“அபிராமிப்பட்டர்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

“அபிராமிப்பட்டர்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இக்கலியில் ஏற்படும் கால மாற்றத்தின் உண்மைகளை இங்கே உணர்த்துகின்றோம். ஒவ்வொரு ஆத்மாவும் அந்த நிலையில் ஒளிர்ந்திடலாம் என்பதனை உணர்ந்து செயல்படும் வழிமுறைகளை யாம் (ஈஸ்வரபட்டர்) அறிந்த வழியில் உணர்த்துகின்றோம்.

இப்பூமியிலே உயிரணுவாகத் தோன்றி உயிராத்மாவான இன்றும் தன் உடலை அழியா வண்ணம் ஒளியுடனே நினைத்த நேரத்தில் கலந்து செயல் கொள்ளும் கொங்கணரும் போகரும் இவ்வழித் தொடரை எந்நிலையில் பெற்றார்கள்…?

அபிராமி அந்தாதி இயற்றிய அபிராமிப்பட்டர் அம்மாவாசை நாளில் பௌர்ணமி நிலவாகக் காண முடியும் என்று பூரணச் சந்திரனைக் காணச் செய்தது எந்த நிலையில்…?

சந்திர நிலவா அன்று காட்சி அளித்தது…?

அபிராமிப்பட்டராக வாழ்ந்த அந்த ஆத்மா தன் எண்ணத்தைத் தன் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவையும் அச்சக்தி மாதாவின் செயல் கக்தியின் உண்மைக்கே அடிபணியச் செய்து… அவ்வுண்மையின் சக்தியையே அன்பு கொண்டு பூஜித்து…
1.தன் எண்ணத்திலும் உணர்விலும் எவ்வணுவின் சக்திக்கும் அடிபணிய வைத்திடாமல்
2.ஒரே சக்தி ஜெபத்தை ஈர்த்து வந்த நிலையில் அம்மாவாசையில் பௌர்ணமி நிலவைக் காண முடியும் என்று
3.சரபோஜியின் (அரசன்) எண்ண நிலையில் தெய்வ சக்தியை ஓங்கிக் காட்டிடல் வேண்டும் என்ற ஒரு நிலை கொண்ட தீவிர ஜெப சக்தியினால்
4.அவரின் ஒரு நிலை கொண்ட எண்ண சக்தியே அவர் உடலில் உள்ள அனைத்து அணுக்களும் பிரிந்து ஒளியாகி கூடி
5.பௌர்ணமி நிலவாக அனைவரும் காணும் சந்திர பிம்பமாகக் காட்சி தந்தது.

அபிராமிப்பட்டரின் ஆத்மா பெற்ற சக்தி தான் அவ்வாத்மாவே நிலவாக ஒளிர்ந்தது. அவரின் கூடு தான் பிம்ப நிலையில் இருந்தது. சக்தியின் தேவியையே தன் ஆத்மாவில் ஐக்கியப்படுத்திக் காட்டினார்.

இன்று போகரின் நிலை ஒளியுடன் முருகா என்று உள்ளம் உருக ஒலிக்கும் நிலைக்கெல்லாம் ஒளியாக நல்லருளைச் செலுத்தும் நிலையும் இதுவே. கொங்கணவரின் நிலையும் இந்நிலைக்குகந்ததே.

தன் ஆத்மாவின் சக்தியையே ஒளியுடன் கலந்து ஒளிரும் சக்தி இவர்களுக்கெல்லாம் உண்டு.

ரிஷிகளும் ஞானிகளும் மந்திரம் செய்யவும் தந்திடம் செய்யவும் தன் நிலையில் சக்தி கொண்டு செயலின் பயனைப் பெறுவதாகவும் மக்களின் எண்ணத்தில் உள்ளது.

ஆனால் அச்சப்தரிஷிகளின் நிலையினால் தான் இந்தப் பூமியின் சக்தி நிலையே பெருகி வருகிறது.

இன்றளவும் மனித் ஆத்மாக்கள் இந்நிலை கொண்டு வாழ்வதற்கே நம் சப்தரிஷிகளின் செயலினால் தான் இப்பூமியின் நிலையே இன்றுள்ளது.

1.அவர்களும் நம்மைப் போல் வாழ்ந்தவர்கள் தான்..!
2.நாமும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் தொடர்பு கொண்டு வாழ்ந்தவர்கள் தான்.

ஆனால் நம் நிலையில் வழி வந்த நிலை தான் இன்று வாழ்ந்திடும் நிலை. அவர்களின் தொடர்பை ஏற்றே இனி வழி நடந்திடுவோம்.

Leave a Reply