அகஸ்தியர் உருவத்தைக் கூழையாகக் காட்டியதன் உட்பொருள் என்ன…?

lightnings - agastya

அகஸ்தியர் உருவத்தைக் கூழையாகக் காட்டியதன் உட்பொருள் என்ன…?

இருபத்தியேழு நட்சத்திரங்களும் விஷம் கொண்டது. அதில் ஒரு நட்சத்திரத்திலிருந்து வெளிப்படுவது இன்னொரு நட்சத்திரத்துடன் அந்தத் தூசிகள் மோதும் போது “மின்னலாக மாறுகின்றது…”

அந்த மின்னல் வேகமாக வந்தாலும்…
1.குழந்தைப் பருவத்தில் இருக்கும் அகஸ்தியன் கண் கொண்டு அவைகளை உற்றுப் பார்க்கும் போது
2.அது அவனுக்குள் அடங்கி அது மகிழ்ச்சியூட்டும் உணர்வாக வருகின்றது.

அத்தகைய மின்னலின் செயலாக்கங்களையும் அது எந்தெந்த நட்சத்திரத்திலிருந்து வருகின்றது…? மோதுகின்றது…? என்ற நிலையை அறியும் தன்மை பெறுகின்றான் அகஸ்தியன் அந்தக் குழந்தை பருவத்திலேயே…!

உதாரணமாக ஒரு குளவி ஒரு புழுவைக் கொட்டித் தன் விஷத்தால் தீண்டி… தன் இனம் என்ற நிலையைப் பெருக்கச் செய்கின்றது.

தனக்குள் ஊறும் உமிழ் நீரைக் கொண்டு மண்ணால் ஒரு கூட்டை அமைக்கின்றது. விஷத்தைப் பாய்ச்சி அந்தப் புழுவை எடுத்துக் கொண்டு வந்து கூட்டுக்குள் அடைத்து விடுகின்றது.

குளவியின் விஷம் தாக்கியபின் புழுவின் உயிரின் துடிப்பு அதிகரிக்கின்றது. புழுவின் துடிப்போ கம்மியானது.
1.ஆனால் குளவியின் விஷத்தால் புழுவின் உயிர் துடிப்பு அதிகமாகி
2.அந்த விஷத்தின் தன்மையால் புழுவின் அணுக்களில் அதிகமாகத் துடிக்கும்போது
3.புழுவின் உடல் சுருங்கி விடுகின்றது.

சுருங்கிய உணர்வு கொண்டு “குளவியின் உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து…” அந்தக் குளவி எப்படி உருவானதோ அதே ரூபமாக புழுவை மாற்றி விடுகின்றது அந்தக் குளவியின் விஷத் தன்மை. அதனுடைய கலவை இப்படி மாற்றி விடுகின்றது.

இதைப் போலத்தான் அந்த விஷத்தின் தன்மை கொண்டு தாய் கருவிலிருக்கும் போது நஞ்சினை அடக்கிடும் சக்தி பெற்ற இந்த அகஸ்தியன்… அந்த மின்னலின் ஒளிக் கற்றைகளை நுகர்கின்றான்.

அந்த உணர்வின் தன்மை அவனுக்குள் வரும்போது இந்த உடல் பெறும் உணர்வின் தன்மையைச் சுருக்குகின்றது. உணர்வின் தன்மை வளர்க்கின்றது.

அதனால்தான் அன்று அகஸ்தியனை ரொம்பக் கூழையாகப் (குள்ளமாக) போட்டு காட்டியிருப்பார்கள்.
1.தசைகளின் வளர்ச்சி கம்மி…!
2.ஆனால் உணர்வின் அணுக்களின் சக்தி “வீரியம் அடைந்தது…!” என்ற நிலையை
3.அவ்வாறு தெளிவாக்கிக் காட்டுகின்றார்கள்

ஆகவே நட்சத்திரங்களிலிருந்து மின்னல்கள் வெளி வருவதைத் தனக்குள் நுகரப்படும்போது அந்தச் சக்தியால் அகஸ்தியன் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் வீரியத் தன்மை பெறுகின்றது.

எதனை நுகர்ந்தாலும் அதை மாற்றியமைக்கும் சக்தியை அவன் பெறுகின்றான். இப்படிப் பெற்றவன் தான் அகஸ்தியன்.

எத்தகைய விஷத் தன்மை கொண்ட தாவர இனங்களை நுகர்ந்தாலும் அதனுடைய இயக்கக் சக்தி அறிந்துணர்ந்தவன் ஆகின்றான் அகஸ்தியன்.

Leave a Reply