பிரளய கால மாற்றத்திற்குப் பின் மனித உரு எப்படி இருக்கும்…! என்பதைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

world changes

பிரளய கால மாற்றத்திற்குப் பின் மனித உரு எப்படி இருக்கும்…! என்பதைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இன்றைய மனிதக் கரு ஜீவ சக்திகளும்… இப்பூமியில் பிறப்பெடுத்து உடலற்ற ஆத்ம உயிர்களும்…
1.இன்றுள்ள விஷ நிலையான எண்ண வளர்ச்சித் தொடர்பலையினால்
2.இன்றைய அறிவு… ஞான செயல்… திறமை… உருவ அழகு… இவற்றின் நிலை யாவையுமே
3.இனி நிகழப் போகும் பிரளய காலத்திற்குப் பிறகு மாறப் போகின்றன.

மனித உணர்வின் எண்ணமே விஞ்ஞான அணுக் கதிரியக்கச் செயற்கைப் பூகம்ப நிலையாலும்.. லேசர் இயக்கச் செயலுக்காக சூரிய அலையில் பூமிக்கு எவ்வலையை பூமி சமைத்து வடிகட்டிப் பூமி வளர்ந்து வாழுகின்றதோ சூரிய சக்தியிலிருந்து அதைப் பிரித்ததாலும் பல பல மாற்றங்கள் ஆகிவிட்டது.

(அந்த அமில வண்ணம் (ULTRA VIOLET) பிரகாசமான VIOLETt கலர் காட்சியாகத் தெரிகிறது)

இப்படி அந்த அணுக் கதிர்களை விஞ்ஞானச் செயலுக்காகச் சில நாடுகள் பூமி எதைத் தன் ஈர்ப்பிற்கு எடுக்காமல் பூமியின் சுழற்சியில் வடிகட்டி (FILTER செய்து) தன் வளர்ப்பை வளர்த்துக் கொண்டுள்ளதோ அதையே மனித விஞ்ஞானம் தனித்துப் பிரித்து விட்டது… அதனால் விஷம் கொண்ட காற்றாக இன்று மாறி விட்டது.

ஆத்ம ஜீவ வாழ்க்கை சக்தியின் உன்னத ஞான வாழ்க்கையை உணர்ந்து வாழாமல்… செயற்கை வாழ்க்கை விஞ்ஞானச் செயலுக்காக… மனிதனின் தன் நிலை மறந்த “போதை” உணர்வு வலு நிலைக்கு உணவு நிலையாக… விஞ்ஞான அணுக் கதிர்களை உபயோகிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டனர்.

நிகரில்லா நிலை பெற்ற.. நித்தியமான நிலையில் வளரும் மனித ஞான வளர்ச்சியையே குரோத வஞ்சனை வெறி தேச மத உணர்வு நிலையில் ஒருவரை ஒருவர் அழிக்க வந்துவிட்டனர்.

தன்னுடைய பேராசையாலும் குரோதத்தாலும் விஞ்ஞான வளர்ச்சியைக் கொண்டு இவ் அணு சக்தியை சூரியனிலிருந்து பிரித்தெடுத்து
1.அழிவுச் சக்திக்காகப் பயன்படுத்துகின்றோம்…! என்ற உண்மையை மறைத்து
2.திரை போட்டு ஆக்கச் சக்தியென்ற வழியைச் சொல்லி
3.மனித விஞ்ஞானம் இன்று வளர்ந்துள்ளது.

அதனால் இன்றைய மனித உணர்வின் எண்ணச் சிதறல்களும் தன்னைத் தான் உணராத நிலையும் ஏற்பட்டு விட்டது.

இத்தகைய தருணத்தில் தனக்குள் உள்ள இறை நிலையை உணர்ந்து… தான் உடல் பெற்று… உணர்வு பெற்று… சுவையும் குணமும் பெற்று… சரீர ஞானச் செயல் கொண்ட மனித வாழ்க்கை உன்னதச் செயலில் இருந்து உயர்வு நிலை கொள்ளும் வழித் தொடரை ஒவ்வொரு ஜீவ ஆத்மாவும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஊசி முனைக்கு மேல் உருவத்தில் ஆயிரம் மடங்கு சிறிதாயுள்ள உயிராத்மா உருவக சரீர ஜெட ஜீவச் செயல் பெற்றுச் செயல் புரியும் உயிராத்மாவை நல்லுணர்வின் ஞான ஜெபத்தால் வளர்த்திட வேண்டும்.

இச்சரீர அணு அனைத்தையுமே உயர் ஞான உணர்வு எண்ணம் கொண்டு செயல்பட்டு ஜோதி நிலையான ஒளி நிலைக்கு ஆத்ம உயிரின் வலுவைக் கூட்ட வேண்டும்.

தெய்வம் என்பது நம் உயிரே நமக்குத் தெய்வம் தான் என்று உணர வேண்டும். ஆகவே… நமக்குள் உள்ள தெய்வ உயிரைப் பிறிதொரு ஈர்ப்புப் பிடியில் தன் உணர்வற்ற இன்பம் என்ற உணரும் சுவை ஈர்ப்பில் சிக்க விடக் கூடாது.

போதை… காமம்… அதி விரைவு… வெறியான சுவை உணவின் இச்சை… போன்ற இவ் இன்ப உணர்வின் தொடர்பிலெல்லாம் எண்ணத்தின் வலுவைச் செலுத்தாமல்
1.தன்னுள் உள்ள இறை உயிர் ஆத்மாவை வலுவாக்கிக் கொள்ள
2.உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையுமே
3.உயர்வு ஞான நற் குண ஜெப நிலையினாலும்
4.சம நிலைகொண்ட சாந்த உணர்வு வலுத் தொடரினாலும் உயர்த்திட வேண்டும்.

ஏனென்றால்… இன்றுள்ள தன்மை பிரளய மாற்றத்திற்குப் பிறகு பூமியின் மாற்றுச் சக்தியால் பூமி வளர்த்த அணு யாவையும் எப்படி நெற் செடியில் அதற்குகந்த ஆகார நிலை கிடைக்கவில்லை என்றால் “பதர் அரிசி மணி” வளர்கின்றதோ அதைப் போன்று மனித ஆத்ம உயிர்கள் ஜீவ உயிர்கள் யாவையுமே பிறப்புப் பெற்றாலும் சரீரம் எண்ணம் செயல் ஒலி ஒளி ஆகிய எவையுமே இன்றுள்ள நிலை பெற முடியாது…!

தனக்குகந்த ஆகார சக்தி கிடைக்கா விட்டால் காய்கறி கனிகளில் கரடு நிலை தட்டிய காய் கனிகள் வளருவதைப் போன்று தான் வரும்.
1.சில பிராணிகள் ஜீவ சக்தி பெற்றிருந்தாலும் “தேவாங்கு” போன்று
2.அமர்ந்தது அமர்ந்த நிலையிலேயே பிறப்பெடுத்து வாழ்ந்து மடிகின்றதோ
3.அதைப் போன்ற பிறப்பு நிலைதான் பிரளய நிலைக்குப் பின் வரும்.

பிறப்பு நிலை இன்றைய நிலை போல் மீண்டும் வளராது…!

Leave a Reply