கெட்டதை அழுத்தமாகச் சொல்லாதபடி… “நல்லது பெற வேண்டும்” என்பதற்கே அந்த அழுத்தத்தைக் கூட்ட வேண்டும்

கெட்டதை அழுத்தமாகச் சொல்லாதபடி… “நல்லது பெற வேண்டும்” என்பதற்கே அந்த அழுத்தத்தைக் கூட்ட வேண்டும்

 

மனிதனின் வாழ்க்கையில் தீமைகளைப் பிளந்து தீமைகளை பிளந்திடும் உணர்வுகளைத் தனக்குள் எடுத்து நம் உணர்வின் அறிவால் தெளிந்திட்ட அந்த ஞானிகளின் உணர்வைச் சேர்க்க வேண்டும்.

அப்படிச் சேர்க்கப்படும்போது தீமையான உடலைப் பிளந்துவிட்டு தீமையைப் பிளந்திடும் உணர்வின் சக்தியாக ஒளியின் சரீரம் பெற முடியும்.
1.பரிணாம வளர்ச்சியில் நாம் வளர்ந்து வந்த முறை இது.
2.அதன் வழியில் நாம் எளிதில் விண் செல்ல முடியும்

அந்தச் சக்திகளைப் பெறுவதற்கு நமது குருநாதர் காட்டிய வழியில் ஞானிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கிறோம்.

1.எல்லோருக்கும் கிடைக்கும்படியாக ஒருக்கிணைந்து சக்தி பெறும் தகுதியையும் ஏற்படுத்துகின்றோம்.
2.இந்த முறைப்படி எல்லோரும் செய்யுங்கள்.
3.எல்லோரையும் காக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வாருங்கள்.

எந்தத் தீமையைக் கண்டாலும்…
1.”தீமை…” என்ற வார்த்தையைச் சொல்லாது (இது முக்கியம்)
2.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

தீமையிலிருந்து மீளவேண்டும் என்றாலும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் எதிர்காலம் சிறந்து இருக்க வேண்டும் என்று சொன்னால் போதும்…!

காரணம்… மற்றவர்கள் செய்யும் தீமைகளைத் தீமை தீமை என்று அதை நாம் பதிவு செய்து கொண்டால் அதன் பின் அந்த தீமையின் உணர்வே நமக்குள் விளைந்து இது முன்னாடி வந்து விடும்… நல்ல குணங்களுக்குள் இது கலந்துவிடும்.

1.ஆகையினால் இதை (தீமைகளை) மறந்து அருள் சக்திகளை எடுத்து
2.அதனின் உணர்வுகளைப் பாய்ச்சக் கற்றுக் கொள்ள வேண்டும்.
3.சிறிது நாளைக்கு இப்படிப் பழகிக் கொண்டால் அது தீமைகளை அகற்றும்… நமக்கு மிகவும் நல்லதாகும்.

குருநாதர் காட்டிய வழியில் நான் (ஞானகுரு) காடு மேடு எல்லாம் அலைந்து அதிலே கண்டறிந்ததைத் துணுக்குத் துணுக்காக உங்களுக்குள் சொல்லிக் கொண்டே வருகின்றேன். உயர்ந்த சக்திகளை நீங்கள் பெறுவதற்கு இணைத்து இணைத்துக் கொடுக்கின்றேன்.

நீங்கள் அதைப் பெறக்கூடிய தகுதி பெற்று எதிர்காலத்தில் எல்லோரையும் காக்கக்கூடிய உணர்வாக உங்களுக்குள் வளர்க்க வேண்டும்.

எங்கே… யாருடைய… கஷ்டங்களைப் பார்த்தாலும் உடனே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் “தியானிக்க வேண்டும்…” மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற்று கஷ்டங்கள் நீங்கி அவர்கள் நலமும் வளமும் பெற வேண்டும் என்று “தவமிருக்க வேண்டும்…”

நாம் பார்க்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று “நன்றாக இருக்க வேண்டும்… நன்றாக இருக்க வேண்டும்…!” என்ற இந்தத் தவத்தை எடுத்தால் நமக்கு நல்லதாகின்றது… அவர்களும் நலம் அடைகிறார்கள். இந்த முறையை நாம் கடைப்பிடிப்போம்.

இப்படி… இந்த வாழ்க்கையில் வரும் எதையுமே நாம் சரியாக்க வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.
1.கெட்டுப் போய்விட்டது… கெட்டுப் போய்விட்டது என்று சொல்லாதடி
2.நல்லதாக வேண்டும் நல்லதாக வேண்டும்…! என்றே எண்ணி எடுக்க வேண்டும்.

வியாபாரம் குறைவாக இருந்தாலும் எப்படியும் இதைச் சீர்படுத்த வேண்டும் என்ற உணர்விலே நாட்டத்தைச் செலுத்தினால் அதற்குண்டான வழி கிடைக்கும்… வியாபாரம் சீராகும்.

ஒருவருக்கு நோய் வந்து விட்டால் மகரிஷிகள் அருள் சக்தியால் சீக்கிரம் அவர் நலம் பெற வேண்டும்… குணமாக வேண்டும் என்று தான் எண்ண வேண்டும். நோயைப் பற்றி எண்ணி… அதனின் வலுவைக் கூட்டக் கூடாது.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை எல்லாம் ஒவ்வொரு நாளும் நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.

Leave a Reply