பரம்பரை நோயை நீக்கும் வழி

பரம்பரை நோயை நீக்கும் வழி

 

நம் குடும்பத்தில் மூதாதையர்களோ உடலை விட்டு பிரிந்து சென்றிருந்தாலும் அவர்களுடன் நாம் பழகி இருக்கும் பொழுது அவர்கள் உணர்வுகள் நம் உடலில் உண்டு.

அவர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின் பாசத்தின் வலிமையிலே நாம் ஈர்த்தோம் என்றால் அந்த ஆன்மாக்கள் நம் உடலுக்குள் வந்துவிடும்.

அவ்வாறு வந்தால்…
1.அந்த உடலில் ஏற்பட்ட நோய்களும் அவர் பேசிய புலம்பிய உணர்வுகளும் நம்மையும் புலம்ப வைத்து விடும்.
2.பின் நம் உடலிலும் அதைப் போன்ற சில நிலைகள் வந்துவிடும்.

அவருடன் பழகி ரொம்ப காலம் இருந்தாலும் ஒருவர் உடலுக்குள் போனாலும் மற்றொரு உடல்கள் அவர் உடலிலிருந்த நோய் சிறிதளவு இருக்கும். இருந்தாலும் அது பரம்பரை நோயாக விளையும்.
1.ஆஸ்மா நோய் இருக்கிறது என்றால் பரம்பரை நோயாக அடுத்த மக்களுக்கும் அது வந்து சேரும்.
2.இரத்தக் கொதிப்பு இருந்து அதன் வழி அவர் இறந்திருந்தால அது பரம்பரை நோயாக வரும்
3.சர்க்கரை சத்து இருந்தால் அது பரம்பரை நோயாக அடுத்தவர்களுக்கு வரும்
4.சரவாங்கி நோய் மற்ற எந்த நோயாக இருந்தாலும் இது போன்று பரம்பரையாக வரும்.

ஏனென்றால் அந்த உணர்வின் வேகம் துடிப்புகள் பழகிய உணர்வுகள் சேர்க்கப்படும் பொழுது அவர் இறந்தால் இந்த உடலில் அணுக்கள் பெருக்கப்பட்டு அந்த நோயின் வன்மையை இங்கே காட்டும்.

அதே சமயத்தில் கருவில் வளரும் குழந்தைகளுக்கும் கூட…
1.அந்தத் தாய் அது வேறு ஒரு குடும்பத்தில் இருந்து வந்தாலும் அந்தத் தாயின் கருவிலே சிசு வளரப்படும் பொழுது
2.இந்த உணர்வுகள் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தன் பரம்பரையின் கதைகளைச் சொன்னால் அந்த நோய்கள் வந்துவிடும்.

ஒரே குடும்பத்தில் ஒரே வம்சத்தில் சேர்ந்த அக்கா மகள்… தம்பி மகள்… இந்த மாதிரி இரத்த சம்பந்தம் உள்ளவர்களைச் சம்பந்தம் செய்யும் பொழுது “பரம்பரை நோயென்ற நிலைகளே வரும்…”

அந்நியத்தில் பெண் எடுத்து வந்தால் அவர்கள் உணர்வுக்கு ஒத்து வராது. ஆனால் அங்கே இந்தக் குழந்தைகளுக்குப் பரம்பரை நோய் வருவதில்லை.

1.ஆனால் அவர்கள் தாய் வழி இந்தப் பரம்பரை நோய் அங்கே இருந்தால் அதன் வழி இங்கே வந்து சேருகின்றது
2.ஆண் வழியில் இருந்தாலும் இதே மாதிரி ஒரு உடலின் உணர்வுகள் கலக்கப்படும் பொழுது அதன் வழி வந்துவிடும்.

தாத்தா பாட்டிக்கு அந்த நோய் இருந்தால் அந்த அம்மாவுக்கும் இருக்கும். அதன் உணர்வு வரப்படும் பொழுது தாய் கருவிலே இருக்கும் பொழுது குழந்தைக்கு வந்துவிடும்.

இதைப் போன்ற நிலைகள் எல்லாம் நாம் தவிர்க்க வேண்டுமென்றால் காலையில் துருவ தியான நேரங்களில் உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாக்களை அவசியம் விண் செலுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று முதலிலே நமக்குள் வலுவை ஏற்றிக் கொண்டு அதன் பின் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த எல்லா ஆன்மாக்களையும்
1.சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்…
2.அங்கே உந்தித் தள்ள வேண்டும்.

அந்த ஒளிக் கடலில் முன்னோர்களின் உயிராத்மாக்கள் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பிறவியில்லா நிலையை அடைய வேண்டும்… அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று இதைப் போல தினமும் அந்த ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கலாம்.

யார் உடலை விட்டுப் பிரிந்தாலும் உடனடியாக நினைவுபடுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருளை வலுப் பெறச் செய்து… உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.

இந்த முறைப்படி செய்தால் பரம்பரை நோய்களை மாற்ற முடியும்.

Leave a Reply