சனியின் சக்தி எப்படிப்பட்டது…? – ஈஸ்வரபட்டர்

சனியின் சக்தி எப்படிப்பட்டது…? – ஈஸ்வரபட்டர்

 

சப்தரிஷி மண்டலம் ஏழு என்று உணர்த்துகின்றார்கள் புராணத்தில்… ரிஷி மண்டலத்தின் தொடர்பு நிலை என்ன…? வாரம் ஏழு நாட்களும் ஜாதகக்காரனுக்கு பன்னிரெண்டு ராசிகளும் உணர்த்திய முறை எல்லாம் எதுவப்பா…?

சனி மண்டலக் கோளமானது அது ஈர்த்து வெளிக் கக்கும் அலையின் செயலில் திடம் கொண்டு உருவாகின்றன 12 நட்சத்திரக் கோளங்கள். அதன் சுழற்சி ஈர்ப்பில் அந்தக் கோளத்தைச் சுற்றி வருகின்றது.

சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கோளங்களும் அவை ஓடும் சுழற்சி கதியில் வருட நிலைக்கொப்ப அந்தந்த மண்டலங்களின் நேர்பார்வை
1.சனியின் ஈர்ப்புப் பிடியில் சுழன்று வரும் பன்னிரெண்டு நட்சத்திர மண்டலங்களுடன் சந்திப்பு கூடும் பொழுது
2.சந்திக்கும் மண்டலத்தின் ஈர்ப்புப் பிடியில் சிக்கிக் கரைந்து விடுகின்றன இச்சனி வளர்த்த 12 நட்சத்திரங்களும்.

நம் பூமியின் ஈர்ப்பிற்கு வருடத்தில் இரண்டு முறை சந்திப்பு நேர்ப்பார்வையாக சனியின் பார்வை படுவதினால் வட மேற்கு தென் மேற்குக் காற்றுகள் வருகின்றன.

1.ஆகவே இந்த மழைக் காலங்களை உருவாக்கக்கூடிய வித்தை ஊன்றியவனே இந்தச் சனி தான்.
2.சனியின் நேர்ப்பார்வை சந்திப்பு பூமிக்கு இல்லையேல் கால நிலையில் பெய்யும் மழை இல்லை.

அதே போன்று சனியினால் உருவாகும் 12 நட்சத்திரங்களின் ஈர்ப்பு வட்டமானது இச்சுழற்சியில் ஈர்ப்பு மாறி நேர்கோட்டில் கரையக்கூடிய சந்திப்பு நிலையானது பூமியுடன் சந்திக்கும் நிலை ஏற்பட்டால் பூமியில் இப்பருவக் காலங்களில் ஏற்படும் “இயற்கையின் சீற்றம்” அதிகம் கொள்கிறது.

சனியினால் வளர்த்துப் பூமியின் ஈர்ப்பில் கரையும் நட்சத்திர மண்டலத்தின் விகிதத் தன்மையின் மாற்றங்கள் மற்ற மண்டலங்களின் சந்திப்புக் கால நிலைக்கொப்ப மாறுபடுகின்றது.
1.இதை வைத்துத் தான் சனியைப் போல் கொடுப்பாருமில்லை…
2.கெடுப்பாருமில்லை…! என்று உணர்த்தினார்கள்.

வருடத்தில் இரண்டு தடவை சந்திக்கும் சனியின் நேர்ப் பார்வையில் சனி வளர்த்த நட்சத்திர மண்டலத்தின் சந்திக்கும் நிலைக்கொப்ப பூமியின் ஈர்ப்பில் கரையப்படும் அந்த அமில நிலையானது பூமியின் ஈர்ப்பில் வளரும் நிலை கொண்டு தான் பூமியின் இயற்கைக் கால நிலைகள் உள்ளன இன்று.

இந்நிலையில் சப்தரிஷிகளின் நிலை என்ன…?

பல கோடி நட்சத்திர மண்டலங்கள் உண்டு. வளர்ந்து கொண்டேயுள்ள சுழன்று கொண்டே மிதந்து கொண்டேயுள்ள செயலில் தான் நாம் உள்ளோம்.

மிதப்பின் மிதப்பாக… உருளும் தன்மையில் உருவமாக.. ஞானத்தை வளர்க்கும் மனிதக் கரு உரு நிலை வளர.. ரிஷிகளினால் வளர்க்கப்படும் வளர்நிலை எந்நிலை கொண்டதாக உள்ளது இன்று…?

உருவாகும் சக்திக்கே உருவகம் தந்தவர்கள் நம் சப்தரிஷிகள் தானப்பா…!
1.இந்த மனிதக் கரு உரு ஞானத்தை வளர்க்க
2.அவர்கள் ஏற்படுத்திய வழிப்படுத்தும் செயலாகத் தானப்பா இன்று நாம் வாழ்கின்றோம்.
3.அவர்கள் ஓட்டிச் செல்லும் வாகனத்தில் அமர்ந்துள்ளவர்கள் தான் நாம்.

சூரியனை ஜீவனாக வைத்து நாற்பத்தி ஏழு மண்டலங்களை அங்கங்களாக வைத்து உருவாக்கிய வாகனத்தில் அமர்ந்துள்ள ஜீவ சக்தியை ஓட்டிச் செல்பவர்கள் சப்தரிஷிகள் தானப்பா…!

ஜீவ சக்தி உருவாகும் நிலை எப்படி…?

மிதந்து கொண்டேயுள்ள பல் சுவை கொண்ட நீரின் ஆவியானது திடம் கொண்டு கனமாகி.. ஈர்ப்பின் சழற்சியில் ஆரம்ப ஈர்ப்பு நிலைக்கொப்ப… மிதந்து கொண்டேயுள்ள நிலையிலிருந்து கனமாகி… “உந்தித் தள்ளும் ஈர்ப்பின் நிலை பெறுகின்றது…”

எச்சுவையை ஆரம்பத்தில் ஈர்த்து ஈர்ப்பிற்குச் சுழன்று தங்க இடம் கொள்ளாது பல சுவைகளை ஈர்த்து கனம் கொண்டு திடமாகி நகர்ந்து ஓடுகின்றது.

“தங்க இடம் கொள்ளாமல்…!” தன் சுழற்சியின் ஈர்ப்பில் சுழன்று வளர்ந்தது தான் சூரியன் சந்திரன் வியாழன் புதன் சனி மற்றெல்லா வளர்ந்த மண்டலங்களும்… மற்ற நாம் காணும் நட்சத்திர மண்டலங்களும்…!

இயற்கையின் செயலாக்கங்களையும் சப்தரிஷிகளின் செயலாக்கங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே சிறுகச் சிறுக உங்களுக்குள் புகட்டி வருகின்றேன்.

Leave a Reply