ஒவ்வொருவரும் “தெய்வ சக்திகளாக உருவாக வேண்டும்…” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Power of God within us

ஒவ்வொருவரும் “தெய்வ சக்திகளாக உருவாக வேண்டும்…” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சொந்தபந்தம்…
தொழில்…
சுற்றுப்புறம்…
விஞ்ஞானம்…
வியாபாரம்…
மருத்துவம்…
இதிலே ஏதாவது ஒன்றிலே இன்றைய மனித வாழ்க்கை அமைந்திருக்கின்றது.

இந்த வாழ்க்கைத் தொடர் சுழற்சியுடனேயே நம் வளர்ச்சியின் வலுவைக் கூட்டிக் கொண்டு இந்த வாழ்க்கைப் பிடிப்பைத் தான்
1.மனிதனின் முற்றிய நிலை என்று இன்பத்தைக் கொள்ளாமல்
2.மனித ஆத்மாவின் உயர்வு வழிக்கு வழிகாட்டி வருகின்றேன் (ஈஸ்வரபட்டர்)

இதைத் தொடர்ந்து படிப்போர் பதிவாக்கி அதைச் செயலாக்கி வரும் நிலையில் “இதில் உணர்த்தபப்டாத பல உண்மைகளும் உண்டு…!”

நேரடியாக உணர்த்தப்படாத அவைகளைத் தங்களின் ஞானத்தைக் கொண்டு உணர்ந்து உயரக் கூடிய நிலைகளுக்குத் தான் அவ்வாறு விடப்பட்டுள்ளது.

இனி வரப் போகும் கால நிலையில் துர்மார்க்க… அச்சம் கொள்ளும் அலை உணர்வு தான்… காற்றலையில் நச்சுத் தன்மையாக வளர்ந்தோங்கிச் சுழலும் தருணமாக உள்ளது.

இதிலே மனிதன் தன்னைத் தான் உணர்ந்து
1.தன் ஆத்ம வலுவைக் கூட்டி
2.பிற ஈர்ப்பின் பிடிப்பில் சிக்காமல்
3.உயர் ஞான வழித் தொடரின் தொடர்பைக் கொண்டு
4.வளர்ந்த பல கோடி தேவாதி தேவர்களான சகல சக்திகளையும் சமைக்கவல்ல
5.பேராற்றல் கொண்ட சப்தரிஷிகளின் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆகவே… உயர்ந்தோரின் உயர்வுடன் உயரும் எண்ணத்தில் உள்ள ஒவ்வொரு ஆன்மாவும் உயர்ந்தே செல்லும் வழி முறைக்காக
1.இங்கே வழி காட்டும் உண்மையை ஏற்று
2.ஞான விளக்கப் போதனைகளை ஒவ்வொரு ஆத்மாவும் பெற்று
3.மனித சக்திகளைத் “தெய்வச் சக்தியாக” உருவாக்குங்கள் ஒவ்வொருவருமே.

Leave a Reply