செல்வத்தை நாடாதீர்கள்… அருளைப் பெருக்குங்கள்… இருளை அகற்றும் ஞானம் பெறுங்கள்

செல்வத்தை நாடாதீர்கள்… அருளைப் பெருக்குங்கள்… இருளை அகற்றும் ஞானம் பெறுங்கள்

 

உதாரணமாக ஒருவர் வேதனைப்படுக்கிறார் என்றால் அதைப் பதிவாக்கிக் கொள்கின்றோம். திருப்பி எண்ணும் பொழுது அந்த வேதனை நமக்கும் வருகின்றது.

வேதனை வந்த பின் நம் தொழிலைச் சீராக செய்ய முடியவில்லை. வேதனையுடன் நடந்து சென்றால் பாதையில் உள்ள மேடு பள்ளம் தெரிவதில்லை.

இதைப் போல் ஒருவர் கோபிக்கின்றார். அதையும் பதிவு செய்கின்றோம். அப்போது கார உணர்ச்சிகள் தூண்டப்பட்டு அந்த உணர்ச்சிகள் நம்மைக் கோபக்காரனாக ஆக்கிவிடுகிறது. ஆகவே
1.நமது வாழ்க்கையில் எது எல்லாம் பதிவாகின்றதோ
2.அவையெல்லாம் மீண்டும் நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.

இதைப் போன்றுதான்
1.அகஸ்தியன் எவ்வாறு இருளை அகற்றி உணர்வை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக ஆனானோ
2.அதன் உணர்வின் அலைகளை உங்களுக்குள் பதிவாக்கி
3.அதை நினைவு கொண்டு நீங்கள் பெறுவதற்குண்டான தகுதிகளை ஏற்படுத்துகின்றோம்.

இந்தத் தகுதியை ஏற்படுத்திய பின் எப்பொழுது உங்கள் வாழ்க்கையில் தொழிலில் நஷ்டமோ கஷ்டமோ நோயோ மற்ற எதுவாக இருந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் செலுத்திக் கொள்ள முடியும்.

உங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வைச் செலுத்தி விட்டால் அந்த அருள் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் “நாளுக்கு நாள்” வளர்ந்து கொண்டே வரும்.

இப்படி நம்முடைய வளர்ச்சியின் தன்மை அடைந்தால் இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைய முடியும். “அதற்குத்தான் இந்த தியானமும் உபதேசம்…”

செல்வத்தை நாம் தேட வேண்டும் என்று சென்றால் இந்த வாழ்க்கைக்கு உதவும்.
1.ஆனால் அதையே பெற வேண்டும் என்று ஏக்கத்தைப் பெற்றால்…
2.செல்வத்தை தேடி நாம் சென்றால்
3.அது தவறு பிழை என்ற நிலைக்கே அழைத்துச் சென்றுவிடும்.

ஆனால் உயிர் வழி அருள் ஞானிகளின் உணர்வை வலுவாக்கி அவர்கள் பெற்ற உயர்ந்த உணர்வைப் பெற்றால் செல்வம் தன்னாலே தேடி வரும்

நீங்கள் தேடிச் செல்ல வேண்டியதில்லை அந்த அருள் செல்வம் உங்களை தேடி வரும். ஆகவே செல்வம் தான் நம்மைத் தேடி வர வேண்டும்.

ஆகவ இங்கே கொடுக்கப்படும் உபதேசத்தின் நிலையிலிருந்து செல்வத்தை நாடாதீர்கள். அருளைப் பெருக்குங்கள். இருளை அகற்றி அருள் ஞானச் செல்வத்தை ஊட்டுங்கள்.

1.என்றும் அந்த அருள் செல்வம் நமக்குள் இருந்து
2.அகச்செல்வம் அருளாகி இருளை நீக்கி மெய்ப்பொருள் காணும் உணர்வாக
3.ஒளி உடலாக மாற்றும் அந்தத் தகுதி பெற வேண்டும்.

ஆகவே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை பெற வேண்டும் என்று எப்பொழுது எண்ணினாலும் சிந்திக்கும் ஆற்றல் கொண்டு வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்ளும் தன்மை வருகின்றது.

தீமையை நீக்கும் ஆற்றல் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் அமைதி கிடைக்கின்றது… சாந்தம் கிடைக்கின்றது… விவேகம் கிடைக்கின்றது.

நான் சொல்லி உங்களுக்குள் இதை எல்லாம் பதிவு செய்தாலும் “உங்கள் உணர்வுக்குள் விளைந்தால் தான் அது ஞானம் ஆகும்…”

காரணம் சொல்லும் உணர்வை வைத்து நினைவு கொண்டு எடுத்தாலும் அது கடினமாகும்.
1.நினைவைப் பதிவாக்கிப் பழக்கப்படுத்தி இந்த உணர்வை எடுத்துக் கொண்டால்
2.நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் உருவாக்கும்.
3.இருளை அகற்றி மெய்ப்பொருள் கண்டு பிறவியில்லா நிலையை அடையும் தகுதியை நீங்கள் பெறுவீர்கள்.
4.எனக்குக் குருநாதர் எப்படிச் செய்தாரோ அதைத் தான் நான் செய்து காட்டுகின்றேன்.

உங்கள் உயிர் கடவுள்… உடல் ஒரு கோவில்… மனிதனை உருவாக்கிய அரும்பெரும் சக்தியான தெய்வங்கள் உங்களுக்குள் கொலு வீற்றிருக்கின்றது.

அந்தத் தெய்வங்களைக் காக்க வேண்டும் என்று தான் குருநாதர் காட்டிய வழியில் உபதேசிக்கின்றோம்.

Leave a Reply