பால்வெளி மண்டலமும்… அதிலிருக்கும் அபரிதமான சக்திகளைப் பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது

பால்வெளி மண்டலமும்… அதிலிருக்கும் அபரிதமான சக்திகளைப் பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இந்தப் பூமி பால்வெளி மண்டலத்திலிருந்து சூரியனின் ஒளிக் கதிரினால் வந்துள்ள அணுக்கதிர்களை
1.எப்படித் தனதாக ஈர்த்துப் பல கனி வளங்களை வளர்க்கின்றதோ அந்த நிலை போல்
2.இந்தப் பூமி எனும் மண்டலத்தில் “நம் ஆத்ம மண்டலம் எந்தச் சக்தியையும் கண்டுணரலாம்…”

நம் பூமியில் சூரியனின் ஒளிக் கதிர்கள் பட்டு பூமியும் நாமும் மட்டும் பலன் பெறவில்லை. பூமிக்கும் மற்ற எல்லா மண்டலங்களுக்கும் பொதுவான பால்வெளி மண்டலத்தில் உள்ள சக்தி நிலையை யார் அறிவார்…?

இந்தப் பால்வெளி மண்டலத்திலும் பல கோடி உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்ந்து… அந்த நிலையிலேயே மாற்றுடல் பெற்றுப் பல நிலைகள் நடக்கின்றன.

இந்தப் பால்வெளி மண்டலத்தில் பல அமில சக்திகள் நிறைந்தே திரவ நிலையில் படர்ந்துள்ளன.

இன்றைய நம் விஞ்ஞானிகள் இதை உணர்ந்தாலும்… அந்தத் திரவத்தையும் நம் பூமிக்கு ஈர்த்து எடுத்திடும் நிலைப்படுத்தி… “அந்த இயற்கையின் சக்தியையே தன் செயற்கையின் அழிவுக்குச் செயல்படுத்திடுவர்…”

இன்னும் இந்த வான மண்டலத்தில் எண்ணிலடங்கா சக்தி நிலைகள் படர்ந்துள்ளன. நாம் காணும் நிலைக்கு
1.மேகங்களும் பால்வெளி மண்டலமாகவும் காட்சி அளிக்கும் பால்வெளி மண்டலத்தினால் தான்
2.“அனைத்துக் கோளங்களுமே ஜீவன் கொண்டு சுழல்கின்றன…!”

இந்தப் பூமியும் சூரியனும் சந்திரனும் மற்ற எல்லா மண்டலங்களுமே தன் நிலையில் ஒரே இடத்தில் தன்னைத் தானே சுற்றிக் கொண்டுள்ளது என்பதல்ல. சுழன்று கொண்டே… ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று சிக்காவண்ணம்… சுற்றிக் கொண்டே ஓடுகின்றன.

வழக்கமாகத் தெரியும் நட்சத்திரங்களைக் காட்டிலும் புதிய புதிய நட்சத்திர மண்டலங்களையும் வான்வெளியில் காண்கின்றோம்.

இந்தப் பூமியின் ஈர்ப்பு சக்தியின் நிலை கொண்டும்… இந்தப் பூமியின் அமில சக்தியின் தொடர்பு கொண்ட நட்சத்திர மண்டலங்களாக வாழ்ந்திடும் மண்டலங்களும்… இந்தப் பூமியின் ஓட்டத்துடன் தன் ஈர்ப்பு சக்தியையும் ஒன்றுபட்டுள்ளதால்… இந்தப் பூமியுடனே அவற்றின் நிலையும் சுழன்றே இதன் ஈர்ப்புடனே வருகின்றன.

புதிய நட்சத்திர மண்டலங்கள் என்பது இந்தப் பூமியின் ஓட்டத்தினால் அங்கங்குள்ள இப்பால்வெளி மண்டலத்திலிருந்து ஒன்றுபட்ட அமிலத்தினால் சிறு சிறு நட்சத்திர மண்டலங்களாக ஆங்காங்கு சுழலும் நட்சத்திர மண்டலங்கள்.

இச்சுழலும் வேகத்தில் ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று சிக்குகின்றன. சில நட்சத்திர மண்டலங்கள் மாறு கொண்ட அமில கக்தி கலந்துள்ளனவாக இருந்தால் இவ் ஈர்ப்பில் வந்தடையாமல் உருகும் நிலையாக பரந்த நிலைப்படுத்திப் பிரித்து விடுகின்றது.

இன்று காணும் நட்சத்திர மண்டலங்கள்… இந்தப் பூமியைப் போலவும் இந்தப் பூமியின் நிலைக்கொப்ப வளர்ந்த நிலை கொண்ட பெரிய மண்டலங்களின் நிலை போலவும் இல்லாமல்… ஆவியான அமிலங்கள் ஒன்றுபட்டுக் கரையும் நிலை கொண்ட வடிவத்தில் தான் சுழன்று கொண்டுள்ளது பனிக்கட்டியைப் போல்.

பனிக்கட்டி என்பது குளிர்ந்து நீராகும் தன்மையில் உறைந்துள்ளது. ஆனால் நட்சத்திர மண்டலங்களின் நிலை அதுவல்ல.
1.அமிலமாக அமிலத்தையே ஈர்த்து அமிலக் கோளங்களாக
2.உயிரணுக்களை வளர்த்திடாமல் சுழன்று கொண்டுள்ளவை.

இந்தப் பூமியில் உள்ள எல்லாக் கனிவர்க்கங்களுமே கரைபவை தான். ஆவி நிலை கொண்டவை தான் என்று ஏற்கனவே உணர்த்தியுள்ளேன்.

சூரியனிலிருந்து வரும் எல்லா நிலை கொண்ட அமிலத்தையும் ஈர்க்கும் நம் பூமியில்… மண்ணும் கல்லும் ஈயம் பித்தளை செம்பு தங்கம் வைரம் இதற்கும் மேல் சக்தி கொண்ட பல படிவங்களும் கலந்துள்ளன.

நட்சத்திர மண்டலத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலை கொண்ட அமிலத்தை ஈர்ப்பதனால் நம் பூமியில் உள்ள பல நிலை கொண்ட கனிவர்க்கத்தின் நிலை போல் ஒவ்வொரு நிலை கொண்ட நட்சத்திர மண்டலங்கள் பல கோடி நிலைகள் உள்ளனன.

இன்றைய இந்தக் கலியில் தங்கத்திற்குப் பொருளாதாரச் செல்வமாக மதிப்புத் தந்திடும் “தங்கத்தையே கோளமாக…” ஒரு நிலை கொண்ட அமிலமாக ஈர்த்து நட்சத்திர மண்டலமாக பல கோடி சுற்றிக் கொண்டுள்ளன.

இந்தப் பூமியின் கனி வளங்களின் சக்தி நிலை கொண்ட அமிலங்கள் எல்லாமே தனித்துப் பல நிலைகள் கொண்ட நட்சத்திர மண்டலங்களாகச் சுழன்று கொண்டுள்ளன.
.
இன்றைய மனிதன் விஞ்ஞானத்தினால் பெரிய கோள்களின் நிலை அறிந்திடச் செல்கிறான். இந்தச் சிறிய கோளமான நட்சத்திர மண்டலங்களின் சக்தி அறியாததனால்…!

Leave a Reply