துருவப்பகுதி கரைந்து கடல்கள் பெருகிக் கொண்டுள்ளது… கடலுக்குள் ஆழ்த்தப் போகின்றான் விஞ்ஞானி

துருவப்பகுதி கரைந்து கடல்கள் பெருகிக் கொண்டுள்ளது… கடலுக்குள் ஆழ்த்தப் போகின்றான் விஞ்ஞானி

 

மீண்டும் மீண்டும் தீமையின் உணர்வின் எல்லைக்கே சென்று இன்று உலகம் முழுமைக்கும் அசுர உணர்வுகள் பெருகும் நிலை வந்துவிட்டது.

இந்தக் காற்று மண்டலத்தில் விஷத்தின் தன்மை அதிகமாகப் பரவி மனிதனின் சிந்தனை இழக்கப்பட்டு, மனிதனுக்கு மனிதனே இரக்கமற்றுக் கொல்லும் உணர்ச்சிகள் அதிகமாகி விட்டது. மனிதனைக் காக்கும் உணர்ச்சிகள் எங்கும் இல்லை.

மனிதனுக்குள் அரக்க உணர்வு கொண்டு உடலுக்குள் உள்ள நல்ல பண்புகளை இழக்கச் செய்து எடுத்துக் கொண்ட அசுர உணர்வுகள்தான் நம்மை ஆளுகின்றதே தவிர நமது நல்ல உணர்வு கொண்டு ஆட்சி புரியும் செயலை இழந்திருக்கின்றோம்.

உலக நிலையில் இன்று பார்த்தால் தீவிரவாதம் என்று மதம் இனம் மொழி என்ற நிலையில்தான் அரக்க உணர்வுகளின் செயல்கள் உண்டாகி இன்று மனிதனை மனிதனே ஒரு நொடிக்குள் கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றான்.

ஒரு குண்டு வெடித்தால் 1000 கிலோமீட்டர் வரையிலும் அந்த மனிதர்கள் மடிவார்கள். இப்படிப் பல குண்டுகளை வெடித்தால் வெடித்த ஆவியின் தன்மை வெளியிலே படரும்.

அந்த ஆவித்தன்மை படர்ந்து சூரியனின் ஒளிக்கதிர்கள் எங்கே அதிகமாகத் தாக்குகின்றதோ அங்கே குளிர் பிரதேசமாக மாறும்.
1.ஒரு பக்கம் அந்த நீரின் தன்மை குளிர் பிரதேசமாகி எடை கூடப் போகின்றது
2.கடல் மாறப் போகின்றது.

இதைப் போன்ற நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நிமிடமும் நாளுக்கு நாள் இப்பொழுது மாறிக் கொண்டுதான் வருகின்றது.

ஓசோன் திரை கிழிந்ததனால் அதனின் வலு குறைந்ததால் துருவப் பகுதியில் விஷத்தின் அழுத்தம் வெப்பத்தின் தணல் அதிகமாக்கப்பட்டும் விட்டது.

அணு விஷக் கதிர்கள் (கதிரியக்கங்கள்) எவ்வளவு துரிதமாக ஒரு இயந்திரத்தை இயக்குகின்றதோ… அணுகுண்டை வெடிக்கச் செய்த உணர்வுகள் துருவப் பாதையில் அங்கே வந்தவுடனே வான்வீதியில் பறந்து செல்கிறது.

அப்பொழுது…
1.விஷக் கதிரியக்கங்கள் துருவத்தின் வழி கவரப்பட்டு
2.நமது துருவ எல்லையில் உள்ள பனிப் பாறைகளைக் கரைத்து
3.கடல்களும் பெருகிக் கொண்டே வருகின்றது (உபதேசித்த வருடம் 2001).

தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று சொல்லும் முதலிலே தோன்றிய அகஸ்தியன் இந்தப் பூமியை நல் வழியில் திசையில் சீராகத் திரும்பும்படி அவனுடைய சக்தியின் திறமை கொண்டு செய்தான்.

இன்று அதே போலத்தான் விஞ்ஞான உலகின் தன்மை வரப்படும்போது அணுக் கதிரியக்கங்களைச் செயல்படுத்தும்போது ஒரு பக்கமிருந்து சீராக்குவதற்குப் பதில் நம்மையெல்லாம் கடலுக்குள் ஆழ்த்தப் போகின்றான் விஞ்ஞானி.

குண்டை ஒரு பக்கம் வெடித்தால் இதற்குள் சென்று விஷத்தை நுகர்ந்த உயிரணு (நம் உயிர்) விஷத்தின் உணர்வின் அணுக்களை உருவாக்கும். இறந்தபின் விஷப் பூச்சிகளாகத் தான் நாம் பிறக்க வேண்டுமே தவிர மனிதனாகப் பிறக்கும் நிலை இல்லை.

மனிதன் என்ற நிலையில் ஒன்று இரண்டு தப்பினாலும் அவனும் வாழும் சந்தர்ப்பம் இழந்திருக்கின்றான்.

ஆகவே இதிலிருந்து நாம் தப்ப வேண்டும் என்றால்…
1.ஒவ்வொரு நொடிப்பொழுதும் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து
2.இருள் சூழாத நிலைகள் கொண்டு நம்மைக் காத்துக் கொள்வதற்கு நாம் செயல்பட வேண்டும்.

Leave a Reply