உயிரை மதிக்க வேண்டியதன் அவசியம்

உயிரை மதிக்க வேண்டியதன் அவசியம்

 

உதாரணமாக நாம் உணவாக உட்கொள்ளும் கிழங்கு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது நல்ல கிழங்கு… இந்தக் கிழங்கைச் சாப்பிட்டால் “உடலுக்கு நல்லது” என்று சொல்கின்றார்கள்.

நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.

இன்னொருவர் வருகின்றார்…! ஐய்யய்யோ… இந்தக் கிழங்கைச் சாப்பிட்டார்… அவருக்கு வயிற்று வலி வந்து விட்டது… மிகவும் சிரமப்பட்டார்…! என்று சொல்கிறார்.

ஏனென்றால் சில வகையான கிழங்குகள் அது சக்தி வாய்ந்தது. ஆனால் அந்தக் கிழங்கை அவர் சாப்பிட்ட நேரம் எது…?

அவர் உடலிலே நோயாக இருக்கும் பொழுது.. ஜீரணிக்க முடியாத அந்த நேரத்தில் அவர் கிழங்கைச் சாப்பிட்டார். அதனால் அவருக்கு வயிற்று வலி வந்தது. அது தான் உண்மை.

ஆனால் “அவர் கிழங்கைச் சாப்பிட்டார் அதனால் மிகவும் அவஸ்தைப்பட்டார்…! என்ற உணர்வை ஊட்டிவிடுகின்றார்.

இதைக் கேட்பவர்கள் அந்தக் கிழங்கைக் கண்ணிலே பார்த்த உடனே எண்ணங்கள் பலவீனமடைந்து விடுகிறது. அதே உணர்வு வந்து உமிழ் நீரைக் கூட்டியவுடன் சாப்பிட்டால் என்ன நடக்கின்றது..?

அதே உபாதை இங்கே வந்து விடுகின்றது. வந்ததும் என்ன நினைக்கின்றோம்…?

கிழங்கைச் சாப்பிடாதே…! என்று அந்த ஆள் சொன்னார். அது சரியாகப் போய்விட்டது. நமக்கும் வயிறு வலிக்கிறது என்ற உணர்வு தான் இயக்கமாகின்றது.

1.ஏனென்றால் இது எல்லாம் நாம் எண்ணி எடுத்துப் பதிவாக்கும் உணர்வின் இயக்கங்கள்.
2.நம் உயிர் தான் இதை எல்லாம் இயக்குகின்றது.
3.நாம் எதை எண்ணுகின்றோமோ அது நம்மை ஆட்சி புரிகின்றது
4.இந்த ஈசன் தான் நம்மை ஆட்சி புரிகின்றான்…!

நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

இதை எல்லம் தெளிவாக உணர்த்துவதற்குத்தான் குருநாதர் என்னை (ஞானகுரு) சாக்கடை அருகில் அமரச் செய்து சாக்கடை உபதேசமாகக் கொடுத்தார்.

பன்றி சாக்கடைக்குள் முகர்ந்து பார்த்து அதில் மறைந்துள்ள உணவுப் பொருளை “அந்த நல்லதை மட்டும் எடுத்து எப்படிச் சாப்பிடுகிறது பார்த்தாயாடா…?” என்று காட்டுகின்றார்.

ஏனென்றால் வராக அவதாரம் என்கிற பொழுது…
1.கழிவை எல்லாம் நீக்குகிறது… அதை நுகரவில்லை.
2.நல்லதை மட்டும் நகர்கின்றது…!

வாழ் நாள் முழுவதும் இப்படி நல்லதாகவே நுகர்ந்த பிற்பாடு என்ன செய்கிறது…? பன்றி உடலில் உள்ள கெட்டது எல்லாம் பலவீனமாகி வெடித்துவிட்டு வெளியிலே வந்து இந்த உயிர் என்ன செய்கிறது…?

மனிதனாகப் பிறக்கின்றது. தீமைகளை நீக்கும் உறுப்புகள் உருவாகிறது.

1.அதாவது… எந்தத் தீமைகளை நீக்கியதோ அதற்குத் தக்கவாறு மனித உடலின் உறுப்புகள் உருவாகி
2.அந்த உறுப்புகளான பிற்பாடு தீமையை நீக்கக் கூடிய சக்தியை உன் உடல் பெறுகின்றது
3.நஞ்சை மலமாக மாற்றி நல்ல உணர்வை உன் உடலாக மாற்றுகின்றது என்றார் குருநாதர்.

பன்றியிலிருந்து தான் உயிர் உன்னை மனிதனாக உருவாக்கியது என்று தெளிவாக்குகின்றார் குருநாதர்.

இதைத் தான் கடவுளின் அவதாரம் “வராகன்…” என்றும் அந்த வலிமைமிக்க சக்தியைப் பெற்றுத்தான் உயிர் நம்மை மனிதனாக்கியது என்றும்… எத்தகைய தீமைகளையும் நீக்கக் கூடிய வல்லமை பெற்ற இந்த நிலையில் “நம் உயிரான ஈசனை மதிக்க வேண்டுமா இல்லையா…?” என்று வினா எழுப்புகின்றார் குருநாதர்.

Leave a Reply