“மானிடராகப் பிறப்பது மிகவும் அரிது…! என்று அக்காலத்தில் சொன்னதன் உட்பொருள் என்ன…?

“மானிடராகப் பிறப்பது மிகவும் அரிது…! என்று அக்காலத்தில் சொன்னதன் உட்பொருள் என்ன…?

 

நாம் இந்த வாழ்க்கைக்குப் பின் உடலை விட்டுச் சென்றால் இன்னொரு மனிதப் பிறவி எடுப்பது என்றால் இன்னொரு உடலுக்குள் சென்றால் தான் அது வர முடியும்.

ஆனால் பாம்பு தீண்டினால் உடலுக்குள் விஷமான பின் பாம்பின் நினைவு கொண்டு அதனின் ஈர்ப்புக்குள் சென்று பாம்பாகப் பிறப்போம். பாம்பாகப் பிறந்தாலும்…
1.அந்தப் பாம்பை ஒரு காகமோ கழுகோ கொத்தினால் அது காகமாகவோ அல்லது கழுகாகவோ அடுத்து மாறுகின்றது.
2.மனிதன் அடித்தால் தான் மனிதனாகின்றது.

ஆக… அதனின் சந்தர்ப்பத்திற்கொப்பத்தான் மனிதனாக ஆவதும்… காகமாவதும்… கழுகாக ஆவதும்… நரியாவதும் நாயாவதும்…
1.ஒன்றைக் கொன்று புசிக்க எண்ணும் உணர்வுகள்
2.அது கொன்று புசிக்கும் போது அதனின் நினைவு கொண்டு தான் இப்படி உடல்கள் மாறுகின்றது.

அதே சமயத்தில் மனிதனுக்குள் வந்து மனித உருப் பெறும் கருவானாலும் இப்பொழுது எல்லாம் குடும்பக் கட்டுப்பாடு என்று இருக்கிறதல்லவா…!

எத்தனை உயிரினங்களைக் கொல்கிறோமோ அத்தனையும் நமக்குள் இருக்கின்றது. அதில் எது முந்திக் கருப்பைக்கு வருகின்றதோ அது தான் மனிதனாகப் பிறக்கின்றது.

கருப்பைக்கு வரவில்லை என்றால் அதிலே விந்துகள் கசிந்து வீணாகி விட்டால் அந்த விந்துக்குள் கலந்த அந்த உயிரணுக்கள் மனித உடலுக்குள் சென்றாலும்
1.சாக்கடைக்குள் வந்தால் சாக்கடையில் உருவாகும் புழுவாக மாறுகின்றது.
2.மற்ற தாவர இனங்களிலோ செடிகளிலோ பட்டால் தாவர இனத்தின் சத்தை நுகர்ந்து அங்கே கருவாகி புழு பூச்சியாக மாறுகின்றது.
3.கடலில் விழுந்தால் அங்கே கருவாகி அந்த விந்துகளை மீன் விழுங்கினால் அந்த மீனின் ரூபமாக உருவாகின்றது.

மனித உடலுக்குள் கசியும் விந்துகள் வீணானால் அந்த உணர்வின் தன்மை கொண்டு அதிலே வரும் கரு முட்டைகள் இப்படி மாற்றிக் கொண்டே உள்ளது.

மனிதனாகும் தகுதி இருந்தாலும் மனிதனல்லாத பிறவிக்குப் போகும் நிலை வந்து விடுகின்றது. எல்லாமே சந்தர்ப்பம் தான். இயற்கையின் நிலைகள் இப்படி எல்லாம் மாறுகின்றது.

ஆககே நாம் எதுவாக ஆக வேண்டும்…? என்று ஒவ்வொருவரும் சற்று சிந்தியுங்கள்.

இந்த உடலுக்குப் பின் உணர்வை ஒளியாக மாற்றி… உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நாம் பெறுதல் வேண்டும். அது தான் மனிதனின் கடைசி எல்லை.

எத்தனையோ கோடி உணர்வுகள் நமக்குள் உண்டு. அதிலே உயிரைப் போன்ற உணர்வின் தன்மை ஒன்றென இணைந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் கவர்ந்து நாம் ஒளியாக மாறுதல் வேண்டும்.

வேகா நிலை பெற்ற ஞானிகளின் அருள் உணர்வை நாம் தியானித்து அதை நம் உடலில் பெருக்கி நாமும் வேகா நிலையாகி இன்னொரு பிறவிக்குப் போகாதபடி “போகாப்புனல்…” நாம் இந்த உடலிலேயே உணர்வை ஒளியாக மாற்றுதல் வேண்டும்.

நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவருடைய உடலுக்குப்பின் உயிர் என்ற உணர்வு கொண்டு அவர் ஒளியானார். துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் ஏகாந்தமாக வாழ்கின்றார்.

அக்காலத்தில் வாழ்ந்த ஞானிகளும் வானுலக ஆற்றலை எடுத்துத் தன் குடும்பத்தைச் சார்ந்தவர்களின் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலங்களின் துணை கொண்டு அங்கே இணைத்தனர்.

அதே வழிப்படி நாமும் நம்மைச் சார்ந்தவர்களை விண் செலுத்தப்படும்போது அந்த உணர்வை நாம் கவர்ந்தால் நாமும் அங்கே அழைத்துச் செல்லப்படுகின்றோம். இந்த முறைப்படி நாம் வரலாம்.

1.மீண்டும் மீண்டும் மனிதன் என்ற நிலைகள் வரப்படும் பொழுது
2,மனிதனின் ஈர்ப்புக்குள் வந்தால் நாம் இங்கே பிறவிக்கு வந்து விடுகின்றோம்.

ஆனால் அருள் உணர்வுகளைப் பெற்றால் நம்மை அங்கே மிதக்கச் செய்யும். அதன் வழி நாம் செல்ல
1.நம் குரு காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற ஏங்கித் தியானிப்போம்.
2.வேகா நிலை என்ற உணர்வை இந்த உடலிலேயே உருவாக்குவோம்…!

ஏனென்றால் உயிர் வேகுவதில்லை… உயிருடன் ஒன்றி ஒளியாக்கினால் நம் உணர்வுகளும் வேகுவதில்லை என்ற நிலைக்கு நாம் அனவைரும் செல்வோம் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).

Leave a Reply