ஜோதி நிலை பெறுவதற்கு… மேல் நோக்கிய சுவாசத்தின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

cosmic breathing

ஜோதி நிலை பெறுவதற்கு… மேல் நோக்கிய சுவாசத்தின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இன்று நாமுள்ள நிலை பூமிப் பிடிப்பில் சிக்குண்டு சுழலும் நிலைதான்.

உருளுகின்ற உலகினிலே உதித்த உயிரணுக்கள். அவற்றின் பிடிப்புச் சுழற்சி ஈர்ப்பு வளர்ப்பில் தான் சுழற்சியுடன் சிக்குண்ட நிலையில் சுழலுகின்றோம்.

1.உணர்வில் குளிரும் வெயிலும் ஏற்படுத்து.ம் உணர்வு எண்ணமுடனும்
2.சுவை உணர்வு… உடல் இச்சையின் தேவை உணர்வு எண்ணத்தில் மோதும் எண்ண அலை உணர்வுடனும்…
3.இதைப் போன்ற விழியெடுக்கும் பட உணர்வும்… செவி கேட்கும் நாத ஒலியின் உணர்வுடனும் நாமெடுத்து
4.அவற்றின் பிடிப்புத் தொடரில் பூமியில் சிக்குண்டு தான் உருளுகின்றோம்.

அதே சமயத்தில்
1.பூமியின் இயக்கத்தில் வளரும் தாவர கனி வள திரவ நீர் இவைகள் “பிடிப்பு” நிலையிலும்…
2.ஊர்வன பிடிப்பில் “ஊரும்” தன்மையிலும்…
3.ஜீவராசிகள் “ஓடவும் நடக்கவும்” இடம் விட்டு மாறிச் செல்லவும் வளர்ச்சி பெற்றும்
4.ஜீவ சரீரம் கொண்ட பட்சிகள் “பறக்கும்” நிலை பெற்றிருந்தாலும் அதன் தொடரிலும் வந்து அமரக்கூடிய பூமி ஈர்ப்புடன் தான் வளம் பெற்று வாழ்கிறது.

இருளான இப்பூமி… தன் சுழற்சி வட்டத்தால் ஒளி பெறும் தன்மையை சூரியன் பூமிக்கு எத்திசையில் சந்திப்பு கொள்கின்றதோ அந்நிலைக்குப் பூமி ஒளி பெறுகின்றது.

அதைப் போன்று பூமிக்கு மேல் எண்ண செயல் கொண்ட இம்மனித ஞானத்தால் எண்ண உணர்வைச் சமமானதாக்கி “இருளிலிருந்து ஒளி பெறும் வலுவை” நாம் கூட்ட வேண்டும்.

சூரியன்… பூமியின் நேர் பார்வையில் வரும்போது தன்னைத்தானே சுழன்று ஓடும். ஓட்டத்தில் சூரியனின் தொடர்பு கொண்டவுடன்… “ஒளி பெற்று” பூமியின் அந்தந்த இடங்களில் வளரும் வளர் சக்திக்கு வலு கூட்டிக் கொள்கின்றது.

அதைப் போன்று
1.சம உணர்வு தொடர்பு எண்ணத்தை இச்சரீர இயக்கம் செயல் கொண்டவுடன்
2.நற்சக்தியின் வலுத் திறமையைப் பகுத்தறியும் ஞான எண்ணமுடன் விண்ணிலே எண்ணத்தைச் செலுத்தி
3.இவ்வுடல் பிம்பத்தில் பூமி எடுத்து வெளிப்படுத்தும் சுவாசத்தைக் கீழ் நோக்கி எடுக்காமல்
4.மகரிஷிகளின் அருள் அலையை நேராக மேல் நோக்கிய சுவாசமாக
5.இச்சரீர இயக்கச் சுவாசத்திற்கு எடுக்கும் பழக்கம் வருதல் வேண்டும்

இருளான இப்பூமி சூரியனின் நேர் சந்திப்பு பெற்றவுடன் ஒளி பெறுவதைப் போன்று ஒளி வளர்ப்புச் சரீரமாய் இச் சரீர அணுக்கள் வலுக்கொண்டு “நம் உயிராத்மா ஜோதி நிலை பெற்றவுடன்” உடலின் இயக்கத் தொடர்புடன் ஆத்ம ஒளி எத்தன்மையையும் அறியும் ஆற்றலையும்… வளர்க்கும் வலுத்தன்மையும் பெற்று விடுகின்றது.

பாம்பின் சுவாசம் மேல் நோக்கிய தன்மை கொண்டது,

விஷமான உடலைக் கொண்ட பாம்பு அது எடுக்கும் சுவாச அலை உணர்வு கொண்டு மனிதனை ஒத்த பகுத்தறியும் சொல் செயல் ஆற்றல் இல்லா விட்டாலும் அதன் சுவாச இயக்கத்தில் எடுக்கும் அலை உணர்வினால் விஷமான உடலில் பல காலங்களுக்கு அவை உயிர் வாழும்,
1.தன் உடலிலேயே மாணிக்கக் கல்லை வளர்க்கும் வலுவைப் பெற்று
2.ஒளி கொண்ட கல்லைப் பாம்பு தருகின்றதல்லவா…!

அதைப் போன்று எண்ணத்தின் உணர்வை ஜீவ காந்த சரீர இயக்கத்தில் சமமான நிலைபடுத்தி… சாந்தமுடன் கூடிய வலுத் தன்மை கொண்டு ஞான்னிகள் மகரிஷிகள் வெளிப்படுத்தும் ஆற்றல்களை இஜ்ஜீவ காந்த சரீரம் வளர்த்ததென்றல்
1.இச்சரீரமே மண்டல சக்திக்கு உருவாகும் ஒளி சக்தியாக
2.ஒளி கொண்ட சக்தி நிலையாய் அழியா ஆனந்த நிலை பெற முடியும்.

 

Leave a Reply