நேரத்தையும்… காலத்தையும்… (ஜாதகத்தை) மனிதன் மாற்ற முடியும் என்பதை விஞ்ஞானம் நிரூபிக்கின்றது

நேரத்தையும்… காலத்தையும்… (ஜாதகத்தை) மனிதன் மாற்ற முடியும் என்பதை விஞ்ஞானம் நிரூபிக்கின்றது

 

கர்ப்பிணியாகி தலைப் பிரசவம் என்றாலே மறு பிறப்பு என்று சொல்வார்கள். ஒரு அதிர்ச்சி நிலையானால் பிறக்கப் போகும் குழந்தை தலை கீழாக மாறாது.

குழந்தையின் சிறு நீர் எல்லாம் பனி நீராக மாறி இருக்கும். அப்பொழுது அந்தப் பருவம் வந்து பனிக் குடம் உடைந்த பின் குழந்தை முழித்துக் கொள்ளும். உணர்வின் துடிப்பு வரப்படும் பொழுது காற்றின் தன்மை வாயுவாக உற்பத்தியாகி வெளித் தள்ளும் நிலை வருகிறது.

நெகடிவ்… பாசிடிவ்…! என்ற நிலை வரும் பொழுது தாயின் எலும்பின் தன்மை இலகுவாக்கிக் குழந்தையை வெளிக் கொண்டு வரும் தன்மை வருகிறது.

ஆனால் எலும்பின் தன்மை வலுவாகி விட்டால் குழந்தை சுகப்பிரசவம் ஆவதில்லை.

குழந்தை வெளியில் வர முடியவில்லை என்றால் அக்காலங்களில் மாம்பழத்தில் கொட்டையை நசுக்கி எடுக்கிற மாதிரி தாயின் வயிற்றை நசுக்கி முயற்சி செய்து எடுத்துப் பார்ப்பார்கள். குருநாதர் இதை எல்லாம் காட்டுகின்றார்.
1.அன்றைய வைத்திய முறைக்கும்
2.இன்றைய நவீன விஞ்ஞான மருத்துவ முறைக்கும் உண்டான வித்தியாச நிலைகளைக் காட்டுகின்றார்.

இன்றைக்கும் ஒரு சில நிலைகளில் அக்கால வழக்கத்தைப் பின்பற்றுகின்றார்கள். அப்பொழுது கர்ப்பிணியான அந்தத் தாய் எத்தனை வேதனைப்படுகின்றது என்று பார்க்கலாம்…! ஆனால் குழந்தை பிறந்த பின் தாய் அதைக் கொஞ்சிக் குலாவுகிறது… மகிழ்ச்சி அடைகிறது.

சுகப்பிரசவம் அடையவில்லை என்றால் இன்றைய நவீன முறையில் ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியில் எடுக்கின்றார்கள்.

சாதாரணமாக உடலில் அடிபட்டால் காயமாகிறது… இரத்தம் கொட்டுகிறது. அது போல் கர்ப்பிணியின் உடலில் ஆபரேசன் செய்யும் போது இரத்தம் வெளியேறாதபடி தடைப்படுத்துகின்றனர்.

குழந்தையை எடுத்த பிற்பாடு அறுத்த தசைகளை இணைப்பு கொடுத்து இஞ்ஜெக்சன் செய்து ரொம்பச் சீக்கிரமே அதை ஒட்ட வைத்து விடுகின்றனர். குழந்தையும் பாதுகாப்பாக எடுத்துக் கொடுக்கின்றனர்.

1.ஆனாலும் இன்று ஜாதகம் பார்த்துக் குழந்தையை எடுக்கும் பழக்கம் கூட வந்து விட்டது.
2.பிறக்கும் குழந்தைகள் இன்ன நேரத்தில் பிறந்தால் ஜாதகப் பிரகாரம் தோஷம் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
3.அதற்காக வேண்டி பண வசதி உள்ள வீடுகளில் எல்லாம் இந்த நேரம் நல்ல நேரமாக இருக்கிறது என்று
4.அதற்கு முன்னாடியே எடுத்து விடுகின்றார்கள்.

ஏனென்றால் மூல நட்சத்திரத்தில் பிறந்தால் அது போன வீடுகள் எல்லாம் தோஷமாகப் போய்விடும் என்று சொல்லி அந்த மூல நட்சத்திர நேரம் வருவதற்கு முன்னாடியே ஆபரேசன் செய்து குழந்தையை எடுத்து விடுகின்றார்கள்.

டாக்டரும் கூடச் சொல்லி விடுகிறார்கள். ஏனென்றால் ஒரு சிசேரியன் செய்தால் இவ்வளவு காசு வருகிறது என்று கணக்குப் பார்த்து படித்துக் கொண்டு வந்த டாக்டர்களும் இப்படிச் செயல்படுத்துகின்றனர்.

அதே போல் சில குடும்பங்களில் நாள் நட்சத்திரங்களைப் பார்த்து எங்களுக்கு ஞானக் குழந்தையாக வர வேண்டும் என்று அந்தக் குறித்த நேரத்தைச் சொல்லி ஆபரேசன் செய்து குழந்தையை எடுக்கின்றார்கள்.

1.ஆனால் இவர்கள் எப்படி அவசரப்பட்டு அந்தக் குழந்தையை எடுத்தார்களோ
2.அந்தக் குழந்தை உணர்வும் இவர்களின் எண்ணங்களும் ஒன்றான நிலையில்
3.குழந்தை பிறந்த பிற்பாடு எந்தக் காரியத்தையும் அவசரப்பட்டுச் செயல்படுத்துவார்கள்.
4.அந்தக் குழந்தையும் அதே மாதிரித்தான் வரும்.

ஏனென்றால் இந்த உணர்வு எதுவோ அந்தக் கருவில் வளரும் உணர்வுகள் மேக்னட் இதனுடைய உணர்வுகளை அது கவரப்படும்.

பெரும்பகுதியான குடும்பங்களில் குழந்தை பிறப்பே ஆபரேசன் செய்து தான் எடுக்கின்றார்கள். ஆனால் ஒரு சிலருக்கு ரொம்ப நேரம் ஆனது என்றால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் வந்தது என்றால் குழந்தையைக் காப்பாற்றத் துடிப்பின் தன்மை குறையப்படும் பொழுது அடுத்த கணமே ஆபரேசன் செய்து குழந்தையைக் காப்பாற்றுகின்றார்கள்… தாயையும் காப்பாற்றுகின்றார்கள்.

இத்தகைய விஞ்ஞான உலகில் இருக்கும் போது சாமியாரையும் ஜோதிடத்தையும் பார்த்து… அவன் கொடுக்கும் சக்கரத்தையும் மந்திரத்தையும் வைத்துக் காப்பாற்றலாம்…! என்று சொன்னால் எப்படி இருக்கும்…?

நல்ல மனம் கொண்டு ஒரு வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்தால் நம் மனதும் சோர்வடைகிறது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

1.ஆகவே இயற்கையை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்துப் பழக வேண்டும்
2.தீமை என்ற உணர்வை மாற்றி தீமையை நீக்கிய அருள் உணர்வை நமக்குள் எடுத்து வளர்க்க வேண்டும்.

நான் (ஞானகுரு) படிக்காதவன் தான்…! அந்த இயற்கையின் உண்மை நிலைகளைப் பார்க்க முடிகிறது. ஸ்கேன் வைத்துப் பார்ப்பது போல் நானும் பார்க்கின்றேன்.

ஆரம்பத்தில் எல்லாம்… ஸ்கேனில் ஓடுவது போல் மற்றவர்களும் கண் கொண்டு பாருங்கள்… எப்படி எல்லாம் இயங்குகிறது…? என்று பார்க்கும்படி செய்தேன். ஏனென்றால் நான் காணுவது போல் “பிறரும் பார்க்க முடியும்…” என்று தெரிவதற்காகக் காண்பித்தேன்.

பார்த்துச் சொல்லும்படி சொன்னவுடன்… அதை எடுத்துத் தவறான வழிகளில் தான் பயன்படுத்தத் தொடங்கினார்கள். பருவம் இல்லாதபடி பிறருக்குக் கொடுத்தால் தீமையின் விளைவே அவர்களுக்குள் விளைகிறது.

Leave a Reply