நாம் பணிய வைக்க வேண்டியது எதை…?
ஓ…ம் ஈஸ்வரா என்று சொல்லும் போது பிரணவம்… நாம் எண்ணியதை உயிர் ஜீவன் பெறச் செய்கின்றது. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்றும் அது எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் என்று உயிரிடம் வேண்டுங்கள்.
கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருங்கள்.
1.நீங்கள் பெற வேண்டும் என்று நான் (ஞானகுரு) கொடுக்கும் இந்த உணர்வு
2.அந்த உயர்வின் தன்மையைப் பெறக்கூடிய தகுதியைப் பெறச் செய்யும்.
இந்நேரம் வரை உபதேசித்த அந்த ஆற்றல் மிக்க சக்தியை “நீங்கள் எண்ணும் போதெல்லாம் எண்ணியவுடனே அதைக் கிடைக்கச் செய்து…” உங்களுக்குள் துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் அந்த உணர்வுகள் அனைத்தையும் தாழ் பணியச் செய்வதே “எமது ஆசி” (ஞானகுரு).
ஆகையினால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று மேல் நோக்கி நினைவினைச் செலுத்தி உயிரிடம் வேண்டித் தியானியுங்கள்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்… எங்கள் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும்… நாங்கள் பார்ப்போருக்கெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும்…! என்று இதே மாதிரி நான் சொன்னதை நீங்கள் எண்ணி எடுத்துப் பாருங்கள்.
உங்களுக்குள் துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் உணர்வுகள் அனைத்தும்
1.அது தாள் பணிந்து… உங்களுக்குள் அது ஒத்துழைத்து… உயர்வான எண்ணங்களுக்கு வழி காட்டியாக அது அமையட்டும்.
2.எதுவும் கெட்டதல்ல… உங்களுக்கு அது வலுவூட்டும்… வழி காட்டியாகவும் அது இருக்கும்
3.கெட்டது என்று அது தான் காட்டுகின்றது… அதை நீக்கிவிட்டு நாம் செல்ல வேண்டும்.
கெட்டது என்று வழி காட்டினாலும் அந்த உணர்வின் தன்மை அது எனக்குள் சேர்ந்து விடுகிறது. ஆனால் வழி காட்டிய நிலைகள்
1.எனக்குள் பணிந்து அந்த நல் வழி காட்டியாக இருக்க வேண்டும்.
2.அந்த நல் வழி காட்டிய விஷம் என்னை ஆட்கொள்ளக் கூடாது.
மெய் ஒளி பெறும் அந்தத் தகுதி கொண்டு நாம் அதைப் பெற வேண்டும் என்பதற்குத் தான் ஆசி வாங்குவது. ஆகையினால் இதை மீண்டும் மீண்டும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
1.அரசனுக்குக் கீழ்படிதல் என்பது கௌரவத்திற்காகத் தான்…!
2.ஒரு பெரியவரைக் கண்டால் அடிபணிதல் வேறு.
3.ஆனால் நமக்குள் துன்பங்களைப் பணியச் செய்வது என்பது வேறு.
ஆகவே மெய் ஒளி வளர்ந்து நமக்குள் தீமை செய்து கொண்டிருக்கும் அந்த உணர்வின் தன்மையைத் தாழ் பணியச் செய்ய வேண்டும் என்பதே ஆசீர்வாதமாகக் கொடுக்கும் அருள் வாக்கின் தன்மைகள்.
நீங்கள் ஒவ்வொருவரும் மெய் ஒளி பெறவேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).
“தியானத்தில் சக்தி பெறுகிறோம்…” என்பதை நாம் எப்படி அறிவது…? – ஈஸ்வரபட்டர்
தியானத்தின் முறை கொண்டு நம் எண்ணம் ஞானத்தின் ஈர்ப்பு நிலைக்கு வழி பெறும் காலங்களில் வளர்ச்சி நிலை எப்படி இருக்கும்…?
குழந்தைப் பிராயத்தில் குழந்தையின் உடல் மற்றும் அங்க அவயங்கள் உறுப்புகள் எல்லாம் மிருதுத் தன்மையுடன் இருக்கின்றது. பிறகு வளர வளர உடல் உறுப்புகளும் தசை நார்களும் வலுப் பெற்று வளர்கின்றது.
அதைப் போன்று நம் ஆரம்பத் தியானத்தில் நம் எண்ண நிலை எல்லாம் வளர்ச்சி பெற்று.. ஒரு நிலை பெற்று… பக்குவம் எய்தி… அதன் ஈர்ப்பின் வழித் தொடருக்குப் பிறகு பல நிலைகளை நாம் காணலாம்.
நம் எண்ணத்தினாலேயே நாம் எடுக்கும் சுவாசத்தினால்…
1.பல மணங்களை உணரும் பக்குவமும்
2.பல சுவையின் ஈர்ப்பில் உண்ட களிப்பு நிலையும்
3.பல ஒளி அலைகளைக் கண்டுணர்ந்து மகிழும் நிலையும்
4.நம்மின் உருவின் உருவ நிலையைக் காணும் நிலையும்
5.இந்த உலகின் சுழற்சி ஓசையான “ஓ…ம்” என்ற ஒலி ஈர்ப்பின் அலைதனை ஈர்த்துக் கேட்கும் வழித் தொடரின் நிலையும்
6.இதன் வளர்ச்சியில் பல சித்தர்களின் நிலையுடன் தொடர் கொள்ளும் நிலையும்
7.இப்படி ஒன்றின் வளர்ச்சி கொண்டு ஒன்றின் மேம்பாட்டில் தியானத்தின் ஈர்ப்பு வளர்ச்சி நிலை பெற்ற பிறகு
8.சித்தன் நிலையை நாம் அடைய முடியும்.
புகைப்படம் எடுப்பவன் ஓர் பிம்பத்தைப் பலவாக மறு பிம்பங்களை எப்படி எடுத்துத் தருகின்றான்…? ஒரே பிம்பத்தை நிலைக் கண்ணாடியைப் பல கோணத்தில் வைத்துக் காணும் பொழுது நம் பிம்பத்தைப் பலவாகக் (எண்ணிக்கையில்) காணுகின்றோம்.
இதைப் போல் சித்து நிலை பெற்றவர்கள் இந்த உடல் என்னும் கூட்டை…
1.இந்த உடலில் உள்ள உயிரணுவை ஜீவ உயிரை இந்த உடலிலிருந்து பிரித்து
2.இந்த உடலுக்குகந்த பிம்ப உடலின் பிம்பத் தன்மையையும்
3.இந்தக் காற்றிலுள்ள அமில சக்தியை அந்த ஜீவனுடன் கூட்டிக் கொண்டு பல இடத்தில் ஒரே சமயத்தில் செயல் புரிகின்றனர்.
இருந்த நிலையிலிருந்தே ஜீவ உயிரணுவுடன் எந்த மண்டலத்திற்கும் எந்த இடங்களுக்கும் நினைத்த மாத்திரத்தில் சென்றறிந்து வருவதோடு மட்டுமல்லாமல் பல சக்தி அமிலங்களையும் எடுத்து வருகின்றனர்.
விட்டுச் சென்ற உடல் கூட்டின் அவயங்களெல்லாம் அந்த ஜீவ உயிர் இல்லாமலே உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களுக்கும் அந்த உயிரைப் போன்று அனைத்து அணுக்களும் தாமாகச் சுவாசமெடுத்து இயங்கக்கூடிய சக்தி பெற்று விடுகின்றன.
எல்லா உயிரணுக்களுமே அந்த உடலின் ஜீவனைப் போன்று தானாக இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் அந்த உடல் பிம்பத்திற்குச் செயலாற்றவோ… எண்ணத்தின் ஈர்ப்பின் நிலையோ… அந்த ஜீவ உயிர் வரும் வரை இருக்காது.
“கூடு விட்டுக் கூடு பாயும் நிலை…!” என்று உணர்த்துகிறார்களே அன்றி உண்மைச் சித்தன் இந்த உயிர் ஜீவனுக்கு எத்தனை பிம்ப நிழலையும் அவனால் எடுக்க முடியும்.
அமில குணத்தைச் சேர்ந்த புகைப்படத்தை நம்புகின்றான் மனிதன். பாதரசத்தின் துணையுடன் நிலைக் கண்ணாடியில் தன் உருவத்தை நம்புகின்றான்.
அதே நிலை நம் கண்ணின் கருமணியிலும் உள்ளது… நீரிலும் உள்ளது. தெளிந்த நீரில் நம் பிம்பத்தைக் காண்கின்றோம்.
அதைப் போன்று தான் சித்தனுக்கு உடல் விட்டுப் பிரிந்த தன் உயிர் ஜீவனுடன் எந்நிழல் பிம்பத்தையும் இந்தக் காற்றுடன் கலந்துள்ள அமில குணத்திலிருந்து பிரித்தெடுத்து ஒரே இடத்திலிருந்து பல இடங்களுக்கும் செல்கின்றான்.
இந்த நிலையை உணர்த்தினால் மனிதன் உடலிலிருந்து உயிரை எப்படிப் பிரித்தெடுப்பது…? என்று வினா எழுப்புவான்.
ஒவ்வொரு மனிதனும் தான் எடுக்கும் சுவாச அலையின் ஈர்ப்பினால்
1.உடலின் அனைத்து அணுக்களும் தன் வசப்பட்டு
2.ஒவ்வொரு அணுவும் உயிர் ஜீவனின் சக்தி கொண்ட நிலை பெற்று
3.வாழ்க்கையில் எந்த ஒரு நிலையிலும் மற்ற ஈர்ப்பின் நிலைக்கு அடிமைப்படாமல்
4.எந்த எண்ணமும் தன் எண்ணமாக எண்ணும் முறை பெற்று
5.தியான வளர்ச்சியுடன் எடுக்கும் சுவாச அலையின் ஈர்ப்பில் ஒவ்வொரு நிலையும் வழித் தொடர் பெற்ற பிறகு
6.அந்தச் சித்தனின் நிலை பெறத் தக்க உயிர் ஜீவனின் எப்பிம்பமும் காணும் நிலையை எய்தலாம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
நாம் பிறருடைய தீமைகளைப் பார்க்கும்போது நம் நல்ல உணர்வுகளை அந்த விஷத் தன்மையான உணர்வுகள் மறைத்து விடுகின்றது. (ஒரு திரை போல்)
அப்படி மறைத்ததைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றால்
1.அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் கவர்ந்து
2.அவ்வப்போது நம்மை மறைக்கும் அந்தச் சிறு சிறு திரைகளை அகற்றிட வேண்டும்.
3.அன்றன்று அறிவின் தன்மை கொண்டு நாம் தெளிவாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.
எதன் துணை கொண்டு…?
அதற்குத்தான் இப்போது இடைமறித்து… இடைமறித்து உங்களுக்குள் ஞானிகளைப் பற்றித் திரும்பத் திரும்ப உபதேசிகின்றேன். மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் என்றால் உங்களுடைய உணர்வின் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுடன் இணைக்கச் செய்கின்றேன் (ஞானகுரு).
1.உங்கள் ஒவ்வொரு அறிவிலும் (உணர்விலும்) இணைத்த பின்
2.தீமைகளைக் கவராது “அந்தந்த அறிவு” அது தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்.
அத்தகைய நிலைகளை உருவாக்கினால்தான்… இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளும் காற்று மண்டலத்தில் இருக்கும் நச்சுத் தன்மைகளும்… பிற மனிதன் செய்யும் தவறான உணர்வும்… விஞ்ஞான அறிவால் ஏற்படும் தீமைகளும் நமக்குள் புகாது… நம்மை இயக்காது… தடுக்க முடியும்.
பகுத்தறிவு கொண்டு படித்திடும் விஞ்ஞான அறிவை எழுத்து வடிவில் உற்றுப் பார்த்து அதன் உணர்வை நாம் கவர்ந்து நமக்குள் பதிவு செய்து கொண்டாலும்… இங்கே பூமியிலே பரவிக் கொண்டிருக்கும் உணர்வுகளை நாம் கவர்ந்தாலும்… அது எல்லாம் நம் ஆன்மாவில் இணைந்து கொண்டே உள்ளது.
அதாவது… எப்படி இந்தப் பிரபஞ்சத்தில் தீமைகள் படர்ந்துள்ளதோ அது நம் பூமியான இந்த பரமாத்மாவில் (காற்றிலே) வளர்ந்துள்ளதோ இதைப் போல நம் ஆன்மாவிலும் இது உண்டு.
அதே சமயத்தில் நம் உடலுக்குள் எண்ணிலடங்காத அணுக்கள் ஜீவான்மாக்களாக வாழுகின்றது. ஆகவே இந்தப் பூமியில் எந்த அளவுக்குத் தீமைகள் பரவி உள்ளதோ அந்தத் தீமையின் உணர்வுகளை நம் எண்ணத்தால் (நம் சந்தர்ப்பம்) பதிவாக்கி இருந்தால் அந்தத் தீமையின் அணுக்கள் உடலுக்குள்ளும் விளையும். அந்த அணுக்கள் தீமைகளைத் தான் விளைவித்துக் கொண்டே இருக்கும்.
ஏனென்றால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் இதற்கு முன் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் எலும்புக்குள் ஊனாக இருக்கின்றது.
அந்த எலும்புக்குள் ஊனாக இருக்கப்படும் பொழுது அதனின் வளர்ச்சி
1.ஒரு மனிதனைக் கண் கொண்டு பார்க்கும்போது அவர் தவறு செய்கின்றார் என்று பதிவாக்கி விட்டால்
2.மீண்டும் அதே நினைவு கொண்டு கண்ணுக்கு வரப்படும்போது
3.எந்த மனித உடலிலிருந்து தவறு செய்யும் உணர்வுகள் அலைகள் வந்ததோ
4.அந்த உருவத்தை நமக்குள் நுகரச் செய்து அதே கோபத்தின் உணர்வுகளையோ அல்லது
5.அவனைக் கண்டு அஞ்சியிருந்தால் அந்த அச்சத்தையோ நமக்குள் செயலாக்குகின்றது.
நமக்குள் பதிவு செய்த இந்த வித்து… “ஊழ்வினை” என்ற நிலையில் வினைக்கு நாயகனாக அந்த உணர்வின் இயக்கமாக்கி நம்மை அதன் வழிகளில் வளர்த்துக் கொண்டுள்ளது.
அதைப் போன்ற தீமைகளை (வினைகளை) மாற்றுவதற்குத்தான் திரும்ப திரும்பச் சொல்லி உங்கள் உணர்வின் ஈர்ப்புகளை ஞானிகளின் பால் கொண்டு வரச் செய்கிறோம்.
குருநாதர் எனக்கு இராஜதந்திரமாகக் கொடுத்த சக்தி
எத்தனையோ பேர் எத்தனையோ விதமான கஷ்டங்களில் இங்கே வந்திருப்பீர்கள். குடும்பத்தில் கஷ்டமாக இருக்கும்… பிள்ளை சொன்னபடி கேட்காதிருக்கும்… நோய் வந்து கஷ்டமாக இருக்கும்… உதவி செய்தும் கஷ்டமாக இருந்திருக்கும்… தொழிலில் நஷ்டம் இருந்திருக்கும்… வியாபாரத்தில் மந்தமாக இருக்கும்… இப்படி எத்தனையோ சிக்கல் இருக்கும்.
இந்த எண்ணம் உள்ள அத்தனை பேருக்குமே
1.எந்தெந்த எண்ணத்தில் நீங்கள் வந்தீர்களோ அந்தந்த எண்ணங்கள் மாறி
2.உங்களுக்கு உயர்வான சக்தி கிடைக்க வேண்டும் என்று தான்
3.அருள் உபதேசத்தைக் கொடுத்து இந்த உணர்வை உங்களுக்குள் ஊடுருவச் செய்து
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்கிறோம் (ஞானகுரு).
உங்கள் உடலில் உள்ள எல்லாக் குணங்களிலும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியையும் 27 நட்சத்திரங்களின் உணர்வுகளையும் ஈர்க்கும்படித் தூண்டி… இந்த உணர்வின் தன்மை கொண்டு காந்த சக்தியைப் பெறச் செய்து… எல்லோருடைய உள்ளங்களிலும் மகிழ்ச்சி பெறச் செய்கிறோம்.
உதாரணமாக… குழம்பிலே புளிப்பு உப்பு காரம் துவர்ப்பு எல்லாம் போட்டு ஒரு ருசியாக எப்படிக் கொண்டு வருகின்றோமோ இதே போல் எல்லோருடைய உணர்வுகளிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கும்படி செய்து கொண்டிருக்கின்றோம்.
ஞானிகளைப் பற்றி உபதேசித்து அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்யும்போது அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கிறது.
அப்படிக் கவர்ந்த உணர்வுகளை உங்கள் செவிகளில் படும்படி செய்து உங்கள் உடலுக்குள் இருக்கும் குணங்களுக்குள் இது ஆழமாக ஊடுருவச் செய்து “1008 குணங்களிலும்…” பதியச் செய்கின்றோம்.
1.ஏனென்றால் எனக்கு குருநாதர் எப்படி இராஜதந்திரமாக உள்ளுக்குள் நுழைய வைத்தாரோ
2.அதைப் போல் தான் உங்களுக்குள் இந்த உணர்ச்சிகளைத் தூண்டி… உணர்வின் தன்மையைத் தட்டி எழுப்பி
3.உங்களுக்குள் துன்பத்தை ஊட்டி கொண்டிருக்கும் வேதனைகள் நீங்குவதற்கு இதைச் செய்கிறோம்.
அந்த உணர்வின் தொடரை நீங்கள் மீண்டும் இதே போல் எண்ணி எடுத்தீர்கள் என்றால் காற்றிலிருந்து அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகளைப் பெற முடியும். உங்கள் துன்பத்தைப் போக்கிக் கொள்ளலாம்.
1.குருநாதர் எனக்குத் துன்பத்தைக் கொடுத்து அந்த ஆற்றலைத் தெரிய வைத்தார்.
2.உங்களுக்குத் துன்பம் வரப்போகும் போது இந்த முறையைக் கையாண்டால் அதனின் இயக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
3.தியானத்தில் இந்தச் சக்தியை எடுத்ததால் இந்தத் துன்பம் போனது…! என்று நீங்கள் அறியலாம்.
ஆக… கஷ்டம் இல்லாமல் நீங்கள் பெறுகின்றீர்கள். “சாமி இலேசாகச் சொல்கிறார்…” என்று அலட்சியமாக இதை விட்டுவிடாதீர்கள். காரணம்…
1.வாக்கினால் யாம் சொல்லும் போது
2.இதை எண்ணி எடுப்பவர்களுக்குச் சீக்கிரம் நல்லதாகிறது.
நீ உருப்படுவாயா…? என்று ஒருவர் நம்மைச் சொன்னால் நீ அப்படியா சொல்கிறாய்… என்று அதே வார்த்தையை நாம் எடுத்துக் கொண்டால் என்ன ஆகிறது…!
நம் வியாபாரத்தில் மந்தம்… கை கால் குடைச்சல்… தலை வலி,,, மேல் வலி என்று உங்களை இப்படிக் கீழே கொண்டு போகிறது.
அதே போல் துன்பத்தைத் துடைப்பதற்குச் “சாமி சொன்னாரே…” என்று நினைத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்தீர்கள் என்றால் இந்தக் காற்றிலிருந்து வரும் அந்தச் சக்தி உதவி செய்யும்.
உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து அந்த ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் சேர வேண்டும் என்று உங்களைப் பிரார்த்திக்கும் போது…
1.சில நேரங்களில் விண்…விண்.. என்று
2.உங்கள் நெற்றியிலோ உடலிலோ இந்த உணர்வுகள் ஏற்படும்.
3.எம்முடைய வாக்கினைப் பதிவு செய்தவர்களுக்கு நிச்சயம் இந்த உள் உணர்வுகள் வரும்.
உங்கள் உடலில் இருக்கும் துன்பங்கள் நீங்க வேண்டும் என்பது தான் என் பிரார்த்தனை. உங்கள் உயிரான ஈசனைத் தான் நான் பிரார்த்தனை செய்கிறேன். உயிர் தான் இந்த உடலை உருவாக்கிய ஆற்றல்மிக்க சக்தி.
இப்படி ஆயிரக்கணக்கானவர்களை நான் பிரார்த்திக்கும் போது அந்த “ஆயிரம் பேரின் சக்தியும்…” எனக்குக் கிடைக்கிறது. குருநாதர் எனக்குக் காட்டிய வழி இது தான்.
ஆகவே பல உணர்வின் தன்மையை எடுத்துச் சூரியன் எப்படி ஒளியாக மாறுகிறதோ அதே மாதிரி நீங்களும் இதைச் செய்து பாருங்கள். உங்களுக்குள்ளும் அந்த அரும் பெரும் சக்தி கூடும். ஆற்றல்மிக்க மெய் ஞானியாக வளர்வீர்கள்.
“பயம்” என்ற அச்ச உணர்வுக்கு இடம் தராத சுவாச அலையுடன் ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும் – ஈஸ்வரபட்டர்
முற்றும் துறந்தவன் முனிவன்…! பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்தால்தான் தெய்வத்தின் ஒளி… மோட்சம் அவனுக்குக் கிட்டும்…! என்ற சொல் நடை முறையில் உள்ளது.
1.முற்றும் துறந்தவன் தான் முனிவன்…! என்றால் அது எதன் அடிப்படை கொண்டு பகர்ந்த பொருள்..?
2.முந்தைய நாட்களில் நம் முன்னோர்களால் வெளியிடப்பட்ட கருத்துக்களின் உண்மைக் கோவையை உணர்ந்தோமா நாம்…?
முற்றும் துறந்த நிலை என்பது வாழ்க்கையில் பற்று… பாசம்… கடமை… இவற்றிலிருந்து விலகித் “தன் நலம் காணத் துறவறம் பூண்டு மெய் அருள் பெறும் நிலை…!” அல்ல.
ஒவ்வொரு ஆத்மாவுக்குள்ளும் நிறைந்துள்ள பல கோடி அணுக்களின் எண்ணத்தின் வளர்ச்சியில் வாழ்ந்திடும் மனிதன்
1.தன் எண்ணத்திற்குள் உந்தப்படும் உணர்ச்சியிலிருந்து
2.அந்த உந்தலுக்கு அடிபடிணியாமல்… “அந்த உந்தலைத் துறக்க வேண்டும்…!”
பயம்… என்ற உணர்வினால் உருளப்படும் கோளம் இந்த மனிதக் கோளம்.
மனிதனின் எண்ணமே முற்பிறவியில் பிறப்பாசை கொண்டு இந்தப் பிறப்பில் கருவிற்கு வருவதனால் பயம் என்ற அச்ச உணர்வு குழந்தைப் பிராயம் முதல் கொண்டே மனித ஆத்மாவுக்கு வருகின்றது.
மனிதனைக் காட்டிலும் அதிகமான இந்தப் பயம் என்ற அச்ச உணர்வு மிருகங்களுக்கும் பட்சிகளுக்கும் அதிகமாக உண்டு. தற்காத்துக் கொள்ளும் சுவாச அலையின் சக்தியும் அதிகமாக உண்டு.
“மனிதனிலிருந்து வந்த மிருகத்திற்கு” அந்த உணர்வின் அலை அதிகமாக… ஒவ்வொரு பிறவியும் எடுத்து மிருகப் பிறவிக்கு வந்த பிறகு அதன் சுவாச அலையின் ஜீவன் கொண்ட உடல் அமைப்பு வளரத் தக்க நிலையிலேயே…
1.இந்தத் தற்காத்துக் கொள்ளும் அமிலத்தின் சக்தி குணம் வீரியப்பட்டு
2.இயற்கையாக அதனுடைய உருவத்திலேயே சில உணர்வுடன் மிருக ஜெந்துக்களும் பறவைகளும் பிறப்பெடுத்து வருகின்றன.
மனிதனின் நிலையுடன் அதிகப்படியான எண்ண அலையின் மோதலினால்
1.தன் எண்ணத்திற்குகந்த… தன் உடலில் ஏற்றிக் கொண்டுள்ள…
2.பல உயிராத்மாக்களின் (ஆவிகளின்) நிலையும் கலந்துள்ளன.
அதுவும் அல்லாமல் ஒவ்வொரு தாய் தந்தையரின் ஆண் பெண் உடலுடன் பிறப்பிற்கு வரக்கூடிய பல உயிரணுக்கள் கர்ப்பம் தரிக்கும் நாட்களுக்கு முதலிலேயே ஏறிவிடுகின்றன.
இப்படிப் பல உயிரணுக்கள் நம் (மனிதனின்) ஆத்மாவுக்குள் உடலில் கலந்துள்ள நிலையில் இந்தப் பயம் என்ற உணர்வின் நிலை அதிகப்பட்டு விடுகிறது.
மனிதனின் உணர்வின் எண்ணத்தைக் காட்டிலும்… மனிதனின் உடலில் உள்ள அணுக்களும் உயிராத்ம அணுக்களும்…
1.தன் செயலுக்கந்த நிலை அந்த உடலில் ஏற்படாத குணம் கண்டவுடன்
2.தன் விடுதலையை எண்ணி அதனுடைய எண்ண வேகங்கள் வரும் பொழுது
3.அதனுடைய உந்தலுக்கு மனிதன் ஆட்பட்டு விடுகின்றான்.
மனிதனுக்குப் பயம் என்ற உணர்வு அற்ற நிலை ஏற்பட்ட பிறகுதான் முனிவன் என்ற நிலையை எய்துகின்றான். மனித ஆத்மாவில் “பயம்” என்ற அச்ச உணர்வுக்கு இடம் தராத சுவாச அலையுடன் ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும்.
1.எந்நிலை கொண்ட இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் தன்மையிலும்…
2.இந்த மரண பயம் ஏற்படாவிட்டால் அந்த இடத்தில் தெளிவின் வழி கிடைக்கும்.
ஒர் அறையில் ஜீவன் பிரிந்த உடலுடன் நாம் தனித்திருந்தாலும் பயம் என்ற உணர்வை அண்டவிடாமல்… “அதை ஒரு ஜீவனற்ற வஸ்து… பொருள்…!” போன்று நம் எண்ண நிலை இருந்திடல் வேண்டும்.
ஒவ்வொரு மனித ஆத்மாவின் உடலும் உயிரணுக்களும் உயிர் ஆத்ம அணுக்களும் பல உள்ள பொழுது மனிதனுக்கு
1.இந்த மரண பயம் என்ற பயம் ஏற்படாவிட்டால்
2.மனிதனுக்குள் உள்ள இந்த ஆத்மாவே
3.ஓர் மனிதனின் செயலைப் பல கோடி மனிதர்கள் செய்யத்தக்க உணர்வு சக்திகளை
4.மனிதனின் உடலில் உள்ள உயிரணுக்களே உதவி செய்யும்.
தன் நிலை பெற வேண்டும் என்பதின் உட்பொருளின் உண்மை நிலை…
1.தன் நிலை பெறும் மனிதனின் எண்ணத்திற்கு
2.தன் நிலைக்கொப்ப அனைத்து உயிரணுக்களும் ஒன்று போல் சக்தியை
3.அந்த (அவனின்) வலுவின் வலுவுடன் கூட்டச் செய்யும்.
பல நினைவுடைய மனித ஆத்மாவின் உடலில் உள்ள உயிரணுக்களும் அதனதன் நினைவின் வளர்ச்சியின் செயலுக்குத் தான் “பல நினைவுடன்…” உள்ள மனிதனுக்கு உதவி புரியும்.
மிருகங்களைக் காட்டிலும் மனிதனின் எண்ணம் வளர்ச்சி பெற முடியும் என்ற அடிப்படையில் தான்
1.சம நிலை கொள்ளும் மனிதனுக்கும் சாந்த குணம் கொண்ட
2.பசுவைப் போன்ற சில பிராணிகளுக்கும் அதனின் சூலில் ஒவ்வொரு சிசு பிறக்கின்றது.
ஆனால் பல பல எண்ணங்கள் கொண்ட உணர்வின் இயக்கத்தால் மனிதனுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளும் அதற்கு மேற்பட்ட மூன்று நான்கு ஐந்து என்ற எண்ணிக்கையில் குழந்தைகளும் உருவாகக் காரணமாகின்றது.
இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
“சித்ரா பௌர்ணமி…” அது எப்படி ஒளியாக இருக்கின்றதோ அதைப் போல் நம் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிட வேண்டும்.
ஆனால் பௌர்ணமி அன்று முழுமையாகப் பிரகாசித்தாலும் அதற்கடுத்து நாள் மற்ற கோள்களின் தன்மைகள் சூரியனிலிருந்து வரக்கூடிய ஒளிக்கதிர்களை மறைத்தால் அந்த நிழல் பட்டு ஒளி மங்கத் தொடங்குகின்றது.
பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்று அறிந்திடும் அறிவாக கார்த்திகேயா என்று நாம் அறிவின் தெளிவாக இன்று இருக்கின்றோம்.
ஆனால் ஒரு மனிதன் வேதனைப்படும்படியான சொல்களைச் சொல்லும்போது அந்த உணர்வை நுகர்ந்தால் நம் நல்லறிவு இங்கே இருண்டு விடுகிறது.
நல்ல குணத்துடன் தான் நாம் இருக்கின்றோம். அந்த நல்ல குணம் கொண்டு தான் வேதனைப்படுபவரை உற்றுப் பார்க்கின்றோம்.
1.ஆனால் நாம் நுகரும் வேதனைப்படும் உணர்வுகள்
2.நல்ல அறிவை மேலே மூடுகின்றது திரை போன்று…!
ஏனென்றால் எந்தக் குணத்தை கொண்டு எண்ணுகின்றோமோ இந்த உணர்வின் தன்மை இங்கே உண்டு. அந்த உணர்வின் தன்மை கண்ணுக்குள் தான் காட்டுகின்றது. ஏனென்றால் முதலில் கண்கள் வழியாகத் தான் நமக்குள் எதுவுமே பதிவாகின்றது.
கண்ணால் பதிவாகும்போது…
1.“ஒரு தவறு” என்று இருந்தால் அந்த உணர்வின் தன்மையை நாம் நுகரும்போது எண்ணமாகின்றது.
2.அதாவது கண்களால் பதிவானது உயிரிலே நுகரும் போது அந்த எண்ணங்கள் வருகின்றது.
3.ஆனால் பதிவானதை எண்ணும்போது மீண்டும் கண்ணுக்கே வருகின்றது (சொல்வது அர்த்தமாகிறதல்லவா).
“எனக்கு நன்மை செய்தான்…” என்று எண்ணும்போது அந்த மனிதனின் நினைவு கண்ணுக்கு (திரைப்படம் போல்) வருகின்றது. அப்பொழுது மகிழ்ச்சியாக இயக்கச் செய்கின்றது.
அதே சமயத்தில் “தப்பு செய்திருக்கின்றான்…” என்றால் கண்ணிலே அவனைப் பார்த்தவுடனே… நமக்குள் பதிவான இந்த எண்ணங்கள் “இவன் எனக்கு துரோகம் செய்தான் பாவி…!” என்ற வெறுப்பின் உணர்வை ஊட்டுகின்றது.
1.அது தான் கண்ணால் பதிவு செய்வதும்
2.கண்ணால் பதிவானதை மீண்டும் எண்ணும் போது எண்ணத்தால் நம்மை இயக்குவது என்பது
3.(அதாவது அந்த எண்ணம் தான் நம்மை அடுத்து இயக்குகிறது)
4.எண்ணம் என்பது உணர்வுகள் உணர்ச்சிகள் தூண்டுவது.
ஆகவே புறத்தில் இருப்பதை நாம் நுகர்ந்த பின் இந்த உணர்வின் தன்மை நமக்குள் இயக்குகின்றது. இதைப் போன்ற நிலைகள் நமக்குள் தீமைகளாக உருவாகாதபடி துருவ தியானத்தில் எடுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து நீங்கள் சீராகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தரையில் அழுக்கு இருந்தால் துடைத்துவிடுகின்றோம் நம் உடல் மீது அழுக்கு இருந்தால் துடைத்து விடுகின்றோம். துணியில் அழுக்குப் பட்டால் துடைத்து விடுகின்றோம்.
ஆனால் நம் ஆன்மாவில் படும் அழுக்கினைத் துடைக்கின்றோமா…! அதைத் துடைத்துப் பழக வேண்டும். இல்லை என்றால்… அழுக்கு சேர்ந்தால்… நம் மனம் இருளாகிவிடும்.
முழு நிலாவாக இருக்கும் சந்திரன் அதற்கடுத்து மற்ற கோள்களின் மறைவு வர…வர வர…வர பௌர்ணமி சுருங்கிச் சுருங்கிக் கடைசியில் அது சிறிதாகி விடுகின்றது.
இதைப் போல் தான் நம்முடைய மனிதனின் வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் குரோதம் பழி தீர்த்தல் பழி வாங்குதல் என்ற இந்த உணர்வுகள் வந்து விட்டால் நம் நல்ல குணங்கள் முழுமையாகத் தேய்ந்து விடுகின்றது.
ஆனால் உயிரின் உணர்வுடைய கடைசித் தொக்குகள் உண்டு. அதாவது உயிரணு விண்ணிலிருந்து பூமிக்குள் வந்து தாவர இனச் சத்தைக் கவர்ந்து ஆரம்பத்தில் எப்படிப் புழுவானதோ அதே போல நல்ல குணங்கள் தேய்ந்து விட்டால் உயிரின் தன்மையில் இருண்டுவிடும்.
1.அப்படி இருண்டு விட்டால் விஷம் என்ற நிலைகள் ஆகி
2.அந்த விஷத்தின் உணர்வின் துணை கொண்டே அடுத்த உடல் பெறும் தன்மை அடைந்து விடுகின்றது.
ஆகவே மனிதனாக இருக்கும் நாம் மீண்டும் தேய்பிறையாகக் கூடாது. அருள் ஒளி பெற்ற அருள் ஞானியின் உணர்வை நமக்குள் வளர்த்து இனி என்றுமே ஏகாந்த நிலை என்ற பிறவி இல்லா நிலை பெறுவதே இந்த மனித உடலின் முழுமை…!
நான் யார்…? நம் உடல் என்று அல்ல…! உயிரால் வளர்க்கப்பட்டது தான் மனிதனின் உடல்.
1.உயிருடன் (ஒன்றி) இருக்கப்படும்போது நான் என்று வருகின்றது.
2.நான் நானாக அந்த நானாக (உயிராக) வேண்டும்.
3.உயிரின் உணர்வுகள் நம்முடன் ஒன்றி அந்த உணர்வின் தன்மை இணைந்து வாழ்ந்தால்தான் “நான் நானாகின்றேன்…!”
குருவிடம் ஆசி பெறும் முறை
எதை எண்ணி ஏங்கி நீங்கள் வந்தீர்களோ அந்த ஏக்கத்திற்கொப்ப உயர்ந்த ஞானிகளின் அருள் உங்களுக்குள் படரும். துன்பத்தை விளைவிக்கும் நோயோ துன்பத்தை விளைவிக்கும் சொல்லோ அது எல்லாம் நீங்க வேண்டும் என்று தான் உங்களுக்கு நான் (ஞானகுரு) அருளாசி கொடுக்கின்றேன். அதே உணர்வுடன் நீங்கள் எண்ணி அதைப் பெற்றால் அந்த பலனைப் பெற முடியும்.
மாம்பழத்தைச் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் அதை வாங்கக் கடைக்கு அந்த உணர்வு உங்களை அழைத்துச் செல்கிறது.
அதே போல்
1.மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடலுக்குள் படர வேண்டும்
2.எங்கள் உடல் நோய் மன நோய் நீங்க வேண்டும்
3.எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்
4.எங்கள் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்று ஏங்கினால்
5.நான் கொடுக்கும் அந்த அருள் சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.
அதை விட்டுவிட்டு சாமி…..! என் துன்பம் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறதே… நீங்கள் தான் கடவுளாக இருக்கிறீர்கள்… என்று என் காலில் விழுந்தீர்கள் (அடிபணிந்தீர்கள்) என்றால்
1.உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்கிறீர்கள்
2.நான் உபதேசித்ததை வீணாக்குகிறீர்கள் என்று தான் அர்த்தம்.
பெரியவர் என்று எண்ணி சாமியை (ஞானகுரு) உயர்த்தி விட்டு உங்களைத் தாழ்த்தி விடாதீர்கள். உங்கள் உணர்வின் உணர்வின் எண்ணத்தை உயர்த்துங்கள்.
1.மகரிஷிகளின் உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் செலுத்துங்கள்.
2.உங்களை அறியாது ஆட்டிப் படைக்கும் அந்தச் சக்தியைத் தாழ் பணியச் செய்யுங்கள்.
3.இது தான் ஆசீர்வாதம்…! எனக்குக் குருநாதர் காட்டிய நிலைகள் அது தான்.
மெய் ஒளியின் தன்மையை நமக்குள் கூட்டி நம் எண்ணம் சொல் செயல் அனைத்தையும் புனிதம் பெறச் செய்ய வேண்டும்.
ஒருவர் தீயதின் நிலைகளினால் துன்பப்படுகின்றார் என்றால் நம் சொல் அந்தத் தீயதிலிருந்து அவரை மீட்டி உயர்வான நிலைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.
இந்த இயற்கையின் தன்மை நாம் எதை எடுக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை அது நிச்சயம் வேலை செய்யும்.
ஆகையினால் இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்தவர்கள் பொறுமையும் பொறுப்பு கொண்டு “மற்றவர்களை முந்தி விட்டு நாம் முதலில் ஆசி பெற வேண்டும்…” என்ற எண்ணத்திற்கு வராமல் எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிறுத்தி வாருங்கள்.
எவ்வளவு நேரம் பொறுமையாக இருந்து…
1.மற்றவர்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ
2.அந்த அத்தனை ஆற்றலையும் நீங்கள் பெறுகின்றீர்கள்.
3.நீங்கள் இருந்த இடத்திலிருந்தே அந்தத் தகுதியை நீங்கள் பெறுகின்றீர்கள்.
அவசரப்பட்டோ… வேகமாக வீட்டுக்குப் போகவேண்டும் என்றோ… அந்த வேக உணர்வில் இல்லாதபடி இந்த அருளைப் பெற வேண்டும் என்று இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆகவே வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த அருள் உணர்வைப் பெறும் தகுதியைக் கூட்டி எல்லோரும் உயர்ந்த சக்தியைப் பெற வேண்டும் என்று எண்ணுவதே நல்லது.
ஏனென்றால்… பிறர் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணினால்
2.நாம் முதலில் நலமாகின்றோம்
3.அத்தகைய மெய் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து நம் சொல்லின் தன்மை நமக்கு நல்லதாகின்றது.
நம் சொல்லைப் பிறர் கேட்டாலும் அவர்கள் உள்ளங்களிலும் மகிழச் செய்கிறது. அந்த மகிழ்ச்சியின் தொடர் அவர் நம்முடன் இணைந்து செயல்படும் தன்மையும்
1.நாம் போகும் நிலைகளுக்குத் தடையின்றி வழிப்படுத்துவதற்கும்
2.தடையின்றி வியாபாரம் நடத்துவதற்கும்… நம் காரியங்களை நடத்துவதற்கும்
3.தடையற்ற நிலையில் நாம் என்றுமே மகிழ்ச்சியுடன் வாழ உதவியாகிறது.
ஆகையினால் ஆசீர்வாதம் வாங்கும் போது இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
உங்களுக்குத் துன்பம் வந்தால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் நலமும் வளமும் பெற வேண்டும் எங்கள் சொல்லுக்குள் இனிமை பெறவேண்டும் எங்கள் செயல் எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணிப் பழக வேண்டும்.
வியாபாரத்திலேயோ குடும்பத்திலேயோ நல்லதை எண்ணி எங்கே போனாலும் இந்த முறைப்படி செய்யுங்கள்.
1.நான் (ஞானகுரு) கொடுக்கும் இந்த ஆசீர்வாதம் உங்களுக்குள் பின் தொடர்ந்து
2.எப்பொழுதுமே உங்களுக்கு உறுதுணையாக இருந்து உங்களைக் காக்கும்
3.உங்களுக்கு உயர்வினை ஊட்டும்… மெய் ஒளியை எட்டும் அந்தத் தகுதியையும் உருவாக்கிக் கொடுக்கும்.
பக்திக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனிதன் தன் ஞானத்தின் வளர்ச்சிக்குக் கொடுக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்
இந்த மனிதப் பிறப்பை எடுக்கவே நம் வாழ்க்கையில் காணும் முறைப்படி கர்ப்பத்தில் பத்து மாதம் இருந்து பிறப்பெடுத்து வாழ்ந்து மடிந்து மீண்டும் இதே நிலை என்ற உணர்வுகளும் இது நாள் தொட்டு மனித ஆத்மாவின் உயிர்ப் பிறப்பின் வளர்ச்சி நிலையின் தத்துவ நிலைகளும் உண்மையை உணர்த்தி மனிதனுக்கு நல் வழி காட்டவில்லை.
தாவர வர்க்கமாகி அத்தாவர குண ஈர்ப்பில் வளர்ந்த நிலையில் வளர்ந்த நிலை என்பது…
1.தாவரங்களிலேயே எண்ணிலடங்கா பல கோடி இன வளர்ச்சியுண்டு.
2.ஒன்றிலிருந்து மாறுபட்டு மாறுபட்டு மீண்டும் அந்தத் தாவர இனமே மற்றொன்றாகின்றது… வளர்ந்து கொண்டேயுள்ளது.
இந்தத் தாவரங்களில் பல அபூர்வ உன்னத அமிலக் குணத்தின் ஈர்ப்பில் அது வளர்ந்து வாழ்ந்து அது மடிந்த பிறகு மீண்டும் இம்மண்ணில் அத்தாவர இனத்துடன் இம்மண்ணின் ஈர்ப்புக் குணமும் சேர்ந்து மற்றொரு குணமும் பெறுகின்றது.
இது மடிந்த நிலையில் இதிலிருந்து வெளியாகும் ஆவி அமிலம் தன் இனத்துடன் இனமாகச் சேரும் பொழுது… ஒன்றின் மேல் ஒன்று பட்டு கன நிலை ஏற்பட்ட பிறகு… பூமியின் ஈர்ப்பில் அதற்கு மேல் கனத் தன்மை கொண்ட தன் இன உலோகமுடன் அது கலந்து விடுகின்றது.
இப்படியே பூமியின் காந்த ஈர்ப்பின் ஆவி நிலையான இவ்வெட்கையின் வளர்ச்சி தாவர நிலையிலிருந்து பிரிந்த அமில குணத்தில் சக்தி கொண்ட வலுவாக மனித வர்க்கங்கள் ஆரம்பக் கதியில் தோன்றியது.
அப்படித் தோன்றியிருந்தாலும்… இன்றைய மனிதன் ஒன்றிலிருந்து ஒன்றாக மனிதனிலிருந்து மனிதன் பிறக்கும் இன்றைய உலகில்…
1.தாவரங்களை எப்படி நாமாகப் பயிர் செய்து
2.அதன் மகசூலிலிருந்து மீண்டும் மீண்டும் அதன் மகசூலை எடுக்கின்றோமோ
3.அதன் நிலை போன்ற வழி நிலையில் மனிதக் கருக்கள் தோன்றி வந்தன. (மக்கள் தொகைப் பெருக்கம்)
இன்றைய நாளில் நாம் பயிர் செய்யும் நிலங்களில் பல காலங்களுக்கு ஒரே இனப் பயிரைப் பயிர் செய்யும் பொழுது அந்தப் பூமியின் ஈர்ப்பில் உள்ள சக்தி குறைந்து அந்த நிலத்தின் பலன் நிலை குறைவுபடுகிறது அல்லவா…!
அதைப் போன்று ஆரம்பக் கதியில் உயர்ந்த உயிரணுவாகப் பல சக்தி அமிலத்தைக் கூட்டிக் கூட்டி மனிதனாகிப் பிறப்பு மாறி மாறி… அவன் எடுக்கக்கூடிய எண்ணத்தின் ஈர்ப்பின் நிலையினால்
1.மனித அமில குணமுள்ள நாள் வரை மனிதக் கருவில் உதித்து வாழ்ந்து மனிதனாக உள்ள நிலையில்
2.மிருகக் குணத்தில் வாழும் மனிதன் நிச்சயம் அடுத்த பிறப்பில் மிருகமாகின்றான்.
மிருகமாகி… அதன் சுழற்சி வட்டத்தில் ஓடி மீண்டும் மிகவும் ஈன நிலையான புழு பூச்சியாகி… அந்த இனத்தின் சுவாச நிலையில் மீண்டும் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் மனிதனாக வரக்கூடிய தன்மை ஒரு சாரருக்கும் மிருக நிலையிலிருந்து அதன் சுவாச குணத்தில் மனிதனாகும் சில அபூர்வ சக்திகளின் மனிதனாகும் வழித் தொடரும் சிலருக்கு உண்டு.
இதற்கெல்லாம் அப்பாற்பட்ட சக்தியான புதிய உயிரணுவே… அத்தாயின் கருவிற்குத் தோன்றக்கூடிய வாய்ப்பு நிலையும் பல உயிராத்மாக்களுக்கு வந்து வாய்க்கின்றன. இந்த நிலையைப் பெறுவது என்பது பல கோடியில் ஒன்றாகத் தான் இருக்குமே அன்றி எல்லா உயிரணுக்களும் அப்படி வளர்வதில்லை.
மனிதனாக உள்ள காலங்களில் ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு ஊர்… நாடு… தேசம்… என்ற நிலையிலும் அங்குள்ள மனிதர்களின் எண்ண வளர்ச்சியிலும் உடல் உருவம் அனைத்திலுமே அங்குள்ள பூமியின் ஈர்ப்பின் சுவாசத்தினால் மாறு கொள்கின்றனர்.
1.ஒரு சாரார் பிறந்து வளர்ந்து தன் ஜீவித வாழ்நாள் எல்லாம் கிடைக்கப் பெற்று அதே சுழற்சியில் மடிகின்றனர்.
2.இன்னும் சில சாரார் தன் ஜீவிதத்துடன் அறிவாற்றலின் வளர்ச்சி மேம்பாட்டில் பலவற்றை அறிய எண்ணி வாழ்கின்றனர்.
3.இன்னும் சில சாரார் தன் சக்தியின் அறிவைக் கொண்டு புதிய ஆற்றல் படைப்புகளை ஆராய்ந்து செயலாக்கிக் காட்டுகின்றனர்.
இப்படி மனித ஆத்மாக்களின் எண்ணமே அதன் எடுக்கும் வளர்ச்சியில் மேன்மை கொண்டு அந்த மேன்மையின் சக்தியை ஈர்க்கும் பக்குவத்தில் செலுத்தினால் தான் அது வளர்ச்சியின் பாதையாகின்றது,
ஏனென்றால்…
1.மனிதனின் உடலிலுள்ள உயர் காந்த அலையின் சக்தியான ஜீவ உயிர் உள்ளதினால்
2.நாம் எந்த சக்தியை ஈர்த்து எடுக்கின்றோமோ அதன் பலனை நம் உயிராத்மா ஈர்க்கக்கூடிய நிலை உண்டு.
3.ஆக.. காந்த மின் அலை கொண்ட உடலப்பா மனிதனின் ஜீவ உடல்.
விஞ்ஞானத்திற்குச் செயலாக்கக் காந்த மின் அலையுடன் உலோகங்களின் சக்தி அமிலத்தைப் பூசி அதிலிருந்து சூரியனின் ஒளி அலைகளில் வரும் மின் அலைகளைத் தன் ஆராய்ச்சிக்குகந்த நிலைக்கும் தான் செயலாக்கும் விஞ்ஞானக் கருவிகளின் நுட்ப வேலைகளுக்கும் எடுத்துக் கொள்கின்றனர்.
இன்றைய விஞ்ஞான மனிதன்…
1.சூரியனின் ஒளி அலையில் உள்ள சக்தி அலைகளைப் பிரித்தெடுத்து
2.அதன் தொடர் அலையிலிருந்து தான் பல விஞ்ஞானச் சாதனைகளைப் புரிகின்றான்.
இதை யாரும் மறுக்க முடியாது…!
அதே மின் அலையுடன் காந்த சக்தியின் ஈர்ப்பின் ஜீவ உயிராத்மாவான உடலைக் கொண்ட நாம்… நம் எண்ண அலையை எதெனெதன் பால் செலுத்தி அதீத ஈர்ப்பின் எண்ணத்தை நம் உயிராத்மா ஈர்க்கும் வழித் தொடர் பெற்றால் விஞ்ஞான சாதனையில் கண்டு மகிழும் அனைத்துச் சக்தியும் நம் உயிராத்மாவினால் காண முடியும். அந்தச் சக்தி நம் உயிருக்கு உண்டு.
இதன் வழித் தொடரில் தான் சித்து நிலையும்… சப்தரிஷியின் நிலையும் எற்பட்டதேயன்றி இன்றையக் காலத்தில் பிரித்து இருக்கும் பக்தி முறையின் நெறிப்பாட்டில் இல்லை.
1.மனிதனையும் தெய்வத்தையும் வேறுபடுத்திக் காட்டி
2.மனிதனின் எண்ணத்தையே குன்றச் செய்துவிட்டனர்…
3.தெய்வத்தின் பக்தி பூண்ட “அருள் நெறித் தொண்டர்கள் என்பவர்கள்…!”
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
ஒருவருக்கு நாம் உதவி செய்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.
நம்மால் அந்த உதவி பெற்ற மனிதனோ உதவி செய்ததற்குண்டான நன்றியைக் கடைசியில் (உடலை விட்டுப் பிரியும் போது) எண்ணுகின்றான். பிரமாதமாக… எனக்கு மகராசனாக உதவி செய்தார் என்று…!
அந்த உடலை விட்டு நீங்கும் போது… உதவி செய்தவரை எண்ணி அந்த உணர்வின் வலுக் கொண்டால் உதவி செய்த நம் உடலுக்குள் அந்த ஆன்மா வந்து விடுகின்றது.
நம் உடலுக்குள் வந்து விட்டால் அவன் பெற்ற துயரமோ துன்பமோ நோயோ அவை அனைத்தும் நம் உடலுக்குள் இயக்கத் தொடங்குகின்றது. நம்மையும் அது நலிவடையச் செய்துவிடும்.
இதைப்போன்ற நிலைகளை நாம் தடுக்க வேண்டுமென்றால்
1.அந்த மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
நாம் எண்ணத்தால் எண்ணுவது அனைத்தும் நமக்குள் ஜீவ அணுக்களாக மாறுகின்றது. நாம் பிறருக்கு உதவி செய்திருந்தால் பற்றுடன் அந்த ஆன்மா நமக்குள் ஜீவான்மாவாக வந்து அவர் படும் துயரத்தை நமக்குள் உருப் பெறச் செய்து விடுகின்றது.
இது போன்ற நிலைகளை அடக்க வேண்டும் என்றால்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து நமக்குள் வலுவாக்கிடல் வேண்டும்.
2.நம்மைப் பார்ப்பவர்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.மலரைப் போல் மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் அவர்கள் பெற வேண்டும்
4.அவர்கள் குடும்பத்தில் உள்ளோர் எல்லா நலமும் பெற வேண்டும்.
5.நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
6.அங்கே பணி செய்பவர்களெல்லாம் சகோதர உணர்வுகள் பெற வேண்டும்.
7.எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
8.நாங்கள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ணி
9.நமக்குள் பகைமையற்ற உணர்வினை வளர்க்க வேண்டும்.
இது போன்ற நல் உணர்வுகளை நமக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும். அதைக் கணங்களுக்கு எல்லாம் அதிபதியாக்க வேண்டும். அதாவது பிறர் தீமையை அகற்றும் அந்த உணர்வின் எண்ணத்தைக் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும். அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் அதிபதியாக்க வேண்டும்.
உயிர் இருக்கிறதா இல்லையா என்பதை அறிய மூச்சுக் காற்றைத் தான் பார்க்கிறோம்… அந்தக் காற்றின் சூட்சமம் என்ன…? – ஈஸ்வரபட்டர்
ஆதிசக்தியின் சக்திக் குழந்தைகளான எல்லாமின் எல்லாமாக இறை சக்தி நிறைந்துள்ளது. ஒவ்வொரு சாராரும் இறைவனை அவரவர்கள் ஒவ்வொரு வழி கொண்டு வணங்குகின்றனர்.
நாஸ்தீகம் பேசுபவர்கள் (கடவுள் இல்லை என்பவர்கள்) இறை சக்தியைக் காட்டச் சொல்கின்றனர். எல்லா ஜீவராசிகளும்.. எல்லாமும் இறைவன் தான்…! என்றாலும் இறைவனை நாம் காண முடிகின்றதா…?
காட்சி:-
முதுகில் அரிப்பெடுத்த ஒருவர் அரிப்பெடுத்த இடத்தைத் தன் கையால் கீற முடியாமல் மற்ற உபகரணத்தை எடுத்துக் கீறுவதைப் போன்றும்… முதுகைச் சுவற்றில் தேய்ப்பது போன்றும் காட்சி தருகின்றார்.
விளக்கம்:-
தன் முதுகு தான்… ஆனால் தன் முதுகைத் தானே சொறிவதற்கு முடிவதில்லை. அந்த இடத்தில் என்ன உள்ளது…? என்று பார்க்கவும் முடிவதில்லை.
ஆனால் தனக்குச் சொந்தமான முதுகு தான். அதில் ஏற்படும் நமைச்சலையும் உணர்ச்சிகளையும் உணர முடிகின்றது.
அதைப் போன்று ஒவ்வொரு உயிரினத்திலும் அவ்வுயிரணு தோன்றிடவே
1.ஆண்டவனின் சக்தி ஆவியாக… உயிர் கொண்டு இருந்து தான்
2.அனைத்து ஜீவன்களுமே வாழுகின்றன.
3.இப்படி இருக்க… ஆண்டவன் என்ற தனித்த பிம்பத்தைக் காட்டினால் தான் ஆண்டவன் என்று உணர முடியுமா…?
ஆகவே ஆண்டவனின் அருள் சக்திக்குகந்த செயல்படும் ஜீவன்களாகத் தான் ஒவ்வொரு ஜீவனும் ஜீவித்து வாழ்கின்றது.
இதை உணராமல்… தனக்கு எந்த அளவு சக்தி நிலை உள்ளதோ அந்த நிலையில் எடுக்கும் செயல் வாழ்க்கை தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும்… “அவன் எடுக்கும் சுவாச எண்ணம் கொண்டு செயல்படுகின்றது…”
1.நுண்ணிய சிறு கருவிகளை…
2.நுண்ணிய சிறு உறுப்பின் துணை கொண்டு தான் அதன் வேலைப்பாடு செய்ய முடிகின்றது.
3.கனம் கொண்ட பெரிய உறுப்புகளின் செயலுக்கு
4.அதன் செயலுக்குகந்த வலுவான சாதனப் பொருள் கொண்டு தான் அந்தப் பொருளை உருவாக்க முடிகின்றது.
அதைப் போன்றுதான் நாம் எடுக்கும் குறுகிய எண்ணத்தின் வளர்ச்சி கொண்ட சுவாசமாக இருந்தால்… அதன் தன்மைக்குகந்த குறுகிய ஞானம் கொண்ட வாழ்க்கை தான் நமக்கு அமையும்.
1.எண்ணத்தின் வலு…
2.எதன் அடிப்படையில் எதன் சக்தித் திறன் கூடுகின்றதோ
3.அதன் செயல் ஞானம் தான் நமக்கும் கிட்டும்.
எண்ணத்தின் உயர்வை இந்த உடல் என்ற ஆவியுடன் கூடிய ஆத்ம உயிர் இந்தப் பிம்பத்தில் உள்ள பொழுதே நம் சுவாச அலையை உயர்ந்த ஞான எண்ணமுடன் செலுத்தி எடுப்போமானால்… இப்பொழுதுள்ள ஜீவ சக்தி கொண்ட இந்த உடலில் எடுக்கும் ஞான அலையைக் காட்டிலும் “உயர்ந்த ஞான அலையை நாம் பெற முடியும்…”
இந்த மனிதப் பிறவியில் (உடலில்) இருக்கும் பொழுது தான் அதைச் செயல்படுத்த முடியும். ஆவி நிலையிலிருந்து பெற முடியாது.. மிருகங்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் அந்தத் தகுதி கிடையாது.
காட்சி:-
ஒரு பந்து நீரில் மிதந்து ஓடிக் கொண்டே உள்ளது. அந்தப் பந்தில் சிறு துவாரம் ஏற்பட்டவுடன் பந்தில் உள்ள காற்று பிரிந்து அந்தப் பந்தானது நீரின் உள் பாகத்திற்கு நிலத்திற்குச் சென்று விடுகிறது.
விளக்கம்:-
ஆக… இந்த உடல் என்ற காற்றடைத்த இந்தப் பந்து இந்த உடலில் உள்ள உயிர் ஆவி பிரிந்தவுடன்… நடக்கவோ நிற்கவோ முடியாமால் ஜீவனற்று… இந்தக் காற்று பிரிந்தவுடன் நிலத்துடன் கனத்து ஐக்கியப்பட்டு விடுகின்றது.
அதைப் போன்று இந்தக் காற்றின் அலை சக்தியை
1.நம் சுவாச நிலை கொண்டு நம் உடல் ஆத்மா மட்டும் வாழ்வதோடு அல்லாமல்
2.நம் எண்ணத்தின் ஆத்ம வலுவின் சக்தியும் வாழுகின்றது.
3.அதன் சக்தித் திறனை வழிப்படுத்தித் தருவது தான்
4.இங்கே ஈஸ்வரபட்டனாகிய யான் வெளிப்படுத்தும் இந்தத் தத்துவத்தின் உண்மை ஞான வழித் தொடர்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
உதாரணமாக இரண்டு பேர் கோபத்துடன் சண்டை போடுகின்றார்கள். அவர்களை நாம் பார்க்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்…?
அடுத்த கணமே ஈஸ்வரா… என்று நம் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்களில் கல்க்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் பெற வேண்டும் என்று
1.கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகளை நம் உடலில் திருப்பி விட வேண்டும்.
இப்படிச் செய்யும் போது அவர்கள் சண்டையிட்ட உணர்வுகளைச் சுவாசித்து நம் உடலுக்குள் அந்தக் கார உணர்வுகள் செல்வதைத் தடுத்து விடுகின்றோம்.
ஏனென்றால் அங்கே உற்றுப் பார்க்கும்போது இங்கே ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கி விடுகின்றது நம் கருவிழி.
ஆனால் துருவ நட்த்திரத்தின் சக்தியை எடுத்து
1.நம் கண்ணின் நினைவினை உள்ளே செலுத்தும் போது இங்கேயும் அடைத்து விடுகின்றது
2.நம் உயிரிலே மோதும் நிலையையும் தடுத்து விடுகின்றோம்.
3.இந்த உணர்ச்சிகள் உடலுக்குள் பரவும் போது அந்தக் கார உணர்ச்சிகள் அனாதையாகின்றது… உள்ளே புகாதபடி..!
இப்படி ஒரு சிறிது நேரம் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணிச் சுவாசித்தோம் என்றால் அந்தத் தீமையான உணர்வுகளைச் சூரியன் இழுத்துக் கவர்ந்து சென்று விடுகின்றது. நம் ஆன்மா சுத்தமாகின்றது.
சுத்தமான பின்… சண்டை போட்டவர்கள் இருவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். அவர்கள் ஒன்றுபட்டு வாழும் தன்மை பெற வேண்டும் என்று இப்படி நாம் எண்ணி அந்த உணர்வை அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.
இப்படி எண்ணினால் நமக்குள் அந்தத் நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் இரத்தங்களில் கலந்து துருவ நம் உடலுக்குள் பரவுகின்றது. இரத்தத்தின் வழி எல்லா அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பாய்கிறது.
மகரிஷிகளுடன் நாம் அமர்ந்து தியானிக்க வேண்டிய முறை
1. நாங்கள் பெறக்கூடிய “அத்தனை உயர்ந்த சக்திகளும்” எங்கள் தாய் தந்தையருக்கு முதலில் கிடைக்க வேண்டும் ஈஸ்வரா
2. உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் முன்னோர்களின் உயிராத்மாக்கள் அனைத்தையும் நாங்கள் விண்ணிலே செலுத்தி… அவர்கள் அனைவரையும் பிறவி இல்லை என்ற நிலை அடையச் செய்து… “சப்தரிஷிகளாக” ஆக்கிப் பேரானந்த நிலை பெறச் செய்ய வேண்டும் ஈஸ்வரா
3. தாய் தந்தை அருளால் முன்னோர்களின் அருளால் ஞானகுருவின் அருள் சக்திகளை நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா
4. ஞானகுரு பதிவு செய்யும் உபதேசக் கருத்துக்களை ஒவ்வொரு நாளும் “திரும்பத் திரும்ப… திரும்பத் திரும்பக் கேட்டு” ஆழமாக எங்களுக்குள் பதிவு செய்து… உபதேசத்தில் சொன்னபடி நாங்கள் நடந்து… அதை வாழ்க்கையில் கடைப்பிடித்து… ஞானகுரு காட்டியபடி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை “காற்றிலிருந்து…” சுவாசிக்க வேண்டும் ஈஸ்வரா
5. ஞானகுரு காட்டிய அருள் வழியில் கணவன் மனைவி நாங்கள் ஒன்றி வாழ்ந்து “கணவனை உயர்த்தும் சக்தியாகவும்… மனைவியை உயர்த்தும் சக்தியாகவும்…” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
6. எங்கள் குழந்தைகள் அனைவரையும் “அகஸ்தியரைப் போன்ற மெய் ஞானியாக வளர்க்கும் அருள் சக்தி” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
7. நாங்கள் பார்க்கும் ஒவ்வொருவர் உயிரையும் கடவுளாக வணங்கி… உடலைக் கோவிலாக மதித்து… உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களையும் தெய்வமாக எண்ணி… அவர்கள் அனைவரையும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணையச் செய்து… மகிழ்ந்து வாழச் செய்யும் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
8. ஞானகுரு சொல்லும் முறைப்படி எங்கள் ஆறாவது அறிவைப் பயன்படுத்தி… ஒவ்வொரு நொடியிலும் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்து… “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் அடிக்கடி அடிக்கடி எண்ணி… உயிர் வழிச் சுவாசமாக விண்ணிலிருக்கும் “மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு” அவர்கள் துணையால் துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் எங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களின் முகப்பிலும் இணைத்து… பேரருள் பேரொளியாகப் பெருக்கி… எங்களிடமிருந்து வெளிப்படும் மூச்சு பார்வை சொல் அனைத்துமே பேரருள் பேரொளியாக இந்தக் காற்று மண்டலம் முழுவதும் படர்ந்து… விஞ்ஞானத்தால் உருவான நச்சுத் தன்மைகளைக் கனியச் செய்து “நன்மை பயக்கும் சக்தியாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்…” ஈஸ்வரா
9. குறை காணும் எண்ணத்தை விடுத்துக் குறைகளை எங்கே கண்டாலும் அந்தக் “குறைகளை நிவர்த்திக்கும் சக்தியாக” எங்களுக்குள் வளர்ந்து அனைவரையும் அருள் ஞானம் பெறச் செய்யும் அருள் சக்தியாக நாங்கள் வளர்ந்திட வேண்டும் ஈஸ்வரா
10. ஞானகுரு காட்டிய அருள் வழியில் நாங்கள் வழி நடந்து… மற்றவர்களுக்கும் குரு காட்டும் அருள் வழியினைப் போதிக்கும் சக்தி பெற்றவர்களாக நாங்கள் வளர வேண்டும் ஈஸ்வரா
11. ஞானகுரு ஒலி நாடாவின் மூலம் கொடுத்த உபதேசங்களைப் பதிவாக்கி… அந்த அருள் வழியை நாங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து… “ஈஸ்வரபட்டரின் பரிபாஷைகளை உணர்ந்து…” ஞானகுரு அனுபவபூர்வமாக பெற்ற அத்தனை உண்மைகளையும் உணர்ந்து… “ஞானகுரு கொடுக்கும் நுண்ணிய உணர்வுகள் அனைத்தையும் அறியும் ஆற்றலும் பெற்று…” மற்றவர்களுக்கும் அதைக் கிடைக்கச் செய்யும் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
12. உலகில் நடக்கும் அசம்பாவிதங்களோ அதிர்ச்சியான நிகழ்ச்சிகளோ எங்களுக்குள் பதிவாகக் கூடாது ஈஸ்வரா… அறியாது அதை நாங்கள் கேட்கவோ பார்க்கவோ நேர்ந்தாலும் உடனடியாக நாங்கள் ஆத்ம சுத்தி செய்து… “அதை இயக்கவிடாது தடுக்கும் அருள் சக்தி” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
13. எங்கள் பார்வையால் சொல்லால் செயலால் மூச்சால் பிறருடைய தீமைகள் அகன்று… நோய்கள் அகன்று… உலகில் படர்ந்து கொண்டிருக்கும் சர்வ நச்சுத் தன்மைகளையும் அகற்றச் செய்யும் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
14. ஞானகுரு காட்டும் நெறியில் உத்தமஞானியாக நாங்கள் வளர்ந்து ஊரையும் உலகையும் காக்கக்கூடிய சக்தியாக… உலகுக்கு எடுத்துக் காட்டாக வளர்ந்திட வேண்டும் ஈஸ்வரா
15. “ஞானகுருவின் அருள் எங்களுக்குள் வந்து…” உலக மக்கள் அனைவரையும் காக்கும் சக்தியாக நாங்கள் வளர வேண்டும் ஈஸ்வரா
16. கருவுற்ற தாயின் வயிற்றில் வளரும் சிசுக்களை எல்லாம் “உலக இருளை அகற்றும் ஞான சக்தி பெற்றவர்களாக… அகஸ்தியராக உருவாக்ககூடிய சக்தி…” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
17. எந்த நேரம் எந்த நிமிடம் எங்கள் உடலை விட்டு உயிர் பிரிய நேர்ந்தாலும்… “யாருடைய ஈர்ப்பிலும் நாங்கள் சிக்காது…” ஏகாந்தமாக சப்தரிஷி மண்டல எல்லையை நாங்கள் அடைய வேண்டும் ஈஸ்வரா
18. மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசிப்போம்… எங்கள் மூச்சலைகளை “அருள் மணங்களாக” வெளிப்படுத்துவோம்… மகரிஷிகளின் அருள் சக்திகளைக் “கூட்டமைப்பாக” இந்தக் காற்று மண்டலம் முழுவதும் பரவச் செய்வோம். மகரிஷிகள் வேறல்ல… நாம் வேறல்ல… என்ற நிலையில் “அவர்களுடன் இணைந்து தியானிப்போம்… தவமிருப்போம்…”
19. இந்தப் பரமாத்மாவைத் தூய்மைப்படுத்தி… நம் ஆன்மாவைப் புனிதப்படுத்தி… உடலில் உள்ள அனைத்து ஜீவான்மாக்களையும் ஒளியாக்கி… நம் உயிராத்மாவைப் பேரருள் பேரொளியாக ஆக்குவோம். உலகில் உள்ள ஒவ்வொரு உயிராத்மாவையும் புனிதம் பெறச் செய்வோம்
20. உடலை விட்டுப் பிரிந்து சென்று… இந்தக் காற்று மண்டலத்தில் சுழன்று கொண்டுள்ள அத்தனை உயிரான்மாக்களையும்… “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் துணை கொண்டு உந்தித் தள்ளி…” சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்வோம்
21. ஒளியான பிரபஞ்சத்தை உருவாக்குவோம்… மெய் உலகைப் படைப்போம்…!
எம்முடைய உபதேசத்தைக் கேட்டுணர்ந்தவர்களிடம் யாம் எதிர்பார்ப்பது என்ன…? – ஞானகுரு
நீங்கள் எத்தனையோ கோவில்களுக்குப் போகின்றீர்கள். ஆனால் நான் (ஞானகுரு) சதா உங்களைத் தான் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றேன்.
1.உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி
2.உங்கள் உடலை எல்லாம் கோவில்களாக எண்ணி
3.உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய குணங்களை எல்லாம் தெய்வமாக எண்ணி
4.அந்தக் கோவிலில் மகிழ்ச்சி தோன்ற வேண்டும்.
5.அந்தக் கோவிலிலிருந்து வரக்கூடிய மூச்சு எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று தியானிக்கின்றேன்.
நான் பார்த்த கோவில்கள் அத்தனையுமே (எம்மைச் சந்தித்தவர்கள்) ஒவ்வொருவரையும் தியானம் செய்து அதிகாலை 4-30 மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று உங்களைப் பிரார்த்திக்கின்றேன்.
அந்த நேரத்தில் உங்களைத் தட்டி எழுப்புவது போல் இருக்கும். இந்த உபதேசத்தைப் பதிவு செய்தோர் அனைவருக்கும் அந்த நேரத்தில் முழிப்பு வரும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கும்.
வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் தவறு செய்யாமலே நமக்குள் தீங்கு விளைவிக்கும் அந்த நிலைகளை மாற்றி நல்லது செய்யும் அந்த ஆற்றலாகப் பெறச் செய்வதற்குத் தான் இந்தத் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
அதனாலே எல்லோரும் முழு நம்பிக்கையாக உங்களை நீங்கள் நம்புங்கள்.
சாமியை நம்புகிறீர்கள் சாமியாரை நம்புகிறீர்கள் ஜோதிடத்தை நம்புகிறீர்கள் மந்திரத்தை நம்புகிறீர்கள்.
1.ஆனால் உங்களிடம் அந்த உயர்ந்த சக்தி இருக்கிறது
2.உங்களுக்கு முன்னாடியே அத்தனை சக்தியும் இருக்கிறது.
3.அதை நினைத்தீர்கள் என்றால் அது கூடும்.
4.நல்லதைப் பெற முடியும் மெய் ஒளி பெற முடியும்.
மனிதன் ஒருவனுக்கு மட்டும் தான் இந்த நிலை. உங்களை நீங்கள் நம்புங்கள்.
1.சாமி சொன்னார் என்று சொல்லி
2.சாமி சொன்ன சக்தியை நாம் பெற வேண்டும் என்ற நிலைக்கு நீங்கள் வர வேண்டும்.
சாமி செய்து கொடுப்பார் என்பதல்ல. உங்களை நான் பிரார்த்திக்கின்றேன். உங்களுக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று உறுதுணையாக இருக்கின்றேன்.
சூரியனின் காந்த அலைகள் படுகிறது. பூமி அதைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் தான் பூமிக்குச் சக்தி கிடைக்கும். பிரபஞ்சத்தில் காற்றில் பல சக்திகள் படர்கிறது. பூமி போகும் பாதையில்… தான் ஈர்த்துக் கொண்டால் தான் அதை வளர்த்துக் கொள்ள முடியும்.
அதைப் போன்று தான்
1.அந்த மெய் ஞானிகள் அருள் ஒளி நீங்கள் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திகின்றேன்.
2.அந்த அருள் ஒளியை நீங்கள் ஈர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆகையினால் இங்கே சொல்லக்கூடியதெல்லாம் உங்களுக்குள் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று தகுதியை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றேன்.
இதைக் கேட்டுணர்ந்த ஒவ்வொருவரும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசித்தேன்… நான் நன்றாக இருக்கின்றேன்
2.எங்கள் குடும்பம் நலமாக இருக்கின்றது எங்கள் உடல் நலமாக இருக்கிறது
3.காற்றிலிருந்து அருள் சக்திகளை எடுக்க முடிகிறது
4.எங்கள் உடலில் உள்ள நோய்கள் அகன்றது என்ற
5.இத்தகைய சந்தோஷமான செய்திகளைச் சொல்ல வேண்டும்
ஆகவே “நாங்கள் நன்றாக இருக்கின்றோம்…!” என்று சொல்லும் போது தான் எனக்கு அது மகிழ்ச்சி. அதைக் கேட்க வேண்டும் என்று தான் நான் விரும்புகின்றேன். அந்த நிலையை நிச்சயம் நீங்கள் பெறுவீர்கள்.
வாழ்க்கையில் வரும் சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுபவன் ஞானியாகின்றான் – ஈஸ்வரபட்டர்
இதைப் படிப்போர் எங்களின் (மகரிஷிகளின்) செயல் நடப்பின் உண்மைகளை உணர்ந்து மனித ஆத்மாக்கள் அவரவர்கள் உணர்ந்து பக்குவம் பெறும் பாட முறைகளை உணர்த்திக் கொண்டே வந்துள்ளோம்.
பள்ளியில் பயிலும் மாணவனுக்கு…
1.அவன் ஆசிரியரின் போதனையை ஏற்கும் நிலை கொண்டு…
2.அவனுக்கு வைக்கும் தேர்வில் அவன் பெறும் மதிப்பெண்படித்தான்…
3.அவன் அறிவு நிலை கூடிய மதிப்பெண் பெறுகின்றான்.
அந்த மதிப்பெண் உயர்ந்திருந்தால் உயர் ஞானக் கல்விக்குச் செல்கிறான். அறிவு ஞானம் பெறாத மாணவனை உயர் வகுப்பிற்குத் தேர்ந்தெடுக்க மாட்டார்…! அந்த உபாத்தியாயர்.
அதைப் போல் ஆண்டவனின்… ஆண்டவன் என்பது…
1.உயர் சக்தி ஞான ரிஷியின் அருள் உலகளவுக்கும் பரப்பப்பட்டு
2.அந்த ஞானத்தின் பால் ஈர்ப்பு கொண்ட அவர்களின் பலனில் கண்டெடுத்துக் கொள்கின்றனர் சப்தரிஷிகள்.
அந்தப் பலம் பெற்ற ஆத்மாக்களின் செயலுக்கும் “பல தேர்வுகள் வைத்துப் பொறுக்கித்தான்…” அவர்களின் வட்டச் சுழற்சிக்கே செல்ல முடிகிறது.
கல்விக்கூடம் செல்லும் மாணவர்கள் எல்லொருமே பள்ளியில் இறுதிப் படிப்பு வரையும் செல்வதில்லை. சிலர் மேல் ஞானக்கல்வி பெறச் செல்ல முடியாமலும்… அந்தப் படிப்பை ஏற்க முடியாமல் பள்ளியிலிருந்து நின்று விடுகின்றார்கள் அல்லவா…!
அதைப் போன்று… இந்தச் சக்தி நிலையுணர்ந்து “பேரின்ப நிலை எய்திடல் வேண்டும்…!” என்ற செயலில் உள்ளவர்களும் தான் எடுக்கக்கூடிய முயற்சி ஜெபத்தில் பின்தங்கி விடுவதுண்டு…!
1.தங்கத்தைப் பழுக்கக் காய்ச்சித் தட்டத் தட்டத் தான் அதன் தரம் உயர்கின்றது
2.அது போல் எண்ணத்தில் ஏற்படும் பலவற்றிலிருந்தும்
3.ஒன்றான இறை ஞான சக்தியை ஈர்க்கும் நிலை பெற ஏற்படும் சோதனையில் எல்லாம்
4.எந்தச் சோதனையிலிருந்தும் நாம் மீண்டும் அந்த ஜெப நிலை பெறுகின்றோமோ…
5.“அது தானப்பா இறை ஞானம் பெறும் ஜெபம் முறை…!”
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
விஞ்ஞான அறிவில் படித்துக் கொண்டவர்கள் இன்று எத்தனையோ வகையில் இப்பொழுது தனக்கு வேண்டிய உயிரணுக்களை மற்ற உடல்களில் இருந்த செல்களை எடுத்து மற்ற உடலில் சேர்த்து புதுப் புது ஆட்டினங்களையோ மாட்டினங்களையோ நாயினங்களையோ உருவாக்குகின்றார்கள்.
எத்தனையோ எண்ணிலடங்காத நாய்களைப் பூனை போல்… கரடி போல் உருவாக்கியிருக்கின்றனர். பூனை போல்… கரடி போல் உள்ள மற்ற உயிரினங்களிலிருந்து எடுத்து அதை ஒன்றாகக் சேர்த்து புதுப் புது நாய்களை உருவாக்குகின்றான்.
அதே போல் உணவுப் பொருள்களில் பார்த்தாலும் சாதாரண மனிதன் பல வகையான பொருள்களைச் சேர்த்துப் புதுப் புது பதார்த்தங்களை செய்கின்றான்.
மனிதனுக்குச் சுவையாக இருப்பதற்குப் புதுப் புது பதார்த்தங்களைச் செய்கின்றோம். எந்தப் பொருளை எதனுடன் போட்டால் எதன் சுவை வரும்…? என்ற நிலையில் மனிதன் கற்றுணர்ந்து அதன்படி சுவையான பதார்த்தங்களைச் செய்கின்றான்.
அன்றெல்லாம் ரொட்டி கடையில் மட்டும் தான் ரொட்டி தான் இருக்கும். இப்பொழுது வீட்டிலேயே கூட ரொட்டியோ மற்றதோ செய்யக்கூடிய அளவிற்குக் குடும்பங்களில் படித்ததை வைத்துச் செயல்படுத்தும் நிலை வருகின்றது.
இதைப்போல மனிதன் தன் எண்ணத்தால் புதுப் புதுப் பொருள்களை உருவாக்கும் அளவிற்குத் திறன் பெற்றுள்ளான் மனிதன்.
பெண்கள் வீட்டில் வகை வகையான குழம்புகளை வைக்கின்றார்கள். பருப்பை எடுத்து அளவாகப் போட்டு அதற்கு வேண்டிய சரக்குகளைப் போட்டுப் பக்குவப்படுத்திச் சுவையான உணவு வகைகளைச் சமைக்கின்றனர்.
அதே சரக்குகளை அதே அளவுகோல்படி இன்னொரு பெண்மணியிடம் கொடுத்து அதே மாதிரிச் சமைக்கச் சொன்னால் அதன் சுவை வித்தியாசமாகத் தான் இருக்கும்.
காரணம் அவர் உணர்வுகொப்ப அந்த சுவையைக் கூட்டிடும் உணர்வுகளை உருவாக்குகின்றது. இது ஒவ்வொரு குடும்பத்திலும் பார்க்கலாம்.
சில குடும்பங்களில் பார்த்தால் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். சுவையாக இருப்பதற்குக் காரணம்… அங்கிருக்கும் பெண்கள்
1.கூடுமான வரையிலும் நல்ல சுவைமிக்க உணர்வுகளைச் செயல்படுத்த வேண்டுமென்று
2.அந்த உணர்வை ஏற்றுக் கொண்டதனால்
3.அந்த உணர்வுகள் அந்தந்தப் பக்குவத்தை பெறப்படும் பொழுது
4.குழம்பைச் சுவையாக செய்கின்றார்கள்.
ஆனால் அதே சமயத்தில் குடும்பத்தில் கொஞ்சம் விரக்தியாக வரட்டும் அல்லது சண்டை போடட்டும்…! ஒருத்தருக்கொருத்தர் வெறுப்பான உணர்வு வரப்படும்போது அன்று குழம்பு வைப்பதைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.
உதாரணமாக.. கோபமாக இருந்தால் காரத்தை அதிகமாகப் போட்டுவிடுவார்கள். சலிப்பு சஞ்சலம் அதிகமாக இருந்தால் இரண்டு உப்பை அதிகமாகப் போட்டுவிடுவார்கள்.
ஆனால் அதே சரக்குகளை வைத்து சுவையாக முதலில் செய்தவர்கள் தான். அந்த அளவுகோலும் இருக்கின்றது. ஆனால் இந்த உணர்ச்சிகள் அதற்குத்தக்க இந்த உடலை இயக்குவது எது…?
அவர்கள் சேர்த்துக் கொண்ட உணர்வுகள்தான்…! அவர்கள் தப்பு செய்யவில்லை.
குழம்பு வைத்த பிறகு பார்த்தோமென்றால் ஐய்யய்யோ… நான் சண்டை போடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த மாதிரி குழம்பு வைத்துவிட்டேன்…! என்பார்கள்.
அதே போல் பக்கத்து வீட்டுப் பையன் அடிக்கடி சத்தம் போட்டுக் கொண்டிருந்தான். பார்த்தவுடனே… இப்படியா அவர்கள் வீட்டில் சண்டை போடுவார்கள்…! என்று சலிப்படைந்தேன். அதை வேடிக்கை பார்த்துவிட்டு வந்தேன். இங்கே உப்பு அதிகமாகி விட்டது என்பார்கள்.
இதை எல்லாம் மாற்றுவது யார்…?
பிறர் செய்யும் சிந்தனையற்ற செயலின் உணர்வுகள் நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சிகள் நம் உடலுக்குள் ஓடி அவரின் உணர்வுகளுக்குத் தக்கவாறு நாம் குழம்பு வைக்கின்றோம்.
அப்பொழுது யார் தப்பு செய்தது…? நாம் அந்த சந்தர்ப்பத்தில் நுகர்ந்தது தான் இயக்குகிறது.
கையிலே மண்ணை எடுத்து ஒரு வேலையாகப் பிசைந்து கொண்டிருக்கின்றீர்கள். கையை கழுவாமல் அப்படியே நீங்கள் அடுத்தாற்படி குழம்பை வைத்தீர்கள் என்றால் என்ன ஆகும்…?
இந்த மண்ணோடு காய்கறிகளைச் சேர்த்தோமென்றால் இந்த மண்ணும் சேர்த்து நர…முற… நர…முற… என்று இருக்கும். அப்படியானால் நம் கையைக் கழுவுகிறோம் அல்லவா…?
அதே சமயத்தில் வழு வழுவென்று இருக்கக்கூடிய பதார்த்தத்தைத் தொட்டு வேலை செய்கின்றோம். கை கழுவாமல் இருந்தால் அதே உணர்வின் தன்மை நாம் வைக்கும் குழம்பில் சேருமல்லவா…? அதை சுத்தப்படுத்திவிட்டு தானே வேலை செய்கின்றோம்.
இதே மாதிரித் தான்…
1.ஒரு கோபப்படும் உணர்வை நாம் கேட்கின்றோம்… உயிரிலே படுகின்றது
2.இந்த உணர்ச்சிகள் போனவுடனே நம் ஆன்மாவில் தூய்மை கெடுகின்றது
3.நம் உடலுக்குள் போனவுடன் அதே கோப உணர்ச்சிகளை இயக்குகின்றது
4.அப்பொழுது நாம் அதைச் சுத்தப்படுத்த வேண்டுமா இல்லையா?
அதற்கு என்ன ஆயுதம் வைத்துள்ளீர்கள்…?
ஏனென்றால் இதெல்லாம் மறைமுகமாக நல்லவர்களையும் கெட்டவர்களாக மாற்றுகின்றது நல்ல உடலையும் நோயாக மாற்றி விடுகின்றது.
பிறர் செய்யும் தவறுகளை நாம் பார்க்கப் பார்க்க அந்த உணர்வு நம் இரத்தத்தில் கலந்து நாம் தவறு செய்யவில்லை என்றாலும் தவறுள்ளவனாக மாற்றி விடுகின்றது.
அதனால்தான் விநாயகர் கையில் கொடுத்திருப்பது அங்குசபாசவா.
அதாவது உயிரணுவாகத் தோன்றி பரிணாம வளர்ச்சியில்
1.ஒவ்வொரு பிறவியிலும் தீமைகளில் இருந்து விடுபட வேண்டுமென்று
2.தன் கண்களால் கூர்மையாகப் பார்த்து அதன் வலிமையை நுகர்ந்து
3.எதிரியிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்று உணர்வுகள் சேர்த்துச் சேர்த்து
4.அதிலிருந்து விலக வேண்டும் என்ற உணர்வு அதிகமானபின் தன் உடலில் இது விளைந்து
5.இது இறந்தபின் எதன் வலுவான உணர்வு நுகர்ந்ததோ அந்த உணர்வுக்கொப்ப பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக வந்துள்ளோம்.
ஆனால் மனிதனான நிலையில் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்கிட… ஒவ்வொரு நிமிடமும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்த்து… அதை அடக்கி ஒளியின் தன்மையாக மாற்ற வேண்டும் என்பதற்கே “அங்குசபாசவா” என்று ஞானிகள் காட்டினார்கள்.
குரு பலன்(ம்)… குரு பரன்(ம்)
கூட்டுத் தியானம் செய்கிறோம் என்றால் ஒவ்வொருவரும் எத்தனையோ எண்ணத்திலே தான் அதிலே வந்து கலந்து கொள்கின்றோம். ஒவ்வொருவரின் வீட்டிலும் எத்தனையோ கஷ்டங்கள் இருக்கிறது.
ஒரு குழம்பை வைக்கும் போது புளிப்பு காரம் உப்பு எல்லாவற்றையும் சேர்த்துத் தான் அதை ஒரு ருசியாகக் கொண்டு வருகின்றோம்.
அதே போல் கூட்டுத் தியானத்தில்
1.“எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்…” என்று
2.கூட்டமைப்பாக எண்ணி ஒரே குரலில் எழுப்பும் போது காந்த அலைகள் அது கவர்கிறது.
3.நாம் எல்லோரும் சேர்ந்து சொல்லும் போது அந்த உணர்வுகள் செவிகளில் படுகிறது
4.உணரச்சிகள் உந்தப்பட்டு எல்லோருடைய உணர்வுகளிலும் அது இணைகிறது.
27 நட்சத்திரங்களின் சக்தியையும் நவக்கோளின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் இணைத்து அந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் பெற வேண்டும்… என்று அதன் மூலம் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று இந்த உணர்வை ஈர்க்கச் செய்கிறோம்.
1.மனித உடலுக்குள் 1008 நல்ல குணங்கள் உண்டு
2.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரே குரலில் ஒலியை எழுப்பும் போது
3.அந்த நல்ல குணங்கள் அனைத்திலுமே இந்த உயர்ந்த உணர்வுகள் செருகப்படுகிறது.
அத்தகைய உணர்ச்சிகளைத் தூண்டச் செய்வதற்குத் தான் கூட்டுத் தியானம் இருக்கின்றோம். நம்மால் சம்பாரிக்க முடியாததை… அந்த அருள் சொத்தைக் கூட்டாக எண்ணித் தியானிக்கும் போது… கிடைக்கச் செய்ய முடிகிறது.
மிளகாயைக் குழம்பில் போட்டவுடன் அதிலே எப்படி ருசி வருகிறதோ அதைப் போல் சுவை கொண்ட உணர்வாக மாற்றிக் கொள்ள முடிகிறது.
வீட்டில் சங்கடமும் சலிப்பும் மற்றதுகளும் வந்தாலும் கூட… அந்த உணர்வை மறந்து விட்டு மெய் ஒளியைக் கலந்து “எல்லோரும் நலம் பெற வேண்டும்” என்ற உணர்வின் ஒலிகளை எழுப்பும் போது “சூரியனின் காந்தப் புலன் அது கவர்கிறது…”
பல வகையான சரக்குகளைப் போட்டுத் தான் குழம்பு வைக்கின்றோம். அவை ஒவ்வொன்றும் தனி சுவைதான். இருந்தாலும் எல்லாவற்றையும் போட்டு வேக வைத்து ஒன்றாகக் குழம்பாகும் போது அதிலிருந்து வெளி வரும் மணத்தைச் சூரியனின் காந்தம் அதைக் கவர்ந்து கொள்கிறது.
அதனின் மணத்தை நுகரும் போது அதனின் சுவையை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அந்த மணத்தின் குணத்தையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
அதைப் போன்று தான் நாம் படைக்கும் இந்த அருள் ஞானிகளின் சக்தியை…
1.எல்லோருக்குள்ளும் அந்தச் சக்தியைப் பரப்பச் செய்து
2.காந்தப் புலனின் நிலைகள் கொண்டு மோதச் செய்து
3.அதே உணர்வின் தன்மை ஈர்க்கச் செய்து
4.நமக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்கு இணைக்கச் செய்யும் முறை தான்
5.யாம் (ஞானகுரு) சொல்லும் இந்தக் கூட்டுத் தியானத்தின் நிலை.
அதாவது
1.பரவிக் கிடக்கக்கூடியது அனைத்தும் நமக்குள் குரு பரம்.
2.ஒவ்வொரு நிலைகளிலும் அதை எடுத்து விளைய வைத்த அந்தந்த உயிரின் நிலைகள் இது பரமாகி
3.தனக்குள் (அனைவருக்குள்ளும்) அருள் உணர்வாக அது சேரும் நிலை.
ஏனென்றால் இது குரு பலன் குரு பரன்…!
சப்தரிஷிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
இன்று உடலுடன் ஜீவன் பெற்று வாழும் நிலையில் நம் உடலின் எடையை ஒரு பாரமாக… அதாவது சுமக்க முடியாமல் இருப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுவதில்லை.
நாம் எடுக்கும் சுவாச அலையில் நம் உயிரணு என்ற இயந்திரத்தின் ஓட்டத்தினால் நம் உடலிலுள்ள பல கோடி உயிரணுக்களும் அந்தச் சுவாசத்தின் அலையை இந்தப் பூமியின் ஈர்ப்பில் காற்றாகக் கலந்து தான் வாழுகின்றோம்.
ஆனால் இப்பொழுதுள்ள நம் உடலின் எடையே ஜீவனற்ற உடலாக ஆன பின்பு அதன் கனம் கூடி விடுகிறது.
1.இந்தப் பூமியின் ஈர்ப்பு சக்தி குணத்துடன் ஜீவனற்ற பிம்பங்கள் உள்ள நிலையைப் போல்…
2.ஜீவன் பிரிந்த உடல்களும்… அந்த ஈர்ப்பின் அதிகப்படியான இழுவையுடன்…
3.“சுவாச அலையை எடுக்காத உடல் ஆனவுடன்…”
4.கனம் பொருந்திய ஈர்ப்புடன் அந்த உடல் ஐக்கியப்பட்டு விடுகிறது.
இந்தச் சுவாச அலையின் சக்தியினால் தான் ஜீவன் கொண்ட ஜீவன்களின் நிலைக்கும் ஜீவனற்ற பிம்பங்களின் நிலைக்கும் கனத்தில் (எடையில்) வேறுபாடு ஏற்படுகின்றது.
இருந்தாலும் ஜீவன் பிரிந்த உடல்கள் அந்த உடலிலுள்ள மற்ற ஜீவ அணுக்களின் ஈர்ப்பின் அமில குணத்தால் அந்த உடல் உயிர் பிரிந்த பிறகு அதன் உடல் பெருகுகிறதே…!
அதன் நிலை எப்படி…?
நாம் சில வகை உணவுப் பொருட்களை ஒன்றுடன் ஒன்று கலந்து அதில் நீரை ஊற்றி வைத்தால் அதிலிருந்து சில அமிலங்கள் வளர்ந்து புளிப்பு நிலை ஏற்படுகிறது அல்லவா…!
அது போல் இந்த ஜீவனற்ற உடலும் அந்தப் புளிப்பு நிலையான அமிலங்கள் ஏற்பட்ட பிறகு அதன் நீர் சக்தி வடிந்து இந்த உடல் பிம்பம் நாற்றத் தன்மை இழந்து இந்தப் பூமியுடன் அந்த உடலும் கலக்கின்றது.
அதன் பிறகுதான்… உடலிலுள்ள அந்த உடலுக்குச் சொந்தமான ஜீவ அணுவுடன் அந்த ஜீவ ஆத்மாவும் முதலிலேயே உடலை விட்டுப் பிரிந்த உயிருடனும் இந்தச் சப்த அலையுடனும் இவ்வாத்மாவும் கலந்து இவ்வாத்ம ஜீவன் அதற்குகந்த செயல் வட்டத்திற்குள் செல்கிறது.
1.உடலுடன் உள்ள பொழுது ஒரு நிலையும்…
2.உடலை விட்டு ஜீவன் பிரிந்த பிறகு ஒரு நிலையும்
3.அவ்வுடல் பிம்பமே மாறி அவ்வாத்மா ஜீவனுடன் சேர்ந்த பிறகு ஒரு நிலையும்
4.இப்படி மூன்று நிலைகளில் மனிதனின் நிலைகள் உள்ளன.
ஆனால் சப்தரிஷிகளும் சித்தர்களும் இந்த உடல் என்ற பிம்பத்தையே பிரித்துக் கூட்டும் செயலுடையதாக்குகின்றார்கள். அவர்கள் எடுத்த எண்ணத்தின் சுவாச ஜெபத்தால் இக்காற்றில் உள்ள அமில குணங்களையே பிரித்துக் கூட்டி வழிப்படுத்திச் செயல்படும் முறையைச் செயல்படுத்துபவரே நம் சப்தரிஷிகள்.
காற்றாகவும் நீராகவும் ஒளியாகவும் ஐக்கியப்பட்டுள்ள நம் சப்தரிஷிகளின் செயலினால் தான் இன்று இந்தப் பூமியின் ஆன்மாக்கள் பிறந்து வாழச் செயலாக்கி வருகின்றார்கள்.
நம் பூமி மட்டும் தான் சுழன்று ஓடுகிறதா…? மற்ற மண்டலங்கள் இல்லயா…? என்ற வினா எழும்பலாம். ஜீவன் கொண்ட ஜீவாதாரமுடன் வாழும் பூமி நம் பூமி.
அதற்குகந்த அமில சக்தியைக் கூட்டி வழிப்படுத்தியவர்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாகப் பெற்ற தவத்தின் வலிமை நிலையில்
1.இந்தப் பூமியின் அமிலங்கள் கூடப் பெற்று… அந்தக் கூட்டின் வளர்ப்பில் மனித பிம்பங்கள் வளரச் செய்து
2.அந்த மனித பிம்பங்களுக்கு அறிவாற்றலின் வழியைப் பல வழிகளில் வளரச் செய்து
3.மனிதர்களின் ஞானத்தின் வளர்ச்சிக் கூட்டின் வலு சக்தியைத் தன் வலுவுக்கு அதிகப்படி எடுத்து
4.மேன்மேலும் இந்தக் காற்று மண்டலத்திலுள்ள இப்பேரண்டம் பெரு நிலை என்ற
5.பரந்த நிலையைக் கூட்டிப் பிம்பம் செய்கிறார்கள் நம் சப்தரிஷிகள்.
மண் மண்ணாக உள்ள பொழுது அதன் பிம்பத்தைக் காண முடிகிறதா…? மண்ணை எடுத்துக் குயவன் பானையும் சட்டியும் பல பொருள்களாக்கிக் காட்டினால்தான் அம்மண்ணின் பிம்பத்தை நாம் காணுகின்றோம்.
1.ஆதி சக்தியின் அருள் தான் குயவனும் மண்ணும்.
2.அந்தக் குயவன் மண்ணைத் தோண்டி எடுத்துத்தான் செய்து பொருளாகக் காட்டுகின்றான்.
அதைப் போன்று…
1.பூமியைப் பொருளாக்கி மனித சக்தி படைத்துத் தன் சக்திக்குகந்த பொருளான ஞானப் பொருட்களை
2.சப்தரிஷிகள் ஞானியாகவும் சித்தனாகவும் பொருள்படுத்தி எடுத்துக் கொள்கின்றான்.
சப்தரிஷியின் பொருளான நம் பூமியின் தொழிற்சாலையில்… அந்தத் தொழிலுக்குகந்த மூலப் பொருளின் தரம் குறைந்ததனால்
1.மேலும் தரமான பொருளைப் போட்டு கல்கியைக் காண
2.சப்தரிஷிகளின் செயல்கள் இன்று நடந்து வருகின்றன.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
ஆரஞ்சுப் பழம் நன்றாக இருக்கின்றது. நன்றாக இருப்பது கொஞ்சம் கெட்டுப் போய்விட்டால் என்ன ஆகிறது…? அதிலே புழு வருகின்றது. எங்கிருந்து அந்தப் புழு வந்தது…?
கெட்டுப் போகப் போகும்போது காற்றில் இருக்கக்கூடிய கெட்ட அலைகளை இழுத்து அது புழுவாக மாறுகின்றது. நன்றாகக் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.
அதே போல் நன்றாக இருக்கின்ற ஆரஞ்சுப் பழம் ஒரு பக்கத்தில் அடிபட்டு அழுகினால் போதும். உடனடியாக புழு வந்துவிடும்.
அதே மாதிரி “வேதனை வேதனை…” என்று நீங்கள் சுவாசித்த உணர்வுகள் உடலில் உள்ள இரத்தத்துடன் கலந்தவுடன் என்ன செய்கின்றது…?
இந்த உணர்வு மாறி இரத்தமாகப் போகும் போது அந்த வேதனைப்படக்கூடிய அணுவாக மாறும். அது தான் இந்திரலோகம். அணுவான பிற்பாடு என்ன செய்கின்றது…?
பழத்தில் அழுகிய உணர்வை எப்படி அந்த அணு சாப்பிட்டவுடனே புழுவாக எப்படி மாறுகிறதோ அதே போல் உங்கள் உடலில் வேதனையான அணுவாக மாறுகிறது. கெட்டதைச் சாப்பிடுகின்றது.
நல்ல பழமாக இருக்கும் பொழுது அதில் புழுக்கள் வருமா…? வராது.
இதே மாதிரி அந்த வேதனையான உணர்வுகள் உங்கள் உடலில் வந்து இரத்தத்தில் கலந்து அது பிரம்மமாக மாறுகின்றது. அப்பொழுது உங்கள் உடலில் என்ன செய்யும்…?
1.அந்த வேதனையின் உணர்ச்சிகளைத் தூண்டும்
2.அந்த அழுகிய உணர்வை எடுத்துத் தான் உங்கள் உடலில் ஒவ்வொரு உறுப்புகளுக்குப் போகும் இந்த இரத்தம்.
மற்ற உறுப்புக்குள் போனவுடன் எங்கெங்கே நல்ல அணுக்கள் இருக்கின்றதோ அந்த உறுப்புகள் கெட்டு அதிலே போய் இந்த அணு தங்க ஆரம்பித்துவிடும்.
நமக்குள் கெட்டது எப்படி உருவாகிறது என்று இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
ஏனென்றால் இன்னும் சாமியையும் சாமியாரையும் நம்பிப் போய்க் கொண்டிருப்பதைத் தான் விரும்புகின்றோம். ஆனால் அந்த நல்ல சக்திகள் உங்களுக்குள் இருக்கின்றது… உங்களை நீங்கள் நம்பிப் பழகுங்கள் என்பதைத் தான் அடிக்கடி உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன் (ஞானகுரு).
ஆகவே எந்தப் பழமாக இருந்தாலும் கொஞ்சம் அடிபட்டு விட்டால் புழு வந்துவிடும்.
இதே மாதிரி நீங்கள் நல்ல நிலையில் இருக்கப்படும்போது
1.ஒருவன் கஷ்டப்பட்டான் என்றால் அந்த உணர்வைக் கேட்கின்றீர்கள்.
2.ஒருவன் சாபமிட்டான் என்றால் அந்த உணர்வைக் கேட்கின்றீர்கள்.
அப்பொழுது அந்த உமிழ் நீர் அங்கே இரத்தமாக மாறினால் அவன் எதையெல்லாம் கேட்டுப் போக வேண்டும் என்று சொன்னானோ… நீ நாசமாகப் போவாய்… உனக்குக் கை கால் முடமாகிப் போகும்… நீ நோயால் சாவாய்…! என்று சொன்னால்…
1.இதே உணர்வுகள் அது இரத்தத்துடன் கலந்து உடல் முழுவதும் படர்கிறது.
2.கலந்த பின் அங்கே போய் என்ன செய்கின்றது…?
3.பதிவானது கருவாகி முட்டை ஆகிவிடுகின்றது… ஒவ்வொரு உறுப்புகளிலும் கூடுகிறது.
உதாரணமாக தேனீ என்ன செய்கிறது…? தேன் எடுக்கச் செல்கிறது. பூக்களில் அமர்கிறது. சில நேரங்களில் அதிலே முட்டையும் இடுகின்றது.
அதே போல் தட்டான் பூச்சி இருக்கின்றது. அது பூவில் இருக்கும் அமுதைச் சாப்பிடுகின்றது. அந்தப் பூ மேலே முட்டையிடுகின்றது.. கொஞ்ச நாள் கழித்து இதனுடைய முட்டை வெடித்துப் பட்டாம் பூச்சியாக மாறுகின்றது. அந்தப் பூ எந்த நிறத்தில் இருக்கின்றதோ அதே மாதிரி வரும்.
அதே மாதிரி அடுத்தவர் உடலிலே எப்படி நோயானதோ அதே போல் ஒரு மனிதன் எப்படிச் சாபமிட்டானோ அதே உணர்வுகள் நம் இரத்தத்திலே கலந்து உடலில் சுற்ற ஆரம்பிக்கின்றது.
1.அது நம்முடைய எல்லா உறுப்புகளுக்கும் போய் வரும்
2.போகின்ற நேரத்தில் இந்த முட்டை ஒன்று ஒதுங்கினால் போதும்.
3.அந்த உறுப்பில் உள்ளதை எடுத்து வளர்ந்து அங்கே அணுவாக விளைகின்றது.
4.அந்த உறுப்பினுடைய நிலைகளையே சாப்பிடக்கூடிய நிலைகள் வந்து விடுகிறது
5.தன் இனத்தை அங்கே பெருக்கத் தொடங்கி விடுகின்றது.
நுரையீரலில் அந்த மாதிரித் தங்கி விட்டால் நுரையீரல் ரிப்பேர் கல்லீரலில் தங்கி விட்டால் கல்லீரலில் ரிப்பேர் மண்ணீரலில் தங்கி விட்டால் மண்ணீரலில் ரிப்பேர்.
இது எல்லாம் வந்த பிற்பாடு டாக்டர்கள் இந்த உறுப்பு கெட்டுவிட்டது… இன்ன நோய் இருக்கிறது…! என்று சொல்வார்கள்.
அகஸ்தியன் இதைப் போன்ற பல உண்மைகளை அன்றே கண்டுணர்ந்தான்…தான் வாழ்க்கையில் வந்த தீமைகளை எல்லாம் நீக்கினான்… துருவ நட்சத்திரமாகப் போனான்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற்றால் நாமும் தீமைகளை நீக்க முடியும்.
2.அவனைப் போன்றே அழியா ஒளி உடல் பெறலாம்
அதைத் தான்… அந்த அகஸ்தியன் உணர்வை முழுமையாகக் கண்டுணர்ந்த நமது குருநாதர் “நம் டாக்டர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்” என்னிடம் (ஞானகுரு) என்ன சொன்னார்…?
டேய்…! சாபமிட்டவனை நீ பார்த்தால்…
1.அந்த உணர்வுகள் உன் ஆகாரத்தின் வழியாக உடலுக்குள் போகும்.
2.அந்தக் கருவாகும் அது அணுவாகும்… அது இரத்தத்தில் சுற்றும். தெல்லாம் உனக்குள் நோயாகும்…
3.எப்படி அந்தத் தட்டான் பூச்சி பூவிலே முட்டையிட்டவுடனே அதற்குத் தகுந்த மாதிரி பூச்சிகள் வளர்கின்றதோ
4.அதே மாதிரி இந்த உறுப்பை உட்கொள்ளும் அணுவாக மாறிவிடும்…! என்று சொல்லி
5.இதையெல்லாம் நேரடியாக எனக்குக் காண்பித்தார்… மக்களுக்கு இதை எடுத்துச் சொல்…! என்றார்.
அதைத் தான் இங்கே செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).
மிக மிக சக்தி வாய்ந்த ஆற்றலை குருநாதர் எனக்குக் கொடுத்த விதம் – ஞானகுரு
வாடிய மரத்திற்கு உரம் போட்டு அதைச் செழித்து வளரச் செய்கிற மாதிரித் தான் குருநாதர் எனக்கு (ஞானகுரு) சக்தி கொடுத்தார்.
காட்டிற்குள் அழைத்துச் சென்று தான் பல அனுபவங்களைக் கொடுத்தார்.
1.காட்டிலே இடைஞ்சல்கள் வரும் போது அந்த ஞானிகளின் சக்திகளை நீ சேர்த்துக் கொண்டால் அந்தக் கெடுதல் நீங்கும்.
2.நான் சொல்லும் முறைப்படி எடுத்தால் அந்தத் தீமை நீங்கும்
வரும் துன்பங்களிலிருந்து விடுபடும் சக்தியை உனக்குள் பதிய வைக்க வேண்டும் அல்லவா… அதற்காகத் தான் “இதை எல்லாம் செய்கிறேன்” என்று சொல்வார்.
ஏனென்றால் குருநாதர் என்னைத் திட்டுவார்… உதைப்பார்… எல்லாம் செய்வார். ஏண்டா நமக்கு இப்படித் தொல்லை கொடுக்கிறார்…? என்று அவர் மீது வெறுப்பு வரும். அவரை விட்டு ஓடிப் போகலாமா…! என்ற எண்ணம் தான் வரும்.
எங்கேடா நீ தப்பப் போகிறாய் என்பார்…! இப்படி எல்லாம் பல கஷ்டங்களைக் கொடுத்துத் தான் எனக்கு உண்மைகளை உணர்த்தினார் குருநாதர்.
ஒரு பாறை வழுக்கலாக இருக்கும். கவனம் இல்லை என்றால் விழுந்து பல் எல்லாம் போய்விடும். அங்கே ஒரு பொருளைக் காட்டுவார். போய் எடுக்கச் சொல்வார்.
காட்டிலேயும் மலைகளிலேயும் இப்படிப் பல அனுபவங்களைக் கொடுத்தார்.
ஒரு சமயம் இமயமலைக்குச் செல்லும் போது அங்கே பனியாக இருக்கிறது. கிடு… கிடு… என்று நடுக்கமாக இருக்கிறது. வெறும் கோவணத் துணியைக் கட்டிக் கொண்டு அங்கே போகச் சொல்கிறார்.
அங்கே போனால் எல்லாம் “பாதை” மாதிரித் தெரியும். மரத்தின் மீது பனி… கட்டியாக உறைந்திருக்கும். ஏமாந்து கையையோ காலையோ வைத்தோம் என்றால் “டபக்…” என்று படுபாதாளத்திற்குப் போய்விடுவோம்.
போடா…! என்பார். அதையும் காட்டுவார்… இதையும் செய்யச் சொல்வார். ஆனால்…
1.இந்த இடத்தில் உன்னைக் காப்பாற்ற வலு வேண்டுமல்லவா…
2.அந்த வலுவை எப்படி எடுக்க வேண்டும்…? என்று சொல்வார்.
3.நான் சொன்னபடி நினைக்கவில்லை என்றால் கீழே போய்விடுவாய்
4.நான் சொன்ன உணர்வை எடுத்தால் உன்னைக் காப்பாற்றிக் கொள்வாய்…! என்பார்.
ஆபத்து வரும் நேரத்தில் இந்த மாதிரி எல்லாம் செய்ய வேண்டும் என்பார் குருநாதர்.
அவர் சொன்னபடி போகும் போது ஒரு இடத்தில் மேலே மரத்தின் மீது பனி இருக்கிறது. அந்தப் பக்கம் திடு… திடு… திடு… திடு… என்று பனி உடைந்து கீழே விழுந்து கொண்டுள்ளது (AVALANCHE).
அங்கே காலை வைத்தவுடன் பொரு…பொரு… என்று இருந்தது “டபக்” என்று ஒரு கால் இறங்கிவிட்டது. கால் உள்ளே இறங்கிய பின் எந்த எண்ணம் வருகிறது…? ஐய்யய்யோ… செத்துப் போய்விடுவோமே…! என்ற எண்ணம் தான் வருகிறது.
1.நான் என்னடா சொன்னேன்…?
2.நீ என்னடா பண்ணுகின்றாய்…! என்று குருநாதர் கேட்கிறார்.
ஏனென்றால் அந்த உணர்வு என்ன செய்கிறது…? குருநாதர் கொடுத்த அந்தச் சக்தியைப் பயன்படுத்த முடியவில்லை.
மனிதன் நாம் இந்தப் “புவியின் ஈர்ப்பில்” இருக்கும் போது நமக்குள் உணர்வு இது தான் உடனடியாக வருகிறது. நல்லதை நினைக்க முடியவில்லை.
இதை எல்லாம் நீங்களும் கேட்கின்றீர்கள். தியானத்தில் உட்கார்ந்து ஈஸ்வரா…! என்று எண்ணினால்
1.மனதை ஒரு நிலைப்படுத்த முடியவில்லை
2.எண்ணத்தை நிலை நிறுத்த முடியவில்லை என்று சொல்வீர்கள்.
அப்படி எல்லாம் ஒன்றும் நிறுத்த முடியாது. ஏனென்றால் பல அலைகள் ஓடிக் கொண்டிருக்கும்.
இங்கே யாம் உபதேசிக்கும் உணர்வின் அலைகளைக் கேட்டால் உங்களுக்குள் நல்லதாகும். இதை உங்களுக்குள் ஆழமாகப் பதிய வைத்து நீங்கள் மீண்டும் எண்ணி “அந்த உயர்ந்த சக்தியை…” மகரிஷிகளின் ஆற்றலை எடுக்கப் பழக வேண்டும்.
உங்களுக்குள் எப்பொழுது மனம் கெடுகின்றதோ அந்த நேரத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அந்த நல்ல உணர்வுகள் எனக்குள் வளர வேண்டும்… என்று அதை எண்ணி உங்கள் உடலுக்குள் செலுத்த வேண்டும்.
இப்படி ஒவ்வொரு நேரத்திலும்…
1.குருநாதர் எனக்குக் காட்டியது போல்
2.நீங்களும் ஆத்ம சுத்தி செய்வதில் தான் எல்லாமே இருக்கிறது.
சொத்தையும் சுகத்தையும் அனுபவித்து வாழ்ந்தவர்கள் இன்று எங்கே இருக்கிறார்கள்…? – ஈஸ்வரபட்டர்
இந்த உலகில் உள்ள பொருள் பொக்கிஷங்கள் அன்றாண்ட அரசர்களாலும் முன்னோர்களாலும் சில முக்கியமான கோவில்களிலும்… அகழிகளிலும்… சுரங்கப் பாதைகளிலும்…. மற்றும் சில பெயர் குறிப்பிட வேண்டாத சிலைகளுக்குள்ளும்… பீடங்களுக்குள்ளும்… பல பொருள்களை மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
அப்படி வைத்தவர்கள்…
1.தன் ஆத்மா இன்றளவும் உயர முடியாமல்
2.தான் பதுக்கி வைத்த அந்த பொருள் என்ற பேராசைப் பொக்கிஷ சுழற்சியில்
3.அந்த ஆவிகள் இன்றளவும் அங்கேயே சுழன்று வாழ்கின்றன.
நம் எண்ணத்தினால் அதனை அடைய வேண்டும் என்ற தெய்வ சக்தியுடன் செயல்பட்டுச் சித்து நிலை கொண்டு அறிந்திடலாம். அதை எடுக்கவும் செய்திடலாம்.
ஆனால் அதனால் அடையக்கூடிய பொருள் என்ன…?
1.பிம்பப் பொருளை அடைந்தால் நாம் பெற வேண்டிய ஞானப் பொருளின் வழித் தொடர் அற்றுப் போய்…
2.மேன்மேலும் இந்தப் பேராசையின் சுழற்சியில் சுற்றிக் கொண்டே வாழ்ந்து..
3.இதே நிலையில் பொருளைப் பதுக்கியவனின் ஆன்மா போல் சுழலத் தான் முடியும்.
4.“நல்ல நிலை அடையும் வழி இல்லை…!”
இந்தப் பொருள் மட்டுமல்லாமல் இந்தப் பூமிக்கடியில் இயற்கை வளமுடன் வளர்ந்திட்ட பல அபூர்வ கனி வளங்கள்… படிவக் குவியல்கள்… எங்கெங்கு உள்ளன…? என்பதனை எல்லாம் நாம் அடையும் சித்து நிலையால் உணரலாம்.
அதன் நிலையை வெளிப்படுத்தி இந்த உலக ஆன்மாக்களை மேன்மேலும் இந்தப் பேராசையின் செயற்கைச் செயலுக்குத்தான் அது முன்னோடியாக நிற்குமேயன்றி…
1.எப்பொருளை அடைய வேண்டும்…? என்ற
2.பரம்பொருளின் நிலை பெற வழியாகாது.
சித்தர்களின் சப்தரிஷிகளின் செயலால் தான் இந்த உலக ஆத்மாக்கள் இன்று வரையிலும் வாழ முடிகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
பல கோடி உயிரணுக்களைக் கொண்ட இந்த உடலின் பிம்பத்திற்கு
1.இந்த உயிர் என்ற பொக்கிஷத்தினைப் போன்ற
2.பலவாக உள்ள உலகத்தில் ஒன்றாகிய தெய்வச் சக்தியைப் பெறும் பொக்கிஷத்தை நாம் பெறும் ஞான அருளைப் பெற வேண்டும்.
ஆகவே உலகத்திலுள்ள “பொருள் பொக்கிஷத்தை..” நாடி நாம் செல்லக்கூடாது.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
கண்ணின் கரு விழிக்குப் பின் இருக்கும் நரம்பு மண்டலம் வழி கொண்டு நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்திற்கும் கண் இணைக்கப்பட்டிருக்கிறது.
வேதனையான உணர்வுகள் நம் கண் வழியாகச் சென்று நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் இந்த வேதனை உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
தூண்டிய பின் அதனின் வலுவின் தன்மை கொண்டு அந்த வேதனைப்பட்ட உணர்வுகள் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை நுகரச் செய்து அந்த வேதனையான உணர்ச்சி கொண்டு எண்ணம் சொல் செயல் என்று இயங்கத் தொடங்குகிறது.
அதே சமயத்தில் சுவாசித்தது வேதனையான உமிழ் நீராக மாறி சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்துவிடுகிறது. அதனால் சிறு குடல் பெரும் குடலை உருவாக்கிய அணுக்கள் மயக்கமடைகிறது.
சிறு குடல் பெரும் குடல் பலவீனம் அடைந்தால் நாம் உணவாக உட்கொண்ட இந்த உணவுகள் நஞ்சாக மாறி நஞ்சின் தன்மை கொண்ட இரத்தமாக மாற்றுகின்றது.
அப்படி நஞ்சாக மாறும் போது நம் உடல் உறுப்புகளுக்குள்ளும் இரத்தத்தின் வழி விஷத் தன்மை பரவி நம் உடலில் பல விதமான நோய்கள் வரக் காரணமாகின்றது.
இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபடுவதற்கு நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நம் உடலில் உள்ள அணுக்களை உற்சாகப்படுத்த துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும்படி செய்கின்றோம்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினைப் பெறவேண்டும் என்ற ஆசையுடன் நாம் அதே கண்கள் வழியாக ஏங்கிக் கவரப்படும் போது
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நம் கண் வழி உள்ள நரம்பு மண்டலம் வழியாக
2.உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் பாய்ந்து உற்சாகமூட்டும் வீரியத் தன்மையாக அடைகின்றது.
3.அதே சமயத்தில் சுவாசித்த உணர்வுகள் உயிரிலே பட்டு அந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக இயங்கி
4.அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறி நம் சிறு குடல் பெரும் குடல்களில் கலந்து உற்சாகம் அடையச் செய்கிறது
5.சாப்பிட்ட ஆகாரத்தை நல்ல இரத்தமாக மாற்றும் சக்தி பெறுகின்றது.
பின் அந்தச் சக்திகள் அனைத்தும் நம் உடல்களில் உள்ள உறுப்புகள் அனைத்திற்குமே கல்லீரல் மண்ணீரல் நுரையீரல் கணையங்கள் கிட்னி இருதயம் இந்த நல்ல இரத்தங்கள் செல்லப்படும் அவைகளும் உற்சாகம் அடைந்து தீமையை நீக்கும் வலிமையான உணர்வைப் பெறுகின்றது.
குருநாதரின் உயிராத்மா ஒளியாக மாறியதையும் அதிலிருந்து பளீர்… பளீர்… என்று ஒளிக்கற்றைகள் பரவுவதையும் காட்டினார்
நம் குருநாதர் வைகுண்ட ஏகாதசி அன்று தான் உடலை விட்டுப் பிரிந்து தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றி விண் சென்றார்.
1.அதாவது இந்த உடலிலிருந்தே உயிராத்மா எப்படி ஒளியாக மாறி வெளியிலே செல்கிறது…?
2.வெளியிலே சென்ற பின் மற்ற மனிதர்களின் உணர்வுகள் எப்படி எல்லாம் கவர்கிறது…?
3.அப்படிக் கவரும் போது குருநாதரின் உயிராத்மா சுழற்சியின் நிலைகள் என்ன செய்கிறது…?
4.தன்னை அணுக விடாதபடி எப்படி விலகிச் செல்கிறது…? என்று அதை எனக்குக் (ஞானகுரு) காட்டி உணர்த்தவும் செய்தார்.
வெறும் துண்டு தான் குருநாதர் கட்டி இருப்பார். பெரும்பகுதி டிச்சிலேயே (DITCH) தான் படுத்திருப்பார். குளிர் காலம் என்று நல்ல ஒரு வேஷ்டியை எடுத்துக் கொடுத்தோம் என்றால் அதைக் கிழித்துக் காலிலேயும் கையிலேயும் கட்டிக் கொண்டு பாருடா… எவனோ கிழித்து விட்டான்…! என்பார்.
என்ன சாமி இப்படிச் சொல்கிறீர்கள்…! என்று கேட்டால் கிழித்து விட்டுப் போய்விட்டான் நான் என்ன செய்வது…? என்பார். படுத்திருந்தேன் கிழித்து விட்டான்…! என்பார்.
அவர் அசூசையைப் பற்றி நினைக்கவில்லை. இந்த உடலுக்குள் இருக்கக்கூடிய மெய் ஒளியைப் பற்றித் தான் சிந்தித்தார்.
பைத்தியம் போன்ற அவரின் செயல்களைக் காணும் போதெல்லாம் ஐயோ.. இவரிடம் சிக்கிக் கொண்டோமே… பெரிய தொல்லையாக இருக்கின்றதே…! என்று தான் எண்ணினேன்.
1.உடலை விட்டுப் போன பிற்பாடு பளீர்… பளீர்… என்று ஒளியின் தன்மை கொண்டு
2.மற்றதைத் தள்ளிக் கொண்டு அவருடைய ஆன்மா விண்ணுக்குப் போகிறது.
3.அப்படிப் போனாலும் இந்தப் பூமியின் பிடிப்பலைகளில் இந்த உயிராத்மா என்ன செய்கிறது பார்…? என்று
4,எல்லாவற்றையுமே எனக்கு முதலில் சொல்லிக் கொடுத்துவிட்டார்.
அன்றைக்கு ஞானிகளும் மகரிஷிகளும் எந்தெந்த நிலைகளில் செயல்பட்டார்கள்…? என்று அதையும் காட்டினார் குருநாதர்.
அதாவது உயிராத்மா வெளியிலே போனாலும்… தன் வலுவின் தன்மை கொண்டு பூமியின் ஈர்ப்புக்குள் வராது தடுத்தாலும்… அந்த உணர்வுக்கொத்த விழுதாக இருந்து பூமியிலிருந்து உயிராத்மாவை உந்தித் தள்ள வேண்டும்.
1.அதற்காக வேண்டித் தான் அவ்வளவு பெரிய ஆற்றல் பெற்றாலும்
2.சாதாரண மனிதரைத் தேடி ஞானிகள் வருகின்றனர்.
அவனுக்குள் வரும் இருளான துன்பத்தை நீக்கி விட்டு உடலிலே மகிழ்ச்சியை ஊட்டி… அவனிடமிருந்து வரும் நல்ல மூச்சைத் தனக்குள் சேர்த்துக் கொள்கின்றனர்.
ஒருவர் துன்பப்படுகின்றார் என்றால் இவன் (ஞானி) கஷ்டப்பட்டு பச்சிலைகளையும் மூலிகைகளையும் எடுத்து அவனுக்குக் கொடுத்து நோய்களை நீக்கி அவன் சந்தோஷப்பட வேண்டும் என்று செய்தார்கள்.
அன்று இதற்கெல்லாம் காசும் வாங்கவில்லை… ஒன்றும் வாங்கவில்லை.
ஒருவன் துன்பப்படுகின்றான் என்றால்
1.உடனே அவனுக்குள் நிவராணமாகும் அந்த உயர்ந்த சக்தியைப் பாய்ச்சி
2.அந்தத் துன்பமான உணர்வுகளை நீக்கி விட்டு மெய் ஒளியின் சுடராகப் பெருக்கச் செய்து
3.அவனுக்குள் மகிழ்ச்சியான எண்ணங்களைத் தோற்றுவிக்கச் செய்து
4.மருந்தைக் கொடுத்து நோயை நீக்கி அன்று சந்தோஷப்படுத்தினார்கள்.
இந்த மகான் நல்லது செய்தார் என்ற எண்ணத்தை ஏங்க வைத்து அதை ரசித்துத் தனக்குள் எடுத்து விண் சென்றார்கள்.
இன்று சகஜ வாழ்க்கையில் துன்பப்பட்டவரைப் பார்த்தோம் என்றால்
1.நாம் பாசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நமக்குள் வேதனையின் தன்மை இங்கே வருகிறது.
2.ஒரு அசுரத்தனமான உணர்வு கொண்டு “அவன் கிடக்கட்டும்…” என்று எண்ணினால் அந்த உணர்வுகள் இவனுக்குள் விளைந்து அதே முரட்டுத் தனமான நிலைகள் கொண்டு சிக்கி அடிபடுகின்றான்.
ஆனால் அந்த மெய் ஞானியோ துன்பப்பட்டவனுக்குள் இருக்கும் விஷத்தின் தன்மையை நீக்கி… மகிழ்ச்சி ஊட்டும் உணர்வின் தன்மை அவனுக்குள் விளைய வைத்து… அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி… அந்த உணர்வின் நிலையாகத் தனக்குள் வளர்த்துக் கொண்டவன்.
ஏனென்றால் எந்த விஷமாக இருந்தாலும் அதைத் தனக்குள் அடக்கி ஒளியின் தன்மையாக மாற்றும் ஆற்றல் பெற்றவர்கள் தான் ஞானிகள்.
1.அவர்கள் தங்களுக்குள் விளைய வைத்த அந்த அரும் பெரும் சக்திகளைத் தான்
2.இங்கே உங்களுக்குக் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
பூமி வெப்பமாகி எண்ணிலடங்காத மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது – ஈஸ்வரபட்டர்
ஆவியாகி… நீராகி… பிம்பமாகி.. மீண்டும் ஆவியாகி… நீராகி.. பிம்பமாகி…! முடிவில்லா மூன்று நிலைகளின் வட்டம் தான் இன்றுள்ள நிலை.
அன்று சித்தர்களினால் பண்டைய இராமாயணக் காவியங்களிலும் இன்னும் பல புராணங்களிலும் உள்ள உள் கருத்தை ஊன்றி நாம் அறிந்தோமானால் கதையாகப் படைக்கப்பட்டு உள் ஞானத்தின் சத்தை எடுத்து ஆய்ந்து பார்த்தோம் என்றால் “அதன் வடிகாலிலிருந்து பல உண்மைகளை நாம் அறியலாம்…”
இந்த உலகில் வட துருவ தென் துருவ நீர் நிலையினால் தான் இந்த உலகமே சுழன்று ஓடிக் கொண்டுள்ளது… வளர்ந்து கொண்டுள்ளது.
இந்தப் பூமியில் உள்ள விஷ அமில குணங்களைத் தன்னுள் ஈர்த்து இன்றைய மனிதனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் வாழ வைக்கக்கூடிய திசை தான் வடதிசையும் தென் திசையும்.
1.ஆனால் வட திசையை எதற்கும் ஆகாததாகச் சகுணம் பார்க்கின்றான்
2.தீயவை தீயவையுமல்ல… நல்லவை எல்லாம் நல்லவையுமல்ல…!
“சிவன் விஷத்தை உண்டு…” தன் கழுத்திற்குக் கீழ் அது செல்லாமல்… தன் கழுத்திலேயே பாம்பாக வைத்துள்ளார்…! என்ற தத்துவத்தின் உண்மை என்னப்பா…?
1.வட துருவம் விஷக் காற்றுக்களை ஈர்த்து வைத்துக் கொண்டு மற்ற பாகங்களில் அதைப் பரவாமல்
2.விஷ குண அமிலத்தையே நன்மையாகச் செயல்புரிகிறது வட துருவ தென் துருவ திசைகள்.
வட துருவத்தையே ஈஸ்வரனாக்கிப் பாற்கடலில் பள்ளி கொண்டு அவரின் செயல் சிலாக்கிய முறைகளை எல்லாம் தத்துவக் கதைகளில் பிம்பத்தை உணர்த்திப் பிம்ப நாம காவியம் படைத்தார்கள் நம் முன்னோர்கள்.
நம் பூமியில் இந்தக் கோடிக்கணக்கான ஆண்டு சுழற்சி வட்டத்தில் பூமியின் சத்துப் பலனை இதற்கு முன்னாடி நம் பூமி பெற்றது. ஆனால் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அறிவின் வளர்ச்சி கொண்ட மனிதனால் நம் பூமியின் நிலையே பட்டுப் போன மரத்தைப் போல் உள்ளது.
1.பல ஆண்டுகள் பலன் தந்து தன் சக்தி வலுவிழந்து நிற்கும்
2.பட்டுப் போன மரத்தைப் போன்ற நிலையில் தான் நம் பூமியின் உள் ஜீவ நிலை உள்ளது.
பலனை எல்லாம் தந்தது. அந்தப் பலனை நாம் பலவாகப் பிரித்து எடுத்துவிட்டோம். பின் இன்றைய நிலை எப்படியப்பா இருக்கும்..?
நம் பூமியின் வட துருவ தென் துருவ திசைகளிலும் அதிகப்படியான விஷத் தன்மையின் நிலையினால் அதை வடிகட்டி இது நாள் வரை நம் பூமிக்குச் சுத்தமாக்கித் தந்த காற்றின் நிலையே இன்று மாறி விட்டது.
வட துருவமும் தென் துருவமும் எப்படிக் விஷக் காற்றைத் தன்னுள் எடுத்துச் சுத்தப்படுத்தித் தருகிறது என்பீர்…?
மாம்பழத்திலும் இன்னும் சில வகைப் பழங்களில் அதன் உள் கொட்டை எப்படிக் கசப்பாகவும் பழங்கள் இனிப்பாகவும் உள்ளன…?
அதைப் போல் நம் பூமியின் இயற்கையே இந்தக் கரியமில வாயுவான விஷ அமிலக் காற்றைச் சுத்தப்படுத்தி வெளிப்படுத்தும் மையக் கோளங்களாக இந்த வட துருவ தென் துருவ நிலையுள்ளது. அதன் அமிலப் படிவமே மீண்டும் உறைந்து பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
மாற்றங்களின் வழித் தொடரிலும் நம் பூமியின் விஷ அமில குணத்திலும் அதிகப்படியான வளர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதினால் வட துருவ தென் துருவ செயல் நிலையிலும் “இந்த விஷத் தன்மை அதிகப்பட்டு விட்டது…!”
எதுவுமே… அதனதன் வளர்ச்சி நிலைக்கொப்ப தன் இயற்கையுடன் தானாக வளர்ந்து “ஒரு நிலையான வழி முறையுடன் வழி நடந்தால் தான்…” அதன் நிலையில் ஒன்று போல் இருக்க முடியும்.
குழந்தைப் பருவத்தில் அந்தந்த வயதுக்குகந்த அறிவு ஞான வளர்ச்சியை எப்படி வளர்த்துக் கொண்டு எந்த அறிவு செயல் முறை மனிதனாக வழி பெற்று அவன் வாழ்கின்றானோ அதன் தொடர் வாழ்க்கை தான் அவனால் வாழ முடியும்.
1.எண்ணத்திற்கு மேல் செயலை ஏற்றினால் செயல் முறையில் நிறைவைக் காண முடியுமா…?
2.அதிகப்படியான எண்ணச் சுமையை ஏற்றப்படும் பொழுது பைத்தியம் தான் பிடிக்கும் அந்த மனிதனுக்கு…!
3.அதைப் போன்ற நிலை தான் நம் பூமியில் வட துருவ தென் துருவ திசைகளுக்கு ஏற்பட்டுள்ளது.
அதனின் விளைவுகள் தான் சீதோஷ்ண நிலை மாற்றம்… பருவ நிலை மாற்றம்… அதிக வெயில் அதிக மழை அதிகக் குளிர்… எல்லாமே.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
உதாரணமாக நம் நண்பரின் கஷ்டத்தை நாம் கேட்டு அறிகின்றோம். அவர் பட்ட கஷ்ட உணர்வு நம் உயிரிலே பட்டவுடனே நாமும் சோர்வடைகின்றோம்.
ஐயோ.. பாவம்…! நல்ல மனிதன்… உனக்கும் இப்படிக் கஷ்டம் வந்துவிட்டதா…? என்று கேட்டு அவருக்கு உதவியும் செய்கின்றோம். அப்போது உதவி செய்யும் போது நம் நல்ல மனதில் அவருடைய கஷ்டமான உணர்வுகள் கலந்து விடுகின்றது.
தங்கத்தை நகையாகச் செய்ய வேண்டும் என்றால் செம்பையும் வெள்ளியையும் கலப்பார்கள். அதைப் போன்று அவருடைய கஷ்டம் கலந்தாலும் வாழ்க்கையில் உதவி செய்து விட்டோம்.
வாழ்க்கையில் நாம் ஒருவருக்கு உதவி செய்தால் தான் நாளைக்கு அவரும் உதவி செய்வார். அப்பொழுது
1.இந்த வாழ்க்கை என்ற செயினிற்கு (தொடருக்கு)
2.அவரோடு தொடர்பு கொண்டு அந்த அன்பை நீங்கள் வளர்க்கின்றீர்கள்.
கஷ்டத்தைக் கேட்டு உதவி செய்து வீட்டிற்குள் வருகின்றீர்கள். பேரப் பிள்ளையைத் தூக்கிக் கொஞ்சியதும் அந்தக் குழந்தை வீர்… வீர்… என்று கத்துகின்றது.
குழந்தை கத்தியவுடன் மருமகளைக் கூப்பிட்டு… நீ பிள்ளையைக் கவனிக்கும் முறை இது தானா…? ஏன் உன் பிள்ளையை இப்படி அழுகச் செய்கிறாய்…? என்று கேட்போம்.
இல்லையே…! இது வரை குழந்தை நன்றாகத் தான் இருந்தது. இப்பொழுது நீங்கள் வந்தவுடன் தான் அழுகின்றது…! என்று மருமகள் சொல்கிறது.
அதற்கு நாம் என்ன சொல்வோம்..? அப்படியானால் நான் தான் தப்பு செய்தேனா…? என்று அங்கே சண்டை வருகிறது.
ஏனென்றால்…
1.அங்கே நம் நண்பருடைய கஷ்ட நஷ்டத்தைக் கேட்டோம்
2.அதை நாம் சுத்தப்படுத்தவில்லை
3.அது இங்கேயும் வந்து வரிசையில் அடிக்கின்றது.
கேட்டறிந்த கஷ்டத்தையும் வெறுப்பையும் வேதனையையும் துடைக்க வேண்டுமல்லவா…?
அதற்காகத்தான் விநாயகரை (தெருவுக்குத் தெரு) வைத்துக் காட்டினார்கள் நம் ஞானிகள். நண்பருடைய இன்னல்களைக் கேட்டறிந்தோம்… உதவியும் செய்துவிட்டோம்… ஆனால் அந்த இன்னலான உணர்வு நம் உடலில் அது சேரக் கூடாது.
நம் உடலில் சேரக் கூடாது என்றால் என்ன செய்ய வேண்டும்…?
ஈஸ்வரா…! என்று நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ண வேண்டும். நாம் எண்ணுவதை எல்லாம் அவன் தான் நமக்குள் உற்பத்தி (உடலாக) செய்கின்றான்.
ஆகவே அவனைத் தான் அந்த நேரத்தில் எண்ண வேண்டும். ஈஸ்வரா…! அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
1.விநாயகரைப் பார்த்து இந்த முறையில் கும்பிட்டுப் பழகினால் தான்
2.நாம் எண்ணியவுடன் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கும்
3.நம்மை அறியாது உட்புகந்த கஷ்டங்களையும் இன்னல்களையும் அடக்கும்…
4.நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் சக்தியாக வளரும்.
ஆனால்… இரண்டு தோப்புக்கரணம் போடுகிறேன்… உனக்கு இரண்டு அருகம்புல்லை வைக்கின்றேன்…! எனக்கு நல்லது செய்…! என்று விநாயகரிடம் கேட்டால் இந்த எண்ணம் தான் வரும்.
ஆகையினால் ஈஸ்வரா.. என்று நம் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா பெற வேண்டும் என்று கண்களைத் திறந்து நினைவை வானை நோக்கிச் செலுத்தி மீண்டும் கண்ணின் நினைவை உடல் முழுவதும் பாய்ச்ச வேண்டும்.
இதைத்தான் கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்று சொல்வது…!
கண்ணில் பார்த்தவுடன்…
1.ஒருவன் தப்பு செய்கின்றான் என்று நம் கண் காட்டுகிறது.
2.அது மட்டுமல்ல… தவறு செய்த உணர்வை நம் கண் இழுத்து
3.அவன் தப்பு செய்கின்றான் என்று கண் தான் நமக்குள் தெரிய வைக்கின்றது… இல்லையா…?
அப்பொழுது நாம் நண்பரின் கஷ்டத்தைத் தெரிந்து கொண்டோம் என்று கண் உணர்த்திய பின் உடனே என்ன செய்ய வேண்டும்…?
அதே கண்ணின் நினைவை கொண்டு… உயிரான ஈசனைப் புருவ மத்தியில் எண்ணி… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று வானை நோக்கி அந்தச் சக்தியைச் சுவாசித்துத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதன் பின் நண்பரைப் பார்த்து மகரிஷிகளின் அருள் சக்தி நீ பெறுவாய். உன் சிரமம் எல்லாம் நீங்கிப் போகும். நீ நன்றாக இருப்பாய்…! என்று
1.நம்மை முதலில் தூய்மைப்படுத்திவிட்டு அந்த வலு கொண்டு
2.நீ நன்றாக இருப்பாய்…! என்று நண்பரிடம் வாக்கினைப் பதிவு செய்ய வேண்டும்.
அந்த வலிமையான மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எடுக்கப் பழகுவதற்குத்தான் விநாயகரை வைத்தனர். ஒவ்வொரு நாளும் காலையில் அங்கே நம் மூதாதையர்களின் உயிரான்மாக்களை பிறவா நிலை பெறச் செய்ய வேண்டும் என்று உந்தித் தள்ளும்படி செய்தார்கள் ஞானிகள்.
1.முன்னோர்களை முதலில் அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்யும் நல் வினையை உன் உடலில் சேர்க்க வேண்டும்
2.அப்பொழுதுதான் நீ விண்ணிற்குச் செல்வாய்… மனிதன் என்ற நிலையில் நீ முழுமை பெறுவாய்…! என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
சகஜ மார்க்கம்
ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்பது உங்கள் உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் குருவாக இருப்பது உங்கள் உயிரே.
நாம் எண்ணியது அனைத்தையும் நமக்குள் ஊழ்வினையாகப் பதியச் செய்து… மீண்டும் நினைக்கும் போது “அது குருவாக இருந்து” நமக்குள் அந்த ஒவ்வொரு குணமும் செயல்படுகின்றது.
உதாரணமாக குழந்தை மேல் பாசமாக இருக்கின்றேன். அது உயிரிலே பட்ட பின் ஓ… என்று பிரணவமாகிறது. அடுத்து அது ம்… என்று உடலாகிறது.
மீண்டும் அதே குணத்தை நான் எண்ணும் போது அந்தப் பாசத்தால் அவனுக்குச் செய்ய வேண்டிய “குரு நிலையாக” அவனுக்கு வழி காட்டுகிறது.
1.இப்படித்தான் நாம் எண்ணிய குணங்கள் எதுவோ அது குருவாக நமக்குள் இயங்குகிறது.
2.ஆனால் நாம் எதைக் குருவாக ஆக்க வேண்டும்…?
மெய் ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி அந்த அரும் பெரும் சக்தியாக அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
அந்த உணர்வின் சக்தியைத் தான் இங்கே உபதேசிக்கின்றோம். நீங்கள் கூர்ந்து கவனிக்கும் போது உங்கள் எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவாகிறது.
1.பதிவாக்கியதை நீங்கள் மீண்டும் நினைவு கூறும் போது
2.அந்த ஞானிகள் உணர்வு குருவாக நின்று உங்கள் வாழ்க்கையில் வரும் இடையூறுகளை நீக்கி
3.மெய்ப் பொருள் காணும் நிலையாகப் பெறச் செய்யும்.
ஆகவே…
1.உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் இடையூறு வருகின்றதோ
2.அந்த நேரத்தை எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் ஆற்றலாக
3.அந்தத் தகுதியாக நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
அத்தகைய தகுதியைப் பெறச் செய்ய வேண்டும் என்பதற்குத் தான் அதைக் குருவாக உங்களை ஏங்கச் செய்வது. “சகஜ மார்க்கம்” என்பது இது தான்.
1.ஞானிகளின் உணர்வைக் கண் புலனறிவால் ஏகி அதனின் உணர்வைப் பருகி
2.அந்த விண்ணுலக ஆற்றலைப் பெற்றவர்கள் உணர்வை நமக்குள் எடுக்கப்படும் போது
3.அவர்கள் உணர்வைக் கவர்ந்து கொள்ள முடியும்.
உதாரணமாக ஒரு உயர்ந்த வித்தை நிலத்தில் ஊன்றி அதற்கு நீரை ஊற்றினால் பூமியின் ஈர்ப்புத் துணை கொண்டு காற்றிலிருக்கும் தன் இனச் சக்தியை எடுத்து நல்ல வித்தினைக் கொடுக்கின்றது.
அதைப் போன்று தான் அருள் ஞானிகளின் வித்தை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அது ஜீவன் பெற உங்கள் நினைவை மீண்டும் கூட்டினால் அந்த உணர்வின் சத்தை காற்றிலிருந்து கவர முடியும்.
அவ்வாறு கவர்ந்து அதனின் உணர்வைத் தனக்குள் வளர்த்து வரும் நஞ்சு கொண்ட உணர்வின் அணுவைப் பிளந்து உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி மெய் ஒளி காணும் மெய் சரீரத்தைக் காண முடியும்.
அதைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்தில் தான் இதை நான் (ஞானகுரு) உபதேசிக்கின்றேன்.
1.நிச்சயம் நீங்கள் பெறுவீர்கள்.
2.உங்கள் மூச்சு இருள் சூழ்ந்த நிலைகளை நீக்கும்.
உங்கள் உணர்வுகள் அனைத்தும் நலமும் வளமும் பெற்று உங்கள் சொல்லைக் கேட்டுணர்ந்தோர் அனைவரையும் இருளை நீக்கி மெய்ப் பொருளைக் காணும் உணர்வுகளாக வளர்ச்சி பெறும்.
அதற்காக வேண்டித் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நான் (ஞானகுரு) எண்ணுகின்றேன்… தியானிக்கின்றேன். அந்த உணர்வின் தன்மை எனக்குள் ஊழ்வினையாகப் பதிவாகிறது.
அதை மீண்டும் நான் நினைக்கும் போது
1.உங்களுக்கு என்னென்ன உதவி செய்ய வேண்டும்…?
2.நீங்கள் எப்படி மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற வேண்டும்…?
3.உங்களை அறியாது சேர்ந்த இருளை எப்படி நீக்க வேண்டும்…? என்ற
4.அந்த குரு வழிப்படி உங்களுக்கு உபதேசிக்க வேண்டி வருகிறது.
இது எனக்குள் குருவாக வந்து என்னை இப்படி இயக்குகிறது. குருநாதர் அருள் வழிப்படி இதை உபதேசிக்கின்றேன்.
ஞான வழியில் நாம் சீராகச் செல்ல வேண்டும் என்றால் மகரிஷிகளின் அருள் சக்தி மிகவும் அவசியம் – ஈஸ்வரபட்டர்
ஓர் மனிதன் தன் சுவாசத்தினால் எடுக்கும் எண்ணத்தின் அலையை ஒத்துத்தான் அவனது அறிவாற்றல்… குணமும்… உடல் உறுப்பும்… உருவமும்… எல்லாமே இருந்திடும்.
1.அதை எல்லாம் எந்த ஒரு தனி மனிதனுக்கும்
2.ஆண்டவனாக வழி அமைத்துத் தருவதில்லை…! (இது முக்கியம்)
எல்லாமும் ஒன்றாக… ஒன்றிலே எல்லாமும் உள்ள பொழுது.. எதன் அடிப்படைச் சக்தியை எவ்வாத்ம எண்ணம் ஈர்த்து வாழ்கின்றதோ… அதன் தொடர்ச்சி நிலைக்குகந்த அளவு… அறிவாற்றலும் வாழ்க்கை நிலையும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அமைகின்றது.
ஒருவர் அதிக சுறுசுறுப்புடனும் செயலாற்றும் திறமையுடனும் நல் நிலையில் வாழும் பொழுது அவர் எடுத்துக் கொள்ளும் எண்ண சுவாசத்தின் வளர்ச்சி அமிலத் தன்மையினால்தான் அந்த மனிதன் உயர்கின்றான். அவன் எடுக்கும் நிலைக்கொப்ப ஆவிகளின் (பிற ஆன்மாக்கள்) தொடர்பும் ஏற்படுகின்றது.
மின் அலை எப்படி எந்தெந்த விகித நிலைக்கொப்ப பாய்ச்சப்படுகின்றதோ அதன் நிலைக்கொப்ப ஒளியைத் தரக்கூடிய நிலையையும் எந்தெந்த இயந்திரங்களுக்கு எந்தெந்த விகிதத்தில் மின் அலை பரப்பப்படுகின்றதோ அதன் சக்தி ஓட்டத்தைத் தான் அந்த இயந்திரம் எடுத்து ஓடுகிறது.
அதைப் போல்…
1.எதன் அடிப்படையில்… எதன் விகித நிலைக்கொப்ப..
2.ஒவ்வொரு ஆத்மாவின் எண்ணச் சுவாசமும் உள்ளதோ..
3.அதன் சக்தி நிலையைத்தான் அவன் பெற முடியும்.
அதன் செயலில் தான் அவன் வாழ்க்கையும் அமைகிறதேயன்றி பல கோவில் ஸ்தலங்களுக்குச் சென்று ஆண்டவனை வணங்கி வந்து “பூஜித்துச் சக்தி பெறுவதல்ல…!”
எண்ணத்தின் ஈர்ப்பை உயர்வாக்கி எடுக்கும் சுவாச குண அமிலத்தினால் பலவாக உள்ள இந்தக் காற்றின் அமிலத்திலிருந்து “நமக்குகந்த அமிலத்தை நாமாக எடுத்துக் கொள்ளலாம்…”
இதன் வளர்ச்சியில் நமது எண்ணமும் சுவாசமும் இருக்குமானால் அதன் நிலையில் நாம் எடுக்கும் ஜெப முறையில் நம் எண்ண ஈர்ப்பை நமக்கு மேல் சக்தி வாய்ந்த சித்தர்களின் பால் நம் எண்ணத்தைச் செலுத்திடல் வேண்டும்.
அப்படிச் சித்தர்கள் பால் தொடர்பு கொண்டு எடுக்கும் சுவாச அலையின் தொடர்பினால்… இந்த உடலுடன் மனித உலக வாழ்க்கையில் வாழும் நாம்
1.பிம்பப் பொருளைக் கண்டு பொருளாக வாழும் இந்த வாழ்க்கையிலிருந்து பெற முடியாத “ஞானத்தை”
2.நம் ஈர்ப்பின் ஜெப எண்ணத்தை சித்தர்பால் செலுத்தி
3.அவர்களின் தொடர்பலையின் சக்தி குண அமிலங்களை நாம் பெறும்படி வழிப்படுத்திக் கொண்டால்
4.நம் ஞான வளர்ச்சியின் தொடரில் செல்லும் வழி முறைப் பாதையை அறிந்து கொள்ளலாம்.
அந்தப் பாதையை அறிந்து விட்டால் நாம் செல்ல வேண்டிய வழியில் எந்தத் தடங்கலும் இருக்காது.
பலவாக உள்ள உலக வாழ்க்கை எண்ணத்தில் நம் எண்ணத்தை ஒன்றாக்கி… “ஓ…ம்” என்ற ஒலியுடன் சித்தர்கள் பால் நம் எண்ண ஈர்ப்புச் சக்தியை நாம் தந்தோமானால் மெய் ஞானம் பெறும் வழி ஞானம் அறியலாம்.
ஞானத்தின் ஈர்ப்பில் கலந்தோமானால் பல உண்மையின் பொருளை உலகளவுக்கு உணர்த்தலாம்.
ஞானிகளும் சப்தரிஷிகளும் நம் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்காவிட்டால் நம் பூமியில் மனித ஞானம் இன்று “ஞானமும் கண்டிருக்காது… விஞ்ஞானமும் கண்டிருக்காது…!”
1.இன்றைய காலகட்டத்தில் நம் சித்தர்களின் ஒளி சக்திகள்
2.இந்த உலகில் அதிகமாகச் செயல்பட்டுக் கொண்டுள்ளது.
ஆனால் மனித ஞானம் எல்லாமே ஞானத்தின் பால் செல்லும் வழிமுறையற்றுப் பேராசையின் பிடி ஞானத்தில் தன் வலுவான விந்தை காணத் துடிக்கிறது.
மனிதனின் பேராசையின் விபரீத எண்ணச் சுழல் காற்றுகள் பூமியின் சுழற்சியுடன் அதிகப்பட்டு… மோதி… உயிர்ப்பலிகள் அதிகமாகி…
1.ஆவியின் சூழ்ச்சியில்.. அல்லலுக்கந்த வாழ்க்கையில் வாழ்கின்றான் மனிதன் என்பதை
2.அறியாமல் தான் இன்றைய மனிதர்கள் வாழ்கின்றனர்…!
தனதாக உள்ளது எது…? என்பதும் இம் மனித ஞானத்திற்குப் புரியவில்லை. தனி மனிதன் யாரும் வாழவில்லை… “தனியாக” யாருமே எங்கேயுமே வாழ முடியாது.
காற்றையும் நீரையும் நிலத்தையும் தன்னுள் உள்ள பல கோடி அணுக்களையும் வாழ வைத்து… வாழும் மனிதன்…
1.தானாக வாழ்கின்றானா..? அந்தத் “தனது” என்ற பேராசைக்கார மனிதன்…?
2.ஒன்றின் துணையில்லாமல்…
3.ஒன்றுடன் ஒன்றில்லாமல் வாழவே முடியாத மனிதன்
4.”நான்…” என்ற நானாக… வாழ்கின்றானாம்..!
ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் ஆண்டவனின் ஸ்வரூபத்தை எண்ணி வாழ வேண்டுமப்பா….!
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வந்த நாம் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரையிலும் எத்தனையோ வேதனைப்பட்டுள்ளோம்.
அத்தகைய வேதனையிலிருந்து மீண்டிடும் உணர்வுகளைச் சுவாசித்துச் சுவாசித்து அதன் வளர்ச்சியாக இந்த மனித உடலாக உருவாக்கியது நம் உயிர் தான்.
அப்படி வேதனையிலிருந்து விடுபடும் உணர்வுகள் கார்த்திகேயா…!
அதாவது ஒவ்வொரு உடலிலும் எத்தனை தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வின் ஞானம் பெற்று
1.இந்த மனித உடலாகும் போது அதற்குத்தகுந்த உறுப்புகளை உருவாக்கி
2.தீமையிலிருந்து விடுபடும் வலுவான அந்தச் சக்தியாக
3.ஆறாவது அறிவாக வள்ளி மிகச் சக்தி வாய்ந்த நிலையாக மாறுகின்றது.
4.அதைத்தான் வள்ளி என்று பெண்பாலைக் காட்டுகின்றார்கள்.
இந்த வலிமைமிக்க சக்தி பெற்ற நிலையைத் தான் நம்மைக் காட்டிலும் ஞானிகளோ பெரியவர்களோ அவர்கள் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று மிக மிகச் சக்தி வாய்ந்ததாக அவர்கள் உடலில் வளர்த்துள்ளார்கள்.
அந்த மகான்கள் எல்லாம் தனக்குள் வந்த நோய்களையும் தீமைகளையும் வராதபடி வலு கொண்டு சமாளித்துக் கொண்டவர்கள்.
அந்தக் குடும்பப் பந்தம் இல்லாதபடி தீமையிலிருந்து விடுப்ட வேண்டும் என்று
1.அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு வலிமையான உணர்வுகளைச் சுவாசித்து
2.அவர் உடலிலே எந்தத் தீமையும் சாடாதபடி…
3.அதைத் தாக்கிடும் தாங்கிக் கொள்ளும் அந்த உணர்வினைப் பெற்றுள்ளார்கள்.
அப்படிப் பெற்றிருக்கும் போது… நம் கண்ணுக்கு முன்னாடி ஒரு மகானைப் பார்த்தோம் என்றால்
1.அந்த மகானின் அற்புத நிலைகள் நாமும் பெற வேண்டும்
2.அவரின் அருளாற்றல் பெறவேண்டும்
3.நமக்குள் இருள் வராதபடி தடுக்கும் அந்த அருள் சக்தி வேண்டும் என்று எத்தனை பேர் இப்படி எண்ணுகின்றோம்…?
நம் உடலில் ஒரு நோய் வந்ததென்றால் அந்த மகானை நினைத்து அழுவோம். நான் எல்லோருக்கும் நன்மை தானே செய்தேன்… என்னை ஏன் இப்படிச் சோதிக்கின்றாய்…? என்ற நிலையில் கோவிலுக்குச் சென்றாலும் இதைத்தான் நினைக்கின்றோம்.
ஏனென்றால் நன்மை செய்பவர்கள் எல்லாம் எப்படிச் செய்கின்றார்கள்…?
மற்றவர்கள் வேதனைப்படுவதை எல்லாம் கேட்டு அறிந்து அடப் பாவமே…! என்று சொல்லித் தான் நாம் உதவியே செய்கின்றோம்.
அவர் வேதனையை நாம் அதிகமாக நேசித்த பிற்பாடு அதன் ரூபமாக பண உதவியோ மற்றதையோ செய்கின்றோம். ஆனாலும் அவர் உடலிலிருந்து வேதனையை நாம் நுகர்கின்றோம்.
இப்படி நம்மை அறியாமலே நன்மை செய்யும் சமயங்கள் எல்லாம் அடுத்தவர்களின் வேதனைகளையோ அவர்களின் குடும்பக் கஷ்டங்களையோ நோய்வாய்ப்பட்டோரின் உணர்வுகளையோ எல்லாவற்றையும் நுகர்கின்றோம்.
இந்த உணர்வுகள் வலிமையாகி… நாம் நுகர்ந்த பின் நம் உடலில் வந்து சேருகிறது “காசு கொடுத்து விலைக்கு வாங்கிய மாதிரி…!”
ஆனாலும் இதைச் சுத்தப்படுத்த வேண்டுமல்லவா…! அதற்கு நாம் என்ன வைத்திருக்கின்றோம்…?
நம் பிரபஞ்சத்தின் மாற்றம்
மனிதர்களாக உருவான பின் வாழ்ந்து… கடைசியில் இறந்த பின் அந்த உடலைப் புதைத்தால் அது கரைந்து விடுகிறது… மற்றொன்றுக்கு இரையாகின்றது. (உடலை மண் தின்கிறது என்று சொல்வோம்).
1.இதைப் போல் தான் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள நம் சூரியன் தன் செயலை இழந்தால் கரைந்துவிடும்.
2.காரணம் நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களும் தனித் தனியாக ஒரு சூரியக் குடும்பமாக மாறும் தருணம் வந்துவிட்டது (உபதேசம் செய்த வருடம் 1992).
கார்த்திகை நட்சத்திரம் நம் சூரியனைப் போல் அதுவும் வளர்ச்சிக்கு வருகிறது. ரேவதி நட்சத்திரமும் அதே போல் சூரியனாக மாறுகிறது. அதே போல் இன்னும் இரண்டு மூன்று நட்சத்திரங்கள் சூரியனாக மாறிக் கொண்டிருக்கின்றது.
இப்படி மாறி விட்டால் நாம் வாழும் இந்தச் சூரியனுக்குக் கிடைக்கக்கூடிய ஆகாரத்தை அது பகிர்ந்து கொள்கிறது. இது முதுமை அடைகிறது.
ஆக இப்படி நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களில் சரி பகுதி தனித் தனி சூரியக் குடும்பமாக மாறி விட்டால்
1.நம் சூரியனுக்கு இரையில்லை.
2.இந்தச் சுழற்சியின் தன்மை இதனின் (சூரியனின்) ஈர்ப்பு வட்டம் குறையும்.
இந்த ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் நம் பூமியோ இதைப் போல் அந்த சுழலுக்குள் சிக்கி இதுவும் சுழற்சியான பின் அதற்குள் போய்க் கரைந்து விடும்… ஆவியாக மாறும்.
மற்ற இந்த 27 நட்சத்திரங்கள் இருக்கிறதல்லவா… இதிலே ஒவ்வொன்றும் சூரியக் குடும்பமாக மாறிப் போகும் உணர்வுகளுக்கு இது உணவாகிவிடும்.
இப்படித் தான் அகண்ட அண்டத்தில் உள்ள இந்த 2000 சூரியக் குடும்பங்களும் ஓர் குடும்பமாக மாறி வளர்ந்து வந்துள்ளது.
அதே சமயத்தில் நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் 27 சூரியக் குடும்பமாக மாறிவிட்டால் இது ஒரு வட்டமாகின்றது… பேரண்டம் ஆகிறது.
இதன் வளர்ச்சியில் இதைப் போல் மாறி மாறித் தன் பெருக்கத்தின் நிலைகள் கொண்டு 2000 சூரியக் குடும்பங்களாக வளரும்.
1.நான் (ஞானகுரு) வெறுமனே சொல்லவில்லை… படிக்காதவன் தான் சொல்கிறேன். படித்திருந்தால் தப்பாகத் தான் சொல்லியிருப்பேன்.
2.இந்தப் பிரபஞ்சத்தில் ஏற்படும் மாற்றம் பற்றி அன்றே குருநாதர் எமக்குக் காட்டினார்.
ஆகையினால் குருநாதர் கொடுத்த அந்த மெய் உணர்வின் தன்மைகளை நீங்கள் பெற்று அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நுகர்ந்து
1.அகண்ட அண்டத்தையும் அறியலாம்
2.இந்தப் பிண்டத்திற்குள் அதனின் ஆற்றலை எடுத்து வளர்க்கவும் செய்யலாம்.
3.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலையையும் நீங்கள் அடையலாம்.
அதற்குத் தான் இதை எல்லாம் சொல்வது.
உயிருடன் ஒன்றி வாழ்ந்தால் பிறப்பின் பலனை அடையலாம் – ஈஸ்வரபட்டர்
சக்தியின் நிலை பலவற்றில் கலந்திருந்தாலும் அதன் “கூட்டு நிலை…” கொண்டு தான் ஒவ்வொன்றின் பிரகாசமும் ஜொலிக்கின்றது.
தனித்த பூக்களாக இருந்தாலும் அதை எல்லாம் ஒன்றாகக் கோர்த்து ஆரம் கட்டித்தான் ஆண்டவனுக்குச் சூட்டி மகிழ்கின்றோம்.
1.ஒன்றாக உள்ளதைப் பலவாகத் தருவதே இயற்கை…!
2.தாவர வளர்ச்சியின் நிலையிருந்துதான் முன்னோடி நிலை பெறுகின்றது.
தானாக வளரும் தாவரங்களும் சரி… நாமாகப் பயிர் செய்யும் தாவரங்களும் சரி… ஆரம்ப வளர்ச்சியில் அதற்கு வேண்டிய சக்தியை ஈர்த்துத் தன் சேமிப்புச் சக்தியின் பலன்களைத் தருகின்றன.
1.பூவையும் காய்களையும் கனிகளையும் சில தாவரங்கள் தருகின்றன.
2.பூவும் கனியும் அளிக்காத புல் பூண்டு இன வர்க்கங்கள் அதன் அமில குணங்கள் முற்றிய பிறகு
3.வேர்களின் அதனின் சக்தி குணத்தை அதிகப்படுத்திக் கனம் கொண்டு தான் சேமித்து
4.வளர்ச்சி நிலையை வளரந்த பிறகு வெளிப்படுத்துகின்றது.
“வளர்ச்சியின் முற்றலை…” ஒவ்வொரு தாவர இன வர்க்கமும் வெளிப்படுத்திய பிறகு தான் அதனின் உயிர் ஜீவ சக்தி மாறுபடுகிறது.
அதன் மாற்றத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்ட ஜீவ ஆத்மாக்களுக்கு ஆரம்ப காலத்திலேயே ஒன்றாகப் பல அமில குணத்தை ஈர்க்கும் நிலை பெற்றதனால் மனிதனும் மிருகமும் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் இன வர்க்கங்களும் தம் உடல் அவய அமைப்பில் பல நிலைக்கேற்ப அங்க அவயங்கள் ஒரே தன்மையில் ஈர்த்து வளரும் நிலை கொண்ட இன குணங்களுடைய ஜீவராசிகளாக வளர்ந்திருக்கின்றோம்.
தாவரங்கள் சக்தியை ஈர்த்துப் பிறகு பலன் தருகிறது. தாவரங்களுக்கு உண்டு கழிக்கும் நிலை இல்லை.
பலவும் ஒன்றாக ஈர்த்துப் பல அவயங்களை ஒன்றுபடுத்தி உருவ அமைப்பு கொண்ட ஜீவன்களுக்கு உண்டு கழித்து வாழும் அவயங்கள் எப்படி அளிக்கப்பட்டன…?
அளிக்கப்பட்டன…! என்பதைக் காட்டிலும் வளர்ச்சியில் முன்னேற்றம் கொண்ட ஜீவ ஜெந்துக்கள் தன் வளர்ச்சியில் உண்டு கழித்துப் பல கோடி உயிரணுக்களை வளர்த்து வாழும் நிலையில் பயன் பெறும் பக்குவ நிலை பெறுவது தான்…! அது.
அதாவது…
1.தன் அவயங்களில் உள்ள பல கோடி அணுக்களை வளர்த்து
2.ஒன்றாக அதைக் கூட்டிப் பேணிக் காக்கும் ஓர் உயிரணுவின் தெய்வ சக்தியில்
3.உயிர் சக்தியான மனித உயிரணுவின் ஞானத்தின் வளர்ச்சியைப் பழக்கப்படுத்திக் கொண்டு
4.ஞான வளர்ச்சிக்கு உகந்த தன்மையில் ஒவ்வொரு உயிரணுவும்
5.இதன் தொடருடன் ஐக்கியப்படும் வளர்ச்சி நிலையை ஏற்படுத்திக் கொள்வது தான் மனித ஜீவன் பெறும் பலன்.
6.ஆக ஜீவனாக உள்ள ஜீவனின் பலன்… இந்த ஞானம் பெறும் வழி ஞானம் தான்.
பலனற்ற நிலை பெறாத ஜீவ ஞானம் தான் அதனின் தொடரில் ஏற்படும் “மாற்று நிலைகளுக்குச் செயல்படச் சென்றுவிடுகிறது…”
மனிதனின் உடலிலுள்ள அனைத்து அணுக்களும் அதனதன் வளர்ச்சியில் வளர்ந்து கொண்டு இருந்தால் தான் அவயங்களில் உள்ள அனைத்து உறுப்புக்களும் ஆரோக்கியமான நிலையில் வளர்ந்து வாழ முடிகின்றது.
அணுக்களுக்கு உகந்த உணவை அதற்குகந்த ஈர்ப்பில் பெற்று வளர்ந்து வாழ்கின்றது.
1.எண்ணத்தின் நிலையை மாற்றிக் கொண்டு செயல்புரியும் நிலை பெற்று விட்டால்
2.ஈர்க்கும் குண நிலையும் அதன் வழித் தொடர் கொண்ட எந்தச் செயல் முறையும் தடைப்படத்தான் செய்யும்.
பலவாக உள்ள பூவை ஒன்றாக்கி ஆரம் கட்டி அதன் அழகை ஆண்டவனுக்கு அணிவித்து இன்பம் காணுவது போல்
1.நம் உடலில் பலவாக உள்ள அணுக்களை ஒன்றாக ஆரம் கட்டி
2.உயிராத்ம ஆண்டவனுக்கு ஞானம் சூட்டி… அழகாக்கி…
3.மனிதன் மகிழ வேண்டும்…! என்ற சித்தத்தைச் சிந்தையில் உணர்ந்தாலே
4.சிவபதம் முதலிய எப்பதமும் காணலாமப்பா…!
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
கூட்டுத் தியானங்களில் நாம் பதிவு செய்த வலுவான சக்தி துணை கொண்டு ஈஸ்வரா… என்று நம்மை இயக்கும் உயிரை எண்ணி ஏங்கி மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வினைச் சுவாசிக்க வேண்டும்.
அதன் மூலம் நம் உடலுக்குள் நம்மை அறியாது சேர்ந்த சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை போன்ற உணர்வின் சக்திகளை பலவீனப்படுத்தச் செய்ய வேண்டும்.
இல்லையென்றால் அது நம் உடலுக்குள் நோயாகி நல்ல குணங்களை செயல்படுத்தாது ஆக்கி விடும்.
1.இப்படி அடிக்கடி நாம் அந்த விண்ணை நோக்கி ஏகி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று ஆத்ம சுத்தி நாம் செய்து கொண்டால்
3.அன்றன்று அந்தந்த நிமிடங்களில் நமக்குள் நம்மை அறியாது ஏற்படும் தீமைகளை அகற்ற இது உதவும்.
அது மட்டுமல்லாமல்… நம்முடைய எண்ணங்கள் கூர்மையாக அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து நம் நினைவலைகள் அங்கே இணைக்க படுகின்றது.
இதனை நாம் வலுக் கூட்டக் கூட்ட… விண்ணின் ஆற்றலும் அந்த மகரிஷிகளின் தொடர்பும் நமக்குக் கிட்டுகின்றது.
நம்முடைய மூதாதையர்கள் எத்தனையோ வேதனைகளை அனுபவித்துத் தான் நம்மை வளர்த்து நமக்கு எத்தனையோ சுகங்களையும் கொடுத்துள்ளார்கள்.
இந்த வாழ்க்கையில் மனிதனாக உயர்ந்து வாழவும் வைத்துள்ளார்கள் செல்வங்களும் நமக்கு சேமித்து வைத்து உள்ளார்கள். செல்வங்களைச் சேமித்து வைத்தாலும் செல்வத்தைச் சேமிப்பதற்கு எவ்வளவோ வேதனைகள் பட்டு அனுபவித்தவர்கள் தான் நம் முன்னோர்கள்.
அந்த வேதனையின் உணர்வு வளர்ந்து மனித நினைவு இழந்து உணர்வின் சத்து அவர் உடலுக்குள் சேர்க்கப்படும்போது இன்னொரு மனிதனின் உடலுக்குள் அவர்கள் புகுந்தாலும்
1.அந்த ஆன்மா முதல் முதலில் சேர்த்துக் கொண்ட வேதனை உணர்வை அந்த உடலிலே உருவாக்கி அந்த உடலையும் வீழ்த்தி
2.நஞ்சின் உணர்வைத் தான் அந்த ஆத்மா வளர்த்துக் கொள்ளும்.
மீண்டும் இப்படி பல உடலுக்குள் போனாலும் அந்த நஞ்சைத் தான் வளர்த்து கொள்ள முடியுமே தவிர மனிதனின் உருவாக அந்தக் கருப்பெறும் தன்மையை இழக்கப்படுகின்றது.
பரிணாம வளர்ச்சியில் நாம் புழுவில் இருந்து மனிதனாக வளர்ச்சியில் வந்தது போல… மீண்டும் மனிதனிலிருந்து பரிணாம வளர்ச்சி தேய்பிறையாகி… பௌர்ணமிக்கு மறு நாள் தேய்வதுபோல மனிதனின் ஒளிச்சுடர் நாம் அறியும் நிலைகள் மங்கி… நாம் மீண்டும் பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியில் பாம்போ தேளோ பல்லியோ இது போன்ற விஷ ஜந்துக்களின் நிலையை அடையச் செய்து விடுகின்றது நமது உயிர்.
நம் முதாதையர்களின் உணர்வுகள் நம் உடலிலே உண்டு. அவர்களுடைய உணர்வுதான் நம் உடலை இத்தகைய நிலைகளுக்கு வளர்த்தது. நம்மை மனிதனாக உருவாக்கியது நம் முதாதையர்களுடைய எண்ணங்களே.
1.ஆகவே நம் வாழ்க்கையில் வரும் துன்பத்தைத் துடைக்க
2.அடிக்கடி விண்ணை நோக்கி மகரிஷிகளின் அருள் சக்தி பெறும்போது
3.நமக்குள் வலுப் பெறும் இச்சக்தியின் துணை கொண்டு
4.நம் முதாதையர்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்துடன் இணைக்கச் செய்ய வேண்டும்.
அப்படி இணைக்கச் செய்ய வேண்டுமென்றால் இப்போது நாம் இங்கே எப்படிக் கூட்டு தியானங்களில் செய்கின்றோமோ இதைப் போன்று குடும்ப கூட்டு தியானங்கள் செய்து அந்தந்தக் குடும்பத்திலிருந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை பிரிந்த நிமிடமே அவர்கள் இதைப்போல சப்தரிஷி மண்டலங்களில் இணைந்து பிறவா நிலை என்னும் ஒளி சரீரம் பெற வேண்டுமென்று ஐக்கிய உணர்வின் வலுக்கொண்டு அந்த ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டும். அதற்கு இந்தக் கூட்டுத் தியானம் உதவும்.
அந்த உணர்வின் சக்தியை நாம் வளர்த்துக் கொள்வதற்குத்தான் இந்தப் பௌர்ணமி தியானத்தையே வைத்துள்ளோம்.
நம் உயிருடன் ஒன்றி… ஞானகுருவுடன் ஒன்றி… ஈஸ்வரபட்டருடன் ஒன்றி… உணர்வை ஒளியாக மாற்றிடும் தியானப் பயிற்சி
ஓ…ம் ஈஸ்வரா…! என்று எண்ணும் போது புருவ மத்தியில் உயிரைப் பரிபூரணமாக எண்ண வேண்டும். குருதேவா என்கின்ற போது உடலுக்குள் இருக்கும் அனைத்து குணத்திற்கும் நம் உயிரே “குரு…” என்ற நிலைகளில் மதித்துப் பழக வேண்டும்
1. ஈசனாக இருப்பதும் உயிரே
2. விஷ்ணுவாக இருப்பதும் உயிரே
3. கடவுளாக இருப்பதும் நமது உயிரே
4. பிரம்மமாக இருப்பதும் உயிரே.
5. நாம் எண்ணியது எதுவோ அதைச் சிருஷ்டிப்பதும் நம் உயிரே,
6. எண்ணத்தால் கவர்ந்த உணர்வினைத் தன் ஆன்மாவாக மாற்றிக் கொள்வதும் “உயிரே”.
7. ஆன்மாவின் நிலைகள் அது உறையும்போது கடவுளாக உள் நின்று அதை உறையச் செய்யும் செயலாகச் செயல்படும் நிலைகளும் “உயிரே”.
8. நாம் எண்ணியது எதுவோ அதை உடலாக்குகின்றது நம் உயிர்
9. நாம் எண்ணியது எதுவோ அந்தச் சக்தியாக உள் நின்று மீண்டும் நம்மை இயக்குகின்றது.
10. நாம் எண்ணியதை ஆண்டு கொண்டிருப்பதும் ஆண்டவனாக இருப்பதும் நம் “உயிரே”.
11. நாம் எதை எண்ணுகின்றோமோ அதை வைத்து… அடுத்து…, “அவன் ஆட்சியும் நம்மை ஆளுவதும் அவனே”.
ஆகவே ஓம் ஈஸ்வரா குருதேவா என்கின்ற போது நம் உயிரின் இயக்கத்தைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். மந்திரம் சொல்கிற மாதிரிச் சொல்ல வேண்டியதில்லை.
ஈஸ்வரா என்றாலே புருவ மத்தியில் நம் உயிரைத்தான் நினைவில் கொள்ள வேண்டும். ஈசன் எங்கேயோ இருந்து நம்மை இயக்குகின்றான் என்று வெளியிலே தேட வேண்டியதில்லை. வெளியிலே நினைவு செல்ல வேண்டியதில்லை.
குரு என்றால் உடலில் உள்ள அனைத்திற்கும் குருவே அவன் தான். ஏனென்றால் உயிர் ஒளியாகப் பெற்றவன். குரு ஒளியாக இருக்கின்றான். அந்த ஒளியின் நிலை பெற வேண்டும் என்ற ஆறாவது அறிவின் தன்மை கொண்டு எண்ணினால் குருவை நாம் மதிக்கின்றோம் என்று பொருள்.
உயிரின் உணர்வின் தன்மை கொண்டு அழியா ஒளிச் சரீரம் பெற்ற அருள் ஞானிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்றால் நாம் உயிரை அவசியம் மதித்துப் பழக வேண்டும். ஞானிகள் உணர்த்தியபடி அதை நாம் பின்பற்ற வேண்டும்.
இப்படி ஒவ்வொருவரும் அவரவர்கள் உயிரைப் புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி அந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா என்று திரும்பத் திரும்பச் சொல்வது. அதே போல் எண்ணியதை.., எண்ணியவாறு நடத்தித் தரும் “நாயகன்.., நம் உயிர் தான் என்பதை நாம் உணர்தல் வேண்டும்.
பேசுவதற்கு முன் “மைக்கைச் (MIC)” சரி செய்து வைத்துக் கொள்கின்றோம். அது சரியாக இருந்தால்தான் பேசுவதை அது கிரகித்து ஒலியைப் பெருக்கிக் காட்ட முடியும்.
இதைப் போலத்தான் “ஓ..ம் ஈஸ்வரா குருதேவா…” என்று புருவ மத்தியில் அடிக்கடி எண்ணினால் தான் நம் உயிரின் இயக்கம் உயிர் வழி சுவாசமாக அமையும்.
ஏனென்றால் இந்த உலகத் தொடர்பு கொண்ட மற்ற உணர்வுகள் நம் ஆன்மாவாக இருக்கப்படும் பொழுது அந்த நிலைகள் நமக்குள் இயங்காதவண்ணம் அதைத் தடுத்து நிறுத்தவும் நம்முடைய எண்ண ஏக்க அலைகள் ஞானிகளின் உணர்வுகளை எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்வதற்கும் ஓம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணினால் தான் அது மிகவும் ஏதுவாக இருக்கும்.
“எண்ணிலடங்காத உணர்வின் சுழற்சிகள்” நம் ஆன்மாவில் உண்டு. அதையெல்லாம் நம் சுவாசத்திற்குள் வராதபடி தடுத்துவிட்டு மெய் ஞானிகளின் உணர்வை உள் புகுத்துவதற்காகத்தான் நாம் எல்லோரும் சேர்ந்து ஒரே உணர்வாக ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று சொல்கிறோம்.
விண்ணுலகில் உள்ள ஞானிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் உயிரிலே புருவ மத்தியிலே எண்ணும் போது அவர்கள் ஈர்ப்புக்குள் நாம் செல்கிறோம். அதைக் கவரும் ஆற்றலும் பெறுகின்றோம்.
ஆகவே புருவ மத்தியிலிருக்கும்… நம் உயிரை” எந்த அளவிற்கு அதிகமாக எண்ணுகின்றோமோ அந்த அளவிற்கு இயக்கச் சக்தியின் ஆற்றலைப் பெற்று எண்ணிய சக்தியைப் பெற முடியும். ஞானிகள் அவ்வாறு பெற்றுத்தான் இன்றும் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகி துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.
விண்ணிலிருந்து வரும் ஆற்றல்மிக்க சக்திகளை நுகர்ந்து உயிர் வழி நாம் சுவாசித்தால் உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறும். ஒளியின் சரீரம் பெற முடியும். அகண்ட அண்டத்தில் என்றுமே அழியாத நிலைகள் கொண்டு மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளுடன் ஒன்றிட முடியும். சப்தரிஷி மண்டலத்தில் நாம் இணையலாம்.
1. நம் உயிரும் ஒரு நட்சத்திரம் தான். இருபத்தியேழு நட்சத்திரங்களின் எதிர் நிலையான மோதல்கள் தான் “இயக்கச் சக்திக்கே…” மூல காரணமாகும் என்று கண்டுணர்ந்து வெளிப்படுத்திய அகஸ்தியரின் அருள் சக்திகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
2. இருபத்தியேழு நட்சத்திரங்களின் விஷத்தன்மைகள் ஒன்றுக்கொன்று மோதும் நிலைகளில் வான மண்டலங்களின் இயக்கங்களையும் பூமிக்குள் வரும் போது பாறைகளாகவும் மண்களாகவும் வைரங்களாகவும் அதனதன் ஈர்ப்பால் என்னென்ன மாற்றங்கள் ஆகின்றது என்று அகஸ்தியன் கண்டுணர்ந்த அருள் சக்திகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
3. எங்களுக்குள் பதிவான ஞானகுரு உபதேசித்த அருள் உணர்வுகள் அனைத்தும் மீண்டும் மீண்டும் எங்களுக்குள் நினைவுக்கு வந்து எங்கள் நினைவாற்றல் விண்ணிலே.., மேல் நோக்கிச் சென்று மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு அந்த மகரிஷிளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
4. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் தீமைகளை அகற்ற வேண்டும் என்ற வலுவான எண்ணம் எங்களுக்குள் ஓங்கி வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.
5. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வ்ழியில் எங்கள் உயிரை இயக்கி அதன் வழி மெய் ஞானிகளின் உணர்வுகளை ஜீவனாக்கி எங்கள் உணர்வுகள் அனைத்திடும் ஒளியாக மாறிட அருள்வாய் ஈஸ்வரா
6. புருவ மத்தி வழியாக அருள் உணர்வைப் பெறும் பாதையை உயிர் வழி சுவாசமாகக் காட்டிய ஞானகுருவின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
7. புறக்கண்ணால் பார்க்கும் அசுத்த உணர்வுகளைச் சுவாசிக்காதபடி அகக்கண்ணின் வழி கூடிய நினைவு கொண்டு கார்த்திகேயா என்ற நிலையில் தீமைகளை அகற்றி ஒளியாக மாற்றிடும் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
8. எங்கள் வாழ்க்கையில் கோபம் வரும்போதெல்லாம் மகரிஷிகளின் ஒளியை நாங்கள் பெற்று கோபத்தைத் தணித்து எங்களுக்குள் தெளிவு பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.
9. துன்பம் வரும் பொழுது “இப்படி ஆகின்றதே.., இப்படி ஆகிவிட்டதே..,” என்பதை எண்ணாமல் அந்தச் சமயத்தில் “அதிலிருந்து விடுபடும் உணர்வை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
10. 1வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெற்று துன்பத்திலிருந்து மீண்டிடும்.., “உபாயமும் ஞானமும்..,” தக்க தருணத்தில் எங்களுக்குள் உதயமாகிட அருள்வாய் ஈஸ்வரா
11. தீமைகள் என்று வரும் போது “உன் நினைவு தான்…” எங்களுக்கு வர வேண்டும் ஈஸ்வரா. அந்தச் சமயத்தில் தீமைகளை நாங்கள் நுகராது நல்ல வினைகளை நற்சக்திகளை மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் நுகரும் சக்தியாக வர வேண்டும் ஈஸ்வரா…!
12. மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி எங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளைக் குறைத்துப் பழக அருள்வாய் ஈஸ்வரா
13. இருளை அகற்றி ஒளியாக இருக்கும் உன் அருளைப் பெற என் நினைவுகள் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைக்கின்றேன் ஈஸ்வரா…!
14. ஞானகுரு கொடுக்கும் சக்தியின் துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஒளியான அணுக்கள் எங்கள் உடலிலே உற்பத்தியாகிட அருள்வாய் ஈஸ்வரா
15. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி புருவ மத்தியிலிருக்கும் “உயிருடன் ஒன்றி..,” அந்த வாசல் வழியாக அதாவது சொர்க்கவாசலாக இருக்கும் அதன் வழி விண்ணுலகம் செல்லும் ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
16. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்திய அந்த அருள் வழிப்படி இதை எல்லாம் நாங்கள் பின்பற்றி விஞ்ஞான உலகின் தீமைகளிலிருந்து விடுபட்டு இந்த மனித உடலிலேயே முழுமையான நிலைகள் அடைந்து உலகைக் காத்திடும் ஞானிகளாக நாங்கள் உருவாகிட அருள்வாய் ஈஸ்வரா.
ஆகவே அருள் உணர்வைப் பெருக்கினால் நமக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளை நாம் பார்க்க முடியும் பார்க்கும் சந்தர்ப்பம் கண்டிப்பாக வரும் என்றும் அந்த அகண்ட அண்டத்துடன் (2000 சூரியக் குடும்பம்) தொடர்பு கொண்ட உணர்வையும் நம்மால் உணர முடியும் என்றும் அதன் வழியில் நாம் எங்கே போக வேண்டும்…! என்ற உணர்வு வரும் என்பதையும் அதை வைத்து நாம் செல்ல வேண்டிய சப்தரிஷி மண்டல எல்லையை நிச்சயம் அடைய முடியும் என்றும் ஞானகுரு நமக்கு வழிகாட்டுகின்றார்கள். நாம் அதன் வழி செல்வோம்.
பூமிக்கடியிலிருந்து உறிஞ்சப் பெற்ற பல சக்திகளின் தன்மையினால் பூமியின் மையப் பகுதி வலு குறைந்து விட்டது – ஈஸ்வரபட்டர்
இவ்வுலகில் மனிதனின் எண்ண சக்தியில் அறிவு நிலையின் வளர்ச்சி குணத்தை ஞானத்தின் பால் செலுத்தும் வழி முறைப் பக்குவத்தை மாற்றிக் கொண்டதால் ஒரு சாரார் ஏற்படுத்திக் கொண்ட அறிவின் ஞான முதிர்ச்சியினால் தன் ஞானம் பெற்றதை விஞ்ஞானம் கண்டு வளர்த்திட்டான் அதன் வழி சக்திகளை.
இப்படி மனித ஞானத்தின் வளர்ச்சியையே விஞ்ஞானம் கொண்டு உணர்ந்து செயலாற்றும் பல நிலைகளை உணர்ந்துள்ளான் மனிதன்.
1.ஆனால் அம்மனித விஞ்ஞானத்தைத் தன் ஞானத்திற்கு எட்டும் பொருளாக மனிதர்கள் யாவரும் உணர்வதில்லை
2.பிறப்புடன் கூடிய “அபூர்வ சக்தியின் வழி பெற்றிட்டான் அந்த மனிதன்…!” என்று
3.போற்றிப் புகழ்ந்து அம்மயக்கத்தில் தான் அடிபணிந்து வாழ்கிறான்,
4.இதே நிலை எல்லா வட்ட நிலைகளிலும் (துறைகளிலும்) உண்டு.
பக்தி மார்க்கத்தில் சித்தன் நிலை கொண்டு செயலாற்றுபவனையும்
1.அவன் தாள் பணிந்து உயர்த்தி – தான் தாழும் செயல் வடிவாக உள்ளான் மனிதன்.
2.வாழ்ந்த வழி பெற்ற நிலையின் தொடரிலும்… பிறரின் புகழ் பாடி வணங்கும் முறையிலும் வாழ்ந்தால் நம் ஆத்ம பலம் வளம் பெறாது.
எந்தச் சக்தியாக இருந்தாலும் இந்தக் காற்றின் ஈர்ப்புக்குச் சொந்தப்பட்டது தான். அதே காற்றின் சுவாச அலையுடன் வாழும் நாம் நம் சக்தியைக் குறைத்து ஒன்றின் தொடர் நிலையில் வாழாமல் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் உகந்த ஞான ஒளியின் ஈர்ப்பை நமதாகப் பெறவேண்டும்.
அதி விரைவில் தன் ஞானத்தை ஒவ்வொருவரும் கூட்டிக் கொள்ளுங்கள். நம் பூமியின் ஓட்டப் பாதையில் சில மாற்றங்களாகி வழக்கமான பாதையிலிருந்து சிறிது மாற்றமுடன் ஓடிக் கொண்டுள்ளது.
ஆகாயத்தில் கோட்டை கட்டி (INTERNATIONAL SPACE STATION) விஞ்ஞான ரீதியில் செயல் முறைக்கு வந்துவிட்டார்கள் விஞ்ஞானிகள்.
அதே போல் இந்தப் பூமியின் ஈர்ப்பு மண்டலத்திற்கு மேல் சென்று விட்டால் அதே போல் மற்ற மண்டலங்களும்… ஏன் வளர்ச்சியுற்ற நட்சத்திர மண்டலத்தின் ஈர்ப்புக்குக் கூட இல்லாத நிலையில்… இங்குள்ள சுவாச நிலையை எடுத்துச் சென்று… அதற்குகந்த மருத்துவ நிலையில் அங்குள்ள அலையின் சுவாச நிலையை ஏற்கும் அமில குணத்தை… சிறுகச் சிறுக வழிப்படுத்தி மனித ஆத்மா சென்றாலும் அங்கேயும் வாழ முடியும்.
1.ஆனால் மனிதன் இன்று செய்யும் இந்த விஞ்ஞானமே
2.நூறு ஆண்டுகளுக்கு முந்திய மார்க்கத்தில் செயல்படுத்தி இருந்தான் என்றால் வெற்றி கண்டிருப்பான்.
இவன் செயல் முறை காலத்திற்குள் “உலக மாற்றமே நிகழப் போகும் நிலையில்… அந்தர வாழ்க்கையில்…!” அதன் நிலையை உணர்த்தப் போகின்றான்.
நூறு மாடிக் கட்டிடம் எழுப்பும் மனிதன் அந்த நூறு மாடிக் கட்டிடத்திற்கு உகந்த “அதே உயரத்திற்கு உகந்த அஸ்திவாரத்தையா…” பூமியில் போடுகின்றான்…?
இந்தப் பூமியில் வாழும் வளரும் பூமியிலிருந்து பிரித்து எடுத்த பொருள்களும்.. நாம் அமைத்த எல்லாமும்… பூமியின் ஈர்ப்பின் பிடிப்புடன் சுழன்று ஓடிடும் நிலையில்
1.சக்தி கொண்ட நிலை மாறு கொண்டதால் தான்
2.இன்று வலுவிழந்த சில கட்டிடங்களும் பாலங்களும் விழுவதின் உண்மையும்.
இந்தப் பூமியின் காற்று மண்டலத்தில் ஏற்கனவே விஷத் தன்மைகள் அதிகரித்து விட்டது. பூமிக்கடியிலிருந்து உறிஞ்சப் பெற்ற பல சக்திகளின் தன்மையினால் பூமியின் மையப் பகுதியும் வலு குறைந்து விட்டது.
மேன்மேலும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உட்படுத்தி உயர் மின் அலைகளைக் கடலிலிருந்தும் காற்றிலிருந்தும் இந்த மனிதன் சுகம் காணப் பிரித்து எடுத்துக் கொண்டே இருப்பதால்
1.தன் குறுகிய கால சுகத்திற்காக இந்தப் பேரண்ட உலகையே வலுவிழக்கச் செய்து
2.மீண்டும் வலுப் பெற வைக்கப் போகின்றான்.
இதனின் உண்மை என்ன என்பது புரிந்ததா…?
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
ஒருத்தர் உடலில் ஆவி (ஆன்மா) இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்போர் நாம் அவரிடம் பேசினால் அங்கே போகாதே… போகாதே…! என்று மற்றவர்களிடமும் சொல்லும்.
நாம் அவரிடம் பேசினால் போதும்… நம் உணர்வுகள் பட்டவுடனே… போகாதீர்கள்… போகாதீர்கள்…! என்று சொல்லும். காரணம்… அதற்கு ஆகாது.
அதே உணர்வை நாம் கேட்டோம் என்றால்…
1.மகரிஷிகளின் அருள்சக்தி அது பெற வேண்டும்
2.அது இருள் நீங்க வேண்டும்
3.பொருள் காணும் உணர்வு வளர வேண்டும் என்று எண்ணி
4.ஒரு பத்து தடவை செய்துவிட்டு உங்கள் பார்வையைச் செலுத்துங்கள்.
அப்புறம் தன்னாலே மயங்கி விழுந்தாலும் விழும்…. போய் விடும்….! ஏனென்றால் சில சாப அலைகள் ஒருவருக்கொருவர் பாய்ந்த உணர்வுகள் இப்படி வந்து விடுகின்றது.
அந்த மகரிஷிகள் தனக்குள் கோடி… கோடி… கோடி…! என்று பல கோடி உணர்வுகளைத் தனக்குள் ஒளியாக மாற்றியவர்கள். ஆகவே அந்த மகரிஷியின் உணர்வை நமக்குள் எடுத்து இதை அவருக்குள் புகுத்த வேண்டும்.
அப்படிப் புகுத்தினோம் என்றால் அவர்கள் உணர்வு நீங்கும். “புகுத்த வேண்டும்” என்ற உணர்வுகள் நமக்குள் வலுப் பெறும். இந்த அலைகள் படரும். நம் நினைவு அங்கே மகரிஷிகள் பால் போகும்.
ஆகவே…
1.அந்த விண்ணின் பற்றுடன் ஒவ்வொரு நிமிடத்திலேயும் இதைப்போல எண்ணி ஆத்ம சுத்தி செய்து
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
3.இந்த நினைவினை எடுத்து இங்கே கொண்டு வர வேண்டும்.
அதாவது… இங்கே பேசிக் கொண்டிருக்கிற மாதிரி இருக்கும். ஆனால் நினைவை அங்கே கொண்டு போக வேண்டும். எங்கே…?
பயிற்சி:
1.கண்ணின் நினைவினை விண்ணிலிருந்து சிந்தனையை எடுத்துப் பாருங்கள்.
2.அவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கின்ற மாதிரி இருக்கும்
3.செவிகள் கேக்கும்…. இரண்டும் கலக்கும்…. அதை உணர்த்தாது…. வந்தாலும் அது நம்மை இயக்காது.
4.சரி…! என்று எதிர் பதில் சொல்லச் செய்யும்.
அவர்கள் பேச்சை நீங்கள் கேட்கும்போது நேராக மட்டும் அவர்களைக் கண்ணுற்று மட்டும் பார்க்காதீர்கள். (இது முக்கியம்)
சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டே இருங்கள். அப்பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைத்தீர்கள் என்றால்
1.அது உங்களை இயக்காதபடி அப்புறம் உங்கள் சொல்லால் சொல்லும்போது அது இயங்கும்.
2.அவர்களை இயக்கி மாற்றிவிடும்….! ஏனென்றால் இந்தப் பதிவுகள் நமக்கு அதிகம் தேவைப்படும்.
அன்றாடம் வரக்கூடிய தீய வினைகளைக் கரைத்தால் தான் குடும்ப ஒற்றுமையும் வரும்… சமுதாயமும் சீராகும்…!
பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ குழந்தைகளை அனுப்புகிறோம் என்றால் ஆயிரக் கணக்கில் பணம் கேட்கிறார்கள்… டாக்டருக்கோ இஞ்சினியருக்கோ என்றால் இலட்சக் கணக்கில் பணம் கேட்கிறார்கள்.
தாய் தந்தையர்கள் எப்படியோ அந்தப் பணத்தைக் கட்டிப் படிக்க வைத்து “பிள்ளைகள் எதிர்காலத்தில் நன்றாக இருக்க வேண்டும்…” என்ற நிலையில் வீடு வாசல் எல்லாம் வைத்துச் சம்பாரித்து வைத்திருந்தாலும் அதை ஒத்திக்குக் கொடுத்தோ அல்லது விற்றோ தன் பிள்ளைகளை வளர்க்க விரும்புகின்றார்கள்.
ஆனால் டாக்டருக்குப் படிக்கப் போகும் போது பெயிலாகி விட்டான் என்றால் ஐயோ… இவ்வளவு பணம் கொடுத்துப் படிக்க வைத்தேனே… இந்த மாதிரி ஆகி விட்டானே…! தாய் தந்தை வேதனைப்படுகிறார்கள்.
இருபது இலட்சம் ஐம்பது இலட்சம் கொடுத்து டாக்டர் படிப்புக்குச் சேர்த்த பின் தன் பையன் உயர்ந்தவனாக இருப்பான் எதிர்காலத்தில் நன்றாக இருப்பான் நன்றாகச் சம்பாரிப்பான் என்று தாய் தந்தையர் நினைக்கின்றார்கள்.
1.ஆனால் அவன் அங்கே கல்லூரியில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டுத்தனமாகச் சுற்றுவதும்
2.அங்கே எதாவது பிரச்சினை என்றால் ஸ்ட்ரைக் செய்வதும்
3.அங்கே நல்ல ஒழுக்கங்கள் இல்லாதபடி என்னென்ன கெட்ட பழக்கங்கள் வளர வேண்டுமோ
4.அதை எல்லாம் கற்றுக் கொண்டு வந்து விடுவான்.
பல இலட்சம் கொடுத்துப் படிக்கப் போவோர் நல்ல பழக்கங்கள் அங்கே பெரும்பகுதி இருப்பதில்லை. தன் விருபத்தின்படி அங்கே நடப்பதும் ஏம்ப்பா இப்படிச் செய்கிறாய்…? என்று தட்டிக் கேட்டால் உனக்கு என்ன தெரியும்…? அறிவு கெட்டதனமாகக் கேட்கிறாய்..? என்று தாய் தந்தையரைக் கேட்பதற்கு வந்துவிடுகின்றனர்.
இப்படித் தான் தாய் தந்தையரை ஏசவும் பேசவும் போன்ற நிலைகளுக்குப் பிள்ளைகள் ஆளாக்குகின்றனர். ஆனால் இதைக் கண்டு வேதனைப்பட்டு இறந்து போன பிற்பாடு அவர்கள் ஆன்மா எங்கே போகும்…?
விஷத்தின் தன்மை எல்லை கடந்து சென்று பாம்பாகவோ தேளாகவோ தான் பிறக்க நேரும்.
1.என் பையன் இப்படிச் செய்துவிட்டானே… பேசுகின்றானே…! என்ற
2.சாப அலைகளுடன் அந்த எண்ண அலைகளப் பரப்பினால்
3.பையன் டாக்டராக ஆனாலும் கைராசி டாக்டராக இருக்க முடியாது…
4.அவன் பார்க்கும் வைத்தியங்களும் சீராக வராது.. பின் ஒன்றும் செய்ய முடியாது.
ஏனென்றால் தாய் தந்தையரின் “அருள் வாக்கு” இல்லை என்றால் அதைத் தெளிவாகச் செயல்படுத்த முடியாது.
ஒரு இஞ்சினியருக்குப் படிக்க வைக்க எத்தனையோ இலஞ்சம் கொடுத்து அல்லும் பகலும் பாடுபட்டு பட்டினியாக இருந்து இஞ்சினியராகப் படிக்க வைத்த பின் பையன் எல்லாவற்றையும் கற்று உணர்ந்து கொள்வார்.
ஆனால் அதே சமயத்தில் தன் உணர்வின் தன்மையைச் சீராக்காதபடித் தன்னுடைய இஷ்டத்திற்குப் பல நிலைகளைச் செய்வார்.
அதைக் கண்டு தாய் தந்தையர் வேதனைப்படும் போது இந்தத் தீய வினைகள் இவருக்குள் சேர்ந்து அதே தீய வினையால அவர் நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலை கூட வருகிறது.
1.தன் பையனை எண்ணி வேதனையைச் சேர்த்து உடல் உணர்வுகள் அனைத்திலும் நஞ்சு கலந்து
2.அடுத்து இன்னொரு உடலுக்குள் சென்றாலும் இந்த நஞ்சையே அங்கேயும் உருவாக்கி
3.புகுந்த உடலையும் நோயாக்கி அவரையும் விழுத்தாட்டி விடும்.
எந்தப் பையன் தாய் தந்தையருக்குத் துரோகம் செய்தானோ… சொன்னபடி கேட்கவில்லையோ… அதே எண்ணத்தில் போனால் பையன் உடலுக்குள் ஆன்மா போய்விடும்.
அல்லது… குடும்பத்தில் பையன் திருமணமாகிப் போனாலும்
1.“இப்படிச் செய்கின்றானே…” என்ற எண்ணத்தில் தாய் தந்தையர் ஆன்மா பிரிந்தால்
2.அந்த உணர்வுகள் பாய்ந்து… எவ்வளவு பொருள் ஈட்டினாலும் பையனை வாழ விடாத நிலைகள் ஆக்கிவிடும்.
அல்லது… பையன் திருமணமான பின் சம்பாரித்துச் செல்வச் செழிப்போடு இருந்தாலும் அவன் மனைவி கர்ப்பமுற்றிருக்கும் போது அவன் தாய் தந்தையர் எங்களை எப்படி எல்லாம் செய்தாய்…! இடைஞ்சல் செய்துவிட்டு இன்று இப்படி இருக்கின்றாயே…! என்று எண்ணினால் போதும்
1.கர்ப்பமுற்ற தாய்க்கு இந்த உணர்வுகள் சாடப்படும் போது
2.அந்தக் குழந்தைகளின் நிலை சூனியமாகிவிடும்… அறிவற்றதாகவும் வளர்வதைக் காணலாம்.
இதைப் போல் மனிதர்களுக்குள் ஒன்றுக்கொன்று சந்தர்ப்பபேதத்தால் ஏற்படும் நிலைகளால் பல தீய விளைவுகளாகி அவர்கள் எதிர்காலமே இருள் சூழ்ந்த நிலைகளாகி மனித நினைவே இழந்திடும் நிலை வருகிறது.
இதை எல்லாம் அகற்றுவதற்குத்தான் “விநாயகர் சதுர்த்தி” என்று வைத்தார்கள் ஞானிகள். பிள்ளைகளை நினைத்து அந்த மகரிஷியின் அருள் சக்தி அவர்கள் பெற்று “அருள் ஞானம் பெற வேண்டும்…” என்று தாய் தந்தையர் அன்றைக்கு எண்ண வேண்டும்.
தன் பிள்ளைகள் “இப்படி இருக்கிறார்களே… உன்னை நான் வணங்கினேனே…!” என்று இப்படி வேதனைகளை எண்ணினால் அந்த வேதனை தான் வளரும்.
ஆகையினாலே
1.பிள்ளைகள் அவர்கள் அறியாத இருள் நீங்க வேண்டும்.
2.மெய்ப் பொருள் காணும் நிலை பெற வேண்டும் என்று இந்த உணர்வைச் சொல்ல வேண்டும்.
பிள்ளைகளும் என்ன நினைக்க வேண்டும்…?
எங்கள் தாய் தந்தையரின் அருளால் அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அம்மா அப்பா அருளாசி நாங்கள் பெற வேண்டும். அவர்கள் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்ற எண்ண வேண்டும்.
குடும்பத்தில் சந்தர்ப்பத்தால் மேலே சொன்ன பகைமைகள் உண்டானாலும்
1.விழாக்கள் போன்ற காலத்திலேயாவது எல்லோரையும் ஒன்றாக இணைத்து
2.உணர்வின் தன்மையைப் பக்குவப்படும் நிலைக்கு ஞானிகள் வைத்தார்கள்.
பொதுவாகச் சொன்னால் பிள்ளைகள் கேட்க மாட்டார்கள். அன்றைக்கு அந்த விழாக் காலத்தில் சாமி கும்பிடும் போதாவது இந்த மாதிரி எண்ணி அம்மா அப்பா அருளாசி கிடைக்க வேண்டும். அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் போது அந்த அருள் உணர்வு வளர்கிறது.
அருள் உணர்வுகளைச் சேர்க்கும் பொழுது அறியாத இருள்கள் நீங்குகிறது. அம்மா அப்பா மேலிருக்கும் வெறுப்பின் தன்மை மறைகின்றது. தாய் தந்தையரின் நல்லாசிகளைக் கவரும் சக்தி வருகிறது.
1.நமக்குள் இருக்கும் பகைமை வெறுப்பு போன்ற உணர்வுகளை ஈர்க்கும் தன்மை குறைந்தவுடனே
2.யாரும் இங்கே இழுக்கும் சக்தி இல்லை என்றால் அது ஒதுங்கி நிற்கும்.
காலையில் ஆறு மணிக்கு எல்லாம் சூரிய ஒளி வருகிறது. வந்தவுடனே இழுத்துக் கொண்டு மேலே சூனிய மண்டலத்திற்குக் கொண்டு செல்கிறது. நம் பூமியில் அந்தச் சக்தி இருப்பதில்லை.
1.அப்போது நாம் எண்ணினாலும் புதிதாக உருவாவதில்லை.
2.இது கிடைக்காது. இது மயங்கி போகும்.
3.ஆக தீமையான வினைகளுக்குச் சாப்பாடு கொடுக்காமல் இருக்கும்.
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தொடர்ந்து இந்த எண்ணங்களை எடுக்கப்படும் போது நமக்கு முன்னாடி இருக்கும் இந்தப் பரமாத்மாவும் சுத்தமாகின்றது.
நாம் சுவாசிக்கும் பொழுது நம் உடலிலுள்ள ஜீவான்மாக்களும் தீமைகளை நுகர்வதில்லை. அதுவும் சுத்தமாகின்றது. நம் உயிராத்மா ஒளியாக மாறுகின்றது.
1.களிமண்ணால் செய்த விநாயகரைத் தண்ணீரில் (கடலில்) கரைக்கச் சொன்னதன் உட்பொருளே
2.ஒவ்வொருவருக்குள்ளும் அறியாது சேர்ந்த தீய வினைகளைக் கரைப்பதற்குத்தான்…!
ஞானிகள் காட்டிய வழியில் சென்றால் தீய வினைகளைக் கரைக்கலாம்.
உடலுக்கு வலு கூட்டுவதா…? ஆத்மாவிற்கு வலுவைக் கூட்டுவதா…? – ஈஸ்வரபட்டர்
1.தன் உயிராத்மாவை நல் ஞானம் பெறும் வழி பெற்ற ஞானியின் செயலால் என்ன பயன்…? என்ற வினாவும்
2.உயிராத்மாவின் வலுவைக் கூட்டுவதனால் என்ன பயன்…? என்ற வினாவும் எழும்பலாம்.
ஆனால்… பயன் கண்டு இந்தச் சுழற்சி வாழ்க்கை வாழ்ந்து மட்டும் எந்தப் பயனை எந்த ஆத்மா (சாதாரண நிலையிலுள்ள ஆன்மா) கண்டது…?
ஆதி சக்தியின் பரம்பொருளின் உண்மையை அடைய… உணர… பல ஆத்மாக்களுக்கு ஆவல் உண்டு.
தன் உயிரணுவின் ஆத்ம பலத்தை நாம் கூட்டிக் கொண்டால் அந்தப் பரம்பொருளின் அலையில் உள்ள உயர்ந்த சக்தியின் ஈர்ப்பை நம் எண்ணத்தினால் ஜெபம் கொண்டு ஈர்க்கவல்ல முறை பெற்று நம் உயிராத்மாவிற்கு நல் உரத்தைச் சேமிக்கலாம்.
1.நம் எண்ணத்தைப் பல நிலைகளில் செயல்படுத்தி வாழ்ந்து
2.நம் உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களையும் அதனதன் எண்ண நிலைக்கொப்ப வாழ விடாமல்
3.அனைத்து உயிரணுக்களும் நம் உயிரணுவிற்கு… நாம் எண்ணும் ஒரு நிலை கொண்ட எண்ணத்தில் செயல்படும் வழி முறைக்குக் கூட்டி
4.வாழ்க்கையில் ஏற்படும் எந்த நிலைக்கொப்ப எந்த எண்ணத்தின் தொடரின் ஈர்ப்பிலும் நாம் சிக்காமல்
5.அதே சமயத்தில் அதிலிருந்து ஒதுங்கி சலிப்புற்றும் வாழாமல்
6.எவ்வட்டச் சுழற்சி எண்ணத்தையும் நாம் எண்ணியே அடிமைப்படாமல்
7.பரம்பொருளின் உண்மைச் சக்தியின் வீரிய குணத்தின் அலைத் தொடரில் ஐக்கியம் கொண்டே
8.அப்படி வாழக்கூடிய பக்குவத்தை நாம் பெறுவது தான் “நம் உயிராத்மாவின் பலத்தைக் கூட்டிக் கொள்ளும் நிலை என்பது…!”
நாகப் பாம்பு விஷத்தையே ஈர்க்கும் சுவாச குணமுடையதாக இருப்பதனால் அதன் எண்ண நிலை “எதன் நிலைக்கும்” மாறு கொள்வதில்லை.
விஷ ஜெந்துவாக நாம் காணுகின்றோம். ஆனால் அந்த விஷத்தையே அது உரமாக்கி… வைரமாக்கி… மாணிக்கமாகச் சேமித்து வளர்த்து… “ஒரு நிலையில் வாழ்கிறது…” அந்த நாகப் பாம்பு.
பல பல நினைவலைகள் உள்ளவன் தான் மனிதன். இருந்தாலும் அந்தப் பலவற்றில் ஒன்றான உயர் அமில ஞான குணத்தை எண்ணிடும் வழி முறையைப் பெறுதல் வேண்டும். அதைப் பெற்றுத் “தன் பலம் காணுங்கள்…” என்று உணர்த்துகின்றோம்.
இயற்கையில் உள்ள அனைத்து நிலைகளுமே அதனதன் வட்டத்தில் தான் ஒரு நிலையில் ஈர்த்து வளர்த்து வாழுகின்றன.
ஒன்றுடன் ஒன்று வளர்ச்சி பெற்று வளர்ந்துள்ள இயற்கையில் இஜ்ஜீவ ஜெந்துக்களின் நிலையில் தான் பல மாற்ற குணங்கள் உண்டு.
ஆனால்…
1.தன் நிலையுணர்ந்து மனிதன் வாழ்ந்தால்
2.உலக ஞானத்தையும் மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி என்று உணர்த்தும்
3.அந்தப் பரம்பொருளின் உண்மையையும் நிச்சயம் உணர முடியும்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
சூரியன் மற்றொரு பிடிப்பில் இல்லாததை எல்லாம் தனக்குள் கவர்கின்றது. கவர்ந்து தன் அருகிலே கொண்டு சென்றால் அதைப் பஸ்பமாக்கி விடுகின்றது. மீண்டும் பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது.
உதாரணமாக நாம் ஒரு நோயாளியைப் பற்றி விசாரித்து அவர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தறிந்தால் அது நமது ஆன்மாவில் நிற்கும். அதைச் சுவாசிக்கும் போது வேதனை என்ற உணர்ச்சிகளைத் தூண்டும். (ஆன்மாவிலிருப்பதைத்தான் நாம் சுவாசிக்க முடியும்)
அவர் நோயால் வேதனைப்படுகின்றார். ஆனால் அவரின் வேதனையான உணர்வை நுகர்ந்து நாமும் வேதனைப்படத் தொடங்குகின்றோம்.
அந்த வேதனை நமக்குள் உட்புகாது தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
1.ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி
2.புருவ மத்தியில் நிலை நிறுத்தி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள அணுக்கள் பெற வேண்டும் என்று
4.கண்ணின் நினைவு கொண்டு ஏங்கி எடுத்தால்
5.நமக்கு முன்னாடி இருக்கும் ஆன்மாவில் இருப்பதை இழுக்காது…
6.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கவரப்படுகின்றது
7.வேதனப்படும் உணர்வின் ஈர்ப்புத் தன்மை குறைந்ததனால் நாம் ஈர்க்காமல் விட்ட
8.நம் ஆன்மாவில் இருக்கும் அந்த வேதனைப்படுத்தும் உணர்வுகளை
9.சூரியன் காலையில் அழைத்துக் கொண்டு மேலே சென்றுவிடுகின்றது
10.நமது ஆன்மா தூய்மையாகின்றது… தீமையான அணுக்கள் வளராது தடுக்கின்றது
10.தீமையான அணுக்களுக்கு உணவு போகாமல் தடுக்கின்றது.
அதற்குப் பின் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த நோயாளி உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி ஏங்கிவிட்டு அந்த நோயாளியைப் பார்த்து.. துருவ நட்சத்திரத்தின் பேரருளை நீ பெறுவாய்… உன் நோய் நீங்கிவிடும்… நீ நலமாவாய்…! என்று சொல்ல வேண்டும்.
இந்த முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் புருவ மத்தி வழியாக எண்ணி எடுக்கும் போது
1.தீய அணுக்களுக்குப் போகும் வேதனையை உருவாக்கும் உணர்வுகள் தடைப்படுத்தப்படுகின்றது.
2.நம் ஆன்மாவிலிருந்து விலக்கித் தள்ளியதைச் சூரியன் காலை ஆறு மணிக்கெல்லாம் எடுத்துச் சென்று விடுகின்றது.
தீய அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காமல் தடைப்படுத்தப்படும் போது தீய அணுக்களின் வளர்ச்சி குறைந்துவிடும். பரமாத்மாவும் தூய்மை ஆகின்றது.
இவ்வாறு உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளைத் தடுத்து நிறுத்த…
1.நீங்கள் எண்ணும்போதெல்லாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்கின்றீர்கள்.
2.உங்கள் உயிர்… துருவ நட்சத்திரத்தின் சக்தியை உடலில் அணுக்களாக உருவாக்குகின்றது.
3.தீமைகளில் இருந்து நீங்கள் விடுபடும் ஆற்றலைப் பெறுகின்றீர்கள்.
இதைத்தான் ஆறாவது அறிவு… (முருகன்) “பிரம்மாவை சிறைப்பிடித்தான்…! என்று சொல்வது. நாம் சந்தர்ப்பத்தால் நுகரும் உணர்வுகளை நம் உயிர் பிரம்மமாக நின்று அந்த அணுவாக உருவாக்கிவிடுகின்றது.
ஆகவே ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமையை நீக்கிடும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்தோமென்றால்… நமக்குள் தீமையை நீக்கிடும் அத்தகைய நிலைகள் பெறுகின்றது.
தீமையை நீக்கிடும் ஒளியான அணுக்களை நமக்குள் பெருக்கினால் “துருவ நட்சத்திரம் எவ்வாறு ஒளியாக இருக்கின்றதோ…” அதைப்போல நாமும் பெற முடியும்.
அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனின்று வெளிப்படும் அரும்பெரும் சக்தி அதிகாலையில் இந்தப் பூமியில் பரவுகின்றது. ஆகவே கணவன் மனைவியும் காலை துருவ தியான நேரங்களில் இதைப் போன்று எடுத்துப் பழகுங்கள்.
அந்தக் காலை நேரத்தில் உங்கள் உணர்ச்சிகளை… உங்கள் எண்ணங்களை… துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி… அந்த உணர்வினை உங்கள் கண்களால் பதிவாக்கி நுகருங்கள்,
கண் வழி நுகர்ந்ததை உயிர் வழி சுவாசிக்கும் பொழுது உயிர் அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்கள் உடல் முழுவதும் பரவச் செய்யும். அந்த நேரம் தான் பிரம்ம முகூர்த்தம் என்பது.
மகா ஞானிகளின் அருகாமையை உங்களுக்குக் கிடைக்கச் செய்கிறோம் – ஞானகுரு
சந்தர்ப்பவசத்தால் உடலில் சேர்த்துக் கொண்ட தீய உணர்வின் தன்மைகளால் மனிதனுக்குச் சில கடுமையான நோய்கள் வருகின்றது.
சாமியார்களோ அல்லது மந்திரவாதிகளோ மந்திரத்தால் மந்திரத்து சில வேலைகளைச் செய்து அந்த நோயினால் ஏற்பட்ட வலிகளை வேண்டும் என்றால் போக்கலாம். ஆனால் உடலில் விளைந்த நோய்களை மாற்ற முடியாது.
அதே போல் தான் டாக்டர்களால் மருந்து கொடுத்து வேதனைகளை நீக்கினாலும் உடலில் விளைந்த தீய விளைவுகளிலிருந்து மீள முடியாது. காரணம் மீள வேண்டும் என்று சொன்னாலும் உடலுடன்… உணர்வுடன்… அது கலந்திருக்கும்.
நோயிலிருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்றால்
1.நம் நினைவின் எண்ண அலைகளை விண்னை நோக்கிச் செலுத்தி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர வேண்டும்.
ஒரு பன்றி சாக்கடைக்குள் அது நாற்றமாக இருந்தாலும் அதைப் பிளந்துவிட்டு அதில் உள்ள நல்ல பருப்பினை (உணவுப் பொருளை) எப்படி எடுக்கின்றதோ அதைப் போல்
1.சாக்கடையாக இருக்கும் இன்றைய காற்று மண்டலத்திலிருந்து
2.அதற்குள் இருக்கும் அருள் ஞானிகளின் அருள் ஆற்றல் மிக்க சக்தியை நாம் எண்ணி எடுக்க வேண்டும்.
3.அதை எடுத்து நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.
ஆகவே…
1.தீயதை நீக்கி நல்ல உணர்வை நமக்குள் ஆழமாகப் பதியச் செய்வதும்
2.நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் கூர்மையாக விண்ணை நோக்கிச் செல்வதும்
3.நம் வாழ்க்கையில் ஏற்படும் சில துன்பங்களை நீக்க இதைப் போல் செயல்படுத்துவதே “ஆத்ம சுத்தியும் தியானமும்…”
நீங்கள் எண்ணும் போது அந்த ஞானிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்வதற்கே இந்த உபதேசமும் கூட்டுத் தியானமும். கூட்டுத் தியானத்தில் மகரிஷிகள் உணர்த்திய இந்த ஆற்றல் மிக்க நினைவலைகளை உங்கள் உடலில் ஆழமாகப் பதியச் செய்கிறோம் (ஞானகுரு).
பதியச் செய்ததை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கும் போது இந்தக் காற்றிலிருக்கும் அந்தச் சக்தி கிடைக்கின்றது.
உங்கள் வீட்டில் இருக்கும் டி.வி.யில் சாதாரண ஆண்டென்னா மூலம் பக்கத்தில் (LOCAL) ஒளி பரப்பாவதை எடுக்க முடியும்.
அதே சமயத்தில் சேடிலைட்டில் அனுப்பக்கூடியதை… அமெரிக்காவில் ஒளி பரப்பு செய்கிறார்கள் என்றால் அதை எடுக்கச் சக்தி வாய்ந்த ஆண்டென்னா தேவைப்படுகிறது. அதைக் கொண்டு தான் அங்கிருந்து ஒளிபரப்பு செய்வதை இங்கே தெளிவாகக் காண முடிகின்றது.
அதைப் போன்று தான் அருள் ஞானிகளின் உணர்வலைகளை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியை உங்கள் எண்ணத்தால் எண்ணி ஏங்க வைக்கின்றோம்.
இதைக் கேட்டுணரும் போது
1.இந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலில் உள்ள எலும்புகளுக்குள் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.
2.அப்படிப் பதிவான நிலைகள் கொண்டு கூட்டாகத் தியானிக்கும் போது அந்தச் சக்திகளைப் பெற முடியும்.
சாதாரணமாக ஒரு நூலினை வைத்து ஒரு பொருளைக் கட்டித் தூக்கினால் நூல் அறுந்துவிடும். பல நூல்களை ஒன்றாகத் திரித்தால் தான் அந்தப் பொருளைத் தூக்க முடியும்.
அது போல் தான் தனிப்பட்ட மனிதன் ஒருவர் அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுக்க வேண்டும் என்றால் சாதாரணமாக அது முடியாது.
1.காரணம்… அவர்கள் பிறவா நிலை பெற்று விண்ணுலகம் சென்றவர்கள்
2.பிறப்பின் மேல் ஆசை வைத்த நாம் அந்த உணர்வை அணுகினால் அது நம்மை அறுத்துவிடும்… கிட்டத்திலே நெருங்கவிடாது.
இருப்பினும் அந்த அருள் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ண உணர்வின் வேட்கையில் உங்கள் அனைவருக்குள்ளும் ஆழமாக அதைப் பதிவு செய்கின்றோம்.
இங்கே கூட்டுத் தியானத்தில் அதை உபதேசிக்கும் போது
1.அந்த அருள் ஞானிகளின் சக்தியைப் பெறக்கூடிய தகுதிக்கு
2.உங்கள் கவனங்கள் அனைத்தையும் ஒருக்கச் சேர்த்து ஊழ்வினையாகப் பதிவு செய்கின்றோம்.
3.எல்லோரும் சேர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கும் போது வலுவாகிறது
4,அந்த வலு கொண்டு காற்றிலே மறைந்திருக்கும் அந்த அருள் ஞானிகளின் சக்தியை
5.நாம் அமர்ந்திருக்கும் (தியானிக்கும்) இடங்களுக்கு அழைத்து வருகின்றோம்.
ஆக பரவலாக அது வரும் நிலைகள் கொண்டு இங்கே குவியப்படும் போது… உங்களுக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று உங்களை எண்ணி நான் தியானிக்கின்றேன்.
அது சமயம் குரு துணை கொண்டு உங்களால் அந்த மகா ஞானிகளின் பேராற்றல்மிக்க சக்திகளை உங்களால் பெற முடிகிறது. உங்கள் உடலில் அது சக்திவாய்ந்ததாக மாறுகிறது.
துன்பமோ துயரமோ நோயோ எதுவாக இருந்தாலும் அது வலு இழக்கிறது. உங்கள் ஆன்மாவும் மனமும் தூய்மை ஆகிறது. உயிரான்மா ஒளியாக மாறுகிறது.
பிறவிக் கடனைக் கழிக்க முற்பட வேண்டுமே தவிர நித்திய கடனில் மூழ்கி விடக்கூடாது – ஈஸ்வரபட்டர்
இந்தக் காற்றிலும் நீரிலும் இருந்துதான் மின் அலையை விஞ்ஞானிகள் எடுக்கின்றார்கள்.
1.இந்த உலகில் தோன்றும் மின் அலைகளின் துளிகள் தான் உயிரணுக்கள் யாவையுமே.
2.உயிர்த் துடிப்பு ஏற்படவே அந்த மின் அலை இருந்தால் தான் செயல் கொள்ள முடியும்.
நீரைப் பாய்ச்சிச் சுழலவிட்டு மின் அலையை எடுத்து ஒளியையும் பல இயந்திரங்களை இயக்கவும் சாதன முறை கொண்டு செயலாக்குகின்றோம்.
இந்தப் பூமி பல மண்டலங்களிலிருந்து வரும் ஒளி அலைகளையும் அந்த மண்டலங்களின் இயற்கை குணத்தையும் ஒன்றுக்கொன்று ஈர்த்து எடுக்கிறதென்றால் காந்த அலையின் ஈர்ப்பினால் ஒவ்வொன்றும் சுழன்று செயல்படுகின்றது.
நம் பூமி சூரியனின் ஒளி அலையை ஈர்த்து வெளிப்பட்டு இந்த உலகச் சுழற்சி ஓட்டத்தில் ஓடியே செயல்படுவதுவும் ஒவ்வொரு உயிரணுவும் ஜீவ உடல்களும் வாழுகிறதென்றால் “காந்த மின் அலையின் சக்தி நிலையில் இருந்து தான் எல்லாமே செயல் கொள்கின்றன…”
1.மின்சாரத்தை விஞ்ஞானத்தில் மட்டும் காண்கின்றீர்.
2.இந்த உடலும் மற்ற எல்லாமே மின் அலையின் கூட்டுதான்.
மிகவும் சக்தி வாய்ந்த உயிரணுவின் ஆத்ம கூட்டை இந்த உடல் என்ற பிம்ப வாழ்க்கைக்குச் சொந்தப்படுத்தி இப்பந்தச் சுழற்சியிலேயே நம் சக்தியையும் செயலையும் விரயப்படுத்துகின்றோம்.
அது மட்டுமல்லாமல் பல சஞ்சலங்கள் கொண்ட ஆவேச உணர்ச்சியில் எல்லாம் நம் உயர் சக்தியை நம்மை அறியாமல் விரயப்படுத்துகின்றோம்.
பல கோடி கோடி உயிரணுக்களின் நிலை கொண்டு உயிர் வாழும்
1.நாம் இந்த வட்டச் சுழற்சியில் வாழ்க்கை என்ற நிலையிலும் நிறைவு பெறாத வாழ்க்கை வாழ்ந்து
2.மனிதனாக வாழ்ந்த வாழக்கூடிய செயலைப் பெற்ற நாம் இந்த எண்ணச் சுழற்சியிலும்
3.எதற்கும் பயன்படாத நித்தியக் கடனில் மூழ்கி வாழ்கின்றோம்.
கடமை கடமை என்று சொல்கிறோம்…! பிள்ளைகளைப் பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்கிக் கடைசியில் இறந்து போவது தான் கடமையா…? பின் அந்தப் பிள்ளைகளும் அவர்களுக்கென்று பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி அவர்களும் இறப்பது தான் கடமையா…? இது தான் நித்தியக் கடமையா…?
தாய் தந்தையர் என்ன பலனைப் பெற்றார்கள்..? பிள்ளைகள் என்ன பலனைப் பெற்றார்கள்…? வாழும் வாழ்க்கையில்… படைப்பின் படைப்பில் “பலன் எது…?”
மனிதனாக பிறந்த நிலையில் இந்தப் பிறவிக் கடனைத் தீர்க்க வேண்டுமா இல்லையா..?
தன் சக்தி நிலை கூடக் கூட ஆத்ம பலம் வலுவேறித் தன் உயிராத்மாவிற்கு வீரிய உரம் ஏற்றி தன் பலம் என்னும் உண்மை பலத்தை இந்த மனித ஆத்மாக்கள் பெறக்கூடிய நிலை பெறவேண்டும்.
“தன் பலம்” பெறத்தக்க வழி முறையை உணர்த்திக் கொண்டே வருகின்றோம்.
1.மண் மணலாகி…
2.மணல் உருண்டு வளர வளரச் சிறு கல்லாகி..
3.பாறையாகி.. மலையாகி… வாழவில்லையா…?
ஒன்றுடன் ஒன்று சக்தி நிலை கூடிக் கூடி வலுப் பெற்று வளர்ந்து கொண்டே தான் உள்ளது. மனிதனின் வளர்ந்த நிலை தான் எல்லாவற்றின் ஐக்கியமும்.
அறிவாற்றல் கொண்ட மனிதன் தன் ஞானத்தை இவ்வழித் தொடரில் உரம் பெற்று ஆத்ம பலம் பெறப் பெற… மனிதனின் உயிரணுவின் வளர்ச்சி வளரப் பெறுகிறது.
உயிரணுவாக… உயிராத்மாவாக… இந்தச் சுழற்சி வட்டத்தில் பிறந்து வாழும் நாம்… அந்த வளர்ச்சியின் பாதைக்குச் செல்ல வேண்டும்.
ஏனென்றால் ஒவ்வொரு இயற்கையும் பலவாக வளரும் பொழுது
1.இயற்கையின் உயர் சக்தியான மனிதன் தன் உயிராத்மாவிற்கு உரம் கூட்டி
2.அவ்வுயிராத்மாவ வளர்க்கக்கூடிய பக்குவ ஞானத்தைச் செயல் கொண்டு வளர்த்திட்டால்
3.இந்த மனிதனின் உண்மையின் உயர்ந்த பலம் கூடி உயர் நிலை பெறலாம்.
காற்றில் தான் சகலமும் கலந்துள்ளன. அக்காற்றிலுள்ள அமில குணத்தில் தனக்குகந்த சக்தியை ஒவ்வொரு இயற்கை குணங்களும் அதற்குகந்த அமிலத்தை ஈர்த்து வளர்க்கிறது.
அத்தகைய செயலைப் போல் மனிதனாக வாழும் நாமும் இந்த இயற்கையில் காற்றுடன் கலந்துள்ள அமில சக்தியில் பலவும் உள்ள பொழுது
1,நம் எண்ணத்தைக் கொண்டு நாம் எடுக்கும் சுவாசத்தினால்
2.நாம் எடுக்கக்கூடிய எண்ண நிலைக்கொப்ப அதன் செயல் கொண்ட அமில குணத்தின் சக்தியை நம் சுவாசம் ஈர்த்து
3.நம் உயிராத்மா பலம் கொள்ளும் நிலை வருகிறது.
4.அத்தகைய பலம் கொண்டால் அழியாத நிலைகள் கொண்டு எக்காலமும் வாழலாம் ஞானிகளைப் போல… மகரிஷிகளைப் போல…!
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
இன்று நாம் உணவாக உட்கொள்ளும் உணவு வகைகளிலும் சரி… பயிர் செய்யும் பயிர்களிலும் சரி…
1.பல விதமான பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தூவப்படும் பொழுது
2.அது செடிகளில் பட்டு அதில் வரும் வித்துகளிலும் கலந்து வருகின்றது.
3.கலந்து வரும் நிலையில் அதைத்தான் உணவாக உட்கொள்கின்றோம்.
உணவாக உட்கொள்ளும் பொழுது அதுவும் நமக்குள் அணுவாக மாறுகின்றது. எந்த வித்திலே விஷம் கலந்ததோ அந்த விஷத்தையே நாமும் கலந்து நுகர நேருகின்றது.
அப்படி நுகரும் பொழுது விஷ அணுக்களின் தன்மை ஊடுருவி நம் உடலில் “கை கால் குடைச்சல்” போன்ற நோய்களை உருவாக்குகின்றது.
பூச்சிகளைக் கொல்லும் விஷம் கலந்த உணவுகளாக இருந்தாலும்
1.உணவு உட்கொள்ளும் பொழுது ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்
3.அது இந்த உணவு முழுவதும் படர வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.
4.சாப்பிட உட்கார்ந்தவுடனேயே இந்த மாதிரி எண்ணும் ஒரு பழக்கம் வர வேண்டும்.
5.எனக்குள் உடல் நலம் பெறும் சக்தியாக வளர வேண்டும் என்ற உணர்வுடனே உணவை உட்கொண்டு பழகுங்கள்.
அந்த அருள் உணர்வுகள் நம் இரத்தங்களில் கலக்கப்படும் பொழுது நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினை அகற்றிவிடுகின்றது.
இப்படிச் செய்யவில்லை என்றால் இந்த விஷத் தன்மை உடலில் அதிகமாகச் சேரச் சேர
1.உடலில் புதுவிதமான பல விதமான வருவதும்
2.சில நேரங்களில் சிந்தித்து நாம் பதில் சொல்லும் நிலைகள்
3.அதைச் சீராக சொல்ல முடியாத நிலையாக அதனுடைய நிலைகள் நம்மை மறைத்து விடும்.
இதைப் போன்ற நிலையிலிருந்தெல்லாம் நாம் தப்ப வேண்டும்.
நாம் வெளிவிடும் மூச்சலைகள் மூலம் இந்தக் காற்று மண்டலத்தைத் தூய்மையாக்க முடியும்
ஒவ்வொரு நாளும் நமக்குள் தீமை சாடாதபடி… அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்துச் சேர்த்து அந்த உணர்வை வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.
அதன் வழியில் நாம் இடும் மூச்சலைகள் அனைத்தும் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இங்கே பூமியில் படரச் செய்யப்படும் போது
1.இன்றைய விஞ்ஞான அறிவால் வந்த தீமைகளை எல்லாம் அடக்க முடியும்…
2.நாம் வாழும் பகுதியிலிருந்து அவைகளை அகலச் செய்யவும் முடியும்.
அதே சமயத்தில் கடந்த காலத்தில் மனிதனுக்கு மனிதன் அரசின் நிலைகள் கொண்டு மத பேதம் இன பேதம் என்ற நிலைகளில் அழித்திட்ட உணர்வுகள் நம் முன் படர்ந்து கொண்டிருந்தாலும்
1.அதனைச் செயலற்றதாக்க…
2.யாம் கொடுக்கும் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் மூலம்
3.நீங்கள் ஒவ்வொருவரும் அந்த மகரிஷிகளின் உணர்வலைகளை மூச்சலைகளாக வெளியிடுவீர்கள் என்றால்
4.கடந்த காலத்தில் வெளியிட்ட மனிதனுக்கு மனிதன் பழி தீர்க்கும் உணர்வுகள் இங்கே நிற்காது… அவைகளும் நகர்ந்து சென்றுவிடும்.
மேலும் அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் சேர்க்கப்படும் போது… உங்களிடமிருந்து வெளிப்படும் அந்த உணர்வின் எண்ணங்கள் சூரியன் காந்த சக்தியால் கவரப்பட்டு… இந்தக் காற்று மண்டலத்தில் அது ஊடுருவி… அதனின் வலுவாற்றல் கொண்டு தீமையை விளைவிக்கும் தீய உணர்வின் தன்மைகளை எல்லாம் “கடலுக்கே துரத்தியடிக்க முடியும்…”
ஆகவே… தவறே செய்யவில்லை என்றாலும்… ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளாக இருந்தாலும்… மத வெறியால் அவர்களை அழித்திடும் நோக்கத்தில் இரக்கமற்ற செயலாகச் செயல்படும் அந்த உணர்வுகளை நீக்கிட அருள் ஞானிகளின் உணர்வை இந்த உலகம் முழுவதும் நீங்கள் பரவச் செய்யுங்கள்.
அப்படிப் பரவச் செய்தால் தீமையான உணர்வுகளை மற்றவர்கள் நுகரும் தன்மைக்கே இடம் கொடுக்காது “மனிதர்கள் வாழும் இடத்தை விட்டு நகர்ந்து செல்லச் செய்யலாம்…”
இவ்வாறு அதனின் செயலாக்கத்தைக் குறைத்து
1.மக்களுக்குள் அறியாது வரும் தீமையான உணர்வுகளை எண்ண விடாது தடுக்க
2.உங்கள் உணர்வுகள் பயன்பட வேண்டும் என்பதற்குத் தான்
2.இதை உங்களுக்குள் உபதேசிப்பதும்… தியானத்தால் வளர்க்கச் சொல்வதும் (ஞானகுரு).
ஏனென்றால் இதை உங்களுக்கு உபதேசித்த பின் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நீங்கள் பெற வேண்டும் என்று உங்களைத் தான் நான் சதா தியானிக்கின்றேன்.
நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானிக்கும் போது அந்த உணர்வுகள் துரித நிலைகள் கொண்டு கிடைக்கும்.
காரணம் அந்தச் சக்தி வாய்ந்த உணர்வின் அலையாக யாம் பதிவு செய்யும் போது…
1.உங்கள் நினைவின் ஆற்றலைக் கண்ணுக்குக் கொண்டு வந்து
2.மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று ஏங்கினால்
3.கண்ணுக்கு எட்டாத தூரத்தில் பல இலட்சம் மைல்களுக்கு அந்தப் பக்கம் இருந்தாலும்
4.துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளி வரும் அந்த உணர்வுகளை எளிதில் கவர முடியும்.
ஆண்டென்னாவின் பவரைக் கூட்டிக் கொண்டு விஞ்ஞான அறிவால் சேடிலைட் டி.வி. என்று தெளிவாக எப்படிக் காணுகின்றனரோ இதைப் போல் அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் செலுத்தி ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
பதிவு செய்த அருள் ஞானியின் உணர்வை நினைவுக்குக் கொண்டு வந்து அருள் உணர்வுகளை நீங்கள் பெற்று வாழ்க்கையில் வரும் அறியாத இருளை நீக்கி விட்டு… மெய்ப் பொருள் காணும் நிலையைப் பெற வேண்டும்.
இதன் மூலம்… தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கையாக மகிழ்ந்து வாழும் ஆற்றலாகப் பெறுவீர்கள்… எப்படியும் அதை உங்களுக்குள் பெறச் செய்ய வேண்டும்… என்பதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம் (ஞானகுரு).
எப்படி இருந்தாலும் மடியத் தான் போகிறோம் என்ற எண்ணத்தில் மனிதனாகப் பிறந்த பலனை வீணாக்கிவிடாதீர்கள் – ஈஸ்வரபட்டர்
இந்த உலக மாற்றத்தினால் இந்த உலகிலுள்ள மனித ஆத்மாக்களின் உடல் அழிந்தாலும் அவர்களின் உயிரணுவும்… உயிராத்மாவும்… சப்த அலைகளும்… சகல எண்ணத்தில் விட்ட சுவாச அலைகளும்… பூமியின் சுழற்சியில் சுழன்றுள்ள நிலையில் மீண்டும் கல்கி பிறந்தால் இந்த எண்ண வளர்ச்சி எங்கே செல்லும்…?
இந்தப் பூமியின் காற்று மண்டலத்தில் கலந்துள்ள இந்த நிலைகள் எல்லாமே அடுத்த நிலைக்கு வர ஏதுவாகின்றதா…? என்ற வினா எழும்பலாம்..!
இதன் நிலையில் இக்கலி மாறி கல்கி வரும் தருணத்தில் சில நிலைகள் ஏற்படலாம்.
இப்பூமியில் இன்று வாழும் ஆத்மாக்களும்… பல கோடி ஜீவ ஜெந்துக்கள்… தாவரங்கள்.. இன்று பூமியில் வளர்ந்துள்ள கனி வளங்கள்… நீர் நிலைகள்.. மனித உடலை விட்டுப் பிரிந்து வாழும் அனைத்து உயிராத்மாக்கள் உயிரணுக்கள்… இது நாள் வரை நம் பூமியின் காற்று மண்டலத்தில் நிறைந்துள்ள சப்த அலைகள் அனைத்து நிலைகளுமே… இந்தப் பூமியின் மாற்றம் நிகழும் தருவாயில் பல நிலைகள் மாறி கலியில் இன்றளவும் வளர்ந்து விட்ட நிலையில் மாற்றம் காணப் போகிறோம்.
இந்தக் கலியில் மாறுகிறது என்றால்… இந்த உலக மாற்றத்தில் ஏற்படும் அதிர்வினால் சில ஒளி அலைகள் நம் பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல் அனைத்திற்கும் பொதுவான பால்வெளி மண்டலத்தில் கலந்து விடும் நிலை பெறுகின்றது.
இன்னும் பல சப்த அலைகள் இந்தப் பூமியின் ஈர்ப்பில் இந்த அதிர்வினால் மோதுண்டு இந்தப் பூமியுடன் கலக்கும் நிலை பெறுகின்றது.
1.பல பல மாற்ற நிலைகள் இந்தக் கலி மாறிக் கல்கியில் காணப் போகின்றீர்கள்.
2.இவ் ஈஸ்வரபட்டன் உணர்த்தும் நிலை பைத்தியமாகத் தோணலாம்.
3.இனிமேல் மனித ஆத்மாக்களின் எண்ண நிலை எல்லாம் தடுமாற்றம் கொள்ளப் போகிறது.
உலகின் பல திரையறியச் செயல்படும் கருவிகளும்… இந்தக் காற்றிலிருந்து ஈர்த்து ஓரிடத்திலிருந்து இன்னோரு இடத்திற்கு ஒலி அலைகளைப் பரப்பி வாழும் நிலைகளும்… மற்றும் மனிதனால் செயற்கைக் கோள்களை ஏவி விட்டு அதிலிருந்து உணரும் ஒளி அலைகளும்… ஒலி அலைகளும்,,, இன்று செயலாற்றும் முறைப்படிச் செயலாகாது.
இயந்திரத்தின் துணை கொண்டு காற்று மண்டலத்தில் இவர்கள் இன்று பிரித்து எடுக்கும் நிலையெல்லாம் செயல்படுத்தும் முறையில்
1.இன்றுள்ள நிலைக்கொப்ப செயலாக்க முடியாமல்
2.அதற்காக இன்னும் பல புதிய சாதன முறைகளை மனிதன் உருவாக்கப் பார்ப்பான்.
மீண்டும் இந்தக் காற்று மண்டலத்தின் விஷத் தன்மை கூடி… ஆவி உலகில் வாழும் ஆத்மாக்களின் வெறி உணர்வும் அதிகப்பட்டு… “எண்ணிலடங்கா விபரீத நிலைகள் ஏற்படும் தொடர்…” இனி வரப் போகும் காலத்தில் நிகழத் தான் போகின்றது.
மனித ஆத்மாக்களே…!
1.உங்களை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்…!
2.என்றிருந்தாலும் “மடியத்தான் போகின்றீர்கள்…!” என்று எண்ணம் கொள்ளாமல்
3.மனித ஆத்மாக்களால் தான்… நிகழப் போகும் சக்தியை மனிதன் உணர்ந்து செயல்படத்தான்… இங்கே பல நிலைகளைப் போதிக்கின்றோம்.
4.மனிதனாக அறிவு கொண்டு… அன்பு பட்டு… ஞானம் பெற்றிட வாருங்கள்.
இந்த மனித ஆத்மாவிற்குத்தான் அறிவாற்றலை வளர்க்கும் ஆற்றல் உண்டு. அறிவு நிலை கொண்ட மிருகங்கள் வாழ்ந்தாலும் மனிதனை ஒத்த ஞான சக்தி பெறும் தன்மையற்ற நிலையில் தான் மிருக இனம் உள்ளது.
தேவனாக வாழக்கூடிய மனிதன் தன் நிலை உணர்ந்தால் தேவனாகலாம்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
நமக்கு வேண்டிய ஒருவர் “கஷ்டம்” என்று நம்மிடம் வந்து சொல்லியிருப்பார். அந்த உணர்வை நாம் கேட்டுக் கொண்டேயிருந்தோம் என்றால் என்ன நடக்கின்றது…?
அவருக்குள் எந்த வகையான அணுக்கள் உருப்பெற்றுக் கஷ்டம் என்ற நிலை வந்ததோ அவரை எண்ணும் பொழுது நமக்கும் அதே கஷ்டமான உணர்வைத் தூண்டுகின்றது.
என் குடும்பத்தில் பல தொல்லைகள் வருகின்றது… எனக்கு வியாபாரம் மந்தமாக இருந்தது… அதிலே குறைபாடுகள் வந்தது… என் உடலிலே நோயாக மாறி விட்டது என்று அவர் சொல்லச் சொல்ல
1.நாம் அதைக் கேட்டால்
2.அதே உணர்வின் அணுக்கள் விளளைந்து விட்டால்
3.நம்மை அறியாமலே “கஷ்டமாக இருக்கின்றது: என்று சொல்ல வந்துவிடும்.
4.நம் வியாபாரத்திலும் அவருக்குண்டான நிலை நமக்கும் மாறிவிடும்.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட அடுத்த கணமே ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணுங்கள். விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் கண்ணின் நினைவைச் செலுத்துங்கள்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
2.அது எங்கள் இரத்தநாளங்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று
3.குறைந்தது ஒரு ஐந்து நிமிடமாவது எண்ண வேண்டும்.
இப்படி வலுப்படுத்திக் கொண்ட பின் கஷ்டம் என்று நம்மிடம் சொன்னவரைப் பார்த்து
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறுவீர்கள்
2.இனி உங்களுக்குக் “கஷ்டம் இல்லை…!” என்று சொல்லிப் பழகுங்கள்.
ஆகவே நம் வாழ்க்கையில் எத்தகைய நிலைகளைக் கேட்டாலும் பார்த்தாலும் அடுத்த கணம் இந்த முறைப்படித் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கஷ்டப்படுபவர்கள் சொல்லும் உணர்வை நாம் நுகர்ந்தால் நம் இரத்தநாளங்களில் கலக்கின்றது. ஆனால் அதிக நேரம் கேட்டுக் கொண்டிருந்தோம் என்றால் இது அதிகமாக நமக்குள் சேர்ந்துவிடும்.
ஒரு ஐந்து நிமிடமாவது அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெற்று அதை இரத்தங்களில் அதிகமாகக் கலக்கச் செய்தல் வேண்டும்.
1.அப்பொழுது இதனுடைய வலு அதைக் குறைக்கும்.
2.இதைத் தான் வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கி அவனை வீழ்த்தினான்…! என்று சொல்வது.
ஆகவே ஒருவர் சொல்லும் உணர்வின் தன்மையை நாம் அதிகமாகச் சேர்த்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது
1.நமக்குள் படும் உணர்வுகள்… அவர்கள் பட்ட வேதனையோ அவர்கள் பட்ட கஷ்டங்களோ
2.நமக்குள் வளராது தடுக்கும்.
இதைப் போன்று நம் வாழ்க்கையில் பழக வேண்டும்.
அடிக்கடி உணர்ச்சி வசப்படுபவர்களுக்குச் சர்க்கரை நோய் வரக் காரணம் என்ன…?
நமக்குத் தெரியாமலே நம் உடலில் கோபமும் வெறுப்பும் அதிகமாகச் சேர்ந்து விட்டது என்றால் எந்த வேலையைச் செய்தாலும் வெறுப்பாகவே வரும்.
கோபம் வரும் சமயங்களில்… குடும்பத்திலோ அல்லது தொழிலிலோ யாரைப் பார்த்தாலும்
1.ஏதாவது வேலை சொல்லிக் கொண்டிருக்கும்போது திருப்பிக் கேட்டால் உடனே கோபம் வரும்
2.இப்படி அடிக்கடி செய்தோம் என்றால் இரத்தக் கொதிப்பாக மாறும்.
அதே சமயத்தில் இந்தக் கோபமும் வெறுப்பும் வரப்படும் போது ஒருவர் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து… அவர்கள் சிரிப்பதைப் பார்த்தால் உடனே அது எதிர்நிலையாகும்.
எதைக் கண்டு இப்படிச் சிரிக்கிறார்கள்…? என்று அடிக்கடி அதைப் பார்த்து அவர்கள் சந்தோஷத்தைக் கண்டு வெறுத்தோம் என்றால் நம் உடலில் சர்க்கரைச் சத்து உண்டாகும். இந்த இனிப்பு பிரிந்துவிடும்.
1.அவர்கள் சந்தோஷமாக இருக்கின்றார்கள் என்ற அந்த உணர்வை எடுத்து
2.எதைக் கண்டு இப்படிச் சிரிக்கிறார்கள்…? என்று இந்த வெறுப்பு வரப்படும் போது
3.மற்ற உணர்வுகள் இங்கே சேர்த்தவுடனே சர்க்கரை பிரிந்துவிடும்.
பொதுவாக… நமக்குள் ஒரு மகிழ்ச்சியை ஊட்டுவதும் ஒரு இயக்கச் சக்தியாக இருக்கக்கூடியதற்கு அந்த (சந்தோஷம்) உணர்வு வந்து தான் சுவை கொடுக்கும்.
ஆனால் மேலே சொன்னபடி நாம் வெறுக்கும் போது
1.அந்தச் சுவை பிரிந்து சென்றால் சர்க்கரைச் சத்து வந்துவிடும்.
2.இந்தக் காரமும் அதுவும் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் இரண்டும் சண்டை போடும்.
3.சண்டை போடுவதற்கே நேரம் பத்தாது.
இது பெருகினால் உடலில் நிச்சயம் இரத்தக் கொதிப்பு வரும். சர்க்கரைச் சத்துடன் இந்த இரத்தக் கொதிப்பும் சேர்ந்தால் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதும் போது இருதயம் பலவீனமாகும்.
சண்டை போட்டோம் என்றால் இருதயத்தில் இரத்தம் செல்லும் வால்வுகள் வீக்கமாகி விடும். அப்புறம் அது எடுத்துத் தள்ள முடியாதபடி அந்த வால்வுகள் கெட்டுப் போகும்… இருதய சம்பந்தப்பட்ட நோய் வரும்.
நாம் தவறு செய்யாமலே இப்படி எல்லாம் வரும்.
பெண்கள் நிறையப் பேருக்கு இருதய வலி உண்டு…! நெஞ்சு வலி நெஞ்சு வலி என்று இருதயங்களில் இரத்த வால்வுகளில் பலவீனம் அடையப்படும் போது அது சரியாக வேலை செய்யாது.
1.டாக்டரிடம் சென்றால் உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்பார்
2.படி மேல் ஏறினால் மூச்சுத் திணறலாகும்… அது ஆகும்… இது ஆகும்…! என்று பயத்தை ஊட்டிவிடுவார்கள்.
இந்த எண்ணங்களைக் கொஞ்சம் வேகமாக எண்ணினால் “இப்படி ஆகிவிட்டதே… பிள்ளை குட்டிகள் இருக்கின்றதே… தொழில் இருக்கிறதே…! என்று வேதனையை வளர்த்துக் கொள்கிறோம். நாம் தவறு செய்யாமலே நமக்குள் இத்தகைய எண்ணங்கள் வந்து விடுகிறது.
டாக்டர்கள் உடலை முழுமையாகப் பரிசீலனை செய்த பின்பு… ஹார்ட் அட்டாக் வரலாம்… மூளையைப் பாதிக்கும்… கை கால் வராது…! என்றெலலம் அடுக்கிக் கொண்டே போவார்கள். இந்தெந்த மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும் இல்லை என்றால் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் சொல்லிவிடுவார்கள்.
எல்லாவற்றையும் சொன்னவுடன் இன்னும் கொஞ்சம் வேகமாக அதை வளர்க்க ஆரம்பித்துவிடுவோம்.
உதாரணமாக இது எதுவுமே தெரியவில்லை… டாக்டரிடம் செல்லவில்லை என்று வைத்துக் கொள்வோம். உடலில் மேல் வலி..! கிறு…கிறு… இருக்கிறது என்று சொல்லி சுக்கையோ மிளகையோ எதையாவது எடுத்துச் சாப்பிட்டு விட்டு ஒரு சிலர் பேசாமல் இருப்பார்கள்.
ஆனால் டாக்டரிடம் சென்று இரத்தத்தை எடுத்துப் பரிசோதித்த பின் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது… படி மீது ஏறினால் இன்னும் பாதிக்கும் என்று சொன்னால் போதும்.
1.முதலில் சிறிதளவு அதிகமாக இருந்த இரத்த அழுத்தத்தை “இரண்டு பங்காக்கி விடும்…”
2.200… 250க்கு மேல் சென்றுவிடும்… அதற்குப் பின் அவர்கள் சொல்லும் மருத்துவத்தைச் செய்யாமல் இருக்க முடியாது.
3.நம் எண்ணங்கள் பலவீனம் அடைந்தால் இது எல்லாம் ஆகத்தான் செய்யும்.
இப்படித்தான் நம்மை அறியாமல் நம் ஆன்மாவில் எத்தனையோ அழுக்குகள் சேர்கிறது. இதை நாம் துடைக்க வேண்டுமல்லவா… துடைப்பதற்கு என்ன வழி வைத்திருக்கின்றோம்…?
ஆறாவது அறிவைக் காப்பாற்றிக் கொள்வதற்குத் தான் இங்கே உபதேச வாயிலாக அந்த ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பெறச் செய்கிறோம் (ஞானகுரு).
யாம் உபதேசிக்கும் இந்த அருள் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் பெருகப் பெருக மன பலமும் உடல் நலமும் பெறுவீர்கள். சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானமும் பெருகும். நோய் வராது தடுக்கவும் முடியும்.
உலக மாற்றத்திற்குக் காரணம் மனிதனா…? அல்லது இயற்கையா…! – ஈஸ்வரபட்டர்
வரப்போகும் இந்த உலக மாற்றத்தில் இந்தப் பூமியின் குணத்தில் மாற்றம் ஏற்படப் போகும் நிகழ்ச்சி மனித ஆத்மாவினால் நிகழ்கிறது…! என்ற குற்ற உணர்வை ஏன் காணல் வேண்டும்..?
1.இயற்கையின் உந்தலினால் மனித எண்ணமே செயற்கை காண வழிப்பட்டதற்கு
2.”மனிதனைக் குற்றம் காணலாமா…?” என்ற வினா எழும்பலாம்.
ஆனால் மனிதனால் ஏற்படுத்திக் கொண்ட இந்தத் தீய அமில குணத்தினால் தான் நம் பூமியின் இயற்கை பாழ்பட்டது.
மனிதனால் அரசர்கள் என்றும் தேவர்கள் என்றும் அசுரர்கள் என்றும்
1.மனித ஆத்மாவுக்குகந்த குணத்தைப் பிரித்துக் கண்டு
2.ஒருவனை உயர்த்தி… ஒருவனை அடிமை கொண்டு… வாழ்ந்த எண்ணத்தில்
3.போட்டி பொறாமைகள் ஏற்பட்டு… பேராசையில் அதிகப் பொருள் சேர்த்து
4.ஒருவனை அழிக்க ஒருவன் வாழ்ந்து வந்ததின் நிலையினால் குண அமிலங்களில் மாறுபட்டு
5.அணுகுண்டுகளையும் அணுக்கதிர்களையும் காற்று மண்டலத்தில் கலக்கவிட்டு
6.இயற்கையைப் பாழ்படுத்திய மனிதனால் தான் நம் பூமியின் நிலை நிலை தடுமாறப் போகிறது.
ஆக… இந்தக் கலியில் பூமியை நிலை தடுமாற வைப்பவனும் இம்மனிதன் தான். இந்தப் பூமி நிலைக்க கல்கியுகம் காணச் செயல்படுத்தப் போகிறவனும் இந்த மனிதன் தான்..!
மனிதன் மனித ஞானம் பெற்றால் மனிதனால் மனித ஆத்மாக்களைப் பலவாக நிறுத்த முடியும். நம் பூமியில் மனிதக் கரு வளர… நம் பூமியில் மனித ஆத்மாக்களை வளர்க்கும் தன்மை கொள்ள…
1.வியாழனிலிருந்து மீண்ட ஆன்மாக்கள் இருந்ததனால் தான்
2.நம் பூமி வளர்ந்த பிறகு நம் பூமியில் மனித ஆன்மாக்கள் வாழக்கூடிய கருவே வளர்ந்தது.
பல சப்தரிஷிகளும் அவர்களின் வழித் தொடர் பெற்ற பல நிலை கொண்டவர்கள் இருந்தாலும்… இந்தப் பூமியில் வாழ்ந்த மனித ஆத்மாக்களின் சக்தி நிலை உயர்ந்து தன் ஞானம் பெறும் ஆத்மாக்கள் வளர்ந்து வந்தாலும்… இந்தப் பூமியின் மாற்றக் காலத்தில் என்ன ஆகிறது…?
இந்த மனித வாழ்க்கையில் கொண்டுள்ள ஆசாபாசங்களிலும் நித்தியக் கடன்களிலும் மூழ்கியே… இந்தக் கலியின் மாற்றத்தில் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்கள்… கலி மாறும் தருணத்திலும் அதே சுழற்சி ஓட்டத்தில் இருந்து… “தான் இதிலிருந்து மீள முடியாமல் போகிறது…!”
அத்தகைய நிலையில்… மீண்டும் அறிவு ஞானம் கொள்ளும் மனிதக் கரு வளர்ந்து… அக்கருவின் செயலிலிருந்துதான் மனித உருவங்களே இந்தச் சூரியனைச் சுற்றியுள்ள 48 மண்டலங்களின் வளர்ச்சியில் மனித ஆத்மாக்கள் வாழும் நிலை வரும்…!
1.அதாவது வியாழனுக்குப் பின் நம் பூமியில் மனிதர்கள் வாழுவது போல்
2.இந்தப் பூமிக்கு அடுத்து மனிதர்கள் சந்திரனில் வாழும் நிலை ஏற்படலாம்…!
நம் சூரியனின் சுழற்சியில் பல மண்டலங்கள் ஓடினாலும் நம் பூமியின் நிலைக்கொப்ப மனித ஆத்மாக்கள் வாழக்கூடிய இச்சக்தி மண்டலத்தின் இந்தக் கலி மாறி கல்கியுகம் பெற்று நம் பூமி சுழலும் தருணத்தில்
1.இன்றைய நிலையில் வாழும் ஆத்மாக்களின் பல கோடி எண்ணங்களை மாற்றிச் செயல்புரிய
2.பல சக்தி நிலைகள் செயல் கொண்டு செயலாற்றித்தான் கல்கியுகம் வாழ முடியும்.
அதற்குத்தான் எம்மைப் போன்ற எண்ணிலடங்கா மகரிஷிகளின் செயல்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுள்ளது.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
குருநாதர் சொர்க்கம் அடைந்த வைகுண்ட ஏகாதசி நாளில் அவர் நினைவின் தன்மை கொண்டு வரும் பொழுது
1.அவர் எப்படி எல்லாம் பேரன்பைப் பெற்றாரோ பேரொளியாக ஆனாரோ
2.அதைப் போல நாமும் ஆக வேண்டும்…! என்று ஆசைப்படுங்கள்.. இச்சா சக்தி…!
தீமையை நீக்கிய குருவின் உணர்வை… இச்சைப்பட்டு அதை நுகர்ந்தால் உயிரிலே பட்டு அது கிரியையாகும். அந்த உணர்ச்சிகள் உங்களுக்குள் செயலாக்குகின்றது.
பின் அந்தக் குருவின் ஞான வழிப்படி இச்சா சக்தி… கிரியா சக்தி… ஞான சக்தி. அந்த ஞானத்தின் வழி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.
சிறிது காலம் கொஞ்சம் பழகிக் கொண்டால் போதும்…!
உதாணமாக… சில விளையாட்டுகளை விளையாடுகின்றார்கள். கேரம் போர்ட் விளையாட்டில் அதற்கென்று ஒரு காயை வைத்துக் குறி பார்த்துத் தள்ளி மற்ற காய்களைத் தள்ளுகின்றார்கள்.
அது எல்லாம் அனுபவம் தான்…!
பழகாத நாம் அதைத் தட்டினால் எங்கேயோ போகின்றது. ஆனால் பழகியவர்கள் தட்டினால் ஒர் காயை வைத்து மூன்று நான்கு காயைக் கூடத் தள்ளிக் கொண்டு போகின்றது. ஏனென்றால் அவர்களுடைய அனுபவம் இது.
இதைப் போல்.. நம் அனுபவத்திலே எதைக் கொண்டு வர வேண்டும்…?
1.நாம் பல தவறுகள் செய்தாலும் அந்தத் தவறுகளைத் தள்ளி விட்டு
2.மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்து நல்ல ஞானத்தைப் பெருக்க வேண்டும்.
நம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) சொன்ன வழியில் சிறிது காலம் அனுபவித்துப் பாருங்கள்.
1.சாமி செய்ய முடியாததை… சாமியார் செய்ய முடியாததை.. கடவுள் செய்ய முடியாததை..
2.“உங்களுக்குள் கடவுளாக நின்று..” தீமைகளை அகற்றும் அருள் சக்தியாக இது விளையும்.
3.அதே போல் ஜோதிடம் செய்யாததை… ஜாதகம் செய்யாததை…
4.இதை எல்லாம் இந்த உணர்வு உங்களுக்குள் செய்யும்.
பத்திரிக்கை… டி.வி… மற்ற சாதனங்கள் மூலம் வரும் சில செய்திகள் நம்மை எப்படிப் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது…?
இன்று பத்திரிக்கைகளை எடுத்துப் படிக்கத் தொடங்கினாலே அச்ச உணர்வுகளைத் தோற்றுவிக்கும் செய்திகளையே பக்கத்திற்குப் பக்கம் பெரிய அளவில் படத்துடன் போட்டிருக்கின்றார்கள்.
1.அச்ச உணர்வுகளைத் தோற்றுவிக்கும் அத்தகைய செய்திகளைப் படிக்கும் பொழுது
2.அவைகள் எளிதில் நம்முள் பதிவாகி விடுகின்றது.
அதே போல் பொழுது போக்கிற்காக டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பழக்கம் பெண்கள் ஆண்கள் இருவருக்குமே உள்ளது.
அதிலே காட்டப்படும் சம்பவங்களில் விவரிக்கப்பட்டுள்ள கதாபாத்திரப் படைப்பின் வேதனை சலிப்பு சங்கடம் கோபம் குரோதம், அவசரம் ஆத்திரம் பயம் ஆகிய உணர்வுகளை அதே உணர்வுடன் நாம் ஒன்றிப் பார்க்க நேருகின்றது.
1.அவைகளை ஒன்றிப் பார்ப்பதால்
2.அந்த உணர்வுகள் அனைத்துமே நமக்குள் ஆழமாகப் பதிவாகிவிடுகின்றது.
சிறுகச் சிறுகச் சேரும் இந்த உணர்வுகளில் நாம் எந்த உணர்வின் தன்மையை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ அதனின் செயலின் நிலைகளில் நம்மையும் செயல்பட வைக்கும்.
சில சானல்களில் காட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் (நேரலை) விதம் விதமாக புதுப் புது நிலைகளில் ஒளி பரப்பிக் கொண்டுள்ளார்கள். இதைக் குழந்தைகளும் பார்க்கும் சந்தர்ப்பம் வருகிறது. அதிலே தீமையின் உணர்வுகளும் பதிய நேர்கின்றது.
குழந்தைகளுக்கு வேறு எண்ணம் இல்லை. ஆர்வத்துடன் உற்று நோக்கும் பொழுது அந்தப் பிஞ்சு உள்ளங்களில் பதிவாகிவிடுகின்றது.
ஆனால் அவர்கள் வளர்ந்த பின்பு பதிந்த அத்தகைய உணர்வுகள் அனைத்தும் செயலாக்கத்திற்கு வருகின்றது. ஆகவே, இதனைத் தவிர்த்துக் கொண்டால் மிகவும் நலம் பயக்கும் செயலாக இருக்கும்.
இவ்வாறு பல வகையான தீமையின் உணர்வுகளை
1.நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ அன்றாடம் நமக்குள் ஆழமாகப் பதித்துக் கொள்கின்றோம்
2.பதிந்த உணர்வுகள் ஜீவ அணுக்களாக நமக்குள் நம்மிடத்தில் விளைந்து விடுகின்றன.
இதனால் நாம் வேறு வேளையில் ஈடுபட்டிருக்கும் சமயம் நமக்குப் பின்னால் ஏதாவது ஒரு பொருள் விழுந்த சப்தம் கேட்டால் உடனே திடுக்கிட்டுத் திரும்பிப் பார்ப்போம்.
என்னமோ… ஏதோ…! என்ற அச்ச உணர்வு நம்மை ஆட்கொள்ளும். பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருப்போம். நாம் செல்லும் பஸ்ஸின் ஓட்டுனர் கவனமாக வண்டியைச் செலுத்திக் கொண்டிருப்பார்.
திடீரென்று இடையில் ஒருவன் பஸ் வருவதை அறியாமல் புகுந்து விடுவான். இதனால் ஓட்டுனர் “சடார்..,” என்று பிரேக்கைப் பிடிப்பார்.
ஆனாலும், நம் மனதிலோ “என்ன ஆயிற்றோ..?” என்ற பயத்துடிப்பு உண்டாகின்றது.
நமக்கு முன் உள்ள காற்று மண்டலத்தில்…
1.விபத்துக்கு உட்பட்ட நிலைகளிலும் நோயால் இறந்தவர்களின் நிலைகளிலும்
2.எத்தனையோ வேதனையுடன் வெளிப்பட்ட அணுக்கள் பல வகைகள் உண்டு.
ஆகையினால் விபத்தைக் காணும் சம்வங்களில் நம்மையறியாமல் “என்ன ஆனது..?” என்று ஆர்வ மிகுதியால் கூர்ந்து கவனிப்போம். அப்பொழுது அந்த உணர்வின் அணுக்கள் நம்முள் புகுந்துவிடும்.
விபத்து நேரவிருந்த ஆள் தப்பிவிடுவான். ஆனால் அது சமயம் நாம் சுவாசித்த அச்ச உணர்வுகள் நம்மிடத்தில் பிரமையை உண்டாக்கிவிடும்.
அச்ச உணர்வுகளைப் படித்ததன் விளைவு அந்த அச்ச உணர்வுகள் நமக்குள் ஆழமாகப் பதிந்து விடுகின்றது. ஓட்டுனர் “கிரீச்..,” என்று பிரேக் போட்டவுடன் கண்களை அழுத்தமாக மூடிக் கொள்வோம்.
அங்கு என்ன நடந்தது…! என்று கூடப் பார்த்திருக்க மாட்டோம். ஏனென்றால் அந்த உணர்வின் வேகம் அறியும் தன்மையைக் கொடுப்பதில்லை.
இந்த உணர்வின் அலைகள் நமக்குள் இணைந்த பின் “அடிப்பட்டானே…!” என்று எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் நம் சுவாசத்தில் கலந்து நம்மைப் பித்தனைப் போன்று ஆக்கிவிடுகின்றது.
அதே நினைவில் இருந்தால் “ஐயோ… யாரோ வருகிறார்… கதவைத் தட்டுகிறார்… ஐயோ… மோதிவிட்டது, ஐயோ… கழுத்தை நெரிக்கிறார்” என்று உளற ஆரம்பித்துவிடுவோம்.
இதைப் போன்ற அச்ச உணர்வுகள் நம்மிடத்தில் அதிகமாக விளைய விளைய அடுத்து நாம் ரோட்டின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தாலும் “கிரீச்…” என்று சப்தம் கேட்டால் போதும் ஒதுங்குவதற்குப் பதில் வண்டியிலேயே விழுந்துவிடுவோம்.
ஏனென்றால் நாம் சுவாசித்த உணர்வுகள் நம்மையறியாமல் ஆபத்துக்கே அழைத்துச் செல்லும்.
1.எனவே பத்திரிக்கையை எடுத்துப் படித்தாலும் டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்த்தாலும்
2.அதில் உள்ள செய்திகள் நமக்குள் பதிந்து ஆபத்தை உண்டாக்காமல் நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.
பத்திரிக்கைகளைப் படித்து முடித்தவுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தவுடன் உடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.
அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.
பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.
கண்களை மூடித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை ஒரு பத்து நிமிடம் கண்களை மூடி உடல் முழுவதும் படரவிடுங்கள்.
1.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால்…
2.நம் நாட்டிலும் இந்த உலகிலும் இனி நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும்
3.எல்லோருக்கும் நன்மை தருபவைகளாக இருக்க வேண்டும் ஈஸ்வரா.. என்று
4.அடிக்கடி ஏங்கித் தியானிக்க வேண்டும்.
இதன் மூலம் நஞ்சான உணர்வுகள் நமக்குள் சேராமல் தடுத்து நம் ஆன்மாவைக் காத்துக் கொள்ள முடியும். பிறரின் நோய்களும் நம்மை அண்டாது.
உலக மாற்றத்திற்கு மிக முக்கியமான காரணம் – ஈஸ்வரபட்டர்
உலகிலுள்ள உண்மை இயற்கைத் தன்மைகளை மெய் ஞானம் கொண்டு விளக்குகிறோம்…! இதனை விஞ்ஞானத்தவர்களும் எடுத்து ஆராயலாம்.
நம் பூமியில் மட்டுமல்லாமல் அனைத்துக் கோளங்களுக்கும் பொதுவாக உள்ள பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில குணங்கள்
1.அதனதன் நிலைக்கொப்ப அதனதன் இனத்துடன் சென்று எப்படி ஐக்கியப்படுகிறது…?
2.ஒவ்வொரு மண்டலமும் இயற்கைக் குணத்தில் எப்படியெல்லாம் வளர்ச்சி ஏற்படுத்திக் கொண்டது…?
மழை வரும் காலங்களில் இடியும் மின்னலும் ஏற்பட… ஏற்பட… ஒவ்வொரு பூமியின் வளர்ச்சித் தன்மையும் கூடுகிறது…! என்று அர்த்தம்.
1.இரண்டு அமில குணங்கள் மோதுண்டு வான மண்டலத்தில் சுழலும் தன்மையில்
2.அதன் மேல் மழை நீர் பட்டு இடி ஏற்பட்டு அந்த இடியின் ஈர்ப்பு பூமியில் பதிந்து
3.அதன் நிலையில் வளரும் காளான்களின் வளர்ச்சியிலிருந்து புதிய புதிய இன இயற்கை வளங்கள் வளருகின்றன.
எந்த நிலை கொண்டு…?
பூமியில் காளான் வளர்ந்த பிறகு ஒன்றிரண்டு நாளில் அதன் நிலை மாற்றம் கொள்கிறது. காளானிலிருந்து வெளிப்படும் அமிலத்தினால் அந்த நிலை காற்றாக பூமியில் படரும் பொழுது அதன் அமிலம் காற்றுடன் கலக்கப்பட்டு எந்தெந்த இடங்களில் அக்காற்றினில் அவ்வமிலம் படர்கின்றதோ எங்கெல்லாம் “புதிய இன வளர்ச்சி” ஏற்படும்.
மற்றும் இக்காளான் வகைகளிலேயே கணக்கிலடங்கா குண வகைகள் வளர்கின்றன மழைக் காலங்களில். பூமியில் மட்டுமல்ல. கடல்களிலும் நீர் நிலைகளிலும் பல வகைக் காளான்கள் மழைக் காலங்களில் ஏற்படுகின்றன.
மரங்களில் வளரும் காளான் ஒன்று இரண்டு நாளில் மடிந்து அந்த மரத்தின் மீது அக்காளான் செடி அழுகிய நிலையில் படர்ந்து விடுகிறது.
1.அந்த மரத்திலிருந்து வெளிப்படும் சுவாசக் காற்று அவ்வழுகிய காளான் மேல் பட்டு
2.அக்காளானிலிருந்து ஆவியான அமிலம் மற்றொன்றின் மேல் படும் பொழுது
3.வேறு வகையான இன வளர்ச்சி தோன்றக்கூடிய உண்மை இதன் தொடரில் தான் வருகிறது.
4.இப்படித்தான் இயற்கையின் வளர்ச்சியே உள்ளது.
நம் பூமியில் சூரியன் மேலிருந்து நம் பூமிக்கு வரும் ஒளி அலை ஒன்று போல் உள்ளதா..? என்று முந்தைய கால விஞ்ஞானத்திற்கும் இன்றைய விஞ்ஞானத்திற்கும் மாறுபட்ட கருத்துக்கள் ஏற்படுகின்றன.
உலகச் சுழற்சியில் ஏற்படும் இந்த ஒளி அலைகள் ஒன்று போல் சுழன்றாலும் பூமி எடுக்கும் விதத்தில் அதனதன் நிலைக்குகந்த ஒளி அலையைத்தான் இந்தப் பூமியினால் எடுக்க முடிகின்றது.
நம் பூமியில் சில இடங்களில் எரிமலை தோன்றுகிறது. சில இடங்களில் பனி மலைகள் உள்ளன. அந்த இடங்களில் உள்ள ஒளி அலைகளை பூமி எப்படி ஈர்க்கிறது…?
எரிமலையாகக் கக்கும் இந்த உஷ்ண பூமியில் அதற்குகந்த ஆகாரத்தை அது அதிகமாகத்தான் எடுத்துக் கொள்கிறது. இந்த ஒளி அலையின் மூலமாகத்தான் நம் பூமியின் ஜீவனே வாழ்கிறது. நம் பூமிக்கும் ஜீவனுண்டு… உணர்வுண்டு… உருவ சதைகளும் உண்டு.
நம் பூமியின் உள் நிலையை விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்கு அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. பூமியின் உள் நிலையில் உள்ள சக்திகளிலும் செயற்கையின் ரூபம் காண நாம் விரயப்படுத்தி வாழ்கிறோம்.
1.வரும் இடியை இடி தாங்கியினால் தடுக்கின்றோம்.
2.இடி இல்லாவிட்டால் இன வளர்ச்சிக்குகந்த இயற்கைத் தன்மையை நாம் பெற முடியாது.
3.இயற்கையின் தாவர வளர்ச்சி அதிகம் கொண்டால் தான் நாம் இந்தப் பூமியில் வாழ முடியும்.
மனித ஆத்மாக்கள் குறுகிய காலத்திலே செயற்கைக்கு மிகவும் அடிமைப்பட்டு
1.இயற்கையைச் செயற்கையில் கண்டு வாழ்ந்து
2.இந்தப் பூமியையே நிலை தடுமாற வைக்கின்றார்கள்.
பூமியிலிருந்து எடுக்கப்படும் கனிவளங்களைக் காட்டிலும் நம் பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் காந்த அமில சக்தியை மனிதனால் மின்சாரம் காண… காற்று அலையில் உள்ள சக்தியைக் காட்டிலும் “பூமியிலிருந்து” அதிக மின் அலைகளை எடுக்கின்றோம்.
இப்படி பூமியையே நம் செயற்கையின் சோம்பேறி நிலைக்காகக் கொண்டு போய் அதில் உள்ள பல சக்திகளையும் விரயப்படுத்துகின்றோம்.
ஆங்காங்கு உள்ள கனிவளங்களை எடுத்தாலும் வளரும் இயற்கை வளர்ந்து கொண்டே இருந்த நிலையும் இன்று செயற்கை விஞ்ஞானம் தடைப்படுத்தி விட்டது.
அதாவது… பல ஆயிரம் ஆண்டு காலங்களாகப் பூமியிலிருந்து தங்கம் வெள்ளி போன்ற உலோகங்களை எடுத்து வந்துள்ளார்கள். எடுக்க எடுக்க இவையும் வளர்ந்தன.
ஆனால் இந்தக் குறுகிய நூற்றாண்டுகளில்…
1.பெட்ரோலிய இனத் திரவத்தையும்
2.மின்சாரம் காண்பதற்காகக் காந்த அலையின் அணு சக்தியையும் நாம் உறிஞ்சி எடுத்ததனால்
3.பூமியில் வளர வேண்டிய கனி வளங்களுக்குகந்த ஆகாரமான இவ்வமில குணங்கள் எல்லாம் தடைப்பட்டவுடன்
4.அவைகளின் வளர்ச்சியும் சுத்தமாகக் குன்றிவிட்டது.
பொன் முட்டையிடும் வாத்தின் கதையைப் போல் ஆகிவிட்டது…!
வாத்து தானாகத் தினசரி இட்ட முட்டைகளைப் பேராசை கொண்டு ஒரு நாள் அந்த வாத்தை அறுத்துப் பார்த்த நிலையைப் போல் இந்தப் பூமியின் நிலையை மனிதர்கள் சிதறடித்துவிட்டனர்.
1.மனிதனின் எண்ண வளர்ச்சியிலும்… அறிவாற்றலிலும்… ஞானத்திலும் வேகமில்லை…!
2.ஆனால் நினைத்தவுடன் நினைத்தது நடக்க வேண்டும் என்ற
3.பேராசையின் வெறி… வேகம்… மனிதர்களிடம் மிகவும் துரிதப்பட்டதனால்
4.இயற்கையின் பொக்கிஷத்தை எல்லாமே அழித்து வாழ்கின்றோம்.
இதனின் விளைவைக் கூடிய சீக்கிரம் நீங்கள் உணர்வீர்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
பிறருடைய வேதனையான உணர்வைச் சுவாசித்தால் உடலுக்குள் வளராதபடி நாம் அதைப் பிரித்திடல் வேண்டும். பிரிக்கக்கூடிய சக்தி அந்தத் துருவ நட்சத்திரத்திற்கு உண்டு.
துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்கி விட்டால் தீமைகள் வரும் பொழுதெல்லாம் அந்த நிமிடமே “ஈஸ்வரா…” என்று உணர்வினைச் செலுத்த வேண்டும்.
பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று ஏங்கிச் சுவாசிக்க வேண்டும். இப்படி நுகர்வது அனைத்துமே முதலில் நம் இரத்த நாளங்களுக்குள் தான் சேர்கின்றது.
தீமையான உணர்வின் வளர்ச்சி கொண்ட நிலையில் உறுப்புகள் செயலிழந்திருந்தாலும் இதைக் கண்ட பின் அந்த உணர்வுக்குள் கிளர்ந்து எழுகின்றது.
அறியாத நிலைகளில் நமக்குள் அப்படிப் பதிவான தீமைகள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது அந்த எண்ணங்கள் வருகின்றது. அந்த எண்ணங்கள் வரப்படும் பொழுது உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
1.அப்பொழுது காற்றிலிருக்கும் தீமைகளை அதிகமாக நுகர நேருகின்றது.
2.அந்த உணர்ச்சிகளை நாம் எந்த அளவுக்கு நுகர்கின்றோமோ உடலும் மாறுபடுகின்றது… சொல்லும் செயலும் மாறுபடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டும் என்றால் அந்த “ஆத்ம சுத்தி…” என்ற ஆயுதத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.
ஏனென்றால் மண்ணிலே ஒரு நல்ல பொருள் விழுந்தால் உடனே நீரை விட்டு அதைக் கழுவிக் கொள்கின்றோம். இதைப் போல் பிறருடைய தீமையின் உணர்வுகள் நம் உடலில் இரத்தங்களில் கலந்தால் அதன் வீரியத்தைத் தணிக்க “ஈஸ்வரா…” என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
இங்கே உபதேசிக்கும் பொழுது
1.உங்கள் கண்கள் என்னை (ஞானகுரு) உற்றுப் பார்க்கின்றது.
2.உபதேசிக்கும் சொல்லின் உணர்வுகள் அந்தச் செவியிலே படும் பொழுது அந்த உணர்ச்சிகளை உருவாக்குகின்றது.
3.அந்த உணர்வின் தன்மை கொண்டு நினைவலைகளைப் பதிவாக்குகின்றது.
4.உங்கள் கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ வெளியிடும் அலைகளை ஆன்மாவாக மாற்றுகின்றது.
5.மாற்றிய உணர்வுகள் உயிரிலே படுகின்றது… இந்த உணர்ச்சிகளை உடலிலே பரவச் செய்கின்றது…. இரத்தநாளங்களில் கலக்கின்றது.
இந்த உணர்வைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது… இரத்த நாளங்களில் கலக்கக் கலக்க…
1.உங்கள் உடலில் தீமையை விளைவிக்கும் உணர்வுகளுக்கு
2.இந்த இரத்தநாளங்களின் வழியாக உயர்ந்த உணர்வுகள் போகும் பொழுது அதனுடைய தணிவுகள் ஏற்படுகின்றது.
நல்ல குணங்கள் இருக்கப்படும் பொழுது ஒரு வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் அது இரத்தத்தில் சுழலப்படும் பொழுது நல்ல அணுக்களுடைய நிலைகள் அதை நுகர மறுக்கின்றது.
அப்பொழுது இயக்கச் சக்தி குறைகின்றது…. உடல் சோர்வடைகின்றது. இப்படிச் சோர்வடையப்படும் பொழுது நல்லதை நினைக்கும் திறன் இழக்கப்படுகின்றது,
இப்படிச் சோர்வடையும் உணர்வுகள் அதிகரிக்க அதிகரிக்க அதன் உணர்வின் தன்மை நாளடைவில் அதிலே பழகி விட்டால் எது எடுத்தாலும் அந்தச் சோர்வு தான் வரும்.
மட்டன் சாப்பிடாதவர்கள் இரண்டு நாளைக்கு விட்டு விட்டால் பிறகு “கொஞ்சம் மட்டும் சாப்பிடலாம்…” என்ற உணர்வு தோன்றும். ஒரு காயை நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்வார்கள். பின் அதைச் சுவையாக்கி விட்டால் சரி… இப்பொழுது சாப்பிடலாம்…! என்பார்கள்.
இதைப் போன்று இந்த உணர்வுகள்…
1.எதனின் உணர்வை நாம் நுகர்கின்றோமோ அதன் உனர்வின் தன்மை
2.அங்கே அந்த உணர்ச்சிகளைத் தூண்டத்தான் செய்யும்.
ஆனால் இதைப் போன்ற நிலைகளை அதை அடக்குதல் வேண்டும் என்பதற்குத்தான் பல வித கோணங்களில் உங்களுக்கு இந்த உபதேசமே கொடுக்கின்றோம்.
பண்டைய காலத்தில் ரிஷிகள் காட்டிற்குச் சென்று தவம் செய்தார்கள் என்று சொல்வதன் உட்பொருள் என்ன…?
மனிதனுக்குள் இருக்கும் ஆறாவது அறிவின் தன்மை என்பது மிகவும் உயர்ந்த நிலைகள் கொண்டது.
அந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அன்று 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களும் சரி… மகரிஷிகளும் சரி… மனிதனுக்கு மனிதன் காத்திடும் நிலையாகவும்… உயர்ந்த பண்புகளை வளர்த்திடும் நிலையாகவும் இருந்தனர்.
பின் சிறுகச் சிறுக அரச குடும்பங்கள் என்று வரப்படும் போது மதங்களாகப் பிரிக்கப்பட்டு மற்ற மதத்தை வேதனைப்படச் செய்வதே அந்தந்த மதத்தின் வேலையாக இருந்தது.
1.ஏனென்றால் தன் மதத்தின் கடவுளைக் காத்துக் கொள்ள
2.மற்ற மதத்தவர்கள் ஏற்படுத்தும் கடவுளை… அவர்கள் முறையற்றுச் செய்கின்றனர் என்று
3.இவர்கள் அவர்களைச் சொல்வதும் அவர்கள் இவர்களைச் சொல்வதும்
4.வணங்கி வரும் அந்தத் தெய்வங்களை… “அவர்கள் கடவுளைச் சரியில்லை…” என்று ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்வதும்
5.உண்மையின் நிலைகள் அனைத்தும் இப்படி மறைக்கப்பட்டுக் காலத்தால் வேதனை என்ற உணர்வுகளே அதிகமாக வளர்ந்து
6.ஒவ்வொரு மனிதனையும் வேதனைப்படும் நிலைகளுக்கே கொண்டு சென்றனர்.
அரசனால் உருவாக்கப்பட்ட மதங்களும் இனங்களும் மக்களைக் காக்க என்று சொல்லிச் சட்டங்களை இயற்றினாலும் அரசன் தான் வாழ இத்தகைய நிலைகளை உருவாக்கி… மனித உடலில் நஞ்சு கலந்த உணர்வுகளையே வெளிப்படுத்தும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டான்.
அப்படி வெளிப்படுத்தப்பட்ட வேதனையான உணர்வுகள் அனைத்தையும் சூரியன் தன் காந்த சக்தியால் கவர்ந்து இந்தப் பூமியில் நஞ்சு கலந்த நிலையாக வளர்ந்து உலகெங்கிலும் பரவி விட்டது.
புழுவிலிருந்து மனிதனாகப் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்த நிலையில் மனிதனின் ஆறாவது அறிவு (முருகன் – கார்த்திகேயா) என்பது பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்ற நிலைகளில்… ஒவ்வொரு அறிவும் ஒவ்வொரு எண்ணமும் ஒவ்வொன்றையும் உருவாக்கும் ஆற்றல் பெற்றது.
1.அத்தகைய ஆற்றல் கொண்ட ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.தீய விளைவுகளை உருவாக்கும் செயலை மாற்றி
3.மனித உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வின் தன்மைகளை எல்லாம் உயிருடன் ஒன்றச் செய்து
4.ஒளியாக மாற்றிச் செல்லும் வழிகளைத் தான் அன்றைய மெய் ஞானிகள் காட்டினார்கள்.
இருந்தாலும் பின் வந்த அரசர்கள் மெய் ஞானிகள் கொடுத்த தத்துவங்களை மக்களுக்குக் கிடைக்கச் செய்யவில்லை.
1.தன் குடிமக்கள் அந்த மெய் ஞானிகளைப் பின்பற்றிச் சென்றாலும்
2.அவர்களை எல்லாம் தனக்கு எதிரியானவன் என்று பறைசாற்றி
3.அவர்களை வாழவிடாது செய்து ஒதுக்கித் தள்ளி விட்டனர்.
அவ்வாறு ஒதுக்கப்பட்டவர்கள் நாட்டு மத்தியில் வாழ்வதற்குப் பதில் காட்டிற்குள் சென்று… தான் கண்டுணர்ந்த அந்த மெய் உணர்வின் தன்மை கொண்டு விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் பருகி… இந்த உடலையே ஒளியாக மாற்றி… அழியாத நிலைகள் கொண்டு விண் சென்றடைந்தவர்கள் சப்தரிஷி மண்டலங்களில் பல பேர் உண்டு.
அரசர்களால் துன்புறுத்தப்பட்ட மத நிலைகளிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள இவ்வாறு சென்றவர்கள் தான் பல பேர்.
சுவாச நிலைக்கொப்பத் தான் உடல் உஷ்ணமாக இருப்பதும் குளிர்ச்சியாக இருப்பதும் அமைகிறது – ஈஸ்வரபட்டர்
உடல் பொறுக்கும் சூட்டைக் காட்டிலும் நம் உடலுக்குள் உள்ள உள் உறுப்புகள் அதிகச் சூட்டை ஏற்கும் தன்மை கொண்டுள்ளன.
உடம்பின் மேல் நாம் சூடாக அருந்தும் பானத்தின் சூடு பட்டவுடன் உடம்பின் மேல் அங்கங்கள் அந்நிலைச் சூட்டைப் பொறுப்பதில்லை. ஆனால் உள் உறுப்புகள் அந்தச் சூட்டை ஏற்கின்றன.
1.ஒரே பிம்ப உடல் தான்…
2.ஆனால் ஒவ்வொரு அவயங்களின் நிலைக்கொப்ப உஷ்ணத் தன்மைகள் உள்ளன.
3.இவ் உடலிலிருந்து இச் சுவாசம் ஈர்த்து வெளிப்படுத்தும் உஷ்ண அலையின் நிலைக்கொப்ப நம் உடல் உறுப்பு உள்ளது.
தாவரங்களின் தன்மையிலும் இத்தகைய நிலையுள்ளது. நம் பூமியின் தன்மையிலும் இதுவே தான். பூமியில் உள் நிலை பூமியின் மேல் நிலையை காட்டிலும் சில இடங்களில் அந்த உஷ்ண நிலை மாறு கொள்கின்றது.
கோடை காலங்களில் பூமியைப் பறிக்கும் பொழுது அந்தப் பூமியின் உள் நிலை மேல் நிலையைக் காட்டிலும் உஷ்ணமாகவே உள்ளது. நாம் நினைக்கின்றோம்.. சூரியனின் வெக்கையினால் அந்தப் பூமியில் சூடு உள்ளதென்று.
1.பூமிக்கு உஷ்ணத்தை ஈர்ப்பதுவே
2.பூமியின் சுவாசத்தினால் தான்..!
உள் இழுத்து வெளிக்கக்கி இந்த உலகம் சுழன்று… சுழற்சியின் மோதலில் ஒளி அலையை ஈர்த்து வெளிக் கக்கும் நிலையில் அந்தந்தக் கால நிலைகளில் எந்தெந்த மண்டலங்களின் ஈர்ப்பலையின் சக்தி அதிகமாக ஈர்க்கப்படுகின்றதோ.. அதன் நிலைக்கொப்ப நம் பூமியின் கால நிலைகள் மாறுபடுகிறது.
அதே போல் உஷ்ண அலையின் தன்மையும் மாறு கொண்டே உள்ள நிலைக்கொப்ப மற்ற மண்டலங்களின் தன்மைகளும் மாறு கொண்டுள்ளன.
சனி மண்டலமானது மிகவும் குளிர்ந்த அமிலத் தன்மை கொண்ட மண்டலம். அந்த மண்டலத்தின் ஒளி அலையே நம் பூமியைப் போல் வெளிச்சமானதாக இல்லை.
வளர்ந்த மண்டலம் தான் சுழன்று ஓடிக் கொண்டேயுள்ளது. அதன் தன்மையே மிகவும் குளிர்ச்சி வாய்ந்த அமிலத்தை ஈர்த்து வெளிப்படுத்தி அதன் நிலைக்கொப்பப் பனி மண்டலமாக உருளுகின்றது.
சனி மண்டலத்தின் ஈர்ப்பலையின் காலங்களில் நம் பூமியின் வட துருவ தென் துருவ ஈர்ப்பின் நிலைக்கொப்பக் குளிர் காலங்கள் பூமியில் ஏற்படுகின்றன.
அதே போன்ற நிலை தான் நம் பூமியைக் காட்டிலும் அதிகமான உஷ்ணத்தை ஈர்த்து வெளிப்படுத்தும் ராகு கேது போன்ற சில மண்டலங்களின் தொடர்பினால் நம் பூமியில் கோடையில் ஏற்படும் உஷ்ண நிலை.
ஆகவே உஷ்ண நிலை என்பது…
1.சுவாசிக்கும் சுவாசத்திற்கொப்பவும்
2.வந்து மோதும் பிற உணர்வுகளுக்கொப்பவும் தான் என்பதை
3.நாம் அறிதல் வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
கோர்ட்டுகளில் கேஸ்கள் நடக்கும். பல பிரிவினைகள் நடக்கும். ஏமாற்றும் சக்தி கொண்டு… “மற்றவர்களை ஏமாற்றுபவர்கள்…” ஏராளம் அங்கே உண்டு.
இப்படி ஏராளமாக இருப்பினும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்யும் செயல்களை நாம் உற்றுப் பார்த்து நுகர்ந்தறியப்படும் பொழுது நமக்குள் விஷத்தின் தன்மையே கூடுகின்றது.
எனக்கு இப்படிச் செய்கிறார்களே…! என்று எண்ணும் பொழுது இந்த உணர்வுகள்…
1.மீண்டும் அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பை உருவாக்கும் தன்மையை நமக்குள் வளர்க்கின்றது.
2.இதைப் போன்ற வெறுப்பு நமக்குள் வளரப்படும் பொழுது அதையே நினைத்துக் கொண்டு
3.அதைப் பற்றி யாரிடம் சொன்னாலும் ஒரு வெறுப்பான சொல்களையே சொல்வோம்.
ஆனால் அந்த வெறுப்பான சொல்களைச் சொல்லும் பொழுது வெறுக்கும் உணர்ச்சியைத் தூண்டி கேட்போர் உணர்வுக்குள்ளும் இது பதிவாகி அவர்களும் நமக்கு எதிரியாகத்தான் வருவார்கள்.
யாரை எண்ணி வெறுத்தோமோ… அவர்களுக்கும் இந்த உணர்வுகள் போகும். அங்கேயும் இது உருவாகும்… நமக்குள்ளும் அந்த வெறுப்பின் தன்மையே உருவாகும்.
இத்தகைய வெறுப்பு நமக்குள் உருவாகாதபடி தடைப்படுத்த வேண்டுமல்லவா…! அப்படித் தடைப்படுத்த வேண்டும் என்றால் நாம் உடனடியாக ஆத்ம சுத்தி செய்து பழக வேண்டும்.
“ஈஸ்வரா..!” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி அந்த வெறுப்பு வளராதபடி தடைப்படுத்த வேண்டும்.
பொதுவாக நாம் யாரை யாரை எல்லாம் நாம் பார்க்கின்றோமோ “அவர்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற பொது விதிப்படி…” நமக்குள் அவரைப் பற்றிப் பதிவான உணர்வுகளைத் தடைப்படுத்திவிட வேண்டும்.
பின் யார் நமக்கு தீங்கினைச் செய்தாரோ.. அவரை எண்ணி
1.என் பார்வை அவரை நலலவராக்க வேண்டும்
2.என்னைப் பார்க்கும் பொழுது அவர்களுக்குள் நல்ல எண்ணம் உதயமாக வேண்டும்
3.அவர்கள் தவறுகளை அவர்கள் உணரும் சக்தி பெறவேண்டும்
4.தவறான நிலைகளிலிருந்து விடுபடும் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று
5.இத்தகைய உணர்வுகளை எடுத்து அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.
அப்பொழுது நமக்குத் தீங்கு செய்யும் எண்ணங்கள் வரும் பொழுதெல்லாம் அவர்களும் இதை நுகர்வார்கள். தனக்குள் உணர்வின் ஒலி அலைகளை மாற்றுவார்கள்.
உதாரணமாக… இராக்கெட்டை விண்ணிலே செலுத்திய பின் இதற்கும் அதற்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றாலும்
1.இராக்கெட் பழுதானால் இங்கே தரையிலிருந்து லேசர் இயக்கமாக இயக்கி
2.அந்த இயந்திரத்தைப் பூமியிலிருந்தே சீர் செய்கிறார்கள்.
இதே போல ஒரு பழுதடைந்த மனதைச் சீர் செய்ய மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் பெருக்கி அவர்களுக்குப் பாய்ச்சி நம்மைக் காக்க முடியும்.
தொழில் நிமித்தங்களோ அல்லது குடும்ப நிலைகளிலோ அல்லது பற்று கொண்ட சொந்தத்தில் தொழில் நடத்தும் பொழுதோ சில வித்தியாசமான உணர்வுகள் வந்த பின் ஒருவருக்கொருவர் பகைமையாகின்றது.
பகைமையானபின்… அது நம்முடைய பொருள் தான் என்று தெரிந்தாலும் அந்தப் பகைமை உணர்வுகள் தான் அவர்களைச் செயல்படுத்தும்
1.பொருள் அவர்களுடையது…! என்று கொடுக்காத நிலை ஏற்பட்டு விடுகின்றது.
2அதாவது நம்முடைய பொருளை எடுத்துக் கொண்டு அது என்னுடையது தான்…! என்று சொல்வார்கள்.
இத்தகைய தன்மை தான் இன்று உலகில் பெரும்பகுதி நடக்கின்றது.
இதைப் போன்ற தீமைகள் நடக்கும் நிலைகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
உடல் அழுக்கைப் போக்க குளிக்கின்றோம். துணியில் உள்ள அழுக்கைப் போக்கச் சோப்பைப் போட்டுத் துவைக்கின்றோம்.
இதைப் போல் நம் ஆன்மாவில் பட்ட அழுக்கினைப் போக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து
1.நாம் எந்த வெறுப்பினை அடைந்தோமோ அவர்களை எண்ணி
2.அவர்களுக்கு நல்ல அறிவு வர வேண்டும் என்று எண்ணினால்
3.அந்த உணர்வின் தன்மை நமக்குள் இருந்து அவர்கள் மீது வெறுப்பில்லாத நிலைகளை உருவாக்கும்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் வட்டத்திலேயே என்றும் வாழும் ஒரு பக்குவத்திற்கு நாம் வர வேண்டும்
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பெற்ற அந்த அனைத்து ஆற்றல்களையும் நீங்கள் பெறவேண்டும் என்பதற்குத்தான் இதை இப்பொழுது இங்கே உங்களுக்கு உபதேசிக்கின்றோம் (ஞானகுரு).
நமது குருநாதர் பல கோடி ஆண்டுகளுக்கு முன் அவருடைய உயிராத்மா விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக இணைந்தவர் அதன்வழி, நமது பூமியிலே அந்த உணர்வின் வித்துக்கள் பட்டு, மற்ற உயிர்களிலே அது விளைந்து பல வாறு பல உணர்வின் தன்மையை இங்கே பரப்பிய நிலைகள் கொண்டு அந்தந்த உணர்வுகள் பட்டு, அந்தந்த உடல்கள், அந்த உயிராத்மாக்கள் விண்ணிலே அவருடன் ஐக்கியமாகி அவருடன் விண்ணிலே பெரும் மண்டலங்களாக இதைப் போன்று எத்தனையோ ரிஷிகள் சேர்ந்து, அந்த நிலைகள் கொண்டு அவர்கள் சென்றுள்ளார்கள்.
குரு கவர்ந்த அந்த உணர்வின் சக்தி குரு பக்தி கொண்டு எவர் கவருகின்றாரோ அவர் நினைக்கும் பொழுதெல்லாம குரு, தான் நுகர்ந்த அந்த உணர்வின் சக்தி எளிதில் கிடைக்கும். எளிதில் செயல்படுத்த முடியும். தீமை என்ற நிலைகள், தனக்குள் புகாது தடுத்து நிறுத்த முடியும்.
1. இந்த உலகில் தீமைகள் மறைந்து உண்மைகள் வளரவேண்டும் என்ற அருள் வழி காட்டும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
2. பொன்னடி பொருளும் இந்தப் பூமியில் சுகமில்லை.. மின்னலைப் போல் மறையும் மனித வாழ்க்கையில் பேரருளையும் பேரொளியையும் சேர்ப்பதே அழியாச் சொத்து என்று உணர்த்திய ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
3. உயிரே கடவுள் என்று உணர்த்தி உயிருடன் ஒன்றி அவனுடன் இணைந்து அவனாக ஆகி… அவனாக நாம் ஆக வேண்டும்.. அந்த மெய் உலகை எல்லோரும் அடைய வேண்டும் என்று உணர்த்தும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
4. மகரிஷிகளின் அருள் சக்தியை சாமானிய மக்களும் பெறும் சந்தர்ப்பத்தை உருவாக்கிய ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
5. இல்லற வாழ்க்கையிலிருந்தே அவரவர்கள் வீட்டிற்குள் இருந்தே அண்டசராசரத்தின் ஆற்றல்களைப் பெறச் செய்யும் ஈஸ்வராய குருதேவரின் அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
6. வரும் தடைகளை எல்லாம் நீக்கி நன்மைகள் செய்யக்கூடிய துணிவைக் கொடுத்து உலகையே காத்திட அருள் வழி காட்டும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
7. பரிபாஷைகள் மூலம் மெய் ஞானத்தை உணர்த்தும் சக்திகளையும் விண்ணுலக அதிசயங்களை உணர்த்தும் ஈஸ்வராய குருதேவரின் சூட்சம சக்திகளையும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
8. “பிறரை உயர்த்தித் தான் உயரும் நிலையையும்.. பிறரைக் காத்துத் தன்னைக் காக்கும் நிலையையும்… பிறரை வலுவாக்கித் தன்னை வலுவாக்கிக் கொள்ளும் நிலையையும்…” வழி காட்டும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
9. அருள் ஞானப் பசியைத் தீர்க்கும் ரிஷி பிண்டமான ஈஸ்வராய குருதேவரின் அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
10. பல இலட்சம் ஆண்டுக்கு முன் ஆதியிலே தோன்றிய அகஸ்தியரிலிருந்து சமீபத்தில் வாழ்ந்து மெய் உணர்வுகளைப் பெற்று ஒளி சரீரம் பெற்ற திருமூலர் ஆதிசங்கரர் போன்ற எண்ணிலடங்காத மெய் ஞானிகள் வரை அவர்கள் வெளிப்படுத்திய ஒளியான உணர்வுகளைக் காற்றிலிருந்து நம்மை நுகரச் செய்யும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…!
11. நம்மையும் ஞானிகளாக ஆக்கி மெய் ஞானிகளுடன் ஒன்றி வாழ்ந்திட வழி காட்டும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
12. அகண்ட அண்டத்தின் உணர்வின் தன்மையை ஒளியாகக் கலந்து அதை ஆன்மாவாக வைத்திருக்கும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற்று எங்கள் ஆன்மாவும் பேரொளியாகிட அருள்வாய் ஈஸ்வரா.
13. சாக்கடை போன்று இருக்கும் இன்றைய நச்சான காற்று மண்டலத்தைப் பிளந்து மெய் உணர்வுகளை நுகரும் ஆற்றலைக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
14. உடலை விட்டு எந்த நேரம் யார் பிரிந்தாலும் அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலம் அடைவதே மனிதனுடைய கடைசி எல்லை என்று உணர்த்தும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
15. பிறரைக் காத்திட வேண்டும் என்று இந்தப் பூமியில் செயல்பட்ட மகான்களை எல்லாம் விண் செலுத்திய ஈஸ்வராய குருதேவரின் ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
16. பேரானந்தப் பெருநிலையாக விண்ணுலகில் வாழ்ந்து கொண்டு விண் செல்லும் ஆற்றலையும் விண் செலுத்தும் ஆற்றலையும் கொடுத்துக் கொண்டிருக்கும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
17. கோடி…கோடி…! என்ற நிலையில் ஒளியான உணர்வுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…!
18. சூட்சம இரகசியங்கள் அனைத்தையும் வெளிப்படுத்தி தன்னைக் காட்டிலும் எல்லோரும் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்றும் தன்னை எல்லோரும் முந்திச் செல்ல வேண்டும் என்றும் ஆசி கூறும் ஈஸ்வராய குருதேவரின் தெய்வீகப் பண்புகளை நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா
19. நாமெல்லாம் கடவுளாக ஆகவேண்டும் என்று விரும்பி அதனைச் செயல்படுத்த இன்றைய கால கட்டத்தில் அருள் வழி காட்டிக் கொண்டிருக்கும் ஈஸ்வராய குருதேவரின் அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
உடலை விட்டுப் பிரிந்தால் ஆவி உலகில் நாம் அல்லல்படக் கூடாது – ஈஸ்வரபட்டர்
தேவர்கள்… அசுரர்கள்.. மனிதர்கள்… என்று இனம் பிரித்துக் காட்டினார்கள் நம் முன்னோர்கள். தேவர் என்பவர் யார்…? அசுரர் என்பவர் யார்…? மனிதர் என்பவர் யார்…?
எந்தெந்த வளர்ச்சி செயல் புரிந்து… எந்தெந்த எண்ண ஓட்டத்தில் வாழ்கின்றார்களோ அதனை இனம் பிரித்துத் தேவனாகவும் அசுரனாகவும் மனிதனாகவும் காட்டினர்.
இன்று நம்மிலேயே இந்த மூன்று வகைக் குணத்தவர் உள்ளனர். அவரவர்களின் எண்ணப் பயனால் அமைவதுவே இந்தக் குண நிலை. மனித ஆத்மாவுக்கு மட்டுமல்ல. அனைத்து நிலைகளுக்கும் இது உண்டு என்று உணர்த்தியுள்ளேன்.
நம் பூமியின் ஒத்த நிலைகள் மற்ற மண்டலங்களுக்கு மாறுபாடு கொள்கின்றன. சூரியனின் ஒளி அலையை ஈர்த்து நம் பூமி வெளிக்கக்கும் உஷ்ண அலையின் சக்தி நிலைப்படி நம் பூமியின் சுழற்சி ஓட்டமும் இயற்கைத் தன்மையும் அமைந்துள்ளன.
அது அல்லாமல் பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட விகிதத் தூரத்தைக் கொண்டும் நம் பூமியின் நீர் நிலையின் தன்மை கொண்டும் நம் பூமிக்குத் தொடர்புடைய மண்டலங்களின் ஈர்ப்பு அலைகளின் வெளிக்கக்கும் அமில குணத்தைக் கொண்டும் நம் பூமியின் இன்றைய குண நிலை உள்ளது. இது போல் மற்ற மண்டலங்களின் தன்மைகளும் மாறுபடுகின்றன.
உஷ்ண அலையில் வாழும் நம் பூமியில் பிரிந்து வாழும்… பிரிந்து என்பது
1.இந்தப் பூமியில் வாழ்ந்த ஆன்மாக்கள்
2.இந்தப் பூமியின் சுழற்சி ஓட்டத்துடன் எந்த இடத்தில் எந்த எண்ணத்தில் தன் ஆத்மா பிரிந்ததுவோ
3.அதே எண்ண நிலைக்கொப்ப அந்த உஷ்ண அலையின் நிலையுடனே
4.இந்தப் பூமியின் சுழற்சியுடன் இந்தப் பூமியின் ஓட்டத்திலும் இந்தப் பூமியின் ஈர்ப்புடனும் அதன் சுழற்சி நிலை உள்ளது.
நம் பூமி ஓர் இடத்தில் நிற்பதில்லை. சுழன்றே ஓடிக் கொண்டுள்ளது. இந்தப் பூமியிலிருந்து பிரிந்த ஆத்மாக்களும் அதன் சுழற்சியிலேயே ஓடிக் கொண்டே சுழன்று கொண்டே வருகின்றன.
ஆத்மா பிரிந்த பிறகு மேலுலகம் சென்று விட்டான் என்கிறனர்.
1.மேல் உலகம் என்பது எந்த உலகம்…?
2.இந்தப் பூமிக்கும் மற்ற மண்டலங்களுக்கும் மேல்… கீழ்… என்ற நிலை உள்ளதுவா…?
3.சூரியனின் ஒளி அலைகள் பாயும் மத்திய பாகத்தை மேல் பாகம் என்றாலும் இரவிலே கீழ் பாகத்தில் வாழுகின்றோமா…?
சுழலும் சுழற்சி வட்டத்தில் கீழும் இல்லை… மேலும் இல்லை…!
இந்தப் பூமியின் காந்த ஈர்ப்பின் நிலையுடன் ஒட்டி… பூமியின் சுழற்சியுடன் நாம் எப்படி அதன் ஈர்ப்பில் வாழ்கின்றோமோ அதைப் போல் தான் இந்த உலகில் வாழ்ந்து பிரிந்த உயிராத்மாக்கள் இந்த உலகின் ஈர்ப்பின் வட்டத்திற்குள் காந்த அமில வட்டத்திற்குள்ளேயே நம்முடன் கலந்தே தான் அவர்களின் அமில வட்டக் குணங்களும் உள்ளன.
ஆவி பிரிந்து அந்த ஆத்மா ஆகாயத்தில் சென்று நிற்பதில்லை…!
நம் மூதாதையர்களினால் சொல்லப்பட்ட நடந்த கதைகளில் பேய் பிசாசு வந்ததாகவும்… அதன் பாதம் நிலத்தில் பதியவில்லை…! என்றும் பேய்க்கும் பிசாசிற்கும் பாதம் நிலத்தில் பாவாது…! என்றெல்லாம் கதைகளாகக் கேட்டிருப்பீர்.
இவைகள் எல்லாம் கதைகள் அல்ல…! உண்மை நிலையில் வெளிப்பட்ட சில அர்த்தம் கொண்ட செயல் முறைகள் தான்.
1.பிம்ப உடல் இல்லாததினால் அவற்றின் உடல் பூமியில் பதிவதை நாம் காண முடியாதேயன்றி
2.மனித ஆன்மாக்கள் எப்படிப் பூமியில் வாழ்கின்றனவோ அதைப் போல்
3.ஆவி ஆத்மாக்களும் இந்த ஈர்ப்பின் வட்டத்திற்குள்ளேயே இருக்க முடியும்… இருக்கின்றன…!
இந்த ஈர்ப்பின் வட்டத்தைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்றால் அதற்குகந்த ஞானம் பெற்றிருந்தால் தான்… அந்தப் பக்குவ வழியில் சூட்சமம் கொண்டோர்களினால் தான்… இந்தப் பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்கு மேலே (வெளியிலே) செல்ல முடியும்.
1.இந்தப் பூமியின் சக்தி அலையில் இருந்து நம் ஆத்ம நிலை மற்ற நிலைகளுக்குச் செல்ல வேண்டும் என்றால்
2.அதற்குகந்த பயிற்சித் திறன் நாம் பெற்றிருந்தால் அதன் செயலில் செல்ல முடியும்.
மனிதனிலிருந்து பிரிந்து சென்ற ஆத்மாக்களினால் இந்த ஈர்ப்பின் தன்மையிலிருந்து பறந்து எங்கே வேண்டுமானாலும் செல்ல முடியாது.
பூமி சுழன்று கொண்டே உள்ள பொழுது பூமி சுழலுவதும் ஓடுவதும் நமக்குத் தெரிகின்றதா..? இல்லை…! அதே போல் அதன் ஈர்ப்பில் ஐக்கியப்பட்டுள்ள நம்மைப் போன்ற நிலைதான் இந்தப் பூமியில் பிறந்து இந்தப் பிம்ப உடலை விட்டுச் சென்ற ஆத்மாக்கள் நிலையும் உள்ளது.
ஆக உடலை விட்டுப் பிரிந்த எந்த ஆன்மாவாக இருந்தாலும் இந்தப் பூமியின் பிடிப்பிலே இதனின் ஈர்ப்பு வட்டத்தில் தான் இருக்க முடியும். மீண்டும் மீண்டும் உடல் பெற்றுத் தான் ஆக வேண்டும்.
1.இதிலிருந்து தப்பி இந்தப் பூமியின் ஈர்ப்பைக் கடந்து சென்று பிறவியில்லா நிலை அடைய வேண்டும்
2.முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்லும் சப்தரிஷி மண்டலங்களுடன் நீங்கள் அனைவரும் இணைய வேண்டும் என்பதற்குத்தான்
3.இந்தப் பாடநிலைகளை விளக்கவுரைகளாகத் தொடர்ந்து கொடுக்கின்றேன்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
நாம் அனைவரும் நுகரும் சக்தி கொண்டவர்கள். சந்தர்ப்பத்தால் ஒருவருக்கொருவர் கடுமையான பகைமையாகி விட்டால் அதனால் வெறுப்படையும் நிலையே வருகின்றது.
அந்த வெறுப்புடன் “நாசமாகப் போடா…!” என்று சொல்லப்படும் பொழுது என்ன நடக்கின்றது…?
இது அவன் செவிகளில் படும் பொழுது
1.இந்த உணர்வுகள் அவன் தொழிலுக்குப் பாதகத்தை உண்டாக்கி
2.வாகனங்களில் செல்லும் பொழுது எதிர்பாராது விபத்துக்களையும் ஏற்படுத்துகின்றது.
ஆகவே… இன்றைய மனித வாழ்க்கையில் நாம் எவ்வளவு திறமைசாலியாக இருப்பினும்
1.பிறருடைய வேக உணர்வுகள் வந்து தாக்கி விட்டால்
2.நம்முடைய சிந்தனையைச் சீர்குலையச் செய்து விபத்துக்களுக்கே அழைத்துச் செல்கின்றது.
அல்லது அதே போல் சில விபரீதச் செயல்களையும் நம்மை அறியாமலே செயல்படுத்தத் தொடங்கி விடுகின்றது.
அந்தச் சாப அலைகள் பாய்ந்து விபரீதச் செயல்களைச் செயல்படுத்துவதோடு மட்டுமல்லாதபடி நம்மையே குற்றவாளியாக ஆக்கும் நிலையையும் உருவாக்கி விடுன்றது.
இதைப் போன்ற கொடுமைகளிலிருந்தெல்லாம் விடுபட காலை துருவ தியானத்தைச் சீராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை எடுத்து
2.உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் செருகேற்றிக் கொள்ளுங்கள்.
அப்படி வலுவாக்கிக் கொண்ட பின் இந்த வாழ்க்கையில் வந்த பிறருடைய தீமைகள் எதுவாக இருந்தாலும் அதைப் பதிவாக்கப்படும் பொழுது
1.அந்தத் தீமையான உணர்ச்சிகள் நமக்குள் தூண்டாது
2.நாம் நுகர்ந்த துருவ நட்சத்திரத்தின் சக்தி அதை அடக்கிவிடும்
நம்மை யார் யார் எல்லாம் கேலி செய்தார்களோ… அவர்கள் பால் எண்ணத்தைச் செலுத்தி
1.துருவ நட்சத்திரத்தின் சக்தி அவர்கள் பெறவேண்டும்
2.அவர்கள் அறியாமையிலிருந்து விடுபட வேண்டும்
3.எனக்குத் தீங்கு செய்யும் நிலையிலிருந்து விடுப்ட வேண்டும்
4.உண்மையின் உணர்வை அவர்கள் அறிய வேண்டும்
5.உண்மையின் செயலாக மாறவேண்டும்
6.உண்மையை உணர்த்தும் சக்தி அவர்கள் பெற வேண்டும்
7.உண்மையின் செயலிலேயே அவர்கள் வர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
இந்த உணர்வுகள் அவர்களுக்குள் பாய்ந்த பின் நம்மைப் பார்த்து எண்ணும் பொழுதும் சரி அல்லது சார்புடையோருக்கும் சரி
1.நம் பேரைச் சொன்னாலே இந்த உணர்வுகள் அவர்களுக்குள் ஊடுருவிச் சென்று
2.யார் தீங்கு செய்தார்களோ அவர்களுக்கெல்லாம் ஞானத்தை ஊட்டும்.
3.அதாவது… நாரதன் கலகப்பிரியனாகி.. அங்கே உண்மையை வெளிப்படுத்தி அதை உணர்த்தும் சக்திகளாக வருகின்றது.
காவியங்களில் இதைத் தெளிவாக்கியுள்ளார்கள் நம் ஞானிகள்.
ஆகவே நாரதன் (துருவ நட்சத்திரத்தின் ஒளி) என்ற இந்த உணர்வை வழிப்படுத்தினால்… நம்மை அறியாது புகுந்து…
1.நமக்குள் தீங்கு விளைவிக்கும் செயல்களிலிருந்து விடுபடும் உணர்ச்சிகளை ஊட்டி…
2.நம் எண்ணமே நமக்குள் தீமைகளை உருவாக்கும் நிலையிலிருந்து முழுமையாக விடுபடச் செய்யும்.
நாம் வாழும் உலகில் நஞ்சு பெருக் காரணமும் அதிலிருந்து விடுபடச் செய்யும் சரியான மார்க்கமும்
பாலில் நஞ்சு கலந்தால் அதைக் குடித்தால் நம் சிந்திக்கும் தன்மையை எப்படி இழக்கின்றோமோ… அதைப் போலத் தான் இன்றைய உலகில் நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் நஞ்சுகள் அதிகரித்துள்ளதால் நல்ல சிந்தனைகளும் குறைந்து கொண்டே வருகிறது.
காரணம்…
1.பூச்சிக் கொல்லி மருந்துகளையும் இரசாயண உரங்களையும் விவசாயப் பயிர்களில் சேர்த்துச் சேர்த்து
2.பெரும்பகுதியான வித்துகளில் அந்த நஞ்சு இணைந்தே உள்ளது
3.அது நம் உடலுடன் இணையும் போது நமக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்திலும் கலக்ககப்படுகின்றது…
4.அத்தகைய நஞ்சால் நம் சிந்தனை இழக்கப்படுகின்றது… நாம் சிந்தித்தாலும் கூட அது தெரிவதில்லை.
நாம் எண்ணும் கோபமோ வெறுப்போ வேதனையோ இவை எல்லாம் விஷத்தால் இயக்கப்படுவது. உடலில் விஷம் கூடக் கூட “அத்தகைய தீமை செய்யும் சிந்தனையும்… அதனுடைய ஞானமும் தான் அதிகமாகப் பெருகும்…”
உதாரணமாக ஒருவரை நாம் எதிர்பாராது திட்டி விடுகிறோம் அல்லது அவருக்குக் கோபம் வரும்படியாக பேசி விட்டோம் என்று வைத்துக் கொள்வோம்.
1.அதனால் அவர் மனது புண்பட்டிருந்தாலும் கூட
2.“தான் பேசியது நியாயம் தான்…” என்று வாதிக்கும் திறன் அந்த விஷத்திற்கு உண்டு.
அந்த விஷத்தின் வலுக் கொண்டு செயல்படுத்தும் போது நாம் திட்டியதால் அவர்கள் மனம் புண்பட்டுவிட்டது என்ற சிந்தனையற்ற நிலையும் உருவாக்கிவிடும்.
அவர்கள் தவறு செய்யவில்லை… சந்தர்ப்பவசத்தால் அவர்களைத் திட்டி விட்டோம்…! என்று எண்ணினாலும் அவர்களைத் திட்டியதால் வேதனைப்படுகின்றனர் என்று சிந்தித்து அதைச் சீர்படுத்த முடியாது.
இப்படி மனிதனின் வாழ்க்கையில் உயர்ந்த குணங்கள் எதுவாக இருந்தாலும் இது போன்ற விஷத் தன்மைகள் பெருகி சிந்தனையில்லாத செயல்களும் இன்று அதிக அளவில் பெருகிக் கொண்டே உள்ளது.
ஆனால்… நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்த நஞ்சினைப் பிரித்து விட்டு நல்ல உணர்வை உடலாக ஆக்கும் மணமாக மனித உடலில் ஆறாவது அறிவு இருக்கின்றது.
கடந்த காலங்களில் மனித வாழ்க்கையில் எத்தகைய வேதனையான நிலைகள் வந்தாலும் தன் ஆறாவது அறிவின் திறமை கொண்டு அந்த வேதனையை உருவாக்கிடும் செயல்களை நீக்கிடும் ஆற்றல்கள் உண்டு. அதிலே முதன்மை பெற்றவன் அகஸ்தியன்.
ஏனென்றால் மனிதனின் உணர்வுக்குள் ஆறாவது அறிவை ஏழாவதாக மாற்றுவது ஒளி.
1.ஒரு பொருளுக்குள் இருக்கும் நஞ்சினை நீக்கத் தெரிந்து கொள்வது…
2.தீயதை நீக்கி நல்லதை உருவாக்கும் ஆற்றல் பெற்றது நம் ஆறாவது அறிவு.
அதனை அடிப்படை ஆதாரமாக வைத்துப் பண்டைய காலத்தில் வாழ்ந்த அந்த மெய் ஞானி நஞ்சினை நீக்கி உணர்வினைத் தனக்குள் ஒளியாக மாற்றினான். ஆக அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.
அந்த மகரிஷியின் ஒளிச் சரீரத்திலிருந்து வெளிப்படும் மிகச் சக்தி வாய்ந்த உணர்வலைகளை சூரியன் காந்த சக்தி கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கிறது. நம் பூமி வட துருவத்தின் வழியாக அதைக் கவர்கிறது.
அப்படி வரும் வந்த உணர்வுகளைக் கவர்ந்தோர் அனைவரும் அந்த அகஸ்தியன் எவ்வாறு நஞ்சினை நீக்கினானோ… உணர்வை ஒளியாக மாற்றினானோ… அதைப் போல் ஒளியாக மாற்றிக் கொண்டு… முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்ற நிலையில் வேகா நிலை கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
1.ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக மாற்றி சப்தரிஷி என்ற நிலை அடைந்து
2.உயிருடன் ஒன்றிய நிலைகள் தனக்குள் ஒளியாகச் சிருஷ்டித்து ஏழாவது நிலையை அடைந்து சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.
அந்தத் துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வுகளும் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் உணர்வுகளும் நமக்கு முன் இன்றும் படர்ந்து கொண்டுள்ளது.
அதை நாம் பருகினால் இன்றைய உலகில் வரும் எத்தகைய தீமைகளிலிருந்தும் விடுபடலாம். அந்த மகரிஷிகளுடன் நாமும் ஐக்கியமாகலாம். அழியா நிலை பெறலாம்.
ஞானிகளின் உணர்வை எடுத்தால் “முடியாது…” என்ற சொல்லுக்கே இடமில்லாது செய்யலாம் – ஈஸ்வரபட்டர்
ஒரு சிறு தீப்பொறி காற்றலையில் அதன் நிலைக்குகந்த பொருளின் மீது படும் பொழுது “தீ..” பற்றிக் கொள்கின்றது.
அதன் தன்மைக்குகந்த பொருள்கள் எல்லாவற்றையும் எரித்து அதன் தன்மைக்குகந்த எரிபொருள் இருக்கும் வரை எரிந்து விட்டு அது தீர்ந்தவுடன் தன் நிலையில் சாம்பலாகிப் பூத்துவிடுகின்றது.
அத்தகைய எரியும் நெருப்பை நம்மால் அணைக்க முடிகிறதா..? நெருப்பிற்கு மேல் சக்தி கொண்ட நீரை அதன் மேல் பாய்ச்சித் தான் அதை அணைக்க முடியும்.
அதைப் போல்…
1.தீய சக்தியான இக்கடும் எண்ணக் கலவையின் இன்றைய மனித ஆத்மாக்கள் வாழும் நிலையில்
2.நம் ஜெப நிலைக்குகந்த ஒளி அலைகளை எடுத்து வளர்க்க வேண்டும் என்றால்
3.இந்த உலக மாயை எண்ணத்தினால் வாழும் நமக்கு அந்த மாமகரிஷிகள் வெளிப்படுத்தும் அருள் சக்திகளை எடுத்தால் தான்
4.உலக ஞானத்தை நாம் பெற முடியும்.
ஒன்றில்லாமல் ஒன்றில்லை…!
பக்தி கொண்டு வணங்கிப் பிறரின் உபதேசத்தினால் தான் நம் ஞானம் வளருமா…? ஆதிசக்தியின் சக்திக் குழந்தையான நம் சக்தியை பிறரை வணங்கி நாம் ஏன் ஏற்றம் பெற வேண்டும்…? நம் ஞானத்தை நாமே பெறலாகாதா…? என்ற வினா எழும்பலாம்.
அந்த மாமகரிஷிகள் பெற்ற அந்த உன்னத சக்தியின் ஒளி அலையின் சக்தியை நாம் பெற்றால் நாம் அடையக்கூடிய ஞான வழிக்குச் சில வழி முறைப் பாடங்களை “அவர்களின் துணையுடன்” நாம் பெற்றுச் செல்ல முடியும்.
புராணக் கதைகளில் கிருஷ்ணாவதாரத்திலும் இராமாவதாரத்திலும் சில நிலைகளில் சில நிலைகளைக் கதை ரூபமாகப் புரியாதவண்ணம் உணர்த்தியிருக்கின்றார்கள்.
கிருஷ்ணர் போர்க்களம் சென்றவுடன் அவரின் மேலிருந்து “ஒளிகள் பாய்ந்தவுடன்…” அனைத்து எதிரிப்படைகளும் நின்றதாக உணர்த்தியிருக்கின்றார்கள்.
இந்த நிலை சாத்தியப்படுமா…? ஆண்டவனே வந்து அவதரித்தால் இந்த நிலை நடக்கும். கிருஷ்ணர் வாயைத் திறந்து காட்டியவுடன் ஈரேழு உலகமும் கண்டதாக வர்ணிப்புக் கதையும் உண்டு,
கதை அல்ல…! காவியம் தான் என்றாலும்…
1அந்த நிலையின் சாத்தியக் கூற்றை ஒவ்வொரு ஆத்மாவினாலும் செய்து காட்டிட முடியும்… அதற்குகந்த ஞானம் பெற்றால்…!
2.”முடியாத நிலை” என்ற சொல்லுக்கே அர்த்தமற்ற குணத்தைக் காட்டலாம்.
பக்குவ ஞானம் பெற்று… பக்குவமான ஜெபத்தைக் கொண்டு… முதலில் அந்த நிலைக்குச் சென்ற மாமகரிஷிகளின் துணையுடன் இந்த உலக நிலையிலே எந்தச் செயலையும் நடத்திடவும்.. நிறுத்திடவும்… நம் ஞானத்தால் முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
தாய் கருவிலே உருவான ஒரு குழந்தைக்குக் கருவிலேயே நோயாக ஆகிவிட்டால் என்ன ஆகிறது…?
அவன் பிறந்த பின் சுற்றுப் புறச் சூழலில் உள்ளோரும் அந்தக் குழந்தையை உற்று நோக்கும் பொழுது
1.இவனில் விளைந்த நோயை அவர்களும் கொஞ்ச கொஞ்சமாகப் பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.
2.நுகர்ந்தவர்கள் உடலில் எல்லாம் அந்த நோய் சிறிது சிறிதாக வரும்.
நீங்கள் பார்க்கலாம்…!
1.சர்க்கரைச் சத்து தாய் வழியில் வந்தது… தந்தை வழியில் வந்தது…!
2.வாத நோய் தாய் வழியில் வந்தது… தந்தை வழியில் வந்தது…!
3.இரத்தக் கொதிப்பு தாய் வழியில் வந்தது… தந்தை வழியில் வந்தது…! என்று
4.இன்று சர்வ சாதரணமாகச் சொல்வார்கள்.
இது எல்லாம் இந்த உணர்வின் பேச்சின் தொடரைக் கேட்கும் பொழுது அது கருவுற்றிருக்கும் குழந்தைகளுக்கு இந்த உணர்வுகள் சேர்ந்து விடுகின்றது.
அதைப் போன்று தான் கோபத்தின் நிலையும்… அதிகமாகச் செல்வங்கள் சம்பாரிக்கும் பொழுதும்… குடும்பத்தில் பற்றுகள் குறையப்படும் பொழுதும்… என்னை மோசம் செய்தான் பாவி…! என்ற நிலைகள் வரும் பொழுதும்… இந்த உணர்வுகளை அவர்களும் நுகர்கின்றனர். அவர் சொல்வதை மற்றவரும் நுகர்கின்றனர்.
நுகர்ந்த பின் அங்கேயும் இதே மாதிரி நோய்கள் வரத் தொடங்குகிறது. இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
அது மட்டுமல்ல…
1.வேடிக்கையாகக் கூட இது போன்ற உணர்வுகளைப் பேசிப் பதிவாக்கக் கூடாது.
2.நம் எண்ணத்திற்கே இது வரக்கூடாது.
அருள் ஞானிகளின் உணர்வை எடுத்து அதிலிருந்து விடுபடும் சக்தியைத் தான் நாம் எண்ண வேண்டும். அதைத் தான் நாமும் பேச வேண்டும்.. வெளிப்படுத்த வேண்டும்.
குழந்தை பாதிக்கப்பட்டது உண்மை தானே…! என்று நாம் சொல்லலாம். ஆனால் அது நமக்குள் விளைந்தால் நம்மையும் அது பாதிக்கும்.
இதிலிருந்து விடுபடும் “ஞானிகள்… மகரிஷிகள் பாரம்பரியத்தையே” நாம் உருவாக்க வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற நாம் தியானிக்க வேண்டிய சரியான முறை
ஆதியிலே அகஸ்தியன் நம் பூமியின் துருவத்தை நுகர்ந்து துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் ஜீரணிக்கும் சக்தி பெற்றவன். அதன் உணர்வே அவனுக்குள் ஒளியாக மாறும் நிலை பெறுகின்றது.
குருநாதர் அகஸ்தியனைப் பற்றி எனக்கு (ஞானகுரு) படிப்படியாக என்னென்ன சொன்னாரோ… அதே வழியில் தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகின்றேன். தியானிக்கும் போது அந்தச் சக்திகளை நீங்கள் பெற ஏதுவாகும்.
1.வானுலக ஆற்றலை துருவத்தின் வழியாக நம் பூமி பெறுவதை அகஸ்தியன் இடைமறித்து அந்த உணர்வின் தன்மை நுகர்கின்றான்
2.துருவ மகரிஷி தனக்குள் நுகர்ந்து உருவாக்கிய அந்த உணர்வுகளைப் பெற வேண்டும்…
3.அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணி
4.பூமியின் துருவப் பகுதியின் வழியாக நினைவைச் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.
நம் பூமி சுழல்வது தெரியும். பிரபஞ்சத்தில் உருவாகும் சக்திகள் நம் பூமி செல்லும் பாதையில் அது அணுக்களாக இருப்பதையும்… நம் பூமி அதை எவ்வாறு ஈர்க்கிறது…? என்பதும் உங்கள் கண்களுக்குப் புலப்படும்.
இந்த உணர்வின் தன்மைகளை எல்லாம்
1.கண்கள் வழி கொண்டு… நினைவின் ஆற்றலை உயிருடன் ஒன்றி
2.அந்த அகக்கண் ஒளி கொண்டு உங்கள் உடலுக்குள் செலுத்த வேண்டும்.
புறக்கண்களால் ஒரு பொருளைப் பார்க்கின்றோம். இருந்தாலும் அருள் ஞானியின் உணர்வுகளை குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் பதியச் செய்கின்றோம். பதியச் செய்வதை நீங்கள் உங்கள் உயிருடன் ஒன்றி அகக்கண்ணுடன் இணைத்து ஏங்கிப் பெறுதல் வேண்டும்.
1.பூமி துருவப் பகுதியின் வழி கவரும் இடத்தில் நினைவைச் செலுத்தும் போது
2.அந்த எல்லையிலிருந்து அடுத்து… வானுலகப் பகுதியிலிருந்து பூமி கவரும் சத்து எப்படிப் பூமிக்குள் வருகிறது…? என்ற நிலையும் காட்சியாக வரும்.
பூமி சுழலும் பாதையில்… மற்ற நட்சத்திரங்களும் கோள்களும் உமிழ்த்தும் அந்த உணர்வலைகள் ஒவ்வொரு பகுதிக்கும் அது பரவி வருவதையும்… அது மின்னிக் கொண்டு பல கலர்களாக மாறுவதையும்… நம் பூமியின் துருவ ஈர்ப்புக்குள் அது வருவதையும் உங்களால் நுகர முடியும்.
1.நுகரும் போது புது விதமான உணர்ச்சிகள் உங்கள் உடலிலே பரவும்
2.சில நொடிகளில் நெடி கலந்த நிலைகளும் சில நொடிகளில் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளும்
3.நறுமணம் கொண்ட நிலைகளும் உங்களுக்குள் வந்து கொண்டே இருக்கும்.
உணர்வுகள் உயிருடன் ஒன்றி உள் செல்லும் போது… உடலில் உள்ள குணங்கள் ஒவ்வொன்றிலும் மோதி… உடலுக்குள் பல அதிசயங்களும்… பல பல மகிழ்ச்சி பெறும் உணர்வுகளும்… ஆனந்த ஒளியும் உடலுக்குள் வெளிச்சம் வந்து கொண்டே இருக்கும்… மாறிக் கொண்டே இருக்கும்.
சாதாரண எண்ணையில் ஒரு திரியைப் போட்டு எரிக்கும் போது அதிலே எரிச்சல் கலந்த நிலை வருகிறது. ஒரு பெட்ரமாக்ஸ் லைட்டை எரிக்கும் போது… அது எண்ணையின் சத்தினை மாற்றிவிட்டு ஆவியின் தன்மை கொண்டு ஒளியாக மாற்றுகின்றது.
அதைப் போல் இந்நேரம் வரை உபதேசித்த உணர்வுகள்…
1.அந்தத் துருவ மகரிஷி உணர்வுகளுடன் உங்கள் உணர்வுகள் படப்பட்டு
2.எண்ணையின் வாசனையை மாற்றிவிட்டு குளிர்ந்த ஒளியாகக் காணுவது போல்
3.மகிழ்ச்சி பெறும் ஒளியின் சுடராக உங்கள் உடலுக்குள் பரவும்.
ஒவ்வொரு அணுக்களிலும் இது மோதி… அந்த ஞானியின் உணர்வுகள் ஒவ்வொன்றும் உடலுக்குள் “பளீர்… பளீர்…” என்று மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாக மாற்றிக் கொண்டே வரும்.
வெல்டிங் வைக்கும் போது பளீர்…பளீர்… என்று மின் ஒளிகள் வருகின்றது. அதே சமயத்தில் அதைக் கண்களால் பார்க்கும்போது அதிலே ஒரு எரிச்சல் கலந்ததாகவும் இருக்கும்.
1.ஆனால் பெட்ரமாக்ஸ் லைட்டை எரிக்கப்படும் போது அது கண்ணுக்கு எப்படிக் குளிர்ந்ததாகப் புலப்படுகின்றதோ
2.அதைப் போன்று உங்கள் உடலுக்குள் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் கலந்து
3.மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்களாக உங்கள் உடலில் ஒளித் தன்மை பெறுவதைக் காணலாம்… உணரலாம்.
புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று எண்ணி உயிருடன் ஒன்றி… கண்ணின் நினைவைத் துருவ மகரிஷியின் பால் செலுத்தி… அவரின் ஆற்றல்கள் அனைத்தும் எங்கள் உடலில் பரவ வேண்டும் என்ற உணர்வினைச் செலுத்துங்கள்.
அப்படிச் செலுத்தும் போது…
1.ஒரு ஒளி விளக்கைக் காட்டினால் அதன் மூலம் பொருள்களைக் காண்பது போன்று
2.உங்கள் உடலுக்குள் அந்த வெளிச்சங்கள் ஊடுருவுவதையும்
3.அந்த உணர்வலைகள் மோதும் போது மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகள் உங்களிலே தோன்றுவதும்
4.ஒளி கண்டபின் இருள் மறைவது போன்று உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் இது இணையும்…
5.உட்பொருள் தெளிவாகும்…. ஆற்றல்மிக்க சக்தியாக வளரும்.
துருவ மகரிஷியின் உணர்வுகள் உங்கள் உயிருடன் மோதும் போது
1.மெர்க்குரி போன்று புருவ மத்தியில் வெளிச்சம் வரும்
2.இளம் நீலமாகப் புருவ மத்தியில் ஒளி அலைகள் வரும்.
இந்த உணர்வுகள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நினைவைச் செலுத்தும் போது உங்கள் உடலில் மகிழ்ச்சி பெறும் உணர்ச்சிகள் வரும்.
இதற்கு முன் உங்கள் உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த நோய்கள் அனைத்தும் நீங்க இது உதவும். துருவ மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் கலந்து மன பலம்… மன நலம்… பெறுவீர்கள்.
பண்டைய கால மனிதர்களின் உடல் வலுவோ மன வலுவோ இன்று இல்லை…! ஈஸ்வரபட்டர்
பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் இந்தச் சமீப நூற்றாண்டுகளில் மனிதனால் விஞ்ஞானம் கொண்டு செயற்கை யுகத்திற்கு வழி காட்டிய நாளில் உள்ள நமக்குப் பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களைக் காட்டிலும் இன்றைய இயற்கைத் தன்மையின் குண அமில வர்க்கத்திலுள்ள சக்தித் தன்மையே குறைந்து விட்டது.
இது எப்படிக் குறைந்தது…?
பால்வெளி மண்டலத்தில் சுழன்று ஓடும் நம் பூமி அதில் உள்ள காற்று மண்டலத் தன்மை சக்தி குறைந்ததென்றால் அது எப்படிச் சாத்தியப்படும்…?
சூரியனிலிருந்தும் நட்சத்திர மண்டலங்களிலிருந்தும் மற்ற கோளங்களிலிருந்தும் அனைத்து மண்டலங்களுக்கும் பொதுவான பால்வெளி மண்டலத்திலிருந்தும் சக்தித் தன்மை ஒவ்வொரு மண்டலங்களுக்கும் கூடிக் கொண்டுள்ளதா…?
பொது மண்டலம் பால்வெளி மண்டலம். நமக்கு ஒளி தரும் மண்டலம் சூரிய மண்டலம். சூரியனிலிருந்து
1.நம் பூமி எப்படி ஒளி பெறுகின்றது…?
2.நம் பூமியிலுள்ள உஷ்ண விகிதம் மற்ற சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரங்களில் உள்ளனவா…?
நம் பூமியின் சுழற்சியினால்
1.நம் பூமி சுவாசித்து வெளிக்கக்கும் அலையின் அமிலம்
2.சூரியனிலிருந்து வெளிப்படும் அமிலத்துடன் மோதும் நிலை கொண்டே
3.நம் பூமிக்கு உஷ்ண விகித நிலை செயல்படுகின்றது.
நம் பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல் ஐம்பது மைல் விகித தூர அளவில் ஒளி வட்டம் உள்ளதாக இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது. ஒளி வட்டம் உள்ளதனால் தான் நம் பூமிக்கு இந்த உஷ்ண அலை ஏற்படுகிறது.
இந்த உஷ்ண அலையான ஒளி வட்டத்திற்கு மேல் சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட வழி எல்லாம் பூமியின் உஷ்ணத் தன்மையைக் காட்டிலும் அங்கே குளிர்ந்த நிலை தான் உள்ளது.
சூரியனுக்கு அருகாமையில் 200, 300 மைல்களுக்கு இப்பாலும் நம் பூமிக்குக் காற்று மண்டலம் ஒளி வட்டம் கொண்ட உஷ்ண அலைகளின் நிலையின் தன்மைக்கு அப்பாலும் பால்வெளி மண்டலத்தின் பொதுவான குளிர்ந்த நிலை தான் சூரியனுக்கும் பூமிக்கும். அதைப் போல் ஒவ்வொரு மண்டலங்களுக்கும் இடைப்பட்ட பால்வெளி மண்டலம் உள்ளது.
ஒவ்வொரு மண்டலத்தின் அமில குணம் தொட்டு அந்த மண்டலம் ஈர்த்து வெளிப்படுத்தும் அமிலத்துடன் அமிலம் மோதும் நிலை கொண்டே உஷ்ண அலைகளும் அதன் குளிர் நிலைகளும் செயல் கொள்கிறது.
இப்படி இயற்கையில் வளர்ந்து ஓடும் நம் பூமியின் நிலையுடன் கூடிய காற்று மண்டலத்தில்
1.காற்று மண்டலத்திற்கு மேல் உள்ள ஒளி வட்டத்தின் ஈர்ப்பினால்
2.காற்று மண்டலத்தில் சேமித்துள்ள இயற்கைக் குணத்தை நம்மால் மாற்றப்படுவதனால் அதனின் நிலைகள் மாறிவிட்டன.
மாறினாலும் இந்தக் காற்றில் தானே எல்லாம் கலந்திருக்கிறது என்பீர்கள். இயற்கையாக மாறும் நிலையைச் “செயற்கையுடன் பிரித்துவிடுவதனால்..” அதன் சக்தியின் வலு குறைந்துவிடுகின்றது.
மலைகளிலும் மடுக்களிலும் இருந்து உற்பத்தியாகி வரும் நீரின் சுவைக்கும்
1.ஆறுகளில் நாம் சேமித்து வைத்து அதிலுள்ள மின்சாரத்தைப் பிரித்து எடுத்த பிறகு
2.அந்த நீரின் அமில குணத்தில் சில சக்திகள் குறைந்ததனால் சுவை குறைந்து விட்டது.
அதே சமயத்தில் அந்நீரினால் வளரும் பயிர்களுக்கு
1.நாம் எந்நிலையான அமிலத்தை அந்த நீரிலிருந்து பிரித்து எடுத்தோமோ
2.அதன் நிலைக்குகந்த உரங்களை இட்டால் தான் அந்தப் பயிர்கள் வளரும்.
இப்படி இயற்கையையே நாம் பல நிலைகளுக்காக மாற்றி அமைக்கும் பொழுது இந்த மண்டலத்தின் காற்று அலைகளில் உள்ள சக்தி நிலைகள் குறைந்து விட்டன. மனிதனின் எண்ண சுவாசமும் இதன் தொடர் அலையினால் மாற்றம் கொண்டு விட்டது.
இந்த நிலையிலிருந்தெல்லாம் நாம் நம் தியான நிலையை ஒருநிலைப்படுத்தி… ஞானத்தின் வழித் தொடர் பெற… நம்மையே அந்த ஞானமாக்கும் சக்தி செயலில் நம்முடைய ஜெப நிலை இருத்தல் வேண்டும்.
மின் அலையின் தொடரில் ஒளியைக் காண்கின்றோம். அதே மின் அலையினால் ஒலியைக் (வானொலி) கேட்கின்றோம். இவையும் இந்நீரிலிருந்தும் காற்றிலிருந்தும் தான் மனித விஞ்ஞானத்தினால் கண்டறியப் பெற்றோம்.
நம் சுவாசத்தில் எடுக்கும் காற்றலையின் உரு நினைவலையான எண்ணத்தை அந்த ஆண்டவன் மேல் பாய்ச்சி நாம் செயல்படுவோமேயானால்
1.நம் எண்ண நினைவலை எச்சித்தர்களின் நினைவில் பாய்ச்சப்படுகின்றதோ
2.அவர்கள் பெற்ற ஒளி அலைகளின் சக்திகள் நம் எண்ணமுடன் கலந்து
3.சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் செயல்பட்டு நம் ஞானம் வளர்ந்து
4.அதன் தொடரினால் பல சக்தி நிலைகளை இந்த உடல் என்னும் கூட்டிலேயே நாம் கூட்டிக் கொள்ள முடியும்.
அதன் வழி கொண்டு நம்மால் பல உண்மைகளை இந்த உலகம் உணரச் செய்து இன்றுள்ள இந்த உலகின் ஆன்மாக்கள் வாழும் பயம் கொண்ட செயற்கையிலிருந்து மீள வைக்க முடியும்.
இன்றைய கால நிலையில் அங்கங்கு இயற்கை மாற்றங்களும்… விபத்துக்களும்.. போர்களும்… இவற்றால் ஏற்படும் உயிர்ப் பலியின் பீதியிலிருந்தும்… மனிதனால் செய்யப்பட்ட அணுகுண்டு அணுக் கதிர்வீச்சின் பயத்திலிருந்தும்…
1.மனித ஆன்மாக்களை மீட்டு அவர்களின் எண்ணத்தை மேலோங்கச் செய்தால்
2.நடக்கவிருக்கும் உலக மாற்றத்திலிருந்து மனித ஆன்மாக்களை மீளச் செய்யலாம்.
ஒன்று பலவாகி.. பல நூறாகி… நூறு பலவாகிச் செயல்படும் சக்தி அலையாக நாம் செயல்பட வேண்டிய ஞான அலையின் சக்தியை ஈர்க்கும் செயலை முறைப்படுத்திச் செயல்படுத்துங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
கையில் காசு இருந்தால் அடுத்தவர்களுக்குத் தாரளமாகக் கொடுத்து உதவி செய்கின்றோம்.
1.ஆனாலும் அவர்கள் சொல்லும் வேதனைகளை எல்லாம் நாம் நுகர்கின்றோம்.
2.இதைத் துடைக்கத் தெரியவில்லை… துடைக்க முற்படுவதும் இல்லை.
நான் எல்லாம் செய்தேன்… ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்…! என்ற நிலை தான் கடைசியில் வருகின்றது.
ஆலயங்களுக்குச் செல்லப்படும் பொழுது இல்லாதவருக்குத் தர்மம் இட்டால் அதைக் கண்டு தெய்வம் நம்மை மெச்சும்…! என்று எல்லாம் மதங்களுமே கூறுகின்றது.
ஆனால் அந்தத் தர்மத்தைச் செய்யும் பொழுது என்ன செய்கின்றோம்..?
1.அவன் பாவத்தின் எல்லையிலே இருக்கின்றான்..
2.பல தொல்லைகளுக்கு ஆளாகிய பின் அவனுக்கு இந்த உதவி கிடைத்தது… ஆ…ஹா…! என்று ஆசையில் நம்மைப் பார்க்கின்றான்.
அப்படி வெளிப்படும் அவனுடைய உணர்வுகளை நாம் பார்த்த பின் அவன் ஏங்கிப் பெறும் அந்த உணர்வை நாமும் பெறுகின்றோம்.
நாம் நல்லது தான் செய்தோம். ஆனாலும் அவனுடைய நிலைகள் இங்கேயும் வந்து விடுகின்றது. வந்த பின் “ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்” என்ற இந்த நிலைகளைத் தான் நாமும் சொல்வோம்.
ஆனால் நம்மை ஆளும் ஆண்டவன் யார்…? நம் உயிர் தான்.
பெரும் ஈகையுடனும் பண்புடனும் அந்த உணர்வுகளை எடுத்தோம். அவர்கள் கஷ்டப்பட்ட உணர்வுகள் எல்லாம் நமக்குள் வந்து விடுகின்றது.
ஒரு பலகாரத்தைச் சுடுகின்றோம். அதை மூடி வைக்கவில்லை என்றால் என்ன ஆகும்…? மண் தூசி இவை எல்லாம் விழுகுமா இல்லையா…?
1.நான் நன்றாகத் தானே பலகாரம் சுட்டேன்…!
2.சாப்பிடும் பொழுது நறு..மொறு நறு..மொறு…! என்று இருக்கின்றது என்று சொன்னால்
3.”மூடி வைக்கவில்லை…” என்றால் இந்த நிலை வரத் தானே செய்யும்…!
இதைப் போன்று தான் நமக்குள் பாதுகாப்பான நிலைகள் இல்லை என்றால் நம் ஆன்மா அசுத்தமாகி விடுகின்றது. அப்பொழுது மற்ற தீமை செய்யும் உணர்வுகள் உள் சென்று நமக்குள் கடும் விளைவுகளை உண்டாக்கும்.
ஆகவே நம் ஆன்மாவை அடிக்கடி தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றால் “நாம் என்ன செய்யவேண்டும்…?” என்று சற்று சிந்திக்க வேண்டும்.
தீமை நமக்குள் எப்போதும் உருவாகாதபடி “பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…” என்ற நிலைக்கு நாம் வளர வேண்டும்
உதாரணமாக காரமான ஒரு பொருளைத் தனித்து உணவாக உட்கொள்ளும் போது அந்தக் காரத்தின் உணர்ச்சியே முன்னணியில் நிற்கும்.
ஆனால் அந்தக் காரத்தை அடக்க “சப்…” என்று இருக்கும் காரம் இல்லாத பொருள்களை அதனுடன் இணைத்து உட்கொண்டால் அந்தக் காரத்தின் தன்மை குறைந்து சுவைமிக்க நிலைகளாக உருவாகின்றது
இதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் வெறுப்போ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ கோபமோ இத்தகைய உணர்வுகளை நாம் நுகர்ந்தறியப்படும் போது
1.உயிர் இருக்கும் ஈஸ்வரலோகத்தில் அது உருவாக்கப்படும் போது
2.அந்த உணர்ச்சிகள் தான் முன்னணியில் இயக்கும்.
3.மற்ற நல்ல குணங்களின் வலு குறைகிறது.
காரணம் மற்றவர்களுடைய குறைகளையும் துன்பங்களையும் கேட்டறிந்து நுகர்ந்து தான் உதவி செய்கிறோம். நுகரும் போது தான் உயிரும் அதை இயக்குகிறது.
இருந்தாலும் அதைக் கேட்டறிந்த நிமிடத்திலேயே…
1.அவர்கள் கஷ்டங்களைச் சொல்வதற்கு முன் “ஈஸ்வரா…!” என்று நம் உயிரான ஈசனிடமே கேட்டு
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி
3.அந்த உணர்வை அப்பொழுதே உயிரிலே இணைக்கும் ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.
குழம்பு வைக்கும் போது பல சரக்குகளைச் சேர்த்து அதைச் சுவைமிக்கதாக மாற்றுவது போல் நாம் கேட்டு… நுகர்ந்த மற்றவரின் உணர்வுக்குள் அந்த அருள் ஞானிகளின் உணர்வைக் கூட்டிவிட்டால் அதைத் தணித்து அருள் உணர்வின் அணுக்களாக மாற்ற முடியும்.
நல்ல குணங்கள் கொண்டு நாம் வாழ்ந்தாலும்… சந்தர்ப்பத்தில் ஒருவர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனை நமக்குள் அதிகரிக்கப்படும் போது நல்ல குணத்தின் தன்மைகள் குறைந்து விடுகிறது.
1.அப்பொழுது அந்த நல்ல குணத்தின் தன்மையை அதிகமாக்க…
2.அதை வலிமை பெறச் செய்ய வேண்டும் என்றால்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரும் போது உயிரான ஈஸ்வரலோகத்தில் அதனின் உணர்வின் கருக்களாக மாறுகிறது. வேதனையை வலுவிழக்கச் செய்கிறது.
“பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…” என்ற நிலையில் நம்முடைய ஆறாவது அறிவின் துணை கொண்டு
1.அருள் மகரிஷிகளின் அருள் உணர்வைக் கவர்ந்து அந்த உணர்வை நுகர்தல் வேண்டும்…
2.இரத்தத்தில் கலக்கச் செய்தல் வேண்டும்…
3.உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்குள்ளும் அதை இணைத்தல் வேண்டும்.
இப்படி… தீமையான உணர்வுகளைக் குறைத்து தீமைகளை அகற்றிட்ட வலிமையான மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கும் போது உயிரான ஈஸ்வரலோகத்தில் அந்தக் கருத்தன்மை உருவாக்கப்பட்டு… நம் உடலில் உள்ள இரத்தங்களில் கலக்கப்பட்டு… அது இந்திரலோகத்தில் தீமைகளை மாற்றிடும் வலிமை பெற்ற பிரம்மலோகமாக அதை மாற்றுகின்றது.
அத்தகைய நிலைகளை நாம் உருவாக்கி அந்த உணர்வின் தன்மை வலுப் பெறப்படும் போது வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி விடுகிறது.
உடலை விட்டு எப்பொழுது சென்றாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்திற்கு உயிர் நம்மை அழைத்துச் செல்கிறது…!
1.உடல் பெறும் விஷத் தன்மைகளை அங்கே கரைத்து விடுகின்றது.
2.ஒளியின் சரீரமாக… நம்மை ஒளியாக மாற்றுகின்றது.
ஒவ்வொரு மனிதனும் தெய்வ குணத்தைப் பெற்று ஆண்டவனாக வேண்டும் – ஈஸ்வரபட்டர்
ஒரு நாள் தோன்றி மறு நாள் மடிகின்றது காளான். அதே போல் ஒவ்வொரு தாவர வர்க்கத்திற்கும் அது அது ஜீவிக்கும் கால நிலைகள் உண்டு. ஆலமரம் பல நூறு ஆண்டுகள் உள்ளது. வைரம் பாய்ந்த ஆயிரம் காலத்து மரங்களும் பல உள்ளன.
ஆனால் ஆயிரம் ஆண்டுகள் வாழும் மரம் உருவான ஆரம்பக் கால நிலையே காளானின் வழித் தொடர்ச்சி தான். இயற்கையின் தாவர இன முன்னோடி “காளான் தான்…!”
அவ்உயிரணு அவ்வமில வண்ணமுடன் இடியும் மின்னலும் தோன்றும் காலத்தில் ஒன்றுடன் ஒன்று இன வர்க்கங்கள் மோதும் நிலையில் அதற்கு மேல் இந்த மழை நீர் படும் பொழுது வெடிக்கும் தன்மை உருவாகிறது.
அப்படி வெடிக்கும் தருணத்தில்
1.இரண்டு வகை அமில குணத்தின் வெடிப்பில் தோன்றும் அமிலமானது இந்தப் பூமியில் மோதுண்டவுடன்
2.அதன் மேல் படும் ஒளி அலையின் ஈர்ப்பினால் உயிரணு தோன்றி தாவரம் வளர்ந்து
3.ஒவ்வொரு நிலை கொண்ட தாவர இன வர்க்கங்கள் மாறி மாறித் தோன்றுகிறது.
முதலில் காளான் தோன்றி அதன் ஆயுள் முடிந்தவுடன் அந்தக் காளானது அழுகிய நிலையில் பூமியில் படர பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலையின் வெக்கை அதன் மேல் பட்டு அதிலிருந்து வெளிப்படும் அமில குணத்தைக் கொண்டு மீண்டும் பூமியில் படர்கின்றது.
அதிலிருந்து வெளிப்படும் உயிரணுவின் இன வளர்ச்சி சிறிது மாற்றம் கொண்டு மீண்டும் அதிலிருந்து சில வளர்ச்சி நிலைகள் மாறுகிறது.
மாற்றம் ஏற்பட்டு இப்படியே பல இயற்கை வளங்கள் தோன்றி ஒன்றுடன் ஒன்று அமிலத் தன்மைகள் மாறி மாறி உருவாகிப் பல வழிகள்… பலவித உயிரணுக்களும் கனி வளங்களும் வளர்ந்து கொண்டே மாறி மாறி வாழ்ந்து கொண்டே சுழன்று ஓடிக் கொண்டே உள்ளன.
ஓடும் ஓட்டத்தில் வெளிப்படும் அமில குணத்தில் பல உயிரணுக்கள் அந்த மோதலில் வெளிப்படுகின்றன. “ஒன்றில்லாமல் ஒன்றில்லை…” என்பதன் பொருளும் இதுவே..!
1.எந்த அணுவும் உதிக்க வேண்டும் என்றால் “இந்த மோதல் தான்…” காரணம். (இது முக்கியம்)
2.அமில குணங்கள் மோதுண்டு அதன் மேல் படும் மழை நீரின் ஜீவனால் வெடிப்பு நிலைப்பட்டு உருவாகின்றது உயிரணு.
3.அதன் தொடர்ச்சி நிலை சேர்க்கை தான் ஜீவனின் சேர்க்கையினால் இந்த ஜீவ அணு தோன்றுகிறது.
ஆண் பெண் சேர்க்கையினால் இந்த இரண்டு குண நிலை கொண்ட அமிலத்துடன் ஜீவன் கொண்ட மற்றோர் எண்ண அமிலமான உயிராத்மா தனக்குகந்த அமில குணம் கொண்ட தாயின் தந்தையின் பிறப்பில் கருவுக்கு வருகின்றது.
பல வகையான அமில குணங்களின் சேர்க்கை கொண்டது… இவ்வுலகின் ஈர்ப்பு அமில குணம் ஒன்று தான். இவ் ஈர்ப்பு நிலைக்கொப்ப பல நிலைகளை நம் பூமி வளர்த்துக் கொள்கிறது. பூமி வெளிக்கக்கும் உஷ்ண அலையின் ஈர்ப்பில் பல குண நிலைகள் மாறு கொள்கின்றன.
பல வகையான அமில குணம் கொண்ட இந்தக் காற்றைத்தான் நாம் சுவாசிக்கின்றோம் என்றாலும்… “நம் எண்ண நிலைக்கொப்ப சுவாச அமிலம் தான்…” நம் சுவாச ஈர்ப்புக்கு வரும்.
1.வெங்காயச் செடி அதன் கார அமிலச் சுவாசத்தை ஈர்க்கின்றது.
2.மிளகாய்ச் செடி நெடி கலந்த கார அமிலத்தை ஈர்க்கின்றது.
3.கருணை சேனை இவற்றின் குண அமிலம் அரிக்கும் தன்மை உடைய அமில குணத்தை ஈர்த்து அவை வளர்கின்றன.
ஒவ்வொன்றிற்கும் அதனதன் நிலைக்கொப்ப ஒரே தன்மையுடைய அமிலத்தைத்தான் ஈர்த்துப் பழக்கப்பட்டு வளரும் தன்மையுடையது தாவர வர்க்கங்கள்.
ஆனால் பலவற்றையும் புசிக்கும் மனித ஆத்மா தான் உண்ணும் உணவின் உணர்வைத் தவிர “எண்ணும் எண்ணத்தின் அமில குணத்தையும்” அறியவல்ல ஆற்றல் கொண்டவன்.
உடம்பின் மேல் மிளகாயின் காரம் பட்டவுடன் “எரிகிறது..!” என்று அறிகின்றோம். வெங்காயத்தின் காரத்தினால் “கண்ணில் நீர் வடிகிறது…!” சேனை கருணை போன்ற கிழங்குகளில் அமில நீர் பட்டவுடன் அவ்விடம் “பிய்ப்பு எடுக்கின்றது…”
இந்நிலையான அமில குணத்தை நம் உடலும் உணர்வும் ஈர்க்கா விட்டால் அதன் தன்மையின் பாதிப்பை நாம் அறிவோமா…?
மிளகாயின் குணம் நெடி கலந்த குணம்… வெங்காயத்தின் குணம் அதற்குகந்த கார குணத்தினால் அதன் தன்மையை உணரப்படுகின்றோம்.
எல்லாமே இந்தக் காற்றின் ஈர்ப்பில் தன் ஈர்ப்புக்கொப்ப வளர்கிறது. இந்நிலைகளைப் போன்று தான் நம் மனித ஆத்மாவின் எண்ண நிலைக்கொப்ப “அமில குணங்களைச் சேமிக்கிறது…” என்பதை அறியவில்லை.
நம் எண்ண நிலைக்குகந்த ஈர்ப்பில் நாம் எடுக்கும் சுவாசத்தைக் கொண்ட நிலையுடனே எந்த எண்ணத்தில் எல்லாம் நாம் இருந்து கொண்டுள்ளோமோ… அதன் நிலைக்கொப்ப அமில குணங்கள் நம்முள் சேமிதம் கொண்டே வாழ்கின்றோம் நாம் எடுக்கும் சுவாசத்தினால்…!
“குண அமிலம்” என்பதன் நிலை புரிந்ததா…?
இந்தக் குண அமிலத்தின் நிலையை உணர்த்துவதன் உண்மை நிலை என்ன..?
ஒவ்வொரு மண்டலத்திற்கும் நட்சத்திர மண்டலத்திற்கும் பால்வெளி மண்டலங்களுக்கும் அதனதன் தன்மைக்குகந்த குண அமிலம் உண்டு. அதன் வளர்ச்சி வட்டத்திலே தான் இயற்கையின் அமில குணங்கள் செயல் கொண்டு வாழ்கின்றன.
1.இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட குண அமிலத்தைப் பெறவல்ல ஆற்றல்
2.அதாவது தனக்குகந்ததைப் பெறும் சக்தி மனித ஆன்மாவுக்கு உண்டு.
இயற்கை வளங்கள் ஒரு வகையான அமில குணத்தை ஈர்க்க வல்லது. ஆனால் மனித ஆத்மாவோ… எண்ண நிலைக்குகந்த அமில குணத்தை எல்லாம் ஈர்த்து ஈர்த்து வாழ்கின்றான்.
எண்ண நிலை கொண்ட மனிதனால் தனக்குகந்த அமில குணத்தை ஈர்க்கும் பக்குவம் பெற்றால்
1.இந்தக் குணங்களிலேயே சிறந்த குணமான
2.“ஆண்டவன்…” என்னும் நிலை கொண்ட குணத்தைப் பெற முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள். அவர்களுடைய செயலைப் பார்த்தவுடனே நமக்கும் கோபம் வருகிறது.
அப்படிக் கோபம் வரும் பொழுதெல்லாம்…
1.ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெறவேண்டும் என்று
2.புருவ மத்தியில் நிறுத்திடல் வேண்டும்.
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.
பின் சண்டை போடுபவர்கள் அவர்கள் அறியாது செயல்படும் நிலையிலிருந்து விடுபட்டுப் பொருள் கண்டுணர்ந்து செயல்பட்டுச் “சகோதர உணர்வுடன் ஒன்றுபட்டு வாழும் அந்த உணர்வுகள்” அவர்கள் பெற வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.
இப்படி எண்ணினோம் என்றால்…
1.அவர்கள் சண்டையிட்ட உணர்வுகள் நமக்குள் அணுவாக உருவாகாது.
2.நம்முடைய உணர்வுகள் இதை மாற்றி நம்முடைய நல் எண்ணத்தின் தன்மையிலேயே கருவாக்குகின்றது.
3.அவர்களைப் போன்ற குரோத உணர்வுகளோ சண்டையிடும் உணர்வுகளோ நமக்குள் வராது.
ஆனால் ஆத்ம சுத்தி செய்யாது… அவர்கள் சண்டையிடும் உணர்வுகளை நுகர்ந்து அணுவாகி விட்டால் திடீரென்று அந்த உணர்ச்சிகள் நமக்குள் உந்தி நம்மை அறியாமலே கோபப்படச் செய்யும். “யாராக இருந்தாலும்… அவர்களிடம் சண்டைக்குப் போகச் சொல்லும்…!”
ஒருவன் தவறு செய்கிறான்… தவறு செய்கிறான்… என்று சொல்லிக் கொண்டே இருந்தால் அந்த (அவன்) உணர்வுகள் என்ன செய்யும்…? அந்தத் தவறு செய்த உணர்வுகள் எல்லாம் நம் உடலிலே விளைந்து நாமும் தவறு செய்பவராகப் போய்விடுவோம்.
ஒருவன் நம்மிடம் கோபிக்கின்றான்… கோபிக்கின்றான்… என்று சொல்லிக் கொண்டேயிருந்தால் அதே உணர்வுகள் நாமும் கோபிக்கும் தன்மை வந்துவிடும்.
அந்த அணுக்கள் பெருகப் பெருக அதற்கு அந்தச் சாப்பாடு தேவை. தன் உணர்ச்சிகளை உந்தி அதனுடைய உணவை எடுத்துக் கொண்டு தான் இருக்கும்.
நமக்குள் இப்படிப் பகைமை உணர்வுகளைச் சேர்க்கச்… சேர்க்க…
1.எப்படி நாம் வெளியிலே சண்டை போடுகிறோமோ இதைப் போல்
2.நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கும்
2.நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த (மேலே சொன்ன) கோபம் குரோதம் வேதனை போன்ற அணுக்க்ளுக்கும் போர் நடக்கும்.
இங்கே உடலுக்குள் பளீர்…ர்ர்ர்…! என்று மின்னும்.
கை காலில் மின்னும். இடுப்பிலே வலிக்கும். எந்தெந்த உறுப்புகளில் இந்த உணர்வுகள் போர் முறைக்கு வருகின்றதோ அங்கெல்லாம் பளீர்…ர்ர்… பளீர்…ர்ர்…! என்று மின்னும்.
ஆகவே நம் உடலில் வேதனையும் வலியும் எல்லாமே தோன்றும்…! அதை மாற்ற
1.ஓ…ம் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்துடன் தொடர் கொள்ளுங்கள்.
2.புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தை ஒரு நிமிடம் நிலை நிறுத்தி ஏங்குங்கள்.
பின் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று உள்ளே செலுத்துங்கள்.
உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தப் பேரருள் உணர்வை உணவாகக் கொடுத்து… தீமை செய்யும் அணுக்களை அடக்கி…
1.இணைந்து வாழும்…
2.இணைந்து வாழச் செய்யும் சக்தியாக… மாற்றிக் கொள்ளுங்கள்.
3.மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும் அணுக்களாக உருப்பெறச் செய்யுங்கள்.
இரத்தம் போகும் பாதையில் உள்ள அடைப்புகளை நீக்கும் தியானப் பயிற்சி
இருதய வலி (நெஞ்சு வலி) போன்ற உபாதைகள் வந்தால் இடுப்பிலே நான்கு விரலையும் பிடித்து சிறிது பின்னுக்கே சாய்ந்து சிறிது நேரம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற நினைவின் ஆற்றலைச் விண்ணிலிருந்து இழுத்துச் சுவாசியுங்கள். (ஆபரேஷன் செய்தவர்கள் செய்யக் கூடாது…)
1.மெதுவாக மூச்சை அடக்கி மறுபடியும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற அந்த மூச்சை எடுங்கள்.
2.இரண்டு நொடி உடலுக்குள் நிறுத்துங்கள். மறுபடியும் மெதுவாக விடுங்கள்.
காரணம் நம் சுவாச நாளங்களில் இரத்தங்கள் போகும் பாதையில் அடைப்புகள் இருக்கும்.
1.நாம் சுவாசிக்கும் நிலைகளில் புகையிலையோ அல்லது
2.பீடி சிகரெட் பிடிப்பவர்கள் புகை விடுவதை நுகர்ந்திருந்தாலோ
3.நாம் பிடிக்கவில்லை என்றாலும் அந்த மாதிரிப் பிடிக்கிறார்கள் என்று எண்ணினால் போதும்.
4.அது நம் சுவாசத்தின் வழியாகச் சுவாசப் பைக்குள் சென்று இரத்தங்கள் போகும் பாதைகளில் உறைந்து விடுகின்றது.
உறைந்து விட்டால் இருதத்திலிருந்து இரத்தம் ஒரு பகுதி வழியாகப் போகவில்லை என்றால் அடுத்த பகுதி வழியாகப் போகும்.
நுரையீரலுக்கோ மற்றதுக்கோ இரத்தம் பாயும் நிலைகளைத் தடைப்படுத்தும். இந்தப் பாதையும் அடைபட்டு விட்டால் இதே போல் அடுத்த பக்கமும் அடைபடும்.
மூன்று பாதைகளில் ஏதாவது ஒன்று வழியாகப் போனால் தான்.
இல்லை என்றால் அந்தப் பாதைகள் அடைபட்டு விட்டால் இருதயம் சீராக இயங்காதபடி இருதய அடைப்பு (ஹார்ட் அட்டாக்) வந்துவிடும். நெஞ்சு வலி அதிகமாகி மனிதனை மடியச் செய்துவிடும்.
இதைப் போன்ற நிலைகளை நாம் மாற்றி அமைக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இடுப்பிலே கையை வைத்து அந்தச் சுவாசத்தை மேலே சொன்னபடி அந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்த வேண்டும். அந்த அடைப்புகளை நீக்கிவிடும்.
ஒன்றும் செய்ய முடியவில்லை… மிகவும் தொல்லை கொடுக்கிறது என்றால் தியான வழியில் இருப்பவர்கள் ஒரு ஐந்தாறு பேர் சேர்ந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கூட்டமைப்பாக எண்ணுங்கள். அவருக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பாய்ச்சுங்கள்.
இங்கே கொடுத்த விபூதியையோ அல்லது தண்ணீரையோ தியானத்திற்கு முன்னாடி வைத்து அதற்குப் பின் அந்தத் தீர்த்தத்தை அவரை அருந்தச் செய்யுங்கள்.
1.அவர் உடலில் உள்ள இருதய வலி நீங்கி… இருதயம் சீராக இயங்கி உடல் நலம் பெறவேண்டும் என்று இந்த எண்ணத்தில் நீங்கள் கொடுங்கள்.
2.அவர் குடிக்கும் போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலில் படர வேண்டும் என்று உங்கள் பார்வையைச் செலுத்துங்கள்.
இதைப் போன்ற நிலைகள் எல்லாம் நீங்கள் சீர்படுத்த வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்று அவர்களுக்குள் இதைப் பாய்ச்சப்படும் போது இது நல்லதாகும்.
இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.
மகரிஷிகளுடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டும் – ஈஸ்வரபட்டர்
இந்தக் கலி முடிந்து அடுத்து வர இருக்கும் “கல்கி” மாற்றத்தின் சுழற்சியில் மீண்டும் மனிதர்கள் ஜீவனுக்கு வந்தாலும்
1.இந்த உலக மாற்றத்தின் பொழுது நம் உடலிலுள்ள ஆத்மா பிரியும் நிலை கொண்டு
2.அடுத்த பிறப்பிற்கு வரும் தொடரும் அதன் சுழற்சியிலே தான் செயல் கொள்ள முடிந்திடும்.
பிறப்பிற்கு வரும் நிலையில் முதல் கால கட்டத்தில் (கல்கி) வரும் தருவாயிலேயே “அறிவாற்றல் கொண்ட” எண்ணத்தின் நிலைக்கொப்பத் தாயின் கருவிற்கு வர முடியாது.
எல்லாமே மாறிய பிறகு புதிய உயிரணுக்கள் தோன்றும் தருவாயில் அந்த உயிரணுக்கள் ஜீவனின் வளர்ச்சி நிலை பல காலங்கள் தாவர இன வர்க்க வளர்ச்சியிலும் மற்ற கனி வளங்களின் வளர்ச்சி நிலையிலும் செயல் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அவை வளர்ந்து.. மடிந்து… அதிலிருந்து தோன்றும் உயிர்ப் பிராணி நிலை பெற்று மீண்டும் அதன் இன வர்க்க நிலை மாறி பல வளர்ச்சி நிலைகள் தானாக உயிர் பெறும் உயிரணுவிலிருந்து மாறிப் பல அமில குணத்தை ஈர்த்த உயிரணுக்களாக வேண்டும்.
அப்படி ஆன பிறகு உயிராத்மாவாகி அந்த உயிராத்மாக்களின் சேர்க்கைக் குணமுடன் மற்ற உயிரணுவின் பிறப்பு நிலை தோன்றிய பிறகுதான் ஜீவன் பெறும் நிலை கொள்கின்றது.
உயிரணுவிற்கும் உயிராத்மாவிற்கும் வேறுபாடு புரிகின்றதா…?
இந்தப் பூமியிலிருந்து வெளிப்படும் வெப்ப அலையின் அமில குணத்தின் ஈர்ப்பில் படர்ந்து இயற்கை வளங்களாக வளர்பவை எல்லாம் உயிரணுக்கள் கொண்ட நிலை.
உயிராத்மா என்பது… பிறப்பிற்கு வரும் இரண்டு ஜீவ உடல்களின் எண்ணக் கலவையின் சேர்க்கையில்… தன் நிலையை ஜீவிதம் கொள்ளும் ஆசையுடன் கர்ப்ப நிலைக்கு ஜீவன் கொள்வதெல்லாம் ஜீவ ஆத்மா பெறும் நிலை.
இப்படி இம் மாறும் கலியினால் நம் உயிரணு உருவிற்கு வரப் பல்லாயிரம் ஆண்டுகள் செல்லும் (இது முக்கியம்).
இந்த உலகச் சுழற்சியில்…
1.நம் எண்ணத்தை இவ்வுலகப் பிடியில் அடகு வைத்து விட்டால்
2.அதை மீட்பதற்கு பல ஆயிரம் காலங்கள் செல்லும்.
இவ்வெண்ண நிலையிலேயே பிரியும் ஆத்மாக்கள் தான் சேமித்த குண நிலையுடனே சுழன்று சுழன்று… மீண்டும் அறிவு நிலை கொண்ட ஞானம் பெறக்கூடிய உடல் பெறுவதற்குப் பல காலங்கள் சுழல வேண்டியதிலிருந்து மீட்டிட வேண்டும் என்பதற்குத் தான் இந்த உண்மைகளைப் புகட்டுகின்றேன்.
பரம்பொருளின் ஞானமான அச்சக்தி நிலை கொண்ட ஜோதி ஆத்மாக்களான அந்த மாமகரிஷிகளிடம் நம் எண்ணத்தைச் செலுத்தி அவர்கள் காட்டிய வழியில் நம் வாழ்க்கையை அமைத்திடல் வேண்டும்.
அந்தச் சப்தரிஷிகளின் எண்ண வட்டத்திற்குள் நாம் எடுக்கும் சுவாச அலைகள் பாயும் பொழுது அவர்கள் பெற்ற ஆற்றலை நாமும் பெற முடியும்.
மேன்மேலும் அந்தச் சக்தியை நாம் கூட்டிக் கொண்டால் இவ்வுலக மாற்றத்தின் பொழுது அவர்களின் நிலையுடன் நாம் ஐக்கியப்பட்டு அவர்களைப் போன்று நாமும் சப்தரிஷியாகலாம்.
1.இந்தப் பூமி மட்டுமல்ல… எந்தப் பூமியையும் நமதாக ஏற்று
2.அந்த ஒளி வட்டத்திற்குள் நம் ஒளி பிரகாசிக்கத்தான்
3.யாமறிந்த (ஈஸ்வரபட்டர்) உண்மைகளைப் பலரும் அறிந்து கொள்ளவும்
4.அப்பரம்பொருளின் ஞான சக்தியை வழிப்பெறும் வழி ஆற்றலைப் புகட்டுகின்றோம்.
இவ்வுயிரணு தோன்றி மாறி மாறி எடுக்கும் அமில குணத்தின் வளர்ச்சியினால் ஏற்படுவது தான் சிறு எறும்பு முதல் கொண்டு சூரியன் சந்திரன் அதற்கும் அப்பாற்பட்ட எல்லாமே…!
எந்த உயிரணுவும் மடிவதில்லை. எப்பரம்பொருளிடமும் ஒன்றி நிற்பதுவும் இல்லை.
உயிரணுவாக உலகாய் உருவம் கொண்டே வளர்ந்து கொண்டே கலந்துள்ளது தான் அப்பரம்பொருளான ஆதிசக்தியின் ஒளி சக்தி.
1.ஒன்றுடன் ஒன்று மாறி மாறி உருப்பெற்றே சுழன்றே ஓடும் சிக்கலில்
2.உயர் ஞானம் கொண்ட சப்தரிஷிகளின் ஞானம் பெறுவது தான் உயர் ஞானம்.
அந்த ஞான நிலை பெறும் வழித் தொடர் தான் இந்த மனித உடல் கொண்ட ஆத்ம ஞானம். மனித உடல் கொண்ட ஞானத்திலிருந்து தான் உயர் ஞானம் பெற முடியும்.
இந்த மனித உடல் கொண்ட அறிவு நிலை பெற பல உருமாற்றம் கொண்ட உருவ நிலையெல்லாம் பெற்றுப் பெற்றுத் தான் இந்த மனித உடலையே பெற்றிருக்கின்றோம்.
செயற்கையின் பிடியில்… கலியான இக்காலத்தில்… சோம்பேறி நிலை கொண்ட வாழ்க்கைக்கு அடிமைப்பட்டு மீளத் தெரியாமல் சிக்குண்டு வாழும் நாம்… இந்த மனித ஞானத்தைப் போற்றி நல் வழி பெறும் ஞானத்தைப் பெற்றிடுவோம்.
கண்ணாடியில் உள்ள தூசியைப் போக்கிட அழுக்குத் துணியால் தட்டினால் மீண்டும் இதன் அழுக்குத்தான் அதிகமாகப் படரும். சுத்தமான துணியை கொண்டு துடைத்தால் தான் அந்தக் கண்ணாடியில் உள்ள அழுக்கு நீங்கும்… ஏனென்றால்
1.அழுக்கை அழுக்கு கொண்டு அகற்ற முடியாது.
2.நம் அக அழுக்கைப் பக்தி என்ற பகவான் ஞானத்தைக் கொண்டு போக்கித் தான் நம் அழகை நாம் காண வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
இந்த உடலை வளர்க்கத் தான் எல்லா உயிரினங்களும் முயற்சிக்கின்றது. ஏனென்றால் எது உருவானதோ அதற்கு அந்த உணவு தேவை. அது கொடுக்கவில்லை என்றால் அது சோர்வடையும்.
இப்படித்தான் வழக்கத்தில் இருந்து கொண்டே உள்ளது.
இருப்பினும்…
1.பரிணாம வளர்ச்சியில் தீமைகளை நீக்கி நீக்கி வளர்ச்சி அடைந்து வந்த நாம்
2.மீண்டும் வேதனை வெறுப்பு சலிப்பு சஞ்சலம் சங்கடம் இனம் புரியாத நிலைகளைச் சேர்த்துக் கொள்கின்றோம்.
நாம் படிப்படியாக வளர்ச்சிக்கு வந்து மனிதனாக வந்தோமோ அதே போல் தேய்பிறையாகும் பொழுது படிப்படியாக எடுத்துக் கொண்ட நிலைக்கொப்ப
1.நம் ரூபங்களை மாற்றிக் கொண்டேயிருக்கும் நம் உயிர்.
2.அது ஒன்று மட்டும் மாறுவதில்லை.
ஆக இந்த உடலில் உள்ள உணர்வுகள் மாறுகின்றது. இந்த உணர்வுக்கொப்ப அடுத்த சரீரம் அமைகின்றது.
வேதனையை நீக்கும் சக்தி பெற்ற மனித உடலாக வேதனையை நீக்கும் எல்லா ஞானமும் இருக்கின்றது. அவ்வப்பொழுது அந்த நொடியிலேயே தீமைகளையும் துயரங்களையும் நீக்கிக் கொண்டால் நமக்கு அந்த நோய் வராது.
அத்தகைய நோய் வந்தாலும் கூட… நாம் அதை மறக்க இந்த முறைப்படி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெறவேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று
4.இப்படி நாம் ஆத்ம சுத்தி செய்து மாற்றிக் கொண்டு வர முடியும்.
ஏனென்றால் அந்த வேதனையை மறக்க இதை நாம் எடுத்தால் அது மறைகின்றது. துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் சிறுகச் சிறுகப் பெருகுகின்றது.
விஷத்தின் தன்மையை நீக்கி… அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமாக ஆனது. மனிதனில் மிக உயர்ந்த நிலைகள் பெற்றது தான் அந்தத் துருவ நட்சத்திரம்.
ஒரு சமயம் சூரியனே அழியலாம். ஆனால் இந்தத் துருவ நட்சத்திரமும் அதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலங்களும் என்றும் அழிவதில்லை. வருவதை எல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்கும்.
இந்த மனித உடலில் உயிரைப் போலவே இருளை நீக்கி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிச் சென்றவன் அகஸ்தியன்.
நாம் எப்படிப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்தோமோ… அதே போல்
1.பரிணாம வளர்ச்சியில் வளர்ந்த அந்த அகஸ்தியனின் உணர்வை நாம் எடுத்தோம் என்றால்
2.அவன் ஒளியாக மாற்றிச் சென்ற பாதையில் வளர்ந்து செல்ல முடியும்.
வெறுப்பையும் கோபத்தையும் சங்கடத்தையும் சலிப்பையும் குரோதத்தையும் வளர்த்துக் கொண்டே வந்தால் நாம் மீண்டும் தேய்பிறையாகி இதை எல்லாம் நோயாகி தேடி வைத்த செல்வத்தையும் பாதுகாக்க முடியாதபடி செல்கின்றோம்.
1.ஆனால் செல்வமும் கூட இருக்கும்
2.இருந்தாலும் நன்றாகச் சாப்பிடக்கூட முடியவில்லையே என்ற இந்த வேதனை வந்துவிடுகின்றது.
3.ஆக நம் உடலில் முடியாது போய்விடுகின்றது.
இதை எல்லாம் கொஞ்சம் யோசனை செய்து… தியானம் ஏன் செய்ய வேண்டும்…? என்பதை நன்றாகப் புரிந்து கொண்டு செயல்படுங்கள்.
யாம் சொல்லும் இந்தத் தியானத்தின் மூலம் அடிக்கடி வரும் சலிப்பையோ சங்கடத்தையோ வெறுப்பையோ வேதனையையோ நமக்குள் நிலைத்திருக்காது அதைத் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இதற்கு முன்னாடி நமக்குள் மற்ற உணர்வுகள் விளைந்திருந்தாலும் அதனுடைய வலிமையும் அதிகம் தான்.
இருந்தாலும்… இப்பொழுது ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் மூலம்
1.உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும் நேரடியாகவே
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது
3.முந்தைய அணுக்களும் நல்ல அணுக்களாக மாற்றமடையும்.
அகஸ்தியன் குழந்தைப் பருவத்தில் பெற்ற ஆற்றல்கள்
ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று சொல்லும் போதெல்லாம் கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வர வேண்டும்.
1.ஈஸ்வரா… என்று சொல்லும் போதெல்லாம் உயிரை எண்ணி
2.நாம் எதைப் பெற வேண்டும் என்று ஏங்குகின்றோமோ…
3.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு அதை ஏங்கிப் பெற வேண்டும்…
4.அப்படி ஏங்கினால் நல்ல முறையில் அது பதிவாகும்.
அகஸ்தியர் பிறந்த பின்… குழந்தைப் பருவத்தில் மல்லாந்து படுத்திருக்கும் போது விண்ணை நோக்கிப் பார்த்து எந்தெந்த உணர்வுகளை நுகர்ந்தாரோ… “அதை எல்லாம் பெற வேண்டும்…” என்று நீங்கள் ஏங்கித் தியானியுங்கள்.
அவர் கருவிலே இருக்கும் போது… தாய் தந்தையர்கள் எதை எதை எல்லாம் எண்ணிப் பெற்றனரோ அது அனைத்தும் அவருக்குள் வளர்ச்சி பெறுகிறது.
அவருடைய தாய் தந்தையர்கள் விஷமான அணுக்கள் தங்களை அணுகாதபடி பாதுகாத்துக் கொள்ள அவர்கள் உடலில் பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் அரைத்துப் பூசிக் கொண்டனர்.
1.அவர்கள் உடலிலிருந்து அந்த மணம் வெளிப்படும் போது
2.நுகர்ந்து தன் உணவுக்காகத் தேடி வரும் மற்ற உயிரினங்களோ கொசுவோ விஷ ஜெந்துக்களோ
3.அவை அனைத்தும் அவர்களை அணுகாது இருந்தது.
அவர்கள் சூரியனைக் கண் கூசாது உற்றுப் பார்க்கின்றனர். சூரியன் தன் முகப்பில் சுழற்சியின் வேகத்தால் மோதும் நிலைகள் கொண்டு விஷங்களைப் பிரித்து உயர்ந்த சக்திகளைத் தனக்குள் வளர்த்துக் கொண்டு ஒளிக் கதிர்களாக வீசுகிறது.
பிரிக்கப்பட்ட அந்த விஷத் தன்மைகளை சூரியனின் வெப்ப காந்தங்கள் கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் உடலிலே விஷ முலாம்களைப் பூசியதால் அதைக் காண்கிறார்கள்.
1.அவர்கள் கண் வழி பெறும் இந்த உணர்வுகள் உடல்களில் பதிவானாலும்
2.கருவில் வளரும் அகஸ்தியனுக்குத் தாய் ரூபத்தில் அது பதிவாகிறது.
இவ்வாறு வளர்ச்சி பெற்ற அந்தச் சிசுவோ பிறந்த பின் தாய் கண்ட உணர்வுகள் அனைத்தையும் மல்லாந்து படுத்திருக்கப்படும் போது அந்தச் சூரியனின் இயக்கங்களைப் பார்க்கின்றது.
நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படுவதை மற்ற கோள்கள் கவர்ந்து அலைகளாக அனுப்பப்படும் போது சூரியன் அதை எல்லாம் தனக்குள் கவர்ந்து முகப்பில் அந்த விஷத்தைப் பிரித்துவிட்டுத் தனக்குள் ஒளிக்கதிராக மாற்றி அமைக்கிறது.
1.பிறந்த குழந்தையும் அதைப் பார்க்கின்றது… ஆனால் சொல்ல முடியவில்லை.
2.தனக்குள் கவர்ந்து கொண்ட இந்த உணர்வுகளைச் சிரித்துக் கொண்டே பார்க்கின்றான் பல நிலைகளில்…!
அதே சமயத்தில் பிறந்த குழந்தை தனியாக இருந்தாலும் கொசுக்களோ விஷ வண்டுகளோ இவன் அருகில் வருவதில்லை.
1.இவன் உடலில் இருந்து வரக்கூடிய மணத்தை நுகரப்படும் போது அந்த வண்டுகளும் பூச்சிகளும் மயங்கி விழுகிறது.
2.விஷ ஜெந்துக்களோ மற்ற மிருகங்களோ அப்பால் விலகிச் சென்று விடுகிறது.
3.மயக்கத்திற்கு அஞ்சி எல்லாமே விலகி ஓடுகிறது.
குழந்தை உடலிலிருந்து நிகழ்த்தக் கூடிய இந்த நிலைகளை அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் பார்த்தபின் அவனைக் கடவுளின் பிள்ளை… கடவுளின் அவதாரம்…! என்றே எண்ணுகின்றனர்.
அந்த அகஸ்தியன் கண்ட உணர்வுடன் ஒன்றியே தான் உங்களை அங்கே அழைத்துச் செல்கிறேன் (ஞானகுரு). இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகும்.
1.இந்த நினைவுடன் மீண்டும் தியானிக்கும் போது அவர் கண்டதை…
2.நம் பூமியில் பதிந்துள்ள அந்த அகஸ்தியனின் உணர்வுகளை நுகர்ந்து அதைப் பார்க்க முடியும்
3.அகஸ்தியனின் அருள் ஆற்றல்களை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள இது உதவும்.
ஞான மார்க்கத்திற்கு வழி காட்டும் நிலையோ ஏற்கும் நிலையோ இன்று இல்லாது போய்விட்டது…! – ஈஸ்வரபட்டர் சொன்னது
இப்பொழுது மெய் ஞானத்தின் தத்துவத்தை யான் (ஈஸ்வரபட்டர்) தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன்.
மாமரத்தில் மரம் முழுவதற்கும் எல்லாக் கிளைகளிலும் கனிகள் ஒன்றைப் போல் கிடைக்கப்படும் நிலையில் மனித ஆத்மாக்கள் ஒத்து வாழ்ந்த நிலை தான் முந்தைய காலங்களில் இருந்தது.
அது மாறி அரசன் என்ற ஒருவரின் கீழ் ஆதிக்கம் பெற்று குடிமக்களாக வழி வந்த வாழையின் நிலையில் ஒரு மரம் ஈனும் குலையில் பல பழங்கள் உள்ள நிலை போன்று வழி வந்தது.
அதுவும் மாறி இப்பொழுதைய நிலையோ பலா மரத்தை ஒத்த ஜாதியின் மரம் ஒன்று தான் அந்த மரத்தில் காய்க்கும் பலாப்பழத்தில் ஒவ்வொரு பழத்திற்குள்ளும் பல சுளைகள் அடக்கம் பெற்றுள்ள நிலை போல் ஜாதி என்ற ஐக்கியப் பிணைப்புடைய நிலையாக இருக்கின்றது.
அப்படி இருக்கும் இன்றைய காலகட்டத்தில் “மெய் ஞான விழிப்பு…” என்ற நிலையில் பேருண்மைகளைக் கூறினாலும் சுழன்று கொண்டேயுள்ள ரங்கராட்டினத்தை உடனே நிறுத்தும் பொழுது அது அப்படியே நிற்காது. ஓர் அசைவு பட்டுப் பின்னோக்கி முன் வந்து தான் அதை நிறுத்துவது போல் தான்
1.சுழன்று கொண்டுள்ள இந்தப் பிணைப்பான வழி முறை மாற்றத்திலிருந்து
2.நம் மனித ஆத்மாக்களை அவர்களின் எண்ணத் தொடரையே சிறுகச் சிறுக வழிப்படுத்தித்தான்
3.உண்மையின் ஸ்வரூபத்தை உணர்த்திக் காட்ட முடியும்.
ஆதிசங்கரரின் காலத்திற்குப் பிறகு… மனித ஆன்மாக்களை ஞான மார்க்கத்திற்கு வழிப்படுத்தும் யோக மார்க்கங்களும் பக்தி மார்க்கங்களும் மனிதனைத் தன் இச்சையில் வழிப்படுத்தும் நிலையிலேயே விட்டுவிட்டனர்.
பல மகான்கள் இந்த உலகிற்கு நல்வழி புகட்டப் பல வழிகளைச் செயல்படுத்தி வந்தாலும் ஈர்த்து எடுக்கும் பக்குவ குணமுள்ள மனித ஆன்மாக்களைச் செயலாக்குவது கடினப்பட்டுவிட்டது.
அதனால் தான் அந்த மகான்கள் தான் உணர்ந்த வழிகளை மட்டும் அனுபவக் கதையாக்கி கடைசியில் ஆண்டவன் என்றால் யார்…? என்று ஒரு ஞானத்தைப் புகட்டிவிட்டு இந்நிலை பெற மனித ஆன்மாக்கள் எந்த நிலை பெற வேண்டும் என்பதனை உணர்த்தாமல் சென்றுவிட்டனர்.
இவ்வளவு காலங்களுக்குப் பிறகு உம்மால் (ஈஸ்வரபட்டர்) உணர்த்தப்படும் நிலை என்ன…? என்ற வினா எழும்பலாம்.
1.இந்த நிலையை இப்பொழுது இங்கே உணர்த்துவது என்பது என் ஒருவனின் செயல் மட்டுமல்ல..!
2.இந்தப் பூமியில் அவதரித்து ஆண்டவனான சப்தரிஷிகள் பலரின் ஆவலை
3.இந்தப் பூமியின் ஆத்மாக்கள் உண்மை உணர்ந்து உயர போதனைகள் இங்கே அளிக்கப்படுகின்றன.
இதற்கும் வினா எழும்பலாம்… இப்பொழுது மட்டும் அது எப்படி என்று…?
1.எந்தச் சக்தி பரப்பப்பட்டதோ..
2.அந்த நிலையில் ஏற்றுக் கொண்ட நிலைப்பட்டவரினால்…
3.பலருக்கும் நிலைப்படுத்த இச்செயல் நடந்து வருகின்றது.
ஒவ்வொரு ஆத்மாவும் “தன்னுள் உள்ள ஜீவத் துடிப்பே தான் ஆண்டவன்…!” என்பதை உணர்ந்திடல் வேண்டும்.
அந்த ஜீவனுக்கு ஜீவன் தந்த காற்றும்.. ஒளியும்.. நீரும்… கொண்ட ஜீவ ஆண்டவன்களை ஜோதி கொண்டு வணங்கியே வழித் தொடர் பெறும் நடை முறைச் செயல்களை உணர்த்திடுவோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் ஞான வாக்குகள்
குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்…? எத்தனை வேலைகளைச் செய்திருப்பார்…! அவருக்குள் விளைந்த உணர்வின் உணர்ச்சிகளைக் கவரும் ஞான வித்தாக எனக்குள் (ஞானகுரு) பதிவு செய்தார்.
அவர் வழியில் அதைச் செய்யப்படும் பொழுது அனுபவபூர்வமாகத்தான் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன். அதைத் தான் இப்பொழுது உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
துருவ நட்சத்திரத்தின் பேரளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள் என்றால் அது உங்களுக்குள் சென்று தீமையின் உணர்வுகளை அது கருக்கிவிடும்.
இதை உணர்த்துவதற்குத்தான் மாரியம்மன் கோவில்… காளியம்மன் கோவில்… அங்களேஸ்வரி கோவில்.. துஷ்ட தேவதைகள் ஆலயங்களில் எல்லாம் “அக்னி குண்டம்…” இறங்குவதற்கு வைத்திருப்பார்கள்.
கொடூரமான நிலைகளில் நாம்…
1.பயந்தோ
2.வெறுப்படைந்தோ
3.கோபப்பட்டுக் கொதித்தெழுந்தோ
4.அஞ்சி வேதனைப்பட்டோ நாம் சுவாசித்த உணர்வுகள் எல்லாம் நம் உடலுக்குள் அந்தச் சக்தியாக வளரப்படும் பொழுது
5.நம் நல்ல குணங்களை அது கொன்று கொண்டேயிருக்கும்.
அதனால் தான் காளிக்கு முன்னாடி புலியும் அங்களேஸ்வரி கோவிலில் ஒரு குழந்தையை மடியில் வைத்து தன் குழந்தையையே பிளந்து மாலையாகப் போட்டுக் கொண்டிருப்பதாகவும் காட்டியிருப்பார்கள்.
நல்ல குழந்தைகளைக் கருவுறும் இந்தத் தன்மையை அதாவது நல்ல அணுக்களாக உடலுக்குள் விளைவதைப் பிளந்து விடுவதை அப்படிக் காட்டுகின்றார்கள்.
சிலர்… மற்றவர்கள் நன்றாக இருப்பதைப் பார்த்து அங்கலாய்வார்கள்…! அவன் அப்படி வந்திருக்கின்றான்… இவன் இப்படி வந்திருக்கின்றான்.. என்ற இதைப் போன்ற உணர்வுகளை நுகரப்படும் பொழுது அது அங்களேஸ்வரி…!
அந்த அங்கலாய்ப்பு தான் வருகின்றதே தவிர…
1.நமக்குள் அந்த உயர்ந்த சக்திகளை
2.அவர்கள் வளர்ந்த முறையில் நாமும் வளர வேண்டும் என்ற இந்த எண்ணமே இங்கே வருவதில்லை.
அப்பொழுது நமக்குள் வளரும் அந்தச் சக்தியை நாமே பிளந்து அதனின் வளர்ச்சியைக் குன்றச் செய்து நாம் மாலையாகப் போடுவது போன்று ஆகின்றது. மாலை என்றால் நாம் வெளியிலே தான் போடுகின்றோம்.
1.இந்தத் தீமையை உருவாக்கும் உணர்வுகளைத்தான் நம்மால் வளர்க்க முடிகின்றதே தவிர
2.அந்த நல்லதைப் பெற முடியவில்லை.
3.அந்தத் தீமைகளை அகற்ற என்ன வேண்டும்…?
ஒரு தீமையைக் காண நேர்ந்தால்… உதாரணமாக ஒருவர் வேதனைப்படுகின்றார் பார்க்கின்றோம் அது மாறி அந்த வேதனையின் அணுக்கள் நம் உடலில் விளைகின்றது. ஏனென்றால் வேதனைப்படுவோரைக் கேட்டுணர்ந்த பின் தான் உதவி செய்கின்றோம்.
அந்த உணர்வை நாம் நுகர்ந்தால் அதே அணு நமக்குள் உருவாகின்றது. அந்த வேதனை அணுக்கள் உருவாகி விட்டால் அதே தன் தாயாக அந்த வேதனயை உருவாக்கும் அணுக்களைப் பெருக்குகின்றது.
அதைக் குறைக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்குத்தான் விநாயகர் அருகில் அரச மரத்தை வைத்திருக்கின்றார்கள். பிரபஞ்சத்தில் ஏற்படும் நச்சுத் தன்மைகளை ஒடுக்கிய உணர்வை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக (அரசாக – அரச மரம்) இருக்கும் அதனின்று வரும் சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.
துருவ தியானத்தின் மூலம் உங்களுக்குக் கொடுக்கும் அந்தச் சக்தியின் துணை கொண்டு எப்பொழுது தீமைகளைப் பார்க்கின்றீர்களோ ஈஸ்வரா என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி உயிருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்றும் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் கண்களைத் திறந்து ஏங்கி நினைவை மறுபடியும் உங்கள் உயிருடன் ஒன்றுங்கள்.
அந்த அருள் சக்திகள் அனைத்தும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்களில் படர வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்துங்கள்.
அகஸ்தியன் நுகர்ந்த பல கோடித் தாவர இனங்களின் சக்திகளை நுகரப் பழகிக் கொள்ளுங்கள் (அகஸ்தியரின் அருள் மணங்கள்)
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்திய மாமகரிஷியை நினைவு கொள்ளுங்கள். அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.
அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற சக்திகளையும் அவன் பிறந்த பின் அவன் பெற்ற சக்திகளையும் பெற வேண்டும் என்று உங்கள் புருவ மத்தியில் எண்ணித் தியானியுங்கள்.
1.அகஸ்தியன் விண்ணின் ஆற்றலைத் தனக்குள் நுகர்ந்து
2.அந்த உணர்வின் அறிவாகத் தனக்குள் உருபெற்றதை
3.விண்ணிலிருந்து வந்த உணர்வலைகளைத் தனக்குள் வளர்ச்சி பெறச் செய்த அந்த முதல் நிலைகளை எண்ணி
4.அதைப் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
அகஸ்தியர் தாயின் கருவிலே பெற்ற சக்தி கொண்டு குழந்தைப் பருவத்தில் முதன் முதலில் விண்ணை நோக்கிப் பார்க்கும் போது சூரியனின் இயக்கத்தைப் பார்க்கின்றார்… கோள்களையும் நட்சத்திரங்களையும் பார்க்கின்றார்… அதை எல்லாம் தனக்குள் உணர்கின்றார்.
அன்று அந்த அகஸ்தியன் பார்த்த இந்தப் பிரபஞ்சத்தின் அதிசயங்களை நாமும் காண வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.
அகஸ்தியன் அந்தக் குழந்தைப் பருவத்தில் விண்ணின் ஆற்றலைக் கண்டு மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாக வெளிப்படுத்துகின்றான். அதை நீங்கள் நுகரும் போது
1.உங்கள் உடலிலே உள்ள அணுக்கள் அனைத்தும் ஒரு புத்துயிர் பெற்றது போன்று ஆகிறது
2.மகிழ்ச்சியான உணர்வுகள் உங்கள் உடல் முழுவதும் பரவும்
3.அதே சமயத்தில் அந்த அகஸ்தியனின் அருளாற்றல்கள் உங்கள் உடலில் ஊடுருவி
4.உங்கள் நெற்றியில் ஒளியின் சுடராகத் தெரிய வரும்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அகஸ்தியன் உணர்வுகளைத் தனக்குள் விளையச் செய்து அந்த உனர்வின் அலையை எமக்குள் (ஞானகுரு) பாய்ச்சினார்.
அகஸ்தியன் பார்த்த விண்ணுலக ஆற்றலை எல்லாம் நம் குருநாதர் நுகர்ந்து இன்றும் அவர் ஒளியின் நிலையாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்ற