ஆறாவது அறிவிலிருந்து ஏழாவது அறிவுக்குத் தான் நாம் செல்ல வேண்டும்… ஐந்துக்கு அல்ல…!

ஆறாவது அறிவிலிருந்து ஏழாவது அறிவுக்குத் தான் நாம் செல்ல வேண்டும்… ஐந்துக்கு அல்ல…!

 

தாவர இனங்களுக்கெல்லாம் ஐந்து புலனறிவு தான்.
1.அந்தச் செடி கொடிகளை வேக வைக்காமல் சாப்பிடும் எந்த உயிரினமானாலும் மிருகமானாலும்
2அந்த உணர்வின் சத்தாக அதற்குள் இயங்கி அது எண்ணமாகி
3.அதே ஐந்து புலனறிவாகத் தான் அதுவும் இயங்கும்.

ஒரு வேப்பமரம் கசப்பின் சத்தை அதைத் தன் உணர்வால் கவர்ந்து வளர்வது போல… ஒரு மாடோ மற்ற மிருகமோ எந்தச் செடியை அது நுகர்ந்து தன் உணர்வால் எடுத்துக் கொண்டதோ அதை நுகர்ந்து பார்த்து… தன் இனமான சத்தை அது வளர்ந்து அது உணவாக உட்கொள்ளும்.

அது உணவாக உட்கொண்டாலும் அது உடலில் கருவாகி அதனின் குட்டியாகப் படும்பொழுது இது எந்தெந்த உணர்வின் உணவை அது உட்கொண்டதோ அந்த உணர்வின் சத்து கருவிலே விளையும் அந்த கருவுக்குள் ஊன்றி அது ஈன்ற பின் இந்தத் தாய் அதற்குச் சொல்லிக் கொடுப்பதில்லை.

தன் உடலில் எத்தகைய உணர்வுகள் தாய் அதை உணவாக உட்கொண்டதோ அதனுடைய கன்றும் இது பிறந்த பின் அது வளர வளர இந்தத் தாய் எந்தெந்த ஆகாரத்தைச் சாப்பிட்டதோ அந்த ஆகாரத்தை இந்தக் கன்றும் சாப்பிட ஆரம்பிக்கும்.
1.அந்தத் தாய் வயிற்றிலே விளைந்த இந்தக் கருவின் உணர்வுகள் கொண்டுதான் இந்தக் கன்றும் உணவாக எடுக்கும்.
2.புதிதாக நாம் எதைப் போட்டாலும் அது எடுக்காது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் நாம் நல்லவைகளை எண்ணினாலும் அதற்குள் நஞ்சான அசுர உணர்வுகள் புகுந்து விடுகிறது.

நமக்குள் புகுந்து நரக வேதனையாகச் செயல்படுத்தும் இந்த அசுரனை நீக்கத்தான் “கண்ணன் அசுரனைக் கொல்ல உபாயத்தைக் கொடுத்தான்…” என்று காவியங்கள் காட்டுகின்றது.

காரணம்… யாரை உற்றுப் பார்த்து “நம்மை வேதனைப்படுத்துகிறார்…” என்று எண்ணுகிறோமோ அவருடைய வேதனைப்படுத்தும் உணர்வுகள் நமக்குள் வருகின்றது.

1.எந்த வேதனை அவர்கள் உடலில் வித்தாக (வினையாக) உருவானதோ
2.அவர் வெளிப்படுத்தும் உணர்வுகளை நாம் கேட்டறிந்து நுகரும் போது
3.நம் உடலிலே விளைந்தது நமக்குள் வித்தாக ஊன்றி விட்டால்
4.அவரை மீண்டும் மீண்டும் நினைக்கச் செய்து
5.நம்மை எப்படிக் கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணினாரோ எத்தகைய தவறு நிகழ வேண்டும் என்று எண்ணினாரோ
6.அந்த உணர்வுகள் அனைத்தும் நமக்குள் வந்து நம் நல்ல குணங்களைச் செயல்படுத்தாதபடி
7.நமக்குள் வேதனைப்படும் நிலையாக நரகலோகத்தை நமக்குள் பெருக்கிக் கொண்டே போகும்.

இப்படி அந்த அசுரன் (வேதனைப்படுத்தும் உணர்வு) நமக்குள் சென்றாலும்
1.நம் உயிரான விஷ்ணு அதற்கு வரம் கொடுப்பதும்… எண்ணியதை இயக்கச் சக்தியாகப் பிரணவமாக்கி ஜீவனாக்கச் செய்வதும்
2.அதன் வழியிலே பிரம்மமாகி (பிரம்மா) சிருஷ்டிப்பதும்
3.சிருஷ்டித்த உணர்வுகள் நம் உடலாகச் சிவமாக்குவதும்
4.நாம் எண்ணியது அனைத்தும் உருவாகும் இடமாக இந்தச் சிவலோகத்திற்குள் இந்திரலோகமாக
5.இதைச் சித்தரித்துத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையில் நாம் எத்தனையோ வேதனைகளைக் கடந்து அந்த வேதனையை நீக்கிடும் ஆற்றல் மிகுந்த சக்தியாகப் பெற்றுத் தான் வந்திருக்கின்றோம்.

எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அதை உருவாக்கும் ஆற்றல் பெற்றவன் என்று “மனிதனின் ஆறாவது அறிவைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்…”

1.அந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து
2.நாம் செய்யும் நன்மைக்குள் புகும் தீமையான உணர்வுகளை வேக வைத்து அதன் செயலாக்கங்களை வீழ்த்தி
3.நல்லதைக் காக்கும் சக்தியாகச் செயல்பட வேண்டும்
4.ஏழாவது நிலையான ஒளியாக மாற்ற வேண்டும் என்பதே ஞானிகள் நமக்கு உரைத்தது.

Leave a Reply