நோயுடனும் துன்பமுடனும் வருபவர்களுக்கு நாம் சொல்லித் தர வேண்டிய தியானப் பயிற்சி

Deep meditation

நோயுடனும் துன்பமுடனும் வருபவர்களுக்கு நாம் சொல்லித் தர வேண்டிய தியானப் பயிற்சி

இன்றைய கால கட்டத்தில்… நாம் செய்யும் தியானத்திற்குப் புதிய அன்பர்கள் வந்தால் உதாரணமாக அவர்களுக்கு நோய் என்று சொன்னால் கூட்டுத் தியானங்களில் கலந்து கொள்ளச் செய்யுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துத் தியானமிருந்த பின் அவர்களுக்கு உடல் நோயோ குடும்பத்தில் கஷ்டமோ இருப்பினும்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் குடும்பத்தில் படர வேண்டும்
2.குடும்பத்தில் நல்ல ஒற்றுமை ஏற்பட வேண்டும்
3.அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்
4.குடும்பத்தில் அனைவரும் உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்று
5.கூட்டுத் தியானத்தில் அனைவரையும் சொல்லச் செய்து இந்த வாக்கினைப் பரவச் செய்யுங்கள்.

இது பதிந்து அவர்கள் மீண்டும் அந்த அருள் சக்திகளை எடுக்கத் தொடங்கினால் அவர்கள் சிரமங்களும் நீங்கும். அப்பொழுது அவர்களுக்கு ஒரு நம்பிக்கையும் ஏற்படும்.

நீங்கள் கொடுக்கக்கூடிய அருள் வாக்கு அவர்களுக்கு நல்ல முறையில் விளைந்து மகிழ்ந்த நிலைகள் பெறுவார்கள்.

யாராவது கோபமாகவோ வெறுப்பாகவோ பேசினால் உடனே ஆத்ம சுத்தி செய்து விட்டு அவர்கள் அறியாமை நீங்க வேண்டும்… மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் அந்தச் சக்திகளைப் பெறவேண்டும்… அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய நிலையும்… நல்ல பண்பும் அன்பும் பெருகக்கூடிய சக்தி பரவும்…! என்று சொல்லிப் பழக்கப்படுத்தச் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு நாளும் இதே மாதிரி செய்து வந்தோம் என்றால் நமக்குள் அந்தச் சக்தி நாம் எதை எண்ணுகின்றோமோ ஓம் நமச் சிவாய… ஓம் நமச்சிவாய…! என்று நம் உடலுக்குள் அந்தச் சக்தி வளர்ந்து கொண்டே இருக்கும். அந்த அணுக்களும் பெருகிக் கொண்டே இருக்கும்.

ஆனால் குறைகளை அதிக நேரம் கேட்டு குறைகளைக் கேட்க ஆரம்பித்தால் அவர்கள் வரிசையாகச் சொல்லிக் கொண்டே வருவார்கள்.

அப்படிச் சொன்னால்…
1.எங்கள் குடும்பத்தில் இந்தக் குறை இருக்கிறது… அது நீங்க வேண்டும்…! என்று சொல்லி அப்படிக் கேட்கச் சொல்லிப் பழக்குங்கள்.
2.எங்கள் உடலில் இந்த நோய் இருக்கின்றது… அது நீங்கி என் உடல் நலமாக வேண்டும்…! என்று சொல்லச் சொல்லுங்கள்.
3.இருப்பதைச் சொல்லி விட்டு… அது நீங்க வேண்டும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்…! என்ற உணர்வை ஏங்கிப் பெறச் செய்யுங்கள்.

ஏனென்றால் எது இருக்கிறது என்று தெரிய வேண்டும் அல்லவா…! சரவாங்கி நோய் இருக்கிறது… கை கால் மூட்டுகள் வலிக்கிறது… மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் மூட்டு வலி நீங்க வேண்டும். என் உடல் நலமாக வேண்டும்…! என்று எண்ணி இதை ஒரு பழக்கமாக்க வேண்டும்.

எங்கள் குடும்பத்தில் இந்த மாதிரிச் சிக்கல் இருக்கின்றது மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் படர்ந்து சிக்கல் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும் எங்கள் தொழில் வளம் பெறவேண்டும் என்று சொல்லிக் கேட்க வைக்க வேண்டும்.

1.இப்படி நல்ல எண்ணங்களை உருவாக்கி
2.அவ்வாறு எண்ணிய நல்ல சக்திகளை அவர்கள் பெற்று உடல் நலம் பெறச் செய்யவேண்டும்.

Leave a Reply