விண் செல்லும் மார்க்கம்

soul propulsion ultimate

விண் செல்லும் மார்க்கம்

கண்ணின் நினைவை உங்கள் உடலுக்குள் செலுத்தி உங்கள் உடல் முழுவதும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று உங்கள் நினைவினைக் கூர்மையாக்கி உடலுக்குள் செலுத்தி ஏங்கித் தியானிக்கவும்.

அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் வலுக் கொண்டு எடுத்துக் கொண்ட பின் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையர்களின் உயிராத்மாக்களை நாம் விண்ணிலே உந்திச் செலுத்தி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.

1.அப்பொழுது உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைக்கப்படுகின்றது.
2.மனிதனாக வளர்ந்த தெளிவான அறிவு நிலைக்கின்றது
3.உயிருடன் ஒன்றி… அந்த சப்தரிஷிகளின் அருள் ஒளி பெற்று
4.அங்கே பேரின்பப் பெரு வாழ்வு வாழத் தொடங்குகின்றார்கள்.

ஏனென்றால் இதற்கு முன்னாடி நம்முடன் வாழ்ந்து வந்த தாத்தாவோ பாட்டியோ அவர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்றிருந்தாலும் மேலே சொன்னபடி செய்ய மறந்திருந்தாலும் இப்பொழுது நாம் அதைச் செய்ய வேண்டும்… அவர்களை விண் செலுத்த முடியும்.

அதே போல் கணவனை இழந்திருந்தாலும் அல்லத் மனைவியை இழந்திருந்தாலும் இங்கே உடலுடன் இருப்பவர்கள் அந்த உயிரான்மாவை யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்திடல் வேண்டும்.

கணவனும் மனைவியும் வாழ்ந்த காலங்களில் இரு உணர்வும் ஒன்றி வாழ்ந்தது தான். ஆனால் ஒருவர் உடலை விட்டுப் பிரிந்து சென்று விட்டால் அவர் உணர்வு உங்கள் உடல்களில் உண்டு.

ஆகவே அந்த உயிரான்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால் தான்…
1.அவர்கள் அங்கே ஒளிச் சரீரம் ஆகும் போது
2.அவர் ஒளியான உணர்வை நாமும் பெற்று
3.இந்த உடலை விட்டு நாம் சென்ற பின்னும் அவருடன் ஐக்கியமாகி
4.சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் அதைப் போன்று
5.அருள் ஒளிக் கதிர்களை உருவாக்கி ஒளியின் சரீரமாக்கி நாமும் நிலைத்துக் கொண்டிருக்க முடியும்.

சூரியனின் ஒளி மங்கப்பட்டு… இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும்… இதில் உருவான மனிதர்கள்… ஒளி நிலை பெற்ற சப்தரிஷிகள் அகண்ட உலகில் சென்று அந்த உணர்வினைத் தனக்குள் பெற்று “ஒளியாக மாற்றி… என்றுமே ஒளியின் சரீரமாக நிலைத்து நிற்க முடியும்…!

1.அத்தகைய நிலையைப் பெறுவதற்குத்தான்
2.பல கோடிச் சித்தர்களும் ஞானிகளும் மகரிஷிகளும் முயற்சிக்கின்றனர்.

மகரிஷிகள் என்பவர்கள் இதை எல்லாம் (ஒளி) சிருஷ்டித்துக் கொண்டவர்கள். ஞானிகள் கண்டுணர்கின்றார்கள். ஞானிகள் கண்டுணர்ந்த நிலைகள் உயிருடன் உருவாக்கப்படும்போது ரிஷி ஆகின்றார்கள்.

1.ஞானத்தின் வழி கொண்டுதான் ரிஷியின் தன்மை உருவாக்க முடியும்.
2.ஞானத்தின் துணை கொண்டுதான் மனிதன் விமானத்தை உருவாக்குகின்றான்
3.ஞானத்தின் துணை கொண்டுதான் மனிதன் இராக்கெட்டை உருவாக்குகின்றான்
4.ஞானத்தின் துணை கொண்டுதான் மனிதன் கம்ப்யூட்டரை உருவாக்குகின்றான்
5.அதே ஞானத்தின் துணை கொண்டுதான் விண்ணிலிருக்கும் பல பல நட்சத்திரங்களையும் மனிதன் கம்ப்யூட்டர் கொண்டு பதிவு செய்கிறான்.

பதிவு செய்த உணர்வை இராக்கெட்டின் முன்னாடி முகப்பில் வைக்கின்றனர். இராக்கெட்டின் முகப்பில் வைத்தபின் எந்த நட்சத்திரமோ அங்கே அழைத்துச் செல்கின்றது. அங்கே அழைத்துச் சென்று அங்கிருப்பதை எல்லாம் படமாக்குகின்றது. அங்கே படமாக்குவதை எல்லாம் தரையில் இருக்கக்கூடிய கம்ப்யூட்டர் மூலம் உணர்கின்றனர் பார்க்கின்றனர் இன்றைய விஞ்ஞானிகள்.

இதைப் போலத்தான்…

1.தன் கணவரின் உணர்வை முகப்பில் வைத்து
2.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று இணைத்து விட்டால்
3.அதே சப்தரிஷி மண்டல உணர்வினை முகப்பில் வைத்துத் தானும் வளர்ந்து கொண்டிருந்தால்
4.இந்த உடலை விட்டுச் சென்ற பின் அவருடன் இணையச் செய்து… இரு உயிரும் ஒன்றச் செய்து
5.அணுவின் ஒளிக் கதிராக மாற்றும் தன்மை அடைகின்றோம்.
6.இது ஒன்றும் கடினமல்ல… விஞ்ஞானம் நிரூபிக்கின்றது.
7.மெய் ஞானிகள் பல காலத்திற்கு முன்னாடியே சொன்னார்கள்…!

அதைத்தான் யாம் உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தி விண் செல்லும் உணர்வை ஊட்டுகின்றோம்.

Leave a Reply