நம் சூரியக் குடும்பத்தில் பூமியின் சுழற்சி நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நம் சூரியக் குடும்பத்தில் பூமியின் சுழற்சி நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இப்பூமியும் இப்பூமியைப் போன்ற இப்பூமியைச் சார்ந்த 48 மண்டலங்களும் நம் சூரியனைச் சுழன்று தானும் சுழன்று கொண்டே உள்ளது.

நம் சூரியன் சுற்றும் வேகமும் நம் சூரியனின் குழந்தைகளான நம் மண்டலங்கள் சுற்றி ஓடும் விகித நிலைப்படுத்தி ஒரு வருடம் என்ற நிலையில் 365 நாள் விகிதக் கணக்குப்படுத்தியும் நான்கு வருடத்திற்கு ஒரு நாள் அதிகப்படுத்தி லீஃப் வருடம் என்றும் சூரியனைச் சுற்றி ஓடும் நிலையுணர்ந்து இவ் வான சாஸ்திரத்தில் வருடம் நாள் வாரம் இப்படி நிலையுணர்ந்திடப் பல நிலைகளை இவ்வுலகின் நிலையில் உணர்த்தியுள்ளார்கள்.

இப்பூமிக்கும் நம் சூரியனுக்கும் உள்ள தொடர்பு நிலை எந்நிலை கொண்டுள்ளது…? காலங்களில் நான்கு வகைக் காலங்களும் ஒரு நாளில் காலை பகல் இரவு என்ற மூன்று நிலைகளும் ஒவ்வொரு நொடியும் ஒரு நொடியை போல் இல்லாமல் இவ்வுலக ஓட்டமும் சூரியனின் ஓட்டமும் சுழன்று கொண்டே உள்ளன.

1.உதய காலத்தில் நாம் காணும் சூரியனின் விகித நிலை உருவமே பெரிதாகவும்
2.பகல் ஏற ஏற நம் பூமிக்கு நேர் மையத்தில் சூரியனின் நிலையைக் காணும் பொழுது
3.உதய காலத்தில் கண்டிட்ட சூரியனின் உருவ அமைப்பை விட உச்சிக் காலத்தில் சிறிய கோளமாகவும்
4.பகல் மாறி மாலை சூரியனின் அஸ்தமத்தில் உதய காலத்தில் கண்ட நிலைப்படி உருவ அமைப்பு பெரியதாகவும் காண்கின்றோம்.

எந்த நிலை கொண்டு…?

உதய காலத்தில் சூரியனின் நிலை நம் பூமியின் நிலைக்கும் இடைப்பட்ட தூரம் குறைவு. நமக்கு அருகாமையில் சூரியனின் நிலையுள்ளது.

ஒவ்வொரு நொடியும் உச்சிப்பகல் வருவதற்குள் நம் பூமியின் ஓட்டமும் சூரியனின் ஓட்டமும் ஓடும் நிலையில் நாம் உள்ள இடத்தில் சூரியனின் நிலை நமக்கும் நேர் மேலே வரும் பொழுது உதய காலத்திற்கும் பகல் உச்சி நேரத்திற்கும் நம் பூமிக்கு சூரியனின் தூர விகிதம் மிகவும் அதிகமாகி விடுகின்றது.

உதய கால தூர விகிதப்படி உச்சிக் காலத்தில் இருந்திட்டால் நம் பூமி சுழற்சி வேகமும் சூரியனின் சுழற்சி வேகமும் சூரியனிலிருந்து வந்திடும் ஒளிக் கதிர்களின் வெப்ப நிலை நம் பூமியின் நேர் மையத்தில் பட்டு பூமியே வெடிப்பு நிலையில் சிதறுண்டிருக்கும்.

உச்சி நிலையில் நம் பூமிக்கும் சூரியனின் நிலைக்கும் தூர விகிதம் அதிகப்படுவதினால் சூரியக் கோளின் உருவ அமைப்பைச் சிறிதாகக் காண்கின்றோம். பகல் மாறி மாலை வர வர நமக்கு அருகாமையில் சூரியனின் நிலை வருவதினால் மாலையிலும் இந்நிலை போன்ற சூரியனின் உருவ நிலையைப் பெரிதாகக் காண்கின்றோம்.

1.ஆனால் உதய காலத்தில் நமக்கு அருகாமையிலுள்ள சூரியனின் வெப்ப நிலை நமக்குக் குறைந்தும்
2.பகல் நேரத்தில் நம் பூமிக்கும் சூரியனின் நிலைக்கும் தூர விகிதம் நீண்டுள்ள நிலையில்
3.வெப்பத்தை அதிகமாக எடுக்கின்றோம்…!

எந்நிலை கொண்டு…?

நம் பூமிக்கு உள்ள நான்கு திசைகளில் வடக்கு தெற்கு மேற்கு கிழக்கு என்ற நிலையில் வட துருவத்திலும் தென் துருவத்திலும் நம் பூமியின் அச்சாக நிறைந்துள்ளது நம் பூமியின் பொக்கிஷமான கடல்கள்.

கடல்களான அந்நீர்நிலைகளின் மேல் இவ்வுதய கால சூரிய அலைகளின் வெப்பம் பட்டு அவ்வொளிக் கதிர்களின் எதிர் வீச்சின் சக்திதான் காலையும் மாலையும் உள்ள கால நிலைகள்.

1.நம் பூமியின் இவ்வடதுருவ தென் துருவ நிலைகளில் அமைந்துள்ள இக் கடல்களின் சக்தியினால்தான்
2.நம் பூமியின் சக்தியே இந்நிலையில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு மண்டலத்தின் நிலையும் ஒவ்வொரு தன்மை கொண்ட சக்தி நிலையில் உருப்பெற்ற மண்டலமாய்ச் சுழல்கின்றது. நம் பூமியின் இயற்கை தந்த பொக்கிஷ நிலைதான் நாம் இன்று நான்கு வகைக் காலங்களை அடைந்த நிலை.

சூரியனின் விகித தூரத்திற்கும் மற்ற மண்டலங்களிலிருந்து நம் பூமிக்கு ஏற்படும் ஈர்ப்பு சக்தியின் நிலைக்கொப்பத்தான் கோடை காலம் வசந்த காலம் இளவேனிற் காலம் குளிர் காலம் இப்படி நிலை பிரித்து நாமமிட்டு நாம் அழைக்கும் இக்காலங்கள்.

நம் பூமியின் வட துருவ தென் துருவ நீர் நிலைகளின் மேல் சூரியனின் தூர விகிதமும் நம் பூமிக்கு அருகாமையிலுள்ள சந்திரனின் தூர விகிதமும் உள்ள நிலையில் வட துருவ தென் துருவ நீர் நிலைகளின் மேல் அம் மண்டலங்களிலிருந்து தாக்கிடும் அணு சக்திகளின் நிலை கொண்டுதான் இப்பூமிக்கு ஏற்படும் காற்று மண்டலங்களின் சக்தி நிலைக்கொப்ப நம் பூமியின் கால நிலைகள் மாறு கொள்கின்றன.

ஒவ்வொரு நொடியும் இப்பூமி தோன்றிய நாள் தொட்டே மாற்றம் கொண்டேதான் சுழன்று கொண்டுள்ளது.

1.நொடிக்கும் குறைவான நிலையிலேயே ஒவ்வொரு நிலையும் மாறி மாறியே தான்
2.இன்றளவும் இனி நடந்திடும் பல ஆயிரம் கோடி ஆண்டுகளும்
3.இப்பூமியின் நிலையும் மற்ற எல்லா மண்டலங்களின் நிலையும்
4.ஒரு நொடியைப் போல் ஒரு நொடி இல்லாமல் சுழன்றே ஓடிடும்.

Leave a Reply