உயிரால் வளர்க்கப்பட்ட பிள்ளையை உனது… எனது… என்று போர் செய்யாதே…!

உயிரால் வளர்க்கப்பட்ட பிள்ளையை உனது… எனது… என்று போர் செய்யாதே…!

 

ஒரு வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்தால் நம் நல்ல குணத்தை அது வங்கிட்டுக் கொள்கிறது. அதைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

அதை மாற்ற மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணினால் அவர்கள் வேதனையை வென்றவர்கள். அந்த வேதனையை அது அடக்கி விடுகின்றது.

இதை நாம் கற்றுக் கொள்வதற்காக ஆற்றங்கரையில் விநாயகரை வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

நம் வாழ்க்கையில் பிறர் வேதனைப்படுவதை உற்றுப் பார்த்து அதை நுகர்ந்தால் அந்த விஷத்தின் தன்மை நம் நல்லதை அடக்கிடாது அடுத்த கணமே
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…
2.எங்கள் இரத்த நாளங்களில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கலக்க வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்தால் அதை நம் உயிர் ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி அந்த அணுவாக மாற்றும் கருவாக உருவாக்கி விடுகின்றது நம் இரத்தத்தில்.

ஒரு பத்து நாளைக்கு வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்து பாருங்கள். அடுத்து உங்கள் இரத்தத்தை எடுத்துப் பரிசோதித்துப் பாருங்கள்.
1.விஷத்தை ஊட்டும் விஷ அணுக்கள் இருக்கிறது என்று காண்பிப்பார்கள்
2.நன்றாக இருந்தது… இப்படி மாறி இருக்கிறது என்பார்கள்.

அதே மாதிரி கோபப்படுவோரை நீங்கள் அடிக்கடி பார்த்து அந்தக் காரமான உணர்வைச் சுவாசித்திருந்தால்
1.அந்த உணர்வின் தன்மை இரத்தக் கொதிப்பிற்குண்டான நிலைகளாக உருவாகி இருக்கிறது என்று
2.லேபரட்டரியில் வைத்துப் பரிசோதித்து எந்தெந்த அளவில் இருக்கிறது
3.இதற்கு என்னென்ன மருந்து கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கண்டுபிடிப்பார்கள்.

இதை எல்லாம் வராது தடுக்க வேதனைப்பட்டால் உடனே அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி நம் உடலுக்குள் செலுத்தினால் இதனை அது அடக்குகிறது… இதை மாற்றுகின்றது. அது தான் மகிழ்வாகனா…!

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு கார்த்திகேயா…! வேதனைப்படுகிறான் என்று தெரிகிறது… வேதனை வென்றவன் துருவ மகரிஷி என்றும் தெரிகிறது…! அந்த உணர்வை நுகர்ந்து இந்த வேதனையை அடக்க வேண்டும்…!

எத்தகைய நிலைகள் நமக்குள் வந்தாலும் ஆறாவது அறிவால் இதை அடக்க முடியும் அங்குசபாசவா என்ற நிலை தெளிவாக்கப்பட்டுள்ளது. இதற்குத் தான் விநாயகர் பக்கம் அரச மரத்தை வைத்துள்ளது. அகஸ்தியன் துருவ நட்சத்திரமான நிலையைக் குறிக்கவே அரச மரத்தைக் காட்டுகின்றனர்.

அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் குளித்து விட்டுக் கரையேறி வந்த பின் விநாயாகரை உற்றுப் பார்க்கின்றோம்.

நம் உயிர் பல கோடிச் சரீரங்களைக் கடந்து இன்று நம்மை மனிதனாக உருவாக்கி உள்ளது என்று கணங்களுக்கெல்லாம் ஈசா கணேசா…! என்று உயிரை வணங்க வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

பல கோடிச் சரீரங்களில் தழைத் தாம்புகளைத் தின்றோம் புல்லைத் தின்றோம் காய் கனிகளைத் தின்றோம். இன்று மனிதனான பின் சுவைமிக்க உணவைப் படைத்துச் சாப்பிடும் இந்த மனித உடலைப் பெற்றோம் இந்தப் பிள்ளை யார்…? என்று கேள்விக் குறி எழுப்புகின்றார்கள்…!

1.உயிரால் வளர்க்கப்பட்ட பிள்ளை…
2.நீ உனது எனது என்ற நிலைகளில் போர் செய்யாதே…!
3.அவனால் ஒன்றி வாழும் அணுக்கள் இது…!
4.அதை எப்படி வளர்க்க வேண்டும்….? என்பது தெளிவாக்கப்படுகின்றது.

தீமையைக் கண்டுணர்ந்த நிலைகள் கொண்டு உயிரால் வளர்க்கப்பட்ட இந்த மனித உடலைச் சீர்குலைக்கச் செய்து விடாதே…! அருள் ஒளி பெற்ற மகரிஷிகளின் உணர்வை “உனக்குள் செலுத்து…!” என்பதைத் தான் அங்கே எண்ணி எடுக்கும்ப்படி காட்டுகின்றார்கள்.

குளித்து விட்டு வந்து விநாயகரைப் பார்த்த பின் மண்ணுலகில் நஞ்சினை வென்று துருவ நட்சத்திரமாக உருவாகிய துருவ மகரிஷியின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியும் நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி நின்று அந்தச் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இதை எண்ணி எடுக்கும்படி செய்கிறார்கள்.

இவ்வாறு நமக்குள் எடுத்துப் பழக வேண்டும். சாமி (ஞானகுரு) சொல்கின்ற சக்தியை நான் பெற வேண்டும்… என்று உங்களுக்குள் “இறுக்கிப் பிடித்து வைத்துக் கொண்டால்…” இதை வளர்க்கச் செய்யும்…!

Leave a Reply