“இது தான் நடக்க வேண்டும்…!” என்ற எண்ணத்தின் மனோ வலிமை வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

courage meditation

“இது தான் நடக்க வேண்டும்…!” என்ற எண்ணத்தின் மனோ வலிமை வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மண்டலங்களில் நம் சூரியனின் சக்தி பல மண்டலத்தின் அமிலத்தைப் பெற்று தன் சமைப்பின் சத்தான உயர் அலை ஒளியை வெளிக்கக்கி ஒன்றின் தொடர் சுழற்சி ஓட்டத்தில்யே தன் வட்ட ஓட்ட மையச் சுழற்சியுடன் சுழன்று கொண்டே உள்ளது.

சனி மண்டலம் தன் தொடர்பில் சந்திக்கின்ற அமிலங்களின் தொடர்பைத் தான் எடுத்துத் தனக்கு வேண்டிய சத்தை வளர்ச்சிக்கு எடுத்து வேண்டாத் தன்மையை கரையக்கூடிய நிலைக்கு வெளிக்கக்கி கொண்டேயுள்ளது.

எல்லாத் தொடர்பின் வலுவின் மோதலினால் உருப்பெறுவதுதான் ஆதிசக்தி நீர்.
1.ஆதிசக்தியின் அமிலம் சிவனாய் உணர்த்தி
2.சிவனான பரப்பிரம்மமாகி பிரம்மமாய் சக்தி பெற்று
3.ஜீவித தொடர் சக்திக்கு எண்ணத்தின் உணர்வு செயல் நிலை கொண்ட இம்மனித பிரம்மம்தான் “உயர்ந்த பிரம்மத் தன்மை….”

“ஒரு சுழற்சி ஓட்டத்தில்” பலவற்றையும் வளர்க்கும் சூரியனே செயல் கொள்கின்றது. பலவாக ஓடும் எண்ணத்தின் ஓட்டத்தில்… பலவற்றையும் அறியக்கூடிய உணர்வின் எண்ணச் செயல்… மனித ஞானத்தில் செயல் கொள்ள…
1.மனிதன் தன்னுள் ஓடும் எண்ணத்தின் உணர்வை
2.சமமான சாந்தத்திற்குச் செயல் கொள்ள
3.கர்ம காரியத்தில் ஞானம் பெறல் வேண்டும்.

காட்டிற்குச் சென்று தனித்து ஜெபம் பெறும் காலத்தில்… மனித உணர்வுகள் மோதும் தருணமோ மற்ற எதிர்மறை செயல் எதுவாகிலும் மோதும் பொழுது “உணர்வுகள் மோதலினால்… உணர்வுகளினால் சாந்தத்தின் உயர் வலுவை மாற்றிக் கொள்ளும் பொழுது…” எதிர் நிலையின் பாதிப்பால்…
1.எடுத்த பலனின் செயல் விரையப்பட்டு
2.மீண்டும் பூமியின் ஈர்ப்புப் பிடியில் வலுவாகச் சிக்க வேண்டி உள்ளது.

ஆகவே… கர்ம காரியத்தில் மோதப் பெறும் எச்செயலானாலும் தன் ஞானத்தினால் உயர் ஞானத்தைச் செலுத்தி… ஏற்படக் கூடிய மாறு கொண்ட உணர்வுகளுக்கு வாழ்க்கைச் செயல்… தன் குடும்பம்.. ஆரோக்கியம்… தொழில்… சமுதாயம்…. எதுவாகிலும்… “அதிலிருந்து ஒதுங்குவதல்ல உயர் ஞானம் பெறுதல் என்பது…!”

வாழ்க்கையில் தன் உணர்வுடன் மோதப் பெறும்…
1.ஒவ்வொரு செயலையும் ஒதுக்கப்படாத தன்மையிலும்
2.தன் ஈர்ப்பின் சுழற்சியில் அதே எண்ணத்தின் ஓட்டம் ஓடிக் கொண்டே உள்ள நிலைக்கும்… எண்ணத்தைச் செலுத்திடாமல்
3.ஏற்படுகின்ற ஒவ்வொரு செயலுக்கும் தன் எண்ணத்தில் உயர்வைக் கூட்டி
4.அதற்குகந்த வழி நிலைகளை வகுத்துச் செயல்படுத்தக் கூடிய அறிவினால்
5.இக்கர்ம காரிய வாழ்க்கையில் தன் உயர் ஞானத்தைக் கொண்டு
6.உயர்ந்தோரின் ரிஷித் தொடர்பைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

ஆனால்… முதன் முதலில் ஜெபத்தில் அமர்ந்தால் உடலுடன் கூடிய வாழ்க்கையில் எடுத்த அலைச் சமைப்பின் தொடர்பு வாசனை எண்ணம்தான் ஏற்படும்.

ஆகவே… உயர்வின் ஞானத்தை நாம் பெற வேண்டும் என்றால் கர்ம காரியத்தில் தன் வாழ்க்கையில் செயல் கொள்ளும் எந்தச் செயலையும் அறிவின் உயர்வால் அதற்குகந்த வழி நிலைகளைத் தான் பெற்ற ஜெப உணர்வு அலையினாலேயே கொண்டு வர வேண்டும்.

1.எண்ணத்தில் சஞ்சலத்தையும் சலிப்பையும் ஏற்படுத்திக் கொள்ளாமல்
2.“இது தான் நடக்கும்…!” என்ற எண்ணத்தின் வலுவைச் செலுத்தி
3.அதற்குகந்த தீர்வுகளைச் செயல்படுத்தி
4.எண்ணத்தின் மனோ வலிமையினால்…
5.ஜெபத்தில் ரிஷித் தொடர்புடன் – எவ்வெண்ணத்தை நாம் செலுத்தி ஜெபம் இருக்கின்றோமோ
6.அதற்குகந்த வலுவின் மின் காந்த வண்ண ஒளித் தன்மையை இச்சரீர ஆத்மா “நிச்சயம் பெற முடியும்…!”

 

Leave a Reply