ஆத்ம உயிரை ஆண்டவனாக்கும் வழிமுறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

secrets of soul

ஆத்ம உயிரை ஆண்டவனாக்கும் வழிமுறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மனித உணர்வின் சூட்சுமத்தை… “மனிதனே அறியக்கூடிய ஒளி சக்தி வளரும் சுயநலச் செயலினால்தான்…” பொதுநலனின் பரிமாணத்தை விரிவுபடுத்த முடியும்.

மனிதனுக்குகந்த வீரிய மின் காந்த ஒளி சக்தி மிருகத் தன்மையின் சரீர இயக்கத்தில் அதிகப்பட்டிருந்தாலும் உணர்வின் செயலைப் பக்குவப்படுத்தக்கூடிய தன்மை அவைகளுக்குக் குறைவு.

ஆகவே “மனித எண்ணத்திற்குத்தான்” பகுத்தறிவின் சூட்சும ஒளியை வளர்க்கும் தன்மை… இப்பூமியின் சூட்சுமமுடன் வளர்ந்த “ரிஷிகளின் செயலினால் செயல்படுகின்றது…!” ஒன்றின் வளர்ச்சியில் ஒன்றின் பக்குவத்தால்.

மிருகங்களுக்குப் பிரித்துப் பார்க்கும் தன்மை மனிதனை ஒத்து இருப்பதில்லை. ஆனால் மிருகங்களும் இப்பூமியின் ரிஷிகளின் சூட்சுமத்தில் வளர்க்கப்பட்ட இறை சக்தி தான்.

அவைகளுக்குக் கழிவும் உணவும்… ஒரே இடத்தில் ஒன்றாக இருந்தாலும் மனிதனை ஒத்து அருவருப்பு… நாணம்… முதலியன மிருகங்களுக்கு இருப்பதில்லை.

மனிதனின் பகுத்தறிவால் தனக்குகந்ததை உயர்ந்ததாய்ப் பெற்று மகிழக் கூடிய பக்குவம் கொண்ட செயல் வளர்ச்சி வீரியம் பெற்ற ஜீவ இறையருளின் உன்னதத் தன்மை கொண்டவன்.

தாவரங்களும் மிருகங்களும் மனிதனும் இப்பூமியின் இறை சக்திகள் தான்.
1.இறை சக்தியே இறையுணர்வு பெற்று
2.இறைத் தன்மையில் பக்குவப்படுத்தக்கூடிய குணம் தான் தெய்வ குணம்.

இப்பூமியில் ஆரம்ப மனிதன் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இன்றைய மனித வாழ்க்கைக்கும் நிறைய மாற்றங்கள் உண்டு. மனிதத் தேவைக்குகந்த உணவு… உடை… இருப்பிடம்… ஒவ்வொன்றிலும் தன் ஞானத்தால் மனித வாழ்க்கையின் வசதிக்குகந்த பக்குவத்தை மனிதன் இன்று பல வகையிலும் வளர்த்துக் கொண்டுள்ளான்.

அதைப் போன்று… இச்சரீர சுகத்தின் தேவையில் வளர்ச்சியுற்ற மனிதன் ஆத்ம தேவையின் பக்குவத்தை… இறை குணத்தின் வளர்ச்சியை வலுக்கூட்டும் தெய்வத் தன்மையால்… இக்கலியின் மாற்றத்தில் கல்கியில்…
1.இன்றைய மனிதனைக் காட்டிலும்
2.மனித எண்ணத்தின் வீரியத்தின் தெய்வத் தன்மையால்
3.மனிதன் “பறக்கும் நிலை” கொண்ட உயர்ந்த செயல் நிலைக்கு வர முடியும்.

ஒன்றைப் பக்குவப்படுத்தி அப்பக்குவத்தின் பொருளை எப்படி நமக்குகந்ததாக ஏற்படுத்தி சரீர வாழ்க்கையில் இன்பத்தைக் காண்கின்றோமோ அதைப் போன்று… ஆத்மாவின் பக்குவத்தில் அகிலத்திலும் கலந்துள்ள ஆதி சக்தியின் செயல் சக்தியில் “உயர்ந்த தன்மையான சூட்சும ஒளியால் ரிஷி சக்தியை மனிதன் பெற முடியும்…”

மனிதனின் ரிஷி சக்தியைக் கொண்டுதான்… மூவுலக சக்தியான “ஆக்கல் காத்தல் மாற்றல்” என்ற வழித் தன்மையில்… வளர்ச்சியில் வளரும் அண்டக் கோள்களில்… பால்வெளி மண்டலத்தில் எண்ணிலடங்கா இறை சக்தியில் இறையுணர்வாகும் தெய்வ சக்தியில்… ஆண்டவன் என்ற படைப்பின் தன்மைக்குச் செயல் கொள்ளும் ரிஷித்தன்மையால்… அந்தந்த அமிலத்தின் உருத்தன்மையில் உருவாகும் உயிர்த் தன்மையில் பக்குவம் கொள்ளும் படைப்பின் ஒளித் தன்மையை… ரிஷித்தன்மையின் ஒளித் தன்மையால் தனக்கொத்த செயலுக்கு மண்டலங்களை உருவாக்கி… உருவின் உருக்களை உணரும் வளர்ச்சியைத் தன் வலுவாக்கி… அண்டக் கோள்களையும் படைக்கும் ரிஷிகளால்… படைப்பின் பலனாய்ப் பக்குவப்படுத்தப்பட்ட உணர்வின் தெய்வ குணத்தின் “ஆண்டவனாக்கும்” வழிச் செயல்தான்… “அண்டத்தின் சூட்சுமத்தில் ஆதி சக்தியின் உண்மைச் சக்தி – உருப்பெறும் நிலை…!”

இச்சரீரத்தின் உணர்வை… “மின் காந்த ஒளி சக்தியை” இப்பூமியின் பிடிப்பில் இச்சரீர வாழ்க்கையில் அடையும் சுகத்தால் உணர்வின் எண்ணம் ஆத்மாவை வளர்க்க உதவாது.

இச்சரீரத்தை இப்பூமியின் பிடிப்பிற்கு அடகு வைக்கும் மனித உணர்வினால் அடையப் போகும் நன்மை எதுவுமில்லை…!

ரிஷிகளின் சக்தியால் பல கோடி ஆண்டுகளாய் பலவற்றில் வளர்ந்து வலுவாகி உள்ள இவ்வுயிராத்மாவை… ஆத்ம உயிரின் வீரியத்தின் உண்மையை உணரும் எண்ணத்தில்.. மனிதன் தன்னைத் தானே உணரும் பக்குவத்தால்… ஆத்ம உயிரின் சுயநலத்தைக் கொண்டு பொது நலத்தை வளர்க்கும் சூட்சுமத்தை உணர முடியும்.

தான் உண்ணும் உணவிற்கு…
1.நெல்லை எடுத்து அதிலுள்ள உமியை ஊதிப் பிரித்து விட்டு
2.மணியை (அரிசி) எடுத்துப் பக்குவப்படுத்தி உண்ணும் மனிதன்
3.தான் எடுக்கும் எண்ணத்தின் உணர்வைப் பக்குவமாக்கி
4.ஆத்மாவின் ஒளியை வளர்க்கும் தன்மை ஏன் பெற முடியாது…?

தன்னில் உள்ள இறைத் தன்மையை… தெய்வமாக்கும் நற்குணம் கொண்ட பக்குவத்தால்
1.ஆத்ம உயிரை ஆண்டவனாக்கும் வழிமுறைதான்
2.இங்கே உணர்த்தப்படுவதன் சக்தி நிலையின் உண்மை நிலை.

Leave a Reply