இசைக்கும் இசையெல்லாம் ஈசனின் இசையாக்கிடுங்கள் – ஈஸ்வரபட்டர்

இசைக்கும் இசையெல்லாம் ஈசனின் இசையாக்கிடுங்கள் – ஈஸ்வரபட்டர்

 

இன்று நம்மில் பல மகான்கள் தோன்றி வாழ்ந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் அவரவர்களின் அறிவு சக்தியை உலகிற்காக உணர்த்தினார்கள். பல துறைகளில் மாமேதைகள் வழிபெற்று வந்தார்கள். இன்றும் வருகிறார்கள்…!

“திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா…” என்ற விழாவினை அவரின் ஞாபகமாக இன்றும் நடத்துகின்றனர். அவரின் நிலையென்ன…?

இசைக்காகவே பிறந்தார்… இசையுடனே கலந்தார்…! அவர் உடலில் செயல் கொண்டவர்… அவரின் இசை பக்தியில் அவரையே இசையாக்கி இன்புறும் பக்குவப்படுத்தி அவ் இசையுடனே அவரின் ஆத்மாவைச் செயல்பட வைத்தார் அவர் உடலில் செயல்படுத்திய ஒரு சப்தரிஷி.

அத் தியாகராஜரின் உயிராத்மாவே இசையுடன் கலந்து அவ் இசை ஞானம் பொழிந்திடும் இசையுள்ளங்களில் தன் இசை ஒளியைக் காண்கின்றார்.

பல மகான்கள் இசையையே பக்தியாக்கி அப்பக்தியையே ஆண்டவனுக்கு அர்ப்பணித்து அவ் இசையுடனே ஒன்றிவிடுகிறார்கள். இசை ஞானம் பெற்று உள்ளத்தையே அமுதிசைப்படுத்தி ஆண்டவனை வணங்குவதாக எண்ணி வணங்குகிறார்கள்.

1.இசை ஞானம் பெற்று இசையுடன் ஒன்றிய ஆத்மாக்களின் நிலையெல்லாம்
2.அவர்கள் இசைக்கும் இசையே அவர்களின் உயிராத்மாவையே
3.இசையமுதின் அமில சக்தியை அவ்வாத்மாவுடன் ஒன்றச் செய்து
4.அவ்வுயிராத்மாவிற்குப் பேரானந்த நிலையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
5.இசைக்கும் இசையெல்லாம் ஈசனின் இசையாக்கி…
6.தன் உயிராத்மாவையே ஈசனாக்கிடும் போது இன்பமுடன் அவ்வாத்மாவிற்கு நற்சக்தி கிடைக்கப் பெறுகின்றது.

வாழ்க்கைக்கு இவ் இசையமுதம் பெரும் சொத்தப்பா…!

இசைக்கும் இசையிலேயே ஒவ்வோர் உடலிலும் உள்ள உயிர் அணுக்கள் அனைத்துமே அவ் இசைக்கு அடிமைப்படுகின்றது. நம் உலகமே ஓம் என்ற இசையில்தான் உருளுகின்றது. இசைக்கு மயங்காத எவ்வுயிரணுவுமில்லை.

வாழ்க்கையே அமுதிசையாக்கி அப்பக்திச்சுரங்களைப் பாடி நற்பயனைப் பெறத்தான் காலம் காலமாய் இவ்வுலகமே இசையின் வழியில் வருகின்றது. அருள் மணம் பெற அவ் இசையமுதம் நம் உயிராத்மாவுக்கு மிகவும் அவசியமாகின்றது.

இந்த நிலையுணர்ந்த பல மகான்கள் இசையுடனே கலந்து இன்றளவும் தன் செயல் கொள்கின்றார்கள்.

ஒவ்வோர் ஆத்மாவும் தன் எண்ணத்தில் ஏற்படுத்தி வழி நடத்தும் செயல் நிலைக்கு உகந்த ஞான சக்தியை அந்நிலையை வளரவிட்டால் அவ்வளர்ச்சிக்குகந்த சக்தி நிலை கொண்டவரின் உதவியுடன் நம் சக்தியை நாம் வளர்த்துக் கொள்ளலாம்.

ஒவ்வோர் ஆத்மாவும் அதற்குகந்த அமில சக்தியின் கூட்டுநிலை உயிர் பிறப்பிலேயே வழி பெற்று வழிபெற்று வருகின்றது.
1.ஒவ்வொரு துறையில் ஒவ்வொருவரின் சாதனை செயல் கொள்கின்றது
2.இதற்கெல்லாம் உயிரணுவிலேயே சேமித்த அமில சக்தியின் தொடர் நிலைப்படித்தான் வளர் நிலை கொள்ள முடியும்.

ஒவ்வொருவரும் அவரவர்களின் நிலையில்தான் செயல் கொண்டு வருகின்றனர். ஆனாலும் இவ்வமில சக்தியையே உயிர் பிறப்பில் வளர்ச்சி கொண்டு
1.இன்றளவும் ஒவ்வோர் ஆத்மாவும் வழி வந்த நிலையிலேயே
2.நம் ஜெப சக்தியினால் ஜெயம் கொண்டிட முடியும்…!

ஜெப சக்தியினால் நம் உயிராத்மா எந்த நிலை பெறுகின்றது…? ஜெப சக்தியிலிருந்து நம் உடம்பிலுள்ள அமில சக்தியை எப்படித் தூய்மை கொண்டிடலாம் என்பதை உணர்ந்திடுங்கள்.

Leave a Reply