“மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுக்கும் விண்ணின் ஆற்றலை” நாம் பெறப் பழகிக் கொள்ள வேண்டும்

“மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுக்கும் விண்ணின் ஆற்றலை” நாம் பெறப் பழகிக் கொள்ள வேண்டும்

 

நம்முடைய ஆறாவது அறிவு என்பது தெளிந்திடும்… அறிந்திடும்… சக்தி கொண்டது. அதனால் தான் “பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன்…” என்று ஞானிகள் காட்டுகின்றார்கள்.

அதாவது மனிதனாக ஆன பின் நாம் சிருஷ்டிக்கும் தன்மை பெற்றவர்கள். இருந்தாலும் இன்று நாம் எதை சிருஷ்டித்துக் கொண்டிருக்கின்றோம்.

மதம் காட்டிய அறநெறிகளை அதனின் உணர்வுகளைப் பதிவு செய்து கொண்டு அந்த உணர்வைத்தான் நாம் வளர்த்துக் கொள்கின்றோம். அதன் வழி கொண்டு சிருஷ்டிக்க முடிகின்றது. ஆக மொத்தம் நாம் கற்றுணர்ந்தது… நமக்குள் உள்ளது தான் இங்கே வரும்.

ஒரு வேப்பமரம் தன் கசப்பின் தன்மை வெளிப்படுத்தும் பொழுது
1.அந்தக் கசப்பான அந்த மணத்தின் தன்மை கொண்டு தான் தன்னை வளர்த்துக் கொள்கிறது
2.மற்றொரு மணத்தின் தன்மை அருகே வந்தால்தன் கசப்பின் உணர்வால் உந்தி வெளியே தள்ளுகின்றது

இதைப் போன்றுதான் நமக்குள் எந்தெந்த உணர்வின் தன்மையை இணைத்துக் கொள்கின்றோமோ அதற்கொப்ப பல உணர்வின் சத்துகள் சேர்த்து கசப்பின் உணர்வாக மாறி விட்டால் அதனின் செயலாக்கங்களாகவே மாறுகிறது.

மற்ற நல்ல உணர்வுகளோ ஞானத்தின் வழித் தொடரோ வந்தால் ஒதுக்கித் தள்ளுகின்றது. இதை எல்லாம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே தீமைகளை அகற்றிடும் உணர்வாக ஆறாவது அறிவு பெற்ற நாம் என்ன செய்ய வேண்டும்..?

1.தீமைகளை அகற்றிய அருள் ஞானியின் உணர்வினை நமக்குள் அதிகமாக்கி அந்தக் கணக்கைக் கூட்டவேண்டும்.
2.இந்தக் கணக்கு… கூட்டல் சரியாக இருந்தால் மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றும்.

இதிலே உங்களுக்குச் சிரமம் ஒன்றும் இல்லை…!

எத்தகைய நிலைகள் தீமைகள் வரினும்… அடுத்த நிமிடம் உங்களுக்குக் கொடுத்த அருள் சக்தியை உபயோகித்து அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று பல முறை எண்ணி எடுத்தல் வேண்டும்.

சித்திரபுத்திரன் (சித்திரம் + புத்திரன்) என்பது போன்று…
1.கண்ணிலே பார்த்துப் பதிவாக்கும் அந்த மகரிஷிகளின் உணர்வின் தன்மையை
2.உடலில் புத்திரனாக உருவாக்கிக் கொள்ளுங்கள்.
3.பாசத்தால் இதை வளர்த்து விடுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி வளர வேண்டும் என்று எண்ணும் பொழுது இந்தப் பாசத்தால் தீமைகளை அகற்றிடும் உணர்வாக உங்களுக்குள் விளையும்.

இந்தக் கணக்கின் பிரகாரம் உங்கள் உணர்வுகள் உயிருடன் ஒன்றிடும் நிலையாக
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எங்கிருந்து பெற்றீர்களோ
2.அவரின் அரவணைப்பில் தீமைகளை அகற்றிடும் அரும் பெரும் சக்தியாக
3.என்றுமே நிலை கொண்ட ஒளிச் சரீரமாக அது இயக்கத் தொடங்கும்.

இதைச் சாதாரணமாக நினைக்க வேண்டாம். குருநாதர் கோடி… கோடி… என்று சொல்லி எம்மை அடித்துத் தான் காட்டினார்.

1.என்னுடைய (ஞானகுரு) நினைவின் ஆற்றலை விண்ணிலே பாயும்படி செய்தார்.
2.பின் அந்த உணர்வு எவ்வாறு செயலாற்றுகிறது…? என்றும் காட்டினார்.

ஆக ஒரு சொல் தான்…! கோடி…கோடி கோடி…கோடி என்று குருநாதர் சொன்னார்…! அதற்கு நான்
1.“தெலுங்கில் கோடி என்றால் கோழி…!” என்று இடக்காகக் கேட்டதற்கு
2.இப்படியெல்லாம் பல உண்மைகளை உணர்த்தி அந்த விண்ணிலிருந்து பெறும் ஆற்றலை உணர்த்தினார்.

இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுக்கும் விண்ணின் ஆற்றலைப் பெறுதல் வேண்டும். மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே நாம் வாழ்தல் வேண்டும்.

Leave a Reply