உலகைக் காக்கும் ஆசையில் பல ஆத்மாக்களை தியானத்தின் ஈர்ப்பில் பல சித்தர்களும் ரிஷிகளும் செயல்படுத்தி வருகின்றனர் – ஈஸ்வரபட்டர்

உலகைக் காக்கும் ஆசையில் பல ஆத்மாக்களை தியானத்தின் ஈர்ப்பில் பல சித்தர்களும் ரிஷிகளும் செயல்படுத்தி வருகின்றனர் – ஈஸ்வரபட்டர்

 

இன்றளவும் இப்பூமியின் நியதியையும்… இம்மனித ஆத்மாக்களின் எண்ண நிலையையும்… ஆவி உலக ஆத்மாக்களின் செயல் நிலையையும்… இந்தப் பூமியுடன் தொடர்பு கொண்ட மற்ற மண்டலங்களின் நிலையின் வழித் தொடரையும்… சிறுகச் சிறுக உணர்த்தி வந்தேன்.

இனி நாம் எந்த நிலை கொண்ட ஜெபத்தினால் இந்தக் கலியின் பிடியிலிருந்து மீள முடியும்…? என்ற சக்தித் தொடரைத்தான் செயலாக்கிட வேண்டும்.

இப்பூமியில் நாம் இம்மனித ஆத்மாக்களாக வாழ்ந்திட
1.நம் ஆத்மாவுடன் பெற்ற சக்தியின் ஜெபத்தினால் தான்
2.இன்று இந்நிலையில் வாழ்ந்திடும் இப்பாக்கியமே..!

இந்தப் பூமி தோன்றிப் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் தான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனித ஆத்மாவாக மனித உடல் கொண்ட ஜீவன்கள் வளர்ச்சி கொண்டு வாழ்ந்திட முடிந்தது.

இவ்வளர்ச்சி கொண்ட இம்மனித ஆத்மாக்களில் எண்ண செயல் நிலையும் இப்பூமியில் எல்லா இடங்களிலும் ஒன்று போல் இல்லாமல்…
1.இந்த ஞான வளர்ச்சி கொண்டு வாழ்ந்த ஆத்மாக்களே
2.இந்தப் பூமியில் ஆயிரத்தில் ஒன்றிரண்டு விகித நிலைகளை விடக் குறைவுதான்.

நாகரீக வளர்ச்சி கொண்ட ஆத்மாக்கள் வாழ்ந்திடும் நிலைகள் தான் நமக்குத் தெரிகின்றது. இவ்வெண்ண நிலைக்கொப்ப ஆயுள் காலமும் இம்மனித ஆத்மாக்களின் நிலையில் ஒத்துள்ளன.
1.நாம் அறிந்திடாமல் நமக்கும் மேல் நீடித்த ஆயுள் காலங்கள் கொண்ட
2.ஆத்ம உடல் கொண்ட மனிதர்கள் இந்தப் பூமியில் பலர் உள்ளனர்.

ஆயிரம் காலங்களும் மாற்றுடல் ஏறாமல் ஒரே உடலில் வாழ்ந்திடும் எண்ண வளர்ச்சி இல்லாத ஒரே நிலை கொண்ட குறுகிய எண்ணத் தொடரில் ஆத்ம பிம்பங்கள் கொண்டவர்கள் பலர் உள்ளனர்.

இங்கிருக்கும் நாகரீக வளர்ச்சி கொண்ட மனித ஆத்மாக்களின் உடல் நிலையின் வளர்ச்சி நிலை அங்கில்லை.

இவ்வெண்ண வளர்ச்சியின் நிலையினால்தான் இங்கே இந்த மனித ஆத்மாக்களின் பெருக்கமே கூடிவிட்டது. ஆனால் இந்தப் பூமியில் வாழ்ந்திடும் நாகரீக வளர்ச்சி அற்ற ஆத்ம உடல் கொண்ட மனிதர்களின் நிலை
1.நம் நிலைக்கு மாறு கொண்டதாக உள்ளது மிருகங்களின் நிலைக்கொப்ப.
2.ஆனால் அந்த உடல்களில் எந்த விஷத் தன்மையும் பாய்ந்திடாது.

காடுகளில் பாம்பு நரி இப்படி உள்ள மிருக இனங்கள் எப்படி வாழ்கின்றனவோ… அப்படியே தன் இன வர்க்கத்தை வெளி உலகப் பிடிப்புக்குச் சிக்காவண்ணம் அந்த உடல் ஆத்மாக்கள் கொண்டவர்கள் வாழ்கின்றனர்.

ஆனால் இவ்வெண்ணத் தொடரின் வழித் தொடரில் வந்த நம் மனித உடல்கள்தான் இக்கலியின் மாற்ற்றத்தில் எண்ணச் சிதறல் பட்டும் இவ் இயற்கையின் சீற்றத்திற்கு அடிபட்டு மாளப் போகின்றன.

இவ்வெளி உலகப் பார்வையில் சிக்கமல் இப்பூமியில் மனித ஆத்மாவாக பல ஆயிரம் ஆண்டுகள் உள்ள மனித இன வர்க்கமெல்லாம் இக்கலியிலும்… ஜீவன் பிரியாமல் வரப் போகும் கல்கியிலும் வழித் தொடர் பிடித்தே தான் வாழப் போகின்றனர்.

அவர்களின் எண்ணத்தில் இந்த மாற்றமும் இவ் இயற்கையின் சீற்றத்தின் பயமும் எதுவும் தாக்கிடாது. இன்றைய செயற்கையினால் ஏற்படுத்திய வெடிகுண்டுகளைப் பாய்ச்சினாலும் அந்த உடல்களைப் பாதிக்காது.

எண்ண நிலையே இல்லாமல்… குறுகிய நோக்கில் தன்னைக் காத்து வழி வந்த ஆத்மாக்களுக்கு “நம்மைக் காட்டிலும் விரிய சக்தி பெற்றுள்ள போது…”
1.ஞான சக்தியின் செயலாக்கும் அறிவு வளர்ச்சி பெற்ற நாம் நம் ஆத்மாவை இன்றைய விஷக் காற்றிலிருந்தும்
2.விஷமாக இந்த உலக நிலையையே மாற்றம் கொள்ளும் இவ் எண்ண நிலையின் தாக்குதலிலிருந்தும்
3.எந்த அணு வெடிகள் நம் மீது பாய்ந்தாலும் நம் உடல் அந்தத் தீய சக்தியை ஏற்காத வண்ணம்
4.நம்மை நாம் இவ்வொளியின் ஒளியாக ஒளிர்ந்திடும் சக்தியில்
5.நம் உடல் பிம்பத்தையும் நம் ஆத்மாவையும் செயலாக்கிடல் வேண்டும்.

இப்பூமியில் நம்மைப் போன்றே ஆத்ம உடல் கொண்டு வாழ்ந்து வாழ்க்கையின் உன்னத சக்தியுணர்ந்து சூட்சம நிலை கொண்ட
1.பல கோடி நற்பெரியோர்களின் ஆசையின் தொடர் நிலையை
2.நம் ஆத்மாவின் சக்தியில் செயலாக்கிட “அவர்களின் வழித் தொடர் நமக்கும் கிட்டும்…”

இந்த உலகில் தோன்றிய ஆசை நிலையினால்… “இந்த உலகைக் காத்திடும் ஆசையில்”
1.பல ஆத்மாக்களை இந்தத் தியானத்தின் ஈர்ப்பில் பல சித்தர்களும் பல ரிஷிகளும் செயல்படுத்தி வருகின்றனர்.
2.நம் எண்ண நிலையை ஒருநிலைப்படுத்தி அவர்களுடன் கலந்து ஓங்கார நாதம் கொண்ட ஒலியுடனே கலந்து
3.ஒளி பெறும் சக்தி நிலையை நாம் அடைந்திடும் வழித் தொடர் அவர்களின் நிலையை அறிந்தே வாழ்ந்திடுவோம்.

Leave a Reply