என்றுமே அழியாத துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும்

real wealth bliss

என்றுமே அழியாத துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும்

 

அகஸ்தியன் எல்லா விஷத்தையும் நீக்கி இருளை நீக்கி ஒளியாகப் போனான். கணவன் மனைவி ஒளியான உடல் எடுத்துத் துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

நம் சூரியக் குடும்பமே அழிந்தாலும் சரி… இந்தத் துருவ நட்சத்திரமும் அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கக் கூடிய சப்தரிஷி மண்டலங்களும் அழியவே அழியாது. இது வேகாக் கலை…!

நாம் தீயில் குதித்தால் உடல் கருகுகிறது. ஆனால் உயிர் கருகுவதில்லை.
1.எப்படி உயிர் வேகுவதில்லையோ அதைப் போல்
2.பிரபஞ்சத்தில் எத்தனை விதமான விஷத் தன்மைகள் வந்தாலும்
3.துருவ நட்சத்திரமும் அழியாது அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருப்பதும் அழியாது.

ஏனென்றால் நம் சூரியக் குடும்பம் எல்லாம் நம் உடலைப் போல அழியக் கூடியது தானே தவிர “அது முழுமையானது அல்ல…” என்பதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ரிஷியின் மகன் நாரதன்… நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன்…! என்ற நிலையில் துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வரும் அலைகளை எல்லாம் சூரியன் எடுத்துக் கவர்ந்து அலைகளாக வைத்துள்ளது. அதனால் தான் அதை நாராயணனின் அபிமான புத்திரன் என்பது. (நாராயணன் என்றால் சூரியன்)

சூரியன் என்ன செய்கின்றது..?

எந்தெந்தச் செடியில் இருந்து வாசனை வருகின்றதோ அந்த சத்தை எல்லாம் எடுத்து அலைகளாக மாற்றி நம் பூமியில் பரவச் செய்கின்றது. அந்தந்தச் செடியில் விளைந்த வித்தை பூமியில் நாம் ஊன்றினால் அதற்கு சாப்பாடாகக் கொடுத்து அதை வளர்க்கின்றது சூரியன்.

உதாரணமாக இரண்டு பேர் சண்டை போடுகின்றார்கள். ஒருத்தர் வேதனையோடு வருகின்றார். நாம் அதை உற்றுப் பார்த்து நுகர்ந்தால் நம் உடலுக்குள் அது பதிவாகி விடுகின்றது.

சண்டை போடுவோர் உடலிலிருந்து வெளிப்படும் அலைகளைச் சூரியன் கவர்ந்து அலைகளாக வைத்துக் கொள்கிறது.

நமக்குள் அந்த வேதனைப்படுவோரின் உணர்வு பதிவான பிற்பாடு அவரை எண்ணும் போது சூரியன் கவர்ந்த அந்த வேதனையான உணர்வலைகளை நாம் நுகர்கின்றோம். அதாவது பதிவான அந்த வித்திற்குச் (வினை) சத்தாகச் சூரியன் கொடுக்கின்றது. அவனை நினைக்கும் போதெல்லாம் அந்த வேதனை நம் உடலில் விளைகின்றது.

வேதனைப்படுகின்றார்கள் என்று பார்க்கின்றோம்.. விபரத்தைக் கேட்கின்றோம். ஆனால் நம் உடலில் அது விளைகின்றது. ஆக.. வேதனை என்ற உணர்வை நுகர்ந்து அந்த வேதனையை நமக்குள் வளர்க்க முடிகின்றது.

அதே போல்… வேதனையை நீக்கிய அந்த அருளுணர்வைப் பெறச் செய்வதுதான் ரிஷியின் மகன் நாரதன்… நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன்…!

அதை எடுத்து நாம் சுவாசித்தோமென்றால் அவன் வாழ்க்கையில் எப்படி விஷத் தன்மையை நீக்கினானோ அந்த உணர்வின் சத்து நமக்குக் கிடைக்கும். நாரதன் கலகப்பிரியன்…! கலகமோ நன்மையில் முடியும்.

யாரோ சண்டை போடுகின்றார்கள் என்று தான் நாம் பார்க்கின்றோம். அதிலே யாராவது ஒருத்தர் திட்டுகின்றார்… அடிக்கின்றார்…! ஏனென்றால் அவர் மோசமான ஆள். அந்த இரண்டு பேருக்கும் வெறுப்பு இருப்பதனால் சண்டை போடுகிறார்கள்.

சண்டை போடும் சந்தர்ப்பம் நாம் அதைப் பார்க்கின்றோம். ஒருத்தர் மேல் நாம் பாசமாக இருந்தால்… அந்த நல்ல மனிதனை இப்படித் திட்டுகின்றானே…! என்று நினைக்கின்றோம்.

அவ்வாறு திட்டும்போது நம்முடைய மனது கேட்குமோ…? ஏனப்பா…? இந்த மாதிரி எல்லாம் செய்கின்றாய்…? என்று அந்தத் திட்டுபவரைக் கேட்கிறோம்.

அவர் உடனே உனக்கு என்ன தெரியும்…? என்று நம்மிடம் கேட்டால் அப்பொழுது இல்லாத வம்பு வந்து விடுகிறது. அதைத் திருத்த முடிகின்றதா…? என்றால் நம்மால் முடியவில்லை. அவர்களை எதாவது சொல்ல முடியுமோ…?

1.ஆனால் அதே உணர்வு நமக்கு வந்தால் நாம் சும்மா விடுவோமோ…?
2.சொல்கிறேன்… கேட்க மாட்டேன் என்கிறான்… இரு நான் பார்க்கின்றேன்..! என்று நாமும் வம்பு தான் பேசுவோம்

இது எல்லாம் நமக்குத் தெரிகின்றது… இருந்தாலும் அவனிடம் வம்பை இழுக்கின்றோம். அப்பொழுது அந்தக் கலகம் வருகின்றது.

இதைச் சுத்தப்படுத்தவில்லை என்றால் சண்டையிடுவோரை எண்ணி… அந்த நல்ல மனிதன் சும்மா இருந்தாலும் இந்த மாதிரிப் பேசுகிறான் பார்…! என்று அதை எடுத்து நமக்குள் வளர்த்து கொள்கிறோம்.

அதாவது… அவர்கள் செய்யும் தவறை நாமும் செய்ய வந்து விடுகின்றோம். (நாம் அவரைத் திட்டத் தொடங்குகின்றோம்)

அதற்குப் பதிலாக… “ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி…” அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தால் நம் உயிரிலே பட்டு அந்த ஒளியான உணர்வுகள் நம் இரத்தத்தில் கலக்கின்றது.

அந்தத் துருவ நட்சத்திரம் நஞ்சுகளை எல்லாம் கரைத்து ஒளியாக மாற்றும் திறன் பெற்றது.
1.அந்தச் சக்தி உள்ளுக்குள் போனவுடன் நாம் பிடிவாதமாக இருப்பதை உடனே சிந்திக்கச் சொல்லும்.
2.இந்த நேரத்தில் சண்டையிடுவோரிடம் வாயில் சொன்னால் கேட்க மாட்டார்கள் என்ற உணர்வையும் பிரித்துக் காட்டும்,

இவ்வாறு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நம் இரத்தங்களில் கலக்க வேண்டும் என் உடல் முழுவதும் படர வேண்டும் என் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்து பெற வேண்டுமென்று எண்ணி உடலுக்குள் செலுத்தினால் முன்னாடி இந்தப் பாதுகாப்பு கொடுக்கின்றது

அதற்குத் தான் இந்த தியான பயிற்சியாகக் கொடுக்கின்றோம். அதை சேர்த்துப் பழகிக் கொள்ள வேண்டும். அதை எடுத்து இரத்தத்தில் கலக்க வேண்டும் என்று சொல்லும் போது நாம் எடுத்த உணர்வுகள் அது உமிழ் நீராக மாறுகின்றது.

சிறு குடல் பெருங்குடலுக்குள்ளே போகின்றது. நல்ல இரத்தமாக மாறுகின்றது நம் உடல் முழுவதற்கும் அது நன்மை செய்யும் பக்குவமாக வருகின்றது.

வேதனைப்படுவோரை பார்க்கின்றீர்கள். உமிழ் நீர் வருகின்றது நம் இரத்தத்தில் வேதனை என்ற விஷமாக வருகின்றது.

அப்பொழுது ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் அவன் கலகப்பிரியன் அப்பொழுது நம்முடைய பிடிவாதத்தை விடுக்கச் செய்து நம் உடலில் வேதனை உருவாகாது தடுக்கின்றது.

நாரதன் கலகம் நன்மையில் முடியும் என்கிறபோது நம் உடலில் எத்தனை விதமான கலக்கங்கள் இருக்கின்றதோ அதையெல்லாம் மாற்றிவிடுகிறது. உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்…!

Leave a Reply