உடலில் நோய் வரக் காரணமும் நோய் வராது தடுக்கும் வழிகளும்

immune power

உடலில் நோய் வரக் காரணமும் நோய் வராது தடுக்கும் வழிகளும்

 

ஒருவன் வேதனைப்படுகின்றான் என்ற உணர்வினை நாம் நுகர்ந்தறிந்தால் அது இரத்தத்தில் கலந்து கருவாகி முட்டையாகின்றது.

இரத்தம் சுழன்று வரும் போது நம் உறுப்புகளில் எந்தப் பாகத்தில் ஒட்டி அந்தக் கரு முட்டை வெடித்து அது அணுவாகத் தோன்றுகின்றது.
1.வேதனையால் உருவான அந்த அணு
2.அதே வேதனை என்ற உணர்வை உணவாக உட்கொள்ளத் தன் உணர்ச்சிகளைத் தூண்டும்போது
3.நம் உயிருக்குள் வருகின்றது அந்த உணர்ச்சிகள்…!

அந்த உணர்ச்சியின் வழி கொண்டு உயிர் ஆணையிட்டு நம் கண்ணால் கவர மீண்டும் கண்ணுக்கே அனுப்புகின்றது அந்த உணர்வுகள். வேதனைப்படுவோரின் அந்த உணர்வுகள் படமாக… அவரைப் பற்றிய நினைவு கண்ணுக்குத் தான் வரும்.

எந்த மனிதன் வேதனைப்பட்டானோ அந்த மனிதன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வினை நுகரச் செய்கின்றது இந்த உயிர். நம் உயிரிலே பட்டபின்
1.நம்மை அறியாமலே நாம் வேதனைப்படுகின்றோம்
2.வேதனையான சொல்களைச் சொல்லுகின்றோம்
3.வேதனையான உணர்ச்சிகளைக் கொண்டு வேதனையான செயல்களைச் செய்யத் தொடங்கிவிடுகின்றோம்.

இது நம்மை அறியாமல் இயக்கும் நிலைகள். நாமல்ல… இந்த உணர்வுகள் தான் இப்படி வேலை செய்கின்றது.

டி.வி. ஸ்டேசனிலிருந்து ஒளி அலைகளைப் பரப்பப்படும்போது நம் வீட்டில் டி.வி.யை எந்த அலைவரிசையில் வைக்கின்றோமோ காற்றிலிருந்து கவர்ந்து அதே உணர்வின் இயக்கமாக பாடலும் ஆடலும் வருகின்றது

இதைப் போலத்தான் நம்முடைய உணர்வுகளின் இயக்கமும்…!

உற்றுப் பார்த்துப் பதிவான உணர்வு உடலிலே அணுவாக விளைந்த பின் அதே உணர்ச்சிகளை நமக்குள் தூண்டி அந்த நினைவின் எண்ணமாக
1.சொல்களைச் சொல்லச் செய்வதும்
2.நம் உடலை அசையச் செய்வதும்
3.அதன் வழி நம்முடைய செயல்களைச் செயலாக்கும் சக்தியாக மாற்றுகின்றது.

இருப்பினும்… அந்த வேதனையான உணர்வின் அணுக்கள் நம் உறுப்புகளில் இணைந்து விட்டால் அது உணவாக உட்கொள்ளும் உணர்வின் சத்து அதனுடைய மலமாகும் போது நம் உடலாக அமைந்து விடுகின்றது.

இப்படி அந்த வேதனையான அணுவின் மலம் நம் உடலுடன் இணையப்படும் போது உடலில் உள்ள நல்ல அணுக்களின் மலத்தில் இந்த தீமையின் அணுவின் மலம் சேர்க்கப்படும்போது என்ன ஆகின்றது…?

நல்ல அணுக்களுடன் வேதனை அணுக்கள் சேர்ந்தவுடனே…
1.உடலில் சில பாகங்களில் பளீர்… பளீர்… என்று மின்னும்…
2.ஊசியால் குத்துவது போல் வலி வரும்…
3.உடல் உறுப்புகளில் வேதனை ஏற்படத் தொடங்கும்.

உதாரணமாக சர்க்கரைச் சத்து நோய் வந்து விட்டால் அந்த அணுக்கள் உடலிலே உருவாக்கிவிட்டால் நம் உடலில் உள்ள மற்ற உறுப்புக்களை கரைக்கச் செய்து இரத்தத்தைக் காணாமலே செய்து விடுகின்றது. உடலிலே புண் வந்தால் அதுவும் ஆறுவதே இல்லை.

இந்த விஷக் கிருமிகள் உடல் முழுவதும் பரவப்பட்டு சீக்கிரமாக இந்த உடலையே முடித்து விடுகின்றது.

இரத்தக் கொதிப்பு வரப்படும்போது அந்த உணர்ச்சியின் வேகங்கள் உயிரிலே இணைந்து துடிக்கப்படும் போது உடலில் உள்ள கை கால் அங்கங்களை முடக்கச் செய்து விடுகின்றது.

வேதனை வேதனை என்ற உணர்வின் சத்தை நுகர்ந்தால் என்ன ஆகின்றது…?

உதாரணமாக ஒரு விஷத்தைச் சாப்பிட்ட பின் உடல் எப்படித் துவண்டு விழுந்து செயலற்ற நிலையில் ஆகின்றதோ இதைப் போல விஷத்தின் அணுக்கள் உடலிலே விளைந்து அது வாத நோயாக மாறி உறுப்புகள் அனைத்தும் செயலற்றதாக மாறிவிடுகின்றது.

இவை எல்லாம் நம் வாழ்க்கையில் நம்மை அறியாமல் வரக்கூடிய நிலைகள் தான்.

பிறருடைய துயரங்களையும்… பிறருடைய கஷ்டங்களையும்… பிறருடைய துன்பங்களையும்… பிறருடைய வேதனைகளையும்… நாம் நுகர்ந்தறிந்து மனிதப் பண்புடன்… பரிவுடன்… ஈகையுடன்… இரக்கத்துடன்… நாம் சேவை செய்யும் மனப்பான்மையில் அவர்களுக்கு உதவிகள் செய்கின்றோம்.

ஆக… அவர்கள் படும் வேதனை உணர்வை நுகரப்படும்போது “வேதனைப்படுகின்றனர்…” என்று உணர்த்துகின்றது.
1.ஆனால் அந்த வேதனையான உணர்வின் அணுவாக நம் உயிர் மாற்றுகின்றது.
2.அதனின் கருவாக உருவாக்கி விட்டால் அதே அணுவின் தன்மை ஆனபின்
3.அது நம் உடலிலே துன்பத்தை உருவாக்கும் நோய் நிலைகளை உருவாக்கிவிடுகின்றது.

இதை யார் காப்பது…?

பிறருடைய வேதனை என்ற உணர்வினை நுகர்ந்தாலே அடுத்த கணம் அதை நாம் வேக வைத்தல் வேண்டும். எவ்வாறு வேக வைக்க வேண்டும்…?

காலை துருவ தியானத்தின் மூலம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உடல் உறுப்புகளுக்கும் உடலில் உள்ள அணுக்களுக்கும் வலு ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறவேண்டும் என்றால் இந்த யாம் உபதேச வாயிலாகக் கொடுக்கும் அருள் உணர்வுகளை செவி வழி உங்களுக்குள் பதிவு செய்ததை மீண்டும் நீங்கள் எண்ணுதல் வேண்டும்.

பிறர் வேதனைப்படும் உணர்வினை நுகர்ந்து அவருக்குத் தக்க உபகாரம் செய்தாலும் நாம் அடுத்த கணம் ஈஸ்வரா என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டிடல் வேண்டும்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று
2.புருவ மத்தியில் எண்ணி ஒரு இரண்டு நிமிடம் அங்கே நிலை நிறுத்த வேண்டும்.
3.நாம் நுகர்ந்த வேதனைப்பட்ட உணர்வு நம் ஆன்மாவாக இருப்பதை நுகராதபடி
4.தீமை செய்யும் உணர்வுகள் உடலுக்குள் செல்லாதபடி தடைப்படுத்துதல் வேண்டும்.

Leave a Reply