மனித (உடல்) வாழ்க்கையின் பற்றை வளர்ப்பதைக் காட்டிலும் ஞானிகளைப் பற்றுடன் பற்றுவதே நல்லது…! ஏன்…?

divine destination

மனித (உடல்) வாழ்க்கையின் பற்றை வளர்ப்பதைக் காட்டிலும் ஞானிகளைப் பற்றுடன் பற்றுவதே நல்லது…! ஏன்…?

 

அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் பற்றுடன் பற்றப்படும் பொழுது “அருளை…” நாம் பற்றுகின்றோம். அதன் வழியே காரியங்கள் நடக்கின்றது… நல்ல முறையில் சித்தியாகின்றது…!

ஆனால் வாழ்க்கையில் குடும்பப் பற்றை அதிகமாகச் சேர்த்து அருள் பற்றைக் குறைக்கப்படும் பொழுது என்ன ஆகும்…?
1.குடும்பப் பற்று வந்தாலே அதிகமான நிலையில் தன் சிந்தனையை இழக்கச் செய்யும்.
2.தன் பிள்ளைகளுக்கு இப்படி ஆக வேண்டும்… அப்படி ஆக வேண்டும்… என்ற உணர்வு வந்துவிட்டாலே போதும்
3.நமக்குள் ஏற்கனவே பதிந்திருந்த பழைய உணர்வுகள் அனைத்தும் முன்னாடி வந்துவிடும்…!
4.அது முன்னாடி வந்துவிட்டாலே “அதைக் காப்பது” என்பதே பெரிய சிரமம்.

ஆகவே வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலேயும் “ஒரு காரியத்தைச் சித்தியாக்க வேண்டும்…” என்றால் நாம் மகரிஷிகளின் அருள் உணர்வு பெறவேண்டும்… வாழ்க்கையில் எல்லாம் தெளிவாக வேண்டும்…! என்ற உணர்வுகளைக் கூட்டிக் கொண்டு வந்தால் சரியாக இருக்கும்.

கூட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்..?

1.கண்ணைத் திறந்து விண்ணை நோக்கிப் பார்க்க வேண்டும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று நினைவை விண்ணிலே செலுத்தி
3.ஒரு ஐந்து நிமிடமாவது சுவாசிக்க வேண்டும்.

பின்… எது நம் வாழ்க்கையில் குறையாகத் தென்படுகின்றதோ அது நிறைவு பெறவேண்டும்… வாழ்க்கையில் நிறைவு பெறவேண்டும் தொழில் சீராக வேண்டும்… பிள்ளைகளுக்குத் திருமணம் ஆகவேண்டும்… சீக்கிரம் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆனால் குறித்த காலத்தில் நடக்கவில்லை என்கிற பொழுது பெண்ணுக்கு இவ்வளவு வயதாகிவிட்டது… திருமணம் ஆகவில்லையே…! என்ற ஏக்கம் வருகின்றது… சோர்வடைகின்றோம்.

சீக்கிரம் நடக்க வேண்டும் என்ற எண்ணம் “வலுவாக” இருந்தால் இந்தச் சோர்வே வராது.

அப்படி எண்ணவில்லை என்றால் விஷத் தன்மைகள் அதிகமாகி…
1.இந்தப் புவியின் பற்று கூடி… உடலின் பற்று அதிகரித்து விடுகின்றது.
2.அருள் ஞானிகளின் பற்று தணிகின்றது.

ஆனால் அருள் ஞானிகளின் பற்றைக் கூட்டினால் தான்
1.வாழ்க்கையில் வரக்கூடிய மற்ற பற்று
2.அது எதுவாக இருந்தாலும் வெல்ல முடியும்…! (முக்கியமானது)

ஆக.. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் நாம் எடுக்கும் உணர்வுகள் வேகமாக இருக்கப்படும் பொழுது நலமாகின்றது அதிலே கொஞ்சம் தளர்ச்சி அடைந்தால் விஷத்தின் தன்மைகளைக் கூட்டிவிடுகின்றது.

இப்படி… இந்த மனிதனின் “வாழ்க்கையின் எண்ணங்கள்” கூடினால் அருள் ஞானத்தை இழக்கும் சக்தி தான் வருகின்றது.

அதே சமயத்தில் வீட்டில் வயதான தாய் நோயாக இருக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது அவர்கள் நலம் பெறவேண்டும் என்று வீட்டில் உள்ள பிள்ளைகள் எண்ணுகின்றோம்.

நம்பிக்கையுடன் மகரிஷிகளின் உணர்வுகளைத் தாய்க்குப் பாய்ச்சப்படும் பொழுது அருள் உணர்வின் தன்மை அங்கே உருவாக்கப்படுகின்றது.

நலம் பெறவேண்டும் என்று பாய்ச்சப்படும் உணர்வுகளால்
1.தாய்க்குள் வேதனை என்ற உணர்வுகள் வளராது
2.அருள் ஒளி பெறுவோம்..! என்ற உணர்வுகள் தாயிற்கு வளரத் தொடர்கின்றது.

அவ்வப்பொழுது தெளிவாகின்றது… தெளிந்த மனமும் தாய்க்கு வருகின்றது. நலம் பெறும் எண்ணத்தில் எல்லோரும் இருக்கும் பொழுது பிள்ளைகள் எண்ணும் உணர்வுகளால்.. ஒளியின் தன்மையைப் பெறும் தகுதியைத் தாய் பெறுகின்றது.

1.அப்பொழுது உடல் பற்று வராது… அருள் பற்று அங்கே வருகின்றது.
2.அந்த அருள் பற்று அங்கே வரப்படும் பொழுதுதான்…
3.தாய் வேதனையற்ற நிலைகள் கொண்டு வேதனை என்ற எண்ணமே எடுக்காது
4.அருள் ஒளி பெற வேண்டுமென்ற அனைவரது கூட்டு ஐக்கிய உணர்வுகளும் கிடைக்கின்றது.

ஏனென்றால் தாயின் உணர்வு தான் பிள்ளைகளாகிய உங்கள் உடல். பின் கடைசியில் உடலை விட்டுப் பிரிந்த பின் தாய் சூட்சம நிலை அடைகின்றது.

இவ்வாறு தொடர்ச்சியாக எடுத்து வளர்த்துக் கொண்ட அருள் உணர்வின் தன்மை கொண்டு அவர்களை விண் வெளி செலுத்தி உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்கும் தன்மை வருகின்றது.
1.அருள் ஒளி கூடுகின்றது…
2.தாயின் ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளியாகின்றது.

அவர்கள் அங்கே இணைந்த பின்… சப்தரிஷி மண்டலத்தின் ஒளி எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் படர வேண்டும்.. எங்கள் குழந்தைகளுக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும்…! என்ற இந்த உணர்வினைக் கூட்டுதல் வேண்டும்.

அருள் வழியில் வாழ வேண்டிய முறைகள் இது…!

Leave a Reply