நடப்பதெல்லாம் “ஞானத்தைப் பெறச் செய்வதற்குத் தான்…!” – ஈஸ்வரபட்டர்

நடப்பதெல்லாம் “ஞானத்தைப் பெறச் செய்வதற்குத் தான்…!” – ஈஸ்வரபட்டர்

 

ஆத்ம வலுப் பெறுவது என்பது ஆண்டவன் அருளால் ஒரு நொடிப் பொழுதில் கிட்டிவிடுவது என்பதல்ல…!

இச்சரீரக்கூறின் உணர்வின் எண்ணத்தையே உயர் ஞான வழி முறைக்குச் செயல்படும் ஒவ்வொரு செயலுக்குமே செயலின் வழி முறையில் செலுத்தப்படும் எண்ணத்தில் உடல் ஏற்கும் உணர்வு நிலைக்கொப்பத்தான் செயல்படுத்த முடியும்.

உணர்வு நிலை என்பது…
1.சகல நிலைகளிலும் இவ்வெண்ணம் மோதும் பொழுது
2.சமமான சாந்த நிலையுடன் கூடிய எண்ணத்தின் பால்
3.அந்த உணர்வின் செயகையை உடல் நிலை ஏற்று வழிப்படுத்தும் நிலைக்கொப்ப
4.சகல சக்திகளிலும் சமமான சாந்த சக்தியைச் செயல்படுத்தும் வழி முறையினால் தான்
4.ஆத்ம பலத்தைக் கூட்டிக் கொள்ள முடிகிறது.

ஆத்ம பலம் பெற்ற… ஞானத் தன்மையினால் எண்ணத்தின் உணர்வைச் சாந்தப்படுத்தும் வழிச் செயலை “அவ்வாத்மாவே…” பிறகு செயல்படுத்தி வழி நடத்தும்.

சிறு சிறு துளிகள் சேர்ந்து தான் பெரு வெள்ளமாகின்றது. அதைப் போன்று ஒவ்வொரு செயலிலும் எண்ணத்தின் வழி முறையைச் செயல்படுத்தும் தனமை கொண்டு தான் ஆத்ம பலம் கூடி வலுவாகின்றது.

1.ஆத்ம பலம் பெற்று விட்டாலும்
2.வாழ்க்கையில் நடக்கும் எதிர் நிலை உந்தல்கள் பல மோதத்தான் செய்யும்.

பெரும் வெள்ளத்தில் எதிர்படும் குப்பைகள் எப்படி அடித்துச் செல்லப்படுகின்றனவோ அதைப் போன்றே ஆத்ம பலம் பெற்ற வாழ்க்கையில் எதிர்ப்படும்
1.உணர்ச்சிகளை உந்தக்கூடிய சில நிலைகள் ஏற்பட்டாலும்
2.வெள்ளத்தில் அடித்துச் செல்லும் குப்பைகளைப் போன்று
3.அது நம் ஆத்மாவுடன் கலக்காது.

பல காலமாக உழைத்துச் சம்பாதித்து வீடு கட்டும் பொழுது… வீட்டின் அஸ்திவாரத்தைப் பலம் கொண்டு கட்டியவுடன்… அதற்கு அழகு செய்வது கடினமல்ல…!

அப்படிக் கட்டப்பட்ட வீட்டில் ஆங்காங்கு ஏற்படும் துப்புரவு நிலைகள் சில செய்து கொண்டே தான் இருக்க வேண்டும்.

அதைப் போன்றே ஞானத்தால் சித்து கொண்ட ஆத்ம பலம் பெற்று இச்சரீரமுடன் வாழும் காலத்தில்
1.கட்டப்பட்ட வீட்டின் குப்பைகள் அண்டுவதைப் போன்றும்
2.காரைகள் உதிர்வதைப் போன்றும் சில நிலைகள் ஏற்படத்தான் செய்யும்.

அதைத் துப்புரவுபடுத்திக் கொண்டு தான் இருக்க வேண்டும்.

உடலுடன் கொண்ட வாழ்க்கையில் எதிர்ப்படும் யாவையுமே
1.நம் ஞானத்தை வளர்க்கவல்ல வழி முறையாக
2.ஆத்மாவின் செயலைக் கொண்டு வழி பெறும் பக்குவத்தை நாம் பெறல் வேண்டும்.

Leave a Reply