்றவர்கள் என்று உணர்தல் வேண்டும்.
1.நாம் இதைச் செய்யத் தொடங்கினால்
2.நமக்குள் தீமைகள் வராது தடுக்கலாம்.
3.இதைத்தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்பது.
அதே சமயத்தில் உங்களுக்குள் உபதேசத்தின் உணர்வின் நினைவுகள் பதிவானால்தான் அது செயல் முறைக்கு வரும்.
டாக்டருக்குப் பயிற்சிக்குச் செல்பவர்கள் மற்ற கற்றுணர்ந்த டாக்டர்கள் சொல்லும் கருத்துக்களைப் பின்பற்றி அதன் வழி பெற வேண்டும் என்ற அந்த ஞானத்தைச் செலுத்தினால் உயர்ந்த டாக்டர் ஆகின்றார்.
ஆனால் பயிற்சி செய்யும் நேரத்தில் சிந்தனை இழந்திருந்தால் அவர் டாக்டர் ஆவதற்குப் பதில் சோர்வின் தன்மை அடைந்து அவர் வைத்தியம் பார்த்தாலும் அதனால் பிறருக்குத் தீமையே உருவாகும்.
கல்வி கற்கும் நிலையும் இதே போலத்தான். எதைப் பெறவேண்டும் என்று குறிக்கோள் வைத்துச் செலுத்துகின்றோமோ அதன் வழி அங்கே வழி செய்கின்றது.
ஆகவே உங்கள் வாழ்க்கையில் அருள் ஞானத்தின் உணர்வைப் பதிவாக்கப்படும் போது
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களை வாழவைக்கும்
2.தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும்
3.பொருளறிந்து செயல்படும் சக்தியும் நீங்கள் பெற முடியும்.
4.பேரின்பத்தை இந்த வாழ்க்கையில் நீங்கள் பெற முடியும்.
தியானம் செய்பவர்கள் மிக முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது
மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).
உதாரணமாக இங்கே தியான மண்டபம் இருக்கிறது என்றால் அடிக்கடி இதில் குப்பைகளும் தூசிகளும் வரத்தான் செய்கின்றது அதை உடனுக்குடன் தூய்மைப்படுத்தித் துடைத்தால் தான் மண்டபம் தூய்மையாக இருக்கும்.
அது போன்று நம்முடைய உடலில் ஏற்கனவே பதிவான அழுக்குகள் எத்தனையோ உண்டு.
1.நம் உடலில் உள்ள அணுக்கள் அதனதன் உணவுக்காக ஏங்கும் பொழுது
2.அந்த மணம் குவிந்து அதைச் சுவாசிக்கும் பொழுது அத்தகைய குணங்களே நமக்குள் வரும்.
தியானம் செய்கின்றேன் எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை… என்னால் தியானிக்க முடியவில்லை என்ற நிலையை எண்ணாது
1.எப்படியும் அருள் ஒளியை நான் பெறுவேன்…
2.வலு கொண்டு நான் தியானிப்பேன்…
3.தியானித்து அருள் சக்தியை எனக்குள் சேர்ப்பேன்… என்று
4.வலுக்கட்டாயமாகத் தனக்குள் உள் செலுத்திக் கொண்டே வர வேண்டும்.
எப்படி இந்தத் தியான மண்டபத்தை அடிக்கடி தூய்மைப்படுத்துகின்றோமோ அதைப் போல நாம் திரும்பத் திரும்ப எண்ணி அருள் சக்திகளைச் சேர்த்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
காரணம்… நமது வாழ்க்கையில் அன்பும் பண்பும் பரிவும் கொண்டு தான் வாழுகிறோம். பிறர் வேதனைப்படுவதைப் பார்த்து அவர்களைப் பண்புடன் அணுகிக் கேட்டறியும் போது அவர்படும் வேதனைகளை நாம் நுகர்ந்தறிந்தாலும் நம் உடலில் அவை “அணுக்கருக்களாக…” மாறி விடுகின்றது.
குடும்பத்திற்குத் தேவையான செல்வத்தையும் சொத்தையும் சேர்த்தோமே… நோயினால் உடலை விட்டுப் பிரியப் போகிறோமே… என்ற ஏக்கத்துடன் அவர்கள் கடைசியில் வாழ்ந்தாலும் அவரின் உணர்வைக் கேட்டறிந்த நமக்குள் அந்த அணுவின் தன்மை வளர்ந்திருந்தால் அவர் இறந்தால் அந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்துவிடும்.
அவர் வேதனைப்பட்ட உணர்வுகள் அனைத்தும் நமக்குள் அணுக்களாகத் தோன்றி மன வேதனையைக் கொடுக்கும் நிலையாக மாறிவிடும்.
அதே சமயத்தில் அந்த ஆன்மா நம் உடலுக்குள் இருந்து மீண்டும் மீண்டும் அதே வேதனையான உணர்வை உணவாக எடுத்து அதன் இனங்களை நம் உடலிலே பெருக்கிவிடும்.
1.ஞானிகளைப் பற்றி இங்கே யாம் (ஞானகுரு) சொல்லும் போது நல்ல உணர்வுகளை நுகர விடாது அது தடுக்கும்.
2.தடைப்படுத்தும் நிலை வரும் பொழுது உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது.
3.தியானத்தில் அமர்ந்தாலும் எழுந்து ஓட வைக்கும்.
காரணம் அதனுடைய விஷத்தன்மை வீரியம் கொண்டதாக இருப்பதால் அதன் படியே வெளிப்படுத்தும். நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அதை அதை அடக்கப் பழகுவதே யாம் சொல்லும் தியானம்.
அதை நாம் அடக்கப் பழகவில்லை என்றால் அதன் வழியே நம்மை அழைத்துச் சென்று மீண்டும் இன்னொரு உடல் பெறும் நிலையாகப் பெறச் செய்துவிடும்.
உடல் பெறும் உணர்வுகள் இருந்தாலும் மன வேதனை வரும் பொழுது மன நோயாக வருகின்றது. பின் உடல் நோயாக மாறி மனித உடலையே மாற்றி அமைக்கும் சக்தியாக வந்து விடுகிறது.
இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபடுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?
எத்தகைய நிலைகள் இருந்தாலும் சரி… நல்லதை எண்ண விடவில்லை என்றாலும்
1.கண்களைத் திறந்து நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்
2.அந்த அருள் ஒளி எனக்குள் படர வேண்டும்
3.இருள் மறைய வேண்டும் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும்
4.மெய் ஒளியுடன் ஒன்றிட வேண்டும் என்று இதை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
1.என் உடலில் உள்ள ஆத்மாக்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று…
2.அது அடங்கி… உயர்ந்த நிலைகளை என்னுள் இருந்து பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குங்கள்.
இதனால் நம் உடலில் உள்ள அந்த ஆன்மாக்களுக்கும் ஒரு நற்பயன் ஏற்படுகின்றது. நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் ஒளியாக மாறும் சந்தர்ப்பம் உருவாகின்றது.
இதை மறவாது நாம் செய்து பழக வேண்டும்.
தியானத்தில் உட்கார்ந்தால் என்னால் முடியவில்லை… வெறுப்பாக இருக்கின்றது… எங்கெங்கோ நினைவுகள் போகின்றது…! என்று நிறையப் பேர் சொல்வார்கள்.
தியானத்தில் கண்ணை மூடிய பின் இப்படிப் பல உணர்வு வந்தால் உடனே கண்ணைத் திறந்து விண்ணிலே நினைவைச் செலுத்தி மகரிஷிகளை எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால்
1.தன்னிச்சையாகவே நம் கண்களை மூட வைக்கும்.
2.நம் நினைவுகளைத் தன்னிச்சையாகத் துருவ நட்சத்திரத்திற்கு அழைத்துச் செல்லும்.
3.அப்பொழுது துருவ மகரிஷியின் உணர்வுகள் துருவ நட்சத்திரத்தின் வழி வருவதை
3.துருவப் பகுதி வழியாகப் பூமிக்குள் வருவதை நாம் நுகரும் பருவத்தைப் பெறுகின்றோம்.
தொடர்ந்து இதை வழிப்படுத்தி வாருங்கள்… நல்லதாக அமையும்.
விஞ்ஞான வளர்ச்சியின் தவறான செயல்கள் – ஈஸ்வரபட்டர்
அன்றைய ஞானிகள் காட்டிய “ஞானச் சித்தின் செயல் வளர்ப்பு…” வளர்ந்துவிட்ட மனித ஆத்மாவின் சரீர வளர்ச்சியின் பெருக்கத்தால் இன்றளவும் வளரவில்லை. உயர் ஞானத்தின் செழிப்பைக் காண முடியவிலை.
இன்று பக்தி மார்க்கம்… மத வழி போதனை… விஞ்ஞானச் செயல் எல்லாமே செயற்கை உருவாகத் தான்… செயற்கை உல்லாசப் பிடிப்பு வாழ்க்கையுடன் ஒன்றியதாகத் தான் உள்ளது.
இவாத்மாவின் உண்மை நிலை அறியாத தன்மையில்… உலக நிலையே மாசு கொண்ட நிலையில்… எண்ணத்தின் ஈர்ப்பு வட்டமே பேராசைப் பிடியில் சிக்குண்ட நிலையில் உள்ளது.
இப்பூமியில் உள்ள சத்து நிலையையே செயற்கையின் செயலுக்காக வளர்ப்பின் தன்மை குணங்களை இம்மனித விஞ்ஞானம்… தொடர்ந்து பிரித்துக் கொண்டே உள்ளது.
சூரிய இயக்கத்தின் நுண்ணிய கதிரியக்க வலுவைப் பிரித்து அதை வைத்துப் பல பல வேலைகளைச் செய்கிறார்கள். இப்பூமியில் சில பாகங்களில்
1.இவ்வரசியல் நாட்டுப் பற்றின் விஞ்ஞான வேவு செயலுக்காக
2.ஒருவரை ஒருவர் அழிக்க அந்தச் சூரிய அலைக் கதிரின் சக்தியைக் கொண்டே
3.செயற்கை நிலையில் நில அதிர்வுகளையும் எரிமலை வெடிப்புகளையும்
4.இன்றைய விஞ்ஞானச் செயல் செய்விக்கின்றதப்பா…!
பிற கோளங்களுக்கு ஏவப்படும் ஏவுகணையில் வீரியமான கதிரியக்கச் சக்திகளைச் சேமிக்கப்பட்டு அனுப்புவதால் அதன் இயக்கத்தின் அலை வீச்சின் தொடராகத் தான் பூமியில் இன்றைய மனிதனின் விஞ்ஞானச் செயல் செல்கின்றது.
இத்தகைய தொடரினால் மனித உணர்வின் எண்ணங்கள் அனைத்தும் சிதறுண்ட குண வட்டங்களாக இன்றைய பூமி ஆத்மாக்களின் தன்மை உள்ளது.
இதன் இயக்க வட்டத்திலிருந்து தன் ஞானத்தால் ஆத்ம வலுவைப் பெருக்கிக் கொண்டால் இவ்வாத்ம வலுவானது எவ்வீர்ப்புப் பிடியிலும் சிக்காமல் இருக்கலாம்.
ஞான ஈர்ப்புத் தொடர்பில் பெற்ற ஆத்ம பலத்தைக் கொண்டு இப்பூமியின் நிலையே மற்றெந்த செயல் பிடிப்போ எவற்றிலுமே இவ்வாத்மா சிக்காமல் உயர் சக்தி கொண்ட ரிஷி அலையுடன் தொடர்பு கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல்…
1.இந்தச் சூரியக் குடும்பமல்லா மற்ற சூரியக் குடும்ப அலைத் தொடரிலும்
2.நம்மைக் காட்டிலும் ஞான வலுக் கொண்ட ஆத்மாக்களின் மனித வாழ்க்கை முறையையும் காண முடியும்.
மேலும் ஆதிசக்தியின் சக்தி வார்ப்பின் தொடர் அனைத்தின் கூட்டுச் சேர்க்கை வார்ப்பையும்… மாற்றத் தன்மையையும் வளர்த்துக் கொள்ளும் சக்தி வலு அனைத்தையும் காண முடியும்.
பிறவா வரம் என்பது… ஞான வார்ப்பின்… சித்து நிலை வளர்ப்பின் வளர்ப்பை வளர வைக்கும் அந்த வலு சக்தி தான் “பிறவா நிலை…!
ஆகவே
1.மனிதனின் உண்மையை மனிதனே அறியாமல்
2.தன்னைத் தானே செயற்கைக்கு அடகு வைத்து
3.மீளமுடியா வட்டிச் சுமையாக மூழ்கி விடும் தன் நிலை இழக்கின்ற இன்றைய கலி காலத்திலிருந்து
4.இந்த உடலின் உண்மைத் தத்துவ உயர்வை உணரும் ஆத்மாவாக நீங்கள் ஒவ்வொருவரும் ஆகுங்கள்.
மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டிய முறையைப் பற்றிச் சிறிது பார்ப்போம்
கண்களின் நினைவினைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து பூமியின் வட கிழக்குப் பகுதியில் நினைவினை விண்ணிலே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்த வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியின் வழியாக ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.
“கிரகணம்” பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். உதாரணமாக சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வந்து முழுவதும் மறைத்தால் அந்த நேரத்தில் சூரியனின் சக்தி முழுவதும் தடைப்படுத்தப்படுகின்றது.
ஆனால் சந்திரனுக்கோ பூமிக்கு வந்து சேரும் சூரியனின் அனைத்து சக்திகளையும் பெற அந்தச் சந்தர்ப்பம் ஏதுவாகின்றது.
அதே சமயத்தில் பூமிக்கோ சூரியனின் சக்திக்குப் பதிலாகச் சந்திரனின் சக்தியை நுகர வேண்டிய கட்டாயமாகின்றது.
ஏனென்றால் இவை ஒரே நேர்கோட்டில் வருவதால் இத்தகைய நிலை ஏற்படுகின்றது. அதிக பலன் இதிலே சந்திரனுக்குத்தான்.
இதைப் போன்று தான் துருவ நட்சத்திரத்திலிருந்து உணர்வலைகள் வெளி வரும்போது அதை நாம் இடைவெளியில் “கிரகணம்” போன்று பிடிக்க வேண்டும்.
இதைத்தான் தடுத்து நிறுத்துவது என்பது. அப்பொழுது நம் ஆன்மாவில் உள்ள மற்ற உணர்வலைகளுக்கு ஆகாரம் கிடைக்காது துருவ நட்சத்திர உணர்வே ஆகாரம் ஆகின்றது.
ஆகவே இவ்வாறு தடுத்து நிறுத்தும்போது… தியானத்தில் சிலர் எனக்கு..
1.ஒளி அலைகள் தெரிந்தது
2.வெளிச்சமாக இருந்தது
3.புருவ மத்தியில் குறு..குறு.. என்று இருந்தது
4.சூடாகித் தலை பாரமானது
5.மிதப்பது போல் இருந்தது
6.நல்ல நறுமணங்கள் வந்தது
7.உமிழ் நீர் சுவையாகச் சுரந்தது
8.இனம் புரியாத மகிழ்ச்சியாக இருந்தது என்றெல்லாம் சொல்வார்கள்.
அதே போன்று மாறுபட்ட எண்ணம் கொண்ட சிலருக்கு
1.தொண்டை கர.. கர.. என்று ஆகிவிட்டது
2.சிந்தனைகள் ஒரு நிலைப்படுத்த முடியாமல் கட கட என்று எங்கெங்கோ செல்கிறது
3.என்னை உட்காரவே விட மாட்டேன் என்கிறது என்றெல்லாம் சொல்வார்கள்.
தடுக்கவும் இல்லை… நிறுத்தவும் இல்லை… என்பவர்களுக்கு – ஒரே வார்த்தையில் “அமைதியாக நன்றாக இருந்தது” என்று சொல்லிவிடுவார்கள்.
தன் ஆன்மாவில் உள்ளது மீண்டும் மீண்டும் சர்க்குலேசன் ஆகிக் கொண்டேயிருப்பதால் இவ்வாறு சொல்வார்கள்.
ஆகவே நாம் துருவ நட்சத்துரத்துடன் மோதியே ஆகவேண்டும். அதைத் தடுத்து நிறுத்தினால் தான் அது நமக்குள் வரும். உணர முடியும்.
ஆனாலும் அந்த மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் மேலே சொன்ன (நல்லது கெட்டது) அந்த அத்தனை உணர்வலைகளையும் மறுபடியும் தடுத்து நிறுத்தி விசாரணை செய்ய வேண்டும்.
1.“விசாரணை” என்பது தனக்குத் தானே கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பி தானே உணர்தல் என்று பொருள்.
2.“கேள்வி எழுப்புதல்” என்றால் புருவ மத்தியில் உயிரின் தொடர்பு கொண்டு குரு உபதேசித்ததை எண்ணி மறுபடியும் துருவ நட்சத்திரத்துடன் 1, 10, 100, 100000… கோடி… கோடி… என்று மோதிக் கொண்டேயிருந்தால் பதிலை வாங்க முடியும்.
3.“உணர்தல்” என்பது ஒரு வருடத்திலோ ஒரு மாதத்திலோ ஒரே நாளிலோ ஒரு நிமிடத்திலோ வரும். அதனின் வளர்ச்சி ஆக ஆக கணப்பொழுதில் (சுவிட்சைப் போட்டவுடன் லைட் எரிவது போல்) உணர முடியும்.
இந்த உணர்தல் வந்துவிட்டால் நாம் உணர்வது அனைத்துமே அல்லது அப்பொழுது நாம் “மகரிஷிகளுடன் பேசிக் கொண்டிருக்கின்றோம்” என்று அர்த்தம்.
நோய் நீக்கும் மூச்சுப் பயிற்சிகள்
நேராக நின்று கைகளை மேலே தூக்கிப் பின் கீழே இறக்கிச் சாதாரணமாகத் தொங்க விட்டு உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்ற எண்ணங்களை எண்ணிச் சுவாசத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
1.இது தீயவினைகளைத் தடுக்கவும்
2.கலக்க உணர்வுகள் வராது தடுக்கவும் உதவும்.
மகரிஷிகளை எண்ணி இதனின் சுவாசத்தை எடுக்க எடுக்க இதனின் உணர்வுகள் வளர வளர… நோயை உருவாக்கும் அணுக்கள் தணியத் தொடங்கும்.
1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்திகளையும்
2.துருவ மகரிஷியின் அருள் சக்திகளையும்
2.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளையும்
4.இந்த மூன்று நிலைகளையும் எண்ணி
5.அந்தச் சுவாசத்தை உடலுக்குள் அடுக்கடுக்காகக் கொண்டு வரவேண்டும்.
இடுப்பிலே பிடிப்பு இருந்தால்… கையை மேலே உயர்த்தி மாறு கால் மாறு கை தொட்டுவிட்டு… மீண்டும் மேலே கொண்டு வந்து சமப்படுத்தி அந்த மகரிஷிகளின் அருள் சகதி பெற வேண்டும் என்று சுவாசத்தை இழுத்து உள் செலுத்த வேண்டும்.
இப்படிச் செய்தால் கை கால் குடைச்சலோ… உடலில் உள்ள மற்ற பிடிப்புகளோ எல்லாம் அகன்றுவிடும். வாத நோய்கள் குறையத் தொடங்கும்.
வாத நோயால் கை கால்களைச் சீராக இயக்க முடியவில்லை என்றாலும் கூட
1.கீழே அமர்ந்து கைகளை உயர்த்தி இந்தப் பயிற்சியைக் கூடுமானவரை செய்ய முற்படுங்கள்.
2.ஒரு நான்கைந்து முறை செய்ய முற்படுங்கள்.
அகஸ்திய மாமகரிஷிகளை எண்ணி அந்தச் சுவாசத்தை எடுத்து உடல் முழுவதும் அந்த உணர்வுகளை உள் செலுத்துங்கள். அந்த மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்ற சுவாசத்தை எடுத்து எடுத்து அந்த மூச்சலைகளை உடல் முழுவதும் பரவச் செய்யுங்கள.
இரத்தக் கொதிப்பினாலோ வாதத்தாலோ கை கால்கள் முடங்கி இருந்தால் தரையிலே சீராகப் படுங்கள். கூடுமான வரையிலும் அந்த மகரிஷிகளை எண்ணிச் சுவாசித்து உங்கள் கையையும் காலையும் தூக்கிப் பாருங்கள்… மெதுவாக…!
சிறிது நேரம் பயிற்சி செய்துவிட்டு மறுபடியும் அந்த மாதிரி சக்தி பெற வேண்டும் என்று அந்த மூச்சுகளை எடுத்து உடல் முழுவதும் பரவச் செய்யுங்கள்.
ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி…
1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து
2.இரத்தக்கொதிப்பு நீங்கி நரம்பு மண்டலங்களில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் நீங்கி
3.உடல் நலம் பெற வேண்டும் என்ற நினைவுகளைக் கொண்டு வாருங்கள்.
இப்படி எண்ணி விட்டு மீண்டும் கை கால்களைத் தூக்கிப் பாருங்கள். மேலே தூக்கி பின் கீழே இறக்கிப் பாருங்கள்.
மறுபடி நிமிர்ந்து உட்கார்ந்த பின் உடலில் அந்த இயக்கங்கள் சீராக வருவதற்குண்டான நிலைகள் ஏற்படுகின்றதா…? என்று முயற்சி செய்து பாருங்கள்.
அதிகமாகத் துருவ நட்சத்திரத்தை எண்ணி மூச்சுகளை இழுத்து இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து பாருங்கள். எத்தகைய நோயாக இருப்பினும்
1.நரம்பு மண்டலங்களுக்கு அந்த மகரிஷியின் அருள் உணர்வினை
2.இயக்க ஓட்டங்களாகக் கொடுத்துப் பயிற்சி செய்து வந்தால் எல்லாம் சீராகும்.
முடக்குவாதம் இருந்தாலும் இந்தப் பயிற்சிகளைச் சிறுகச் சிறுக செய்து வரலாம்.
நரம்பு மண்டலங்களுக்கு இத்தகைய பயிற்சி மூலம் வேலையைக் கொடுத்து அந்த மகரிஷிகள் சக்திகளை உடலில் ஓட்டங்களாக கொடுக்கப்படும் பொழுது ஓரளவுக்கு உடல் வலிமை பெறுவதற்கும் உடல் முழுவதும் நல்ல சக்திகளைப் பரப்புவதற்கும் தீமையான உணர்வின் அணுக்களை மாற்றியமைக்கவும் இது உதவியாக இருக்கும்.
எந்த அளவிற்கு அதை எடுத்து நமக்குள் சேர்க்கின்றோமோ அந்த அளவுக்குத் தீமையை உருவாக்கும் சக்திகளை மாற்றி அமைக்க முடியும்.
1.அகஸ்தியமாமகரிஷிகளை எண்ணி இந்தப் பயிற்சி செய்யும் பொழுது
2.அவர் பெற்ற மூலிகை மணங்களும் பச்சிலை வாசனைகளும் நிச்சயம் கிடைக்கும்.
துருவ மகரிஷியையும் துருவ நட்சத்திரத்தையும் எண்ணும் போது அது உடலில் மிகவும் வலிமை மிக்கதாக சக்தி வாய்ந்ததாக மாறும். மனச் சோர்வையும் மனச் சஞ்சலத்தையும் நீக்கக்கூடிய சக்தி கிடைக்கும்.
கூடுமானவரை வயிற்றில் ஆகாரம் இல்லாத பொழுது இந்த முயற்சிகளை எடுங்கள். நல்ல பலனைத் தரும்.
அதே போல் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு ஞாபகமறதி இருந்தாலும் இந்தப் பயிற்சிகளைச் செய்தால் நல்ல ஞாபக சக்தி கிடைக்கும். கல்வி சீராக இருக்கும்… மன வலிமை கிடைக்கும்.
அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணினால் உங்கள் எண்ணச் சிதறல்களை மாற்றி உங்கள் எண்ணம் வலு பெறும்.
ஆஸ்த்மாவோ சளித் தொல்லைகளோ இருந்தாலும் அதுவும் தணியும்.
தொடர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்க்கச் சேர்க்க
1.உயிருடன் ஒன்றிடும் உணர்வுகள் ஒளியாகும்
2.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து பிறவியில்லா நிலை அடைய முடியும்.
நாம் அடைய வேண்டிய அஷ்டமாசித்து… ஞானச் சித்து – ஈஸ்வரபட்டர்
இப்பூமியின் பிடிப்பு வாழ்க்கையில் சத்தெடுத்து இவ்வுடல் பிம்ப ஆத்மாவிற்குச் சித்தாக்கி ஒளி பெறும் வளர்நிலையாகி வளரின்பம் நாம் பெற முடியும். இருந்தாலும்…
1.இந்த வாழ்க்கையில் நாம் எடுக்கும் சத்தானது
2.ஞான வளர்ப்பு கொண்ட நிலை பெற்றால் தான்
3.சித்து நிலையைப் பெற முடியும்.
மனித எண்ண ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்த அன்றைய அரசர்கள் காலத்தில் சித்து நிலை பெற்றவர்களின் செயல்கள் எப்படி இருந்தது..?
தான் பெற்ற சித்தைக் கொண்டு அரசைக் காக்கவும்… தன் குடும்பச் சுழற்சியின் ஈர்ப்புப் பிடியிலும்… தன் சித்து நிலையின் சக்தியைச் சிலர் செயல்படுத்தினர். தான் பெற்ற சித்தை இயற்கையை வளர்க்கும் நன்மைக்குப் பயன்படுத்தவில்லை.
இயற்கை என்பது என்ன…?
அதாவது… இப்பூமியின் வளர் நிலைத் தொடர் அணு வளர்ச்சியின் செயலில் எல்லாம் அணுவுக்குள் அணுவாக… உயர் அலைத் தொடரில் சூரிய அலையின் அலைத் தொடர்புடன்.. தன் ஆத்ம அலையைச் செயல்படுத்தவில்லை.
மாறாக… தன் ஜீவ சரீர இயக்கத்திலேயே சித்துக்களைச் செயல்படுத்தினர்.
1.உடலைக் காக்கும் சித்துக்களையும்
2.அதற்குண்டான ஞானங்களையும் தான் செயல்படுத்தினர்.
இன்றளவும் அந்த ஆத்ம உணர்வு ஞானச் சுழற்சியில் தான் அத்தகைய சித்து நிலை கொண்டோரின் நிலையுள்ளது. உயர் ஞானச் சித்தை எட்டிப் பார்க்கும் நிலை இல்லை.
ஏனென்றால்…
1.காரிய சித்துடனே தன் ஞானச் சித்தை இவ்வீர்ப்புப் பிடியில் சுழல விடாமல்
2.அணுவுக்குள் அணுவாக இவ்வுலக வளர்ப்பு வளர்ச்சி அணுவுடனும்
3.இவ்வுலகையே வளர்க்கும் சூரியக் குடும்பமான நாற்பத்தி எட்டு மண்டலத் தொடர்பிலும்
4.இந்நாற்பத்தி எட்டின் வளர்ப்பான வளரும் பன்னிரெண்டு கோள்களிலும்
5.ஒவ்வொன்றின் தொடர் வளர்ப்பிலும் தன் காரிய சித்து ஆத்ம செயலைச் செயல்படுத்தி
6.இதைப் போன்று சுழலுகின்ற ஏனைய எண்ணிலடங்காச் சூரியக் குடும்பங்களில் செலுத்தப்பட்டு
7.அங்கிருக்கும் பல கோளங்களின் உண்மையையும் இந்த ஞானத்தால் பெற்று
8.காரிய சித்தை மேல் நோக்கிய ஈர்ப்பு வட்டத்தில் (இது முக்கியம்) இவ்வுயிராத்மாவை வளர விட வேண்டும்.
சித்தான நிலையில் தான் பெற்ற வளர்ப்பு நிலையை எவ் ஈர்ப்புப் பிடியிலும் நிலைக்கச் செய்யும் செயலாக இக்காரியச் சித்தை நிலை நிறுத்தக் கூடாது.
அதைப் பெறுவதற்காக வேண்டி.. குடும்பத்தை விட்டுவிட்டோ… காட்டிற்குச் சென்றோ… துறவு பூண்டோ… செல்லாமல் இந்தப் பூமியின் வாழ்க்கைப் பிடியின் சத்தெடுக்கும் வழியிலேயே தான் அந்த ஆத்ம சித்தைப் பெறவேண்டும்.
தினசரி வாழ்க்கையில் ஏற்படும் தொடர் நிலைகள் ஒவ்வொன்றிலும்
1.தீயவை… நல்லவை… என்ற தன் ஈர்ப்பின் எண்ணத்தை
2.துவேஷத்திற்கோ புகழுக்கோ செலுத்தாமல்
3.முள்ளை (வேலி முள்) நாம் பாதுகாப்பிற்கு வேலியாக உபயோகித்துச் செயல்படுத்துவதைப் போன்று இருத்தல் வேண்டும்.
அதாவது…
1.தீயவை என்ற நிலையிலிருந்து… அதிலிருந்தே…
2.நாம் அறிந்த முறை கொண்டு… மீண்டும் அதில் போய்ச் சிக்காமல்
3.அதன் செயலின் உண்மையை உணர்ந்து
4.நமக்குப் பாதுகாப்பு வேலியாக – அதை நன்மைப்படுத்தும் பக்குவத்தை நாம் பெறல் வேண்டும்.
இனிமை என்ற நிலையிலேயே இவ்வெண்ணத்தின் செயலைச் சுழலவிடாமல்… “செயல்படும் ஒவ்வொரு செயலையுமே… இனிமை ஆனதாக…” இவ்வாத்ம அலை பெறகூடிய தன்மைக்குத் தன் ஞானம் செல்ல வேண்டும்
1,இனிமைக்காக ஏங்கும் ஏக்கத்தின் வார்ப்பாக இவ்வுடலின் அமில உராய்வு இல்லாமல்
2.இனிமையை வளர்க்கும் அமிலமாக
3.இவ்வெண்ணத்தின் உணர்வைச் சுவை கொண்ட சத்தாக இப்பூமி ஈர்ப்பு வாழ்க்கையிலிருந்து சத்தெடுத்து
4.ஞானச் சித்தை வளர்க்க வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
மகரிஷிகள் விண்ணுலகம் சென்றார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் எடுத்துக் கொண்ட நிலையை நம் குருநாதர் பெற்றார். அவர் காட்டிய வழியில் என் அம்மா அப்பாவையும் விண் செலுத்தும்படிச் சொன்னார்.
அது வரைக்கும் எனக்கு அந்தச் சக்தி கிடைக்கவில்லை. என் அம்மா அப்பா இறந்த பிற்பாடு அந்த உடலின் நிலைகளை நீ எப்படி எப்படிச் செய்ய வேண்டும்…? என்னைப் பக்குவப்படுத்தினார்.
என் அப்பா இராஜபாளையத்தில் இருந்தார். நான் அங்கே போனவுடனே நீ சீக்கிரம் வீட்டை விட்டுப் புறப்படு என்றார். ஏன் இப்படி குருநாதர் சொல்கிறார்…! என்று எனக்கு அர்த்தமாகவில்லை.
ஏனென்றால் என் அப்பா நன்றாக உடல் நலத்துடன் தான் இருந்தார்.
1.“நீ சீக்கிரம் புறப்படு…” என்று சொல்லிக் கொண்டிருந்தார் குருநாதர்.
2.நீ ஊருக்கெல்லாம் சொல்ல வேண்டும்
3.வீட்டில் வந்து நீ சொந்தமாக இருக்க வரவில்லை “நீ நட…” என்கிறார் குருநாதர்.
கிளம்பி வந்துவிட்டேன். அப்புறம் உடலை விட்டுப் பிரிந்தார் என்று எனக்குத் தகவல் வந்தது.
உன் அப்பா உன் மேல் பாசமாக இருந்தார். நீ அங்கே இருந்தாய் என்றால் அந்த உயிரான்மா உடனடியாக உன்னிடம் தான் வரும் என்றார் குருநாதர்.
நான் வீட்டை விட்டுப் புறப்பட்டவுடன் என் அப்பா… எங்கடா.. அந்தச் “சாமியார் பயலை…?” என்று தான் என்னைக் கேட்டிருக்கின்றார். சாமியார் பயல் எல்லாவற்றையும் இந்த மாதிரிச் செய்துவிட்டு எங்கே போனான்…? பைத்தியத்துடன் சேர்ந்து அவனுக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று சொல்லி வேகமாகக் கேட்டுள்ளார்.
ஆகையினால் அவர் அருகில் இருந்திருந்தோம் என்றால் உடலுக்குள் வந்துவிடுவார் என்பதற்காகத்தான் குருநாதர் “எம்மை வீட்டை விட்டு உடனடியாகப் புறப்படு…” என்று சொல்லியுள்ளார்.
நடந்து போகப்படும் பொழுது இதற்கு மத்தியிலே என் அப்பாவின் ஆன்மா வெளியில் வருகின்றது.
அப்பொழுது அது தெரிந்தவுடனே அதற்கு வேண்டியதுகளைச் செய்து அந்த உயிரான்மாவை அங்கேயே உட்கார்ந்து அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று இணைக்கச் செய்தேன்.
உன் ஊருக்குச் சென்று போய்ப் பார்…! என்று குருநாதர் சொன்னார். அப்புறம் அப்பா இறந்தார் என்று சொன்னேன்.
உங்களுக்கு எப்படித் தெரிந்தது என்றார்கள்.
ஆன்மா வெளியில் வந்தது தெரிந்தது என்றேன்.
பழனிக்கு வந்து என் பையன் தண்டபானியைக் கூப்பிட்டு இராஜபாளையம் சென்றேன். என் மனைவி முதலில் அங்கே சென்றது.
உன் அப்பாவின் ஆன்மா உடலை விட்டுப் பிரியும் நேரம் அங்கே இருக்கக்கூடாது. ஏனென்றால் நீ அந்த அளவிற்கு மனப் பக்குவம் பெறவில்லை. ஆகையினால் “நீ விலகி இருப்பது தான் நல்லது” என்றார் குருநாதர்.
இதே மாதிரித்தான் “என் அம்மா உடலை விட்டுப் பிரியும் சமயமும்” நான் அருகில் இல்லை.
என் அம்மா உடல் நலிவுற்றதைப் பார்க்கச் சென்றிருந்தோம்.
அப்பொழுது என் மனைவியிடம் என் அம்மா இரண்டு கோழி முட்டைய வறுத்து வேக வைத்துக் கொஞ்சம் மிளாகய்த் தூளும் உப்பும் வைத்து எனக்குக் கொடு என்று கேட்டது.
அந்த நேரத்தில் என் அம்மாவால் சாப்பிட முடியாது. ஆனாலும் அந்த உணவின் மேல் இருந்த ஆசை விடவில்லை.
குருநாதர் சொன்னார். உங்கள் அம்மாவால் சாப்பிட முடியாது. ஆனால் கோழி முட்டையைப் பிரியமாகச் சாப்பிட்டிருக்கின்றார்கள். இந்தச் சமயத்தில் ஆன்மா பிரிந்தது என்றால் வேறு எங்கும் போகாது.
அதே சமயத்தில்
1.உன் மீது பிரியமாக எண்ணியது
2.உன்னைக் “கடவுளின் அவதாரம்” என்று எண்ணுகிறது என்று சொல்கிறார் குருநாதர்.
ஆனாலும் தாயின் கடைசி ஆசை கோழி முட்டை மீது செல்கிறது. அவர்களை அங்கே விட்டு விடக்கூடாது…! என்று சொல்கிறார்.
அன்றைக்குத் தாரமங்கலத்தில் கூட்டுத் தியான நிகழ்ச்சி என்று ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் கலந்து கொள்வதாகவும் எல்லோருக்கும் தகவல் ஏற்கனவே சொல்லி வைத்திருந்தார்கள்.
அதன்படி நான் அங்கே சென்றுவிட்டேன்.
அங்கே தியானமிருக்கும்போது என் தாயின் ஆன்மா வெளி வருகின்றது. அங்கே இருந்த பலரும் அதைப் பார்த்தார்கள். அந்த ஆன்மாவின் உருவம் தெரிந்தது.
அப்பொழுதே அதற்குண்டான நிலைகளைச் செய்து என் தாயின் உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து பிறவா நிலை என்ற பெரு நிலை பெற வேண்டும் என்று உந்திச் செலுத்தினேன்.
சேலத்தில் சொல்லி வைத்திருந்தேன். ஏதாவது தந்தி வந்தால் உடனடியாகத் தாரமங்கலத்திற்குத் தகவல் கொடுக்கும்படி சொல்லியிருந்தேன்.
இப்படி என் தாய் தந்தை இரண்டு பேரும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்த பிற்பாடு தான்
1.அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து சில நுண்ணிய அலைகளை நான் பெற முடிந்தது.
2.அதை எடுத்து எல்லோருக்கும் என்னால் கொடுக்க முடிந்தது.
3.இல்லாமல் போனால் இந்த அளவிற்குத் தைரியமாக நான் உங்களிடம் சொல்ல முடியாது.
என் தாய் கடவுளாக தெய்வமாக இருந்து என்னைக் காத்தது. குருவாகவும் இருந்து நல் வழி காட்டியது.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதையெல்லாம் தெளிவாக எடுத்து உரைத்ததால் அதன் வழியில் தாய் தந்தையின் உயிரான்மாக்களை விண் செலுத்த முடிந்தது.
1.அவர்களை விண்ணுக்குச் செலுத்திய பின்பு தான்
2.நான் அந்தச் சக்திகளை அதிகமாகப் பெற முடிந்தது.
மகரிஷிகளுடன் இணைந்து நீங்கள் வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்
மீண்டும் மீண்டும் யாம் (ஞானகுரு) ஞாபகப்படுத்துவது… யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பங்கள் தான் அந்த நிலையை உருவாக்கி விடுன்றது.
1.அந்தச் சந்தர்ப்ப சூழ்நிலையில் இருந்து விடுபடவே
2.மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களை அடிக்கடி அடிக்கடி பெறச் செய்கின்றோம்.
இதை உறுதுணையாகக் கொண்டு வாழ்க்கையில் அறியாத வந்த தீமைகளை அகற்றிட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.
உலகம் காக்கப்பட வேண்டும்… உலக மக்கள் காக்கப்பட வேண்டும். வரும் எதிர்காலக் குழந்தைகள் அருள் ஞானக் குழந்தைகளாக வளர வேண்டும். உலகைக் காத்திடும் உணர்வாக விளைய வேண்டும் என்று அந்தந்தக் குடும்பத்தில் இதைக் கடைப்பிடியுங்கள். விஜயதசமி… கல்கி என்ற பத்தாவது நிலையை அடையுங்கள்.
ஒவ்வொரு மாதம் தசமி என்று இருப்பினும் சதுர்த்தி என்று இருப்பினும் அதை எல்லாம் தீமைகளை அகற்றும் நாளாக மாற்றி ஒவ்வொரு மாதத்திலும் இதைச் சீராகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அந்த அருள் ஞானிகள் காட்டிய வழிகளில் முழுமையான நிலைகள் கொண்டு
1.உயிருடன் ஒன்றி நாம் வாழ்வோம்
2.இந்த உணர்வுகளை வலுப் பெறச் செய்து இந்த வாழ்க்கையை வாழ்வோம்… வளர்வோம்.
3.யாரையும் பகைமை கொண்டு பார்க்க வேண்டாம்
4.பகைமைகளைத் தனக்குள் புக விடவும் வேண்டாம்.
மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு நாம் இணைந்திடும் உணர்வை வளர்ப்போம்… உலகைக் காத்திடும் நிலைகள் பெறுவோம்.
கருவில் வளர்ந்து வரக்கூடிய குழந்தைகள் தான் உலகில் வரும் நஞ்சினை அடக்கி உயர்ந்த ஒளியின் சரீரம் பெறும் தகுதியை இனி பெறுவார்கள்.
ஒவ்வொருவரும் நீங்கள் இதைச் செய்யுங்கள் உலகைக் காத்திடுங்கள்… உங்களைக் காத்திடுங்கள். பிறவா நிலை என்ற நிலையை அடையுங்கள். பிறவி இல்லா நிலை அடைந்த மகரிஷிகளின் உணர்வின் தன்மையை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
என்றென்றும் உயிருடன் ஒன்றி வாழும் அந்த மகரிஷிகளுடன் இணைந்து வாழ வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன். அந்த நிலையை நிச்சயம் நீங்கள் பெறுவீர்கள் என்று பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு).
சப்தரிஷிகளின் சித்து நிலை – ஈஸ்வரபட்டர்
கூடு விட்டுக் கூடு பாயும் நிலை என்பது…
1.தன் நிலை வளராத
2.ஆத்ம பலமின்றி
3.ஆரம்ப ஆவி நிலைத் தொடர்பு நிலையில் பெற்ற
4.பக்தி வாய்ந்த… மந்திர… தந்திர.. செயல் கொண்ட
5.உடலின் ஆத்மாவைக் காட்டிலும் பிறிதொரு சக்தி வாய்ந்த வலுவான இயக்கத்தின் செயலாகும்.
சக்தி வாய்ந்த… என்பது அதற்கு மேல் வலுக் கொண்ட ஆத்ம அலையின் தொடரின் ஈர்ப்புப் பிடி… ஞானச் சித்து பெற்ற… இயக்க வழிச் சித்தில்தான்… இக்கூடு விட்டுக் கூடு பாயும் செயல் செயல்படுவது.
அதாவது தன் சரீர இயக்கத்தைச் செயல்படாத வண்ணம் அந்தச் சரீரத்தை ஓரிடத்தில் நிறுத்தி விட்டுத் தன் ஆத்ம உயிரைப் பிறிதொரு சரீரத்தின் பாலோ.. மற்ற ஜீவ ஜெந்துக்களின் பாலோ செலுத்தி… அதற்குள் நின்று இயக்குவது.
அப்படி இயக்கப்படும் தன்மையில் சிறிது இசகு பிசகான நிலை கொண்டு மாறுபடும் தன்மை ஏற்பட்டாலும் மீண்டும் சரீர இயக்கத்திற்கு வந்து செயல்பட முடியாத நிலை ஆகிவிடும்.
அது மட்டுமல்ல…!
1.இப்படிப் பிரிந்த ஆத்ம உயிர் வேறு ஒரு பிடிப்பலையில் சிக்கிச் செயல்படுத்தப்பட்ட ஈர்ப்புப் பிடியின் செயலினால்
2.மீண்டும் சரீர நிலையும்… பிறப்பும் அற்று ஆத்ம வளர்ச்சியே இல்லா நிலையாக
3.தான் வளர முடியாத வேறு ஒரு ஈனமான விஷம் கொண்ட ஈர்ப்பு நிலைக்குச் சென்று விடுகின்றது.
ஆனால் சப்தரிஷிகளின் வளர் சித்து நிலை எல்லாம் எப்படிப்பட்டது…?
தன்னைத் தான் உணர்ந்து… இச்சரீர பிம்பச் சேர்க்கை அமிலக் கூட்டின் வலுவிலிருந்து ஆத்ம வலுவைக் கூட்டி… இவ்வாத்மாவைச் சரீர பிம்பத்திற்கு மேல் சக்தி வாய்ந்த செயலாகச் செயல் கொள்ளும் தன்மைக்கு இவ்வாத்ம வலுவை வலுவாக்கிக கொண்டவர்கள் தான் சப்தரிஷிகள்.
1.தன் ஆத்மாவைத் தானே இயக்கக்கூடிய இயக்கச் செயலின் செயல் சித்தாக
2.ஜீவ பிம்ப சரீர இயக்கத்தின் தொடர்புடனே இவ்வாத்மாவைத் தனித்து நிறுத்தி
3.தன் ஆத்ம அலையை எவ் அலைக்கும் செலுத்தும் திறன் பெற்றவர்கள்.
எவ்வலைக்கும் என்பது என்ன…?
1.சரீர பிம்ப தொடர் கொண்டவர் அலைக்கும்… சக்தி வாய்ந்த சித்தர்களின் அலைக்கும் செயல்படுத்தவும்
2.இவ்வாத்மாவின் ஈர்ப்பு சக்தியைக் கொண்டு எந்நிலையையும் அணுவுக்குள் அணுவாக இவ்வாத்ம அலையை அனுப்பி
3.அணு வளர்ச்சியின் உண்மையையும் உருவாகும் சக்தி அனைத்தையுமே உணரக்கூடிய அலைத் தொடர்பு யாவைக்குமே
4.இச்சரீர பிம்ப நினைவு மாறாமலும்…
5.இஜ்ஜீவத் துடிப்போ மற்றெந்தத் தன்மையும் மாற்றம் கொள்ளாத் தன்மையில்
6.இவ்வாத்மாவைத் தனித்து எச்செயலுக்கும் செலுத்திச் செயல் சித்தைச் செயல்படுத்துபவர்களே சப்தரிஷிகள்.
அந்த நிலையை நீங்கள் பெற என் ஆசிகள்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
“நாஸ்டர்டாமஸ்” என்ற பிரெஞ்சு அறிஞர் அவர் எழுதிய நிலைகள் கொண்டு விஞ்ஞான ரூபமாகவும் “உலகம் அழியும்” என்று அந்தத் தத்துவ ஞானி அன்றே சொல்லி உள்ளார்.
பித்தரைப் போன்று இருந்த நமது குருநாதரும் காலத்தால் சொல்லிக் கொண்டு இருக்கும் போது இவர் சொல்வதற்கு முன்னாடி இதனுடைய நிலைகள் எவ்வாறு இருக்கும்…? என்று சொன்னது அனைத்தும் நடந்துவிட்டது.
ரஷ்யாவும் அமெரிக்காவும் மோதிக் கொண்டிருக்கும் வேளையில் ரஷ்யாவின் நிலைகள் அது சீர் குலைந்துவிடும் என்று ஏற்கனவே (அது நடப்பதற்கு முன்பே) சொல்லியிருந்தோம்.
முதலிலே எமது உபதேசங்களைக் கேட்ட சில நண்பரகளுக்கெல்லாம் இது தெரியும். ரஷ்யாவின் நிலைகள் சுக்குநூறாகிவிடும்… அது சீர்குலைந்துவிடும்…! என்று சொன்ன மாதிரியே அதனின் நிலை ஆகியது.
மதத்தின் நிலைகள் இன்று எடுத்துக் கொண்டாலும் போர் உருவாகி மதத்திற்கு மதம் போர் செய்யும் நிலைகளும் அதிகமாகிவிட்டது. கிறிஸ்துவ மதமும் முகமதிய மதமும் உலகில் அதிகமான நிலையில் உள்ளது.
கிறிஸ்தவ மதத்திற்குள்ளும் இன பேதங்கள் அதிகமாகின்றது. முகமதிய மதத்திலும் அதிகமான மத பேதங்கள் இன பேதங்கள் வருகின்றது.
மதத்தின் தன்மை கொண்டு போர் செய்தாலும் அந்த உணர்வுக்குள் இன பேதங்கள் வரும் பொது இவனை இவனுக்குள் அழித்திடும் நிலையும் அவர் அவருக்குள் அழித்திடும் நிலையும் வளர்ந்து கொண்டேதான் உள்ளது.
யூத வம்சத்திலிருந்து அன்றைய நிலைகளில் வெளிப்பட்ட உணர்வுகள் பல பல. விஞ்ஞான அறிவு அதற்குள் அந்த நுண்ணிய அறிவினுடைய நிலைகள் விளைந்தது இந்த யூத வம்சத்திலிருந்து தான்.
யூதர்கள் செய்த மந்திர ஒலியாலும் அவர்களுடைய சாணக்கியத்தனத்தாலும் மெய் ஞான அறிவைக் கண்டுணர்ந்த அவனாலும் அவனுடைய காலத்தால் உண்மை அறியாது அந்தத் தத்துவ ஞானியை இம்சித்தார்கள்.
யாரை இம்சித்தார்களோ அதனால் இந்த யூத வம்சமே பெரும் பிரளயத்திற்கு ஆளாகி அதே இம்சை நிலைகளைப் பெற்றார்கள்.
அதே சமயத்தில் அது மதமாக்கப் படும்பொழுது இதனுடைய சலுகையும் மற்ற நிலைகள் கொண்டு வரப்படும் பொழுது இன்றும் பார்க்கலாம். அதில் சாமியார்களாக வரக்கூடியவர்கள் இந்த உலகத்தையே சொர்க்க பூமியாக ஆக்கிக் கொண்டுள்ளார்கள் (அவர்களுக்குள்).
இதனின் நிலைகள் கொண்டு எதிலிருந்து உட்பிரிவுகள் வந்ததோ கிறிஸ்ததுவ மதமும் இந்த யூத மதத்திலிருந்து தான் வந்தது. அதே சமயத்தில் முகமதிய மதமும் இதிலிருந்து தான் வந்தது.
இந்த மூன்றும் ஒருங்கிணைந்த நிலைகள் கொண்டு உட்பிரிவாகப் பிரிக்கப்பட்டு “என் மதம் வேறு… உன் மதம் வேறு…” என்ற நிலைகள் தத்துவ ஞானிகள் காட்டிய உண்மைகள் மறைந்து மத பேதங்கள் அதிகமாக உருவாகி விட்டது.
மத பேதத்தினால் போர் முறைகள் பரப்பும் போது அதற்குள் உள் மதத்தின் உட்கிளைகளின் நிலைகள் கொண்டு ஒருவருக்கொருவர் அடித்து இந்த அந்த ஞானிகள் காட்டிய நிலைகளைப் பிழையான நிலைகளுக்குக் கொண்டு வந்து விட்டார்கள்.
1.அத்தகைய பிழையினாலேயே
2.இவர்களை வீழ்த்திடும் நிலைகள் இன்று வருகின்றது.
இதிலிருந்து மனிதர்கள் நாம் மீள வேண்டுமா இல்லையா…?
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று தென்னாட்டில் தோன்றிய அந்த அணுவின் ஆற்றல் கொண்ட “அகஸ்தியனின் உணர்வுகள்” உலகெங்கும் பரவி உள்ளது.
அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்கள் கருவிலே வளரும் குழந்தைக்குப் பெறச் செய்யுங்கள்.
1.அதன் மூலம் உங்களைக் காக்கின்றீர்கள்.
2.உலகிலுள்ள நஞ்சினை மாற்றிட முடியும்.
3.மதப்போரை அகற்றிட முடியும்
4.உலகைக் காத்திடவும் முடியும்.
5.உங்களையும் காத்திட முடியும்.
6.அந்த ஞானிகளின் உணர்வுடன் ஒன்றிட முடியும்.
7.என்றும் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக ஆக முடியும் என்று
8.உங்களை நீங்கள் நம்பி அந்த ஆற்றல்களைப் பெற வேண்டும்.
புதுத் தம்பதிகள் இனித் தங்கள் கருவிலே வளரும் குழந்தைகளுக்கு இதை போன்று யாம் உபதேசித்த இந்த உணர்வுப்படி அந்தச் “சப்தரிஷிகளின் அருள் பெற வேண்டும்” என்று குடும்பத்தைச் சார்ந்தோர் அனைவரும் இதைச் செய்யுங்கள்.
நான் இதைப் பேசுகிறேன் என்று எண்ண வேண்டாம். மூன்றாம் வகுப்பு கூட நான் முறையாகப் படிக்கவில்லை. எனக்கு இதெல்லாம் தெரியாது. இதைப் பேசுகிறேன் என்றல் குரு வழி உணர்வின் செயலாக்கங்கள் தான் இதைப் பேசுகின்றது.
அன்று நாஸ்டர்டாமஸ் சொன்னார் என்றல் உணர்வின் இயக்கத்தின் நிலைகளை அவருக்குள் எடுத்து அதைக் கணக்கிட்டுப் பார்க்கும் பொழுது இன்ன இன்ன திசைகளில்… இன்ன இன்ன நிலைகள்… என்று விஞ்ஞான அறிவின்படி கண்டு கொள்கிறார்.
மெய்ஞானிகள் காட்டிய உணர்வின் தன்மை உங்களுக்குள் வளர்த்து உலகின் நிலைகளில் எவ்வாறு இருக்கின்றது என்ற நிலைகளைக் கருவிலே வளரும் உங்கள் குழந்தைக்குப் போதித்துப் பாருங்கள்.
1.அந்த குழந்தை உலகின் அறிவை உங்களுக்குள் ஊட்டும்.
2.உங்களை அறியாது வந்த இருளைப் போக்கும். அதை ஓட்டும்.
3.மெய் உணர்வின் தன்மை உங்களுக்குள் வளரும் அதை நீங்கள் பெற முடியும்.
“நீங்கள் எண்ணியதைத்தான்..” உங்கள் உயிர் இயக்குகின்றது. உணர்வின் அலைகளாகப் பரப்புகின்றது. உணர்வின் சொல் அம்பாக அந்தக் கருவின் நிலைகள் ஊடுருவுகின்றது.
உணர்வின் தன்மையை இணைக்கின்றது. மெய் ஒளியைப் பெருக்கும் தன்மையை அதை நீங்கள் பெறும் தகுதியை உருவாக்குகின்றது.
மகரிஷிகளின் அருள் சக்திகளை உள் நுகர்ந்து… உள் புகுத்த வேண்டும்…! – பிராணாயாமம்
அன்றாட வாழ்க்கையில் நாம் பல பல கஷ்டங்களைக் கேட்டு உணர்ந்தாலும் அவை எல்லாம் நம் ஆன்மாவில் முன் வந்து விடுகின்றது. சுவாசிக்கும் போதெல்லாம் அந்த உணர்வின் தன்மை சங்கடமோ சலிப்போ வெறுப்போ கோபமோ வேதனையோ அனைத்தும் வருகின்றது.
இதையெல்லாம் மாற்றி அமைக்கும் தன்மை தான் ஒன்பதாவது நிலையான கடவுளின் அவதாரம் நரசிம்மா என்பது.
எதையுமே சிருஷ்டிக்கும் பண்பு பெற்றது தான் மனிதனின் ஆறாவது அறிவு.
1.உருவாக்கும் தன்மை பெற்ற இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிய அருள் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து
3.நாம் உள் நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையை உடலுக்குள் புகுத்தி
4.நமக்குள் தீமை புகாது பிளத்தல் வேண்டும்… நரசிம்மா…!
தனது வலிமையின் தன்மை கொண்டு சாக்கடையை வராகன் எப்படிப் பிளந்ததோ நல்ல உணர்வை எப்படி உணவாக எடுத்ததோ அதைப் போல ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமையைப் பிளந்து தனக்குள் ஒளியாகச் சிருஷ்டித்துக் கொண்ட அந்த மகரிஷியின் உணர்வுகளை நாம் நுகர்ந்திடல் வேண்டும்.
1.மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் புகுத்தி… “உள் நுகர்ந்து”
2.அதனின் துணை கொண்டு தீமைகள் புகாது தடுத்து
3.நமக்குள் புகக் காத்திருக்கும் அந்தத் தீமையான உணர்வைப் பிளந்து
4.முந்திய நிலையில் புகுந்த தீமைகளையும் அகற்ற வேண்டும்
5.தீமை அகற்றிடும் உணர்வின் தன்மையாக நமக்குள் விளைந்திடல் வேண்டும்.
இந்த உடலை விட்டு நாம் எப்போது… எந்த நேரம் அகன்றாலும்
1.எந்த உடலும் நம்மை இழுத்து விடாது… எதிலும் சிக்காது…
2.எந்த ஞானியின் பால் நம்முடைய கூர்மை சென்றதோ… அவனின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நாம் அங்கே நிலை கொள்ள முடியும்.
இது தான் பத்தாவது நிலை தசமி.
வாழும்போது நாம் பிறருக்குத் தீங்கு செய்யவில்லை என்றாலும் கேட்டுணர்ந்த தீமைகள் அதிகமாகி… அதிகமாகி… அதே சமயத்தில் அதிகமான பின்… அதிலிருந்து விடுபட நமக்கு எவர் ஒருவர் உதவி செய்கின்றாரோ அவரின் நினைவே கடைசியில் வரும்.
மகராசன்…! நான் துயரப்படும் நேரத்தில் எல்லாம் எனக்கு நல்லதைச் செய்தான். அவனுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகின்றேன்…? என்று அவரின் எண்ணத்தைக் கூர்மையாக எண்ணி அதனின் வலுவை நமக்குள் சேர்த்து விட்டால் அவர் இறந்த பின் அவர் உடலுக்குள் தான் புக முடியும்.
1.இந்த உடலில் உருவான நோயான உணர்வின் துணை கொண்டு
2.அவரின் ஈர்ப்புக்குள் சென்று அந்த இனமாக இணைத்து
3.அந்த எல்லைக்குள் நம் உடலில் வந்த தீமைகளை உருவாக்கி
4.நமக்கு உதவி செய்தவரையும் தீமையின் நிலைகளிலேயே அழித்து
5.நமக்கு நல்ல இருப்பிடம் இல்லாதபடி நஞ்சின் தன்மையை வளர்த்து
6.பரிணாம வளர்ச்சியில் கீழிருந்து எப்படி மேலே வளர்ந்து வந்தோமோ
7.அதை மாற்றி மீண்டும் கீழான பிறவிக்கே சென்று விடுகிறோம்… தேய்பிறையாகின்றது.
இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் “தசமி…” பத்தாவது நிலையை அடைந்த அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையை நமக்குள் மீண்டும் மீண்டும் உள் செலுத்த வேண்டும்.
வாழ்க்கையில் வந்த வேதனையோ கஷ்டமோ துயரமோ எதையெல்லாம் கேட்டறிந்தோமோ… நம் ஆன்மாவில் அவ்வாறு படர்ந்து கொண்டிருக்கும் தீமைகளை எல்லாம் பிளத்தல் வேண்டும்.
அது தான் நரசிம்மா…!
தன்னைத் தான் உணர்ந்து… தன்னுள் உள்ள இறைவனான ஆத்மாவை அறியவல்ல செயல் தான் சித்து வழியில் “முதல் சித்து” – ஈஸ்வரபட்டர்
அல்லி மலர் சூரியனைக் கண்டவுடன் மலர்ந்து சூரிய ஒளி மறைந்தவுடன் கூம்பி விடுகின்றது. இன்னும் சில மலர்கள்… சூரிய ஒளியின் அலை பாயும் இடத்தில் எல்லாம் அதன் மலர் முகம் காட்டி மலர்ந்து “அதன் ஒளி திக்கிலேயே…” அதன் ஈர்ப்பும் திரும்பிய நிலையில் வாடிவிடுகின்றது.
இவை எல்லாமே “இயற்கை…” என்கிறான் மனிதன்…!
1.எல்லாச் சக்தியைக் காட்டிலும் இனி தன் செயற்கைக்கு உதவுவது சூரிய சக்தி தான்…! என்ற உண்மையைத் தெரிந்தும்
2.சூரியனின் சக்தியைச் செயற்கைக்குப் பாழ்படுத்தும் இன்றைய மனிதன்
3.அடுப்பான இந்தப் பூமியில் – பாத்திரமான இச்சரீரத்தில் ஒளியான ஜீவ சக்தி தரவல்ல சூரிய சக்திகளைப் போட்டு
4.இவன் சமைக்கும் கலவையில் எச்சுவையையும் பெறவல்ல சக்தி
5.”இச்சரீர ஜீவனின் உள்ளதை” மனிதன் அறியவில்லை.
இயந்திரத்தின் துணை கொண்டு சூரிய அலையைச் சில உலோகங்களின் தொடர்பைக் கொண்டு சக்தி பெறும் மனிதன்…
1.தன் எண்ணத்தின் ஆற்றலைக் கொண்டு…
2.எதனையும் செயல்படுத்தக்கூடிய செயல் தெய்வமாகத் தன்னுள் உள்ள ஆத்ம சக்தியைச் செயல்படுத்தி
3.இவ்வாத்மாவின் தொடர்பலையால் எவ்வலையையும் அதன் தொடர்பு கொண்டு தொடர்புபடுத்தி
4.அதன் மூலம் செயலாக்கக்கூடிய ஆற்றல் இந்த ஆத்ம ஞானத்திற்குண்டு…! என்பதை உணர வேண்டும்.
இவ்வுடலின் செயலுக்கொப்ப… இவ்வெண்ண ஈர்ப்பு செல்லும் முறையைச் சிறிது மாற்றி… இவ்வுடலை இயக்கும் ஆத்மாவை… இவ்வெண்ணத்தில் நாம் செலுத்தும் ஞானத்திற்கு வர வேண்டும்.
இது நாள் வரை உணர்த்திய ஞான உபதேசத்தின் தியான வலுவால்
1.இவ்வாத்மாவைச் சக்தி வாய்ந்த ரிஷிகளின் ஆத்மாவுடன் தொடர்புபடுத்தி
2.அவர்கள் பெற்ற சக்தி நிலையை நாமும் பெறவல்ல இயக்க நிலையை
3.இம்மனித ஞானத்தால் செயல்படுத்துங்கள்.
இச்சரீரக்கூடு ஜீவத் துடிப்புடன் (உயிர் உடலில்) இருந்தால் தான் இவ்வியக்கத்தின் காந்த மின் அலையின் வளர்ப்பைக் கொண்டு “ஆத்ம பலத்தை நாம் பெருக்க முடியும்…”
அதன் மூலம்… ஆத்ம பலம் பெற்ற நிலையில் வேறு ஒரு ஈர்ப்புப் பிடிப்புக்கு நாம் சிக்காமலும்… இக்காற்றுடன் கலந்துள்ள பல கோடி நிலைகளில் நம் சரீர சுவாச ஈர்ப்பிற்கு எவ்வலையும் உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாவானாலும் சரி… உடலுடன் உள்ளவர்களின் எண்ண அலைகளானாலும் சரி… இவ்வீர்ப்பு வட்டத்தில் சிக்காமல் இருக்க முடியும்.
அதாவது ஒரு எரியும் நெருப்பில் எது போட்டாலும் அதுவும் பஸ்பமாகி விடுவதைப் போல்
1.இச்சரீர இயக்கத்தால் நாம் பெற்ற ஆத்ம பலம் கூடக் கூட
2.இவ்வாத்மாவின் வலுவை நாம் தனித்துக் காண முடியும்
3.வலுப் பெற்ற ஆத்மாவை நாம் உள்ள இடத்திலிருந்தே எங்கும் அனுப்பி எதனையும் அறிந்து வரச் செயல்படுத்த முடியும்
4.தன்னைத் தான் உணர்ந்து… தன்னுள் உள்ள இறைவனான ஆத்மாவை அறியவல்ல செயல் தான் “சித்து வழியில் முதல் சித்து…!”
ஆகவே ஆத்ம பலம் பெற்று வேறு ஒரு ஈர்ப்பலைக்கு இவ்வாத்மா செல்லாத வலுவாக நம் எண்ண ஞானம் வளர்ந்திருக்க வேண்டும்.
வாழ்க்கைப் பந்தத்தில் சுவைக்கும்… மற்ற பொருள் நிலை எவற்றுக்கும் இவ்வெண்ணமானது பேராசைக்கோ… ஏக்கத்திற்கோ… சஞ்சல சலிப்பு நிலைக்கோ… செல்லும் வழி முறை சிறிது இருந்தாலும்
1.இவ்வாத்மாவின் செயல் தனித்து தன்னிச்சைக்கு இயங்க
2. இச்சரீர பிம்பத்தின் உணர்வில் செயல் நிலை தடைப்படும்.
எவ் ஈர்ப்பலையின் பிடிப்பிலும் இவ்வெண்ணச் செயலின் உணர்வு ஞானத்தின் வளர்ச்சியானது செயல் கொள்ளும் பக்குவம் கொண்டு தான் இவ்வாத்ம பலம் கூடியுள்ள தருணத்தில்
1.நாம் ஜெபித்த… தியானித்த… சித்தர்களின் வளர்ந்த ரிஷிகளின் தொடர்பு வட்ட அலை ஈர்ப்பு கிடைத்து
2.நம் ஆத்ம வலு வளர்ந்த வளர்ப்பின் “பதம் பார்த்து” நம்மை வழி நடத்துவார்கள்.
ஆத்ம வலுவை மட்டும் இச்சரீர பிம்ப வாழ்க்கையில் இருந்துதான்… இந்த ஞானத்தால் வளர்ச்சியுறச் செய்ய முடியும். ஆத்ம பலம் பெற்ற ஞானத்தால் இவ்வாத்மாவின் பலம் கொண்டே இச்சித்துத் தொடரின் செயல் சித்துக்களை இவ்வாத்மாவினால் தான் வளர்த்துக் காட்ட முடியும். “வெறும் சரீர பிம்ப இயக்கத்தால் பெற முடியாது…!”
முதல் சித்தான ஆத்ம பலம் பெற… இச்சரீர பிம்ப எண்ணத்தின் அறியும் ஞானத்தைக் கொண்டு… ஆத்ம பலத்தால் சித்து நிலைத் தொடர் யாவையும் நாம் பெற முடியும்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து கொண்டு “நாம்…” என்ற அணைப்பிலேயே செல்வோம். ஏனென்றால் எல்லாமே “நமக்குள்..” தான் இருக்கின்றது.
பல கோடி அணுக்கள் சேர்த்துத்தான் “நாம்” ஆகின்றோம். ஆனால் எந்தெந்த அணுக்களைச் சேர்த்துக் கொள்கின்றோமோ அந்த “நான்…” ஆகின்றோம்.
கோள்களும் நட்சத்திரங்களும் சூரியனும் மற்றவைகளும் கூட்டு ஐக்கியமான நிலைகளில் இயங்குகின்றன. ஒரு மரத்தை எடுத்துக் கொண்டால் கூட்டு ஐக்கியமான நிலைகளில்தான் அது மரமாக வளர்கின்றது. அதற்குள் பிரித்திருந்தால் தசையினுடைய நிலைகள் வளராது
அதைப் போன்று தான் நமக்குள்ளும் கூட்டு ஐக்கியமான நிலைகளில் இருந்தாலும்
1.வெறுப்பான உணர்வுகளை நாம் சேர்க்கும்பொழுது
2.ஒரு அணுவின் தன்மை இரத்தத்தை உருவாக்கினாலும்
3.இன்னொரு அணு அதன் மேலே பட்டவுடன்
4.அதனுடைய மலம் நம் இரத்தைத்தைக் குடித்துவிட்டு
5.அந்த அணுவின் மலம் உடலிலே பீய்ச்சும் பொழுது
6.நம் தசைகளும் கரைந்து அழுகிப் போகின்றது.
7.நமக்குள் அது பிரியும் தன்மை பெறுகின்றது.
இதைப் போன்று நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் பிறரைப்பற்றி வேதனை உணர்வுடன் எண்ணும் பொழுது அந்த வேற்றுமையான உணர்வுகள் நமக்குள் வந்து அவர்களை அழிக்க வேண்டுமென்று விரும்புகின்றோம்.
நமக்குள் எடுத்துக் கொண்ட அந்த அழிக்கும் உணர்வுடன் நாம் பேசினாலும் அதே சமயத்தில் அவரிடமிருந்து கெடுதலான அந்த அலைகள் நம் தசைகளிலே படும் பொழுது அந்த உணர்வுகள் பட்டு அரிப்பு ஆகின்றது.
அந்த அரிப்பினாலே சில கிருமிகளாகி நம் தசைகளையும் அது கரைத்து விடுகின்றது.
பல வகைகளிலும் மனிதனுக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் இப்படி வருகின்றது. ஏனென்றால் மனிதனாகத் தோன்றியபின் மனிதனிலிருந்து தோன்றும் இத்தகைய உணர்வுகள் “உருவாக்கும் ஆற்றல்” பெற்றது.
இவ்வாறு நாம் அடிக்கடி பேசும் பொழுது இதைப் போன்ற நோய்களும் புற சரீர நோய்களும் உள் சரீரத்திற்குள்ளும் உணர்வின் அணுக்களாக மாறி விடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் தப்பிக்க வேண்டும்.
அதிலிருந்து நாம் விடுபட துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறுவதற்காக யாம் இந்தத் தியானமும் ஆத்