ஒருவருக்கொருவர் பதிவாகிக் கொள்ளும் உணர்வின் இயக்கம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

ஒருவருக்கொருவர் பதிவாகிக் கொள்ளும் உணர்வின் இயக்கம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

 

உதாரணமாக ஒரு இடத்தில் விபத்து நடந்தது என்றால் அதை ஒரு மனிதன் கண்ணுற்றுப் பார்த்த பின் நண்பரிடத்தில் இதைச் சொல்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

இந்த மாதிரி மோதி விபத்தாகி விட்டது.. அடிபட்டு உடல்கள் சிதைந்து விட்டது…! என்று அவன் பார்த்த உணர்வுகளைச் சொல்லப்படும்போது அதை நுகர்ந்து பதிவாக்கி விட்டால் இது நம் ஆன்மாவாகிறது.

இரவு புலனடங்கித் தூங்கும் பொழுது…
1.நாம் எங்கேயோ சென்ற மாதிரியும்
2.அங்கே விபத்தான மாதிரியும்
3.யாரோ துரத்துவது மாதிரியும் போன்று கனவுகளாக வருகின்றது.

இது எல்லாம் நமக்குள் பதிந்த உணர்வுகள் உடலுக்குள் சென்ற பின் நுண்ணிய உணர்வுகளாக இயக்கி நாம் புலனடங்கித் தூங்கினாலும் அந்த உணர்ச்சிகள் நம்மைத் தட்டி எழுப்புகின்றது… அறியச் செய்கிறது…!

ஆனால் விடிந்தவுடன் இதை எல்லாம் நினைவுக்கு வரும் போது கலக்கம் வருகின்றது. காரணம் நாம் இரவிலே நுகர்ந்த உணர்வுகள் அது பதிந்து தீமையான அணுக்களாக வளர்ச்சி அடைகின்றது.

நம்மை அறியாது வரும் கனவுகள் எல்லாம் இப்படித்தான் இயக்குகிறது. ஒரு சிலருக்கு இதனால் சில தீமையின் விளைவுகளும் ஏற்படக் காரணமாகின்றது.

இது போன்ற உண்மையின் இயக்கத்தை நீங்கள் அறிய வேண்டும்… இந்த மனித உடலில் அறியாது வரும் தீமைகளை அகற்ற வேண்டும் என்பதற்குத்தான் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அருள் ஞானிகளின் உணர்வினை உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்குகின்றோம்.

ஈஸ்வரா… என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வரும் சக்திகளை நாங்கள் பெற வேண்டும்…! என்று ஏங்கித் தியானித்தால் இந்த வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளை அகற்றி நஞ்சின் தன்மைகளை மாற்றிடும் நிலை வருகின்றது.

அதிகாலை துருவ தியானத்தின் மூலம் தொடர்ந்து நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.

கடவுளின் அவதாரம் வராகன் என்று காட்டியதில்…
1.நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வினை நுகர்ந்து மனிதனாக எப்படி உருவாக்கியதோ
2.மனிதனான பின் நச்சுத் தன்மைகளை எல்லாம் நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றிய
3.அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் சேர்த்து
4.எதிர்காலத்தில் வரும் நச்சுத்தன்மையை நீக்கிடும் அந்த அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும்.

திரும்பத் திரும்பச் சொல்கிறேன் (ஞானகுரு) என்றால் உங்கள் வாழ்க்கையில் இருளினை அகற்றி உணர்வினை ஒளியாக மாற்றும் அந்தத் திறன் நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதைப் பதிவு செய்கின்றேன்.

உங்கள் செவிகளில் இப்பொழுது பதிந்தாலும் ரேடியோ டி.வி. அலைகள் போன்று இந்த அருள் உணர்வுகள் பரவுகின்றது.

உங்கள் நண்பரிடத்தில் சொன்னால் அவருக்குள்ளும் இது பதிவாகிறது. அவரும் சிந்தித்து அந்த உணர்வினை நுகர்ந்து வரும் பகைமை உணர்வினை வளராது தடுக்க இது உதவும்.

அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறத் தியானிப்போம்… தவமிருப்போம்.

Leave a Reply