இதைப் படிப்பவர்கள் மகரிஷிகளுடனும் ஞானிகளுடனும் தொடர்பு கொள்ளுங்கள் – ஈஸ்வரபட்டர்

இதைப் படிப்பவர்கள் மகரிஷிகளுடனும் ஞானிகளுடனும் தொடர்பு கொள்ளுங்கள் – ஈஸ்வரபட்டர்

 

1.உன் ஜெப நிலையில் இப்பொழுது பல நிலைகளைக் கலக்கச் செய்துள்ளாய்.
2.உன் வாழ்க்கையில் நடப்பது தான் உன் நினைவில் வருகிறது.
3.அந்த நினைவுகளைத் தியானத்தில் அமரும் பொழுது மறக்க விடுவதில் என்னப்பா பலன்…?

தியான நிலையிலும் அந்த நிலையே தான் சுற்றுகிறது. இதற்கும் ஒரு வழி வேண்டும். இனி தியானத்தில் அமரும் பொழுது
1.வாழ்க்கையில் வரும் எல்லாச் சம்பவங்களையும்…!
2.உன் உடலில் உள்ள ஆத்மலிங்கத்திடம் (ஈசனிடம்) சமர்ப்பித்துவிடு…
3.ஆத்ம லிங்கத்தை உன் ஜெபத்தில் காண்பாய்.

பல சித்தர்களையும் ஞானிகளையும் ரிஷிகள் நிலையையும் செப்பிவிட்டேன். இன்றும் உள்ளார்கள்… அன்றும் இருந்தார்கள்.

பல வாக்குவாதங்களைப் பேசிய மனிதர்கள்… அந்த மனிதர்களின் அவச் சொல்லுக்குப் பயந்துதான் தீட்சண்ய வார்த்தைகளுக்குப் பயந்து தான் “விண்டார் கண்டதில்லை… கண்டார் விண்டதில்லை..!” என்று அந்த நிலையில் விட்டுவிட்டார்கள்.

இந்த உலகில் உள்ள சக்தியின் சொரூப நிலையைக் கண்டவர்கள் உண்மை நிலையைச் செப்பினால் எற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லையப்பா…! விதண்டவாதம் பேசிய நாடப்பா இது..!

தவயோகிகள் முனிவர்கள் பல நாள் தவமிருந்து பெற்ற பலனையே இன்றைய மனிதர்கள் உணர்ந்திடவில்லை.
1.தன்னுள்ளே அமிழ்த்திக் கொண்டு
2.ஜடப் பொருள் உருவில் தான் தியானித்துக் கொண்டுள்ளார்கள் (மந்திரங்களைச் சொல்லி)
3.இதனால் என்னப்பா பயன் இந்த மானிடருக்கு…?

போகரின் நிலையிலிருந்து முருகனின் வழியில் உணர்த்துகின்றார். முருகனின் வழியில் குணாதிசயங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

ஆறுமுகா என்ற ரூபத்தில் அந்த நிலையில் அண்டி வருபவர்களுக்கு எல்லாம் ஆறுதலை அளிக்கின்றார். பிறந்த பிறப்பின் பயனை… பிறவி எடுத்த நாள் முதல் கொண்டே இந்தப் பூவுலகுக்கு அருள் மழையாகப் பொழிகின்றார். இந்தப் பூவுலகம் உள்ள வரை பூ மழையாகப் பூரித்தே பொழிவார்.

கொங்கணவரின் வழியில் எடுத்துக் கொண்டால் மனித உடலுக்குச் செல்வச் செழிப்பை அவர் நிலையிலிருந்து அளிக்கின்றார். செல்வத்தின் நாயகனப்பா அந்தக் கொங்கணவர்.

அவரின் நிலை… அவர் தியான முறை எல்லாமே… இந்த மனிதர்களுக்குப் பொருள் இருந்தால் பொங்கிச் சிரிப்பர் என்ற நிலைக்குத் தன் தியான நிலையையே அச்சக்தியின் சொரூபத்திலிருந்து தன் வழிக்குப் பல அருள்களை அருளியுள்ளார்.

நமக்குத் தெரியவில்லை என்றாலும் எண்ணிலடங்கா மகரிஷிகள் இன்றும் பூமியின் தொடர்பு கொண்டு மக்களை ஞானத்தின் பாதையில் வழி நடத்தச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
1.வாழும் காலத்தை வீணடிக்காது அவர்கள் அருள் சக்திகளைப் பெற்று
2.அவர்கள் துணையுடன் இந்தப் பிறவிக் கடலை நீந்தி விண்ணுலகம் செல்ல வேண்டும்.

இதுவே நம் பிறப்பின் இலட்சியமாக இருத்தல் வேண்டும்.

Leave a Reply