உயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்

உயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்

 

அருள் மகரிஷிகளின் அருளால் நாம் நம்முடைய மூதாதையர்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து அவர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்வோம்.

அவர்கள் அந்த ஒளி நிலை பெற்றால் அதனுடைய துணை கொண்டு நாம் இந்தப் புவியில் வரும் தீமைகளை அகற்றிவிட்டு அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட முடியும்.

உடலுக்குள் வரும் தீமைகளில் இருந்து விடுபட்டு நம் உணர்வின் தன்மை என்றும் நாம் மகிழ்ந்து வாழ முடியும்.

1.இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… உயிரே நமக்குச் சொந்தம்.
2.உயிரின் தன்மை சொந்தமாக்க வேண்டுமென்றாலும்
3.இப்பொழுது உயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் இருக்கின்றோம்.

நாம் எதை எண்ணுகின்றோமோ உயிரிலே பட்டவுடன் உயிர் இந்த உடலை இயக்குகின்றது. உயிர் தான் இயக்குகிறது என்று யாரும் எண்ணவே இல்லை. “நான்…” என்று இந்த உடலைத் தான் எண்ணுகின்றோம்.

ஆனால் அவனால் உருவாக்கப்பட்டதுதான் இந்த உடல் என்ற நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும். உயிரை வேண்டி நாம் எதை எண்ணி எடுக்கின்றோமோ அதையே உருவாக்குகின்றது.

1.ஒருவருக்குக் நாம் கடுமையான தீங்கு செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றோம்
2.அதை உயிர் உருவாக்குகின்றது… அந்த உணர்வை உடலுக்குள் பரப்புகின்றது.
3.அதனின் செயலாகவே அந்தத் தீமை செய்யும்படி நம்மைச் செய்கின்றது.

அதே சமயத்தில் ஒருவருக்கு நன்மை செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றோம். அந்த நல் உணர்வின் தன்மையை உயிர் அதை இயக்கிக் காட்டுகின்றது.

ஆனாலும்…
1.நாம் தீமையின் உணர்வைப் பெற வேண்டுமென்று எண்ணினால்
2.அந்தத் தீமை செய்யும் உணர்வின் அணுக்கள் நமக்குள் விளைந்து
3.இந்த உடல் அழுகுகின்றது… வேதனைப்படுகின்றது….!

எவரை வேதனைப்படச் செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றோமோ அந்த வேதனைப்படும் உணர்வுகள் அணுக்கள் நமக்குள் விளைந்து அதே வேதனையை உருவாக்குகின்றது.

கீதையிலே சொன்னபடி “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…!” என்று அதனின் வளர்ச்சியாகத் தான் நாம் அடைகின்றோம்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள வேண்டும்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
2.தீமையை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வை நீங்கள் நுகர்ந்தால்
3.தீமையை அகற்றும் உணர்வுகள் நமக்குள் பெருகி
4.தீமையற்ற உணர்வாக நமக்குள் ஆகி… “நாம் அதுவாகின்றோம்…”

ஆகவே முதலில் மூதாதையருடைய உயிரான்மாக்களை விண் செலுத்துங்கள். ஒவ்வொரு நொடியிலும் இதைப் போல செய்யுங்கள்… மறவாதீர்கள்…!

Leave a Reply