நம்மை அகஸ்தியராக மாற்றச் செய்யும் தியானம்

நம்மை அகஸ்தியராக மாற்றச் செய்யும் தியானம்

 

1. அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் தாய் தந்தையர் பெற அருள்வாய் ஈஸ்வரா
2. ஞானகுருவின் அருளால் விண்ணிலிருக்கும் அகஸ்தியனின் ஸ்டேசன் (அலைவரிசை) எங்களுக்குள் ஆழமாகப் பதிவாக வேண்டும் ஈஸ்வரா
3. தியானத்தில் எங்கள் நினைவின் ஆற்றல் “அகஸ்தியன் சென்ற பாதையிலேயே செல்ல” வேண்டும் ஈஸ்வரா
4. பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்… அகஸ்தியர் தாய் கருவிலே பெற்ற பல அற்புத சக்திகளையும் பச்சிலைகள் மணங்களையும் மூலிகைகளின் வாசனைகளையும் அருள் தாவர இனச் சத்துகளையும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
5. தாய் கருவிலிருக்கும் போது நஞ்சையே ஜீரணித்து அடக்கிடும் ஞான சக்தியாக விளைந்த அந்த அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
6. அகஸ்தியன் பிறந்த பின் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் போது விண்ணை நோக்கிப் பார்த்து எந்தெந்த உணர்வுகளை நுகர்ந்தாரோ… அதை எல்லாம் பெற வேண்டும் ஈஸ்வரா
7. அகஸ்தியன் பிஞ்சு உள்ளத்தில் பெற்ற பிரபஞ்சத்தின் ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
8. அகஸ்தியன் நுகர்ந்த பல கோடித் தாவர இனங்களின் சக்திகளை… அந்த அகஸ்தியரின் அருள் மணங்களை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
9. அகஸ்தியன் துருவனாகும் போது பெற்ற நஞ்சினை வென்ற அருள் ஞான சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
10. அகஸ்தியன் ஆதியிலே வெளிப்படுத்திய “உண்மையான சக்திகளை” நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
11. அகஸ்தியன் அவன் வாழ்ந்த காலத்தில் நஞ்சினை வென்று வெளிவிட்ட மூச்சலைகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
12. அகஸ்தியன் தான் கண்டுணர்ந்தவைகளை தன் இன மக்கள் பெற வேண்டும் என்ற இச்சையில் வெளிப்படுத்திய உணர்வலைகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
13. அகஸ்தியன் தான் கண்ட பேருண்மைகளைத் தன் இன மக்கள் அனைவரும் பெறுவதற்காகக் கூறிப் பதிய வைத்த குறிப்புகளை இந்த உலலில் வாழும் மக்கள் அனைவரும் பெற வேண்டும் ஈஸ்வரா
14. அகஸ்தியர் உணர்வுகள் அனைத்தும் எங்களுக்குள் பதிவாகி கருவாகி அணுவாகிட அருள்வாய் ஈஸ்வரா
15. அகஸ்தியன் பாதம் பட்ட இடங்களில் பதிந்துள்ள விண்ணின் ஆற்றல்களை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
16. வானஇயல் புவியியல் உயிரியல் மூன்றையும் அறிந்த அகஸ்தியரின் ஆற்றல் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
17. தன்னை அறிந்த… விண்ணை அறிந்த அகஸ்தியரின் ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
18. தன் எண்ணத்தை எங்கும் செலுத்தி எதனையும் அறிந்திடும் ஆற்றலை வளர்த்துக் கொண்ட அகஸ்திய மாமகரிஷியின் ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
19. அகஸ்தியன் நேரடியாகப் பார்த்துணர்ந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தை நாங்கள் காண வேண்டும் ஈஸ்வரா
20. எல்லாவற்றையும் வென்றிடும்… அடக்கிடும்… இயக்கிடும்… ஆற்றல் கொண்ட நட்சத்திரங்களின் ஒளிக் கற்றைகளை நுகர்ந்த அகஸ்தியரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
21. ஒளிக்கதிரில் நுண்ணிய அலைகளைப் பார்க்கும் ஆற்றலைப் பெற்ற அகஸ்தியரின் நுண்ணிய ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
22. மின்னலைப் போன்று எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்லும் அகஸ்தியருடைய நினைவாற்றல் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
23. அகண்ட அண்டத்தையும் தன் எண்ணத்தால் எட்டிப் பிடிக்கும் ஆற்றல் கொண்ட அகஸ்தியரின் அருளாற்றல் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
24. 27 நட்சத்திரங்களின் சக்தியை எடுத்து ஒளியாக மாற்றிய அகஸ்தியரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
25. விண்ணின் ஆற்றலைப் பஸ்பமாக்கிய அகஸ்தியரின் அருள் சக்தி நாங்கள் பெற்று என்றுமே அழியாத வேகா நிலை பெற அருள்வாய் ஈஸ்வரா
26. சர்வ ரோகங்களையும் சர்வ பிணிகளையும் சர்வ தோஷங்களையும் போக்கக் கூடிய அகஸ்தியரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
27. நஞ்சினை வென்றிடும் அகஸ்தியரின் அருள் உணர்வுகள் எங்கள் இரத்தங்களில் கலந்து அணுக்கருக்களாக உருவாகி நாங்கள் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
28. அகஸ்தியரும் அவர் மனைவியும் ஒன்றி வாழ்ந்த வாழ்க்கை நாங்கள் வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
29. பேரண்டத்தின் அகண்ட நிலைகளில் பேரானந்தப் பெரு நிலை கொண்டு வாழும் அகஸ்தியனைப் போன்று நாங்கள் வாழ வேண்டும் ஈஸ்வரா
30. நாங்கள் அனைவரும் அகஸ்தியரின் ஈர்ப்பு வட்டத்திலே என்றுமே இணைந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
31. பூமியைச் சமப்படுத்திய அகஸ்தியன் உணர்வுகளை நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா
32. உலகெங்கிலும் இருளை அகற்றிடும் உணர்வுகளாக விளைந்த அகஸ்தியரின் பேரருள் பேரொளி நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா
33. உலகைக் காக்கும் சக்தியாக… அகஸ்தியனுடைய வாக்கு எங்கள் அனைவருக்குள்ளும் பிரதிபலிக்க வேண்டும் ஈஸ்வரா
34. “அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக உருவான மரபணுவை” இந்த உலக மக்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா
35. நட்சத்திரங்களின் ஒளிக்கற்றைகளைச் சேர்த்து சேர்த்து உயிரைப் போன்று ஒளியாக மாற்றிய எத்தகைய நஞ்சையும் ஒளியாக மாற்றிடும் அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
36. அகஸ்தியர் உணர்வைக் கவர்ந்தவர்கள் அனைவரும் மகரிஷிகளாக ஆனது போன்று நாங்களும் மகரிஷிகளாக ஆக வேண்டும் ஈஸ்வரா.

உறுதி மொழி
1. நாங்கள் ஒவ்வொருவரும் அகஸ்தியரின் வளர்ப்பின் வளர்ப்பாகி… அகஸ்தியராக மாறுவோம்
2. இந்த பூமியில் உள்ள விஷத் தன்மைகளை அகற்றும் அருள் ஞானிகளாக நாங்கள் வளர்வோம்
3. அகஸ்தியரின் உணர்வைக் கொண்டு இந்த உலகில் இனி நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவோம்
4. உலகில் தற்பொழுது பரவி வரும் நஞ்சினை அகற்றிட அகஸ்தியனின் உணர்வைப் பரவச் செய்வோம்.

Leave a Reply