விஞ்ஞான உலகில் வரும் விஷத்தின் தன்மை ஒன்றுடன் ஒன்று மோதி அழியும்… ஞானத்தின் தன்மை வளரும்

விஞ்ஞான உலகில் வரும் விஷத்தின் தன்மை ஒன்றுடன் ஒன்று மோதி அழியும்… ஞானத்தின் தன்மை வளரும்

 

இந்த உடல் வாழ்க்கையில் நாம் சேர்த்த சொத்து நம்முடன் வருகின்றதா…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.நமக்கு அழியாச் சொத்து அந்தத் துருவ நட்சத்திரம் தான்.
2.அதைத் தான் கொண்டு போக வேண்டும்.

என் பிள்ளை என்றோ அல்லது என் குடும்பம் என்றோ எனக்கு இடைஞ்சல் செய்கின்றார்கள் என்று யாரை எண்ணி இந்த உணர்வை அதிகமாக வளர்க்கின்றோமோ அந்தச் சொத்தைத் தேடி வைத்தோம் என்றால் உடலை விட்டுச் செல்லும் போது… அங்கே… அந்த உடலுக்குள் தான் புக முடியும்.

புகுந்த பின் அவர்களையும் தரித்திரம் ஆக்கிவிட்டு நஞ்சின் உணர்வினைச் சேர்த்து அடுத்து ஆடாகவோ மாடாகவோ தான் பிறக்க நேரும்.

இல்லையென்றால் பேயாகப் போய் மற்ற குடும்பத்தையும் அழித்து நாய் பாம்பு தேள் போன்ற விஷமான உயிரினங்களாகப் பிறக்க வேண்டி வரும்.

இது போன்ற தன்மையிலிருந்து மீள வேண்டும் என்பதற்குத்தான் குருநாதர் எனக்கு (ஞானகுரு) அனுபவ ரீதியில் எல்லாம் கொடுத்தார்.

அது மட்டுமல்ல… இந்த விஞ்ஞான உலகில் இன்று கடுமையான விஷங்கள் பரவிக் கொண்டிருக்கின்றது. எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த விஷத்தன்மைகள் நம்மைப் பாதித்து விடக் கூடாது.

ஏற்கனவே இரண்டாயிரத்தில் உலகம் அழியும் என்றார்கள். ஆனால் விஷ உலகம் தான் அழிகின்றது.

இரண்டாயிரம் ஆண்டுக்குப் பின் கருவில் வளர்ந்த ஏராளமான குழந்தைகளுக்கு ஆசீர்வாதம் (ஞானகுரு) கொடுத்துள்ளோம்.

கருவில் வளரும் அந்தக் குழந்தைகள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். இந்த உலகைக் காக்கும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று அந்த ஆர்வத்தில் வரும் பொழுது அந்தத் தாய்மார்களுக்கு ஆசீர்வாதம் கொடுத்திருக்கின்றோம்.

ஆதியிலே தாயின் கருவிலே அகஸ்தியன் இருக்கும் போது அவன் எப்படி அந்த விண்ணுலக ஆற்றலைப் பெற்றானோ… உலகை அறிந்தானோ… அவன் உணர்வை எடுத்து வளர்ந்த அந்த மாதிரியான குழந்தைகள் உருவாகி வளர்ந்து கொண்டிருக்கின்றது.

இந்த விஞ்ஞான உலகில் வரும் தீமைகளை அவர்கள் நீக்கப் போகின்றார்கள். விஷத்தின் தன்மை ஒன்றுடன் ஒன்று அது மோதி அழியும். ஞானத்தின் தன்மை வளரும்.

1.அகஸ்தியன் இந்தத் தெற்கிலே தான் தோன்றினான்
2.மீண்டும் இந்த தெற்கிலிருந்து தான் தீமைகளை நீக்கும் சக்தியும் உருவாகின்றது.

விஞ்ஞான உலகில் பேரழிவு வருகின்றது அங்கே…!
1.ஆனால் ஞானத்தின் வழி இங்கே வருகின்றது.
2.இது பேரழிவிலிருந்து மனிதனைத் தப்பச் செய்யும்.

உங்களை நீங்கள் நம்புங்கள். இதனுடைய நிலைகளை நீங்கள் அனுபவித்துப் பார்க்கலாம். இந்த உடலை விட்டுச் சென்றால் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.

துன்பங்கள் ஒவ்வொரு நிமிடத்தில் அறியாது வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இதை கூட்டிக் கொள்ளுங்கள்.

ஒரு நோயாளியைப் பார்க்க நேர்ந்தால் அவர் நோய் நீங்கி உடல் நலமாக வேண்டும் என்ற இந்த உணர்வை மட்டும் நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

அதுவே நமக்குச் சொந்தமாக அழியாத சொத்து ஆகின்றது உடலுக்குப்பின் பிறவி இல்லை என்ற நிலை அடையலாம்.

ஆனால் என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிச் செய்தான் என்று அதை எல்லாம் சொந்தமாக்கி விடாதீர்கள். ஏனென்றால் அந்தச் சொந்தத்தை எடுத்தால் மீண்டும் பிறவிக்கு வந்து விடுகின்றோம்.

ஆகவே…
1.அருளைச் சொந்தமாக்குவோம்
2.இருளை அகற்றுவோம்
3.மெய்ப் பொருள் காண்போம்
4.மெய் வழி வாழ்வோம்
5.அருள் ஞானம் பெறுவோம்
6.அருள் வாழ்க்கை வாழ்வோம்…!

Leave a Reply