
கிரகணம் பற்றிய உண்மைகள் – ஈஸ்வரபட்டர்
பூமியில் அதனின் வளர்ச்சி நிலைக்கும் அதிலே ஜீவன்கள் தோன்றி வாழ்ந்திடும் கால நிலைக்கும் அச் சக்திகள் உருப்பெறவே பல கோடி ஆண்டுகள் ஆகிவிடுகின்றன.
அத்தகைய ஜீவராசிகள் ஊரும் பக்குவம் எந்த மண்டலத்தில் தோன்றியதோ அந்த மண்டலத்தின் வளர்ச்சியுடனே அதே நிலையில் தான் பல ஆயிரம் கோடி ஆண்டுகளானாலும் சுழன்று கொண்டே இருக்கும்.
1.இம்மண்டலத்துடன் இதன் ஈர்ப்பு சக்தியின் அமில சக்தி கூடும் நிலையில் தான்
2.இம்மண்டலத்தில் வளர்ந்திடும் மற்ற சக்திகளும் கூடுகின்றன.
ஆனால் இந்த நிலையிலே சுழலும் அந்த மண்டலத்திற்கு மாறிக் கிடைக்கும் சக்தி எப்பொழுதெல்லாம் ஏற்படுகின்றது…?
ஏற்கனவே நம் சூரியனைச் சுற்றி மண்டலங்கள் சுழன்று கொண்டுள்ளது என்று உணர்த்தி உள்ளேன். அவ்வாறு சூரியனைச் சுற்றி வரும் இந்தக் கோளங்கள்…
1.சூரியனுக்கும் நம் பூமிக்கும் மத்தியில் ஓடும்பொழுது
2.சூரியனின் ஒளிக்கதிர் வீச்சுகள் நம் பூமிக்கு நேராகத் தாக்கிடாமல்
3.சூரியனைத் தாண்டி (குறுக்கே) எந்தக் கோளம் செல்கின்றதோ அந்தக் கால நிலைக்கொப்ப
4.நம் பூமிக்கு எப்பொழுதும் கிடைத்திடும் அந்த ஒளி அலையின் மாற்றத்தினால்
5.சூரியனைத் தாண்டி செல்லும் அந்தக் கோளத்தின் மறைப்பினால் (கிரகணம்)
6.நம் பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்டுள்ள பால்வெளி மண்டலத்தில் கலந்துள்ள அந்த ஒளி அலைகளை
7.இரவில் உள்ள நிலைபோல் குளிர்ச்சி கொண்டு மேகங்களாய் கனம் பெற்று
8.எந்த மண்டலம் தாண்டிச் செல்கின்றதோ அதிலிருந்து வீசிடும் அணுக்களின் சக்தி நிலை பூமியின் ஈர்ப்புக்குள் கவரப்பட்டு
9.அந்த ஒரு இரண்டு நிமிடம் ஒரு நிமிடம் கால நேரத்திலேயே பூமியின் சக்தி நிலையிலும் மாற்றம் கொள்கின்றது.
நம் பூமிக்கு மட்டும் கிரகணம் பிடித்துத் தாக்கும் நிலை வருகிற்து என்பதல்ல…! எல்லா மண்டலங்களுக்குமே இந்த நிலையின் தாக்குதலில் “வளர்ச்சியும் உண்டு… வீழ்ச்சியும் உண்டு…!”
ஒவ்வொரு மண்டலத்திலும் அது அது சேமித்த தனித்தனி சக்தி நிலையும் உண்டு.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.