கோபம் ஆத்திரம் வேதனை பயம் போன்ற உணர்வுகள் உடலின் இயக்கத்தை நலியச் செய்து நோய் உருவாக எப்படிக் காரணமாகிறது…?

Magnetic power of human body

கோபம் ஆத்திரம் வேதனை பயம் போன்ற உணர்வுகள் உடலின் இயக்கத்தை நலியச் செய்து நோய் உருவாக எப்படிக் காரணமாகிறது…?

உதாரணமாக ஒரு பல்பிற்கு (ELECTRICAL BULB) அது எரிதற்குத் தகுந்தவாறு கரண்ட் இருந்தால்தான் அந்த பல்ப் சுடராக… வெளிச்சமாக இருக்கும்.

அது போல் சாதாரண மனிதனின் எண்ண அலைகளை எடுத்துக் கொள்வதற்கு நாம் இப்பொழுது எடுக்கும் மூச்சலைகளே போதுமானது.

அது போதுமானதாக இருந்தாலும் ஒரு மனிதனுக்குக் கோபமோ அல்லது பயமோ வந்து விட்டால் நம் உடலிலே காந்த சக்தி (POWER) குறையத் தொடங்கும்.

காந்த சக்தி கம்மியாக இருக்கும்போது…
1.ஒருவர் தவறு செய்கிறார்… என்ற அந்த வேகமான உணர்வுகளை நாம் இழுக்கப்படும் பொழுது
2.அதைச் சரியான முறையில் இயக்க முடியாத நிலைகளில் நம் உடல் அனைத்துமே நடுங்கும்.

ஒரு மோட்டாருக்குக் காந்த சக்தி (HORSE POWER) கம்மியாக இருக்கும் போது லோட் (LOAD) அதிகமாகி விட்டால் அதற்கு மேல் அந்த மோட்டார் சூடாகிவிடும்.

இதைப் போலத்தான் மனிதர்கள் நமக்குள் இருக்கக்கூடிய நிலைகளும்.

நம் உடலில் அடிக்கடி கோபம் சலிப்பு பயம் போன்ற உணர்வுகளைச் சுவாசிக்க நேர்ந்தால் நம் உடலில் காந்தத்தை உற்பத்தி செய்யும் சக்திகள் குறைகின்றது.

அப்படிக் குறையப்படும் போது…
1.முன் பகுதி ஏதோ கோபமாக பேசி இருப்போம் ஆத்திரமாகப் பேசி இருப்போம்.
2.அதைப் போன்ற உணர்வின் சத்துகளை அதிகமாகச் சுவாசித்து
3.நம் உடல்களில் சேர்க்கப்படும்போது பல வியாதிகளுக்கும் அது காரணம் ஆகின்றது.
4.அதே சமயம் நம் உடலில் இருக்கக்கூடிய காந்த சக்தியும் தேய்வாகின்றது.
5.அவ்வாறு தேய்ந்து விட்டால் நாம் எடுக்கும் எந்த ஒரு எண்ணத்தையும் அது சீராக இயக்கவிடாது.

ஒரு சங்கடமான நிலைகள் ஒருவர் சொல்கின்றார் என்றால் அதை நாம் காதுக் கொடுத்துக் கவனித்துக் கொண்டிருந்தால் போதும்

அந்த உணர்வை இழுத்து அதைக் கிரகிக்க கூடிய தன்மை இல்லாதபடி வெறுப்பு ஆத்திரம் இதைப் போன்ற உணர்வுகள் தான் நமக்குள் தோன்றும்.

ஆக அதைத் தாங்கும் நிலை நம் உடலில் இல்லாது போகின்றது. காரணம்… நம் உடலில் காந்தப்பவர் உற்பத்தி செய்யும் திறன் கம்மியாவதால் தான்.

ஆனால் உயிரின் துடிப்போ அது எப்போதும் ஒரே சீராகத்தான் துடித்துக் கொண்டிருக்கும்.

பூமி நிலைகள் விண்ணிலே ஓடும் போது அது சூரியனுடைய எந்த ஈர்ப்பில் இருக்கின்றதோ ஒரே சீராக… ஒரே ஓட்டமாகத் தான் ஓடிக் கொண்டிருக்கும்.

அப்படி ஓடினாலும் நமது பூமிக்குள் எந்த அளவுக்குக் காந்த சக்திகள் இருக்கின்றதோ
1.அதற்குத் தகுந்தவாறுதான் விண்ணிலே ஓடும் போது இதனுடைய சுழற்ச்சியின் தன்மை இருக்கும்…
2.அதற்குத் தகுந்தவாறு தான் காந்தத்தை உற்பத்தி செய்யும்.

சந்திரனிலே காந்தப் பவர் கம்மியாக இருப்பதனாலே பூமியின் ஈர்ப்பு ஓட்டத்திற்குள் இதனுடைய சம பங்கு கொண்டு பூமியைச் சுழன்று வருகிறது.

ஆனால் சந்திரனுக்குக் காந்தப் பவர் அதிகமாகி விட்டால் அந்தக் காந்தத்தின் சக்தி கொண்டு வந்தால் பூமியின் ஈர்ப்பை விட்டு விலகி சூரியனின் ஈர்ப்பு வட்டத்திற்குச் சென்றுவிடும். (சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!)

சூரியனுடைய காந்தப் பவர் அதிகம். அந்த சூரியனுடைய காந்தம் அதிகமாக ஈர்க்கப்படும்போது சந்திரன் அதனுடைய சுழல் வட்டத்திற்குத் தனித்துப் பிரிந்து சென்றுவிடும்.

சந்திரனில் அந்தக் காந்தப் புலன் குறைவாக இருப்பதால் தான் பூமியின் காந்த வட்டத்திற்குள் அது எடுத்து இதிலிருந்து பிரியாது இதற்குள் பகிர்ந்த நிலைகள் கொண்டு நம் பூமியைச் சுழன்று கொண்டு வருகின்றது.

இதை எல்லாம் தெரிந்து கொண்ட நிலைகள் கொண்டு
1.வாழ்க்கையில் பயமோ ஆத்திரமோ சங்கடமோ கோபமோ வந்தால்
2.அது வளர்ந்து விடாதபடி தடுக்கும் எண்ணம் கொண்டு
3.மகரிஷிகள் அருள் சக்தியை நமக்குள் வலிமையாக்கிக் கொள்ள வேண்டும்.
4.இதனால் நம் எண்ணங்களும் தூய்மை அடைகிறது
5.நோய் உருவாகாதபடி தடுத்துக் கொள்ளவும் முடிகின்றது

Leave a Reply