உயிரை மணியாக்கும் ரசமணி
சூரியனிலிருந்து வரக்கூடிய பாதரசம் அது மற்றதுடன் மோதி விஷத்தைப் பிரித்து வெளியே செல்லப்படும் பொழுது அந்தப் பாதரசத்தால் வெப்பமும் அதனால் ஈர்க்கும் காந்தமும் வருகின்றது.
வெப்பமும் காந்தமும் வந்தாலும் அந்தக் காந்தம் கடைசியில் பலவீனமான விஷத்தின் தன்மையை அது கவர்ந்து கொள்கின்றது. கவர்ந்து கொண்டபின்…
1.வெப்பம் உருவாக்கும் சக்தியாகவும்
2.காந்தம் அரவணைக்கும் சக்தியாகவும்
3.விஷம் இயக்கும் சக்தியாகவும் மாறுகின்றது.
இப்படி இந்த மூன்றும் ஒன்றாக ஆனால் அது ஒரு இயக்க அணுவாக மாறுகின்றது. ஆனால் இந்தப் பாதரசம் உலகம் முழுவதற்கும் எல்லாவற்றிலும் கலந்துள்ளது.
1.பாதரசம் எல்லாத் தாவர இனங்களிலும் உண்டு
2.ஒவ்வொரு செடியிலும் எடுத்துக் கொண்டாலும் அந்தப் பாதரசம் உண்டு
3.நம் உடலிலிருக்கக்கூடிய உயிரணுக்களில் துடிப்பு ஏற்பட வேண்டுமென்றால் ஜீவ அணுக்களிலேம் இதே பாதரசம் உண்டு
4.நமது உயிரிலேயும் அந்தப் பாதரசம் உண்டு
5.எல்லா அணுக்களிலும் பாதரசம் உண்டு.
ஆனாலும் இந்தப் பாதரசம் எது எதிலே கலந்து கொள்கின்றதோ அதன் உணர்வு ஒட்டியே வாழும்.
இதைப் பிரிப்பதற்கு என்ன செய்வது…? என்பதற்குண்டான விளக்கங்களை குருநாதர் உபதேசிக்கின்றார்.
ஏனென்றால் இன்றைய வாழ்க்கையில் அன்புடன் பண்புடன் பரிவுடன் வாழ்ந்தாலும் பிறருடைய கஷ்டங்களைக் கேட்டறிந்து தான் அவர்களுக்கு உதவி செய்கின்றோம்.
ஆனால் கேட்டறியும்போது அவர் படும் கஷ்டம் நம்மை அறியாமலே நமக்குள் வந்து விடுகின்றது. இப்படி ஒருவருக்கொருவர் நாம் இணைந்து தான் வாழ்கின்றோம். யாரும் பிரிந்தில்லை.
இருந்தாலும் மற்றவர்கள் வெளிப்படுத்தும் வேதனை என்பது வலிமையானது… கோபம் என்பதும் வலிமையானது… குரோதம் என்பதும் வலிமையானது…!
ஆக நல்ல குணங்களைக் காட்டிலும் அவர்கள் செயல்படுத்தும் இத்தகைய குணங்களை நாம் நுகரப்படும் பொழுது…
1.அந்த வலிமையான உணர்வுகள் நம் நல்ல குணங்களை ஆட்கொண்டு
2.நல்ல குணங்களைச் செயலற்றதாக்கி நம் உடலுக்குள் நோயாக மாறுகின்றது.
நாம் செய்த நன்மைகளுக்குள் நம்மை அறியாமல் வந்து சேரும் நோய்களை எப்படி நீக்குவது…? அந்தத் தீமைகளை எப்படிப் பிரிப்பது…? நமது வாழ்க்கையை நாம் எப்படி வழி நடத்த வேண்டும்…? என்பதற்குத் தான் குருநாதர் இதை எல்லாம் படிப்படியாக வழி காட்டுகின்றார்.
ஆதியிலே உயிரணுவாகத் தோன்றிய பின் அகஸ்தியன் எத்தனையோ வகையான உணர்வுகளை எடுத்தாலும் விஷத்தின் தன்மையைச் சிறுகச் சிறுகப் பிரித்து உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளி உடலாக மாற்றிக் கொண்டவன்… இதே பாதரசம் தான்…!
இந்த உணர்வின் தன்மையை ஒளியாக… இருளை நீக்கி ஒளியின் உணர்வாகும்போது “ரசமணி…!”
1.தன் உயிரின் தன்மையை மணியாக்கப்படும்போது பிறவி இல்லை என்ற நிலை அடைகின்றது
2.அப்படி அடைந்தது தான் துருவ நட்சத்திரம்
3.அதிலிருந்து வெளி வரக்கூடிய உணர்வுகள் இருளை நீக்கும் அருள் சக்தி பெற்றது.
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் ஒவ்வொருவரும் பருக வேண்டும் என்ற நிலைக்குத் தான்
5.குருநாதர் எமக்கு (ஞானகுரு) இதைத் தெளிவாகக் காட்டினார்.
குருநாதர் காட்டிய அதே வழியில் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களுக்குள்ளும் பதிவாக்கி அதைப் பெறும்படி தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன்.