உணவு உடலுக்குத் தேவை என்றாலும் அதனால் விளையும் குண நலன்களின் மாற்றங்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

உணவு உடலுக்குத் தேவை என்றாலும் அதனால் விளையும் குண நலன்களின் மாற்றங்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நாம் எடுத்த வினைக்கு நாயகன் இந்தச் சரீரம் என்றால் முழுமையின் பொருள் விளங்கிடுமா…? உருவத்தில் மனித உடலையும் யானையின் தலையையும் சித்தர்கள் காட்டியதன் சூட்சமப் பொருள் என்ன…?

மனித மனம் தீய குணத்தின் வசம் ஆட்படும் பொழுது எடுக்கும் எண்ணச் செயல் சோர்விற்குப் பின் உணர்வுகளின் உந்துதல் காமத்தின் வழி மோகமாகின்றது. அந்தச் சூட்சமப் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1.விநாயகருக்குப் பெரிய வயிற்றினைக் காட்டி
2.சகல உலகமும் அதனுள்…! என்று தத்துவம் கூறினால் புதிர் விடுபடுமா…?

உணவாக உட்கொள்ளும் உணவின் அந்த அமில குணங்கள்
1.சலிப்பின் செயலுக்கு மனித மனத்தின் உணவின் மாறுபாட்டால்
2.பத்துத் தலைகள் கொண்ட உருவம் உதித்தது… என்பதுவே
3.”உணவினால் உண்டாக்கப்பட்ட மோக குணங்கள் தான்…”

அந்த மோகத்தின் செயலைச் சித்தரிக்கவே எலியை வாகனமாகக் காட்டினார்கள். பூமிக்குள் மறைந்து வாழும் எலியைப் போல்
1.மனித மனத்தில் புதைந்து கிடக்கும் காமமும்
2.உணவின் செயலால் உணர்வுகள் கிளர்ந்தெழுந்த மோகமும் உள்ளது என்ற உண்மையை உணர வேண்டும்.

வினையின் நாயகனே விநாயகர் என்று சொன்னதன் உட்பொருள் என்ன…?

எண்ணம் கொண்டு எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப உருவான இந்தச் சரீரமான நாயகனைக் கொண்டு தன் உயிராத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்பதே…!

பூமியின் ஈர்ப்பில் வாசனை கொண்டு எடுத்துக் கொண்ட எண்ணம் கொண்டு தன்னை அறியும் பக்குவ கதிக்காக வேண்டி
1.அன்று சித்தனால் வழியமைத்துக் காட்டிய
2.சூட்சம உருவகப்படுத்திக் காட்டப்பட்டதே விநாயக உருவம்.

இந்தச் சரீர பிம்பத்தில் இருக்கும் கோடானு கோடி உயிரணுக்களும் வினையின் நாயகன் செயலுக்குத் தியான ஈர்ப்பின் தொடரில் ஆட்கொள்ளப்பட்டுச் சக்தி ஈர்த்துச் சக்தி அளித்திடும் செயல் வழியின் உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்திடல் வேண்டும்.

அதை உணர்ந்தால் உலக வாசனைப் பிடிப்பில் வாழும் நாம் ஒலி கொண்டு ஒளி பெற்றிடும் நிலையில்
1.உயிர் குரு (நம் உயிராத்மா) தன் தனித்துவச் சக்தியைப் பெற்றுக் கொள்ள
2.கணங்களாகிய இந்தச் சரீரத்தில் உள்ள உயிரணுக்களுக்கு ஒளி சக்தியை ஊட்டி
3.அந்தக் கணங்களின் கூட்டத்தில் “பதியாக” ஓர் சிறப்பிடத்தை உயிராத்ம சக்தி பெற்று
4.தன் வலு ஈர்ப்பின் சக்தி கொண்டு வலுவின் வலு வீரியமாகத் தன்னை வளர்ச்சிப்படுத்திட முடியும்.

இப்படி ஒவ்வொரு உயிரும் ஆத்ம சக்தியின் கலப்பில் தன்னைத் தானே வளர்ச்சிப்படுத்திக் கொள்ளட முடிந்திடுமே அல்லாது “பிறிதொருவர் அளிப்பது அல்ல எந்த ஜெப சக்தியையுமே…!”

மகரிஷிகள் சூட்சமம் கொண்டு உணர்த்திட வருவதெல்லாம்…
1.தங்களின் வழித் தோன்றல்கள் வாழையடி வாழையாக வரும் உயிராத்மாக்கள்
2.”நன் நிலை பெற வேண்டும்…” என்ற பாச உணர்வினால் தானப்பா…!

இந்தச் சரீரத்தின் செயலில் அகத்தியர் அன்று காட்டினார் “வாதாபி ஜீரணம்…” என்று. வாதாபி ஜீரணம் என்றால் என்னப்பா…?

அறிந்து கொண்டிருக்கும்… அனைத்தையும் உணர்ந்து கொண்டிருக்கும் நிலையில்… அறியாத நிலையில் அசுர குணங்கள் மனிதனின் எண்ணத்தில் ஆட்கொள்ளும் பொழுது உடலில் சோர்வும் ஜீரண அவஸ்தையும் ஏற்படுகின்றது.

அதன் பின் அந்த அசுர குணங்களினால் இந்தச் சரீரம் கொண்டு செயல்படுத்திட முற்படும் மோக உணர்வுகளையும்… அந்த மோக உணர்வுகளைத் தூண்டிடும் உயிரணுக்களையும்… “ஞானாக்கினியான எண்ணம் கொண்டு சுட்டெரித்ததே வாதாபி ஜீரணம்…!”

பத்துத் தலைகள் என்று காட்டியதெல்லாம் மோகத்தின் கிளைகளே…!

“உணவின் மாறுபாடும்…” மோக உணர்வுகளைக் கூட்டும். அதைச் சுட்டிக் காட்டுவதே விநாயக உருவத்தில் சிவப்புத் திலகமிட்டுக் காட்டப்பட்டது.

எடுக்கும் எண்ண வலுவில் ஈர்த்து ஒளியைக் கூட்டிக் கொள்ளும் ஜெப நிலை பெற்றவன் மனிதச் சரீரம் கொண்டே உயிராத்ம சக்தியை உயர்த்திடல் வேண்டும் என்றால் “நாவின் சுவைக்கு…” அடிபணிந்திடாத பக்குவத்திற்கு வர வேண்டும்.

1.உணர்வுகள் கிளர்ந்திடும் மூலமே “வயிறு…” என்றும்
2.மோகத்தின் கிளர்தலின் மூலமும் அங்கு தான்… என்றும்
3.அந்த மோகத்தின் கிளைகள் வலுப் பெற்று விட்டால் அறிவின் ஆற்றல் சிதைந்து விடும்…! என்ற
4.அந்த உண்மையின் கருப்பொருளை உணர்த்திடவே ஞானக்கண் என்றும் செந்தூரத் திலகம் என்று காட்டினார்கள் சித்தர்கள்.

நாம் கொள்ள வேண்டிய உயர் ஞான வலுவைப் பெற்று விட்டால் உரப்புயலாக எழுந்த அந்த மோக குணங்கள் அனைத்தும் ஞான அக்கினியில் பொசுங்கிவிடும்.

“எண்ண வலு கொண்ட ஜெப சக்தி பெற்றவனால்…” உணவின் உயிரணுக்களையும் அதனின் மோக குணங்களையும் மாய்க்க முடியும்.
1.அவைகளையும் தன் சரீர ஒளி உயிரணுக்களுடன் ஒன்றச் செய்து
2.அவைகளுக்கும் சக்தி அளித்திட முடியும் என்பதன் பொருளை
3.ஆய்ந்து தெளிந்து செயல்பட வேண்டும் என்பதே இந்தப் பாடத்தின் சிறப்பு.

Leave a Reply