ஏனோ தானோ என்று இல்லாதபடி மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள் இணைந்து வாழ்ந்திட நாம் பழகிக் கொள்ள வேண்டும்

ஏனோ தானோ என்று இல்லாதபடி மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள் இணைந்து வாழ்ந்திட நாம் பழகிக் கொள்ள வேண்டும்

 

உதாரணமாக நாம் மலைப் பக்கம் போக வேண்டியதிருக்கிறது என்றால் அங்கே போகும் பொழுது பல முன்னெச்சரிக்கையுடன் தான் செல்கிறோம்.

இந்தப் பக்கம் போனால் முட்கள் இருக்கின்றது… இந்தப் பக்கம் போனால் மிருகங்கள் இருக்கின்றது… இந்தப் பக்கம் நீர் வீழ்ச்சி இருக்கிறது… ஆகவே
1.மிருகங்கள் இருக்கும் பக்கம் எவ்வாறு செல்ல வேண்டும்…
2.ஒரு பக்கம் நீரோடைகள் போகும்போது அதைக் கடந்து எப்படிச் செல்ல வேண்டும் என்றும்
3.தெளிந்த வழி காட்டுவது போல நமக்குள் எத்தனையோ முன் சிந்தனைகள் போன்ற உணர்வுகள் உண்டு.

அதைப் போல இந்த மனித வாழ்க்கையில் எத்தனையோ வகையான தீமைகளை நாம் சந்திக்கின்றோம். அவைகளைச் சந்திக்கப்படும்போது அந்தத் தீமையின் உணர்வுகளில் நாம் சிக்காது அதிலிருந்து நாம் கடந்து செல்லுதல் வேண்டும்.

உதாரணமாக நாம் கடலிலே செல்கின்றோம்… அலைகள் பல வருகின்றது…! இருந்தாலும் அந்தப் படகோட்டி தான் எந்த எல்லையைக் குறிக்கோளாக வைத்துப் படகை ஓட்டுகின்றானோ படகினைத் திசை திருப்பி அந்த எல்லையை அடையச் செய்கின்றான்.

இதைப்போலத் தான் நாம் இன்று இந்த வாழ்க்கையில் நாம் பல அலைகள் நம்மை மோதிக் கொண்டே உள்ளது.
1.கோப அலைகள் மோதுகிறது… பாச அலைகள் மோதுகின்றது… வேதனை அலைகள் மோதுகின்றது
2.இதைப் போல எத்தனையோ வகையான அலைகள் மோதுகின்றது.

இது எல்லாம் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது…!

நம்மை வேதனைப்படும்படி ஒரு மனிதன் செய்தால் அந்த எண்ணத்தில் நாம் சிக்கிவிட்டால் அந்த அலைகளில் சிக்கி அந்த வேதனைப்படும் உணர்வுக்கே நம்மை அழைத்து சென்றுவிடும்.

ஒருவர் கோபப்படும் அலைகள் நம் மீது கடுமையாக மோதிவிட்டால் அதிலே வாழ்க்கை என்ற இந்தப் படகு மூழ்கி அதன் வழிகளிலே அழைத்துச் செல்லும். நாம் நல்ல நிலையை அடைய முடியாது.

ஆகவே தான் இந்த வாழ்க்கையில் எத்தனையோ வகையான அலைகள் நம்மை மோதினாலும் அந்த ஒவ்வொரு நிலைகளிலும்
1.மகரிஷிகளின் அருள் சக்திகளை வலு கொண்ட நிலைகள் கொண்டு அதை மூழ்கிடாது
2.நமது எல்லை அந்த மகரிஷிகளின் அருள் வட்டம் தான் என்ற நிலைகளில் நாம் செல்ல வேண்டும்.

அப்படிச் சென்றோம் என்றால் இந்த வாழ்க்கையில் மகரிஷிகளின் அருள் வட்டத்தின் பாதுகாப்புடனே என்றும் நாம் வாழ முடியும்.

“விழித்திரு…!” என்று சொல்வது போல ஒவ்வொரு நாளும் இந்த மனித வாழ்க்கையில் பிறவியில்லா பெரு நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்தும் நிலையாக நாம் விழித்திருத்தல் வேண்டும்.

ஏனென்றால் எத்தனையோ வகையான அலைகள் மோதுகின்றது…
1.நாம் விழித்திருந்து அந்த அலைகளில் இருந்து மீளுதல் வேண்டும்.
2.தீமையிலிருந்து விடுபடுதல் வேண்டும்… ஆக நமது எல்லை அந்த மகரிஷிகளின் அருள் வட்டம் தான்.

அதை நாம் அடிக்கடி எண்ணினோம் என்றால்… வரும் அலைகளில் இருந்து நம்மைப் பாதுகாத்து அருள் ஞானிகளின் உணர்வை இங்கே நிகழ் காலத்தில் வளர்த்து… எதிர்காலத்தில் என்றும் பிறவியில்லா நிலை என்ற பெரு நிலை அடையலாம்.

இதைச் செய்யத் தவறினால் கீழே அழைத்துச் சென்று விடுகின்றது இதிலிருந்து நாம் தப்புவோம்
1.மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெறுவோம்
2.உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற நாம் தியானிப்போம்.. தவமிருப்போம்.

Leave a Reply